சனி, 14 டிசம்பர், 2024

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜெயலலிதா - கோமளவல்லி விவகாரம் -Flash back

May be an image of 1 person
May be an image of 1 person and smiling

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அன்னை சோனியா காந்தியை இழிவு படுத்துவதாக கருதிக்கொண்டு கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிந்த நிகழ்ச்சியானது திரு இவிகேஸ் இளங்கோவன் அவர்களை கடும் கோபத்திற்கு  ஆளாக்கியது  
அதற்கு இளங்கோவன் அவர்கள் கொடுத்த பதிலடி .. கோமளவல்லி!
கோமளவல்லி என்ற பெயருக்கு பின் இவ்வளவு பெரிய கதை இருக்கா தெரியவேயில்லை
'கோமளவல்லி' என்கிற பெயர் பிரபலமான கதை..!
அது எந்த ஆண்டு என்று ஞாபகமில்லை.
ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளர்
சந்திப்பில்(டெல்லி என்று ஞாபகம்)
நிருபர்களிடத்தில் பேசினார். பேசிக்கொண்டேயிருந்தார்.
பத்திரிகையாளர்கள் கேட்ட
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னவர் கடைசியாக “ஒரு
கேள்வியை நீங்க கேட்பீங்கன்னு நான் ரொம்பவே எதிர்பார்த்தேன்.
ஆனால் நீங்கள் கேட்கவேயில்லையே..?” என்று
பத்திரிகையாளர்களை பார்த்து கேட்டார்.
நிருபர்கள் திகைத்துப் போய் நிற்க, ஜெயலலிதா அவராகவே
கேள்வியையும் கேட்டு அதற்கான பதிலையும் சொன்னார்.
“அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால்
அண்டோனியா அல்பினா மைனோ இந்தியாவின் பிரதமராக முடியுமா..?

சென்னையிலேயே அடக்கம் செய்யுங்கள்; மக்களுக்கு இடையூறு கூடாது'; இறப்பதற்கு முன்பு கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன்!

 tamil.asianetnews.com -Rayar :  சென்னையிலேயே எனது உடலை அடக்கம் செய்யுங்கள்; என்னால் மக்களுக்கு இடையூறு கூடாது என்று  இறப்பதற்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக செல்வபெருந்தகை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்: காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார் -

 BBC News தமிழ் : காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முள்ளங்கி சாப்பிட்டால் புற்றுநோய், வைரஸ் எல்லாம் உங்களை எப்போதும் தீண்டாது..!

 zeenews.india.com  - S.Karthikeyan ;  Radish health Benefits Tamil | உணவே மருந்து என்பது தான் இந்திய முன்னோர்களின் சொல்லியிருக்கும் கருத்து.
பச்சையாக, வேக வைத்து என எந்த வகையில் சமைத்து சாப்பிட்டாலும்,
சரியான முறையில் காய்கறிகளை எடுத்துக் கொண்டால் நோயின்றி வாழலாம்.
அந்தவகையில் முள்ளங்கி என்னென்ன சத்துகள் இருக்கின்றன,
அவற்றை எப்படியெல்லாம் சமைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வெள்ளை கலரில் இருக்கும் இந்த காயில் புற்றுநோய், வைரஸ், பாக்டீரியாக்களை எல்லாம் விரட்டு ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.

வெளிநாடுகளுக்கு பறக்கும் இலங்கையர்கள் - முதல் 2 இடங்களில் முஸ்லிம் நாடுகள் - 3 ஆவது இஸ்ரேல்

  jaffnamuslim :  2024 ஆம் ஆண்டில், வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இன்றைய (13.12.2024) நிலவரப்படி, 300,162 பேராக பதிவாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது இது இரண்டாவது முறையாகும், இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டில் 310,948 தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 122,358 பெண் தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். குறித்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்குச் சென்ற மொத்த நபர்களில் 40.7 வீதமான பெண்களும், 60 வீதமான ஆண் தொழிலாளர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

வெள்ளி, 13 டிசம்பர், 2024

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனா சிறையில் அடைக்கப்பட்டார! ரசிகர்கள் போராட்டம்

 தினமலர் : ஹைதராபாத் : கூட்டநெரிசலில் பெண் பலியான சம்பவத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனாகைதாகி ஜாமின் பெற்ற நிலையில் இன்று(டிச.,13) இரவு சிறையில் அடைக்கப்பட்டார்.
தெலுங்கானாவில் இங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், பிரபல நடிகர்கள் அல்லு அர்ஜுன், பகத் பாசில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா - 2 தி ரூல் என்ற படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த 5ல் வெளியானது.
இந்த படத்தின் சிறப்பு காட்சி, ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில், கடந்த 4ம் தேதி இரவு திரையிடப்பட்டது.

உலக அரங்கில் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?

 BBC News தமிழ்  :  தமிழ்நாடு செஸ் போட்டிகள், தமிழ் நாடு செய்திகள், குகேஷ் தொம்மராஜூ, தமிழ்நாடு செஸ் வரலாறு
சென்னையை சேர்ந்த குகேஷ் தொம்மராஜு உலகின் இளம் செஸ் சாம்பியனாகியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனை வென்று இந்த வெற்றியை உறுதி செய்தார்.
சீனாவை சேர்ந்த 32 வயது டிங் லிரேனை எதிர்த்து ஆடி, இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார் குகேஷ் தொம்மராஜு.
இந்த வெற்றி மிகவும் சிறப்பானது என்றாலும், இந்தியாவின் செஸ் சாதனைகளில் மூன்றில் ஒரு பங்கு வெற்றியை உறுதி செய்துள்ள தமிழ்நாட்டிற்கு இது ஒன்றும் புதிய தருணமல்ல.

திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு -

BBC News தமிழ் :   திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல்லில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு தளங்கள் கொண்ட அந்த மருத்துவமனையின் நேற்றிரவு (டிச. 12) தரைத்தளத்தில் தீப்பற்றியதாகவும் அந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 12 டிசம்பர், 2024

வாஜ்பாய் கொண்டு வந்த ஈழ அகதிகளுக்கு எதிரான குடியுரிமை திருத்த 2003 சட்டம்:

 ராதா மனோகர் : ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இன்னும் 1,40,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை  வழங்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
ஆனால் இன்றுவரை இதை இந்தியா நிறைவேற்றவில்லை!
மறுபுறத்தில் இந்த ஒப்பந்தத்தின் அளவை தாண்டி இரு மடங்குகிற்கு மேல் இலங்கை குடியுரிமை வழங்கி விட்டது
இலங்கையில் தற்போது நாடற்றவர்கள் என்ற மக்கள் யாருமே இல்லை!
இந்தியாவில் இன்னும் மேற்குறிப்பிட்ட அளவு தமிழர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள்!
எதெற்கு எடுத்தாலும் திராவிட வெறுப்பை வாந்தி எடுக்கும் மனிதர்கள் இந்த பிரச்சனையின் மூல காரணமான இந்திய அரசை தப்பி தவறியும் கேள்வி கேட்க மாட்டார்கள்
இலங்கை அரசிடம் இருக்கும் நேர்மை கூட இந்திய ஒன்றிய அரசிடம் இல்லை என்பதுதான் உண்மை!
இந்த விடயத்தில் எந்த விடயத்திலும் தொடர்பு அற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது சேறு பூசுவது பலரின்  திராவிட வெறுப்பு பணியாக இருக்கிறது  

மாநிலங்களையே ஒழிக்கதான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி

File video :

 தினத்தந்தி : மாநிலங்களையே ஒழிக்கத்தான் ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டம் வழிவகுக்கும்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி
பேராபத்தான இத்திட்டத்தை நமது முதல்-அமைச்சர் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது. இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் : ”ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்துவிடும்”

கலைஞர் செய்திகள் = Lenin  :  தமிழ்நாடு  - ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்துவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் : ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

 மின்னம்பலம் - Kavi : ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த் தலைமையிலான குழு ஆராய்ந்து தனது அறிக்கையை மத்திய அமைச்சரவை முன் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டுக்கு இன்னொரு செஸ் உலக சாம்பியன்'-வாகை சூடிய குகேஷ்

நக்கீரன் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக ய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்று வாகை சூடியுள்ளார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நடப்பு சாம்பியனாக உள்ள சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியா கூட்டணி தலைமை பதவி யாருக்கு? காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சிகள்

BBC News தமிழ் : மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக லாலு யாதவ் கூறியது என்ன?
லாலு யாதவின் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுக்கு இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது.
இதுவரை, பிகார் மற்றும் ஜார்கண்டில் இரு கட்சிகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை இருந்து வருகின்றது.
லாலு யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இதனால் இந்தியா கூட்டணியின் தலைமைப் பதவிக்கு மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக லாலு யாதவ் கூறியிருப்பது பல ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதன், 11 டிசம்பர், 2024

டொனால்ட் ட்ரம்ப் : வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு இனி குடியுரிமை இல்லை

மாலைமலர்   டொனால்ட் ட்ரம்ப் : வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு இனி குடியுரிமை இல்லை
தனது 2ஆவது முறை ஆட்சியில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து, டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க, டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்; பா.ஜ.க-வுக்கு வேலை செய்த அதானி’ - இராம சுப்பிரமணியன்

 nakkheeran.in : ‘மகாராஷ்டிரா தேர்தல்; பா.ஜ.க-வுக்கு வேலை செய்த அதானி’ - இராம சுப்பிரமணியன்
‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் முனைவர் இராம சுப்பிரமணியன், மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு ஊடகங்களில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் என்ற மாயையான பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள்.

