சனி, 1 ஜூன், 2024
Exit Poll 2024 இந்தியா கூட்டணி 295+ இடங்களில் வெல்லும்.. மெஜாரிட்டி!
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணி 295 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தங்கள் கட்சியின் சொந்த கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும். இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே தேர்தல் நடந்தது.
காங்கிரஸ்; இந்த நிலையில் ; 2024 லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணி 295 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தங்கள் கட்சியின் சொந்த கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து -என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. ADSP- சில மணி நேரத்தில் திடீரென மாறிய உத்தரவு!
tamil.asianetnews.com - Ansgar R : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளரக பணியாற்றி வந்தவர் தான் வெள்ளத்துரை.
தமிழக காவல்துறையை பொருத்தவரை இவர் வெறும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை அல்ல, இவருக்கு ஒரு செல்லப் பெயரும் உண்டு, அதுதான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை.
சில கடுமையான ரவுடிகளை ஒழிப்பதற்கு என்று உயிர்மற்ற அதிகாரிகள் இவரை பெரிய அளவில் பயன்படுத்தி வந்ததாகவும் சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழகத்தையே பரபரப்பில் பல ஆண்டுகள் அழித்தி வந்த சந்தன மரங்களை கடத்திய வீரப்பன் கொல்லப்பட்ட பொழுது அதற்காக பணியாற்றிய சிறப்பு அதிரடி படையில் வெள்ளதுறையும் முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த 5 மாதத்தில் ரூ.7 லட்சம் கோடிக்கு முதலீடுகள் கிடைத்துள்ளது- தமிழ்நாட்டில்
Kalaignar Seithigal - Lenin : இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை,
2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்" வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்தான பின்னணி - முதல்வர் ஸ்டாலின் விட்ட டோஸ்.. "
tamil.oneindia.com Mani Singh Sசென்னை: ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டு பின்னர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உள்துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும், அவரை கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலேயே ஏடிஎஸ்பி வெள்ளத்துரைக்கு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும்,
தன்னிச்சையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதால், முதல்வர் ஸ்டாலின் உள்துறை செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி மீது அதிருப்தி அடைந்ததாகவும், உடனடியாக சஸ்பெண்டை ரத்து செய்ய சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளி, 31 மே, 2024
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் டி ஆர் பாலு பங்கேற்கிறார் .. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஏற்பாடு
nakkheeran : ஆலோசனைக் கூட்டத்திற்குத் தயாராகும் இந்தியா கூட்டணி தலைவர்கள்; தமிழக முதல்வரின் திடீர் முடிவு!
ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதன்படி, முதல் ஆறு கட்டங்களாக 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, இறுதி கட்டமாக நாளை (01-06-24) உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் என உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அதன் பின்னர், ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, ஜூன் 1ஆம் தேதி அன்று முக்கிய ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி கட்சியினருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற முதல் ஜனாதிபதியாகிறார்!
HIndu Tamil : முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரலாற்று ரீதியான குற்றவியல் விசாரணையில் தண்டனை பெற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி!
டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
போலியான வணிகப்பதிவுகள் தொடர்பில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிவ்யோர்க்கில் இடம்பெற்றன.
அவருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் முன்னாள் அல்லது தற்போதைய ஜனாதிபதி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
ஜெயமோகனின் ‘எச்சிலில் உருளும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
Annamalai Arulmozhi : எது நீதி ??
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த எச்சிலையில் உருளும் சடங்கு பற்றிய தீர்ப்பைக் குறித்து,
ஜூனியர் விகடன் இதழில் நீதிபதி K.சந்துரு அவர்கள் எழுதிய கட்டுரை...
*எச்சில் இலை உருளலுக்கு நீதியின் உருட்டு!*
‘பக்தர்கள் சாப்பிட்ட இலைகள்மீது உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்வது அடிப்படை உரிமை’ என்று நீதிபதி சுவாமிநாதன் ஓர் அதிர்ச்சி தரும் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட சடங்கு, அரசியலமைப்பில் மதம் சார்ந்த உரிமைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், இதற்கு முன்பு நடைபெற்ற சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.
*குக்கே சடங்குக்கு நீதிமன்றத் தடை!*
கர்நாடக மாநிலம், மங்களுரூக்கு அருகில் குக்கே சுப்ரமண்ய சுவாமி கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள்மீது,
இதர சாதியினர் உடைகளைக் களைந்துவிட்டு உருளும் சடங்கு நடந்துவந்தது. அப்படி உருண்டால் பாவங்கள், பிரச்னைகள் தீரும் என்றார்கள்.
