இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
கடந்த செப்டம்பர் 20-ம் தேதி அந்தமானில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில்
அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்தொடர்ச்சியாக கேரள மாநிலத்தில்
கடந்த 2, 5 தேதிகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 6 இடங்களில் அதிமுக
வெற்றி பெற்றுள்ளது.
பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 3-வது வார்டில் எஸ்.ஹெலன்
அமலோற்பவமேரி, 7-வது வார்டில் ஜெ.ஸ்ரீரஞ்சனி, எருத்தேன்பதி பஞ்சாயத்து
7-வது வார்டில் எம்.சரஸ்வதி, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பஞ்சாயத்து 1-வது
வார்டில் பாக்கியலட்சுமி, மறையூர் பஞ்சாயத்து 1-வது வார்டில்
எல்.பாலகிருஷ்ணன், பீர்மேடு பஞ்சாயத்து 1-வது வார்டில் எஸ்.பிரவீணா ஆகியோர்
வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 5 பேர் பெண்கள் என்பது மிகுந்த மன
நிறைவைத் தருகிறது.