sellapuram valliyammai : நடிகன் அர்ஜுன் ..இந்தியாவை காப்பாற்ற உக்கிரமாக தன்னை வருத்தி சண்டையிட்டு படங்களில் நிரூபித்தவர்
தேசபக்திக்கு திரையில் இவரை விட்டால் ஆளில்லை என்று வீராவேசமாக வஜனமும் பேசிய தியாகசீலர்,
அவ்வப்போது ரொமான்ஸ் என்ற பெயரில் ஏராளமான பிட்டு காட்சிகளில் முகம் சுழிக்க வைத்து தமிழ்நாட்டில் சினிமா சவாரி செய்து (எக்ஸ்டரா கட்டிங் உட்பட) சம்பாதித்தார் நடிகர் அர்ஜுன் (பார்ப்பன சினிமா லாபி உபயம்)
காவேரி நீர் பிரச்சனை வரும்போது அப்படியே கர்நாடகத்துக்கு ஓர கையால் முட்டு வேற கொடுப்பார்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெரியார் எதிர்ப்பு திராவிட எதிர்ப்பு எல்லாவற்றிலும் மேலாக கலைஞர் வெறுப்பு திமுக காய்ச்சல் எல்லாவற்றையும் அரங்கேற்றினார் .(பல படங்கள் குறிப்பாக முதல்வன்)
இந்த அர்ஜுன் வீணை வித்வான் அப்துல் கலாம் கூறியதற்கு ஒப்ப ஒரு கனவும் கண்டார்.
தன்னை வாழவைத்த தமிழநாட்டுக்கு ஒரு பெரிய நூலகம் கட்டவேண்டும்,
மருத்துவ மனை கட்டவேண்டும் அல்லது கல்லூரி கட்டவேண்டும் என்றெல்லாம் அவர் சிரமப்பட்டு சிந்திக்கவே இல்லை.
அனுமாருக்கு கோயில் கட்டவேண்டும் என்று 17 ஆண்டுகள் முயன்று 17 கோடிகளை கொட்டி ஒரு கோயிலை கட்டி இருக்கிறார்.. தமிழ்நாடு மக்கள் கோயில்களை போதாது என்று இவனிடம் கோரிக்கைகள் விடுத்தார்களோ தெரியவில்லை.. இவனை என்ன செய்யலாம்?
சனி, 3 ஜூலை, 2021
அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில்… துர்கா ஸ்டாலின் தரிசனம்
கர்நாடகா புதிய அணை- நடுவர் மன்றம் மூலம் தீர்வு!
நக்கீரன் :நடுவர் மன்றத்தின் மூலம் கர்நாடகாவின் புதிய அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "02/07/2021 அன்று சில நாளேடுகளில் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்டியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. மார்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழகத்தில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும்.
2017- ல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்த போது கர்நாடக அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும், நிலநீரை செறிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டி.எம்.சி. கொள்ளளவுள்ள ஒரு அணையைக் கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2019- ல் இந்த அணை அநேகமாக கட்டிமுடித்துவிட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் இச்செயலை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட ஹூண்டாய் கார் நினைவு சின்னமாக ஹூண்டாய் மியூசியத்தில் வைக்கப்படும் ஹூண்டாய் நிறுவனம் அறிவிப்பு
Veerakumar - Oneindia Tamil : சென்னை அருகே ஹூண்டாய் நிறுவனத்துக்கு சமீபத்தில் விசிட் செய்தார் முதல்வர் முக ஸ்டாலின்.இந்தியாவில் தனது ஒரு கோடியாவது வாகனத்தை உற்பத்தி செய்து சாதித்துள்ளது
ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கசார் என்ற எஸ்யூவி வகை வாகனம் தற்போது சந்தைக்கு வருகிறது அல்லவா, அதுதான் ஒரு கோடியாவது வாகனம்.
எனவே அதன் மீது ஸ்டாலின் தனது கையெழுத்தை போட்டார். காரின் போனட் பகுதியில், வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு முக ஸ்டாலின் என்று தனது கையெழுத்திட்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி என்பதையும் எழுதி இருந்தார் ஸ்டாலின்.
முன்னதாக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஹூண்டாய் நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது மேட்டருக்கு வருவோம்.
முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து போட்ட வாகனம் விற்பனைக்கு வரும்போது
அதை எப்படியாவது தாங்கள் வாங்கி விட வேண்டும், நினைவு பரிசாக மாற்றிவிட வேண்டும் என்று பல்வேறு தொழில் அதிபர்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்தார்கள்.
இதயம் அறக்கட்டளை காப்பக குழந்தைகளை விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது
news 18
மதுரை: இதயம் அறக்கட்டளை காப்பகம் மூலம் குழந்தைகளை விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சிவக்குமார், மாதர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதயம் அறக்கட்டளை காப்பகம் மூலம் குழந்தைகள் விற்கப்பட்ட வழக்கில் இருவரும் தேடப்பட்டு வந்தனர். காப்பக நிர்வாகிகள், குழந்தைகளை விற்றவர்கள், வாங்கியவர்கள், இடைத்தரகர்கள் என ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதயம் அறக்கட்டளை உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மாதர்ஷா ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவர் இஸ்ரோ விஞ்ஞானியின் மகன் இறப்பு பின்னணி விபரங்கள் .. 11 பக்க கடிதம்
தினத்தந்தி :சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடம் வந்து, உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஆக்கி மைதானத்தில் நேற்று முன்தினம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் மாணவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடம் வந்து, உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த மாணவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (வயது24) என்பதும், சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் துறையில் ஆராய்ச்சி மாணவராகவும், திட்ட கவுரவ விரிவுரையாளராகவும் இருந்தது தெரியவந்தது.
இங்குள்ள தலைவர்களை தெலுங்கர்,கன்னடர்,துரோகி என வசை பாடி....
Loganayaki Lona : வி பு ப்ரச்சனையில் இயக்கத்தினர் முன்னெடுத்த விதம் தவறென பொதுவில் வாதாடினால் பெரியார் இயக்கத்திலிருந்து நீக்கப்படுகிறோம்.
இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பதிவிலேயே மிகத்தெளிவுடன் திமுக இணையதள அணியில் ஏற்கனவே செயல்படுகிறேன் என தெரிவித்தும் இன்னும் பல இயக்கங்களின் இணைய செயல்பாட்டிலும் உண்டு என அறிவித்தும் தான் சேர்ந்தேன்.
அத்தனை பேருக்கும் பொது நபரின் கருத்து எப்படியோ அப்படித்தான் என் சிந்தனை இருக்கும்.எனக்கு ஒரே கருத்தியலில் பயணிப்பவர்களை எத்தனை தூரத்தில் இயங்கினாலும் அடையாளம் தெரியும்.
திமுக ஆதரவாளர் தபெதிக வில் இருக்க முடியாது என்பது எத்தனை வன்மம்?இது தலைவர்கள் எடுக்கும் முடிவல்ல என்பதையும் நாங்கள் அறிவோம்.
இணைய தளம் கருத்து தளம் .இயக்கம் போராட்ட தளம்.இங்கு ஒரே கருத்து எப்படி எல்லார்க்கும் இருக்கும்?சித்த மருத்துவத்தை அலோபதி செவிலியம் படிச்சுட்டு அது ஏமாத்தும் செயல்னு தெரிந்து நீங்கள் சொன்னா ஆதரிக்கமுடியுமா?அப்போது விமர்சித்ததுக்கு ஏன் இயக்கத்தை விட்டு நீக்கல?அதுல முரண்பட்டு தானே பேசினேன்.
சசிகலா சுற்று பயணம் அறிவிப்பு! ஜூலை 5 ஆம் தேதிக்குப் பின்பு
மின்னம்பலம் :ஜூலை 5 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜூன் 1 ஆம் தேதி மின்னம்பலத்தில், தொண்டர்கள் சந்திப்புப் பயணம்; தயாராகும் சசிகலா என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை ஜூலை 2 ஆம் தேதி தன் வாயாலேயே உறுதிப்படுத்தியிருக்கிறார் சசிகலா.
அந்த செய்தியில், “விரைவில் ஜூலையில் அல்லது ஆகஸ்டு மாதம் தொண்டர்களை சந்திப்பதற்காக சசிகலா தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுகவின் பிரச்சினையை அதிமுகவே பார்த்துக்கொள்ளட்டும், அதில் வேறு தேசிய கட்சிகளின் தலையீடு இருக்கக் கூடாது என்பதில் சசிகலா தெளிவாக இருக்கிறார். எனவே அதற்கான அடிப்படை வேலைகள் நடந்து வருகின்றன.
சிவசங்கர் பாபா மாணவியோடு திருப்பதி சுற்றுலா சென்றாரா?
Shankar A : பாஜகவின் ஒரு மூத்த தலைவர் சொன்னது.
சிவசங்கர் பாபாவின் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவிக்கு அந்த தலைவர் லோக்கல் கார்டியன். ஒரு சனிக்கிழமை அவர் அந்த மாணவியை சந்திக்க சென்றபோது, மாணவி பாபாவோடு திருப்பதி சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டது.
லோக்கல் கார்டியன்கிட்ட சொல்லாம யாரை கேட்டுட்டு பொண்ணை திருப்பதி கூட்டிட்டு போனீங்க என்று, அவர் கத்தி கூப்பாடு போட்டதும்,
மறு நாள் பெண்ணை வரவழைத்து டி.சி குடுக்க சொல்லி விட்டார்கள்.
இது நடந்தது 2019-2010. அப்போது இவ்விவகாரம் பெரும் சிக்கலானதும், பல மாணவிகள் டி.சி வாங்கிக் கொண்டு வெளியேறினார்கள்.
அதிலும் பல பாதிக்கப்பட்ட மாணவிகள் இருந்தனர். அந்த ஆண்டு டி.சி வாங்கிய பட்டியலை எடுத்தாலே பல உண்மைகள் வெளி வரும்.
மதிமாறன் - ஜீவா சகாப்தனின் பேட்டி உள்நோக்கம் கொண்டதா?
Bilal Aliyar : அன்பின் ஜீவ சகாப்தம் அவர்களுக்கு, வணக்கம்
லிபர்ட்டி யூட்யூப் ஊடகம் மூலம் தமிழ்நாட்டில் நடக்கும் சமகால அரசியல், சமூக பிரச்சனைகளை குறித்து விவாதிக்கும், விமர்சிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள். உங்களுடைய ஊடக முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்.
கடந்த சில வாரங்களாக ஈழ அரசியலை மையப்படுத்தி அதில் திராவிடம் 2.0, அரக்கர்களின் கருத்துகளை, ஈழ அரசியலை தமிழ்நாட்டரசியலுக்குள் புகுத்தி குளிர்காய்பவர்களை விமர்சனத்துக்குள்ளாக்குவதையும் குறித்து அண்ணன் மதிமாறன் அவர்களிடம் விவாதம் நடத்திய நிகழ்ச்சி பார்த்தேன்.
உங்களுடைய ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்ட பல கேள்விகளுக்கு நேரடியாகவும்,
தர்க்க ரீதியாகாவும் வரலாற்றின் பக்கம் நின்று அண்ணன் மதிமாறன் பதிலுரைத்தார்.
ஆனால் அந்த பேட்டி முழுவதும் இன்றைய ஈழ அரசியலின் மீதான விமர்சனங்களை திமுகவின் கருத்தாக கட்டமைக்க நீங்கள் முயன்றது தெளிவாக இருந்தது.
ஒன்றிய அரசின் ஒளிப்பதிவு சட்டத் திருத்தம்! கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் பாசிச சட்டம்?
BBC : ச. ஆனந்தப்பிரியா - பிபிசி தமிழுக்காக : மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கார்த்திக் சுப்புராஜ் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
ஏன் இந்த சர்ச்சை, இதன் பின்னணி என்ன?
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 என்ன சொல்கிறது?
பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்கு மூலமாக மக்களை சென்றடைவதற்கு முன்பு அதற்கு ‘யு, யு/ஏ அல்லது ஏ’ சான்றிதழை தணிக்கை குழு வழங்கும்.
தற்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் கொண்டு வர இருக்கும் இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மூலம் மேற்கண்ட சான்றிதழ்களை வழங்கும் தணிக்கை குழு, நீதிமன்றம் இவை இரண்டையும் தாண்டி படங்கள் வெளிவருவதற்கு முன்பு, இந்த சட்டத்தின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிட முடியும். தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்களில் மாற்றங்கள் செய்யவும், தேவைப்பட்டால் அந்த சான்றிதழை ரத்து செய்யவும் மத்திய அரசுக்கு இதன் மூலம் அதிகாரம் கிடைக்கும்.
மயிலாப்பூர் க்ளப்... கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் பார் நடத்திவந்த அவாள் கும்பல் .. 10 ஆண்டாக செயல்பட்டு வந்த மதுபான பாருக்கு சீல்
dhinakaran :அமைச்சர் உத்தரவை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை
ரூ.3 கோடி வாடகை பாக்கியை முழுவதும் தரக்கோரி நோட்டீஸ்
சென்னை:
கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் மயிலாப்பூர்
கிளப்பில், கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த மதுபான பாருக்கு கோயில்
நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்தது. மேலும்ரூ.3 கோடி வாடகை பாக்கியை செலுத்த
வேண்டும் என்று கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மயிலாப்பூர்
கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 42 கிரவுண்ட் இடம், மயிலாப்பூர் லஸ்
கார்னரில் ‘தி மயிலாப்பூர் கிளப்’ நடத்த 1903 ஜனவரி 1ம் தேதி
அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் குத்தகை காலம் கடந்த 2000ம் ஆண்டு
முடிவடைந்தது. அதன்பிறகு, குத்தகைக்கு விட தடை விதிக்கப்பட்டது. எனவே,
மயிலாப்பூர் கிளப் நிர்வாகத்திடம் கோயில் நிர்வாகம் சந்தை நிலவரம்
அடிப்படையில் நிர்ணயித்து வாடகை வசூலித்து வந்தது.
அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி... தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 5-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள போதிலும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 5-7-2021 முதல் 12-7-2021 காலை 6 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
சீனாவின் மாவோ சிட்டுக்குருவிகளை கொல்ல உத்தரவிட்டது ஏன்? - ஒரு வரலாற்றுப் பாடம்
BBC : சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. புரட்சி செய்தபோதும், புரட்சியில் வென்று ஆட்சிக்கு வந்த பிறகும் பல மாறுபட்ட நடவடிக்கைகளை இந்தக் கட்சி முயற்சி செய்து பார்த்திருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் சிட்டுக்குருவிகளை அழிக்கும் திட்டம்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டங்களில் சில வெற்றிகரமாகவும், வேறு சில படிப்பினைகளை அளித்தவையாகவும், இன்னும் சில பேரழிவை ஏற்படுத்தியவையாகவும் அமைந்திருக்கின்றன. சிட்டுக்குருவிகளை அழிக்கும் திட்டம் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.
சீனாவில் மாவோ தலைமையிலான ஆட்சி நிறுவப்பட்டபோது, அந்நாட்டில் வறுமை தாண்டவமாடியது. சுமார் முப்பது ஆண்டுகளாக நீடித்திருந்த உள்நாட்டுப் போரால் நாடு சின்னாபின்னமாகியிருந்தது.
சண்டைகளை மட்டுமே பார்த்து வளர்ந்து ஒரு தலைமுறை இளைஞர்கள் கூட்டம் படிப்பறிவில்லாத பாமரர்களாக இருந்தது. பெரும் சண்டைகளிலேயே தங்களது இளமைப் பருவம் முழுவதையும் தொலைத்துவிட்ட மாவோவுக்கு ஆசுவாசிப்படுத்திக் கொள்ளக்கூட கால அவகாசம் இருக்கவில்லை. அதனால் அடுத்தடுத்து பல்வேறு திட்டங்கள் அவசரமாகச் செயல்படுத்தப்பட்டன.
இலங்கை செயற்கை உர பாவனையை தடை செய்துள்ளது! இது வெற்றி அளிக்குமா?
Farm to Table : செயற்கை உரம் / பசளை இல்லாத விவசாயம் சாத்தியமா ?
