புதன், 13 நவம்பர், 2024

திமுகவை கைப்பற்றும் நோக்கில் புலி ஆதரவு சக்திகள் வேகமாக முன்னேறின! Flash back

 ராதா மனோகர் : நல்ல விடயங்களை  ஆற்றிய பின்பு கிடைக்கும் உணர்வு என்பது வார்த்தைகளால் இலகுவில் வர்ணித்து விடமுடியாதவை
நல்ல நோக்கம் கருதி  முகநூலிலும் பிளாக்கிலும் எழுதும் கட்டுரைகள் மூலம் கிடைக்கும்  அமைதி மகிழ்ச்சி திருப்தி எந்த பணவரவிலும் புகழிலும் பார்க்க மேலானது.
பல நாட்களாக என் மனதை உறுத்தி கொண்டிருந்த ஒரு விடயத்தை பற்றி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை  எழுதி இருந்தேன்
ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு  சம்பவங்களின் கோர்வையாகவே  அக்கட்டுரை அமைந்துள்ளது
அதில் சில தவறுகள் இருக்க கூடுமோ என்று பலவாறாக சிந்தித்து ஆண்டு மாதம் தேதி வாரியாக நடந்த தொடர் நிகழ்ச்சிகளை தொகுத்து இருந்தேன்
வெறும் சம்பவங்களை தாண்டி அதில் தொடர்பு உடையவர்களின் அன்றைய மனோ நிலையை படம் பிடித்து காண்பிப்பதுதான் மிக பெரிய சவாலாக இருந்தது

செவ்வாய், 12 நவம்பர், 2024

நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் குறித்த பேரொலி விவாதம்!

லோகநாயகி லோகன் : நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் குறித்த மிகத்தெளிவான விவாதத்தை சமரசமின்றி முன் வைத்த பேரொலி சேனல் தோழர்களுக்கு வாழ்த்துகள்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் பாஜக வெற்றி பெறும்: மேட்ரைஸ் நிறுவன கருத்து கணிப்பில் தகவல்

 hindutamil.in : மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாயுதிகூட்டணியில் தேர்தலை சந்திக்கின்றன.
அதேபோன்று எதிர் தரப்பில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா,
 சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியில் களம் காண்கின்றன.
இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து மேட்ரைஸ் நிறுவனம் அக். 10 மற்றும் நவ. 9-க்கு இடையில் 1,09,000 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியது.

நாம் பெறப்போகும் வெற்றி, மற்றவர்கள் கண் கலங்கும் வகையில் அமைய வேண்டும் என்கிறார் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க

 jaffnamuslim.com  :  வட மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துக்கள்
கடந்த 21 ஆம் திகதி நாட்டின் அரசியலில் தீர்மானமிக்க போட்டி காணப்பட்டது. அப்போது முன்னாள் ஜனாபதிபதி வவுனியாவிற்கு வந்தார். வன்னி மக்களும் அவருக்கு வாக்களித்தனர்.
இம்முறை அவர் வருவாரா? எதிர்கட்சித் தலைவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரசாரத்துக்காக வந்தார்.
இம்முறை வருவாரா?
அவர்களின் வெற்றிக்காக மாத்திரமே அவர்கள் வாக்கு கோருவர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வன்னி மாவட்ட மக்கள் 21 ஆயிரம் வாக்குகளை எமக்கு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு அது உதவியது. வன்னி மாவட்டத்தில் தோற்றோம். வன்னி மாட்டத்தில் எதற்காக இனக்குழுக்கள் அடிப்படையில் வாக்குகள் பிரிந்துள்ளன?

அமரன்' திரைப்படத்தை பள்ளி, கல்லூரிகளில் திரையிட வேண்டும்- பா.ஜ.க. கோரிக்கை

அமரன் திரைப்படத்தை பள்ளி, கல்லூரிகளில் திரையிட வேண்டும்- பா.ஜ.க. கோரிக்கை

மாலை மலர் :  சென்னை தமிழக பா.ஜ.க. மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் ஓர் அங்கமான காஷ்மீரை பாதுகாத்து அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாக்க எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள்.

அநுர குமார திஸாநாயக்க: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஜனாதிபதி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

  BBC News தமிழ்- முரளிதரன் காசி விஸ்வநாதன்  : இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இதற்கு முன் அப்படி நடந்திருக்கிறதா?
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

திங்கள், 11 நவம்பர், 2024

நீதிபதி டி.குன்ஹா அறிக்கை : சடலத்தை வைத்து கூட பாஜக பணம் சம்பாதித்துள்ளது.. ஜெ.வை சிறைக்கு அனுப்பிய நீதிபதி

 tamil.oneindia.com - Nantha Kumar R : பெங்களூர்: கொரோனா பரவலின்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது.
அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா பிபிஇ கிட் வாங்கியதில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்பிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஆணையம் விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையால் எடியூரப்பாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் உள்ளனர். முன்னதாக கடந்த 2019 ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பாஜக ஆட்சி நடந்தது. இதில் 2019 முதல் 2021ம் ஆண்டு வரை பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவும், அதன்பிறகு பசவராஜ் பொம்மையும் முதல்வராக இருந்தனர்.

நடிகர் சத்தியராஜின் மனைவி 4 ஆண்டுகளாக கோமாவில் கிடக்கிறார் - என்ன நடந்தது?

மின்னம்பலம் - Kumaresan M :  நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
 ஹீரோவாக பல படங்களில் நடித்து செம ஹிட் கொடுத்தவர். அவரது நடிப்புக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.
பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், நடிகர் சத்யராஜின் மனைவி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக,  மகள் திவ்யா இன்ஸ்டா பக்கத்தில்  உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை - உண்மை குற்றவாளிகள் பட்டியல் : பிரபாகரன் முருகன் நளினி, பேரறிவாளன் சிவராசன் பாக்கியநாதன்சின்ன சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்

May be a graphic of 2 people and text
Vimalaadhithan Mani  :  ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றி புதிதாக வெளியாகி இருக்கும் Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassins என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.
இது ஏற்கெனவே ராஜீவ் கொலை  வழக்கு பற்றிய பல புத்தகங்களை படித்திருக்கும் எனக்கு இந்த வழக்கில் நளினி, பேரறிவாளன் போன்றவர்களின் பங்களிப்பு என்ன என்பதை பற்றிய மேலும் பல உண்மைகளை உணர்த்தி இருக்கிறது.
இந்த புத்தகம் சொல்லி இருக்கும் உண்மைகள் பின்வருமாறு :
நளினியின் சகோதரன் பாக்கியநாதன்தான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளி.
தணு, சுபா என்ற இரண்டு தற்கொலை படை போராளிகளையும் அவர்களை வழிநடத்திய முருகனையும்,
அவர்களுடைய கொலைபாதக திட்டத்தையும் அறிந்தேதான் அவர்களை ஆதரித்து,
தன்னுடைய வீட்டில் தங்க வைத்து இந்த கொலைக்கான திட்டமிடல் மற்றும் கொலை நிறைவேற்றம் வரை உடன் பயணித்து இருக்கிறார்
இன்று நான் அப்பாவி என்று கூக்குரலிடும் நளினி.
வெறும் பேட்டரி மட்டுமே வாங்கி கொடுத்த அப்பாவி என்று தன்னை கூறிக்கொள்ளும் பேரறிவாளன்தான் ராஜிவ் காந்தியை கொள்ள தணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டின் முதல் மாடலை தன்னுடைய எலக்ட்ரானிக்ஸ் மூளையை கொண்டு டிசைன் செய்து கொடுத்து இருக்கிறார்.

மகாராஷ்டிரா தேர்தல் பெண்கள் உரிமைத்தொகை! திமுக பாணியில் காங்கிரஸ் பாஜக வாக்குறுதி

 tamil.oneindia.com  - Vignesh Selvaraj  :மும்பை: மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என பாஜகவும், மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் கூட்டணியும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மாநிலங்கள் தோறும் இந்த வாக்குறுதி, தேர்தல் களத்தில் முன் நிற்கிறது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் கொண்டு வரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அமலுக்கு வரத் தொடங்கி உள்ளது.

ஞாயிறு, 10 நவம்பர், 2024

நெப்போலியன் வீட்டு கல்யாணம் - மரபணு வியாதிகளில் "Break The Chain" ஆக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம்!

May be an image of text

Loganayaki Lona :  16 வயது முதல் கலைஞர்வழியில் இருந்த நெப்போலியன், தன் திருமணத்துக்கு கலைஞர் தலைமை தாங்க திருமணம் செய்த  நெப்போலியன்,
பாஜகவில் இணைந்தார்., இப்போது வைதீக இந்து மத ப்ரோமோசனோட மகனுக்கு திருமணம் செய்தார். இந்துமுறைப்படி என ஸ்ட்ரெஸ் செய்து பேட்டி அளிக்கிறார்.
திமுகவினர் , குடும்பம்  முற்போக்காக ஒத்துவராத பெரியாரிஸ்டுகள் கூட அப்டித்தான் நடத்துறாங்கன்னாலும் பாஜகவுக்கு அவர்கள் வருமானம் ஈட்டித்தருவதில்லை.
அதுனால அது நாட்டுக்கு ப்ரச்சனையில்ல..
ஆனால் இந்த விளம்பரதாரர் நிகழ்ச்சி பாஜக ப்ரோமோசன்.
நானும் பெரியாரிஸ்ட் தான் குஷ்பூ,நானும் கலைஞர் வழி தான் சுகாசினி,தன் குழந்தைக்கு கார்ட் கட் பண்ணிட்டு துபாய் ஓடிப்போன இப்ரான்,கலா மாஸ்டர், குஷ்பூ (அத்தனையும் பாஜகவின் அடிவருடி சேனல்கள்)

நடிகை கஸ்தூரி தலைமறைவு.! தெலுங்கு மக்களுக்கு எதிரான அவதூறு பேச்சு! தேடும் தனிப்படை போலீஸார்

 tamil.oneindia.com -Vishnupriya R : சென்னை: நடிகை கஸ்தூரி எங்கே இருக்கிறார் என்பதை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேசியதாக புகாரின் பேரில் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் வழங்கவிருந்த நிலையில் தனது போயஸ் தோட்ட வீட்டை பூட்டிக் கொண்டு கஸ்தூரி எங்கே போனார் என தெரியவில்லை.
அவருக்கு போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆப் என வருகிறது.
பிராமணர்கள் சமூகத்தின் மீது தொடர்ந்து அவதூறு பேசுவதை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகி கரு நாகராஜன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, மதுவந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 3ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ரணில் விக்கிரமசிங்க : மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த JVP அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

 ஜாப்னா முஸ்லீம் .காம் : ரணில் விக்கிரமசிங்க : மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த JVP அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ரணில்
தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“ஐ.தே.க சார்பில் நான் உரையாற்றும் முதலாவது சந்திப்பு இதுவாகும். நாங்கள் வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும், நுவரெலியாவில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்” என கொட்டகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

. சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுகிறது .

 tamil.oneindia.com -Shyamsundar : நியூயார்க்: சிரியாவில் நடக்கும் போர் கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது. இந்த நிலையில்தான் சிரியாவில் இருந்து படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
 அவர் ஜனவரி 20ம் தேதிதான் அதிகாரபூர்வமாக அதிபர் ஆவார்.
அதனால் இப்போது படைகளுக்கு உத்தரவிட முடியாது.
அவரின் இந்த விருப்பம் ஜனவரி 20ம் தேதிக்கு பின் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப்.,.
நான் போரை தொடங்குவேன் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்;

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.. அனுர முன்பிருக்கும் மிகப்பெரிய சவால்! மேஜிக் நம்பர் கிடைக்காவிட்டால்?

May be an image of one or more people and text

tamil.oneindia.com - Vignesh Selvaraj : கொழும்பு: வரும் நவம்பர் 14 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவுக்கு இருக்கும் சவால் என்ன?
மெஜாரிட்டி இடங்களை வெல்ல முடியாவிட்டால் என்ன நடக்கும்? இலங்கையில் ஒன் இந்தியா நடத்திய நேர்காணல் இங்கே!
கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் (JVP) தலைவர் அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில்,