சனி, 13 ஜனவரி, 2024

PTR வெறும் ஒரு நிதி அமைச்சர் என மட்டும் நாங்கள் கருதவில்லை. Vimalaadhithan Mani

May be an image of 1 person and text

 Vimalaadhithan Mani :    ராஜகண்ணப்பனை தூக்கிவிட்டு சிவசங்கரை மாற்றியபோது கொண்டாடியவர்கள் நாங்கள்தான்.
இறையன்பு, உதயச்சந்திரன், சைலேந்திர பாபு என தளபதியின் ஒவ்வொரு நியமனத்தையும் வரலாற்றை மாற்றிய நிகழ்வுகள் என போற்றி போற்றி புகழ்ந்து எழுதியது நாங்கள்தான்.
இப்போது PTR ன் பதவி மாற்றத்திற்காக குரல் கொடுக்கிறோம் என்றால் காரணம் இல்லாமலா பேசவோம்.  PTR வெறும் ஒரு நிதி அமைச்சர் என மட்டும் நாங்கள் கருதவில்லை.  
கௌரவ சேனையின் சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே நுழைந்தானே அபிமன்யு அதுபோல் ஆரிய வியூகத்தை அச்சமின்றி உடைத்து சுக்குநூறாக்கிய முதல்வரின் முக்கிய தளபதியாகவே கருதுகிறோம்.  நிர்மலா சீதாரமனுக்கு  GST கணக்கு சொல்லிக் கொடுத்தது, ஜக்கியின் ஆன்மீகத் தோலை உரித்து தோரணம் கட்டியது,

டி.ஆர்.பாலு : 27-ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்தார் -

தினத்தந்தி  :  புதுடெல்லி  மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது. அதன்படி தமிழக எம்பிக்கள் குழு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்தது.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியதாவது ,
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு, விரைந்து நிவாரணம் வழங்குமாறு அமித்ஷாவிடம் வலியுறுத்தினோம். மேலும் சுமார் ரூ. 37,000 கோடியை மத்திய அரசு உடனடியாக தருமாறு, கோரிக்கை வைத்தோம்.

அம்பாறை (இலங்கை) மாவட்டத்தைப் புரட்டிப் போட்டுள்ள வெள்ளம்

பிபிசி : அம்பாறை மாவட்டத்தைப் புரட்டிப் போட்டுள்ள வெள்ளம்
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டம் மிக அதிகளவில்
இலங்கையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டமையாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று 12ஆம் தேதி விடுத்த அறிக்கையின்படி, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மொத்தம் 53,641 குடும்பங்களைச் சேர்ந்த 178,312 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 50,996 குடும்பங்களைச் சேர்ந்த 169,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சீனா சென்ற மாலத்தீவு அதிபர் ... வெளியான முக்கிய தகவல்கள்

தந்தி டிவி :  பிரதமர் மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்ட போது மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்தைக்கூறியது பெரும் பேசுபொருளானது...
இதற்கு மத்தியில் மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்ஸு சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது...
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர்,
சீனாவை தனது நெருக்கமான நட்பு நாடு என்று அழைத்தார்...
2 அரசாங்கங்களும் 20 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...
 இந்த சந்திப்பின் போது ஜின்பிங் முய்ஸுவை தனது பழைய நண்பர் என அழைத்ததாகவும்,
மாலத்தீவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் வலதுசாரிகள் ஆதிக்கம் வளர்ந்துள்ளதை நிரூபித்த ‛‛அன்னபூரணி'': நியூயார்க் டைம்ஸ்

nayantharas-annapoorani-as-a-proof-of-the-growing-dominance-of-the-right-wing-in-india-says-new-yo

 tamil.oneindia.com - Nantha Kumar R :  இந்தியாவில் வலதுசாரிகள் ஆதிக்கம் வளர்ந்துள்ளதை நிரூபித்த ‛‛அன்னபூரணி'': நியூயார்க் டைம்ஸ் கட்டுரை
சென்னை: இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெளியானதாக கூறி நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் நடிப்பில் உருவான அன்னபூரணி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ‛தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் வலதுசாரிகளின் ஆதிக்கம் என்பது இந்தியாவில் வளர்ந்துள்ளதற்கு ‛‛அன்னபூரணி'' திரைப்படம் சான்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியான ‛ராஜா ராணி' திரைப்படததுக்கு பிறகு ‛லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா-நடிகர் ஜெய் இணைந்து நடித்த திரைப்படம் அன்னபூரணி. படத்தை அறிமுக இயக்குனர் நிலஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். nytimes.com/2024/01/12

அமைச்சர் விஜேதாச ராஜபக்ச :;தமிழ்க் கூட்டமைப்பு தமிழரின் சாபக்கேடு அது

 ceylonmirror.net - Jegan :  தமிழ்க் கூட்டமைப்பு தமிழரின் சாபக்கேடு அது இருக்கும் வரை தமிழினத்துக்கு விமோசனம் கிடையாது என்று அதியுயர் சபையில் கண்டபடி தூற்றினார் நீதி அமைச்சர். - Ceylonmirror.net
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு.”
இவ்வாறு நாடாளுமன்றத்தில் கண்டபடி தூற்றினார் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ.
தமிழர்கள் படுகொலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும், சிங்களவர்கள் படுகொலை தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பரஸ்பரம் கேள்விக்கணைகளைத் தொடுத்து காரசாரமாகத் தர்க்கம் செய்த நிலையில் இறுதியில் மேற்கண்டவாறு கூட்டமைப்பினரைத் தூற்றினார் நீதி அமைச்சர்.

வெள்ளி, 12 ஜனவரி, 2024

நெல்லை மாநகராட்சியில் 'ரிசார்ட்' அரசியல் - Nellai Mayor Saravanan

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறது தமிழ்நாடு அனைத்துக்கட்சிக்குழு

Kalaignar Seithigal - Lenin : தமிழ்நாடு டெல்லியில் ஜனவரி 13 ஆம் தேதி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்துக்கட்சிக்குழு சந்திக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

வியாழன், 11 ஜனவரி, 2024

உலகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாக திமுக அரசு என்றும் திகழும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

Kalaignar Seithigal : ;Lenin  :  தமிழ்நாடு ”உலகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாக திமுக அரசு என்றும் திகழும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் நடைபெறும் அயலக தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவிலேயே அயலக தமிழர் அணியை தொடங்கிய ஒரே கட்சி நமது திராவிட முன்னேற்ற கழகம்தான். தமிழ்நாடு அரசு 2021ம் அயலகத் தமிழர், மறுவாழ்வு துறையை உருவாக்கியது.

ஹோட்டலில் ஒன்றாக இருந்த ஜோடி.. இருவேறு மதம் என்பதால் கொடூரமாக தாக்கிய கும்பல்.. வீடியோ

tamil.oneindia.com - Mani Singh S :  பெங்களூர்: கர்நாடகாவில் இருவேறு சமூகத்தை சேர்ந்த திருமண உறவை தாண்டிய ஜோடி ஒட்டல் அறையில் ஒன்றாக இருந்ததை பார்த்த, ஒரு கும்பல் ஒன்று கொடூரமாக இருவரையும் தாக்கியதோடு அதை வீடியோவாகவும் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹனகல் தாலுகாவில், தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 8 ஆம் தேதி கர்நாட அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வரும் 40 வயது நபரும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 26 வயது பெண்ணும் ஒன்றாக அறை எடுத்து தங்கியிருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக பழகி வந்துள்ளனர்.

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய போதைப்பொருள், ஆயுதம் கடத்தல்: முன்னாள் ராணுவ வீரர் வாக்குமூலம்

 An ex-soldier confesses to smuggling drugs and weapons to rebuild the LTTE   புலிகள் அமைப்பை புனரமைக்க போதைப்பொருள், ஆயுதம் கடத்தல்: முன்னாள் ராணுவ வீரர் வாக்குமூலம்
dinamalar :சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் புனரமைக்க, போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தினோம்' என, சென்னையில் கைதான முன்னாள் ராணுவ வீரர், என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, சேலையூர் ராஜேஸ்வரி நகர், ஆதிலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் ஆதிலிங்கம், 43; முன்னாள் ராணுவ வீரர்.
கடந்த ஆகஸ்டில், இவரை போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் வழக்கில், என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். பின், இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.
ஆதிலிங்கம் அளித்துள்ள வாக்குமூலம்:

லட்சத்தீவில் இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது? - இந்தியா - மாலத்தீவு பிரச்னையில் மூக்கை நுழைக்கும் இஸ்ரேல்

BBC News தமிழ் :  இந்தியா - மாலத்தீவு நடுவே மூக்கை நுழைக்கும் இஸ்ரேல் - லட்சத்தீவில் என்ன செய்யப் போகிறது?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து மாலத்தீவு அமைச்சர் ஒருவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.
மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோதி லட்சத்தீவுக்குச் சென்று வந்த பிறகு பகிர்ந்த படங்கள் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவர் பிரதமர் மோதியை இஸ்ரேலின் கைப்பாவை என்று அழைத்திருந்தார்.
மாலத்தீவுக்கு இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை. மாலத்தீவு சுதந்திரம் அடைந்த பிறகு, 1965 முதல் 1974 வரை இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவு இருந்தது, ஆனால் 1974 இல் அது நிறுத்தப்பட்டது.

புதன், 10 ஜனவரி, 2024

உதயநிதி.. துணை முதல்வராக அறிவிக்கப்படுகிறார்? வெளிநாடு செல்லும் ஸ்டாலின்..

tamil.oneindia.com  -  Shyamsundar :  சென்னை; முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது.
சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது,
 ''நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர்தான் முடிவு எடுப்பார் '' என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப் பட்டிருக்கிறது.

கார்த்திக் சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் .. ராகுலை விட மோடி சிறந்த தலைவராம் கார்த்திக்கின் சங்கிவிசுவாசம்

மாலை மலர் : புதுடெல்லி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருந்து வரும் இவர், காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு எதிர் கருத்துக்களையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே, சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த கார்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகரான தலைவர் யாரும் நாட்டில் இல்லை என வெளிப்படையாக கருத்து சொல்லியிருந்தார். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

செவ்வாய், 9 ஜனவரி, 2024

இலங்கையில் ஜல்லிக்கட்டு 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்களுடன் முதல் முறையாக பொங்கல் திருவிழா

 கிரு நியூஸ் : இலங்கையில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்களுடன் பொங்கல் திருவிழா
கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா இன்று (08) திருகோணமலையில் நடைபெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் நடத்தியிருந்ததுடன்,

போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கையை கூட ஏற்காதது ஏன்?: எடப்பாடி கேள்வி!

minnambalam.com - christopher :  போக்குவரத்து தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக திமுக அரசு இருந்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இன்று (ஜனவரி 8) நள்ளிரவு முதல் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு, தனது வீராப்பு காரணமாக போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத காரணத்தால்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களில், உறவினர்களுடன் கொண்டாட வேண்டும் என்று வெளியூர்களில் வேலை செய்துவரும் லட்சக்கணக்கான தமிழர்கள் தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

திங்கள், 8 ஜனவரி, 2024

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகள் விடுதலை ரத்து - குஜராத் அரசு பற்றி உச்ச நீதிமன்றம் ...

BBC News தமிழ் :  குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, குற்றவாளிகள் மன்னிப்புக் கோரிய மனுவை விசாரித்த குஜராத் அரசு, 11 குற்றவாளிகளை விடுதலை செய்திருந்தது.
தண்டனையில் விலக்கு அளிக்கவோ அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு முடிவெடுப்பதுதான் பொருத்தமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் இந்த உத்தரவை வழங்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் குஜராத் அரசு உண்மைகளை புறக்கணித்துள்ளது என்று நீதிபதிகள் கூறினர். குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமரானார்! பங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் 5 வது முறையாக

மாலை மலர் : பங்காளதேச நாட்டில் நேற்று (ஜனவரி 7) பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
வாக்குப்பதிவை தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணிகளும் துவங்கின.
வாக்கு எண்ணிக்கையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீதத்திற்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அதன்படி வங்காளதேச நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவியேற்க உள்ளார்.

சபரிமலைக்கு வந்தா அடிப்பீங்களா.. ஐயப்ப பக்தர்களை பற்றி உங்களுக்கு தெரியாது.. தமிழிசை ஆவேசம்

tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் :  கோவை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை கேரள போலீஸார் சாமி தரிசனம் செய்யவிடாமல் தாக்குவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்து மத துவேசத்தை கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சபரிமலையில் கார்த்திகை மாதம் மண்டல பூஜை ஆரம்பித்ததில் இருந்தே, அங்கு ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன.
ஆனாலும், ஐயப்பனை தரிசிப்பதற்காக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல மாநிலங்களில் இருந்து தினம் தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்கிறார்கள். கூட்டம் அதிக அளவில் இருப்பதால் ஐயப்பனை தரிசிக்க 10 மணிநேரத்திற்கும் மேல் ஆவதாக கூறப்படுகிறது.

கலைஞர் நூற்றாண்டு விழாவில் சொதப்பல்.. காலியான சேர்களை பார்த்து பேசிய ரஜினி:

 தினமலர் : சென்னை: கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ‛கலைஞர் 100' நிகழ்ச்சியில் ரசிகர்கள் குறைவாகவே பங்கேற்றனர்.
 குறிப்பாக முக்கிய நடிகரான ரஜினி பேசும்போது கூட காலி இருக்கைகளே தென்பட்டன. இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று (ஜன.,6) நடைபெற்றது. இதில் எதிர்பார்த்த அளவு கூட்டமே இல்லாததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வளவு பெரிய மைதானத்தில் ஆங்காங்கே மட்டும் சிலர் அமர்ந்திருந்தனர்.

பா.ஜ.க வேஸ்ட்... அ.தி.மு.க-தான் பெஸ்ட்!’- கிருஷ்ணசாமி முடிவு... கடுப்பில் கமலாலயம்!

vikatan.com : தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த முறையாவது அங்கே வென்று டெல்லிக்குப் போய்விட வேண்டுமென துடியாய்த் துடிக்கிறாராம். யாருடன் களம் கண்டால் டெல்லி விஜயம் சாத்தியமாகும் என்று சர்வே செய்து, ‘பா.ஜ.க வேஸ்ட்...
அ.தி.மு.க-தான் பெஸ்ட்’ என்று முடிவெடுத்துவிட்டாராம். இந்த நேரம் பார்த்து தேவேந்திர குல வேளாளர் சமூக விவசாயிகள் இருவரை இழிவுபடுத்தும் வகையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் கிளம்ப, இதைச் சாக்கிட்டு பா.ஜ.க-வை அடித்தாட ஆரம்பித்துவிட்டாராம் கிருஷ்ணசாமி. ‘திருச்சி வந்த பிரதமரைச் சந்திக்க அழைப்பு வந்தும், அதையும் நிராகரித்து பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார் கிருஷ்ணசாமி’ என்கிறார்கள்

திராவிடத்தால் வீழ்ந்தோமா? தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடுதான் ஒப்பிட முடியும் .. இந்திய மாநிலங்களோடு அல்ல

May be an image of 1 person, beard, smiling and eyeglasses

Vimalaadhithan Mani :  ஒரு  பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிட கழக ஆட்சிகளில் கடந்த 50 வருடங்களில் தமிழ்நாடு முன்னேறவே இல்லை என்று ஒரு பச்சை பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது.
பல்துறைகளிலும்  தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி மத்தியில் ஆளும் காவி அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயோக் (NITI Aayog) கொடுத்து இருக்கும் கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள்:
*உயர் கல்வி*
பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.
*கல்வி நிலையங்களின் தரம்*

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 - .எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு ? - முதல் நாளிலேயே இலக்கை எட்டி சாதனை!

கலைஞர் செய்திகள் KL Reshma : தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 : எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு ? - விவரம் உள்ளே !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான்  போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 : எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு ? - விவரம் உள்ளே !

அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2030-க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 7, 8 (இன்று, நாளை) ஆகிய 2 நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.

வைகோ : உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு: ஸ்டாலினுக்கு வலியுறுத்தல்!

மின்னம்பலம் - Aara :  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான முக்கிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வர இருப்பதால் தமிழ்நாடு அரசு  கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்ட்லைட் ஆலை சுற்றுப்புற சூழலுக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வைகோ இன்று (ஜனவரி 6) ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

நோர்வேயில் தமிழ் பெண் டாக்டர் ராகவி வரதராஜன் படுகொலை !

 தேசம் நெட்  arulmolivarman :   நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (02) நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கி சூடு காயங்கள் இருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் பல் வைத்தியர் என்பதோடு நீண்ட காலமாக இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சடலம் கண்டெடுக்கப்பட்ட காரிலிருந்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.