By வடகோவை வரதராஜன்
இலங்கை அசு தடாலடியாக செயற்கை உரம்./ பசளை பாவனையைத் தடைசெய்துள்ளது. இதன் சாதக பாதக்கங்கள் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்
மண்ணில் இறங்கிப் பயிர் செய்யாதவர்களும், எந்தவித விவசாய அறிவு இல்லாதவர்களும் இதுபற்றி தத்தமது பத்திரிகைகளான முகநூலில் எழுதிக் குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
மக்களைக் குழப்புகிற இந்த பதிவுகள் விவசாயிகளை பெரும் இக்கட்டுக்குள்ளாக்குகின்றன. முதலாவதாக இந்த செயற்கை பசளைகளை, விவசாய இரசாயனங்கள் என்ற பதம்கொண்டு அழைப்பதை நிறுத்த வேண்டும்.
செயற்கை பசளையான, பொட்டாசியம் குளோரைட்டு என்ற உப்பு விவசாய இராசயனம் என்றால், கறியுப்பாக நாம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு என்ற உப்பும் இராசயனமேதான்.
பொட்டாசியம் குளோரைடு, பொசுபேற்று, யூரியா ஆகியவற்றை, செயற்கை உரங்கள் அல்லது அசேதன உரங்கள் என்ற பெயரால் அழைப்போமாயின் அரைவாசிக் குழப்பங்கள் தீர்ந்துவிடும்.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள், களைகொல்லிகள் என்பனவே அபயாகரமான விவசாய இராசயனம்கள் ஆகும்.
வெள்ளி, 2 ஜூலை, 2021
ஒன்றிய அரசு அம்பானிகளுக்கு வரி தள்ளுபடி கொடுத்து வாழ வைத்திருக்கிறார்கள்
Karthikeyan Fastura :இன்று மதுரையில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டிவிட்டது.
குருடாயில் 130 டாலரை தொடும்போது மன்மோகன் சிங் ஆட்சியில் வரியைக் குறைத்துக் கொண்டே வந்தார். காரணம் அவர் ஒரு பொருளாதார அறிஞர். பொருளாதார சமநிலை பற்றி புரிந்தவர்.
Debt instrumentsகளில் முதலீடு செய்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை வேகமாக திரும்ப எடுத்து வருகிறார்கள்.
கடன் பத்திரங்கள் என்பவை நீண்டகால பொருளாதார கணக்கில் கருதப்பட்டு உறுதியான வருமானத்தை கொடுப்பவை.
ரிஸ்க்கு மிக மிக குறைவானது. Debt instruments குறைவதற்கு முக்கிய காரணம் பணம் மதிப்பு குறைவது அதற்கு காரணமாக விலைவாசி உயர்வு இருப்பது அதற்கு காரணமாக பெட்ரோல் விலையில் சமரசம் இல்லாமல் ஏற்றிக் கொண்டே செல்வது.
சென்னையில் 4 புதிய பூங்காக்கள்: அமைச்சர் கே.என்.நேரு
கலைஞர் செய்திகள் :சென்னையில் ரூ.2,500 கோடி மதிப்பில் 4 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள தொல்காப்பியர் சுற்றுச்சூழல் பூங்காவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(ஜூலை 2)ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “ நகர மக்களும் இயற்கை சூழலை காண வேண்டும் என்பதற்காக கடந்த திமுக ஆட்சியில் தொல்காப்பியர் பூங்கா 100 கோடி நிதியில் ஆரம்பிக்கப்பட்டு, 69 கோடி செலவில் முடிக்கப்பட்டது. மீதமுள்ள நிதி பராமரிப்பு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. பத்தாண்டு காலமாக இந்த பூங்கா பராமரிக்கப்படாததால், பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது.
அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு!
குறிப்பாக தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. அந்தவகையில், தொழிற்சாலைகள் மற்றும் சிறு - குறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எம்ஜியாரின் உளவாளியாக ஜெயலலிதா வீட்டில் குடிபுகுந்த சசிகலா .. வலம்புரி ஜான் வரலாறு ..
வலம்புரி ஜான் Book |
minnambalam :கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் தொண்டர்களுடன் பேசி அந்த உரையாடலைப் பதிவு செய்து ஆடியோ அரசியல் என்ற புதிய உத்தியைத் தொடங்கியிருக்கிறார் சசிகலா. தினம் தினம் ஊடகங்களில் பேட்டி, வீடியோ வெளியீடு என்றிருந்தால் கூட சலித்துப் போய்விடும். ஆனால் ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு தொண்டர்களிடம் பேசி அதை, சசிகலாவின் தரப்பில் இருந்தே பதிவு செய்கிறார்கள்.(உரையாடலில் சசிகலாவின் குரல் எதிர்முனைத் தொண்டரின் குரலை விட தெளிவாகக் கேட்கிறது). இதை எதிர்பாராத எடப்பாடி பழனிசாமி, ‘ஆயிரம் பேரோடு பேசினாலும் பரவாயில்லை சசிகலாவால் ஒன்றும் செய்ய முடியாது’ என்கிறார். ஆனாலும் உள்ளுக்குள் சசிகலா என்ட்ரி பற்றி சீரியசாக விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இந்த நிலையில்தான் ஜூலை 1 ஆம் தேதி சசிகலா தரப்பு வெளியிட்ட ஆடியோக்களில் தூத்துக்குடி ஹென்றிதாஸ் என்ற பழைய அதிமுக தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
கனடாவில் 215 பூர்வகுடி சிறுவர்களின் புதைக்கப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன
canadamirror.con :கனடாவில் பூர்வகுடி 4,100 சிறுவர், சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் புதிதாக ஒரு கூட்டத்தினர் குடிபுகும்போது, அங்கிருக்கும் பூர்வக்குடியினர் ஓரங்கட்டப்படுவார்கள்.
அப்படியாக பள்ளிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பூர்வக்குடியின பிள்ளைகள் காணாமல் போவதும், உயிரிழப்பதும் எத்தனை நாடுகளில் நிகழ்கிறதோ தெரியாது. ஆனால், கனடாவின் கருப்பு வரலாற்றில் அப்படி நிகழ்ந்துள்ளது.
Truth and Reconciliation Commission of Canada (TRC) என்னும் அமைப்பு, இப்படி மாயமான மற்றும் உயிரிழந்த 4,100 பேரை இதுவரை அடையாளம் கண்டுள்ளது. ஆனால், எத்தனைபேர் இதுவரை அப்படி உயிரிழந்தார்கள் என்ற உண்மையான எண்ணிக்கை இதுவரை யாருக்கும் தெரியாது. உண்டுறை பள்ளிகள் எனப்படும் residential schools எனப்படும் பள்ளிகளில், இதுபோல் எக்கச்சக்கமான பூர்வக்குடியின மாணவ மாணவியர், பள்ளிக்குச் சென்றவர்கள் வீடுகளுக்குத் திரும்பவேயில்லை.
ஜெயாவும் சசியும் லவட்டிய கோடநாடு சொத்து இனி சசிகலாவுக்கே சொந்தம்?
அப்போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்த நேரத்தில், 1,900 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக, புதிதாக பல சொத்துக்களை சசிகலா வாங்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக, சசிகலாவுக்கு வருமான வரித் துறையால் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, 2017 டிச., 11 அன்று சசிகலாவின் ஆடிட்டர் சார்பில் பதில் அளித்த போது, ஓர் உண்மை வெளிப்பட்டது.
அந்த சொத்துக்களை வாங்கியதற்கான தொகை முழுதும், சசிகலாவின் சொத்துக்கள் மற்றும் அவருடைய நிறுவனங்களிலிருந்து கிடைத்த வருவாய் தான் என்று கூறியிருந்த அவர்,
ஜாக்கியை மீண்டும் போட்டு தாக்கிய பி டி ஆர் .. மண்புழு ஒரு இந்து ...
கடந்த 2015ம் ஆண்டு, சத்குரு டுவிட்டரில், 'ஹிந்து என்பது புவியியல் அடையாளம். ஒரு யானை ஆப்ரிக்காவில் இருந்தால், அது ஆப்ரிக்கன். இந்த நிலத்தில் (இந்தியா) ஒரு மண் புழு இருந்தால், அது ஹிந்து' என, பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை தற்போது பகிர்ந்து, பதிலளித்துள்ள அமைச்சர் தியாகராஜன், 'ஆப்ரிக்கா ஒரு கண்டம், இந்தியா ஒரு நாடு, குடியரசு (நிலம் என்பது இங்கு இந்தியாவைக் குறிக்கிறது).
நீட் தேர்வில் பாஜகவின் வன்மத்தை அம்பலப்படுத்த அனைத்துக்கட்சிகள் முடிவு....
தீக்கதிர் - சின்னையா காசி : சென்னை: நீட்தேர்வில் பாஜகவின் வன் மத்தை மக்களிடம் அம்பலப்படுத்த சென்னையில் திராவிடர் கழகம் அழைப்பின் பேரில் நடைபெற்ற அனைத்துக்கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது,
கிராமப்புற மாணவர்களை கரை சேர்க்க ஒரே வழி நீட் ரத்து. அதனால்தான், திமுக அரசு அதை ஒரு கொள்கை முடிவாக ஆளுநர் உரையிலும் அறிவித்துள்ளது.
மக்களின் தீர்ப்பே ஜனநாயகத்தில் இறுதியானது என்பதால், நீட் தேர்வின் பாதகம், சாதகம் குறித்தும் ஆய்வு செய்ய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத் துள்ளது.
இந்த குழு தனது அறிக் கையை தராத நிலையில் பாஜகவின் சார்பில் அப்படி ஒரு குழு அமைத்ததே சட்டப்படி செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உடல் எரிந்த நிலையில் மீட்பு.. ஆராய்ச்சி மாணவர்
மெட்ராஸ் ஐஐடி என்று அழைக்கப்படும் சென்னை ஐஐடி உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஆகும். இந்தியாவின் தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ள நிறுவனமும் கூட. ஆனால் இங்கு இன்று நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவரான கொச்சியைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவர் எரித்து கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் உள்ளது
அவரது உடலை கைப்பற்றிய கோட்டூர்புரம் போலீசார் விசாரணை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
எம்.ஜி.ஆர். என்னிடம் கருத்துகளைக் கேட்பார்"- ஆடியோவில் சசிகலா வாக்குமூலம்
நக்கீரன் செய்திப்பிரிவு : அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த நிலையில், தினந்தோறும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அவர் தொலைபேசி மூலம் பேசி வருகிறார். இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சசிகலா பேசும் ஆடியோவும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அந்த வகையில் அ.தி.மு.க. நிர்வாகியுடன் சசிகலா பேசும் மேலும் ஒரு ஆடியோ இன்று (01/07/2021) வெளியாகியுள்ளது.
அதில், "எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்திலும் நான் இருந்திருக்கிறேன். இது யாருக்கும் தெரியாது. கட்சித் தொடர்பாக நிறையக் கருத்துகளை என்னிடம் எம்.ஜி.ஆர். கேட்பார். கட்சியில் இது இப்படி இருந்தால் சரியாக இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் நான் கருத்து கூறியது உண்டு. எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி எப்போதுமே ஒற்றுமையுடனே இருக்க வேண்டும்; பிரிந்திருக்கக்கூடாது" என்றார்.
ஆனியும், விசாமயவும் இந்தியா இல்லை உலக பெண்களுக்கான ஒரு எடுத்துக்காட்டு.
இங்கு 'சராசரி' என்ற வார்த்தையை 'குடும்பம்' என்னும் கட்டமைப்புக்குள் சுழலும் பெண்கள் என்பதாக எடுத்து கொள்ளலாம்.
இதில் பெண்ணிய சிந்தனை கொண்ட பெண்கள், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள், career objective பெண்களை விட்டுவிடலாம்.
இந்த இரண்டு வகை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக மிக சமீபத்திய உதாரணங்களாக கேரளா பெண்களை எடுத்து கொள்ளலாம். விசாமையா மற்றும் Aanie.
எங்கள் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளரத்திறுக்கிறோம் என்று சொல்லும் பெற்றோர்களுக்கு பிறந்தவள் விசாமையா. அந்த சுதந்திரம் எது வரை என்றால் தன் துணையை, matrimonial ல் தன் சாதியை சேர்ந்தவனாக பார்த்து தேர்ந்தெடுத்து கொள்வது வரை.
சீரும் சிறப்புமாக திருமணம் நடந்த பின்னர், கணவன் கொடுமைப்படுத்த விசமயவும் அதை மறைக்காமல் தன் குடும்பத்தாருக்கு தெரிவித்திருக்கிறார். மகள் 'வாழாவெட்டியாய்'! வீட்டில் இருப்பதை விட அடிவாங்கி கொண்டு கணவனுடன் இருப்பதே மேல் என்று நினைத்த பெற்றோர்களை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
வியாழன், 1 ஜூலை, 2021
பெரியார் இயக்கங்களும் அரக்கர்களும் .. தொடர் மோதல்கள் ..
Ashok R : பல மாதங்கள் கழித்து நேற்று இரவு சுபவீ அய்யாவிடம் தொலைபேசியில் பேசினேன். மனம்விட்டு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன்.
பலகால இறுக்கம் விலகியதால் நிம்மதியாக உணர்கிறேன்.
அதேநேரம் அவரது நேற்றைய உரையில் எனக்கு உடன்பாடில்லாத விஷயங்களையும், தபெதிகவில் இருந்துகொண்டு மே17க்கு ஊழியம் செய்யும் 'பொய் பிரியர்' ஒருவர் எப்படி விஷயங்களைத் திரித்துப் பகிர்கிறார் என்பதையும் சொன்னேன். அனைத்தையும், அது மாற்றுக்கருத்தாக இருந்தாலும் விரிவாகப் பதிவு செய்யுங்கள் என்றார். ஏற்கனவே மிக விரிவாக லிபர்ட்டி சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறேன். எனினும்,
1) Space, Clubhouseல் சுபவீ, கொளத்தூர் மணி, ஆசிரியர் போன்ற தலைவர்களை அரக்கர்கள் மரியாதைக் குறைவாகப் பேசினர் என்பது மாபெரும் அவதூறு. மிகபெரிய பொய். சாக்கடையில் இருந்து நாற்றம் வருவதைப் போல தபெதிக/மே17காரர் ஒருவரிடம் இருந்து இப்படியான பொய்கள் முதல் நாளில் இருந்தே உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்றன. குறைந்தபட்சம் தலைவர்கள் இதையெல்லாம் fact check செய்யவேண்டும்.
வீணாகும் மழைநீரை சேமிக்க பாலாறு இணைப்பு திட்டம்; 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்
கலைஞர் செய்திகள் : மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக வரும் ஐந்து அல்லது ஆறாம் தேதி மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேசி இருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வீணாகும் மழைநீரை சேமிக்க பாலாறு இணைப்பு திட்டம்; 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்
வேலூரில் இன்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை சார்பில் ,வேலூர் மாவட்ட வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் தேவராஜ் கார்த்திகேயன் ஈஸ்வரப்பன். நல்லதம்பி. வில்வநாதன் அம்லு. கிரி . ஜோதி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் e-bike தொழிற்சாலை: 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் - அமைச்சர் தகவல்!
மின்னம்பலம் : உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் கிருஷ்ணகிரியில் அமையவுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஜூலை 1) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வருகிறது. மின்சார வாகனங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய, தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019 ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 2030 வரை மாநில ஜிஎஸ்டி வரி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும். இத்தகைய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் வாங்கும்போது 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கு, 100 சதவீதம் மின்சார வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கு நீரிணையை முதல் முதலாக நீந்தி கடந்த நவரத்தினசாமி 1954 மார்ச்
Arun Ambalavanar : முருகுப்பிள்ளை நவரத்தினசாமி ( பெப்ரவரி 16, 1909 - சூன் 30, 1969) பாக்குநீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர்.
தனது 44ஆவது அகவையில் 1954 மார்ச் 26 இல் இவர் இச்சாதனையைப் புரிந்தார்.
இவர் ஆழிக்குமரன் ஆனந்தனின் மாமனார் ஆவார்.
பாடசாலை கல்வி முடிந்ததும் விவசாயத் திணைக்களத்தில் விவசாய விவரித்தல் (Expansion) உத்தியோக்கராகக் கடமையை ஏற்றுக் கொண்டு; அந்தத் துறையிலும் தனது அர்ப்பணிப்புடனான சேவையை ஆற்றிவந்தார்.
விவசாய விவரித்தல் உத்தியோகத்தராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த பொழுது அவர் பெற்றகள அனுபவங்களும், ஆய்வு ஊக்கமும் புதிய படைப்பாற்றல் ஒன்றுக்கான எண்ணக் கருவை வளர்த்து வந்தது. அவரது அயராத முயற்சியினால், விதை தூவும் இயந்திரத்தைக் கண்டு பிடித்து அரசின் பாராட்டுக்கனையும் பெற்றுக் கொண்டதுடன்,அதன் உரிமத்தையும் பெற்றுக் கொண்டார். விவசாயத்துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும், அறிவார்ந்த ஆற்றலையும் இனங்கண்ட விவசாயத் திணைக்கள பணிப்பரளரால்,விவசாயப் பகுதி போதனாசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டார்.
தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நக்கீரன் :பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (30/06/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எம்.கே.டி. என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார்.
அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944- ஆம் ஆண்டு வெளியான 'ஹரிதாஸ்' என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டார்.
ஆப்பிள் ஐபோன், மேக்புக் ஏர் சாதனங்களை இதயத்துக்கு அருகே கொண்டு செல்லாதீர்கள் – ஓர் அதிர்ச்சி எச்சரிக்கை
BBC : உடலுக்குள் பொருத்தப்பட்டு இருக்கும் பேஸ்மேக்கர்கள் மற்றும் டீஃப்ரெபிலேட்டர்கள் போன்ற மருத்துவ சாதனங்களிலிருந்து, சில ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான தயாரிப்புகளை பாதுகாப்பான தொலைவில் வைக்குமாறு ஆப்பிள் நிறுவனமே அறிவித்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவன சாதனங்களில் எந்த மாதிரியானவைகளை எல்லாம் பாதுகாப்பான தொலைவில் வைக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தன் வலைதளத்திலேயே பட்டியலிட்டு இருக்கிறது.
இதில் ஏர்பாடுகள் மற்றும் சார்ஜிங் கேஸ்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் அதன் உதிரி பாகங்கள், ஹோம்பாடுகள், ஐபேடுகள், ஐபோன் மற்றும் மேக் சேஃப் உதிரிபாகங்கள், மேக் மற்றும் அதன் உதிரி பாகங்கள், பீட்ஸ் என பல்வேறு கருவிகளையும் மருத்துவ சாதனங்களை பொருத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பான தொ
புதன், 30 ஜூன், 2021
பட்டியியலினத்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டுசெல்ல வழிமறித்த ஆதிக்க ஜாதி
M S Rajagopal : இடைநிலை சாதிகளின் ஈனபுத்தி!
பெரியார் மண் பெரியார் மண் என்று இடைநிலை சாதியினர் வாய் கிழிய பீற்றிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சலில்லை.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் திருவிடச்சேரி கிராமத்தில் பட்டியலினத்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வழி தர மறுத்திருக்கின்றனர் சில இடைநிலை சாதிகள்.
பிணத்தை ஆற்றில் இறக்கி ஊரை சுற்றிக் கொண்டு எடுத்து சென்றிருக்கிறார்கள் பட்டியலினத்தவர்.
விஏஓ ,ஆர்ஐ ,தாசில்தார், காவல்துறையினர், பஞ்சாயத்து போர்டு கவுன்சிலர், தலைவர் , ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய சேர்மன் ஆகிய எல்லோரும் அந்த ஊரில் இருக்கிறார்களா.. அல்லது கொரோனாவில் செத்து விட்டார்களா?
ஒரு பட்டியலின கர்ப்பிணி பெண்ணை அக்ரஹாரம் வழியே ஆஷ் துரை எடுத்து சென்றதால்தான் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று பேசி மகிழ்ந்த சிகாமணிகள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
40 ஏரிகள் மீது கட்டப்பட்ட நகரங்கள், ஊர்கள், பொதுக்கட்டுமானங்கள்
Surya Xavier : மதுரை உயர்நீதிமன்றம்! உலகனேரி கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டது தான்.
இதுசரியா என வழக்குப் போட்டவருக்கு அபராதம் விதித்ததும் நீதிமன்றம் தான்
புதிய பேருந்து நிலையங்கள் என்று அழைப்பது வேறொன்றுமல்ல. பழைய குளங்களே.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் உள்ள இடத்திற்கு வேய்ந்தான்குளம் என்று பெயர்.
அதன் உண்மையான பெயர் வெயிலுக்கு உகந்த குளம் என்பதுதான்.
சென்னை நகரமே தாங்கல், ஏரி, அணை போன்றவற்றில் தான் உள்ளது. சென்னை நகரையே இடிக்க வேண்டும்.
சென்னையில் நகரமயத்திற்கு இரையான ஏரிகள் இவை.
1.நுங்கம்பாக்கம் ஏரி,
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
கலைஞர் தொடங்கிவைத்த ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது தயாரிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகள் அளிக்கும் நிறுவனம் மற்றும் பெரும் ஏற்றுமதி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்துள்ளது.
நடிகை கவிதாவின் மகன் இறந்த இரண்டே வாரத்தில் கணவரும் கொரோனாவுக்கு பலி
“சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்” : அமைச்சர் எ.வ.வேலு
கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj :சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான திட்டம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்குவது தொடர்பாக ஏற்கனவே அறிக்கை தயார் செய்து தலைமை செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தி விரைவில் ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களுடன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கோவிஷீல்டு போட்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அனுமதி மறுப்பு: மத்திய அரசு தலையிட கி.வீரமணி வேண்டுகோள்
.hindutamil.in : தமிழகத்தின் தடுப்பூசி தேவைக்காக யாருக்கும் பாதகமில்லாத அருமையான, நடைமுறைக்கு உகந்த நல்ல யோசனைகளை முதல்வர் ஸ்டாலினின் கடிதம் வெளிப்படுத்தி உள்ளது. இந்த யோசனைகளைக் காலம் தாழ்த்தாமல் செயல்படுத்த வேண்டும் என தி.க.தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:
“டெல்டா பிளஸை எதிர்ப்பதற்கு வழி, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முதல் டோஸ் மட்டும் போட்டால் அது 33 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தியைத்தான் தரும் வாய்ப்பு உண்டு; இரண்டாம் டோஸும் போட்டு முடித்தவர்கள் என்றால், அது 90 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தியின் பலனைத் தரும் என்றும் மருத்துவ வல்லுநர்களும், ஆய்வாளர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.
லட்சுமி (ஹிந்தி திரைப்படம்) 14 வயது தந்தையாலே பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்.. உண்மை கதையை ,,,
Sathiya Priya : Lakshmi 2014 Hindi (Based on a True Events)
14 வயதுடைய லக்ஷ்மி தன் தந்தையாலே பாலியல் தொழிலுக்கு விற்க படுகிறாள்
அந்த பெண்ணின் குழந்தைபருவம் பல நபர்களால் சீரழிக்கபடுகிறது.
ஒரு கட்டத்தில் அங்கு இருந்து தப்பித்து அவர்களுக்கு எதிராக ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் வழக்கு தொடுக்கிறாள் வழக்கில் லக்ஷ்மி எதிர் கொள்ளும் சவால்களும் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளும் மனதை உருக்கி விடும்
ஒரு கட்டத்தில் வழக்கில் லக்ஷ்மிக்கு நீதி நிலைநாட்ட படுகிறது
ஆனால் அவள் வழக்கை..!
இறந்த காலத்தை திருப்பி கொடுக்க முடியாது அல்லவா?
வழக்கில் வெற்றி பெற்று ஊடகத்திற்கு அவள் கொடுக்க போகும் பேட்டிக்கு முன் அவள் போடும் உதடு சாயம் பெண்களை போதை பொருளாக மட்டுமே பார்க்கும் அனைத்து ஆண்களின் முகத்தின் மீதும் அவள் உமிழும் எச்சிலாக மட்டுமே என் கண்ணுக்கு தெரிந்தது..!
2009-ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் 8 லட்சத்து 60 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.
சிவசங்கர் பாபாவை பள்ளிக்கு அழைத்துவந்து விசாரணை செய்தனர்
மின்னம்பலம் : சிவசங்கர் பாபாவை கைதியாக பள்ளிக்கு வந்த போலீசார்!
பள்ளி மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சிவசங்கர் பாபாவை முதன்முறையாக கைதியாக அவரது சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்றது போலீஸ்.
சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த சிவசங்கர் பாபா ஜூன் 26 ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீஸார் வழக்கு நடக்கும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இதை விசாரித்த நீதிபதி சிவசங்கரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஜூன் 28 ஆம் தேதி அனுமதி அளித்தார். இதையடுத்து சிவசங்கரை நேற்று (ஜூன் 29) காலை 11.30மணியளவில் அவரது சுஷில் ஹரி பள்ளிக்கே அழைத்துச் சென்றனர் போலீஸார்.