செவ்வாய், 10 டிசம்பர், 2024

எல்ஐசி முதல் சைபர் குற்றம் வரை! ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தையே அலறவிட்ட திமுக எம்.பி.க்கள்!

 tamil.asianetnews.com - vinoth kumar  : எல்ஐசி முகவர்களின் கமிஷன் உயர்வு, வேலைவாய்ப்பு பயிற்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சைபர் குற்றங்கள், சுகாதாரத்துறை நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
LIC to cyber crime! DMK MPs question Parliament tvk
* எல்ஐசி ஏஜென்ட்களின் கமிஷன் உயருமா? திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி
ஐஆர்டிஏஐ பரிந்துரைத்திருந்த போதிலும்,1938ல் இருந்து இன்றுவரை எல்.ஐ.சி முகவர்களின் கமிஷனை அதிகரிக்கவில்லை என முகவர்கள் வைக்கும் குற்றச்சாட்டை அரசு கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று திமுக எம்.பி. பி. வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

’ஒப்புதல் இன்றி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது’ : திருமாவளவனிடம் உறுதியளித்த ஒன்றிய அமைச்சர்

மின்னம்பலம் - christopher :  ’ஒப்புதல் இன்றி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது’ : திருமாவளவனிடம் உறுதியளித்த ஒன்றிய  அமைச்சர்
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வேண்டுமென திருமாவளவன் இன்று (டிசம்பர் 10) கோரிக்கை மனு அளித்த நிலையில், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய  அரசு எதுவும் செய்யாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ஒன்றிய  அரசு அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்

 hindutamil.in : ராமேசுவரம்: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்.
கடந்த நவ.9-ல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த 23 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அயனாவரம் பாலியல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யவேண்டும்.. நடிகை கஸ்தூரி

  hindutamil.in :  சென்னை: அயனாவரம் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுண்ட்டர் செய்தால் கூட மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என நடிகை கஸ்தூரி ஆவேசமாக தெரிவித்தார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கர்களுக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று எழும்பூர் காவல் நிலையம் வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திங்கள், 9 டிசம்பர், 2024

300 பவுன், 35 வீடுகளில் கொள்ளை - யாழ்ப்பாணத்தில் திருடன் பிடிபட்டான்

 jaffnamuslim.com  : 300 தங்கப்பவனுக்கும் மேற்பட்ட நகையையும் சுமார் 60 லட்சம் ரூபாய் பணத்தினையும் திருடிய திருடனை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஷ் அத்தியட்சகர் ஜருள் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்றையதினம் -09- நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மாணிப்பாய் போன்ற பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2022 ஆம் ஆண்டிலிருந்து, வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தினை திருடிச் செல்லும் திருடன் குறித்து நாங்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு இருந்தோம்.

ஆதவ் அர்ஜுனா வி சி கவில் இடை நீக்கம்! .. திருமாவளவன் விளக்கம்

Hindu Tamil  : ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்? - திருமாவளவன் விளக்கம்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட விசிக சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.
சென்னை: “நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனாவிடம், அரசியல் எதுவும் பேச வேண்டாம். அம்பேத்கர் குறித்தும், நூல் உருவாக்கத்தில் அவருடைய பங்கு குறித்தும் பேசுமாறு, சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்தேன்.
அதைமீறி, அவரது பேச்சு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது.
விசிக-வின் மீதான நம்பகத்தன்மையை நொறுக்கும் அளவுக்கு அது அமைந்துவிட்டது.

குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு யார் கொடுத்தது? அண்ணாமலை-

மாலை மலர் :  சென்னை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரியா அதிபர் ஆசாத்: ரஷ்யா வந்து சேர்ந்தார்

தினமலர் : மாஸ்கோ: சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ராஜினாமா செய்ததுடன், அமைதியான முறையில் அதிகார மாற்றத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் துவங்கியது.
அதிபராக இருந்த பஷர் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் எண்ணத்துடன் இந்த மோதல் ஏற்பட்டது. ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செயல்பட்டன. கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்யா விமானப்படை மூலம் அவ்வபோது தாக்குதல் நடத்தி வந்தது.

