மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய
தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல்
செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக விழாவெல்லாம் நடத்தி, தங்கக் கிரீடம் சூட்டி, தங்க செங்கோல் பிடித்து காட்சி தந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. அவரைப் போலவே செங்கோல், கிரீடம் சகிதமாக காட்சியளித்தார் நித்யானந்தா.