சனி, 6 நவம்பர், 2010

தாய்லாந்தில் தொடரும் இலங்கை அகதிகள் கைது : கனடா குடிவரவு சட்டத்தை தீவிரப்படுத்துகிறது

தாய்லாந்தில் வைத்து அண்மையில் 61 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, கனடா தமது புதிய குடிவரவு சட்டத்தை அமுலாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் கனடா அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட 3 கட்ட சோதனை நடவடிக்கைகளில் இதுவரையில் 200 பேருக்கும் அதிகமான இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் போன்று மேலும் பலர் கனடா நோக்கி வருவதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் தாய்லாந்து அரசாங்கம், அவர்களை கைது செய்வதற்கு முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் தாய்லாந்தில் இருந்து விரைவாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல இலங்கையர்கள் முயல்வதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அவர்களை தடுப்பதற்காக, கனடாவின் குடிவரவுச் சட்டத்தை துரிதமாக இறுக்கப்படுத்தும் முயற்சிகள் அவசியப்படுவதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

30 லட்ச ரூபா பெறுமதியான பீடி வகைகளை இலங்கைக்குள் கடத்த முற்பட்ட இந்தியர்கள் கைது

.
.
30 லட்ச ரூபா பெறுமதியான பீடி வகைகளை சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இலங்கைக்குள் கடத்துவதற்கு முற்பட்ட இந்தியர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பீடி வகைகளுடன் நான்கு இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிலாவத்துறை கடற்பகுதியில் இந்த மீன்பிடிப் படகினை கடற்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த படகில் சுமார் 750,000 பீடிகள் காணப்பட்டதாகவும், இடத்தை அறிந்து கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஜீ.எஸ்.பி கருவியொன்று, கையடயக்கத் தொலைபேசி ஒன்று  ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.
பீடிகளை பாதுகாப்பாக கடத்தும் நோக்கில் பொலித்தீன் பைகளினால் பொதி செய்து இலங்கைக்கு கடத்த முற்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சித்தர்கள் என்றால் யார் யார், என்னென்ன பெயர்களில் சித்தர்கள் இருந்து என்னென்ன


திருப்பூர் கிருஷ்ணன்

                             ல்லாவற்றையுமே கடவுளின் செயலாகப் பார்க்க ஒரு தனியான மனப் பக்குவம் தேவை. அத்தகைய உயர்ந்த பக்குவம் இறுதி நாட்களில் கவிஞர் கண்ணதாசனுக்கு வாய்த்திருந்தது. அதனால்தான், "ஒருகாலத்தில் நான் நாத்திகனாக இருந்ததும் இறைவனின் சித்தமல்லாமல் வேறென்ன?' என்று அவரால் பின்னாளில் சொல்லவும் முடிந்தது.

பூரணமாக இறைவனைச் சரணடைந்து  வாழும் ஒரு மரபு நம் தேசத்தில் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. இத்தகைய மனப்போக்கினால் என்ன லாபம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? எல்லாம் இறைவன் செயல் என பரம் பொருளிடம் பொறுப்பை விட்டுவிட்டால் மனச் சுமை இல்லை; ரத்த அழுத்தம் ஏற்படு வதில்லை; உடல் ஆரோக்கியம் பிரமாதமாக இருக்கிறது. இவையெல்லாம் மாபெரும் லாபங்கள் இல்லையா?

ஆனால், காலப்போக்கில் சிலரிடம் சோம்பேறித்தனம் வளர்ந்தது. இறைவன் கையையும் காலையும் தந்தது உழைக் கத்தான் என எண்ணாமல், உழைக்காமல் இருந்தாலும் இறைவன் எல்லாவற்றையும் தருவான் என்கிற மூடத்தனம் வளர்ந்தது. இதனால் பலர் பக்தியின் பெயரைச் சொல்லிலி சோம்பேறிகள் ஆனார்கள்.

அந்த நிலையை மாற்றத்தான் மாபெரும் ஞான வீரர்களாக விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் போன்ற மகான்கள் தோன்றினார்கள். மகான்கள் எல்லாரும் இந்து மதத்தை நெறிப்படுத்தப் பிறந்தவர்களே. இந்து மதத்தின் சரியான நெறியை மக்களுக்கு அறிவுறுத்தப் பிறந்தவர்களே.

காலந்தோறும் இந்து மதத்தில் பற்பல மாற்றங்களும் நேர்கின்றன. உடன்கட்டை என்ற மூடப்பழக்கம் முன்பு இருந்தது. கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறிய பெண்கள் மிகச் சிலர்தான். அவர் கள்கூட, கணவன் இல்லாத உலகில் பொருளாதார ரீதியாக எவ்விதம் வாழ் வோம் என்ற அச்சத்தில் உடன்கட்டை ஏறியவர் களாகத்தான் இருக்க வேண்டும்.

பெண் கல்வி முற்றிலும் மறுக்கப் பட்ட காலத்தில் பெண்கள் பொருளா தாரரீதியாக ஆணைச் சார்ந்தே இருந்தாக வேண்டிய நிலை இருந்தது. அப்போது கணவனின் இறப்பு என்பது வாழ்வு முழுவதன் இழப்பு என்றே உணரப்பட்டது.

ஆனால், ஏராளமான பெண்கள் உடன் கட்டை ஏறியதாகச் சரித்திரத்தில் படிக்கிறோமே, அது எப்படி? அந்தச் செய்திகள் உண்மைதான். அவர்கள் எல்லாம் உடன் கட்டை ஏறியவர்கள் அல்லர்; ஏற்றப்பட்ட வர்கள்.

பிறகு இந்தக் கொடுமையை மாற்ற நவீன யுகத்து முனிவர்போல ஒருவர் வந்தார். அவர்தான் ராஜாராம் மோகன்ராய். ஆழ்ந்த ஆன்மிக நம்பிக்கை உள்ள அவர், "பெண்களுக்கு எதிரான இந்தப் பெருங்கொடுமை அதர்மமானது' என்று பிரசாரம் செய்தார். அந்தக் கொடுமைக்கு எதிராகச் சட்டம் இயற்ற வழி செய்தார். அதன் பிறகுதான் இந்தக் கொடுமை மறைந்தது.

முன்பு கைம்பெண்களுக்கு மொட்டை அடித்து முக்காடு போடும் வழக்கம் இருந்தது. கல்கி தம் "கேதாரியின் தாயார்' என்ற சிறுகதையில் இந்த வழக்கத்தைச் சாடினார். பாரதியார் உள்ளிட்ட பல தமிழ் எழுத்தாளர் கள் இந்தக் கொடுமையான பழக்கத்தை விமர்சித்தார்கள். கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என பல உயர் நிலை ஆன்மிகவாதிகளும் சமூக சீர்திருத்த வாதிகளும் கூறத் தொடங்கினார்கள்.

ஒரு சமூகத்தில் சீர்திருத்தம் என்பது மெல்ல மெல்லத்தான் வரும். ஆனால் மனிதர் களின் மனதை ஊடுருவி நாம் சீர்திருத்தக் கருத்து களை விதைத்து விட்டால், பின்னர் மனித சமூகம் நாம் முயன்று வளர்த்தெ டுத்த முன்னேற்றப் பாதையில்தான் செல்லும்.

இவ்விதம் ஆன்மிகத் தைப் பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் சிந்திக்கும் போது, நாம் ஓர் உண்மையை உணர வேண்டும். நாம் மதிக்கும் உயர்நிலைக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஆன்மிகவாதிகளும் எல்லாக் காலங்களிலும் சித்தர்களைப் பற்றிச் சொல்லிலியிருக்கிறார்கள் என்பதும்; சித்தர்களைத் தீவிரமாக நம்பி இருக்கிறார்கள் என்பதும்தான் அது.

குள்ளச்சாமி என்ற சித்த புருஷரைப் பற்றி மகாகவி பாரதியார் சொல்லிலியிருக்கிறார். நவீன இலக்கியவாதிகளில் பலர் சித்தர்களைப் பற்றியும் சித்துகளைப் பற்றியும் அறிவதில் நிறைய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

சித்தர்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள் என்று பரவலாக நம்பப்படுகிறது. சித்தர்கள் என்றென்றும் வாழ்பவர்கள் என்றும் நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த இரண்டுமே உண்மைதான்.

சித்தர்கள் அழிவற்றவர்கள். அவர்கள் தெய்வத்தின் தூதுவர்களாக இயங்குபவர்கள். தெய்வத்திடம் பிரார்த்தித்து ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதுபோலவே சித்தர்களைப் பிரார்த்தித்தும் அந்தச் செயலிலில் ஈடுபடலாம். சித்தர்களின் ஆசியோடும் உதவியோடும் செயலில் பூரண வெற்றி பெறலாம்.

மனிதர்களால் இயலா ததை அமானுஷிகம் என்கிறோம். அப்படிப்பட்ட அமானுஷிகமான பல செயல்களை சித்தர்களால் நிகழ்த்த முடியும். நிகழ்த்த முடியும் என்பது ஏன்? இன்றும் அப்படிப்பட்ட பல அற்புதங்களை அவர் கள் பல அடியவர்களின் வாழ்வில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் எத்தனையோ முயற்சி செய்தாலும் நம் கையை மீறிய விஷயங்கள் பல இருக்கத்தான் செய்கின்றன. திடீரென்று நோய்வாய்ப்படும்போது- திடீரென்று ஒரு திருமணம் நின்று போகும் போது- எத்தனையோ முயற்சி செய்தும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருக்கும்போது, "இப்படியெல்லாம் நடக்கிறதே, ஏன்?' என்ற திகைப்பு நமக்கு எழுகிறது.

இதற்கெல்லாம் காரணம் நாம் முற்பிறவி களில் செய்த கர்ம வினைதான் என்று நம் ஆன்மிகம் சொல்கிறது. முற்பிறவியின் தொடர்ச்சிதான் இப்பிறவி என்கிறபோது, முன்வினைகளால் நேர்கிற சிரமங்களை எப்படிப் போக்கிக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது.

சித்தர்களைச் சரணடைவதன் மூலம் முன்வினைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிலிருந்து ஒருவன்
முற்றாக விடுபட முடியும். ராமகிருஷ்ண பரமஹம்ச ருக்கும் ரமண மகரிஷிக்கும் புற்றுநோய் வந்ததும்கூட, அடியவர்கள் தங்களைப் பூரணமாகச் சரண் அடைந்தபோது அவர் களின் முன்வினைகளை அவ்விருவரும் ஏற்றதால்தான் என்றொரு கருத்தும் சொல்லப்படு கிறது. தங்களுக்கு வரும் உபாதைகளைப் பற்றி கூடக் கவலைப்படாமல் அடியவர்களைக் காப்பதில் பெரும் அக்கறை செலுத்து பவர்கள் கருணையே வடிவான சித்தர்கள்.

சித்தர்கள் வாழ்ந்தது புனைகதை அல்ல; வரலாறுதான். சித்தர்கள் கடவுளை நம்பியதும், மனிதர்கள் சித்தர்களை நம்பியதும், சித்தர்கள் மூலம் கடவுள் அருள் மனிதர் வாழ்வில் செயல்பட்டதும் கடந்தகாலக் காற்றில் மெய்யாக எழுதப்பட்ட சரித்திரம்தான்.

உண்மையில், அது கடந்த கால வரலாறா? அல்ல; நிகழ்கால வரலாறும்கூட. ஏனெனில் சித்தர்கள் அன்று தொட்டு இன்றுவரை நிரந்தரமாய் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் அருளாட்சியும் அற்புதங்களும் இன்றும் நம்புகிறவர்களுக்கு உண்மையிலேயே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

பதினெண் சித்தர்கள் என்று சொல்கிறோம். பதினெட்டு என்பது சித்தர்களின் கணக்கல்ல; அது சித்தர்கள் நிகழ்த்தும் சித்துகளின் கணக்கு என்று சிலர் கருதுகிறார்கள்.

பதினெட்டு பேர்தானா? ஒருவகை யில் மகான்கள் எல்லாருமே சித்தர் களாய்த்தான் வாழ்ந்திருக்கிறார்கள். தான் தொட்ட இரும்புக் கம்பியைத் தங்கமாய் மாற்றிய ரசவாதியான வள்ளலார் சித்தர் இல்லை என்றால் வேறு யார் சித்தர்? தன் வேட்டியிலிலிருந்து நூலைப் பிரித்துப் போட்டு, ஒரு பாட்டி கேட்டுக்கொண்டபடி ஆயிரக்கணக்கான பறவைகளை முற்றத்தில் வரவழைத்த சேஷாத்ரி பரப்பிரும்மம்கூட ஒருவகையில் சித்தர் தானே? போண்டா கட்டி வந்த நூலைத் தென்னை மரங்களின் இடையே கட்டி இரவு முழுவதும் அந்த நூலிலில் படுத்துத் தூங்கிய ஷீர்டி சாயிபாபா சித்தர்களுக்கெல் லாம் சித்தரல்லவா!

சித்தர்கள் தங்கள் சித்து களை அறிவித்துக் கொள்வ தில்லை. அது அவர்களுக்கும் உணர்ந்து அனுபவிப்பவர் களுக்கும் இடையேயான பரம ரகசி யம். எனினும் வரலாற்றில் சில அடியவர் களால் தங்கள் வாழ்வில் சித்தர்கள் நிகழ்த்திய சித்துகள் பக்தியுடன் மற்றவர்களுக்கும் சொல்லப்பட்டுள்ளன.

நமது இந்து மதமும் அதன் ஆன்மிக நெறிகளும் சமுத் திரத்தைவிடவும் ஆழமானவை; ஆகாயத்தைவிடவும் பரந்தவை.


நம் ஆன்மிகத்தில் சித்தர்கள் என்றால் யார் யார், என்னென்ன பெயர்களில் சித்தர்கள் இருந்து என்னென்ன அற்புதங்களைச் செய்தார்கள், பாரதியார் போன்ற மெய்ஞ்ஞானிகள் எல்லாம் சித்தர் களைப் போற்றிப் புகழ்வது ஏன், அவர்கள் நிகழ்த்தும் சித்து என்பது எத்தகையது, சித்தர்களின் அருளாசி யோடு எப்படி எல்லாத் துன்பங்களை யும் போக்கிக் கொள்ளலாம், முக்திக்கு மட்டுமல்ல; உலகியல் வாழ்வுக்கும் சித்தர்கள் எப்படியெல்லாம் உதவு

கிறார்கள் என்பதுபோன்ற பல விஷயங்களை நாம் அறிந்துகொள்வது நம் ஆன்மிக வாழ்வுக்கு வளம் சேர்க்கும். அது குறித்து வரும் இதழ்களில் காண்போம்.

Cell phone செல்பேசி ஆபத்து...


               ன்று பட்டிதொட்டி கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மனிதனுக்கு உடை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டது.