யாழ் ஆவா மாபியா குழுத் தலைவன் பிரசன்னா நல்லலிங்கம் கனடாவில் இருந்து பிரான்சுக்கு நாடு கடத்தப்படுகிறார்

Alleged Sri Lankan gangster faces extradition to France
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21+

ஹிரூ செய்திகளை: ஆவா என்ற சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பலின் தலைவன் என நம்பப்படும் பிரசன்னா நல்லலிங்கம் என்ற இலங்கையர் ஒருவர் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் பிரான்சுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நல்லலிங்கம் இலங்கை மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் இந்த வருட தொடக்கத்தில் கனடாவின் டொரன்டோவில் கைது செய்யப்பட்டார்.
அஜந்தன் சுப்ரமணியம் என்ற பெயரைப் பயன்படுத்தும் நல்லலிங்கம், 2022 செப்டம்பர் இல் பரிஸின் புறநகர்ப் பகுதியான லா கோர்னியூவில் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்குழுவின் எதிரிக் குழுவான எல்.சி. பாய்ஸ் (LC Boys) என்ற குழுவைச் சேர்ந்த கும்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அபிராமன் பாலகிருஷ்ணன் என்ற ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

எப்போதோ தூக்கியெறிந்திருக்க வேண்டிய ஆதவ் அர்ஜூனாவை இரசித்துக் கொண்டிருந்தவர் திருமா?

 தமிழ் மறவன் :  எப்போதோ தூக்கியெறிந்திருக்க வேண்டிய ஆதவ் அர்ஜூனாவை தொடர்ந்து வைத்துக் கொண்டு, முரண்பாடான அறிக்கைகளை இரசித்துக் கொண்டிருந்தவர் திருமா!
தன் அரசியலுக்கு பாதகமான சூழல் வந்துவிடுமோ என்கிற நிலையில்தான், மிக மென்மையாக சற்று எதிர்க்கிறார்!
திருமாவின் இயக்கத்தினரில் சிலர், அதாவது இரண்டாம் கட்ட தலைவர்கள், இருக்கிற இடத்தில் நேர்மையாக இருக்கமாட்டார்கள்!
நம்பகமான கூட்டாளியாகவும் இருப்பதில்லை, நாணயமான எதிரிகளாகவும் இருப்பதில்லை!!
திருமா பெரியாரை கொண்டாடுவார்,
இரவிக்குமார்கள் விமர்சிப்பதை பேச்சுக்கூட அவர் கண்டித்ததில்லை.
சந்தையூர் தீண்டாமை சுவர் குறித்து இதுவரையில் திருமா பேசியதே இல்லை
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சீராய்வு மனு அளித்ததெல்லாம் வரலாற்றுப் பிழை!

ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாச மீண்டும் இணைகிறார்கள்? பேச்சு வார்த்தை தொடர்கிறது

The government led by the President has performed the latest drama of its  ridiculous power politics - Sajith I Sri Lanka Latest News - Sri Lanka News  Update

ஜாப்னா முஸ்லீம் : தலைவராக சஜித், பிரதித் தலைவராக ருவன், செயலாளராக இம்தியாஸ், தேசிய அமைப்பாளர் நவீன், பொருளாலராக ஹர்ஷ, ஆலோசகராக ரணில்..?
நாட்டில் ஏற்பட்ட அண்மைய அரசியல் மாற்றம்,  மக்கள் மத்தியில் இருக்கும் வெறுப்பு அரசியல் போக்கும் மத்தியில் நாடு வீழ்ந்திருக்கும் நிலையில் இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேவைப்பாடு வெகுவாக உணரப்பட்டு வருகிறது. குறிப்பாக உலகலாவிய பொருளாதார மற்றும் அரசியல் போக்குகளுக்கு மத்தியில் பாதகமான சர்வதேச தலையீடுகளை சாதூரியமாக கையாள்வதற்கும், நாடாக இலங்கையின் முன்னேற்றத்தையும் கருத்திற் கொண்டு வலதுசாரி அரசியல் தரப்பைச் சேர்ந்த சகல கட்சிகளும் இணைவதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.

மம்தா பானர்ஜி : இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க நான் தயார்! அதிரடி அறிவிப்பு

நக்கீரன் : எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திமுக, விசிக, உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளோடு காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
ஆனால், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்ப்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார். தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால்,
அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடும், கம்ப்யூனிஸ்ட் கட்சியோடும் கூட்டணி சேராமல், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டார்.

சிரியாவில் 50 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுரை.. அதிபர் மாளிகை சூறை.. கொண்டாடித் தீர்க்கும் மக்கள்

மாலை மலர்:  2011 இல் ஒடுக்கப்பட்ட உள்நாட்டு போர் ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் புத்துயிர் பெற்றது. வடக்கு அலெப்போவை கடந்த வாரம் சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் ஆசாத்தின் படைகள் திணறியதால் ஹமா, தாரா, ஹோம்ஸ் ஆகிய நகரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தன.
கடைசியாக இன்று தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பைக் கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர்.