சனி, 17 ஜூன், 2017

பன்னீர்செல்வம் ஸ்பாட் பேமென்ட் அதான் சுவர் ஏறி குதிச்சேன் .. சாக்கடை செல்வம்?

Prakash JP'. இதுவா... ஓபிஎஸ் உங்க "தர்ம" யுத்தம்?? நீங்கள் பன்னீரல்ல சாக்கடை.....
டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ரகசிய வீடியோவில், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ சரவணன் பேசியதின் முக்கிய சாராம்சம்.....
*அம்மாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை மர்மமும் இல்லை அதை எங்களின் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி கொண்டோம்.
*அம்மாவின் மரணம் குறித்து செய்வது எல்லாம் வெறும் அரசியல் தான்.
* கூவத்தூரில் சசிகலா தரப்புல இருந்து யாரும் நேரடியாக வந்து எங்களுக்கு பணம் தருகிறோம் என்று சொல்லவில்லை எங்களுக்குள்ளையே 2, 4, 6 கோடின்னு பேசிகிட்டோம்.
*ஓபிஎஸ் சைடில் இருந்து ஸ்பாட் பேமண்ட் ஒரு கோடி ரூபாய் தருகிறோம். வந்து எங்க தர்மயுத்தத்துல கலந்துக்குங்க தம்பின்னு சொன்னானுங்க.
*அதானால தான் தேவையில்லாம சுவர் ஏறி குதித்து வர வேண்டியதா போச்சு
*அணி தாவுவதற்காக OPS யிடம் ரூ.2 கோடி வாங்கியுள்ளேன்.
*மாஃபா பாண்டியராஜனுக்கு 25 கோடி ரூபாயும், ஒரு வீடும் OPS ஆல் கொடுக்கப்பட்டது.
*சசிகலா, எடப்பாடி பழனிசாமி மீது பொய் புகாரை பன்னீர் கொடுக்கச் சொன்னபோது, ரெண்டு பிட்டு கூட சேர்த்து புகார் கொடுங்க என கே பி முனிசாமி, நத்தம் விசுவநாதன் சொன்னார்கள்.

Helmut Kohl இரு ஜெர்மனிகள் இணைத்ததில் முதன்மை வகித்த முன்னாள் அதிபர் காலமானார்

முன்னாள் அதிபர் மறைவு!முன்னாள் மேற்கு ஜெர்மனி மற்றும் ஒருங்கிணைந்த ஜெர்மனியின் அதிபராகவும் இருந்த ஹல்மட் ஹோல் நேற்று உடல்நலமின்றி இறந்தார்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஜெர்மனி நாடு இரண்டாக உடைந்ததையடுத்து, கம்யூனிச கொள்கையில் கிழக்கு ஜெர்மனியும், மேற்கத்திய கொள்கையில் மேற்கு ஜெர்மனியுமாகப் பிரிந்தது. அதில், கிழக்கு ஜெர்மனிக்குக் கிழக்கு பெர்லினும், மேற்கு ஜெர்மனிக்கு பான் நகரும் தலைநகர்களாக இருந்தன. மேலும், பெர்லின் நகரில் இரு நாடுகளையும் பிரித்து, தடுப்பு சுவரும் எழுப்பப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலக நாடுகளின் பொருளாதாரநிலை தலைகீழாக மாறியது. அதையொட்டி, கிழக்கு ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வறுமை அதிகரித்தது. ஆனால், மேற்கு ஜெர்மனியிலோ தொழில்வளம் பெருகியது. அதையடுத்து, கிழக்கு ஜெர்மனியில் இருந்து பலர், மேற்கு ஜெர்மனிக்கு வேலைதேடியும், பொருளாதாரநிலை மாறவேண்டியும் இருநாடுகளுக்கிடையே இருந்த தடுப்புச்சுவரைத் தாண்டிக் குதித்து தப்பியோடினர். மேலும், கிழக்கு ஜெர்மனி மக்களும், மேற்கு ஜெர்மனியுடன் இணைவதற்கு விரும்பினர். ஆனால், கொள்கை ரீதியாக அமெரிக்காவும், ரஷ்யாவும் வேறுபட்டிருந்ததால் ஜெர்மனி நாடுகள் ஒன்று சேர்வதற்கு முட்டுக்கட்டை போட்டன. இவர் இலங்கையில் சுனாமியின் போது அங்கு இருந்தார்.பின்பு 90 கோடி ரூபாய்  நிதி உதவியில் (900-million rupee) மருத்துவமனை ஒன்றை அங்கு உருவாக்க முயற்சித்தார் .. அங்கு நிலவிய நிர்வாக சீர்கேட்டால் அது கைகூடாமல் போய்விட்டது ..

தடகளவீரர் மாரியப்பன் மீது கொலை சந்தேக குற்றச்சாட்டு ... சதீஷ்குமார் சேலத்தில் மர்ம மரணம் ..

இளைஞர் மரணம்! மாரியப்பனிடம்  விசாரணை!சேலத்தில் இளைஞர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பனிடம் விசாரணை நடத்தப்போவதாக சேலம் மாவட்ட போலீஸார் இன்று ஜூன் 17ஆம் தேதி தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது ஒலிம்பிக் போட்டியில் பாராலிம்பிக் பிரிவில் தங்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பனின் பெரியவடகம்பட்டி கிராமம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மூர்த்தி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடைய இளைய மகன் சதீஷ்குமார்(19). இவர் ஜூன் 3ஆம் தேதி பெரியவடகம்பட்டி மாரியம்மன் கோயில் அருகே தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பைக் சாலையில் இருந்த மணலில் சறுக்கி விழுந்ததில், அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் கார் மீது மோதியுள்ளார். இதில் காரின் பின் பகுதி சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

பெண்களை படம்பிடிப்பதை தடுத்தவர் அடித்து கொலை!..ராஜஸ்தான்

தவறை தட்டிக் கேட்டவர் அடித்து கொலை!மின்னம்பலம :பெண்களைச் செல்பேசியில் படம் பிடிப்பதை தடுத்த முதியவரை, மாநகராட்சி ஊழியர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப்கர் என்ற பகுதியில் பெண்கள் சிலரை நகராட்சி ஊழியர்கள் தங்களது செல்பேசியில் பெண்களை படம் எடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது, ஜாபர்கான் (55) என்பவர் அதைத் தடுத்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அந்த முதியவரைக் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் அவர் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார். பிரேத பரிசோதனையில், மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கர்ப்பிணிப் பெண்கள் துறவிகளாக இருக்க வேண்டுமா?

அ. குமரேசன் கர்ப்பிணிப் பெண்ணே நீ…
  • கறி, முட்டை சாப்பிடக் கூடாது
  • உடலுறவு கொள்ளக் கூடாது, தூய்மையான எண்ணங்கள்தான் மனதில் இருக்க வேண்டும்.
  • ஆசை, கோபம், பற்று, வெறுப்பு, காமம் ஆகிய உணர்வுகள் கூடாது.

  • -இதெல்லாம் யாரோ ஒரு தாய் அல்லது மாமியார் தனது மகள் அல்லது மருமகளுக்குச் சொன்ன அறிவுரை அல்ல. ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிக்கு வழங்கிய ஆலோசனையும் அல்ல. மத்திய அரசின் ‘ஆயுஷ்’ அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘தாயும் குழந்தை பராமரிப்பும்’ என்ற கையேட்டில் உள்ள அதிகாரப்பூர்வ வழிகாட்டல்களில் இந்த அறிவுரைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இம்மாதம் 21ம் தேதி உலக யோகா தினம் வருவதையொட்டி இந்த வெளியீடு.
    இந்தநூற்றுக்கு எழுபது பெண்கள் ரத்தசோகையால் பீடிக்கப்பட்டுள்ள, புரதச் சத்து பற்றாக்குறை உள்ள நாட்டில் இரும்புச் சத்தும் புரதமும் மிக எளிதாகக் கிடைப்பது இறைச்சி உணவுகளிலிருந்துதான். இந்தச் சத்துகள் மரக்கறி உணவுகளை விட மாமிசக்கறி உணவுகளில் மிகுதியாகக் கிடைக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ஆரிய படையெடுப்பு .. DNA .டி என் ஏ ஆதாரம் நிருபிக்கப்பட்டது .. இந்து பத்திரிக்கை கட்டுரை

    thetimestamil : இந்திய வரலாற்றில் ஆரியர்களின் வருகை இதுநாள் வரை கோட்பாடு அடிப்படையில் சொல்லப்பட்டு வந்தது. டிஎன்ஏ அடிப்படையிலான ஆய்வில் உலக அறிவியலாளர்கள் தற்போது இந்தக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களை வழங்கியுள்ளனர். இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழில்(ஜூன் 17, 2017) டோனி ஜோசப் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரையிலிருந்து சில குறிப்பிடத்தகுந்த கருத்துக்கள் மட்டும் இங்கே…
    • தந்தை வழியில் கடத்தப்படும் ’ஒய்’ குரோமோசோம்களைக் கொண்டு ஆரியர்களின் வருகையை அறிவியலாளர் நிரூபித்துள்ளனர். இதுநாள் வரை தாய் வழி எம்டி டிஎன்ஏக்களை வைத்துதான் ஆய்வு நடந்தது. அதில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை.
    • ஒய் டிஎன்ஏக்களுக்கும் எம்டி டிஎன்ஏக்களுக்கும் நேர் எதிரான ஆய்வு முடிவுகள் காணக்கிடைக்கின்றன. காரணம், வெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.
    • ஒய் டிஎன்ஏக்களின் ஆய்வில் 17.5% இந்திய ஆண்கள் ஹப்லோ க்ரூப் எனப்படும் ஆர்1ஏ என்ற பிரிவினர் ஒற்றை உறவு வழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
    • இந்த ஆர்1ஏ என்ற பிரிவினர் மத்திய ஆசியா, ஐரோப்பிய மற்றும் தெற்கு ஆசியாவில் விரவி இருக்கிறார்கள்.

    பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி கவிழ்தது இப்படிதான் ....

    சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவில் (video leaked for shocking in panneerselvam) பன்னீர் அணியை சேர்ந்த எம்எல்ஏ சரவணன் பேசியிருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வீடியோவில் சரவணன் பன்னீர் அணியை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியிருப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளதால் பன்னீர் அணி கடும் அப்செட்டில் இருக்கிறதாம். மேலும் எடிட் செய்யப்படாத முழுமையாக வீடியோவை பார்த்தவர்கள் கூறுகையில் அந்த வீடியோவால் பன்னீர் அணிக்கு தான் பின்னடவை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார்கள். அந்த வீடியோவில் வெளிவராத ரகசியங்கள் என்ன தெரியுமா? அதில், பன்னீர் அணி குறித்து சரவணன் பேசுகையில், அம்மாவால் ஒதுக்கப்பட்ட கூட்டணி என்றும் அம்மாவின் நம்பிக்கையை இழந்த பன்னீர், முனுசாமி, நத்தம் ஆகியோர் சேர்ந்து அணியை அமைத்திருக்கிறர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

    ஸ்டாலின் ஆளுநர் சந்திப்பு ... ஆட்சியை கலைக்க கோரிக்கை!

    குதிரை பேரத்தில் நடத்தப்பட்ட, நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்துவிட்டு ஆட்சியை கலைக்க வேண்டும்
    தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னையில் இன்று ஆளுநரை சந்தித்து, கூவத்தூர் பண பேர வீடியோ தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியதுடன், ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். சென்னை: தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி ரூபாய் கை மாறியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றி மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேட்டியளித்ததாக ஒரு ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஆனால் தான் அவ்வாறு கூறவில்லை என்று சரவணன் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனையை சட்டசபையில் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் வற்புறுத்தி வருகிறார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆதாரம் இல்லாமல் எதைப் பற்றியும் சபையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் அறிவித்து விட்டார். இதனால் நேற்று ஆதாரத்தை தர தயாராக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனாலும் சபையில் பேச அனுமதிக்கப்படவில்லை.

    20 எம்பிக்களை வைத்துக்கொண்டே 69 மத்திய அரசு திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவந்த திமுக

    prakash.jp.:வெறும் 20 MPகளை திமுக பெற்றிருந்த காலகட்டங்களில் தான், அதுவரை தமிழ்நாடு பெறாத அளவுக்கு மிகஅதிகமான மத்திய நிதியினைப் பெற்று (11% விழுக்காட்டுப் பங்கு,) தமிழ்நாட்டில் சுமார் 69 புதிய மத்திய அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன....
    திமுக அங்கம்வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியில், தமிழகத்தில் துவக்கப்பட்ட மத்திய அரசின் நிறுவனங்கள் :-
    * சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie University)
    * திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)
    * கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.
    * திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)
    * ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க் கான தேசிய நிறுவனம்.
    * சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)
    * திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)
    * தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.
    * ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.

    ADMK JD எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை: அதிமுக ஜெ.தீபா அணியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது

    எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை யின் பெயர் அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றப்பட்டுள்ள தாக அதன் பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று
    அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜெ.தீபா சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய எங்களுக்கு கால அவகாசம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை பதிலளிக்க உள்ளது. பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி அளிக்கப்பட்ட மனு குறித்தும் விரைவில் பதில் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பெயர் அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.tamilthehindu

    பாஜக கட்டளை .. பன்னீர் அணி ஜி எஸ் டி ஆதரித்தது ..கேரள ஆளுநர் சதாசிவம்தான் லேடஸ்ட் புரோக்கர்

    சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி என அதிமுகவினர் பிரிந்து இருந்தாலும், சட்டசபையில் ஓரணியாக நின்று ஜிஎஸ்டி மசோதாவை ஆதரித்துள்ளனர். இதன் பின்னணில் பாஜக தலைவர்கள் இருப்பதாக தெரிகிறது. கடந்த வாரம் திடீரென இரண்டு நாட்கள் டிடிவி தினகரன் சென்னையில் இருந்து திடீரென எங்கோ பயணமானார். அவர் டெல்லி செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அவர் சென்ற கேரளாவாம். : அமித்ஷாவை சந்திக்க அவர், டெல்லியுள்ள பாஜக தலைவர் ஒருவர் மூலமாக முயற்சித்தார். அவரும் அமித்ஷாவிடம் பேசினார். அமித்ஷாவே, பிரதமர் வெளிநாடு போயிருக்கிறார். அவர் வரட்டும். அவரை கலந்தாலோசித்து விட்டு சொல்கிறேன் என சொன்னதால், தினகரனுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை. இதனால் கேராளா சென்று இரன்டு நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு திரும்பினார். கேரளாவில் ஆளுநர் சதாசிவத்திடம் பேசியதாக ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. அதேசமயம், ஜிஎஸ்டியை ஆதரியுங்கள் என சதாசிவம் அட்வைஸ் செய்ததன் அடிப்படையிலேயே ஆதரிக்க தனது ஆதரவு எம்எல்ஏக்களிடம் தினகரன் கேட்டுக்கொண்டாதாக தகவல் சொல்கின்றனர். இதனையடுத்தே ஓரணியில் அதிமுக எம்எல்ஏக்கள் ஜிஎஸ்டிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜிஎஸ்டி மசோதாவை அமளி துமளிக்கிடையே தாக்கல் செய்தார் அமைச்சர் வீரமணி.  tamiloneindia

    கேரளா..எல்லோரும் மூலிகை நீர் அருந்துகிறார்கள் .. மினரல் வாட்டர் கேட்டாலும் இதுதான் கொடுக்கிறார்கள் ..

    தாமோ சிவகுமார் திமுக: பெஸ்ட் வாட்டர்! கேரளாவில் எந்த
    ரோட்டுக்கடையாக  இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .
    சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்..... எங்கும். எதிலும்.
    கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..

    திருப்பூருக்கு மோடி வைத்த ஆப்பு..... ஜாப் வொர்க்கிற்கு 18% சேவை வரி

    trollmafia2  :  2014 பாராளுமன்றத் தேர்தலின் போது அதிக மோடி பக்தர்கள் வாழ்ந்த இடம் திருப்பூர். திருப்பூரின் பெரும் செல்வந்தர்களில் முக்கால்வாசிப் பேர், மோடி பிரதமரானால் திருப்பூரில் பாலாறும் தேனாறும் ஓடும் < என்று பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார்கள். 10 பேர் கொண்ட குழு வந்து திருப்பூரின் தேவைகளை அறிந்து சென்றதாகவும் சுமார் 1000 கோடி மதிப்பிலான திட்டங்கள் திருப்பூருக்கு மோடி தயாரித்து வைத்திருப்பதாகவும்; புருடா விட்ட கோஷ்டியெல்லாம் உண்டு. அந்த அளவுக்கு மோடி போதையில் இருந்தார்கள். திருப்பூரின் மிக முக்கிய பணி ஜாப் வொர்க்ஸ்.., மூலப் பொருட்களைக் கொடுத்து அதை ரெடிமேட் ஆடைகளாக உருவாக்கித் தரச் சொல்வார்கள்.. நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் இந்த ஜாப் வொர்க்கை செய்து வந்தன. இந்த தொழில் சேவை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது... அதற்கு ஒரு பைசா கூட வரி கட்டத் தேவையில்லை.. இப்போது மோடிஜி அவர்களின் அரசு ஜாப் வொர்க்கிற்கு 18% சேவை வரி விதிச்சிருக்கு.. 0 to 18%. ஜாப் வொர்க் தொழிலையே முற்றிலும் அழிக்கும் திட்டம் இது... ஆடைகளின் விலை கடுமையாக உயரும். ஏற்றுமதி செய்வதெல்லாம் மிகக் கடினம்.< தேவையா இது? *மோடி பக்தாள்ஸ்!*

    42 படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அறிவிப்பு.. Lanka to release 42 Indian fishing boats

    Sri Lanka today said it will release 42 Indian fishing boats held in its custody since 2015 on condition that they will never re-enter the country's territorial waters.
    சென்னை: ''இலங்கை சிறையில் உள்ள, தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்; படகுகளையும் விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து, எதிர்க்கட்சியினர் கொடுத்த, கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அதன் விபரம்:
    தி.மு.க., - சாமி: தி.மு.க., ஆட்சியில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால், ஓரிரு நாட்களில் அல்லது ஒரு மாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்; அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்படும். தற்போது, இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களும், அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்படுவது இல்லை. தமிழக மீனவர்களின், 143 விசைப்படகுகள், இலங்கை கடற்கரையில் சேதமடைந்து, கடலில் மூழ்கும் நிலையில் உள்ளன.

    உபியில் முஸ்லிம் பெண்கள் பாஜகவுக்கு ஒட்டு போட்டனர்? தலாக் செய்த மாயம்? Triple talaq-hit women voted for BJP


    prakash.jp. அதிதீவிர முஸ்லீம் ஆண்கள் சிந்திக்கவேண்டும்..
    தலாக் விஷயத்தை பேசியே, 50% முஸ்லிம்கள் ஓட்டுகளை, அதாவது முஸ்லிம் பெண்களின் ஓட்டுக்களை உபியில் பிஜேபி பெற்றதை, முஸ்லீம் ஆண்கள் மறக்க வேண்டாம்... வரும் காலத்தில், இந்த பர்தாவை வைத்து, முஸ்லீம் பெண்களின் ஓட்டுகளை பெற, பிஜேபி திட்டமிடலாம்.... இதில் முஸ்லீம் பெண்களின் கருத்துத்தான் முக்கியம்... பொதுவெளியில் எதுவேண்டுமானாலும் செல்லலாம், ஆனால், ரகசியமான வாக்குப்பதிவில், பெண்களின் விருப்பமே வெளிப்படும்...
    பெண்களுக்கு சமவாய்ப்பு, ஓட்டுரிமை இல்லாதவரையில், அனைத்து மதங்களிலும் ஆண்களின் எதோச்சையா அதிகாரம்மே இருந்தது... அதுதான் சதி, பொட்டுக்கட்டுதல், குழந்தை திருமணம், பலதாரமணம், பெண் கல்வி மறுப்பு, சொத்து மறுப்பு என பல விதங்களில் வெளிப்பட்டது.. இஸ்லாமிய கிருஸ்துவ மதங்களிலும் பெண்ணடிமைத்தனம் பல உண்டு... காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.. பெண் பாதிரியார்கள் கூட கிருஸ்துவ மதத்தில் இப்போது வந்துவிட்டார்கள்... இன்னும் சில மாற்றமடையாமல் உள்ளன.. அவைகளும் காலப்போக்கில் மாறியே தீரும்... யாராலும் தடுக்கமுடியாது....
    எல்லா நிறுவப்பட்ட மதங்களிலும் உள்ள குறைகளை விமர்சிக்கும் முற்போக்குவாதிகளை, மாற்றுமத தீவிரவாதிகள் என பேசவேண்டாம்.. அடக்குமுறைக்கு, புறக்கணிப்புக்கு உள்ளாகும் எந்த மதத்து மக்களுக்காகவும் முன்னிற்கப்போவது, குரல்கொடுக்கப்போவது அவர்கள்தான்...

    வெள்ளி, 16 ஜூன், 2017

    நம்மாழ்வார் வைகையறா .... முட்டாள் அல்லது பிராடு ... எது?


    Don Ashok :நீங்கள் மதிக்கும் ஒருவர் உங்களுக்கு நிறைய conspiracy theoryகளை சொல்கிறார். பெருகிவரும் விஞ்ஞான, உணவுப்பழக்க மாற்றத்தில் உங்களின் பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் அல்லது போதுமான அளவிற்கு விடையை தேடாமல் நீங்கள் அலைபாயும் சூழலில் அவரது 'theory'கள் உங்களுக்கு திருப்தியை தருகின்றது. அவரது தியரிகள் எதுவுமே விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாதவை என்றாலும் அதெல்லாம் உணர்வுபூர்வமாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது. அனைத்தையும் நம்புகிறீகள். மூலிகை சிகாமணி, யுனானி யுகபுருசர், சிவராஜ் சித்தவைத்தியர் வரிசையில் எந்த ஒழுங்கான படிப்பறிவும் இல்லாத அவரை இயற்கை விஞ்ஞானி, வேளாண் விஞ்ஞானி என்றெல்லாம் போற்றுகிறீர்கள். அவரும் அறிவியலை தன் பேச்சிலெல்லாம் அடித்து நொறுக்குகிறார். நிற்க.
    அதே ஆள் பஞ்சகவ்யம் என்ற தியரியையும் சொல்கிறார். அதாவது சாணி, நெய், தயிர், பால், மூத்திரம் ஆகியவற்றைக் கலந்து தினமும் சாப்பிட்டால்/குடித்தால் எய்ட்ஸ் கூட குணமாகும் எனச் சொல்கிறார். இது எளிதாக கடந்துவிடக்கூடிய சாதாரண பொய்யோ/முட்டாள்தனமோ அல்ல. மகா மகா மகா மகா பெரிய பொய்/முட்டாள்தனம். உங்கள் அப்பா இப்படி ஒன்றைச் சொன்னால் கூட அப்பாவை மனநல மருத்துவரிடம் தான் அழைத்துச் செல்வீர்களேயொழிய, அப்பா சொன்னார் என்ற காரணத்துக்காக சாணியை நக்கிப் பார்க்க மாட்டீர்கள். எந்த ஒரு உயிரினத்தின் கழிவுகளை தின்பது ஒருவித மனவியாதி. அதை மாட்டுமூத்திரத்தை விரும்பி அருந்தும் இந்துத்துவா ஆட்களின் செயல்பாடுகள், டிவி பேட்டிகள் போன்றவற்றை பார்ப்பதில் இருந்தே உணர்ந்திருப்பீர்கள்.

    1991-96 ஆண்டுகளில் ஜெயா-சசி போலீஸ் +அதிகாரிகள் + குண்டர்கள் துணையோடு ஊரை அடித்த நாட்கள் மீண்டும் ...

    கோவணத்தையும் உருவும் பஞ்சமா பாதகர்கள்!அந்த அபாயம் மீண்டும் திரும்புகிறது, தமிழர்களே எச்சரிக்கை!
    சென்னை-ஆர்.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள எழில் நகர் 250 ஏக்கர் பரப்பு கொண்ட குடியிருப்புப் பகுதி. இங்கு 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வசித்து வருகின்றன. அக்குடும்பங்களைக் கூண்டோடு துரத்தியடித்துவிட்டு, அந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயன்றுவருகிறார், அ.தி.மு.க.வின் உள்ளூர் எம்.எல்.ஏ. அவரின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து, அப்பகுதி மக்கள், எழில் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் என்ற பெயரில் அமைப்பாகத் திரண்டு போராடி வருகின்றனர்.
    அவர்களின் போராட்டத்தை அச்சுறுத்தி நசுக்கும் விதத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் போலீசும் கைகோர்த்துக் கோண்டு, அச்சங்கத்தின் தலைவரும் 74 வயது முதியவருமான வேதக்கண் மீது கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாகப் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர்.

    ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. !

    டப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்துவரும் “மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அரசு” ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஆட்சி குறித்த நமது மதிப்பீடை விவாதிப்பதற்கு முன்பாக, அ.தி.மு.க. அம்மா கோஷ்டியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தமது சொந்த ஆட்சி குறித்து கொண்டிருக்கும் கருத்தைத் தெரிந்துகொள்வது முக்கியமானது.
    “அம்மா இருந்தவரை அமைச்சர்கள் மற்றும் கார்டனுக்கான கமிசன் 11 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கெல்லாம் சேர்த்து டீலிங் மற்றும் காண்ட்ராக்டுகள் 30 சதவீதத்தில் முடியும். ஆனால், தற்போது அமைச்சரவை கமிசன் மட்டும் 15 சதவீதம் கேட்கிறார்கள். அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்களின் கமிசன் எல்லாம் கொடுத்தால், அது 40 சதவீதம் வரை போய்விடுகிறது. அதனால் யாரும் காண்ட்ராக்டு எடுப்பதற்கே துணிவதில்லை. எனவே, கமிசன் தொகையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பயன் பெறுவார்கள். கட்சியை நடத்த முடியும்” என்று 16.5.17 அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும், எம்.எல்.ஏ. விடுதியிலும் நடந்த எம்.எல்.ஏ.க்களின் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதாக எழுதியிருக்கிறது ஜூனியர் விகடன் (24.5.17, பக்.45)

    வலி நிவாரணிகளால் உயிரை விடும் அமெரிக்க மக்கள்

    vinavu: ப்பியாய்டு மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை அளவுக்கதிகமாக உட்கொள்வதால் உயிரை விடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது.
    கடந்த 20 வருடங்களாக அமெரிக்கர்களை ஆட்டிப்படைத்து வந்த இந்த கொடிய போதைப் பழக்கம் 2011-ல் மிக மோசமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியது. 2011-ல் மட்டும் 41,340 பேர் உயிரிழந்தனர். 2015-ல் இது 52,404 ஆக அதிகரித்தது. 2016-ல் 59,000-லிருந்து 65,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    35 வயது முதல் 50 வயதிற்குட்பட்டோர், வலி நிவாரணத்திற்கு வழங்கப்படும் ஒப்பியாய்டுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் இறக்கின்றனர். 20 முதல் 30 வயதுடைய இளைஞர், இளம்பெண்கள் வலி நிவாரணம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்காக அதிகம் பயன்படுத்துவதால் மாண்டு போகின்றனர்.

    எய்ம்ஸ் மருத்துவமனை ... மாநில மக்களை மோதவிட மத்திய அரசு சதி?

    கே.குணசீலன் என்.ஜி.மணிகண்டன்,செ.சல்மான்: ஒரு மரணத்துக்குப் பிறகு கட்சியை மூன்றாக உடைப்பது சாத்தியம்’ என நிரூபித்த டெல்லி அரசியல்வாதிகள், ‘ஒரு மருத்துவமனையைக் காரணமாக வைத்து ஒரு மாநிலத்தை இரண்டாக உடைக்கலாம்’ என்ற பரிசோதனையையும் செய்து முடித்துள்ளார்கள். ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கு நிறுவுவது’ என்ற விவகாரம்  சூடு பிடித்துள்ளது. ஆளுங்கட்சியையே அசைத்துப் பார்க்கும் இந்தப் பிரச்னை, தஞ்சைக்கும் மதுரைக்கும் மோதலை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் பதவி விலகுவேன்” என்று ஆவேசப்பட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, “ஜெயலலிதா விரும்பிய இடத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படும்” என்றார். அதற்கு மறுநாள், ஓ.பன்னீர்செல்வம், “எய்ம்ஸ், மதுரையில் அமைய வேண்டும் என்றுதான் ஜெயலலிதா விரும்பினார்” என்று பேட்டியளித்தார். ‘‘தஞ்சையில் எய்ம்ஸ் நிறுவப்படாவிட்டால், நெடுவாசல் போல தஞ்சை மக்களும் போராடுவார்கள்’’ எனத் தி.மு.க எம்.பி-யான திருச்சி சிவா  திரி கொளுத்திப் போட்டார்.

    காலா என் அப்பா! திரவிய நாடாரின் மகள் விஜயலட்சுமி பேட்டி

    விகத்ணன் :ஆர்.வைதேகி`காலையில பொழுது விடியும்போதே வீட்டுவாசல்ல பெருங்கூட்டம் நிற்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னை இருக்கும். எல்லாத்தையும் அப்பா பொறுமையா விசாரிச்சுத் தீர்த்து வெச்சிட்டிருப்பார். சில நேரங்கள்ல அப்படி உதவி கேட்டு நிக்கறவங்கள்ல போலீஸ்காரங்களும் இருந்திருக்காங்க... மக்கள் அப்பா கால்கள்ல விழறதும், அவருக்கு வணக்கம் வைக்கிறதும் வழக்கமான காட்சிகளா இருந்திருக்கு. அந்தக் கூட்டத்துக்கும் களேபரத்துக்கும் நடுவுலதான் நாங்க ரெடியாகி ஸ்கூலுக்குக் கிளம்பிப் போவோம்...' இப்போது அமெரிக்காவில் வசிக்கும் விஜயலட்சுமி, தன் அப்பா பற்றி விவரிப்பதைக் கேட்கும்போது நமக்குக் கண்முன்னே விரிகின்றன `நாயகன்' படக் காட்சிகள். ஐம்பதுகளில் மும்பையைக் கலக்கிய பிரபல தாதாக்களில் முக்கியமானவர் திரவியம் நாடார். `நாயகன்' கமலுக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை. ஆனால், 'காலா' ரஜினிக்கும் திரவியம் நாடாருக்கும் நிறையவே தொடர்பிருக்கிறது.

    நக்கீரன் கருத்து கணிப்பு

    சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது. நக்கீரன் எடுத்த புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் யாருக்குப் பாதிப்பு என்றும், தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியும் கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சர்வேயில் கட்சிகளின் ஆதரவு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதுகுறித்த பார்வை: மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதும், நரேந்திர மோடியின் செல்வாக்கும் அதற்குத் துணையாக உள்ள ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் தாக்கத்தாலும் பா.ஜ.க.வுக்கான ஆதரவு 5% என்ற அளவில், காங்கிரசுக்கு இணையாக உள்ளது. பாமகவின் ஆதரவு 4 சதவீதமாக உள்ளது. தேமுதிகவின் நிலையும் இதேதான். இரு கட்சிகளும் சம நிலையில் உள்ளதையே இது காட்டுகிறது. முன்பு பாமகவை விட உயர்ந்த நிலையில் தேமுதிக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 3 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அக்கட்சியினர் தலைமை ஏற்கும் முடிவை ஆதரிக்கும் மன நிலையி்ல் உள்ளனர். 2016 சட்டசபைத் தேர்தலில் 1% வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி தற்போது தன் பலத்தைப் பெருக்கி 3% என்ற அளவில் உள்ளது.இது கணிசமான வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வராமல் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு நாம் தமிழருக்கு 5% ஆதரவு கிடைத்தது. அதுவே ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஓட்டு என்ற கேள்விக்கு நாம் தமிழருக்குக் கிடைத்த ஆதரவு 9% என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, ரஜினி, அதிமுகவுக்கு அடுத்த இடத்தை இதில் நாம் தமிழர் கட்சி பெறுகிறது. நக்கீரன்

    பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்!

    பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்!சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 36 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோடை விடுமுறைக்குப் பின் இன்று ஜூன்-16 ஆம் தேதி மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அதை, காவல்துறையினர் தடுத்தனர். அப்போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தடுப்பதற்காக கல்லூரி முதல்வர் காளிராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கூவத்தூர்: சிடியுடன் சட்டசபைக்கு வந்த மு.க.ஸ்டாலின்!

    கூவத்தூர் பண விவகாரம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ சரவணன் பேசியதாக வெளியான வீடியோ விவகாரம் தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறியும் சட்டசபையில் அது குறித்து பேச அனுமதிக்காகததால், அதற்கு கண்டனம் தெரிவித்து 3வது நாளாக தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
    பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,:ஆதாரத்தை கையில் வைத்திருக்கிறேன் தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்துள்ள அந்த காட்சிகள் இந்த சிடியில் உள்ளது. ஆகவே இதை நீங்கள் இப்போது அனுமதிக்கிறிர்களா, இங்கு அவையில் நான் தருவதற்கு தயாராக இருக்கிறேன். இல்லையென்றால் உங்கள் அறையில் வந்து தருகிறேன் பின் நாளை இதை எடுத்து விவாதம் செய்ய அனுமதி தருகிறிர்களா? என்று கேட்டதற்கு அதலாம் முடியாது இப்படியெல்லாம் என்னிடத்திலே பேசக்கூடாது. இவையெல்லாம் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று அவர் ஒரு உத்தரவை போடுகிறார்.

    எண்ணூர் ஆற்றின் 1090 ஏக்கரை ஆக்கிரமித்த மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள்!

    சென்னை அடுத்துள்ள எண்ணூர் பகுதிகளில் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற இதுநாள் வரை வெளியிடப்படாத கடற்கரை ஒழுங்கு முறை அறிவிப்பாணையின் (CRZ) வரைப்படத்தின் படி எண்ணூர் ஆற்றின் 8000ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மத்திய மாநில அரசின் பொது துறை நிறுவனங்களை சோர்ந்த பல்வேறு நிறுவனங்கள் எந்த ஒரு  மேம்பாட்டுக்கும் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களில் 1090 ஏக்கரை ஆக்கிரமித்திருக்கிறது.
    1991, 2011 ஆகிய ஆண்டுகளில் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையின் கொண்டு வந்த விதிகளை பின்பற்றி இருப்பின் எண்ணூர் பகுதிகளை ஆக்கிரமித்து தொழிற்சாலைகள் கட்டப்பட்டு இருக்க கூடாது.

    கடற்கரை ஒழுங்கு முறை அறிவிப்பாணையின் படி அதன் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களையும், மாநில மற்றும் மாவட்ட கடற்கரை மேம்பாட்டு குழுமங்களின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் மற்றும் வரைப்படத்தின் அடிப்படையில் தான் மதிப்பிட வேண்டும்.

    திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு -நித்தியானந்தா சீடர்களை விரட்டி அடித்த போலீசார்


    திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலை உச்சியில் நித்தியானந்தம் அண்ணாமலையார் அருள் பெற்றதாக கூறி அந்த குன்றை ஆக்ரமிக்க கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள் நித்தியானந்தாவின் சீடர்கள். சி.பி.எம். மற்றும் மக்கள் இணைந்து அதை தடுத்து வருகின்றனர். ரஞ்சிதா பிரச்சனைக்கு பின் அடங்கியிருந்த நித்தி, கடந்த வாரம் தனது ஆண், பெண் சீடர்களை அனுப்பி பவழக்குன்றை ஆக்ரமிக்க வைத்தார். இதனை சி.பி.எம். கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்தனர். அவர் உத்தரவுப்படி கோட்டாச்சியர் உமாமகேஸ்வரி ஆக்ரமிக்கப்பட்ட இடத்துக்கு போலீஸாருடன் வந்து நித்தி சீடர்களுடன் பேசினார். காலி செய்ய முடியாது என்றவர்கள், கோட்டாச்சியரை ஒருமையில் பேசி, சாபம் விட்டனர். இதை செய்தியாளர்கள் படம் பிடிக்க அவர்களுக்கும் சாபம் விட்டனர். அசிங்கமாக அர்ச்சனை செய்தனர். இறுதியில் காவல்துறை சிலைகளை அப்புறப்படுத்தியது. நித்தி சீடர்களை விரட்டியது. ராஜா நக்கீரன்

    டாக்டர் கிருஷ்ணசாமி : புத்தர் வழியில் மத்திய ஆரசு செயல்பட்டு வருகிறது .

    புத்தர் வழியில் மத்திய அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி
    மாடுகளை இறைச்சிக்காக விற்பதைத் தடுக்கும் மத்திய அரசின் உத்தரவுக்குத் தமிழகத்தில் அநேக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார் ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி.
    நேற்று ஜூன் 15ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, “புத்தர் காலத்திலே இருந்து பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பசுவதை தடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி வருகிறது. பசுக்களைப் பொறுத்தமட்டிலும் அவை பாலுக்காகவும், விவசாயத்துக்காகவும்தான் பயன்படுத்தப்பட வேண்டும். அவை இறைச்சிக்காகப் பயன்படுத்தப்பட கூடாது என்று பெரிய அளவில் இயக்கமே இந்தியாவில் நடந்து வந்திருக்கிறது. எனவே, மத்திய அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது” என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
    இந்த விஷயத்தில் மத்திய அரசு புத்தரின் வழியில் செயல்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் கிருஷ்ணசாமி  மின்னம்பலம்   திருவோடுதான் பாக்கி

    நடிகை ஷோபனா திருமணம் செய்கிறார்

    சென்னை: திருமணமே வேண்டாம் என்று கூறி வந்த நடிகையும் பரத நாட்டியக் கலைஞருமான ஷோபனா, இப்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார். 1970-ல் பிறந்த ஷோபனா, 1984-ல் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டு தமிழில் மங்கள நாயகி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். ரஜினியுடன் சிவா, தளபதி படங்களில் நடித்தார். பின்னர் மெல்ல நடிப்பிலிருந்து விலகி அவர், நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த அவர், 2001-ல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாகவும், தனது நீண்ட நாள் நண்பரையே வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொள்ள அவர் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஷோபனா தரப்பில் இதுகுறித்து எந்த தகவலுமில்லை.

    ஹிந்தி மாநிலங்களை பின்தள்ளிய திராவிடம்... கல்வி புள்ளி விபரம் காட்டும் வரலாறு!

    Prakash JP;  :50 வருடம் ஹிந்தி தெரியாமல் பின்னோக்கி இருக்கும் ஒரு மாநிலத்தின் கதை.....
    உயர் கல்வி :
    பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்… அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்..
    தமிழ் நாடு – 38.2%..
    பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 17.6% ; மபி – 17.4% ; உபி – 16.8% ; ராஜஸ்தான் – 18.0% ;
    இந்திய சராசரி : 20.4%
    கல்வி நிலையங்களின் தரம் :-
    2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது… அந்த பட்டியலின் படி,
    முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.. பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான்.. இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட
    இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை……
    முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு – 22 ;
    குஜராத் – 5 ; மபி – 3 ; உபி – 6 ; பிகார் – 1 ; ராஜஸ்தான் – 3

    முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்
    தமிழ் நாடு – 24 ;
    குஜராத் – 2 ; மபி – 0 ; உபி – 7 ; பிகார் – 0 ; ராஜஸ்தான் – 4
    பொருளாதார மொத்த உற்பத்தி (GDP) :-
    இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.
    தமிழ் நாடு – ₹18.80 lakh crore (2nd Place) ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – ₹10.94 lakh crore (5th) ; மபி – ₹7.35 lakh crore (10th) ; உபி – ₹12.37 lakh crore (4th) ; ராஜஸ்தான் – ₹7.67 lakh crore (7th) ;

    பிரித்திகா முதல் மோனிகா வரை! - சூப்பர் சிங்கர் இறுதிச் சுற்றுக்கு வந்தது இப்படித்தான்

    விகடன் :சூப்பர் சிங்கருக்கு இது பத்தாவது சீஸன். இறுதிச்சுற்றுக்கு ஐந்து தங்கங்கள் தகுதிபெற்றிருக்கின்றன. அதில் மூன்று சிறுமிகள், இரண்டு சிறுவர்கள். மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு மாலை வேளையில் செல்லக்குரலோன்களைச் சந்தித்தேன். கௌரி, பிரித்திகா, தனுஷ், மோனிகா, பவின் என இந்த ஐவர் கூட்டணிதான் இறுதிச்சுற்றில் அசத்தப்போகிறது. இந்தச் சிறிய வயதில் எப்படி வந்தது இசைஞானம்? விஜய் டிவி-யில் சூப்பர் சிங்கருக்குத் தேர்வானது எப்படி... எனப் பல கேள்விகளுக்கும் ஆர்வமாக விடை சொல்ல ஆரம்பித்தனர் செல்ல குட்டீஸ்.
    தனுஷ்
    தனுஷ்:
    பிரித்திகா ``ஒன்பதாவது படிக்கிறேன். செங்கல்பட்டிலிருந்து வந்திருக்கேன். அப்பா பெயர் சேகர். கார் கம்பெனியில் பேக்கேஜிங் வேலை பார்க்கிறார். அம்மா செல்வி வீட்டுவேலை செய்றாங்க. எனக்கு இப்படியொரு திறமை இருப்பதே தெரியாது.  சின்ன வயசுலிருந்தே ஏதாவது பாடிட்டே இருப்பேன். ஒரு போட்டியில் கலந்துக்கிட்டு நல்லா பாடினப்பதான் என் வாழ்க்கையே மாற ஆரம்பிச்சிச்சு. அங்கே இருந்த காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்  `உனக்கு நல்லா பாட வருது. சூப்பர் சிங்கர்ல போய்ப் பாடு'னு  சொன்னாங்க. `அதுக்கு எப்படிப் போறதுன்னு தெரியாது'னு சொன்னேன். அப்புறம் அவங்களே எனக்காக வீட்ல வந்து பேசினாங்க.

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நிபந்தனைகள் ... திடீர் போர்க்கொடி !

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீர் போர்க்கொடி எடப்பாடி பழனிசாமிக்கு நிபந்தனைகள் விதித்தனர் கட்சியில் தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கோரி திடீரென்று போர்க்கொடி உயர்த்தியுள்ள அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார்கள். ஜூன் 16, 2017, 04:15 AM சென்னை, அ.தி.மு.க. தற்போது 3 அணிகளாக செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஓர் அணியாகவும் அ.தி.மு.க.வினர் செயல்பட்டு வருகிறார்கள். தினகரன் அணியில் இருப்பவர்கள் சமீபகாலம் வரை எடப்பாடி பழனிசாமி அரசுடன் மிகவும் இணக்கமாக செயல்பட்டு வந்தனர். தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான தினகரன் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, எடப்பாடி பழனிசாமியோ மற்ற முக்கிய அமைச்சர்களோ அவரை சந்திக்கவில்லை.
    இதனால் தினகரன் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் அவரது பக்கம் சாய்ந்தனர். அவர்கள் இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திடீரென்று போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.

    லண்டன் தீ விபத்து.... தீவிரவாதிகளின் சதி? - தீவிரமாகும் விசாரணை

    லண்டன் தீ விபத்து ம.நிவேதா லண்டன் தீ விபத்து ங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனின் மத்தியப் பகுதியிலுள்ளது லாண்கேஷ்டர் வெஸ்ட் எஸ்டேட். இங்கு கிரான்ஃபெல் டவர் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதில், நேற்று அதிகாலை 1 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியில் பற்றிய தீ சிறிது நேரத்திலேயே கட்டடம் முழுக்கப் பரவியதால், குடியிருப்புவாசிகளில் பலர் கட்டடத்தினுள் சிக்கிக் கொண்டனர். இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். எனவே அதிகாலை ரம்ஜான் நோன்பு அனுசரிக்கும் முன் உணவு எடுத்துக்கொள்ள எழுந்திருந்தனர்.
    அந்த நேரத்தில், தீ பற்றியதால் மற்றக் குடியிருப்புவாசிகளையும் எழுப்பி தப்ப வைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் தீ முழுமையாகப் பற்றிக் கொண்டதால், கட்டடத்தின் உள்ளே பலரும் சிக்கிக் கொண்டனர். தப்பிக்க முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டவர்கள் தங்கள் குழந்தைகளை மாடிகளின் ஜன்னல் வழியாக வெளியே வீசியெறிந்த பரிதாபக் காட்சிகளும் அரங்கேறின. மேலும் சிலர், வீட்டிலிருந்த துணிகளையே பாராசூட்டைப்போல் பயன்படுத்தி கட்டடத்தைவிட்டு தப்பினர். இந்தத் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக உள்ளது. 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், 18 பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோமாதாவைக் கொல்ல அன்று வேள்வி, இன்று கோசாலை !

    கோமாதாவைக் கொல்லக்கூடாது” என்பது உண்மையிலேயே பா.ஜ.க.-வின் கொள்கையாக இருக்குமானால், அவர்கள் தடை செய்யவேண்டியது மாட்டு விற்பனையை அல்ல, பால் விற்பனையைத்தான். கறவை வற்றிப்போன மாடுகளை வெட்டுக்கு விற்கிறார்கள் விவசாயிகள். கூடாதென்றால், மேலும் பத்து ஆண்டுகளுக்கு அந்த மாட்டைப் பராமரிப்பதற்கான பணத்தை விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டியவர்கள் பால் அருந்துபவர்கள்தான். அதற்குப் பால் விலையை இப்போது உள்ளதைப் போல நான்கு மடங்கு உயர்த்த வேண்டும்.
    மாட்டிறைச்சி உண்ணும் கொடியவர்கள் இல்லையென்றால், சைவ உணவு உட்கொள்ளும் இரக்கமனம் கொண்டோருக்கு மலிவு விலையில் பால் கிடைக்காது என்பதே உண்மை. “பால் குடிப்பவன் மேல்சாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி” என்பது “குப்பை போடுபவன் மேல்சாதி, குப்பை அள்ளுபவன் கீழ்சாதி” என்பதைப் போன்ற வக்கிர நியாயம். குப்பை அள்ளுபவன் இல்லையென்றால் ஊரே நாறிப்போய், எல்லாவிதமான நுகர்வும் நின்றுவிடுமல்லவா? அதுபோல, மாட்டுக்கறி தடுக்கப்பட்டால், விரைவில் பால் உற்பத்தி தொழிலே அழியும்.

    காருக்குள் மூச்சுத்திணறி இரட்டை சகோதரிகள் பலி.. ஹரியானா


    Karthikeyan Oneindia Tamil குர்கான்: ஹரியானாவில் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்ப்பட்டிருந்த காருக்குள் ஏறி தவறுதலாக கதவுகளை பூட்டிக் கொண்டு திறக்க முடியாததால் இரட்டைப் பெண் குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். ஹரியானா மாநிலம் குர்கான் அருகிலுள்ள பட்டாடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் கோவிந்த சிங். இவரின் ஐந்து வயது இரட்டைப் பெண் குழந்தைகள் ஹர்ஷிதா, ஹர்ஷா குருகிராம் மாவட்டத்தில் ஜமால்பூருக்கு தாத்தா வீட்டுக்கு தாயுடன் விடுமுறைக்கு சென்றுள்ளனர். அங்கு ஹர்ஷிதாவும், ஹர்ஷாவும் பழைய ஹூண்டாய் எலண்ட்ரா காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் கதவுகள் தானாக மூடிவிட்டது. கார் கதவின் தாழ் பழுதாகியிருந்ததால் அதை திறக்க முடியாமல் போராடியுள்ளனர். கார் கதவின் கண்ணாடிகள் ஏற்றிவிடப்பட்டிருந்த நிலையில் அதையும் அவர்களால் திறக்க முடியவில்லை.

    வியாழன், 15 ஜூன், 2017

    உருப்படியாக எதுவுமே செய்யாத அதிமுக...? திமுகவின் வரலாறை எடுத்து சொல்ல திமுகவில் ஆளே இல்லையா?

    Babu Vmk: :விழித்துக்கொள்ளுமா திமுக... M. K. Stalin
    ஒன்னுமே இல்லாத திட்டங்களை எல்லாம் பெரிதுபடுத்தி, அதையும் முழுதாக (அரைகுறையாக) நிறைவேற்றாமலேயே பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டதாக அதிமுகவால் மக்களை நம்பவைக்க முடிகிறதென்றால்....
    திமுகவின் இத்தனை ஆண்டுகால மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் ஏன் கொண்டு செல்ல முடியாது....????
    1. சமூக நலத் திட்டங்கள்...
    2. கல்வி வளர்ச்சி திட்டங்கள்...
    3. மருத்துவ நலத் திட்டங்கள்
    4. உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்...
    5. தொழில் வளர்ச்சி திட்டங்கள்....
    6. பொருளாதார வளர்ச்சி திட்டங்கள்...
    7. விவசாய நலத் திட்டங்கள்...
    8. தமிழ்மொழி வளர்ச்சி திட்டங்கள்...
    9. அரசு ஊழியர்கள் நலத் திட்டங்கள்...
    10.மத்திய அரசில் பங்கு பெற்று திமுகவால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள்...
    என அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்....
    அனுபவமும் திறமையும்மிக்க....
    1. திமுகவின் மூத்த தலைவர்கள்...
    2.ஒய்வுபெற்ற கல்வியாளர்கள்...

    மாடு விற்கத்தடை : பார்ப்பனப் பாசிச சதியில் ஒரு பன்னாட்டு ஒப்பந்த விதி ! Cow Ban is a Multi National Racket!

    ந்தியாவில் ஆண்டொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவு 150 மில்லியன் டன்கள். இதன் மதிப்பு 6 இலட்சம் கோடி ரூபாய். இது ஒரு ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசி அல்லது கோதுமையின் மதிப்பைவிட அதிகம். விற்பனை செய்யப்படும் பாலில் 70% சிறு உற்பத்தியாளர்களாலேயே விநியோகிக்கப்படுகின்றன. 30% மட்டும்தான் அமுல் மற்றும் தனியார் பண்ணைகள் மூலம் விற்கப்படுகின்றன. இவர்களும் ஓரிரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளிடமிருந்தே பாலைக் கொள்முதல் செய்கின்றனர்.
    தற்போது சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையை 2020 க்குள் 1,44,000 கோடியாக அதிகரிப்பது தனியார் பண்ணைகளின் திட்டம். சிறு உற்பத்தியாளர்களை ஒழித்துக்கட்டித்தான் இந்த இலக்கை அவர்கள் எட்டுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத் நகரில் தனது பால் விற்பனையை அமுல் நிறுவனம் தொடங்கியது. அங்கு லிட்டர் 47 ரூபாய்க்கு பால் விற்று வந்த நிலையில், லிட்டர் 38 ரூபாய்க்கு தன் பாலை இறக்கியது அமுல். இதன் விளைவாக மற்ற கூட்டுறவு மற்றும் தனியார் பால் பண்ணைகளும் விலையைக் குறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, பால் கொள்முதல் விலையைக் குறைத்தன. விளைவு பால்மாடு வளர்த்த சிறு உற்பத்தியாளர்கள் அழிந்தனர்.

    திருமாவளவன் :குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும்:

    tamilthehindu:குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் காலம் தாழ்த்தாமல் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை பாஜகவோ எதிர்க்கட்சிகளோ இன்னும் முடிவு செய்யவில்லை. இதனிடையே குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறுத்துவதற்கும் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதற்கும் பாஜக முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பாஜக விரிக்கும் இந்தச் சதிவலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிக்கிக்கொள்ளக் கூடாது.

    ஸ்டாலின் கட்சியினரோடு கலந்து ஆலோசிப்பதில்லை? எதிலும் தன்னிச்சையே .. உபிக்கள் முணுமுணுப்பு?

    கூவத்தூரில் எம்.எல்.ஏ.-க்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக நேற்று சட்டமன்றத்தில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். வெளியில் வந்து மறியலிலும் ஈடுபட்டனர். வெளிநடப்பு செய்வது பற்றியோ, மறியலில் ஈடுபடுவது பற்றியோ முன்கூட்டியே தகவல் எதுவும் யாருக்கும் சொல்லப்படவில்லையாம். ஆனால்,, ஸ்டாலினுக்கு நெருக்கமாக உள்ள சிலருக்கு மட்டும் இது தெரிந்திருக்கிறது. காலையில் சட்டமன்றத்துக்கு வந்த பிறகுதான் இந்த பிரச்னைக்கு குரல் கொடுக்க வேண்டும் என திமுக உறுப்பினர்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது. ‘இப்படியெல்லாம் செய்யணும்னு அவங்களுக்கு வேண்டப்பட்டவங்களுக்கு மட்டும் சொல்லிட்டாங்க. நமக்குச் சொல்லவே இல்லை பாருங்க...’ என மூத்த உறுப்பினர்கள் சிலரே வருத்தப்பட்டனர்.

    தினகரன் :எடப்படியோடு அட்ஜஸ்ட் செய்துகொண்டே இருப்பதா? சசிகலா: இப்ப தேர்தல் வந்தா திமுகதான் ஜெயிக்கும் ... அதனால ...?

    ”சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்று டிடிவி தினகரன் திடீரென பெங்களூரு கிளம்பிப் போனார். நேற்று மாலை ஈரோட்டில் இருந்த அவரது ஆதரவாளர் புகழேந்தியை இரவோடு இரவாக பெங்களூரு புறப்பட்டு வரச் சொல்லி அழைத்திருக்கிறார் தினகரன். அவரும் அதிகாலையில் பெங்களூரு போய்ச் சேர்ந்துவிட்டார். சென்னையில் இருந்து பெங்களூரு போன தினகரன், அங்குள்ள கீஸ் ஹோட்டலில் ரெஃப்ரஷ் ஆகிவிட்டுப் பரப்பன அக்ரஹாராவுக்கு போனார். அவரோடு புகழேந்தியும் சேர்ந்து கொண்டார். ஜெயில் வாசலில், இளவரசியின் மகன் விவேக்கும் காத்திருக்க.. அவரோடு சேர்ந்து சிறைக்குள் போயிருக்கிறார் தினகரன்.
    ‘எடப்பாடியும் சரி... அமைச்சர்கள் சிலரும் சரி.. நான் சொல்ற எதையும் கேட்கிறதே இல்லை. இப்படியே போயிட்டு இருந்தால் கட்சி என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு. 35 எம்.எல்.ஏக்கள் இப்போ நம்ம பக்கம் வந்துட்டாங்க. இன்னும், 24 பேர் எந்த நேரத்துலயும் நம்மிடம் வரத்தயாரா இருக்காங்க. எல்லோரும் என்னோடு தொடர்ந்து பேசிட்டு இருக்காங்க. அப்படிப் பார்த்தால் கிட்டத்தட்ட 60 எம்.எல்.ஏ.-க்கள் நம்ம கையில் இருக்காங்க.

    மூன் டிவி ஷா நவாஸ்கானுக்கு வரும் கொலை மிரட்டல் .. அதிமுகவின் குதிரை பேர விடியோ ..

    வீடியோ வெளியீடு: தொடரும் கொலை மிரட்டல்!மின்னம்பலம் :அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோடி கோடியாக பணம் வாங்கிக் கொண்டுதான் எடப்பாடி அரசை ஆதரித்தார்கள் என்பதற்கு ஆதாரமாய் கடந்த ஜூன் 12 ஆம் தேதி மூன் தொலைக்காட்சியும் டைம்ஸ் நவ்வும் இனைந்து வெளியிட்ட வீடியோ காட்சிகள்தான் இந்த வாரம் முழுக்க தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழக சட்டசபையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த வீடியோ குறித்து எதிர்க்கட்சியான திமுக பிரச்னை எழுப்பி வருகிறது,
    அதே நேரம் இந்த வீடியோ வெளியிட்ட பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக மூன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனரான ஷாநவாஸ்கான், இன்று ஜூன் 15 ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்குப் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் மூன் டிவி நிர்வாக இயக்குனர் ஷாநவாசிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

    பணப்பேரம் நடந்ததை தமீம் அன்சாரி ஒப்புகொண்டார்!

    thetimestamil.com :அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தபோது ‘கரன்ஸி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என தெரிவித்ததாக மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறினார்.
    சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்த போது பூரண மதுவிலக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை மட்டுமே அளித்தோம். இதுதவிர அந்த சந்திப்பின்போது எதுவும் நடக்கவில்லை. கரன்சி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் செங்கேட்டையனிடம் நாங்கள் கூறிய போது, உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். உங்கள் கோரிக்கையை மட்டும் கூறுங்கள் என்றார்.

    சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு: மத்திய-தெற்காசியாவில் இந்தியா முதலிடம்

    சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலில், மத்திய தெற்காசிய அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் 60-வது இடத்தில் உள்ளது. சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு: மத்திய-தெற்காசியாவில் இந்தியா முதலிடம் புதுடெல்லி: சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு (ஜிஐஐ) பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கார்னெல் பல்கலைக்கழகம், இன்சீட் மற்றும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (விப்போ) இணைந்து வெளியிட்ட இந்த பட்டியலில், இந்தியா 60-வது இடத்தில் உள்ளது. மத்திய மற்றும் தெற்காசியாவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முன்னேறியிருப்பதன் மூலம் கண்டுபிடிப்புத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துவருகிறது. 127 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியாவை முந்திய சீனா 22-ம் இடத்தில் உள்ளது.

    ஸ்பெயின் மொரோக்கோ எல்லை விளக்கு புகைப்படத்தை இந்திய பாகிஸ்தான் எல்லை விளக்கு என அறிவித்த மோசடி

    Chandra Mohan :வெட்கங் கெட்ட மோடி அரசாங்கம்!
    மானங் கெட்ட இந்துத்துவா.இன்போ! 2006 ல், ஸ்பெயின் -மொராக்கோ எல்லையில் அமைக்கப்பட்ட பேரொளி வீசும் விளக்குகளை..
    அந்தப் புகைப்படத்தை திருடி..
    "பொய்யையே பேசி பொய்யிலே வளரும்" மோடி அரசாங்கத்தின் உள்துறை அமைச்சரகம் 2014 ல், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் மோடி அரசாங்கம் அமைத்த விளக்குகளாக floodlights சாதனையாக சொல்லிக் கொண்டது.
    இந்த மோசடித் தகவலை "இந்துத்துவா.இன்போ" என்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு ஊடகம், வெட்கம் மானம் இல்லாமல் மோடியின் சாதனையாக பீற்றிக் கொண்டது.
    Home Ministry shows Spain-Morocco border as Indo-Pak border. What a farzi Govt. Everything coming from them is a lie

    பாஜக எம் பி :தமிழக கிராம மக்கள் ஆங்கிலம், இந்தி இரண்டையும் கட்டாயம் படிக்க வேண்டும்."

    Chandra Mohan:
    பாஜக எம்.பி.க்கள் தமிழக மக்களிடம் காமெடி செய்கிறார்களா ? தருண் விஜய் எம்.பி சொன்னார் : " கருப்பு நிற திராவிடர்களுடன் சகித்துக் கொண்டிருக்கவில்லையா ?" இந்தப் பேச்சுக்காக நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்டார். இந்த முறை ரூபா கங்குலி எம்.பி. அவர் தமிழ்நாடு வந்தவுடன் சொன்னார் :- "தமிழக கிராமப்புற மக்கள் அனைவரும் ஆங்கிலம், இந்தி இரண்டையும் கட்டாயம் படிக்க வேண்டும்." திருப்பூரில் பக்தி பரவசத்துடன் கோவிலில் நடனமாடிய பாஜக எம்.பி ரூபா கங்குலி மே.வங்கத்தைச் சார்ந்த நடிகையும் ஆவார். மே.வங்கத்தின் கிராமங்களில் இப்படி பேசினால் அவருக்கு நல்ல "வரவேற்பு " கிடைக்கும்.
    தமிழகத்திலும், கேரளாவிலும் பல்வேறு வேலைகளைச் செய்யும் சுமார் 25 இலட்சம் புலம் பெயர்ந்த இளம் தொழிலாளர்களில் கணிசமானோர் இந்தி பேசுபவர்கள் ஆவர் ; வங்காள இளைஞர்களும் உண்டு.
    ரூபா கங்கூலி இந்தி பேசும் மாநிலங்களில் சென்று சொல்வாரா?
    "மக்களே, பிழைப்புக்காக தமிழ் நாடு, கேரளாவுக்கு நீங்கள் எல்லாம் செல்வதால் தமிழ், மலையாளம் இரண்டையும் கட்டாயம் படிக்க வேண்டும் " எனச் சொல்வாரா?

    Real history of the Kanchi math !...It was only in the 20th century works, all compiled after Chandrasekharendra Saraswati

    The Kumbhakonam math shifted to Kanchipuram in accordance with its
    new story. In 1839 AD, 
     In article sadananda@anvil.nrl.navy.mil (K. Sadananda) writes: >
     In article , editor.csm.uc.edu (digest editor)
    ; wrote: 
    ; Kanchipuram, July 24 (PTI) The former President, Mr R Venkataraman, today inaugurated the year long 60th centenary celebrations of Sri Jayendra Saraswathi, the head of the 2,500 year old Kanchi mutt, amidst religious fervour. Sri Jayendra Saraswathi is the 69th pontiff of the mutt, which was established here by Adi Sankara, who was the first 'peedapathi' (head of the mutt) from 482 to 477 bc. SIR May I bring to your attention that by all accounts Adi Sankara time was some where around 8th to 9th century AD. And of the four Matts that he established Kanchi is not one of them. Either the Mutt is less than 1100 years old or if it is 482 B.C. as is claimed in the news then it must not have been established by Adi Sankaracharya.

    அதிமுக எம் எல் ஏ சரவணன் moon tv இடம் சிக்கியது எப்படி... ஸ்டிங் ஆபரேஷன் ..ஷா நவாஸ் கான் பேட்டி..

    கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருந்தபோது அவர்களிடம் சசிகலா அணியினர் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் மற்றும் மூன் தொலைக்காட்சி ஆகியவை சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு ஆதரமாக, சசிகலா அணியில் இருந்து தப்பித்துவந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்த எம்எல்ஏ சரவணனுடன், மூன் தொலைக்காட்சி நிர்வாகியும், பத்திரிக்கையாளருமான ஷானவாஸ் கான் உரையாடும் வீடியோவும் வெளியிடப்பட்டது.இந்நிலையில், தங்கள் வலையில் சரவணன் எப்படி சிக்கினார் என்பதை பற்றி ஷானவாஸ் கான் கருத்து தெரிவித்த போது “ கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம்தான் எங்களுக்கும் இருந்தது. அதனால் அதுபற்றி ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்த முடிவு செய்தோம்.

    பாஜகவின் மாட்டுகொள்கை .. அவுஸ்திரலியா இறைச்சி வர்த்தகர்கள் மகிழ்ச்சி


    இந்திய அரசு அறிவித்திருக்கும் மாடு வெட்டத் தடை! ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி நிறுவனங்களுக்கு ஆதாயம்!” மோடி அரசின் அறிவிக்கை வெளிவந்தவுடன் மகிழ்ச்சி பொங்கும் இந்தச் செய்தி ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியானது.
    ந்திய அரசு அறிவித்திருக்கும் மாடு வெட்டத் தடை! ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி நிறுவனங்களுக்கு ஆதாயம்!” மோடி அரசின் அறிவிக்கை வெளிவந்தவுடன் மகிழ்ச்சி பொங்கும் இந்தச் செய்தி ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியானது.
    மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவும் பிரேசிலும்தான் முதலிரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா ஆண்டொன்றுக்கு 37 லட்சம் டன் மாட்டிறைச்சி உற்பத்தி செய்கிறது. இதில் 20 லட்சம் டன் உள்நாட்டில் நுகரப்படுகிறது. மீதமுள்ள 17 இலட்சம் டன் ஏற்றுமதியாகிறது. இது உலகச் சந்தையின் தேவையில் 20% ஆகும். மோடி அரசின் அறிவிக்கையின் விளைவாக, இந்தச் சந்தையை ஆஸ்திரேலியா கைப்பற்றிக்கொள்ள முடியும் என்று சந்தை ஆய்வாளர் சைமன் குவில்டி கூறுவதாகக் குறிப்பிடுகிறது

    குமுதம் கக்கூஸ்லீக்ஸ் ஐ ஸ்பான்சர் செய்வது அ.தி.மு.க-வா – பா.ஜ.க.-வா ?

    ஜெயா உயிரோடு இருந்த போது இருவர் ஜால்ரா – காக்காய் – ஐஸ் – முதுகு சொறிதல் – இன்னபிறவற்றில் அடியாழம் வரை சென்று ஆதரித்தனர். ஒருவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். மற்றொருவர் குமுதம்.
    பெட்டிக் கடைகளில் விற்காமல் தொங்கும் “குமுதம் ரிப்போர்ட்டர்” பத்திரிகையை பார்த்திருப்போம். வாரமிருமுறை வந்தாலும் போட்டி காரணமாகவும், ஆளும் கட்சிகள் – அரசாங்கங்களிடமிருந்து வாங்கும் காசுக்கு மேலேயே கூவி ஆதரிப்பதாலும் குமுதத்தை மக்கள் தவிர்த்து விடுவர். ஆகவேதான் ‘வாரியா’ என்ற வரிசையில் அவ்வப்போது ஆபாச தலைப்புக்களோடு ‘ஆண்களை’ குறிவைத்து வீழ்த்த நினைக்கிறது குமுதம்.
    ஜெயாவின் அண்ணன் மகளான தீபாவை “சொப்பன சுந்தரி” என்று அட்டைப் படம் வெளியிட்டு “புரட்சித் தலைவியின்” பொற்பாத சேவையை இன்றும் பக்தியோடு செய்கிறது குமுதம் ரிப்போர்ட்டர் எனப்படும் புரசைவாக்கம் புரோக்கர்.
    சமூகவலைத்தளங்களில் எழுந்த கடும் கண்டனம் காரணமாக குமுதம் அந்த சொப்பனசுந்தரியை யாரு வைச்சிருக்கா படம் கொண்ட ரிப்போர்ட்டரை தனது ஃபேஸ்புக்கில் வைத்திருக்கவில்லை. அதே நேரம் இந்தப் பிரச்சினை காரணமாக தனது பெயர் சந்தையில் பரபரப்பாக பேசப்படுவதால் குமதம் ரிப்போர்ட்டரின் ஓனர் வரதராஜ ஐய்யங்கார் கல்லாப்பெட்டிக்கு தனியே பூஜை செய்திருப்பது உறுதி. எந்த ஒரு விபச்சாரத் தரகனுக்கும் வெட்கம், சுரணை, பயம், ஒழுக்கம் இருப்பதில்லை என்றுதான் நாம் நினைக்கிறோம். உண்மையில் இவையெல்லாம் இல்லாமல் இருந்தால்தான் தான் தொழில் செய்ய முடியும் என்பது தரகர்களுக்குத் தெரியும்.

    ராமதாஸ் :இலங்கையிடம் பனைமரப் பாடம் கற்குமா தமிழகம்?

    இலங்கையிடம் பனைமரப் பாடம் கற்குமா தமிழகம்? :  ராமதாஸ்மின்னம்பலம் : இலங்கையைப் போன்று தமிழகமும் பனைமரத்தைக் காக்க சிறப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும், என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    இதுகுறித்து, ஜூன் 14-ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் புனித மரமாகக் கருதப்படுவதும், தமிழ்நாட்டின் மாநில மரமுமாகிய பனைமரங்கள் வேகமாக அழிந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழர்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்த பனை மரங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. பனை மரத்துக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. சங்ககால இலக்கியங்களில் பனைமரத்தைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, அந்த இலக்கியங்கள் அனைத்தையும் சங்ககாலத்தில் இருந்து நமது காலம் வரை காப்பாற்றித் தந்தவையும் பனை மரங்கள் தான். பனை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மனிதர்களுக்குப் பயன்படுகின்றன.

    அமெரிக்க ஆளும் கட்சி கொறடா சுட்டு கொலை! வர்ஜினியாவில் டொனால்ட் ட்ரம்ப் கட்சியின் ..


    அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டிரம்பின் குடியரசு கட்சி கொறடா ஸ்டீவ் ஸ்கேலிஸ் உயிரிழந்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் டிரம்ப் கட்சி கொறடா ஸ்டீவ் ஸ்கேலிஸ் உயிரிழப்பு வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபகாலமாக பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் அமெரிக்கா மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்று விர்ஜினியா மாகாணத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குடியரசுக் கட்சி கொறடாவும், டிரம்ப் அவையில் முக்கிய பொறுப்பில் உள்ளருமான ஸ்டீவ் ஸ்கேலிஸ் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    புதன், 14 ஜூன், 2017

    குடியரசு தலைவர் தேர்தல் .. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடையாது! எதிர்கட்சிகளை சந்திக்கும் பாஜக குழு!

    குடியரசுத் தலைவர் தேர்தலை ஒட்டி ஆளும் பாஜகவின் குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தேசிய அரசியல் அரங்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜூலை 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை முடிவு செய்வது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக மூன்று நபர் கொண்ட குழுவை அமைத்தார் பாஜக தலைவர் அமித் ஷா.
    மத்திய அமைச்சர்கள் ராஜ் நாத் சிங், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    மோடியை கண்ட எதிரிகளுக்கு மூத்திரம் வரும் எச்ச.ராஜா !... மோடி என்ன பொதுக்கழிப்பிடமா? நாடா சார் இது

    நாடா சார் இது! : அப்டேட் குமாருமின்னம்பலம் :குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜெயேந்திரரை சந்தித்த புகைப்படம் வெளியானதை வைத்து நம்ம ஆட்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். தமிழக அமைச்சர்கள் ஊழல் குற்றவாளியை பார்க்க ஜெயிலுக்கு போறாங்க..இந்திய ஜனாதிபதி, கொலை குற்றத்துல கைதானவரை பார்க்க இங்க வாறாருன்னு மனசாட்சியே இல்லாம டிவிட் போடுறாங்க. அரசியல்வாதிகளை மட்டுமே வச்சு செய்றவங்க பெரியவான்னு கூட பார்க்காம இப்போ இந்த பக்கம் இறங்கிட்டாங்க. ஒருவேளை அரசியல் முடிவுகள் எல்லாம் இங்க தான் எடுக்குறாங்கன்னு தகவல் போயிருக்குமோ.? நமக்கு எதுக்கு வம்பு நீங்க அப்டேட்ஸ பாருங்க.
    @Kozhiyaar
    ராஜேஷ் குமார் நாவலை விரும்பி படித்தவர்கள் கோவையை ஒரு திகில் நகரமாகவே உருவகப்படுத்தி வைத்திருப்பார்கள்!!!

    @naatupurathan
    தமிழக அமைச்சர்கள்,
    ஊழல் குற்றவாளிய பாக்க ஜெயிலுக்கு போறாங்க.,
    இந்திய ஜனாதிபதி,
    கொலை குற்றத்துல கைதானவரை பாக்க போறாரு!
    நாடா சார் இது..!!!
    @vinothanaseeli
    பெண்களை சொந்தகால்ல நிக்க பழகிக்கனும்னு சொன்னது ஒரு குத்தமா
    ஸ்கூட்டியே கூட பிரேக் யூஸ் பண்ணாம சொந்தகால்ல தான் நிப்பாட்டனுமா
    @yugarajesh2
    பாஜகவில் இணைந்தார் நடிகர் பொன்னம்பலம்-செய்தி
    #இன்று முதல் தமிழகத்தில் பாஜக 'பலம்' பொருந்திய கட்சியாக உருவெடுத்தது..?