ராதா மனோகர் : தமிழ்நாட்டின் எதிரிகள் பூவுலகு காதலர்கள் என்ற போர்வையிலும் இருப்பார்கள்
எந்த நாட்டிற்கும் மேம்பாலங்கள் என்பதுதான் வளர்ச்சியின் முக்கிய அடையாளங்கள்
மேம்பாலங்கள் இல்லையென்றால் வளர்ச்சி என்பது மாட்டு வண்டி யுகத்தை தாண்டவே முடியாது
இவர் என்ன சொல்கிறார் என்றால் மேம்பாலங்கள் நாட்டின் அழிவாம்!
இந்தியாவில் மேம்பாலங்கள் என்றாலே திமுகதான் எவருக்கும் ஞாபகத்தில் வரும்!
திமுக மீதான காழ்ப்பு உணர்ச்சி என்னவெல்லாம் பேசத்தூண்டுகிறது?
இந்த பூவுலகு புண்ணாக்கு சுந்தர ராஜன் என்பவர் போக்கட்டோ என்று எதோ கூறுகிறார்.
ஏன் டோக்கியோ நியூ யார்க் பாரிஸ் டொரோண்டோ லண்டன் சிகாகோ போன்ற உலகின் அத்தனை உயர் நகரங்களும் இன்று உயர்ந்து இருப்பதே மேம்பாலங்களால்தான்!.
நான் மிகவும் தெளிவாகவே கூறுகிறேன்
இவர் தமிழ்நாட்டு எதிரிகளிடம் கூலி பெற்ற வாய் வியாபாரிதான்
சீமாண்டிகளை விட ஆபத்தான கைக்கூலி இவர்
சனி, 5 ஆகஸ்ட், 2023
பூவுலகு - தமிழ்நாட்டு எதிரிகளிடம் கூலி பெற்ற வாய் வியாபாரி
ஹரியானாவில் சங்கிகள் ஊர்வலம் கலவரம் கட்டிடங்கள் இடிப்பு
மாலை மலர் : ஜூலை 31 அன்று, அரியானாவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை என ஒரு யாத்திரையை நடத்தினார்கள்.
யாத்திரை தொடங்கிய கோயிலிலிருந்து சில கிலோமீட்டர் தூரம் சென்றதுமே பக்தர்கள் மீது அங்குள்ள கட்டிடங்களிலிருந்து கல்வீச்சு நடைபெற்றது. இதில் பாதுகாப்புக்காக இருந்த காவல்துறை வாகனங்களும் சேதமடைந்தன.
இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை; தேர்தலில் நிற்க தடை
நக்கீரன் : ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
மேலும் அவர் அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத வண்ணம் தகுதியிழந்துள்ளார்.
இம்ரான் கான் 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார்.
அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் பாராளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார்.
தலைமன்னார் இறங்குதுறை புனரமைப்பு... தனுஷ்கோடி தலைமன்னார் கப்பல் போக்குவரத்து
நியூஸ் பர்ஸ்ட் - Bella Dalima : Colombo (News 1st) இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது .
37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை துறைமுகங்கள், கப்பல்துறை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (04) சென்று பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது, இந்தி சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதன் மூலம் வடக்கு அபிவிருத்தியடையும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டு சிறை தண்டனை
மாலை மலர் : ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றொரு வழக்கில் அவருக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ: ரஷியாவில் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அலெக்சி நவால்னி (49).
இவர் அதிபர் விளாடிமிர் புதின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கொடிய விஷம் உடலில் கலந்திருப்பதை ஜெர்மன் அரசும் வெளியிட்டது.
ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுர சுவர் இடிந்து விழுந்து விபத்து - பக்தர்கள் அதிர்ச்சி
tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : திருச்சி: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுர சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.
சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கோயில் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்து உள்ள அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்து உள்ளது.
தமிழ்நாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
CM cell இல் complaint register செய்ய போகிறேன்.பார்ப்போம்!
Radhika Murugesan ; நான் இது வரை ஒரு பைசா விடாமல் வரி காட்டியுள்ளேன்.
என் துரைப்பாக்கம் நிலம் வாங்கியது,வீடு/கிளினிக் கட்டியது அனைத்துமே white.
முழு வரி செலுத்தி செய்தது.
ஆனால் அந்த வீடு கட்டி முடிப்பதற்குள் என்னை வலுக்கட்டாயமாக செய்ய சொன்ன "இதர செலவுகளுக்கு" நான் ஒரு சிறு பிளாட்டே வாங்கியிருக்கலாம்.