சிலர் செல்போன் இல்லையென்றால் தூங்க மாட்டார்கள். எதையோ இழந்தது போல் தவிப்பார்கள்.  முன்பு அவசர தேவைகளுக்கு மட்டும் பேசக் கண்டறிந்த செல்போன் இன்று ஸ்டைலாகவும், அடிமைப்படுத்தும்  அளவிற்கும் மாறிவிட்டது.

உலக மக்கள் தொகையில் 80 சதவிகிதம் பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள்.  இந்த ஆண்டு 5 மில்லியன் மக்கள் அகண்ட அலைவரிசை (Broad band)  யின் மூலம் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதன் வளர்ச்சி  ஒருபுறம் விரிந்து கொண்டே போவது நல்ல செய்திதான்.  உலகத்தை உள்ளங் கைகளுக்குள்  கொண்டு வந்தது இந்த செல்போன்கள் தான்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு என்ற நியூட்டனின் விதிக்கு ஏற்றார்போல், இங்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் செல்போன், பல தீய செயல்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப, அளவுக்கு அதிகமாக செல்போன் பேசுவதும், அதைப் பயன்படுத்தும் முறைகளாலும் மனித உடலுக்கு பலவகைகளில் பாதிப்பு உண்டாகும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்கம்  (Electro Magnetic radiation (EMR)) உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அந்த மருத்துவ விஞ்ஞானிகளின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

2 நிமிடம்....

செல்போன் 2 நிமிடம் பேசினால் அதனால் உண்டான மின் காந்த அதிர்வு மூளைக்குச் சென்று அரைமணி நேரம் வரை தங்கியிருந்து அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.  மேலும் செல்போனால் உண்டாகும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள பல ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனர்.

செல்போன் பேசும்போது...

செல்போனை தலையிலிருந்து 2 முதல் 7 அங்குலம் வரை தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும்.  முடிந்தவரை பெரிய ஒலிப்பானை பயன்படுத்தி (loud speaker)  பேசுவது நல்லது. இதனால் மின்காந்த கதிரியக்கத்தின் பாதிப்பு மூளைக்குச் செல்வதை தடுக்கலாம்.

தூங்கும்போது...

நாம் தூங்கும்போது செல்போனை எங்கு வைக்கிறோம்.  தலையணைக்கு அடியிலா அல்லது தலைமாட்டிலா.. செல்போனில் இருந்து வெளிப்படும் மின்னதிர்வுகளின் தூரம் குறைவதால் நம் மூளையை தாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனால், தூங்கும்போது, தலைமாட்டில் செல்போனை வைத்து தூங்குவதை தவிருங்கள். அல்லது அணைத்துவிடுங்கள், அல்லது 6 மீட்டர் தூரம் தள்ளி வையுங்கள்.
செல்போனை சட்டைப்பையில் வைக்கும் போது, அது இதயத்தின் மிக அருகில் இருக்கிறது.  நம்முடைய இதய இயக்கம் மின்காந்த அதிர்வுகளால் மாற்றம் அடையக்கூடியது.  எனவே, செல்போன் ஒலிக்கும்போது, அதிலிருந்து வரும் மின்காந்த அதிர்வுகள் நேரடியாக இதயத்தை பாதிக்கிறது. 

கீ பேட் வெளிப்பக்கம் இருக்கும்படி வைக்க வேண்டும். அல்லது அணைத்துவிட்டு சட்டைப் பையில் வைக்க வேண்டும். இதயத்துடிப்பு குறைபாடு உள்ளவர்கள் சட்டைப்பையில் வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

கால்சட்டை பையில்...

 அதுபோல் கால்சட்டைப் பையில் வைத்தால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும், பெண்களுக்கு மலட்டுத்தன்மையும் ஏற்படும்.

கருவுற்ற பெண்கள்...

கருவுற்ற பெண்கள் செல்போன் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.  செல்போனிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்கம் கருவில் உள்ள குழந்தையை பெருமளவில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால்    காதுகேளாமை, வாய் பேச முடியாமல் போவது, உடல் வளர்ச்சி  மனவளர்ச்சி குன்றுதல் போன்ற  பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பயணங்களின் போது...

விமானம், இரயில், பேருந்து பயணங்கள் மற்றும், பெட்ரோல் பாங்கு இருக்கும் இடங்களில் செல்போன் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.  ஏனெனில் மெட்டல் அதிகம் உள்ள பகுதிகளில் மின்காந்த கதிரியக்க சக்தி அதிகமாகும்.

செல்போனில் பேசுவதற்கு ஹெட்போனை உபயோகிக்கும்போது,  மின்காந்த கதிரியக்கம், நேரடியாக காதுகளையும் மூளையையும் தாக்குகிறது.

குழந்தைகள் மற்றும்சிறுவர்கள்...

15  வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்தினால், மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் உள்ளது. இது மரணத்திலும் கொண்டு போய் விடலாம்.

இளங் குழந்தைகளுக்கு அருகில் செல்போன் பேசுவதோ, வைப்பதோ கூடாது. இதிலிருந்து வெளிப்படும் மின்காந்த கதிரியக்கம் குழந்தைகளின் மென்மையான தசைக்குள் எளிதில் ஊடுருவி உட்சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.  புற்று நோய் ஏற்படும்  வாய்ப்பும் உள்ளது.

மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிருங்கள்.

பொழுதுபோக்கிற்காக பேசுவதைத் தவிர்த்து தேவைக்கு மட்டும் பேசுங்கள்.  பாதிப்பும் இல்லை.  பணவிரயமும் இல்லை. 

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நிலவும் கடும் போட்டி



தமிழக காங்கிரஸ் தலைவரான தங்கபாலுவை மாற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்கமாக மேடைகளில் பேசி வரும் நிலையில் தங்கபாலு மாற்றப்படுவாரா? இல்லையா? என்ற கேள்வி சில மாதங்களாக நீடித்து வருகிறது.
வர இருக்கிற சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க மேலிடத்தில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவி தனக்கு இப்போது வேண்டாம் என வாசன் கூறி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தங்கபாலு தலைவர் பதவியை மீண்டும் தக்கவைத்து கொள்ள மேலிடத்தில் முயற்சி எடுத்துள்ளார்.

இதையறிந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனக்கு மீண்டும் தலைவர் பதவி வேண்டும் என டெல்லியில் வற்புறுத்தி வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக காங்கிரசில் பல கோஷ்டிகள் இருப்பதால் யாரை தமிழக காங்கிரஸ் தலைவராகa நியமிப்பது? அல்லது எந்த கோஷ்டியின் ஆதரவாளரை நியமிப்பது என்ற ஆலோசனையும் நடந்து வருவதாக தகவல் வருகின்றன.

இதனால் வாசன் அணியில் ஞானதேசிகன் எம்.பி., ப.சிதம்பரத்தின் அணியில் கே.எஸ்.அழகிரி எம்.பி., விசுவநாதன் எம்.பி. ஆகியோரும் தலைவர் பதவிக்கு முயற்சி செய்வதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதையறிந்த வசந்தகுமார் எம்.எல்.ஏ.வும் தமிழக காங்கிரஸ் பதவிக்கு முயற்சி செய்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் முடிந்த பிறகும் வசந்தகுமார் 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து பேசி வந்துள்ளார்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் சுவிட்சர்லாந்தில் புகழிடம்

ஜெனிவா: ஈராக் போரில் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடுமைகள் குறித்து விக்கிலீக்ஸ் நிறுவனம் ரகசிய ஆதாரங்களை இணையதளத்தில் வெளியிட்டது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் நிறுவனர் ஜீலியனுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததாக தகவல் பரவியது. இதனைதொடர்ந்து பாதுகாப்பு தேடி அவர் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்தார்.ஜெனிவாவில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜீலியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: எனது பாதுகாப்பு கருதி சுவிட்சர்லாந்தில் இருக்க விண்ணப்பித்திருக்கிறேன் இது குறித்து இன்னும் முயற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

எதுவும் சாப்பிடாமல் உயிர்வாழும் அதிசய சிறுவன்

லண்டன்: இங்கிலாந்தில் எந்த உணவும் சாப்பிடாமல் நான்கு ஆண்டுகளாக சிறுவன் ஒருவன் வாழ்ந்து வருகிறான். கடந்த நான்கு ஆண்டுகளாக திரவ உணவு மட்டுமே சாப்பிட்டு வருகிறான் டேனியல் ஹாரிசன் என்னும் சிறுவன். இந்த சிறுவனுக்கு ஆட்டிஸம் நோயால் பாதிக்கபட்டுள்ளான். அவனுக்கு எல்லாவித சிகிச் சைகளும் செய்த போதிலும் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதம் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்குதலுக்கும் உள்ளானான். அதுமட்டுமல்லாமல் நுரையீரல் நோய் தாக்குதலும் உள்ளது.மேலும் மற்ற சிறுவனைப்போல் இவனும் சாப்பிட வேண்டும் என்ற கனவு அவனுக்கு உள்ளது. அதே சமயம் அவனுக்கான உணவு குழாய் மூலம் தருவது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது என சிறுவனின் தந்தை கெவின் தெரிவித்தார். தற்போது டேனியலின் பெற்றோர் ஆஸ்திரியாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஸ்பத்திரி மட்டுமே முழுமையாக நம்பியுள்ளனர்.

திவ்யாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி!


தமிழ்ப் படங்களில் திவ்யாவை நடிக்க வைக்கக் கூடாது என்று இந்து மக்கள் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த திவ்யா, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் உறவினர்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான திவ்வா, தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந் நிலையில் திவ்யாவை இனி மேல் தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி கூறியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி பிரச்சனையில் தமிழர்கள் நலனைக் கருதாமல் எதிராக செயல்பட்ட திவ்யாவை தமிழில் நடிக்க வைக்கக் கூடாது.

ஏற்கனவே கெளதம் மேனன் திவ்யாவை வாரணம் ஆயிரம் படத்திற்கு ஒப்பந்தம் செய்தபோதே எதிர்ப்பு தெரிவித்தோம். இனி அவரை தன் படத்தில் நடிக்க வைக்க மாட்டேன் என்று கெளதம் உறுதியளி்த்தார். அதனால் அமைதியாக இருந்தோம்.

ஆனால், தற்போது மீண்டும் திவ்யாவை தனது புதிய படத்திற்கு தேர்வு செய்துள்ளார் கெளதம். இதை அனுமதி்க்க மாட்டோம். கெளதம் மேனன் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து திவ்யா கூறுகையில், நான் இந்தப் படத்தில் நடிப்பேனா, இல்லையா என்பதை கெளதம் தான் கூற வேண்டும் என்றார்.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமா

மும்பை: தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

மும்பை வந்துள்ள பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷேலும் தாஜ் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த மும்பை தாக்குதல் நினைவு புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலு்த்தும் நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, நான் மும்பைக்கு வந்ததற்கும், தாஜ் ஹோட்டலில் தங்குவதற்கும் காரணம் இருக்கிறது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஹோட்டலும் ஒன்று. அந்தத் தாக்குதலை நாம் என்றும் மறக்க முடியாது.

ஆனால், அந்தத் தாக்குதலை இந்திய மக்கள் மிகுந்த மன பலத்துடன் எதிர்கொண்டனர். அந்தக் கொலையாளிகளிடம் மக்கள் பணிந்துவிடவில்லை.

அந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளிலேயே மும்பை நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தாக்குதலால் முடங்கிவிடாமல் ஸ்கூட்டர்களிலும் ரயில்களிலும் பணிக்குச் செல்வோர் தங்கள் பணிகளை உடனே தொடங்கினர். தாஜ் ஹோட்டலும் அடுத்த ஒரே மாதத்தில் மீண்டும் விருந்தினர்களை அனுமதிக்க ஆரம்பித்தது.

ஹோட்டல் முடங்கிவிடாமல் மீண்டும் எழுச்சி கொண்டு நின்றது. அதே போல மும்பையும் இந்த மாபெரும் தேசமும் தனது இயல்பு வாழ்க்கைக்கு உடனே திரும்பின. அது இந்திய மக்களின் பலத்தை வெளிக்காட்டியது.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். மும்பை போன்ற மற்‌‌றொரு தாக்குதல் நடந்துவிடாமல் தடுக்க இரு நாடுகளும் தேவையான உளவு ரகசியங்களை பகிர்ந்து வருகிறோம் என்றார்.

மகா. முதல்வரிடம் வருத்தம் தெரிவித்த யுஎஸ் தூதரகம்:

ஒபாமாவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் மிக அதிகமாக உள்ளன.

ஒபாமாவை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மகாராஷ்ட்டிர முதல்வர் அசோக் சவாணுக்கும் துணை முதல்வர் சகன் புஜ்பால், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோருக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அவர்களுக்கு பாஸ் வழங்க, அவர்களது அட்ரஸ் புரூப், அடையாள அட்டை நகல், போட்டோ, பேன்கார்டு எண், பாஸ்போர்ட் எண் எல்லாம் கோரப்பட்டது. மேலும் இவர்களுக்கு முறைப்படியான அழைப்பும் நேற்று மாலை வரை வரவில்லை.

இதையடுத்து ஒபாமா பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து நேற்றிரவு அமெரிக்கத் தூதரம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் நேற்றிரவில் அமெரிக்கத் தூதரகம் அழைப்பிதழ்களையும் தந்தது.

இதைத் தொடர்ந்து இன்று ஒபாமாவை, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் மகாராஷ்டிராவின் வரலாறு, பண்பாடு அடங்கிய புததகத்தை நினைவுப் பரிசாக வழங்கி வரவேற்றார். ஆனால் உள்துறை அமைச்சர் பாட்டில் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டார்.
பதிவு செய்தவர்: கேப்டன் டிவி செய்திகள்
பதிவு செய்தது: 06 Nov 2010 5:42 pm
சென்னையில் ஒபாமா- சென்னை வந்த ஒபாமா தீவிரவாத்தை ஒடுக்கும் வித்தையை கற்க கேப்டனிடம் அனுமதி கேட்க , கேப்டனோ அதற்க்கு ஒபாமாக்கு திறமை பத்தாது என்றும் தான் கூட்டணியே சேராமல் இதுவரை தீவிரவாதிகளை ஒடுக்கியது போல ஒபாமாவும் இந்தியாவுடன் கூட்டணி சேராமல் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபடுமாறு கேட்டுகொண்டார்.பின்பு மனம் இரங்கி தனது ஆஸ்தான வித்தையான லெப்ட் காலை சுவரில் ஊன்றி ரைட் காலை எம்பி சுழற்றி தீவிரவாதிகளை உதைக்கும் வித்தையை கற்று தர , அதனை கற்றுக்கொண்ட ஒபாமா மகிழ்ச்சியுடன் அமெரிக்கா திரும்பினார்.

பதிவு செய்தவர்: captain
பதிவு செய்தது: 06 Nov 2010 5:29 pm
பிளஸ் போஸ்ட் கேப்டன் news

நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் பயங்கர புயல் 'ஜல்'!

