kalaignarseithigal.com ;
சென்னையில்
சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழச்சியில் நடிகர்
சூர்யா பங்கேற்றார். அப்போது பேசிய அவர் புதிய கல்விக்கொள்கை, நீட்
நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்தார்.
விழாவில் பேசிய சூர்யா, “ புதிய கல்விக்கொள்கை குறித்து யாரும் கவலைப்படாமல், கவனம் செலுத்தாமல் உள்ளனர். இது நாடு முழுவதும் 30 கோடி மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. புதிய கல்விக்கொள்கையில் ஓராசிரியர் பள்ளிகளை மூடும் பரிந்துரையை கஸ்தூரி ரங்கன் குழு தெரிவித்துள்ளது. பள்ளிகளை மூடும் கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரை தவறானது. பள்ளிகளை மூடினால் மாணவர்கள் எங்கே போவார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட பரிந்துரைத்துள்ளனர்.
ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது. மேலும் 5ம் வகுப்பில் அரசுத் தேர்வு என்று பரிந்துரைத்துள்ளனர். அப்படி செய்தால் பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும். நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன. அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள். ஒரு ஆசிரியர், 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்.