சனி, 27 ஜூலை, 2013

ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லட்சுமிராய் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது

ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லட்சுமிராய் ஆகிய ஐந்து நடிகைகள் காதலில் சிக்கியுள்ளனர். இதில் சிலருக்கு திருமண ஏற்பாடுகள்
நடக்கிறது. ஹன்சிகா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். அவர் நடித்து சமீபத்தில் ரிலீசான தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2 படங்கள் வெற்றிகரமாக ஓடின. இந்த நிலையல் சிம்புவுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் காதலை பகிரங்கமாக அறிவித்து உள்ளனர். சிம்பு உடனடியாக திருமணம் செய்து கொள்ள அவசரப்படுகிறார் என்கின்றனர். ஹன்சிகாவோ ஐந்து வருடத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார். சமந்தாவும், சித்தார்த்தும் காதல் வயப்பட்டு உள்ளனர்.
இருவரும் கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜைகளில் பங்கேற்றார்கள். விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளனர். சமந்தா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வருகிறார். லட்சுமி ராயும் காதலில் விழுந்துள்ளார். அவர் கூறும் போது, நான் காதலிக்கிறேன். அவர் தொழில் அதிபராக இருக்கிறார். அவரைப்பற்றி வேறு விஷயங்கள் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை என்றார். அமலாபாலும் முன்னணி டைரக்டர் ஒருவரை காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியாகியுள்ளன.

. ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நியமன வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

மனுதாரர் வசந்தா, 27-7-1995 முதல் இணைப் பேராசிரியராகவும், 18-12-1996 முதல் பேராசிரியராகவும், ஐ.ஐ.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும்” என்று நீதியரசர் எஸ்.நாகமுத்து தீர்ப்பளித்திருக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:- கேள்வி :- போக்குவரத்துக் கழகங்களில் புதிதாக 25 பணிமனைகள் அமைக்க அ.தி.மு.க. அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியதே, ஆனால் அந்தப் பணிமனைகள் அமைக்கப் பட்டதாகத் தெரியவில்லையே? பதில் :- தற்போது அறிவிக்கப்பட்ட 25 பணிமனைகள் மாத்திரமல்ல; ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 43 பணிமனைகளும் இன்னும் அமைக்கப்படவில்லை. அதன் பணிகள்தான் நடைபெற்று வருகின்றன.

சோலார் பேனல் மோசடி: மம்முட்டியிடம் போலீஸ் விசாரணை? காசுக்காக எதுவும் செய்வான் சினிமாகாரன்

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி தொடர்பாக முன்னணி மலையாள நடிகர் மம்முட்டியிடம் கேரள போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சோலார் பேனல் மோசடியில் கைதான பிஜு ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதா நாயரிடம் பண ஆதாயம் பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் இடம் பெற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பட்டியலில் நடிகர் மம்முட்டியின் பெயரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பிஜு ராதாகிருஷ்ணன்- சரிதாநாயரின் நிறுவனம் கொச்சியில் நடத்திய ஒரு விழாவில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டார். அந்த விழாவில் மம்முட்டிக்கு விருது வழங்கியதோடு அவருக்கு ரூ.10 லட்சம் பணமும் கொடுத்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை பிரித்து 'ராயல தெலுங்கானா'வை உருவாக்க காங்கிரஸ் முடிவு?

HYDERABAD: The signals from the corridors of power indicate that not only does the Congress leadership want to solve the Telangana issue for good, but also wants to ensure that no more demands for division
emerge from the region.
It is with this objective in mind that the Congress is seriously considering the proposal of splitting Rayalaseema vertically and merging the districts of Anantapur and Kurnool with Telangana to form Rayala-Telangana . டெல்லி/ஹைதராபாத்: ஆந்திர அரசியலில் தெலுங்கானா விவகாரத்தின் கிளைமாக்ஸ் எப்போது? என்ன முடிவாக இருக்கும்? என்ற திக் திக் நிமிடங்கள் இப்போது.. தேர்தல்களை கருத்தில் கொண்டு மிகத் தெளிவாக லாபம் கிடைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து முடிவு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலமானது தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய மூன்று பகுதிகளாக உள்ளன. தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தாக வேண்டும் என்பது அரை நூற்றாண்டுகாலமாக நடந்து வரும் போராட்டம். இது தொடர்பாக காங்கிரஸ் விரைவில் முடிவு அறிவிக்க இருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற இறுதி ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானாவை உருவாக்கி பிற பகுதியின் எதிர்ப்பை சம்பாதிப்பதற்கு பதிலாக மாற்று திட்டத்தை அறிவிக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.

100 கோடிக்கு உதயம் காம்ப்ளெக்ஸை வாங்கியது சத்யம்?

சென்னை: சென்னையின் பெரிய திரையரங்குகளில் ஒன்றான உதயம் காம்ப்ளெக்ஸை ரூ 100 கோடிக்கு சத்யம் சினிமாஸ் வாங்கியுள் உளதாக தகவல் வெளியாகியுள்ளது. எண்பதுகளில் கட்டப்பட்ட மிக முக்கியமான தியேட்டர் காம்ப்ளெக்ஸ் உதயம். தென் சென்னை மக்களுக்கு பல நல்ல சினிமாக்கள் பார்க்கும் வாய்ப்பை வழங்கிய இந்த அரங்கம், கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. இந்த காம்ப்ளெக்ஸில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு அரங்குகள் உள்ளன. மொத்தம் 2198 பேர் படம் பார்க்க முடியும். இவற்றுக்கு உரிமையாளர்கள் மொத்தம் 53 பேர். 6 குடும்பங்களைச் சேர்ந்த இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றத்துக்குப் போனார்கள்.

வடக்கத்தியான், மோட்டுச் சீனா, தொப்பி பிரட்டி, காப்பிலி, பறங்கி, பாம்புதின்னி என்றெல்லாம் இனவாதம் பரப்பும் மனிதர்கள்

எப்போது நாம் நாகரிகமடைவது?

ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பார்வைகளை ஏனைய பேச்சுக்களை சகித்துக்கொள்ளாமையும் அவற்றை மறைக்க முற்படுதலுமே நம் ஊடக அரசியல் கலாசாரமாக இருக்கிறது.  நம்மைத் தவிர்ந்த  மற்றவர்களை (மற்றவற்றை) நம்மைவிட மட்டமாக நினைப்பதும், இழித்து ஒதுக்குதலும் நமது மரபாயி ருந்துவரும் பழக்கங்களிலொன்று என்பது தெரிந்ததே. அது இவ்வளவு உலக மாற்றங்களுக்குப் பிறகும் இன்றும் தொடர்கிறது. வடக்கத்தியான், மோட்டுச் சீனா, தொப்பி பிரட்டி, காப்பிலி, பறங்கி,
இதுவரைகாலமும் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டும் நடை பெற்று வந்த இலக்கியச் சந்திப்பின் 41-வது மாநாடு முதன்முறையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த சனியும் ஞாயிறும் யாழ்ப்பாணம் அக்றேறியன் லேனில் உள்ள யூரோவில் மண்டபத்தில் இந்த இலக்கியச் சந்திப்பின் ஒவ்வொரு நாளும் சுமார் இருநூறு பேர்வரையில் வந்து கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து வந்திருந்த இலக்கிய ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் பண்பாடு, சாதியம், இலக்கியம், தேசிய இனங்கள்-பிரச்சினைகள் ஆகிய தலைப்புகளில் பல மணிநேர விவாதங்களை நடத்தியிருந்தனர். பல புதிய கருத்துக்களும் நெஞ்சைத் தொடும் அனுபவப்பகிர்வுகளும் ஒவ்வொரு அமர் விலும் வெளிப்பட்டன.
முஸ்லிம் தேசியம், மலையகத் தேசியம் ஆகியவற்றின் முகிழ்ப்பின் பின்னுள்ள காரணிகள், சிங்களத் தேசியத்தின் எண்ணப்பாடுகள் குறித்த சிங்கள வளவாளர்களின் பகிர்வுகள், தமிழ்த் தேசியம் பற்றிய விசாரணை, சாதியம், பெண்களின் நிலை, வரலாற்று விடுபடல்கள், பண்பாட்டுருவாக்க நெருக்கடிகள் குறித்தெல்லாம் விரிவான பலதரப்பு விவாதங்கள் நடத்தப்பட்டன.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவிலிருந்து இந்து ஆங்கில நாளிதழ், லண்டனிலிருந்து பிபிசி போன்றவை எல்லாம் இந்த இலக்கியச் சந்திப்பு பற்றி செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் தமிழ் ஊடகங்களில் இப்படி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்ததற்கான அடையாளத்தையே காணக்கிடைக்கவில்லை. அதிலும் யாழ்ப்பாண ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டது ஏன் என்று யோசித்தால்தான் எங்கள் பத்திரிகா தர்மங்கள் ஊடக நடுவுநிலைமை எல்லாம் ஓடிவெளிக்கின்றன.

காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு

காஜியாபாத்: காதலிக்க மறுத்த திருமணமான பெண் மீது ஆசிட் ஊற்றிவிட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். விஜய்நகர் பகுதியை சேர்ந்தவர் லக்கான் (30). அதே பகுதியில் வசித்து வரும் பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீனா (22). மீனாவுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் லக்கான் அடிக்கடி மீனாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் மீனா அதற்கு சம்மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வேலைக்கு சென்றிருந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வந்த லக்கான், மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். மீனா அதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த லக்கான், கொலை செய்துவிடுவதாக மீனாவை மிரட்டிவிட்டு சென்றார்.

எய்ட்ஸ் சந்தேகத்தில் குழந்தைகள் சுடுகாட்டில் குடியமர்த்தப்பட்ட சோகம்

உ.பி.,யில், பிரதாப்கர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தில், எய்ட்சால்
பாதிக்கப்பட்டு பலியான தம்பதி யின், ஐந்து குழந்தைகள், கிராம மக்களால் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுக்கும், எய்ட்ஸ் பாதிப்பு இருக்கும் என, அஞ்சி, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் சுடுகாட்டில், குடியமர்த்தப்பட்டனர்.5 குழந்தைகள் உ.பி., மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், ஜமுவா கிராமத்தில், ஒதுக்குப்புறமாக உள்ள சுடுகாட்டில், தற்காலிகமாக குடில் அமைத்து, ஒரு சிறுமி உட்பட ஐந்து குழந்தைகள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இதில் ஏழு வயது சிறுவனும் அடக்கம். இதில், 17 வயதான சிறுவன்கூறியதாவது:எய்ட்சால் பாதிக்கப்பட்டு என் தந்தை இறந்தார். எங்களை கவனித்து கொண்டு இருந்த தாயும், இரண்டாண்டு கழித்து இறந்தார். அவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருந்தது.அதன் பின், உறவினர்களுடன் கிராமத்திலேயே வசிக்க, நாங்கள் விரும்பினோம். ஆனால், எங்களுக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருக்கும் என்று அஞ்சி கிராமத்தினர், பெற்றோர் புதைக்கப்பட்ட சுடுகாட்டிலேயே, எங்களை தங்க வைத்துள்ளனர்.இவ்வாறு அந்த சிறுவன் கூறினார்.கல்லறை அருகேகடந்த இரண்டு மாதமாக, தங்கள் பெற்றோர் கல்லறை அருகே, தார்பாயால் கூடாரம் அமைத்து, ஐந்து சிறுவர்களும் பொழுதை கழித்துவருகின்றனர். இவர்களுக்கு, கிராம மக்கள் யாராவது தரும் உணவை சாப்பிட்டுவருகின்றனர்.

மானாட மயிலாட புகழ் கீர்த்தியை மணக்கும் சாந்தனு

சாந்தனு பாக்யராஜ் மானாட மயிலாட புகழ் கீர்த்தியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இயக்குனர், நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலம் ஹீரோவானார்.
அவர் சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அவர் தற்போது வாய்மை, அமளி துமளி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சாந்தனுவுக்கும் மானாட மயிலாட புகழ் கீர்த்திக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறதாம். கீர்த்தியின் அம்மா ஜெயந்தி ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.
அங்கு சாந்தனு அடிக்கடி செல்வாராம். அப்போது தான் கீர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். வாழ்த்துக்கள் சாந்தனு.

வெள்ளி, 26 ஜூலை, 2013

இசுலாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சி பயங்கரவாதம் !

சவுதி அரேபியாவில் மன்னராட்சிக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தம் கோரியும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அதற்காக போராடும் மனித உரிமையாளர்கள் பலரையும் பயங்கரவாதிகளைப் போல கைது செய்து கொடுமைப்படுத்துகிறது சவுதியின் மன்னராட்சி. பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதை சகித்துக் கொள்ள முடியாத ஷேக்குகளின் சட்ட ஆட்சி மேலாண்மை செலுத்துகிறது. மனித உரிமைகளுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக், லிபியா, சிரியா என்று பிற நாடுகளின் மீது வரிசையாக பயங்கரவாதத்தை அவிழ்த்து விடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ‘ஜனநாயகங்கள்’ சவுதி அரேபியாவின் நம்பகமான கூட்டாளிகளாக உள்ளன. தங்களுக்கு எண்ணெய் வளத்தை வாரி வழங்கும் மன்னர் ஆட்சியை பாதுகாத்து நிற்கின்றன.
அப்துல்கரீம் அல்காதர் என்பவர் சவுதி அரேபியாவிலுள்ள குவாஸிம் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் மட்டுமல்ல, அரேபிய குடியுரிமை மற்றும் அரசியலுரிமைக்கான கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினரும் கூட. ஆட்சியாளர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக மனித உரிமை அமைப்பு தொடங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

தேடப்பட்டு வரும் போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் !

சென்னை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும், "போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் ஆகிய, நாவரையும் ஒரு வாரத்திற்குள் பிடிக்க, போலீசிற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுவேலூரில், ஜூலை 1ல், இந்து முன்னணி மாநிலச்செயலர், வெள்ளையப்பன்; சேலத்தில், 19ம் தேதி, பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர், கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.,), விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்தில் வெடிகுண்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய, மதுரையைச் சேர்ந்த, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக்; மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில்; நாகையைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகிய, நால்வரையும் தேடி வருவதாகவும், தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 20 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்றும், தமிழக போலீஸ் அறிவித்துள்ளது.

இலவசமாக போர்வெல் வழங்கும் நடிகர் கஞ்சா கறுப்பு ! இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல்

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தற்போது ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற
படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். ‘அங்காடி தெரு’ மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆருஷி நாயகியாக நடிக்கிறார். ‘மலையன்’ என்ற படத்தை இயக்கிய கோபி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை, காரைக்குடி, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு லாரியை கொண்டு சென்று போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம். இன்னமும் போர்வெல் போடச்சொல்லி 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் கஞ்சா கருப்புவுக்கு வந்திருக்கிறதாம். ஆகையால், படப்பிடிப்பு முடிவதற்குள் எல்லா ஊர்களுக்கும் வந்து போர்வெல் போட்டுத் தருகிறேன் என சத்தியம் செய்திருக்கிறாராம் கஞ்சா கருப்பு.

மாபியாக்களின் கூடாரமாகிவிட்ட அரவிந்தர் ஆஷ்ரமம் அரசு வசமாகிறது ! அப்படியே காஞ்சியையும் Takeover பண்ணுங்க

புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதை கையகப்படுத்தி நிர்வகிக்க புதுவை அரசு ஆலோசித்து வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினர். மேலும் அரசே அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வாகிக்க அரசு அதிகாரிகளை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். அங்கு காமம் களவு மதுபோதை லஞ்ச பரிமாற்றம் இன்னும் எழுதவே முடியாத அளவும் கர்மம் நடக்கிறது , ஏன் காஞ்சி மட்டும் என்ன வாழுதாம் ?
tamil.oneindia.in

ஜெயேந்திரர், விஜேந்திரருக்கு பிடிவாரண்ட் எச்சரிக்கை காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் காஞ்சிபுரம் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ஜெயேந்திரர், விஜேந்திரர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி முருகன் விசாரித்து வருகிறார். சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை, குறுக்கு விசாரணை, வழக்கறிஞர்களின் வாதம் ஆகியவை முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த முறை விசாரணைக்கு வந்நத போது வழக்கறிஞர்கள் ஸ்டிரைக் காரணமாக ஜூலை 26ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க கொடுமைகளில் இது மிகவும் பயங்கரமானது! என் பார்வையில் வினவு – 25 : வேணி

த்து இருவது ஆளுக்கும் ஒத்தாளா நின்னு சமைச்சு போட்டுடுவா. மலை போல வேலையிருந்தாலும் சளைக்காம பாத்துருவா. என்னதான்
தாங்கமுடியாத கஷ்டம் வந்தாலும் வெளிய சொல்லாம மென்னு முழுங்கிடுவா.
இதெல்லாம் எம்மேல மத்தவங்க வச்சுருந்த அபிப்ராயம். எனக்கும் இதைத் தாண்டி வேற எதுவும் தெரியாது. ஒடம்பு வளஞ்சு வேல செய்யறத தப்புன்னு சொல்ல வரல. ஆனா கிராமத்துல இதுதான் பொண்ணுக்கு அழகு, இதத்தவிர பொம்பளைக்கு வேறெதுவும் வேண்டாம்னு அடக்கி வச்சர்ராங்க.
ஜூனியர் விகடன், துக்ளக்கு புத்தகமெல்லாம் பாக்கறதோட சரி, படிக்கறது கெடையாது. காரணம், அது அரசியல் சம்மந்தப்பட்டது, அரசியல் ஆண்களுக்கு சம்மந்தப்பட்டது. பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை, இது நமக்கான புத்தகம் கிடையாதுன்னு ஒதுங்கிடுவேன். கிராமங்கள்ல பெண்கள் இப்படித்தான் இருப்பாங்க. “பொம்பளைக்கு அரசியல், இணையமெல்லாம் எதுக்கு, அதல்லாம் நீங்க படிங்க” என்றேன்.
“சமச்சீர் கல்விப் பிரச்சனை நடக்குதே, அதுக்காக போராட்டம் நடக்குதே கேள்விப் பட்டிங்களா? இது உங்க வாழ்க்கைய பாதிக்கலையா?

