திங்கள், 23 பிப்ரவரி, 2026

Low-Cost Energy Must Remain Sri Lanka’s National Priority (Video)

 lankaenews.com  : An Open Letter to the President: Low-Cost Energy Must Remain Sri Lanka’s National Priority (Video)
-On behalf of the LEADS Forum
Sri Lanka’s Energy Policy Stands at a Turning Point
Sri Lanka faces a critical moment in shaping its energy future. The newly drafted National Electricity Policy and Tariff Strategy raises serious concerns,  
as it appears to diverge from the objectives set out in the Electricity Act No. 36 of 2024 (as amended). 
The Act mandates that the electricity policy align with a comprehensive National Energy Policy; 
however, no such overarching framework currently exists. 

காங்கிரஸுக்கு என்ன செல்வாக்கு இருக்கு?

முன்னாள் பெண் போராளியின் வாக்குமூலம் .. கேடுகெட்ட புலிகள் இயக்கத்தின் வண்டவாளம்

 Arulanandam Arun :  இந்த ஒலிப்பதிவில் பேசும் பெண் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். 2008 ஆம் ஆண்டு இறுதி யுத்தக் காலத்தில், 
18 வயது நிரம்பாத சிறுமியாக இருந்த போது, 
புலிகளால் அவரது வீட்டிலிருந்து வெள்ளை வானில் பலவந்தமாக கடத்தப்பட்டு 
குழந்தைப் போராளியாக மாற்றப்பட்டார். கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், 
அவர் யுத்தத்தின் முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டார். 
பின்னர் அவர் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டார்.
அவர் என்னைத் தொடர்புகொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்தபோது, 
நான் பலமுறை கண்ணீர் வடித்தேன். அவர் அனுபவித்த வேதனை, 
அவர் எதிர்கொண்ட துயரம், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட குழந்தைப் பருவம், புலிகளால் நிகழ்த்தப்பட்ட அந்தக் கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
இவை அவரது சாட்சியத்தின் சில பகுதிகள்.

ஆளுக்கு 1 தொகுதியை விட்டுக்கொடுங்க.. தேமுதிகவுக்கு தரணும்.. கூட்டணிக்கு ஸ்டாலின் செக்.. திமுக மூவ்

 tamil.oneindia.com - Shyamsundar :  சென்னை: தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. 
புதிய கட்சிகளுக்கு இடமளிக்கவும், முக்கிய கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளைச் சமாளிக்கவும், கடந்த 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தலா ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்குமாறு திமுக தலைமை தனது கூட்டணிக் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த முக்கியமான அரசியல் நகர்வை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியின் நலன் கருதி திமுக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

Hardeep Puri's daughter's connection with Jeffrey Epstein?

வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கலில் நிலவும் வெறிச்சோடிய தவேக

tamil.oneindia.com சியாம் சுந்தர்  : இப்படி எல்லாம் நடக்குமுன்னு.. எதிர்பார்க்கலையே.. கடும் கோபத்தில் விஜய்.. ஸ்டன் ஆகி நிற்கும் தவெக
தமிழக அரசியலில் ஒரு புயலைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் அரசியல் படியிலேயே சறுக்கலைச் சந்தித்திருப்பது அக்கட்சியின் தலைமைக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
 "கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்" என்று மார்தட்டிய நிலையில், வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கலில் நிலவும் வெறிச்சோடிய நிலை விஜய்யை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது தேர்தல் பணிகளைத் தொடங்கிய நிலையில், 

27+ 1(ராஜ்யசபா).. திமுக- காங். ஒப்பந்தம் இன்று இரவு கையெழுத்து! DMK–Congress Seat Deal 27+1 to Be Signed Tonight

 minnambalam.com - Mathi :  2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு (DMK Congress) 27 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று பிப்ரவரி 22-ந் தேதி இரவு கையெழுத்தாகிறது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி கடந்த நவம்பர் 22-ந் தேதி ஐவர் குழுவை அறிவித்தது. தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், (கிரிஷ் சோடங்கர்), தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

அதானி மோடி காம்போ ! ரூ. 25,000 கோடி மறைக்கப்பட்ட முதலீடுகள் - உலகையே உலுக்கும் நிதி மோசடிகள்

May be pop art
 Su Po Agathiyalingam  : ரூ. 25,000 கோடி மறைக்கப்பட்ட முதலீடுகள் உலகையே உலுக்கும் அதானி குழும நிதி மோசடி
புதுதில்லி, பிப். 21 – 
உலகின் மூன்றாவது பெரிய பணக் காரரான - மோடியின் கூட்டுக் கள வாணி நண்பரான கௌதம் அதானி நடத்தும் வணிக சாம்ராஜ்யம் இன்று கடும் சட்ட நெருக்கடி யில் சிக்கியுள்ளது. இத்தாலியின் மிகப்பெரிய வங்கியின் உள்விசாரணையில் ₹25,000 கோடிக்கும் அதிகமான அதானி பங்குகள் ரகசிய மாக இரு மர்ம நபர்களிடம் இருப்பது அம்பலமாகி யுள்ளது. இது வெறும் பங்குச் சந்தை விவகாரம் அல்ல - இந்திய பொருளாதாரத்தையே உலுக்கிய ஊழல் இது.  
அதானி குழுமம் என்றால் என்ன?  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உருவாக்கிய மைதானத்தில்...

May be an image of one or more people and text that says "THE THELEADER EADER WELEADTHENATION WE LEAD THE NATION"

 Abdul Careem Muhammad Ismail  : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உருவாக்கிய மைதானத்தில்,  தாங்கள் செய்த காரியமென்றுபோல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு விளையாடிக்கொண்டே வெட்கமோ நாணமோ இல்லாமல் பெருமை பேசுகிறார்கள்.
 “இந்த மைதானத்தை நாங்கள்தான் உருவாக்கினோம்” என்று கூறுகிறார்கள். 
கிரிக்கெட் விளையாடுகிறார்கள். விளையாடவிடுகிறார்கள்.
அதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூட மாலிமா அரசை பாராட்டியிருப்பதாகும். 
உண்மையில் வேலை செய்தவர் யார் என்பதைத் தெரிந்திருந்தும், 
ஜார்ஜீவா இப்படிப்பட்ட கருத்தை ஏன் வெளியிட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். 

இலங்கை தோட்டத் தொழிலாளர் ஊதியப் போராட்டம்! தொண்டமான் - நடேச அய்யர்

May be an image of text
May be an image of text that says "Audio Text Effects Stickers Save"

 Badulla Senathiraja   :  நடேச அய்யர் மற்றும் தொண்டமான் – இலங்கை தோட்டத் தொழிலாளர் ஊதியப் போராட்டம்—
20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இலங்கையின் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் குறைந்த தினக்கூலியே பெற்றனர்.
 • 1922 ஆம் ஆண்டு ஆண்களுக்கு தினம் 26 சதம் பெண்களுக்கும் 26 சதம் வழங்கப்பட்டது.
 • 1928 ஆம் ஆண்டு ஆண்களுக்கு 54 சதம் பெண்களுக்கு 43 சதம்வழங்கப்பட்டது.
 • ஆனால் 1931 ஆம் ஆண்டு முதல் முறையாகக் கூலி குறைக்கப்பட்டது: ஆண்களுக்கு 49 சதம்பெண்களுக்கு 39 சதம்
 • 1933 ஆம் ஆண்டு மீண்டும் குறைக்கப்பட்டு ஆண்களுக்கு 46 சதம் பெண்களுக்கு 37 சென்ட் வழங்கப்பட்டது.
 • இந்தக் குறைப்பு 1939 ஜூன் 1 வரை தொடர்ந்தது.
இது தோட்டத் தொழிலாளர்களுக்கு மிகவும் துயரமான மற்றும் அநியாயமான நிலைமையாக இருந்தது.
சிலோன் இந்தியன் காங்கிரஸ் அமைப்பு
இந்த காலகட்டத்தில் Mahatma Gandhi இலங்கைக்கு விஜயம் செய்து பல இந்தியத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களில் ஒருவர் Savumiamoorthy Thondaman.
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், அவர்கள் இணைந்து 1939 ஆகஸ்ட் மாதத்தில் Ceylon Indian Congress அமைப்பை உருவாக்கினர்.
1940 ஆம் ஆண்டு இந்த அமைப்பிற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. தொண்டமான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்பளையில் 100,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.
போராட்டங்களும் அமைதியான எதிர்ப்பும் தொடர்ந்து, 1941 பிப்ரவரி 1 அன்று கூலி உயர்வு கிடைத்தது:
 • ஆண்களுக்கு தினம் 54 சதம்
 • பெண்களுக்கு தினம் 43 சதம்
இது தொழிலாளர் சங்கத்திற்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.