வீடும் கிளினிக்கும் சேர்ந்து இருப்பது போன்ற கட்டமைப்பு.
கொஞ்ச நாளில் patients கண்ட நேரத்தில் கதவை தட்டியதால் என் இன்னொரு சொந்த பிளாட்டான சாலிகிராமத்தில் தங்கி கிளினிக்கிற்கு காரில் தினம் சென்று வருகிறேன்.
நிரந்தர EB connection பெறுவதற்கு 10 K பணம் கேட்கப்பட்டது.
இல்லையெனில் செய்ய முடியாது என்று சொன்னர்(மிரட்டினர் ).
அதுவும் சரி போய் தொலையுது என்று கொடுத்தேன்.
பின் போன வாரம் ஒரு EB vigilance வந்து ஏன் residential tariff ல இருக்கீங்க என்று 26 K penalty போட்டது.
வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023
ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம் உச்ச நீதிமன்றம் அதிரடி!
மாலை மலர் : மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.
சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது.
இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?. தண்டனை விதிக்கப்பட்டதால் தனிநபரை தேர்ந்தெடுத்த தொகுதி வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பதிலாக ஒரு நாட்கள் குறைவாக தண்டனை விதித்திருந்தாலும் தகுதி நீக்கம் வந்திருக்காது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை என கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவால் மலையாள சினிமா மூச்சு திணறுகிறது.. மலையாள ஜெயிலர் இயக்குனர் சக்கீர் மடத்தில் போராட்டம்
ஜெயிலர்
இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதையடுத்து இதே தலைப்பில் இதே நாளில் மலையாள 'ஜெயிலர்'படமும் வெளியாகவுள்ளது.
அதாவது, தமிழில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும்,
வியாழன், 3 ஆகஸ்ட், 2023
கணவனால் விபச்சார தொழில் செய்தேன்.. 10 முறை கருக்கலைப்பு..ரௌடி பேபி சூர்யா பகீர் பேட்டி! By
tamil.filmibeat.coம் Jaya Devi : சென்னை: என்னை விபச்சார தொழிலுக்கு அனுப்பியது என் கணவர் தான் என்று ரௌடி பேபி சூர்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டிக்டாக் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா.
அதில், ஆபாச உடைகளை அணிந்தும், கெட்ட வார்த்தைகளை பேசியும் வீடியோக்களை வெளியிட்டு, சர்ச்சையில் சிக்கிய ரௌடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த சூர்யா தற்போது, ஆபாசமில்லாமல், கெட்டவார்த்தை பேசாமல் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
சுப்புலட்சுமி என்கிற சூர்யா: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரௌடி பேபி சூர்யா, என்னுடைய உண்மையான பெயர் சுப்புலட்சுமி,
இறங்கி வந்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின்...நெகிழ்ந்த சி.ஆர்.சரஸ்வதி
மின்னம்பலம் - Selvam : மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வின் போது
அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியை முதல்வர் ஸ்டாலின் தனது வாகனத்தில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்து, அப்பகுதி பிரச்சினைகளையும் விசாரித்தார்.
முதல்வர் ஸ்டாலின் சென்னை அசோக் நகர் 4-வது நிழற்சாலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 3) காலை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின் போது முதல்வர் தன்னை சந்தித்து நலம் விசாரித்தது பற்றி அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களிடம் பேசுகையில்…
தமிழகத்தில் 400 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப முடியாத சூழல்- என்.எம்.சி. அனுமதி மறுப்பு
மாலைமலர் : தமிழகத்தில் இருவேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்கை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) தடை விதித்து உள்ளது.
நடப்பாண்டில் 400 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப முடியாத நிலை எழுந்து உள்ளது.
இரு கல்லூரிகளுமே நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ளதால் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் ஏதும் அதில் இல்லை.
அதே வேளையில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் 100 இடங்களுக்கு மட்டுமே என்.எம்.சி. அனுமதி அளித்தது.
ஆனால் 150 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடை பெற்றதாகவும் அதனால் நடப்பாண்டில் அங்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் என்.எம்.சி. இணையப்பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆடிப்பெருக்கு! திராவிட வரலாற்று அடையாளங்களை ஆற்றில் போட்டு அழிக்கும் சதியை ஆரியர்கள் அரங்கேற்றிய நாள்!