லோக்சபா தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டி? அப்படீன்னா காங்கிரசுக்கு கித்னா ?

வரும் லோக்சபா தேர்தலில், தொகுதிப் பங்கீடு குறித்து சூசகமாக கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்ற பொருட்பட பேசினார். அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தபோது, அதில் கலந்து கொண்டார் தி.மு.க. தலைவர்.
நிகழ்ச்சியில் மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், “2004ம் ஆண்டு, நாட்டில் மதசார்பற்ற ஆட்சி அமைய கருணாநிதி பாடுபட்டார். அதேபோல் மீண்டும் நல்லாட்சி அமைய அவர் வழி காட்ட வேண்டும்” என்றார்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட இருமடங்கு வேகத்தில் வந்ததால் விபத்து ! Spain லுமா?

ஐரோப்பாவின் மிக மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்று, ஸ்பெயின்
நாட்டில் நேற்று (புதன்கிழமை) இரவு நடந்துள்ளது. குறைந்தபட்சம் 60 பேர்
கொல்லப்பட்டும், 131 பேர் காயமடைந்தும் உள்ளனர். அவர்களில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். 5 பேர் கோமா நிலையில் நினைவற்று உள்ளார்கள்.
நேற்றிரவு 8.40 மணிக்கு, ஸ்பெயினின் வட-மேற்கு பகுதியில் உள்ள சான்டியாகோ டி கொம்பொஸ்டெல்லா நகரை நெருங்கிக்கொண்டிருந்தபோதே ரயில் விபத்துக்கு உள்ளாகியது. ஸ்பெயின் வரலாற்றில் 40 ஆண்டுகளின் பின் நடந்த மோசமான ரயில் விபத்து இது.
ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று செருகியுள்ள நிலையில் (போட்டோ-2) அதற்கு உள்ளேயிருந்து பயணிகளை மீட்கும் பணிகள் மிக சிரமமான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டன. ரயில் தண்டவாளத்துக்கு அருகே போர்வைகளால் மூடப்பட்ட நிலையில் பயணிகளின் இறந்த உடல்கள் கொணப்பட்டன.

மதிய உணவு ஆசிரியர்களின் வேலை அல்ல ! அலகாபாத் ஹைகோர்ட்

அலகாபாத்: பாடம் நடத்துவது மட்டும்தான் ஆசிரியர்களின் வேலை மதிய உணவுப் பணியை கவனிப்பது அவர்களின் வேலை அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் விஷம் கலந்த மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அரசின் கெடுபிடி அதிகரித்துள்ளது. மதிய உணவை முதல்வர்கள் சாப்பிட்டு பார்த்த பிறகே, மாணவர்களுக்கு பரிமாற வேண்டும், மதிய உணவு தயாரிக்கும் பணியை முதல்வர்களும், ஆசிரியர்களும் நேரடியாக மேற்பார்வையிட வேண்டும் என்று பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜில்லாவுக்கு பில்ட் அப் ஆரம்பம்! 15 கோடி 18 கோடி 25 கோடி 100 கோடி 1000 கோடி ?

வேந்தர் மூவீஸ் வெளியிடும் தலைவா படத்தை சன் டிவி 15 கோடிகள் கொடுத்து டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது. இதற்கு முன்பாக விஜயின் பல படங்கள் சன் டிவியில் பல கோடிகளுக்கு விலைபோயிருக்கிறது. (வேலாயுதம் தவிர - வேலாயுதம் படம் ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டது).
விஜய் நடித்த தலைவா படம் நிர்ணயித்த பட்ஜெட்டைவிட அதிகமாக போனது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகரில் தொடங்கிய படத்தை ஆஸ்திரேலியாவில் முடித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

வக்கீல்கள் ஆவேசம் கோர்ட்டுக்கு வந்த போலீசார் விரட்டியடிப்பு! நெல்லையில் பரபரப்பு

நெல்லையில் கைதிகளை ஆஜர்படுத்த கோர்ட்டுக்கு சென்ற போலீசாரை வக்கீல்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் 40 வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதை கண்டித்து, வக்கீல்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் கோர்ட்டுக்கு வரவும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், பாளையங்கோட்டையில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, சப்,இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதேபோல், நாங்குநேரியில் இருந்தும் ரிமாண்ட் கைதி ஒருவர், போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு நின்ற வக்கீல்கள், அவர்களை கோர்ட்டிக்குள் நுழையவிடாமல் விரட்டினர்.

தமிழக சட்டம்-ஒழுங்கு நிலைமை! கொலை கொள்ளை வழிப்பறி ! முதலைமைச்சர் ஆலோசனை !

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அது தொடர்பான அம்சங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை
 வேலூரில் கடந்த 1-ந்தேதி இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பனும், சேலத்தில் கடந்த 19-ந்தேதி தமிழக பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேசும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த செயலுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், வன்முறை குற்றங்கள் கடுமையான நடவடிக்கைகள் மூலம் வேரோடு கிள்ளி எறியப்பட வேண்டும் என்று கூறினார். அத்துடன் இந்த கொலைகள் பற்றி விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை உடனடியாக அமைக்குமாறு தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று கொடநாட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அதுதொடர்பானவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், முதல்-அமைச்சரின் செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  வர வர இவிங்களுக்கு அம்மா மேல பயம் போயிடுச்சு ! மந்திரிங்களை பாத்து பயம்னா என்னன்னு கத்துங்க

தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற ரெயிலையே சாய்த்த சக பயணிகள் ! ஜப்பான் நாட்டில்

ஜப்பான் நாட்டில் உள்ள சாய்தாமா நகரில் உள்ள மினாமி உரவா ரெயில் நிலையத்தில் ரெயில் ஒன்று வந்து நின்றது. அந்த ரெயிலில் இருந்து
பயணிகள் கீழே இறங்கினர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கீழே இறங்கும் போது தவறி விழுந்தார். அவரது கால் பிளாட்பாரத்திற்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே சிக்கிக் கொண்டது. அவரை சில பயணிகள் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே அங்கிருந்த சிலர் ரெயிலை லேசாக சாய்த்தால் தான் பெண்ணை மீட்க முடியும் என்றனர். உடனே அங்கிருந்த பயணிகள் அனைவரும் ரெயிலை சாய்க்கும் முயற்சியில் இறங்கினர். இந்த தகவல் அறிந்து மற்ற பெட்டிகளில் இருந்தவர்களும் கீழே இறங்கி அனைவரும் ஒன்று சேர்ந்து பெட்டியை லேசாக சாய்த்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் மீட்கப்பட்டார். உடனே அந்த பெண்ணை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, "தவறுதலாக கால் மாட்டிக்கொண்ட அந்த பெண்ணை காப்பாற்ற பயணிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். அனைவரும் ஒன்று சேர்ந்து 32 டன் எடையுள்ள ரெயிலை அப்படியே லாவகமாக தூக்கி சாய்த்தனர். சுமார் 5 நிமிடம் மட்டுமே நடந்த இந்த மீட்பு பணியால் அந்த பெண் காப்பாற்றப்பட்டார்" என்றார்.maalaimalar.com

பெண்ணாக மாறிய ஆணுக்கும் ஆணாக மாறிய பெண்ணுக்கும் திருமணம் ! உலகம் பலவிதம் !

