திங்கள், 7 ஆகஸ்ட், 2017

நட்பை விட மனிதம் மேலானது? ஒருபாலீர்ப்பாளர்கள் ,விவாகரத்து ஆனவர்கள், திருநங்கைகள் ....

Shalin Maria Lawrence : விவாகரத்து ஆனவர்கள் , திருநங்கைகள் ,ஓரின சேர்க்கையாளர்கள் , முற்போக்கானவர்கள் , உண்மை பெண்ணியவாதிகள் , பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்களை கேட்டு பார்த்தால் நட்பின் இன்னொரு கோரமுகத்தை பற்றி அப்படி விவரிப்பார்கள் . சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் , நிராகரிக்கப்பட்டவர்கள் , சமுதாயம் இரக்கம் காட்ட மறுக்கும் மனிதர்களுக்கு நட்பிலக்கணம் பலநேரங்களில் பல்லிளித்துவிடும் .
அதையும் தாண்டி மேற்சொன்னவர்களிடம் நட்புபாராட்டப்ட்டுகிறதென்றால் , அவர்களோடு கொண்டாட்டங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறதென்றால் , அவர்களிடம் சுபநிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்கள் இருக்கிறதென்றால் , அவர்களின் தனிமைநேரங்களின் குமுறல்களை கேட்டுக்கொள்ள காதுகள் இருக்கிறதென்றால் , பொதுஇடங்களில் அவர்களின் தோள்மேல் ஒரு அன்பின் கரம் போர்த்தி இருக்கிறதென்றால் அது நட்பு என்கிற புனைபெயரில் இயங்கும் "மனிதம்" தான் .

இருள் சூழ்ந்திருக்கும் தங்கசுரங்களுக்குள் நுழையும் துணிவு நட்பிற்கு பலநேரம் இயலாமல் போகலாம் ஆனால் அங்கேயும் மனிதம் நுழையும் .
நட்பைவிட மனிதம் பெரிதுதான் எனக்கு எப்பொழுதும் .
மனிதத்தை நேசிப்பவர்களுக்கு தினமும் கொண்டாட்டம்தான் . அதற்கு ப்ரெத்யேகதினம் தேவையில்லை .
ஷாலின்
Sharan Karthik Raj :ஒரு சிறிய வேண்டுகோள். ஓரினச்சேர்க்கையாளர் என்ற சொல்லாடலை தவிர்த்து, ஒருபாலீர்ப்பாளர்கள் என்று பயன்படுத்தவும் Shalin ka. The term hurts. Kindly change it.

கருத்துகள் இல்லை: