சென்னை : குடிபோதையில் நடக்க முடியாமல் நடுத் தெருவில் விழுந்து அலங்கோலமான நிலையில் கிடந்த கல்லூரி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர் நான்கு வாலிபர்கள். அவர்களைப் பிடித்த போலீஸார், அந்தப் பெண்ணை மீட்டு அவரது தாயாரை வரவழைத்து கண்டித்து ஒப்படைத்தனர்.
மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பாடி வைத்த தமிழ்நாட்டில் பெண்களின் நிலை, குறிப்பாக நவ நாகரீக மோகத்தில் திளைத்து நீந்தி வரும் பெண்களின் நிலை பெரும் மோசமாக மாறி வருகிறது.
சென்னை நகரில் குடிபோதையில் மிதக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடக்கும் பெண்களின் நிலையும் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் சைதாப்பேட்டைஉள்ளிட்ட சில பகுதிகளில் குடிபோதையில் பெண்கள் தெருவில், சாலையில் விழுந்து மீட்கப்பட்ட கதையை மக்கள் பார்த்தனர். இந்த நிலையில் தி.நகரில் ஒரு கல்லூரி மாணவி குடிபோதையில் கீழே விழுந்து கிடந்தார். பறிபோகவிருந்த அவரது கற்பை மயிரிழையில் போலீஸார் தடுத்து நிறுத்தி மீட்டுள்ளனர்.
அந்தப் பெண்ணின் பெயர் அமுல்யா. 21 வயதாகும் இவர் கே.கே.நகரைச் சேர்ந்தவர். ராயபுரத்தில் இவருக்கு ஒருகாதலர் இருக்கிறார். இருவரும் தி.நகருக்குச் சென்று அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் செமத்தியாக குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில்காரில் கிளம்பினர்.
அதிகாலை 3 மணியளவில் அந்தப் பெண்ணை, அவரது காதலர் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடை முன்பு இறக்கி விட்டு விட்டு கிளம்பினார். காரிலிருந்து இறங்கிய அந்தப் பெண்ணால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. அப்படியே கீழே விழுந்து விட்டார்.
அரை குறை உடையுடன், உடைகள் அலங்கோலமாக கிடக்க கீழே விழுந்து கிடந்தார் அந்தப் பெண். அப்போது நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர்.
அலங்கோலான நிலையில் கீழே கிடந்த பெண்ணை நெருங்கி செக்ஸ் சில்மிஷத்தில் இறங்கினர். இந்த நிலையில் அந்தப் பகுதி வழியாக போலீஸ் ரோந்து வாகனம் வந்தது. இதைப் பார்த்த நான்கு பேரும் ஓட முயற்சித்தனர். ஆனால் ஒருவரை மட்டும் போலீஸார் பிடித்துவிட்டனர்.
பின்னர் அமுல்யாவை தூக்கி வேனில் போட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். காலை ஆறு மணியளவில் அவருக்கு மயக்கம் தெளிந்தது.தான் எங்கு படுத்திருக்கிறோம் என்பது புரியாமல் குழம்பினார். அவரிடம் நடந்ததைக் கூறினர் பெண் போலீஸார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளார் அமுல்யா.
பின்னர் போலீஸார் அமுல்யாவின் வீட்டைத் தொடர்பு கொண்டு அவரது தாயாரை அழைத்தனர். அவர் ஓடோடி வந்தார். அவரிடம் அமுல்யாவை ஒப்படைத்த போலீஸார் இனிமேல் இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
அதேபோல அமுல்யாவிடம் செக்ஸ்சில்மிஷத்தில் ஈடுபட முயன்று சிக்கிய வாலிபரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
அமுல்யாவை ஹோட்டலில் வைத்தே இந்தநான்கு பேரும் பார்த்துள்ளனர். நடக்கக் கூட முடியாத நிலையில் அவர் காதலருடன் போவதைப் பார்த்து பின் தொடர்ந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
எங்கே செல்கிறது தமிழ்நாட்டுக் கலாச்சாரம்?
சனி, 28 ஆகஸ்ட், 2010
நிருபமராவ் நிவாரண கிராமத்திற்கும் விஜயம் செய்வார
கொழும்புவரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமராவ் செப்டம்பர் முதலாம் திகதி வவுனியாவிற்கு வரவுள்ளார் இத் தகவலை வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி எம் எஸ் சாள்ஸ் தெரிவித்தார் வவுனியா வரவுள்ள இவர் செட்டிகுளத்தில் உள்ள வன்னியிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோர் வசிக்கும் நிவாரண கிராமத்திற்கும் விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் ஆராயும் பொருட்டு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஜயம் இடம்பெறுகின்ற
எஸ்.ஜே.சூர்யா புலி படத்தின் புலி பாய்வதில் சிக்கல்
குஷி, வாலி படங்களின் மிகப்பெரிய வெற்றியால் இளமை இயக்குனர் என்று பேசப்பட்டவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு தானே இயக்கி, நடித்த நியூ படத்தினைத் தொடர்ந்து நடிகனாகவே வலம் வந்தார். இப்படி இவர் நடிகனாக நடித்தப் படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாமல் போனது. இந்நிலையில் மீண்டும் இயக்குனராக களமிறங்கினார் தமிழில் அல்ல தெலுங்கில்.
கடந்த இரு ஆண்டுகளாக தெலுங்கில் இவர் இயக்கி வந்தப் படம் ‘புலி’. இதில் பவன் கல்யாண் நாயகன். இவர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். தெலுங்கில் மூத்த முன்னணி நடிகரான பவன் கல்யாண் இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு துறைகளில் வல்லவராவார். இவரின் ‘பத்ரி’ போன்ற பல ஹிட் படங்கள் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன எனபது தனிச் செய்தி. அது ஒரு புறமிருக்கட்டும். தற்போது பவன் கல்யாண் நடித்துள்ள புலி படத்தின் நாயகி புதுமுகம் நிகிஷா.
தனது ஒவ்வொரு படத்திலும் கவர்ச்சிக்கு கொடிபிடிக்கும் சூர்யா, புலி படத்தில் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு ஸ்ரேயாவை ஆடவைத்துள்ளார். (ம்ம்ம்... பாத்துங்க, இதுக்காக தணிக்கை குழுவினருடம் சண்டை பேட்டுக்க போராரு)
படம் முடியும் தருவாயில் இருக்கும் போது ‘புலி’ படத்தின் தலைப்பினை "கொமரம் புலி' என மாற்றியுள்ளனர். இதனாலேயே புலி பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்...
கொமரம் பீம் என்பவர் தெலுங்கானா போராட்டத்தில் முக்கியமானவராக உள்ளார். எனவே கொமரம் என்ற பெயருக்கு ஆந்திராவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைப்பில் இருந்து கொமரம் என்ற பெயரை நீக்குமாறும் இல்லையென்றால் வழக்கு தொடருவோம் என்றும் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். இரண்டு வருட உழைப்பில் படம் உருவாகியிருப்பதால் படத்தின் வெளியீட்டில் தாமதம் வேண்டாம் என நினைத்த எஸ்.ஜே.சூர்யா கொமரம் என்ற தலைப்பை மாற்றலாம் என கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கு நடிகர் பவன் கல்யாண், ‘ஏற்கனவே தெலுங்கில் கொமரம் பீம் பற்றி படம் வெளிவந்துள்ளது. எனவே இந்தத் தலைப்பை நீக்க வேண்டிய அவசியம் இல்லை’ என எதிர்க் கருத்து தெரிவித்துள்ளாராம். இதனால் இயக்குனருக்கும், நடிகருக்குமிடையே டிஷ்யும் டிஷ்யும்மாம்.. இந்தச் சிக்கலால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக இருக்கு...

துரோகி! இதுவே ஈழவிடுதலைப்போராட்டத்தில் அதிகமாக உச்சரிக்கபட்ட சொல்
காலத்துக்கு காலம் மாறும் துரோகம்
(மோகன்)
துரோகி அல்லது துரோகிகள் இதுவே ஈழவிடுதலைப்போராட்டத்தில் அதிகமாக உச்சரிக்கபட்ட சொல். இதன் அர்த்தம் தேவைக்கு ஏற்ப மாறியது அல்லது மாற்றியமைக்கபட்டது. 'கொலைவெறி மன உளைச்சல்' வியாதியால் பீடிக்கபட்ட ஒரு தலைவனின் வியாதியில் விளைந்த எண்ணற்ற கொலைகளுக்கு வியாக்கியானமாக அழைக்கபட தொடங்கிய சொல் இந்த 'துரோகி'. தலைவனின் நேரடிப் பரப்புதால் வீரியமாய் பரவிய இந்த நோயினால் பாதிக்கபட்டவர்களால் இலங்கை தீவு முழுவதும் துரோகிகளாய் மடிந்து விழுந்து கொண்டிருந்தனர். படிப்படியாக விபச்சார ஊடகங்கள் என்னும் நோய் காவிகள் மூலம் புலம் பெயர் நாடுகளில் பரவத்தொடங்கியது. இந்த நோய் கடல் கடந்து பரவியதால் என்னவோ தன் வீரியத்தை இழந்து 'கொலையின்பம் மன உளைச்சல்' நோயாக மனிதர்களைப்போன்றவர்களிடம் மண்டியிட்டது. இந்த நோய் பற்றிக்கொண்டவர்களை அமைதியடையசெய்யும் ஒரே மருந்து இந்த நோயினால் பாதிக்கபடாதவர்களின் மரணங்களே! இப்படிப்பட்ட மரணங்கள் நிகழும் போதெல்லாம் 'துரோகி ஒழிந்தான்' என வாய் ஓயும் வரை உச்சரித்து சாந்தியடையும். மேலும் சிதுறுண்ட உடல்களின் படங்களை பார்த்துவிட்டாலோ பரம திருப்தியாய் தூங்கி போய் விடுவார்கள்.
தனிமனிதனாய் கொல்லப்படும் போது துரோகியாகவும், ஒட்டு மொத்தமாய் கொல்லப்படும் போது ஒட்டுக்குழுக்களாகவோ, துரோகக்குழக்களாகவோ பிரகனப்படுத்தப்பட்டது. அதிபர் ஆனந்தராஜா ஆமியிடம் கை குலுக்கியது…. அது துரோகத்தனம். மரணிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் அதே ஆமிக்காரர்களின் ஆசீர்வாதத்துடன் மாற்று இயக்கக்காரன்களை அழிக்கும் போது அது போராட்டமாய் புனிதப்படுத்தப்பட்டது. இப்படித்தான் துரோகங்களுக்கு அர்த்தங்கள் மாற்றியமைக்கப்பட்டது. வெலிக்கடை படுகொலைகள் வெறியாட்டம். ஆனால் கிட்டுவின் ஒற்றைக்காலுக்கு கந்தன்கருணை படுகொலைகள் பரிகாரம். ஏனெனின் கொல்லப்பட்டவர்கள் துரோகிகள். இதன் உச்சக்கட்டமாய் அறிவாய் சிந்திப்பவர்கள், ஆக்கபூர்வமாய் செயல்படுபவர்கள், ஏன் மனிதநேயம் கொண்ட மனிதர்களெல்லாம் இந்த நோய் பிடித்தவர்களுக்கு துரோகியாய் தென்படத்தொடங்கினார்கள். புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களால் தங்கள் வீரியத்திற்கு ஏற்ற விளைவை விதம்விதமாய் விளைவிக்க முடிந்தது.
for details please visit this page:sooddram.com
கலைஞர், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதோடு
சென்னை : ""கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதோடு, அதில் இடம் பெறாத பல புதிய திட்டங்களையும் உருவாக்கி, மக்களின் பாராட்டுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. ஒவ்வொரு குடும்பமும், அரசின் நலத்திட்டப் பலன்களில் ஏதாவது ஒன்றை பெற்று மகிழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது, அரசுக்கு கிடைத்திருக்கும் நற்சான்றிதழ்,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார்.
இரண்டு நாள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு, முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. இதில், துணை முதல்வர் ஸ்டாலின், அனைத்து துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, காவல்துறை உயரதிகாரிகள், அனைத்து துறை செயலர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் பேசியதாவது: கடந்த தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதுடன், அதில் இடம் பெறாத பல புதிய திட்டங்களையும் உருவாக்கி, மக்களின் மனமார்ந்த பாராட்டுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த பணிகள் மேலும் தொடர வேண்டும். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, "டிவி', எரிவாயு இணைப்புடன் அடுப்புகள், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் போன்றவற்றை எப்படி இவர்களால் தொடர்ந்து செயல்படுத்த முடியுமென சந்தேகம் எழுப்பியோரை புறந்தள்ளி, மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு, அந்த திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறோம்.
ஆதி திராவிடர் சமுதாய மேம்பாட்டில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. "டிவி' வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் "டிவி'கள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 35 லட்சத்து 86 ஆயிரம் குடும்பங்களுக்கு "டிவி'கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலக்கை நிறைவேற்றிட, மாவட்ட கலெக்டர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள 21 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில் ஒரு பயனாளிக்கு 75 ஆயிரம் ரூபாய் மானியத்துடன், 2,250 கோடி ரூபாய் செலவில் 3 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டி தர அரசு திட்டமிட்டுள்ளது. 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளிலும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தை, வெற்றிகரமாக செயல்படுத்திட கலெக்டர்கள் இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 3 லட்சம் வீடுகளையும் கட்டி முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசு 33 ஆயிரத்து 750 ரூபாயும், தமிழக அரசு 26 ஆயிரத்து 250 ரூபாயும் சேர்த்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில், தமிழக அரசு வழங்கும் நிதி 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக சேர்த்து இனி 41 ஆயிரத்து 250 ரூபாயாக வழங்கப்படும். இனி, ஒவ்வொரு வீடும் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 19ம் தேதி வரை பதிவு செய்த ஒரு கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 439 குடும்பங்களில் இருந்து, ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 81 ஏழை மக்களுக்கு, 470 கோடியே 99 லட்ச ரூபாய் செலவில், உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளை செய்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்களால், மனிதவளக் குறியீட்டில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், ஏதாவது ஒரு நலத்திட்ட உதவியை பெற்று மகிழ்ந்துள்ளது என்பது, இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கும் நற்சான்றிதழ். இவ்வாறு முதல்வர் பேசினார்.
எனது சிந்தையில் இருப்பது...: கூட்டத்தில் கருணாநிதி குறிப்பிட்டதாவது: எனது சிந்தையில் எப்போதும் நிறைந்திருப்பது மக்கள் நலப் பணிகள் மட்டும் தான். ஒவ்வொரு நொடிப்பொழுதையும் மக்கள் நலனுக்காகவே நான் செலவழித்து வருகிறேன். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், கிராமவாசியானாலும், நகரவாசியானாலும் அவர் எல்லா வசதி, வாய்ப்புகளையும் பெற்று வாழ வேண்டும். அவர்கள் அப்படி வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான், அரசின் குறிக்கோள். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டார்.

thiru - chennai,இந்தியா
2010-08-28 17:06:49 IST
செல்வி கோதை நாயகி அவர்களே , நம்ம தலைவர் மக்கள் நலம் , மக்கள் நலம் என்று சொல்லுவார் , தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் , அவரை போல சிறந்த சுய நல குடும்ப தலைவர் உலகில் யாரும் இல்லை , பிறரை மிருகம் கூறும் முன் உங்களை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொள்ளவும் . நம்ம தலைவர் வருமானம் , சென்னை வரும் போது எப்படி இருந்தது ? , இப்போது தலைவர் குடும்ப வருமானம் எவோளவு ? எல்லாம் அவர் உழைத்து சம்பாதிததுதான ? யோசித்து பார்க்கவும் ....
வீரகணபதி - chennai,இந்தியா
2010-08-28 16:41:43 IST
செல்வி கோதை நாயகி அவர்களின் கருத்து முற்றிலும் சரியே. யோசித்துப்பார்த்தால் கலைஞர் தவிர உலகில் வேறு எந்த ஒரு தலைவரும் தான் சார்ந்த சமூகத்திற்கு இந்த அளவிற்கு உழைக்கவில்லை. மகாத்மா காந்தியை விட அதிக அளவில் மக்கள் தொண்டாற்றி வரும் கலைஞரை இனி "வாழும் மகாத்மா" கலைஞர் என்று அழைக்க வேண்டும். வாழும் மகாத்மா கலைஞர் வாழ்க....
ச.Vasudevan - Chennai,இந்தியா
2010-08-28 16:38:07 IST
Kudos to Mr.Kai Piallay. Please continue your sarcasm. We all like it....
சுவாமிநாதன் - சென்னை,இந்தியா
2010-08-28 16:34:12 IST
எனக்கு கிப்ளிங் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. I"God Of Copybook Headings" In the Carboniferous Epoch we were promised abundance for all, By robbing selected Peter to pay for collective Paul; But, though we had plenty of money, there was nothing our money could buy, And the Gods of the Copybook Headings said: "If you don't work you die." கிப்ளிங் ஒருவேளை முக வை நினைத்து தான் எழுதினாரோ என்னவோ? வங்கி கடன் இலவசம்...யார் காசு? டிபோசிட் பண்ணினவன் காசு... உழுபவனுக்கே நிலம் சொந்தம், பஸ் வோட்டுபவனுக்கு பஸ் சொந்தம். டிரைன் வோட்டுபவனுக்கு டிரைன் சொந்தம். Kipplings conveys this wonderfully by saying that "By robbing selected Peter to pay for collective Paul" MK robs the working class/tax payers money to distributs to his immediate family in the form of freebies to the socity at large. Soon, all the voters may each be given 1000Rs. bundles. So that every one will have money in their hand but no one will till the land, no one to stich garments, no one to pull the vegetable cart, no one to cook and eventually all of us to die...
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-08-28 16:24:10 IST
தங்களது இந்த சீரிய தொண்டை அங்கீகரித்து தங்களுக்கு எப்போது "பாரத் ரத்னா" விருது கிடைக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்....
கார்தீசன் - ஜித்தா,சவுதி அரேபியா
2010-08-28 15:54:30 IST
என்னதான் வாய் கிழிய வசனம் பேசினாலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நீங்கள் அடிக்கும் இலவச அறிவிப்பு மட்டுமே வெற்றியை கொடுக்கும் எனபது நிருபணமாகிவிட்டது, அதனால் பொதுமக்களுக்கு மூன்று வேலையும் இலவசமாக உணவு ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் என்று அறிவியுங்கள், எவன் வீட்டு பணம், நீங்கள் தாராளமாக செயல்படுத்த முடியும், இதை மட்டும் அறிவியுங்கள், 234 மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் நீங்கள்தான் அரசியல்வாதி, மீதியுள்ளவர்களை, மக்களே விரட்டி விடுவார்கள். போங்கடா நீங்களும் ஒங்களோட வெங்காய அரசியலும், பழைய காலத்து மன்னர்களை போல உங்களது குடும்பமும் இருந்தது என்று எழுதும் காலம் நெருங்கிவிட்டது....
கார்த்திக் - நேவ்தேல்ஹி,இந்தியா
2010-08-28 15:32:23 IST
இப்ப வீடு, டிவி, மோட்டார், காஸ் எல்லாம் கொடுத்து வீட்டை ரெடி பண்ணியாச்சு, அடுத்து ஆட்சிக்கு வந்த குடும்பம் நடத்த ஆரம்பித்துவிடுவார்கள் என் மக்கா, சம்பாதிக்கும் தொழில் எல்லாம் இவர்கள் கையில் பிச்சை எடுக்கும் பத்திரம் மட்டும் நம் கையிலா? எழுந்திரி. தயாரா இரு ........ ஓடு................ தமிழ்நாட்டை விட்டு ...................... இப்படிக்கு மானமுள்ள தமிழன்....
கே.பாலசுப்ரமணியன் - உடுமலைப்பேட்டை,இந்தியா
2010-08-28 15:06:50 IST
நிறைய பேருக்குப் புரியவேயில்லை, அதனால்தான் இவளவு காட்டமான கருத்துக்கள். மஞ்சள் துண்டுக்காரரின் வார்த்தைகளை மற்றவர்களுடையதைப் போல் சாதாரணமாய் எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழில் மக்கள் என்றால் பெற்ற பிள்ளைகள் என்று ஒரு பொருள் உண்டு என்பது தெரியாதா? மாநிலத்தைப் பற்றி என்றைக்கு அவர் கவலைப்பட்டார்? பிள்ளைக்கோ பெண்ணுக்கோ பேரனுக்கோ ஏதும் பிரச்சனை அல்லது உடனே டெல்லிக்கு விமானம் ஏறும் இவர் மாநிலத்துக்காக சென்னையைத் தாண்டுவாரா?...
najimu - kl,இந்தியா
2010-08-28 14:49:16 IST
மோசமான கவர்மன்ட்...
சுரேஷ் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-28 14:48:09 IST
இப்படி ஒரு கட்சி இருந்தால் எப்படி இருக்கும்:- கட்சின் பெயர்: APJAK (APJ . Abdul kalam ) கொள்கைகள் : 1 . MP & MLA தேர்தல்ல நிக்கிற யாருக்கும் எந்த ஒரு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அவர்கள் பயறிலோ அல்லது உறவினர்கள் பயறிலோ இருக்க கூடாது, அப்படி இருப்பது தெரிந்தால் அதை அரசாங்கமே பறிமுதல் செய்து கொள்ளலாம். 2 . MP & MLA கல் மற்றும் அவர்கள் குடுபத்தினர் அரசு பஸ்-ல் மட்டுமே பயணம் செய்யவேண்டும். 3 . MP & MLA கள் மற்றும் அவர்கள் குடுபத்தினர் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும். 4 . MP & MLA யாரும் கட்-அவுட்,பேனர் வைக்க கூடாது....
sathis - riyadh,சவுதி அரேபியா
2010-08-28 14:29:44 IST
கலைஞர் சொன்னதில் என்ன தவறு இருக்குறது , ,, இன்னும் நம்முளுடைய கிராமங்களில் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் நெறைய உள்ளனர் ,அவர்கள் இந்த இலவச திட்டங்களின் மூலம் பயன் பெற்று கொண்டு உள்ளனர் ,...
தி க - dubai,இந்தியா
2010-08-28 14:15:44 IST
அவரே அவரை பற்றி புகழ்கிறார், நமக்கு ஆட்சி மாற்றம் கண்டிப்பா வேண்டும் இல்லவசத்தை எத்தனை நாளுக்கு அனுபவிக்க முடியும்,அவரும் அவரோட குடும்பவும் தான் நல்லா இருக்காங்கள்,கண்டிப்பா அம்மா ஆட்சி வேண்டும்...
மணி - சென்னை,இந்தியா
2010-08-28 13:50:56 IST
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி. இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே...
kurisil - thuththtukkudi,இந்தியா
2010-08-28 13:47:06 IST
அம்மா கோதைநாயகி அவர்களே நீங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறீர்களா. எப்படியோ உங்கள் கடிதம் கைப்புள்ள கடிதத்தை விட நகைச்சுவையாக இருக்கிறது. நல்லா சிரிக்க வைத்ததற்கு நன்றி...
மணி - சென்னை,இந்தியா
2010-08-28 13:27:19 IST
சன் - madurai,சரிதான். உலகில் எந்த தலைவனும் மக்கள் நலனுக்காக இந்த அளவு உழைத்திருக்க மட்டார்.சொன்னவற்றை மட்டுமல்ல,சொல்லாதவற்றையும் நிறைவேற்றுவது யார்?இலங்கைத் தமிழர்களை அழிக்க உதவுவோம் என்று சொன்னோமா?தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கைப் படைக்கு ஆயுதம் வழங்கி இன்னும் 500பேரைக் கொல்ல உதவுவோம் எனச்சொன்னோமா?கிடைத்துக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச காவிரி,பெரியார் நீரையும் வராமல் பார்த்துக்கொள்வோம் எனச்சொன்னோமா?400 கோடி தமிழ்நாடு கேபிள் கார்போரஷனை மூடி லாபம் பார்ப்போம் எனச்சொன்னோமா? யாருக்கு நீங்கள் ஓட்டுப் போட்டாலும்,அவர்களை மிரட்டி,பணம் கொடுத்து எங்கள் கட்சிக்கு வர வைப்போம் எனச்சொன்னோமா? ஊழலுக்காக வெளியேற்றப் பட்ட அமைச்சர் பூங்கோதையை மீண்டும் மந்திரியாக்கி அழகுபார்ப்போம் எனச்சொன்னோமா?கோவை குண்டுவெடிப்பு சூத்திரதாரியை விடுதலை செய்து பெங்களூரிலும் அவர் 'பணி' தொடர உதவுவோம் எனச்சொன்னோமா? ஜெ.வை எதற்க்கெல்லாம் குறைகூறி ஆட்சியைப் பிடித்தோமோ, அதைவிடக் கேவலமாக ஆட்சி செய்ய எங்களால் மட்டுமே முடியும் எனக் காட்டிக்கொண்டிருக்கிறோம் இது போதாதா?கூடியவிரைவில் தமிழகமே,தமிழனே இருக்கமுடியாமல் செய்ய எங்களாலேயே முடியும்.இப்படிக்கு மஞ்சத்துண்டு. .....
ravi - UAE,இந்தியா
2010-08-28 13:25:35 IST
Mr madurai வெளி உலகிற்க்குவா எல்லாம் இலவசமாக கிடேக்கும் என்று இருக்காதே உழைத்து வாழு ,தமிழக அரசே மக்களை சோம்பேறி ஆக்காதே....
பொன்னி - தோஹா,கத்தார்
2010-08-28 13:15:49 IST
நீங்கள் இதுவரை மக்களுக்கு அளித்த திட்டங்கள் மக்களுக்கு போய் சேர்ந்ததா என அறிந்து கொள்ள ஒரு மாநாடு நடத்துங்க.. இந்த திட்டத்தில் பயன் அடையாதவர்கள் அனைவரும் வந்து தங்களை பதிவு செய்து உங்களையும் காரி துப்பிட்டு போவர்கள்..போடங்.. வயசு ஆச்சே தவிர உனக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாது தூ தேறி...
ராஜா - Coimbatore,இந்தியா
2010-08-28 12:57:30 IST
இலவசமாக கொடுப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அது சாதனையல்ல. அடிப்படை தேவைகளை தண்ணிர், வேலை வைப்பு, வறுமை ஒழிப்பு, பிச்சைக்காரர் ஒழிப்பு, மின்சார தேவை எல்லாவற்கும் இருப்பிடம் விலைவாசி கட்டுப்பாடு சாலை வசதிகள் போன்றவற்றில் இன்னும் பல வருடங்கள் மற்ற நாடுகளை விட பின் தங்கியுள்ளோம். எல்லாவற்கும் தெரியும் கருணாநிதி எந்த காரியத்தையும் சுய நல எண்ணத்தில்தான் செய்வர். பல கோடிகள் பல வழிகளில் சம்பாதித்த பின் கடைசி காலத்தில் அந்த சொத்து பல வழிகளில் போய் விடுமோ என்ற பயத்தில் மக்கள் பணத்தில் நல்லது செய்வது போல் நடிக்கிறார்....
Anitha - M,யுனைடெட் கிங்டம்
2010-08-28 12:53:41 IST
கைப்புள்ள,இன்னைக்கு உங்க comedy superooo super....கலக்கிடீங்க போங்க....அதுலயும் ரெண்டாவது comment இருக்கே,chanceless man...இவ்ளோ கலேபரத்துலையும் மணியை மறக்காம கோழி கூடைக்குள்ள ஒழிய சொல்லிட்டு தப்பிச்சு போறீங்களே...உங்க கடமை உணர்ச்சியை நான் பாராட்டுறேன்,உங்க ரெண்டாவது கமெண்ட்-ல இன்னும் ஒரே ஒரு வரி add பண்ணிருந்தீங்கனா இன்னும் supera இருந்திருக்கும்,அதாங்க சொம்படிசானுங்க எல்லாம் துரத்தும் போது வடிவேலு style ஒரு பாட்டு பாடி இருக்கனும் "உயிரே உயிரே,தப்பிச்சு எப்டியாவது ஓடி விடு,வருதே மூதேவி வருதே" அப்டின்னு பாடிகிட்டு ஓடிபோய் பஸ்ல இடத்தை பிடிங்க.....தினமலரோட புகழுக்கு நீங்களும் காரணம்.....நெறைய எதிர்பார்கிறோம்....உங்கள் பணி தொடர்க......
அந்தோனி - சென்னை,இந்தியா
2010-08-28 12:35:28 IST
எது மக்கள் நலதிட்டம்? இவர் மேற்கூறிய அனைத்துமே மக்களை பிச்சைகாரர்கள் ஆக்கும் திட்டங்கள். மக்களை சொந்த காலில் நிற்க விடுங்கள். அவர்களுக்கு கல்வி மட்டும் இலவசமாக கொடுங்கள் முதல்வர் அவர்களே....
adalarasan - chennai,இந்தியா
2010-08-28 12:32:43 IST
போகிற போக்கை,பார்த்தால், இவருக்கு இந்தியாவின் தந்தை என்று [காந்திக்கு ,பதில் ]பட்டம் கொடுத்துவிடுவார்கள் ,போல் இருக்கிறது! ஆமாம் ,இந்தியா,முழவதிர்கும்,எலேக்ட்சனுக்கு ,பணம் கொடுக்க இவரால் முடியும்! ஆடலரசன் ,...
சாமி - MUSCAT,ஓமன்
2010-08-28 12:24:09 IST
இலவசம் மட்டுமே பெருமை அடித்துக்கொள்ளும் நம் முக வாழ்க, இந்த இலவசங்களை மட்டுமே நம்பி ஓட்டுக்களை போடும் தமிழ் நாட்டு மக்களும்,தமிழ் நாடு அரசும் நாசமா போகட்டும்....
அப்பாவி - Bangalore,இந்தியா
2010-08-28 12:22:55 IST
ஐயா, நீங்க ரொம்ப நல்லவரு.... என்ன தமிழ்நாடுதான் நாசமா போகும். உங்க வீடும் குடும்ப நபர்களும் நல்ல சந்தோசமா இருப்பாங்க அந்த அளவுக்கு நீங்க அவர்களுக்கு நல்லது பண்ணி வெச்சிருங்க....
குமரேசன் - சேலம்,இந்தியா
2010-08-28 12:19:53 IST
சரி விடுங்க முதல்வரே நீங்க சொல்றது உங்க மக்களை மட்டும் தானே (கருணாநிதி சொந்தங்களை மட்டும்) நீங்கள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்...
ரம்யா கிருத்திகா தினேஷ் ஜெகன் - சென்னை,இந்தியா
2010-08-28 12:17:51 IST
தொடரட்டும் மக்கள் நலத்திட்டம் . வாழ்க கலைஞர் .....
GODWIN - tamilnadu,இந்தியா
2010-08-28 11:40:39 IST
திரு.கலைஞர் எந்த நல்ல திட்டத்தை செய்தாலும் அதை குறை கூறுவதும் அதை ஆதரித்து கருத்து பதிவு செய்வோரை விமர்சித்து இங்கு எழுதுவதும் சில பேருக்கு வாடிக்கைஆகிவிட்டது.செல்வி.கோதை தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.அடுத்த முறையும் கலைஞருடைய ஆட்சி தமிழகத்தில் மலரும்.இன்னும் பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும்....
சன் - madurai,இந்தியா
2010-08-28 10:55:57 IST
மனசாட்சி கொஞ்சமும் இல்லாமல் கலைஞரின் மக்கள் நலத்தொண்டை கீழ்த்தரமாக விமர்சித்து சிலர் கருத்து பதிவு செய்கின்றனர். இவர்கள் ஒன்று மனசாட்சி இல்லாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது மிருகங்கள் மனித உருவில் நடமாட வேண்டும். உலகில் எந்த தலைவனும் மக்கள் நலனுக்காக இந்த அளவு உழைத்திருக்க மட்டார். காந்தியை விட பல மடங்கு அதிகம் மக்கள் சேவை செய்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுபவர் கலைஞர். நாளைய உலகம் கலைஞரை போற்றும் வாழ்த்தும். வாழ்க பல்லாண்டு கலைஞர்.......
vittoba - chennai,இந்தியா
2010-08-28 10:51:24 IST
yes your children are happy...
mano - nz,நிக்கர்குவா
2010-08-28 10:45:34 IST
தமிழ்நாட்டில், தற்போதைய அரசின் மக்கள் நல திட்டங்களை அணிபவிக்காதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.... அய்யா, எல்லாவற்றையும் இலவசமா கொடுக்கிறார் என்று சொல்கிறார்கள்.... அப்படி பெற வேண்டிய நிலையில் இங்கு சிலர் இன்னும் இருக்கிறார்கள்..... அந்த சில பேராவது பயன் பெறட்டுமே.....! தொழில் வளர்ச்சி அடைத்து, மக்கள் வாழ்க்கைதரம் வளர்ச்சி அடைத்த பிறகு, இந்த இலவசங்கள் இல்லாமல் போக கூடும்..... இலவசங்கள் தேவை இல்லை என மக்களே கூறும் நிலை வரலாம்...... தற்பொழுது உள்ள சூழ்நிலையில், இந்த இலவசங்களை மறுப்பவர் யாருமே இல்லை...... எந்த விதத்தில் பார்த்தாலும், அய்யா அரசு மக்களுக்கு நன்மை செய்யும் அரசு தான் என்பதை மறுப்பதற்கு இல்லை......!. தமிழ் நாடு மக்களின் வாழ்க்கை தரம் உயர, இவரை தவிர வேறு அரசியல் கட்சிகள் என்ன திட்டங்கள் வைத்துள்ளனர்......? எதனை கட்சிகள், ஆட்சிக்கு வந்த பின், சொன்னதை செய்தார்கள்.....? அய்யா அரசில், மக்களின் வாழ்க்கைதரம் உயர பல்வேறு திட்டங்கள் உள்ளன..... நிதானமாக யோசித்துபாருங்கள்..... உண்மை புரியம்.......
SVG - NJ,யூ.எஸ்.ஏ
2010-08-28 10:39:19 IST
கைப்புள்ள கருத்துக்கள் நகைசுவையும் கருத்தும் எளிமையும் கலந்தது. சரியான யதார்த்தவாதி....
எஸ் குப்புசாமி - சென்னை,இந்தியா
2010-08-28 10:37:42 IST
எனக்கு என்னும் இலவச டிவி யே கிடைக்கலே. எல்லாம் குடுத்து முடிஞ்சா? யாருக்கிட்டே போய் எவ்வளவு அழணும்? எம்புட்டு நேரம் அழணும்?...
காரல் மார்க்ஸ் - trichy,இந்தியா
2010-08-28 10:36:12 IST
ஆமாம் கஜ கஜ வென்று...
c.ramasamy - tup,இந்தியா
2010-08-28 10:33:21 IST
அய்யா...நீங்கள் சொல்வது ஒரு சில மக்கள்தான் makilchiyaai இருக்கிறார்கள்....இன்னும் நிறையபேர் ரேசன் கார்டு கிடைக்காமல்....காப்பீடு திட்டம்...மற்றும் காஸ் அடுப்பு ....டிவி ...நிலம் மற்றும் வீட்டுமனைப்பட்டா ...எதுவும் கிடைக்காமல் இன்னும் ஏமார்ற்றத்துடன் உள்ளனர்....அதற்குள் நீங்களே மக்கள் ஹேப்பியாக உள்ளனர் என்று கூறுகிறீர்கள்.....உங்களுக்கு நீங்களே தம்ப்பட்டம் அடித்துக்கொள்ளுங்கள்....ஒவ்வெரு குடும்பமும் உங்கள் திட்டங்களை அனுபவிக்க முடியாமல் இல்லை...இல்லை ..கிடைக்காமல் வாழ்கின்றன....அதுமட்டுமல்ல உங்களுடைய எந்த திட்டத்தையும் நானோ என்குடும்பமோ இதுவரை பயன்படுத்தவுமில்லை....சொல்லப்போனால் எதுவும் கிடைக்கவில்லை....என்னைப்போல் இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர்....நீங்களே ஒரு வட்டத்தை ஏற்படுத்தி...அந்த வட்டத்திக்குள் நீங்களே பாராட்டு வழங்கியுள்ளீர்கள் வட்டத்தைவிட்டு வெளியே வந்து பாருங்கள்...உங்களுக்கே புரியும்....i...
ram - Saudi,இந்தியா
2010-08-28 10:29:44 IST
whatever he is done is really appreciable and whatever the Chief Minister of Gujarat has done is blamable. There is no way to get rid of this man and his family. They have been well rooted and they know all the ways to get into powers again. |People need not vote. They will win by voting by themselves as they praise themselves for their achievements. Till the people are unaware and not ready for a civil war against these culprits and criminals no one can save. people themselves have now become criminals no moral values no discipline no culture then how can we expect a good government...
patham - chennai,இந்தியா
2010-08-28 10:08:24 IST
கைப்புள்ள உங்கள் கருத்தை நன் தவறாமல் படித்து ரசிக்கிறேன் நன்றி. திரு. கைப்புள்ள அவர்களே உங்களிடம் நன் இன்னும் அதிகமாக எதிர்பார்கிறேன் அது உங்களால் மட்டுமே முடியும்! தொடரட்டும் உங்கள் எழுத்து பயணம்.........
Maha - chennai,இந்தியா
2010-08-28 10:02:58 IST
தயவுசெய்து திருத்தி வாசிக்கவும்...மக்கள் என்று அவர் சொன்னது தமிழ் நாட்டு மக்களை அல்ல ...தனது மக்களை......
மல்லு - சென்னை,இந்தியா
2010-08-28 09:48:18 IST
அம்மா செல்வி கோதை நாயகி, நீங்கள் என்ன திமுக அடிவருடியா ?உங்களின் பதவி என்ன ?கழக தொண்டர? இல்லை உங்களின் குடும்பத்துடன் தான் வாழ்கிறீர்கள? ஏன்னா குடும்ப பெண்களுக்கு இன்றைய காலகட்டத்தில் இருக்கும் விலைவாசி மற்றும் வாழ்க்கை சிக்கல் என்ன வென்று நன்றாக தெரியும் , என்று ஐநூறு ரூபாய் நோட்டுகள் மக்கள் பலகத்தில் புழங்க ஆரம்பித்து விட்டக்களோ அன்றி தெரிந்து கொள்ளலாம் நாடு மோசமான நிலைமையில் உள்ளது விலைவாசி கட்டுபாட்டில் இல்லை மற்றும் வேலை வைப்பு குறைவு, என்று , ஏன் ஈரானில் சாதாரண கோழி முட்டை பத்தாயிரம் ரியல் அதற்காக அது பநகர நாடு கிடையாது , பதிலாக அங்கீ பஞ்சம் விரித்து ஆடுகிறது என்று அர்த்தம் . அதுபோல என்று இந்திய சாதாரண மக்கள் கூட பால் பக்கெட் வாங்க காய்கறி வாங்க ஐநூறு ரூபாய் நோட்டுகள் பழக ஆரம்பித்ததின் அடையாளமே நாடு மோசமான நிலைமைக்கு பூய் கொண்டிருகிறது என்று அர்த்தம். பார்த்து உணர்ந்து ஒட்டு போடுங்கள். ௦௦...
Mohammed ali - Trichy,இந்தியா
2010-08-28 09:46:04 IST
Whatever development happening in TN for the last 40 years, all the credits goes to DMK only. I belong to Tiruchy, and I live in KSA. For the last 4 years Trichy has seen unbelievable development in every area. Roads, Bridges, infrastructures, facilities railways airport you name it. Can anybody deny this? In contrast, In Jayas rule, (her 1st tenure after MGRs death), I happened to visit Chennai I saw several level crossings along the beach road leading to Secretariat, I thought may be new train service started to Secretariat. Alas, I was shocked when I came to know that. It is not for any train. It is to close the road for "JJ express" to pass. This is not only on beach road, several other road had such gates. And, this roads will be blocked for hours until "JJ Express" passes. And, she will choose only one of these roads for security reason. And that too during peak hours. And the poor public has to wait until she passes. Height of arrogance. Holy shit, even American president has not done such a thing. We are living in a democratic country (big joke). Here, in KSA when the King and Prince, while they use public roads. You never feel anything. Just they stop the traffic at specified area at specified time. Not more than 5 – 10 minutes. Public servants are chosen by public to serve public, not to treat the public as 'slaves'. I am writing this, for the General public to think. If you have conscience, never ever give her another chance. She and her friend Sasi will ruin the state for sure....
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-08-28 09:27:44 IST
செல்வி கோதை நாயகி - Madurai,இந்தியா அவர்களே தாத்தாவுக்கு சொம்பு அடிச்சது போதும். உலகில் எந்த தலைவனும் இந்த மாதிரி இலவசத்த கொடுத்து மக்களை முட்டாளா ஆக்குனத கேள்விபட்டது உண்டா! எவன் கேட்டான் இலவசம் ! யாரு வீட்டு பணம்! இவ்ளோ பேசுறிங்களே விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு,கொலை,கொள்ளை, லஞ்சம், அராஜகம் இதபத்தி கொஞ்சம் பேசலாமே! விலைவாசி 2 வருசத்துல 4 மடங்கு ஏறிபோச்சி அதவிட்டுபுட்டு சும்மா கூப்பாடு போடாதிங்க.அதவிட பெரிய காமெடி இவர போயி காந்திக்கு சரியா ஒப்பிட்டு பேசுறிங்களே உங்கள மாதிரி ஆளுங்க இருக்குறவரைக்கும் இந்த பெருசுக்கு ஒரே கொண்டாட்டம்தான் போங்க போயி தண்ணி குடிங்க வயிதெரிச்சல கிளப்பாதிங்க சொல்லிட்டேன்....
மனிதன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-28 09:18:11 IST
ஹலோ செல்வி கோத நாயகி இது யாருடைய பணம் ரொம்ப பேசாதே இவனெல்லாம் ஒரு தலைவன் அவனுக்காக நீ கூவுற யோசித்து பேசவும்...
மணி - சென்னை,இந்தியா
2010-08-28 09:12:12 IST
'காந்தி' யை விட பல மடங்கு அதிகம் மக்கள் சேவை செய்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுபவர் கலைஞர் என்ற சூப்பர் ஜோக்குக்கு நன்றி ! செல்வி போதை நாயகி - madurai,இந்தியா .அவர்களே (அது யார் காந்தி? மஞ்சத்துண்டு மதுரை மருமகளா?)....
சுகர் தேவ் - tuticorin,இந்தியா
2010-08-28 08:42:15 IST
உன் குடும்ப நலனுக்க நீ இவ்ளோ வருஷம் உலசது போ(தாதா). தமில்நடுஅ சுடுகாட ஆகம போக மாட்டியா. காமராஜர் தி real king maker.... No one can never be like a honest man like him...........
செல்வி கோதை நாயகி - Madurai,இந்தியா
2010-08-28 07:48:12 IST
மனசாட்சி கொஞ்சமும் இல்லாமல் கலைஞரின் மக்கள் நலத்தொண்டை கீழ்த்தரமாக விமர்சித்து சிலர் கருத்து பதிவு செய்கின்றனர். இவர்கள் ஒன்று மனசாட்சி இல்லாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது மிருகங்கள் மனித உருவில் நடமாட வேண்டும். உலகில் எந்த தலைவனும் மக்கள் நலனுக்காக இந்த அளவு உழைத்திருக்க மட்டார். காந்தியை விட பல மடங்கு அதிகம் மக்கள் சேவை செய்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுபவர் கலைஞர். நாளைய உலகம் கலைஞரை போற்றும் வாழ்த்தும். வாழ்க பல்லாண்டு கலைஞர்....
Anu - TN,இந்தியா
2010-08-28 07:43:29 IST
Please stop voting for this guy and his relatives.. They have cheated Tamil people in the name of rationalism and Tamil pride for so long. Tamil Nadu really needs some fresh politicians who will encourage people to become more global and dynamics rather than look like fools by talking Tamil Pride, Dravidam etc....
பிரபா - chennai,இந்தியா
2010-08-28 07:37:37 IST
கடன் வாங்கி ஊரு முழுக்க ஒசிய அள்ளி வீசிக்கிட்டு இருக்கிற ஊதாரி முதல்வரை தமிழ் நாட்டில் தான் பார்க்க முடியும். இலவசம் கொடுப்பது எல்லாம் ஒரு சாதனையா??...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-08-28 06:58:50 IST
கூட்டத்தில் கருணாநிதி குறிப்பிட்டதாவது: எனது சிந்தையில் எப்போதும் நிறைந்திருப்பது எப்படி கொள்ளையடிப்பது மட்டும் தான். ஒவ்வொரு நொடிப்பொழுதையும் கொள்ளையடிபதிலேயும், மக்கள் வரி பணத்தை வீணடிப்பதிலும் நான் செலவழித்து வருகிறேன். எங்கள் குடும்பம் 100 வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான், அரசின் குறிக்கோள். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டார். அய்யா திருக்குவளை தீ சக்தி, நீங்கள் சொல்லும் ஹாப்பி மக்கள் உங்கள் குடும்ப மக்களா? தற்பெருமை, தனக்கு தானே பாராட்டி கொள்வது உங்கள் ஒருவரால் தான் முடியும். மக்கள் சொல்லவேண்டியதை, நீங்கள் சொல்லுகிறீர்கள், இதை சொல்லுவதற்கு முன் உங்கள் கட்சியின் மீது மக்கள் எவ்வளவு வெறுப்பாக உள்ளார்கள் என்று விசாரித்துவிட்டு பிறகு பேசுங்கள்....
ஆறுகாட்டுத்துறை ஆறுமுகம் - bangkok,தாய்லாந்து
2010-08-28 06:35:12 IST
ஆமாம்! உங்க மக்கள் அனைவரையும் மந்திரி ஆக்கி விட்டீர்கள். சொத்துக்கள் பிரிச்சி கொடுதுடிங்க. மக்கு புள்ள வாத்தியார வந்த கதைய ஒரு புள்ள மத்திய மந்திரியா ஆகி ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாகிட்டியும் மந்திரி என்கிற அடையாளம். பின்ன உங்க மக்கள் உங்கள பாராட்ட மாட்டாங்களா. ஏன்னா அவங்க உங்களால அவ்வளவு பலன் அடைந்து இருக்காங்க. பத்தாதற்கு சினிமா முதல் அனைத்து இண்டஷ்ட்ரியிலும் உங்க பேர புள்ளைகளோட ராஜ்ஜியம். ஆசியாவிலேயே பணக்கார குடும்பம். கூடிய விரைவில் உலக பணக்கார இடம் கிடைக்கும் வரும் தேர்தலில் ஜெயித்தால். பின்ன உங்க மக்கள் உங்களை பாராட்டாம இருப்பாங்களா....
Subra - Chennai,இந்தியா
2010-08-28 04:42:13 IST
give them job .dont give them free...if it goes old they will forget you...People will remember and appreciate only a steady income to the family. Color tv will go bad if a high voltage or a low voltage or a lightning strikes..So act smart..Dont think Tamil nadu people are fools..They are planning to make you fool soon.So better be careful....
ravi - abudhabi,இந்தியா
2010-08-28 04:38:49 IST
இந்த ஆண்டின் மிக சிறந்த காமடியாக கலைஞர் சொன்ன இந்த காமடி தான் என்று தினமலர் ஆசிரியரிடம் கேட்டுக்கொள்கிறேன்...
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-08-28 03:29:26 IST
அய்யா மக்களுக்கு தேவை இலவசம் அல்ல,ஏன் இதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை,மாநாட்டிற்கு வந்துள்ள ஒரு ஒரு கலக்டர் உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்சனை,தண்ணீ,சாலை,மருத்துவம்,கல்வி,விவசாயம்,கொலை,கொள்ளை,இவற்றை தீர்க்க எப்படி செயலாம் என்று கேட்டு எல்லா பிரச்சனையும் தீர்த்து,மாதா மாதம் கூப்பிட்டு கலைக்டரிடம் கேளுங்க,ரூபாய் 2000 கில் வருமானம் உள்ள குடும்பம் கணக்கு எடுத்து அவர்களுக்கு வேலை வாய்பு கொடுங்க,மழை நீரை சேமித்து எப்படி விவசாயம்,குடிநீர் ஆகலாம் அதுக்கு வலி கண்டுபிடிங்க,நம் தமிழகத்திற்கு எவ்வளவு நெல் தேவை,அதை பராமரிக்க உணவு கிடங்கு,நச்சு கொல்லி கலக்காமல் எப்படி விவசாயம் செய்வது அதுக்கு ஒரு வலி சொல்லுங்க. ஏன் அய்யா எவ்ளோ பிரச்சனை இருக்கு:அதை எல்லாம் மறைத்துவிட்டு என்னமோ மக்கள் சந்தோசமா இருகாங்க,முன்று வேலை சாப்பிடிரங்க,என்னையா கதை?????? உங்கள் ஆட்சி வந்ததில் இருந்துதான் அரசு அலுவலகங்களில் வேலை நடப்பது இல்லை,லஞ்சம்,மக்கள் சோம்பேறி ஆக்கிட்டிங்க,பெண்கள் எல்லாம் சன் டிவியிலும்,கலைஞர் டிவியிலும்,ஜெயா டிவியுலும் சீரியல் பார்த்து நம் பண்பாடு கலாச்சாரம் எல்லாத்தையும் தொல்லைதுவிட்டு நிகிரங்க அய்யா? AC ROOMIL ரெஸ்ட் எடுத்து,சினிமாவுக்கு திரைகதை எழுதுவதை நிரிதிவிட்டு,தமிழ்நாடு முன்னேற நல்ல திட்டம் கொண்டுவாங்க....
ரமேஷ் - சென்னை,இந்தியா
2010-08-28 03:23:35 IST
ஐயா... இதல்லாம் உதவாது , 21 -- 100 ரூபா கட்டு நீங்க எப்ப உண்டியில போடுவீங்க (தேர்தல் comissionukku )...
தமிழன் - USA,யூ.எஸ்.ஏ
2010-08-28 02:50:51 IST
சார், நீங்க ரேம்போ கரெக்டா சொனீங்க. எல்லா கிராமத்திலும் நல்ல ரோடு இருக்கு, 24 மணி நேரம் கரண்ட் இருக்கு, அவங்க குடிக்க நல்ல குடிநீர் கிடைக்குது, எலாரும் ரொம்போ செல்வ செழிப்பா இருக்காங்க. மதுரை, திருச்சி, திருநெல்வேலி ல சென்னை போலவே நெறைய பாலங்கள் இருக்கு, எல்லா வயலும் பசுமையா இருக்கு. எல்லா விவசாயி யும் ஒரு tractor ஒரு லேப்டாப் வச்சிருக்காங்க. சென்னை ல எங்க பாத்தாலும் எச்சில் இல்லவே இல்லை எங்கு சென்றாலும் சந்தன வாசம்.... நல்லா கனவு கண்டேன் யாருப்பா என்ன எழுப்பினது? உங்க குறிக்கோளும் கரிக்கோலும் இருக்கட்டும் இது எபோ நடக்கும் ? 2 வருசதிலா ? இல்ல 20 வருசதிலா ? மக்களே இனிமேல் ஒரு அக்ரீமென்ட் போடனும் 2 வருஷத்தில் நான் சொன்ன எதையும் செய்யலேன்னா எனோட கட்சி இன்மேல் இருக்காதுன்னு. வார்த்தை ஜாலம் நம்ப நாங்க ஒனும் முனா கூனா இல்ல ........
திருநாவுகரசு - madurai,இந்தியா
2010-08-28 02:50:35 IST
உங்களின் சாதனைகளில் சிலவற்றை விட்டு விடீர்களே (1) இலங்கை தமிழர்களை நட்டாற்றில் விட்டது (2) ஊரையெல்லாம் வளைத்து அதை உங்களது சொந்த பந்தங்கள் உரிமையாக்கி கொண்டது (3) ஓட்டுக்கு பணம், பிரியாணி, குவாட்டர், ஓட்டு இயந்திரம் கொளறுபடி என்று புதிய பார்முலாவை அரங்கேற்றியது, (4) மாநகராட்சி தேர்தலில் பட்ட பகலிலே ரவுடிகளை வைத்து எதிர் கட்சிகளை அடித்தது (5) உலக புகழ் ச்பெக்ட்ரும் ஊழலை மூடி மறைக்க முயற்சி செய்தது (6) ஊரெங்கும் மணல் கொள்ளை அடித்தது (7) யாரவது! எங்காவது! திமுக அரசை குறை கூறினால் அவர்களை நைய புடைவது (8) டாஸ் மாக் ஊழியர்களை ஓட ஓட விரட்டியது (9) ஹொகேனகல் திட்டத்தை ஊற்றி மூடியது ((10) நாள்தோறும் தனக்கு பாராட்டு விழா எடுத்து கொண்டாடி கொள்வது என்று இன்னும் ஆயிரம் சொல்லி கொண்டு போகலாம், இதையெல்லாம் உங்களின் மீடியாவை வைத்து ஒரு மாயை உருவாக்கு வீர்கள். மக்கள் உங்களை பற்றி கசப்பாக பேசுகிறார்கள் என்பதை தேர்தலில் தான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். மறுபடியும் திமுக ஆட்சி என்று நினைத்தாலே அடி வயிறு இப்பவே கதி கலங்குது....
சுப்பிரமணியம் - raleigh,யூ.எஸ்.ஏ
2010-08-28 02:36:41 IST
Unless and until people wake up from Ignorance, these type of politicians will even sell India.......
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-28 02:19:16 IST
அயயாயையோ..., நான் இன்னிக்கு இங்க இருந்து பின்னங்கால் பிடரில பட தெறிச்சு ஓடிடுறேன். நம்ம சொம்புங்க நல்ல நாள்லயே சொம்படிச்சு செவிப்பறைய கிளிச்சுபுடுவாணுக. இன்னிக்கு துண்டார் வேற இவளோ புள்ளியையும் விவரத்தையும் அள்ளி வீசி இருக்காரு. கேக்கவா வேணும்? சொம்புமாறியே சைஸ்ல பெரிசா இருக்கிற வெண்கல பானைய தூக்கிட்டு வந்துடுவானுகளே. மக்களே தயவு செஞ்சு இன்னிக்கு ஒரு நாள், எல்லோரும் வீட்ட பூட்டி சாவிய இடுப்புல சொருகிட்டு, ஒரு மப்சல் பஸ்ஸ புடிச்சு வேற எங்கியாச்சும் ஓடி போய்டுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில இந்த சொம்புங்க எல்லாவனும் வந்திடுவாணுக. சும்மா சொம்பு சத்தம் டங்... டங்... னு ஊரு பூரா போட்டு காத கிளிச்சிடுவாணுக. அயயையோ ஒடுங்க ஒடுங்க... தூரத்துல மொத சொம்போட தல தெரியிது.... வந்துட்டானுக.... டே டே மணி, இந்தா நீ இந்த கோழி கூடைக்குள்ள ஒளிஞ்சுக்கோ. யே... ஆத்தா இந்தா நீ சீக்கிரமா போய் பஸ்ல எனக்கொரு சீட் போட்டு வை. நான் இந்த மாட்ட எல்லாம் புடிச்சு கட்டிட்டு வந்திடுறேன். ஊரே கலேபரபட்டு, கைப்புள்ள மாட்டை புடிக்க ஓடுகிறான். சொம்புகள் ஊரை நெருங்குகின்றன. ஊரு என்ன ஆனது? நாளை தெரிந்து கொள்ளுங்கள்....
மனித பாவனைக்கு உதவா கொத்துரொட்டி 39 உணவக உரிமையாளர்களு க்கு எதிராக வழக்குத்
கொடுமையான சமூக விரோதச் செயல்
கொழும்பு நகரிலுள்ள பல உணவகங் களில் சில தினங்களுக்கு முன் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர்ப் பரிசோதனை நடத்தியிருக்கின்றார்கள். பல உணவகங்களில் மனித பாவனைக்கு உதவாத பண் டங்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. மனித பாவனைக்கு உதவாத பண்டங்களை விற்பனை செய்த 39 உணவக உரிமையாளர்களு க்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேறு சில உணவகங்களிலிருந்து சந்தேகத்துக்கு இட மான உணவு வகைகள் மேலதிக பரிசோதனைக் காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இப் பரிசோ தனை முடிந்ததும், சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகு பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இட முண்டு.
மனித பாவனைக்கு உதவாதவை எனக் கண்டறியப்ப ட்ட உணவுப் பண்டங்களில் கொத்துரொட்டி வகை களே கூடுதலானவை. இவ்வாறான 400 கிலோ கொத் துரொட்டி வகைகள் அழிக்கப்பட்டுள்ளன. கொத்து ரொட்டி தயாரிப்பதற்கெனச் சிறியனவாக வெட்டப் பட்ட ரொட்டித் துண்டுகள் ஒரு வாரத்துக்கு மேலா கக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திடீர்ச் சோதனைகளை எப்போதோ ஆர ம்பித்திருக்க வேண்டும். காலந்தாழ்த்தியாவது ஆர ம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு தடவையு டன் நிறுத்தாமல் அடிக்கடி திடீர்ச் சோதனைகளை நடத்த வேண்டியதன் அவசியத்தைப் பொது சுகா தாரப் பரிசோதகர்கள் விளங்கிச் செயற்படுவார்க ளென நம்புகின்றோம்.
கண்களினால் மட்டுமல்லாமல் நாக்கினாலும் இனி பார்க்கலாம்
ஆஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் 'பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ்'என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கண்ட்ரோல் யூனிட்டையும் ஒரு கறுப்புக் கண்ணாடியையும் அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லாலிபாப் இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( டிஜிடல் வீடியோ கேமரா) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் கேமிராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் கண்ட்ரோல் யூனிட்டிற்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு மொபைல் போனன்அளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாக்கின்ன் மேல் வைக்கப் படும் லாலிபாப் வடிவ உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.
இலங்கை அரசிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது
சிறீலங்கா முஸ்லீம் காங்கரஸ் இலங்கை அரசுக்கு தனது ஆதரவினை வழங்க முன் வந்துள்ளது. இதனால் இலங்கை பாராளுமன்றத்தில் இலங்கை அரசின் பலம் மூன்றில் இரண்டைவிட அதிகமாகியுள்ளது. தற்போது அரசுக்கு சட்டம் இயற்றுவதில், அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கான சட்டமியற்றலுக்கும், அதனை பாராளுமன்றத்தில் மூலம் சட்டமாக்குவதற்கும் தேவையான பலம் கிடைத்துவிட்டது. தற்போது தேவையெல்லாம் நல்ல மனமும், சிந்தனைகளும்தான். இதனை இலங்கை அரசு செய்யும் என எதிர்பார்ப்போம். ஜேஆர் ஜெயவர்த்தனா அரசு ஐந்தில் நான்கு பெரும்பான்மை பெற்றிருந்து அதனை தமிழ் மக்களுக்கு அடி போடவே பாவித்தார். அதனுடன் ஒப்பிடுகையில் சிறிது குறைந்த ஆனால் தேவையான பலத்தையுடைய மகிந்த அரசு பாராளுமன்றத்தில் சரியான நியாயமான சட்டங்களை இயற்றி வரலாற்றில் இடம் பிடிக்குமா? தமிழ் மக்களிடம் தாமும் இலங்கையர் என்ற தேசப்பற்றை வளர்க்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரணில் ஆவேசம், ஹக்கீம் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எமக்கு செய்யப்பட்ட துரோகம்:
்
ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்தமையானது எமக்கு செய்யப்பட்ட துரோகம். நாம் அவர்களுக்கு அதிக இடங்களை தேர்தலின்போது வழங்கினோம் என ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவேசத்துடன் தெரிவித்தார்.
நாம் எமது தலைமையில் பொது எதிரணி ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மஹிந்தவினால் கொண்டுவரப்படவுள்ள அரசியல்யாப்பு சீர்திருத்தத்தினை ஒழுங்கமைக்கவும், வேண்டுமெனில் மாற்றம் கொண்டுவரவும் செயற்பட்டோம். ஆனால் ஹக்கீம் இதனை குழப்பிவிட்டார்.
நேற்று கட்சியின் அதிஉயர்பீடம் கூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்தமையானது எமக்கு செய்யப்பட்ட பச்சைத் துரோகம் எனத் தெரிவித்துள்ள ரணில்,
நாடாளுமன்றத்திற்கு பொறுப்புச் சொல்லக் கூடிய ஓர் நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் தலைமையிலான ஆட்சி முறைமையை உருவாக்குவதாக ஜனாதிபதி முதலில் உறுதியளித்த போதிலும், தற்போது அந்த உறுதிமொழி மஹிந்தவினால் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமக்கு வாக்களித்த மக்களை ரணில் விக்ரமசிங்க ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் எவ்வித நிபந்தனையுமின்றி ரணில் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை திசை திருப்பியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சியின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள மறைமுகமாக துணை போவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கப்படமாட்டாது.
ஐக்கிய தேசியக் முன்னணி கூட்டிலிருந்து ஆழும் கட்சியுடன் தாவிக்கொண்டுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு ஒன்று வழங்கமுடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. ஆழும்கட்சியின் அரசியல் யாப்பு மாற்ற முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவென அரசுடன் இணைந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தனக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சும் கட்சியின் இருவருக்கு இரு பிரதி அமைச்சுக்களும் வேண்டியபோதும் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு வழங்க முடியாது என கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆழும் கட்சியுடன் உள்ள அமைச்சர்களான அதாவுல்லா , றிசார்ட் பதுர்தீன் , ஹிஸ்புல்லா ஆகியோர் ஹக்கீம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சினை பெறுவததை எதிர்த்துள்ளதாக கூறப்படுகின்றது
ஆழும் கட்சியுடன் உள்ள அமைச்சர்களான அதாவுல்லா , றிசார்ட் பதுர்தீன் , ஹிஸ்புல்லா ஆகியோர் ஹக்கீம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சினை பெறுவததை எதிர்த்துள்ளதாக கூறப்படுகின்றது
Written By ilankainet
இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்கள்
இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிகளில் பெருந்தொகையானோர் நாடு திரும்பியுள்ளதாக அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தவர்களே யுத்தம் முடிவுற்றபின் இவ்வாறு மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றனர் என ஐ.நா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்று லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தென்னிந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என ஐ.நா. செயலக அறிக்கை தெரிவிக்கின்றது

நாவலரின் சிலையும் வரலாற்று உண்மைகளும்
நாவலருக்கும் நல்லூர் முருகப்பெருமான் ஆலயத்திற்கும் நல்ல தொடர்புகள் அவரது காலத்திலேயே இருந்ததில்லை. முதலில் நாவலரின் ஆத்மிக ஈடுபாடு மிகவும் கேள்விக்குரிய ஒன்றாகும்.
நல்லை நகர் நாவலர் நல்ல தமிழ் பண்டிதர்தான். புனித விவிலியத்தை பேர்சிவல் பாதிரியாரின் உதவியோடு மொழிபெயர்த்தவர். பால போதினி சைவ போதினி போன்ற சிறார் கல்வி நூல்களை எழுதி பதிப்பித்தவர். அன்னாரின் சேவைகளை பாராட்டி நாமும் கும்பலில் கோவிந்த போட்டுவிடலாம் என்றால் சில வரலாற்று உண்மைகளை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியம் வந்த்திருக்கின்றது. அன்னாரின் உருவச்சிலையை மீண்டும் நல்லூர் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்ய உத்தேசிப்பதாக அறிகிறோம்.
வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் திரு அருட்பாக்களை அவைகள் மருட்பாக்கள் என்று மகா மட்டமாக பிரசாரம் செய்ததோடல்லாமல் நீதிமன்றில் வழக்கும் தொடுத்து அந்த மகானின் தெய்வீகத்தை கொச்சை படுத்தி ஈழத்தவர்க்கு தீராத களங்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
ஜாதி வெறி பிடித்த ஆதீனங்களின் ஏவல் பேயாக செயல் பட்டு கடைசியில் நீதி மன்றத்தில் தோல்வியும் கண்டு ஆன்மீக வாதிகள் எல்லாம் பழிக்கும் ஒரு நிலையை நம்மவர்க்கு ஏற்படித்தி தந்தவர் நாவலர். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய அருட்பெரும் ஜோதியாம் வல்லரரின் மனதை நோகடித்தவர.
தனது நூல்களில் எல்லாம் சமய குரவர்களை பற்றி குறிப்பிடும் பொது தவறாமல் ஜாதியை குறிப்பிடிவது வழக்கம். இது எப்படி ஆத்மீகத்தை வளர்க்கும்? உயர்குடி வெள்ளாள மரபினை சேர்ந்த ஒழுக்க சீலர் என்பது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இவரது போதிநிகளில் காணலாம். இந்த உயர் குடி வெள்ளாள அல்லது வேளிர் குளம் என்ற சொற்பதங்கள் தான் இன்று வரை மணமகள் தேவை போன்ற விளம்பரங்களில் இருக்கும் ஜாதிய அடையாளம். அழுத்தமாக மீண்டும் மீண்டும் உயர்குடி என்ற பதத்தை இவர் அச்சடித்து விஷ விதையை தமிழ் மக்கள் மனத்தில் ஆழமாக பதித்து விட்டார். இவரின் போதிநிகளை உயர்குடி வெள்ளாளர அல்லாத மாணவன் படிக்கும் பொது அவனின் மனம் என்ன பாடு படும் என்று இந்த ஜாதி வாதிக்கு தெரியவில்லையே?
எந்தகாலத்திலும் இவர் நல்லூர் கோயிலுக்குள் சென்றது கிடையாது என்றும நம்பப்படுகிறது. ஏனெனில் சரியான ஆகம விதிகள் நல்லூரில் கடை பிடிக்க படுவதில்லை என்பது இவரது கருத்தாகும். இவர் ஒரு ஆத்மிக வாதியல்ல மாறாக ஆகம வாதியாகும். இந்த ஆகம வாதிகள் ஆண்டவனே நேரில் வந்தாலும் தமது ஜாதி அனுஷ்டனங்கள் மற்றும் ஆகம விதிகள் தான் மென்மையானவை என்று முரட்டு பிட்வாதம் பிடிக்கும் சமய வாதிகள். சரியாக சொல்லப்போனால் ஒரு வகை தாலிபான்கள் என்றும் சொல்லலாம். இவரது காலத்தில் ஈழத்தில் கோயில் பூசாரிகளாக பிராமணர்கள் இருந்ததில்லை. சாதாரண குடிமக்களே பூஜாரிகளாக இருந்துள்ளனர். நாவலரின் காலத்தில் தான் பெரும் பாலும் தமிழக பிராமணர்கள் எழத்து கோயில்களில் நுழைய தொடங்கினார்கள். நாவலர் ஏன் பிராமணர்களில் அக்கறை காட்டினார் எனில், பெரும்பாலான கோயில்களில் வெள்ளாளர் அல்லாதவர்கள் தான் பூஜாரிகளாக இருந்தார்கள். தனது சாதி அபிமானம் அவர்களை பூசகர்களாக ஏற்க மறுத்தமையால் தமிழகத்தை பின்பற்றி பிரமான சமுகத்தின் கைகளில் ஈழத்து கோயில்களை தாரைவார்க்கும் முயற்சியை மேற்கொண்டார்.
www.dalitnews.com
www.dalitnews.com
கோ படத்துக்கு ஜேம்ஸ்பாண்ட் பட கேமரா
.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, ராதா மகள் கார்த்திகா, பியா நடிக்கும் படம் 'கோ'. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக ஃபான்டம் ஃபிளக்ஸ் என்ற கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இது சினிமா உலகில் சமீபத்தில்தான் அறிமுகமானது. இந்த கேமராவில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தை படமாக்க ஹாலிவுட்டில் திட்டமிட்டுள்ளனர். இது பற்றி இயக்குனர் ஆனந்த கூறும்போது, 'இந்த கேமரா அறிமுகமானது பற்றி அறிந்ததும் சந்தோஷப்பட்டேன். இது டிஜிட்டலில் ஹை ஸ்பீட் ரக கேமரா. படமான உடனே அந்த காட்சியை திரையில் போட்டு பார்க்கலாம். மற்ற கேமராக்களில் இந்த வசதி கிடையாது. அடியாட்களுடன் ஜீவா மோதும் சண்டை காட்சியை இந்த கேமராவில் படம் பிடித்துள்ளேன்Õ என்றார்.
நமிதாவை திரையுலகம் புறக்கணித்துவிட்டதா?
சில மாதங்களுக்கு முன்பெல்லாம் நமீதாவின் குத்துப்பாட்டு இல்லாத படங்களே இல்லேனு தான் சொல்லனும், ஆன இப்ப நமீதா மேடம் எங்க இருக்காங்கனு கூட தெரியல, ஆன மானாட மயிலாட நிகழ்ச்சியில் மட்டும் வந்து போறாங்க. என்னதான் ஆச்சு.. ஒரு வேல நமிதாவை திரையுலகம் புறக்கணித்துவிட்டதா என்ற சந்தேகம் வருது. இதுபற்றி நமீதா மேடத்துக்கிட்ட கேட்டா ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அதனால்தான் என்னை அதிகமாக படங்களில் பார்க்க முடியவில்லை எனக் காரணம் சொல்லி வருகிறார். பாவம் நமீதா ஒரு மாசத்தில 15 படங்களில் நடிச்சவாங்க இப்ப "இளைஞன்" படத்தில் மட்டும் தான் நடிச்சிட்டு வராங்க. இளைஞன் படத்தில் படையப்பா நீலாம்பரி மாதிரி பவர்ஃபுல்லான வேடமாம்.
2 கோடி,ஹாரிஸ ஜெயராஜ சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார்.
ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் படத்தில் ஹாரிஸ ஜெயராஜ் இசை அமைக்கிறார். ரஹ்மான் பிஸி என்பதால் ஹாரிஸை தேர்வு செய்திருக்கிறார் ஷங்கர். இது ஹாரிஸுக்கும் தெரியும் என்பதால் சம்பளத்தை இரண்டு கோடியாக உயர்த்தியிருக்கிறார். கதை, திரைக்கதை, சிச்சுவேஷன், இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இவையெல்லாம் பிடித்தால் மட்டும்தான் ஹார்மோனிய பெட்டியில் கை வைக்கிறார் ஹாரிஸ்.
உலக பெண் சாரணிய அமைப்பின் நூற்றாண்டு விழாவிற்கு யாழ் மாவட்டத்திலிருந்து 36 பெண் சாரணர்கள் மலேசியா செல்கின்றனர்
உலக பெண் சாரணிய அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக மலேசியாவில் நடைபெற இருக்கும் ஒன்று கூடலில் பங்குபற்றுவதற்காக யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 36 பெண் சாரணர்கள் இன்று (27) யாழிலிருந்து புறப்பட்டனர்.
யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் பெண் சாரணர்களை வழியனுப்பும் வைபவத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சார்பில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் அவர்கள் கலந்து கொண்டார்.
இக்குழுவினர் நாளை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூர் புறப்படுவர். இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வியாபாரிகள் சிங்கள மக்களுக்கு விற்கும் அளவிற்குத் சிங்களத்தைக் கற்றுவிட்டார்கள்'
சிறிலங்காவின் வடக்கும் தெற்கும் ஆரத் தழுவுகின்றனவா?
முன்பொரு காலத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் மையமாக விளங்கிய கிளிநொச்சியினை வார இறுதி நாட்களில் அவதானிக்கும் போது கண்டி நகரம் போலவோ அல்லது கதிர்காமத்தினைப் போல காட்சியளிக்கிறது. அதில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளதாவது, போர் தந்த எச்சங்கள் இன்னமும் இருக்கும் வன்னிப் பகுதியை நோக்கி ஆயிரக்கணக்கானோர் படையெடுக்கும் நிலையில் எங்கு பார்த்தாலும் உள்ளூர் உல்லாசப் பயணிகள் நிறைந்திருந்தார்கள்.தொடராக இடம்பெற்ற போரின் காரணமாக 2006ம் ஆண்டின் இறுதிப் பகுதி தொடக்கம் இந்த ஆண்டினது முதல்பகுதி வரை வன்னி நாட்டினது இதர பாகங்களிலிருந்து துண்டிக்கப்பட்டே இருந்தது.
இந்தக் காலப்பகுதியில்தான் 300,000க்கும் அதிகமான மக்கள் நாட்டினது ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
மூர்க்கமாகத் தொடர்ந்த போரின் மத்தியில் சிக்குண்டு பின்னர் முகாம்களில் தங்கியிருந்த இவர்களில் பலர் தற்போது மீள்குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் நிறையவே மாற்றங்கள். போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னியில் வசித்துவந்தவர்கள் அனைவரும் போரின் மத்தியில் சிக்குண்டனர். அதிலிருந்து வெளியேறுவதற்கான எந்த மார்க்கமும் அவர்களுக்கு இருக்கவில்லை.
எது எவ்வாறிருப்பினும், தற்போதைய சூழமைவில் இலங்கைத் தீவினது குடிமக்கள் அனைவரும் தாம் விரும்பும் நாட்டினது எந்தப் பாகத்திற்கும் தற்போது சென்றுவரமுடிகிறது என்கிறார் ராஜா.
"தென்பகுதியினைச் சேர்ந்த மக்கள் தற்போது அதிகளவில் வடக்கிற்கு சுற்றப்பயணம் செய்துவருகிறார்கள். அதேபோலவே நாட்டின் எந்தப் பாகத்திற்கும் எங்களாலும் தற்போது சென்றுவரமுடியும்.
இதன் ஊடாக இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களது கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறையினையும் ஏனைய சமூகங்களும் அறியமுடிகிறது" என ராஜா தொடர்ந்து தெரிவித்தார்.
போர் முடிவுக்கு வந்தமையானது, முழுத் தேசத்திற்குமே குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பிப்பதற்கு வழிசெய்திருக்கிறது.
இந்த மாற்றம் போரினால் நேரடிப் பாதிப்புக்களைச் சந்தித்த மக்கள் வாழுவதற்கு புதியதொரு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது எனலாம்.
குண்டுச் சத்தங்களும் வெடியோசைகளும் நின்றுவிட்டன. ஒப்பீட்டு ரீதியில் கவலைகள் அற்ற அமைதியான மனத்துடன் இவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்குத் துவிச்சக்கரவண்டியினை மிதித்துச் செல்கிறார்கள்.
வன்னிப் பகுதியில் ஏ9 வீதியின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான விளம்பரப் பலகைகளில் நம்நாட்டின் அழகு ராணிகளும் பாடகர்களும் சிரித்தவண்ணமிருக்கிறார்கள்.
உள்ளூர் உல்லாசப் பயணிகள் போரின் எச்சங்களை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் அதே வேளையில் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் தங்களது வாழ்வினை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தற்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள்.வன்னிப் பகுதியில் ஏ9 நெடுஞ்சாலை என அறியப்பட்ட யாழ்-கண்டி நெடுச்சாலையின் இரு மருங்கிலும் தற்போதுதான் புதிய கட்டங்கள் முளைவிட ஆரம்பித்திருக்கிறன.
போரின் கோரப் பிடியில் சிக்கி நின்ற இந்தப் பிராந்தியம் மெல்ல வழமைக்குத் திருப்புகிறது என்பதையே இது காட்டுகிறது.
வன்னிப் பிராந்தியத்தில் இதுவரைக்கும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் கிடைக்கக்கூடியதை வைத்து வாழ்க்கையினைக் கொண்டு நடாத்துகிறார்கள்.
அனைத்துக் குடும்பங்களும் இடம்பெயர்ந்த குடும்பங்கள்தான். சொத்துக்களாகத் தங்களிடம் இருந்தமை அனைத்தையும் இன்று இவர்கள் இழந்து நிற்கிறார்கள்.
ஆதலினால், ஆரம்பத்திலிருந்து மீண்டும் வாழ்க்கையினைக் கட்டியெழுப்புவதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த வழியும் இருக்கவில்லை.
அரசாங்கம் ஆரம்ப உதவியாக வழங்கியிருக்கும் பணத்தினைக் கொண்டே மீள்குடியேற்றப்பட்டிருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் தங்களது வாழ்வினை மீளவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் இந்த மக்கள் தமது வாழ்வினை ஆரம்பிக்கும் வகையில் 25,000 ரூபாய் பணத்தினை அரசாங்கம் மீள்குடியேற்ற உதவியாக வழங்கியிருக்கிறது.
வன்னியின் பல பாகங்களிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. எது எவ்வாறிருப்பினும் தங்களது ஊர்களுக்கு மீண்டும் திரும்பியிருக்கும் மக்களின் மனங்களில் ஏதோவொரு நிச்சயமற்றநிலை இருப்பதாகவே தெரிகிறது.
போர் முடிவுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் அதுதந்த கொடுமையான அனுபவங்கள் மற்றும் இழப்புக்கள் என்பன இவர்களது மனங்களைத் தொடர்ந்தும் புண்படுத்திக்கொண்டே இரக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த மக்கள் எதனை எதிர்கொண்டார்களோ அதன் சின்னமாக குண்டுச் சிதறல்களால் சல்லடையிடப்பட்ட வீடுகள் இன்னமும் இருக்கின்றன.
"போரின் பின்னானதொரு நிச்சயமற்ற தன்மையுடனோ அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்சினை இதுவல்ல. போரின் விளைவாக நாங்கள் இழந்தது ஏராளம்.
எங்களது ஊர்களுக்கு நாம் திரும்பியிருக்கின்றபோதும் சூழல் பெரிதும் மாறிவிட்டது. வீடுகள் சிதைந்துபோய்க் கிடக்கின்றன. எங்களது அன்புக்குரியவர்கள் பலர் இன்று எங்களுடன் இல்லை என்றாகிவிட்டது. ஆதலினால் நாம் வாழும் சூழலில் எவ்வளவோ மாற்றங்கள்" என்கிறார் சாந்தினி டானியல் என்ற இரண்டு பிள்ளைகளின் தாய்.
வீடு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் என்பன மீள்குடியேற்றப்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
"தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி மீள்குடியேற்றப்பட்டிருக்கும் கிராமங்களிலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பாடசாலைக்கு வருகிறார்கள்.
இருந்தாலும் பொருத்தமான போக்குவரத்து வசதிகள் இன்மையினால் பாடசாலைக்குப் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே வந்து சேர்கிறார்கள். இருப்பினும் தற்போது அதிகளவிலான பேருந்துகள் சேவையில் உள்ளன" என அவர் தொடர்ந்து தெரிவித்தார்.
பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பது மற்றும் ஏ9 நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டிருப்பது என்பன நீண்ட பல ஆண்டுகளாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் சென்றுவரமுடியாத நிலையிலிருந்த இந்த மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.மீள்குடியேற்றப்பட்ட இந்த மக்களில் பெரும்பாலானவர்கள் துவிச்சக்கரவண்டிகளையே போக்குவரத்திற்காக இன்னமும் பயன்படுத்துகின்றபோதும் போக்குவரத்து என்பது இவர்களுக்கு இப்போது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் தற்போது தனது கவனத்தினைச் செலுத்தியுள்ளது.
மக்கள் தங்களது வாழ்க்கையினைத் தங்குதடையற்ற வகையில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுவதற்கு ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்துவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கூறுகிறார்.
"மக்கள் தங்களது சொந்தக் காலில் நிற்பதற்குத் துணைபுரியும் வகையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது. உதாரணமாக, மக்களின் நன்மைகருதி வீடமைப்புக் கடன் திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
போக்குவரத்துத் துறையினை எடுத்துக்கொண்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 24 பேருந்துகள் சேவையில் உள்ளன. தவிர பாடசாலை செல்லும் மாணவர்களுக்குத் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டிருக்கின்றன" என்றார் அவர்.
கிளிநொச்சி நகரத்தினையும் தாண்டி வடக்காக பல கி.மீ தூரம் வரை நாம் பயணிக்கும் பொது போரின் தளும்புகள் குறைந்திருக்கும் ஒரு பகுதியினை நாம் காணலாம்.
இறுதிப் போரினால் யாழ்ப்பாண குடாநாடு பாதிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும். ஆதலினால் கிளிநொச்சி நகரத்துடன் ஒப்பிடும் போது குடாநாட்டில் அழிவின் சின்னங்களை அதிகம் காணமுடியவில்லை.
மரத்தின் கீழே பல உந்துருளிகள் நிறுத்த வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஏறியமர்ந்தவாறிருக்கும் இளையவர்கள் தங்களது அன்றைய பொழுதைப் பற்றி அரட்டையடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
"எங்களில் மொத்தம் 15 பேர். கிரிக்கெட் விளையாடுவதற்காக ஏனையவர்கள் வரும் வரைக்கும் காத்திருக்கிறோம்" என யாழ்பாணத்தைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளியான 20 வயதுடைய அருள்தாசன் சாள்ஸ் எங்களிடம் கூறினார்.
குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குமுன்னர் இருந்த நிலைமை இன்றில்லை. அப்போதிருந்த நிலைமையில் இதுபோன்ற இளைஞர்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் சந்திப்பதற்கோ அல்லது கிறிக்கெற் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.
போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த அந்தக் காலப்பகுதில் பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கத்துடன் கடைப்பிடிக்கப்பட்டன.
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரினால் யாழ்ப்பாணக் குடாநாடு நேரடியாகப் பாதிக்கப்படாதபோதும் இறுதிப் போர் தந்த தாக்கங்களைக் குடாநாட்டு மக்களும் உணர்கிறார்கள்.
"அந்தக் காலம் வித்தியாசமானது. அடிக்கடி ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதால் குடாநாட்டுக்குள்ளேயே பயணம் செய்வது சிக்கல் நிறைந்ததொன்று" என சாள்ஸ் கூறுகிறார்.
ஓகஸ்ட் 11 2006ல் ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது யாழ்ப்பாணக் குடாநாடுதான். வட போரரங்கில் மோதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து முகமாலைச் சோதனைச் சாவடி மூடப்பட்டது.
இந்த நெடுஞ்சாலை மூடப்பட்டமையானது குடாநாடு நாட்டின் பிற பாகங்களிலிருந்து துண்டிக்கப்படுவதற்கு வழிசெய்தது. இதன் பின்னர் கடல் மற்றும் ஆகாய மார்க்கங்கள் ஊடாகவே குடாநாட்டுக்கான பயணங்கள் இடம்பெற்று வந்தன.
"பொருட்கள் எங்களது கைகளுக்குக் கிடைக்கும் வரைக்கும் அவை கிடைக்குமா இல்லையா எனத் தெரியாத ஒரு நிச்சயமற்ற நிலைமையிலேயே நாங்கள் அப்போது இருந்தோம்" என மொத்த விற்பனை முகவரான ஜே.சத்தியமூர்த்தி கூறுகிறார்.
"ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்ட நிகழ்வு குடநாட்டு மக்களின் வாழ்க் கையில் முக்கியமானதொரு கட்டமாக மாறியது.
உள்ளூர் உற்பத்திகளிலும் கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்படும் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பொருட்களிலும் தங்கியிருக்கவேண்டிய நிலைக்கு குடாநாட்டு வாசிகள் தள்ளப்பட்டனர்.
கடல்வழியாகப் பொருட்களைத் தருவிக்கும் போது அதன் செலவு அதிகம். அத்துடன் வேண்டியபோது பொருட்கள் வந்து சேர்வதில்லை."
ஆனால் இன்று குடாநாட்டில் வியாபாரம் முழுவேகம் கண்டிருக்கிறது.
"நெடுஞ்சாலை தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக தேவையான பொருட்கள் குடாநாட்டுக்குத் தங்குதடையின்றி வந்து சேர்கிறது.
ஆதலினால் குறித்ததொரு பொருள் கொழும்பில் விற்கப்படும் விலை எதுவோ அதே விலைக்கே குடாநாட்டிலும் மக்கள் அதனைப் பெறமுடிகிறது" எனத் தொடர்ந்தார் சூரியமூர்த்தி.
அத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் உள்ளூர் உல்லாசப் பயனிகளின் படையெடுப்பு அதிகரித்திருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நூலகம், கசூரினா கடற்கரை ஆகியன குடாநாட்டில் உள்ளூர் உல்லாசப் பயணிகள் படையெடுக்கும் இடங்களில் முதன்மையானவை.கட்டுக்கடங்காத வகையில் தென்பகுதி மக்கள் குடாநாட்டுக்குப் படையெடுப்பதையடுத்து யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளெங்கும் தற்போது தங்ககங்கள் முளைவிட்டிருக்கின்றன.
"யாழ்ப்பாணத்தினைப் பற்றியும் அதன் மக்கள் பற்றியும் தென்பகுதி மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். போர் முடிவுக்கு வந்தமையானது பெருந்தொகையான தென்பகுதி மக்கள் குடாநாட்டுக்கு வருவதற்கு வழிசெய்திருக்கிறது.எங்களுக்குச் சிங்களம் தெரியாது. ஆனால் தற்போது குடாநாட்டு வியாபாரிகள் அனைவரும் தங்களது பொருட்களைச் சிங்கள மக்களுக்கு விற்கும் அளவிற்குத் தற்போது சிங்களத்தைக் கற்றுவிட்டார்கள்' என்றார் சூரியமூர்த்தி. 'The Nation' என்னும் இணைய ஊடகத்தில் Arthur Wamanan எழுதியுள்ளார். அதனை புதிப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.
தமிழ் வளர்க்கும் முன்னோடி கிராமம்!அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழ் முறையை அடிப்படையாக கொண்டே
பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தில், தமிழ் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஊரிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ளனர். கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் வீட்டு விசேஷங்கள் அனைத்தையும் தமிழ் முறைப்படி கொண்டாடுகின்றனர் கிராம மக்கள்.
நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமங்களையும் ஆங்கில மோகம் ஆக்கிரமித்து வருகிறது. தமிழ் மொழியை ஊக்குவிக்க அரசு பல சலுகைகள் அளித்தாலும், ஆங்கிலம் மீது இருக்கும் ஈர்ப்பால், கிராமங்களில் கூட தமிழ் வாசகங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியம் வாழைக்கொம்பு நாகூர் கிராமத்தில் தெருக்களுக்கு தமிழ் மாதத்தின் பெயரை சூட்டி, தமிழ் மீதுள்ள ஆர்வத்தை வெளிகாட்டியுள்ளனர், கிராம மக்கள். ஊராட்சியில், மொத்தம் 12 வீதிகள் உள்ளன. அனைத்திற்கும், சித்திரை வீதி, வைகாசி வீதி என 12 தமிழ் மாதங்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். இதுதவிர, கிராமத்திலுள்ள கோவில் நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள் அனைத்தும் தமிழ் முறைப்படியே கொண்டாடப்படுகிறது.
வாழைக்கொம்பு நாகூர் ஊராட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது: பல ஆண்டுகளாக ஊராட்சியிலுள்ள வீதிகளுக்கு பெயர் சூட்டப்படவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன், நிர்மல் புரஸ்கார் விருதுக்கு இந்த ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அப்போதுதான், ஊராட்சியிலுள்ள தெருக்களுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். தெருக்களுக்கு சூட்டப்படும் பெயர் அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தலைவர்கள் பெயரை சூட்டினால், சாதி பெயரையும் இணைக்க வேண்டியிருக்கும் என்பதால், முழுவதும் தமிழ் பெயராக சூட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 12 வீதிகளாக பிரித்து சித்திரை, வைகாசி என 12 தமிழ் மாதங்களின் பெயர்களை சூட்டினோம். தமிழ் மாத பெயராக சூட்டியதால், அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொண்டனர். தமிழ் மீதுள்ள பற்று காரணமாக இதுபோல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு சூட்டியுள்ள பெயரை அரசும் அங்கீகரித்துள்ளது. இங்குள்ள கோவில்களில், கும்பாபிஷேகம், ஆண்டு விழா, அர்ச்சனை பூஜை உட்பட அனைத்து விசேஷங்களும் தமிழ் முறைப்படியே கொண்டாடப்படுகிறது.
கோவில்கள் மட்டுமின்றி, வீட்டில் நடக்கும் கல்யாணம், புதுமனை புகுவிழா என அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழ் முறையை அடிப்படையாக கொண்டே நடக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் மந்திரங்களின் விளக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இளம் தலைமுறையினர் மத்தியில் தமிழ் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், முற்றிலும் வட மொழி பெயர்களை தவிர்த்து அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ் பெயர் சூட்டப்படுகிறது. இவ்வாறு, ராமசாமி கூறினார். கோவை மாவட்டத்திலேயே தெருக்களுக்கு தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ள முதல் கிராமமாகிய வாழைக்கொம்பு நாகூரில், தமிழ் மணம் கமழ்கிறது.
வழிபாட்டு தெய்வமாக குதிரை: வாழைக்கொம்பு நாகூரிலுள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், குதிரை வழிபாட்டு தெய்வமாக உள்ளது. புதிதாக எழுப்பப்படும் கோவில்களிலும், குதிரை சிலைகள் கட்டாயம் நிறுவப்படுகிறது. இது குறித்து ஊராட்சி தலைவர் ராமசாமி கூறுகையில், "அம்மனின் முக்கிய வாகனங்களில்,குதிரை உள்ளது. இதனால், அனைத்து அம்மன் கோவில்களிலும், குதிரை வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இங்குள்ள கோவில்களில், நேர்த்திக்கடன் நிறைவேற்றும் வகையில், குதிரை சிலை வைத்து வழிபடுவது வழக்கம்' என்றார்.

Air port visa no more? வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்
வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்
இலங்கையில் வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கி வீசாக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி இருக்காது எனக் குறிப்பிடப்படுகிறது. சகல நாடுகளுக்குமான ஒன் எரைவல் வீசாக்களை ரத்து செய்வதென இலங்கை அரசாங்கசம் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மாலை தீவு ஆகிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் இலங்கைக்கு வந்து இறங்கியதன் பின்னர் (ஒன் எரைவல்) வழங்கப்படும் வீசாக்கள் ரத்து செய்யப்படவுள்ளது. இந்த புதியத் திட்டத்தின் அடிப்படையில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு செல்ல வீசா விண்ணப்பிக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி டபிள்யூ.ஏ.சீ பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த நாடுகளுக்கான இலங்கைத் தூதரகத்தில் வீசா விண்ணப்பித்து அதன் பின்னரே இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும். எனினும், இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன் எரைவல் வீசா வழங்கும் நாடுகளினது பிரஜைகளுக்கு இலங்கை ஒன் எரைவல் வீசா வழங்கத் தயார் என அறிவித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைத் தவிர்ந்த வேறு நாடுகளில் இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன் எரைவல் வீசா வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
விஜயகாந்த்தின் வாக்கு வங்கி குறைகிறது: திருமாவளவன்
திருச்சி கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழு மாநாடு, திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு தலைமை ஏற்று பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அக்டோபர் 10ஆம் தேதி தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களை திரட்டி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் நிரூபிக்கும் வண்ணம், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும்.
தமிழகத்தில் அதிமுக, திமுகவை அடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கிகளை பெற்றுள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதை ஏற்றுக்கொள்ள ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் மறுக்கின்றனர்.
1999ஆம் ஆண்டு முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியில் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் நடிகர் விஜயகாந்த் கட்சி திமுக, அதிமுகவுக்கு பிறகு மாற்று சக்தியாக ஊடகங்கள் தூக்கிப் பிடித்து வருகின்றன.
சமீபத்தில் சோலை என்கிற எழுத்தாளர் கட்டுரை எழுதியிருந்தார். அவர் முதிர்ந்த அரசியல ழுத்தாளர். அவர் தனது கட்டுரையில் திமுகவும், அதிமுகவும்
திமுகவும், அதிமுகவும் தனக்கு அடுத்தப்படியாக வாக்கு வங்கிகள் கொண்ட கட்சி பாமகதான் என்று நம்பி ஏமாந்து போய்விட்டார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு வங்கி கொண்ட அடுத்த கட்சி என்று எழுதியிருக்கிறார்.
அதேபோல தமிழகத்தில் செல்வாக்கு உள்ள அரசியல் தலைவர் பட்டியலில் நான்காம் இடத்தை நமக்கு தந்திருக்கிறார்கள். இப்படி மற்ற ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மாற்று சக்தியாக விடுதலைச் சிறுத்தைகளை ஏற்று கொள்ளாத நிலையிலும், தவிர்க்க முடியாமல் சிலர் பதிவு செய்கிறார்கள் என்றார்.

57 நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர் : 73 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்!
கனடாவுக்கு 492 தமிழர்கள் கப்பலில் சென்று புகலிடம் கோரியுள்ள நிலையில் போலி அகதிகள் கனடாவுக்கு பெரும் எண்ணிக்கையில் செல்வதாக கூறப்பட்டாலும் உண்மைகள் வேறுபட்டவையாக உள்ளதாக அந்நாட்டுப்பத்திரிகையான “வன்கூவர்சன்” தெரிவித்திருக்கிறது.
உலகிலுள்ள செல்வந்த நாடுகளுக்குச் செல்லும் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை சடுதியா அதிகரித்திருக்கவில்லை என்று அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் கூறுகிறது.சில நாடுகளில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேசமயம், வேறு சிலநாடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் யூ.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.19 நாடுகளில் எண்ணிக்கை அதிகரித்தும் 25 நாடுகளில் குறைவடைந்தும் உள்ளது. சராசரியாக சிறியளவு மாற்றமே ஏற்பட்டுள்ளது.
2009 இல் ஸ்காந்திரேலிய நாடுகள் புகலிடம் கோரும் விண்ணப்பங்களை அதிகளவில் பெற்றுள்ளன.2008 இலும் பார்க்க 13 சதவீதத்தால் இத்தொகை அதிகரித்துள்ளது.தெற்கு ஐரோப்பாவில் புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் அதிகளவுக்கு வீழ்ச்சிகண்டுள்ளன. சில இடங்களில் உதாரணமாக இத்தாலியில் 42 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அகதிகளை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் பாராட்டுக்குரிய நாடாக கருதப்படும் அதாவது உலகில் மூன்றாவது இடமாக விளங்கும் கனடாவில் புகலிடம் கோருவோர் தொகை 10 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது.ஹெயீட்டி,மெக்ஸிக்கோவிலிருந்து புகலிடம் கோருவோர் தொகை குறைவடைந்ததே இதற்கான பிரதான காரணமாகும்.அதேசமயம்,ஜேர்மனியில் புகலிட விண்ணப்பங்கள் 25 சதவீதத்தாலும் பிரான்ஸில் 19 சதவீதத்தாலும் அதிகரித்திருக்கிறது.
அகதிகளுக்கு உதவுவதில் இரண்டு விதமான ஏற்பாடுகளை கனடா கொண்டிருக்கிறது. நாட்டிற்கு வெளியேயிருந்தவாறு புகலிடம் கோருவோர் இந்த முறைமையின் கீழ் உள்ளடக்கப்படுகின்றனர். இவர்கள் முகாம்களில் நிராதரவாக இருப்பவர்களாகும். இந்த அகதிகளில் 1 இலட்சம் பேரை வருடாந்தம் 20 நாடுகள் உள்ளீர்க்கின்றன. கனடா 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் பேரை உள்ளீர்க்கிறது. அதாவது அகதிகளில் 10 இல் ஒருவரை கனடா உள்ளீர்க்கிறது.
இரண்டாவது ஏற்பாடானது உள்நாட்டு புகலிடமுறைமையாகும். சித்திரவதை,கொடூரமான வழமைக்கு மாறான தண்டனை ஆபத்தை எதிர்நோக்கும் அகதிகளுக்கு பாதுகாப்பளிப்பது இரண்டாவது முறைமையில் அடங்குகிறது. அதாவது தமது தாய்நாட்டிலிருந்து கனடாவுக்கு நேரடியாக வருவோர் இந்த அகதிகளாகும்.
2009 இல் கனடாவுக்கு 34 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.இந்த வகையான அகதிகள் உலகளாவிய ரீதியில் 377,200 பேர் உள்ளனர்.343,000 பேர் ஏனைய நாடுகளில் புகலிடம் கோரியுள்ளனர்.இந்த முறைமையில் உள்ளடக்கப்படுவோரின் விண்ணப்பங்களை கனடிய குடிவரவு பிரஜாவுரிமை அதிகாரி பரிசீலனை செய்து தீர்மானிப்பார்.குடிவரவு அகதிகள் சபைக்கு இந்த விடயம் பாரப்படுத்தப்படும்.இந்த முறைமையே தற்போது புகலிடம் கோரும் எம்.வி.சன்சீ கப்பல் தமிழர்களுக்கு இடம்பெற்று வருகிறது.
இதேவேளை,கனடாவுக்கு வரும் தமிழ் அகதிகள் தமது அயல்நாடுகளுக்கு செல்வதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், பிந்திய தகவல்களின் பிரகாரம் 146,098 அகதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் 126,955 பேர் வேறு நாடுகளில் இருப்பதாகவும் யூ.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.உண்மையில் 73 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.அத்துடன், 57 நாடுகளில் அகதிகளாக புகலிடம் கோரியுள்ளனர்.உலகில் மிகவும் ஆபத்தான பிராந்தியங்களில் சோமாலியா 93 சதவீதமாகவும் எரித்திரியா 94 சதவீதமாகவும் இலங்கை 92 சதவீதமாகவும் பட்டியலிடப்பட்டிருந்தது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)