சென்னை: கடும் புயலாக உருவெடுத்துள்ள 'ஜல்' இன்று காலை நிலவரப்படி வங்கக் கடலில் செனனையிலிருந்து 550 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து நாளை மாலை அல்லது இரவில் புதுச்சேரி- நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை:

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து வருவதோடு, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் நாளை மாலை அல்லது இரவில் புதுச்சேரி- ஆந்திராவின் நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும்.

இதனால் இன்று முதலே வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரங்களில் மிக பலத்த சூறாவளிக் காற்று வீசும். மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகம் வரை சூறைக் காற்று வீசும்.

நாளை அதிகாலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து 120 முதல் 140 கி.மீ. வரை புயல் காற்று வீசும்.

புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர வடக்கு, தெற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவில் மிக பலத்த கன மழை பெய்யும்.

24 மணி நேரத்துக்குப் பின் தமிழகத்தின் சில இடங்களிலும் ராயலசீமா உள்ளிட்ட சில ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் 25 செ.மீ. வரை மிக மிக பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு்ண்டு.

கடல் மிக மிக கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் அலைகள் புகவும் வாய்ப்புண்டு. இப் பகுதிகளி்ல் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பலத்த மழை, சூறாவளிக் காற்று காரணமாக குடிசை வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. மரங்கள், மின்கம்பங்களும் சரியலாம். சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் கனமழை:

இந்த புயல் சின்னம் காரணமாக ராமேஸ்வரத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது.

ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய கடல் பகுதிகள் வழக்கத்தைவிட இன்று மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகின்றன. 5 அடி உயரத்துக்கும் மேலாக அலைகள் எழுகின்றன.

75 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசி வருவதால் பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
  Read:  In English 
பாம்பன் ரயில் தண்டவாளத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.

மேலும் கோடியக்கரையிலும் கன மழை பெய்து வருகிறது.

வெள்ளவத்தை கடலில் நீராடிய பல்கலைக்கழக மாணவர் இருவர் பலி – ஒருவர் கோப்பாயைச் சேர்ந்தவர்

வெள்ளவத்தைக் கடலில் நீராடிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணமாகினர்       இதில் ஒருவர்    கோப் பாயைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது   தீபாவளி   தினமான   நேற்று   ஸ்ரீ ஜெயவர்த்தனபுர   பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் வெள்ளவத்தைக் கடலில் நீராடியுள்ளனர்.
அப்போது அலையில் சிக்குண்டு ஆறு பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் 4 பேரை கடற்படையினர் ஆபத்தான நிலையில் மீட்டனர். மற்றைய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. இவர்களில் மூன்றாம் வருடமாண வனான கோப்பாயைச் சேர்ந்த நரசுதன், இரண்டாம் வருட மாண வனான வவுனியா தாண்டிக்குளத் தைச் சேர்ந்த அன்பு தயாளன் ஆகிய இருவருமே உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  இவர்களின் உறவினர்களை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

ஜேர்மனியில் விபத்து இலங்கை தமிழர் பலி

ஜேர்மனியில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உட்பட  மூவர்  உயிரிழந்தனர். காரும் கொள்கலன் வானமும் ஒன்றோடு ஒன்று மோதிக் காண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்து.
இறந்த இலங்கையர் யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்ட அரியநேசன்  (வயது 53) என்பவர் ஆவார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.  ஏனைய இருவரும் இவரது நண்பர்களாவர்.
இவர்கள் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வலி: தமது மண்ணிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கும்,

வேரை இழத்தலின் வலி! : வடக்கிலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இருபதாவது ஆண்டு நினைவுக் கட்டுரை

ஒரு தாவரத்தை அது முளைத்த மண்ணிலிருந்து பிடிங்கியெடுத்து வேறிடத்தில் நடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அநேகமாக, அந்தத் தாவரம் பிழைப்பதென்பது மிக அரிது. அப்படிப் பிழைத்தாலும் செழிப்பாக வளராது. அது முளைத்து வளர்ந்த மண்ணில்தான் அதன் பாதி உயிர் ஒட்டிக் கிடக்கிறது. அதனால்தான் அந்த தாவரம் பிடுங்கியெடுக்கப்படும்போது கிட்டத்தட்ட அது இறந்து போகிறது.
ஆத்மா இல்லாத, ஒரு தாவரத்துக்கே அதன் பிறப்பிடத்திலிருந்து பிடுங்கியெடுக்கப்படும்போது இத்தனை இன்னல்கள் என்றால், மனிதனின் நிலை – மிகக் கொடுமை!
தான், பிறந்து – வளர்ந்த மண்ணிலிருந்து பலாத்காரமாக பிடுங்கியெறியப்படும் ஒருவன் அனுபவிக்கும் வலியும், இன்னல்களும், அவமானங்களும் – அனுபவத்தால் மட்டுமே உணரக் கூடியவை!
தமது மண்ணிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கும், யுத்தத்தின்போது தங்கள் வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கும் வலிகள் என்பவை வேறு வேறானவைகள் அல்ல!
ஆனாலும், கடந்த காலத்தில் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அதுபற்றி தமிழ் தரப்பிலிருந்து போதுமான அளவு எதிர்க்குரல் எழுப்பப்படவில்லை என்பது கசப்பானதோர் உண்மையாகும்.
புலிகள் செய்ததையெல்லாம் நியாயப்படுத்தும் தமிழர் தரப்பைச் சேர்ந்த ஒரு கூட்டம், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதும் அதற்கு நியாயம் கற்பிக்கத் தொடங்கியது. ஆனாலும், முஸ்லிம்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டமையை தமிழ் மக்களில் மிக அதிகமானோர் வெறுத்தார்கள் அல்லது விரும்பவில்லை என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இருந்தபோதும், புலிகள் மீதான அச்சத்தினால் தமது வெறுப்பினை தமிழ் மக்களால் அப்போது வெளியிட முடியவில்லை!
கொழும்பில் நான் ஊடக நிறுவனமொன்றில் கடமையாற்றியபோது, என்னுடன் வேலை செய்த தமிழ் நண்பரொருவர்ளூ வடக்கு முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய நடவடிக்கையினை அடிக்கடி நியாயப்படுத்திப் பேசுவார். முஸ்லிம்கள் ராணுவத்துக்கு உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டமையினாலேயே அவர்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள் என்று – புலிகளுக்காக அவர் வாதாடிக் கொண்டேயிருப்பார்.
அந்த நண்பர் சொன்ன விடயங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம். சிலவேளைகளில் ராணுவத்தினருக்காக முஸ்லிம்களில் ஒருவரோ, இருவரோ, அல்லது சிலரோ – உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டிருக்கலாம். அதற்காக, வடக்கிலிருந்த சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களையும் இரண்டு மணி நேரத்துக்குள் அவர்களின் மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெறிந்தமை எந்த விதத்தில் நியாயமாகும்?!
இந்த இடத்தில் அப்பாவித்தனமாக நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. வடக்கிலிருந்த தமிழர் தரப்பிலும் ராணுவத்துக்காக உளவு பார்த்தவர்கள், புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள் என நிறையப்பேர் இருந்தார்களல்லவா? அப்படியென்றால், அந்த உளவாளிகளைக் காரணமாக வைத்து வடக்கிலிருந்த தமிழர்களையெல்லாம் ஏன் புலிகள்; வெளியேற்றவில்லை!
எனவே, ராணுவத்துக்காக உளவு பார்த்ததால்தான் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று புலிகளாலும், புலி ஆதரவாளர்களாலும் கூறப்படும் கதையானது, வெற்றுக் கதைகள் அல்லது கட்டுக் கதைகளாகும்!
புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு வேறு ஒரு கதை உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், அது இங்கு – இப்போது தேவையில்லை!
பழையவற்றைக் கிளறிக்கொண்டும், ஆளாள் மீது குற்றம் சுமத்திக் கொண்டுமிருப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. எனினும், நமது தரப்புத் தவறுகளை பெருமனதுடன் நாம் ஏற்றுக் கொள்வதாலும், அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பிடம் நாம் மன்னிப்புக் கோருவதாலும் எதுவும் எவர்க்கும் குறைந்து விடவும் போவதில்லை.
இடம்பெயர்வு, அதனால் ஏற்படும் இன்னல்கள், அவமானங்கள், கொடுமைகளை – போதும் என்றளவுக்கு தமிழ் மக்கள் அனுபவித்துவிட்டார்கள். பலாத்காரமாக இடம்பெயர்க்கப்படுதலின் வலியை அனுபவபூர்வமாக உணர்ந்து வைத்துள்ள தமிழ் மக்கள், புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தமாட்டார்கள் என்பது நமது நம்பிக்கையாகும்.
யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரை ஒரு தடவை கொழும்பில் வைத்துச் சந்திக்கக் கிடைத்தது. அவருக்கு 60 வயதிருக்கும். அவர் எனது நண்பரொருவரின் தூரத்து உறவினர். என்னை ஒரு முஸ்லிம் என அறிந்து கொண்டதும், அவரின் முஸ்லிம் நண்பர்கள் பற்றியும், யாழ்ப்பாணத்தில் அவர்களுடைய அயலவர்களாக இருந்த முஸ்லிம்கள் பற்றியும் அந்தப் பெரியவர் பேசத் தொடங்கினார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த பிறகும் கூட, அவரின் குடும்பத்தினருக்கும், அயலவர்களாக இருந்த முஸ்லிம் குடும்பத்தவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் இன்னும் இருப்பதாக அவர் கூறினார். இப்படி, அந்த உறவை – நட்பைப் பற்றிப் பேசிக் கொண்டு போன அந்தப் பெரியவர் ஒரு கட்டத்தில் கண்கலங்கி அழுதே விட்டார்.
போலியற்ற அந்த அழுகையை இப்போது நினைத்தாலும், மெய் சிலிர்த்துப் போகிறது!
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டு இன்றுடன் இருபது வருடங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், அந்த மக்களின் அவல வாழ்வு இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ‘அகதி’ என்கிற பெயரால் அவர்கள் அழைக்கப்படும்போது, அவர்களுக்குள் ஏற்படுகின்ற வலி, அவமானம் குறித்தெல்லாம் நம்மில் எத்தனைபேர்தான் சிந்தித்திருக்கின்றோம்?
கோடீஸ்வரர்களாக உறக்கத்துக்குச் சென்ற எத்தனையோ வடக்கு முஸ்லிம்கள், விடியும்போது எதுவுமற்றவர்களாக வெளியேற்றப்பட்டார்கள். நாம் அகதி என்று அழைக்கும் வடக்கு முஸ்லிம்களில் அதிகமானோர், தமது மண்ணில்; மேல் தட்டு வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் என்பதை நம்மில் பலபேர் நினைத்துப் பார்ப்பதேயில்லை. ஆகவேதான் அவர்களை ‘அகதி’ எனும் சொல்லால் நாம் அழைத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு ஏற்படும் ‘ஆத்ம வலி’ குறித்து நம்மில் பலர் கவலைப் படுவதேயில்லை!
இது ஒருபுறமிருக்க, வடக்கு முஸ்லிம்களை விரட்டியடித்த பாவத்தின் சொந்தக்காரர்களான சில முன்னாள் புலிகள் – இப்போது கூட அவர்களின் பிழைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதும் மிக விசனத்துக்குரிய விடயமாகும்.
புலிகளின் முக்கிய பொறுப்புக்களில் இருந்த – தற்போதைய பிரதியமைச்சர் முரளிதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது – புரிந்ததும், நிகழ்ந்ததுமான தவறுகளை இப்போது கூட, ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோருவதற்குத் தயாராக இல்லை! தமது தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவதற்கே மறுக்கும் இவர்கள், இவர்களாலும், இவர்கள் அங்கம் வகித்த இயக்கத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக எதைத்தான் செய்துவிடப் போகிறார்கள்!
புலிகளால் புரியப்பட்ட பிழைகளை சந்திரகாந்தன் – முரளிதரனின் தலையில் போடுவதும், பின்னர் முரளிதரன் அவற்றை பிரபாகரனின் தலையில் இறக்கி வைத்து அறிக்கை விடுவதும் வாடிக்கையான செயல்களாகிவிட்டன.
புலிகள் இயக்கத்தின் யுத்த வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் – தானே பிரதான காரணம் என மார்பு தட்டும் விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகளின் தவறுகளையும் பொறுப்பேற்றே ஆக வேண்டும். புலிகள் இயக்கத்திலிருந்து விலகி வந்து விட்டதனால் மட்டும், சந்திரகாந்தனோ, முரளிதரனோ புனிதர்களாகி விடப்போவதில்லை!
இவைதவிர, வடக்கு முஸ்லிம்கள் விடயத்தை அரசியலாக்கி அதன் மூலம் தமது பதவிகளையும், அரசியல் இருப்புக்களையும் தக்க வைத்துக் கொள்ளும் கேவலமான விளையாட்டுக்களில் நமது அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருவதும் வெட்கக்கேடான விடயமாகும். புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்களின் பெயரால் சில அரசியல்வாதிகளும், அவர்களின் கூட்டத்தாரும் வயிறு வளர்த்துக் கொண்டிருப்பது சமூக துரோகம்!
புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்களில் சில குடும்பத்தவர்கள் மட்டுமே தொடர்ந்தும் புத்தளத்தில் இருப்பதற்கு விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஏனையோர் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப வேண்டுமென்றே ஆசைப்படுகின்றார்கள். ஆனால், இதுவரையும், சில நூற்றுக் கணக்கான குடும்பங்கள் மட்டுமே வடக்கில் குடியேற்றப்பட்டுள்ளன. ஏனையோர் ‘அகதிகள்’ என்கிற அழியாப் பெயருடன் புத்தளத்திலும் வேறுபல இடங்களிலும் வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த இடத்தில் ஒரு கசக்கும் உண்மையைக் கூறியே ஆக வேண்டியிருக்கிறது. உதாரணமாக, புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்கள் மீள் குடியேறுவதை விடவும் அங்கு இருப்பதையே சில முஸ்லிம் அரசியல்வாதிகள் விரும்புகின்றார்கள் என்று கவலையோடு கூறினார் அங்குள்ள நமது நண்பரொருவர்.
பிச்சைக்காரனின் புண்ணைப்போல், இந்த ‘அகதி’கள் விவகாரத்தைத் காட்டிக் காட்டியே, தமது அரசியலையும், பொருளாதாரத்தையும் குறித்த அரசியல்வாதிகள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நமது நண்பர் கவலைப்பட்டுக் கூறிய மற்றொரு விடயமாகும். இந்த ‘அகதி’கள் இல்லாமல் போவது இந்த அரசியல்வாதிகளுக்கு ஆபத்தானதாம்!
இப்படியான அவலங்கள் அசிங்கங்களுக்கெல்லாம் அப்பால், வேரை இழந்த அந்த மக்களின் வலி குறித்து இன்றைய தினம் நாம் எல்லோரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வேர்களையும், அவை பரவிக் கிடந்த மண்ணையும் இழத்தலின் வலி மிகக் கொடுமையானது!

குடிசைகளை அகற்றுவதற்கு எதிராக UNP போலி பிரச்சாரமொன்றை முன்னெடுக்கின்றது.


(By Vilani Peiris) இலங்கை அரசாங்கம் கொழும்பு நகரில் இருந்து 66,000 குடும்பங்களை வெளியேற்ற தயாராகின்ற நிலையில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) இந்த வறிய மக்களுக்காகப் போராடுவதாக காட்டிக்கொள்கின்றது. எவ்வாறெனினும், வலதுசாரி கட்சியான யூ.என்.பி. யின் பிரச்சாரமானது அதனது தேர்தல் வெற்றிகளை முன்னேற்றுவதையே இலக்காகக் கொண்டுள்ளது. நகர்ப்புற வறியவர்களை பாதுகாப்பது அதன் குறிக்கோள் அல்ல.

கொழும்பை தெற்காசியாவின் வர்த்தக மையமாக மாற்றுவதற்கும் தீவின் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்துவதற்கும் தீட்டியுள்ள திட்டங்களின் பாகமாகவே இந்த வெகுஜன வெளியேற்றத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கெதிரான உறுதியான போராட்டங்களை எதிர்பார்த்துள்ளதால், மக்களை வெளியேற்றும் வேலை, பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மே மாதம் கொம்பனித்தெருவில் இருந்து 45 குடும்பங்களை வெளியேற்றுவதற்கும், அவர்களது வீடுகளை புல்டோசர்கள் கொண்டு உடைக்கும் போது அவர்களது போராட்டத்தை அடக்குவதற்கும் நூற்றுக்கணக்கான பொலிசாரும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, வீதி அபிவிருத்தி அதிகார சபையையும் (யூ.டி.ஏ.) காணி சீர்திருத்த அபிவிருத்தி சபையையும் (எல்.ஆர்.டி.பி.), தனது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தார். கொழும்பு மாநகர சபைக்கு பதிலாக பாதுகாப்பு அமைச்சின் மூலம் ஒரு சபையை நியமிக்க எண்ணியுள்ளதையும் அரசாங்கம் சமிக்ஞை செய்துள்ளது.

கொழும்பு குடிசைவாசிகள் மத்தியில் வளர்ச்சியடைந்துவரும் சீற்றத்துக்கு மத்தியில், அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்துப் “போராடுவதாக” யூ.என்.பி. கூறிக்கொள்கின்றது. அது கொழும்பில் குடியிருப்புப் பகுதிகளில் கூட்டங்களை நடத்தியுள்ளதோடு கொழும்பு மாநகர சபையை தூக்கியெறிவதை எதிர்த்து மனுவில் கையொப்பம் பெறும் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளது. அக்டோபர் 14 நடந்த கூட்டமொன்றில் பேசிய யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, “அரசாங்கம் மக்களை வெளியேற்றுவதை நிறுத்தாவிட்டால் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும், நாம் வீதிக்கு இறங்க வேண்டும்” என வாய்ச்சவாடலாக பிரகடனம் செய்தார்.

மனுவில் கையெழுத்துப் பெறும் பிரச்சாரமானது மாநகரசபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்ற யூ.என்.பி. எடுக்கும் வெளிப்படையான முயற்சியாகும். மனுவில் கையொப்பமிடுமாறு மக்களுக்கு அழைப்புவிடுத்த விக்கிரமசிங்க, “நாம் இந்த மனுவை தேர்தல் ஆணையாளருக்கு கொடுப்போம். நாம் எப்படியாவது கொழும்பு மாநாகர சபை தேர்தலை நடத்தி அதில் வெற்றிபெறுவோம். பின்னர் உங்களது வீடுகளையும் நிலங்களையும் நாம் பாதுகாப்போம்,” என வாக்குறுதியளித்தார். இவை அனைத்தும் உண்மையானாலும் கூட, கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை மீறி குடிசைகளை அகற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இராஜபக்ஷ அரசாங்கத்தால் முடியும்.

கொழும்பு நகர குடிசைகள் சம்பந்தமாக யூ.என்.பி. யின் சொந்த சாதனைகளைப் பற்றியும் விக்கிரமசிங்க ஒரு பொய் சித்திரத்தை வரைந்தார். “யூ.என்.பி. அரசாங்கம் 1977ல் பதவிக்கு வந்த போது, அங்கு குடிசைகளும் கூடாரங்களும் இருந்தன. அவற்றுக்கு மின்சாரம், குழாய் நீர் அல்லது மலசலகூட வசதிகள் இருக்கவில்லை. நாம் மக்களுக்கு நில உரித்துக்களையும் அனுமதிப்பத்திரங்களையும் நிலத்துக்கான பரம்பரை உரிமைகளையும் கொடுத்தோம். நாம் அவர்களுக்கு அடுக்குமாடிகளை கட்டினோம்,” என அவர் கூறினார்.

முன்னைய பதிவுகள் இந்தப் பொய்களை அம்பலப்படுத்துகின்றன. இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) போலவே, யூ.என்.பி. யும் எப்பொழுதும் பெரும் வர்த்தகர்களதும் மற்றும் கொழும்பில் சொத்துக்களை நிர்மானிப்பவர்களதும் நலன்களுக்காகவே செயற்பட்டுள்ளது. 1977ல் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், தனியார்மயமாக்கும் சந்தை-சார்பு நிகழ்ச்சித் திட்டத்தை உலகில் முதலில் அமுல்படுத்தத் தொடங்கிய அரசாங்கங்களில் ஒன்றாக உருவெடுத்த யூ.என்.பி., பொதுச் செலவுகளை வெட்டிக் குறைத்து, பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக திறந்துவிட்டது.

இந்த வேலைத் திட்டத்தின் ஒரு பாகமாக, கொழும்பு பிராந்தியத்தை ஒரு பொருளாதார மையமாக மாற்றுவதற்கு யூ.என்.பி. முயற்சித்தது. யூ.என்.பி. தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன, மத்திய கொழும்பை நிதி மற்றும் வர்த்தகத்துக்காக விட்டுக்கொடுக்கும் வகையில், புதிய நிர்வாக தலைநகரை –ஜயவர்தனபுர- கட்டியெழுப்பும் திட்டத்தை அறிவித்தார். 1977ல் இருந்து 1994 வரையான ஆட்சிக் காலத்தின் போது, யூ.என்.பி. அரசாங்கம் குடியிருப்பவர்களின் நிலையை அலட்சியம் செய்து, அடுத்தடுத்து குடிசைகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது.

* 1983ல், நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கமான சுகததாச விளையாட்டரங்கை கட்டுவதற்காக யூ.என்.பி. அரசாங்கம் கொழும்பில் பெரும் பிரதேசத்தை துப்புரவு செய்தது. 243 க்கும் அதிகமான குடும்பங்கள் அகற்றப்பட்டதோடு அவர்களது குடிசை வீடுகளும் அழிக்கப்பட்டன. முன்னர் அங்கு குடியிருந்தவர்கள் இப்போது ஸ்டேடியம் கிராமம் என்றழைக்கப்படும் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டார்கள். கால்நூற்றாண்டின் பின்னரும், இந்தப் பிரேதேசங்களுக்கு இன்னமும் பொருத்தமான ஒழுங்கைகள் மற்றும் வீதிகள் இல்லாததோடு அடிப்படை வசதிகளும் பற்றாக்குறையாக உள்ளன. எந்தவொரு குடியிருப்பாளருக்கும் சட்டப்பூர்வமான நில உரித்து கிடையாது.

* 1985ல் மட்டக்குளிய பிரதேசத்தில் ரெட்பான தோட்டத்தில் வாழ்ந்துவந்த சுமார் 100 குடும்பங்களை, பிரதேசத்தின் ஊடாக செல்லும் கல்வாய்க்கு மறுபக்கத்தில் உள்ள நிலங்களுக்கு மாறுமாறு அதிகாரிகள் கட்டளையிட்டனர். “நாங்கள் அங்கு பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்தோம். அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உடன், எங்களுக்கு 22 க்கு 22 அடி (சுமார் 40 சதுர மீட்டர்கள்) சிறிய நிலத்துண்டு வழங்கப்பட்டது. அவர்கள் அத்திவாரத்தை போட்டுவிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 15,000 ரூபா கொடுத்தார்கள். நாங்கள் இருந்த நிலங்களில் தொடர்மாடி வீடுகளை கட்டித்தரும் வரை இங்கே வாழ்க்கை நடத்துமாறு அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். ஆனால், அது வெறும் வாக்குறுதி மட்டுமே. எனவே எங்களது வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக இப்போது கூறப்படும் வாக்குறுதிகளை நாம் நம்பப் போவதில்லை,” என ஒரு பெண் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் தெரிவித்தார்.

* 1992க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலத்தில், வெள்ளவத்தையில் இருந்து கிருலப்பனை வரை உள்ள கால்வாய்களின் இரு பக்கமும் வாழ்ந்த சுமார் 15,000 குடும்பங்களை யூ.என்.பி. அரசாங்கம் வெளியேற்றியது. அவர்கள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்திடிய பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டதோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டது. முதலில் இடம்மாறத் தள்ளப்பட்ட குடும்பங்கள் பலகை வீடுகளில் வாழத் தள்ளப்பட்டன. சுமார் 150 குடும்பங்கள் இரு மலசல கூடங்களையும் ஒரு தண்ணீர் குழாயையும் பயன்படுத்தத் தள்ளப்பட்டன. அதன் பின்னரே, வீடுகளுக்கான அத்திவாரத்தை போட்ட அரசாங்கம், வீடுகளைக் கட்டுவதற்காக 15,000 முதல் 20,000 ரூபா வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கடனாகக் கொடுத்தது. தங்களால் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் பல குடும்பங்கள் அந்தக் கடனை வாங்கவில்லை.

பொருத்தமான சட்ட உரித்துக்களை வழங்கியுள்ளதாக யூ.என்.பி. கூறிக்கொள்வது முழுப் பொய். இப்பாகேவத்தயைச் சேர்ந்த ஒரு பெண் எமது நிருபர்களிடம் கூறியதாவது: “1982ல் யூ.என்.பி. தலைவரான [ரணசிங்க] பிரேமதாச, எங்களது வீடுகளுக்கான சட்ட உரித்து ஆவணம் என்று கூறி, எங்களுக்கு ஒரு அட்டையை விநியோகித்தார். ஆனால் அந்த அட்டைக்கு சட்டப் பெறுமதி கிடையாது. இப்போது புகையிரத திணைக்களம் இந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமானது என உரிமைகோருகின்றது. கடந்த ஆகஸ்டிலேயே நாம் வெளியேற வேண்டும் என அவர்கள் எமது கதவுகளில் அறிவித்தல்களை ஒட்டியுள்ளார்கள்.

“நாங்கள் அந்த அறிவித்தல்களை நிராகரித்துவிட்டோம். பின்னர் எங்களை வெளியேற்றக்கோரி திணைக்களம் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு சட்டத்தரணியை வைத்து, அவர் வழக்குக்கு வரும் ஒவ்வொரு தவனையின் போதும், அவருக்கு ஒவ்வொரு குடும்பமும் 1,500 ரூபா கொடுக்க நேர்ந்தது,” என அவர் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிமன்றில் நான்கு தடவைகள் விசாரிக்கப்பட்டன. ஆனால் இன்னமும் முடிவு வராததோடு, 14 குடும்பங்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.

வாழ்க்கைத் தரத்தின் மீதான யூ.என்.பி. யின் தாக்குதல்கள், அதன் ஜனநாயக-விரோத வழிமுறைகள் மற்றும் 1983ல் தொடங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் மத்தியில் 1994ல் யூ.என்.பி. ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டது. யூ.என்.பி. யின் கொள்கைகளை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு பதவிக்கு வந்த ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான ஆளும் கூட்டணி, யுத்தத்தை முன்னெடுத்ததோடு முன்னைய அரசாங்கத்தின் சந்தை-சார்பு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்தது. கொழும்பில் குடிசைகளை அகற்றும் தற்போதைய திட்டம், 1999ம் ஆண்டிலேயே பகிரங்கப்படுத்தப்பட்டது. ஆனால், மக்களின் எதிர்ப்புக்குப் பயந்து அலுமாரியில் அத்திட்டம் வைக்கப்பட்டிருந்தது.

2001 கடைப்பகுதியில் பொதுத் தேர்தலில் வென்ற யூ.என்.பி., 2004 பெப்பிரவரியில் ஸ்ரீ.ல.சு.க. தலைவர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் பதவி விலக்கப்படும் வரை ஆட்சியில் இருந்தது. தெற்காசியாவில் சிங்கப்பூரைப் போல் இலங்கையை மாற்றும் அதன் “இலங்கையை மீட்டெடுத்தல்” வேலைத் திட்டத்தின் ஒரு பாகமாக, விக்கிரமசிங்க அரசாங்கம் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுக்கொண்டு சமாதானப் பேச்சுக்களையும் தொடங்கியது. உலக வங்கியின் அங்கீகாரத்தைப் பெற்ற “இலங்கையை மீட்டல்” வேலைத்திட்டத்தின் கீழ், பொதுத் துறைக்கான மானியங்கள், நலன்புரி சேவைகள் மற்றும் தொழில்களும் வெட்டிக் குறைக்கப்பட்டதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தாராளமாக ஊக்குவிப்பு வழங்கப்பட்டது.

இராஜபக்ஷவின் வெளியேற்றும் திட்டத்தை எதிர்ப்பவராக இப்போது விக்கிரமசிங்க காட்டிக்கொண்டாலும், அதன் பிரதான மூலங்கள் அனைத்தையும் அவரது அரசாங்கத்தின் “இலங்கையை மீட்டெடுத்தல்” வேலைத்திட்டத்திலேயே காண வேண்டும். அந்த வேலைத் திட்டத்தின் நிறைவேற்று சாராம்சம், கொழும்பைச் சூழ தீவின் மேற்குப் பிராந்தியத்தில் ஒரு தலைநகர மையமொன்றை அபிவிருத்தி செய்யும் திட்டமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. “[இந்த மெகாபொலிஸின்] கொழும்பு பகுதியானது நிதி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் நிர்வாக மையமாக இருக்கும்,” என அது தெரிவித்துள்ளது.

குடிசைவாசிகளைப் பொறுத்தளவில், “கொழும்பு நகரில் சொந்த செலவில் சுயாதீனமாக மீள் வீடமைக்கும் திட்டத்தையே” யூ.என்.பி. யின் ஆவணம் வாக்குறுதியளித்துள்ளது. “உயர்ந்த அடுக்கு மாடி வீடுகளில் மீண்டும் வீடுகளைப் பெறுவதற்கு தமது சொத்துக்களையும் நிலத்துண்டுகளையும் சுயாதீனமாக கைமாற்றிக்கொள்ளுமாறு” குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். உண்மையில், குடியிருப்பாளர்கள் வெளியேற மறுத்தால் என்ன நடக்கும் என்பதை இந்த வேலைத் திட்டம் விளக்கவில்லை. மாற்று தங்குமிடங்கள் வழங்குவது பற்றிய அந்த வாக்குறுதிகள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் வாக்குறுதிகளைப் போலவே இதுவும் போலியானவையாகும்.

புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் “தேசிய பாதுகாப்புக்கு” அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி குமாரதுங்க 2004ல் யூ.என்.பி. அரசாங்கத்தை பதவிவிலக்கினார். 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து குறுகிய வெற்றி பெற்ற இராஜபக்ஷ, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக மீறி நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளினார். ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைப் பலியெடுத்த ஒரு குற்றவியல் முற்றுகை யுத்தத்தின் ஊடாக 2009 மே மாதம் புலிகளைத் தோற்கடித்த இராஜபக்ஷ, அதே வழிமுறைகளைப் பயன்படுத்தி “தேசத்தைக் கட்டியெழுப்பும்” “பொருளாதார யுத்தத்தை முன்னெடுக்கின்றார்.

அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துடன் அடிப்படை முரண்பாடுகள் எதையும் கொண்டிராத யூ.என்.பி., தனது சொந்த அரசியல் தேவைகளுக்காக, குடிசைகளை அகற்றுவதற்கான எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள பார்க்கின்றது. பெரும் வர்த்தகர்களின் இன்னுமொரு கட்சி மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் குடிசைவாசிகளால் இராஜபக்ஷவின் திட்டங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால், அவர்கள் தமது சொந்த சுயாதீன பலத்தில் நம்பிக்கை வைப்பதோடு தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். அரசாங்கத்தின் குடிசைகளை வெளியேற்றும் திட்டமானது, நீண்ட விளைவுகளை கொண்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தக் கோரும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள திட்டங்களின் பாகமாகும்.

சோசிலச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் உதவியுடன், கொழும்பு குடிசை வீடுகளில் வாழ்பவர்கள், வீட்டுரிமையை காப்பதற்கான நடவடிக்கை குழுவொன்றை ஸ்தாபித்துள்ளனர். அவர்களைப் பின்பற்றி தமது சொந்த இருப்பிடங்களில் நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறும் வீட்டுரிமையை காப்பதற்கான நடவடிக்கை குழுவுக்கு பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறும் சோ.ச.க. ஏனைய குடியிருப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது.

சகல வசதிகளுடன் கூடிய வீடுகளை அமைக்கும் உரிமைக்கான போராட்டம், இந்த இலாப முறைமைக்கே எதிரான போராட்டமாகும். அதற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம் தேவை. சகலருக்கும் பொருத்தமான தங்குமிடங்களை வழங்குவதற்கு பல பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்திற்காக இல்லாமல், பெரும்பான்மையான மக்களின் தேவைகளை இட்டு நிரப்பக் கூடியவாறு சமுதாயத்தை மறு ஒழுங்கு செய்வதற்காக, தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதன் பேரில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்களுடன் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டும். இந்த வேலைத் திட்டத்துக்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது.

கூகுளுக்கு சவால் விடும் பிளக்கோ


கூகுளுக்கு சவால் விட இன்னும் ஒரு தேடு பொறி கிளம்பி வந்துள்ளது. அதன் பெயர் பிளக்கோ. கூகுளுக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச் என்ஜின்கள் வந்துவிட்டன. இருந்தாலும் கூகுளை இதுவரை யாராலும் அசைக்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது புதிதாக பிளக்கோ என்ற புதிய தேடு பொறி வந்துள்ளது. நேற்று தனது பீட்டா தளத்தை பிளக்கோ தொடங்கியுள்ளது. இது குறித்து பிளக்கோ தலைமை செயலதிகாரி ரிச் ஸ்கிரென்டா கூறுகையில், எங்களது நிறுவனத்தை ஆரம்பித்தபோது, எங்குமே தேட முடியாதவற்றையும் கூட இங்கு தேடலாம் என்ற நிலையில் புதிய தேடு பொறி இருக்க வேண்டும் என முடிவு செய்து விட்டோம். அந்த அடிப்படையிலேயே புதிய தேடு பொறியினை வடிவமைத்துள்ளோம் என்றார்.
பிளக்கோவில் ஸ்லாஷ்டேக்ஸ் என்ற புதிய ஒரு அம்சம் உள்ளது. அதாவது, தேவையில்லாத தளங்களையெல்லாம் நாம் பெறாத வகையில் நமது தேடுதலை மேற்கெள்ள முடியும். நமக்கு எது தேவையோ அது மட்டுமே கிடைக்கும் வகையில் தேடுதலை மேற்கொள்ள இந்த ஸ்லாஷ்டேக் பயன்படுகிறது. குறிப்பாக ஸ்பேம் தளம் உள்ளிட்டவற்றை இது காட்டாது.
இந்த புதிய தேடு பொறி குறித்து சர்ச் என்ஜின்லேன்ட் இணையதளத்தின் தொழில்நுட்ப பிரதம ஆசிரியர்கள் டேனி சலிவன் கூறுகையில், கூகுளுக்கு போட்டியாக எத்தனையோ வந்துவிட்டன. அத்தனையும் போய் விட்டன. அந்த வகையில் இப்போது பிளக்கோ வந்துள்ளது. இதனால் கூகுள் அடிபடும் என நான் கூறமாட்டேன். கூகுளில் நிறைய தவறுகள் இருந்தாலும் கூட அது இன்னும் உறுதியாகவே உள்ளது என்றார் சலிவன்

கைவிரித்துவிட்டுத்தான் வருகிறார் ஒபாமா

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகை ஊடகங்களால் பெருமளவு பிரமாதப்படுத்தப்படுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசும் அவரது வருகைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தியாவுக்கு அவர் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கப்போவதாக ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் வெள்ளைமாளிகையிலிருந்து புறப்படுவதற்கு முன்பே ஒபாமா இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிவிட்டுத்தான் புறப்படுகிறார். ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்ற கோரிக் கை நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் ஒப்புக்காவது இந்தக் கோரிக்கையை ஆதரிப்ப தாக கூறிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் ஒபாமா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந் தியாவை இணைப்பது குறித்து அமெரிக்கா எந்த உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டார். அமெரிக்கா தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று கூறுபவர்கள் மனதில்கொள்ள வேண்டிய விஷயம் இது.

இடதுசாரி கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அணுசக்தி உடன்பாட்டில் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட்டது. இந்த உடன்பாடு என்பது இந்திய அரிசியையும், அமெரிக்க உமியையும் கலப்பது போன்றது. இதனால் அமெரிக்காவுக்குத்தான் லாபம் என்று இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து கூறிவந்துள்ளன. அணுக் கழிவு மறு உபயோக தொழில்நுட்பத்தை இந் தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் என்று கூறப் பட்டது. ஆனால் இதுகுறித்தும் எந்த உத்தரவாதத்தையும் வழங்க முடியாது என்று ஒபாமா கைவிரித்துவிட்டார். ஆனால் தமது வருகை இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என்று ஒபாமா கூறியுள்ளார். இந்தியாவின் எதிர்பார்ப்பு எதையும் நிறைவேற்றாமல் ஒத்துழைப்பு எப்படி அதிகரிக்கும்?

வெளிப்பணி (out sourcing) ஒப்படைப்பு விஷயத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்க முடியும், இந்திய நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தாம் கவலைகொள்ள முடியாது என்றும் ஒபாமா கூறியுள்ளார். இவ்வாறாக முக்கியமான மூன்று விஷயங்களில் இந்தியாவுக்கு சாதகமான எந்த பதிலையும் ஒபாமா அளிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் ஒபாமாவுடன் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க தொழிலதிபர்கள் படை பட்டாளத் தோடு திரண்டு வருகிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கவேண்டும், காப்பீடு, வங்கி உள்ளிட்ட நிதித்துறைகளில் அந்நிய மூலதனத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்களில் மன்மோகன் சிங் அரசுக்கு ஒபாமா நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தப்போவது உறுதி. இதனால் இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

அமெரிக்க நிறுவனங்களைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. இந்திய நிறுவனங்களின் பாதுகாப்பே முக்கியம் என்று சொல்லும் திராணி, தெம்பு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருக்கிறதா என்பதே இப்போதைய கேள்வி. ஒபாமாவின்
வருகையை இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பது எந்த அளவுக்கு நியாயம் என்பதற்கு அவரது இந்திய விரோத கருத்துக்களே சாட்சி.

மும்பை கோர்ட்டை நோட்டமிடும் ஷில்பா ஷெட்டி!

Shipa shetty`s new duty


தமிழில் குஷி படத்தில் இடம்பெற்ற மேக்கரீனா மேக்கரீனா... பாடலுக்கு ஆட்டம் போட்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, பட வாய்ப்புகள் இல்லாமல் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். அதுவும் கல்யாணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லையாம். இதனால் கிரிக்கெட்டில் கல்லா கட்ட முடிவு செய்தார் அம்மணி. இதனால் ஏலம் எடுத்த ஐ.பி.எல் அணியாவது ஏதாவது வருமானம் தரும் எனப் பார்த்தால் அதையும் தடை செய்துவிட்டார்கள். வீட்டில் சும்மா இருப்பதற்கு, ராஜஸ்தான் ராயல்‌‌ஸ் அணிக்காக நடக்கும் வழக்கில் என்ன நடக்கிறதென பார்த்து வரலாம் என்று அடிக்கடி மும்பை உயர் நீதிமன்றத்துக்குப் போய்வருகிறாராம். ஷில்பாவில் இப்போதைய மெயின் டியூட்டியே மும்பை கோர்ட்டை

ஜாதிவாரியாக வாக்காளர் புள்ளி விவரம் சேகரிப்பு: தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க.,

திருச்சி: "தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காக, தொகுதி வாரியாக ஜாதிரீதியிலான வாக்காளர் எவ்வளவு பேர் உள்ளனர்' என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை உளவுத்துறையினர் தீவிரமாக கணக்கெடுத்து வருகின்றனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் 2011ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்கவுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பது, கட்சியினரை உற்சாகமாக தேர்தல் பணிகளை செய்ய வைப்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆளும்கட்சியான தி.மு.க.,வும் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள வசதியாக பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என்பது குறித்து உளவுத்துறை போலீஸார் ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக வாக்காளர் பற்றிய புள்ளி விவரங்களை அவர்கள் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் வைத்து, தே.மு.தி.க., மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளை தனி அணியாகவும் வைத்து, கடந்த எம்.பி., தேர்தலில் சட்டசபைத் தொகுதிவாரியாக அவர்கள் பெற்ற ஓட்டுகள், ஓட்டு சதவீதம் ஆகியவற்றையும், சட்டசபைத் தொகுதியின் மொத்த ஓட்டுக்கள் (மறுவரையறுக்கப்பட்ட தொகுதி வாரியாக) ஆகியவற்றையும் உளவுத்துறை போலீஸார் கணக்கெடுத்து வருகின்றனர்.

"ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ஜாதிரீதியாக எவ்வளவு வாக்காளர் உள்ளனர்?' என்பதையும், அவர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பார்களா, தொகுதியில் ஆளுங்கட்சிக்கு சாதக, பாதக சூழ்நிலை என்ன என்ற புள்ளி விவரங்களையும் உளவுத்துறை போலீஸார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். இதன்மூலம் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சி தயராகிவிட்டது தெரிகிறது.இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்ட அரசு திட்டங்களில் எவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை? என்றும், அங்குள்ள தேவைப்படும் அவசர அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்தும் விவரங்கள் உளவுத்துறை போலீஸ் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.உளவுத்துறை போலீஸாரால் சேகரிக்கப்பட்டு வரும் புள்ளி விவரங்கள் இன்னும் இரண்டொரு வாரங்களில் முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படும் என்று உளவுத்துறை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுந்தர பாண்டியன் - மதுரை,இந்தியா
2010-11-06 07:13:32 IST
பேஷ்! பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு!!! இப்பிடியே எண்ணெய் ஊத்தி ஊத்தி தீயை வளர்த்து விடுங்கோ! ஜாதி அழியும்னு எனக்கு நம்பிக்கையில்லை. திரும்ப நம்ம பேர்ல ஜாதி பேரை சேர்க்க வேண்டியது ஒண்ணுதான் பாக்கி. கடந்த 30 வருடங்களாய் தமிழகம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கின்றது. நவீன டெக்னாலஜியின் உதவியோடு இன்னும் இருபது வருடங்களில் ஒரு 500 ஆண்டு பழமையை எட்டிவிடுவோம். ஜெய் ஹிந்த்!...
லொடுக்கு பாண்டி - coimbatore,இந்தியா
2010-11-06 06:27:16 IST
உளவு துறைக்கு வேறு வேலை இல்லையா ? இவர்களுக்கு வேலை, கட்சி வேலை பார்ப்பது தானா ? இதற்கு நீதி மன்றம் ஏன் கண்டனம் தெரிவிக்க மறுக்கிறது ? நீதி அரசர்கள் தங்கள் செஞ்சோற்று கடனை கழிக்கின்றனரா ? அது சரி, திமுக ஏன் இந்த கணக்கை எடுத்து சமயத்தை வீண் அடிக்கிறது ? அவர்களுடைய கொள்கையே வேறு, திறமையே வேறு !!! கொள்ளை அடித்த பணத்தை எடுத்து விட வேண்டியது தானே ? தில்லு முள்ளு எல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை ஆயிற்றே !!!...
ravishankar - chennai,இந்தியா
2010-11-06 06:16:54 IST
இதை விட ஒரு தரம் கெட்ட செயல், தரணியிலே எங்கும் காண முடியாது. இதே கரையான், மன்னிக்கவும்,கலைஞர், தனது உடன் பிறப்புகளை சாதியற்ற பெயர்களை உபயோகத்தில் கொண்டுவர வேண்டும் என்று சொன்னார். தேர்தல் என்றதும், கேவலம் தனது சுய நலத்திற்காக, நாட்டை ஜாதி என்கிற கேவலத்தால், பிளவு படுத்தி, தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே, அவருடைய எண்ணம். இதை நமது உடன்பிறப்புகள் 'ராஜதந்திரம்' என்று கூறுவர். , வெட்கம்....
திரு ஜெய் - கனடா,கனடா
2010-11-06 04:47:47 IST
இதற்கு பெயர் தான் ஜாதி வெறி. ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்காளர்கள் உள்ள ஜாதியில் வேட்பாளரை தேர்தெடுத்து, சட்ட சபைக்கு அனுப்பினால், அவர்கள் தங்கள் ஜாதி மக்களுக்கு தான் கடமைப்பட்டவர்கள். இவர்களை சட்டமன்ற உறுப்பினர் என்று கூறுவதை விட ஜாதி மன்ற உறுப்பினர் என்று அழைக்கலாம். இதைவிட ஜாதி வாரியாக சட்டமன்ற ஒதுக்கீட்டை செய்யலாம்....
anas - riyadh,சவுதி அரேபியா
2010-11-06 01:45:31 IST
எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன் தப்பா நினைக்காதீங்க. யாரும் சாதி பாத்து ஒட்டு போடாதீங்க. இந்த தேர்தலில் சாதி கட்சிகளை ஒழித்து நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல அனைவரும் நல்லவர்களை தேர்ந்து எடுத்தால் தான் தமிழ் நாடு இன்னும் முன்னேறும். அனஸ். ரியாத்.23...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-11-06 01:23:41 IST
ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தினாலும் உங்களால் ஆணியே புடுங்க முடியாது. வாசகர்களே, எனக்கு மஞ்சள் துண்டை ஒரு விஷயத்தில் மிகவும் பிடிக்கும், அவர் உலகத்திலே மோசமான ஆட்சியை கொடுத்தாலும், தன் குடும்பத்திற்கு ஒரு சிறந்த நிர்வாகத்தை கொடுக்கிறார், தன் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தகப்பன். இது போன்ற தகப்பனாரை உலகத்தில் எங்குமே காண முடியாது. எங்க அப்பா ஐம்பது வயதிலும் என்னால் உடம்புக்கு முடியவில்லை என்று வேலைக்கு சரியாக செல்லுவதில்லை, இது போல் எத்தனையோ குடும்பத்தில் குடித்துவிட்டு, காசை வீணடித்து பிள்ளைகளை படிக்கவைக்காமல் கஷ்டபடுத்தும் தகப்பன்கள் இருக்கும் இந்த காலத்தில் 86 வயதிலும் சும்மா கில்லி மாதிரி பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் காற்றாக பறந்து டெல்லிக்கு சென்று வெற்றிகரமாக பதவிகளை பெற்று திரும்ப வருகிறார், இதே வயதில் நம்முடைய அப்பாக்கள் இது போல சக்கர நாற்காலியில் நமக்காக செல்லுவார்களா? எத்தனை பேருக்கு கிடைக்கும் இது போன்ற தகப்பன். சொல்லுங்க மனதை தொட்டு? குடும்பத்திற்காக இரண்டு லட்சம் கோடி ரூபாய் சேர்த்துள்ளார், ஆனால் நாம் அப்பாவோ இந்த வயதில் எனக்கு முடியவில்லை, ஐம்பது வயதிற்கே வயதாகிவிட்டது என்று கூறி ஒய்வு எடுக்கிறார்கள், ஆனால் குடும்பத்தின் நலனுக்காக ஓய்வுக்கே ஒய்வு கொடுத்து இடைவிடாது கொள்ளையடித்து தன் மக்களை இன்பத்தில் வைத்திருக்கும் ஒரு தகப்பன், அந்த குடும்பத்திற்கு குபேரன் கொடுத்த வரப்ரசாதம் மஞ்ச துண்டு. அழகிரி, ஸ்டாலின், கனிமொழி மற்றும் அவர் குடும்ப உறுபினர்கள் எல்லாரும் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறார்கள், இப்படி குடும்பத்திற்காக இந்த வயதிலும் உழைக்கும் பிள்ளைகளுக்கு ஒரு அப்பா, மனைவிக்கு நல்ல கணவன், பேரன் பேத்திகளுக்கு ஒரு நல்ல தாத்தா..... மஞ்சள் துண்டு is the great father of his family......
ஜே ராம் - மதுரை,இந்தியா
2010-11-06 00:19:55 IST
என்னைக்குப்பா இந்த நிலை மாறும், எத்தனை ஆண்டுதான் ஜாதியை சொல்லி வோட்டு வாங்குவீர்கள்... ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு ஸ்கூல்-ல சொல்லிதர சொல்லிட்டு ஜாதியை சொல்லித்தான் எல்லாமே நடுக்குது.......

அதிமுகவும் இருப்பதை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் ஜெ': திருமா

திட்டக்குடி: சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக கடந்த 5 வருடங்களாகவே ஜெயலலிதா ''ஸ்ரீராம், ஸ்ரீராம்'' என சொல்வது போல் கூறிக் கொண்டிருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுகவும் இருப்பதை வெளிப்படுத்த, உறுதிப்படுத்த வேண்டிய நெருக்கடி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தான் பகுதிவாரி பிரச்சனைகளுக்கு அந்தந்த பகுதி மக்களை திரட்டுவதை விட்டு விட்டு, மாநாட்டுக்கு திரட்டுவது போல் கட்சியினரை திரட்டுவதும், இப்படி ஆர்ப்பாட்டத்தில் திரளும் கூட்டங்களை பார்த்து அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகிவிட்டதாகக் கூறுவதும் திட்டமிட்ட மாயையை உருவாக்கும் செயல்.

நாடு தழுவிய அளவில் ஒரு கோடிக்கு மேலான உறுப்பினர்களை கொண்டதாக கூறப்படும் அதிமுக சில லட்சம் தொண்டர்களை திரட்டி தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்பது வேடிக்கையாக உள்ளது.

கடந்த 5 வருடங்களாகவே சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று, ஜெயலலிதா ''ஸ்ரீராம், ஸ்ரீராம்'' என சொல்வது போல் சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்றார்.

விடுவிக்கடியாத அதியுயர் பாதுகாப்பு வலயபகுதி மக்களுக்கு மாற்றிடம் அல்லது நஷ்டஈடு – மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் விடயத்தில் விடுவிக்க  முடியுமான பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.   ஆனால் கட்டாயமாக இருக்கவேண்டிய சில அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன.   இதனால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்றுக்காணிகளையும் நஷ்டஈட்டையும் வழங்குவோம்.    சில இடங்களில் தற்போதைக்கு   அதியுயர்   பாதுகாப்பு    வலயங்களை   நீக்குவது   சாத்தியமில்லை  என்று   மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்   தம்மை குடியேற்றக் கோரி  யாழ். ரயில் நிலையத்தில்   தங்கியுள்ள சிங்கள மக்களின் நிலைமை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.     யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களின் நிலைமை மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் விவகாரம் ஆகியவை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.
அமைச்சர் இவ்விடயங்கள் குறித்து மேலும் கூறியதாவது, அதியுயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் விடுவிக்க முடியுமான காணிகளை விடுவித்துவருகின்றோம்.   அதாவது  பாதுகாப்பு  தரப்பினர்  வேறு இடங்களுக்கு செல்ல முடியுமான   நிலைமை காணப்படின் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற  முடியும்.
குறிப்பிட்டக் காணிகளை உரிய மக்களுக்கு வழங்க முடியும். ஆனால் உடனடியாக அனைத்தையும் செய்துவிட  முடியாது.  காரணம் சில இடங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கவேண்டியது அவசியம் என்று கருதப்படுகின்றது.     முக்கியமாக     பலாலியில்  அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குவது சாத்தியமற்றது.   காரணம் நாட்டின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விடயமாகும்.
எனினும் இதன் காரணமாக பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நட்டஈடும் வழங்கப்படும்.
மேலும்   திருகோணமலையில் ,   சம்பூர் பிரதேசம்  அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. அதனையும் நீக்குவது சாத்தியமற்ற விடயம். ஆனால் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள   மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.     இதேவேளை,   யாழ்ப்பாணத்தில்    தம்மை        குடியேற்றக்கோரி யாழ். ரயில் நிலையத்தில்     தங்கியுள்ள    சிங்கள மக்களின் நிலைமை தொடர்பில்    மீள்குடியேற்ற அமைச்சு என்ற வகையில் தீர்வு ஒன்றை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
முதலில் இந்த மக்கள் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் என்ன அடிப்படையில் வசித்தனர் என்பது குறித்தும் ஆராயவேண்டியுள்ளது. எனவே குறிப்பிட்ட மக்கள் யாழ்ப் பாணத்தில் அக்காலகட்டத்தில்   எவ்வாறு வசித்தனர்   என்பது தொடர்பான முழுமையான அறிக்கை   ஒன்றை மாவட்ட   அரசாங்க அதிபரிடம் கோரியுள்ளோம்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் அறிக்கை கிடைத்ததும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆராய முடியும். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஒன்றை வழங்குவது குறித்தே கவனம் செலுத்துகின்றோம்.   இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன்    ஜனாதிபதியுடனும் கலந்துரையாடவுள்ளோம்.    இவ்வாறு  முயற்சிகளை மேற்கொண்டு விவகாரத்துக்கு தீர்வு காண முயற்சிப்போம்.

பார்வை வழங்கக்கூடிய அதிநவீன ‘சிப்’

Mr Terho describes the object on the right as 'longer' and 'curving' before guessing it is a banana
பார்வை இழந்தவர்களுக்கு பார்வையை வழங்கக்கூடிய அதிநவீன ‘சிப்’ ஒன்றினை ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் படி கண்களின் பின்பகுதி விழித்திரையில் ‘சிப்’ ஒன்று பொருத்தப்படுகின்றது.
இதனூடு ஒளிகடத்தப்படும்போது அது இலத்திரனியல் தூண்டல்களாக மாற்றப்பட்டு பார்வை நரம்புகளுக்குச் செலுத்தப்படுகின்றது.
பார்வையற்றவர்களுக்கு இதன்மூலம் பொருளை இனங்கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது.
இந்தச் ‘சிப்’ பானது ‘ரெடினிடிஸ் பிக்மென்டோஸா’ எனப்படும் பரம்பரை கண்நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பெரிதும் பயனளிக்குமென நம்பப்படுகின்றது.
ஏ.ஜி. என்ற ஜேர்மனிய நிறுவனம், ‘ஒப்தல்மிக்’ ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இதனைத் தயாரித்துள்ளது.
இவ்வுபகரணத்தில் சுமார் 1500 ஒளி உணர் ‘சென்ஸர்’கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான காணொளிகளை இங்கு காணலாம்.

Bionic eye helps blind see

Doctors have shown the world’s first true bionic eye that could allow the blind to see
http://www.youtube.com/watch?v=i-bSULcCtN8&feature=player_embedded

தலைவர்,செயலாளரின் சுயநலப்போக்கினால் சாரதி தற்கொலை முயற்

மன்னார் தனியார் பஸ் சங்கத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரின் சுயநலப்போக்கினால் மன்னார் தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்று தற்போது ஆபத்தான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னார் தனியார் பஸ் சங்கத்தின் தலைவராக ரமேஸ் என்பவரும், செயலாளராக அன்ரன் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர். தலைவர் ரமேஸ் என்பவர் கடந்தகாலங்களில் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த நிலையில் தற்போது இரானுவ அதிகாரிகளை தன்வசம் வைத்து பலவிதமான அட்டுளியங்களைச் செய்து வருகின்றார். இந்திரன் என அழைக்கப்படும் நடராஐh ராNஐந்திரன் ( வயது-45) என்பவர் தனியார் போக்குவரத்துச்சங்கத்தில் அங்கம் வகித்து தனது சொந்தமான பஸ் ஒன்றை வன்னிப்பகுதியில் சேவையில் ஈடபடுத்தி வந்துள்ளார். ஒரு நாள் பஸ்சில் பயணிகள் இல்லாமையினால் இன்னும் ஒரு பஸ்ஸினை முந்திக்கொண்டு மன்னார் வந்துள்ளார். இவர் வேறு மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதினால் இதனைச்சாட்டாக வைத்துக்கொண்டு இவரது வாகன பயன அனுமதியினை ரத்துச்செய்துள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக மன்னார் கச்சேரியில் கணக்காளராக கடமையாற்றுபவரும் செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தனது பஸ்ஸிற்காண போக்குவரத்த அனுமதி நிறுத்தப்பட்டமையினால் தனது பஸ்ஸினை பிரிதொரு நபருக்கு இந்திரன் 6 இலட்சம் ருபாவிற்கு விற்று விட்டார். கடைசியில் தனது குடும்பத்திற்கு ஒரு வேளையாவது உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக பிரிதொரு நபரின் தனியார் பஸ் ஒன்றிற்கு சாரதியாக கடமையாற்றி வந்துள்ளார். சில தினங்கள் சென்ற நிலையில் மீண்டும் சங்கத்தலைவரும் செயலாளரும் சேர்ந்து இந்திரனை கண்டபடி திட்டி அந்த பஸ்ஸின் அனுமதி பத்திர உரிமமும் பரிக்கப்பட்டு பின் மன்னார் தனியார் போக்குவரத்ப் பகுதிக்குள் வரகூடாது என்றும் மீறி வந்தால் என்ன நடக்கும் என்று தெரியாது என சங்கத்தலைவர் ரமேஸ் இந்திரனை எச்சரித்துள்ளார்.

இதேவேளை இந்திரனால் 6 இலட்சம் ருபாவிற்கு விற்கப்பட்ட அவருடைய பஸ்ஸினை மீண்டும் 8 இலட்சம் ருபாவிற்கு மீளப்பெருமாறு சங்கத்தலைவர், செயலாளர் மற்றும் மன்னார் கச்சேரியில் தனியார் வாகனங்களுக்குப் பொறுப்பாக கடமையாற்றும் கச்சேரிக்கணக்காளரும் இணைந்து வற்புருத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த (29-10-2010) அன்று சகல பிரச்சினைகளையும் முன்வைத்து கடிதம் ஒன்றை தயாரித்து சகல தரப்பினருக்கும் வழங்கியுள்ளார். எனினும் நீதி கிடைக்கவில்லை. இறுதியாக (02-11-10) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடச்சென்றள்ளார். எனினும் மன்னார் பொலிஸார் வழக்கை பதிவு செய்யவே , விசாரணை செய்யவே இல்லை. இறுதியில் மனமுடைந்து போன இந்திரன் 02ம் திகதி மாலை 4 மணியளவில் பஸ்ஸினுள் நஞ்சருந்திய நிலையில் அயலவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு பின் மன்னார் பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது இவ்வாறு இருக்க தலைவர், செயலாளர்களின் 5 பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை தெரிய வருகின்றது. சங்கத்தில் பல குளறுபடிகள் இடம்பெற்று வருகின்றமையினால் தலைவர் செயலாளர் மாற்றப்படவுள்ளதாக சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

(மன்னார் நிருபர்)

ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களின் நிலமை தொடர்ந்தும் இடர்பாடுள்ளதாக இருப்பதை நாம் ஏறறுக் கொள்கிறோம்.

ஜேசன் கென்னி- The Globe and Mail
jason kennyகுடியுரிமை, குடியேற்றம், மற்றும் பல்லினக் கலாச்சாரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான கனடிய மத்திய அமைச்சர்,ஜேசன் கென்னி அவர்கள் திங்களன்று குளொபல் மெயில் ஆசிரியர் குழுவினரிடம் வருகை தந்திருந்தார். கீழே காணப்படுவது அவரது சந்திப்பின் போது நிகழ்ந்தவற்றின் தணிக்கை செய்யப்பட்ட ஒலி பெயர்ப்பாகும். அது வெளிப்படுத்துவது, அகதிக் கோரிக்கைகள் மற்றும் மனிதக் கடத்தல்கள் சம்பந்தமான அரசின் புதிய சட்டவாக்கத்தையும் ஸ்ரீலங்காவிலிருந்து வருகை தரும் அகதிகளின் சமீபத்திய நிலையினையும் .
பல தரப்பட்ட இந்த மனிதக் கடத்தல் நிர்வாகக் குழுக்கள் இந்த வியாபாரத்துக்காக ஒருவருக்கொருவர் போட்டியில் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்ரீலங்காவில் உள்நாட்டுப் போர் நடந்த போது அவர்கள் ஆயதக் கடத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் அங்கு எதிர்ப்பு நிலை முறியடிக்கப் பட்டபின்னர் அவர்கள் புதிய வியாபாரத் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சிக்கிறார்கள்.கடத்தல் செய்வதற்கு ஏற்ற ஒரு புதிய வியாபாரப் பண்டமாக மனிதர்களைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் ஆபத்தானதும் பொருத்தமான மிகவும் மோசமான பாதைகளினூடகவும் ஆபத்தான கப்பல்களில் அதுவும் நிராகரிக்கப்பட்ட, நிராகரிக்கப் படவேண்டிய நிலமையிலுள்ள கப்பல்களைப் பயன்படுத்தி கனடாவுக்கு கடத்தி வருவதற்காக மக்களிடமிருந்து சராசரியாக ஒருவருக்கு 50,000 டொலர்கள் வரையில் அறவிடுகிறார்கள்.
கண்ணியமானதும் நியாயமானதுமான கனடாவின் குடிவரவு முறைக்கான மக்களின் ஆதரவையும் முக்கியமாக எமது அகதிகள் பாதுகாப்பு முறைமைக்கும் இது தீவிரமான சவாலை ஏற்படுத்துகிறது. கடைசியாக வந்து சேர்ந்த கப்பலுடன் குடியேற்றத்துக்கான மக்களின் ஆதரவு குறிப்பாக அகதிகள் பாதுகாப்புக்கான பொதுமக்களின் ஆதரவில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இது நாங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்ட சில விடயங்களாகும். உதாரணத்துக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள எங்கள் பாதுகாப்பு பங்காளர்கள் நம்புவது, இந்தக் கடத்தல் நிர்வாகக் குழுக்களுக்கு கனடாவை இலக்குவைத்து நூற்றுக் கணக்கான பயணிகளை ஏற்றிய பெரிய உருக்கு கப்பல்கள் பலவற்றை ஒரு வருடத்துக்குள் வினியோகிக்கும் கணிப்பிடு தகுதி உள்ளதாக. இது ஒவ்வொரு மாதமும் அல்லது ஒன்று விட்ட ஒரு மாதத்துக்கு நிகழ்வதாக கற்பனை செய்தால்…..? அது அடிப்படையில் குடியேற்றம் மற்றும் அகதிகள் பாதுகாப்பில் உள்ள கனடாவின் நியாயமான அணுகுமுறையின் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கையினையும் ஆதரவினையும் கீழடக்கி விடும். கடத்தல் வலையமைப்பையும் அவர்களிடம் பணம் செலுத்தி கனடா வருவதற்கான கப்பல் பொதியினை வாங்கக் கூடிய தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களின் ஊக்கத்துக்கு தடை செய்வதுமே நாங்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய முக்கியமான பல காரணிகளில் ஒன்று.
பொதுமக்கள் இதில் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்துவதில் மிகவும் தெளிவாக உள்ளார்கள். அவர்களுக்கு வேண்டியது நியாயத்தையும் சட்ட விதிகளையும் மேற்கோளாகக் கொண்டு சிறப்பியல்பாக வகுக்கப்பட்ட ஒரு குடியேற்ற முறை. இப்போ நடப்பவை அந்த மேற்கோள்களை மீறிய செய்கையாகக் காண்கிறார்கள். இந்த உணர்வானது புதிய கனடியர்களிடத்து மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை எங்கள் ஆராய்ச்சிகள் தெளிவு படுத்துகின்றன. 60 விகிதமான கனடியர்கள் நாங்கள் இந்தப் படகுகளை எங்கள் நீர்பரப்புக்குள் வருவதைத் தடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்கள். அது குறிப்பாகச் சுட்டுவது படைகளைப் பயன்படுத்தி மனித உயிர்களை அபாயத்தில் விடுவது. நாங்கள் அந்த மாதிரியான அபாயச் செயல்களைச் செய்வதற்குத் தீர்மானிக்கவில்லை.
50விகிதத்துக்கும் மேற்பட்ட கனடியர்கள் வாக்கெடுப்பில் தெரிவித்திருப்பது இந்தக் கப்பலில் உள்ளவர்களை உண்மையான அகதிகளாகக் கருத முடியாமலிருப்பதால் அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று. இதற்குப் பதிலாக நாங்கள் சமப்படுத்தப்பட்ட ஒரு பொதியினை வெளியிடத் தீர்மானித்துள்ளோம். அது சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்ட விதிகளுக்கு அமைவானதாகவும், ஐக்கிய நாடுகளின் அகதிகளின் அமைப்பின்  முக்கிய கடப்பாடுகளுக்கு அமைவாகவும், சித்திரவதை மற்றும் சர்வதேச சட்டங்களின்படி வாழுமிடத்தில் அபாயத்தை எதிர்நோக்கும் நிலை அதாவது ஒருவர் தான் அச்சுறுத்தலுக்கும், உயிர் அபாயத்துக்கும், சித்திரவதைக்கும் உள்ளாகலாம் எனும் நியாயமான அச்சத்தைக் கொண்டிருந்தால் அவரை அவரது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாது என்பதாகும்;.நாங்கள் தயாரித்துள்ள பொதியும் இப்படியானவற்றைச் செய்யாது.
நான் நினைக்கிறேன் இந்தக் குடியேற்றக்காரர்கள் கனடா வருவதற்கு பலதரப்பட்ட நோக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். சிலர் முதல் தரமான பொருளாதாரக் குடியேற்றக்காரர்கள். சிலர் உண்மையான அகதிகள். சிலர் பொருளாதாரம் மற்றும் அரசியல்காரணங்கள் இரண்டும் கலந்தவர்கள். சூழ்நிலைக்கு அமைவாக நான் சொல்ல விரும்புவது, ஸ்ரீலங்காவில் பகை நிலமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டபின் இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழந்த சுமார் 100,000 ஸ்ரீலஙகா அகதிகள் தாமாக முன்வந்து ஸ்ரீலங்காவுக்குத் திரும்பியுள்ளார்கள். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் இந்தச் சுயமான நாடு திரும்பலுக்கு தெற்காசியாவிலுள்ள தற்காலிக அகதி நிலையைக் கொண்டிருந்த ஏராளமானவர்களுக்கு உதவிகள் புரிந்துள்ளது. கனடிய எல்லைகள் முகவர் சேவை செய்த ஒரு ஆய்விலிருந்து தெரிய வருவது, கனடாவில் அகதிக் கோரிக்கைகளில் வெற்றியடைந்த ஏராளமான தமிழர்கள் பின்னீடு தாங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவோம் எனக் குற்றச்சாட்டுக் கூறிய நாட்டுக்கு குறைந்தது சாதாரண வருகைக்காகவேனும் சென்று வந்துள்ளார்கள்.
ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களின் நிலை தொடர்ந்தும் இடர்பாடுள்ளதாக இருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகம், அவுஸ்திரேலியா மற்றும் பல சர்வதேசப் பங்காளர்களுடன்  இணைந்து ஒரு பிராந்திய பாதுகாப்பு அமைப்பின் சாத்தியங்களுக்காக வேலை செய்து வருகிறோம். அது தென்கிழக்கு ஆசியாவின் பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்றங்களுக்கான நல்ல சந்தர்ப்பங்களை அனுமதிக்கும். சிலர் நினைக்கிறார்கள் நாங்கள் எங்களுடைய எல்லா முட்டைகளையும் அந்தக் கூடைக்குள்ளேயே போட்டு விடுவோம் என்று, ஆனால் உண்மையில் அது நடுப்பகுதியிலிருந்து நீண்டகாலம் வரையான சிறந்த ஒரு தீர்வு. நாங்கள் பயணம் மாறி ஏறும் நாடுகளுடனும் அவர்களின் எல்லைப் பாதுகாப்பு முயற்சிகள் பற்றி வேலை செய்து வருகிறோம்.
 ஒரு கறுபபுச் சந்தை சேவையினை வெட்டிக் குறைக்க வேண்டுமாயின் வழங்கல் பகுதியை மட்டும் கண்காணித்தால் போதாது, இதை எதிர் நோக்கியுள்ள வாடிக்கையாளர்களின் ஊக்கத்தையும் தடை செய்யவேண்டும். இதனால்தான் எங்கள் பிரேரணையில் ஒரு பகுதியாக நாங்கள் குறிப்பிட்டிருப்பது இவ்வாறு அமர்த்தப்பட்ட மனிதக் கடத்தல் முயற்சிகள் மூலமாக வந்து சேர்பவர்களை ஐந்து வருடங்கள் வரை தற்காலிக நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று. விலைகளைக் குறைப்பது மூலம் வியாபார மாதிரிகளை மாற்ற முயல்கிறோம். நாங்கள் நம்புவது அதன் விலை அதன் பெறுமதியிலும் அதிகம் என்று. 50,000 டொலர்கள் என்பது மூன்றாவது உலக நாடொன்றிலிருந்து வருபவர்களுக்கு எண்ணி ஆராய்ந்து பார்க்க முடியாத மிக உயர்ந்த விலை. ஏனெனில் இவர்கள் கணக்குப் போடுவது அது தாங்கள் கனடாவுக்கு குடியேற மட்டுமல்லாது தங்களுடைய குடும்ப அங்கத்தவர்  பலருக்கும் அனுசரணை வழங்குவதற்கும் ஏற்ற திறமையாக.எங்களைப் பொறுத்த மட்டில் அநேகமாக இது ஒரு தனியான பாதிப்புள்ள பகுதியாக எங்கள் பொதியில் உள்ளதுடன் மற்றும் உங்கள் ஆசிரியத் தலையங்கத்தில் நிலைநிறுத்தப் படவேண்டிய செய்தியாகவும் உள்ளது. அடுத்த வருடம் நடைமுறைக்கு வரத்தக்கதாக நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் புதிய புகலிட முறையில் மக்களில் உண்மையான அகதிக் கோரிக்கையாளர்களுக்கு குடியேற்ற அகதிகள் சபையிடமிருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அதற்கான அந்தஸ்து வழங்கப்படும்.
எனவே உண்மையான அகதிகளுக்கு நாங்கள் வழங்கும் தடுப்புக் காவல் காலம் 8 முதல் 12 வாரங்கள் மட்டுமே. நாங்கள் நினைப்பது நியாயமான தனிப்பட்ட பாவனைக்கான தடுப்புக் காவல் கடத்தல்காரர்களால் உண்டாகும் தனித்தன்மையான சவால்களை குறிவைப்பதற்காக என்று.
தமிழ் புகலிடம் தேடியவர்களில் உயர்விகிதத்தினர் ஸ்ரீலங்காவுக்கு சென்று திரும்பியது, அகதிகளைத் தீர்மானிக்கும் விடயத்தில் உள்ள ஒரு பிரச்சினையை எடுத்துரைக்கிறதா?
வெளிப்படையாக குடியேற்ற அகதிகள் சபை சுதந்திரமான நீதி முறைச் சார்புடைய முகவர் நிலையம் அவர்களின் முடிவுகள் பற்றி என்னால் கருத்துக்கூற இயலாது.ஆனாலும் இதை ரசமான ஒரு குறிப்பாக நானும் கருதுகிறேன். எப்படியாயினும் மற்றைய மேற்கத்தைய ஜனநாயக நாடுகளில் சராசரியாக அனுமதிக்கப்படும் ஸ்ரீலங்கா புகலிடக் கோரிக்கையாளர்களின் விகிதம் 20 – 25 ஆகும் ஆனால் குடியேற்ற அகதிகள் சபை இந்த ஆண்டில் இதுவரை அனுமதித்துள்ளது 86 விகிதம் ஆகும்
பல வருடங்களாக கனடிய பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் கனடிய அரச காவல்துறை ஆகியவை தமிழ் புலிகளின் முன்னணிக் குழவில் ஆhவமுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒருவருக்கு தண்டனை வழங்கவும் வழி செய்திருந்தார்கள். இவைகள் விளக்கப்படக்கூடிய அச்சுறுத்தல்கள், குறுகிய மட்டத்தில் இவைகளின் தொடர்புகளை உங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே குற்றவியல் நீதி விசாரணைத் தீர்வு இவைகளைத் தடை செய்யுமா? சட்டம் இருப்பது நல்லது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த உங்களால் முடியுமா?
நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கனடிய அரச காவல்துறைக்கு 1500 பேரை மேலதிகமாகச் சேர்த்துள்ளோம். கனடிய எல்லைகள் சேவை முகவர் அமைப்புக்கு 800 பேர்கள் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். கனடிய பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவிற்குத் தேவையான வளங்களையும் அதிகரித்துக் கொடுத்துள்ளோம். அவை பிரதிபலிப்பது உண்மையில் தாய்லாந்து மற்றும் எல்லைப்புற நாடுகளில் உள்ள திறமையான பல சொத்துக்கள் எங்களிடமிருப்பதை. வழக்கப்படி குற்றம் சுமத்துவது கனடிய அரச காவல் துறையினரின் பொறுப்பாகும். மேலும் அவர்களின் வழியில் அவர்களுக்கான கால எல்லைப்படி விசாரணைகளை மேற்கொள்வதும் அவர்களின் பொறுப்பேயாகும். வெளிப்படையாக நாங்கள் அதில் தலையிடப் போவதில்லை. செயலாற்றுபவர்கள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) மீது குற்றச் சாட்டை மேற்கொள்வதைப் பொறுத்த மட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப் பட்ட பயங்கரவாத இயக்கமாக பட்டியல் படுத்தப்பட்டது, 2006ம் ஆண்டு நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்றபோது. எனக்குத் தெரிந்தவரை பாதுகாப்பு முகவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யும்படி லிபரல் அரசாங்கத்திடம் இரண்டு தடவைகள் சிபார்சு செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்ய மறுத்து விட்டார்கள். உள்நாட்டு அரசியல்தான் இதற்கு வெளிப்படையான காரணம். உங்களிடம் உண்மையாகச் சொல்வதானால் நான் நினைக்கிறேன் அதுதான் முன்னைய லிபரல் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய அவமானச் செயல்.
 எனவே முக்கியமாக நாலே வருடங்கள் மட்டுமே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர்களுக்கு புலிகள் மீது கவனம் செலுத்தக் கூடியதாக இருந்தது. நான் நினைக்கிறேன் மேலும் பல கைதுகள் நடைபெற்றதாக. பலர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டதாக நான் சொல்லவில்லை. பல கைதுகள் மொன்ரியலிலும் ரொரான்ரோவிலும் நடைபெற்றன. கனடியப் பக்கத்திலிருந்து ஆட்கடத்தும் நிர்வாகக் குழவில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் மற்றும் கடத்தப்பட்ட ஆட்கள் கனடா வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதற்கும் ரசகரமான ஒரு கதை இருக்கிறது. ஏனெனில் கடத்தப்படுபவர்கள் அவர்களுக்கான 50,000 டொலர்களில் அடையாளமாக 10 விகிதத்தையே முன்பணமாகச் செலுத்துகிறார்கள். மிகுதி கனடா வந்து சேர்ந்ததும் இந்த கடத்தல் நிர்வாகக் குழவிடம் கையளிப்பதாக ஒரு உடன்படிக்கைப் பத்திரம் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. அவுஸ்திரேலியர்களால் எனக்குச் சொல்லப்பட்டது உதாரணமாக அவர்கள் நம்புவது ஆட்களைக் குற்றச் செயல்களில் ஈடுபடும்படி வற்புறுத்தல் செய்து அந்தக் கடன்பாக்கி பகுதிகளாக அடைக்கப் படுகிறது.
மற்றைய அரசியல்கட்சிகளிடமிருந்து இம மசோதவைப் பற்றி எவ்வாறான பிரதிபலிப்புகள் உள்ளன?
அது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. இதுவரை வாக்கு வன்மையுடன் கூடிய பல எதிர்ப்புகள் இம் மசோதாவுக்கு ஏற்பட்டுள்ளன. ஆனால் அதற்காக அவர்கள் வாக்களிக்கப் போவதில்லை. நான் நினைக்கிறேன் மக்கள் எதைச் சார்ந்து நிற்கிறார்கள் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். நான் நினைக்கிறேன் இம்மாதிரிப் பிரச்சினைகளில் எதிர்கட்சியினர் ஒருவகை தானியங்கி எதிர்வினைத் தன்மையினைக் கொண்டிருக்கிறார்கள். அங்கு அவர்கள் குடியேற்றத் தொழிற்சாலைகளைப் பற்றிய விமர்சனங்களை எதிரொலிக்கிறார்கள். மேலும் இந்தப் பிரச்சினையில் கருத்திசைவான அணுகுமுறையினை எடுக்காமல் விசேடமாக குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள். நான் நினைக்கிறேன் உண்மையில் நாங்கள் கனடாவில் இந்தப் பிரச்சனை பற்றி சமச்சீரற்ற விவாதத்தைக் கொண்டிருக்கிறோம்.நடைமுறையில் நாங்கள் எந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களையும் தடுப்புக்காவலில் வைப்பதில்லை என்பதை பெரும்பாலான கனடியர்கள் உணர்வதிலலை. பெரும்பாலும் மற்றைய லிபரல் ஜனநாயகவாதிகள் எல்லோரையும் தடுத்து வைக்கிறார்கள்
கடநத வசந்த காலத்தின்போது, எதிர்கட்சியினருடன் இணைந்து பணியாற்றும் எங்கள் செயற்திறனின் அடிப்படையில் இந்தச் சட்டம் சீ – 11 ல் ஏற்படுத்தியுள்ள ஆக்கபூர்வமான திருத்தங்களை ஏற்றுக் கொள்வதற்காகவும், அத்தோடு புகலிட முறையில் நல்ல பயன் தரக் கூடிய மறுசீரமைப்பில் கருத்தொருமித்த ஏகமனதான தீர்மானத்தைப் பெறவும் வேண்டி நான் அவர்களுக்கு விளக்கமளித்தேன். எவ்வாறு இந்தச் சட்டவாக்கத்தை இன்னும் பயனுள்ளதாக்க முடியும், எப்படி கனடாவை இலக்கு வைக்கும் கடத்தல்களைத் தடுக்க முடியும் என்கிற ஏதாவது கருத்துக்களை அவர்கள் கொண்டிருப்பார்களேயானால்,அதைக் கூறியிருக்கலாம்…எங்கள் எல்லோருக்கும் காதுகள் இருக்கின்றனவே. எப்படியாயினும் அவர்கள் கொண்டு வரும் திருத்தங்கள் சட்டத்தின் கடுமையை தணியவைக்கும் தன்மையை கொண்டிருந்தால் எங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சர்வதேச மன்னிப்புச்சபையின் எதிர்ப்புகள் கருத்தியல்பானதாக இல்லை. அது அடிப்படையில் ஐ.நா.அகதிகளின் ஒப்பந்தத்தையும், வரைமுறையையும் கொண்டிருக்கிறது.சில வகையான அகதிகளை நீண்டகாலம் தடுத்து வைப்பது நீதியற்றது என அவர்கள் சொல்கிறார்கள். அடிப்படையில் எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. ஐ.நா ஒப்பந்தம் தடுப்புக் காவலைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.விசேடமாக அவர்களைத் தொடர்பு படுத்திப் பார்க்கும்போது அது கருத்தியல்பானது என நான் உணர்கிறேன். சர்வதேச மன்னிப்புச்சபை ஒப்பந்தத்தில் இல்லாத ஒன்றை கண்டு பிடித்திருக்கிறார்கள். உண்மை என்னவெனில் சர்வதேசச் சட்டம் அங்கீகரிப்பது, அரசாங்கங்கள் அடையாளம் காணப்படாத அகதிகளை தடுத்து வைக்கவும்,அவர்களின் குடியேற்றச் சட்டங்களை நடைமுறைப் படுத்தவும் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது எனபதையே. எங்களின் பிரேரணை சட்டத்துக்கு வெளியே உள்ளது என்றால் மற்றைய லிபரல் ஜனநாயக வாதிகளின் தடுப்புக் காவல் முறை சட்டப் பிரிவுகளுக்கு மிக அதிகமாக வெளியே உள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபை இந்தப் பிரச்சனையில் தாங்கள் எவவளவு தூரம் சித்தாந்த வாதிகளாக இருக்கிறார்கள் எனபதைப்பற்றிப் பேசுகிறார்கள். நானும் சர்வதேச மன்னிப்புச்சபையில் அங்கம் வகிப்பவனாக இருந்துள்ளேன். நான் ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையால் இயக்கப்படும் சங்கத்தில் இருந்தேன்.அப்போது அவர்கள் ஒரு மனித உரிமை அமைப்பாக இருந்தார்கள். உண்மையில் அப்போது அவர்களின் ஆணைகள் வெளிப்படுத்தியது உலகெங்கிலுமுள்ள சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பளிப்பது பற்றியதாக இருந.தது. நாங்கள் செக் குடியரசுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் விசா தடையை விதித்தபோது எங்களை விமர்சித்து அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். உண்மையில் நீங்கள் அவர்களின் வெளியீட்டை வாசித்தால் கொள்கை அடிப்படையில் அது விசாவுக்கு எதிரானதல்ல,
ஏனெனில் அவர்கள் காண்பது யாராவது பாதுகாப்புத் தேடி கனடா வருவதற்கு இயல்பான தடுப்புச் சுவராக விசா இருப்பதாக. கனடாவில் உள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் கிளை ஆகக் குறைந்தது எங்கள் மனித உரிமைக் கடப்பாடுகளையும் ஒழுங்கு படுத்தப்பட்ட குடியேற்ற முறைக்கும் இடையில் சமநிலைப்படுத்த முயலும்போது உண்மையில் மொத்தமாகக் துண்டிக்கப் பட்டதாக உள்ளது.
நீங்கள் அநேகமாக 5 வருடங்களுக்கு பின்னர் அகதிகள் விடயத்தை மறுபரிசீலனை செய்யப் போவதால் கப்பலில் வந்தவர்கள் அந்த மாதிரியான வழுக்கலான சரிவுக்குட்பட்டவர்கள், ஆனால் நாங்கள் எடுக்கப் போகும் ஒவ்வொரு அகதிகளுக்கும் மற்றும் அரச அனுசரணை வழங்கப் பட்டவர்களுக்கும் இதை நீங்கள் பயன்படுத்தினால் பலரின் விடயங்களில் அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே சில சந்தர்ப்பங்களில் உங்களால் முடிவுகளுக்கு ஏற்ப செயற்பட முடியாமல் போகும்,எனவே அவர்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து பிரஜைகள் ஆகி விடுவார்களில்லையா?
ஆம் அதுதான் அந்த 5 வருட மீள்நோக்கு செய்யக் கூடியது. 5வருடங்களின் பின் அவர்கள் திரும்பவும் குடியேற்ற அகதிகள் சபையிடம் போகலாம் அவர்களின் நாட்டு நிலமை கணிசமான அளவுக்கு முன்னேறியிருக்கா விட்டால் அவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் அத்துடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுசரணை வழங்கலாம். எனவே நான் நினைக்கிறேன். அது எங்களின் ஆர்வத்துக்கும் அவர்களின் நீண்டகால கண்ணியத்துக்கும் இடையிலான ஒரு சமநிலை,அவர்களுக்கு ஒரு உறுதியான தீர்வு வேண்டியிருந்தால் ஆனால் அது அவர்களுக்குச் சொல்வது  இந்த வழியில் கனடா வருவதை தெரிவு செய்யும் முன்னர் இரண்டு தடவை யோசிக்கவும், உங்களுக்கு குடும்ப ஒன்றிணைப்புடன் கூடிய நிரந்தர குடியுரிமை கிடைக்காது. ஆனால் சாத்தியம் நிச்சயமாக உள்ளது.அந்த மக்களுக்கு நாங்கள் உறுதியான தீர்வுடன் கூடிய எங்களது நீண்டகால பாதுகாப்புக்கான தேவைகளை வழங்குவோம். ஆனால் நாங்கள் இதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டியதில்லை. வேறு எந்த நாட்டையும் விட நபர் வாரியான அடிப்படையில் மீள் குடியமர்ந்த ஏராளமான அகதிகளை நாங்கள் அனுமதித்துள்ளோம். மேலும் எங்கள் அரசாங்கம் அதை அதிகரித்தும் வருகிறது. நேர்மையாகச் சொல்வதானால் இதற்காக ஒரு சர்வசன வாக்கெடுப்பு நிகழ்த்தினால் நிச்சயம் அது ஏற்றுக் கொள்ளப்படும்.
மசோதாவை நிறைவேற்ற சமரசம் செய்யக் கூடிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டால நீங்கள் அதை கவனிக்கத் தயாரா? நீங்கள் அவர்களின் விடயத்தை 5 வருடங்களின் பின் மீள்நோக்கு செய்வதாக இருந்தால்,அவர்கள் ஏற்கனவே குடும்ப வாழ்வை ஆரம்பித்து நல்ல பிரஜைகளாக மாறியிருந்தபோதும் அவர்களின் நாட்டு நிலமையில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தால்…
இந்த மாதிரி நிலமைகளின் கீழ் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விண்ணப்பம் செய்வதற்கான வழிகள் உள்ளன. இது எங்கள் முறைகளில் உள்ள மற்றோர் தாராளத்தன்மை..
மசோதா சட்டத்துக்கு பதிலளிக்க வேண்டிய ஒரு பிரச்சினை. எல்லைகளை வெளியே தள்ளுவதால் அது அதிகப்படியான பிரச்சனை அல்லது செயல்படு திட்டம் ஆகும். எங்கள் அரச முகவர்களுக்கு கனடிய எல்லைகளுக்கு அப்பால் பொதுவாக எந்த ஒரு அதிகாரமும் கிடையாது.
எனவே ஏராளமான ஆட்கள் இதைப்பார்த்து தலையைச் சொறிந்து கொள்கிறார்கள். ஒரு தீவிரமான உதாரணத்தைப் பயன்படுத்தினால்,வோல்ட் ஸ்ரீட் ஜேணலின் முன்புறத்தில் யேமனில் உள்ள பயங்பரவாதத் தலைவர்களை கொலை செய்வதற்காக அமெரிக்கா விசேட படைகளை அனுப்பியுள்ளது என்றிருக்கும் ஆனால் தென் கிழக்கு ஆசியாவில் அது நடக்கப் போவதில்லை. ஆனால் நாங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்.எப்போது நாங்கள் எல்லைகளை வெளியே தள்ளப் போகிறோம்? கடத்தல் வலையமைப்பினை தடை செய்வதற்காக நாங்கள் முயற்சி செய்கிறோமா? படகின் இயந்திரத்தை நிறுத்தப் போகிறோமா?
செயல்படும் முறைகளின் விபரங்கள் பற்றி என்னால் கருத்து எதுவும் கூறமுடியாது.நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். எங்கள் காவல்துறையினர் வெளிநாடுகளில் சர்வதேசச் சட்டங்களின்படியும் அந்த நாட்டுச் சட்டங்களின்படியும் கடமையாற்றுகிறார்கள்.மற்றும் ஏதாவது உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் இடம் பெற வேண்டுமாயின் அது உள்நாட்டு காவல்துறையினராலேயே மேற்கொள்ளப்படும். எனவே அது மெய்யாகவே ஒரு பங்காளித் தன்மையை உள்நாட்டு காவல்துறையினரினதும் புலனாய்வுத் துறையினரினதும் பங்களிப்புடன் கட்டியெழுப்புவதாகும். அடுத்தவர்களின் துணையுடன் அதை நிறுத்துவதை நீங்கள் காணலாம்.
நீங்கள் சொன்னீர்கள் இங்கு வரவிருக்கும் தமிழர்கள் மொத்தமாக 250 பேர்கள் இரண்டு தடவைகள் சுற்றி வளைக்கப் பட்டதாக. அதைப்பற்றி அறிவதற்கு முக்கியமாக உங்களுக்கு ஏதாவது வழிகள் உள்ளனவா?
இந்தக் கடத்தல் வலையமைப்பை பற்றிய தகவல்களை அறிவதற்கு திறமையான புலனாய்வாளர்கள் அங்கு உள்ளனர். அதைப்பற்றி விளக்கமாக எதுவும் கூற முடியாது. ஆனால் அவர்களுக்குத் தெரியவேண்டியது நாங்களும் எங்கள் பங்காளர்களும் அவர்களை நோக்கியபடி இருக்கிறோம் என்பதை.
(நன்றி : The Globe and Mail)
தமிழில். எஸ்.குமார்