‘ஆடிப்பெருக்கில் ஆற்றில் பழைய ஏடு விடுதல் சாலச் சிறந்தது‘ என்ற தமிழ் அழித்தல் எனும் சூட்சுமப் பொருளுணரா பூர்வீகக் குடிகள் செய்தவைகள் எத்தனை எத்தனையோ?
inidhu.com
தமிழ்ப் புதையலைத் தேடி - பாரதிசந்திரன் - இனிது
தொன்மை அல்ல; தொடர்ச்சியே தமிழின் பெருமை என்பதை நாம் அறிவோம். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக இருப்பதை விட, இன்றும் உயிர்ப்போடு இருப்பதே தமிழின் பெருமை.
தமிழின் இலக்கியம் தன்னிகரற்றது.
அறம் சார்ந்ததாக வாழ்க்கை அமைய வேண்டும் என்று நம் முன்னோர்கள் இலக்கியம் படைத்தார்கள்.
நம்மைப் பற்றிப் பிறர் அறியக் கூடிய புற வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும், நம்மைப் பற்றி நாம் மட்டுமே அறியும் அக வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் வாழ்க்கை இலக்கணம் சொல்லிச் சென்றார்கள்.
துணை பிரதமர் ஸ்டாலின்... செந்தில்பாலாஜியின் தென்னிந்திய ஸ்கெட்ச்... வேடசந்தூர் வரை இ.டி.தேடிவந்த பின்னணி!
இதுகுறித்து திண்டுக்கல் வட்டாரத்தில் விசாரித்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.“அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் இருக்கும் நிலையில்… அடுத்து அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை விசாரணை திரும்பியது. அப்போது அமலாக்கத் துறையின் அடுத்த டார்கெட் இவர்தான் அவர்தான் என்று தற்போதைய அமைச்சர்களில் சிலரின் பட்டியலும் ஊடகங்களில் வெளியானது. ஆனால் அமலாக்கத்துறை அமைதியாக இருந்தது. இப்போதைக்கு அமலாக்கத்துறை வேறு யார் மீதும் திரும்பும் நிலையில் இல்லை என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
தீ மிதித் திருவிழா: அக்னி குண்டத்தில் விழுந்த ஒரு வயது குழந்தை என்ன ஆனது?
bbc.com : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே நடந்த ஒரு கோவில் திருவிழாவில், ஒரு முதியவர் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அவர் வைத்திருந்த தனது ஒரு வயது பேத்தி குண்டத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தது.
இந்த துயரம் எப்படி நிகழ்ந்தது? தீக்காயம் அடைந்த அந்த பச்சிளம் குழந்தையின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது?
துயரம் எப்படி நடந்தது?
ராஜேஷ் தனது பேத்தியான ஒரு வயது பெண் குழந்தை தர்ணிஜாவை தூக்கிக் கொண்டு தீக்குண்டத்தில் இறங்கியுள்ளார்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரும்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ராஜா. இவர் தனது மனைவிக்குச் சொந்தமான தாராட்சி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவல் தீ மிதித் திருவிழாவுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தம்பதிகள் பிரிந்தனர்!
மாலை மலர் :; மனைவியைப் பிரிந்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ.
இவரது மனைவி சோபி கிரிகோரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
டொரன்டோ:
கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதன், 2 ஆகஸ்ட், 2023
ஹிந்தியில் பேசியதால் வேலையை இழந்த அமெரிக்க வாழ் இந்திய இன்ஜினியர்
தினமலர் : வாஷிங்டன் : உயிரிழக்கும் நிலையில் இருந்த உறவினரிடம், 'வீடியோ' அழைப்பில் ஹிந்தியில் பேசியதால், அமெரிக்காவில் இன்ஜினியராக பணியாற்றும் இந்திய வம்சாவளி அனில் வர்ஷனே, 78, தன் வேலையை இழந்துள்ளார். இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள 'பார்சன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற ஏவுகணை தயாரிப்பு நிறுவனத்தில் மூத்த இன்ஜினியராக பணியாற்றி வந்தவர், அனில் வர்ஷனே. கடந்த 1968ல் அமெரிக்காவுக்குச் சென்ற அவர்,
இன்ஸ்டாகிராம் பதிவுக்காக மரண தண்டனை - இந்த 20 வயது இளைஞர் அப்படி என்ன செய்தார்?
bbc.com - எழுதியவர், ஜீயர் கோல் பதவி, பிபிசி பாரசீக சேவை : கைதிகள் இடமாற்றம் திட்டத்தின்கீழ், இரான் அரசால் கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட நான்கு ஐரோப்பியர்களில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பயண வலைப்பதிவரான தாமஸ் கேஜெம்ஸும் ஒருவர்.
‘ஹிட்ச்ஹைக்கிங்’ எனப்படும் சாகசப் பயணத்தை மேற்கொண்டு வரும் 28 வயது வாலிபரான தாமஸ், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டென்மார்க்கில் இருந்து யுக்ரேனுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர் அங்கு சென்றடைந்த சில வாரங்களிலேயே யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
மாலை மலர் : திரு வீரா.சாமிநாதன் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில், பழனியில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இவரின் வீடு, தோட்ட பங்களாவிலும் 2 குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, தோட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
வீரா.சாமிநாதன் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில், பழனியில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள வீடு, தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்ட பங்களாவிலும் 2 குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் சாமிநாதன் என்பதால் அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் ஜோஸ் கோம்ஸ் 127 வயதில் மரணம்
தமிழ் மிரர் : உலகின் மிக வயதான மனிதர் என்று கூறப்படும் பிரேசிலைச் சேர்ந்த ஜோஸ் பாலினோ கோம்ஸ் தனது 127வது வயதில் காலமானார்
பிரேசிலைச் சேர்ந்த ஜோஸ் பாலினோ வரும் 4-ம் தேதி தனது 128வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பெட்ரா பொனிடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
வயது முதிர்வு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் இறந்ததாக பாலினோவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் கடந்த சனிக்கிழமை பெட்ரா பொனிடாவின் கொரேகோ டோஸ் ஃபில்ஹோஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
சென்னை என்கவுண்டர்: சுட்டுக் கொல்லப்பட்ட 2 பேரின் பின்னணி என்ன? மேலும் இருவர் எங்கே? -
BBC Tamil : காவல்துறையினர் சுட்டதில் வினோத் மற்றும் ரமேஷ் காயமடைந்ததாகவும் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறை குறிப்பிடுகிறது.
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் 2 பேர் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காரை நிறுத்த முற்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை கூறுகிறது.
காவல்துறையின் வாகனத்தில் மோதி நின்ற காரில் இருந்து, கீழே இறங்கியவர்கள் ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கியதில், உதவி ஆய்வாளரின் கையில் வெட்டுப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறுகிறது.
நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு!
tamil.oneindia.com - Mani Singh S : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பிடிஆர் திடீர் சந்திப்பு.. காரணம் இதுதான்!
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்தார்.
டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. நிர்மலா சீதாரமனுடனான சந்திப்பு குறித்த தகவலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாரஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
ஹரியானா வன்முறைக்கு 5 பேர் பலி - ஊரடங்கு அமல்
மாலை மலர் :ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். நூ மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை முடக்கப்பட்டது.
இந்நிலையில், நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் காயமடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.
செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023
நாங்கள் சாத்தானின் பிள்ளைகளா?”: சீமானுக்கு எதிராய் கொதித்த ஜவாஹிருல்லா
கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 30 ஆம் தேதி மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ இலங்கை தமிழின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும் பெண்களுக்கு எதிராக நடந்த அக்கிரமங்களையும் கண்கூடாக பார்த்தோம்.
2 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் பண வீக்கம் குறைந்தது- பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுகிறது
மாலைமலர் : கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது. இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.
கொழும்பு: இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர்.
இதனால் மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.
அதன்பின் அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது.
திங்கள், 31 ஜூலை, 2023
பாகிஸ்தான்: இஸ்லாமிய JUI-F கட்சிக் கூட்டத்தில் தற்கொலை தாக்குதல் – 35 பேர் பலி, 200 பேர் காயம்..
வீரகேசரி : பாகிஸ்தான்: இஸ்லாமிய கட்சிக் கூட்டத்தில் பயங்கரம் – 35 பேர் பலி, 200 பேர் காயம் – வெடித்தது என்ன?
பாகிஸ்தானில் இஸ்லாமியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜாமியத்-உலெமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F) என்ற கட்சி இந்தப் பொதுக் கூட்டத்தை நடத்தியது.
அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு எதனால் நிகழ்ந்தது என்று பாதுகாப்புப் படைகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.
அங்கே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.
இந்த துயரம் நேரிட்ட பகுதி ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கைபர் பக்டுன்க்வா மாகாணத்தில் இருக்கிறது.
பாதயாத்திரையில் வெளுத்த அண்ணாமலை சாயம்!