எனக்கு வீடு, வேலைவாய்ப்பு கொடுங்க.. இல்லாட்டி தப்பான வழிக்குத்தான் போவேன்.. சூர்யா பரபரப்பு பேச்சு!
Vishnupriya R - tamil.oneindia.com : சென்னை: எனக்கு வீடு, வேலைவாய்ப்பை கொடுங்கள். இல்லாவிட்டால் நான் தப்பான வழிக்குத்தான் போவேன் என யூடியூபர் ரவுடி பேபி சூர்யா தனது யூடியூப் சேனல் வீடியோவில் பரபரப்பாக பேசியுள்ளார்.
ஆபாசமாக பேசி வருவதால் ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது
நான் ஆபாசமாக பேசியதாக எனது சேனலை முடக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து என்னிடம் போலீஸார் விளக்கம் கேட்டுள்ளனர். நான் எல்லாருக்கும் சொல்லி கொள்வது என்னவெனில் எனது யூடியூப் சேனலை முடக்கினால் என் வீடியோவை வைத்து சம்பாதித்த அனைவரின் சேனல்களையும் முடக்க வேண்டும்.
ஹாலிவுட்டில் ஒரு தமிழ்ப் பெண்!
.hindutamil.in -அ.முத்துலிங்கம் : சரியாக நாலு வருடங்களுக்கு முன்னர், ரொறொன்ரோவில் ஓர் ஏப்ரல் மாதம் அந்தச் சிறுமி தன் தாயாருடன் என் வீட்டுக்கு வந்தார்.
அப்பொழுது நாங்கள் தீவிரமாக ஹாவார்டு தமிழ் இருக்கைக்காக பணம் சேகரித்துக் கொண்டிருந்தோம். அதற்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தார்.
சிறுமிக்கு வயது 14. கருப்பு டீசேர்ட்டுக்கு மேலே எளிமையான சாம்பல் மேலாடை. பல்லுக்கூடு மின்னியது; அவருடைய கூரான கண்களும் மின்னின. சிறுமியின் தமிழ்ப் பற்றும், ஆர்வமும் என்னை அப்போதே ஆச்சரியப்படுத்தின.
புறப்பட்டபோது நான் சொன்னேன். ’நீங்கள் வந்தபோது வசந்தம் உள்ளே வந்தது. அதை இங்கேயே விட்டுவிட்டுப் போனால் நல்லாயிருக்கும்.’ ஒரு கணம்கூட நேரம் எடுக்காமல் சிறுமி ‘யோசிப்போம்’ என்றுவிட்டு துள்ளி மறைந்தார்.
இன்று அவருக்கு வயது 18; பெயர் மைத்திரேயி ராமகிருஷ்ணன். உலக நடிகையாகிவிட்டார்.
உலகின் பல பாகங்களிலிருந்து அவருக்கு புகழ் மாலைகள் வந்து குவிகின்றன. சமீபத்தில், புகழ் பெற்ற நடிகையும், எழுத்தாளருமான Mindy Kaling இன் உருவாக்கத்தில் வெளிவந்த Netflix தொடரான Never Have I Ever படத்தை ஓர் இரவில் நானும் மனைவியும் பார்த்து முடித்தோம். இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் தோன்றிய மைத்திரேயியின் நடிப்பு எங்களை பிரமிக்க வைத்தது. கனடாவில் அவர் படித்த உயர்நிலைப் பள்ளியில் பல நாடகங்களில் நடித்தும், சிலவற்றை எழுதி இயக்கியுமிருந்தார். ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவருடைய பெற்றோர் கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். முறையாக நடிப்பு பயிற்சி பெறாத ஒருவரால் எப்படி இத்தனை சிறப்பாக நடிக்க முடிந்தது என்பதுதான் ஆச்சரியம்.
ஜெய் ஹிந்து செண்பகராமன்! உண்மை வரலாறு என்ன?
Viduthalai Rajendaran : "ஜெய் ஹிந்து’ம் செண்பகராமனும் : உண்மை வரலாறு என்ன?"
ஆளுநர் உரையை முடிக்கும்போது ‘ஜெய் ஹிந்த்’ என்று இருந்த சொல் நீக்கப்பட்டு விட்டதாம். பா.ஜ.க.வும் மனுவாதிகளும் துள்ளிக் குதிக்கிறார்கள். ‘
ஜெய் ஹிந்த்’ என்ற இந்தி சொல்லுக்கு ஆளுநர் ஆங்கில உரையிலோ அல்லது தமிழ் மொழி பெயர்ப்பிலோ எதற்கு இடம் பெற வேண்டும்?
அப்படி ஒரு சொல் அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறதா? அதுவும் இல்லை. ‘ஜெய் ஹிந்த்’ என்றால் ‘இந்தியா வாழ்க’ என்று அர்த்தமாம்; மனுவாதிகள் கூறுகிறார்கள்.
‘இந்துக்கள்’ வாழ்க; இந்துஸ்தானி வாழ்க என்பதே அதன் உண்மையான அர்த்தம் என்பதை அந்த சொல்லைக் காதால் கேட்கும் சக்தி உள்ள அனைவருக்குமே தெரியும்.
திருவனந்தபுரத்தில் தமிழ் வேளாளர் குடும்பத்தில் பிறந்த செண்பகராமன், பள்ளிப் படிப்பின்போது இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்று அரசியலுக்கு வந்த, பாலகங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு, பாரத மாதா வாலிபர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்.
செவ்வாய், 29 ஜூன், 2021
மதுரை விமான நிலைய விரிவாக்கம் ! நிதியமைச்சரின் கோரிக்கைக்கு உடன் அனுமதி அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்
Hemavandhana - /tamil.oneindia.com : சென்னை: "நான் 2016-ல் இருந்து எம்எல்ஏவாக இருக்கேன்.. அப்போதிருந்து சொல்லி வருகிறேன்.. ஆனால், முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றதுமே, என் கோரிக்கைக்கு ஓகே சொல்லிவிட்டார்..
நாங்களும் நேற்றே இதை பற்றி ஆலோசித்தோம்" என்று நிதியமைச்சர் பூரித்து போய் சொல்கிறார்..! செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
"மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணியில் நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டுள்ளது...
இதற்காக 615 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அரசு புறம்போக்கு நிலம் 150 ஏக்கருக்கு மேல் உள்ளது. மீதி 450 ஏக்கரை மாநில அரசு கையகப்படுத்தி விமான நிலைய நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும்.
அதன்பிறகுதான் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள முடியும்.
இப்போது 7,500 அடி நீளமே ரன் வே இருக்கிறது.. விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றால் ரன் வே 12,500 அடி நீளமாக நீட்டிக்கப்படும். இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் வைத்துள்ளோம்... அவரின் ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர் அந்தப் பணிகளை மேற்கொள்வார்.
புதிய டிஜிபி சைலேந்திரபாபு: அரசாணை வெளியீடு!
மின்னம்பலம் : தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூன் 29) மாலை இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக டிஜிபியான ஜே.கே. திரிபாதியின் பதவிக்காலம் வரும் ஜூன் 30 ஆம் தேதியோ டு முடிவடைகிறது. இதையொட்டி அடுத்த டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான நிர்வாக நடைமுறைகள் கடந்த மாதத்தில் இருந்தே தொடங்கிவிட்டன.
அதன்படி அடுத்த டிஜிபிக்கான தரவரிசையில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யு.பி.எஸ்.சி)த்துக்கு கடந்த மே 18 ஆம் தேதி அனுப்பி வைத்தது தமிழக அரசு. அந்தக் கடிதத்தின் கோரிக்கைப்படி ஜூன் 28 ஆம் தேதி தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான யு.பி.எஸ்.சி. யின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கூடியது.
பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்
மாலைமலர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் திருத்தியமைப்பு- பீட்டர் அல்போன்ஸ் தலைவராக நியமனம்
சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிக்காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், கடந்த 1989-ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13-ம் நாள் அன்று, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.
ஒரே இராகம் சுதி வேகத்திலும் தாளக்கட்டிலும் எப்படி எல்லாம் மாறும்?
