BBC - Tamil : திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணியை, அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஏப்ரல் 26ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி ஏப்ரல் 27ஆம் தேதி காலையில் திருவண்ணாமலை கிளைச் சிறையில் தங்கமணி அடைக்கப்பட்டார்.
சனி, 30 ஏப்ரல், 2022
இந்தி எழுத்து அழிப்பு! ஆசிரியர் கி.வீரமணி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைது!
நக்கீரன் : திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று இந்தி அழிப்பு போராட்டம் நடந்தது.
தேசியக் கல்வி என்ற பெயரால் ஒன்றிய அரசு திணிக்க இருக்கும் ஹிந்தியை எதிர்த்து, இன்று (30.4.2022) பிற்பகல் 3 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு,
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்படும் என்று தி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று திராவிட கழகம் தலைவர் கி. வீரமணி தலைமையில் பெரியார் திடலில் இருந்து பேரணியாக பூந்தமல்லி சாலை வழியாக எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை ரயில் நிலையம் அருகே வைத்து கைது செய்தனர். இதில், சுமார் 400 பேர் கைதாகினர். இந்தப் பேரணியை சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த முத்தரசன் தார் டப்பா மற்றும் பிரஸ் கொடுத்து துவக்கி வைத்தார்.
மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல்
தினத்தந்தி : இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தனக்குப் பெரும்பான்மை இருக்கும் வரை தன்னை யாரும் பதவியிலிருந்து அகற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடப்பது வழக்கம்தான் என்றும், போராட்டத்துக்காக அரசுகள் விலகுவதென்றால் எந்த அரசும் இந்த நாட்டில் இருக்க முடியாது.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டால் பதவி விலகப் போவதாக. ஜனநாயகத்துக்கு முரணாக பதவியை பிடித்து வைத்திருக்கும் எண்ணம் கிடையாது என அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இலங்கையில் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் என தகவல் வெளியாகி உள்ளது.
“இந்தி பேச முடியலன்னா நாட்டை விட்டு வெளியேறுங்க” : பா.ஜ.க அமைச்சரின் திமிர் பேச்சால் மீண்டும் சர்ச்சை!
Vignesh Selvaraj - கலைஞர் செய்திகள் : பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு முயற்சியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.
சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், ‘கே.ஜி.எஃப் -2’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தி மொழி தொடர்பான சர்ச்சை கிளம்பியுள்ளது.
முறைப்பாடு அளிக்கச்சென்ற பெண்ணை மசாஜ் செய்ய வைத்த பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம் .. பீகார்
news 19 : புகார் கொடுக்க சென்ற பெண்ணை மசாஜ் செய்ய சொன்ன போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா போலீஸ் நிலையத்திற்கு ஒரு பெண் புகார் அளிக்க சென்று உள்ளார்.
அங்கிருந்த போலீஸ் அதிகாரி சசிபூஷன் சின்ஹா அந்த பெண்னை தக்கு மசாஜ் செய்ய கூறி உள்ளார். இது அந்த பெண்ணும் மசாஜ் செய்து உள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.
சசிபூஷன் சட்டை அணியாமல் அமர்ந்து உள்லார். அந்த பெண் மசாஜ் செய்துகொண்டிருந்த வீடியோ வெளியாகி உள்ளது. புகார் அளிக்க சென்ற பெண் ஒருவர் காவல் நிலையத்திற்குள் மசாஜ் செய்துகொண்ட வீடியோ வைரலானதை அடுத்து, போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளி, 29 ஏப்ரல், 2022
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு... சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்
tamil.asianetnews.com : சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு தூக்கு தண்டனையும் அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு தூக்கு தண்டனையும் அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள 15 வயது சிறுமிக்கு தனது தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து தகவல் அறிந்த தனியார் தொண்டு நிறுவன ஊழியர் சிறுமியின் தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார் அளித்தார். அந்த தொண்டு நிறுவன உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பஞ்சாபில் சிவசேனா-காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடும் மோதல்- வாள் சண்டை! போலீஸ் துப்பாக்கிசூடு!
