சனி, 30 நவம்பர், 2024

வாரணாசி ரெயில் நிலையத்தில் தீ விபத்து.. 200 வாகனங்கள் எரிந்து நாசம் -

மாலை மலர் :  வாரணாசி ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 200 வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் கான்ட் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இன்று [சனிக்கிழமை] அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினரும், காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி), ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) குழுக்களும் தீயை அணைக்க உதவினர்.

பெரும்பான்மை மக்களின் இடஒதுக்கீடு போராட்டம் 1854 ல் ஆரம்பித்து இன்றுவரை 166 ஆண்டுகள் தொடர்கிறது சுருக்கமான வரலாறு

 Devi Somasundaram    : 1991 ல 10% EBC ( economically backward class )...
பிற்படுத்தபட்டவர் இல்லை. உயர்சாதியில் பொருளாதார ரீதியா பின் தங்கியவர்களுக்கு ஒதுக்கீடு. (EWS பிறப்பு இது தான் ) .
1992 -இந்திரா சானே தீர்ப்பு ( மண்டல் வழக்கு ) 10% ஒதுக்கீட்டை ரத்து செய்கிறது.
2019, -ஜனவரி 7 ந்தேதி பார்லிமெண்ட் கூட்டுகுழு 10% ரிசர்வேஷனை முடிவு செய்கிறது.
ஜனவரி 8 லோக்சபாவில் டேபிள் செய்யப்பட்டு அன்றே பாஸ் ஆகிறது,
9 ந்தேதி ராஜ்ய சபாவில் பில் பாஸ் ஆகிறது .
12 ந்தேதி பிரெஸிடெண்ட் கையெழுத்து போடுகிறார் .
யூத் போரம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு ஜனவரி 25 உச்சநீதிமன்ற அப்ஜக்‌ஷன் இல்லை என்று கூற சட்டம் அமலுக்கு வருகிறது .
எந்தக் கட்சியும், அமைப்பும், தனி நபரும் எதிர்க்காமல் ஒரே நாளில் சட்டமாகிறது.

Obc,sc,st, reservation: வரலாறு.
1854- இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு standing order போடுகிறது . No-128. இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகாரமயமாக்கப் படவில்லை. அதற்கு ஸ்பெஷல் ஒதுக்கீடு தரனும் என்பது தான் அந்த ஸ்டேண்டிங் ஆர்டர் .

வெள்ளி, 29 நவம்பர், 2024

வங்கக்கடலில் உருவானது பெங்கல் புயல்

தினமலர் : சென்னை: வங்கக்கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெங்கல் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே நிலை கொண்டு இருந்தது. முன்பு இது புயலாக மாறாது என வானிலை மையம் நேற்று கூறியிருந்தது. ஆனால், இன்று காலை, அடுத்த சில மணி நேரங்களில் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்தது.

வியாழன், 28 நவம்பர், 2024

இந்தியர்களின் 'அமெரிக்க கனவுக்கு டிரம்ப் ஆட்சியில் வரப்போகும் சிக்கல்கள்!

BBC News தமிழ் -  சௌதிக் பிஸ்வாஸ் :  கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்காவின் சுங்கம் மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறை அங்குள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் தாய்நாட்டிற்கே திருப்பி அனுப்பியது. இதுபோன்று இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது சாதாரண விமானம் அல்ல, இது மிகப்பெரிய அளவில் மக்களை வெளியேற்றப் பயன்படும் விமானம். இந்த ஆண்டு மட்டுமே பல முறை பல நூற்றுக்கணக்கான பயணிகளுடன் இந்த விமானம் இயக்கப்பட்டது. அமெரிக்காவில் வாழ சட்டப்பூர்வ அடிப்படையை ஏற்படுத்திக் கொள்ளாத இந்தியர்கள் இந்த விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மலேசியாவின் அடையாளம்... தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் இலங்கை (தமிழர் )மறைவு!

மின்னம்பலம் - Kavi :  இலங்கை தமிழரான மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் இன்று (நவம்பர் 28) காலமானார்.
“எங்கள் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன் மறைவை மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்” என்று அவரது நிறுவனமான உசாஹா தேகாஸ் கூறியுள்ளது.
சினிமா உலகில் ‘ஏ.கே’ வாக அறியப்படுபவர் நடிகர் அஜித். அதுவே டெலிகாம் உலகில் ‘ஏ.கே’ என்று தொழில் அதிபர்களால் அழைக்கப்படுபவர் அனந்த கிருஷ்ணன்.
இவர் மலேசியாவில் மேக்ஸில் என்ற தொலைத் தொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். Astro Malaysia Holdings Bhd தனியார் ஊடகத்தையும் நடத்தி வந்தார். இலங்கையின் எஸ்.எல்.டி.மொபிடெல் நிறுவனத்திலும் இவரது நிறுவன பங்குகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

மாலை மலர் :  உலகம் முழுவதும் குழந்தைகள் தற்போது செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூ 250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெங்கல் புயல்- எங்கே கரையை கடக்கிறது- சென்னைக்கு வராது - வெளியான பிந்திய கணிப்பு

tamil.asianetnews.com - Ajmal Khan  : Fengal cyclone : தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, தமிழகத்தை நோக்கி நகர்கிறது.
இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளது.
அந்த வகையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம் து 18 ஆண்டு திருமணம்

tamil.samayam.com -  ஷமீனா பர்வீன்  :  தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 20 ஆண்டுகள் கழித்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்கள்.
அந்த மனு மீதான விசாரணையின்போது தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இரண்டு முறை தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து மூன்றாவது முறை அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரானார்கள். மனுவை விசாரித்த நீதிபதி நவம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

1970 களில் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷ ஊசி கொலைகள் - பணம் பறித்த கும்பல் சிக்கியது எப்படி?

 BBC News தமிழ்  -முரளிதரன் காசிவிஸ்வநாதன்   : விஷ ஊசி கொலைகள்: ஹவாலா, கருப்புப் பண முதலைகளை கொன்று பணம் பறித்த கும்பல் சிக்கியது எப்படி?
 ராமநாதபுரம் சிறுவயல் பகுதியைச் சேர்ந்த வடிவேலன் செட்டியார், சென்னையில் உள்ள 'ஹோட்டல் - து - பிராட்வே'வில் தங்கியிருந்தார்
சென்னையில் 1970களின்போது அதிக பணம் வைத்திருந்த பலரும் ஊசி போட்டுக் கொல்லப்பட்டு, அவர்களிடமிருந்து பணமும் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
'விஷ ஊசி கொலைகள்' என்று அழைக்கப்பட்ட இந்தக் கொலைகளைச் செய்த ஆசாமிகள் யார், அவர்கள் என்ன ஆனார்கள்?
தமிழகத்தை அதிர வைத்த ஒரு கொலை வழக்கின் வரலாறு.

புதன், 27 நவம்பர், 2024

பெங்கல் புயல் கரையை கடக்கும் 7 மாவட்டங்கள் .. சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை

 tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து வருகிறது. வானிலை மைய கணிப்புபடி இன்று அது புயலாக மாறும். இதற்கு 'FENGAL - ஃபெங்கல்’ என பெயர் சூட்டப்படும். இப்பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயல் கரையை கடப்பது தொடர்பான முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
tamilnadu weatherman weather news
சென்னை டூ கன்னியாகுமரி.. 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அடுத்த 3 மணி நேரம் அலர்ட்

யாழ்ப்பாணத்து ஈழநாடு நாளிதழும் திரு கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் அய்யர்அவர்களும்

 ஹரன் அய்யர்

ராதா மனோகர் : இலங்கை தமிழர்களின் அரசியல்  எஸ்ஜேவி செல்வநாயகத்தின் வெறுப்பு அரசியல் யுகத்திற்கு பாதபூஜை செய்த ஈழநாடு நாளிதழ் ஆசிரியர் திரு ஹாரன் அய்யர் பற்றிய சுருக்கமான குறிப்பு இது!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையில் (1959-1979) 20 ஆண்டுகள் பிரதம ஆசிரியராக  
 திரு கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் அய்யர் என்பவர் குப்பை கொட்டினார்
இவர் கொட்டிய குப்பைகளின் தராதரமோ சொல்லும் தரமன்று!
இவர் திருவையாரை சேர்ந்த வைதீக பார்ப்பனராகும்
இவரின் இறுதி காலம் சென்னை மயிலாப்பூரில் கழிந்தது
இன்று பூதாகரமாக காட்சி அளிக்கும் யாழ்மையவாதத்தின் வெறுமைக்கு இவர் ஒரு முக்கிய காரணமாகும்!
இவர் கேபி ஹாரன் என்ற பெயரிலும் ஐயாறன் என்ற பெயரிலும் ஊர்க்குருவி என்ற பெயரிலும் இன்னும் ஏராளமான புனைபெயர்களிலும் ஈழநாடு பத்திரிகையை நிறைத்தார்.
நன்றாக சிரிக்க சிரிக்க பேசுவார்
இந்திய அரசில் நல்ல செல்வாக்கோடு இருந்தார்
டெல்லிக்கு சென்று பிரதமர் நேரு மற்றும் வல்லபாய் பட்டேல் உட்பட பல அரசு பிரமுகர்களையும் சந்திக்கும் பேற்றினை அடிக்கடி பெற்றவராகும்

பங்களாதேஷில் ஹரே கிருஷ்ணா சாமியாருக்காக வாதாடிய முஸ்லீம் வழக்கறிஞர் கொலை

 மாலை மலர் : டாக்கா வங்கதேச நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.
இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அவர்மீது இந்துக்களின் போராட்டங்களைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

செவ்வாய், 26 நவம்பர், 2024

யாழ் இளைஞர் ரஷ்ய இராணுவத்தில் கட்டாயமாக இணைப்பு!

யாழ் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு | Jaffna Youth Forced To Join Russian Army

 அத தேரான : -பிரான்ஸ் செல்ல முயற்சித்த யாழ்.இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு -மீட்டு தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரது இடத்திற்கு தொழில் நிமித்தமாக செல்ல முயர்ச்சித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் இருந்து திருநங்கைகள் நீக்கம்? டிரம்புக்கு என்ன கோபம்?

 மின்னம்பலம் - Kumaresan M :  திருநங்கைகள் மீது டிரம்புக்கு என்ன கோபம்… பதவியேற்றதும் அந்த முடிவு?
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டிரம்ப் பொறுப்பேற்கிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி அவர் பதவியேற்கிறார். அதன்பிறகு, அவர் பல அதிரடிகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், அமெரிக்க ராணுவத்தில் பணி புரிந்து வரும் 15 ஆயிரம் திருநங்கைகளை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

திங்கள், 25 நவம்பர், 2024

Andhra CM ஜெகன் மோகன் ரெட்டிக்கு 200 மில்லியன் டாலர்களை அதானி கொடுத்துள்ளார் - அமெரிக்க குற்றச்சாட்டு

 முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு 200 மில்லியன் டாலர்களை அதானி லஞ்சமாக கொடுத்துள்ளார் என்று அமெரிக்க குற்றச்சாட்டு

கனடா: 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டம் - இதன் விளைவுகள் என்ன? - BBC

  :BBC News தமிழ் - குர்ஜோத் சிங் : கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) வெளியிட்ட ஓர் அறிக்கையில்,
இந்த நிகழ்வை ஓர் “இனப்படுகொலை” என அங்கீகரிப்பதற்காக ஒரு தீர்மானத்தைத் தங்கள் கட்சி அறிமுகப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில் புதிய ஜனநாயகக் கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஞாயிறு, 24 நவம்பர், 2024

JVP / NPP -அளவு கணக்கில்லாமல் ஊழல் மலிந்தால் .. மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்!

May be an image of 3 people and text

ராதா மனோகர் : அண்மையில் இலங்கையில் மிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) பற்றி பலருக்கும் புரியாத பல விடயங்கள் உள்ளன!
ஏனெனில் ஜேவிபியின் கடந்த கால வரலாறு மிகவும் சர்ச்சைக்கு உரியதாக இருந்தது.
மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணி அமைப்பு பற்றியும் தெளிவான புரிதல் இல்லை எனலாம்!
இருந்தாலும் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தார்கள்!
ஏன்?
ஏற்கனவே ஆட்சியில் இருந்த அல்லது எதிர்க்கட்சியில் இருந்த முன்னாள் ஆளும் கட்சிகளாக்கட்டும் எல்லாமே அளவு கணக்கில்லாமல் சொத்து குவிப்பாளர்களாக மாறிவிட்டிருந்தார்கள்.
இந்த அரசியல்வாதிகளின் சொத்து குவிப்புக்கள் நாட்டை ஒரு ஊழல் கிடங்காக மாற்றி விட்டிருந்தது.

விழுப்புரம்: அரசு விழாவில் முதல்வரோடு டாக்டர் ராமதாஸ், அன்புமணி? நடப்பது என்ன?

9 பேர், கோவில் மற்றும் மருத்துவமனை படமாக இருக்கக்கூடும்

மின்னம்பலம் - Aara :வரும் நவம்பர் 28ஆம் தேதி விழுப்புரத்தில் 21 சமூக நீதி போராளிகளின் நினைவு மணிமண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
1987 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டு கோரி நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்த 21 தியாகிகளுக்கான இந்த மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினோடு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் நேற்று முதல் பரவி வடமாவட்ட அரசியலில் பரபரப்பை கூட்டி இருக்கிறது.

ஷிண்டே ஆதரவே தேவை இல்லை.. மகாராஷ்டிரா முதல்வராகிறார் பட்நாவிஸ்?

tamil.oneindia.com  -Shyamsundar  :  மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பாஜகவில் இருந்துதான் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தற்போது முதல்வராக உள்ள சிவசேனாவின் ஷிண்டே முதல்வராக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
மகாயுதி கூட்டணியில், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அகியோர் போட்டியில் உள்ளனர்.
இதில் ஏக்நாத் ஷிண்டே தற்போது முதல்வராக உள்ளார். பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார் என்கிறார்கள். ஆனால் பாஜக கிட்டத்தட்ட தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது.