இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மின்சார
வாரியத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட
சி.செல்வராஜ் தன்னை வளர்த்த மின் வாரியம் நசிய வேண்டும் என்ற கெட்ட
எண்ணத்திலும், அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு முழு பயன்பாட்டில்
இருக்கக்கூடாது என்ற நோக்கிலும் வெளியிட்ட செய்திகளையும் புகார்களையும்
நம்பகமற்ற நாளிதழ் செய்திகள் வெளியிட்டிருந்தன.
மேலும், அவரின் கற்பனை அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஒரு பொது
நல மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.