பொதுவாக மனிதனுக்கு மூளையின் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் சிறப்பாகச் செயல்படும் என்பார்கள். ஆனால் இரண்டு பக்கமுமே மேன்மையாகச் செயல்படுவது கருணாநிதிக்குத் தான் என பிரபல நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி ஒருமுறை தெரிவித்தார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக,
கடந்த ஒரு மாதமாகவே வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த
நிலையில்தான் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர்
அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதான தி.மு.க தலைவர் கருணாநிதி கட்சி
அலுவலகமான அறிவாலயத்திற்கு வராமல் இருக்க மாட்டார். உடம்புக்கு சரியில்லா
விட்டாலும் கூட சிறிது நேரமாவது வந்து விட்டுப் போவார். ஆனால், கடந்த ஒரு
மாதமாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த வயதிலும் மிகச் சிறந்த
நினைவாற்றலுடன் தன்னுடைய உடலை கவனித்துக் கொள்வதில் மிகுந்த அக்கறையும்
எச்சரிக்கை உணர்வும் கொண்டவர் கலைஞர் கருணாநிதி.
மன வலிமை மிக்கவர்.. ‘நீண்ட தூரம் ஓடினால்தான்,அதிக உயரம் தாண்ட முடியும்’ என்பதுதான் கருணாநிதி சொல்லும் பழமொழி. அவர் நீண்டதூரம் ஓடிய மனவலிமை கொண்ட மனிதர் என்றுதான் அவரைச் சொல்ல முடியும்.
மன வலிமை மிக்கவர்.. ‘நீண்ட தூரம் ஓடினால்தான்,அதிக உயரம் தாண்ட முடியும்’ என்பதுதான் கருணாநிதி சொல்லும் பழமொழி. அவர் நீண்டதூரம் ஓடிய மனவலிமை கொண்ட மனிதர் என்றுதான் அவரைச் சொல்ல முடியும்.