இரு வருடங்களுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எரின் எனும் இளைஞனும் சிறுவனாக பிறந்து பெண்ணாக மாறிய யுவதியும் இப்போது காதலர்களாக விளங்குகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்தவர். அவருக்கு லுகே என பெற்றோர் பெயரிட்டிருந்தனர். தான் பெண் தன்மையுடன் இருப்பதை உணர்ந்த அவர் ஒரு வருடத்துக்கு முன்னர் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். இதேவேளை, அமெரிக்காவைச் சேர்ந்த எரின் எனும் 17 வயது இளைஞன் பெண்ணாக பிறந்தவர். எமரல்ட் எனப் பெயரிடப்பட்டிருந்த இவர், பின்னர் சத்திரசிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இரு வருடங்களுக்கு முன்னர் முதல் தடவையாக சந்தித்த இவ்விருவரும் தற்போது காதலர்களாக உள்ளனர்.கடந்த மாதம்தான் எரினின் மார்பகங்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் ஏனைய அமெரிக்க ஜோடிகளைப் போன்று தற்போது கடற்கரைகளில் நீந்துவதுடன் படகுச்சவாரியிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். தனக்கு கம்பீரமான ஆணாக எரின் தெரிகிறார் என்கிறார் கெத்தி. (மேலும் பல படங்கள்)

வியாழன், 25 ஜூலை, 2013

Saudi Princess Pushes For Women's Rights


வித்யாபாலன்: திருமணமான பெண்களைத்தான் அதிகமாக ரசிக்கிறார்கள்.

தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன்.
அதையடுத்து கஹானி படத்திலும் நடித்து பெரிதும் பேசப்பட்டார். பின்னர் சித்தார்த்ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். அதனால் இனி
வித்யாபாலன் நடிப்புக்கு குட்பை சொல்லி விடுவார் என்று தான் நினைத்தது பாலிவுட் பட உலகம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மீண்டும் நடிப்பு கோதாவில் குதித்துள்ளார் வித்யாபாலன். அதோடு, திருமணத்துக்குப்பிறகு எனது உடம்பு எடை போட்டு விட்டது.ஆனால், இப்போதுதான் நான் நெளிவுசுழிவுடன் பார்க்க அழகாக தெரிகிறேன். என்னை நானே ரசிக்கும்போது மற்றவர்கள் ரசிக்கமாட்டார்களா என்ன என்றும் கேள்வி கேட்கிறார் வித்யாபாலன். அதுமட்டுமின்றி, இப்போதைய ஆண்களும், திருமணமான பெண்களைத்தான் அதிகமாக ரசிக்கிறார்கள். அதற்கு காரணம், திருமணத்துக்குப்பிறகுதான் பெண்கள் தங்கள் அழகில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதனால்தான் அவர்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள் ஆண்கள். அதனால் நானும் முன்பைவிட எனது அழகை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும், குழந்தையே பெற்றுக்கொண்டாலும் எனது அழகை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். அதனால், என்னை ரசிகர்கள் ரசிக்கிற காலம் வரை சினிமாவில் கதாநாயகியாக அரிதாரம் பூசிக்கொண்டேயிருப்பேன் என்கிறார் வித்யாபாலன்.

ஹரியானாவில் விவசாய பயிர் இழப்பீடு 2 ரூபாய் அல்லது .3 ரூபாய் மட்டுமே !

CHANDIGARH/PAHARIPUR: Rs 2 as compensation for crop damage? Yes, that is what one of the Green Revolution states, Haryana, is offering its farmers as compensation for crops damaged during the 2011 rainsபுதுடில்லி:அரியானாவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் இழப்பீட்டு தொகை ரூ. 2 மற்றும் ரூ.3 என்ற விகிதத்தில் எழுதப்பட்ட செக்குகளாக கொடுத்துள்ளசம்பவம் நடந்துள்ளது. அரியானாவில் கடந்த 2011-ம் ஆண்டுபெய்த கனமழையால் ஜஹாஜர் மாவட்டத்தில்3365 ஆயிரம் ஏக்கர்விசாய விளை நிலங்கள் மழையால்மூழ்கி பயிர்கள் நாசமாயின.இப்பகுதிகளை முதல்வர் பூபிந்தர் சி்ங ஹூடா,குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தலா ரூ. 3500 இழப்பீடு வழங்கவும்உத்தரவிட்டார்.இழப்பீட்ட தொலை விவசாயிகளுக்குதனியார் வங்கி செக்குகள் வழங்கப்பட்டன. இந்த ‌ செக்குகளில்ரூ. 2 ,ரூ. 3 , ரூ. 6 என எழுதப்பட்டு வழங்கப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேருக்கு மொத்தமாக ரூ. 30 எனவும் எழுதப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.தற்போது செக்குகளை வைத்துக் கொண்டுவிவசாயிகள் டி.வி. சானல்களுக்கு காட்டியது பரிதாபமாக இருந்தது.

காற்றாலை, சூரிய மின்சாரம் தடுப்பது யார் ?

கடல் பரப்பில் காற்றாலை630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுடைய உலகின் மிகப்பெரிய கடல் பரப்பில் இயங்கும் காற்றாலை (offshore Wind farm) தொகுப்பை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் திறந்து வைத்துள்ளார். லண்டன் வரிசை (London Array) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொகுப்பு கடல் மட்டத்திலிருந்து சுமார் 87 மீட்டர் உயரமுள்ள 175 தூண்களில் ஒவ்வொரு தூணிலும் 3.5மெகாவாட் மின்னாற்றல் உற்பத்தி திறனுடைய விசையாழிகளுடன் தேம்ஸ் நதியின் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கென்ட் கடற்கரையிலிருந்து 12-மைல் தொலைவில் கடலுக்குள் நிறுவப்பட்டுள்ள இத்தொகுப்பு சுமார் 40 சதுர மைல் பரப்பளவைக் கொண்டதாகும்.
லண்டனுக்கு அருகில் கடற்பரப்பில் காற்றாலை (படம் : நன்றி கார்டியன்)
இன்றைக்கு உலகின் மொத்த மின்சார தேவை 12.5 டெரா வாட் (1.25 கோடி மெகா வாட்) என்றும் 2030-ல் அது 16.9 டெரா வாட்டாக (1.69 கோடி மெகா வாட்) இருக்குமென்றும் கணக்கிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றல் வளங்கள் (Renewable Energy) இன்றைய மின் தேவையை விட பலமடங்கு இருக்கின்றன என்றும் அவற்றை சரிவர திட்டமிட்டு பயன்படுத்தினால் தேவையை விட உபரியாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமென்றும் சைன்டிஃபிக் அமெரிக்கன் (Scientific American) இதழில் வெளியான கணிணி மாதிரிகளையும், செயற்கைக்கோள் தகவல்களையும் வைத்து தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு தெரிவிக்கிறது.

மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !

manjolai-8தேர்தல் நேரத்தில் விழும் பிணங்கள் சர்வ வல்லமை வாய்ந்தவை. ராஜீவின் பிணம் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தைத் தந்தது; இந்திராவின் பிணம் ராஜீவுக்கு பிரதமர் பதவியைத் தந்தது; கோவை குண்டு வெடிப்பின் பிணங்கள் பாரதிய ஜனதாவுக்கு வாழ்வையும் செயலலிதாவுக்கு மறுவாழ்வையும் தந்தன.
manjolai-6பிணத்தை வைத்து அரசியல் நடத்துவதில் வல்லமை பெற்ற தி.மு.க., காங்கிரசு ஆட்சியில் குண்டடி பட்டுச் செத்த வால்பாறைத் தோட்டத் தொழிலாளி ஒருவரை காட்டி ”கூலி உயர்வு கேட்டான் அதான், குண்டடி பட்டுச் செத்தான்” என்று முழக்கம் வடித்து ஆட்சியையும் பிடித்தது.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் கொல்லப்பட்ட 17 பேரின் உடல்களைத்தான் யாரும் அரசியலாக்க மறுக்கிறார்கள். தீண்டவே மறுக்கிறார்கள். இது ஏன் அரசியலாக்கப் படவில்லை?
”17 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனை பேர் போலீசால் கொலை செய்யப்படுவது சமீபகாலத்தில் நடந்ததே இல்லை. எனினும் திருநெல்வேலிப் படுகொலையைப் பற்றி அனைத்திந்தியப் பத்திரிகைகள் எதுவுமே எழுதவில்லை. ஒருவரது ஆடு செத்துப் போனால் கூட அதில் மனித உரிமை பாதிக்கப்பட்டு விட்டதாக விசாரணை நடக்கும் காலம் இது. 17 பேர் கொலை செய்யயப்படிடிருக்கும் போது மனித உரிமைக் கமிசன் தானே வந்து தலையிட்டிருக்க வேண்டும். தலையிடவில்லை” என்றெல்லாம் புலம்பினார் ப.சிதம்பரம்.

மாயாவதி கட்சியை சேர்ந்த கற்பழிப்பு குற்றவாளிகளை கோர்ட்டில் அடித்து உதைத்த வழக்கறிஞர்கள் !



Meerut gangrape accused assaulted by lawyers in court premises
Meerut:The police on Tuesday arrested Bahujan Samaj Party (BSP) leader, Amit Bhadana, who allegedly raped a Class 12 student along with three accomplices in a moving SUV late on Saturday night.
The accused, including Amit Bhadana, a contractor linked to the Bahujan Samaj Party (BSP), were being taken out of court after a hearing when they faced the fury of the lawyers and some other bystanders. Reports said the lawyers kept saying that the accused should hang.It took several moments for the police to get their act together and rush the accused back to the jail. But the police say none of them were seriously injured.
வழக்கறிஞர்களும் பொதுமக்களும் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் திட்டினர். இத்தகைய கொடுமை செய்த நபர்களை தூக்கில் தொடங்க விட வேண்டும் என்றும் வலியுறுத்தி தாக்கினர்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த சனிக்கிழமை அன்று பிளஸ் 2 மாணவியை, 4 பேர் கொண்ட ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று, ஓடும் காருக்குள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் மறுநாள் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அந்த நபர்கள், போலீசில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

பீகாரில் லாலு கை ஓங்குகிறது.. நிதிஷுக்கு நெருக்கடி

டெல்லி: சி.என்.என்.ஐபிஎன் தொலைக்காட்சியும் தி ஹிந்துவும் இணைந்து நடத்திய லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில் பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு கடந்த தேர்தலைவிட கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 40 தொகுதிகள் உள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 20, பாரதிய ஜனதா கட்சி 12, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, காங்கிரஸ் 2 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 24%, ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 19%, பாஜகவுக்கு 14%, காங்கிரஸூக்கு 10% என இருந்தது. தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது 15-19 தொகுதிகளையும் ராஷ்டிரிய ஜனதா தளமானது 8 முதல் 12 இடங்களையும் பாஜக 8-12, காங்கிரஸ் 4 இடங்களையும் கைப்பற்றும் என்கிறது கருத்துக் கணிப்பு. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 25%, ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 24%, பாஜகவுக்கு 22%, காங்கிரஸுக்கு 10% என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

மே வங்கத்தில் காங்கிரஸ் , திரிணமூல் கை ஓங்குகிறது இடது சாரிகளுக்கு பின்னடைவு ! கருத்து கணிப்பு

டெல்லி: சி.என்.என்.ஐபிஎன் தொலைக்காட்சி மற்றும் தி ஹிந்து நாளேடு நடத்திய லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பானது நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிக்கு கூடுதல் இடங்களும் திமுக, தேமுதிகவுக்கு பின்னடைவும் ஏற்படும் என்று இதில் கூறப்பட்டிருந்தது. இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன. 2009ஆம் ஆண்டு இடதுசாரிகள் 43% வாக்குகள் பெற்று 15 இடங்களைக் கைப்பற்றியிருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் 31% வாக்குகளுடன் 19 இடங்களையும் 14% வாக்குகளுடன் 6 இடங்களை காங்கிரஸும் 6% வாக்குகளுடன் 1 தொகுதியையும் பாஜக கைப்பற்றியிருந்தது.

சினிமாவில் பல பிடிபடாத கிரிமினல்கள் :கொள்ளை அடித்த பணத்தில் 20 லட்சம் கொடுத்து சினிமா நடித்தேன்!

 சென்னை வட பழனி பகுதியில் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபட்ட பழைய குற்றவாளி செந்தில் என்ற செந்தில் குபேரன் (வயது 32) என்பவரை போலீசார்
தேடி வந்தனர். இவர் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். நெல்லையைச் சேர்ந்த இவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.வடபழனி உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமரன், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் செந்தில்குபேரனை தேடி வந்தனர்.நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலத்தில்,  ‘’நான் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தேன். சினிமா வாய்ப்பு முதலில் கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக திருட்டு தொழிலை தொடங்கி விட்டேன். இருந்தாலும் சினிமாதான் எனது கனவுதேன். .கொள்ளை அடித்து சம்பாதித்த பணத்தில் ரூ.20 லட்சம் கொடுத்து, சினிமா உலகில் நுழைந்தேன்  விடலைப்பட்டாளம் என்ற படத்தில் கதாநாயகன் வேடம் எனக்கு கிடைத்தது. அதற்கு முன்பு வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தில் துணை நடிகர் வேடத்தில் வந்துள்ளேன்’’என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரது வாக்குமூல அடிப்படையில் சினிமா டைரக்டர் ஒருவரையும், மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.இவன் ஒரு அடிமட்ட கிரிமினல் ,ஆனால் பல மேல்தட்டு கிரிமினல்கள் மாட்டு படவே மாட்டார்கள், சில வருஷங்களுக்கு முன்பு  ஒரு  வசூல் டைரக்டர் தனது sound  என்ஜினியரை பார்ட்டியில் கூப்பிட்டு ?? , மாட்டு படவே இல்லையே ?

12 வருடம் காதலித்தவன் 50 இலட்சம் வரதட்சணை கேட்டான்! ஆசிரியை தற்கொலை

பன்னிரெண்டு வருட காதலன்  திருமணம் செய்ய வரதட்சனை கேட்டதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக்கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு(வயது 28) என்பவரே  நேற்று தற்கொலை செய்த நிலையினில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியையென கூறப்படுகின்றது.
முன்னதாக இவரை கடந்த 12 வருடமாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் செய்வதற்கு ஜம்பது இலட்சம் சீதனம் கோரியதாக கூறப்படுகின்றது.அதையடுத்து மனமுடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சம்பவத்தையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1500க்கு அதிகமானோர் அவுஸ்திரேலியா கடலில் உயிரிழப்பு ! 2000 ஆம் ஆண்டு முதல் 2013 வரை

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத மாகப் படகுகள் மூலம் சென்றவர்களில் இதுவரை 1500 ற்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 746 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 363 பேர் கடலில் மூழ்கியிருப்பதுடன் 350 பேர் தொடர்ந்து காணாமல் போனவர்களின் விபரங்களில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 22 பேர் தடுப்பு முகாம்களில் உயிரிழந்திருப்பதுடன் 11 பேர் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பின்னர் கொல்லப்பட்டிருப்பதாக அச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன

மோடிக்கு கடும் எதிர்ப்பு, அறிஞர் அமர்த்தியா சென்: மதநல்லிணக்கத்துக்கு எதிரான மனிதரை எப்படி நாட்டின் பிரத மராக ஏற்க முடியும்?


 குஜராத் முதல்வர் நரேந் திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார்.
நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதை யும் கிட்டத்தட்ட அறி வித்துவிட்டது பாஜக. மோடியை முன் நிறுத் துவதை பாஜவுக்குள் ளேயே ஒரு பிரிவினர் எதிர்த்து வரும் நிலை யில், நாட்டின் சமூக ஆர்வலர்கள், மத நல்லி ணக்கவாதிகள், பொரு ளாதார அறிஞர்கள் என பல மட்டங்களி லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரு கிறது.
நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் கடுமையாக எதிர்த் துள்ளார் மோடியை. அவர் அளித்த பேட்டியில்,
மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரத மராக ஏற்க முடியும்? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவர் பிரதமராவதை நான் கடு மையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பு டன் இருக்கிறோம் என உணரும் வகையில் அவர் எதையுமே சொல்ல வில்லை. சிறுபான்மை யினருக்கு மட்டும் என் றல்ல... நான் சிறுபான் மையில் ஒருவன் இல்லை... பெரும் பான்மை மக்களுக்கும் கூட அவர் என்ன செய்துவிட்டார்? வன்முறைக்குச்சட்ட அங்கீகாரமா?

70,000 எஞ்சினியரிங் இடங்கள் காலி ? 70,000 Engineering Seats Remain Vacant In Tamil Nadu


All the students who are applying for the admissions for the B.Tech/BE in the Tamil Nadu state Anna University are hereby informed that this year at least 70,000 Engineering seats remain vacant. This is the largest number of seats falling vacant in the history of the single window counselling for government quota seats.
The officials of Anna University said that, the main reason for the vacant seats is that this year the private Engineering colleges have surrendered more seats including  from the management quota as they were unable to attract the students.
41,176 students were allotted the seats on July 2nd, at the end of counselling. Above 10,316 students dint attend to the counselling. The other 137 students have attend the counselling but they failed to get the preferred choice of college and courses. So many seats have to be filled. 1,55,137 seats including 25 seats in Anna University, 2,359 seats in Anna University constituent colleges and regional centres, 1,52,283 seats in self financing colleges, 470 seats in government and government-aided colleges.

Bihar பள்ளி முதல்வர் மீனாதேவி கைதுசெய்யப்பட்டார் ! 23 குழந்தைகள் இதுவரை பலியாகியுள்ளனர்

கடந்த 16-ம் தேதி பீகாரில் சாப்ரா மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் மதிய உணவில் பருப்பு, சாம்பார் உள்ளிட்டவை பரிமாறப்பட்டது. இதனை
உட்கொண்ட பள்ளி குழந்தைகள் வாந்தி எடுத்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அடுத்தடுத்து 23 குழந்தைகள் பலியாயினர். பலர் பாதிக்கப்பட்டனர். மதிய உணவில் பூச்சி கொல்லி மருந்து கலக்கப்பட்டிருந்தது தடயவியல் சோதனையில் தெரியவந்தது.இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் மீனாதேவி, அவரது கணவனர் ஆகியோர் திடீரென தலைமறைவாகினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாப்ரா மாவட்ட கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடியானது.இந்நிலையில் பள்ளி முதல்வர் மீனாதேவி ராபிள் கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள மீனாதேவி கணவர் அர்ஜூன் பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர்

கவிஞர் வாலியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாத ADMK

திமுக தலைவர் கலைஞர் 24.07.2013 புதன்கிழமை கேள்வி பதில் வடிவிலான
அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார். அதில்,கேள்வி:- காவியக் கவிஞர் வாலியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க. சார்பில் யாருமே வந்ததாகத் தெரிய வில்லையே? கலைஞர் :- கவிஞர் வாலி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டியவர். இன்றையமுதலமைச்சர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற போது, வார இதழ் ஒன்றில்“ரெங்கநாயகி” என்ற தலைப்பிலே கவிதை பாடியவர். அவர் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர். அனைவரிட மும் அன்பாகப் பழகக்கூடியவர். அவர் மறைந்த நிகடிநச்சிக்கு அ.தி.மு.க.வினர் யாரும் வரவில்லை என்றால், அதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

புதன், 24 ஜூலை, 2013

கலால் துறை லஞ்சம் – ஒரு உண்மைக் கதை ! ஒரு வருட தணிக்கைக்கு ஒரு லட்சம் கேட்டான்

பணம்ந்த நிகழ்வு நடந்து சில நாள்களாகிவிட்டன.  யாரிடமாவது சொன்னால் தான் மனசு ஆறும் என தோன்றுகிறது. கற்பனை கதைகளை விட உண்மை சம்பவங்களுக்கு நிறைய மதிப்பு இருக்கிறது. நான் சொல்லப்போவது கூட அப்படி ஒரு உண்மைச் சம்பவம்தான்.

அன்று காலையில் 9 மணிக்கு அந்த நிறுவனத்தில் இருக்க வேண்டும் என அவசர அவசரமாய் கிளம்பிக்கொண்டிருந்தேன். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தணிக்கைக்கு தேவையான எல்லா பதிவேட்டுகளையும் தயார் செய்துவிட்டேன். இருந்தாலும், அதிகாரிகள் 10 மணிக்கு வருவதற்கு முன்பாக ஒருமுறை சரிபார்த்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா!
முன்பெல்லாம் தணிக்கை என்றாலே உடலிலும், மனதிலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். வருகிற அதிகாரிகளெல்லாம் காசு வாங்குகிற அதிகாரிகளாகவே இருப்பினும் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. திருவிளையாடல் தருமி போல, எவ்வளவு தவறு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல கூடுதலாகவோ, குறைச்சலாகவோ லஞ்சம் முடிவாகும். இதனால் முதலாளியின் மனம் வருந்தும். அதனால்,எந்த தவறும் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என இல்லாத கடவுளை வேண்டிக்கொண்டு கிளம்பினேன்.

சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையே சண்டை

சாய்பாபா
The turf war between the relatives of Sri Satya Sai Baba reached its peak with an attack on the residence of M Ganapathy Raju, the first cousin of Satya Sai Baba, by alleged followers of Ratnakar, member of Sri Satya Sai Central Trust and also nephew of Sai Baba, in Puttaparti on Sunday.
The agitators also burnt Ganapathy Raju’s effigy by alleging that he is hurting the sentiments of Satya Sai devotees. Though it was learnt that Raju went to the police station for lodging a complaint over the incident, he did not return home till late in the evening. Meanwhile, rumours were making rounds in Puttaparti about the abduction of Ganapathy Raju by followers of Ratnakar.சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையேயான சண்டை சமீபத்தில் வன்முறையாக வெடித்திருக்கிறது. சாய்பாபாவின் உறவினரும் சத்ய சாய் அறக்கட்டளையின் உறுப்பினருமான ரத்னாகர் ராஜுவுக்கும் இன்னொரு உறவினரும் அந்த அறக்கட்டளையில் தனது தனது செல்வாக்கு இருக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் கணபதி ராஜூ என்பவருக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது.
கணபதி ராஜு, ரத்னாகரின் சட்ட விரோத செயல்களைப் பற்றி பிரதமர், ஜனாதிபதி முதல் பல்வேறு உயர் பதவி வகிப்பவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதனால் ரத்னாகர் அவர் மீது கடுப்பாக இருந்திருக்கிறார். பிறகு rajuug1958@yahoo.com என்ற மின்னஞ்சலிலிருந்து அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் மின்னஞ்சல் வந்திருக்கிறது. அது கணபதி ராஜுவின் மின்னஞ்சல் முகவரி rajug1958@yahoo.com யை உட்டாலக்கடி அடித்து உருவாக்கப்பட்ட போலி முகவரி இதைச் செய்தது ரத்னாகாராகத்தான் இருக்கும் என்று கணபதி ராஜு புகார் செய்திருக்கிறார்.
ஜூலை 7-ம் தேதி கணபதி ராஜு வீட்டை சிலர் தாக்கியிருக்கிறார்கள். அது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கச் சென்ற கணபதி ராஜு சில நாட்களுக்கு வீட்டுக்குத் திரும்பவில்லை. இதற்கிடையில் ரத்னாகர் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை (ஸ்ரீபிரசாத்) கணபதி ராஜு தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணபதி ராஜு ஜூலை 14-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டார்.

குஜராத் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அவகாசம் கோருகிறது சிபிஐ

டெல்லி: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போலி என்கவுன்ட்டர் வழக்கில் 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ கால அவகாசம் கோர திட்டமிட்டிருக்கிறது. 2004ஆம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில் மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். போலீசுக்கு ஐபி கொடுத்த தகவலின் பேரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் அவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிபிஐ அண்மையில் முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நடந்தது என்கவுன்ட்டர் அல்ல. போலி என்கவுன்ட்டர்தான். சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் கடத்தி அடைத்து வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அந்தக் குற்றப் பத்திரிகையில் கூறியதுடன் இந்த போலி என்கவுன்ட்டருக்கு காரணமாக குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகளின் பெயரையும் அதில் தெரிவித்திருந்தது.

2ஜி : கனிமொழி மனு! குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில்

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் அக்கட்சி எம்.பியுமான கனிமொழி மனுத்தாக்கல் செய்துள்ளார். டாடா குழுமத்தின் யூனிடெக் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவி தொலைக்காட்சிக்கு ரூ200 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது சிபிஐயின் புகார். இந்த வழக்கில் கலைஞர் டிவி இயக்குநர்களில் ஒருவராக இருந்த கனிமொழி கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி ஜாமினில் வெளியே வந்தார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு- குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி மனு! இந்த வழக்கில் கனிமொழிக்கு ஆதரவாக கலைஞர் டிவியின் நிர்வாகி அமிர்தம் ஏற்கெனவே சாட்சியம் அளித்திருக்கிறார். இதே வழக்கில் கனிமொழியின் பெரியம்மாவும் கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவருமான தயாளு அம்மாளையும் சாட்சியம் அளிக்க சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் உடல்நலக் குறைவால் தம்மால் ஆஜராக முடியவில்லை என்று தயாளு அம்மாள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய கோரி கனிமொழி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

U.P : தங்கையை கௌரவ கொலை செய்த இஸ்லாமிய இளைஞன் தலைமறைவு

காதலை கைவிட மறுத்த இளம்பெண்ணை குடும்ப மானம் கருதி உடன் பிறந்த சகோதரனே சுட்டுக்கொன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டம், கங்கேரு கிராமத்தை சேர்ந்தவர் சய்மா (17), அதே கிராமத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இந்த காதலை கைவிடும்படி சய்மாவின் குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், குடும்பத்தினர் எதிர்பார்த்ததற்கு மாறாக, நாளடைவில் காதலர்களிடையே நெருக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில், நேற்று இது தொடர்பாக சய்மாவின் சகோதரர் ராசாகான் (23) தங்கையை கண்டித்து திட்டினார். சய்மாவும் பதிலுக்கு பேசவே வாக்குவாதம் முற்றியது. குடும்ப கவுரவத்தை குலைக்கும் வகையில் தங்களது அறிவுரையை மீறி தங்கையின் பிடிவாதம் முற்றுவதை அறிந்து ஆவேசமடைந்த ராசாகான் வீட்டில் இருந்த துப்பாக்கியால் சய்மாவை சுட்டுக் கொன்றார். கொலையை மறைக்க வீட்டு தோட்டத்தில் குழி தோண்டி பிணத்தை ரகசியமாக புதைத்தார். இது தொடர்பாக, போலீசாருக்கு சிலர் தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்று பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருக்கும் ராசாகானை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்தியன் வயக்ரா என அழைக்கப்படும் கருங்குறுவை நெல் ! நம்மாழ்வாரின் அறிவுரை

