சனி, 14 ஜூன், 2025

ஏர் இந்திய விமான விபத்து - துருக்கிய விமான பராமரிப்பு நிறுவனம் CELEBI வெளியேற்றப்பட்டதுதான் காரணமா?

May be an image of aircraft and text

 Krishnamurthi S  :  இப்படி ஒரு அரசியலும் இருக்கிறதா?
ஏர் இந்தியா விமானம் மேல் எழும்ப முடியாமல்.. கிளம்பிய சில விநாடிகளில் தரையில் விழுந்து நொறுங்கியது ஏன்?
விமானத்தின்.. அளவிற்கு அதிகமான எடையளவு சரிபார்ப்பதில் ஏற்பட்ட குழப்பாக இருக்கும் என்று சில வல்லுநர்கள் கணிக்கின்றனர். 
அப்படி என்றால் அவற்றை நிர்வாகம் செய்பவர்கள் யார்?
இதன் பின்னணியில் மறைக்கப்பட்ட மர்மம் என்ன?
விமானங்களையும், விமான  நிலையங்களையும் விமானத்தில் ஏற்றப்படும்  சுமைகளையும் பராமரிப்பதில் சர்வதேச அளவில் புகழ்பெற்று, நீண்ட அனுபவமும் கொண்ட,   *CELEBI (Çelebi Aviation Holding)*  என்னும் நிறுவனம் இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து வந்தது.

அல்பிரட் துரையப்பா கொலையும் வட்டுக்கோட்டை தீர்மானமும் தமிழரசு கட்சியின் தேர்தல் வெற்றியை மட்டுமே நோக்கமாக கொண்டது

 ராதா மனோகர் : தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தப்பி தவறியும் உண்மை பேசவே மாட்டார்கள் 
அவர்கள் பொய் பேசுவதற்கென்றே உருவாக்கப்பட்ட உயிரினங்கள்!
செல்வநாயகம் உருவாக்கிய எந்த மனிதரும் நேர்மையான மனிதராக இல்லவே இல்லை.
தலை முதல் கால்வரை பச்சை பொய்கள்  வடித்தெடுத்த சுயநலம்  என்றும் குறையாத பேராசை!
செல்வாவின் பக்க விளைவுதான் தமிழ் பயங்கரவாத இயக்கங்களும் அதன் கொடிய தலைவர்களும்.
அல்பிரட் துரையப்பா கொலையும் வட்டுக்கோட்டை தீர்மானமும் ஒரே இலக்கை கொண்ட இரட்டை தாக்குதல்களாகும்.
இந்த இரட்டை தாக்குதல்களின் ஒற்றை காரணம் எம்பி பதவி அமைச்சர் பதவி அதிகார மோகம் புகழ வெளிச்சம்  என்பதை தவிர வேறென்ன உண்டு?
திரு அல்பிரட் துரையப்பா அவர்களின் சில படங்களை பார்க்கும்போது  பழைய ஞாபகங்கள் கொஞ்சம் அலைமோதியது.
இன்றைய யாழ்ப்பாண நிலத்தை அளந்து வீதிகளை உருவாக்கி புகையிலை தோட்டங்கள் உட்பட நிலங்களை அளந்து நிர்மாணம் செய்தது பெரும் பாலும் ஒல்லாந்தர்தான்!
அதனால்தான் நில அளவையாளர்களை உலாந்தாக்கள் என்று கூறும் சொல் வழக்கத்தில் இருந்தது.

விமானவிபத்து பற்றி மக்களே பேசுங்கள் மக்களே எழுதுங்கள் மக்களே கருத்துக்களை பரிமாறுங்கள்.

May be an image of 1 person and text that says '코티 WHO IS VISHWASH KUMAR RAMESH? Lone Survivor of Air India Plane Crash Scated in II I1'
May be an image of 2 people and text that says 'UNBREA UNBREAKABLE FAKABLE'

 ராதா மனோகர் : விமான விபத்து பற்றி சாதாரண மனிதர்கள் பேசினால் பலருக்கு எரிச்சல் வருகிறதாம் 
அதானே பொதுப்புத்தி எப்படி சிந்திக்க வேண்டும் எப்படி பேசவேண்டும் என்று நாம்தானே இதுவரை தீர்மானித்து கொண்டிருந்தோம்?
மக்களே புரிகிறதா?
இதுதான் பார்ப்பனீய சித்தாந்தம்! 
இதில் பிறவி பார்ப்பானை விட அரைகுறை பார்ப்பனர்களின் quasi brahmins  மேட்டிமை ஒரு படி மேல்.
அகமதாபாத் விமான விபத்து என்பது வெறும் இந்தியாவை மட்டும் உலுக்கிய விடயம் அல்ல.
இந்த நிமிடம் வரை உலகை உலுக்கி கொண்டிருக்கும் விடயம் இது.
மக்களை அரசியல் பொதுவெளியில் இருந்து அகற்றுவதில் , கைதேர்ந்தவர்களுக்கு  சாதாரண மக்கள் பேசினால் எழுதினால் எரிச்சல் வரத்தானே செய்யும்?

வெள்ளி, 13 ஜூன், 2025

போலி பால் தயாரித்து விற்பனை: தென்காசி அருகே 3 பேர் கைது!

Latest Tamil News

 தினமலர் : தென்காசி: தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் ரசாயனத்தில் தயாராகும் பால்பண்ணை நடத்தி வந்த தம்பதி மற்றும் ரசாயன பவுடர் விற்பனை செய்த கோமதி சங்கர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் அன்னை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 70க்கும் மேற்பட்ட முதியவர்கள் சாப்பிட்ட கெட்டுப்போன அசைவ உணவால் புட் பாய்சன் ஏற்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

வியாழன், 12 ஜூன், 2025

ஏர் இந்தியா விமான விபத்தில் ஒரு உயிர் பிழைத்தார் அவர் கூறுவது என்ன?

air crash bbc 

 விமான விபத்தில் ஒரு உயிர் பிழைத்தார் 
அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்தவர் என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மேலும், உயிர் பிழைத்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஜி.எஸ். மாலிக் கூறியுள்ளார்.
விமான நிறுவன அதிகாரிகள் முன்னர் பகிர்ந்த விமானம் குறித்த அறிக்கைப்படி, 11A இருக்கையில் இருந்த பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்றும், அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிகிறது.

அகமதாபாத் விமானவிபத்து சர்வதேச அரசியல், பொருளாதார பின்னடைவுகளை கொண்டுவரக்கூடியது.

 Karthikeyan Fastura :   அகமதாபாத் விமானவிபத்து மிகவும் துயரமானது. இந்தியாவிற்கு சர்வதேச அரசியல், பொருளாதார பின்னடைவுகளை கொண்டுவரக்கூடியது. 
Take-Off ஆகி ஒரு நிமிடத்திற்குள், விமான நிலையத்திற்கு அருகிலேயே 20 மாடி உயரத்திற்கு சென்று நடந்த விபத்து என்பது ஏற்கமுடியாத துயரம். பல சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடியது. 
ஒரு விமானத்தை கிளப்பும் முன் பல கட்டங்களில் தொழில்நுட்ப சரிபார்ப்பு இருக்கும். 
Aircraft Inspection என்று பைலட் விமானத்தை முழுமையாக சுற்றிவருவார். ஏதாவது சின்ன பிரச்சனை என்றாலும் அதை சரி செய்யும்வரை நிறுத்தி ஆகவேண்டும். 
Maintenance Checks என்று என்ஜின், த்ரோட், வீல் ஹைட்ராலிக், விங்ஸ் Avionics என்று எல்லாவற்றையும் முழுமையாக சரிபார்க்க வேண்டும்.
இவை எல்லாம் முடிந்த பிறகும், பைலட் காக்பிட்டில் System Check, FMS என்று சொல்லக்கூடிய விமான மேலாண்மை அமைப்பை சரி பார்ப்பார்கள்.

ஏர் இந்தியா விமானம் விபத்து - 242 பேரின் நிலை என்ன? புறப்பட்ட பத்தாவது நிமிடத்திலேயே ...

 நக்கீரன் -kalaimohan :  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
விபத்து நடந்த இடத்தில் 7  தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.  
இன்று (12/06/2025) மதியம் 1:45 மணியளவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற விமானமானது திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் புறப்பட்ட பத்தாவது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது.
விபத்து நடந்த இடத்திற்கு 90 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

நடிகர் விஜயை ரெயிடு பண்ணி பாஜகவிற்குள் கொண்டுபோய் சேர்த்த அருண்ராஜ் யார்? மொத்த வண்டவாளமும் அம்பலம்!

 Deenadayalan Jagadeesan :  விஜயை குண்டுக்கட்டா நெய்வேலில இருந்து சென்னைக்கு தூக்கினு வந்து ரெய்ட் அடிச்சவன் தான், இப்ப கட்சில சேர்ந்திருக்கான்னு வீடியோ சுத்திட்டு இருந்ததில்லையா?
வீடியோ அவ்ளோ க்ளாரிட்டி இல்லாததால, 
இது உண்மையான செய்திதானான்னு தேடிப் பார்ப்போம்ன்னு போனா, தம்பியைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தது.

May be an image of 2 people, temple and text that says 'அக்மார்க் தற்குறி சங்கி... அருண்ஜீ யின் STD நாகூர் ஜலால் வருமான வரித்துறை விஜயை ரெய்டு அடிச்சப்போ மேற்படியான் தான் அதன் ஜாயின்ட் கமிஷனர். 2021 தேர்தல் நேரத்தில் மேற்படியானின் சில ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக, தேர்தல் ஆணையர் பிரசாந்த் வஸ்தவாவால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதோடு, உடனடியாச வருமான வரித்துறையிலிருந்து, ருந்து, CBDT (Central board of direct taxes) எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது செய்யப்பட்டு என்ற கன்பர்மேஷனும் தனக்கு வேண்டும் என்று CBDT டைரக்டருக்கு உத்தரவிட்டு இருக்கிறார் தேர்தல் ஆணையர். பணமதிப்பிழப்பு சமயத்தில் சேகர் ரெட்டி வீட்டில் கட்டுக்கட்டாக 2000 ரூ பாய் நோட்டுகள், பல கிலோ தங்கங்கள் எடுக்கப்பட்ட அந்த கேஸை சிறப்பா ஹேண்டில் பண்ணி ஊத்தி மூடி ரெட்டியை குளிர்வித்ததும் மேற்படியான் தான்..'

மொத விஷயம், விஜயை ரெய்ட் அடிச்சப்போ தம்பி தான் வருமான வரித்துறை ஜாயின்ட் கமிஷனர். நீங்க உத்திரவாதமா எடுத்துக்கலாம்.
இந்த கூகுள் தேடலில், தம்பி மொக்கையா blogs எழுதும் பழக்கம் உடையவர் என்பதும் தெரிந்தது..
அத்தனை blogsஸையும் முழுசா ஒக்காந்து படிச்சேன்🥲😂.. 
அதில் அவர் உதிர்த்து வைத்த முத்துகள்…. இதோ..
நூறு நாள் வேலைவாய்ப்பு நாட்டுக்குக் கேடு…
இலவசங்கள் ஒழிக்கப்படணும்..

டாக்டர்கள் கட்டாய க்ராமப்புற மருத்துவப்பணிக்கு எதிரானவர் தம்பி..
பிரதமர் எம்பிக்களால் தேர்ந்தெடுப்படணும், ஆனால் முதல்வர் ஜனாதிபதி தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படணும். 
அது வந்து ஊழலை ஒழிக்க உதவுமாம். எனக்கெட்டிய அறிவுக்கு எப்டி யோசித்துப் பார்த்தாலும் அது எப்படி ஊழலை ஒழிக்கும்ன்னு தெரியல..

புதன், 11 ஜூன், 2025

ஆந்திர பார்ப்பனரான சின்மயி ஸ்ரீபதா திடீரென தமிழராக மாறி நிற்கிறார்.

 குமரிக் கிழவனார்   :  மலையாள பானர் சமுதாய தந்தைக்கும் மலையக  தமிழரான தாய்க்கும் மகனாக பிறந்த வேடனை தமிழர் தமிழர் என்று கொண்டாடிக் கொண்டிருந்த தமிழர்கள்  
தற்போது டயர்டாகி விட்டார்கள் போலும்....
சின்மயியை தமிழர் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்...... 
சின்மயியின் முழுப்பெயர் சின்மயி ஸ்ரீபதா 
அவரின்  தந்தையின் தந்தை ஒரு ஒரு தெலுங்கு பார்ப்பனர். 
அவரது தாத்தனின் பெயர்  ஸ்ரீபதா பினகபனி ஆந்திர பிரதேச கர்னூல்  மாவட்டத்தை சார்ந்தவர். ஆந்திர மாவட்டத்தில் இருந்து மருத்துவ பணிக்காக  அன்றைய மெட்ராஸ் மாகாண தஞ்சாவூரில் வந்து குடியேறினார்.
கர்நாடக இசைக் கலைஞரான அவருக்கு இசை சார்ந்து இயங்க தஞ்சாவூர் ஏதுவான களமாக இருந்தது. அப்படி கர்னூல்  மாவட்டத்திலிருந்து தஞ்சாவூருக்கு வந்து குடியேறிய ஆந்திர பார்ப்பனரின் மகன்வழி பேத்தியான சின்மயி ஒரு பேட்டியில் தன்னைத் தமிழர் என்கிறார்........

மிரட்டப்பட்ட அமைச்சர் மெய்யானாதன்! -கொலை விழும் அபாயம்…? என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

 மின்னம்பலம் : ’ஆயிரம் இருந்தாலும் மாயவரம் மாதிரி வருமா?’ என்பது மாயவரம் என்னும் மயிலாடுதுறையை பெருமைப்படுத்தும் சொற்றொடர். Meyyanathan What is Stalin going to do
ஆனால் திமுகவிலோ, மயிலாடுதுறை மாவட்டம்  ஒரு மாதிரியாக போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் குமுறலாகவும் புலம்பலாகவும் ஒலிக்கிறது.
மயிலாடுதுறை திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் மீது தான் மாவட்டத்தின்  பெரும்பாலான நிர்வாகிகள் அறிவாலயத்துக்கு சென்று புகார் அளித்து வந்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் துணை முதல்வர் உதயநிதியிடமும் சென்று நிவேதா முருகன் மீது நீண்ட புகார் பட்டியலைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

Thug Life ஏற்கனவே 20 கோடி போச்சு.. இப்போ 30 கோடி போகப் போகுதா?.. கழுத்தைப் பிடிக்கும் நெட்பிளிக்ஸ்

 tamil.filmibeat.com - Mari S :  சென்னை: கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாத நிலையில், 
20 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டு இருந்தது. 
இந்நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் மூலம் வரவேண்டிய தொகையில் 30 கோடி வரை அடிபடும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்ற நிலையில், 
கமல்ஹாசன் அதை சமாளிக்க என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்துக்கு கல்வி நிதியை வழங்குங்கள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

 மின்னம்பலம் -  Kavi  : தமிழகத்துக்கான கல்வி நிதியை வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Allocate education funds to Tamil Nadu
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  ஆனால் இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.
இதனால் 25 சதவிகித இட ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையும் தொடங்கப்படவில்லை.
எனவே உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க கோரி கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

திங்கள், 9 ஜூன், 2025

அமித் ஷா வருகையால் அரண்டுபோயிருக்கிறது திமுக'' - எல்.முருகன் விமர்சனம்

 hindutamil.in : சென்னை: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகையால் ஒட்டுமொத்த திமுகவும் அரண்டுபோயிருக்கிறது. 
எத்தனை ‘ஷாக்கள்’ வந்தாலும் தமிழகத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜம்பம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் உறைந்து போயிருப்பது தெரிகிறது" என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகையால் ஒட்டுமொத்த திமுகவும் அரண்டுபோயிருக்கிறது. எத்தனை ‘ஷாக்கள்’ வந்தாலும் தமிழகத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜம்பம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் உறைந்து போயிருப்பது தெரிகிறது

அமித்ஷா : 2026-ல் தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சி- மதுரையில் அதிர்ச்சி!

 மின்னம்பலம் : 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார். 
BJP-AIADMK Alliance Will Rule Tamil Nadu in 2026, Declares Amit Shah in Madurai
மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று ஜூன் 8-ந் தேதி நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: 
இந்த மண்ணின் சொக்கநாதர், கள்ளழகர், திருப்பரங்குன்றம் முருகனை தலைவணங்கி என் உரையை தொடங்குகிறேன்.
 தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மக்களை சந்திக்கும் போது பெருமைக்குரிய தமிழ் மொழியில் உங்களிடம் பேச முடியவில்லை என வருந்துகிறேன்.

அமெரிக்க எலான் மாஸ்க் புதிய கட்சி தொடங்கினார் The American Party by Elan Musk

BBC Tamil :

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எலான் மஸ்க், தனது எக்ஸ் வலைதளத்தில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார்.
அதில் அமெரிக்காவில் 80 சதவீத நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு புதிய கட்சி தேவையா? என்று கேள்வி கேட்டு இருந்தார்.

ஞாயிறு, 8 ஜூன், 2025

விவேகானந்தரின் உண்மை முகம்-- உள்ளுக்குள் ஜாதி வெளியே முற்போக்கு!

May be an image of ‎1 person and ‎text that says '‎SWAMI VIVERAMANDA The Aindoo Monk tو India-‎'‎‎
May be an image of map and text that says 'PHILOSOPHY SWAMI 排品 ALecture Incerestin RISADHU ADHU RATHNA RISADHURATHNA RATHNASARGURU SARGURU'

 Dhinakaran Chelliah  :  விவேகானந்தரின் உண்மை முகம்
சனாதனிகள் விவேகானந்தரைக் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உண்டு. 
அதில் முக்கியமானது சாதி,சனாதனம்,சனாதனிகள் பற்றிய அவரது இரட்டை நிலைப்பாடு. 
இதற்குச் சான்றாக அவரது நூல்களிலிருந்தே ஒரு சில கட்டுரைகளைத் தொகுத்து எழுதுகிறேன். 
முதல் நூல் விவேகானந்தர் எழுதிய “வேதாந்த தத்துவம்” (1923 பதிப்பு)எனும் நூல்.அமெரிக்கப் பிரயாணத்தின்போது ஜாதிப்பிரிவினை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு விவேகானந்தர் அளித்த பதில் இது,
(கே) ஜனங்கள் அடையக்கூடிய இந்த ஆத்ம சம்பந்தமான சுதந்தர முக்திக்கும், ஜாதிக் கட்டுப்பாட்டைக் கவனிப்பதற்கும் சம்பந்தம் உண்டா?

தலைவரே... திமுகவுக்கு எதிர்கட்சியாக திமுக தொண்டர்களே மாறி வருகிறார்கள். கவனம் செலுத்துங்கள்.

May be an image of text

 Vimalaadhithan Mani : ·எந்த பதவிகளிலும் இல்லாத கழகத்தின் கடைசி தொண்டன்தான் கழகத்தின் ஆணிவேர் என்று தலைவர் தளபதி அவர்கள் வாயில் சொல்லி எந்த பலனுமில்லை. 
முதலில் கழகத்துக்காக உண்மையிலேயே களமாடும் உடன்பிறப்புகளை முழுமையாக  சரியாக அடையாளம் கண்டு ஒருங்கிணைத்து அவர்களின் களப்பணியை முறையாக  அங்கீகரியுங்கள் தலைவரே. 
கட்சி பதவிகளில் எல்லாம் முழுமையாக அமர்ந்துகொண்டு கழக தொண்டர்களை, கழக அபிமானிகளை கொஞ்சமும் மதிக்காமல் திமிர்த்தனம் செய்துகொண்டு இருக்கும் கட்சி நிர்வாகிகளை தொண்டர்கள் மற்றும் கழக அபிமானிகளுக்கான மரியாதையை முதலில்
கொடுக்க சொல்லுங்கள்.
வட்டம், மாவட்டம் பொறந்த நாள், இறந்த நாள், கல்யாண நாள், காதுகுத்து, திரட்டினு எப்பவும் அதிகாரத்தின் பின்னால் கூஜா தூக்கிகிட்டு சுத்தி அல்லக்கை வேலை செய்யாத சுயமரியாதைக்காரர்கள், கழக அபிமானிகள் என்று பஞ்சத்துக்கு கட்சிக்கு வராத பாரம்பரிய கட்சிக்காரர்கள்  கழகத்தில் நிறைய இருக்கிறோம். 

Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன்

 tamil.abplive.com -  ஸ்ரீராம் ஆராவமுதன்  :  ரஷ்யாவிற்குள் ஊடுருவி ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைனுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. 
அந்த வகையில், ஏற்கனவே ஒரு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு மிகப்பெரும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
 இதில் உக்ரைனின் தலைநகரும் தாக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த அடித்த ரஷ்யா
உக்ரைனுக்கான பதிலடியின் ஒரு பகுதியாக, நேற்றிரவு, 400 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.