பிறமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட, பிரபல தமிழ் சின்னத்திரை தொடர் இயக்குனர் பாலாஜி யாதவ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலாஜி யாதவ் (வயது 45). பிரபல சின்னத்திரை தொடர்கள் இயக்குனரான இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ‘லட்சுமி’, ‘துளசி’, ‘பயணம்’, ‘பந்தம்’, ‘உறவுகள்’, ‘அரசி’, ‘காயத்ரி’, ‘புகுந்த வீடு’, ‘செல்வி’, ‘ரோஜா’ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி கிருஷ்ணவேணி (38) உடன் வீட்டில் இருந்தார். நேற்று காலையில் பூட்டிய அறையில் பாலாஜி யாதவ் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி கதறினார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சனி, 4 ஏப்ரல், 2015
ஸ்மிரிதி இரானி உடைமாற்றும் அறையில் கேமராவை கண்டுபிடித்தார்
கோவாவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா
இருந்ததை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டுபிடித்தார். இதுதொடர்பாக
போலீசார் கடை மேலாளர் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள
ரகசிய கேமரா<
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி விடுமுறையில் தனது
கணவர் சுபின் இரானியுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். நேற்று காலை அவர்
கண்டோலிம் என்ற இடத்தில் உள்ள ‘பேப் இந்தியா’ என்ற ஜவுளி கடைக்கு உடைகள்
வாங்க சென்றார்.
சில உடைகளை வாங்கிய அவர் அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு (டிரையல் ரூம்)
சென்றார். அப்போது அவர் அந்த அறையில் ஒரு சிறிய ஓட்டையும், அதற்குள் ரகசிய
கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தார். இதனால்
அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார்.
வெள்ளி, 3 ஏப்ரல், 2015
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்! தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டது பால் தயிர் மட்டுமல்ல. கல்வியும் தான்.
மலையும் மலையும் சார்ந்த இடமும் எதுவென்று
கேட்டால் குறிஞ்சி என்று சொல்வோம். பாலும் பால் சார்ந்த இடமும் எதுவென்று
கேட்டால் என்ன சொல்வீர்கள்? பார்ப்பனியம் என்று சொல்கிறது தேசிய மாதிரி
ஆய்வு கழகம் (National Sample Survey Organization). இதுபற்றிய செய்தி,
இந்து ஆங்கில நாளேட்டில் 19-03-2015 அன்று “உண்ணும் உணவை சாதியும்
தீர்மானிக்கிறது” எனும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது
பால் பொருட்களுக்கான நுகர்வு பார்ப்பன ஆதிக்க சாதிகளிடையேதான் மிகுந்து காணப்படுகிறது.
அமெரிக்காவில் இந்தியருக்கு 46 ஆண்டு சிறை ! 5 பெண்களை மிரட்டி பாலியல் வன்முறை!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் 5 பெண்களை மிரட்டி கற்பழித்த 36 வயது இந்தியருக்கு 46 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அட்லாண்டா கவுண்ட்டியில் 5 பெண்களை மிரட்டி வரம்பு கடந்த முறையில்
செக்ஸ் சேட்டைகளில் ஈடுபட்டதாக இந்தியாவைச் சேர்ந்த ஹிட்டேன் பட்டேல்
என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
ரகசிய போலீஸ் என்ற அடையாள அட்டையை காட்டி 21 வயது பெண்ணை மிரட்டி, ஒரு
வேனுக்குள் ஏற்றி, துப்பாக்கி முனையில் அந்தப் பெண்ணை கற்பழிக்க முயன்றபோது
ஹிட்டேன் பட்டேல் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது கையில் இருந்தது
போலி துப்பாக்கி என்பதும், அடையாள அட்டையும் போலி என்றும் தெரிய வந்தது.
இந்த கைதை தொடர்ந்து, அடுத்தடுத்து மேலும் 4 பெண்கள் ஹிட்டேன் பட்டேல் மீது
போலீசில் புகார் அளித்தனர். அவற்றின் அடிப்படையில் அவர் மீது வழக்கு
நடைபெற்று வந்தது. விபசாரிகளை அழைத்து சென்று அவர்களின் சம்மதத்துடன் நான்
உடலுறவு வைத்துக் கொண்டேன். எனவே, இது கற்பழிப்பு ஆகாது என ஹிட்டேன்
பட்டேல் கோர்ட்டில் தெரிவித்திருந்தார்.
எனினும், வேனுக்குள் துப்பாக்கி முனையில் இருந்து தப்பியோடி வந்த பெண்
அளித்த வாக்குமூலத்தை மையமாக வைத்து குற்றவாளிக்கு 46 ஆண்டு சிறை தண்டனை
விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.maalaimalar.com
கற்பழிப்பு குற்றவாளியை விட கிரிராஜ்சிங் சிறந்தவர் அல்ல! Lesley Udwin
கற்பழிப்பு குற்றவாளியை விட மத்திய மந்திரி சிறந்தவர் அல்ல என்று மாணவி கற்பழிப்பு பட இயக்குனர் கூறினார்.
மத்திய மந்திரி கிரிராஜ்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நிறம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். வெள்ளை நிறத்தில் இருக்கும் சோனியாவை ராஜீவ் திருமணம் செய்ததால் தான் அவரை காங்கிரசார் தலைவராக்கி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இது காங்கிரசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர், பாட்னா, ஜம்மு நகரங்களில் மகளிர் காங்கிரசார் கிரிராஜ்சிங்கை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.
மத்திய மந்திரி கிரிராஜ்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நிறம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். வெள்ளை நிறத்தில் இருக்கும் சோனியாவை ராஜீவ் திருமணம் செய்ததால் தான் அவரை காங்கிரசார் தலைவராக்கி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இது காங்கிரசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர், பாட்னா, ஜம்மு நகரங்களில் மகளிர் காங்கிரசார் கிரிராஜ்சிங்கை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.
சுருதி ஹாசனின் பிரச்சனையால் விஜயின் புலி படத்துக்கு தடைவருமா?
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, ஸ்ருதிஹாசன், ஹன்ஸிகா மோத்வானி நடித்துவரும் திரைப்படம் புலி. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் புலி படக்குழு, படப்பிடிப்பு நின்றுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறது. விஜய் படங்களுக்கு வழக்கமாகவே சில பிரச்சனைகள் வரும். ஆனால் இம்முறை புது டெக்னிக்காக பிரச்சனை உண்டாகியிருக்கிறது. புலி படத்தில் விஜய்யின் ஒரு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் தான் இந்த பிரச்சனையின் காரணகர்த்தா. என்ன பிரச்சனை என்பதை படத்தின் தயாரிப்பாளர்களே விளக்கமாக கூறியிருக்கிறார்கள். அவர்கள் பேசியதாவது “PVP நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜுனா – கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காததால், ஸ்ருதிக்கு எதிராக பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. குறிப்பாக அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி ஹீரோவின் புதிய படத்திற்கு சென்றுவிட்டார் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது.
சம்பந்தர் : இலங்கை ஜனாதிபதி மீனவர் பிரச்சனைக்காக சென்னை செல்லவும் தயார்! BBC
இந்தக் கூட்டத்தில் இலங்கை மீனவர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், வட மாகாண சபையும் தமிழக அரசும் இந்த விஷயம் குறித்து பேசி முடிவெடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது எனவும் சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்திய மத்திய அரசுடன் இலங்கை ஜனாதிபதி மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என்றும், தேவையேற்பட்டால் தமிழகம் செல்லவும் அவர் தயாராக உள்ளார் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைவர் கூறுகிறார்.
ஷகீலா:சினிமா மட்டும் இல்ல... என்னோட முதல் காதல், முதல் முத்தம், முதல் செக்ஸ்
'அவள்
விகடன்' 07.04.15 தேதியிட்ட இதழில் நடிகை ஷகிலாவின் சிறப்பு பேட்டி, 'சொல்ல
மறந்த கதை' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அவள் விகடனில் சொல்லாத
கதையையும், இங்கே நம் இணைய வாசகர்களுக்காக பேசுகிறார் ஷகிலா.
''குடும்பமும், சமூகமும் என்னை எப்படியெல்லாம் ஒரு கவர்ச்சி நடிகையா
மாத்துச்சுனு 'அவள் விகடன்'ல நிறையவே பேசியிருக்கேன். என்னோட இந்தக்
கோபத்துக்கும், வருத்தத்துக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்கு. என்னைப் போல
உங்கள்ல பலரோட குழந்தைகளும் மாறிட கூடாதுனுதான் என்னைப் பத்தி சொல்றேன்.
இது அட்வைஸ் இல்ல, கொஞ்சமா உங்ககூட பேசணும்... அவ்ளோதான்'' -அத்தனை தெளிவாக
வருகின்றன வார்த்தைகள் ஷகிலாவிடமிருந்து.
''சின்ன வயசுல இருந்தே நிறைய பிரச்னைகளைப் பாத்துட்டேன். அதோட வலிகள்
எல்லாம் சாவை விட கொடுமையானது. அதனாலதான் 'ஆத்ம சரிதா' என்கிற பெயரில்
மலையாளத்தில் சுயசரிதை புத்தகம் எழுதியிருக்கேன்.