புதுக்கோட்டை மாவட் டம் வாகைப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய நெல் மற்றும் சிறு தானிய விதைத் திருவிழா நடந்தது. இதில்
பங்கேற்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:நமது முன்னோர்கள் எதிர்ப்பு சக்தி மிக்க, வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரக் கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகம், சிறுதானியங்களை பயிரிட்டு நோயின்றி வாழ்ந்தனர். அவை காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிட்டன. நோயற்ற வாழ்வு வாழ பாரம்பரிய விவசாயத்துக்கு திரும்ப வேண்டும். குழந்தைகளின் சத்துக்குறைபாட்டை போக்குவதற்கு வீட்டுக்கு ஒரு பேரீச்சை மரம் வளர்க்க வேண்டும்.கேழ்வரகில் இரும்புச்சத்து, புரதம், லைசின், மீத்தியோனைன், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்கள், காப்பர், துத்தநாகம், வைட்டமின்கள் உள்ளன. கம்பு பயிரில் நார்ச்சத்து, தாது உப்புகளும் வரகில் பாஸ்பரஸ், புரதங்களும் உள்ளன. தினையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி, சாமையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சோளத்தில் புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், தயமின் அதிகம் உள்ளன.

அனில் அம்பானி புலம்பல்: என்மதிப்பு மரியாதை எல்லாம் போய்விட்டது !

;2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டீனா அம்பானி ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அனில் அம்பானி சி.பி.ஐ.யிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருக்கும் தகவல் கள் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில்,  ‘’2 ஜி ஊழல் வழக்கு காரணமாக எனக்கு மதிப்பு-மரியாதை எல்லாம் போய்விட்டது. என் ஊழியர்கள் மீது எனக்கு நம்பிக்கைக்கு இருக்கிறது.இந்த 2ஜி விவகாரத்தில் எனக்கு எந்த லாபமும் இல்லை. மாறாக நஷ்ட தான் ஏற்பட்டுள்ளது. மூலதன சந்தையில் எனது ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொலை தொடர்பை எளிமையாக்க வேண்டும் என்ற என் தந்தையின் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை’’என்று கூறியுள்ளா

இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட 330 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி!

அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் அரசு சீனியர் செகண்டரி பள்ளியில் மதிய உணவுக்குப் பிறகு மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை அளிக்கப்பட்டது. அதை சாப்பிட்டதை தொடர்ந்து, 150 மாணவிகள், வயிற்று வலியாலும், மயக்க உணர்வாலும் அவதிப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுபோல், ஜிந்த் மாவட்டத்தில் மற்றொரு அரசு பள்ளியில் 100 மாணவர்களும், ஹிசார் மாவட்டம் சிசார் அரசு நடுநிலைப்பள்ளியில் 35 மாணவர்களும், பிரான்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 46 மாணவர்களும் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

எல்லாமே தன்னால்தான் நடந்தது என்று சொல்வதில் அதீத ஆர்வம்

தனிப்பட்ட முறையில் எல்லாமே தன்னால்தான் நடந்தது என்று சொல்வதில் அதீத ஆர்வமுடைய முதல்வர், நான் பொறாமைப்படுகிறேன், ஆதங்கப்படுகிறேன் என்று கடைந்தெடுத்த பொய் சொல்கிறாரே” என, கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் தன் அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் போல, எனக்கு ஆதங்கமோ, அரசியல் காழ்ப்போ, பொறாமையோ, விரக்தியோ நிச்சயமாகக் கிடையாது. ஆனால், முதல்வருக்குதான், எப்போதும் தன்னால் தான் நடந்தது என்று சொல்லிக் கொள்வதில் ஒரு ஆர்வமும், ஆசையும் உண்டு. எந்தப் பிரச்னையாக இருந்தாலும், ‘என் தலைமையிலான அரசு, என் தனிப்பட்ட முயற்சி, முதல்வரின் உத்தரவு’ என்று தான் கூறிக் கொள்வார். அதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. பெருமை. சட்டசபையில் கூட, அரசின் எந்த அறிவிப்பாக இருந்தாலும், 110வது விதியின் கீழ் முதல்வர் தான் படிப்பார்; வேறு எந்த துறை அமைச்சருக்கும் அந்த அனுமதியே கிடையாது. அ.தி.மு.க., சார்பில் யாராவது ஒரு போஸ்டர் அல்லது விளம்பரத் தட்டிகளை வைக்க விரும்பினால் கூட, தங்கள் புகைப்படங்களை வெளியிடக் கூடாது. முதல்வரின் படம் மட்டும் தான் வெளி வரும். இப்படி இருக்கும்போது, நான் பொறாமைப்படுகிறேன், ஆதங்கப்படுகிறேன் எனக் கூறுவது கடைந்தெடுத்த பொய். ‘என்.எல்.சி., நிறுவன பங்குகளை, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளத் தயார்’ என, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால், நெய்வேலி தொழிலாளர்களின் ஒற்றுமையான, ஒட்டுமொத்தப் போராட்டம் காரணமாகவே, மத்திய அரசு தானாகவே முன் வந்து என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்ப பெற்றிருக்கும். இது உண்மையா? இல்லையா?
இந்த வாய்ப்பு முதல்வர் எழுதிய அவசரக் கடிதம் காரணமாக, தவறிப் போய் விட்டது என்பது தான் பலரின் கருத்து” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் நூல்களை ஆடியோ புத்தகமாக்கும் அமெரிக்க தமிழர் ஸ்ரீகாந்த்

கல்கி, உ.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களை, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம், அமெரிக்க வாழ் மேலும், உ.வே.சா.,வின், "என் சரித்திரம்' நூலை, ஆடியோ புத்தகமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்."ஆடியோ புத்தகம் எனில், செய்தி வாசிப்பது போல் இருக்கும்' என்ற, பொதுவான விமர்சனங்களை தாண்டி, தனித்துவத்துடன் உருவாக்கி இருக்கிறார்.நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு ஒரு குரலையும் பயன்படுத்தி உள்ளார்.

தி.மு.க.,வை அழிக்க ஸ்டாலின் போதும் ! வேறு யாரும் தேவையில்லை! கரூரில் பரிதி இளம்வழுதி

கரூர்: ""தி.மு.க., வை அழிக்க ஸ்டாலின் ஒருவரை போதும். வேறு யாரும் தேவையில்லை,'' என, சமீபத்தில் தி.மு.க.,வில் இருந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கரூர் 80 அடி ரோட்டில் நடந்தது.கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசியதாவது:தி.மு.க.,வில் இருந்தபோது, முதல்வர் ஜெயலலிதாவை, நான் வசைபாடியிருக்கிறேன். ஆனால், என்னை தாய் உள்ளத்தோடு அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்கள் தமிழகத்தில், முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.சிறுபான்மையினரின் நலம் காக்கும் அரசாக, முதல்வர் ஜெயலலிதா அரசு உள்ளது. தமிழகத்தில் உள்ள 3,000 பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் நோன்புக்காக 4,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா.கடந்த தி.மு.க., ஆட்சியில் "டிவி' வழங்கப்பட்டதன் நோக்கம், கேபிள் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரிக்கத்தான். ஹிந்தி தெரிந்ததால், தயாநிதி மாறனுக்கும், ஆங்கிலம் தெரிந்ததால், கனிமொழிக்கும் எம்.பி., சீட் கொடுத்ததாக கருணாநிதி கூறினார்.
ஆனால், எங்களை போன்றவர்களை தமிழை தவிர வேறு எந்த மொழியையும் படிக்க விடாமல் அரசியல் நடத்தியவர் கருணாநிதி. தி.மு.க.,வை அழிக்க வேறு யாரும் வெளியில் இருந்து வரவேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலின் ஒருவரே தி.மு.க.,வை அழித்து விடுவார்.

மலேஷிய மாணவர்கள் கழிவறையில் சாப்பிட வைக்கப்பட்டார்களா?


Non-Muslim students ordered to eat in toilets during Ramadhan (© Facebook, Guneswari Kelly)Concerned mother Guneswari Kelly posted a photograph of primary students having their recess in the school’s changing room yesterday. The photo was taken at Sekolah Kebangsaan Sri Pristana in Sungai Buloh, Selangor. Shortly after the mother posted it on Facebook, the post went viral and netizens are clearly unhappy about such actions being carried out by the school.
According to Guneswari, students were restricted from going to the canteen as she claims that the school wouldn’t want the area to be dirty. Not only that, no food will be served in the canteen.
As a mother, Guneswari is deeply concerned not only for her child but also the other children as the bathroom is located right next to the toilet area with a strong stench. She added that when they questioned the school authorities, the children were sent to other bathrooms, changing or shower rooms or stores of the school compound. Despite raising her concerns to the school, no actions have been taken seriously.
மலேஷியாவின் சுங்கை பூலோவுக்கு அருகில் இருக்கும் தொடக்கப் பள்ளி ஒன்றில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ரமலான் நோன்பு மாதத்தின்போது குளியலறையை ஒட்டிய பகுதியில் சாப்பிடும்படி நிர்பந்திக்கப்பட்டதைக் காட்டுவதாக கூறப்படும் படங்கள் சில இணையதளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன இந்த புகைப்படங்களை தமது முகநூலில் வெளியிட்டவர் அந்த பள்ளியில் படிக்கும் பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் படங்களில் அந்தப் பள்ளிக்கூடத்தின் குளியலறையை ஒட்டிய உடை மாற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள மேசைகளைச் சுற்றிலும் மாணவ மாணவிகள் அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. இவற்றில் கணிசமானவர்கள் மலேஷிய இந்திய வம்சாவளியினரைப் போல தோன்றுகின்றனர்.

செவ்வாய், 23 ஜூலை, 2013

ஹன்சிகாவுக்கு தமிழ்நாட்டில் போயும் போயும் இந்த தலைஎழுத்து

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை:நாங்கள் காதலிப்பது உண்மைதான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக்கொண்டுள்ளனர். வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக ? கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. ‘ஹன்சிகாவை காதலிக்கிறீர்களா? என்று சிம்புவிடம் கேட்டபோது, ‘என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஹன்சிகாவிடம், ‘சிம்புவை காதலிக்கிறீர்களா? என்று கேட்டபோது மறுத்துவந்தார். இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்தபோதுகூட ‘சிம்புவை காதலிக்கவில்லை என்று அவர் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஹன்சிகா இன்று காலை 6 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவை காதலிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. டுவிட்டரில் அவர் கூறும்போது, ‘என் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பலவித வதந்திகள் பரவி வருகிறது. அதை நான் சரி செய்ய விரும்புகிறேன். ஆமாம், நான் எஸ்.டி.ஆரை (சிம்பு) காதலிப்பது உண்மைதான். அது எனது தனிப்பட்ட வாழ்க்கை. யாரும் அதுபற்றி பேச வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். கொஞ்சம் விபரமா கோலிவூட் கேர்ல்ஸ்கிட்டே  டீடெயில் கேட்டிருக்கலாமே ? ம்ம் உங்க விதி யாரால திருத்த முடியும் ?

நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கவே கூடாது! எம்.பி.க்கள் கடிதம்

குஜராத்தில் 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து
வன்முறை வெடித்தது. இதனால் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகிறார். மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்ற கையெழுத்து இயக்கத்தை பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யான முகமது அதீப் தொடங்கினார். அதன்படி 12 கட்சிகளைச் சேர்ந்த 65 எம்.பி.க்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஏற்கனவே கடிதங்கள் அனுப்பியிருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி 25 மேல்சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதமும், டிசம்பர் 5-ம் தேதி 40 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதமும் அனுப்பப்பட்டது. தற்போது மோடிக்கு விசா பெறுவதற்கு ராஜ்நாத் சிங் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், 65 எம்.பி.க்கள் அனுப்பிய கடிதங்களின் நகல்கள் பேக்ஸ் மூலம் மீண்டும் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மீண்டும் தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரணை

பொட்டு சுரேஷ் கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டு அருகே படுகொலை செய்யப்பட்டார். இதில் அட்டாக் பாண்டி உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அட்டாக் பாண்டியை தவிர மற்றவர்கள் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அட்டாக் பாண்டி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் படுகொலைகள் நடந்துவருவதால், மாநில டிஜிபி அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவாக அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., கமிஷனர்களுக்கு அரசியல் தலைவர்கள் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அந்த வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த டாக்சியாக இந்திய அம்பாசிடர் கார் தெரிவு

இங்கிலாந்தைச் சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி ஒளிபரப்ப இருக்கும் உலகின் தலைசிறந்த டாக்சி தொடர்பான நிகழ்ச்சியில், மற்ற தயா ரிப்புகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பெருமிதம் என்றழைக் கப்படும் அம்பாசிடர் கார் முதலிடத்தை பிடித் துள்ளது.
இங்கிலாந்து, அமெ ரிக்கா, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, மெக்சிக்கோ, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த கார்களை எல் லாம் பின்னுக்குத் தள்ளி உலகின் தலைசிறந்த டாக்சி என்ற இந்த அரிய பெருமையை அம்பா சிடர் கார் தற்போது பெற்றுள்ளது.
தொழிலதிபர் சி.கே. பிர்லாவுக்கு சொந்த மான இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம், 1948ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் ஹுப்ளி மாவட்டத்தில் அம்பா சிடர் கார்களை முதன் முதலாக தயாரித்தது.
1980ஆம் ஆண்டு மலிவு விலையில் மாருதி கார்கள் தயாரிக்கப் பட்ட பிறகு மெல்ல, மெல்ல மவுசை இழந்த அம்பாசிடர் கார்கள் இந்திய சாலைகளில் காண்பதற்கு அரிய அரும் பொருளாக மாறி விட் டது.
மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவல கங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு அம்பாசி டர் கார்கள் வலம் வந்தாலும் 2012-13ஆம் ஆண்டில் மொத்தம் 3 ஆயிரத்து 390 அம்பா சிடர் கார்கள் மட்டுமே விற்பனையாயின.
இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெறும் 709 கார்களே விற்பனையாகி உள்ளன.
இந்நிலையில், உல கின் தலைசிறந்த டாக்சி யாக அம்பாசிடர் கார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதை இந்தியருக்கு கிடைத்த கவுரவமாகவே கருத வேண்டும்.

பரிதி : தி.மு.க.வில் பேசத் தெரிந்தவர், திறமைசாலி, படித்தவர்களை ஸ்டாலினுக்கு பிடிக்காது

தி.மு.க. ஒரு டைட்டானிக் கப்பல் போன்றது” என்று கூறியுள்ள பரிதி இளம்வழுதி, “கப்பல் ஒரேயடியாக மூழ்கப்போகிறது” என்று கூறியிருக்கிறார்.
தஞ்சை, ஆபிரகாம் பண்டிதர் ரோட்டில் நடந்த அ.தி.மு.க. அரசின்
இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பேசிய அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி, “காவிரி பிரச்னை தொடர்பாக, ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வீட்டில் இருந்தபடி, டிவியில் இதைப் பார்த்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கடும் கோபம் கொண்டார்.
அருகில் இருந்த என்னை பார்த்து “தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் பேசவே தெரியவில்லை. ஆமாம், நீ ஏன் இப்போதெல்லாம் சட்டசபைக்கு போவதில்லை; முன் போல பேசுவதில்லை” என்று கேட்டாரே ஒரு கேள்வி! நான் திகைத்துப் போனேன்.

நடிகை மஞ்சுளா மரணம் அடைந்தார்

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா (59) கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். நடிகர் விஜயக்குமாரின் 2வது மனைவி நடிகை மஞ்சுளா. இவர், விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று படுக்கை அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தார். அப்போது திடீரென கீழே விழுந்து விட்டார். இதில் அவருடைய வயிற்றில் கட்டிலின் கால் பலமாக குத்தி விட்டது. இதில் படுகாயமடைந்து துடித்தார் மஞ்சுளா. உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு போய் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மஞ்சுளா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் சோகமும், கவலையும் வெளியிட்டுள்ளனர். இது குறித்து நடிகைகள் குஷ்புவும், ராதிகா சரத்குமாரும் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கையில், குஷ்பு: மஞ்சுளா ஆன்ட்டியின் ஆத்மா சாந்தி அடையட்டும். என்னைப் பொருத்த வரை நீங்கள் தான் அழகான பெண். லவ் யூ சோ மச். ராதிகா: மஞ்சுளா விஜயகுமார் அக்காவின் ஆத்மா சாந்தி அடையட்டும். இன்று உங்களைப் பார்த்த பிறகு நாம் ஒன்றாக இருந்த நேரங்கள் மற்றும் உங்களின் அன்பு நினைவுக்கு வருகிறது என்று உருக்கமாக கூறியுள்ளார்.
tamil.oneindia.in