Nantha Kumar R - Oneindia Tamil : சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று சிவசேனாவுக்கும்(பால்தாக்கரே), காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது.
ஒருவரையொருவர் கல்வீசி தாக்கியதோடு, வாள் சண்டையிட்டனர். நிலைமை மோசமானதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சி அமைத்துள்ளது. பகவந்த் மான் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று பஞ்சாப் பாட்டியாலா டவுனில் சிவசேனாவை(பால்தாக்கரே) சேர்ந்தவர்கள் ஊர்வலம் செல்ல முடிவு செய்திருந்தனர்.
தமிழ்நாடு முதல்வர் திரு மு க ஸ்டாலின் : என்னால் உணர்ச்சி பெருக்கை கட்டுப்படுத்த முடியவில்லை
ராதா மனோகர் : இலங்கை தமிழர் தலைவர்களும் சில தமிழ் அமைப்புக்களும் எனக்கு வைத்த கோரிக்கை , தனியாக தமிழர்களுக்கு என்று மட்டும் அனுப்பவேண்டாம் இலங்கை மக்களுக்கு என்று பொதுவாக அனுப்புங்கள்.
மக்களை பிரித்து பார்க்கவேண்டாம் . அனைத்து இனமக்களும் சேர்ந்துதான் இந்த நெருக்கடியை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள்
அதை கேட்டபோது நான் நெகிழ்ந்து போனேன்
என்னால் உணர்ச்சி பெருக்கை கட்டுப்படுத்த முடியவில்லை .இதுதான் தமிழர் பண்பாடு
பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்பது போல இலங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இது எடுத்து காட்டு
இந்த நிலைமையில் நாம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குமாக உதவிகள் செய்தாக வேண்டும்.
அந்த வகையில் பின்வரும் அத்தியாவசிய பொருட்களை வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது
இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தட்சிணாமூர்த்தி காத்தையா: நாளை தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழருக்கு தற்காலிக நிவாரணம்
BBC News, தமிழ் - சதீஷ் பார்த்திபன் - பிபிசி தமிழுக்காக :
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ஆம் தேதிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது நபரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வெள்ளிக்கிழமை தூக்கிலிட திட்டமிடப்பட்டது. சிங்கப்பூரில் இவரைப் போலவே வேறொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மலேசிய தமிழர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்பட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சர்வதேச அளவில் எதிர்ப்பைத் தூண்டியது.
அகதிகள் போல நுழைந்த இலங்கை போதைப்பொருள் கடத்தல் இளைஞர்கள் – கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்!
vikatan : இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழகம் வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் மீது இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு இருப்பது தெரியவந்தது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் அங்கு வாழ வழியின்றி, மக்கள் நகை, வீடு வாசலை விற்று பல லட்சம் ரூபாய் கொடுத்து கள்ளப்படகுகள் மூலம், கடல்வழியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் குடும்பம் குடும்பமாக அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக நுழைந்து வருகின்றனர்.
வியாழன், 28 ஏப்ரல், 2022
பெட்ரோல் டீசல் வரி - நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் விளக்கம்!
மின்னம்பலம் : தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று முதல்வர்கள் உடனான காணொளி காட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். இதற்கு அந்தந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில் பிரதமர் பேசியது தொடர்பாகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.செல்வப் பெருந்தகை சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசினார்.
அவரை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பிரதமர் மோடி நேற்று நடத்திய காணொளி காட்சி ஆலோசனைக் கூட்டத்தில், டீசல் விலையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைப்பதற்கான வழியை காணவில்லை என்று கூறினார்.
திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தன் பட்டப்பகலில் சரமாரி வெட்டிக்கொலை!
நக்கீரன் : சேலம் அருகே, நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தி.மு.க. பிரமுகரை பட்டப்பகலில் இருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள கன்னியாம்பட்டியைச் சேர்ந்தவர் கந்தன் (வயது 55). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார்.
இவர், புதன்கிழமை (ஏப். 27) காலை கன்னியாம்பட்டி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த அவருடைய உறவினர்கள் மணிகண்டன் (வயது 35), இவருடைய சித்தப்பா சின்ன பையன் (வயது 50) ஆகிய இருவரும் கந்தனை கீழே தள்ளிவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கந்தனை சரமாரியாக வெட்டினர்.
அஜய் தேவ்கன் - சுதீப் கருத்து மோதல் இந்தி தேசிய மொழி அல்ல பரபரப்பு!
கலைஞர் செய்திகள் : இந்தி விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும், இந்திய திரையுலகிலும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
அஜய் தேவ்கன் - கிச்சா சுதீப் கருத்து மோதல் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும், இந்திய திரையுலகிலும் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.
KGF - 2 படத்தின் வெற்றி குறித்து பட விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், இனிமேலும் இந்தி மொழியை தேசிய மொழி எனச் சொல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
“ஒரு கன்னட படம் பான்-இந்தியா படமாக எடுக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் ஒரு சிறிய திருத்தம், இந்தி இனி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டும் பல பான்-இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறது.
அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன. ஆனால் வெற்றி பெற போராடுகின்றன. இன்று நாம் எங்கு வேண்டுமானாலும் ஓடக்கூடிய படங்களைத் தயாரித்து வருகிறோம்” எனப் பேசினார்.
நிர்மலா சீதாராமன் - ஜெய்சங்கர் போன்றோர் எந்த அடிப்படையில் ஒன்றிய அமைச்சர்களானார்கள்? ஜாதி?
Kandasamy Mariyappan : நேற்று புதிய தலைமுறை திரு. Karthigaichelvan தலைமையில் நடந்த விவாத நிகழ்ச்சியில்..,
திரு. தமிழ்மணி என்ற யோக்கியசிகாமணி அவர்கள்.,
சட்டமன்றமே துணை வேந்தர்களை நியமித்தால், சாதிச் சங்கங்கள் வரிசைக்கட்டி நிற்கும் என்றும்., அந்த துணைவேந்தர் அவர் சார்ந்த சாதியினரையே Lecturers, Professorகளாக நியமிப்பார் என்றும் மிகப்பெரிய அறிவாளி போன்று ஷாதி, ஷாதி, ஷாதி என்று கடைசி வரையிலும் பேசினார்.!
இதனால் திறமை இல்லாமல் போய்விடும் என்றும் வருத்தப்பட்டார்.!
Mr தமிழ்மணி..,
1. திருமதி நிர்மலா, திரு. ஜெய்சங்கர் எந்த தகுதி, திறமை அடிப்படையில் ஒன்றிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.!
ஷாதிதானே.!
2. IIT, IIM எல்லாவற்றிலும் எந்த தகுதி, திறமை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே Lecturers, Professorகளாக நியமிக்கப்பட்டனர்.!
ஷாதிதானே.!
3. எந்த தகுதியின் அடிப்படையில் திரு. சூரப்பா துணை வேந்தராகவும், திரு. ரவி ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர்.!
ஷாதிதானே.!
புதன், 27 ஏப்ரல், 2022
முழு நேர இஸ்லாமிய பிரசாரகராக மாறிய சபரிமாலா
Rishvin Ismath : அரபு நாட்டுக் கக்கூசுக்கு விளம்பரம் கொடுக்கும் தமிழ்நாட்டுச் சபரிமாலா – மதமாற்ற அஜெண்டாவின் நவீன விளம்பர மாடல்!
அரபு நாட்டு மதத்திற்கு அண்மையில் மதம் மாறியதாக அறிவித்த சபரிமாலா, அம்மதத்தின் விளம்பர மாடலாக மாற்றப்பட்டு, இஸ்லாத்தை விளம்பரப் படுத்துவதற்கான திட்டத்தில் பொய், புரட்டுக்கள் போதாது என்று அரபு நாட்டுக் கக்கூசையும் கூட விளம்பரப் படுத்தி வீடியோ வெளியிட்டு இருக்கின்றார்.
இதனை ‘சபரிமாலா ஒரு விளம்பரப் பிரியை’ என்பதாகவோ அல்லது அவரின் ‘தனிப்பட்ட ஆர்வக் கோளாறின் வெளிப்பாடாகவோ’ மட்டும் பார்த்துவிட்டு நகர முடியாது,
ஜி கே வாசன் ஜி அக்டோபருக்குள் காங்கிரஸில் மீண்டும் ஐக்கியம்.. விளங்கிடும்
மின்னம்பலம் : ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு இணைக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணை பகுதியில், இந்தப் பக்கம் மோடி அந்தப் பக்கம் சோனியா: வாசன் முடிவு என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில், ' தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சிக்குள் இணைப்பதற்கு கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே. அந்தோணி தொடர்ந்து வாசனுடன் பேசி வருகிறார். அதேநேரம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில் வாசனுக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்குவதாக நேரில் அழைத்து பிரதமர் மோடியே பேசியிருக்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தோம். மேலும் மே மாதம் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்த பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் முக்கியமான முடிவுகள் எடுக்கப் போவதாகவும் அந்த செய்தியில் நாம் தெரிவித்திருந்தோம்.
தெலுங்கானா முதல்வர் கேசிஆர் பாரதிய ராஷ்டிரிய சமிதி- தேசிய கட்சி தொடங்குகிறார்!
Mathivanan Maran - Oneindia Tamil : ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தாம் பாரதிய ராஷ்டிரிய சமிதி எனும் தேசிய கட்சி தொடங்க ஆலோசித்து வருவதாக அறிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரையும் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார்.
ஆனால் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியில் இடம் பெறுவதற்கு பெரும்பாலான தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
பெண்கள் ஆட்டோ வாங்க ரூ 1 லட்சம் மானியம்- தமிழக அரசு அதிரடி
மின்னம்பலம் : பெண் ஓட்டுநர்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சி.வி.கணேசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் பொருட்டு புதியதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். கடலூர் மாவட்டம் மங்களூர், சிவகங்கை- மானாமதுரை, திருவண்ணாமலை - செய்யாறு, விருதுநகர்- திருச்சுழி, திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், ராமநாதபுரம் - கடலாடி, தருமபுரி - அரூர், கிருஷ்ணகிரி - தேன்கனிக்கோட்டை, பெரம்பலூர் - குன்னம், கோயம்புத்தூர் - வால்பாறை ஆகிய இடங்களில் இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
உக்கிரேன் - ரஷ்யா! மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்காமல் உலக மக்களுக்கு ஏன் கோரிக்கை வைக்கிறார்கள்?
அதனால் அனைத்து நாடுகளும் சில நாட்கள் அல்லது வாரங்களில் அடங்கிவிடும் என்றே கருதி இருந்தேன். இப்போது இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் நிலைமை மோசமாகி கொண்டே போகிறதே அல்லாமல் தீர்க்கப்படுவதாய் தெரியவில்லை.
ரஷ்யா உக்ரைன் பொது மக்கள் மீது நிகழ்த்துகின்ற வன்முறைகள்/போர் குற்றங்கள் வெளியாகி கொண்டே இருக்கும் வேளையில்,
தஞ்சை தேர் திருவிழா விபத்து- 11 பேர் உயிரிழப்பு 10 பேர் காயம் .. அப்பர் குரு பூஜை விழாவில்
Vishnupriya R - Oneindia Tamil : தஞ்சை: தஞ்சையில் அப்பர் குருபூஜை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து நடைபெற்றது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்
தஞ்சை மாவட்டத்தில் களிகாடு பகுதியில் உள்ளது அப்பர் கோயில். இங்கு ஆண்டுதோறும் அப்பர் குருபூஜையையொட்டி சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தேர் நள்ளிரவில் இழுக்கப்பட்டு அதிகாலை 3 மணி வரை நிகழ்வு நடைபெறும்.
இதுவரை 93 ஆண்டுகள் வெற்றிகரமாக இந்த தேர்த் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு 94 ஆவது ஆண்டு விழா தொடங்கியது. நேற்று முதல் 3 நாட்களுக்கு இந்த விழா கோலாகலமாக நடைபெறும்.
உண்மையிலே அவள் அப்படி ஒன்றும் அழகில்லையா .. அங்காடி தெரு
ராதா மனோகர் : ஹம்ஸத்வனி ராகத்தில் பல திரைப்பட பாடல்களும் பல செவ்விசை பாடல்களும் உள்ளன . குறிப்பாக முத்துசாமி தீட்சிதரின் வாதாபி கணபதிம் கீர்த்தனை மிக பிரபலம்
திரைப்படல்களில் இளையராஜா இசையில் மகாநதி படத்தில் உள்ள ரங்க ரங்க ரங்கநாதனின் என்ற பாடல் ஞாபகம் இருக்கலாம்
அடுத்த வீட்டு பெண் படத்தில் இடம்பெற்ற வனிதா மணியே என்ற பாடல் மிக மிக பிரபலமான அசல் ஹம்சத்வனி ராக பாடலாகும்
ஆனால் இவற்றை எல்லாம் ஒரே அடியில் தூக்கி சாப்பிட்டுவிட்ட ஒரு பாடல் என்றால் அது அங்காடி தெரு படத்தில் இடம்பெற்ற அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்ற பாடல்தான்
ஆனால் ஒரு அதிசயம் பாருங்கள் மகாநதி படத்தில் இடம்பெற்ற ரங்கா ரங்கா ரங்கநாதன் பாடல் அளவுக்கு மீறிய ஊடக வெளிச்சத்தை பெற்று இன்றுவரை அந்த பாடலை பாடியவரை மகாநதி ஷோபனா என்று கொண்டாடுகிறார்கள் இதில் என்ன புதுமை அல்லது மேன்மை இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை
அப்படியே ஹம்சத்வனி ராகத்தின் மிக வழமையான அம்சங்கள் மட்டுமே உள்ளது சுரங்கள் எல்லாமே சலித்து போன கூறியது கூறல்தான்
சேரி கால்வாயில் பாலம் கட்டிய 17 வயது இளைஞர் .. மகாராஷ்டிரா
கன்னித்தீவு ·: மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் தனது அட்டகாசமான செயலால் வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.
மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப்பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.
இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப்பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சிகளிடமும் இந்த விஷயம் சென்று இருக்கிறது.
கண்ணை மூடிருக்கும்போது தாலி கட்டிட்டார்" :சின்னத்திரை நடிகை பைரவி. DGP அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சி!
கலைஞர் செய்திகள் : சினிமா எடுப்பதாகக் கூறி பண மோசடி செய்து, வலுக்கட்டாயமாகத் தன் கழுத்தில் தாலியும் கட்டிய நபரைக் கைது செய்ய வேண்டும் என சின்னத்திரை நடிகை பைரவி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார்.
சினிமா எடுப்பதாகக் கூறி பண மோசடி செய்து, வலுக்கட்டாயமாகத் தன் கழுத்தில் தாலியும் கட்டிய நபரைக் கைது செய்ய வேண்டும் என சின்னத்திரை நடிகை பைரவி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி, கடந்த மார்ச் 25-ஆம் தேதி போலிஸில் அளித்த புகாரில், ”நான் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். வேலூரை சேர்ந்த ராஜாதேசிங்கு என்கிற சுப்பிரமணி, தயாரிப்பாளர் என அறிமுகமானார்.
கொழும்பு அரசியலில் நடப்பதென்ன..? டொலர்களில் பேரம் - களம் புகுந்துள்ள 2 நாடுகள், முக்கிய குடும்பத்தில் விரிசல்
டெயிலி மிரர் -ஆர்.சிவராஜா - : பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகுவாரா இல்லையா என்பதுதான் நாட்டில் இப்போது பேச்சு..
நேற்று இரவு அமைச்சரவை கூட்டம் முடிந்தபின்னர் ஜனாதிபதி மாளிகையில் கோட்டா , மஹிந்த ,சமல் ,பெசில் ஆகியோர் ஒன்றுகூடி ஆலோசனைகளை நடத்தினர்...
பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகவேண்டும் என்பதுதான் சமல் ,கோட்டாவின் கோரிக்கை..
என்றும் பெரிய அண்ணனின் சொல்லைத் தட்டாத மஹிந்த .அதற்கு சம்மதித்த போதும் , பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலக கூடாதென்று பிடிவாதமாய் இருந்திருக்கிறார் பெசில் ...
'கம்மன்பில 120 எம்.பிக்கள் இருப்பதாக சொல்வது எம்மை அச்சுறுத்தவே..அப்படி இருந்தால் அவர்கள் காட்டட்டும்..எங்களுக்கு 105 பேருக்கும் மேல் ஆதரவுள்ளது.தமிழ்க் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்காது என்று அறிந்தேன். எமக்கு ஆதரவளிக்கும் எம்,பிக்கள் எண்ணிக்கை இன்னும் கூடும்.நாடாளுமன்றம் கூட முன்னர் அதனை நான் செய்வேன்.அதுவரை பதவியை இராஜினாமா செய்யவேண்டாம் '' என்று இங்கு பெசில் ஆவேசமாக பேசியதாக தகவல்.
ஆனால் பிரதமர் கௌரவமாக பதவி விலகினால் நல்லது என்று விளக்கிய சமல் ,அப்படி நடந்தால் இப்போது உள்ள மக்களின் போராட்டம் கொஞ்சம் தணியும் என்ற சாரப்பட பதிலளித்துள்ளார்.
செவ்வாய், 26 ஏப்ரல், 2022
கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழா - சட்டப்பேரவையில் அறிவிப்பு
நக்கீரன் : தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெற்றவர் கலைஞர் எனப் புகழாரம் சூட்டி, தமிழகத்திற்கு அவர் செய்த அனைத்து நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், இத்தகைய மாபெரும் தலைவருக்கு இந்த அரசு தனது வரலாற்றுக்கடமையை செய்ய நினைக்கிறது. கலைஞர் பிறந்ததினமான ஜூன் 3ஆம் நாள் இனி அரசு விழாவாக தமிழகத்தில் கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார். மேலும், வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞருக்கு கம்பீர சிலை நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பெருகும் ஆதரவு! ஆட்சியாளர்கள் பதவி இழக்கிறார்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் வரலாறு காணாத விலையேற்றம் ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன
விமான நிலையங்கள் தனியார்மயம்:தமிழ்நாடு அரசுக்கு இலாபத்தில் பங்கு வேண்டும்!
BBC - ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழ் : 'விமான நிலையங்களை தனியார்வசம் ஒப்படைக்கும்போது மாநிலத்துக்கும் லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது, விவாதப் பொருளாக மாறியுள்ளது. 'தனியாருக்குக் கிடைக்கும் லாபத்தில் இருந்து பாதிக்குப் பாதி மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டும். இது மாநில அரசின் உரிமை. மத்திய அரசுக்கு தனியாக நிலமோ, நாடோ இல்லை' என்கிறார், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.
25 விமான நிலையங்கள்
திங்கள், 25 ஏப்ரல், 2022
துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கலாம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மாலைமலர் : பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை கவர்னரே நியமித்து வரும் நிலையில் அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கே அரசு அனுப்பி வைக்க உள்ளது.
சட்டசபையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1949-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழக சட்டம் மற்றும் 1991-ம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க தொடர்புடைய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. துணைவேந்தரானவர் 2000-ம் ஆண்டு கர்நாடக மாநில பல்கலைக்கழக சட்டத்தின்படி மாநில அரசின் இசைவுடன் வேந்தரால் நியமிக்கப்படுதல் வேண்டும்.
மேற்சொன்ன பிற மாநில பல்கலைக்கழக சட்டங்களுக்கு ஏற்ப தமிழ்நாடு மாநில அரசானது மாநில அரசுக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் வேண்டும் என கருதுகிறது.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் மீண்டும் வெற்றி
மாலைமலர் : பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார்.
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையே, அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளேன் என அதிபர் மேக்ரான் தெரிவித்திருந்தார்.
புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
இந்த தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
ஞாயிறு, 24 ஏப்ரல், 2022
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தீண்டாமையை கடைப்பிடித்த காஞ்சி விஜயேந்திரன்! பொன்னாடையை பொத்தென்று போட்ட ஆரிய...
தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் ஆசிர்வாதம் பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019ம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு தற்போது இரு பதவிகளையும் தமிழிசை வகித்து வருகிறார்.
அமித்ஷா புதுச்சேரி வருகை: .. சிலிண்டர், பலூன் பறிமுதல்.. அரசியல் கட்சி நிர்வாகிகள், பலூன் விற்பனையாளர் கைது
BBC : புதுச்சேரிக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வந்துள்ளார். புதுச்சேரியில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடக்கும் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவிலும் அமித்ஷா கலந்துகொள்கிறார்.
என்னென்ன திட்டங்கள்?
மேலும் புதுவை பல்கலைக்கழகத்தில் ரூ.48 கோடி செலவில் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
அரவிந்தர் ஆசிரமத்தில் அமித் ஷா தியானத்தில் ஈடுபட்டார்
நக்கீரன் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரிக்கு வருகைப் புரிந்தார்.
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையம் வந்த அவரை அம்மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பெண் ஆசிரியர்கள் அச்சத்துடனே பாடம் நடத்த வேண்டியிருக்கிறது... ஆசிரியை கவிஞர் சுகிர்தராணி
Sukirtha Rani : ஓர் ஆசிரியராகவும் கவிஞராகவும் இந்தப் பதிவை எழுத வருத்தப்படுகிறேன்.
சமீப காலமாக அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள்,
பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் ஆசிரியர்களிடமும் நடந்து கொள்ளும்விதம் மிகுந்த கவலைக்கு உரியது.
ஆசிரியர்களை மாணவர்கள் இழிவாகப் பேசுகின்ற, தாக்க முனைகின்ற வீடியோக்கள் ஊடகங்களில் சுற்றுகின்றன.
அவை பெரும்பாலும் மாணவர்களால் எடுக்கப்பட்டு அவர்களாலேயே இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் பகிரப்படுகின்றன.
மேலும் பாடம் நடத்தும்போது பெண் ஆசிரியர்களை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள்.
உண்மையில் இவை போன்ற நிகழ்வுகள் தினம்தினம் பள்ளிகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அவை வெளியே தெரிவதில்லை. ஆசிரியர்கள் மென்மையாக அறிவுரைகூறி கடக்க வேண்டிய நிர்பந்தம்.
மின்சார விநியோகம் சீரானது! இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி. தமிழக அரசு அதிரடி
கலைஞர் செய்திகள் : "முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது." என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த புதன்கிழமை மாலை ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
கனிமொழி MP : மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கையை எடுப்போம்
News18 Tamil : கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலை கல்லூரியில் மாணவ மாணவியர் திறமைகளை முன்னேற்ற நடந்த கலந்துரையாடலில்,
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய போது மாணவிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பலவகையான கேள்விகளை எழுப்பினர்.
அப்போது கேள்வி எழுப்பிய மாணவி ஒருவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளன. மேலும் காவல்துறையினரே மது பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.