சனி, 11 ஜனவரி, 2014

அமெரிக்காவில் சக மாணவிக்கு முத்தமிட்ட 6 வயது பள்ளி மாணவன் சஸ்பெண்டு

Kiss on the hand was deemed a violation of the Colorado school's no unwanted touching policy.
கொலராடோ, ஜன. 13-
அமெரிக்கா நாட்டில் 6 வயது நிறைந்த பள்ளி மாணவன் தனது சக மாணவியை முத்தமிட்டதால் பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.அமெரிக்காவின் கொலராடோ நகரில் கேனன் என்ற பகுதியில் அமைந்த பள்ளி கூடம் ஒன்றில் படித்து வரும் சிறுவன் ஹன்டர் யெல்டன் (வயது 6).  இவன் சம்பவம் குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த தகவலின்படி, தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் சேர்ந்து ஒன்றாக பாடம் படித்து கொண்டிருந்து உள்ளான். அப்பொழுது, மெதுவாக குனிந்து அவளது கையில் முத்தமிட்டு உள்ளான்.இது தான் நடந்தது என்று அவன் தெரிவித்துள்ளான்.  சக மாணவியின் மீது தான் அன்பு கொண்டிருந்ததாகவும், அந்த மாணவியும் பதிலுக்கு தன் மீது அன்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள அந்த மாணவன் தற்போது பள்ளி நிர்வாகத்தின் தண்டனைக்கு உள்ளானதால் வருத்தத்துடன் உள்ளான்.
அவன் தற்போது, அவனது தாய் சாண்டர்சிடம் செக்ஸ் என்றால் என்ன? என்று கேள்வி கேட்கிறான்.  இது 6 வயது நிறைந்த சிறுவனுக்கு அதிகப்படியான தண்டனை ஆகும் என சாண்டர்ஸ் கூறியுள்ளார்.  எனினும், மாவட்ட கல்வி அதிகாரி ராபின் கூல்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, விரும்பத்தகாத வகையில் தொடுவதற்கு எதிரான கொள்கை அடிப்படையில் மாணவன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளான் என தெரிவித்துள்ளார். அவனது நடத்தையையே நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்.  வழக்கமாக மாணவன் தனது செய்கையை நிறுத்தவே நாங்கள் முயற்சி செய்வோம்.  ஆனால் அது தொடர்ந்து நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளோம்.   அது சில நேரங்களில் சஸ்பெண்டு என்ற நிலைக்கும் சென்று விடுகிறது என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார். .maalaimalar.com

விஜயகாந்துடன் திருமாவளவன் சந்திப்பு ! கூட்டணியில் இடம்?

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. திமுக அணியில் தேமுதிகவும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் வி.சி. தலைவர் திருமாவளவன் சந்திப்பு இந்த கருத்தை திமுகவும் அதிகாரப்பூர்வமாக வரவேற்றது. இந்நிலையில் சென்னையில் விஜயகாந்தை தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து தேமுதிகவின் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொருளாளர் யூசுப் இல்ல மணவிழா அழைப்பிதழை சந்திப்பின் போது திருமாவளவன் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளது.
tamil.oneindia.in

மேலும் ஒரு நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு ! பெண் வக்கீல் பாலியல் புகார் ! காண்டம்ட் ஆப் கோர்ட்????

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு முன்னாள் நீதிபதி மீது மற்றொரு இளம் பெண் வக்கீல் பாலியல் புகார் கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த ஏ.கே.கங்குலி மீது அவரிடம் பயிற்சி பெற்ற இளம் பெண் வக்கீல் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் புகார் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு, கங்குலி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்தன. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியிலிருந்து கங்குலி ராஜினாமா செய்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு நீதிபதி மீது மற்றொரு இளம் பெண் வக்கீல் பாலியல் புகார் கூறியுள்ளார். மேலும் ஒரு நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு இதுவும் காண்டம்ட் ஆப் கோர்ட் அப்படீன்னு சொல்லாம இருந்தா சரி !

Traffic ராமசாமியின் போராட்டத்திற்கு பணிந்த ஜெயா அரசு ! அதிமுகவின் பேனர்கள் போயஸ் கார்டனில் நீக்கம்


பேனர்களை அகற்றக்கோரி ஜெயலலிதா வீட்டு முன்பு போராட்டம்! பணிந்தது ஆளும்கட்சி!
ஜெயலலிதா வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த ஆளும் கட்சியினரின் சட்ட விரோத பேனர்களை அகற்றுமாறு வலியுறுத்தி டிராபிக் ராமசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது விடாப்பிடியான போராட்டத்தையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அந்த பேனர்களை அகற்றியது.
ஆளும்கட்சியினரின் சட்ட விரோத பேனர்கள், விளம்பர தட்டிகளால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இத்தகைய பேனர்கள், விளம்பர தட்டிகளை அகற்றும் துணிச்சல் அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்று சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது. இவற்றை உடனடியாக ஒழுங்கு படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா செல்லும் கத்திட்ரல் சாலையிலேயே, ஆளும் கட்சியினர் அனுமதி பெறாத பேனர்கள், விளம்பர தட்டிகள் வைத்துள்ளனர். இவற்றை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி என்பவர் சனிக்கிழமை காலை திடீர் போராட்டத்தில் இறங்கினார். பலமணி நேரம் ஆகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அவரே பேனர்களை கிழிக்க தொடங்கினார். 

லண்டனில் தமிழ் தாய் தற்கொலை !இரண்டு குழந்தைகளும் கொலை ?

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப் பட்டனர்:- ஏழு மாத ஆண் குழந்தை, ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய காவல் துறை மீட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு கணவர் சக்தி வேல் வாகேஸ்வரன் வீட்டுக்கு வந்தபோது மூவருடைய சடலங்களை கண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close பகுதிக்கு சென்ற காவல்துறை இந்த சடல ங்களை மீட்டுள்ளனர். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம் தற்கொலையினால் சம்பவித்ததா? என்ற சந்தேகம் தொடர்வதாகவும் தெரிவித்த காவல்துறை, இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கோபாலபுரத்தில் மீண்டும் மு.க. அழகிரி- தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்து ?


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அழைத்ததின் பேரில் இன்று காலை கோபாலபுரம் இல்லத்துக்கு விரைந்தார் மு.க.அழகிரி என்கிறது திமுக வட்டாரங்கள். மதுரை திமுகவினர் அழகிரிக்கு ஆதரவாக, ஸ்டாலினுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டினர். இதனால் திமுக தலைமை அதிருப்தி அடைந்தது. ஒட்டுமொத்த மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்பையே கலைத்து பொறுப்புக் குழுவை நியமித்தது. இதைத் தொடர்ந்து தேமுதிகவுடனான திமுக கூட்டணி முயற்சிக்கு எதிராக அழகிரி கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அழகிரிக்கு கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்ற அழகிரி தாயார் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்தார். கருணாநிதியை அழகிரி குடும்பத்தினர் சந்தித்தனர். இந்நிலையில் அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மு.க. ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் இன்று திமுக தலைவரும் தனது தந்தையுமான மு.கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு மு.க.அழகிரி மீண்டும் சென்றுள்ளார். அவர் கருணாநிதியை சந்தித்து தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவிப்பார் என்கிறது திமுக வட்டாரங்கள்.
tamil.oneindia.i

தேமுதிகவோடு திமுக அணியில் காங்.?: குலாம்நபி- கருணாநிதி ஆலோசனை

சென்னை: அரசியலில் நிரந்தரம் எதுவும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிதர்சனமாக்கிக் கொண்டிருக்கின்றன அரசியல் நிகழ்வுகள்.. காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது திமுக. ஆனால் இந்த திட்டவட்டத்துக்கும் கூட செக் வைக்க முடியும் என்று காங்கிரஸ் மேலிடம் காய் நகர்த்தியிருக்கிறது. மத்திய அரசில் இருந்து வெளியேறி, கூட்டணியில் இருந்து விலகி பொதுக்குழுவைக் கூட்டி கூட்டணியே கிடையாது என்று அறிவித்து திமுக, காங்கிரஸைவிட்டு வெகுதொலைவில் பயணிப்பதுபோல் ஒரு தோற்றம் உருவானது.. அந்த சூழலில் தேமுதிகதான் ஒரு நம்பிக்கையாக இருந்து திமுகவும் ஆவலுடன் காத்திருந்தது.
 ஆசாத் சந்திப்பு இந்த சூழ்நிலையை தற்போது தலைகீழாக மாற்றிப் போட்டிருக்கிறது மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்தின், கருணாநிதியுடனான சந்திப்பு.

அமெரிக்க துணை தூதர் வெளியேற உத்தரவு:


டெல்லி: விசா மோசடி வழக்கில் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவிலுள்ள அமெரிக்க துணைத் தூதர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவிலிருந்து பணிப்பெண் குடும்பத்தாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது உள்பட தேவயானிக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அந்த அதிகாரி முன்னின்று நடத்தியதாகக் கூறப்படுகிறது. பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரி இந்தியாவை
tamil.oneindia.in

தமன்னா: கார்த்தியோட நடிச்சதுதான் ரொம்ப பிடிக்கும்

தமிழில் கார்த்தியோட நடிச்சதுதான் ரொம்ப பிடிக்கும் என்றார் தமன்னா.‘சுறா‘, ‘பையா‘, ‘அயன்‘ என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த தமன்னா கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். காதல் தோல்வியால்தான் அவர் தமிழ் படங்களில் நடிக்க மறுக்கிறார் என கிசுகிசு பரவியது. இந்நிலையில், அஜீத் நடிக்கும் ‘வீரம்‘ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்நிலையில், தமிழ் ஹீரோக்களுடன் நடித்த அனுபவம் பற்றி தமன்னா மனம் திறந்தார். அவர் கூறியதாவது:
வீரம் படத்தில் எனது கேரக்டர் மிகவும் பிடித்தது. இப்பட இயக்குனர் சிவா இயக்கிய ‘சிறுத்தை‘ படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறேன். அஜீத், லைட்பாய் முதல் எல்லா ஊழியர்களிட மும் பாகுபாடு இல்லாமல் சமமாக பழகுவார். சூர்யாவுடன் ‘அயன்‘ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவரது தம்பி கார்த்தியுடனும் நடித்திருக்கிறேன். இருவருமே அவரவர் குணம் மற்றும் வேலை செய்வதில் வித்தியாசமானவர்கள்.

தேவயானி வீட்டில் மிகவும் சிரமப்பட்டேன்: பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானியின் இல்லத்தில் வேலை பார்த்தபோது மிகவும் சிரமத்துக்குள்ளானதாக அவரது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு குறை கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சங்கீதா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வந்தார். இந்நிலையில், இது பற்றி முதல் முறையாக அவர் அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எனது குடும்பத்துக்கு பணம் அனுப்புவதற்காக சில ஆண்டுகள் வீட்டு வேலை பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் அமெரிக்காவுக்கு வர முடிவு செய்தேன்.
ஆனால், இங்கு நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நான் நினைக்கவில்லை. அதாவது, தேவயானியின் வீட்டில் நான் ஏராளமான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இதனால் எனக்கு தூங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ, என் பணிகளைக் கவனிப்பதற்கோ கூட நேரம் இருந்ததில்லை.

பிச்சை எடுப்பதற்காக சூடுபோட்டு 2 சிறுவர்கள் சித்ரவதை? தொண்டு நிறுவனத்தினர் மீட்பு

தஞ்சாவூர், பிச்சை எடுப்பதற்காக சூடு போட்டு 2 சிறுவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறினர். இதையடுத்து அவர்களை தொண்டு நிறுவனத்தினர் மீட்டு குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்தனர்.
2 சிறுவர்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு 2 சிறுவர்கள் வந்தனர். அவர்கள் நாகையை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சுரேஷ் (வயது12), ரமேஷ் (10) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என தெரிவித்தனர். நாங்கள் படிப்பை பாதியில் விட்டு விட்டோம். நாங்கள் படிக்க விரும்புவதால் வீட்டை விட்டு பட்டுக்கோட்டைக்கு வந்து விட்டோம். நாங்கள் 2 பேரும் அண்ணன்– தம்பி என தெரிவித்தனர்.

நடிகை மனோரமா மீது நில அபகரிப்பு புகார் ! அண்ணன் மகன் திடுக்கிடும் குற்றச்சாட்டு !



சென்னை,பழம்பெரும் நடிகை மனோரமா மீது, அவரது அண்ணன் மகன் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.
அண்ணன் மகன்
பழம்பெரும் நடிகை மனோரமா, சென்னை தியாகராயநகரில் வசிக்கிறார். அவர் மீது அவரது அண்ணன் மகன் காசிநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவதுதமிழக மக்களால் நேசிக்கப்படும், அனைவராலும் ஆச்சி என்று அழைக்கப்படும் நடிகை மனோரமா எனது அத்தை ஆவார். எங்களது பூர்வீகம் மன்னார்குடி. மனோரமாவுக்கு ஆறுமுகம், கிட்டு என்ற 2 அண்ணன்கள் உண்டு. அண்ணன்கள் இருவரும் தற்போது இறந்து விட்டார்கள்.
நான் கிட்டுவின் மகன். எனது உடன் பிறந்தவர்கள் 4 பேர் உள்ளனர்.

கலைஞர் குலாம்நபி ஆசாத்திடம் கேள்வி : கூட்டுக்குழு முன் ஆஜராக ராஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை; அது ஏன்?

தமிழக அரசியல் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ள, இந்தச் சந்திப்பு குறித்து, தி.மு.க.,வட்டாரங்கள் கூறியதாவது:
கலைஞரிடம் ஆசாத்தெரிவித்தது:
*ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., தொடர வேண்டும். மாநில கட்சிகளுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறது.
*தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, சோனியா விரும்புகிறார். உங்களின் ஆலோசனையுடன் மீண்டும், ஐ.மு., கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.
*தொகுதிகள் ஒதுக்கீட்டில், எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டோம். உங்களுடன்
கூட்டணி அமைக்கவே விரும்புகிறோம்.
*தமிழக காங்கிரஸ் தலைவர்கள், உங்களிடம் பாராமுகமாக இருந்தாலும், மேலிடத் தலைவர்கள் உங்களை பெரிதும் மதிக்கின்றனர்;

Infosys நந்தன் நீலகேனி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ? பெங்களூரு தெற்கு தொகுதியில் !

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், முன்னாள் ஒருங்கிணைப்பு நிர்வாகியாகவும் இருந்த நந்தன் நீலேகனி, ஆதார் திட்ட தலைவராக நியமிக்கப்பட்டதால் அமைச்சருக்கு இணையான அந்தஸ்துடன் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறார். லோக்சபா தேர்தலில் தெற்கு பெங்களூருவில் வெற்றி பெற்றால் அது காங்கிரசிற்கு பெரும் பலமாக இருக்கும் என கட்சி தலைமை நினைப்பதால், அந்த தொகுதியைச் சேர்ந்த நீலேகனிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், நந்தன் நிலேகனி, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகின. ஆனால் இந்த தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்தது. அவர் தெற்கு பெங்களூரு தொகுதியில் போட்டியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகி வந்தன.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

ஒலிகளை டிசைன் செய்வதிலும்,சரியாக அடுக்குவதிலும் ஒரு ’சவுண்ட் டிசைனரும்’ படைப்பாளியாகிறான்


வம்சம் படத்தின் மூலம் கவனத் துக்குரிய இசையமைப் பாளராக அறிமுகமானவர் தாஜ்நூர். பாடல் வரிகளை சிதைக்காத, கதைக்கான இசையைத் தருவதில், இளம் இயக்குநர்களின் தேர்வாக இருக்கும் தாஜ்நூர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 15 ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர். அடுத்தமாதம் கும்பகோணத்தில் ’இசையும் இஸ்லாமும்’ என்ற தலைப்பில் நடைபெற இருக்கும் 8 -வது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில், தமிழகத்தின் முதல் முழுநீள ’சூஃபி இசை நிகழ்ச்சியை’ நிகழ்த்த இருக்கிறார். இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த தாஜ்நூரை ’தி இந்து ’வுக்காக சந்தித்தோம்.
ரஹ்மானிடம் 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தை சுருக்கமாக பகிரமுடியுமா?
நான் படித்தது வளர்ந்தது எல்லாமே சேலத்தில். கணிப்பொறியில் நானொரு ஹார்ட்வேர் பட்டதாரி. படித்து முடித்ததும் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அது 1992 ஆம் வருடம். மல்டி மீடியா படிப்பு அப்போதுதான் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை ஆர்வமாக படித்து முடித்தேன். வீடியோ கேம்களுக்கு பின்னணி இசையமைப்பதைப் பற்றி ஒரு புராஜெக்ட் செய்திருந்தேன். அப்போது நான் இசைக்கு ரசிகனே தவிர, இசையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற இந்தியா உத்தரவு


 தேவயானி விவகாரத்தில் பதிலடி தரும் விதமாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதகரத்தில் பணிபுரியும் தூதர அதிகாரிக்கு இணையான பொறுப்பில் இருந்த ஒருவரை நாட்டு விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது.
விசா மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட தேவயானி கோபர்கடேவை தங்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டது.
அந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்தில், தேவயானிக்கு இணையாக டெல்லியில் பொறுப்பு வகித்த அமெரிக்க அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
தேவயானி அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, இந்தியா வந்து சேர்வதற்குள், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

அதிமுக லோக்சபா வேட்பாளர்கள் பட்டியல் தயார் ? தேனி: ஜெயலலிதா !

 சென்னை: அதிமுகவில் லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிலரது பெயரும் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரையில் 40-ம் நமக்கே என்பதுதான் தாரக மந்திரம்
இதனால் அதன் கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிதான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளில் அதிமுகவே போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
அதிமுகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்கிறது அதிமுக வட்டாரங்கள் வடசென்னையில் ஓரங்கட்டப்பட்ட வெங்கடேஷ் பாபு அல்லது புதிய வரவு பரிதி இளம்வழுதிதான் வேட்பாளர்களாம்

என்னதான் பேசுவதோ? பீகாரில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை From Bala's assistant

அவன் இவன், பரதேசி என இயக்குனர் பாலா இயக்கிய அனைத்து படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ரவி. இவர் இயக்கும்  படம் ‘என்னதான் பேசுவதோ‘. தக்ஷா, விஜய் ராம் உள்ளிட்ட பல்வேறு புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர்  ரிலீஸ் நேற்று நடந்தது. அதில் இயக்குனர் ரவி பேசியதாவது:இயக்குனர் பாலாவுடன் தொடக்க காலத்திலிருந்து பணியாற்றி வருகிறேன். அவரே  என்னைப் பார்த்து, Ôபோய்யா போய் படம் டைரக்டு பண்ணுÕ என்றார். எப்போது நல்ல கதை கிடைக்கிறதோ அப்போதுதான் டைரக்டு செய்வேன் என்று  கூறினேன். அதற்கான கதைக்களம் கிடைத்தது.

தில்லைக் கோயில் தீட்சிதன் சொத்தா? பாப்பாத்தியும் சு சாமியும் தீட்சதனும் கூட்டு சதி


தில்லைக் கோவில் மக்கள் சொத்து திருட்டு தீட்சித பார்ப்பானை விரட்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் 

1. திருச்சி

  • தில்லைக் கோயிலை தீட்சிதனுக்குப் பட்டா போட்டுவிட்டது உச்சுக்குடுமி மன்றம்!
  • தில்லைக் கோயில் மக்கள் சொத்தா, மணி ஆட்ட வந்த தீட்சிதன் சொத்தா?
  • மானமுள்ள தமிழ் மக்களே கொதித்தெழுங்கள்!
என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக 09.01.2014 காலை 10மணிக்கு திருச்சி இரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுச்சொத்தான தில்லை நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் சொத்தாக கொள்ளை இட்டு அனுபவித்து வந்ததை எதிர்த்தும் தமிழில் தேவாரம் பாடும் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்தும் ஆறுமுகசாமி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் இணைந்து 10 ஆண்டுகளாக போராடி கோயிலை அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம். ஆனால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பன தீட்சிதர்களுக்கு ஆதரவாக அரசே துணை நின்று அரசு கட்டுப்பாட்டில் இருந்த கோயிலை தீட்சிதர்கள் கையில் ஒப்படைக்க காரணமாக இருந்துள்ளது. பாப்பாத்தியும் சு சாமியும் தீட்சதனும் கூட்டு சதி

Pakistan தற்கொலை தீவிரவாதியை தடுத்த 14 வயது பள்ளி சிறுவன்: குண்டு வெடித்ததில் 2 பேரும் பலி


Tributes were paid Thursday to a high school student who officials say foiled a suicide bomb attack in an act of “bravery” that cost him his life.
Aitazaz Hassan, 17, was killed instantly - but police and school officials said the lives of up to 1,500 other students at the school in Pakistan had been saved.
"My son did a heroic job and I am proud of his bravery,” said the boy’s grieving father, Mujahid Ali. பெஷாவர், ஜன. 10–
பாகிஸ்தானில் கைபர்– பக்துன்கவா மாகாணம் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கு தற்கொலை தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், ஒரு பள்ளியில் தற்கொலை தாக்குதல் நடத்த முயன்ற ஒரு தீவிரவாதியை மாணவன் ஒருவன் தடுத்து நிறுத்தி தனது உயிரை தியாகம் செய்தான். அதன் மூலம் அந்த பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரை காப்பாற்றினான்.
அவனது பெயர் அய்த் ஜாஷ் ஹசன் (14). இவன் கைபர்–பக்துன்கவா மாகாணத்தின் ஹன்சு மாவட்டத்தில் இப்ராகிம் ஷாயில் என்ற இடத்தை சேர்ந்தவன். அவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9–வது வகுப்பு படித்தான்.
நேற்று அவன் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்தான். அப்போது சந்தேகப்படும் நிலையில் ஒரு மர்ம நபர் அங்கு வந்தான்.
அவன் தற்கொலை தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி என்பதை அறிந்த ஹசன் பரபரப்பானான். அவன் பள்ளிக்குள் நுழைந்து விடாதபடி ஓடோடிச் சென்று ‘கேட்’ வாசலில் அவனை தடுத்து நிறுத்தினான்.
அதற்குள் தற்கொலை படை தீவிரவாதி தான் இடுப்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.
அதில், தீவிரவாதியுடன் சேர்ந்து மாணவன் ஹசனும் உடல் சிதறி பலியானான். இதன் மூலம் உடன் படிக்கும் ஏராளமான மாணவர்களின் உயிரை காப்பாற்றினான்.
அவனது தைரியத்தையும், தியாகத்தையும் கிராம மக்கள் பாராட்டினார்கள். தற்போது இவன் பாகிஸ்தானின் ‘ஹீரோ’ என புகழப்படுகிறான்..maalaimalar.com

Mumbai வடமாநிலத்திலும் பெரியார் கொள்கை முழக்கம்!


மும்பையில் தந்தை பெரியார் மற்றும் பொங்கல் விழா-
சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா
மும்பை, ஜன.8- மும்பையில் வரும் 11, 12 ஆகிய இரு நாள்களிலும் பெரியார் கொள்கை பரப்பு விழா நடைபெற உள்ளது.
பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் சமூகநீதி விருது வழங்கும் விழா முதல் நாள் அன்றும், தந்தை பெரியார் பிறந்த நாள், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் ஆகிய விழாக்கள் மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பிலும் நடை பெற உள்ளன.
அதன் விவரம் வருமாறு:
பெரியார் பன்னாட்டு மய்யம்  அமெரிக்கா - 2013 ஆம் ஆண்டுக்கான சமூக நீதி விருது மராட்டிய மாநில அமைச்சர் ஜகன் புஜ்பல் பெறுகிறார் அமெரிக்காவில் இயங்கி வரும் தந்தை பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதிக்காகத் தொண்டாற்றிய பெருமக்களுக்கு கி.வீரமணி சமூக நீதி விருதுஅளிக்கப்பட்டு வருகிறது.

37வது சென்னை புத்தகக் காட்சி, ஜனவரி 10 முதல் 22 வரை

பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. 37வது சென்னை புத்தகக் காட்சி, ஜனவரி 10 முதல் 22 வரை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் மைதானத்தில் தொடங்க உள்ளது குறித்து.
# வாசலிலிருந்து கண்காட்சி இடம் வரை செல்ல இலவச வாகன வசதி
# கணினி டிக்கெட் வசதி
# மொபைல் எண் கொடுத்தால், தினமும் அந்தந்த நாள் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் தரப்படும்
# புத்தகக் கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் உட்கார்ந்துகொள்ள இடவசதி
# கண்காட்சி வளாகத்தின் உள்ளேயே ஒரு ஏ.டி.எம் வைக்கப்படும். அதில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்

தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார்: அமெரிக்கா சட்ட பாதுகாப்பு வழங்கியது


தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார்: அமெரிக்கா சட்ட பாதுகாப்பு வழங்கியதுஅமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணை தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடே விசா மோசடி மற்றும் பெண் ஊழியரின் சம்பள மோசடி புகார்களுக்காக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே தேவயானி மீதான வழக்கு விசாரணை வருகிற 13–ந்தேதி நியூயார்க் கோர்ட்டில் நடைபெறுவதாக இருந்தது. இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று நியூயார்க் கோர்ட்டில் தேவயானி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தேவயானிக்கு இந்த வழக்கில் இருந்து அமெரிக்கா முழு தூதரக விதிவிலக்கு அளித்து சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளது.

ஜில்லா ! தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை.

ஜில்லா 2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும்
ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான் மகத்.

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.

Delhi 7 மணி நேரத்தில் 4,000 ஊழல் புகார் அழைப்பு

புதுடில்லி: 'ஆம் ஆத்மி' துவக்கிய, ஊழல், லஞ் சத்திற்கு எதிரான, 'ஹெல்ப்லைன்' போன் வசதியில், ஏழு மணி நேரத்தில், 4,000 தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளன.
டில்லி மாநில அரசில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், ஊழியர்களை கண்டுபிடிக்க, பொதுமக்களுக்கான, அவசர உதவி தொலைபேசி எண்களை, முதல்வர், கெஜ்ரிவால் நேற்று முன்தினம் வெளியிட்டார். காலையில், 8:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை செயல்படும் என்றும், அறிவித்தார். இந்த, 'ஹெல்ப்லைனுக்கு' தொடர்பு கொண்டு, லஞ்சம் வாங்குபவர்கள் குறித்த தகவல் சொன்னால், பாதிக்கப்பட்டவரே, புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம் கேட்டவரை, ஆதாரத்துடன் சிக்க வைக்க வழி வகுக்கப்படும் என, கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். இதில் 60% எதிர்கட்சிகள் பழிவாங்கும் நோக்கத்தில் பாதி வெற்று புகார்களை பதிவுசெய்து அவர்களின் இந்த செயலை முடக்க அல்லது வெறுப்பேற்ற இதுபோல் செய்யும் . ஏன் என்றால் தற்போது லஞ்சத்துக்கு எதிரான அரசு ஆட்சியில் இருப்பதால் லஞ்சம் வாங்குவோர் கொஞ்சம் யோசித்துக்கொண்டுதான் இருப்பார்கள் . சிறிது நாள் ஆறப்போட்டுத்தான் வாங்குவார்கள் . இதுதான் இயல்பு ....

ராகுல் - லாலு சந்திப்பு ! கூட்டணி குறித்து பேசியதாக, டில்லி வட்டாரங்கள்

புதுடில்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, லாலு பிரசாத் யாதவ், டில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலை சந்தித்து பேசினார். கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள், கூட்டாக தேர்தலை சந்தித்து, பீகாரில், 29 இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால், அடுத்த, 2009 தேர்தலில், காங்கிரசை, லாலு கைகழுவியதால், அவர் கட்சி, நான்கு தொகுதிகளிலும், காங்கிரஸ், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால், பஸ்வான் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், இம்முறை, காங்கிரசுடன் கூட்டு சேர, லாலு அதீத விருப்பம் தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் தலைவர், சோனியாவை சந்தித்த லாலு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து, வரவிருக்கும் லோக்சபா தேர்தலை, சந்திக்க விரும்புவதாக அறிவித்தார்.

கலைஞர் குலாம் நபி ஆசாத் திடீர் சந்திப்பு ! இடையே எந்த ஒரு பிரச்னையும் இல்லை.குலாம் நபி ஆசாத்


சென்னை: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் நேற்று இரவு திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகிய பிறகு, முதன் முறையாக நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குலாம் நபி ஆசாத்துடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலுவும் உடன் சென்றார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இது குறித்து குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் திடீர் சந்திப்பு வேலூர் சி.எம்.சி கல்லூரியின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்தேன். நான் சென்னைக்கு வரும்போது எல்லாம், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியை சந்திப்பது வழக்கம். அதன் அடிப்படையில்தான் இன்றைய சந்திப்பும் நிகழ்ந்துள்ளது. கூட்டணி தொடர்பாக அவரிடம் எதுவும் பேசவில்லை என்றார். 

வியாழன், 9 ஜனவரி, 2014

தேவாரம், திருவாசம், பெரிய புராணம் பார்ப்பனியத்திற்கு அடியாள் வேலைதான் பார்த்தது!

தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்வே.மதிமாறன் 
ஏதோ தீட்சிதர்கள் மட்டும் தான் சிதம்பரம் கோயில் விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக இருப்பதுபோல் காட்சி உருவாக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த பார்ப்பனர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
பொது விவாதங்களில்… தீட்சிதர்கள் வந்து கலந்து கொள்வதில்லை…அவர்களின் சார்பாக அய்யர், அய்யங்கார்களே கலந்து கொண்டு கடுமையாக பேசுகிறார்கள்.
பிராமணர் சங்கத் தலைவரே அவர்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார்.
இன்றைய நிலையே இப்படி இருக்க… 1922 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த, நீதிக்கட்சியை சேர்ந்த பனகல் அரசர் ராமராய நிங்கர் ‘இந்து பரிபாலன சட்டம்’ கொண்டு வந்து திருப்பதி உட்பட எல்லாக் கோயில்களையும் அரசுடமை ஆக்கியபோது அவரை என்ன பாடுபடித்திருப்பார்கள்?
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் எம்.ஜி.ஆர் பங்களிப்பை பற்றியெல்லாம் அழுத்தமாக குறிப்பிட்டு எழுதுகிறவர்களும் பேசுகிறவர்களும் கோயில்கள் அரசுடமை ஆனதை குறிப்பிடும்போது, ஏன் பனகல் அரசர் பெயரை சொல்வதைக்கூட தவிர்க்கிறார்கள்?
நேற்றைய கேப்டன் டி.வி.யில் நடந்த சிதம்பரம் கோயில் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியை சேர்ந்த தோழர் வெங்கட்ராமன், சிதம்பரம் கோயில் பூர்வீக நிர்வாகம், பிச்சாவரம் ஜமீன் பெயர் உட்பட பலரின் பெயர்களையும் சம்பவத்தையும் ஆதாரத்தோடு குறிப்பிட்டு சிறப்பாக பேசிய அவர், ‘1922 ல் கோவில்கள் அரசுடமை ஆக்கப்பட்டது..’ என்று போகிற போக்கில் சொன்னார்.
பவுத்த, சமண சமயங்களின் எதிரியும் சைவ சமயத்தின் பார்ப்பனியத்தின் அடியாளுமான ராஜராஜ சோழனைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு பேசியவர்,

அகிலேஷ் கவர்ச்சி நடிகைகளின் ஆட்டத்தால் மகிழ்ச்சி ! முசாபர்நகர் மக்கள் குளிரால் கண்ணீர் மழை !

உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் மக்கள் குளிரால் நடுங்கி உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அது பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் பாலிவுட் நடிகர்களின் கலை நிகழ்ச்சியை அம்மாநிலத்தில் நடத்தி உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான சல்மான்கான், தீபிகா படுகோனே மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோர் கலந்துகொண்டு அகிலேஷை மகிழ்ச்சிக் களிப்பில் திளைக்க வைத்தனர். அவரது இந்த செயல் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது ஆனால் அவர் இது பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் அரசு பணத்தை தண்ணீராக செலவிட்டு பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். மேலும் இன்னும் திரைக்கே வராத மாதுரி தீட்சித் படமான தேஷ் இஷ்கியாவிற்கும், சைப் அலி கானின் புல்லட் ராஜா படத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தனது மாநிலத்தில் நடந்ததால் அவர்களுக்கு இப்பணமழையை பரிசாக வழங்கியிருக்கிறார்.

சென்னை IIT வளாகத்தில் ஒரே நாளில்வாகனங்கள் மோதி 4 மான்கள் பலி:சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எங்கே போய்விட்டார்கள்


சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் நான்கு மான்களின் சடலம் மீட்கப் பட்டுள்ளது. வாகனங்கள் மோதி பலியானதாகவும், நாய்கள் கடித்துப் பலியானதாகவும் இருவேறுக் கருத்துக்கள் நிலவுவதால் மான்களின் மரணத்தில் குழப்பம் நீடிக்கிறது. சென்னை ஐஐடி அமைந்துள்ளப் பகுதியில் வனப் பகுதியின் அளவு குறைந்து வருவதாலும், வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதாலும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக விபத்துக்களில் சிக்கி மான்கள் உள்ளிட்டவை பலியாவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை ஐஐடி வளாகத்தில் நான்கு இறந்த மான்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. உயிரிழந்த மான்கள் வண்டிகளில் அடிபட்டு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறார் மேதா பட்கர்?


டெல்லி: சமூக ஆர்வலர் மேதா பட்கரை ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் நேரில் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி, 9 மாதங்களிலேயே டெல்லி மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மியில் பிரபலங்கள் பலரும் வரிசைகட்டி இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் இப்போது சமூக ஆர்வலர் மேதா பட்கரும் இடம்பிடிக்க இருக்கிறார். பல்வேறு உரிமைப் போராட்டங்களை நடத்தி வரும் மேதா பட்கரை, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் நேற்று சந்தித்துப் பேசினார். ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறார் மேதா பட்கர்? அப்போது மேதா பட்கரை, ஆம் ஆத்மி கட்சியில் இணைய வருமாறு யோகேந்திர யாதவ் கேட்டுக் கொண்டார். இதற்கு மேதாபட்கர் 'சாதகமான' பதிலை கூறியதாக யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். மேதா பட்கரை தமது கட்சிக்கு இழுப்பதன் மூலம் குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் பழங்குடியினர் மற்றும் கிராமப்புற வாக்குகளை எளிதில் கவர முடியும் என கணக்குப் போடுகிறது ஆம் ஆத்மி. மேதா பட்கரும் ஆம் ஆத்மி கட்சியினர் அழைப்புவிடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். விரைவில் அவர் ஆம் ஆத்மியில் இணையலாம் எனக் கூறப்படுகிறது
tamil.oneindia.in

ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக நினைக்க வேண்டாம் ! பாஜகவின் நடுக்கம் !


ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக நினைக்க வேண்டாம்; பா.ஜ.,விற்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் எச்சரிக்கை
பாரதீய ஜனதா கட்சி ஆம் ஆத்மியை தீவிர சவாலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
பா.ஜ.,, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என பா.ஜ.,விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும், பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். nakkheeran.in

ஆம் ஆத்மி கட்சியை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம் ! காங்கிரஸ் ஜெயராம் ரமேஷ் பேச்சு!


டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை யாரும் கிண்டல் கேலி செய்ய வேண்டாம். அது அப்படிச் செய்பவர்களுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமையன்று இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ரமேஷ், ஆம் ஆத்மி கட்சியை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம். அது தவறு. அப்படிச் செய்தால் அவர்களுக்கே அது பாதகமாக அமையும். ஆம் ஆத்மியைக் கேலி செய்வது நமக்கு நாமே 'ஆப்பு' வைத்துக் கொள்வது போல.. ஜெயராம் ரமேஷ் பேச்சு! ஆம் ஆத்மி கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் புதுப் புது அவதாரங்களில் மக்கள் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு வியாபிக்கும் அபாயம் உள்ளது. அவர்களை நாம் ஒதுக்கித் தள்ள முடியாது. காரணம், அவர்கள் ஊழலுக்கு எதிராக போராடுகிறார்கள்.

அழகிரி ஆதரவாளர்கள் 5 பேர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!


சென்னை: மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. பொறுப்பாளர்கள் 5 பேர் அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் பி.எம்.மன்னன் ( மதுரை முன்னாள் துணை மேயர் ) , எழில் மன்னன், முபாரக் மந்திரி, அன்பரசு இளங்கோ, பாலாஜி ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் 5 பேரும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர். இவர்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் இவர்கள் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் நான் நடிகர்,நடிகைகளிடம் நன்றியை எதிர்பார்ப்பதில்லை: ஆர்.பி.சவுத்ரி

சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.சவுத்ரி, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘நடிகர் விஜய்க்கும், சூப்பர் குட் பிலிம்சுக்கும் எப்போதுமே ஒரு ராசி உண்டு. எங்கள் தயாரிப்பில் அவர் ஏற்கனவே நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி ஆகிய படங்கள் வெள்ளிவிழா கண்டன. இப்போது அவர் நடித்துள்ள ‘ஜில்லா,’ எங்கள் தயாரிப்பில் 85-வது படம். நாங்கள் தயாரித்த ‘அரண்’ என்ற படத்தில், மோகன்லால் நடித்தார். அந்த படம், ‘கீர்த்தி சக்ரா’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன. எங்கள் நிறுவனத்துக்கு, இது வெள்ளிவிழா ஆண்டு. அதில், விஜய்யும், மோகன்லாலும் இணைந்து நடித்து, ‘ஜில்லா’ படம் வெளிவர இருக்கிறது. இதுவரை வந்த விஜய் படங்களை விட, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். படத்தின் மீது உள்ள நம்பிக்கையில், மோகன்லால் சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு பதில், கேரள வினியோக உரிமையை வாங்கியிருக்கிறார். அங்கு அவர், 300 தியேட்டர்களில் படத்தை வெளியிடுகிறார். தமிழ்நாட்டில், 600 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் 250 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

அற்புத மருந்துகளின் வித்தகர்! Indian scientist who made important contributions to the treatment of cancer. The Forgotten Hero


"அநேகமாக, நீங்கள் எல்லப்பிரகத சுப்பாராவ் என்ற பெயரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இருப்பினும், அவர் வாழ்ந்தார் என்பதாலேயே நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழக்கூடும்."
டாரென் ஆன்ட்ரிம் 1950-ல் ஆர்கோசி வார இதழில் இவ்வாறு குறிப்பிட்டார். ஏறக்குறைய 65 ஆண்டுகள் கழித்து இன்றும் மேற்கூறிய வாசகங்கள் உண்மையாகவே விளங்குகின்றன.
எக்ஸ்-ரே கதிர்கள், பெனிசிலின் போன்ற ஒற்றை முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகளின் பெயர்களை நம் நாட்டில் சிறு குழந்தை கூட சொல்லும். ஆனால், கோடானகோடி மக்களை கொடிய நோய்களிலிருந்து காக்கும் அருமருந்துகள் பலவற்றை கண்டுபிடித்தவர் ஓர் இந்தியர் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது.
அவர் ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் பிறந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர் எல்லப்பிரகத சுப்பாராவ்.
அன்றைய மதராஸ் மாகாணம் பீமாவரத்தில் 1895ஆம் ஆண்டு எல்லப்பிரகத சுப்பாராவ் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். கடும் வறுமையாலும், உறவினர்களின் இறப்பாலும் சுப்பாராவின் இளமைப் பருவம் சூழப்பட்டிருந்தது. இதன் காரணமாக தன் மூன்றாவது முயற்சியில் பள்ளிப் படிப்பை முடித்தார். இடையில், காசிக்கு சென்று யாத்ரீகர்களுக்கு பழம் விற்றால் பெரும் செல்வம் ஈட்டலாம் என எண்ணி வீட்டை விட்டோடிய சுப்பாராவ், பாதியில் மீட்டுக் கொணரப்பட்டார்.

ஆம் ஆத்மி அலுவலகம் மீது தாக்குதல்: இந்து (BJP) ரக்‌ஷா தள ஒருங்கிணைப்பாளர் உள்பட 12 பேர் கைது

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை ஒடுக்க ராணுவம் அனுப்பப்படுவது குறித்து பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரசாந்த் பூசன் கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காசியாபாத்தில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகம் மீது நேற்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. கெஜ்ரிவால் வீட்டின் அருகே உள்ள இந்த அலுவலகத்திற்கு காலை 11 மணியளவில் வந்த சுமார் 50 பேர், கற்களை வீசி தாக்கியதுடன், அலுவலக ஜன்னலை அடித்து உடைத்தனர். அங்குள்ள ஊழியர்களையும் தாக்க முற்பட்டதுடன் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர்கள், 'இந்து ரக்சா தள்' கொடியை ஏந்தி வந்தனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் ரகசிய கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தன. இதையடுத்து வழக்கு பதிந்த போலீசார் இந்து ரக்‌ஷா தள தேசிய ஒருங்கிணைப்பாளர் பிங்கி சவுத்ரி உள்பட 12 பேரை கைதுசெய்துள்ளனர். மேலும் சிலரை கைது செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பிங்கி சவுத்ரி கைதானதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இந்திராபுரம் போலீஸ் நிலையத்தை முற்றைகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களை போலீசார் தடியடி நடத்தி களைத்தனர்.  malaimalar .com 

அரசு மனைகளுக்கு தானமாக வந்த கிட்னிகள் தனியார் மனைகளுக்குசெல்கிறது !100 கோடிக்கு மேல் லாபம் ! கெட்டிக்கார” தனியார் மருத்துவமனைகள் !


மூளைச் சாவால் இறந்தவர்களின் உடலை தானம் செய்யும்போது, அதில் இருந்து பெறப்படும் உறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிற அவல நிலை தமிழகத்தில் தொடர்கிறது. கிட்னி போன்ற உடல் உறுப்புகளின் தேவையுள்ள ஏழை நோயாளிகளின் பட்டியலை அரசு மருத்துவமனைகள் பராமரிக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மூளைச்சாவும் உடல் தானமும்
மூளைச்சாவால் இறப்பவர்களின் உடலில் உள்ள சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல் உள்ளிட்ட உறுப்புகளைக் கொண்டு, பல பேரின் உயிரைக் காப்பாற்றலாம் என்பதால், கடந்த 2008-ம் ஆண்டு மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. இதற்கென உடல்உறுப்பு தான மத்திய பதிவுத்துறை (Central Registry For Organ Donation) என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தியது. ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாக இந்த அமைப்பில் மருத்துவமனைகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.  

இந்தியப்பெண்கள் சிகரெட் புகைப்பதில் உலகிலேயே இரண்டாவது இடம் ! ரொம்ப விசேஷங்க !


India home to second highest number of women smokers globallyஉலகில் அதிக அளவு சிகரட் குடிக்கும் பெண்கள் உள்ள நாடுகலில் இந்தியாவிற்கு 2வது இடம்
அமெரிக்கா மெடிக்கல் அசோசியேன் சிகரட் புகைப்பவர்கள் குறித்து (1980-2012) வெளியிட்ட ஆய்வில், இந்தியாவில் 12.1 மில்லியன் பெண்கள் தற்போது சிகரெட் புகைப்பதாக கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை விட அதிகமாகும். இந்தியாவில ஒரு நாளைக்கு ஒருவர் புகைக்கும் சிகரட்டுகளின் சராசரி எண்ணிக்கை 8.2 ஆகும்.
கடந்த 1980 இல் இந்தியாவில் புகை பிடித்த ஆண்களின் எண்ணிக்கை 33.8 சதவீதமாக இருந்தது தற்போது 2012 ன்படி 23 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆய்வில் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 1980 இல் 721 மில்லியனாக இருந்த சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டு கணக்குப்படி  967மில்லியனாக அதிகரித்துள்ளது.
10 ஆண்களில் 3 பேர் சிகரெட் புகைப்பதாகவும்,20 பெண்களில் ஒருவர் சிகரெட் புகைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் புகைபிடிப்பவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதமாகவும், உடல் நலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதமாகவும் உள்ளது. புகைபிடிப்பது உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்று மருததுவர்கள் தொடர்ந்து  எச்சரித்து வருகின்றனர் இந்தியப்பெண்கள் உலகிலேயே அதிகம் சிகரெட் புகைப்பதில் இரண்டாவது இடம் ! ரொம்ப விசேஷங்க !

திமுகவிலேயே அரசியல் தெரிந்த ஒரே ஆள் தற்சமயம் அழகிரி தான்

முடிவு எடுக்க தெரியாமல் முழிக்கும் விஜயகாந்த், சீட்டு பேரமும் பெட்டி பேரமும் இன்னும் படியவில்லையா??? 
அப்படி, இப்படி, என்று பேசியவர்களுக்கெல்லாம் சேர்த்து,. அப்பனுக்கே இவ்வளவு பெரிய ஆப்பா வச்சுட்டானே. உண்மையிலேயே அழகிரி பேக்கு இல்ல, கில்லாடிதான்.அப்போ தேமுதிக, திமுக கூட்டணி காற்றோடு கரைந்து விட்டது.இத்துணை அரசியல்வாதிகள் காலங்காத்தாலே இவ்வளவு ஆக்க ரோசமா அறிக்கை விட்டுள்ளதால் அழகிரி ஆக்சன் எத்தனை பேரை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்து இருக்கும். சும்மா சொல்ல கூடாது நெத்தி அடி. இப்போ எஞ்சி நிற்பது தேமுதிக விற்கு இரண்டு கட்சி தான் ஒன்னு பிஜேபி அடுத்தது காங்கிரஸ். பிஜேபி கூட கருணாநிதி கூட்டணி கிடையாது என்று தெளிவாகக் கூறிவிட்டார்(சிறுபான்மை ஓட்டை மனதில் வைத்து) ஆக எஞ்சி நிற்பது காங்கிரஸ். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறதாம். ஆகவே கேப்டன் காங்கிரஸ் பக்கம் போனால் வேறு வழியில் கலைஞர் ஆப்பு வைப்பார் ஆகவே இப்பொழுதே பிஜேபி யுடன் தான் கூட்டணி என்று அறிவித்து விட்டு தேர்தல் வேலையை தொடங்க வேண்டியது தான். இல்லை என்றால் தனித்து போட்டி என்று அறிவித்து விட்டு பாமக மாதிரி தேர்தல் வேலையை முடுக்கி விடுங்கள்.திமுகவிலேயே அரசியல் தெரிந்த ஒரே ஆள் தற்சமயம் அழகிரி தான் என்பதை இப்பொழுதாவது ஒத்து கொள்ளத்தான் வேண்டும். ஒரு மூவில் எத்தனை காய்கள் வீழ்ந்து விட்டன. இந்தாளுகிட்டத்தான் திமுக வரும் பாருங்கள். P. Kannan - Bodinayakkanur,இந்தியா
 

தி.மு.க.,வில் அழகிரி ! கூட்டணி வைத்தால் விஜயகாந்திற்கும் அதே நிலை ஏற்படலாம் ? தினமலர் .

தி.மு.க.,வில் அழகிரி நடத்தப்பட்ட விதத்தால், "அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால், விஜயகாந்திற்கும் அதே நிலை ஏற்படலாம்' என்ற கருத்து, தே.மு.தி.க.,வினர் மத்தியில் பரவி உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க.,விடம் அவமானப்பட்ட தே.மு.தி.க.,வினர், அழகிரி விவகாரத்தால், லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க.,வுடன் கூட்டணி சேர விரும்பாத நிலை உருவாகி உள்ளது. "2016ல் என்ன நடக்கும்?': தே.மு.தி.க.,வின் பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக, ஆவேசமாக பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் கருத்துக்கு, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, விஜயகாந்த் ஆலோசித்து வருகிறார்."தி.மு.க.,வில், தனக்குப் பின், ஸ்டாலின் தான் தலைவராக இருக்க வேண்டும் என, கருணாநிதி முடிவு செய்துள்ளதால், அதற்குத் தடையாக, யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக, கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, ஓரங்கட்டப்படுகிறார்' என, அக்கட்சியினரே கருத்து தெரிவித்து வருகின்றனர்.தினமலர்

புதன், 8 ஜனவரி, 2014

ஹைதராபாத்தில் சோனியா காந்திக்கு கோயில் ! 500 கிலோ வெள்ளியில் சிலை

ஹைதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் அமைக்கவிருப்பதாக அங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். தெலுங்கானா அமைப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது சொந்த செலவில் தெலுங்குத்தாய் போன்று அம்மன் உருவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., டாக்டர் சங்கரராவ் கூறுகையில்: தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை சோனியா நிறைவேற்றியுள்ளதால் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் கோயில்  அமைக்க முடிவு செய்துள்ளேன்.
இந்த கோயில், பெங்களூரூ- ஹைதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள எனது மகளுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும். இதற்கு சோனியா காந்தி சாந்தி வதன் என்று பெயரிடப்படும். தெலுங்கானா மக்கள் இங்கு சென்று நன்றி செலுத்த இந்த கோயில் ஏதுவாக இருக்கும் என்றார். இந்த சிலை 500 கிலோ எடை கொண்ட வெள்ளியால் வடிவமைக்கப்பட்டுள்ளது  dinakaran.com

பாசத்தை காட்டினார் ஒல்லி நடிகர். நொந்து நூலாகியுள்ளாராம்

சிவ நடிகரை தன் உடன் பிறவா தம்பி போல பாசத்தை காட்டினார் ஒல்லி நடிகர். கொலவெறி படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்து, நல்ல சம்பளமும் வழங்கினார். அதன் பிறகு ஏறுமுகமாகி, இன்று கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை தேதி கொடுத்துள்ளாராம் ஒல்லி நடிகர் வளர்த்துவிட்ட சிவ நடிகர். இதற்கிடையே தனது படங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் நொந்து நூலாகியுள்ளாராம் ஒல்லி நடிகர். இந்த நிலையில் தான் அறிமுகம் செய்த நடிகரிடம் தயாரிப்பாளர்கள் படையெடுப்பது வேறு வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியுள்ளது.இதோடு சேர்ந்து ஒல்லி நடிகரை கண்டு கொள்வதும் இல்லையாம். இதனால், அடிக்கடி பேசிவந்த இருவரும் தற்போது போனில் கூட தொடர்பு கொள்வதில்லையாம்.

லஞ்சத்தை ஒழிக்க ஹெல்ப்லைன்: கேஜ்ரிவால் அறிவிப்பு


 டெல்லியில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை வளைப்பதற்கு, பொது மக்களுக்கான அவசர உதவி தொலைப்பேசி எண்களை முதல்வர் கேஜ்ரிவால் வெளியிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "அதிகாரிகள் எவரேனும் லஞ்சம் கேட்டால், 011- 2735 7169 என்ற ஹெல்ப்லைனுக்கு தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லலாம். இது, ஹெல்ப்லைன் தானே தவிர, புகார் எண் கிடையாது" என்றார்.
இந்த ஹெல்ப்லைனுக்குத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னால், பாதிக்கப்பட்ட நபரே புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம் கேட்டவரை ஆதாரத்துடன் சிக்க வழிவகுக்கப்படும்.

48 வருடத்துக்கு பிறகு எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் நவீன டிஜிட்டல் ரிலீஸ்

எம்.ஜி.ஆர். நடித்துள்ள ‘ஆயிரத்தில் ஒருவன்‘ படத்தின் ஆடியோ 48 வருடத்துக்கு பிறகு நாளை மறுதினம் மீண்டும் வெளியிடப்படுகிறது. 1965ம் ஆண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்‘. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து நடித்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்‘ பி.ஆர்.பந்துலு இயக்கம். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை. பிலிம்ரோலில் தயாராகி வெளியான இப்படம் தற்போது நவீன டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இப்படம் 48வருடத்துக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ்நாடு தவிர ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் ரிலீஸ் ஆக உள்ளது.
இதற்காக 100 பிரின்ட் போடப்படுகிறது. இதற்கிடையில் இம்மாதம் 10ம் தேதி இப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான விழா சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடக்கிறது. டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் ஒரு படத்தின் ஆடியோ மீண்டும் ரிலீஸ் ஆவது இதுதான் முதல்முறை. ஏற்கனவே சிவாஜி நடித்த ‘கர்ணன்‘ படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் அதன் ஆடியோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .tamilmurasu.org

சுவரில் துளை போட்டு பெரம்பூர் நகைக் கடையில் ரூ.1 கோடி நகை கொள்ளை !

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் உள்ள நகைக்கடையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயுள்ளன. கடையின் பின்புற சுவரில் துளைபோட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து கைவரிசை காட்டி உள்ளனர். இதனால், பெரம்பூர் பகுதியில் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் வசிப்பவர் சந்தோஷ் (49). ராஜஸ்தானை சேர்ந்த இவர், அதே ரோட்டில் சந்தோஷ் நகை மாளிகை என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் முன்புறம் ஷட்டர் போட்டு, அதற்கு முன்பாக இரும்பு கம்பி கேட்டும் உள்ளது. பக்கவாட்டில் சிறிய சந்து உள்ளது. அதன் வழியாக சென்றால், கடையின் பின்புறம் செல்லலாம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சந்தோஷ் மற்றும் ஊழியர்கள் சென்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை கடைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் வேலை விஷயமாக சந்தோஷ், வெளியூர் சென்றுவிட்டார். இன்று காலை கடையை திறக்க சந்தோஷ் தம்பி ராஜேஷ் சென்றுள்ளார். முன்பக்க ஷட்டரை திறந்து கடைக்குள் சென்ற அவர், ஷோகேசில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த செயின், மோதிரம், நெக்லஸ் உள்பட அனைத்து நகைகளும் மாயமானது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். நகைகள் முழுவதும் கொள்ளை போனது கண்டு பதற்றத்துடன் கடை முழுவதும் சுற்றி, சுற்றி வந்தார்.

தேவ்யானி': யு.எஸ். தூதரக கிளப்பை மூட உத்தரவு- போக்குவரத்து விதிகளை மதிக்கவும் உத்தரவு


டெல்லி: தேவ்யானி கோப்கரடே விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கடி மற்றும் எரிச்சல் தரும் வகையிலான அடுத்த கட்ட நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள கிளப்பை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி வரை இதற்கு டைம் தரப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை அமெரிக்க தூதகரம் மற்றும் அதன் அதிகாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இன்னொரு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க தூதரகத்தில் எந்தவிதமான வணிக ரீதியிலான நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் இருக்கக் கூடாது என்றும் இந்தியா உத்தரவிட்டுள்ளது. 'தேவ்யானி': யு.எஸ். தூதரக கிளப்பை மூட உத்தரவு- போக்குவரத்து விதிகளை மதிக்கவும் உத்தரவு மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகளின் கார்கள் இனிமேல் உள்ளூர் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2013 சிறப்பான படங்களும் சுவாரஸ்யமான முயற்சிகளும் நடந்தேறிய ஆண்டு

சி.சரவணகார்த்திகேயன் 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகவும் செழிப்பான ஆண்டு. குறிப்பிட்டுச் சொல்லும் எண்ணிக்கையில் சிறப்பான படங்களும் சுவாரஸ்யமான முயற்சிகளும் நடந்தேறி இருக்கின்றன. வரும் ஆண்டுகளில் இது தொடரவும் அதிகரிக்கவும் வேண்டும். ஓர் எளிய‌ ரசிகனாய் அதை அங்கீகரிக்கும் முறையில் தொடர்ந்து 12வது ஆண்டாக இவ்வருடமும் எனது விரிவான‌ திரைப்பட விருதுப் பட்டியலை வெளியிடுகிறேன். தமிழ் பேப்பரில் இவை வெளியாவது இது மூன்றாவது முறை.
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள்
* தங்க மீன்கள் * ஓநாயும் ஆட்டுக்குட்டியும் * பரதேசி * விஸ்வரூபம் * சூது கவ்வும் * மதயானைக் கூட்டம் * உதயம் NH4 * சிங்கம் 2 * பாண்டிய நாடு * மூடர்கூடம் * ஹரிதாஸ் * கௌரவம் * இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா * கல்யாண சமையல் சாதம் * ஐந்து ஐந்து ஐந்து * இவன் வேற மாதிரி * வருத்தப்படாத வாலிபர் சங்கம் * பிரியாணி * வத்திக்குச்சி * கடல் * விடியும் முன் * 6 * இரண்டாம் உலகம் * ஆரம்பம் * என்றென்றும் புன்னகை * ராஜா ராணி *

சிந்து சமவெளி நாகரிகம் – II இங்கே சாலைகள் 30 மீட்டர் அடி அகலம் கொண்டவை !

ancient-indus-mapபண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 25
நகரங்கள், வீடுகள்
சிந்து சமவெளி கால நகரங்கள் அற்புதமாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு பகுதிகள்: ஒரு பகுதி தரை மட்டத்தில், இன்னொரு பகுதி செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றின்மேல். இரு பகுதிகளையும் கோட்டைகள் பிரித்தன. உயரத்தில் இருந்த பகுதி அக்ரோப்போலிஸ் என்று அழைக்கப்பட்டது.  இங்கே, பொதுமக்கள் கூடும் அரங்கங்கள், கோயில்கள் , நெற்களஞ்சியங்கள் இருக்கும். மொஹெஞ்சதாரோ நகரத்தில் பொதுக் குளியலறை இருந்தது.
தரைமட்டப் பகுதிதான் மக்கள் வசிக்கும் இடம். இங்கே சாலைகள் 30 மீட்டர் அடி அகலம் கொண்டவை. எல்லாச் சாலைகளும் செங்குத்தாகச் சந்தித்தன. இதனால், சாலைகளுக்கு நடுவே இருந்த பகுதிகள் செவ்வக வடிவம் கொண்டவை.  இந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டன.  கட்டுமானத்துக்கு உலையில் சுடப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை 1:2:4 என்னும் விகிதத்தில் உயரம், அகலம், நீளம் என சமச் சீரானவை. ஒரு சில வீடுகள் மிகப் பெரியவை. மாடி வீடுகளும் இருந்தன. பெரிய வீடுகளில் விசாலமான முற்றம் இருந்தது.
பண்டைய நாகரிகங்களில் சிந்து சமவெளியில்தான் மிகச் சிறந்த சுகாதார வசதிகள் இருந்தன. எல்லா வீடுகளிலும், குடிநீர் வசதிகளும், குளியல் அறைகளும், கழிப்பறைகளும் இருந்தன.  ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? நகரங்களில் கழிவுநீர் வடிகால் அமைப்பு இருந்தது. எல்லா வீதிகளிலும் மூடிய சாக்கடைகள் இருந்தன. வீடுகளின் அசுத்த நீர் இவற்றில் சென்று சேரக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.  5000 வருடங்களுக்கு முன்னால், இத்தனை கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட நகரங்களும், வீடுகளுமா?

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் ! கனிமொழி மனு மீது 21–ந்தேதி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி எம்.பி. கைதாகி பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து கனிமொழி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘‘2ஜி ஒதுக்கீடு முறைகேடுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
மேலும் அவர், ‘‘கலைஞர் தொலைக்காட்சியில் எனக்கு 20 சதவீத பங்கே உள்ளது. நான் அதன் இயக்குனர்களில் ஒருவராக 2007–ம் ஆண்டு ஜூன் மாதம் 6–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இரண்டு வாரமே இருந்தேன். அதன்பிறகு 1½ ஆண்டு கழித்தே 2009–ல் நிதி பரிமாற்றம் நடந்தது.

சென்னை ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்தது! போட்டி அலுவலகமும் திறப்பு!!


சென்னை: தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. சென்னையில் ஆம் ஆத்மி கட்சியின் போட்டி அலுவலகமும் திறக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் கால் பதித்தது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகமும் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது. சென்னை ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்தது! போட்டி அலுவலகமும் திறப்பு!! இந்நிலையில் கட்சியின் மாநில பொருளாளர் ஆனந்தகணேஷ் என்பவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். "மாத இறுதியில் கட்சியின் தமிழக மாநாடு நடைபெறும். இதில் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொள்கிறார்.

கலைஞர் - அழகிரி சந்திப்பு ! புதிய மதுரை திமுக பொறுப்பாளர்கள் கலைஞரை சந்தித்து பேசினா்

திமுக தலைவர் கலைஞரை திமுக தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார்.மு.க.அழகிரிக்கு வரும் 30ம் தேதி பிறந்த நாள்.   இதையொட்டி மதுரை முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து சொல்லி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதுதான் திமுகவில் பெரும் பிரச்சனையை கிளப்பியது.   வாழ்த்து போஸ்டரில்,  சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் பங்கேற்காத அழகிரியை, பங்கேற்றது மாதிரி போஸ்டர் ஒட்டியிருந்தனர்.  இது கட்சி தலைமையை எரிச்சல டையச்செய்தது.இதற்கு திமுக தலைவர் கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்தார்.   இதையடுத்து நடைபெற்ற சில சம்பவங்களால் மதுரை திமுகவையே கூண்டோடு களைத்துவிட்டு,  புதிய பொறுப்பாளர்களை நியமித்தார் கலைஞர்.இந்நிலையில்,  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,  தேமுதிக திமுகவுடன் சேரவேண்டாம்.

விசாரணைக்கு அழைத்து சென்ற சிறுவனின் வாய்க்குள் சுட்ட சென்னை போலீஸ் !

சென்னை: சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிறுவனின் வாயில் சென்னை நீலங்கரை காவல் நிலைய போலீஸார்   துப்பாக்கியை வைத்து சுட்டனர் . அப்போது சிறுவனின் வாயில் குண்டு பாய்ந்தது. பலத்த காயத்துடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கைக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில் திங்களன்று கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் இரவில் 16 வயது சிறுவன் ஒருவனை அழைத்து வந்தனர். அவனிடம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிறுவன் தான் திருடவில்லை என கூறினான். இந்த நிலையில் செவ்வாய்கிழமை 4 மணிக்கு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவனின் வாயில் வைத்து திருடினாயா? என  விசாரணைக்கு அழைத்து சென்ற சிறுவனின் வாய்க்குள் சுட்ட சென்னை போலீஸ்
tamil.oneindia.in

செவ்வாய், 7 ஜனவரி, 2014

மாஜி காதலர்கள் சிம்பு-நயன்தாரா மீண்டும் சேர்ந்து நடிக்கும் காட்சி படமாகிறது

சென்னை:மாஜி காதலர்கள் சிம்பு நயன்தாரா நடிக்கும் காட்சி நாளை படமாகிறது.சிம்பு, நயன்தாரா ஜோடி இணைந்து நடித்த படம் ‘வல்லவன். நெருங்கி பழகிவந்த சிம்பு, நயன்தாரா காதல் ஜோடிகளாகவும் வலம் வந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இதில் மனம் உடைந்த நயன்தாரா நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சுமார் ஒரு வருட இடைவெளிக்கு பிறகே நடிக்க வந்தார். இதற்கிடையில் பிரபு தேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. பிறகு அவரிடமிருந்தும் பிரிந்தார். காதல் வாழ்க்கையை மறந்து மீண்டும் நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்ததுடன், கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெயரையும் தட்டிச்சென்றிருக்கிறார்.மீண்டும்

தேவயானி விவகாரத்தில் 30 நாட்களில் ஜெயிப்பாரா இந்திய டாப் ராஜதந்திரி ஜெய்சங்கர்?

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ராஜதந்திர முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ள, இந்திய துணைத்தூதர் தேவயானி விவகாரத்தில், வழக்கை 30 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார், தேவயானியின் வக்கீல்.
இந்த வழக்கின் விசாரணை, இம்மாதம் 13-ம் தேதி நீதிபதி சாரா நெட்பர்ன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக தற்போது தேதி குறிக்கப்பட்டுள்ளது. விசாரணையை 30 நாட்களுக்கு பிற்போட்டு, பிப்ரவரி 12-ம் தேதிக்கு மாற்ற வேண்டும் என தேவயானியின் வக்கீல் டேனியல் அர்ஷாக் மனு செய்துள்ளார்.