புதுடெல்லி: கட்சி கட்டளையிட்டால் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்
என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். கடந்த சில
நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த டெல்லி முதல்வரும் அரவிந்த் கேஜ்ரிவால்,
தான் டெல்லி லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் தங்களது கட்சி
எம் எல் ஏக்களும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட மாட்டார்கள். கட்சி
வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என கூறியிருந்தார். இதன் பின்னர்,
எம் எல் ஏக்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்ற முடிவை
கெஜ்ரிவால் மறுபரீசிலனை செய்வார் என தகவல் வெளியாகின.
இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால், தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் சாதாரண மனிதனாகவே இருக்க விரும்புகிறேன். அரசை நடத்துவதென்பது மிகப் பெரிய சவால் என்ற பெரிய பாடத்தை நான் கற்றுள்ளேன். ஆம் ஆத்மி கட்சியை ஏற்க இந்தியா தயாராக உள்ளது. அரசியல் கணக்கு போடும் அளவுக்கு நான் பெரிய மனிதனல்ல. இந்திய பாதுகாப்பாக, செழிப்பாக இருக்க வேண்டு்ம் என்பதே எனது ஆசை. கட்சி கட்டளை இட்டால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். ஆம் ஆத்மி கட்சி 400 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும். வெற்றி பெறப்போது நாங்கள் அல்ல மக்கள்தான் என்று கேஜ்ரிவால் கூறினார்.