மின்னம்பலம் -Selvam : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை பற்றிய பாஜகவினரின் வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே திட்டமிடப்பட்ட அண்ணாமலையின் தமிழகம் தழுவிய பாத யாத்திரை, கர்நாடக தேர்தலில் அவர் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் தாமதமானது. அதன் பின்னர் ஜூலை 28 ஆம் தேதி என திட்டமிடப்பட்டு அதன்படியே உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்து நடைப் பயணத்தை துவக்கி வைத்தார். அன்று மாலை பொதுக்கூட்டம் முடிந்த பிறகு நடைப்பயணம் துவங்கியது. அமித் ஷா கொஞ்ச நேரம் நடந்தார்.
அன்று அண்ணாமலை நடந்த மொத்த தூரம் எவ்வளவு தெரியுமா ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முதல் ராமநாதசாமி கோயில் மேலவாசல் வரை சரியாக ஒன்றரை கிலோ மீட்டர்கள். சரி, முதல் நாள் துவக்க விழா பொதுக்கூட்டத்துக்குப் பிறகு இவ்வளவு தூரம் தான் நடக்க முடியும் என்று கருதினார்கள் பாஜக நிர்வாகிகள்.
தென் மாவட்ட திமுகவில் சாதி மோதல் அபாயம்: ஸ்டாலினிடம் எச்சரித்த நிர்வாகிகள்!
/மின்னம்பலம் - Aara : மணிப்பூர் விவகார கண்டன ஆர்பாட்டத்தில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து… திமுகவில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த சிவபத்மநாதனை கடந்த ஜூலை 26 ஆம் தேதி பதவியில் இருந்து நீக்கி முரசொலியில் அறிவிப்பு வெளியானது. தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் நியமிக்கப்படுகிறார் என்றும் அந்த அறிவிப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெயபாலன் அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை ஜூலை 28 ஆம் தேதி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வழக்கமாக புதிய மாவட்டப் பொறுப்பாளர் நியமிக்கப்படும்போது அவர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம்தான். ஆனால் தென்காசி விவகாரத்தில் வழக்கத்துக்கு மாறாக நடந்தது என்னவென்றால்…புதிய மாவட்டப் பொறுப்பாளரை சந்தித்த சில நிமிடங்களிலேயே, நீக்கப்பட்ட மாசெ-வான சிவபத்மநாதனையும் சந்தித்துள்ளார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.
ராமேசுவரத்திற்கு இன்று மேலும் 4 இலங்கை அகதிகள் வருக
மாலைமலர் : இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக் கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.
இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இதுவரை 265 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஞாயிறு, 30 ஜூலை, 2023
ஒரே அறையில் 500 பேர்... கழிப்பறை வசதி கூட இல்லை: மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் வேதனை!
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் மணிப்பூர் கலவரத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை அறிவதற்காக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று (ஜூலை 29) டெல்லியில் இருந்து புறப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து திமுக எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி ஆகியோரும் சென்றுள்ளனர்.
மதியம் 12 மணிக்கு இம்பால் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் சுராசந்த்பூர் நிவாரண முகாமுக்கும், பின்னர் கார் மூலம் பிஷ்னுபூர், மெய்ராங்க் உள்ளிட்ட 4 நிவாரண முகாம்களுக்கும் சென்றனர்.
கந்து வட்டி - கணவன் மனைவி தற்கொலை! கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
Dinamalar : கும்மிடிப்பூண்டி,---கந்துவட்டி மிரட்டலுக்கு பயந்த தம்பதி விஷம் குடித்ததில், கணவரை தொடர்ந்து மனைவியும் இறந்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதி பிரகாஷ், 48, சரிதா, 40. பிரகாஷ், ஜெ., பேரவை செயலராக இருந்தார். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இந்நிலையில் பிரகாஷ் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், மிரட்டலுக்கு அஞ்சி, இரு தினங்களுக்கு முன், வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை, பிரகாஷ், சரிதா இருவரும் குடித்து, தற்கொலைக்கு முயன்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் பிரகாஷ்உயிரிழந்தார்.
3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்களை காணவில்லை! ஒன்றிய அரசு அதிர்ச்சி விபரம்
மாலை மலர் : நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் மாயமாவது அதிகரித்து வருகிறது.
கடந்த 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடுமுழுதும் சுமார் 13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். புதுடெல்லி: தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது.
கடந்த, 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
இதில் 2021ல் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளனர்.
இந்த காலகட்டத்தில் 18 வயதுக்கும் கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமியர் காணாமல் போயுள்ளனர்.