சனி, 23 செப்டம்பர், 2017

ஓ.பி.எஸ்.-க்கு முதல்வர் இலாகாவை மாற்ற ஜெயலலிதா கையெழுத்து போட்டது எப்படி: மு.க.ஸ்டாலின் கேள்வி

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ள நிலையில் மு.க. ஸ்டாலின் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
 ஓ.பி.எஸ்.-க்கு முதல்வர் இலாகாவை மாற்ற ஜெயலலிதா கையெழுத்து போட்டது எப்படி: மு.க.ஸ்டாலின் கேள்வி மதுரை பழங்காநத்தத்தில் நேற்ற நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினா்ர. அப்போது, ‘‘புரட்சித்தலைவி என்ற அந்த தெய்வத்தை நோய்க்கு மருந்து கொடுக்காமல் கொண்டு போய் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அய்யா உங்களிடம் எல்லாம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள் பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று இட்லி சாப்பிட்டார்கள், சட்னி சாப்பிட்டார்கள் என்று ஏதோ ஒரு பொய்யை சொன்னோம். ஆனால் உண்மையிலேயே அதை யாருமே பார்க்கவில்லை. இதுதான் உண்மை. அவர் பார்த்தார். இவர் பார்த்தார் என்று செய்தி சொல்வதெல்லாம் பொய். ஏன் என்று கேளுங்கள்.

ரசித்தலும் காதலித்தலும் ஒரு தவறான தொணியில் பார்க்கப்படுகிறது ஏன்?

tamil.arasan.: எழுத்தாளனை முடிந்த மட்டும் காதல் செய்யாதீர்கள் என்கிற ஒரு வாதத்தை சொற்ப நாட்களுக்கு முன் கடந்தோம்.
இங்க ஒரு ஆண் எழுத்தாளர் மேல் ஒரு பெண் காதல் ரீதியாகவும்,உடலியல் ரீதியாகவும் ஈர்ப்பு கொள்ளும் சூழல் இருக்கிறது.இதுவே மாறாக ஒரு ஆண் வாசகன் ஒரு பெண் எழுத்தாளரை அவர்கள் எழுத்தின் மூலமாக மரியாதை தர வேண்டிய சூழலிலே பாவிக்கப்படுகிறது.இந்த ஹே தில் ஏ முஷ்கில் படத்தில் ரன்பிர் கபூர்,ஒரு பெண் எழுத்தாளருடன் காதல் வயம் கொள்வது போல் இருக்கும் அதைப் போன்ற சாத்தியம் பெண்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.
எத்தனையோ ஆண் எழுத்தாளர்களை இன்னும் இன்னும் திருமணமானவராக இருந்தாலுமே ரசிக்கவும்,அதை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கின்றது.
இதுவே மாறாக ஒரு ஆண் வாசகன் உதாரணத்திற்கு பாடலாசிரியர் தாமரையையோ இல்லை,அவரைப் போன்றவரையோ ஒரு மரியாதையின் நிமித்தமாகவே ரசிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.இன்னும் மணிரத்னம்,கௌதம் மேனன், போன்றவர்கள் மீது அவர்களது கலையின் வாயிலாக காதலித்து காதல்காரர்களாக சொல்லிவிட இருக்கும் சூழல் தாமரைக்கோ,இறுதிச் சுற்று சுதாவிற்கோ தருவதில்லை.
நான் ஒரு முறை நடிகை ஸ்ரீ வித்யாவின் அபூர்வ ராகங்கள் படம் பார்த்துவிட்டு,இவங்க ரொம்ப அழகா இருக்காங்க.

தமிழ்தேசியம் ஒரு பியுட்டி பார்லர் ..(சீமான் பிராண்ட்)... எவிடன்ஸ் கதிர் இடி முழக்கம்



சிறுவனை கடித்து கொன்ற நாய்கள்: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்,, ஆந்திர அவலம் ..

குண்டூர்: ஆந்திராவில், வெறி நாய்கள் கடித்து குதறியபோது காப்பாற்றாமல், பொதுமக்கள், மொபைல்போனில் வீடியோ எடுத்ததால், 4 வயது சிறுவன் உயிரிழந்தான். ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். குண்டூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில், கூலி தொழில் செய்யும் தம்பதியின், 4 வயது மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய்கள், திடீரென, சிறுவன் மீது பாய்ந்து, அவனை கடித்து குதறின. கொடூர சம்பவம் அவ்வழியே சென்ற பொதுமக்கள், சிறுவனை மீட்காமல், நாய்கள் கடித்து குதறும் கொடூர சம்பவத்தை, தங்கள் மொபைல்போனில் படம் எடுத்தனர். தகவல் அறிந்து ஓடி வந்த பெற்றோர், வெறி நாய்களிடமிருந்து, மகனை மீட்டு, மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். பல நாய்கள் கடித்ததில், உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டதால், சிறுவன் இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். குண்டூரை சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பினர் கூறியதாவது: பொதுமக்களின் செயல், வெட்கப்படும்படி உள்ளது. சிறுவனை காப்பாற்றாமல், அவன் நாய்களால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்துஉள்ளனர். நடவடிக்கை இல்லை தங்கள் வீட்டருகே, ஏராளமான வெறி நாய்கள் சுற்றித் திரிவதாக, பலியான சிறுவனின் தாய், ஒரு வாரத்திற்கு முன்பே, நகராட்சியில் புகார் அளித்துள்ளார்.

கமல் ஒரு வெறிபிடித்த சங்கியா? மோடி: “தம்பி டீமானடைசேஷன் ஊத்திக்கிச்சுடா நம்புடா"

Don Ashok : டீமானடைசேஷன் எனும் உலக மகா லூசுத்தனத்தை அது
அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே நாங்கள் எதிர்க்கிறோம். அதேபோல ரிசர்வ் பேங்க் அதிகாரபூர்வ அறிக்கையும் அது எவ்வளவு பெரிய தோல்வி என ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறது. அதாவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி, அமித்ஷா கரகாட்டகோஷ்டியினால் கூட டீமானடைசேஷன் என்பது பெரிய தோல்வி என்பதை மறைக்க முடியவில்லை. அதனால்தான் மோடியின் வெறிபிடித்த ஆதரவாளரான குருமூர்த்தி மாமாவே “இந்திய பொருளாதாராம் மூழ்குகிறது,” என சரண்டர் ஆகியிருக்கிறார். ஆனால் கருப்புச் சட்டைக்காரன் என ஊரை ஏமாற்றி, காந்தியவாதி என நாட்டை ஏமாற்றி, கம்யூனிஸ்ட் என உலகத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கமலுக்கு டீமானடைசேஷன் தோல்வி என்பதற்கு ஆதாரம் வேண்டுமாம்! அப்போதுதான் ஒப்புக்கொள்வாராம்!
ரிசர்வ் பேங்க் அறிக்கைக்கு மேல் என்ன ஆதாரம் கேட்கிறார் எனத் தெரியவில்லை. மோடியே “தம்பி டீமானடைசேஷன் ஊத்திக்கிச்சுடா நம்புடா...” என சொன்னாலும் இவர் ஒப்புக்கொள்ளமாட்டார் போல! டவுசர் மட்டும் காவியில் இல்லாமல் ஜட்டி, பனியனைக் கூட காவி நிறத்தில் போடும் ஒரு வெறிபிடித்த சங்கியால் மட்டுமே இப்படி பேச முடியும்.

மீண்டும் ஒரு சுதந்திர பத்திரிகையாளர் கொலை! கே.ஜே.சிங் (65) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் ஆசிரியர்..


பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் (65) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியர். தி ட்ரிபியூன் உட்பட பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். கே.ஜே.சிங் அவரது தாயார் குர்சரண் கவுருடன் (92) மொகாலியில் உள்ள அவர்களது வீட்டில் வசித்துவருகிறார்.
இன்று (செப்டம்பர் 23), தனது தாயாருடன், உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் வீட்டில் தொலைக்காட்சி உள்ளிட்ட சில பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இந்தக் கொலை நேற்று மாலைக்கு மேல் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ஆடிட்டர் குருமூர்த்தி : பணமதிப்பழிப்பால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அடிமட்டத்துக்குச் சென்றுவிட்டது! ... இப்பத்தாய்ன் தெரியுதா? அடேய் அடேய் ..

வீழ்ச்சியடைந்த பொருளாதாரம்: குருமூர்த்திபணமதிப்பழிப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அடிமட்டத்துக்குச் சென்றுவிட்டதாகவும், இப்போதிலிருந்தே துரித நடவடிக்கைகளை மேற்கொண்டால் வளர்ச்சிப் பாதையில் மீண்டும் பயணிக்கலாம் எனவும் துக்ளக் வார இதழின் ஆசிரியரான எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கள்ள நோட்டுகளையும் கறுப்புப் பணத்தையும் முடக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அதிரடியான சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிராக துக்ளக் வார இதழின் ஆசிரியரான எஸ்.குருமூர்த்தி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

BBC : ராகுல்காந்தியுடன் இருக்கும் பெண் நதாலியா ராமோஸ்.... யார்?

அண்மையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் பற்றி இந்திய ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த பயணத்தின்போது அவர் ஆற்றிய உரைகள் பெருமளவிலான சர்ச்சைகளை கிளப்பியது. காங்கிரஸ் கட்சியின் குறைபாடுகளை பற்றி தனது உரையில் ராகுல்காந்தி குறிப்பிட்டிருந்த போதிலும், அத்துடன் சேர்த்து நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசையும் தாக்கிப் பேசியிருக்கிறார். சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்களை அவர் மட்டுமல்ல அவருடைய சகாக்களும் வெளிநாட்டு பயணம் பற்றிய புகைப்படங்களையும் தகவல்களையும் பதிவிடுகின்றனர். ஆனால், ராகுல்காந்தியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான சர்ச்சையை அதிகமாக்கியிருக்கிறது ஒரு புகைப்படம். இந்தப் புகைப்படத்தை பதிவிட்டிருப்பது ராகுல்காந்தியோ அல்லது அவரது சகாக்களோ அல்ல. செப்டம்பர் 14ஆம் தேதியன்று இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் இந்த புகைப்படத்தை பதிவேற்றியிருப்பது ஒரு பெண். ராகுல்காந்தியுடன் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கும் நதாலியா ராமோஸ், தானே இந்த புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார்.

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உங்கள் அனைவரிடம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன் மன்னித்துக்கொள்ளுங்கள், பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்கள், சட்னி சாப்பிட்டார்கள் என்று சொல்லியிருப்போம். ஆனால் உண்மையில் நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை அது தான் உண்மை. அவன் பாத்தான், இவன் பாத்தான் என்று தினமும் சொன்னது எல்லாம் பொய். ஏனெனில் எங்களுடைய கட்சியின் ரகசியம் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்று பொய்களை சொன்னோம். இது தான் உண்மை.

ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி

ஜெயலலிதா சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கார்நாடக மாநிலம் குடகில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சசிகலா முதல்வராக வேண்டும் என்று கண்ணீர்விட்டு கேட்டவர் தான் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார். பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவர் குடும்பத்தையே என் பொண்டாட்டி இல்லை, புள்ளைகள் இல்லை என்பார். அவர்களுக்கெல்லாம் பதவி முக்கியம் ஏனெனில் வயதாகிவிட்டது பல நாள் ஆசை தற்போது தான் மந்திரி பதவி கிடைத்துள்ளது. இருக்கும் வரை அந்த பதவி சுகத்தை அனுபவித்து செல்லலாம் என்பதற்காக பேசுகிறார்.

பேரறிவாளனின் விடுப்பு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

பேரறிவாளனின் விடுப்பை  மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தனது தந்தை டி.ஞானசேகரன் என்ற குயில்தாசனுக்கு உடல் நலம் சரியில்லாததால் பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில், பேரறிவாளனை ஒரு மாத விடுப்பில்  செல்ல மாநில அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் முதன் முறையாக, கடந்த மாதம் ஒரு மாத விடுப்பில்  விடுவிக்கப்பட்டார். இதையடுத்து பரோலில் வெளிவந்த பேரறிவாளனை ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் சந்தித்து வந்தனர். இந்நிலையில் பேரறிவாளனின் விடுப்பு நாளையுடன் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேரறிவாளனுக்கு வழங்கிய விடுப்பை மேலும் ஒருமாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நக்கீஎரன்

செந்தில் பாலாஜி உறவினர் வீடுகள், அலுவலகங்களில் ரூ.3 கோடி நகைகள் பறிமுதல், 20 வங்கிக் கணக்குகள் முடக்கம்

senthil_balajiதினமணி : கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சனிக்கிழமை மூன்றாவது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் ரூ.3 கோடி நகைகளும், ரூ.1,20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 20 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தவர் வி. செந்தில் பாலாஜி. தற்போது, தினகரன் ஆதரவாளராகவும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்கும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவைத் தலைவரால் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவர்.
ஏற்கெனவே செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது வாங்கல் குப்புச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு இடம் வாங்கப்பட்டது. பிறகு அந்த இடத்தில் கல்லூரி கட்ட போதிய வசதி இல்லை எனக்கூறி, தற்போது சணப்பிரட்டியில் கல்லூரி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

பல வெளிநாட்டு வங்கி கணக்குகளை கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே முடித்து விட்டார்?


tamilthehindu : மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அவரை தேடப்படும் நபராக அறிவித்து சிபிஐ லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த லுக்-அவுட் நோட்டீஸூக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

திராவிட அரசியலை சில தலித்துகளும் எதிர்க்கிறார்கள்.சில தமிழ் தேசிய....

Vincent Raj · திராவிட அரசியலை சில தலித்துகளும் எதிர்க்கிறார்கள்.சில தமிழ் தேசிய ஆட்களும் எதிர்க்கிறார்கள்.இந்துத்துவா ஆட்களும் எதிர்க்கிறார்கள்.இது உண்மையா? உண்மைதான்.ஆனால் காரணங்கள் வேறு.எதிர்க்கிற தமிழ் தேசிய ஆட்கள், திராவிட அரசியல் என்பது தெலுங்கு அரசியல் என்றும் வந்தேறி அரசியல் என்றும் இன துவேசத்தை காட்டுகின்றனர்.இந்துத்துவாவை வேர் அறுக்கும் அரசியல் திராவிடம் என்பதினால் பி.ஜெ.பி.போன்ற சக்திகள் எதிர்ப்பினை காட்டுகின்றன.ஆனால் தலித்துகள் எதிர்ப்பு என்பது வேறு.அது நட்பு முரண் ரீதியான எதிர்ப்பு.அதாவது இடைநிலை சாதி முன்னேற்றத்தை/ எழுத்துச்சியை ஏற்படுத்திய அளவிற்கு தலித்துகளுக்கு போதிய அளவு செய்யப்படவில்லை.தலித் மக்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் எடுத்து இருக்க வேண்டும் என்கிற விமரிசனம் அது.ஆனால் மூன்று சக்திகளையும் ஒன்றாக பார்க்கும் சில திராவிட ஆட்களின் மனநிலையை என்ன சொல்லுவது?

கமலஹாசன் மம்தா பானர்ஜியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார்

மின்னம்பலம் : தற்போது தமிழக ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது கமல்ஹாசனின் அரசியல் பற்றிய அறிவிப்புகள்தான். சில மாதங்களாக ட்விட்டர் மூலமாக தனது மனதில் வெளிப்படும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துவந்த நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசின் மீதான தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்து வந்தார்.
ஒருகட்டத்தில் ‘பிக் பாஸ்’ பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல், “தமிழகத்தின் அனைத்துத்துறைகளிலும் ஊழல் உள்ளது” என்று தெரிவித்த ஒரு வார்த்தை, தற்போது அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்துச் சிந்திப்பது வரை கொண்டுவந்துள்ளது.
கமல்ஹாசனின் ஊழல் புகார்கள் குறித்து எதிர்வினையாற்ற அமைச்சர்கள் வரிந்துகட்டினர். செல்லூர் ராஜூ, “கமல் ஒரு துறையைக் குறிப்பிட்டு அதில் தவறுள்ளது என்று சொன்னால் சரிசெய்ய தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார். மற்ற அமைச்சர்கள் கமலுக்கு சினிமாவில் மார்க்கெட் போய்விட்டதாக விமர்சிக்க, ஒருகட்டத்தில் ‘கமலெல்லாம் ஆளே இல்லை’ என்ற அளவுக்குப்போனது அந்த விமர்சனம்.

சோப்புப் போட்டு குளிக்காதீர்கள்: அமைச்சர் கருப்பன்னைன் அரிய கண்டுபிடிப்பு .. தெர்மொகொலை மிஞ்சிய ஆய்வு


மின்னம்பலம் :வீடுகளில் உபயோகிக்கும் சோப்பு நீரால்தான் இரண்டு நாள்கள் வரை நொய்யல் ஆற்று நீர் நுரை படர்ந்து வந்ததாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சோப்புப் போட்டு குளிக்காதீர்கள்: அமைச்சர்!கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், கடந்த 19ஆம் தேதி முதல் ஆறு முழுவதும் வெண்மையாக நுரை படர்ந்து வந்ததையடுத்து அச்சமடைந்த பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்தனர். சலவை ஆலைகளிலிருந்து இரவு நேரத்தில் கழிவுநீர் திறந்துவிடப்பட்டிருக்கலாம் எனவும், சலவை ஆலைக் கழிவுகளே இதுபோன்ற நுரைகள் படர காரணமாக இருக்கும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

மாணவர்களுக்குத் துரோகம்: நீதிபதி சீற்றம்!

மாணவர்களுக்குத் துரோகம்: நீதிபதி சீற்றம்!
மின்னம்பலம் : உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு நேற்று 22.9.2017 நீட் தேர்வு, சிபிஎஸ்சி தேர்வு மற்றும் ஜியோ - ஜாக்டோ தொடர்புடைய வழக்குகள் விசாரணைக்கு வந்தன. வழக்கு விசாரணையின்போது அறச்சீற்றத்தோடு பல கேள்விகளை முன்வைத்தார். அதில் சில கேள்விகள் தமிழக அரசை நோக்கியும், சில கேள்விகள் அரசியல் கட்சிகளை நோக்கியும், சில கேள்விகள் சமூகத்தை நோக்கியும் சீற்றத்தோடு புறப்பட்டது.
நீதிபதி கிருபாகரனின் கேள்விகளில் சில பகுதிகள் இதோ:
நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று பேசிப் பேசியே ஓர் உயிரை இழந்துவிட்டோம். மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டது. இனிமேல், நீட் தேர்வில் விலக்குக் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எந்தப் பேட்டியும் கொடுக்க வேண்டாம். ஆசை வார்த்தைகளை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டாம். நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களை அடுத்த ஆண்டு தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக பயற்சி மையங்கள் அமைக்கப்பட்டனவா?

காசினி விண்கலம் -- சனி கிரகத்தில் சாம்பலாகிச் சாதித்த விண்கலம்!

மின்னம்பலம் :சைபர் சிம்மன்
அறிவியல்: சனி கிரகத்தில் சாம்பலாகிச் சாதித்த விண்கலம்!விண்வெளியில் செலுத்தப்பட்ட விண்கலங்களில் சில திடீரெனத் தகவல் தொடர்பு அறிந்து காணாமல் போயிருக்கின்றன. இன்னும் சில விண்கலங்கள் எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியிருக்கின்றன. பல விண்கலங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விண்வெளிக் குப்பையாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், சனி கிரகத்தை வலம்வந்துகொண்டிருந்த காசினி விண்கலம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன்னைத்தானே அழித்துக்கொண்டு கம்பீரமாக விடைபெற்றிருக்கிறது. மனிதகுலத்தின் விசுவாசமான ஊழியனைப்போல, கடைசி வரை தனக்கு இடப்பட்ட கட்டளைகளை எல்லாம் கச்சிதமாக நிறைவேற்றிவிட்டு, காசினி விண்கலம் சனி கிரகத்தில் ஐக்கியமாகி இருக்கிறது.
காசினி விண்கலம் விடைபெற்றது விஞ்ஞானிகளை சோகமாக்கிய அதே நேரத்தில் கொண்டாடவும் வைத்திருக்கிறது. காசினி இனி இருக்காது என்பதும் அதனிடமிருந்து ஆய்வுக் குறிப்புகளும் தரவுகளும் வந்துசேராது என்பது சோகம். அந்த விண்கலப் பயணத்தைப் பொறுத்தவரை எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருப்பது ஒரு சாதனை. காசினி விண்கலம் நிகழ்த்திய எத்தனையோ சாதனைகளில் இறுதி சாதனையாக இது அமைகிறது.

பணமதிப்பழிப்பால் வாடிய பூ வியாபாரிகள்! மீண்டும் தலையெடுக்க முடியுமா?

மின்னம்பலம் :வினிதா கோவிந்தராஜன்
சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பால் வாடிய பூ வியாபாரிகள்!சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கனி சந்தை ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். இங்கு 3,000க்கும் அதிகமான உரிமம் பெற்ற கடைகள் காய், கனி, பூக்களை விற்றுவருகின்றன. 10,000க்கும் அதிகமான வணிகர்கள் இங்கு தொழில் செய்கின்றனர். ஒவ்வொரு கடையிலும் 3 அல்லது 4 பேர் தொழில் புரிகின்றனர். தினசரி அடிப்படையில் 10,000 பணியாளர்கள் இங்கு வேலை செய்வதாக தமிழ்நாடு பூ காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளரான வி.கோவிந்தராஜ் கூறுகிறார். கோயம்பேடு பூச்சந்தையில் மட்டும் 500க்கும் அதிகமான பூக்கடைகள் இருப்பதாகவும், வாரத்துக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான பூக்கள் இங்கு விற்பனையாவதாகவும் அவர் கூறினார்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு ஒரு வாரத்துக்குப் பிறகு இந்தச் சந்தைக்குச் சென்றிருந்தோம். பின்னர் ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் இச்சந்தைக்குச் சென்றிருந்தோம். இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 2000 ரூபாய் போன்ற உயர் மதிப்பு கொண்ட நோட்டுகளுக்குச் சில்லறை வழங்க முடியாமல் பூ வியாபாரிகள் தவித்துள்ளனர். பிறகு வாடிக்கையாளர்களை இழந்ததால், சில கடைகளில் பூக்கள் மற்றும் மாலைகளின் விலை 60 சதவிகிதம் வரை சரிந்துவிட்டது. லாரிகளில் பூ விநியோகம் செய்த விவசாயிகளுக்கும், தன் பணியாளர்களுக்கும் பணம் வழங்க முடியாமல் வியாபாரிகள் தவித்தனர்.

மெர்சல் .. ட்ரேட் மார்க் பதிவு செய்த முதல் தென்னிந்திய படம் ... இது செல்லுபடியாகுமா என்ற சிக்கலில்?

மின்னம்பலம் : சிவா
மெர்சல் டைட்டில்: சட்டம் யாருக்குச் சாதகம்?‘மெர்சல்’ திரைப்படத்துக்கு இப்படியொரு சூழல் ஏற்படுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக விஜய் படங்களுக்கு ஏற்படும் எந்தப் பிரச்னையும் ஏற்படாதவாறு மிகக் கவனமாக செயல்பட்டது தேனாண்டாள் நிறுவனம். தென்னிந்திய சினிமாவில் இதுவரை படைக்கப்பட்ட பல சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மெர்சல் திரைப்படத்துக்கான வேலைகள் அனைத்தும் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிய முடிய மெர்சல் திரைப்படத்தில் பணியாற்றியவர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது எவ்விதச் சம்பள பாக்கியும் வைக்காமல் செட்டில் செய்துவிட்டார்கள். தலைப்பு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக மெர்சல் டைட்டிலை டிரேட்மார்க் செய்தார்கள். மெர்சல் திரைப்படத்தின் கதையை, இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவரான விஜயேந்திர பிரசாத் அவர்களை வைத்து எழுதினார்கள். இப்படிக் கட்டுக்கோப்பாக இருந்த மெர்சல் என்ற கட்டடத்தில் இருந்த ஒரே ஓர் ஓட்டை, மெர்சல் டைட்டில்.
மெர்சல் டைட்டிலை Indian Motion Picture Producers' Association (IMPPA), the Association of Motion Pictures and Television Programme Producers (AMPTTP) and the Film and Television Producers' Guild of India (Guild) ஆகிய எந்த அமைப்பிலும் பதிவு செய்யாமல், நேரடியாக டிரேட்மார்க் வகையில் மெர்சலைப் பதிவு செய்திருக்கிறது தேனாண்டாள் ஃபிலிம்ஸ்.

முழு 2G விவகாரம் - திராவிட இயக்கத்தை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும் RSS ஹிந்துத்துவா ,ஜாதிகும்பல் திட்டமிட்டு

Prakash JP :· முழு 2G விவகாரமும், திமுகவின் மேல் தீராத வன்மமும், அரசியலில் இருந்தே திராவிட இயக்கத்தை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும் என்று கருதும் RSS ஹிந்துத்துவா மற்றும் அதின் நிழல் உறுபினர்களால், "அந்த" குறிபிட்ட ஜாதி கும்பல் மற்றும் அதின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களால் மிக மிக ஒருங்கிணைத்து திட்டமிட்டு, சதி வலை பின்னப்பட்ட ஒரு விஷயமாகும்.....
திரும்ப திரும்ப சிலர் 2Gயில் ஊழல் ஊழல் என்று கிளிப்பிள்ளையை போல சொல்லி கொண்டு இருக்கிறார்கள்....(நீண்ட பதிவு....2G விஷயத்தில் முழுமையான விளக்கம் கிடைக்க தயவுசெய்து முழுதும் படிக்கவும்)
ஊழலா அல்லது வருவாய் இழப்பா??

CAG அறிக்கையில் கூட, எந்த ஓர் இடத்திலும் ' ஊழல் ' ( Scam ) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. வருவாய் இழப்பு ( Loss of revenue ) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் ஊக இழப்பு.....presumptive loss என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.....

அரசிற்கான வருவாயை அரசின் கொள்கையின் அடிப்படையில் குறைத்துகொள்வது, வருவாய் இழப்பு அல்ல....

Reserve Bank of India Governor D. Subbarao, who served as Finance Secretary to the Centre during 2007-08 said, “It is correct that while determining policy, the government has to make a balance between welfare maximisation and revenue maximisation. In this case, if there was a sacrifice of some revenue, it cannot be said that the government suffered a loss.”

நட்சத்திர நடிகர்கள்தான் தமிழ் திரை மாபியாவின் சூத்திரதாரிகள் !

