இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரை
ஷரி ஆ சட்டத்தின் பிரகாரம் கல்லால் எறிந்து மரண தண்டனை
நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் நேற்று
பாராளுமன்றத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
மேற்படி தண்டனைக்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில்
சுமந்திரன் எம்.பி.யின்
இச்செயற்பாட்டுக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதீன், உறுப்பினர்களான
நவவி, மரிக்கார் மற்றும் இஷாக் ஆகியோர் எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.
இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.;
பாராளுமன்றத்தின் நேற்று வெள்ளிக்கிழமை
அமர்வின்போது இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்
திட்டத்தின் இரண்டாம் நாள் குழு நிலை விவாதத்தில் பேசிக் கொண்டிருந்த
சுமந்திரன் எம்.பி,
இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர்
சவூதியில் கல்லால் எரிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என்றும்
அதற்காக தனது கவலையை வெளியிடுவதாகவும் கூறினார்.