Ramasamy Duraipandi: எனக்கு இசைக் கருவிகள் இசைக்கவோ அன்றி இராகங்களில் பாடவோ தெரியாது....
ஆனால் இசையின் இயற்பியலும் இசையின் கணிதமும் மட்டுமே தெரியும் எனக் கூறிக் கொண்டு...
அன்புத்தம்பி சகா என நான் அழைக்கும் சகாயராஜ் கி.சகாய ராஜ் மிகத்தீவிர ராசய்யா வெறியர்....
பவதாரணி இசைப்பதிவகம் ஒன்றை வெகுகாலம் நடத்தி வருகிறார்... மணம் செய்து கொள்ளாத வரம் பெற்றவர்....
தெருவில் திரியும் கவனிப்பாரில்லாத நாய்களுக்குக் காலையும் மாலையும் உணவளிப்பதை இசைப்பதிவு வேலைகளுக்கு நடுவில் செய்து வருகிறார்...
நேற்று அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ராசய்யாவின் பாடல்களில் மோகனம் எனும் முல்லை தீம்பாவணிப் பண் குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தேன்....
சில பாடல்களையும் குறிப்பிட்டேன்...
நேற்று மதியம் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது... அண்ணே சில பாடல்களைப் பதிவு செய்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்....
வெறும் ஒலிக்கோவையை முகனூல் ஏற்காது எனவே ராசய்யாவின் சில படங்களைச் சேர்த்து காணொலியாக வடிவமைத்துத் தந்தார் தம்பி குமரன் GK Kumaran ....
சொத்து வரியிலிருந்து விலக்கு வேண்டும்’: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!
மின்னம்பலம் : கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் மத்திய மாநில அரசுகள் முதலில் மூடுமாறு உத்தரவிட்டது திரையரங்குகளைத்தான்.
அதன் பின்னரே மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது
கொரோனாவையொட்டி நடைமுறையிலிருந்த ஊரடங்கு 2020 இறுதியில் ரத்து செய்யப்பட்டபோது சிறு, குறு தொழில்கள், கார்ப்பரேட் என அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு வரி, மற்றும் பொருளாதார சலுகைகளை வழங்கியது
ஆனால் தினந்தோறும் வரி வருவாயை ஈட்டித் தரக்கூடிய திரையரங்குகளுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படவில்லை.
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் போராட்டம்!
நக்கீரன் - மகேஷ் : திருச்சி முகாம் சிறையில் அடைக்கபட்டுள்ள இலங்கை தமிழர்கள் கடந்த ஜூன் 9- ஆம் தேதி முதல் இன்றுவரை கடந்த 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் நோக்கம் தங்கள் மீதான வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கபட்டு, தண்டனை காலம் முடிந்தும் சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டதினை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்தைக் குறித்து அறிந்துக் கொள்ள அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையகத்தின் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் நேரில் சந்தித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பணி ஓய்வு வயதை குறைப்பதன் மூலமாக பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.!
Kandasamy Mariyappan : தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு...,
தமிழ்நாட்டில் இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, சில காரணங்களுக்காக அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர்.! மகிழ்ச்சியாக இருக்கிறது.!
அதே நேரத்தில், பல அரசு பள்ளிகளில் PG/PT Assistant ஆசிரியர் பணிகள் நிரப்பப்படாமல் இருக்கிறது.! ஆசிரியர்கள் இல்லை என்ற நிலை அந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை விரக்தியில் தள்ளி விடும்.!
அதேவேளையில்,
MSc/MA MEd, BSc/ BA BEd முடித்துவிட்டு வேலையில்லாமல் பல இளைஞர்கள் உள்ளனர்.!
காலி பணியிடங்களுக்கு, அரசின் நிதிச் சுமையும் ஒரு காரணமாக இருக்கும்.!
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்ததுதான்.!
திராவிட பொருளாதார அடிப்படையில்.,
PT Assistant 20,000 - 25,000 ரூபாய், PG Assistant 25,000 - 30,000 ரூபாய் என்று தொகுப்பூதியத்தில் (Consolidated pay) பல ஆசிரியர்களை நியமிக்கலாம்.! அவர்கள் வாழும் பகுதிகளிலேயே பணியில் அமர்த்த வேண்டும்.
ஒருவேளை இது அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை தருமே என்று நீங்கள் எண்ணலாம்.!
திங்கள், 28 ஜூன், 2021
கோவை தென்றல் செல்வராஜ் திடீர் நீக்கம்! கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக வரதராஜன் நியமனம்.. பின்னணி
Velmurugan P tamil.oneindia.com : கோவை : கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதற்கு பதில் கி.வரதராஜன் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
கோவை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர். கி. வரதராஜன் (பொள்ளாச்சி), கோவை தெற்கு மாவட்டக் கழகப்பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
பொறுப்புக்குழு ஏற்கனவே நியமிக்கப்பட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் இவருடன் (டாக்டர் வரதராஜனுடன்) இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு துரைமுருகன் வெளியிட்ட அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
நீட் தேர்வை இப்படிதான் ரத்து செய்வோம்.. கல்லூரிகளில் மாணவ சேர்க்கை எப்போது.. அமைச்சர் பொன்முடி பளீச்r
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பள்ளி கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், +2 பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
அலறிய நபர்.. கோயம்பேடு பாலத்தில் ஓடும் கார் திடீரென தீ பிடித்த கொடூரம்.. பரிதாப பலி.. எப்படி நடந்ததுஅலறிய நபர்.. கோயம்பேடு பாலத்தில் ஓடும் கார் திடீரென தீ பிடித்த கொடூரம்.. பரிதாப பலி.. எப்படி நடந்தது
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை!
நக்கீரன் செய்திப்பிரிவு : உப்பாற்று ஓடையில் தனியார் இடத்தில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், உப்பாற்று ஓடைப்பகுதியில் ரசாயன காப்பர் லாக் கழிவுகளை அகற்றப் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (28/06/2021) விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை விதித்ததோடு, "ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா? ஓடையில் காப்பர் கழிவுகளைக் கொட்டியவர்கள் யார்? 2018-ல் பிறப்பித்த உத்தரவை தற்போது வரை ஏன் செயல்படுத்தவில்லை?" எனக் கேட்டு, 12 வாரங்களில் பொதுப்பணித்துறைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்
கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஒப்படையுங்கள் : அமைச்சர் சேகர் பாபு
மின்னம்பலம் :கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும், தாமாக முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை, குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள ஆனந்தவள்ளி அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 2.02 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளுக்கு முன்பு வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த சொத்தை மீட்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிப்பை வெளியேற்ற, கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவு பெறப்பட்டது.
கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை
மாலைமலர் கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்க
திருச்சி - அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
4 நாட்களில் 1,500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 100% கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் என்றார்.
கலைஞரைக் குற்றம் சொல்பவர்கள் வாயில் இருந்து ராஜபக்சே என்ற வார்த்தையே வருவதில்லை
Ravishankar Ayyakkannu : கடந்த சில நாட்களாக Clubhouseல் (புலம் பெயர்) ஈழத் தமிழர்கள் பலருடன் பேசிய பிறகான என் புரிதல்:
* விடுதலைப் புலிகளின் மீதான எந்தவொரு விமர்சனப் பார்வைக்கும் அவர்கள் தயாராக இல்லை.
* விடுதலைப் புலிகளை உணர்வுரீதியாக மட்டுமே அவர்களால் அணுக முடிகிறது.
* விடுதலைப் புலிகள் 10 தவறுகள் செய்திருந்தால் அதில் ஒரே ஒரு தவறைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
* தமிழ்நாட்டுத் தமிழர், குறிப்பாக திமுக, அவர்களுக்குப் போதிய அளவு உதவவில்லை என்று உரிமையுடன் கடிந்து கொள்கிறவர்கள், இந்தப்போராட்டத்தால் தமிழ்நாடு இழந்தது என்ன என்பதைப் பற்றிய எந்தவொரு பொறுப்புணர்வோ, குற்றவுணர்வோ, நன்றியுணர்வோ கொள்வதில்லை.
* தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழம் குறித்து குற்றவுணர்விலேயே சாக வேண்டும் என்று வலிந்து திணிக்கிறார்கள்.
* ஈழ விடுதலைக்கு இந்தியாவிடம் லாபி செய்வதற்கான களமாகத் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்களே தவிர, தமிழ்நாட்டுத் தமிழர் மீது அவர்களுக்குத் துளி அளவும் அக்கறை இல்லை.
* மூச்சுக்கு முன்னூறு முறை கலைஞரைக் குற்றம் சொல்பவர்கள் வாயில் இருந்து ராஜபக்சே என்ற வார்த்தையே வருவதில்லை
ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும்
Sulthan Ibrahim : யானையை பற்றிய மிரள வைக்கும் தகவல்
யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் . யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். இதனால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.
சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். ஒரு யானை ஒரு காட்டேயே உருவாக்கும். ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் .
ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 250 கிலோ உணவில் 10% விதைகள் மற்றும் குச்சிகள் இருக்கும்.
சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகளும், குச்சி களும் விதைக்கப்படும்.
ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும். ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது.
ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 அயிரம் மரம் வளர காரணமாகிறது .
அடுத்த முறை நீங்களும் ,நானும் யானையை சந்திக்கும் பொழுது நம் மனதில் தோன்றக் கூடிய ஒரே காட்சி நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் அக்சிஜன் இந்த ஜீவனால் இறைவனால் அனுப்பபட்டது என்பதே நம் மனதில் தோன்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசின் கடன் 5 லட்சம் கோடியாக எப்படி உயர்ந்தது? முழு விபரம்
Muralidharan Pb : சென்ற 2006-2011 வரை திமுக ஆட்சி முடிந்த போது தமிழ்நாட்டின் நிதிச்சுமை ஏறத்தாழ 55000 கோடி ரூபாய்.
அதாவது பல்வேறு திட்டங்களை தீட்டி மக்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாட்டை ஒரு வளர்ந்த மாநிலமாக ஆக்கிட திமுக அரசு பெற்ற கடன். இன்று சுமார் 5 லட்சங்கோடி.
அதாவது மாநிலத்தின் இரண்டு ஆண்டு வரவு செலவு தொகை!
மொட்டையாக தமிழ்நாட்டில் அரசின் கடன் 5 லட்சம் கோடி ஏறிவிட்டது என்று சொல்லாதீங்க!
எப்படி? என்ன ?ஏது ? என்று விவரமாக சொல்லுங்க.
சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செலவு மற்றும் தணிக்கை குழு அறிக்கையின்படி,
2018-19ல் மட்டும் மின்சாரம் வாங்கியது, நிலக்கரி, நிதி அளித்தல், ஊழியர்கள் சம்பளம் இவை அனைத்தையும் அதிகரித்ததால் போன்றவைகளை முந்தைய அதிமுக அரசு செய்த தவறால் தமிழ்நாடு பகிர் மின் கழகம் எனப்படும் TANGEDCO என்கிற அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 13,176 கோடி பணத்தை நேரடியாக நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறது சிஏஜி அறிக்கை.
நேரடியாக அந்த ஆண்டின் நிதிச்சுமையை 4,862 கோடிக்கு அதிகரித்துள்ளது
முந்தைய அதிமுக அரசின் தவறான பாதையால் இவ்வளவு பெரிய இழப்பை மாநில அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது என்கிறது செலவு மட்டும் தணிக்கை குழுவின் அறிக்கை.
ஆறுமுக நாவலரும் பிரபாகரனும்.. ஒரு கோட்பாடற்ற போர் வீரனை ஜாதீயம் தூக்கி பிடித்தது .. Theva Thasan
arangamnews.com : புலம் பெயர்ந்த சாதியம் 10 - — அ. தேவதாசன் —
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ பிரகடனம் செய்த போது பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இது தமக்கானது அல்ல என்கிற கருத்தோடு தீண்டாமைக்கு எதிரானதாகவும், கல்வி, பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினர்.
1978ல் சகல வல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சி முறை சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதற்கு சாதகமான வழியை ஏற்படுத்தியது. ஜெயவர்தன தலைமையிலான அரசு எடுத்த இனவாத நடவடிக்கையும், இராணுவ முன்னெடுப்பும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மத்தியில் நாங்களும் தமிழர்கள்தான் எனும் சிந்தனைப் போக்கை உருவாக்கியது.
ஜெயவர்தன அரசு சிங்கள மக்களின் கல்வி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பதிலாக தமிழ் பேசும் மக்களின் கல்வி பொருளாதாரத்தை அழிப்பதற்கே திட்டமிட்டு செயற்படுத்தியது. இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியும், இலங்கை தேசிய பொருளாதார வளர்ச்சியும் தீவிர வலதுசாரி கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதன் எஜமானர்களுக்கும் ஏற்படுத்திய அச்சுறுத்தலாலேயே ஜெயவர்தன ஆட்சி இனவாதத்தை கையில் தூக்கியது. அதில் வெற்றியும் கண்டது. சிங்கள இனவாத செயற்பாடுகள் தமிழ் இனவாதிகளுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தியது.
ஞாயிறு, 27 ஜூன், 2021
டெல்டா பிளஸ் வைரஸ்... தீவிரமாக கண்காணிக்க வேண்டும்”: மாவட்டங்களுக்குச் சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு!
கலைஞர் செய்திகள் : இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் 51 பேருக்கு கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதுவரை 9 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:
கொரோனோ வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்டா பிளஸ் வகை கொரோனோ பாதிப்புகள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டு வருகிறது.
டீம் 16".. தமிழ்நாட்டின் எதிர்காலமே இனி "இதுதான்".. முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய கமிட்டி.. பின்னணி!
Shyamsundar - tamil.oneindia.com : சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் கொரோனா காரணமாக வருவாய் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வருவாயை பெருக்க புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு காரணங்களால் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. கொரோனா, கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள், அதிக விலைக்கு விடப்பட்ட டெண்டர், ஜிஎஸ்டி இழப்பீடு கிடைக்காதது,
சர்வதேச பொருளாதார சரிவு, லாக்டவுன் என்று பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது
இந்த நிலையில் தமிழ்நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர உடனடியாக புதிய திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், புதிய வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பல சமயங்களில் திருமணங்களை விட விவாகரத்துகள் புனிதமானவை!
Loganayaki Lona : வரதட்சணை கொடுமை என்றதும் ,
எங்களுக்கு அவ நகை வேண்டாம். நாங்க அத ஒன்னும் தொடக்கூட மாட்டோம் .அவங்க நல்லதுக்கு தான் கேட்டு வாங்குனோம்னு சொன்னவங்க (நவீனத்துவம்)
பொண்ணு பார்க்க சுமாரா இருந்தாலும் 10 பவுனுக்கு 15 பவுன் போட்றேன்னு சொன்னதால சரின்னுட்டோம்னு சொன்னவங்க
பொண்ணுக்கு 50 பவுனு பையனுக்கு 5 பவுன் போட்ருங்க,நாங்க பொண்ணுக்கு 7 பவுனா தாலி போட்ருதோம்னு சொன்னவங்க
அவளே லவ் பண்ணிட்டானாலும் நம்ம நகைன்னு ஒன்னும் போடாமலா அனுப்ப முடியும் ?அவளுக்குனு வாங்குனத கொண்டு போகட்டும்னு அழுதவங்க,
2வருசம் துபாய்ல வேலை செஞ்சு 100 பவுன் சேர்த்திட்டேன்.இனி மேரேஜ் செய்யலாம்னு சொல்ற நாகர்கோவில்,கன்னியாகுமரி பகுதி செவிலியர்கள்
திருமணம்.முடிந்து 1 மாதத்தில் மொத்த நகையும் அடகு வைத்துவிட்டு மீண்டும் நகை வாங்கிட்டு வான்னு அனுப்புறவங்க,
கேரளாவில் போகும் திருமணத்தில் எல்லாம் வெளியில் விலையுயர்ந்த கார்,கழுத்து நிறைய நகைன்னு பெண் மூலம் காட்டப்படும் ப்ரம்மாண்டங்கள்
இதெல்லாம் நினைவுக்கு வந்தது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் போலீஸார் மீது கூட்டுச் சதிப் பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்ய மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு
.hindutamil.in : cbi-refuses-to-file-charges-against-sathankulam-father-son-in-murder-case-cbi-appeals-to-hc
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120 பி (கூட்டுச் சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்குப் பதிந்து அவர்களைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது.