சனி, 27 ஆகஸ்ட், 2011

Nallur நாலு தாலிக்கொடிகளும் ஏழு சங்கிலிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன

நல்லூர் தேர்பவனியில் திருடர்களின் கைவரிசை: ரூபா 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் அபகரிப்பு!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று நடைபெற்ற வேளை சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் தங்கச் சங்கலிகளை அபகரிக்க முற்பட்ட பெண்கள் இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான பொலிஸாரும் தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தோரும் ஆலய சுற்றாடலில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அதிகமானோர் சிவில் உடைகளில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் நான்குக்கும் மேற்பட்ட தாலிக்கொடிகளும் ஏழு தங்கச் சங்கிலிகளும் திருடர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன
இன்னும்தான் நம் குலப்பெண்கள் தங்க நகை மோகம் கொண்டு மற்றவர்களுக்கு ஷோ காட்டப்போய் பேரு ஆபத்தை வலிந்து வாங்குகிறார்கள் பாவம் கணவர்கள்.
நன்றி நெருப்பு

வைகோவை சந்திக்க ஜெயலலிதா விரும்பவில்லை.. கருணைமனு...

‘‘எம்டியெம்கே தலைவர் வருத்தத்துல இருக்காராமே... என் ஃபிரண்ட் விசாரிச்சா...‘‘ என்றாள் சுசி மாமி.

‘‘ம்ம்... சரிதான். ராஜீவ் கொலை தொடர்பா, மூணு பேர் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிச்சிருக்காங்க இல்லையா...? அது தொடர்பா பேசறதுக்கு சியெம்ட்ட அப்பாய்ன்மென்ட் கேட்டிருந்தாராம்... ஆனா, சியெம் கொடுக்கலையாம்... ஏற்கனவே, இலங்கை பிரச்னை தொடர்பா போராட்டம், ஆர்ப்பாட்டம் பண்ணிட்டிருக்கற தலைவர்கள், சியெம் சொல்லிதான் அப்படி செயல்படுறாங்கன்னு ஒரு பேச்சு இருந்தது... சியெம் அப்பாயின்மென்ட் கொடுக்காததால, அந்த பேச்சும் உண்மையில்லைன்னு ஆகிப் போச்சாம்...

அதனால, கருணை மனு நிராகரிப்பு தொடர்பா கோர்ட்ல வழக்கு தொடர போறாங்களாம்... இந்த வழக்கை திருமாவளவன், நெடுமாறன் கூடச்சேர்ந்து நடத்தப் போறாராம்...‘‘ என்றார் பீட்டர் மாமா

நன்றி தினமலர் 

வனிதா! மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார்

சென்னை: மீண்டும் தனது முதல் கணவர் ஆகாஷுடன் இணையப் போவதாக நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.

நடிகை வனிதா முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான்.

தன் குழந்தை ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று அப்பா விஜயகுமார் மீதும், அம்மா மஞ்சுளா மீதும் கடுமையாக கோபபப்பட்டு, சண்டை போட்டார் வனிதா. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வரும்போதும் இவருடன் அப்பாவியாக வந்து கொண்டிருந்த இரண்டாவது கணவர் ராஜன், இப்போது வனிதாவிடமிருந்து விலகிவிட்டாராம்.

இதையடுத்து, மகனுக்காக இரண்டாவது கணவர் ராஜனை விட்டு விலகி விட்டதாக நடிகை வனிதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:

என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதிதான் இரண்டாம் திருமணம் செய்தேன். ஆனால் என் மகன் ஸ்ரீஹரி அப்பா ஆகாஷ் இன்னும் தனியாக தானே இருக்கிறார். நீ எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டித்தான். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

அவசரப்பட்டு தவறு செய்து விட்டதை உணர்ந்தேன். அவன் அம்மாவை இன்னொருத்தருடன் பார்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. மகன் எனக்கு முக்கியம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் இனி செய்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

ராஜனுக்கும் சமீபத்திய பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தின. இருவரும் உட்கார்ந்து பேசி பிரிவது என முடிவு எடுத்து விலகி விட்டோம். இப்போது என் மகன் ஸ்ரீஹரி என்னுடன் நன்றாக பேசுகிறேன். நானும் ஆகாஷு ம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. அவரை அவமானப்படுத்தி பேசி இருக்கிறேன்.

ஆனாலும் இன்று வரை அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்.

எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்னுடன் பேச வேண்டும். அதுதான் முக்கியம். ஆகாஷ் மேல் நான் வைத்திருந்த காதல் உண்மையானது. அதனால் அவருடன் மீண்டும் என்னால் பேச முடிகிறது. அவரும் என்னுடன் நன்றாக பேசுகிறார். இருவரும் சேர்ந்து என் குழந்தையை வளர்க்க விரும்புகிறோம்.

என் அப்பா விஜயகுமார் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவருடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க விடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணனும் சகோதரிகளும் மீண்டும் நான் குடும்பத்தோடு சேரக்கூடாது என்று நினைக்கிறார்கள்," என்றார்.

மேலும், இதுவரை வனிதா ராஜன் என்று இருந்த தன் பெயரை இப்போது, வனிதா விஜயகுமார் என்றே மாற்றிக் கொண்டுள்ளார் வனிதா.

Thangabalu: தனக்கு வந்தால் ஒரு நீதி! மற்றவருக்கு வந்தால் வேறு நீதி என்று

சென்னை: ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், இந்தியத் நாட்டின் பிரதமருமான தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை, அதன்வழி நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற 20 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் தடுக்கப்பட்ட நீதி இப்பொழுது செயல் வடிவம் பெறும் போது அதனை தடுப்பதற்கு புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது தகவல்கள் மற்றும் மனிதாபிமானம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று பல்வேறு கோணங்களில் சில தலைவர்கள், சில கட்சிகள் மற்றும் சிலர் சில்லறை சில்லறையாய் ஆங்காங்கே அறிக்கை விடுவதும், அதற்காக போராடுவதாக அறிவிப்பதும் நாம் எங்கே போகிறோம் என்ற கேள்வி ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு கட்சியும், ஏன் அதன் தலைவர்களும், தொண்டர்களும் எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது.

இந்தியத் நாட்டின் இணையற்ற தலைவர் ராஜீவ் காந்தி ஒரு தனி மனிதர் அல்ல. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர். இந்திய நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான பிரதமராக விளங்கியவர். அவரது படுகொலை என்பது அதுவும் தமிழ்நாட்டில் எந்த தமிழ் இனத்திற்காக தன் இன்னுயிரை பணயம் வைத்து பாடுபட்ட தலைவரை பலி கொடுத்ததும், தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே படுகொலை செய்தது இன்னும் ஒவ்வொரு தமிழன், இந்திய குடிமக்கள் அனைவரது நெஞ்சங்களிலும் தீப்பிழம்பாக உள்ளது.

சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற இந்தியாவில் சட்டம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமையாகும்.

ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்தம் அப்பா, அம்மா, உறவினர்கள், மனைவி மற்றும் உறவினர்கள் என்று அவர்களுக்காக வாதாடுவது தனிப்பட்ட முறையில் இயல்பான ஒன்று. அதே நிலையில் தான் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், தோழர்களும் தங்கள் கட்சியின் தலைவர் படுகொலைக்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதற்கான தண்டனையை வழங்கப்பட்டபோது அதை வரவேற்பதும், அதை நிறைவேற்ற வேண்டுவதும் இயல்பான ஒன்று. அதில் தார்மீகமும், தர்மமும் கூட உண்டு.

இன்றைக்கு தங்கள் கட்சியின் தலைவர் அல்லது தங்கள் குடும்பத்தின் தலைவர் எவராவது ராஜீவ் காந்தியைப் போல படுகொலை செய்யப்பட்டிருந்தால், அதற்குப்பின் படுகொலையாளர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றிருந்தால், அப்படி தண்டனை பெற்றவர்களை விடுவிக்க வேண்டுமென்று அந்தக் கட்சித் தலைவர் மற்றும் அந்த கட்சியைச் சார்ந்த தொண்டர்கள், அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்பட வேண்டுமென்று கூறுவார்களா? அல்லது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று மன்றாடுவார்களா? அல்லது ஆர்ப்பாட்டம் தான் நடத்துவார்களா?.

தனக்கு வந்தால் ஒரு நீதி! மற்றவருக்கு வந்தால் வேறு நீதி என்று வரலாற்றுப் பிழைகளை தினந்தினம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் அன்புள்ள கட்சித் தலைவர்களே!, அதன் தொண்டர்களே! அதன் தோழர்களே! பகுத்தறிவு மற்றும் தமிழுணர்வு, மனிதானிமானம் பற்றி மணிக்கணக்கில் வாதாடுகிற நண்பர்களே உங்கள் நெஞ்சில் ஈரம் இருந்தால் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்?.

இதே நிலை உங்கள் கட்சிக்கு அல்லது குடும்பத்திற்கு வந்ந்தால் உங்கள் குடும்பத்தினர் என்ன நிலையில் இருந்ப்பார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா? அகிலம் போற்றும் சோனியா காந்தி 120 கோடி மக்கள் வாழும் மகத்தான இந்திய தேசத்தில் பிரதமர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காக பணியாற்றுவேன் என்று மகுடம் சூட்டிக் கொண்ட அந்த மகத்தான தலைவி, அவரது அருமைக் கணவர் ராஜீவ் காந்தியை இழந்து வாடிக் கொண்டிருக்கிறாரே? அவருக்கு யார் பதில் சொல்லப் போகிறீர்கள்?

அதேபோல அருமை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தன் தந்தையை இழந்து 20 ஆண்டுகளாக துடித்துக் கொண்டிருக்கிறாரே அந்த தம்பியின் துடிப்பிற்கு உங்களால் மருந்து போட முடியுமா?

அருமை சகோதரி பிரியங்கா தன் தந்தையை இழந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவியாய் தவிக்கிறாரே, அந்த தங்கையின் உணர்வுக்கு யார் பதில் சொல்ல முடியும்?

காங்கிரஸ் கட்சியும், கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் அனைவரும் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் சுதந்திர வேள்வி தொடங்கி இன்று வரை பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க 'தனக்கென வாழா, பிறர்க்கென வாழும் தகைமைசால் குடும்பமாய்" இந்தியத் நாட்டின் பெருமைக்காக இந்திரா காந்தி, அதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி என தொடர்கதையாய் தியாகங்களை வழங்கி வரும் இந்த தலைமைக்கும், இந்த இயக்கத்திற்கும் இணையான தலைமை எங்கே? இந்த தலைவர்களுக்கும், அவர்தம் சீரிய பணிகளுக்கும் இணையானவர்கள் யார் இந்தியாவில்?.

இந்தியாவில் தொடர்ந்து வரும் ஜனநாயகமும், சுதந்திரமும் நிலைக்க வேண்டுமானால் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்.

ஒரு சிலருக்காக சட்டம் வளைக்கப்படுமேயானால், அல்லது சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுமேயானால், இந்தியாவில் மீண்டும் 65 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தான் செல்ல வேண்டும்.

ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத சில தனி நபர்கள், சில கட்சிகள் சட்டத்திற்கு புறம்பாக பேசுவதும், எழுதுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்துவதும், அதற்காக அப்பாவி தமிழினத்தை அழைப்பதும், அவர்களை தவறாக நடத்துவதும், குறிப்பாக ஏதுமறியத இனம் புரியாத இளம் சிறார்களை, மாணவர்களை போராட அழைப்பதும், தவறான முன்னுதாரணங்களை உருவாக்கி தமிழினத்தை அழித்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நாடாளுமன்ற- சட்டமன்ற ஜனநாயகம் இருக்காது. நீதிமன்றங்கள் இருக்காது. அரசுகள் இருக்காது. ஆட்சிகள் இருக்காது. யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். அல்லது தனியாக தங்களுக்கென தனி ஆட்சி உருவாக்கிக் கொண்டு தாறுமாறாக எதை வேண்டுமானாலும் செய்யலாம். கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம். கேட்பதற்கு யார் இருப்பார்கள்?.

மீண்டும் ஜனநாயக பாதையிலிருந்து இந்தியா என்ற மாபெரும் தேசம் திசைமாறிப் போக வேண்டுமா? என்பதை கனிவுள்ள கணவான்கள் கனிவோடு எமது கருத்துக்களை பரிசீலிப்பார்களாக. அதன் பிறகாவது சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் தொடர்வதற்கு ஒத்துழைப்பு கொடுப்பார்களாக.

இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவில் வாழும் அத்துணை குடிமக்களுக்கும், ஒப்பற்ற எல்லோருக்கும் இணையான அந்தஸ்தை, சமூக நீதியை, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி வரும் பேரியக்கம். அந்த பேரியக்கத்தின் சார்பில் உண்மையான தமிழின மக்களை, தமிழினத்தின் பண்பாட்டை, நாகரீகத்தை கட்டிக்காத்து, கடமைகளை மறந்துவிடாமல் தொடர்ந்து ஜனநாயக நெறிகளை காப்பதற்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம். இது ஒன்று தான் ஒவ்வொரு தமிழின மக்களையும், இந்திய மக்களையும் பாதுகாத்து பண்போடு நடந்து வர வழியாகும், வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார் தங்கபாலு.

பின்னர் சத்திய மூர்த்தி பவனில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில நிகழ்வுகள் நடக்கிறது. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்களை சில அரசியல் கட்சிகள், சில சுயநலவாதிகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இது ஆபத்தானது.

ராஜீவ் கொலையாளிகளுக்கு சட்டம் வழங்கிய தீர்ப்பின்படி தூக்கில் போட வேண்டும். இதை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமை. கொலையாளிகள் 3 பேரும் எல்லா மேல்முறையீடுகளையும் கடந்து வந்து விட்டார்கள். எனவே தண்டனையை நிறைவேற்றத் தான் வேண்டும் என்றார். பின்னர் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்,

கேள்வி: இது பழிக்கு பழி ஆகாதா?

பதில்: காங்கிரஸ் யாரையும் பழிவாங்கும் கட்சி அல்ல. நாங்கள்தான் எங்களை அழித்து கொண்டுள்ளோம். இந்திரா, ராஜீவை இழந்துள்ளோம். இன்னும் இழக்க என்ன உள்ளது?

கேள்வி: இந்திரா கொலையாளிகள் கூட மன்னிக்கப்பட்டார்கள். ராஜீவ் கொலையில் சிக்கியவர்கள் அப்பாவு தமிழர்கள் என்பதால் மன்னிக்க கூடாதா?

பதில்: நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பார்த்து பேசவில்லை. எல்லாம் ஒரே தேசம்தான். தனிநபர்களுக்கு காங்கிரஸ் எதிரி அல்ல.

கேள்வி: ஒரு கொலைக்கு கொலைதான் தீர்வா?

பதில்: அது தீர்வல்ல. ஆனால் சட்டத்துக்கு வேலை கிடையாதா? அது தன் கடமையை செய்ய வேண்டும் அல்லவா?

கேள்வி: தி.மு.க. தலைவர் கருணாநிகி கூட மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளாரே.

பதில்: அது அவரது கருத்து. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை கூறியுள்ளோம்.

கேள்வி: ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்கிறீர்கள். ஆனால், இலங்கை தமிழர்களை கொடூரமாக கொலை செய்த அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் காங்கிரஸ் வரவேற்பு கொடுக்கிறதே?

பதில்: இலங்கை வன்முறையை காங்கிரசும் கண்டித்துள்ளது. எங்கு படுகொலை நடந்தாலும் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்றார்.

தேர் திருவிழாவில் வரலாறு காணாத கூட்டம்...பாராட்டாமல் இருக்கவே முடியாது.

நல்லூர் தேர் திருவிழாவில் வரலாறு காணாத மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுவரையில் இதுபோன்ற மக்கள் கூட்டத்தை முழு இலங்கையுமே எங்கும் கண்டிராது என்பது நிச்சயமான உண்மையாகும்.தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் எராளாமானோர் வருகை தந்திருந்தனர். பொதுமக்களுக்கான ஒலிபெருக்கிகள் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் மாறி மாறி அறிவிப்புக்களை வழங்கி கொண்டிருந்ததன.
விரைவில் youtube மூலம் உலக மக்கள் எல்லோருமே இந்த கண்கொள்ளா காட்சியை காண முடியும்.
நல்லூர் கந்தன் மிக மிக கோலாகலமாக பவனி வந்த காட்சியை காணும் பேறு இலங்கை மக்கள் எல்லோருக்கும் இம்முறை கிடைத்தது பெரும் பாக்கியமே.எந்தவித அசம்பாவிதங்களோ களவு போன்ற குற்ற செயல்களோ நடைபெறாமல் மிக மகிழ்வாக நிகழ்வுகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.
சீருடை அணிந்த பாதுகாவலர்களின் தொகை மிக குறைவு தான்.அவர்களின் திறமையை பாராட்டாமல் இருக்கவே முடியாது. 
நல்லூர் கோவில் வீதிகளில் ஏராளமான தமிழ் சிங்கள வர்த்தகர்களும் வாடிக்கையாளர்களும் எள் போட்டால் என்னை விழும் என்று சொல்லக்கூடிய அளவில் காணப்படுகிறார்கள். குறிப்பாக ஐஸ் கிரீம் கடைகள்தான் மிகப்பிரபலம் பெற்றுவிட்டன. விரைவில் நல்லூர் பிரதேசம் ஒரு ஐஸ் கிரீம் நகரம் என்ற நாமத்தை பெறக்கூடும்.
பலரிடமும் சுமார் எத்தனை பேர் திருவிழாவுக்கு சமுகம் அளித்திருப்பார்கள் என்று கேட்டேன் யாராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. எனது அறிவுக்கும் சரியாக எட்ட வில்லை. எனது அனுமானத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் இதில் பங்கு கொண்டிருக்காலம் என்று கருதுகிறேன்.

பயந்து வாழ்ந்த கடாபி பங்கர்களிலும் சுரங்கங்களிலும் ஒளிந்துகொண்டு வீரம் பேசியவர்


லிபிய அதிபர் மும்மர் கடாபியின் மாளிகை முழுவதும் சுரங்க வழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை லண்டனிலிருந்து வெளியாகும் "தி டெலிகிராப்" நாளேடு வெளியிட்டுள்ளது.
அதிபரின் பாப் அல்-அஸிஸியா அரண்மனையின் கீழே சுரங்க வழிகள் வெட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நகரின் பிரதான பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
1986ம் ஆண்டு மேற்கு பெர்லினில் உள்ள இரவு விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் லிபியாவுக்கு பங்கு உண்டு என்பதற்காக அமெரிக்க படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
அப்போதிலிருந்து இத்தகைய அதிரடி தாக்குதலைச் சமாளிக்க இதுபோன்ற சுரங்கப் பாதைகளை கடாபி அமைத்திருக்கலாம் என்று "டெலிகிராஃப்" தெரிவித்துள்ளது.
சுரங்கப் பாதை முழுவதும் கான்கிரீட் கலவையால் பூசப்பட்டுள்ளது. இதன் வழியாக கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக கார் செல்லும் அளவுக்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனது மாளிகை முழுவதும் உள்ள சுரங்கப் பாதைகளைப் பற்றிய அனைத்து விவரமும் அடங்கிய வரைபடமும் கடாபியிடம் இருக்குமாம். திரிபோலியில் உள்ள அபு சலீம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்குச் செல்லும் பாதையும் இதில் உள்ளது.
தலைநகரை முற்றுகையிட்ட எதிர்ப்புப் படையினர் கடாபியைப் பிடிக்க முயற்சித்தனர். அப்போதுதான் மாளிகையின் அடியில் சுரங்க வழிகள் இருப்பது பற்றிய தகவல் அவர்களுக்குக் கிடைத்தது. இதில் ஒரு சில வழிகள் மூலம் அவர்கள் தேடினர். ஆனால் கடாபி அவர்கள்கையில் சிக்கவில்லை.
சுரங்க வழிகளில் ஆங்காங்கே சில கோல்ப் மைதான கார்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கார்களை கடாபி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறினர். இந்த கார்கள் மூலம் எவ்வித இடையூறுமின்றி நகரை சுற்றிவர கடாபி குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த சுரங்கப் பாதைகள் இரண்டு பேர் தாராளமாக நடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததோடு வலுவான இரும்புக் கதவுகளைக் கொண்டிருந்தன. இந்த சுரங்கவழிகள் எதிர்ப்புப் படையினருக்கு மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக இருந்ததாக "டெலிகிராப்" செய்தி தெரிவிக்கிறது. சில சுரங்க வழிகள் மாளிகைக்குள்ளும், சில சுரங்க வழிகள் முதன் முதலில் கடாபி எதிர்ப்பாளர்கள் திரண்ட பகுதியை ஒட்டியும் உள்ளன.
இவை தவிர நகரின் பல பகுதிகளில் நவீன வசதிகளைக் கொண்ட பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை குண்டு வீச்சுகளை தாக்குப் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இதனுள்ளே தொலைபேசி உள்ளது. ராணுவத்துக்குக் கட்டளையிடுவதற்கு கடாபி இதைப் பயன்படுத்தியிருக்கலாம். சில பதுங்கு குழிகளில் ஆவணங்கள், பெட்டிகள் ஆகியன உள்ளன.
சிலவற்றில் விஷ வாயுவிலிருந்து தப்பிக்க உதவும் முகக் கவசங்கள் உள்ளிட்டவை இருந்தன. ரசாயன வாயு தாக்குதல் மற்றும் அணுக் கதிர்வீச்சு தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன.
எதிர்ப்பாளர்கள் சுரங்கப் பாதை வழியாக தேடுதல் நடத்திய போது சில பகுதிகள் விழுந்து பெயர்ந்தபடி இருந்தன. இதனால் அவர்களால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த சுரங்கப் பாதைகள் இடிந்திருக்கலாம் என தெரிகிறது.
சில சுரங்க வழிகள் துறைமுகத்துக்கும், சில விமான நிலையத்துக்கும் செல்லும் வகையில் வடிவமைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் ஒரு சுரங்க வழி மட்டும் அரண்மனையை ஒட்டி அமைந்துள்ள ரிக்ஸஸ் ஹொட்டலுக்குச் சென்றது.
எந்த நோக்கத்திற்காக கடாபி இந்த சுரங்க வழிகளை உருவாக்கினாரோ அது அவருக்கு உதவியாக அமைந்துள்ளது. எப்படியிருப்பினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு இந்த சுரங்க வழிகள் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதேபோலத்தான் வியத்நாமின் சர்வாதிகாரி ஹோ சி மின்-னின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர் கட்டிய சுரங்கப் பாதை இப்போதும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதைப் போல கடாபி சுரங்க வழிகளும் எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கக்கூடும் என்று "டெலிகிராப்" செய்தி வெளியிட்டுள்ளது.
முகப்பு

U.S கான்டலீசா மீது கடாபி 'காதல்'-போட்டோ ஆல்பம் சிக்கியது!condoleezza ric

நியூயார்க்: லிபிய அதிபர் மும்மர் கடாபியின் வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது சிக்கிய ஆல்பம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. காரணம் அந்த ஆல்பத்தில் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் புகைப்படங்களை தொகுத்து வைத்துள்ளார் கடாபி. மேலும் கான்டலீசா ரைஸ் மீது தான் காதல் கொண்டிருந்ததையும் அதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கான்டலீசா ரைஸ் மீது 'காதல்' கொண்டவர்கள் பட்டியல் மிகப் பெரியது. அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது அவரைப் பிடித்திருப்பதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் மஸிமோ டி அலீமா, இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேக் ஸ்டிரா உள்ளிட்ட பலரும் வெளிப்படையாகவே கூறியிருந்தனர். அந்த வரிசையி்ல கடாபியும் ஒருவராக இருந்திருக்கிறார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

கடாபி ஏற்கனவே 2007ம் ஆண்டே ரைஸ் மீதான காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தியவர்தான். அந்த ஆண்டில் அவர் அல் ஜசீரா டிவிக்கு அளித்த பேட்டியில், லீஸா, லீஸா, லீஸா. நான் அவரை பெரிதும் நேசிக்கிறேன். எனக்குப் பிடித்த ஆப்பிரிக்க அழகுப் பெண் அவர் என்று கூறியிருந்தார் கடாபி.

அதற்கு அடுத்த ஆண்டே, ரைஸ், திரிபோலிக்கு விஜயம் செய்து கடாபியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அமெரிக்கா, லிபியா இடையிலான உறவில் லேசான மாற்றம் தெரிந்த சமயம்.

இதுமட்டுமே ரைஸ் மீ்தான கடாபியின் பாசமாக இதுவரை வெளியுலகுக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் ரைஸின் விதம் விதமான போட்டோக்களை ஆல்பம் போட்டு தனது இதயத்தில் புதைந்து கிடந்த காதலை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார் கடாபி என்பது தற்போது தெரிய வந்து அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. அந்த ஆல்பத்தில் விதம் விதமான போஸ்களில் ரைஸ் காணப்படுகிறார். கடாபியுடனான சந்திப்பின்போது எடுக்கப்பட் புகைப்படமும் அதில் உள்ளது.

புரட்சிப் படையினர் திரிபோலியை கைப்பற்றியதைத் தொடர்ந்து கடாபி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரது வீட்டை புரட்சிப் படையினர் கைப்பற்றி அங்குலம் அங்குலமாக சோதித்து வருகின்றனர். அப்போதுதான் இந்த ஆல்பம் சிக்கியது.

Noel Nadesan:ஈழப்போராட்டம என்ற பெயரில் பிரபாகரன்ஆடிய கூத்தை பார்தது

அன்பின் நண்பர் கிரிதரன் அவர்கட்கு,

நீங்கள் முதலாவது பந்தியில் கூறிய விடயங்கள் எதுவும் எனக்குப் புதிது அல்ல. இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாறு எனக்குத் தெரிந்தவிடயம். அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் அகதிகள் கழகத்தை ஆரப்பித்து அதை நடத்தியவர்களில் நானும் ஒருவன். அகதி விண்ணப்பத்தை நிரப்ப பலருக்கு நான் உதவி செய்தது மட்டுமல்ல, பத்துக்கும் மேற்பட்வர்களுக்கு எக்ஸ்பேட் விற்னசாகவும் சென்றிருக்கிறேன். அவுஸ்திரேலிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் பிரதமர், மற்றும் அமைச்சர்களிடம் பலதடவைகள் இலங்கையின் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை எடுத்துரைத்திருக்கிறேன். மேலும் எனது வண்ணாத்திக்குளம், உனையே மயல் கொண்டு ஆகிய இரண்டு நாவல்களும் இலங்கை அரசியல் விளைவுகளை பின்னணியாக எழுதப்பட்டவை என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை 83 கலவரத்துக்குப் பின்னர் பெரும்பாலான தமிழர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்தபோது நான் எனது மனைவியோடு இந்தியா சென்று அங்கிருந்த ஈழத்தமிழ் அகதிகளுக்கும் பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்ததோடு சகல இயக்கங்கங்களையும் மற்றும் எனக்குத்தெரிந்தவர்களையும் ஒன்றாக இணைத்து தமிழர் மருத்துவ நிதியத்தை ஆரம்பித்து நடத்திய போது நடந்த சகோதர யுத்தத்தையும் இந்தியப் படைகள் இலங்கைக்கு சென்றதையும் பார்த்துவிட்டு, ஈக்கு கொல்லன் பட்டறையில் என்ன வேலை என்ற தீர்மானத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு வந்தேன். கனடாவில் தற்போது வசிக்கும் பழைய இயக்கத்தினரிடம் எனது கதையை உறுதி செய்யலாம்.

புலிகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் டொமினிக்கன் குடியரசில்?.

புலிகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் டொமினிக்கன் குடியரசில் இருந்து கனடாவுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் இந்த கப்பல்கள் புலிகளுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களுக்கான பொருட்களையே ஏற்றி, இறக்குவதாக கனடாவில் மாற்று தமிழ் அமைப்புகளின் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு கப்பல்களும் டொமினிக்கன் குடியரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் மாத்திரம் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 627 வர்த்தக நிலையங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இவற்றில், பாபு என்பவர், மிகப்பெரிய உணவகம் ஒன்றை நடத்தி வருவதாக திவயின குறிப்பிட்டுள்ளது

உடைகிறது 'டீம் அன்னா'... சந்தோஷ் ஹெக்டே, அக்னிவேஷ் விலகல்!

டெல்லி: உண்ணாவிரதம் நீடிப்பது தொடர்பாக அன்னா ஹஸாரே குழுவில் பெரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அரசை மிட்டுவது காந்தியவாதிக்கு அழகல்ல என்று கூறிய அந்தக் குழுவின் முக்கிய உறுப்பினர் சந்தோஷ் ஹெக்டே பதவி விலகிவிட்டார்.

உண்மாவிரதத்தை நீடிப்பது சரியல்ல. அதை முடிப்பதற்கான நல்ல வாய்ப்பை அன்னா ஹஸாரே தவறவிட்டுவிட்டார் என்று மற்றொரு முக்கிய உறுப்பினர் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார். அவரும் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடு

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் நீடிப்பது தொடர்பாக அவரது குழுவில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அக்குழுவை சேர்ந்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி வருகிறார்.

பாராளுமன்றம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது ஜனநாயகம் அல்ல என்றும், ஹசாரே குழுவில் நடக்கும் சம்பவங்களால் நான் இனிமேல் அக்குழுவில் இருக்க முடியாது என்றும் அவர் கூறி விலகியுள்ளார்.

இதுபோல், சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், பாராளுமன்றம் நாளையே இதைச் செய்ய வேண்டும் என்று அச்சுறுத்தல் விடுப்பது காந்தியவாதிக்கு அழகல்ல என்றும், எனவே, அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி அக்னிவேஷ்

மற்றொரு முக்கிய உறுப்பினரான சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், "போராட்டத்தை முடித்துக் கொள்ள அன்னா ஹஸாரேவுக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம் வாய்த்தது. ஆனால் அதை அவர் நழுவவிட்டுவிட்டார்.

அன்னா என்ன செய்ய வேண்டும், எதுவரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதை ஒரு சிறுகுழுதான் தீர்மானிக்கிறது. இதனால் அன்னாவின் நம்பகத்தன்மைக்கு பங்கம் வந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்தபோது, எங்கள் நோக்கம் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்துவது மட்டுமே. ஆனால் இப்போது அந்த நோக்கம் மாறிப்போயிருக்கிறது. எனவே இந்தக் குழுவிலிருந்து என்னை விலக்கிக் கொள்கிறேன்.

மேலும் இந்தக் குழு சிறுபான்மையினர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒன்றாக மாறிவிட்டது. அவர்களுக்கு இந்தக் குழுவிலும் எந்த முக்கியத்துவமும் இல்லை. பாராளுமன்றத்தை அதிகாரம் செலுத்தும் அளவுக்கு இந்தக் குழு நடந்து கொள்வது சரியல்ல," என்றார்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே எஸ் வர்மாவும் உண்ணாவிரதத்தை நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னாவுக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவிருக்கலாம்

Nallur நல்லூர் கந்தன் தேர்த்திரு விழா இன்று


தி.மு.க., பணிகளை முடக்க முடியாது : ஸ்டாலின் சொல்கிறார்

திருச்சி: ""என்னதான் முடக்கினாலும், தி.மு.க.,வின் பணிகளை முடக்க முடியாது'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க., பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலின் நேற்று, திருச்சி மத்திய சிறைக்கு சென்றார். அங்கு எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.கோபி, கலைஞர் அறிவாலய கட்டிட நில அபகரிப்பு வழக்கில் கைதான, குடமுருட்டி சேகர், ஷெரீப், மாமுண்டி ஆகிய ஐந்து பேரையும் பார்த்து பேசினார்.

சிறைவளாகத்தில், நிருபர்களிடம், ஸ்டாலின் கூறியதாவது: தி.மு.க.,வினர் தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர். அவற்றை சட்டப்படி நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். கருணாநிதி சொன்னது போல, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார். தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான நேரு உள்ளிட்ட, சில கட்சியினர் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது செய்து, நீதிபதி முன் நிறுத்தியுள்ளனர். ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வினர் மீது, உண்மையான குற்றச்சாட்டுகளுடன் வரும் புகார்கள் மீது, நடவடிக்கை எடுப்பதில்லை. புகாரே இல்லாமல், தி.மு.க.,வினர் கைது செய்யப்படுகின்றனர். அதன்பின் அவர்கள் மீது மிரட்டி, அச்சுறுத்தி புகார்கள் வாங்கப்படுகின்றன. என்னதான் முடக்கினாலும், தி.மு.க.,வின் பணிகளை முடக்க முடியாது. ஒரு நேரு, வீரபாண்டி ஆறுமுகம், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தால், ஆயிரம் நேரு, வீரபாண்டி ஆறுமுகம், அனிதா ராதாகிருஷ்ணன் உருவாகி, சீரிய கட்சிப்பணியாற்றுவர். திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் என்பது வடிகட்டிய பொய். புகார் கொடுத்தவர் கலைஞர் அறிவாலய திறப்பு விழாவின் போது, கருணாநிதியால் சால்வை போர்த்தி, கணையாழி (மோதிரம்) வழங்கி சிறப்பு செய்யப்பட்டார். அவருடைய மகன் திருமணமும் கலைஞர் அறிவாலயத்தில் தான் நடந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்லியே தீர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பாரதிராஜா:நடிகர், நடிகைகள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி போராட்டம்

சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடுவதைக் கண்டித்து திரையுலகினரை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

மூன்று பேரையும் தூக்கிலிட இன்று தேதி குறித்துள்ளது வேலூர் சிறை நிர்வாகம்.இதையடுத்து இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் சங்க அவசரக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டிருப்பது பெரும் வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது. இதை எதிர்த்து திரையுலகம் சார்பில் பெரும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்.

முதல்வர் ஜெயலலிதா உடனடியாக தலையிட்டு மூன்று பேரையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக அவருக்கு கடிதம் எழுதவுள்ளோம். மேலும் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.

இதைச் செய்யும் தகுதியும், அதிகாரமும் அவருக்கு உள்ளது. எனவே அவர் தலையிட்டு மூன்று பேரையும் காப்பாற்ற வேண்டும்.

மீடியா உலகம் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரவேண்டும். வெறும் விளம்பரத்துக்காக நடக்கும் லோக்பால் உண்ணா விரதத்தை ஒரே மாதத்தில் உலகளாவிய பிரச்சினையாக மாற்றிவிட்ட மீடியா, உயிர் போகிற இந்த அத்யாவசிய, அவசரப் பிரச்சினைக்காக ஆதரவு காட்ட வேண்டும், என்றார் பாரதிராஜா.

3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: கலைஞர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’மத்திய அரசை ஆளும் பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்சனையிலே அக்கறையோடு மூன்று உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
முடிவெடுக்க இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் இந்தப் பிரச்சினையிலே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு,

இந்த மூவரின் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்திட வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

போர்க்குற்றம் குறித்து இலங்கையே விசாரிக்கும் : கிருஷ்ணா

"இலங்கையுடனான உறவை, எக்காரணம் கொண்டும் கெடுத்துக் கொள்ள, இந்தியா தயாராக இல்லை. கச்சத்தீவு முடிந்து போன விஷயம். திரும்பவும் பேச முடியாது. போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்தும். ஐ.நா., சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் வரும்போது, அதை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்து, பிறகு முடிவு செய்யப்படும்' என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் விவகாரம், பார்லிமென்டில் நேற்று முன்தினம் எடுத்துக் கொள்ளப்பட்டது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரண்டு அவைகளிலுமே, இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. பெரும்பாலும், இதுகுறித்து தமிழக எம்.பி.,க்கள் மட்டுமே பேசிவந்த நிலையில், இம்முறை வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக் கட்சிகளுமே இந்த விவாதத்தில் பங்கேற்று, தங்களது கருத்துக்களை நேற்று பதிவு செய்தன.

தனது பதிலுரையின் போது, மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: இலங்கை இந்தியாவின் அண்டைநாடு என்பதோடு மட்டுமல்லாது, நட்புறவுடன் கொண்ட நாடு. அந்த நாட்டுடனான உறவை, எந்தக் காரணத்திற்காகவும் கெடுத்துக் கொள்வதற்கு, இந்தியா தயாராக இல்லை. மாறாக, இலங்கையுடனான இந்தியாவின் உறவை, மென்மேலும் பலப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறோம்.கச்சத்தீவு விவகாரம் என்பது, முடிந்து போன ஒன்று. சர்வதேச ஒப்பந்தம் மூ லம், அதை இலங்கைக்கு அளித்துவிட்ட பிறகு, அதை மீண்டும் பரிசீலிக்க இயலாது.

இலங்கையில், தற்போது நடந்து முடிந்த போரின் போது அத்துமீறல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. போர்க்குற்றங்கள் குறித்து, விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது. போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளது. அந்த விசாரணை, நியாயமாக இருக்கும் என்று இந்தியா நம்புகிறது. போர் குற்றங்களுக்காக, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால், இந்தியாவின் நிலை என்ன என்று கேட்கப்படுகிறது. முதலில் அதுபோன்ற ஒரு சூழ்நிலை வரட்டும். அப்போது, அந்த தீர்மானத்தை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கலாம் என்பதே இந்தியாவின் நிலை. தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.அந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக ஆக்குவதற்கு, இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கிடும். இதில், இந்தியா ஆர்வமாக உள்ளது. இவ்வாறு, கிருஷ்ணா பேசினார்.

அமைச்சரின் பதிலுரையின்போது குறுக்கிட்ட திமுக எம்.பி.,யான டி.ஆர்.பாலு, "இலங்கையில் போருக்குப் பிறகு புலிகள் அமைப்பு முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தீர்வு தேவையில்லை என, கோத்தபய ராஜபக்ஷே கூறியுள்ளார்.

அதுகுறித்த இந்தியாவின் கருத்து என்ன? 1983ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அத்துமீறல்கள், கொலைகள், கற்பழிப்புகள், சூறையாடுதல் என நிறைய வன்முறைகள் நடந்துள்ளன. அதுகுறித்து, சர்வதேச அளவிலான விசாரணை அமைப்பு நிறுவி, அதன்மூலம் விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து, இந்தியாவின் நிலை என்ன?' என்று பாலு கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலாக கிருஷ்ணா," நான் இந்திய அரசின் கருத்துக்களை மட்டுமே கூற முடியும். அதைத் தாண்டி எதையும் கூறிவிட முடியாது' என்று பதில் அளித்தார்.

அமைச்சரின் பதிலைக் கேட்டவுடன், திமுக எம்.பி.,க்கள் தாங்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். திமுக வெளிநடப்பு அறிவிப்பு சொன்ன மறுகணமே, நொடி கூட இடைவேளை அளிக்காமல், உடனடியாக அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதனால், அ.தி.மு.க.,வுக்கு கால அவகாச வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையே பின்னர் நிருபர்களைச் சந்தித்தபோதும், அதிமுக எம்.பி.,யான தம்பிதுரை தெரிவித்தார்.
மீண்டும் அவை கூடியபோது, அதிமுக எம்.பி.,க்கள் வாக்குவாதத்தில் இறங்கினர். ஆனால், அந்த சமயத்தில் லோக்பால் விவகாரம் பெரிய அளவில் அவையில் நிலவியதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.

அரசு அக்கறையில்லை : சரத்யாதவ் பேசும்போது," இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை, முற்றிலும் தோற்றுவிட்டது. எனவே, அதை மாற்ற வேண்டும். வங்கதேசத்தை உருவாக்கிய இந்தியா, இலங்கை விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அதற்கு கிருஷ்ணா," அப்போதைய சூழ்நிலை வேறு, தற்போதைய சூழ்நிலை வேறு,' என்றார். மேலும், மீனவர் பிரச்னைக்கு ஒரே தீர்வு, கடல் எல்லையை மீனவர்கள் மதித்து நடக்க வேண்டும்'என்றார்.

டில்லி நிருபர் தினமலர்

அவசரகாலச் சட்டத்தை நீக்கும் முடிவின் எதிரொலியே கிறீஸ் பூதக் கலவரங்கள் : பஷில்


pasil அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் நீக்குவதற்கு முடிவெடுத்ததன் எதிரொலியே மர்ம மனிதன் கிறீஸ்பூதம் கலவரங்களாகும். இது சமாதானத்தை விரும்பாத அரசியல்வாதிகளின் சதி முயற்சியாகும் என்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு மாகாண அதிகாரிகள் எந்த நேரத்தில் எதைச் செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

வடக்கு மாகாண அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று யாழ். பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்,

நாட்டில் அவசர காலச்சட்டத்தை நீக்குவதற்கு எமது அரசாங்கம் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் சமாதானத்தை செயற்படுத்தும் நல்லெண்ணத்தை வெளியுலகத்திற்கு காட்டிவிடும் என்பதற்காக சில அரசியல்வாதிகளால் மர்ம மனிதன் , கிறீஸ்பூதம் கலவரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மர்ம மனிதன் கிறீஸ்பூதம் என்று ஒன்றும் இல்லை. அது வதந்தியேயாகும்.

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் அபிவிருத்திகள் மக்களிடம் சென்றடைவதில்லையெனவும் தேவையான இடத்தில் தேவையானதைச் செய்யாது தேவையற்ற செயலைச் செய்து வருவதாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

இதில் கோட்டை வீதிக்கு காப்பெற் போடப்பட்டும் அதேநேரம் ஆஸ்பத்திரி வீதி எவ்வித செப்பனிடல் இல்லாமலும் விவசாயிகளுக்கு மீன்வலையும் கடற்றொழிலாளர்களுக்கு மண்வெட்டியும் வடக்கு மாகாண அதிகாரிகள் வழங்கி வருகின்றார்கள்.

வீதி அகலமாக்கும் நடவடிக்கைகளின்போது மதிலை முன்னறிவித்தல் இன்றி இடித்து அகற்றிவிட்டு அதற்கான நஷ்டஈடுகளோ முன்னறிவிப்புக்களோ வழங்கப்படவில்லையென யாழ். மாவட்டத்தின் நீதிவான் ஒருவர் முறையிட்டுள்ளார். அவருக்கு நாம் நஷ்டஈடு வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளோம்.

மேலும் வடக்கு மாகாணம் முழுவதும் மக்களின் தேவைக்கேற்ப அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதியின் சிந்தனையாகும். இதற்கேற்ப அனைவரும் செயற்படவேண்டும். அம்பாந்தோட்டை எவ்வாறு முன்னணியிலுள்ளதோ அதேபோல் அனைத்து வடக்கு மாகாணப் பகுதியும் முன்னேற்றமடையவேண்டும். குறிப்பாக உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற்ற பிரதேச சபைகளுக்கு விசேட அபிவிருத்தி கிடைக்கும். இது மட்டும் அல்லாது அனைத்துப் பகுதிகளும் மக்களுக்கான தேவை உணர்ந்து அபிவிருத்தி கிடைக்கும். இதற்காக வடக்கு மாகாண அதிகாரிகள் மக்களின் தேவை அறிந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். _

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

காஞ்சி சங்கராச்சாரி நீதிபதியுடன் பேசிய ரகசிய ஒலி நாடா


நீதிபதிக்கு ரேட்வைத்த காஞ்சியை தண்டிக்க anna ஜன்லோக்பால் அம்பிகள் தயாரா?

ஊழலுக்கு எதிரான உலகப் போரை துவங்கியிருப்பதாக பீற்றிக்  கொள்ளும் இவர்கள் பெரிய அம்பி ஜெயேந்திரனுக்கு ஒரு தூக்கோ, என்கவுண்டரோ ஏற்பாடு செய்வார்களா
அங்கும், இங்கும், எங்கும், தூணிலும், துரும்பிலும், எப்.எம்மிலும், சானலிலும், தினசரியிலும், எஸ்.எம்.எஸ்சிலும், மீஸ்டு காலிலும் கூட எல்லாவற்றிலும் ஊழல் ஒழிப்பு போர் பொங்கி வழியும் நேரம். அந்த ‘போராட்ட நேரத்திற்கு’ பொருத்தமாக ஒரு ராகம் காஞ்சிபுரத்திலிருந்து ஊளையிடத் துவங்கியிருப்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?
பண ஆதாயத்திற்காக நடக்கும் ஊழலை விட, கொலை செய்துவிட்டு நீதிபதியையே விலைக்கு வாங்கும் ஊழல் பஞ்சமா பாவங்களையும் விட மோசமில்லையா? அப்பேற்பட்ட விஸ்வரூப ஊழலை காஞ்சி மட ஜெயேந்திரன் செய்திருப்பது சமீப நாட்களாக ஊடகங்களில் யாரும் கவனிக்கப்படாமல் ஓரமாய் ஒதுங்கியிருக்கிறது. அதை ஊழல் எதிர்ப்பு போராளிகளின் கவன வெளிச்சத்திற்கு இழுத்துக் கொண்டு வருகிறோம்.
முதலில் சுருக்கமாக பிளாஷ் பேக்: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் 3.9.2004 அன்று ‘ஆண்டவன்’ சன்னிதானமான அந்த கோவில் வளாகத்திலேயே கொல்லப்பட்டார். இந்த புண்ணிய ஷேத்திரத்தில் இப்படியான புண்ணிய செயலை செய்வர்  என்று சங்கர மட சங்கராசாரிகளான ஜெயேந்திரனும், விஜயேந்திரனும் கைது செய்யப்பட்டனர். மேலும் மட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, ரவி சுப்பிரமணியன், அப்பு என்று ரவுடிகள் முதல் அக்ரஹாரத்து பூணூல் மாஸ்டர்கள் வரை அனைவரும் கைது செய்யப்பட்டு மொத்தம் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முதலில் இந்த வழக்கு செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜெயா மாமியோடு ஏதோ பிசினஸ் பிரச்சினையால் சண்டை மூண்டு சங்கர்சாரிஸ் டூ விட்ட நேரமாதலால் வழக்கு ஜரூராக நடந்து வந்தது. எனவே இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடந்து வந்தால் நீதி கிடைக்காது என்று நரித்தனமாய் பொங்கிய ஜெயேந்திரன் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவாள் அதிகாரம் டெல்லி வரை கொடி கட்டிப் பறப்பதால் நீதிபதிகளும் வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட்டனர்.
அதன்படி 2006-ஆம் ஆண்டு முதல் புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதே ஆண்டில் கருணாநிதி அரசு தமிழகத்தில் பதவியேற்கிறது. அவாள்களின் உள்ளம் கவர்ந்த தளபதி ஜெயேந்திரனை காப்பாற்ற விரும்பிய தி.மு.க அரசு அதற்கு பக்க பலமாக துணை நின்றது. ஆரம்பத்தில் நீதிபதி சின்ன பாண்டியும், பின்னர் நீதிபதி கிருஷ்ணராஜூம் விசாரிக்க தற்போது நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இதுவரை 170 சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.
அவாள்களின் அதிகார ஆதரவோடும் தி.மு.கவின் உறுதுணையோடும் 92 பேர் பல்டி சாட்சிகளாக மாற்றப்பட்டார்கள். இதில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியம், சங்கரராமன் மனைவி பத்மா உட்பட பெருந்தலைகளே உண்டு. இந்நிலையில் வரும் 5-ம் தேதி வழக்கறிஞர் வாதம் நடப்பதாக இருந்தது. இந்த நேரம் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் இந்த வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரன் மற்றும் சிலர் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ சி.டியை தாக்கல் செய்து அதில் மை லார்டுக்கு இந்த லார்டு லபக்தாஸ் ரேட் பேசும் விசயத்தை வெளியே கொண்டு வருகிறார். இதை விசாரிக்க வேண்டுமென்று இவரது வழக்குரைஞர் மணிகண்டன் வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுகுணா புதுச்சேரி கோர்ட்டில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார். இந்த மனு பற்றி 8 வாரத்தில் பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
அந்த ஆடியோ மேட்டரில் கௌரி எனும் பாப்பாத்தியம்மாள் பார்ப்பன மொழியில் பார்ப்பன மேலாண்மையோடு உரையாடலை ஒருங்கிணைக்க கான்பிரன்ஸ் காலில் ஜெயேந்திரன் ‘அருள்’வாக்கு ஓதுகிறார். எல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் அனுப்பி விடுவதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நீதிபதியோ நமஸ்காரத்தை சொல்லி, தனக்கு அவசர பணத் தேவை இருப்பதால்தான் இந்த அவசரம் என்று வழிய, ஜெயேந்திரன் அதெல்லாம் பிரச்சினை இல்லை கடன் வாங்கியாவது உடன் அனுப்புவதாக வலியுறுத்த, பின்னர் அந்த கௌரி பெரியவாளே சொல்லியாச்சு இனியாச்சும் நம்பி ஆகிற வேலையை பாருங்கோ என்பது போல முடித்து வைக்கிறார்.
இந்த உலகில் என்னன்ன நீதி, சாட்சியங்கள், சந்தர்ப்ப சூழ்நிலை என்று என்னென்ன இருக்கிறதோ அத்தனையின் படியும் ஜெயேந்திரன் ஒரு பச்சையான கொலைகாரன் என்பதை யாரும் மறுப்பே இன்றி ஏற்க முடியும். இருந்தும் அத்தனை வழிகள் மூலமும் இந்த வழக்கினை ஒன்றுமில்லாததாக்க ஜெயேந்திரன் முயன்று அதில் வெற்றியும் பெற்ற நிலையில்தான் இந்த கிளைமாக்ஸ் ஊழல். அந்த அளவு மோசடியில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் இந்த குற்றவாளி.
2ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராசா குற்றவாளி என்பதிலும், அவர் செய்த குற்றத்தை அங்கீகரித்து, ஆதரித்து, வழிகாட்டிய குற்றத்தினை மன்மோகன்சிங் முதல் ப.சிதம்பரம் வரை முழு அரசுமே காரணமென்பதெல்லாம் தற்போது ராசா, கனிமொழி தரப்பு வழக்கறிஞர்கள் ஆணித்தரமாக வைக்கும் வாதமென்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதிலும் மன்மோகன் சிங்கையே நீதிமன்றத்தில் வைத்து விசாரணை செய்தால் இதை கேசுவலாக நீருபிப்போம் என்று சவால் விட்டதெல்லாம் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் மூழ்கிவிட்ட துயரம். இருப்பினும் கடைசிக் குற்றவாளி ராசாவையே தூக்கில் போட வேண்டும் என்று கொக்கரித்தவர் ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரே.
ராசாவாவது சில பல மில்லியன் கோடி ரூபாய் இழப்புக்கு காரணமானவர். அதுவும் அரசின் கொள்கையின் படி நடந்த கொள்ளை முடிவு என்றாலும் அதற்கே தூக்கு என்றால் ஜெயேந்திரனது குற்றம் அதைவிட பலமடங்கு கொடியது.
ஏனெனில் ஜெயேந்திரன் ஒரு அப்பாவியை கொன்றதோடு, அந்தக் கொலை குறித்து நடக்கும் வழக்கில் சாட்சிகளை விலைக்கு வாங்கியதோடு, இறுதியில் தீர்ப்பு தர இருக்கும் நீதிபதிக்கே விலை பேசியிருக்கிறார். ஆக இந்து மதத்தின் சர்வதேச தலைவரும், குற்றவாளிகளை விசாரித்து தண்டிக்க வேண்டிய ஒரு நீதிபதியும் இப்படி அப்பட்டமாக பிசினஸ் பேசுவது போல ரேட் பேசியிருப்பதை பார்த்து இந்த ஊழல் எதிர்ப்பு அம்பிகள் சும்மா இருப்பது ஏன்?
ஊழலுக்கு எதிரான உலகப் போரை துவங்கியிருப்பதாக பீற்றிக் கொள்ளும் இவர்கள் அம்பி அந்நியனாவதைப்போல, காந்தியவாதியாக இருந்து கொண்டே சத்ரபதி சிவாஜியாக மாறும் அண்ணா ஹசாரே வழியில்  பெரிய அம்பி ஜெயேந்திரனுக்கு ஒரு தூக்கோ, என்கவுண்டரோ ஏற்பாடு செய்வார்களா?
ஏனெனில் ஜனலோக்பால் வந்தால் கூட அதில் வரும் ஊழல் வழக்குகளை இத்தகைய நீதிபதிகள்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். அந்த நீதிபதி இனத்தை சேர்ந்தவரையே ஒரு சர்வதேச புகழ் சாமியார் விலைக்கு வாங்குவது என்றால் இது மாதிரி ஊழல் இதுவரை இந்தியாவே கண்டதில்லையே?
சும்மா ஆளே இல்லாத கடையில் ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடுவதை  விட்டு ஊழலுக்கு இலக்கணமே படைத்திருக்கும்  இந்த ஜெயேந்திரனை நரபலி கொடுத்தால் ஊழல் எதிர்ப்பு சாமிக்கு அளவில்லா ஆனந்தமாக இருக்குமே? செய்வார்களா?
கலெக்டர் ஆபீஸ் பியூனையும், கை வண்டியில் கத்திரிக்காய் விற்கும் பாமரனையும் ஊழலுக்காக தண்டிக்க வேண்டும் என்று சீன் மேல் சீன் போடும் இந்த மேட்டுக்குடி கனவான்கள், தங்களது இனத்தை சேர்ந்த ஆன்மீக தலைவரை மட்டும் கண்டு கொள்ளாத மர்மம் என்ன? இதுதான் இனப் பாசமோ?

கடாபி குடும்பத்தின் ஆடம்பர வாழ்வு அம்பலம்! (பட இணைப்பு)


லிபிய கிளர்ச்சியாளர்கள் கடாபியின் ‘பாப் அல் அஷீசியா’ வளாகத்தினுள் நுழைந்து அவ்விடத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் அவரது வாசஸ்தலம் மற்றும் அதனுள் காணப்பட்ட வசதிகள் தொடர்பில் வெளியுலகுக்குத் தெரியவர ஆரம்பித்துள்ளது.
கடாபியின் வளாகத்தினுள் சிறார்களுக்கான பூங்கா, சிறிய மிருகக்காட்சிசாலை என்பன காணப்படுகின்றன.
கடாபியின் வாசஸ்தலத்தினுள் பெரிய நீச்சல் தடாகமொன்றும் காணப்படுகின்றது. மேலும் அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களால் வாசஸ்தலத்தின் பெரும்பாலான பகுதி மற்றும் தளபாடங்கள் ஆகியன சிதைவடைந்துள்ளன.

கடந்த சில தினங்களாக அங்கு நடைபெற்றுவரும் உக்கிர மோதல்களில் சிக்கி 400 பேர் வரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெயேந்திரர் மறுப்பு!நீதிபதியுடன் சங்கரராமன் கொலை வழக்கில் பேரம் பேசவில்லை




சென்னை: வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அந்த குற்றச்சாட்டை ஜெயேந்திரர் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பற்றி ஜெயேந்திரர் கூறுகையில் 'நீதிபதியுடன் தான் தொலைபேசியில் நான் பேரம் பேசியதாக வந்த ஆடியோ முற்றிலும் பொய்யானது. வழக்குப் பிறகு நான் தொலைபேசியை பயன்படுத்தில்லை. எனக்கு வேண்டாதவர்கள் சிலர் பணத்துக்காக என் மீது பொய்யாக குற்றச்சாட்டியுள்ளனர்' என்று கூறினார். முன்னதாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் நேற்று தடை விதித்தது. மேலும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு 8 வாரம் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

86கொலைகள்,110 கொள்ளைகள்,13 வழிப்பறி ஜெ. இதையும் கொண்டாடலாம்..கருணாநிதி

அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளைக் கொண்டாடினார்கள். இந்த 100 நாட்களில் நடந்த கொலைகள் 86, கொள்ளைகள் 110, சங்கிலி பறிப்பு 38, வழிப்பறிக் கொள்ளைகள் 13. இவற்றையும் 100 நாள் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கட்சியினர் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் வட சென்னை மாவட்ட திமுக சார்பில் கடன பொதுக்கூட்டம் தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.

இதில் பேசிய கருணாநிதி, தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் இங்கு கண்டன கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த தலைப்பில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். ஜனநாயகமே இல்லாத சட்டசபையில், ஜனநாயகம் படும்பாடு என்று எப்படி கூற முடியும்?.
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் இனி தமிழ்நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை. கொலை, கொள்ளை, திருட்டுகள், தாலி சங்கிலி பறிப்புகள் இதற்கெல்லாம் இடமில்லை.
இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்கள் என்று கூறினார்.
ஆனால், இப்போது அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளைக் கொண்டாடினார்கள். இந்த 100 நாட்களில் நடந்த கொலைகள் 86, கொள்ளைகள் 110, சங்கிலி பறிப்பு 38, வழிப்பறிக் கொள்ளைகள் 13. இவற்றையும் 100 நாள் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கட்சியினர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நான் இன்று சட்டமன்றத்துக்கு சென்றேன். அங்கு என் கையெழுத்து பதிவாகாவிட்டால் எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும். நான் தொகுதி மக்களுக்கு பணியாற்றுவேன் என்று எனக்கு வாக்களித்த திருவாரூர் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக எம்.எல்.ஏ. என்ற முறையில் கடமையாற்ற பழைய சட்டமன்றத்துக்கு சென்றேன்.

புதிய சட்டசபைக்கு அல்ல. அதுதான் பூட்டப்பட்டு கிடக்கிறதே. காரணம் அதை நாம் கட்டியதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்ததற்காக, திறப்பு விழாவில் நம்முடைய சோனியா காந்தி முன்னிலை ஏற்றதற்காக. அந்த கட்டிடம் எதற்கும் உதவாது என்கிறார் ஜெயலிலதா.
ஆனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை அங்கு அமைக்கப்படும் என்று அம்மையார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், தமிழுக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் என்று கூறுகிற ஆட்சியாளர்களுக்கு துதிபாடும் சில கட்சிக்காரர்களும் இருக்கிற காரணத்தால், சட்டப்பூர்வமாக நாங்கள் நிறைவேற்றியுள்ளவற்றை எல்லாம் மாற்றி அமைக்கிறார். உலகில் 6 மொழிகள் தான் செம்மொழியாக்கப்பட்டன. தமிழ் செம்மொழி ஆவதற்கு முதல் குரல் கொடுத்தவர் பிராமணர் குலத்தில் உதித்த சூரிய நாராயண சாஸ்திரி.
அவர் எழுப்பிய குரலை எழுப்பித்தான் 100 ஆண்டாக தமிழ்மொழி செம்மொழியாக வேண்டும் என்று நாங்கள் மட்டுமல்ல. பொதுவுடமை கட்சியினர், கம்யூனிஸ்டு கட்சியினர் என இன்னும் எத்தனையோபேர் குரல் கொடுத்தனர். இந்த நிலையில் சோனியா காந்தி அம்மையாரை பலமுறை சந்தித்து, தமிழுக்கு செந்தமிழ் தகுதி தந்தாக வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இதைத்தொடர்ந்து, அவர் உத்தரவுப்படி, மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கும், புலவர்கள், அறிஞர்கள், மொழி வல்லுனர்கள் ஆகியோருடன் கலந்து பேசி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இது குறித்து, சோனியா காந்தி எனக்கு கடிதம் எழுதினார். உங்களால்தான் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தை நான் பத்திரமாக வைத்துள்ளேன்.
நான் மறைந்த பிறகு அதை எனது கருவூலத்தில் வைக்கும்படி கூறியிருக்கிறேன். ஆனால், செம்மொழி என்ற வார்த்தையை ஏற்க இந்த ஆட்சி மறுக்கிறது. சமச்சீர் புத்தகத்தில் எங்கெல்லாம் செம்மொழி என்ற வார்த்தை இருக்கிறதோ அவை, பேனா கொண்டும், மை கொண்டும் அழிக்கப்படுகிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது அதை கருணாநிதி பெற்று தந்தார் என்று எழுதப்பட்ட வாசகத்தை அழித்து இருக்கிறார்கள்.

புத்தகத்தில் உள்ள வாசகத்தை வேண்டும் என்றால் அவர்கள் அழித்து விடலாம். ஆனால், தமிழர்களின் இதயத்தில் எழுதப்பட்ட வாசகத்தை எந்தக்கொம்பன் வந்தாலும் அழிக்க முடியாது.
மறைமலை அடிகளாரும், 500 தமிழ் புலவர்களும் பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கு தனி ஆண்டு இல்லையே என்று ஆராய்ந்து, விவசாயிகளின் அறுவடை காலம், நெல்மணிகள் குவியும் காலம் இவைகளையெல்லாம் பார்த்து, பொங்கல் நாள் என்ற அறிவித்து, தை முதல் தேதி தமிழர் புத்தாண்டு பிறக்கிறது தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதம் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று முடிவு செய்யப்பட்டது.

அதை திமுக ஆட்சியில் சட்டமாக இயற்றி 2, 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா அதை மாற்றி, சித்திரை முதல் தேதிதான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில், அதிமுக ஆட்சியில், ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகத்தையும், தமிழையும், தமிழ் உணர்வுள்ள அனைவரும் காப்பாற்ற வேண்டும். தமிழ் வாழ உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நமது இளைஞர் பட்டாளம் உள்ள வரையில், தமிழை யாரும் அழிக்க முடியாது என்றார் கருணாநிதி.

பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்‌ஷ யாழ் விஜயம்

யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் யாழ் மக்களின் வாழ்வாதார நிலை குறித்து ஆராயும் முகமாக, பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்‌ஷ அவர்கள் நேற்று(ஆகஸ்ட்-25) யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ் விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தின் தற்போதய பாதுகாப்பு மற்றும் இடம்பெற்றுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் நிலமைளைநேரில் பாரவையிட்டார்.

யாழ் பாதுகாப்பு தலைமைய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, பாதுகாப்புச் செயலாளருக்கு இது விடமாகமும் விளக்கிக்கூறினார்.

பாதுகாப்புச் செயலாளர் முதலில், தில்லிப்பள்ளை "மஹஜன' கல்லூரியில் நிர்மானிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இதன் நிர்மானப் பணிகளுக்காக 24 மில்லியனுக்கு மேல்செலவாகும் என கணக்கிடப்பட்டிரு்க்கின்றது,இதற்க்கு பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவுடயவர்களின் நன்கொடை் உதவியும் பெறப்பட்டு நிர்மானவேலைகள் நடை பெறுகின்மை குறிப்பிடத்தக்கது.

அடுத்து, கீரிமலை மீன்பிடி கிராமத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர், மீனவர்களுடன் கலந்துறையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிந்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, காங்கேசன்துறை துறைமுகத்தின் விரிவாக்கல் திட்டத்தையும் நேரில் சென்று மேற்பார்வை செய்தார்.
இறுதியாக 90 ஏக்கரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் விவசாய கிராமத் திட்டத்தையும் பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார். இங்கு மரக்கறி வகைகள், பழங்கள், வெங்காயம் போன்ற பல பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு யாழ் சென்றுள்ள பாதுகாப்புச் செயலாளர், யாழ் கோட்டை, பருத்தித்துறை மற்றும் பல இடங்களையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.

இராணுவ முகாம் தாக்குதல் சம்பவம் - நூறு பேர் மீண்டும் நீதிமன்றில்!


யாழ். நாவந்துறை இராணுவ முகாமுக்கு அருகில் அமைதியின்மையை தோற்றுவித்ததாக சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நூறு பேரும் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் கடந்த 23 ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இன்று 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சந்தேகநபர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ் மாவட்ட நீதபதியும், மேலதிக நீதவானுமாகிய ஏ.பிரேமசங்கர் உத்தரவிட்டார்.
இன்றைய விசாரணைகளின் போது வைத்திய பரிசோதனை அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சந்தேகத்திற்கிடமானவர்களை தேடிச் சென்ற கிராம மக்கள் குழுவொன்று யாழ் நாவாந்துறை இராணுவ முகாம் மீது கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நூறு பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தை கட்டுப்படுத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் இதன்போது காயமடைந்ததுடன், இரண்டு பொலிஸ் ஜீப்களும் சேதமடைந்தன

47 முக்கிய தளபதிகளுடன் தப்பிச் செல்ல இருந்த பிரபாகரன்!

 பிரபாகரன் உள்ளிட்ட 47 முக்கிய தலைவர்கள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச் செல்லவிருந்ததாக மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கு செய்ததுபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பாத்திரத்தை கொலை செய்து அவரை அழிக்க சில சக்திகள் முயற்சிப்பதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-

"1970 மற்றும் 80களில் காணப்பட்ட சூழ்நிலைகளை வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் ஏற்படுத்தும் முயற்சியாகவே கிறீஸ் பூதத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
அன்று நந்திக்கடல் களப்பில் செயற்பட்ட பிரிவினைவாத கொடூர தீவிரவாத குழுவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பிரபாகரன் தோற்கடிக்க முடியாதவர், பிரபாகரன் ஒருபோதும் அடிபணியாதவர், பிரபாகரனுடைய இராணுவம் உயிர் தியாகம் செய்யும் குழு என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி எம்மை அச்சமூட்ட அணிப்பணியச் செய்தனர்.
ஆனால் அவர்களுடைய வெட்கமற்ற செயல் இறுதிக் கட்ட யுத்தத்தில் அம்பலமானது.

இறுதிக் கட்ட யுத்தின் போது மேற்குலக நாடுகளின் உதவியுடன் கிழக்கு ஐரோப்பிய இராணுவ முகாம் ஒன்றுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய 47 தளபதிகளுடனும் குடும்பத்தினருடனும் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். இதுதான் உண்மை.

கிறீஸ் பூதம் தொடர்பில் ஏற்படுத்தியுள்ள பீதியை அன்று பிரபாகரன் தொடர்பிலும் ஏற்படுத்தினர். எனினும் அந்த மாயையை எமது தேசிய அரசியல் செயற்பாடுகளின் மூலம் இராணுவத்தினரும் இரண்டு துண்டாக்கினர்.

அதேபோன்று இந்த வதந்தி பரப்புபவர்கள் அன்று ரணசிங்க பிரேமதாஸவிற்கு செய்தது பேன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பாத்திரத்தை அல்லது சுபாவத்தை கொலை செய்து அவரை அழிக்கப் பார்க்கின்றனர்." என்றார் ஜாதிக ஹெல உறுமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க.

சிட்னியில் ஆபாசப்படம் எடுத்த தமிழருக்கு 9 மாதங்கள் சிறை

நூற்றுக்கணக்கான பெண்களை தவறான கோணத்திலிருந்து (up skirt) படம்பிடித்த சிட்னியில் வாழ் இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 மாதங்கள் பிற்போடப்பட்ட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

சபாபதி சந்திஹாசன் என்ற நபர் சுமார் ஒருவருடத்தில் 1000 புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுத்துள்ளார்.
56 வயதான இவர் நிர்மாணத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். கடந்த பெப்ரவரி மாதம் சிட்னி மத்திய ரயில் நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டார்.
தனது கைப்பெட்டியின் மேல் டிஜிட்டல் கமராவை வைத்து பெண்கள் நடந்து செல்லும் பாதையில் அந்த கைப்பெட்டியை வைத்து இவ்வாறான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் புகைப்படங்களிலும் ஒருசில பெண்கள் உள்ளாடைகள் அணியாது காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
16 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவிகளும் இந்த வீடியோக் காட்சிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஒப்புகடகொண்டதை அடுத்தும் மன அளவில் பாதிக்கப்பட்ட நபர் என்ற ரீதியிலும் பொலிஸார் சிறந்த முறையில் ஒத்துழப்பு வழங்கினார் என்றும் இவருக்கு பிற்போடப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணப்பட்ட உள்நாட்டு பிணக்குகளினால் இவருக்கு மன உலைச்சல் ஏற்பட்டிருப்பதாக இலங்கையர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இலங்கையரது வீட்டினை சோதனை செய்த போது 1.3 ஜீ.பி கணினி பரப்பில் 1100 புபைப்படங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

அதிர்ச்சியில் பேரறிவாளன், முருகன், சாந்தன்-வழக்கு தொடர வருகிறார் ராம்ஜேத்மலானி

சென்னை: தூக்கில் போடும் தேதியை வேலூர் சிறை நிர்வாகம் தங்களிடம் தெரிவித்ததைக் கேட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கான தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்ஜேத்மலானி திங்கள்கிழமை வழக்கு தொடர வருகிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தாக்கல் செய்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதையடுத்து அவர்களை தூக்கில் போடும் தேதியை வேலூர் சிறை நிர்வாகம் இன்று முடிவு செய்து மூன்று பேரிடமும் தெரிவித்தது.
சிறைக் கண்காணிப்பாளர் இன்று தூக்கிலிடும் தேதியை தெரிவித்தபோது மூன்று பேருமே அதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனராம். இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தை திங்கள்கிழமை அவர்கள் நாடவுள்ளனர்.
கருணை மனுவை நிராகரித்ததை ரத்து செய்ய வேண்டும், தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரவுள்ளனர். இந்த அவசர மனு திங்கள்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த வழக்கில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகவுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு தண்டனை தேதி குறிப்பு

இந்தியாவின் முன்னாள் பிறதமர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அதிகாலை தூக்கிலிடபப்படுவார்கள் என்று வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜிவ் கொலை வழக்கில் முருகன், பேரரிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் இது ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மற்ற மூவரின் கருணை மனுக்கள் இந்த மாதத்தின் துவக்கத்தில் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற தற்போது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அஜீத்தின் மங்காத்தா அமெரிக்காவில் 70 திரையரங்குகளில்

அஜீத்தின் படம் ஒன்று அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மங்காத்தாவில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, ப்ரேம்ஜி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'மல்டி ஸ்டாரர்' படம் இது என வெங்கட் பிரபு கூறி வருகிறார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இடையில் படம் வெளியிடுவதில் ஸ்டுடியோ கிரீன், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் என தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே ஒரு 'மங்காத்தாவே' நடந்து வந்த நிலையில், இப்போது புதிதாக ராதிகாவின் ராடான் நிறுவனமும் மங்காத்தா வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.

படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி திரும்ப திரும்ப உறுதி கூறினாலும், இன்னும் நிச்சயமற்ற நிலைதான் நிலவுகிறது.

Saravana's, சப்ளை செய்பவர்களை நள்ளிரவில் வரச் சொல்வார்களாம்.


Mr S. Yogarathinam and Mr S. Rajarathinam, Partners, Saravana Stores Enterprises, at the launch of Jamaai Ice creams in Chennai on Thursday. —
'சரவணா ஸ்டோர்ஸ்’ என்ற பெயர் தமிழகம் முழுவதும் பிரபலம். குறைந்த விலையில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஓரே இடத்தில் வாங்க முடியும் என்பதால், நடுத்தர ஏழை மக்கள் குவியும் வணிக நிறுவனம்.
இந்த நிறுவனம் மீது ‘‘வாடிக்கையாளர்களை சரியாக நடத்துவதில்லை, பொருட்களின் தரம் சரியில்லை, பணியாளர்களை கொடுமை செய்கிறார்கள்’’ என்ற புகார்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டம் மட்டும் குறைவதே இல்லை.

கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் ‘சரவணா’ குரூப்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான 27 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடியாக ரெய்டு நடத் தினார்கள். மூன்று நாட்கள் நடந்த இந்த ரெய்டால், அதிகம் பாதிக்கப்பட்டது, வாடிக்கையாளர்கள்தான்.
ரம்ஜான் போன்ற திருவிழாக்கள் வருவதால், குறைந்த விலையில் துணிகள் வாங்கலாம் என்று வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். வருமான வரித்துறையினர் சுமார் ஐநூறு பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சரவணா நிறுவனத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றிய அவர்கள், அதனை லாரிகளில் அள்ளிச் சென்றார்கள்.
மூன்று நாட்கள் ஏன் இந்த சோதனை என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சரவணாஸ் நிறுவனங்களில் உள்ள அனைத்துப் பொருட்களையும் மொத்தமாக கணக்கெடுக்க வேண்டிய கட்டாயம். அவற்றை கணக்கெடுக்க மூன்று நாட்கள் ஆனது. நாங்கள் கைப்பற்றிய ஆவணங்களை சரிபார்க்கவே மாதக்கணக்கில் ஆகும். அதன் பின்னர்தான் எந்த அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்பதைச் சொல்லமுடியும்.
இந்த ரெய்டில் கணக்கில் காட்டப்படாத 18 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதோடு, ஆறு கடைகளில் இருப்புக் கணக்குக்கு அதிகமாக ரூ.60 கோடிக்கு ரொக்கம் இருந்தது. அதனையும் கைப்பற்றியுள்ளோம்’’ என்றனர்.
வருமானவரித்துறையின் இந்த ரெய்டுக்கு பங்காளிச் சண்டைதான் காரணம் என்கிறார்கள், சிலர். சரவணாஸ் நிறுவனம், ‘சரவணா ஸ்டோர்ஸ்’, ‘சரவணா செல்வரத்தினம்’ என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தன. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொழில் போட்டி ஏற்பட்டது. அதன் காரணமாக ஒருவரையொருவர் மாட்டிவிட மொட்டைக் கடுதாசிகள் போட்டதாகவும், அதுதான் இந்த ரெய்டுக்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

சரவணா ஸ்டோர்ஸ், தான் வாங்கும் எந்தப் பொருளுக்கும், விற்கும் பொருட்களுக்கும் முறையான பில் கொடுப்பது இல்லையாம். பொருட்கள் சப்ளை செய்பவர்களை நள்ளிரவில் வரச் சொல்வார்களாம். அவர்களுக்கான தொகையை பணமாகத்தான் கொடுப்பார்களாம். ஒரு நாள் தாமதமாக வந்து பணத்தைக் கேட்டால், பணத்தை பாது காத்ததற்காக அபராத வட்டி போட்டு பிடித்தம் செய்து கொள்வார்களாம். இதையெல்லாம் வருமான வரித்துறைக்கு போட்டுக் கொடுத்ததாலேயே ரெய்டு நடந்ததாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் சில்லறை வணிகத்தில் வளர்ந்து வருவது சிறு கடை வைத்திருக்கும் சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து ஏதாவது ஒருவகையில் எங்களுக்குத் தொந்தரவு செய்து வருகிறார்கள். அவர்களில் சிலர் போட்ட மொட்டைக் கடிதங்களை வைத்து எங்களை வருமான வரித் துறையினர் விசாரித்தனர். எங்களிடம் உள்ள எல்லா பொருட்களுக்கும் முறையான ஆவணங்கள் இருக்கிறது. நாங்கள் இதனை சட்டப்படி எதிர்கொள்வோம்’’ என்று தெரிவித்தனர்

45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி

ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி

கெய்ரோ: "தலைமறைவாக உள்ள லிபிய தலைவர் கடாபி, 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை காலி செய்து விட்டார்' என, அந்நாட்டு ரிசர்வ் வங்கி தலைவர் தெரிவித்துள்ளார். லிபிய தலைவராக பல ஆண்டுகளாக நீடித்து வந்த கடாபியை, பதவி விலகும்படி கோரி, கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி முதல் போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க, கடாபி ராணுவம் விமானத் தாக்குதலை நடத்தியதால், கிளர்ச்சியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேட்டோ படைகள், கடாபி ராணுவத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகின்றன. டிரிபோலியை தவிர்த்து, மற்ற பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்துள்ளன. டிரிபோலியை கைப்பற்ற நடந்த சண்டையில், 400 பேர் பலியாகியுள்ளனர். கடாபியின் மாளிகையை முற்றுகையிட்டு தாக்குதல் நடந்ததால், தற்போது கடாபி தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடித்துத் தருவோருக்கு, 8 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என, கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். லிபிய ரிசர்வ் வங்கியின் தலைவர் பர்கா பெங்தாரா குறிப்பிடுகையில், ""லிபியாவில் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தங்கத்தின் இருப்பு உள்ளது. டிரிபோலியில் மட்டும், 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் கையிருப்பு இருந்தது. இதை, கடாபி காலி செய்துள்ளார். இந்தத் தங்கத்தை, அவர் தனது கூலிப் படையினர் மூலம், அமெரிக்க டாலராகவோ, யுரோ கரன்சியாகவோ மாற்றியிருக்கலாம். இந்தப் பணத்தை, அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் செலவிடலாம். அல்லது தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாம்'' என்றார். இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள லிபிய தூதரகத்தில், லிபியாவின் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கிளர்ச்சியாளர்களின் கொடி நேற்று ஏற்றப்பட்டது. இது குறித்து, இஸ்லாமாபாத்தில் உள்ள லிபிய தூதர் குறிப்பிடுகையில், ""லிபியாவில், ஆட்சி மாற்றத்தை ஐ.நா.,மற்றும் உலக நாடுகள் ஆதரித்துள்ளன'' என்றார்.

Katunayaka 80 ஹெரோயின் வில்லைகள் வயிற்றினுள்ளிருந்து

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரஜை கைது:80 ஹெரோயின் வில்லைகள் வயிற்றினுள்ளிருந்து மீட்பு!

 
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரஜை கைது:80 ஹெரோயின் வில்லைகள் வயிற்றினுள்ளிருந்து மீட்பு!

644 கிராம் நிறையுள்ள ஹெரோயின் வில்லை களை விழுங்கி இலங் கைக்கு எடுத்து வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

போதைப் பொருள் தடுப்பு அதிகாரிக ளுக்கு கிடைத்த தகவல்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான பிகே 874 ரக விமானம் மூலம் இலங்கைக்கு வந்த மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். இதன் பின்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரின் வயிற்றிலிருந்து 80 ஹெரோயின் வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் கூறினர்.

இவை சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப் பட்டுள்ளது. சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வேத சடங்குகள் பாலியல் வக்கிரங்கள்.தாத்தாச்சாரியார்

அஸ்வமேதம்
வேத சடங்குகள் பாலியல் சடங்குகளா?
ஆம் என்கிறார்கள் சிலர். பாலியல் வக்கிரங்கள் என்றே சொல்கிறார்கள். இவர்கள் எல்லாரும் முக்கியமாக குறிப்பிடுவது அசுவமேத யாகத்தை. அதில் பயன்படுத்தப்படும் சில பகடிகளை இவர்கள் மிக மோசமாக இன்றைக்கு பொதுதளங்களில் ஏதோ இதுதான் வேத சடங்குகளே என்பது போல கூறுகிறார்கள். உதாரணமாக அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்:
ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு.. அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும.; அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி.. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும.; இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.
புத்தர் காலம் வரை இதுதான் நிலை என்கிறார் தாத்தாச்சாரியார். இதற்கான ஆதாரமாக இவர்கள் காட்டுவது என்ன என்று பார்த்தால், அவை வேத சடங்குகளில் பயன்படுத்தப்படும் தைத்திரீய சம்கிதையின் சில வரிகள். பாலியல் வசை/பகடித்தன்மை கொண்ட பொருள் தரும் சில வரிகள். ஏதோ அசுவமேத யாகத்தின் தன்மை இதே விதத்தில் மட்டுமே இருந்ததாக பொருள்பட தாத்தாச்சாரியார் எழுதுகிறார்

வடக்கு, கிழக்கு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்து அரசாங்கம்

அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
mahinda speechஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை முற்றாக நீக்குவதற்கான பிரேரணையைச் சபையில் முன்வைத்து உரை
அவசரகாலச் சட்டம் நேற்று முழுமையாக நீக்கப்பட்டது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்கான அறிவிப்பை நேற்று பாராளுமன்றத்தில் விடுத்தார்.

நாட்டின் பாதுகாப்பு திருப்திகரமானதாக உள்ளதால் நாட்டை ஆட்சிசெய்வதற்கு அவசரகால சட்டம் அவசியமற்றது என்ற தீர்மானத்திற்கமையவே அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான பிரேரணையை சபையில் முன்வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்றத்துக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை முற்றாக நீக்குவதற்கான பிரேரணையைச் சபையில் முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தியில் கட்டியெழுப் பவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்வதற்கு அவசரகால சட்டம் மிகவும் பலமாக அமைந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானமொன்றை வெளியிடுவதற்காக பாராளுமன்றத்திற்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதியை ஆளுங்கட்சியினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அவசரகால சட்டத்தை முற்றாக நீக்குவது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்து ஜனாதிபதி 20 நிமிடங்கள் உரையாற்றினார்.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்று கையில் :- பாராளுமன்றத்துக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள உறவை வலுப்படுத்துவதற்காகவே நான் அடிக்கடி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்கிறேன். அந்த வகையில் அதிக தடவை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த தலைவர் என்ற பெருமை எனக்குண்டு.

வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பிப்பதற்காக நான் தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், பாராளுமன்ற ஆலோசனைச் சபை கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளேன்.
நிறைவேற்று அதிகாரத்துக்கும் அரசியலமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம், ஜனநாயக மேம்பாட்டுக்கு இது மிக முக்கியமானதாகும். 1983 ஆம் ஆண்டில் கறுப்பு ஜுலையில் அன்றிருந்த உக்கிரமான நிலையையடுத்து அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது.
அதன் பின்னரான சமாதான ஒப்பந்த காலத்தில் அது மீண்டும் நீக்கப்பட்டு, சமாதான பேச்சுவார்த்தையை புலிகள் முறியடித்ததையடுத்து மீண்டும் அவசரகால சட்டம் நடைமுறைக்கு வந்தது.

வன்முறை, படுகொலைகளுடனான உக்கிர நிலையின் உச்சமாக வெளி விவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை இடம்பெற்றது. இதுபோன்ற சூழலொன்றிலேயே 2005 ஆம் ஆண்டு நம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம்.
நாம் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். அக்காலகட்டத்திலேயே கெப்பித்திக்கொல்லாவ படுகொலைகள், மாவிலாறு அணை மூடப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன.

இதனையடுத்து வடக்கு, கிழக்கை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்து அரசாங்கம் அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
மனிதாபிமான நடவடிக்கை, பாதுகாப்பு, மக்களுக்கான நிவாரணம், அம் மக்களின் மீள் குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு அவசரகால சட்டம் பெரும் உறுதுணையாக அமைந்தது.
எமது ஆட்சிக் காலத்தில் எந்த ஊடகங்களின் செயற்பாட்டுக்கும் நாம் தடை விதிக்கவில்லை. தணிக்கை செய்யவுமில்லை. ஆனால் சில ஊடகங்கள் இச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராகச் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் குறிப்பிட வேண்டும்.
நாம் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட போது அதனை சில ஊடகங்கள் அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் செயற்பட்டன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
2006 ஜூன் மாதத்திலிருந்து 2009 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் எமது மனிதாபிமான நடவடிக்கையின் மூலமாக பயங்கரவாதத்தை நாட்டிலிருந்தே ஒழிக்க எம்மால் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கில் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிக்கும் வகையில் மிதிவெடிகளை அகற்றவும் அடிப்படை உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றவும் நடவடிக்கை எடுத்தோம். இவற்றை எமது பிரதான பொறுப்பாகக் கொண்டோம்.

இடம்பெயர்ந்த 3 இலட்சம் பேரில் 8,000 பேரே தற்போது மீள்குடியேற்றத்திற்காக எஞ்சியுள்ளனர். இது எமது வெற்றிகரமான நடவடிக்கையின் பிரதிபலனாகும்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாடசாலை சுகாதாரம், நிர்வாக வசதிகள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்காக மாத்திரம் அரசாங்கம் 2,000 மில்லியன் டொலர் நிதியை செலவிட்டுள்ளது.

இந்த நிதியானது நீண்ட மற்றும் குறுகிய கால கடனாக மற்றும் உதவி நிதியாக பல்வேறு நாடுகளிலிருந்தும் பெறப்பட்டன.
இதனடிப்படையில் எதிர்வரும் இரண்டு வருடங்களில் அப்பிரதேசங்கள் முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்படுவது உறுதி.
பயங்கரவாத பாதிப்புகளுக்கு உள்ளான பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதோடு, குறுகிய காலகட்டமொன்றில் அங்கு உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி அங்கு ஜனநாயக நிர்வாக முறையை பலப்படுத்த முடிந்துள்ளது.
அடுத்த வருடத்தில் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் பிரதேச, மாகாண ரீதியிலும் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதிலும் ஏனைய பகுதி மக்களைப் போன்றே வடக்கு மக்களுக்கும் சமவாய்ப்பை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
2009 மே மாதம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டிய பின்னர் கிaஸ் பூதத்தை தவிர நாட்டில் எந்தவொரு பயங்கரவாத செயலும் பதிவாகவில்லை. ஜனநாயக ரீதியில் பல தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை நீதியான தேர்தல்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதனால்தான் கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தில் பல நிபந்தனைகளை நீக்கியுள்ளோம். இதன் மூலம் எமது சமூகத்தை சாதாரண நிர்வாக முறைமையின் கீழ் கொண்டுவர முடிந்துள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத்தை சக்திப்படுத்தும் அவர்களுக்கிடையிலான நிதி, பொருள் பரிமாற்றங்கள் போதைவஸ்து வர்த்தகம் மற்றும் நிதி, வங்கி செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட திட்டங்கள் எம்மால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் அதேவேளை, இந்த சட்ட திட்டங்கள் மூலம் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமலிருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள் ளோம். நாட்டின் சட்ட திட்டங்கள் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட எம்மால் முடிந்துள்ளது என்பதை பெருமையுடன் கூற முடியும்.

எனவே பல வருடங்களின் பின்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். பல வருடங்களாக இந்த பாராளுமன்றத்தில் பிரதி மாதமும் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சிலர் அதற்கு எதிராக வாக்களித்தனர். வேறு பலர் வாக்களிக்பைத் தவிர்த்தனர்.
இந்தப் பாராளுமன்றம் பல கட்சிகளைக் கொண்டுள்ளது. இதன் பிரதிநிதித்துவமானது பல்வேறு கருத்துகளை ஒன்றிணைத்த பெறுமதியான சொத்தாகிறது. இந்த வகையில் சபாநாயகர் உள்ளிட்ட 225 உறுப்பினர்களும் பெரும் சொத்துக்களாவர்.
முதற் தடவையாக பயங்கரவாத அழுத்தங்களின்றி வெளிப்படையாகவும் ஜனநாயக ரீதியாகவும் எமது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதனால் இந்த பாராளுமன்றத்தின் மூலம் அதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாட்டிற்குப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென நாட்டு மக்கள் சார்பில் நான் இந்த பாராளுமன்றத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
ஜனநாயக நாட்டில் எதிர்கால நடவடிக்கைகளை சாதாரண சட்டங்களின் கீழ் முன்னெடுக்க முடியும் என்பதால் அவசரகால சட்டத்தை நீக்கும் ஆலோசனையை நான் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.
நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதால் நான் இந்த ஆலோசனையை முன்வைக்கிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
.

அனைத்து கிருமிகளையும் அழிக்கும் சக்தி கொத்தமல்லிக்கு

அனைத்து வகை கிருமிகளையும் அழிக்கும் சக்தி கொத்தமல்லிக்கு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்திய மக்கள் சமையலில் சேர்க்கும் தானியங்கள், தாவரங்கள், மசாலாக்களை வெளிநாட்டினர் ஆய்வு செய்வது அதிகரித்து வருகிறது. நாம் பொடியாக்கி உணவில் சேர்க்கும் மஞ்சளின் மருத்துவ குணங்களை அறிந்து ஆச்சரியப்பட்ட விஞ்ஞானிகள், தொடர்ந்து நடத்திய பல ஆராய்ச்சிகளின் விளைவாக ‘உலகின் சத்து மிகுந்த 10 எளிமையான உணவுகள்’ பட்டியலில் இட்லி, தயிர் சாதத்துக்கு இடமளித்து கவுரவித்தனர். 

ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு விதமான மசாலாவை இந்தியர்கள் பயன்படுத்துவது ஏன் என்ற  ரகசியத்தை ஆராய்ச்சிகள் மூலம் அவர்கள் வெளியே கொண்டு வருகிறார்கள். அஞ்சறை பெட்டிக்கு மாடர்ன் கிச்சனில் இடமில்லாமல் போனாலும் அதில் போட்டு வைத்திருக்கக்கூடிய இஞ்சி, சுக்கு, ஓமம், மஞ்சள், கிராம்பு, வெந்தயம், சோம்பு, கடுகு, கடுக்காய் போன்ற பொருட்கள் மறைந்துவிடவில்லை. ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற புராதன இந்திய தத்துவம் மேற்கத்திய கருத்தரங்குகளில் விவாதத்துக்கு வந்துள்ளது. 

ஆயுர்வேதம் முதலான இந்திய மருத்துவ முறைகள் தொடர்பான ஆய்வுகள் ஒரு புறமும் இந்திய உணவுகள் பற்றிய ஆராய்ச்சி இன்னொரு புறமும் தொடர்வதால் நமது தொன்மையான மருத்துவ குறிப்புகள் விரிவாக அலசப்படுகின்றன. மருந்துகளை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும்; அப்போது உடலும் மனமும் என்ன நிலையில் இருக்க வேண்டும் என்பதைக்கூட சித்தர்களும்  முன்னோடிகளும் வகுத்து தந்திருக்கிறார்கள். 

நம்பர் 1 அறிவியல் சஞ்சிகையான நியு சைன்டிஸ்ட் இந்த விவரங்களை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ‘ஹீல் தைசெல்ஃப்’ என்ற கவர் ஸ்டோரியை பிரசுரித்துள்ளது. ‘எந்த நோயானாலும் அதற்கு இலவச மருந்து ஒன்று இருக்கிறது; அதன் பெயர் உங்கள் மனம்’ என்கிறது கட்டுரையின்  தொடக்கம். இந்திய அணுகுமுறை என குறிப்பிடாத போதிலும் காலம் காலமாக நமது வைத்தியர்கள் கூறிவரும் வாழ்வுமுறை ஆலோசனைகளையே எதிரொலிக்கின்றன அதன் கருத்துக்கள். உலகம் மெல்ல மெல்ல இந்தியாவின் பாதைக்கு வந்துகொண்டிருக்கும்போது இங்கு பலரும் தமது வேர்களில் இருந்து விடுவித்துக் கொள்ள போராடுவதை பார்க்க பரிதாபம் மேலிடுகிறது.

நான் சொல்வதை தமிழர்கள் கேட்கவில்லை என தி.மு.க., தலைவர்

சென்னை: ""நான் பலமுறை சொல்லியும் தமிழர்கள் கேட்கவில்லை; அதனால், இன்று அனுபவிக்கின்றனர். ஜனநாயகத்தை மட்டுமல்ல, தமிழையும் பாதுகாக்க வேண்டும்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
வடசென்னை மாவட்ட தி.மு.க., சார்பில், "சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில், தங்கச் சாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:
சட்டசபையில் ஜனநாயகமே இல்லாத போது, அது படும் பாடு என்று எப்படி வருத்தப்பட முடியும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், "வன்முறைக்கு இனி இடமில்லை; கொலை, கொள்ளையில் ஈடுபட்டோர் ஆந்திராவுக்கு தப்பிவிட்டனர்' என ஜெயலலிதா கூறினார். அவர் 100 நாள் ஆட்சியில், தமிழகத்தில், 86 கொலை, 110 கொள்ளை, 38 செயின் பறிப்பு, 13 வழிப்பறி நடந்துள்ளதும் சாதனை தான். புதிய தலைமைச் செயலகம் எதற்கும் உதவாது என்றவர், தற்போது தலைசிறந்த மருத்துவமனை வரும் என தீர்மானம் போடுகிறார். தி.மு.க.,வின் செயல் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.

நான் தமிழர்களுக்கு பல முறை சொல்லியும், அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை; அதனால் இன்று அனுபவிக்கின்றனர். தமிழுக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் என உறுதியாக உள்ளனர். சமச்சீர் பாடப் புத்தகத்தில், செம்மொழி என்ற வார்த்தையை அழித்துள்ளனர். புத்தகத்தில் உள்ள வாசகத்தை அழிக்கலாமே தவிர, தமிழர்களின் இதயத்தில் உள்ள வார்த்தைகளை அழிக்க முடியாது.

தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் அல்ல, சித்திரை முதல் நாள் என மாற்றியுள்ளனர். அரிய கலாசாரத்தை அழிப்பதோடு, தமிழையும் அழித்து விடுவர். அதனால் நாம், ஜனநாயகத்தை மட்டுமல்ல, தமிழையும், தமிழ் உணர்வையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். தமிழ் வாழ, தமிழர் வாழ போராடுவோம். இளைஞர்கள் இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு, மாவட்ட பொறுப்பாளர் சேகர் மற்றும் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

ஆசிரியை ஆபாசமாக திட்டியதால் மாடியில் இருந்து குதித்தார் மாணவி



பல்லடத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் புவனேஸ்வரி (19). கோவையில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது புவனேஸ்வரியின் தோழி பாடம் நடத்துவதை கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதனால் ஆசிரியை அந்த மாணவியை அவதூறான வார்த்தைகளால் திட்டியதோடு வகுப்பறைக்கு வெளியே நிறுத்திவிட்டார். பின்னர் ஆசிரியை போர்டில் எழுதியதை அழித்துவிட்டு டஸ்டரை உதறியிருக்கிறார்.

அந்த சைகை வெளியே நிற்கும் தனது தோழியை அழைப்பது போல் புவனேஸ்வரிக்கு தோன்றியிருக்கிறது.
உடனே அவர் “மேடம் உன்னை உள்ளே அழைக்கிறார்” என்று கூறியிருக்கிறார். மறு நிமிடமே அந்த மாணவி வகுப்பறை உள்ளே வந்து அமர்ந்தார். வெளியே நிற்கச் சொன்ன மாணவி உள்ளே அமர்ந்திருப்பதைப் பார்த்த ஆசிரியை ஆத்திரமடைந்தார். உன்னை உள்ளே வரச்சொன்னது யார்? என்று கேட்டபோது புவனேஸ்வரியை கைகாட்டியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து புவனேஸ்வரியை ஆசிரியை திட்டியிருக்கிறார். அதோடு வகுப்பறையில் இருந்தும் வெளியே போகச் சொன்னார். மற்ற மாணவிகள் முன்பு நம்மை ஆசிரியை இப்படி திட்டிவிட்டாரே என மனவேதனை அடைந்த புவனேஸ்வரி வகுப்பறை இருந்த 2-வது மாடியில் இருந்து குதித்து விட்டார்.

படுகாயமடைந்த அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவி மாடியில் இருந்து குதித்தது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆசிரியை திட்டியதால்தான் மாணவி மாடியில் இருந்து குதித்தாரா? என்பது குறித்து விசாரித்தனர்

பேரறிவாளன், முருகன், சாந்தனை செப்டம்பர் 7ம் தேதிக்குள் தூக்கிலிட சிறை அதிகாரிக்கு கடிதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூவருக்கும் தூத்குத்தண்டனை தீர்ப்பு வழங்கியது கோர்ட். தண்டனை பெற்ற இவர்கள் 21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
இவர்கள் மூவரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர்.; இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
கருணை மனு நிராகரிப்பு பற்றிய குடியரசுத்தலைவரின் முடிவு பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசு மூலம் வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முருகன், சாந்தன், பேரறிவாளனிடம் நாளை சிறை நிர்வாகம் இந்த தகவலை தெரிவிக்கும்.

அழகிரி உட்பட 21 பேர் மீது 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை

100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உட்பட 21 பேர் மீது மதுரை மேலூர் கோர்ட்டில் 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி கோயிலுக்குமு.க. அழகிரி சென்றார். கோயிலுக்குள் கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும், கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது. இதனால், யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்த மேலூர் தேர்தல் அதிகாரி காளிமுத்துமற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் மு.க. அழகிரியுடன் இருந்த சிலர் தன்னை அடித்து உதைத்தனர் என்று தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 , 341, 332,188 ஆகிய பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிவு செய்தார்.
தாசில்தார் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  இந்த வழக்கில் அழகிரி முன்
பின்னர் தாசில்தார் காளிமுத்து தன்னை யாரும் தாக்கவில்லை என்று புகார் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.  இந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இன்று மேலூஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி,  அழகிரி உட்பட சம்பவத்தில் ஈடுபட்ட 21 பேர் மீது 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மேலூஎ மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பதா இல்லையா என்பது குறித்து கோர்ட் நாளை முடிவு செய்யும் என்று நீதிபதி அறிவித்தார்.
டெல்லியில் முகாமிட்டிருந்த மு.க.அழகிரி, கடந்த இரண்டு தினங்களாக திருச்சி, மதுரை சிறையில் இருக்கும் திமுகவினரை சந்தித்து வருகிறார்.  இந்நிலையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

தயாநிதி உதயநிதி கலாநிதி மங்காத்தா திரைத்துறையில் ஆதிக்கம்

சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன.

இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜீத்தின் மங்காத்தாவை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி.
மங்காத்தா திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில்தான் ஞானவேல் ராஜா உள்ளே வந்தார். அவர் படத்தின் தயாரிப்பாளரான க்ளவுட் நைன் பெயரையே அவர் சுத்தமாக மறைத்துவிட, போங்கப்பா நீங்களும் உங்க டீலும் என கடுப்பானார் தயாநிதி அழகிரி.

இந்த நேரத்தில் அவரது க்ளவுட் நைன் பேனரையும் சன் பிக்சர்ஸையும் இணைத்து வைத்தவர் கருணாநிதியின் மற்றொரு வாரிசான உதயநிதி ஸ்டாலின்.

தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் உதவியுடன் சன் பிக்சர்ஸ் வழங்கும் அஜீத்தின் மங்காத்தா என இப்போது நிலைமை மாறியிருக்கிறது.
விளம்பரங்களில் 'க்ளவுட் நைன் - சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்' என்றே குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாநிதி அழகிரி, "அண்ணன் உதயநிதிக்கு நன்றி. அவர்தான் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார்" என்று கூறியுள்ளார்.
பொதுவாக ஒரு படத்துக்கு 25 நாட்களுக்கு மேல் விளம்பரம் செய்து வெளியிடுவது சன் பிக்சர்ஸ் பாணி. ஆனால் தயாநிதிக்காக இந்தப் படத்தை ஒரு வாரத்துக்குள் விளம்பரம் செய்து வெளியிடுகிறார்கள்.
படம் வரும் 31-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என உறுதியளித்துள்ளார் தயாநிதி அழகிரி.

EPDP: அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருக்கும் இச்சூழலைபாதுகாக்க சகலரும் பங்களிக்க வேண்டும்!

ஊடகங்களுக்கான அறிக்கை!


இதுவரை காலமும் நடை முறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டத்தை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் நீக்கியிருப்பது சகலருக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாக இருப்பினும், இச்சட்டத்தை நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாதாகமான இன்றைய சூழலை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது சகலரதும் கடமையாகும் என ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், கடந்த கால யுத்த சூழலில் அவசரகாலச்சட்டம் என்பது நடைமுறையில் இருக்க வேண்டியது எனக்கருதி அரசாங்கத்தால் அது அமுல்ப்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் அவசரகாலச்சட்டமானது சாதாரண குடிமக்களை மனித முகங்கொண்டு பார்க்கவும் வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இதே வேளை அவசரகாலச்சட்டம் நீக்கப்படுவதற்கான தேவைகள் எம்மால் உணரப்பட்ட போது இச்சட்டமானது அமுலில் இருந்து வரும் சூழலை விரைவாக மாற்றியமைக்க வேண்டும் என்று தொடர்ந்தும் நாம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
இப்போது யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவசரகாலச்சட்டம் அமுலில் இருக்க வேண்டிய தேவைகள் இல்லாதொழிந்து போன சூழலில் நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைககளின் போது இது குறித்து வலியுறுத்தியும் வந்திருக்கின்றோம்.
அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கான ஒரு கால எல்லையை தீர்மானித்து இச்சட்;டத்தை விரைவாக நீக்குவதே அரோக்கியமானது எனவும் நாம் அரசாங்கத்திடம் தெரிவித்து வந்தமை சகலரும் அறிந்ததே. இந்நிலையில் ஐனாதிபதி அவர்களும் விருப்பம் கொண்டு இன்றைய சூழலையும் கருத்தில் கொண்டு அவசரகால சட்டத்தை நீக்கியமைக்காக நான் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.
இதே வேளை யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதற்கு பின்னரான காலச்சூலில் உருவாகிவரும் இது போன்ற முன்னேற்றகரமான மாற்றங்கள் சுயலாப அரசியல் சக்திகளுக்கு கசப்பான செய்திகளாவும், மாற்றங்கள் நிகழ்ந்து முந்நோக்கிய சமுதாயம் வளரவேண்டும் என விரும்பும் எம் போன்றவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இவைகள் மகிழ்ச்சி தரும் செய்திகளாகவும் உள்ளன.
ஆயினும், இன்று நாடெங்கும் நிலவி வரும் மர்ம மனிதர்கள் குறித்த நடமாட்டங்களும், இவைகள் குறித்த வதந்திகளும் சாதாரண குற்றவியல் சட்டங்களினால் விரைவாக கட்டுப்படுத்தப்பட வேண்டிய கட்டாய தேவையும் உணரப்பட்டுள்ளது.
இது தவிர மாறி வரும் இச்சூழலில், தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு அமைதிப்பேச்சின் மூலம் தீர்வு காண்பதற்கு தடையாக இருந்து வந்த அழிவு யுத்த எண்ணங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், மறு புறத்தில் அரசியல் தீர்வை நடை முறைப்படுத்த தேவையான பெரும்பான்மை ஆதரவுப்பலமும் நாடாளுமன்றத்தில் கிடைக்கப்பெற்றிருக்கும் இத்தருணத்தில் இது வரை தீராப்பிரச்சினையாக இருந்து வந்த அரசியலுரிமை பிரச்சினைக்கும் விரைவாக தீர்வு கண்டிட ஐனாதிபதி அவர்கள் உரிய வாழிகாட்டலை வழங்குவார் என்பதும் எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அகும்.
இவ்வாறு தெரிவித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவசரகாலச்சட்டம் நீக்கப்படிருப்பது தமிழ் மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்புகளில் ஒன்று என்றும், இதை மறுபடியும் இங்கு அமுல்ப்படுத்தும் சூழல் உருவாகாமல் பாதுகாப்பதற்கு அரசியல் தீர்வு உட்பட சகல விடயங்களுக்கும் தீர்வு காணும் முயற்சிகளை சுமுகமாகவும் இணக்கமாவும் பேசித்தீர்க்கும் வழிமுறையை முன்னெடுக்க சகலரும் சேர்ந்துழைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்பு செயலாளர்ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி!

எதற்கும் அடிப்பணிந்து அவசரகாலச் சட்டத்தை நீக்கவில்லை

எந்தவொரு அழுத்தங்களுக்கு அடிப்பணியும் அரசு தமதரசல்ல என அமைச்சரவை பதில் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லிபிய தலைவர் கடாபிக்கு நேர்ந்துள்ள தலையெழுத்து தமக்கு நேரும் என்ற அச்சத்திலா அரசு அவசரகாலச் சட்டத்தை நீக்கியது என ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர், யுத்தம் நிறைவடைந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால் மாத்திரமே அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

கடாபியின் தலைக்கு விலை 1.7 அமெரிக்க டொலர்கள்

லிபிய அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் ‌கிள‌ர்‌ச்‌சியா‌ள‌ர்க‌ள் தொடங்கிய சண்டை, கடந்த 22ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்தது. தலைநகர் திரிபோலியை ‌‌கிள‌ர்‌ச்‌சியாள‌ர்க‌ள் கைப்பற்றி உள்ளனர். ஆனால், கடாபி தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், கேணல் முஅம்மர் கடாயினை கொன்று அல்லது உயிருடன் பிடிப்போருக்கு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என லிபிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடாபியை பிடிப்போருக்கு பென்ஹாசியிலுள்ள வர்த்தர் ஒருவரும் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக கூறியுள்ளதாக லிபிய மாற்றத்திற்கான பேரவையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடாபிக்கும் அமைச்சரை அமைச்சர்களுக்கும் இடையிலான தொடர்புகள் அற்று போயுள்ளதாக லிபிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடாபியின் கட்டுப்பாட்டில் இருந்த 95 வீதமான பகுதிகளை தாம் கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்களின் இராணுவ பேச்சாளர் வெளிநாட்டு செய்தி சேவையொன்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முடக்கப்பட்ட லிபியாவின் சொத்துக்களை விடுவிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையில் இந்த வாரத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.