உத்திரபிரதேசம் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை அரங்கேற்றுவதில்
பெயர்போன மாநிலம். உ.பி. மெயின்புரியில் ரூ. 15 கடன் பாக்கி வைத்ததற்காக
தலித் தம்பதியை ஒரு வெறிபிடித்த கடைக்காரர் கோடாலியால் வெட்டிக்
கொன்றிருக்கிறார்.
விவசாயக் கூலிகளாகப் பணிபுரியும் தலித் தம்பதி, வெறும் ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு பணிக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த ஐந்து ரூபாய் ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கொண்டிருப்பதை பார்த்த,கடைக்காரர் நேற்று வாங்கிய பொருட்களுக்காக ரூ. 15 தரவேண்டுமே அதைக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதைத் தந்துவிடுகிறோம் பொறுத்துக்கொள்ளுங்கள் என சொன்ன தம்பதியை கீழ்த்தரமான வார்த்தைகளால் வாட்டியிருக்கிறார் கடைக்காரர் மிஸ்ரா. தம்பதி அப்படி பேச வேண்டாம் எனக் கூறியதைப் பொறுக்க முடியாமல், வீட்டிலிருந்த கோடாலியைக் கொண்டுவந்து அவர்களைத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தம்பதி இறந்தவிட்டனர்.