thurai muththu இன்றைய சினிமா முழுக்க முழுக்க பிளாக் டிக்கெட் விற்பனயை நம்பித்தான் இருக்கிறது . சட்டப்படி விற்றால் முதலே தரமுடியாத அளவு மிகப் பெரும் விலைக்கு படங்கள்  தியேட்டர்களின் தலையில் கட்டி அடிக்கபடுகிறது,
ரசிகர் மன்றங்களும் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் வாங்கிய காசுக்காக  ஊடகங்களும் படத்தை பற்றி ஆஆஹா ஓஹு என்றெல்லாம் எழுதி ஒரு செயற்கையான சந்தையை உருவாக்கி விடுகின்றன,
இந்த செயற்கையான மதிப்புக்கள் படத்தின் முதல் வார மார்க்கெட்டை குறிவைத்து உருவாக்கபடுகிறது .  ரசிகர்களின் திரில் அளவுக்கு ஏற்ப திரை அரங்குகள் டிக்கெட் விற்பனையை உயர்த்தி பிளாக்கிலும் விட்டிலும்  காசை அள்ளி விடுகின்றன. .
இப்படிப்பட்ட மோசடி வியாபாரத்தில் நடிகர்கள்தான் முதல் குற்றவாளிகள் ... அவர்களின் ரசிகர் மன்ற அடிமைகளும் அவர்களின் காசில் தொழில் நடத்தும் கேடு கேட்ட ஊடகங்களும் இந்த மோசடிகளின் கூட்டாளிகள்
நட்சதிரங்களின் நடிக்கும் படங்கள் முழுக்க முழுக்க ஒரு மாபியா பாணி வியாபாரமாகி விட்டது, இந்த திரையுலக மாபியாக்களின் சூத்திரதாரிகள் வசூல் மன்னர்கள் அந்தஸ்தை பெற்ற நடிகர்கள்தான்.
 ரஜனி கமல் அஜித் விஜய் சூரியா தொடங்கி மோகன்லால் மம்மூட்டி என்று தென்னாடெங்கும் வியாபித்து உள்ளது இந்த திரை மாபியா. 

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

போஜ்புரி மொழிதான் பிகாரின் பெரும்பான்மை மொழி .. ஹிந்தி அல்ல ! ஒவ்வொரு வண்டவாளங்களும் ..


Saravanan Kumaresan : இந்தி பெரும்பான்மையாக இருக்கும் மாநிலம் என்று நாம் நம்பி கொண்டிருக்கும் பிகார் மாநிலத்தின் மொழிவாரி மக்கள் தொகை கணக்கு இது. அங்கு இந்தி மொழி பெரும்பான்மை மொழி இல்லை. போஜ்புரி தான் பெரும்பான்மையினர் பேசும் மொழி. ஆக இந்தி என்பது வட இந்திய பார்ப்பனியத்தின் மொழி. அதையே இந்த ஒட்டு மொத்த நிலப்பரப்பின் மொழியாக மாற்ற துடிக்கிறது பார்ப்பனியம். பார்ப்பனிய அடிமைகள் அதை வழி மொழிகிறார்கள்

கமலஹாசன் பணமதிப்பிழப்பை ஆதரிக்கிறார் ... பச்சையாக மோடி ஆள் என்று சொல்ல முடியுமா?

பணமதிப்பிழப்பு முற்று முழுதாக தோல்வி அடைந்ததாக தெரியும்வரை அதை ஆதரிப்பேன் ... கமலஹாசனின் இந்த கருத்து  இவர் யாருக்கு வேலை செய்கிறார் என்பதை கொஞ்சம் தெளிவாக்குகிறது. மாநில ஊழலை எதிர்ப்பேன் ஆனால் மத்திய ஊழலை ஆதரிப்பேன்?  
Mp Saam : மிஸ்டர் கமலிடம்,செத்து செத்து காட்டினால் தான் பிணம் என ஏற்றுக் கொள்வாராம்.பண ஒழிப்பு நடவடிக்கையால் இறந்த 250+ பேரும் எழுந்து வந்து மறுபடியும் அவர் முன்னால் செத்து காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது,சீக்கரம் வாங்கப்பா,பிக் பாஸ்க்கு கோவம் வந்திரும். பண ஒழிப்பு நடவடிக்கையால் தொடர்ந்து மூன்று காலாண்டுகள் பொருளாதாராம் நாசம் ஆனது பற்றி உலகத்துக்கே புரியும்,இவருக்கும் புரியாது,தூங்கற மாதிரி நடிக்கும் கலையை உலக நாயகனுக்கு ஊர் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? கலைத்திருமகன். பல தரப்பும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று. இன்றைக்கு,இவரின் எஜமானரே பொருளாதார ஊக்குவிப்பு பற்றி ஆய்வு நடத்துவது தனிக்கதை.சாருக்கு அதைப்பற்றி பேச நேரம் இருக்காது,அவதார புருசர் அல்லவா? அய்யா ஆண்டவரே ,உங்க பொங்கல ஏதாவது முட்டுச்சந்துல வைப்பது நலம்,பாவம் விட்டுவிடுங்கள்,ஏதோ பிழைத்து போகட்டும் அகமறிய மானுடங்கள்.இங்கு பிணக்குவியல் வேண்டாம்.

யோகா வகுப்பு என்ற உத்தரவை உடனே திரும்பப் பெறவேண்டும்: ஜவாஹிருல்லா... தமிழக பள்ளிகளில்

தமிழகப் பள்ளிகளில் யோகா வகுப்பு என்ற உத்தரவை உடனே திரும்பப் பெறவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். யோகா வகுப்பு தொடர்பான முதல்வரின் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மத பிரிவினர் வாழ்ந்து வரும் சூழலிலும், சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் சூழலிலும், ஒரு மதத்தின் நம்பிக்கையை உடலுக்கும் மனதிற்கு பயிற்சி என்று திணிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.  மறைந்த ஆசியஜோதி நேரு அவர்கள் உண்மையாகவே யோகா சிரசாசனம் செய்கிறார், .. நம்ப டுபாக்கூர் பிரதமர்  மோடி யோகா செய்வதாக போஸ் காட்டுகிறார்

இரட்டை இலை சின்னம் .. அக். 6-ந்தேதி விசாரணை ! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை அக்டோபர் மாதம் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக். 6-ந்தேதி விசாரணை நடைபெறும்: தேர்தல் ஆணையம் புதுடெல்லி: முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால் அக்கட்சியின் பெயரையும், தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. என்றாலும் தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்றும் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையிலான அணியினரும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தேர்தல் கமி‌ஷனிடம் தனித்தனியாக மனுக்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அந்த அணி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் அந்த அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன.

ஜெயலலிதா ... இதே நாளில் 22/9/2016 சென்ற வருடம் Z+ பாதுகாப்பு ஏன் விலக்கப்பட்டது ? குற்றவாளி மோடி பதில் சொல்லவாரா ?

Venkat Ramanujam · இதே நாளில் 22/9/2016 சென்ற வருடம் ஏன் விலக்கப்பட்டது Z+ என்ற பதிலை #பிஜேபி யும் சொல்ல மறுக்கிறது .. அடிப்படை கேள்வியை #அதிமுக வும் கேக்க மறுக்கிறது . எப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகளை வார்த்து விட்டு சென்று இருக்கிறார் ..
மர்மத்துக்கு வித்திட்ட செப்டம்பர் 22!ஒரு வருடமாகியும் தற்போது வரை மர்மமாக இருந்துவரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு, அவர் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினம் இன்று. தமிழக மக்கள் அனைவராலும் எளிதில் மறக்க முடியாத தினமாக ஆகிவிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி மெட்ரோ ரயில் தொடக்க விழா உள்ளிட்ட மூன்று நிகழ்வுகளில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறுநாள் 22ஆம் தேதி இரவு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த முதல் நாளில், ‘காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதன் பிறகு 74 நாள்கள் வரை அவ்வப்போது வெறும் அறிக்கைகள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. உள்ளூர் தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை யாராலும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை.

மேதா பட்கர்: சர்தார் சரோவர் அணைக்கட்டு.. 40 ஆயிரம் குடும்பங்கள் வீதியில் ... பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக

மோடியை அம்பலப்படுத்துவோம்: மேதா பட்கர்மின்னம்பலம் : நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டு விவகாரத்தில் மோடியை 2019க்குள் அம்பலபடுத்த வேண்டும் என்று சமுக ஆர்வலர் மேதாபட்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர். மேதாபட்கர் 'நர்மதா பச்சோ அந்தோலன்' என்ற பெயரில் 1980 முதல் நர்மதா நதிக்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு எதிராகப் போராடி கொண்டிருக்கிறார்.
குஜராத்தின் நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டை பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். சாதாரண காலத்தில் 138.63 மீட்டர் உயரத்திற்கும், வெள்ள காலங்களில் 141 மீட்டர் வரையும் நீரைத் தேக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் : கீழடி ஆய்வு நடத்த 2 வாரங்களில் அனுமதி அளிக்கவேண்டும் . வழக்கறிஞர் கனிமொழி தொடர்ந்த வழக்கில் தொல்துறைக்கு உத்தரவு

கீழடி: மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு!
மின்னம்பலம் : கீழடியில் நான்காம் கட்ட ஆய்வு நடத்த 2 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்துக்குட்ட பகுதியில் உள்ளது கீழடி கிராமம். இங்கு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2013-14ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் இப்பகுதி அகழாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி, 2015 மார்ச் மாதம் முதல் கீழடியில் அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 கட்ட ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது நடந்துவரும் 3ம் ஆட்ட ஆய்வுப் பணிகள் செப்.30ம் தேதி நிறைவடைவுள்ளது.
இந்த அகழாய்வில் பல்வேறு கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 1500-க்கும் மேற்பட்டவை மணிகளாகவே உள்ளன. தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணி, செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்றவை கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய 14 பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதால் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குரல் கொடுத்த 18 எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். என கூறியிருந்தார். இதற்கு காரணம் இந்த எம்எல்ஏக்கள் 18 பேரும் முதல்வருக்கான ஆதரவை தான் வாபஸ் பெற்றார்களே தவிர கட்சியி, இருந்து விலகவில்லை. தற்போது தமிழக அரசு மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த சூழலில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது. அதற்கும் தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை தள்ளுபடி செய்துள்ளது. இதே போன்ற ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதன் மறு விசாரணை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு தேவையில்லாத ஒன்று. மேலும் இந்த வழக்கில் பொதுநலம் எதுவும் இல்லை எனவே இதனை தள்ளுபடி செய்தவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.வெப்துனியா

காணாமல் போன 12ம் வகுப்பு மாணவி தமிழக - கேரள எல்லையில் சடலமாக மீட்பு

நீலகிரி : கூடலூர் அருகே காணாமல் போன 12ம் வகுப்பு மாணவி தமிழக - கேரள எல்லையில் சடலமாக மீட்கப்பட்டார்.கீழ்நாடுக்காணியைச் சேர்ந்த மாணவி ரம்யா சடலமாக மீட்கப்பட்டது குறித்து தேவாலா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

BBC :லண்டன் ஊபர் அனுமதி புதிப்பிக்க படமாட்டாது! ஊபர் தனியார் வாடகை கார் ....

லண்டனில் ஊபர் தனியார் வாடகைக் கார் நிறுவனம் வாகனங்களை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என லண்டன் போக்குவரத்துக்குப் பொறுப்பான டி.எல்.எஃப் தெரிவித்துள்ளது. இந்த பயண செயலி நிறுவனம், தனியார் வாகன சேவையை நடத்த தகுதியற்றது என டிஎல்எஃப் கூறியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான விளைவுகளைக் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக உறுதிப்படுத்தியுள்ள ஊபர், மிகவும் வெளிப்படையான செயல்பாட்டை உலகுக்கு வெளிக்காட்டியதாகவும், நவீன செயல்பாடுடைய நிறுவனங்களுக்கு லண்டன் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. லண்டன் நகரில் சுமார் 35 லட்சம் மக்களும் 40 ஆயிரம் வாகன ஓட்டிகளும் ஊபர் செயலியை பயன்படுத்துகின்றனர்.

700 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற மலையாளிகள்! Kerala Kozhikode settled in China 700 years ago.

Children is about Kozhikode people who settled in China 700 years ago. ... Ma Xunkai fights back tears on meeting Joe Thomas Karackattu,
கேரளாவின் கோழிக்கோடு பகுதியிலிருந்து 700 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் தெற்கு பகுதியில் குடியேறிய மலையாளிகளின் வம்சத்தை கண்டுபிடித்து ஆவணப்படம் எடுத்திருக்கிறார் சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் ஜோ தாமஸ் கராக்கட்டு. நமது சொந்த நகரைச் சேர்ந்த>
உறவுக்காரரின் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை தொலைதூரத்தில் நீண்டகாலம் கழித்து சந்தித்தால் கண்ணில் நீர் பொங்குமா இல்லையா? அத்தகைய ஒரு அனுபவத்தை இவர் ஆவணப்படமாக ஆக்கியுள்ளார். நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே கேரளாவின் கோழிக்கோடு, கொல்லம், கொச்சி ஆகிய பகுதிகளுக்கு சீனர்கள் வியாபாரம் தொடர்பாக வந்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட வர்த்தக தொடர்பில் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த மலையாளிகள் தெற்கு சீனா சென்றுள்ளனர். அங்குள்ள குலி என்ற பகுதியில் இவர்கள் வாழத் தொடங்கினர். அந்த மலையாளிகளின் வம்சம் இப்போதும் அங்கும் வாழ்கிறது. அவர்கள் சீனர்களாகவே வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்கிறது இந்த ஆவணப்படம்.

ஆ.ராசா ! தொலை தொடர்புகள் வசதிகளை விளிம்பு நிலை மக்களுக்கு . 2 G வழக்கு

Adv Manoj Liyonzon i ஆ.ராசா புதிய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது சட்டவிரோதமாம்…
#பதில்
ரிலையன்ஸ் ஜியோ எனும் புதிய நிறுவனம் தொலைத்தொடர்பு சந்தையில் புகுந்தவுடன் சந்தை போட்டியை சமாளிக்க வேண்டி மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைபேசி மற்றும் இணைய சேவை கட்டணத்தை குறைத்தன.
கட்டணம் குறைந்ததால் எளிய விளிம்பு நிலை மனிதர்களும் தொலைபேசி மற்றும் இணைய வசதியை பயண்படுத்து முடிகிறது
இந்த கட்டண குறைப்பு தொலைத்தொடர்பு துறையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. (Lowering the price controls the inflation in communication industry)
இந்திய பொருளாதார வளர்ச்சியில் 6.5% பங்கை கொண்டுள்ள தொலைத்தொடர்பு துறையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கட்டண குறைப்பு சூழலை உருவாக்கியும், மற்றும் தேவையான இதர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அந்த அமைச்சகத்தின் தலையாய கடமை.
இப்படி கட்டணம் குறைய வேண்டி சந்தை போட்டி உருவாகத்தான் ஆ.ராசா புதிய நிறுவனங்கள் உரிமம் பெற ஆவன செய்தார்.
10% மேல் அலைக்கற்றை பங்கு வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க கூடாது என்பது விதி.
அப்படியானால் 12% அலைக்கற்றை வைத்திருக்கும் ஏர்டெல் மற்றும் 10% வைத்திருக்கும் ஏர்செல் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்காமல் இதர புதிய நிறுவனங்களுக்கு தான் உரிமம் வழங்க முடியும்.
மேலும் தொலைபேசி கட்டணத்தை குறைக்கும் அதிகாரம் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு இல்லாத காரணத்தால், புதிய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கி சந்தையில் போட்டியை உருவாக்கி அதன் மூலம் தொலைபேசி கட்டணத்தை குறைக்கும் சூழலை உருவாக்கினால்தான் குறைந்த கட்டண சேவையில் எளிய விளிம்பு நிலை மனிதர்களும் தொலைதொடர்பு சேவையைப் பயன்படுத்த முடியும்.

காவிரி பிரச்சனையில் திராவிட ஆட்சிகள் ... ஆஃப் பாயில் அறிவுஜீவிகள்

Sowmian Vaidyanathan : காவிரி பிரச்சினையைப் பற்றி பேசும் போதெல்லாம், திராவிட ஆட்சிகளை குறை கூறுவதை காரணமே தெரியாமல்..., அப்படி குறை கூறினால் தான் சமூகத்தில் தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு கருத்துச் சொல்லும் சில ஆஃப் பாயில் அறிவு ஜீவிகள்....
அணை கட்டுவது சம்பந்தமாக இரு விதமான குற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றார்கள்...!
அதில் முதலாவது...
கர்நாடகா காவிரியின் குறுக்கே ஐந்து அணைகளைக் கட்டி விட்டது, ஆறாவது அணைக்கு அடிக்கோலி விட்டது. இதை கடந்த அரை நூற்றாண்டாக தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் தடுக்கத் தவறி விட்டன..! இது தான் அந்தக் குற்றச்சாட்டு.
அட அப்ரசண்டிகளா.... காவிரியில் உற்பத்தி ஆகும் தண்ணியை குறிப்பிட்ட சதவிகிதம், தமிழகத்திற்கு கர்நாடகா தடையின்றி அனுப்பி வைக்க வேண்டும். அதை மட்டுமே நாம் கோரிக்கையாக வைக்க முடியும். அவன் பங்கு தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு, ஆண்டு முழுவதும், குடிநீருக்கோ, பாசனத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ அல்லது வேறு எந்த எழவுக்கோ பயன் படுத்த அவனுக்கு முழு உரிமை இருக்கு.

ஸ்டாலின் ,வைகோ ,திருமா,சீமான் ,திருமுருகன் காந்தி யார் சிறந்த தலைவர் ?

Shalin Maria Lawrence : யார் சிறந்த தலைவர் ? இதில் யார் சிறந்த தலைவர் என்று தீர்மானிப்பது அவர்கள் அல்ல அவர்களை பின்தொடருபவர்கள்தான் .
இந்திய ஒரு ஜனநாயக நாடு இங்கே நடைபெறுவது ஜனநாயக அடிப்படையிலான தேர்வுமுறை .யார் எங்கு போட்டி போட்டாலும் ,யார் கட்சி ஆரம்பித்தாலும் சரி இங்கே ஒரு சராசரி தொண்டன் தான் தீர்மானிக்கிறான் அவனை யார் வழிநடத்த போவது என்று ,அவளை யார் ஆளப்போவது என்று .
An effective leader is nothing but a by - product of his value system ,intelligence ,selflessness and last but the very very important factor the "Supporters/followers" .
ஒரு பயனுள்ள சிறந்த தலைவன் அமைவது அவனின் கொள்கைகள் ,அறிவுத்திறன் ,சுயநலமின்மை மற்றும் மிக மிக முக்கியமாக அவனின் தொண்டர்களை பொறுத்தேதான் .
நல்ல தொண்டர்கள் எப்படி இருக்க வேண்டும் ?
தலைவனை விட அவன் கொள்கைகளை அதிகம் அறிந்தவர்களாகவும் ,தலைவனின் அறிவாற்றல் ,குற்றப்பின்னணிகள் ,கொள்கை மாறுதல்களையும் தெரிந்தவர்களாய் இருக்கவேண்டும் .தலைவனின் நிறை குறைகளை தெளிந்தவர்களாய் இருத்தல் வேண்டும் .தைரியசாலிகளாய் இருக்கவேண்டும் .
இப்படிப்பட்ட நல்ல தொண்டர்களே பெரியாரை உருவாக்கினார்கள் ,அண்ணாவை உருவாக்கினார்கள் ,கலைஞரை உருவாக்கினார்கள் ,காமராஜரை உருவாக்கினார்கள் .

காவிரி பாசனத்திற்கு இல்லாமல் புஷ்கரம் பூஜைக்கு திறக்கப்பட்டதா?

பிரமிளா கிருஷ்ணன்.. பிபிசி தமிழ் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாமல், காவிரி மகாபுஷ்கரம் (காவிரி ஆற்றை வழிபடும் விழா) நிகழ்வுக்காக திறந்துவிடப்பட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளாக குறுவை சாகுபடி(ஜூன் முதல் ஜூலை வரை) இல்லாமல் சம்பா சாகுபடியை (ஆகஸ்ட் முதல் அக்டோபர்வரை) மட்டுமே தமிழகம் நம்பியிருக்கும் நிலையில், இந்த ஆண்டு வறட்சியை சமாளிக்க பாசனத்துக்கு பதிலாக வழிபாட்டிற்கு தண்ணீர் அளித்துள்ள நடவடிக்கை கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் காவிரி மகாபுஷ்கரம் என்ற விழாவின்போது காவிரி ஆற்றுக்கு நன்றி சொல்லும் பூஜைகள், முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது, தங்களது பாவங்களை போக்கிக் கொள்ள மக்கள் புனித நீராடுவது போன்றவை நடைபெறும் என்று திருச்சி அம்மா மண்டபம் பகுதியில் அமைந்துள்ள காவிரி தாயார் கோயிலை சேர்ந்த அந்தணர் தெரிவித்தார்.

பெரியாரை பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

'அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்'
Karthikeyan Fastura :இதற்கு இதுவரை கொடுத்துவந்த அர்த்தம் என்னோவோ "கற்றறிந்த பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் நட்புகொண்டிருப்பது அரிய செல்வங்களை விடப் அரிய செல்வமாகும்"
 நான் கொள்ளும் அர்த்தம் என்னவென்றால்
"தந்தை பெரியாரை விட அறிந்து கொள்ள வேண்டிய அரிய செல்வம் எதுவும் இல்லை ". இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு ஒரு மாமனிதர் பிறப்பார். அவர் அதுவரை மனிதர்கள் செய்த அத்துணை கொடுமைகளையும் தட்டிகேட்பார். சாதி வெறி, மத வெறி, இன வெறி, மொழி வெறி என்று மனித மனங்களை பிடித்திருக்கும் பீடைகளை அடித்து நொறுக்குவார். காலம் காலமாக இருந்த பெண்ணடிமைதனத்தை உடைப்பார். சுயமரியாதையை மீட்டெடுப்பார் என்று வள்ளுவர் நினைத்தாரோ என்னவோ ஒரு குறள் மட்டும் எழுதவில்லை ஒரு அதிகாரமே எழுதினார். அதன் பெயர் "பெரியாரை துணைக்கோடல்". பெரியாரின் கைத்தடியை பிடித்துக்கொள் உன்னை பிடித்திருந்த பீடையெல்லாம் தலைதெறிக்க ஓடும் என்று நினைத்து இப்படி ஒரு அதிகாரத்தை வள்ளுவர் எழுதியிருக்க கூடும். இன்றைய மத, சாதிய,சந்தர்ப்பவாத சக்திகளின் ஆட்டத்தில் இருக்கும் நாட்டிற்கு பெரியாரின் தேவை மிக அதிகம். ஆகவே நாம் இப்படிதான் பொருள் கொள்ளல் வேண்டும். நன்றி கார்த்திக். Karthikeyan Fastura

சுப்பிரமணியம் சாமி : இந்தியாவின் பொருளாதாரம் விழுந்து நொறுங்கிவிடும் ஆபத்தில் .... வங்கிகள் திவாலாகும் ...

Prakash JP கரடியே காரி துப்பிய மொமென்ட்...... "இந்தியாவின் அனைத்து
வங்கிகளும் திவாலாகி , அனைத்து தொழிற்சாலையும் மூடப்படும் அபாயம் உள்ளது" - பிஜேபி MP சுப்ரமணிய சுவாமி... தற்போது இந்தியாவின் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது . எந்த நேரத்திலும் அது விழுந்து நொறுங்கிவிடும் ஆபத்து உள்ளது. இதுபற்றி கடந்த ஆண்டே மோடிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர் அதை சட்டை செய்யவில்லை .. மாறாக வளர்சி குறைந்தாலும் கூட உயர்வதாக தவறாக அரசால் காட்டபப்டுகிறது. இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்காவில், இந்தியாவில் அனைத்து வங்கிகளும் திவாலாகி , அனைத்து தொழிற்சாலையும் மூடப்படும் அபாயம் உள்ளது .. - பிஜேபி MP சுப்ரமணிய சுவாமி...
Suresh Ganesan இந்திய பொருளாதார த்தை பற்றியெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. அவர் சொல்ல வருவதெல்லாம் அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது எனவும் தன்னை நிதியமைச்சர் ஆக்கினால் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திடுவேன் என்று சொல்லாமல்  சொல்கிறார். அவ்வளவே.
Manoharan Thanga அவர் சொல்வதில் ஒரு சதம் உண்மையென்றாலும் அது இந்த அரசின் மாபெரும் தோல்வியே? அவர் உண்மையைத்தான் சொல்கிறார்.
Nanjai Francis இதுவும் ஒருவகை அரசியலே, தங்களுடைய தோல்வியை தன்னுடைய கட்சிக்காரங்க சிலரை வைத்து சொல்லச்சொல்வது !!

கமலஹாசன்: முதல்வராக விரும்புகிறேன் .எனது நிறம் கருப்பு அதில் காவியும் சேர்ந்தே இருக்கும்


Kamal Haasan tells India Today: It's confirmed. I am entering politics, want to be CM for people of Tamil Nadu
Gajalakshmi   தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன்  கூறியுள்ளார். இந்தியா டுடே டிவி சேனலுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது: அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. மக்களைப் பொருத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை. கருப்பு தான் என் நிறம்

கருப்பு தான் என் நிறம் என்னைப் பொருத்தவரை கருப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது.

சேலம் உருக்காலையை விற்க முடிவு .. ஜிண்டால் உட்பட சர்வதேச டெண்டர் ...


jindal Stainless may be interested in bidding for Steel Authority of India Ltd (SAIL)’s Salem Steel Plant, according to sources.Salem Steel Plant in Tamil Nadu and the Visesvaraya Iron and Steel Plant in Karnataka, both owned by SAIL, are among the firms identified by Narendra Modi government for divestment.
சூரமங்கலம்: சேலம், உருக்காலையை தனியாருக்கு விற்க, சர்வதேச டெண்டர் வெளியிட முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சேலம், உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியில், செயில் நிறுவனம் மற்றும் மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள், சர்வதேச டெண்டர் வெளியிடலாம் என தெரிகிறது. இது குறித்து, சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது: சேலம் உருக்காலையில் மாதம், 12 ஆயிரம் டன் இரும்பு தகடு உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.

வியாழன், 21 செப்டம்பர், 2017

ரூ 4000 கோடியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியது எடப்பாடி பன்னீர் அரசு ... நிர்வாகம் முற்றாக சீரழிந்தது ...

tamiloneindia  :ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு, உள்ளாட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளை மேம்படுத்துவதற்காக 4,000 கோடி ரூபாய்கள் மத்திய அரசால் கொடுக்கப் படுவது வழக்கம். இந்த முறை உள்ளாட்சிகளுக்கான இந்த தொகை அப்படியே மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பபட்டுவிட்டது. இதே போல தமிழ் நாட்டில் குளங்கள் மற்றும் குட்டைகளை தூர் வாறுவதற்காக 400 கோடி ரூபாயை ஏற்கனவே அனுப்பி விட்டது நபார்டு வங்கி. இதில் 100 கோடி ரூபாய், 2016 - 17 ம் ஆண்டுகளுக்காக செலவிடப் பட வேண்டும். மீதமுள்ள 300 கோடி ரூபாய் 2017 - 18ம் ஆண்டுகளுக்கு செலவிடப் பட வேண்டும் என்பது விதி. '100 கோடி ரூபாயை ஏற்கனவே செலவு செய்து விட்டோம் என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அதற்கான ஆதரங்கள் ஒன்று கூட தமிழக அரசால் காட்டப்பட வில்லை. மாறாக நீங்கள் அந்த 100 கோடி எப்படி செலவு செய்யப் படப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை பற்றி எதுவும் கேட்காதீர்கள். இனிமேல் செலவு செய்யப் பட வேண்டிய 300 கோடி ரூபாய் பற்றி கேளுங்கள்.
ஆர். மணி:  சென்னை: தமிழக அரசியல் இன்று சிரிப்பாய் சிரித்து கொண்டிருக்கிறது. ஆளும் அஇஅதிமுக வில் கிட்டத் தட்ட கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் சம்பவங்கள், ஏக இந்தியாவின் கவனத்தையும் தமிழகத்தின் பக்கம் ஈர்த்திருக்கிறது.