பாஜக பெண் கவுன்சிலர்: சும்மா அடிச்சோம்ல செத்துட்டாரு..கோவையில் வத்சலாக்காவா கொக்கா!
கோவை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவை, துடியலூர் கவுன்சிலர்
வத்சலா, தனது வாக்குமூலத்தில் ‘தொழில் ரீதியாக நடந்த கொடுக்கல், வாங்கல்
காரணமாகவே ஜிம் ஆறுமுகத்தைத் தாக்கியதாகவும், ஆனால் அவர் உயிரிழப்பார் என
எதிர்பார்க்கவில்லை' எனவும் தெரிவித்ததாக போலீஸ் தரப்பு தகவல்கள்
தெரிவிக்கின்றன.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள செங்காடு பகுதியை சேர்ந்தவர்
ஆறுமுகம் என்ற ஜிம் ஆறுமுகம் (51). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர்,
கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஏற்கனவே இவர் மீது நிலம் அபகரிப்பு, அரிசி ஆலை உரிமையாளரிடம் மோசடி, கொலை
மிரட்டல் என பல்வேறு கிரிமினல் வழக்குகள் அவினாசி, திருப்பூர், கோவை போலீஸ்
நிலையங்களில் நிலுவையில் உள்ளன. எனவே, ஜிம் ஆறுமுகத்தின் பெயரைப் போலீசார்
ரவுடிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் ஆறுமுகத்தை கோவை மாநகராட்சி துடியலுார் 1வது
வார்டு பாஜக கவுன்சிலர் வத்சலா, அவரது கணவர் மேலும் சிலரோடு சேர்ந்து தனது
இல்லத்தில் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார்.
சவூதியில் இறந்த இந்தியர் ! வந்த பிணத்தின் உடலில் முக்கிய பாகங்களைக் காணவில்லை! அதற்காகவே கொல்லப்பட்டாரா?
வாரணாசி: சவூதியில் மரணமடைந்த நபரின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி
வைக்கப்பட்ட நிலையில் அந்த உடலிலிருந்து பல முக்கிய உள்ளுறுப்புகள் காணாமல்
போயிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் காஸியாப்பூர் மாவட்டம் ஹர்ஷர்பூர் கிராமத்தைச்
சேர்ந்தவர் ராம்தின் ராஜ்பார். இவர் சவூதியில் வேலை பார்க்க 2013ம் ஆண்டு
கிளம்பிப் போயிருந்தார். அவருக்கு மனைவி ஷீலா, 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் 10 மாதங்களுக்கு முன்பு ராம்தின் மரணமடைந்தார். அவரது உடலை
உத்திரப்பிரதேசத்திற்குக் கொண்டு வர முயற்சிகள் மந்த கதியில் இருந்து
வந்தன. ஒருவழியாக சமீபத்தில் உடல் வந்து சேர்ந்தது. இதையடுத்து இங்குள்ள
மருத்துவமனையில் அவரது உடலை மறு பிரதேப் பரிசோதனை நடத்தியபோது அவரது உடலில்
பல முக்கிய உள்ளுறுப்புகள் இல்லாமல் இருந்தது கண்டு டாக்டர்களை அதிர்ச்சி
அடைந்தனர்.
ஏமனில் இருந்து மும்பை திரும்பிய தமிழர்கள் :இந்திய கடற்படை வீரர்கள் சரமாரியாக சுட்டனர்.
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப்போர் வலுத்து வருகிறது. அங்கு வேலை நிமித்தமாக சென்றுள்ள சுமார் 4
ஆயிரம் இந்தியர்கள் போர்ப்பிரதேசங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டு வரவேண்டும் என்று
மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்தன.
இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு ‘ஆபரேஷன் ரஹத்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை
தொடங்கி உள்ளது.
அவர்களை மீட்பதற்காக முதல் கட்டமாக ‘ஐ.என்.எஸ்.சுமித்ரா’ என்ற போர்க்கப்பல், ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகருக்கு
அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் மூலம் 40 தமிழர்கள் உள்பட 358 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
அவர்கள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களில் 168 பேர் அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘சி-17 குளோப் மாஸ்டர்’ போர் விமானம் மூலமாக
கொச்சி அழைத்து வரப்பட்டனர்.
வியாழன், 2 ஏப்ரல், 2015
தினமும் காவிரியில் 1,400 மில்லியன் லிட்டர் கழிவு நீர் தமிழகத்திற்குள் பாய்கிறது! கர்நாடக அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! CRIME
பெங்களூரு: காவிரி நதிநீர் ஆணைய ஒப்பந்தப்படி, தமிழகத்துக்கு காவிரி
நீர் அனுப்புவதாக கூறி வரும், கர்நாடகா தற்போது, தினமும் 1,400 மில்லியன்
லிட்டர் கழிவு நீரையும், அனுப்பி வருவதாக, அம்மாநில மேலவையில் நீர்ப்பாசன
துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இதுகுறித்து
அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறுகையில், பெங்களூருவிலுள்ள தனியார்
நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் நாள்தோறும் குடிநீர் குழாய்கள்,
போர்வெல்கள் மூலமாக, 1,950 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி
வருகின்றன. இதில், 1,482 மில்லியன் லிட்டர் தண்ணீர், கழிவு நீராக பல்வேறு
வகையில் ஆறுகள், கால்வாய்கள் வழியாக தமிழகத்துக்குள் செல்கின்றன. தமிழகத்துக்கு
ஆறுகள், கால்வாய்கள் மூலம் வீணாக செல்லும் கழிவு நீரையும் மறுசுழற்சி
மூலம் சுத்தப்படுத்தி, கோலார், சிக்பல்லாபூர் மாவட்டங்களிலுள்ள வறண்ட
ஏரிகளுக்கு திசை திருப்பி அவற்றை நிரப்பி பயன்படுத்தவும், கர்நாடகா அரசு
திட்டமிட்டுள்ளது. காவிரியில் கர்நாடகா கழிவு நீரை அனுப்புவதாக அம்மாநில
அமைச்சரே வெளிப்படையாக கூறியுள்ளது தமிழக விவசாயிகளை
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தினமலர்.com
மாமிச உணவை தவிர்த்த ஒரே மதம் சமண / ஜைன மதம்தான்! இன்று மகாவீரர் ஜெயந்தி
சமணத் தத்துவத்தைத் தந்த மகாவீரர், ஐந்து விதமான அறங்களை அடிப்படையானவையாக
வலியுறுத்துகிறார். அகிம்சை, வாய்மை, கள்ளாமை, பிரம்மச்சரியம், அவாவறுத்தல்
(ஆசை துறத்தல்) ஆகியவையே அவை. இதில் இரண்டாவது பேரறமாகத் திகழ்வது பொய்
பேசாமை. இதனை ‘அசத்தியத் தியாகம்’ எனச் சமணம் வரையறுக்கிறது. அகிம்சையையும்
சத்தியத்தையும் அறமாகக் கொள்பவர்கள் பல்வேறு சித்திகளைப் பெறுவார்கள்
என்பது சமண சமயத்தின் நம்பிக்கை. காந்தியடிகளின் அறப் போராட்டத்துக்கு
மகாவீரர் போதித்த அகிம்சையும் சத்தியமும் இரு பெரும் ஆயுதங்களாகப்
பயன்பட்டன.
‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்பது நமது அறிவிக்கப்பட்ட தேசியக்
குறிக்கோள். இந்தியாவின் தேசியச் சின்னத்தில் இந்த வாக்கியம்
பொறிக்கப்பட்டுள்ளது. முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற வாக்கியங்களில்
ஒன்று. ஆனால், உண்மை பேச வேண்டும் என்பது பொதுவாக எல்லோராலும்
ஒப்புக்கொள்ளப்பட்டு, அனேகமாக யாராலும் கடைப்பிடிக்க முடியாத ஒரு
மதிப்பீடாக உள்ளது. அரசியலிலிருந்து சாமானிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை
வரை இதற்கு வாழும் உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
மாறன் சகோதரர்களின் முடக்கப்பட்ட சொத்து விபர பட்டியல்!
முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல்
நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை நிறுத்தி வைத்தும், தொழிலதிபர்
சிவசங்கரனை நிர்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை மலேசியா வைச் சேர்ந்த
மேக்சிஸ் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும், அதன் மூலம்
மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மூலம் மாறன்
சகோதரர்களுக்குச் சொந்தமான சன் நெட்வொர்க் குழுமத்தில் முதலீடு என்ற
வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
நைஜீரியா போர்க்கொடி? பாஜக அமைச்சர் கிரிராஜின் கருப்பு இனபெண்கள் பற்றிய இனவாத பேச்சுக்கு எதிராக
ராஜீவ் காந்தி, ஒரு நைஜீரியப் பெண்ணை திருமணம் செய்து
கொண்டிருந்தால், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அந்தக் கட்சி ஏற்றுக்
கொண்டிருக்குமா என்று கூறிய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு நைஜீரியா தூதர்
பொறுப்பை வகிக்கும் ஓ.பி. ஓகங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ராஜீவ்
காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை (கறுப்பின பெண்ணை) திருமணம் செய்து
கொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சி அவருக்கு தலைவர் பதவியைத் தந்திருக்குமா"
என கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், கிரிராஜ் சிங்கின் இந்த கருத்துக்கு நைஜீரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த்துவாவில் ஊறிய இனவாதிகளிடம் இருந்து இந்த மாதிரி அழுக்குகளைதான் எதிர்பார்க்க முடியும்
பெனாசிர் புட்டோவின் மகள் பக்தவார் புட்டோ அரசியலுக்கு வருகிறார்
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி
சர்தாரி தம்பதியருக்கு பிலாவல் பூட்டோ என்ற மகனும், பக்தவார் பூட்டோ,
ஆசிபா பூட்டோ என 2 மகள்களும் உள்ளனர்.
பிலாவல் பூட்டோ கடந்த ஆண்டு அரசியலில் குதித்தார். ஆனால் கட்சி விவகாரங்களை
கையாள்வதில் அவருக்கும், அவரது தந்தை சர்தாரிக்கும் இடையே கருத்து
வேறுபாடுகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் தற்போது லண்டனில் வசித்து வருகிற பிலாவல் பூட்டோ, 2 ஆண்டுகள்
அரசியலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு உயர்கல்வி படிக்கப்போவதாக அவரது கட்சி
(பாகிஸ்தான் மக்கள் கட்சி) வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும், பூட்டோ குடும்ப வாரிசு, அரசியல் களத்தில் தொடர வேண்டும் என்று
ஆசிப் அலி சர்தாரி விரும்புகிறார். இதன் காரணமாக அவர் தனது மகள் பக்தவார்
பூட்டோவை அரசியலில் களம் இறக்க முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி
உள்ளன.
பூட்டான் இந்திய சாலை! சீனாவின் அச்சுறுத்தலால் பூட்டான் தயக்கம்
கவுகாத்தி : அசாம் மாநிலத்தையும், அருணாச்சல பிரதேச மாநிலத்தையும்
இணைக்கும் வகையிலான சாலையை அமைக்கும்படி, பூடான் அரசிடம், மத்திய அரசு
மீண்டும் வலியுறுத்தி உள்ளது. ஆனால், சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, இந்த
சாலையை அமைப்பதற்கு, பூடான் தயக்கம் தெரிவித்து வருகிறது. வடகிழக்கு
மாநிலங்களான அசாமின் கவுகாத்திக்கும், அருணாச்சல பிரதேசத்தின்
தவாங்கிற்கும் இடையே, நீண்ட காலமாக வர்த்தக ரீதியான போக்குவரத்து உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்த வர்த்தக போக்குவரத்து
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால், தற்போது
கவுகாத்தியிலிருந்து, தவாங்கிற்கு செல்ல வேண்டுமானால், பூடான் நாட்டைச்
சுற்றி, 800 கி.மீ., பயணிக்க வேண்டும்.
23 ஆண்டுகளில் 45-வது முறையாக ஐ.ஏ.எஸ்.அதிகாரி கெம்கா இடமாற்றம்
சண்டிகர் : அரியானா மாநிலத்தில் நில மோசடி வழக்கை வெளிக்கொண்டு வந்த
ஐ.ஏ.எஸ். அதிகாரியான கெம்கா மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரியானா
மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ்அரசி்ன் முதல்வராக இருந்த பூபேந்தர் சிங்
ஹூடா காங் தலைவர் சோனியா மருமகன் வதேராவின் நில மோசடிக்கு ஆதரவாக
இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கெம்கா குற்றம் சாட்டினார். இதனை அடுத்து அவர்
பல்வேறு பணியிடங் களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வந்தார். நேர்மையான
ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற புகழை பெற்ற இவரின் நடவடிக்கைகளுக்கு பா.ஜ., ஆதரவு
தெரிவித்தது.
பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக
பா.ஜ.,வை சேர்ந்த மனோகர் லால் கத்தார் முதல்வராக பதவியேற்றார். அப்போது
கெம்கா போக்குவரத்து துறை ஆணையர் பதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நல்ல திறமையான அதிகாரிகள், அன்றிலிருந்து இன்று வரை இப்படித்தான் பந்தாடப்படுகிறார்கள்.
புதன், 1 ஏப்ரல், 2015
தந்தி டிவியின் பச்சை புழுகு! பெரியார் சொல்லாததை சொன்னதாக இட்டுக்கட்டிய ரங்கராஜன் பாண்டே!
வடநாட்டில் உள்ள ஒரு பிரபலமான பழமொழிதான் பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பனை அடி என்பதாகும். இதை ஒரு பார்ப்பான் ஏதோ ஒரு அனாமதேய புத்தகத்தில் பதிப்பித்து விட்டான். அதை ஒரு ஆதாரமாக தந்தி டிவியின் பாண்டே காட்டுகிறார். மேலும் பல பார்ப்பனீய கருத்துக்கள் கொண்டவர்களால் அறியாமையாலோ அல்லது திட்டமிட்டோ இது தந்தை பெரியாரால் சொல்லப்பட்டது என்று காலகாலமாக திரும்ப திரும்ப சொல்லி இந்த பழமொழிக்கு பெரியார் லேபில் ஒட்டி விட்டார்கள் அப்பொழுதுதான் அதற்கு ஒரு வெயிட் கிடைக்கும் , இந்த ரங்கராஜன் பாண்டே போன்ற பார்ப்பனீய பிரசாரகர்கள் அய்யா வீரமணியை மீண்டும் உரசி பார்த்து சந்தடி சாக்கில் தந்தை பெரியாருக்கு எதிராக நச்சு பிரசாரத்தை அவிழ்த்து விடுகிறார். இதுதான்டா பார்ப்பனீயம்.
தயாநிதி, கலாநிதி மாறனின் ரூ742 கோடி சொத்துகள் முடக்கம் ! Aircels Maxis ஒப்பந்த வழக்கில் குற்றப்பத்திரஈகை
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர்
தயாநிதி, அவரது சகோதரரும் சன் குழும அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரது
ரூ742 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிரடியாக முடக்கியுள்ளது.
2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக
இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை
கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ்
நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்தார்; இதற்குப்
பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக தயாநிதியின்
சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு
முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்தனர் என்பது சிபிஐ குற்றச்சாட்டு.
இந்த முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தயாநிதி, கலாநிதி மாறன்
உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
டிசம்பரில் தமிழக தேர்தல்? raison d'être சகுனம் ஜோதிஷம் மன்மத ஆண்டு.. மகாமகம்.. ராசியில்லாத 6..
சென்னை: தமிழக சட்டசபைக்கு வரும் டிசம்பரிலேயே தேர்தல் நடைபெற
வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைக்கு 2016ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் ஆளும்
அண்ணா தி.மு.க. அரசோ பல்வேறு காரணங்களை முன்வைத்து முன்கூட்டியே தேர்தலை
நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதாவது அண்ணா தி.மு.க.வுக்கும் 6-ம் எண்ணுக்கும் ராசி இல்லையாம்..
கடந்த 1996, 2006 சட்டசபை தேர்தல்களில் அண்ணா தி.மு.க. தோல்வியைச்
சந்தித்து ஆட்சியை இழந்தது. அதுபோல 2016ஆம் ஆண்டும் நிகழ்ந்துவிடுமோ என்று
அஞ்சுகிறார்களாம்..
மன்மத,..துர்முகி
அதேபோல் வரும் 14-ந் தேதி பிறக்கும் தமிழ் வருஷம் 'மன்மத ஆண்டாம்'...
அடுத்த ஆண்டு பிறக்க இருப்பது 'துர்'முகி ஆண்டாம்... என்ன இது துர்முகி
பேரே சரியில்லையே. என்கிற முனுமுணுப்பும் அ.தி.மு.க. மேலிடத்தில்
இருக்கிறதாம்...
அப்புறம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம்.. தமிழகத்தில்
மகாமகம் என்றாலேயே 1992ல் ஜெயலலிதா- சசிகலா நீராடியது... அதில்
மாண்டுபோனவர்கள் நினைவும்தான் வருகிறது.. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்
மகாமக திருவிழா நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக வரும்
மகாமகம் திருவிழாவால் தேர்தலின் போது எங்கே 'நெகட்டிவ்' எபெக்ட்
வந்துவிடுமோ என்றும் கருதுகிறார்களாம்..
ஒரு பேமஸ் அடிமை : லஞ்சம் வாங்காமல் பணிநியமனம் கொடுத்தால் உன் சொந்தப்பணத்தில் அதை தா?
ஒரு தற்கொலைச் சம்பவத்தை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இழுத்தடிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்!
நெல்லையில் வேளாண்மைத் துறையில் பணியாற்றிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தில், சி.பி.சி.ஐ.டி விசாரணை மந்தமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக் கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் சூழலில், முத்துக்குமாரசாமியின் சமூகமான சைவ வேளாளர்களும் கொந்தளித்து எழுந்துள்ளனர். தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பாக பாளையங்கோட்டையில் மார்ச் 29-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசியவர்கள், 'நேர்மையான அதிகாரி முத்துக்குமாரசாமியின் மரணத்தின் பின்னணியில் இருப்பவர்களை சி.பி.சி.ஐ.டி பாதுகாக்கிறது. குற்றவாளிகள் யார் என்பது தெரிந்திருந்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால், சி.பி.ஐ விசாரணையில் மட்டுமே நியாயம் கிடைக்கும்’ என்பதை வலியுறுத்தினார்கள்.
நெல்லையில் வேளாண்மைத் துறையில் பணியாற்றிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தில், சி.பி.சி.ஐ.டி விசாரணை மந்தமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக் கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் சூழலில், முத்துக்குமாரசாமியின் சமூகமான சைவ வேளாளர்களும் கொந்தளித்து எழுந்துள்ளனர். தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பாக பாளையங்கோட்டையில் மார்ச் 29-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசியவர்கள், 'நேர்மையான அதிகாரி முத்துக்குமாரசாமியின் மரணத்தின் பின்னணியில் இருப்பவர்களை சி.பி.சி.ஐ.டி பாதுகாக்கிறது. குற்றவாளிகள் யார் என்பது தெரிந்திருந்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால், சி.பி.ஐ விசாரணையில் மட்டுமே நியாயம் கிடைக்கும்’ என்பதை வலியுறுத்தினார்கள்.
சமாஜ்வாடி ஜனதா தளம் உதயம் ! முலாயம் லாலு நிதீஷ் அஜீத் ...... வாழ்த்துகள்!
சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், இந்திய தேசிய லோக்தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து பீகார் தேர்தலை சந்திக்கிறது.
முலாயம்சிங் யாதவ் தலைமையில் உருவாகும் இந்த கட்சிக்கு சமாஜ்வாடி ஜனதாதளம் அல்லது சமாஜ் வாடி ஜனதா கட்சி என்று அழைக்கப்படும்.
இதை ஐக்கிய ஜனதா தள தேசிய செயலாளர் கே.சி.தியாகி இன்று தெரிவித்தார் maalaimalar.com
டாப்சி:சிவப்பு என்பது ஒரு அழகு இல்லை!
கிரைண்டர்
விளம்பரம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்த டாப்ஸிக்கு சினிமா சான்ஸ்
அடித்தது. திரையுலகில் பிக் அப் ஆகி நெம்பர் 1 இடத்துக்கு போய்விடலாம்
என்று கணக்கு போட்டவருக்கு எண்ணம் ஈடேறவில்லை. பல மொழிகளில் நடித்து
வருகிறார். ஆனாலும் முன்னணி இடத்துக்கு இன்னும் வரவில்லை. நடிப்பை நம்பி
விளம்பர படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவந்தார். இதனால்
புதுமுகங்களாக வந்த நடிகைகள் விளம்பர தூதருக்கான இடத்தை
பிடித்துக்கொண்டனர். சினிமாவை மட்டும் நம்பி விளம்பர பட வருமானத்தையும்
இழந்துவிட்டோமே என்று ஆதங்கத்தில் இருந்தவருக்கு சிவப்பழகு கிரீம்
விளம்பரம் ஒன்றில் நடிக்க சமீபத்தில் வாய்ப்பு வந்தது. ஒரே பாய்ச்சலாக
பாய்ந்து வாய்ப்பை தக்க வைத்தார்.இதுபற்றி அவர் கூறும்போது,‘இதுவரை நான்
சிவப்பு அழகு கிரீம் விளம்பரத்தில் நடித்ததில்லை. பயன்படுத்தியதும்
கிடையாது. சிவப்பு என்பது ஒரு அழகு கிடையாது. ஆனால் அதற்கு பெண்களிடம் ஒரு
மவுசு இருக்கத்தான் செய்கிறது. விளம்பர படங்களில் நடிப்பது என்பது
நடிகைகளுக்கு மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் அதுதான் டிவியில்
விளம்பரமாக வீட்டுக்கு வீடு சென்று நடிகைகளை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது'
என்றார். - See more at:
.tamilmurasu.org/
திருமாவளவன் : என் பயணத்தின் தொடக்கம் பெரியார் திடலே! திராவிடர் கழகத்துடன் மோதவிடும் சூழ்ச்சி பலிக்காது!
அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும்
எங்கள் கொள்கை ஆசான்கள், திராவிடர் கழகத்தோடு உள்ள உறவை யாரும் பிரித்துவிட
முடியாது என்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் எழுச்சித் தலைவர் தொல்.
திருமாவளவன் அவர்களும் தெளிவுப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர்
வெளியிட்ட அறிக்கை வருமாறு:
திராவிடர் கழகத் தலைவர் மான மிகு ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின் நேர்காணல் மார்ச் 28 அன்று தனியார் தொலைக்காட்சி
ஒன்றில் ஒளிபரப் பானது. அவரை நேர்காணல் செய்த அந்நிகழ்ச்சியின்
தொகுப்பாளர் விடு தலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும்
இடையிலான நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்நோக்கத் தோடு ஓரிரு
கேள்விகளை எழுப்பி யதைக் காண முடிந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
தந்தை பெரியார் அவர்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்னும்
கருத்தைப் பரப்புவதாக அந்நிகழ்ச்சியின் தொகுப் பாளர் கேள்வி எழுப்பினார்.
நாளைசுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: காய்கறி, மளிகை பொருள் விலை உயரும்! ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட்டு இனி பத்து ரூபா!
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் (டோல்கேட்) நாளை முதல்
கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆம்னி பஸ்கள், சரக்கு வாகன கட்டணம் உயரும்
அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலைகள் படுமோசமாக உள்ள நிலையில் சுங்கச் சாவடிகள்
கட்டணம் உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நாடு
முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 234 சுங்கச்சாவடிகள்
அமைக்கப்பட்டுள்ளன. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம்
ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட
சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்த முடிவு
செய்யப்பட்டுள்ளது. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், வசூல்
செய்யும் உரிமை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன.
தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன.
ஏமனில் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க கடும் முயற்சி
புதுடில்லி: ஏமனில் சிக்கியுள்ள 4 ஆயிரம் இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக ஏடன் துறைமுகத்தில் இருந்து 350 இந்தியர்கள் கடல் மார்க்கமாக மீட்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. இதில் தற்போதைய அதிபர் அபெட்ரபோ மன்சூரின் ஹாதி ஆதராளவர்களுக்கும் , முன்னாள் அதிபர் அலிஅப்துல்லா சலே ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போர் நிலவியுள்ளது. இதில் ஹாதி படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியா கூட்டுபடைகள் வான் தாக்குதல் நடத்திவருகின்றன.
nisaptham: வாயைப் பிளந்து கொண்டு இரட்டை இலைக்குக் குத்தித் தள்ளினார்கள். நானும்தான்
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்காவது வருடம் முடியப் போகிறது. ஆட்சி
மாறினால் காட்சி மாறும் என்றார்கள். வானம் பிளந்து பூ வாளி சொரியும்
என்றார்கள். வாயைப் பிளந்து கொண்டு இரட்டை இலைக்குக் குத்தித்
தள்ளினார்கள். நானும்தான். என்ன மாறியிருக்கிறது?
எதுவுமே மாறவில்லை. மோசமாகியிருக்கிறது.
அமைச்சர்கள் யாராவது வாயைத் திறந்து பேசுகிறார்களா? அமைச்சர்களின் பெயரில்
ஒரு அறிக்கையாவது வருகிறதா? பக்கத்து மாநிலம்தான் கர்நாடகா. அமைச்சர்கள்
பிளந்து கட்டுகிறார்கள். மேகதூது பிரச்சினை என்றால் ஒவ்வொரு அமைச்சரும்
தங்களது கருத்தைச் சொல்கிறார்கள். மாநிலத்தில் ஏதேனும் அக்கப்போர் என்றால்
வெளிப்படையாக தீர்வுகளை முன்வைக்கிறார்கள். தங்களது துறை குறித்து
விலாவாரியாக பேசுகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது அங்கலாய்ப்பாக
இருக்கிறது.
தமிழகத்தில் ஏன் அந்தச் சூழல் இல்லை? எதனால் இவ்வளவும் சோகமும் அமைதியும்
கமுக்கமும்? அத்தனை இடங்களிலும் இனம்புரியாத பயம் விரவியிருக்கிறது. யாருமே
வெளிப்படையாக பேசுவதில்லை. அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து
விவாதங்கள் எதுவும் நடப்பதில்லை. ஆளும் வர்க்கத்தினர் செய்தியாளர்களைச்
சந்திக்கவே பயப்படுகிறார்கள். ஆளும் வர்க்கம் மட்டுமில்லை ஊடகங்களும் கூட
பயந்தபடியேதான் அரசு, அமைச்சர்கள் உள்ளிட்ட விவகாரங்களிலிருந்து நாசூக்காக
நழுவிக் கொள்கின்றன. தாலி, பர்தா, தலாக் என்று பொங்கல் வைக்கும் ஒரு ஜால்ரா
சேனலாவது தமிழகத்தின் கடந்த நான்காண்டு நடந்த ஆட்சி பற்றி ஒரு விரிவான
விவாதம் நடத்தட்டும். செய்யமாட்டார்கள். விளம்பரம் போய்விடும். தொழில்
நடத்த முடியாது.
நரசிம்மராவுக்கு நினைவிடம் ! சங்பரிவாருக்கு நரசிம்மராவ் மீது அப்படி என்ன அக்கறை?
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அவருக்கு தில்லியில் யமுனை நதிக் கரையில் உள்ள ஏக்தா
ஸ்தலில் நினைவிடம் கட்டுவதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு
மறுத்துவிட்ட நிலையில், அவர் மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே
இடத்தில் நினைவிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக, ஆந்திர அரசின் முன்மொழிவை ஏற்று,
அமைச்சரவைக் குறிப்பை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
தயாரித்துள்ளது. 1991 ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை காங்கிரஸ்
தலைமையிலான மத்திய அரசில் பிரதமராகப் பதவி வகித்த நரசிம்ம ராவ்,
இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னோடியாவார். 2004ஆம் ஆண்டில்
அவர் இறந்த பிறகு, அவருக்கு நினைவிடம் கட்டுவதற்கு முந்தைய காங்கிரஸ்
தலைமையிலான மத்திய அரசு மறுத்துவிட்டது.நரசிம்மராவ் ஒரு இந்துத்வாவாதி தெலுங்கு பிராமணர் அயோத்தி விடயத்தில் அத்வானி சப்போர்டார் என்று சந்தேகிக்க பட்டவர் இப்ப அது நிருபணம் ஆச்சு? இந்த பூனை வெளியே வர இவ்வளவு காலமாச்சு!
செவ்வாய், 31 மார்ச், 2015
தீபிகா படுகோனின் புயல் கிளப்பிய "எனது விருப்பம் / தெரிவு' (My choice) குறும்படம்"
பிரபல பாலிவுட் நடிகை தீபிகோ படுகோனை முன்வைத்து முற்போக்கான பெண்ணிய
சிந்தனை எனக் கருதப்படும் வாசகங்களைத் தாங்கிய வண்ணம்
உருவாக்கப்பட்டிருக்கிறது 'எனது விருப்பம் / தெரிவு' (My choice)
குறும்படம்.
ஹொமி அதாஜானியா இயக்கத்தில், பெண்கள் ஃபேஷன் இதழான 'தி வோக்' வெளியிட்டுள்ள
இந்தக் குறும்படத்தில் உள்ள முக்கிய அம்சங்களை மேற்கோள்காட்டி,
ட்விட்டரில் மணிக்கு நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் கொட்டப்பட்டு
வருகின்றன. | படிக்க - ட்வீட்டாம்லேட்: தீபிகாவின் விருப்பங்களும் எதிர்வினை தெறிப்புகளும்!
இந்தக் குறும்படம் பேசும் எண்ணிய வாசகங்களில் உடல் சார்ந்த விருப்பங்களை
மட்டுமே சுட்டிக்காட்டி, இணையத்தில் எதிர்க் கருத்துகள் பரவலாக பதிவு
செய்யப்பட்டு வருகிறது.
திருவாரூர் பல்கலை கட்டிடம் இடிந்து 5 பேர் பலி : நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் சிறையில்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டுமானப்பணியின்
போது 5 தொழிலாளர்கள் பலியானது தொடர்பாக ஆந்திர கட்டுமான நிறுவன பொது
மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவாரூர் அடுத்த நீலக்குடியில்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி
வருகிறது. இதில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்காக
நாககுடியில் வளாக குடியிருப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
குடியிருப்பு வளாகம் 4 மாடி கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது. நேற்று காலை
தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 4வது தளத்தில் ஒரு முனையில்
இருந்த சிமென்ட் பில்லரின் ஒரு பகுதி மட்டும் முறிந்து சென்ட்ரிங் பணி
நடந்து கொண்டிருந்த 3வது தளத்தில் விழுந்தது
கைவிடப்பட்டு அழிவை நோக்கும் அண்ணா நூலகம்! நூலகத்தின் மேல் கோபம் கொள்ளும் தற்குறி ஜெயலலிதா
அண்ணா நினைவு நூலகத்திற்கே இந்தக் கதியா?: கலைஞர் கண்டனம் திமுக தலைவர் கலைஞர் கண்டன அறிக்கை:அரசால்
முற்றிலும் கைவிடப்பட்ட அண்ண நூலகம் - புத்தகம், பராமரிப் பின்றி
முடங்கும் அபாயம் - மக்கள் வரிப் பணம் வீணா போச்சு” என்ற தலைப்பில்
“தினமலர்” நாளேடு அண்ணா நுhலகம் பற்றி விரிவாக 30-3-2015 அன்று
செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் “கடந்த நான்கு ஆண்டுகளாக
புதிய புத்தகங்கள் வாங்காமல், பராமரிப்பு இல்லாமல், சென்னை அண்ணா
நுhற்றாண்டு நுhலகம், தமிழக அரசால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதுவரை,
23 அலுவலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அண்ணா நுhலகத்தை முடக்கும் முயற்சி,
நீதி மன்றத்தால் நிறுத்தப்பட்ட போதும், நுhலகம் உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக
முடங்கி வருகிறது. இதுகுறித்து, நுhலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
கூறும்போது, “நுhலகத்தின் நிலை குறித்து, கடந்த நான்காண்டுகளாக,
பள்ளிக்கல்வித் துறைக்கும் தமிழக அரசுக்கும் பல மனுக்களை அனுப்பியுள்ளோம்.
ஆனால், அரசியல் காரணங்களால், இந்த நுhலகத்தை முடக்கி வைத்துள்ளனர். எந்த
ஓர் அரசு அதிகாரியும், நுhலகத்தில் ஆய்வுக்கு
வருவதில்லை. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, அரசின் கவனிப்போ இல்லாததால்,
நுhலகம் முடங்கி விடுமோ என்ற அச்சத்தில் இதுவரை 23 பேர் ராஜினாமா செய்து
விட்டனர். யாழ்ப்பாண நூலகத்தை எரித்தவர்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்?
வடிவேலு ஸ்பையாக வருகிறார்
வடிவேலு,
‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப்
பின், ‘தெனாலிராமன்’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படத்தை இயக்கிய
யுவராஜுடன், வடிவேலு மீண்டும் கைகோர்த்துள்ளார்.1970ம் ஆண்டுகால
கட்டத்தில் நடக்கும் கதையாக சித்தரிக்கப்பட்ட இந்தப்படத்துக்கு, ‘எலி’ என
தலைப்பு வைத்துள்ளனர். இதன், ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் சமீபத்தில்
வெளியிடப்பட்டது.
இதில், வடிவேலு வித்தியாசமான கெட்டப்பில் போஸ் தந்துள்ளார். இதில் வடிவேலு, ‘ஸ்பை’யாக நடிக்கிறாராம். திரில்லர் கலந்த காமெடி படம் என்ற தகவல் கசிந்துள்ளது. படத்தின் தலைப்பை பார்த்து, ‘ஒரு காலத்துல காமெடியில் புலியாக இருந்த வடிவேலு, இப்போ எலியாகிட்டார்னு நினைக்காதிங்க இது சாதா எலி இல்லைங்க இது பிள்ளையார் எலிங்க,
இதில், வடிவேலு வித்தியாசமான கெட்டப்பில் போஸ் தந்துள்ளார். இதில் வடிவேலு, ‘ஸ்பை’யாக நடிக்கிறாராம். திரில்லர் கலந்த காமெடி படம் என்ற தகவல் கசிந்துள்ளது. படத்தின் தலைப்பை பார்த்து, ‘ஒரு காலத்துல காமெடியில் புலியாக இருந்த வடிவேலு, இப்போ எலியாகிட்டார்னு நினைக்காதிங்க இது சாதா எலி இல்லைங்க இது பிள்ளையார் எலிங்க,
தமிழகம் முழுவதுவும் 17,000 ரவுடிகள் உள்ளனர்...சட்டம் -ஒழுங்கு ? நெல்லை, தூத்துக்குடியில் வீடுகளை விற்று வெளியேறும் மக்கள்!
நெல்லை, தூத்துக்குடியில், ஜாதி மோதல்களால், கொலைகள் அதிகரித்து, ரத்த
பூமியாக காட்சியளிப்பதால், அந்த மாவட்ட மக்கள், வீடுகளை விற்று வெளியேற
வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.தென் மாவட்டங்களான நெல்லை,
தூத்துக்குடியில், மணல் கடத்தல், குடும்பத் தகராறு, கள்ளத் தொடர்பு, ஜாதி
மோதல், தேர்தல் நேர பகை, அரசியல் ரீதியான முன் விரோதம் போன்ற காரணங்களால்,
தினசரி ஒரு கொலையாவது நடந்து விடுகிறது. இதுபோன்று, கடந்த, 11 மாதங்களில்,
90 கொலைகள் நடந்துள்ளன. மேலும், பேருந்துக்கு தீ வைத்தல், தலைவர்களின்
சிலைகளை உடைத்தல் போன்ற சம்பவங்களில், திடீர் கலவரம் வெடிப்பதால், வெளியில்
சென்று, உயிருடன் வீடு திரும்பினால் தான் நிச்சயம் என்ற நிலை, அம்மாவட்ட
மக்களை வாட்டி வதைக்கிறது.காவல்
துறை கணக்குப்படி, தமிழகத்தில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள்
இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த சில ஆண்டுகளில், நெல்லை,
தூத்துக்குடியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள், புதிதாக உருவெடுத்து
இருப்பதும் தெரிய வந்துள்ளது. மக்களின் முதல்வரின் வழிகாட்டுதலில் நடக்கும் ஆட்சின்னா சும்மாவா? சினிமா வீச்சரிவா வேற நம்மகிட்ட இருக்குல்ல?
சல்மான் கான் கொலை வழக்கில் இருந்து நழுவுகிறார்? டிரைவர் சாட்சியம்: நான் தான் காரை ஓட்டினேன்!
காரை நான்தான் ஓட்டினேன்! சல்மான் டிரைவர் கோர்ட்டில் வாக்குமூலம்! இந்தி
நடிகர் சல்மான் கான் 2002ம் ஆண்டில் பாந்திரா பகுதியில் காரை வேகமாக ஓட்டி
சென்றதில் சாலையோரம் படுத்து தூங்கியவர்கள் மீது அவரது கார் ஏறியது. இதில்
ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக
போலீசார் சாதாரண விபத்து வழக்கு பதிவு செய்து மும்பை மாஜிஸ்திரேட்டு
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால், இது கொலை அல்லாத மரணத்தை விளைவிக்க
கூடிய தீவிரமான குற்றம் என்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கருதியது. இதனால்
கடந்த ஆண்டு இந்த வழக்கு மும்பை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. 10
ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க கூடிய பிரிவுகளில் சல்மான் கான் மீது
வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த
நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் சல்மான் கான் தனது
வாக்குமூலத்தை பதிவு செய்தார். நான் குடிக்கவில்லை. விபத்து நடக்கும் போது
நான் காரை ஓட்டவில்லை. எனது ஓட்டுனர் அசோக் சிங் காரை ஓட்டினார் என்றார்.
மேலும், தன் மீது நீதிமன்றத்தின் முன் வைக்கபப்ட்டுள்ள அனைத்து
குற்றச்சாட்டுக்களும் தவறானது என்றார் . இப்போது தான் பேரம் படிந்தது ? பக்கா சினிமா வில்லத்தனம் ஏழையை காரை ஏற்றி கொன்றுவிட்டு டிரைவரை காசு கொடுத்து பொய்சாட்சி சொல்ல வைத்து ....திருந்தவே மாட்டாங்க!இவனுக்கு சீக்கிரம் பத்ம பட்டங்களும் கிடைக்கலாம் யார் கண்டா?
ஜம்மு காஷ்மீர் :ஜீலம் நதி வெள்ள பேருக்கு 16 பேர் பலி
ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஜீலம் நதியில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் பலியான
நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில்
குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஜம்முவில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் ஒரு நபர் அடித்து
செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நீர்மட்டம்
அதிகரித்து வரும் நிலையில், ஜீலம் நதிக்கரையில் வசிக்கும் மக்கள் தங்கள்
வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அடை மழையால்
பாதிப்பு ஏற்பட்டது போல் தற்போதும் பாதிப்பு நிகழுமோ என மக்கள் மத்தியில்
அச்சம் நிலவி வருகிறது.
ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் பட்ஜெட்! ரகசிய காப்பில் மாட்டினார் பன்னீர்செல்வம் ! அம்மாவையும் மாட்டி விட்டார்! பாய்கிறது காண்டம் of கோர்ட்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி, தமிழக சட்டசபையில்
பட்ஜெட்டை சமர்ப்பித்த, முதல்வர் பன்னீர்செல்வம் மீது, சட்ட ரீதியான
நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்,'' என, பா.ஜ., தேசிய
செயற்குழு உறுப்பினர், சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.பா.ஜ.,வின்
பின்னணி அமைப்பாக இயங்கி வரும், விசுவ ஹிந்து அமைப்பைப் போல, விராத்
ஹிந்து அமைப்பு என்ற புதிய அமைப்பை, தன் தலைமையில், நேற்று முன்தினம்
சென்னையில் துவங்கி வைத்த சாமி, பின் அளித்த பேட்டி:இந்த அமைப்பு, விசுவ
ஹிந்து அமைப்பு போலவே, பா.ஜ.,வுக்கு பக்கபலமாக இருந்து செயல்படும்; ஓவரா கூவுனா அப்படிதான்.... அடிமையா இருக்கலாம் ஆனா அடி முட்டாளா இருக்க
கூடாது... இல்லை இப்படி மாட்டிவிட்டு தான் நிரந்தர முதல்வரா இருக்கலாம்னு
பிளானா? ஹையோ ஹையோ உன்னை புரிஞ்சுக்க முடியலயே ராசா ..குனிஞ்சு குனிஞ்சு
காலை வாரி உட்டுட்டியே ....ம்ம் இதுவும் கூட கலைஞர் வாய்திறந்த பின்தான் சு.சாமிக்கு வெளங்கிச்சோ
திங்கள், 30 மார்ச், 2015
கைபேசி காதல் ! செல்போன்தான் இதில் ஹீரோவின் காதலி
திம்மம்பள்ளி
சந்திரா இயக்கும் படம் ‘கைபேசி காதல்‘. இதன் ஆடியோ விழா சென்னையில்
நடந்தது. இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், அபிராமி
ராமநாதன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய
ஹீரோயின் அர்பிதா, ‘படத்தில் நடிக்க என்னை இயக்குனர் அழைத்தார், சென்றேன்.
அதன்பிறகுதான் இதில் ஹீரோவின் காதலி நீ கிடையாது செல்போன்தான் என்றார்.
எனக்கு கொடுத்த வேடத்தை நடித்து முடித்திருக்கிறேன்‘ என்றார். இயக்குனர்
சந்திரா பேசும்போது,‘இப்போதுள்ள சூழலில் யாருமே யாரிடமும் பேச நேரமில்லாமல்
இயந்திர கதியில் ஆழ்ந்துவிட்டனர். பணம், கார், செல்போன் இல்லாமல்
வாழ்வதில்லை. அப்படியொரு வாழ்க்கை வாழும் ஹீரோ ஒருவன் அவனது செல்போன் மீது
கொண்ட காதலை வைத்துத்தான் இப்படம் உருவாகிறது. கிரண், அர்பிதா, தர்ஷன்,
மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி, கிஷோர் நடிக்கின்றனர். விஜய் கிருஷ்ணா
ஒளிப்பதிவு. த.சக்திவேல் தயாரிப்பு’ என்றார். - See more at:
.tamilmurasu.org/
கொம்பன் ! நாடார், பள்ளர், பறையர், மறவர் சமுதாயங்களுக்கிடையே ஜாதிய வன்முறையை தூண்டுகிறதா? நீதிபதி கேள்வி!
கார்த்தியின்
‘கொம்பன்‘ பட கதைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன் தலைப்புக்கும்
எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை
அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட
வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு
தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என
தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.வரும்
2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால்,
இப்படத்தை தடை செய்ய செய்யக்கோரி கிருஷ்ணசாமி மதுரை கோர்ட்டில் நேற்று
முன் தினம் மனு தாக்கல் செய்தார். அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய
வேண்டும் என்று கோரினார்.
சரோஜாதேவி - ரகசியமாக படிக்கபட்ட புத்தகம்
சென்னை புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது, மற்ற புத்தகங்களை
எல்லாம் காட்சிக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். ‘சரோஜாதேவி’ புத்தகத்தை
மட்டும் கண்ணுக்குத் தெரியாதபடி ‘சொருகி’ வைத்திருந்தார்கள். உயிர்மை
பதிப்பகம், மஞ்சள் கலர் அட்டையில் பொம்மைப் படம் போட்டிருக்கும்
என்றெல்லாம் அடையாளம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், என் தோழிதான்
கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். இது தற்செயலானதாகக்கூட
இருக்கலாம். ஆனால் தமிழர்களின் பொதுவான மனநிலையை வெளிச்சம் போட்டு இது
காட்டுவதாகவே தோன்றியது.
பாலியல் சார்ந்த புத்தகங்களை விழுந்து விழுந்து புரண்டு புரண்டு படி(டு)ப்போம். ஆனால் அதைப்பற்றி எழுதினால் அதற்கு நூலகத்தில் இடம் கொடுக்க மாட்டோம்.
பாலியல் சார்ந்த புத்தகங்களை விழுந்து விழுந்து புரண்டு புரண்டு படி(டு)ப்போம். ஆனால் அதைப்பற்றி எழுதினால் அதற்கு நூலகத்தில் இடம் கொடுக்க மாட்டோம்.
மயில்-வேல்" வழிபாட்டு யாசிதிகளை ஆதரித்ததால் ரவிசங்கருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!
டெல்லி: மலேசியா சென்றுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ
ரவிசங்கருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஈராக்கில் சிறுபான்மையினராக இருக்கும் யாசிதி இனத்தவருக்கு ஆதரவாக
ரவிசங்கர் செயல்பட்டதாலேயே ஐ.எஸ். தீவிரவாதிகள் அவருக்கு மிரட்டல்
விடுத்துள்ளனர்.
சிரியா, ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டை
பிரகடனம் செய்துள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். இந்த தனிநாட்டுக்குள் வாழும்
பிற மதத்தினர் இஸ்லாம் மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது பெருந்தொகையை பணமாக
கொடுக்க வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.
இதற்கு உடன்படாதவர்களை படுகொலை செய்து வருகின்றனர். இப்படி ஐ.எஸ்.
தீவிரவாதிகளின் கொடூர ஒடுக்குமுறைக்குள்ளானவர்கள் ஈராக்கின் சிஞ்சார்
பகுதிகளில் வசிக்கும் யாசிதி என்ற இனத்தவர். இஸ்லாமியராகவும்
கிறிஸ்தவராகவும் இல்லாமல் தனித்த அடையாளத்துடன் வாழ்கின்ற மிகச் சிறுபான்மை
இனம்.
இவர்கள் மயிலையும் வேலையும் புனிதமாக வழிபடுகிறவர்கள். தமிழ்நாட்டின் முருக
வழிபாடு, வட மாநிலங்களின் ஸ்கந்த வழிபாடு போலவே யாசிதிகள் வழிபாட்டு முறை
இருக்கிறது.
இதனால் தங்களை இந்தியாவுடன் தொடர்புடையவர்களாக எண்ணுகிறார்கள்.
குர்திஸ்தான் 15 வயதுப் பெண்ணை ஒரே நாளில் 15 பேருக்குத் திருமணம் செய்த இஸ்லாமிய பயங்கரவாதிகள்
குர்துகள் தாய்நாட்டுப் பற்றும் மதப்பற்றும் நிறைந்தவர்கள், கட்டுக்கோப்பானவர்கள், கண்ணியமிக்கவர்கள்.
சிரியாவின் பெரும் பகுதியை ஐ.எஸ். அமைப்பு தான் இன்னமும் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறது. இராக்கில் அதன் முன்னேற்றம் தடுத்து
நிறுத்தப்பட்டுவிட்டது. ஷியா படைகளும் ஈரானியத் தோழமைப் படைகளும் கடுமையாக
எதிர்த்துப் போரிடும் அதே வேளையில், 640 கிலோ மீட்டர் எல்லை நெடுகிலும்
குர்துகள் நவீன ஆயுதங்களும் பெரிய உதவிகளும் இல்லாமல் வீரத்துடன் போரிட்டு
வருகிறார்கள்.
உலகின் மிகப் பெரிய ‘நாடற்ற இனத்தவர்கள்’ என்று அழைக்கப்படும் குர்துகளின்
தீரத்தையும் உறுதியையும் நேரில் பார்த்த பிறகாவது அமெரிக்கா தன்னுடைய
உத்தியை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
சில வாரங்களுக்கு முன்பு சதாம் உசைனின் சொந்த ஊரும் சன்னிகளின் கோட்டையுமான
திக்ரித், இராக்கைச் சேர்ந்த ஷியா படையிடம் வீழ்ந்தது. ஈரானின் ஆதரவு
அப்படைகளுக்கு இருக்கிறது. இராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மோசுல்,
குர்துகள் வசமாகும் நிலையில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் ஐ.எஸ். நுழைவதற்கு
முன்னால் குர்துகள் அதிக எண்ணிக்கையில் வசித்த மோசுல் நகரின் கிழக்குப்
பகுதிக்குள் நுழையப் படைகள் தயாராகிவிட்டன.
100 சதவீத தேர்ச்சியை எட்ட 9ம் வகுப்பில் 'வடிகட்ட' உத்தரவு! அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில்....
பாடம் ஒழுங்காக நடத்த தெரியாத ஆசிரியர்களை யார் பெயில் பண்ணுவது?அக்கிரமமான முடிவு.
அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை
எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை
ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு (2014 - 15)
கல்வி ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 100
சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, கல்வித்துறை கெடுபிடி காட்டி
வந்தது.இதற்கேற்ப, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில்,
மதிப்பெண் குறைந்த மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி
வழங்கவும், அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டது.'தேர்ச்சி விகிதம் குறையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அதிகாரிகளின் மறைமுக மிரட்டல்களால்,
தலைமை ஆசிரியர்கள், கடும் மன உளைச்சல் அடைந்தனர். அடிப்படை கல்வி இங்கே சரியாக புகட்டபடுவதில்லை.எட்டாம் வகுப்பு வரை பாடம்
எடுக்கும் ஆசிரியர்கள் கூடுதல் ஊதியம் பெற எம் ஏ., எம் ஈட் என்று பட்டம்
வாங்குகிறார்களே தவிர மாணவர்களுக்கு சரிவர பாடங்கள் எடுப்பதில்லை. அந்த வலி
ஒன்பதாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்குத்தான் தெரியும். எட்டாம்
வகுப்பு வரை எடுக்கும் ஆசிரியர் முதல், பிளஸ் டூ ஆசிரியர்கள் வரை ஒரே
ஊதியம் தான். தகுதி ஊதியம்( Grade Pay ) என்பதில்தான் சிறிய வித்தியாசம்.
மற்றபடி எந்த கஷ்டமும் இல்லாமல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள்' ஏனோ
தானோ என்று வேலை செய்கிறார்கள். இதே வகுப்பு ஆசிரியர்கள் தனியார்
பள்ளிகளில் அதிகம் சிரமப்பட்டு பாடம் எடுக்கிறார்கள்.அதனால்தான் அவர்களது
கல்வித்திரன் கூடுதலாக உள்ளது.எனவே அதிக தேர்ச்சி பெற ஆரம்ப வகுப்புகளிலேயே
திறமையாக பாடம் சொல்லித்தருவதுதான் ஒரே வழி.
தமிழகத்தில் பறிபோகும் கருத்து சுதந்திரம்! ஊடகங்கள் மீதே வழக்கு போடும் அதிமுக அரசுக்கு எதிராக கண்டன கூட்டம்
தமிழகத்தில் பறிபோகும் கருத்துச்சுதந்திரம் :
சென்னையில் பத்திரிகைகள் மீதே அவதூறு வழக்குகள் பதிவு செய்யும் அளவிற்கு தமிழகத்தில் கருத்து சுதந்திரம் முற்றிலும் முடக்கப்பட்டிருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் சென்னையில் இன்று கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டன கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், ‘’அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கருத்துச்சுதந்திரம் முற்றிலும் முடக்கப்படுகிறது. அரசின் நிறை குறைகளை எடுத்துக்கூறுவது பத்திரிகையாளர்களின் கடமை. எதிர்க்கட்சியினர் மீது மட்டுமன்றி, ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறு வழக்குகள் தொடரும் அவலம் இருக்கும் அளவிற்கு அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது’’என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும், ‘’எழுத்துரிமை, பேச்சுரிமைகளுக்கெல்லாம் முதல் முதலாக மாபெரும் போராட்டங்களை நடத்தியது திமுக.
ஞாயிறு, 29 மார்ச், 2015
ஆம் ஆத்மி ! கனவு கலைகிறது ! அர்விந்த் கேஜ்ரிவால் நான் நான் நான் ? AAP ...Death of a Dream
இந்திய அரசியல் வரலாறில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக நிகழ்ந்தது ஆம் ஆத்மி
கட்சியின் வளர்ச்சி. கருப்புப் பணம் மட்டுமே, அரசியலின் அடிப்படையாக இருந்த
ஒரு சூழல். கருப்புப் பணம் இல்லாதவர்கள் அரசியலில் இறங்கவே முடியாத என்ற
ஒரு விரக்தி அளிக்கக் கூடிய நிலையில், அதற்கு மாற்றாக, அந்தத் தடையை
உடைத்து மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஒரு சாதாரண
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் இத்தகைய வெற்றியை பெற முடியுமா என்று
அனைவரும் அவநம்பிக்கை கொண்டிருந்த ஒரு சூழலில், முடியும் என்பதை மிக
தீர்க்கமாக நிரூபித்த ஒரு கட்சி.
Canada:பெரியோர்கள் நிச்சயித்த திருமணம்! மனைவியை குத்தி கொன்ற ஒரு கனடிய/ஈழத்தமிழன்
சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக் குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் !
இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ? அனுஜா 2011ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சிவலோக நாதன் என்பவரை மணம் முடித்துள்ளார். அப்போது அனுஜாவுக்கு 21 வயதும் சிவலோக நாதனுக்கு 27 வயதுமாக இருந்தது. பெண் வீட்டார் சுமார் 50,000 ஆயிரம் கனேடிய டாலர்களை செலவு செய்து இத் திருமணத்தை நடத்தி வைத்தனர். இதற்கு முன்னதாக அனுஜாவுக்கு இந்த சிவலோக நாதன் யார் என்றே தெரியாது.
வீரமணி : இந்துமதத்தை மட்டுமே தாக்குகிறேனா ? இஸ்லாம் கிருஸ்துவ மதங்களை ஏன் தாக்குவதில்லை? பூணுல் ஏன் என்னை அவமதிக்கிறது?
வீரமணி அவர்கள் பதில்களை கச்சிதமாக தெளிவாக பாண்டே மூஞ்சியில்
வீசியுள்ளார். பாண்டே பார்ப்பனர்களின், இந்துதத்துவா வாயிலிருந்து
கேள்விகளை போட்டுள்ளார். இவருடைய ஆதிக்க சாதியை நிலைநிறுத்த படாதபாடு
படுகிறார் பாண்டே.
ஒரு புரிதலுமில்லாதது போன்ற கேள்விகள். அதாவது 95 சதவிகிதம் பேரை ஜாதீய முறையால் பிரித்து வைத்த மதம் பற்றி முழுமையான கள்ள மௌனம் காக்கும் பாண்டே, வம்புக்காக இஸ்லாம் பற்றியும் கிருத்துவம் பற்றியும் வாயைப் பிடுங்க முயற்சி செய்துள்ளார். பாண்டே அவர்கள் தனது வன்மத்தை வெளிப்படுத்துவது அவருக்கு பா ஜ அடிப்படையாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தரலாமேயொழிய வேறெதையும் பெற்றுத் தராது, ஜாதீய நடை முறையின் அடிப்படை பற்றிக் கேள்வி கேட்க இயலாத பாண்டே இதனை ஆதித்தனாரின் தொலைக் காட்சியில் காட்ட இயல்வதுதான் சமூக நீதியின் சரித்திரம். ஆதித்தனார் தொலைக்காட்சி ஆரிய மயமாகின்றது,
ஒரு புரிதலுமில்லாதது போன்ற கேள்விகள். அதாவது 95 சதவிகிதம் பேரை ஜாதீய முறையால் பிரித்து வைத்த மதம் பற்றி முழுமையான கள்ள மௌனம் காக்கும் பாண்டே, வம்புக்காக இஸ்லாம் பற்றியும் கிருத்துவம் பற்றியும் வாயைப் பிடுங்க முயற்சி செய்துள்ளார். பாண்டே அவர்கள் தனது வன்மத்தை வெளிப்படுத்துவது அவருக்கு பா ஜ அடிப்படையாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தரலாமேயொழிய வேறெதையும் பெற்றுத் தராது, ஜாதீய நடை முறையின் அடிப்படை பற்றிக் கேள்வி கேட்க இயலாத பாண்டே இதனை ஆதித்தனாரின் தொலைக் காட்சியில் காட்ட இயல்வதுதான் சமூக நீதியின் சரித்திரம். ஆதித்தனார் தொலைக்காட்சி ஆரிய மயமாகின்றது,
கலைஞர் : இயற்கைதான் அண்ணா குறிப்பிட்ட ஒன்றே குலம் ஒன்றே தேவன்! ராமானுஜர் மட்டுமல்ல வள்ளலாரும்தான் .....
வைணவ விடிவெள்ளி’ என்று கொண்டாடப்படுபவர் ஸ்ரீராமானுஜர். கி.பி. 1017ம்
வருடம் பிங்கள ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்.
120 வருடங்கள் வாழ்ந்து அதே மாதம், அதே நட்சத்திரத்தில் மறைந்தவர்.
வைணவர்களின் வாழ்வில் இறுதி லட்சியமான மோட்சத்தை அடைய விசிஷ்டாத்வைத
தத்துவத்தை அருளிச் செய்தவர். குலங்களில் ஏற்றத் தாழ்வு இல்லை;
கோயிலுக்குள்ளே சென்று வழிபடவும், மோட்சத்தை அடையவும் வழிகாட்டும் மூல
மந்திரத்தைத் தெரிந்துகொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு" என்று முழங்கி,
அதன்படி தன் செயல்பாடுகளை வகுத்துக்கொண்டவர்.
தவறாக புரிந்து கொல்லப்பட்ட பாலியல்? சினிமாவினால் கற்றுத்தரப்படும் பாலியல் வன்முறை! தேவை பாலியல் கல்வி!
ஒவ்வொரு
நாளும் செய்தித்தாளை திறந்தால் எட்டாம் வகுப்பு மாணவி
பலாத்காரம்..பதினோராம் வகுப்பு மாணவி பலாத்காரம் என்ற செய்திகள் தவறாமல்
இடம்பெற்றுள்ளன. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதி பெயரை
மாற்றி எழுதி இருப்பார்கள். மாற்றி எழுதப்பட வேண்டியது அந்த பெண்களின்
பெயர்கள் மட்டுமல்ல. நம் கல்வி முறையும், பாடத்திட்டமும்தான்.
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று
பிரிவுகள் உண்டு. அறமும் பொருளும் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதால்தான்
திருவள்ளுவர் காமத்துப்பாலை இயற்றினார். ஆனால் காமத்துப்பாலின் ஒரே ஒரு
குறள் கூட இது வரை பள்ளிப் பாட புத்தகங்களில் இடம்பெற்றது இல்லை என்பதே
நிதர்சனம். உண்மையில் காமம் விலக்கப்பட வேண்டியதா?
மன்சூர் அலிகான் பெப்சி FEFSI மாபியாவை உடைக்கிறார்! சீனா ஸ்டன்ட் மாஸ்டரை இறக்குமதி செய்கிறார்
சென்னை,மார்ச் 27 (டி.என்.எஸ்) பெப்சியோடு மோதலில் ஈடுபட்டு,
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது, பெப்சி அமைப்பு தொழிலாளர்கள்
அல்லாமல், தனது விருப்பப்படி தொழிலாளர்கள் வைத்து 'அதிரடி' படத்தின்
படப்பிடிப்பை அதிரடியாக நடத்தி வருகிறார் மன்சூரலிகான்.இப்படத்தில்
மன்சூர் அலிகான், மௌமிதா சௌத்ரி (வெஸ்ட் பெங்கால்), சஹானா, பூவிஷா, கவ்யா,
காயத்ரி, ராதா ரவி, செந்தில், சிசர் மனோகர் , ஸ்ரீ ரங்கநாதன் ,சங்கர்,
கிங்காங், நெல்லை சிவா, போண்டாமணி, சுப்புராஜ், மஞ்சப் பை சேகர், நடேசன்
மற்றும் பலர் நடிக்கின்றனர். செந்தில் படகோட்டியாக நகைச்சுவைக்
கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்.
மறைந்து கொண்டிருக்கின்ற
சிலம்பம், களறி, வாள் வீச்சு, மான் கொம்பு போன்ற சண்டைப் பயிற்சிகளை
இளைஞர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் பயில்வானாக கதாநாயகன் மன்சூர்.
காலையில் இளைஞர்களுக்குப் பயிற்சிக் கொடுப்பவர், மாலையில் சமூக சேவை
செய்யும் கதாநாயகனாக மாறுகிறார்.
ஜனதா பரிவார் கட்சி ! லாலுவும் நிதீஷும் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் இணைகின்றன
புதுடில்லி: ஜனதா பரிவார் கட்சி விரைவில் துவக்கப்படும் அதற்கான
முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார்
கூறினார்.பா.ஜ.,வுக்கு எதிராக, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய
ஜனதா தளம், உள்ளிட்ட ஆறு கட்சிகள் உருவாக்கியுள்ள ஜனதா பரிவார் சார்பில்,
டில்லியில் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தியது.
கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., பீகார் மாநிலங்களில், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வி அடைந்தன. பா.ஜ., அபார வெற்றி பெற்றது.
பா.ஜ.,வின் எழுச்சியை சமாளிக்க, இந்த மூன்று கட்சிகளுடன், மதச் சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியில் இணைந்து, ஜனதா பரிவார் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.அடுத்த மத்திய அரசில் இவர்களின் பங்கு நிச்சயம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது!
கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., பீகார் மாநிலங்களில், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வி அடைந்தன. பா.ஜ., அபார வெற்றி பெற்றது.
பா.ஜ.,வின் எழுச்சியை சமாளிக்க, இந்த மூன்று கட்சிகளுடன், மதச் சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியில் இணைந்து, ஜனதா பரிவார் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.அடுத்த மத்திய அரசில் இவர்களின் பங்கு நிச்சயம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)