ஒன்றான தேசிய பங்கு சந்தையில் நடந்த முறைகேடுகள், பங்கு சந்தை முதலீட்டாளர்களிடையெ பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இன்றும் முக்கிய எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் தேசிய பங்கு சந்தையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளும் இருந்து வருகின்றது.
இப்படி ஒரு மாபெரும் நம்பகமான எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் NSEயில் நடந்த மோசடிகள், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
அதிலும் நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் அனைத்தும் ஒரு சாமியாரின் முடிவினைக் கேட்ட பிறகு அறிவிக்கப்பட்டவை என்பது தான் முதலீட்டாளர்களை இன்னும் அதிர வைத்தது.
மர்மமான இமயமலை சாமியார்
என்.எஸ்.இயின் நிர்வாக இயக்குனராக 2013 - 2016 வரையில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, மர்மமான இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி தரப்பு வாதம் கூறியது. குறிப்பாக என்.எஸ்.இயின் முக்கிய முடிவுகள் அனைத்தும் யாரோ ஒரு இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டு நடந்துள்ளது. அனுபவமில்லாத ஆனந்த் சுப்ரமணியன் பணியமர்த்தல் என்எஸ்இ ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது.
யார் அந்த இமயமலை யோகி
யார் அந்த இமயமலை முறைகேடு வழக்கில் யார் அந்த இமயமலை யோகி என்ற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த இமயமலை சாமியார் என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் ஆனந்த் சுப்ரமணியனை கைது செய்து டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
