வியாழன், 30 மே, 2024
அப்பா வாங்கிய கடனுக்கு மகளுக்குக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; தேனியில் அதிர்ச்சி
nakkheeran.in : வாங்கியக் கடனை திருப்பிக் கொடுக்காததால் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை புகார் கொடுத்திருக்கும் சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை 5 பேர் கடத்திச் சென்று காரில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகார் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
தியானம் ஒரு பித்தலாட்டம் ... வாழ்வின் மீதான காதலை அழிக்க சொல்லும் மோசடி!
அதை மறுத்து கூறுவது பற்றி சிந்திக்க கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும்.. தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள்.
நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
தியானம் எல்லோரும் கூறுவது போல அது எந்த தீமையும் இல்லாத ஒரு நல்ல பயிற்சி அல்லது முயற்சி அல்லது பாதை என்று நான் கூறமாட்டேன்.
தியானத்தால் அடையக்கூடிய உயர்ந்த பேரானந்த பெருநிலை என்று விதம் விதமாக நூல்களும் உபதேசகர்களும் கூறும் அந்த நிலையை நான் பல வருடங்களுக்கு முன்பு அனுபவித்திருக்கிறேன் என்பதால் அதைப்பற்றிய எனது கருத்து வெறுமனே புத்தகங்களில் இருந்து பொறுக்கியதோ அல்லது பல சுவாமிகள் வழிகாட்டிகளிடம் இருந்து பெற்ற தகவல்களோ அல்ல.
பாலத்தீனம்: ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து அங்கீகரித்தது! இஸ்ரேல் கூறுவது என்ன?
BBC News தமிழ் - ஜேம்ஸ் லாண்டேல் : : ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்கான அரசியல் தீர்வு காணும் முயற்சியாக இதைக் கருதுவதாகவும் அவை தெரிவித்துள்ளன.
இந்நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் இதர ஐரோப்பிய நாடுகளும் இதே செயலைப் பின்பற்றி ஒருங்கிணைவார்கள் என்றும், அதன் வழியாக காஸாவில் போர்நிறுத்தம் மற்றும் ஹமாஸ் சிறைபிடித்து வைத்துள்ள பணயக் கைதிகளை விடுவிக்கவும் இது உதவும் என்றும் அந்நாடுகள் நம்புகின்றன.
கரூர் கல்லூரி மைதானங்களில் ஆர்எஸ்எஸ் RSS பயிற்சி! திராவிட மாடல் அரசு தடை செய்யுமா?
தமிழ்க்கவி : கல்லூரி விளையாட்டு மைதானங்களும்
வேட்டை நாய்களும்: நாசகார கும்பலின் தேச பக்த பயிற்சி
கரூர் மாவட்டத்திலும் வேறு சில சின்ன சிறு நகரங்களிலும் சின்னஞ்சிறு குழந்தைகள் விடலை வயதுள்ள மாணவர்கள் ஒரு சமூக விரோத கும்பலால் தவறான வழிகளில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக வள்ளுவரின் பெயரில் இயங்கும் ஒரு கலை அறிவியல் கல்லூரி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு அந்தக் கல்லூரி நிர்வாகமும்
ஒத்துழைக்கிறது.
வைகறை பொழுதிலும் அந்தி கருக்கலிலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் பொதுமக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிக் கொண்டு விவரம் தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட குழந்தைகளை மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது அந்த கும்பல்.
மறைவான இடங்களை தேர்ந்தெடுத்தால் சந்தேகம் எனக்கூடும் என்பதனால் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் பகிரங்கமாக இந்த பாதக செயலை அரங்கேற்றம் பட்டுக்கொண்டிருக்கிறது கரூர் மாவட்டத்தில்.
புதன், 29 மே, 2024
கர்நாடகா -அம்மா என் கர்ப்பத்துக்கு காரணம் எங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டர் தான்! பள்ளியில் வைத்தே பலமுறை பலாத்காரம்...
tamil.asianetnews.com - vinoth kumar : அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு பள் ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கோவை: மருத்துவமனையில் 2 நாள் கட்டி வைத்து அடித்து கொலை!
மின்னம்பல, -indhu : கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இன்று (மே 29) 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ராஜா தனது குடும்பத்தினருடன் கோவை மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் தற்போது வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் (மே 27) ராஜா, கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச். என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் இருந்த இரும்பு கம்பிகளை ராஜா திருட முயன்றதாக மருத்துவமனை காவலர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
வடகொரியா குப்பைகள் நிரம்பிய ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் பறக்கவிட்டது 150 balloons found with excrement from North Korea
மாலை மலர் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவின் எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம்.
தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது. அதிலும் இரண்டு பலூன்களை ஒன்றாக இணைந்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது.
இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 2,000 இளைஞர்கள்
hindutamil.in : மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
மதுரை: மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் அதிமுகவில் இன்று (மே 28) இணைந்தனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று, ஜெயலலிதா பேரவை சார்பில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி திருமங்கலம் தொகுதியிலுள்ள டி. குன்னத்தூர் அம்மா கோயிலில் இன்று நடந்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி. உதயகுமார் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.
செவ்வாய், 28 மே, 2024
சாமியார் குர்மீத் ராம் ரஹீம் விடுதலை .. கொலை வழக்குக்களில் இருந்து மேலும் ஐந்து கொலையாளிகள் விடுதலை
மாலை மலர் : அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து 'பூரா சச்' என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் பத்திரிகைகளில் வெளியானது.
இதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை வி.ஐ.பி.,க்களுக்கு இரையான மாணவியர்: தொழிலுக்கு தள்ளிய பெண் வாக்குமூலம்
தினமலர் : சென்னை : 'பள்ளி சிறுமியர் மற்றும் பெண்களை, வி.ஐ.பி.,க்களின் வீடுகளுக்கு அனுப்பி விருந்தாக்கினேன்' என, பாலியல் தொழில் பெண் புரோக்கர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றில், பள்ளி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த, தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா, 37, உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கள், 27 மே, 2024
இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் 1-ந்தேதி ஆலோசனை - ஆட்சி அமைப்பது யார்?
மாலைமலர் : புதுடெல்லி பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இன்னும் 3 நாட்களில் அதற்கான பிரசாரம் ஓய உள்ளது.
அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.
ராணுவத் தளபதிக்கு கால நீட்டிப்பு! மோடியின் அசாதாரண நடவடிக்கை ஏன்?
மின்னம்பலம் - Aara : ராணுவத் தளபதிக்கு கால நீட்டிப்பு! மோடியின் அசாதாரண நடவடிக்கை ஏன்?
வழக்கத்துக்கு மாறான, மிகவும் அசாதாரணமான நடவடிக்கையாக தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு இந்திய அரசு ஒரு மாத கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஜெனரல் பாண்டே மே 31 அன்று ஓய்வு பெற உள்ளார். இந்த நீட்டிப்பின் மூலம் அவர் ஜூன் 30-ம் தேதி வரை ராணுவ தளபதியாக நீடிப்பார்.
பொதுவாக ராணுவ தளபதி 62 வயது வரை அல்லது மூன்று ஆண்டுகள், எது முந்தையதோ அதுவரை பணியாற்றுவார். இந்திய ராணுவ வரலாற்றில் ராணுவ தளபதி ஒருவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். முதலாவது முன்னாள் பீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா இராணுவத் தளபதியாக இருந்தபோது ஆறு மாத கால நீடிப்பு பெற்றார்.
கம்யூனிஸ்டுகளின் பின்னால் சென்று குடியுரிமையை பறிகொடுத்த மலையக மக்கள்
ராதா மனோகர் : இலங்கையில் இடதுசாரிகளை தாங்கி பிடித்ததே பெரும்பாலும் மலையக மக்கள்தான்
இலங்கையை ஒரு கம்யூனிஸ்டு நாடாக்குவதற்கு உரிய வாக்கு வங்கியை வழங்கியதே மலையக வாக்காளர்கள்தான்
அதன் காரணமாகத்தான் அவர்களின் வாக்குரிமை இந்திய இலங்கை பிரித்தானிய அரசுகளால் பறிக்கப்பட்டது
1948 இல் சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஆட்சியை பிடிக்க கூடிய அளவு வெற்றி பெற்றிருந்தனர் இடதுசாரிகள்
அவர்களின் ஒற்றுமை இன்மையால் மட்டுமே அந்த வாய்ப்பு கைநழுவி போனது
இந்த தேர்தல் வெற்றி மேற்கு நாடுகளையும் இந்தியவையும் பயமுறுத்தியது
ஏற்கனவே இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமையை நீக்கவேண்டும் . அவர்களை நாடு கடத்த வேண்டும் என்றெல்லாம் கூச்சல் போட்டு கொண்டிருந்த சிங்கள இனவாதிகளுக்கு இந்த இடதுசாரி வாக்குவங்கி என்பது பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டது
இந்த வாய்ப்பை அவர்களுக்கு கொடுத்தவர்கள் சிங்கள இடது சாரிகள் மட்டுமல்ல அவர்களோடு சேர்ந்து கொண்டு ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று கருதி இருந்த மலையக தலைவர்களுக்கும்தான்
பப்புவா நியூ கினியா: நிலச்சரிவில் 2000 பேர் உயிரோடு புதைந்துள்ளனர்- வெளியான அதிர்ச்சி தகவல்
மாலை மலர் : பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர்.
ஜூன் மாதம் கட்சியிலும் ஆட்சியிலும் பெரும் மாற்றங்கள் .. டி ஆர் பாலு ஆ ராசா கனிமொழி ஆகியோர் மத்தியில் ....
மாலை மலர் : சென்னை தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதியே முடிந்து விட்டாலும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது. ஆனால் பிரமாண்ட் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் சில தொகுதிகளில் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளே சரியாக வேலை செய்யாமல் உள்ளடி வேலை செய்ததாக கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளது.
இதனால் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட தொகுதியில் என்னென்ன பிரச்சனை நடந்தது என்பது பற்றி விசாரித்து வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தேர்தல் முடிவு வந்ததும் கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய அவர் முடிவெடுத்துள்ளார் என்று தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
தந்தை செல்வாவின் ( SJV ) துரோகிஸமும் திரு ஜி ஜி பொன்னம்பலமும்
Hon .G.G.Ponnambalam |
ராதா மனோகர் : துரோகம் என்ற சொல்லை ஒரு அரசியல் கோட்பாடாகவே மாற்றியவர்கள்,
திரு SJV செல்வநாயகம் திரு EMV நாகநாதன் சம்பந்திகள்!
முழு இலங்கைக்குமான முதல் தேர்தலில் (1911 - படித்த இலங்கையர்கள் தொகுதி) வெற்றி பெற்று முழு இலங்கைக்குமான உறுப்பினராக தெரிவான திரு பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் குடும்பத்தினர் இலங்கை முழுவதையும் ஒரே நாடாகதான் கருதினார்கள்!
இவர்களின் வழியில் வந்த பலரும் இந்த அரசியலைதான் தொடர்ந்தார்கள்!
அதற்கேற்பவே தங்கள் அரசியலையும் வாழ்வியலையும் முன்னெடுத்தார்கள்
இக்குடும்பத்தின் முக்கியமான சொத்துக்கள் தென் இலங்கை முழுவதும் விரவி இருக்கிறது .
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இக்குடும்பத்தினரின் ஆதிக்கம் இன்று வரை இருக்கிறது
ஞாயிறு, 26 மே, 2024
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி புகார்!
tamil.hindustantimes.com - Kathiravan V : Justice GR Swaminathan: நீதித்துறை ஆணையின்படி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேற்கண்ட தீர்ப்புகளை ரத்து செய்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக, பிறர் உணவு உண்டபின், மீதியுள்ள வாழை இலையில் உருளும் நாகரீகமற்ற வழக்கத்தை மீட்டெடுத்து உள்ளார் என கொளத்தூர் மணி புகார்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதியில், அவரது ஜீவசமாதி நாளையொட்டி நடைபெறும் அன்னதானத்தில் சாப்பிட்ட பின்னர் அந்த இலைகளின் மீது பக்தர்கள் உருண்டு வழிபாடு செய்கின்றனர்.
இந்த நிகழ்வுக்கு 2014ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இது போன்று நடந்த நிகழ்சுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு
ஸ்மிருதி இரானி : ஒடிசாவை கொள்ளையடிக்கும் தமிழக கான்ட்ராக்டர்கள்1
மின்னம்பலம் :- Aara : ஒடிசாவை கொள்ளையடிக்கும் தமிழக கான்ட்ராக்டர்கள்: மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஸ்மிருதி இரானி
ஒடிசா மாநிலத்தில் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் குறிவைத்து ஏற்கனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பேசி… அதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒடிசாவில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி கடுமையாக பேசியிருக்கிறார்.
ஒடிசாவில் நேற்று (மே 25) பாஜக தேசியத் துணைத் தலைவரும் மக்களவை வேட்பாளருமான பைஜயந்த் பாண்டா போட்டியிடும் கேந்திரபராவில் உள்ள ஆல் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்மிருதி இரானி பேசினார்.
பிரகாஷ் ராஜ் : மோடி தெய்வமகன் கிடையாது.. டெஸ்ட் டியூப் பேபி’’.. விசிக விழாவில் ஆவேச பேச்சு
tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: ‛‛பிரதமர் மோடி தெய்வமகன் எல்லாம் கிடையாது.
அவர் ஒரு டெஸ்ட் டியூப் பேபி'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மேலும் அவர் இந்த மேடையில் தொடர்ந்து பிரதமர் மோடியை ஒருமையில் விமர்சனம் செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தொல் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.
குஜராத் தீ விபத்து 27 பேர் உயிரிழப்பு! விளையாட்டு வளாகத்தில் சோகம் நடந்தது என்ன?
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு அடிமேல் அடி! பாலஸ்தீனத்துக்கு பெருகும் ஆதரவு; முடிவுக்கு வருமா இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்?
பி பி சி தமிழ் : ஐ.நா., சர்வதேச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள், உலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு வகைகளில் களமிறங்கியிருக்கின்றன.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், உலக அரங்கில் இஸ்ரேல் மீதான அரசியல் அழுத்தம் வலுக்கத் தொடங்கியிருக்கிறது. ஐ.நா., சர்வதேச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள், உலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு வகைகளில் களமிறங்கியிருக்கின்றன.
ஏழு மாதங்களாக நீடிக்கும் போர்!