கலைஞர் செய்திகள் : நம் இலக்குக்கு ‘திராவிட மாடல்’.. ஓராண்டு நிறைவையொட்டி பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை!
என்னுடைய கவலையெல்லாம், என்னுடைய பயமெல்லாம் இந்த நம்பிக்கையை எப்போதும் நாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அளித்தார்.
அந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. அதில், முக்கியமாக அரசு கடந்த ஓராண்டில் கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சனி, 7 மே, 2022
நம் இலக்கு ‘திராவிட மாடல்’.. ஓராண்டு நிறைவையொட்டி பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை!
அரசு பேருந்தில் பயணித்த முதல்வர் ... ஓராண்டு நிறைவு!
மின்னம்பலம் : முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் (மே 07) ஓராண்டு நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக் கூறி முதல்வராக உறுதிமொழி ஏற்றார்.
ஓராண்டு நிறைவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தன்னுடைய தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் : தமிழகக் குழந்தைகள் அனைவரையும் திடமான, ஊட்டச்சத்துக் குறைபாடில்லாதவர்களாக மாற்றுவதற்கான திட்டமாக இதனை நாம் வடிவமைத்துள்ளோம்.
ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாசித்தார். அவர் பேசியதாவது:-
ஓராண்டு முடிந்து, இரண்டாவது ஆண்டு தொடங்கும் இந்த மகிழ்ச்சிக்குரிய நாளில் மக்கள் மனம் மகிழும் சில அறிவிப்புகளை நான் வெளியிட இருக்கிறேன். சில மிக முக்கியமான ஐந்து பெரும் திட்டங்களை இந்த மாமன்றத்திற்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
காபியில் சேர்க்கப்படும் சிக்கரி உடல் நலத்திற்கு கேடு?
சிக்கரி நல்லதா.? கெட்டதா.? இதில் நமக்கு ஏதும் தீமை இருக்கிறதா.?
காலையில் எழுந்ததும் பெட் காபி இல்லை என்றால் அன்றைக்கு பலருக்கு வேலையே ஓடாது. பில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி இவ்வாறு பல விதமான காபிகளைக் குடித்து வருகிறோம்.
நாம் பயன்படுத்தும் காபி பொடியில் வெறும் காபி கொட்டை இல்லை...
ஒரு ஸ்பூன் காபி பொடியுடன், கால் ஸ்பூன் அளவுக்கு சிக்கரி என்ற பொருளையும் கலந்து விற்று வருகிறார்கள்.
"சிக்கிரி" என்றால் என்ன..?
"சிக்கரி" என்பது ஒரு தாவரம்..
சிக்கிரி செடியின் வேரை உலர்த்தி, வறுத்து, பொடித்து தயாரிக்கப்படுவது தான் சிக்கரி பொடி.
சிக்கிரி பார்ப்பதற்கு முள்ளங்கி மாதிரி இருக்கும்.
இந்த சிக்கரி செடி பிரான்ஸ் நாட்டில் எல்லா இடத்திலும் காட்டுச் செடி மாதிரி வளர்ந்து இருந்தது. அங்கிருந்து தான் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
வெள்ளி, 6 மே, 2022
வரலாற்று விழுமியங்களை விழுங்கிய மதங்கள் - Religion alone is not culture; it can be the thing that erases it.
மதம் ஒரு கலாச்சார அடையாளம் என்ற பொய்யான கருத்து பல மதவாதிகளால் தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது
உண்மையில் ஒரு இனக்குழுவின் வரலாற்று அடையாளங்களை வரலாற்று விழுமியங்களை மோசமாக அழித்து அவர்களை வெற்று பொருட்களாக மாற்றும் விடயத்தைதான் பெரும்பாலும் மதங்கள் செய்திருக்கின்றன இன்று வரை செய்துகொண்டும் இருக்கின்றன
வரலாறு உருத்தெரியாமல் அழிக்கப்படும்போது கூடவே பல வாழ்வியல் விழுமியங்களும் அழிகின்றன
இதற்கு உதாரணங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது
மதங்களின் போர்வையில் மக்களை டம்மி பீஸ்களாக மாற்றும் புரோசஸ்,
வெறுமனே ஒரு சில மதங்களில் மட்டும்தான் நடக்கிறது என்று கருதவேண்டாம்
ஏறக்குறைய எல்லா மதவாதிகளும் இதைத்தான் செய்கிறார்கள்
வாழ்வியலின் வண்ணங்களை உருத்தெரியாமல் அழிப்பவை போர்கள் மட்டுமல்ல ...
உண்மையில் பல போர்களுக்கே மதங்கள்தான் காரணம்
சேகர் ரெட்டி வீட்டில் இருந்தது பழைய 12 லட்சம் ரூபாய்தான்: அமலாக்கத்துறை வழக்கு ரத்து- உச்ச நீதிமன்றம்
அப்போது இந்தியாவில் பலரும் பணம் இன்றி தவித்துக் கொண்டிருந்த நிலையில், தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான அலுவலகங்கள் வர்த்தக வளாகங்களில் 2016 டிசம்பரில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அப்போது சுமார் 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதனடிப்படையில் சேகர் ரெட்டி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று சென்னை விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது சிபிஐ. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சேகர் ரெட்டி மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
தமிழ்நாடு: டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இணையாக வளரும் விவசாயப் பொருளாதாரம்..!
Prasanna Venkatesh - GoodReturns Tamil : மத்திய அரசு டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதே அளவிற்கு முதல் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்த முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கொடுக்கிறது.
இதற்கான முதல் படி தான் விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை.
விவசாயம்
தமிழ்நாட்டில் பெரும் பகுதி மக்கள் தொகை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறையில் இருக்கும் நிலையில் தமிழக அரசின் இந்தத் தனிப் பட்ஜெட் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.
குறிப்பாகத் தற்போது நாடு முழுவதும் உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கும் நிலையில், விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் ஒவ்வொரு மாநிலத்திற்கும் முக்கியமானதாக விளங்குகிறது.
ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன இறைச்சி - கேரளாவை போல் மதுரையிலும் - ஆய்வில் அதிர்ச்சிஆய்வில் அதிர்ச்சி
hindutamil.in/ne -ஒய். ஆண்டனி செல்வராஜ் : கேரளாவை போல் மதுரையிலும் ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன இறைச்சி - ஆய்வில் அதிர்ச்சி
மதுரை: கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியான நிலையில் மதுரையில் உள்ள சிக்கன் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், குளிர்சாதனப்பெட்டிகளில் பழைய கெட்டுப்போன சிக்கன் வைத்திருந்தது தெரியவந்தது.
தமிழத்தில் எந்த ஊருக்கு போனாலும் அந்ததந்த ஊர்களுடைய ‘ஸ்பெஷல்’ உணவுகளை சாப்பிடுவது உணவுப் பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும். அப்படி சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற மதுரை அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள ஒவ்வொரு ஹோட்டல்களிலும் பல்வேறு பிரத்யேகமான அசைவ உணவு வகைகள் இருக்கின்றன. தற்போது மதுரையில் பாரம்பரிய உணவு வகைகளை தவிர நவீன பாஸ்ட் புட் இறைச்சி உணவகங்கள் எண்ணிக்கையும் பெருகிவிட்டது.
அந்த வகையில் மதுரையில் மூலைக்கு மூலை பர்கர், கிரில் சிக்கன் விற்பனை செய்யும் சிக்கன் ஷவர்மா கடைகள் அதிகமாக உள்ளது.
கொரோனா மரணங்கள் இந்தியாவில் மறைக்கப்பட்டது? 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழப்பு என WHO அறிக்கை
Noorul Ahamed Jahaber Ali - Oneindia Tamil : டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்து இருக்கலாம் என்ற அதிர்ச்சிகர தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்
உலகளவில் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து அதுகுறித்த முன்னெச்சரிக்கைகளையும், நோய் பரவல் குறித்த விபரங்களையும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
47 லட்சம் பேர் கூடுதலாக பலி
சுற்றுலா தலங்களை இணைக்கும் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்: சுற்றுலாத் துறை!
மின்னம்பலம் : சென்னையில் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ‘எங்கும் ஏறலாம்: எங்கும் இறங்கலாம்’ என்ற திட்டத்தைச் சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொது, தனியார் பங்களிப்புடன் ஹாப் ஆன் , ஹாப் ஆப் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்ற திட்டத்திற்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலம் நவீன வசதிகளுடன் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
வியாழன், 5 மே, 2022
தமிழ்நாடு முதல்வர் திரு மு க ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் திரு மஹிந்த ராஜபக்ச அவர்கள் நன்றி அறிவிப்பு கடிதம்
இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின்
தமிழ்நாடு மாநில அரசு
இந்தியா .
திரு மு க ஸ்டாலின் அவர்களே!
தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின் படி இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு,
தமிழ்நாட்டில் இருந்து உணவு , அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களின் நல்லெண்ணத்தை குறித்து நிற்கிறது.
delhi பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்- டெல்லியில் பரபரப்பு
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அங்கு இருந்த இரண்டு பள்ளி மாணவிகளின் ஆடையை கழட்டியுள்ளார். மேலும் அந்த நபரும் தன் ஆடையை அவிழ்த்து வகுப்பறையின் முன் சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாணவிகள் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் தங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு விடும் என இருவரும் அமைதியாக இருந்துள்ளனர். மேலும் பள்ளி மாணவிகளிடமும் இந்த சம்பவத்தை மறந்துவிடும் படி கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தற்போது டெல்லி பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் நடமாட முடியாது: எச்சரிக்கும் ஜீயர்
மின்னம்பலம் : தருமபுரம் ஆதீனத்தில் நடக்க இருந்த பட்டின பிரவேசம் என்ற நிகழ்ச்சியை, மனிதரை பல்லக்கில் வைத்து மனிதர் தூக்கக் கூடாது என்ற புகார்களின் விளைவாக கோட்டாட்சியர் நடத்தத் தடை விதித்தார்.இது தமிழ்நாடு அளவில் விவாதம் ஆனது.
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடக்கும் இந்த பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தார். இதுபற்றிப் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மே 4ஆம் தேதி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிரான தனது கருத்துக்களை கடுமையாக தெரிவித்துள்ளார்.
தமிழில் அர்ச்சனை செய்தால் பங்குத்தொகை.. அறநிலையத்துறை அறிவிப்பு!
கலைஞர் செய்திகள் - ஜனனி : நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு மணிமண்டபம், 1500 கோவில்களில் 1000 கோடியில் திருப்பணிகள் என பல முத்தான திட்டங்கள் குறித்து அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
அந்த வகையில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அறிவிக்கப்பட்ட அறிவிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அதன்படி, அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் இருந்து 60 சதவிகிதம் பங்குத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் கிடையாது! அமைச்சர் சிவசங்கர் அதிரடி!
மாலைமலர் : தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது, அவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் முடிவெடுக்கவில்லையென்றால், நாங்கள் எடுப்போம்"- பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!
நக்கீரன் : பேரறிவாளனை விடுதலைச் செய்யக்கோரும் விவகாரத்தை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலைச் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டு மனு இன்று (04/05/2022) உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரர் ராவ் மற்றும் கவாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டு நடப்பதில் சில சிக்கல்கள் உள்ளன என்று வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநர் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய நிலையில், தேவையில்லாமல் குடியரசுத்தலைவருக்கு அனுப்புகிறார் என்று வாதிட்டார்.
நடிகர் சிரஞ்சிவி : சிவாஜி என் டி ஆர் ராஜ்குமார் விஷ்ணுவர்தன் ஆகியோர் இந்தி சினிமாக்காரர்களால் அவமான படுத்த பட்டனர்
tamil.filmibeat.com : ஹைதராபாத்: இந்தி படங்கள் மட்டும் தான் இந்திய படங்கள் என்கிற பிம்பத்தை பல ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருந்தனர் என சமீபத்தில் ஆச்சார்ய பட விழாவில் கண்கலங்கி நடிகர் சிரஞ்சீவி பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், என்.டி. ராமராவ், ராஜ்குமார், நாகேஷ்வர ராவ், விஷ்ணுவர்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என அவர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.
டெல்லிக்கு தேசிய விருது பெற சென்றிருந்த போது தனக்கு நேர்ந்த அவமான நினைவுகளை பகிர்ந்திருந்தார் சிரஞ்சீவி.
புதன், 4 மே, 2022
இலங்கைக்கு காங்கிரஸ் 10 லட்சம் ராஜீவின் பூமாலை!
மின்னம்பலம் : பொருளாதார நெருக்கடியால் இலங்கை நாட்டில் மக்கள் அன்றாட பயன்பாட்டுக்கு உரிய பொருள்களுக்கும் அடிப்படை உணவு பொருட்களுக்கும் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழக அரசு சார்பில் இலங்கை தமிழ் மக்களுக்கும் தமிழரல்லாத சிங்கள மக்களுக்கும் சேர்த்து நிவாரணப் பொருட்கள் ஒன்றிய அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்காக உதவி செய்வதற்கு நிதி உதவி செய்யும்படியும் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருக்கிறார். அதன் அடிப்படையில் திமுக ஒரு கோடி ரூபாயை இலங்கை மக்களுக்காக அளித்துள்ளது. இதுபோல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தனது குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாயை இலங்கை மக்களின் நிவாரண உதவிக்காக அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து 6 மாநிலங்கள் எம்பிக்கள் திமுகவுக்கு 4 ..அதிமுகவுக்கு 2.... தங்கத்தமிழ் செல்வனுக்கு உறுதியாம் ..
Vignesh Selvaraj - Oneindia Tamil : சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆறு எம்.பிக்கள் உட்பட, 20 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூனில் முடிவுக்கு வருகிறது.
காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படப் போவது யார் என்பது குறித்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.
தி.மு.கவில் இருவர் பெயர் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால் மற்ற இரு இடங்களுக்கான போட்டி மும்முரமாக நடந்து வருகிறது.
அ.தி.மு.கவில் யார்? ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட 36 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பதால், தி.மு.க சார்பில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அ.தி.மு.க சார்பில் இரண்டு எம்.பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னொரு உறுப்பினர் யார் என்பதில்தான் இழுபறி நீடிக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கோகுல இந்திரா, பொன்னையன் ஆகியோருக்கு இடையே எம்.பி ரேஸ் நடைபெறுகிறது.
சோப்புத்தூளில் மாங்காய்கள் ஊறவைக்கப்பட்டு சலவை செய்யப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி
நக்கீரன் : சோப்புத்தூளில் மாங்காய்கள் ஊறவைக்கப்பட்டு சலவை செய்யப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மாம்பழம் சீசன் தொடங்கி விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிக மாம்பழ தோட்டங்களும் கடைகளும் சாலையோரத்திலேயே உள்ள நிலையில் மாம்பழங்களை சர்ப் எக்ஸல் பவுடரில் ஊறவைத்து கழுவும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
10 நிமிடம் சோப்புத்தூளில் ஊறவைக்கப்படும் மாம்பழங்கள் எடுக்கப்பட்டு அதன்மேல் உள்ள கருப்பு கறைகள் நீக்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது - டிஜிபி சைலேந்திர பாபு
News18 Tamil - ANBARASAN : சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக கடந்த மாதம் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷிடம் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 19ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
வலிப்பு வந்து விக்னேஷ் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தார் தரப்பில் குற்றம்சாட்டினர்.
மேலும், விக்னேஷை காவல்துறையினர் துரத்திச் சென்று தாக்கும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை ஆதீனம் போர்க்கொடி .உயிரே போனாலும் பரவாயில்லை; நானே சென்று பல்லக்கை சுமப்பேன்!
நக்கீரன் : தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடைவிதித்தது வருத்தம் அளிக்கிறது என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், "சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறது.
தருமபுர ஆதீனம் பல்லக்கை தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது.
உயிரே போனாலும் பரவாயில்லை.
நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்.
500 ஆண்டுகளாக வராத சட்ட ஒழுங்கு பிரச்சனை இப்போது ஏன் வருகிறது. காலங்காலமாக நடக்கும் பாரம்பரியத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது.
கட்டுக்கட்டாக ஊழல் குற்றச்சாட்டு கோப்புக்களை மக்கள் முன்வைத்த ஜேவி பி தலைவர் அனுரா குமார
tamil mirror : முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
4100 மில்லியனுக்கான ஜின் நில்வால திட்டத்துடன் சீனா CAMC இன்ஜினியரிங் கோ லிமிடெட் ஒப்பந்தம் மிகவும் பிரபலமற்ற ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
சீனா சி.ஏ.எம்.சி இன்ஜினியரிங் கோ லிமிட்டெட் ஹொங்கொங்கில் வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருக்கும் நிலையில், அது தனித்தனி சந்தர்ப்பங்களில் 5 மில்லியன் டொலர்களை ரூட் இன்டர்நேஷனலுக்கு வழங்கியுள்ளது.
செவ்வாய், 3 மே, 2022
தி.மு.க சார்பில் ரூ.1 கோடி இலங்கை மக்களுக்கான உதவிக்கு வழங்கப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கலைஞர் செய்திகள் Lenin : இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தி.மு.க சார்பில் ரூ.1 கோடியும்,தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அஅறிவித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம்.
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மாலைமலர் : இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான மத்தியய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
திமுக ... அதிமுக போன்று, மற்றொரு நிறுவனமாக மாறிக் கொண்டு வருகிறது?
Kandasamy Mariyappan : வலதுசாரிகளால் இந்திய ஒன்றியத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் தீவிரவாதம் வளர வாய்ப்புள்ளது.!
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகள் குறைந்த பிறகு, இந்திய ஒன்றியத்தில் ஜனநாயகம் இறந்துவிட்டது.!
காங்கிரஸ் கட்சி அழிந்தே விட்டது.!
தமிழ்நாட்டை திமுக மட்டுமே காப்பாற்றும் என்று எண்ணியிருந்த நிலையில்., அது அதிமுக போன்று, மற்றொரு நிறுவனமாக மாறிக் கொண்டு வருகிறது.!
திமுக மாணவரணி 85களோடு முற்று பெற்றுவிட்ட பிறகு..,
DYFI, SFI போன்ற இளைஞர்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறைந்த பிறகு...,
பள்ளி கல்லூரிகளில் ABVP போன்ற வலதுசாரிகளின் இயக்கங்கள் வலுப்பெற ஆரம்பித்து விட்டன.!
இது எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தான ஒன்று.!
தமிழ் மீது, தமிழ் மக்கள் மீது, தமிழ்நாட்டின் மீது திமுகவிற்கு அக்கறை இருக்குமேயானால்..,
மாணவரணியை வலுப்படுத்த வேண்டும்.!
பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்குகிறார்? - மக்களை சந்திக்கப் போவதாக ட்வீட்
News18 Tamil : மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது, நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்கவுள்ளேன் என பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக நிபுணராக ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் திகழ்ந்து வருகிறார். பாஜக தொடங்கி, காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமதி வரை பல கட்சிகளுக்கு இவர் தேர்தல் வியூகங்கள் அமைத்து தந்து அதில் பல வெற்றியையும் கண்டுள்ளார்.
சமஸ்கிருத உறுதிமொழி: மாணவர்கள் விளக்கம்!
மின்னம்பலம் : மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது தொடர்பாக அக்கல்லூரி மாணவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது மருத்துவ மாணவர்கள் வழக்கமாக ஏற்கும் ஹிப்போகிரெடிக் உறுதிமொழிக்குப் பதிலாகச் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘மகரிஷி சரக சப்த’ என்ற உறுதிமொழி வாசிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திங்கள், 2 மே, 2022
சஞ்சீவி மலையை அனுமன் சுமந்த மாதிரி இலங்கை பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி .. இலங்கை மேதின விழாவில் பாஜக அண்ணாமலை
தினமலர் : கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இன்று நுவரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதுதொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
இலங்கையின் நுவேரா எலியாவில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) மே தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
நமது பிரதமர் மோடி அவர்கள், தமிழர்களுக்காகவும், இலங்கைக்காகவும் செய்யும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இன்று இங்குக் கூடியிருந்தனர்.
காரைக்காலில் எல்லை தாண்டிய 6 இலங்கை (சிங்கள) மீனவர்கள் கைது- சிறையில் அடைப்பு
Mathivanan Maran - Oneindia Tamil : s காரைக்கால்: இந்தியாவுக்குள் எல்லை தாண்டி ஊடுருவி மீன்பிடித்த 6 சிங்கள மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என தமிழக மீனவர்களை கைது செய்வதும் அவர்களை சிறையில் அடைப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடருகிறது.
இந்த நிலையில் காரைக்கால் இந்திய கடற்பரப்பில் இந்திய கடலோர காவற்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இந்திய எல்லைப் பகுதியில் விசைபடகு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அந்த படகில் வந்த 6பேரிடமும் கடலோர காவற்படையினர் விசாரணை நடத்தினர்.
செங்கல்பட்டு சட்டக்கல்லாரி மாணவி தற்கொலை ராகிங் காரணம் என தந்தை ...
விகடன் : செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவி தற்கொலைக்கு ராக்கிங்தான் காரணம் என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக்கல்லூரியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவாதூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் மகள் கவிப்பிரியா (வயது19) என்பவர் செங்கல்பட்டு சட்டக் கல்லூரி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி அவர் தனது விடுதி அறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற நாளை வரை காலக்கெடு- ராஜ் தாக்கரே எச்சரிக்கை
மாலைமலர் : உத்தரபிரதேச அரசால் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிகிற போது, மகாராஷ்டிரா அரசை தடுப்பது எது என்று, உத்தவ் தாக்கரேவுக்கு, ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.
அவுரங்காபாத்: மகாராஷ்டிரா தின கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:
மசூதிகளில் தொந்தரவாக இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மதப் பிரச்சினை அல்ல, இது ஒரு தேசிய பிரச்சினை.
ஞாயிறு, 1 மே, 2022
இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்
இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
கிழக்கு கடற்கரை சாலைக்கு ( ECR ) கலைஞர் பெயர்'-தமிழக முதல்வர் அறிவிப்பு! Muththamizh Arignar Kalaignar Road
நக்கீரன் செய்திப்பிரிவு : சென்னை கிண்டியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறையின் பவள விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர், ''மக்கள் பயன்பாட்டில் மிகவும் முக்கியமானத்துறை தமிழக நெடுஞ்சாலைத்துறை.
1946ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு இன்றோடு 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் இந்த நெடுஞ்சாலைத்துறைதான்.
1954 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி இந்தியாவிலேயே மாநில அளவிலான முதல் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் என்ற பெருமையைப் பெற்றது.
பன்னீர்செல்வத்தின் 15 ஆயிரம் கோடி பணம்... 15 ஆயிரம் ஏக்கர் நிலம்!, ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம்-10
விகடன் -ஜோ. ஸ்டாலின் தகவல் களஞ்சியம்! ·சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் முதலமைச்சரான ஜெயலலிதா பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அதற்காகவே ஐவர் அணி என்ற ஒன்றை ஆரம்பித்தார்ர. ஓ.பி.எஸ், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் அடங்கிய அந்த அணியில் ஓ.பி.எஸ் தவிர்த்த மற்ற நால்வருக்கும் முக்கியமான வேலையே ஓ.பி.எஸ்ஸைக் கண்காணிப்பதுதான். ஓ.பி.எஸ்ஸையும், ஓ.பி.எஸ்ஸைக் கண்காணிக்கும் மற்ற நால்வரையும் சேர்த்துக் கண்காணிக்க முன்னாள் டி.ஜி.பி அலெக்சாண்டர் தலைமையில் ஒரு ரகசிய ‘டீம்’ அமைத்தார். அந்த ‘டீம்’ ஐவரின் செயல்பாடுகள், சொத்துவிபரங்களைப் புட்டுப்புட்டு வைத்ததுடன், ‘ஐவரும் வேறு வேறல்ல... அனைவரும் ஒன்றே!’ என்று சொன்னது. அது ஜெயலலிதாவை அதிர்ச்சி அடைய வைத்தது; அலெக்சாண்டர் ‘டீம்’ கொடுத்த ஐவர் அணியின் சொத்துப்பட்டியல் சசிகலாவை ஆத்திரப்பட வைத்தது.
இதையடுத்துத்தான் ஐவர் அணியை கஸ்டடியில் எடுத்த போயஸ் கார்டன் ‘டீம்’ விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து அவர்களிடம் இருந்து பறிக்க வேண்டிய சொத்துகளை முடிந்தவரையில் பறித்தது. அப்படிப் பறிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு குத்துமதிப்பாக 30 ஆயிரம் கோடி.
மாரியம்மன் கோயில் தீக்குண்டத்தில் இருவர் தவறி விழுந்தனர் ..
tamil.samayam.com : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நல்லமாங்குடி கிராமத்தில் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி இன்று நடைபெற்றது. அதற்கு முன்னதாக மாரியம்மன் மற்றும் காத்தவராயன் சாமி அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனைத்தொடர்ந்து கோவிலின் முன்புறம் தீக்குண்டம் ஏற்றி 60 பக்தர்கள் தீ மிதிக்க தயாராகினர். இதற்காக முதலில் கரகம் ஏந்தி வந்த அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கரகத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கி பயபக்தியுடன் நடந்து சென்றார்.
உ.பி: மதவழிப்பாட்டு தளங்களில் இருந்து அதிக ஒலி எழுப்பும் 45 ஆயிரம் ஒலிப்பெருக்கிகள் அகற்றம்
தினத்தந்தி : லக்னோ, உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டு தளங்களில் பயன்படுத்தும் ஒலிப்பெருக்கிகள் பிறருக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த 18-ம் தேதி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மதவழிபாட்டு தளங்களில் ஒலிப்பெருக்கியின் ஒலி அளவை குறைக்கும்படியும், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் (நேற்று) அகற்றும்படியும் மாநில உள்துறை கடந்த 23-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து மாநிலம் முழுவதும் மத வழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.
பள்ளி மாணவரிடையே ஜாதி மோதல் .. மாணவன் உயிரிழப்பு .. 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு .. திருநெல்வேலி
Vigneshkumar - Oneindia Tamil : திருநெல்வேலி: நெல்லையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதி மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த சில காலமாகவே ஆசிரியர்களை மாணவர்கள் தரக்குறைவாகப் பேசுவது, மாணவர்களுக்கு இடையே கொடூரமாகத் தாக்கிக் கொள்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாகப் பல வாரங்களுக்குப் பின்னர், பள்ளிகள் இப்போது தொடங்கப்பட்டு உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஜாக்குலின் பெர்னாண்டஸின் 7 கோடி ரூபா மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
இந்தியாவில் மோசடிகளின் மன்னனாக அறியப்படும் சுகேஷ் சந்திரசேகர் பலரை ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குவித்திருந்தாலும், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு என்னவோ நல்லவராக நடந்துகொண்டிருக்கிறார்.
தான் சட்டவிரோதமாக குவித்த சொத்துகளிலிருந்து விலையுயர்ந்த உடைகள், நகைகள், கார் என ஜாக்குலினுக்கு பரிசுகளை வாரி இறைத்திருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர். இதுதான் தற்போது ஜாக்குலினுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.