திங்கள், 28 செப்டம்பர், 2026

RTI இல் சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது

 minnambalam.com -Pandeeswari Gurusamy :RTI இல் சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்து எதிர்ப்புக்கு பிறகு ரத்து செய்தது தவெக அரசின் நிர்வாக திறமை இன்மையை காட்டுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது RTI-யில் இருந்து சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, “தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) என்பது நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட அவர்களின் அடிப்படை உரிமையாகும். 2005-ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 24(4)-ன் கீழ் இந்த உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

வஹாபிஸப் பயங்கரவாதத்தின் தோற்றம் இஸ்லாம் உருவாகி பல நூறு ஆண்டுகளின் பின்னர்

May be an image of text

 M R Stalin Gnanam :  வஹாபிஸப் பயங்கரவாதத்தின் தோற்றம் 
இஸ்லாம் உருவாகி பல நூறு ஆண்டுகளின் பின்னர் ஏற்றப்பட்ட புலப்பெயர்வுகள்,வெளியுலகுத் தொடர்புகள், காலமாற்றங்கள்  காரணமாகவும் முஸ்லிம்களின் வாழ்வு மற்றும் வணக்க வழிபாடு போன்றவற்றில் பல்வேறு  விடயங்கள் மாற்றம் பெறலாயின. பல முறைமைகள் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் போன்றவற்றை அச்சொட்டாக பின்பற்றுவது சிக்கலுக்குரியதொன்றாக மாறத்தொடங்கியது.
இதன்காரணமாக இஸ்லாம் மார்க்கம்  என்பது குறித்த  ஓர் இறுக்கமான அணுகுமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என சில பற்றி மார்க்க அறிஞர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர். அத்தகைய அறிஞர்களில் ஒருவர்தான் இமாம் 'முஹம்மத் பின் அப்துல் வஹாப்' என்பவராகும்.

நல்லூரில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் - காவல்துறையினர் விளக்கம்

  hirunews.lk  : யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் போது, உயிர்நீத்த திலீபனின் உருவச்சிலை இன்று (27) காலை காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.
உருவச்சிலை அமைந்திருந்த இடத்திற்கு காலை 6.30 அளவில் சுமார் 10 காவல்துறை அதிகாரிகள் வருகை தந்து, சிலையை அகற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
திலீபனின் நினைவேந்தல் நேற்று(26) முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இன்று காலை குறித்த சிலை அகற்றப்பட்டுள்ளது.

சனி, 26 செப்டம்பர், 2026

வீரமணி கேஸை முடிச்சு விட்டதே தவெக அரசு தான்! ஆதரத்தோடு விளாசிய வில்சன்! வீரவசனம் வேண்டாம் சிஎம் சார்

 tamil.oneindia.com - Rajkumar R : சென்னை: ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது தவெக அரசு தான் எனவும், ஜெம் வீரமணி வழக்கில், இதுவரை விஜய் அரசு எந்தவிதமான உரிய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு, எனவே, விஜய்யின் வீர வசனம் தேவையற்றது என திமுக வழக்கறிஞர் வில்சன் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், ஜெம் கிரானைட் வீரமணி தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்குகள் திமுக ஆட்சிக் காலத்தில் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்டுகளுடன் கை கோர்க்கும் மமதா: செப்.30-ல் INDIA கூட்டணி கூட்டம்

 minnambalam.com - Mamata-Left Parties : இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் டெல்லி அரசியலை பரபரப்பாக்கியுள்ளன. ’வாழ்நாள் எதிரிகளாக’ களத்தில் மோதும் திரிணாமுல் காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே இந்த விவகாரத்தில் நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஞானேஷ்குமார் விவகாரம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில், மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை பல்வேறு முடிவுகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக The Indian Express செப்டம்பர் 23-ம் தேதி செய்தி வெளியிட்டது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கை இலக்கிய ஆளுமை வனிதா சேனாதிராஜா...கொலைக்கு யார் காரணம்?

May be an image of text

 சுப்ரமணிய பிரபா  :  வனிதா சேனாதிராஜா...கொலைக்கு யார் காரணம்????  
எனக்கு அறிமுகம் ஆனவர் இல்லை... ஈழத்தமிழ் இலக்கிய பரப்பில் அவர் அறியப்பட்டவராக பல பதிவுகள் வருகின்றன ஆளுமையானவர் என்கின்றனர். 
வவுனியாவை சேர்ந்த இவர் சம்பந்தமே இல்லாமல் மின்னேரியாவில் ஒரு தங்கும் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்...
பொதுவாக ஈழத்தமிழ் இலக்கிய உலகம் என்றாலே பத்தடி தள்ளி நிற்கும் பாங்கை சில வருடங்களாக நான் கடைப்பிடித்து வருகின்றேன் அந்த உலகத்தின் அந்தரங்கம் அறிந்த படியால்... 

வெள்ளி, 25 செப்டம்பர், 2026

முகம்மது ஹாஷிம் என்கின்ற வெடிகுண்டு பயங்கரவாதி ஸஹ்ரான் கதை

May be an image of text

 M R Stalin Gnanam : சஹ்ரானின் பூர்வீக வரலாறு
மட்டக்களப்பின் கிழக்கே பரந்து  கிடக்கிறது அந்த வங்காள விரிகுடா. 
ஆழமும் விரிவும் கொண்ட அந்தக் கடலில் தொலை தூரத்தே நின்று  எந்தவொரு கும்மிருட்டு மிக்க  இராக்காலங்களிலும்  கரையைத் தேடுகின்ற மீனவர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழுவது காத்தான்குடி பட்டினத்தின் மின்னொளிகள் தரும் நம்பிக்கைக் கீற்றுகள்தான். 
ஆம் மட்டக்களப்பு  மாநகரின் தெற்கே ஒரு சில கிலோ மீற்றர்கள் தூரத்தே உள்ள கரையோரப் பட்டினம்தான் அது.   
அந்த காத்தான்குடி வியாபார  பரபரப்புகளுடன் கூடிய  சன நெரிசல்மிக்க ஒரு இடமாகும். எங்கு சென்றும்  பெறமுடியாத பொருட்களை இந்த காத்தான்குடிக்குச் சென்றால் வாங்கிக்கொள்ள முடியும். 

May be an image of text

 இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் கடை வைத்திருக்கும் முஸ்லிம்களிடம் குசலம் விசாரிக்க நேர்ந்தால் அவர்களின் தந்தையாரோ பாட்டனாரோ  காத்தான்குடியில் இருந்து வந்துதான் அவ்வியாபாரத்தை ஆரம்பித்திருப்பார் என்பதை அறியமுடியும்

காத்தான்குடியில் (அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமாகச் சேர்த்து) சுமார்  66,000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள். 
இவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷியா முஸ்லிம்களாகும். 
சுமார் 60 ற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள்  இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. 
*இவற்றில் சுமார்  பத்து பள்ளிவாசல்கள் வஹாபிஸ சிந்தனைகளின் மையமாக திகழ்கின்றன.
மேலும் ஷரியத் சட்டங்களை போதிக்கும் 10 மதரஸாக்களும் இங்கே உள்ளன.

’13 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம்?’ தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் – சிபிஐ

 minnambalam.com - Pandeeswari Gurusamy :  வாக்காளர் பட்டியலிலிருந்து கோடிக்கணக்கானோரின் பெயர் நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தாக்குதலை நடத்தியமைக்கும், சீர்குலைத்தமைக்கும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

வியாழன், 24 செப்டம்பர், 2026

மலையக ஆளுமை மு. சிவலிங்கம் ஐயா காலமானார் |

 kuruvi.lk :மலையகத்தின் பிரபல இலக்கியவாதியும், தொழிற்சங்க மற்றும் அரசியல் ஆளுமையுமான மு. சிவலிங்கம் இன்று (24) காலமானார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான இவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்து மக்கள் சேவையாற்றியுள்ளார்.
மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடிவிற்காகத் தனது பேனா முனையைக் கூர்மையான ஆயுதமாகக் கொண்டு, அறவழியில் போராடிய ஒரு ஜனநாயகப் போராளியாக இவர் திகழ்ந்தார்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அவசியமா? மக்கள் சொல்வது என்ன.. களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

 tamil.oneindia.com - Mani Singh S  : சென்னை: காமராஜர், அண்ணா எல்லாரும் இந்த சட்டமன்றத்தில் இருந்தாங்க.. யாரும் எடுக்க சொல்லவில்லை. ஆனால் நீ வந்து மூன்று மாதம் கூட ஆகல.. அதற்குள் உன் கட்டிடத்திற்கு எதிரே பீச் ஓரமாக தலைமை செயலகம் அமைத்து காற்று வாங்க வேண்டும் என நினைத்தால் சும்மா விட்டுருவோமா நாங்க.. எங்க வாழ்வாதாரம் என்ன ஆகும்? என பட்டினப்பாக்கம் மக்கள் புதிய தலைமை செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜெம் வீரமணி விவகாரம்... யாஸ்மின் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

  minnambalam.com - Kavi : கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜெம் வீரமணி பாலியல் குற்றம் தொடர்பாக கடந்த ஆண்டே புகார் அளித்தும் காவல் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்தசூழலில் ஜெம் வீரமணி குறித்து புகார் அளிக்கப்பட்ட காலக்கட்டத்தில் உரிய பணியில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

புதன், 23 செப்டம்பர், 2026

தெலுங்கு ரெட்டிகளிடம் சிக்கிய தமிழக கல்குவாரிகள் ஜெம் வீரமணி விடயமும் ஏறக்குறைய அதே பொறிதான்

 தினகரன் : பல ஆயிரம் கோடி மதிப்பு கிரானைட் குவாரியை கொடுக்காததால் "ரெட்டி"  கும்பல் ஆத்திரம்.ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கை வைத்து  பேரம் நடந்துள்ளது.
ஜெம் கிரானைட் வீரமணி கைதுக்குப் பின்னால், மிகப் பெரிய அரசியல் மற்றும் அதிகார மையத்தின் சதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கு திடீரென சூடுபிடித்துள்ளது. 
தொழிலதிபர் வீரமணி கடந்த 50 ஆண்டுகளாக இந்திய அளவில் அசைக்க முடியாத கிரனைட் தொழிலில் முன்னணியில் உள்ளார். 
இதனால், ஆந்திராவில் உள்ள கிரானைட் தொழிலதிபர்களுக்கும் வீரமணிக்கும் பல ஆண்டுகளாக தொழில் போட்டி இருந்து வருகிறது.
ஆந்திராவில் கிரானைட் தொழிலில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர்கள், நண்பர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். 
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, ரெட்டி சமூகத்தினர் ஆந்திராவில் உள்ள அனைத்து குவாரிகளையும் தன்வசப்படுத்தி சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டினர். 

ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையராக நீடிக்க கூடாது : திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

 minnambalam.com - Kavi : தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக நடந்து கொண்டதாக மற்ற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றனர். 
இந்தச்சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று இந்திய அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

2019 Easter Attack குற்றவாளிகள் யார்? என்ன சித்தாந்தத்தில் வேலை பார்த்தார்கள்?

No photo description available.

 Rimaz Ahamed :  2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான ஒருவர் நவ்பர் மௌலவி (Mohamed Ibrahim Mohamed Naufer). இந்த மனிதரைப் பற்றி Easter Attack நடந்த காலத்திலிருந்தே நிறைய பேசப்பட்டாலும், சாதாரண மக்களுக்கு Zahran Hashim தெரிந்த அளவுக்கு இவரைத் தெரியாது.
இந்த வழக்கே சாதாரணமான ஒரு வழக்கு இல்லை. 23,270 குற்றச்சாட்டுகள், 2,309 அரச தரப்பு சாட்சிகள், கிட்டத்தட்ட ஐந்து வருட விசாரணை. இறுதியில் நவ்பர் மௌலவி உட்பட 15 பேர் குற்றவாளிகள் என Colombo High Court Trial-at-Bar நேற்று தீர்ப்பளித்திருக்கிறது.

தேவதாசி முறை’ ஒழிக்கப்பட்டது தவறா? ஜெயமோகன், ஸ்வர்ணமால்யா பங்கேற்ற கருத்தரங்கு…பொய்கள் அரங்கேறிய மேடை

தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது சரியா? தவறா? நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெரும் போராட்டத்தையே உருவாக்கிய இந்தக் கேள்வி இப்போது மீண்டும் விவாதத்துக்கு வந்திருக்கிறது.
சென்னை மயிலாப்பூர் சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் செப்டம்பர் 19-ந் தேதி “தேவநாயகி” முழுநாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் எழுத்தாளர் அ. வெண்ணிலா, எழுத்தாளர் ஜெயமோகன், ஸ்ரீராம், ஆய்வாளர் சாந்தினி பி., பத்திரிகையாளர் கோலப்பன், லட்சுமி பாலகிருஷ்ணன், ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட பலரும் தேவதாசிகள், அவர்களது கலை, கோவில் வாழ்க்கை, சமூக நிலை, அவர்களுக்கு நேர்ந்த சுரண்டல் என பல்வேறு கோணங்களில் பேசியிருக்கிறார்கள்.
அருள்மொழி எழுதியது என்ன?
இந்தக் கருத்தரங்கை முன்வைத்து திராவிடர் கழக பிரசார செயலாளர், மூத்த வழக்கறிஞர் அ. அருள்மொழி தனது முகநூல் பதிவில் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

புதிய தலைமை செயலகம் கட்ட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

minnambalam.com -Mathi முதல்வர் விஜய் அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மயிலை த.வேலு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இடைத்தேர்தலில் விஜய் அலை இல்லை.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐடிபிஎஸ் கருத்துக்கணிப்பு

  tamil.oneindia.com  -Mani Singh S  : சென்னை: தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், இரண்டு தொகுதிகளிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? விஜய் ஆட்சியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்பது உள்ளிட்ட கருத்து கணிப்பு முடிவுகளை ஐடிபிஎஸ் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ளார். இடைத்தேர்தல் களத்தில் விஜய் அலை இல்லை என்றும் அவர் கணித்துள்ளார்.

நடிகை அம்பிகா எப்படி தங்கை ராதாவின் செக்கை லவட்டினார்

No photo description available.

 Akilan Arul  : முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் 1984 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது சினிமா நடிகைகள் அம்பிகா ,ராதா(சகோதரிகள்) சென்னையின் பல இடங்கள். மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மேற்கு எல்லை ஓரங்களில்நடிகை ராதா அம்பிகா ஆகியோருக்கு  அரசு நிலங்களை மிகக்குறைந்த விலையில் வாங்குவதற்கு உதவி புரிந்தார்..அதில் அவர்கள். நட்சத்திர ஹோட்டல்கள் அபார்ட்மெண்டுகள் வர்த்தக நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.நடிகை ராதா அவர்கள், சென்னை போரூரில் பி.ஆர் கார்டன்ஸ் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார். தொழில் காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது, அவசரக் கட்டணங்களுக்காக கையெழுத்திட்ட சில காலியான காசோலைகளை தனது அறையில் வைத்திருப்பது வழக்கம்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2026

கனிமொழி கருணாநிதி : “சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” - ஜெம் வீரமணி வழக்கில்

 hindutamil.in -வேட்டையன் - சென்னை: “இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு குறித்து திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்​தில் பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்ள ‘ஜெம் கிரானைட்​ஸ்’ நிறு​வனத்​தின் நிறு​வனர் ஆர்​.வீரமணி (84) மீதான போக்சோ வழக்கு விவ​காரத்​தில், திடுக்​கிடும் பின்​னணி தகவல்​கள் ஒவ்​வொன்​றாக வெளிவந்து கொண்​டிருக்​கின்​றன.

கள்ளுக்கான தடையை தவெக அரசு நீக்க மறுப்பது கொடுஞ்செயல்”

  hindutamil.in -வெற்றி மயிலோன் :  சென்னை: ‘அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத் தொழிலாளி ‘கள்’ இறக்கக் கூடாதா? கள்ளுக்கான தடையை தவெக அரசு நீக்க மறுப்பது பனை தொழிலாளர்களின் வாழ்வினை அழிக்கும் கொடுஞ்செயல்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப ஒருவர் அடித்துக் கொலை - மகன் கைது

  ilakkiyainfo.com : caனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப ஒருவர் அடித்துக் கொலை - மகன் கைது!
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முத்துவேலு விஜயலட்சுமி என்ற 74 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த குறித்த பெண், தனது மகனுடன் அராலி மத்தி பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 சடலத்தில் அடிகாயங்கள்

திங்கள், 21 செப்டம்பர், 2026

ரூ.46 கோடி மோசடி... : அக்கா அம்பிகா மீது புகார் அளித்த தங்கை ராதா

Actressஅம்பிகா மீது தங்கை actress ராதா கண்ணீர் மல்க பரபரப்பு புகார் dhinamalar : dinamalar.com : 80களில் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் கனவுக் கன்னிகளாக திகழ்ந்தவர்கள் சகோதரிகளான அம்பிகா, ராதா. சிவாஜி, ரஜினி, கமல் என டாப் நடிகர்களின் படங்களில் நடித்துள்ளனர். ஒருகட்டத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய ராதா தனது கணவருடன் இணைந்து ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இறங்கினார்.

அனோஜனை சவூதியில் விடுதலை செய்ய முஸ்லிம் தலைவர்கள், எம்பீக்கள் கோரிக்கை

 தினகரன் : இஸ்லாம் மதம் மற்றும் முஹம்மது நபி அவர்களைப் பற்றி அவமதிக்கும் வகையிலான பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதற்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த தமிழ் இளைஞருக்கு மன்னிப்பு வழங்கி அவரைக் காப்பாற்றுமாறு இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.

திமுக பக்கம் பாயும் பாமகவின் நங்கூரம்? உதயசூரியனில் கனிகிறதா மாம்பழம்?

 tamil.oneindia.com- Hema Vandhana : சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டே பாமக மாற்று வழிகளை ஆராய்கிறது. திமுக தரப்பிலும் பெரிய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைக்கும் எண்ணம் இருப்பதால், பாமக திமுக பக்கம் நகர்வது சாத்தியமான ஒன்றே என்று மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.
பேரலை சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஜென்ராம், "மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் "எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை" என பாமக எடுத்த முடிவு, அவர்கள் என்டிஏ கூட்டணியிலிருந்து முற்றிலுமாக வெளியேறியதை உணர்த்துகிறது.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

மனைவி - மகளுடன் உடலுறவு வைக்க.. வாடிக்கையாளர்களை அழைத்த வரும் ஆண்கள்! குஜராத்தின் கொடூர கிராமம்

 onindia-tamil .com : காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் பணம் சம்பாதிப்பதற்காக மனைவி, மகள் என்று அனைவரையும் பாலியல் உறவில் தள்ளும் கொடுமை இன்று வரை நடந்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் தனது குடும்ப பெண்களுடன் உறவு வைக்க வெளி ஆட்களை சொந்த தந்தை, அண்ணனை அழைத்து வருவது தான். இந்த ஷாக் சம்பவம் நடக்கும் கிராமத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெரிய பெரிய நகரங்களில் 'ரெட்லைட் ஏரியா'க்கள் தனியாக உள்ளன. இங்கு பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விருப்பப்பட்டு இந்த தொழிலில் இருப்பது கிடையாது. குடும்ப சூழல், சிறிய வயதிலேயே நடந்த கொடுமைகள் உள்ளிட்டவற்றால் அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் பேட்டி ! ஆனந்த விகடன் இதழிலிருந்து ...

May be an image of one or more people

ஆனந்த விகடன் ''மகனுக்குத் தேசிய அவார்டு ('மூன்றாம் பிறை') கெடச்சிருக்கு! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!''
''சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?'' பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் டி.சீனிவாசன்.
''உங்க மகன் இந்த அளவுக்கு சூப்பர்ஸ்டாரா வருவார்னு ஆரம்ப காலத்துல நெனச்சீங்களா?''
''நிச்சயமா! நேத்துகூட 'Oh my boy, you deserve oscar'னுதான் அவனுக்குத் தந்தி அடிச்சேன்!''
''இந்தப் பெருமையில், கமலை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பங்கு பற்றி...''
''கமல்கிட்டே அளவுக்கதிகமான திறமை இருக்கு. முன்னுக்கு வந்துட்டான். அவ்வளவுதான். மத்தபடி, பெரிசா சொல்லிக்கொள்ற அளவுக்கு நான் ஒண்ணும் செஞ்சிடலை!''

சனி, 19 செப்டம்பர், 2026

காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் ராதிகா, உதவி ஆணையர் யாஸ்மின் மீது சவுக்கு சங்கர் கடும் குற்றச்சாட்டு!

May be an image of text that says "KARUPPU NEWS KARUPPU NEWS பிரேகிங் செய்தி அருண் ஐபிஎஸ் ராதிகாஜபிஎஸ் உதவி ஆணையர் யாஸ்மின் ஆகிய அதிகாரிகளின் பெயர்கள் ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா? -சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு karupp.in in"

 கருப்பு எழுத்துக் கழகம்.:  வீரமணி போக்சோ வழக்கு: மூன்று அதிகாரிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டதா? – காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் ராதிகா, உதவி ஆணையர் யாஸ்மின் மீது சவுக்கு சங்கர் கடும் குற்றச்சாட்டு!
"மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது" – பிப்ரவரி 19, 2026 அன்று தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை; சிறப்பு போக்சோ நீதிமன்றம் மறுத்ததால் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது!
சென்னை, செப்டம்பர் 19 –  தொழிலதிபர் ஆர்.வீரமணி மீதான போக்சோ வழக்கில், கைது செய்யப்பட்ட குற்ற எண் 174/2025-ல், பிப்ரவரி 19, 2026 அன்று "மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது" (Further Action Dropped) என்று இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தவர் உதவி ஆணையர் யாஸ்மின். அப்போது குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்தவர் ராதிகா ஐபிஎஸ். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தவர் அருண் ஐபிஎஸ்.
இந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களும், வீரமணி விவகாரம் தொடர்பான பெரும்பாலான ஊடகச் செய்திகளில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. "இவர்கள் இல்லாமல் வீரமணி காப்பாற்றப்பட்டிருப்பாரா?" என்ற கேள்வி எழுந்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படி தடை செய்வது? தேர்தல் ஆணையத்திடம் கேட்கும் தவெகவினர்- குடைச்சல் தாங்கல..

TVK tamil.oneindia.com  - Halley Karthik : சென்னை: தவெக ஆட்சி அமைக்க ஒரு வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) என இரண்டு கட்சிகளும் காரணமாக இருந்தன. இருப்பினும் ஆட்சியில் தங்கள் கொள்கைக்கு எதிரான செயல்பாடுகள், திட்டங்கள் அமல்படுத்தப்படும்போது அவரை எதிர்க்கின்றன. இது தவெகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதால், தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படி தடை செய்வது என்று தவெக ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்க தொடங்கியிருக்கின்றனர்.
தேர்தலுக்கு பிறகு, போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாதபோது.. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக தங்களது ஆதரவை உடனடியாக அறிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். பின்னர்தான் ஐயுஎம்எல்.. கடைசியாக விசிக ஆதரவு தெரிவித்திருந்தது. 

தமிழக மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் இரு அரசாணைகளை திரும்பப் பெறுக” - பெ.சண்முகம்

  hindutamil.in  -வெற்றி மயிலோன் : சென்னை: ‘தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைக்கும் இரண்டு அரசாணைகளையும் அரசு திரும்பப் பெற்று செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கும், செவிலியர் ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக்குவதற்கும் உரிய உத்தரவு வழங்க வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான 7 செவிலியர் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 16.9.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

விமான நிலையம் தனியார் மயம்- விஜய்க்கு திமுக, அமமுக எதிர்ப்பு

  minnambalam.com - Mathi : சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி இருப்பதற்கு திமுக, சிபிஐ, அமமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கூறியிருப்பதாவது: சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றி, வேறு ஆபரேட்டரைக் கொண்டு வர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக
தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதியில் சிக்கி கொண்ட இளைஞனின் உயிர்

 வீரகேசரி : மகனை விடுவித்து தாருங்கள் மடிப்பிச்சையாக கேட்கிறேன் ; சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் கண்ணீர் மல்க உருக்கம் - ilakkiya info
எனது மகன் செய்தது தவறுதான். அதனை மன்னித்து எனது மகனை விடுவத்து தாருங்கள். அதற்காக சவூதி அரேபிய அரசாங்கத்திடம் ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட அரசாங்கத்தினரும் நாட்டின் அனைவரும் உதவிடுங்கள். உங்களிடத்தில் கையெடுத்துக் கும்பிட்டு மடிப்பிச்சையாக கேட்டுக்கொள்கின்றேன் என்று சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தாயாரான சிவராசா யோகலட்சுமி கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

காணாமல் போன தவெக வாக்குகள் 35% மக்களில் 15% முதல் 20% வரை புலம்பல்

 முனைவர் க செல்வம்  · ஜேம்ஸ் வசந்தன் குபீர் கணக்கு.. விஜய்க்கு ஓட்டு போட்ட 35% பேரில் 20% அப்செட்? இப்பவே புலம்பல் ஆரம்பமா?
தவெகவுக்கு வாக்களித்த 35% மக்களில் 15% முதல் 20% வரை இப்போது ஏமாற்றமடைந்து புலம்பத் தொடங்கிவிட்டனர். மீதமுள்ள சில ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் போலி பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றாலும், மக்கள் உண்மையை உணர்ந்துவிட்டனர். 
இவர்கள் தகுதியவற்றவர்கள் என்பதையும் உணர ஆரம்பித்து விட்டனர். இது வரப்போகும் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்" என்று இசையமைப்பாளரும் அரசியல் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
The TN Voice சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஜேம்ஸ் வசந்தன், "நீண்ட காலமாக சோஷியல் மீடியாவில் மோதிக்கொண்ட விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள், இப்போது இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டதைப் பார்த்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியலில் அஜித்தின் ஆதரவாளர்களை கவர விஜய் நட்புக் கரம் நீட்டுகிறார்.

வியாழன், 17 செப்டம்பர், 2026

இந்திய இலங்கை தரைப்போக்கு வரத்து பாதை கடந்து வந்த பாதை

No photo description available.

No photo description available.

 ராதா மனோகர் : ஆங்கில பத்திரிகைகளில் வெளியான இந்திய இலங்கை தரைப்போக்கு வரத்து பாதையை படித்து விட்டு தனது தீர்க்க தரிசனத்தில் ஞான திருஷ்டியில் கண்டதாக கதையளந்தார் பாரதியார் 
அளவு கணக்கில்லாமல் ஊதி பெருபிக்கப்பட்ட பலூன் பிம்பம்தான் சுப்பிரமணியன் பாரதி.
வாலிக்கும் கண்ணதாசனுக்கும் மருதகாசிக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் பாதி தூரம் கூட வரமாட்டார் சுப்பிரமணியன் பாரதி!
சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் என்று பாரதி பாடியது அவரின் தீர்க்க தரிசனம் என்று அவ்வப்போது ஒரு கதை அளக்கப்படுகிறது 
உண்மையில் அது அப்போது பத்திரிகைகளில் வந்த செய்தியாகும்  . தீர்க்க தரிசனம் அல்ல! 

அதன் விபரங்களை கொஞ்சம் பாப்போம் 
பாரதியார் காலமானது 1921 ஆண்டாகும்.
1912 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியான விஜயபானு என்ற தமிழ் பத்திரிகையில் இது பற்றிய ஒரு செய்தி இருக்கிறது   அப்பத்திரிகையில் இந்திய இலங்கை செய்திகள் பல இருக்கிறது 
அதில் ஒரு செயதியின் தலையங்கமே 
இலங்கை இந்திய புகையிரத பாதை என்பதாகும் 
அதன் முழு செய்தி இதுவாகும் 

மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்திய விஜய் - காங்கிரஸ் கடுப்பு - அண்ணாமலை வாழ்த்வில்லை

 tamil.oneindia.com -Shyamsundar I  : சென்னை: செப்டம்பர் 17, தந்தை பெரியாருக்கும், பிரதமர் மோடிக்கும் பிறந்தநாள்! பாஜகவை பாசிச சக்தி என கடுமையாக எதிர்த்து வரும் திமுக தலைவர் தான் மோடிக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். இதனை பார்த்ததும் முதல்வர் விஜய், மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னதுடன் மோடியின் ஆட்சியை புகழ்ந்தும் செய்தி அனுப்புகிறார்.
அதே சமயம், மோடிக்கு வாழ்த்து சொல்லாத அண்ணாமாலை, பெரியாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து வாழ்த்து செய்தியை வெளியிடுகிறார். இதில் சில நுண்ணரசியல் இருக்கிறது என்கிறார்கள்.

கோவையில் தங்கி பயங்கரவாத சதி? 19 வயது இளைஞர் கைதானதன் பின்னணி! - CAPTAIN M NETWORK” மூலம்

  minnambalam.com - Pandeeswari Gurusamy :  அல்கொய்தா சித்தாந்த ஆதரவு ஆன்லைன் குழுவில் தொடர்பில் இருந்த மக்சூத் அலி (19) என்ற இளைஞரை, உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு அளித்த தகவலின் பேரில் கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து உ.பி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்தியாவில் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உபி காவ்லதுறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 12-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை கைது செய்தனர்.

ஏமாற்றிய பாகிஸ்தான்! இஸ்ரேலிடம் உதவி கேட்ட சவுதி அரேபியா! ஹவுதிகளால் மாறும் நிலவரம்

tamil one india : ரியாத்: சவுதி அரேபியா மீது ஏமனின் ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும் வகையில் கடல் வழிப்பாதைகளை ஹவுதிகள் கைப்பற்றி வருகின்றன. ஹவுதிகளை சமாளிக்க பாகிஸ்தான் உதவி செய்ய மறுத்த நிலையில் சவுதி அரேபியா தற்போது தனது எதிரியான இஸ்ரேலிடம் உதவி கோரியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதன், 16 செப்டம்பர், 2026

அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது? அடுத்த ‘குறி’ துரைமுருகன்

  minnambalam.com  : அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டுக்கு போயிட்டாங்களே ப்ரோ.. இப்ப ரெய்டு நடத்துறது விஜிலென்ஸ் இல்லை.. சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ்.
போலீஸ் விளக்கம் என்ன?
இதை பத்தி ரெய்டு நடக்கும் போதே மத்திய குற்றப் பிரிவு போலீசார் அறிக்கை வெளியிட்டிருக்காங்க.. அதுல என்ன சொல்றாங்கன்னா, “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu- இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார் 27.06.2026 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

அன்பில் மகேசை கைது செய்ய வேண்டாம்.. லண்டனில் இருந்து உத்தரவிட்ட விஜய்? என்ன காரணம்?

 tamil.oneindia.com-  Shyamsundar :  சென்னை: லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய்யின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் தவெக அரசின் காவல்துறை உயரதிகாரிகள். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதற்காக நடந்துள்ள மோசடி புகார்கள் குறித்து மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அன்பில் மகேஷ் மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று போலீசார் ரெய்டு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் பதவிக்காகத்தான் கூட்டணி மாறினீர்கள்?”: திருமாவை நோக்கி கேள்வி எழுப்பிய பிரேமலதா!

 மின்னம்பலம் -  Pandeeswari Gurusamy :தேமுதிகவிற்கு 10 தொகுதி ஒதுக்கியதால் தான் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது உண்மைக்கு புறம்பானது என ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘அண்ணன் திருமாவளவன் மீது தேமுதிக மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறது.

ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக - அழைப்பாணையை அறிந்திருந்தும்

 ilakkiyainfo.com  " நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணையை அறிந்திருந்தும் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள செய்திகளை ராஜபக்‌ஷ குடும்பத்தினர் முற்றுமுழுதாக மறுத்துள்ளனர்.
விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ அழைப்பாணையும் கிடைக்கவில்லை என ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 14 செப்டம்பர், 2026

வரலாறு மறைத்த கிட்டுவின் கொடூர முகம்! கிட்டுவின் அதிகார வெறி, துரோகம் மற்றும் சுயநல ஒழுக்க நாடகம்

May be an image of one or more people

 வெற்றி மாறன்  :  வரலாறு மறைத்த கிட்டுவின் கொடூர முகம்.
கர்னல் கிட்டு  ஒருபுறம் “வீரத் தளபதி” எனப் போற்றப்பட்டவர். மறுபுறம், 1980களின் யாழ்ப்பாணத்தில் மாற்றுக் குரல்களையும் சக தமிழர்களையும் ஆயுத பலத்தால் ஒடுக்கிய
எல்.டி.டி.இ.யின் முக்கியத் தளபதி.
அந்த அதிகாரத்தின் பின்னால் நடந்தது என்ன? யார் கொல்லப்பட்டார்கள்? யார் மௌனமாக்கப்பட்டார்கள்?
ஆதாரங்களுடன் அந்த மறைக்கப்பட்ட அத்தியாயத்தைத் தேடும் ஒரு வரலாற்றுப் பதிவு இது.
யாழ்ப்பாணத்தின் கருப்புச் சர்வாதிகாரி கர்னல் கிட்டுவின் அதிகார வெறி, துரோகம் மற்றும் சுயநல ஒழுக்க நாடகம்
(இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களுக்கும் சான்றாக விளங்கும் சர்வதேச மனித உரிமை ஆவணங்கள், அதிகாரப்பூர்வ வரலாற்றுப் பக்கங்கள் மற்றும் புத்தகங்களின் விவரங்கள் அனைத்தும் வாசகர்களின் சரிபார்ப்பிற்காக இப்பதிவின் முதலாவது பின்னூட்டத்தில் (First Comment) ஆதாரக் குறிப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன.)

JVP கலவரம்: மலையகத்தின் மறக்க முடியாத கருப்பு வரலாறு! 1987-1989

நித்தியானந்தன் உங்கள் தோழன் : JVP கலவரம்: மலையகத்தின் மறக்க முடியாத கருப்பு வரலாறு!
1987-1989
JVP கலவரத்தை பார்க்கும் முன் இன்றைய விமர்சனம் பற்றிய சிறிய பதிவை பார்த்துவிட்டு செல்வோம்...
இன்று JVP பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு மலையகத்தின் எதிர்காலம் பற்றி பேசுகிறது. தொண்டமான் தலைமையிலான *இ.தொ.கா* வை விமர்சிக்கிறது.
ஆனால் 1987-1989ல் ஒரு முழு சமூகத்தின் எழுச்சியை ஆயுதம் ஏந்தி நாசமாக்கியது யார்? 
தேயிலை தொழிற்சாலைகளை எரித்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பசியிலும் பயத்திலும் தள்ளியது யார்?
ஒரு பக்கம் நாசம். மறுபக்கம் *அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்* அவர்கள் உருவாக்கிய *இ.தொ.கா* மலையக மக்களுக்கு கல்வி, வீடு, குடியுரிமை, அரசியல் அங்கீகாரம் என ஒரு சமூகத்திற்கே விடிவை தந்தது.
நேற்று எங்கள் வாழ்வை குழிதோண்டி புதைத்தவர்கள், இன்று எங்கள் தலைமையை பார்து குறை சொல்கிறார்கள்.
மலையகத்தை பற்றி பேச JVP-யின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? 

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

கமல் ரஜனி சுமன் ஆகியோரை பந்தாடி துரத்திய எம்ஜியார்

Can Rajinikanth, Kamal Haasan pull off an MGR, turn fans towards poll  booths? | Chennai News - Times of India
Kamal Haasan pays tribute to MGR on birth anniversary | - Times of India
Suman (actor) - Bharatpedia

 Giri Sundar  : மிசா காலத்தில் முக முத்து சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்.
முக அழகிரி அரசியலில் இல்லை.
தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
மதுரையில் முரசொலி பதிப்பகம் தொடங்க வேண்டும் என கலைஞர் முடிவெடுத்தபோது அதனை கவனித்துக்கொள்ள ஒருவர் இருக்க வேண்டும் என முக அழகிரி 1980ல் அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு மதுரை சென்று இன்று வரை அங்கு தான் இருக்கிறார். 
அப்போ மிசா காலத்துல அரசு ஊழியராக பணியாற்றியவர் எப்படி அரசியலில் ஈடுபட்டிருக்க முடியும்???
முக ஸ்டாலின் 80ல்திமுகவின் இளைஞரணித் தலைவர்.60களில் இருந்தே அரசியலில் இருக்கிறார்.75ல் எமர்ஜென்சிக்கு எதிராக பொது மேடைகளில் பேசிவந்தார்.
கலைஞரை  கைதுசெய்தால் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று பயந்த ஒன்றிய அரசு கலைஞருக்கு நெருக்கமான அவரது மகன் ஸ்டாலினை  கைது செய்து அவரை தாக்கிக் கொடுமைப் படுத்தி, கலைஞருக்கு  எதிராக வாக்குமூலம் கேட்டது. அவர் மறுத்ததால் அவரது தாடை உடைக்கப்பட்டது.

சனி, 12 செப்டம்பர், 2026

திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.!

 Kandasamy Mariyappan  : 8 லட்சம் வருமானம் உள்ள, அடையார், அண்ணா நகரில் 1000 சதுர அடியில் வீடு வைத்துள்ள உயர்சாதி ஏழைகளுக்கு...
EWS 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதி என்று, எத்தனை பேருக்கு தெரியும்.! 
திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.! 
பிரபாகரனை வைத்து திராவிட அரசியலை ஒழிக்க முயன்றது போல்...
பெரியாரியத்தை நீர்த்துப் போகச் செய்ய அம்பேத்கரை பின்வாசல் வழியாக கொண்டு வருகிறார் திருமா என்று, அன்றே எச்சரித்தேன்.!
திருமாதான், உண்மையான RSSன் கள்ளக் குழந்தை.!
நாம்தான் தவறாக புரிந்துகொண்டு, புள்ள பூச்சிகளான திரு. பழனிச்சாமி, திரு. பன்னீர்செல்வங்களை அடித்துக் கொண்டிருந்தோம்.!
திராவிட அரசியலின் விளைவால், கிராமங்களில் தலித்திய மக்கள் குடியான மக்களோடு சகஜமாக பழக ஆரம்பித்தனர். 2000க்கு பிறகு தலித்திய இளைஞர்கள், குடியானவர்களை அண்ணா, அக்கா, மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா என்று உறவுகளை சொல்லி அழைத்து வந்தனர். எங்கள் கிராமமே உதாரணம். 

கலைஞரின் இரண்டாவது மகன் ஸ்டாலின் ஆகியோர் உட்பட முன்னணி தலைவர்கள் ஏராளமானோர் கைது


 ராதா மனோகர்
  :  முரசொலி ஏட்டின் ஆசிரியரும் சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான திரு மாறன் விடுதலை ஏட்டின் ஆசிரியர் கி வீரமணி காண்டீபம் ஏட்டின் ஆசிரியர் மாரிசாமி பா உ நீட்டோலை அடியார் டாக்டர் கலைஞர் டாக்டர் கலைஞர் மு க அவர்களின் இரண்டாவது மகன் ஸ்டாலின் ஆகியோர் உட்பட முன்னணி தலைவர்கள் ஏராளமானோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட சில திமுக கழக பிரமுகர்கள் பின்வருமாறு ;
நீலநாராயணன் , சிட்டி பாபு  , ஆற்காடு வீராசாமி . வை பாலசுந்தரம் .கோவிந்தராசன் , தோப்பூர் வேங்கடம் . பொன் முத்துராளமலிங்கம். கு திருப்பதி .

" மிரட்டும் ஊடகங்கள் மிரளும் திமுக! -வே. மதிமாறன்

 மதிமாறன் " மிரட்டும் ஊடகங்கள் மிரளும் திமுக!
ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் எனக் கலைஞரை குறித்து மிகக் கேவலமான கட்டுரை வெளியிட்ட இந்துதான், அதுகுறித்த எந்த வருத்தமும் தெரிவிக்காமல், கூச்சமே இல்லாமல் தெற்கிலிருநது ஒரு சூரியன் என கலைஞரை வர்ணித்து புத்தகம் வெளியிட்டது.
இந்துவிடம் குறைந்தபட்ச அறிவு நாணயம்கூடக் கிடையாது. அவர்கள் சங்கியாக இருக்கக்கூட லாயக்கற்றவர்கள். சங்கிகளிடம் கூட அவதூறில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

கேரளா கள்ளுக் கடைகளின் ரகசியம்: ஏன் அங்கே மட்டும் அனுமதி? விநியோகிக்கப்படும் விசித்திர தொழில்நுட்பம்

 Maha Laxmi : கேரளா கள்ளுக் கடைகளின் ரகசியம்: ஏன் அங்கே மட்டும் அனுமதி? விநியோகிக்கப்படும் விசித்திர தொழில்நுட்பம்! 
நாம கேரளாவுக்கு (God's Own Country) டூர் போனா... சாலையோரங்கள்ல தென்னை மரங்களுக்கு நடுவே கறாரான போர்டுகளோடு 'Toddy Shop' (ஷாப்) அப்படின்னு எழுதியிருக்கிறதைப் பார்ப்போம். நம்ம தமிழ்நாட்டுல கள்ளுக்குத் தடை இருக்கும்போது, கேரளால மட்டும் ஏன் இதுக்கு இவ்வளவு மவுசு? இதோட கொள்முதல் மற்றும் விநியோக ரகசியங்கள் இதோ!
1. கேரளாவில் மட்டும் ஏன் கள்ளுக்கு அனுமதி? 

 Neander Selvan  : உங்கள் அமெரிக்க விசா யாரால் வழங்கப்படுகிறது என கேட்டால் "அமெரிக்க தூதரகம்" (American Embassy) என சொன்னால் தவறு. உலகம் முழுக்க அமெரிக்க விசாக்களை வழங்குபவர் ஒரு இந்தியர், அதிலும் பார்ஸி, அவரது பெயர் ஜுபின் கார்காரியா (Zubin Karkaria).
2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஜுபின் கார்காரியா என்பவர் 'கூனி டிராவல்' (Kuoni Travel) என்ற சுற்றுலா நிறுவனத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனது தொழிலின் காரணமாக தூதரகங்கள் விசா வழங்கும் முறையை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். அப்போது விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பொதுமக்கள் தூதரகங்களின் வெளியே நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. தூதரக அதிகாரிகளுக்கும் ஆவணங்களைச் சரிபார்ப்பது, வரிசையை நிர்வாகிப்பது போன்ற நிர்வாகப் பணிகள் பெரும் சுமையாக இருந்தன.

வியாழன், 10 செப்டம்பர், 2026

பணத்தை கொடுத்துட்டு போ..’ பிரசவ வலியில் துடித்த பெண்ணை தடுத்த நபர்.. தாய், சிசு உயிரிழப்பு

 மாலைமலர் :கடன் தொகையை காரணம் காட்டி கர்ப்பிணியை மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததால் தாய் மற்றும் சிசு இருவரும் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த தேன்மொழி, 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்ல வாங்கியகடன் காரணமாக உரிமையாளர் தடை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

புதன், 9 செப்டம்பர், 2026

இந்துத்துவா ஆர் எஸ் எஸ் வருகை.. ( baps) புறக்கணிக்கப்பட்ட பெண்கள்.. மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!! - ila

 மாலைமலர் :பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் ஊழியர்களின் போராட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது.? பார்க்கலாம்..
பிரான்ஸில் நடைபெற்ற ஒரு கோவில் திறப்பு விழாவிற்காக சென்ற, இந்து மத அமைப்பான போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS)-ஐ சேர்ந்த 100 பேர் கொண்ட குழுவினர், கடந்த சனிக்கிழமை ஈபிள் டவரை பார்வையிட்டுள்ளனர். 

May be an image of text that says "LAWMAKERS UNDER LENS CMs with highest number of cases A Revanth Reddy (Telangana) 89 Suvendu Adhikari Bengal D K Shivakumar (Karnataka) 19 N Chandrababu Naidu (Andhra Pradesh) 19 V D Satheesan (Kerala) 18 29 States with highest share (%) of MLAs facing serious cases West Bengal 58 Kerala 57 Andhra Pradesh 56 Telangana 49 Jharkhand 45 Odisha 45 Parliament 170 Lok Sabha MPs (31%) face serious criminal cases 75 Rajya Sabha MPs (33%) have criminal cases. 40 (18%) face serious cases"
May be an image of one or more people

 திருமுருகன் காந்தி :நேற்று சட்டசபையில் முதல்வர் விஜயால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எவ்வகையானவை? 
இதுவரை எப்படியான அரசியல் இந்தியாவில் நடந்துள்ளது என்பதை கவனித்தால் இது புரியும். இந்தியாவின் விடுதலைக்குப் பின்பான அரசியல் என்பதே தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் நடக்கும் யுத்தம் என்பதே இந்திய தேர்தல் அரசியலின் வரலாறு. 
ஒன்றிய அரசுகள் நேரு காலம் முதல் மோடி காலம் வரை மாநில அரசுகளையும், மாநில கட்சியின் தலைவர்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். 
ஆட்சி கலைப்பு, அடக்குமுறை சட்டங்கள், ஊழல் வழக்குகள் என அனைத்தையும் மாநில தலைவர்கள் மீது ஏவினார்கள். 

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

மிசா’வில் விஜய் ஜெயிலுக்கு போயிருந்தா அரை மணிநேரம் தாங்கி இருப்பாரா ? சிபிஎம் சரமாரி தாக்கு!

 minnambalam.com  - Mathi  மிசா கைதிகளை கொச்சைப்படுத்தி பேசுவது, சட்டசபையில் முதல்வர் விஜய்யின் உடல் மொழி உள்ளிட்டவைகளை முன்வைத்து சிபிஎம் கட்சி மிக கடுமையாக விமர்சித்துள்ளது.
முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் இன்று (செப்டம்பர் 8) திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய தினம் மத்திய அரசாங்கத்தினுடைய போக்கு மிக மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். 2 நாட்களுக்கு முன்னால் பார்த்தீர்கள் என்றால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பயன்படக்கூடிய அந்த இஸ்ரோ அமைப்பையே இன்று தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது.

சிட்டி பாபுவின் மிசா சிறைக்கைதி - டயரி குறிப்பு

May be an image of ticket stub and text

 கி.வே.பொன்னையன்  ; 'மிசா' காலத்தில் சென்னை சிறைச்சாலையில் சிறைக் காவலர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு அவர்களின் நாட்குறிப்பு கீழே.....
கொஞ்சம் நீளமான பதிவுதான் பொறுமையாக படியுங்கள்.  அதிகமாக ஷேர் செய்யுங்கள்.  எல்லோரையும் சென்றடையட்டும்.
இன்றைக்கு மிசாவை பற்றி நெருக்கடிநிலை காலத்தில் பிறக்காத முட்டாளெல்லாம் பேசுகிறான்.  மிசாவை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சிட்டிபாபுவின்_சிறை_டைரி
அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் வந்தது எனக்குத் தெரியாது. தம்பி வந்தது முதல் தடவை, புதியவன் சிறைக்கு!புரியாத காரணத்தால் அவன் குழம்பி இருப்பான். இரவெல்லாம் கண்விழித்து கிடந்திருக்கிறான். பாவம் புது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. 
ஆமாம்! அன்று இரவெல்லாம் அவன் உள்ளம் அவனை அப்படித்தான் எண்ணிடச் செய்திருக்கும்.2.2.1976 காலை கண்விழித்தேன்.

விஜய் மீண்டும் எழுப்பிய ‘சர்க்காரியா கமிஷன்’: அன்றே ‘இதே’ சட்டமன்றத்தில் கலைஞர் தந்த பதிலடி!

மின்னம்பலம்  விஜய் மீண்டும் எழுப்பிய ‘சர்க்காரியா கமிஷன்’: அன்றே ‘இதே’ சட்டமன்றத்தில் கலைஞர் தந்த பதிலடி!
தமிழக சட்டமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 7) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் அறிக்கையை முன்வைத்து கலைஞரையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.
விஜய் பேசியது என்ன?
சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், 1970-களில் செயல்படுத்தப்பட்ட வீராணம் குடிநீர்த் திட்டத்தின் ஒப்பந்தம் தொடர்பாக ரூ.40 லட்சம் கமிஷன் கோரப்பட்டதாகவும், ரூ.29 லட்சம் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி முரசொலி கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக விஜய் குற்றம்  சாட்டினார்.

கலைஞரை கொலை செய்ய புலிகள்....ஒரு நேரடி சாட்சியின் வாக்குமூலம்

 ராதா மனோகர் :   அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம்  இருந்து  காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்
அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்
அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர் திரு வரதராஜ பெருமாள்தான்
மறுபுறத்தில் இதன் காரணமாகவே வரதர்ஜா பெருமாள் கோஷ்டிக்கு  கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக கதை அளந்தார்கள்.
அதாவது இதற்கும் கலைஞர்தான் காரணமாம்.
கலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட பலரும் புறங்கூறி திரிகிறார்கள்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

‘2 பெட்டிகளில் பணம்.. அமைச்சர் பதவி’ பகீர் கிளப்பும் ஐயூஎம்எல் எம்எல்ஏ சையது ஃபாருக் பாஷா

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : “சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு 2 பெட்டிகளில் கோடி கோடியாக பணத்தை கொண்டு வந்து உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும்?
 என எங்களிடம் கேட்டனர்” என ஐயூஎம்எல் கட்சியின் எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஐ.யூ.எம்.எல். கட்சிக் கூட்டத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா கலந்து கொண்டு பேசினார். 
அப்போது அவர், “இங்கு சோபா பற்றி விமர்சித்தனர். ஆனால், என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாகப் பணம் கொண்டு வந்து அமைச்சர் பதவி தருகிறோம், கையெழுத்து போடுங்கள் என்றார்கள். நாங்கள் கோடிக்குச் சாய்ந்தவர்கள் அல்ல; கொள்கைக்குச் சார்ந்தவர்கள். எங்களுடைய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொள்கையோடுதான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டோம்.

நிர்வாண பூஜை நடத்தி கிளி ஜோசியரிடம் மாட்டுப்பட்ட கனடா தமிழ் பெண்!

 நக்கீரன் :சென்னை: சென்னைக்கு சுற்றுலா வந்த கனடா வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம், மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார் ஒரு கிளி ஜோசியக்காரர்.. தோஷம் கழிப்பதாக சொல்லி, வீடியோ காலில் நிர்வாண பூஜையும் நடத்தி, அந்த வீடியோவை வைத்து பணமும் பறித்துள்ளார்.. இது தொடர்பாக போலீசார் விசாரிக்க சென்றால், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன
கனடாவில் வசித்து வருகிறார் அந்த 37 வயது இலங்கை தமிழ்ப் பெண்.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார். இப்போது கனடாவில் தனியாக வசித்து வருகிறார்.

சனி, 5 செப்டம்பர், 2026

மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டது ஏன்?

 தினகரன்  :  லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவினால் நாமல் ராஜபக்ஸ செப்டம்பர் 4ஆம் தேதி பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானங்களின் கொள்வனவு நடவடிக்கைகளின்போது பெறப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஸ இன்று முற்பகல் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கச்சத்தீவு- கலைஞரின் கடைசி விளக்கம்

 மின்னம்பலம் ;  கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் விவாதிக்கப்பட்டது. வழக்கம் போல கச்சத்தீவை மத்திய அரசுதான் கொடுத்தது என்றாலும் அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, எதிர்க்கவில்லை; ஒத்துழைத்தது என்கிற வாதத்தையே ஆளும் தவெக அரசும் முன்வைத்தது.
 காலந்தோறும் சர்ச்சைக்குரிய விவகாரமாக நீடிக்கும் கச்சத்தீவின் வரலாறுதான் என்ன? 
கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? 
அன்றைய கலைஞர் அரசு செய்தது என்ன? 
இந்தியா–இலங்கை நடுவே இருக்கும் ஒரு சிறிய தீவு, தமிழக அரசியலில் அரை நூற்றாண்டாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்துகிறது. 
கச்சத்தீவின் முழு வரலாற்றையும் ஆதாரங்களுடன் அறிந்துகொள்வோம். கச்சத்தீவு எங்கே இருக்கிறது? தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதிக்கும் இடையிலுள்ள பாக் நீரிணையில் கச்சத்தீவு அமைந்துள்ளது. 
தற்போது இந்தத் தீவு இலங்கையின் எல்லைக்குள் இருக்கிறது. எவ்வளவு பெரிய தீவு?

அப்படிப்பட்ட காமராஜர் எப்படி தமிழின மொழிப்போர் வீரர்களுக்கு ஆதரவு தருவார்?

புகச்சோவ் புகச்சோவ் :  1965ல் மத்திய சட்ட அமைச்சர் 
அசோக் சென், ஆட்சிமொழி சட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். 
அதில் ஹிந்திபேசாத மாநிலங்களில் நூற்றுக்கு எழுபது சதவீத மாநிலங்கள் என்றைக்கு ஆங்கிலம் தேவையில்லை.
 ஹிந்தி போதுமென சட்டசபைகளில் தீர்மானம் இயற்றுகிறார்களோ! 
அப்போது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலம் நீக்கப்பட்டு, 
முழுமையாக ஹிந்திமொழியே பயன்படுத்தப்படும் என்கிற ஷரத்தை கொண்டுவந்தார்.
இந்த ஷரத்தை ஒப்புக்கொள்ளும்படி அன்றைய கேரளா,தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில ஆளுநர்களுக்கு மனுவை அநுப்பியது, 

வியாழன், 3 செப்டம்பர், 2026

ஆந்திராவுக்கு பறக்கும் தமிழக தொழில்கள் - ரெட்டிகாரு தமிழகத்தை துவம்சம் செய்கிறார்

  tamil.oneindia.com  - Velmurugan P : விழித்துக்கொள், தமிழக அரசே! ஆந்திர அரசு சும்மா இல்லை.. தூத்துக்குடி ஹிண்டாய் பற்றி டிஆர்பி ராஜா ஷாக்
தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஹிண்டாய் நிறுவனம் கட்ட உள்ள 38000 கோடி மதிப்பிலான கப்பல் கட்டும் தளத்தை காக்கிடாநாடாவிற்கு மாற்ற சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு, மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்று டிஆர்பி ராஜா எச்சரித்துள்ளார்.

வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்த வழக்கு : முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு!

 மின்னம்பலம் - Kavi :  கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 
2026 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தோல்வியுற்றார். அந்த தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். 

தமிழின் பெயரால் தமிழர்களை தமிழர்களே கொலை செய்ததுதான் தமிழ் ஈழ போராட்டம்

 Varatharasa Pasupathi : கொஞ்சக்காலம் பிளட்டும் ரெலோவும் தொடர்ச்சியாக கிரியும் பாம்புமாக இருந்ததற்கு காரணம்.அப்பன் யோக்கியவதி அதற்கு மகன் சித்தாத்தன்  
பிளட் அமைப்பை வைத்து  திட்டமிட்டு பழி தீர்தார். 
இன்றும் பலரிடம் அதைத்தான் செய்கின்றார் .பிளட் அமைப்பும் கிட்டத்தட்ட பறிமுதல்தான் செய்யப்பட்டுள்ளது .
தன் சுயநலனுக்காக தூண்டி விட்டு இரு பக்கமும் இறந்தது  அப்பாவி இளைஞர்கள்.   
சித்தாத்தனின் தந்தை துரோகியாக இருந்திருக்கலாம் ரெலோ சுட்டிருக்கலாம் . 
சொந்த பிரச்சனைக்கு பெரிய செந்தில் மிக நல்ல மனிதர் முதல் முதல் வவுனிய மாவட்டத்தில் ஆயுதம் தூக்கிய  முதல் போராளியாக போனவர் ரெலோ சுட்டு குளத்து கட்டில் போட்டிருந்தது 
அந்த படுகொலைகளுக்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது .
பிளட் சுட்டு பல ரெலோ போராளிகள் இறந்தார்கள் 
அதற்கு எல்லாம் யார் பொறுப்பு . 

மூன்றாவது அணியை கட்டமைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் - நாடாளுமன்ற தேர்தல்

 News4 Tamil  :  லெப்ட் ஹேண்டில் தவெகவை டீல் செய்யும் காங்கிரஸ்.. திமுக அடுத்த ரூட் இதுதான்.. வல்லம் பஷீர் பரபரப்பு
"காங்கிரஸ் என்கிற பொதி சுமக்கும் கழுதையைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை. அரசியல் களத்தில் மூன்றாவது அணி அமையும் சூழல் உள்ள நிலையில், அதில் திமுக ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். ப.சிதம்பரம் சொன்னது போல 3வது அணி உருவாகும்போது திமுக அதில் தனது பங்கைச் செய்யும்" என்று கருத்து கூறியருக்கிறார் திமுக மூத்த தலைவர் வல்லம் பஷீர்.

கச்சத்தீவு - ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க - இந்திரா காந்தி - Smiling Buddha -- அணு குண்டு!


 ராதா மனோகர்
: கச்சத்தீவு -  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   - இந்திரா காந்தி -  Smiling  Buddha -- அணு குண்டு!
கச்சத்தீவு  ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வுக்கு  சில விடயங்களை ஆழமாக ஆய்ந்து பார்ப்பது அவசியம்.
குறிப்பாக தெற்கு ஆசியாவில் இலங்கையின் வகிபாகம் பற்றிய வரலாறு பற்றிய ஆய்வும்  முக்கியமானதொன்றாகும்!
இலங்கை ஒரு சிறிய நாடக இருந்தாலும் அது பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
அதன் பழைய வரலாறும் சரி அண்மைக்கால வரலாறும் சரி நுட்பமாக கவனிக்க தக்கது 
குறிப்பாக  தெற்காசிய பிராந்தியத்தின் முக்கியமான ஒரு தளமாக காலனித்துவ காலங்களிலும் சரி இன்றும் சரி இலங்கை விளங்குகிறது.
இந்த கோணத்தில் சில விடயங்களை பாப்போம்!   
இந்துமாக்கடல் பகுதியை  அணு ஆயுதங்கள் அற்ற ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது.

புதன், 2 செப்டம்பர், 2026

யாழ்பாணம் - ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகளும் நேபாளத்தில் காணவில்லை

 தினகரன் ; நேபாளத்தையும் திபெட்டையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில் வசித்து வந்த 47 வயதுடைய சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதுடைய ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் மகன்களான 14 வயதுடைய அஸ்வின், 11 வயதுடைய ஆருஷ் ஆகியோர் ஆவர்.
சந்திரசேகரன் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பிறந்து பின்னர் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர் ஆவார். இவர்களின் பிள்ளைகள் இருவரும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

தமிழ்நாட்டு மக்களுக்கு அடிப்படை தேவை பெரிதும் நிறைவேறிவிட்டது! நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய மொத்த இந்தியர்களில் தமிழர்கள் அதிகம்

 Amma Shagasraa : நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய மொத்த இந்தியர்களில் தமிழக யாத்திரகர்கள் மட்டும் மத்த 35  மாநில,யூனியன் பிரதேச  யாத்திரிகர்கள் விட அதிகம்..
🎯என்னதான் நாம் திராவிட கட்சிகளினால் இங்கே லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது..தமிழ்நாட்டு பின்னோக்கி போய்விட்டது என்று கூப்பாடு போட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை தேவை நிறைவேறிவிட்டது...
பொருளாதாரத்திலும் ஓரளவு தன்னிறைவு... அதனால்தான் அடுத்த கட்டத்திற்கு சுற்றுலா.. நாலு இடம் பார்க்க வேண்டும் என்று கிளம்புகிறார்கள்....

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாவதில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய பணி

May be an image of dais, temple and text
May be an image of text that says "இலங்கை -இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு"

 ராதா மனோகர் : வெட்கம் இல்லை வெட்கம் இல்லை இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!
இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாவதில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய  பணி சிறப்பானது.
இன்னும் சரியாக சொல்லப்போனால் அவரின் அரசியல் வாழ்வில் உருப்படியான ஒரே ஒரு விடயமும் அதுதான்.
அந்த ஒப்பந்தம் உருவாவில் அவர் ஆற்றிய பணியையும் அதில் உள்ள சாதகமான விடயங்களை பற்றியும் விரிவாக ஒரு நூலை திரு அமிர்தலிங்கம் அவர்கள் எழுதியுள்ளார் 
புலிகள் அந்த ஒப்பந்தத்தை மூர்க்கமாக எதிர்த்து அதில் பங்காற்றியவர்களை எல்லாம் தேடி தேடி கொன்றொழித்தார்கள் 
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அந்த நூலை தேடி தேடி தீயிட்டு கொளுத்தினார்கள் 
எந்த தமிழக இலங்கை பத்திரிகையிலும் அமிர்தலிங்கம் அவர்கள் இது பற்றி எழுதியது எதுவும் பிரசுரமாகவில்லை.
இந்த சூழ்நிலையில் அந்த ஒப்பந்தம் பற்றியும் அது உருவான புறசூழல் அகச்சூழல் பற்றி அறிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

சிறுமியரை வேலைக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை தந்த தொழிலதிபர் வீரமணி :

 dinamalar.com  : சென்னை: வீட்டு வேலைக்கு என, சிறுமியரை சென்னைக்கு அழைத்து வந்து, தொழில் வர்த்தகர் வீரமணி, 85, பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கிரானைட் தொழில் வர்த்தகர் வீரமணி. இவர், 'போக்சோ' சட்டத்தின் கீழ், சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 
அவரது வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

சனி, 29 ஆகஸ்ட், 2026

4 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாடு - தமிழரசு கட்சியின் நரவேட்டை

May be an image of text that says "Speech by Mr. A. A.Amirthalingam during Dr. Era Janarthanan 's telicittion C4EИy Chennaiin 1987 டாக்டர் இரா. ஜனார்த்தனன் அவர்களின் பாராட்டு விழா கூட்டத்தில் தலைவர் திரு ત. அமிர்தலிங்கம் அவர்களின் பேச்சு 1987இல்." ராதா மனோகர் : 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது  உலக தமிழாராய்ச்சி மாநாடு!
இதை உண்மையில் ஒரு அகில உலக தில்லாலங்கடி மாநாடு என்று கூறலாம்.
அந்தளவுக்கு அதில்  பொய்யும் புரட்டும் கரை புரண்டு ஓடிய மாநாடு இது!.
இந்த தமிழாராய்ச்சி மாநாடு தமிழரசு கட்சியின் அரசியல் மாநாடகத்தான் நடக்கும் என்று ஸ்ரீமாவோ அம்மையாரும் உதவி பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடியும் அன்று அழுத்தமாக நம்பினார்கள் 
இம்மாநாடு அரசியல் மாநாடாக இருக்காது என்ற தமிழராய்ச்சி பிரமுகர்களின் உறுதி மொழிகளை  பிரதமர் ஸ்ரீமாவோவும் அமைச்சர் லக்ஷ்மான் ஜெயக்கொடியும் துளியும் நம்பவில்லை.
இலங்கை தமிழாராய்ச்சி மன்றத்தில் ஏராளமான தமிழரசு கட்சி பிரமுகர்கள் ஊடுருவி இருந்தார்கள் 
இந்த விபரம் எல்லாம் அம்மையாருக்கு நன்றாக தெரியும் 
 இவர்களின் வாக்கு நாணயம் பற்றிய புரிதல் ஸ்ரீமாவோ அம்மையாருக்கு இருந்தது.
ஸ்ரீமாவோ அம்மையாரின் நெருங்கிய நண்பரான திரு கோபாலபிள்ளை மகாதேவாவை தமிழரசு கட்சி கூட்டம் வற்புறுத்தியது 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

 விகடன் :புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.
நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாறை சரிவால் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெளிவுபடுத்தியுள்ளது.
புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.

Boney M எழுபதுகளில் உலகை கலக்கிய போனி எம் இசைக்குழுவினர்

 Siva Ilango : "எழுபதுகளின் இசைக்காவியம்"
ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1974 ஆம் ஆண்டில், மேற்கு ஜெர்மனியில் நிறுவப்பட்ட ஒரு ரெக்கே, ஃபங்க் மற்றும் டிஸ்கோ (Reggae, Funk and Disco) இசைக் குழுதான் போனி எம் (Boney M). 'பாப்' (pop) இசையும், டிஸ்கோ (disco) நடனமும் உலகில் உச்சம் பெற்றிருந்த காலத்தில், அவற்றின் முடிசூடா மன்னர் என்ற முதல் இடத்தைப் பெற்றவர்கள் போனி எம் (Boney M) குழுவினர். 

தமிழக இலங்கை ஏதிலிகளை தந்திரமாக இலங்கைக்கு அனுப்ப புல்லுருவிகள் முயற்சி

May be an image of glasses and wingtip shoes

 சரவணன் நடராஜா::  மதிப்பிற்குரிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களுக்கு,
முந்தைய ஆட்சியில் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில், தங்களது தலைமையில் 21 நபர்கள் கொண்ட நாடாளுமன்றக் குழு 2008-ல் இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து, இலங்கைத் தமிழர்களில் யாரேனும் நாடற்றவர்களாக இருக்கிறார்களா என்ற ஆய்வை மேற்கொண்டு, 28,584 நபர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து, அவர்கள் ஒருவேளை இலங்கை திரும்பினால் அவர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்தீர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். 
து தாங்கள் இலங்கையில் நாடற்றவர்கள் இருக்கக் கூடாது, அவர்களுக்கான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்ற ஒரு இந்திய வம்சாவளி, மலையகத் தமிழராக அந்த மக்கள் மீது இருந்த கரிசனத்தில் அதைச் செய்தீர்கள். அது வரை சரி.

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் முயற்சி

No photo description available.

 தமிழ்க்கவி  :  கீழடி - வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வு
கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் முயற்சி   புதுமலர் - ஜூலை 2025 வெளியிடப்பட்டது: 30 ஜூன் 2026
அண்மையில் மிகப்பெரும் பேசுபொருளாக அமைந்தது கீழடி அகழாய்வு அறிக்கை. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒன்றியத் தொல்லியல் துறையால் முதலில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. 2014 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களால் 292 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் அக்கறையுடனும், தீவிரமாகவும் வினையாற்றி மிகச்சிறப்பாக அமர்நாத் அவர்கள் அப்பணியை மேற்கொண்டார்.keezhadi 511தான் மேற்கொண்ட இரு அகழாய்வுகள் குறித்த அறிக்கைகளையும் அவர் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவ்விரண்டு அறிக்கைகளும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தலித்துகளும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் திமுகவின் முதுகில் குத்தினார்களா

No photo description available.
Kandasamy Mariyappan : அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரும்போது, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடங்களி்ல் இருந்து வழங்கிய இசுலாமியர்களுக்கான 3.5% இட உரிமையை ரத்து செய்திட வேண்டும்.
ஏறத்தாழ 65% மக்கள் உள்ள வேளாளர்கள், உடையார்கள், அகமுடையர்கள், மறவர்கள், கோணார்கள், இடையர்கள், வலையர்கள்/ முத்திரையர்கள், நாடார்கள், நாயுடுகள், ஆசாரிகள், வண்ணார்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு 26.5% இட உரிமையை வழங்கி விட்டு...
4.5% உள்ள இசுலாமியர்களுக்கு 3.5% இட உரிமை வழங்கியது கலைஞர் திமுக.!
மேலும் CAA, வக்ஃப் மசோதா, முத்தலாக் போன்ற மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை தீவிரமாக எதிர்ப்பதை, திமுக கைவிட வேண்டும்.!
எப்போதுமே, 40% இசுலாமியர்கள் மட்டும் திமுகவை ஆதரித்து வந்தனர்.!

புதன், 26 ஆகஸ்ட், 2026

ஆர்.எஸ்.எஸ் தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி - வாலாசா வல்லவன்.

 வாலாசா வல்லவன்  :   ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
 இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.
 எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன். 

திமுகவில் அதிகார பதவிகளை கைப்பற்ற உதயநிதி - கனிமொழி ஆதரவாளர்கள் போட்டி

Latest Tamil News

 தினமலர் :திமுகவில் பதவி பறிபோகும் நிலையில் உள்ள, மாவட்ட செயலாளர்கள் சிலர், தலைமை நிலையச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர். பதவிகளை கைப்பற்ற, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மற்றும் துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகிய இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது.
தேர்தல் தோல்விக்கு பின், கட்சியை பலப்படுத்தவும், இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்கவும், திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கட்சியின் தலைமையகமான அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், செயற்குழுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்ட எண்ணிக்கை 77ல் இருந்து, 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கான, அதிகபட்ச வயது 70 எனவும், மூன்று முறை மட்டுமே, அப்பதவியில் இருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூரில் சாவு மணி அடித்த தவேக அரசு!

 Muralidharan Pb : சென்னைக்கு எதற்காக இரண்டாவது விமான நிலையம் தேவை?
ஏறத்தாழ 2 கோடி மக்கள் புழங்கும் மிகப்பெரிய நகரமான சென்னை. விமான நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் மூலம் சென்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் ஏனைய நகரங்கள் முதல் சிற்றூர்களுக்கு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
2000 க்கு பிறகு இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் வருவாய் மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

திமுகவின் 110 மாவட்டங்கள்- பொறுப்பாளர்கள் அறிவிப்பு? கனிமொழி எதிர்பார்க்கும் ‘அந்த’ பதவி-

  minnambalam.com  :  திமுகவோட செயற்குழு ஆகஸ்ட் 22-ந் தேதி நடந்துச்சு இல்லையா.. அதுலதான், ”திமுக 110 மாவட்டங்களாக பிரிக்கப்படும்; 2 தொகுதிக்கு 1 மா.செ. நியமனம்; தேவைப்படுகிற இடத்தில் 3 தொகுதிகளும் இருக்கும்.. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல்தான் நடத்தப்படும். மா.செ.க்கள் உட்பட மாவட்ட அளவிலான பதவிகளுக்கு வயது வரம்புகள்”ன்னு அதிரடியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச்சு..

பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி.. பிரியாணி போல் வேக வைத்து! கதிகலங்கிப் போன கூடுவாஞ்சேரி!

tamil.oneindia.com :சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சூட்கேஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கூடுவாஞ்சேரியில் கொலை செய்யப்பட்ட 45 வயது பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 அப்பெண்ணை இளைஞர், காதலி சேர்ந்து கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி, அதன் ஒரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழாராய்ச்சி மன்றத்தை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!

May be a doodle of monument
May be an image of one or more people, people smiling and text that says "PUNITHAM THERUCHELVAM gflip.com gflip com"

 ராதா மனோகர் :உலக தமிழாராய்ச்சி மன்றத்தை இலங்கை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!
இதற்காக அமைச்சர் திருச்செல்வத்தின் மனைவி திருமதி.புனிதம் திருச்செல்வம் தந்திரமாக  வண தனிநாயகம் அடிகளின் இடத்தை கைப்பற்றினர் 
 தமிழரசு கட்சியினர் நான்காவது உலக  தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழரசு கட்சி மாநாடாகவே உருமாற்றினார்கள்.
முழு தமிழரசு கட்சியும் அதன் தொண்டர் குண்டர் படைகளும் புனிதம் திருச்செல்வத்தின் ஏவல் பேய்களாக செயலாற்றினார்கள். ( இந்த தொண்டர் குண்டர்  கூட்டத்தில் சிவகுமாரும் ஒருவர்) 
திருமதி புனிதம் திருச்செல்வமும்  + திரு முருகேசு திருச்செல்வமும்  
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல 
1970 வரை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின்  சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவை இருந்தது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

PTR : பொதுத் துறை நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன? - முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

Dr PTR.Palanivel Thiaga Rajan - Former Minister for Information Technology & Digital Services, Tamil Nadu | Home

 hindutamil.in : தஞ்சாவூர்: அரசின் பொதுத் துறை நிறு​வனங்​கள் சரி​யான தலை​மைப் பண்பு இல்​லாத​தால் நஷ்டத்​தில் இயங்​கு​கின்றன என முன்​னாள் அமைச்​சர் பிடிஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​தார்.
தஞ்​சாவூர் தொழில், வர்த்தக சங்​கம் சார்​பில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற சிறப்பு கருத்​தரங்​கில் பங்​கேற்​று, “வணி​கத்​தில் நெருக்​கடி​யான சூழலில் தலை​மைப்​பண்​பு” என்​கிற தலைப்​பில் முன்​னாள் அமைச்​சர் பிடிஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் பேசி​யது: சிஏஜி தணிக்கை அறிக்​கை​யில் தமிழக அரசின் நிறு​வனங்​களுக்​கான மூலதனச் செலவு 8 சதவீதம் என்​றும், சராசரி மூலதனத்​தின் மீதான வரு​வாய் 0.8 சதவீதம் மட்​டுமே என்​றும் கூறப்​பட்​டுள்​ளது.

திமுக மா.செ.க்கள் வயது 70- பதவி இழக்கும் 13 பேர் யார்?

 மின்னம்பலம் - மதி :திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 70 வயதை கடந்த தற்போதைய மாவட்ட செயலாளர்கள் 13 பேர் தங்களது பதவிகளை இழக்க உள்ளனர்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவை மறுசீரமைக்கும் அதிரடி முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றன.

சனி, 22 ஆகஸ்ட், 2026

பிரகாஷ் ராஜ் : 3,000 ஆண்டுகளாக இந்தியா மாதிரி அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை!

 tamil.oneindia.com - Nantha Kumar R  : சென்னை: ''அரசியலமைப்பை திருத்தணும்னு இருக்காங்களே திருட்டு பசங்க.. இவங்க மூன்றாயிரம் வருடங்களாக இருக்கிறார்கள். இந்த திருட்டு பசங்க சொல்வாங்க எங்களுடைய நாடு அற்புதமாக இருந்தது. பொன் இருந்தது என்று பொய்யாக சொல்வார்கள். 2 ஆயிரம், 3 ஆயிரம் வருடங்களாக இந்தியா மாதிரியான அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை. அதில் இருந்து தப்பிப்பதற்காக தான் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார்'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.