சனி, 25 ஜூன், 2011

Micheal Jackson கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல்

New York: யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவது அதன் மதிப்பை வலியுறுத்துவதாக அமைகிறது. அதுபோல, அதற்கு நிகரான மதிப்பு மிக்க மனிதர்கள் இவ்வுலகில் இறந்தும் அவரது ரசிகர்கள் நெஞ்சில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக, பாப் இசை உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனை கூறலாம். மைக்கேல் ஜாக்சன் என்றால், அவரது துள்ளலான இசையுடன் கூடிய நடனம், அதற்கு வளைந்து நெளிந்து கொடுக்கும் அவரது உடல்வாகு உள்ளிட்டவை நமக்கு ஞாபகம் வருவதைப் போன்று, அவரை நினைத்தாலே, அவரது இசை மற்றும் நடனம் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.
அத்தகைய நீங்கா புகழை பெற்ற பாப் உலகின் முடிசூடா மன்னாக விளங்கிய பாடகர் மைக்கேல்ஜாக்சன் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் அவரின் ரசிகர்கள் அவரை மறக்கவும் இல்லை. சொல்லப்போனால் மறக்க தயாராகவும் இல்லை. இதனால் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். லாஸ்ஏஞ்சல்சில் உள்ள அவர் சமாதியில் திரளாக கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மைக்கேல் ஜாக்சன் மறைவு என்ற அதிர்ச்சியிலிருந்து அவரது ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அவரது சகோதரி லா டோயா தெரிவித்திருப்பதாவது: ஜாக்சன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ கொலைசெய்ய முயற்சி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் மைக்கேல் ஜாக்சனுக்கு சிகிச்சையளித்த டாக்டர் தோமேதோமே தான் ஜாக்சன் உடன் இறுதிவரை வியாபார ஆலோசகராக வும் இருந்துள்ளார். தற்போது அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருப்பது அவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவருடன் இருந்த சில நண்பர்களும் ஜாக்சனின் சம்பாத்தியத்தில் பலன்பெற்றுள்ளனர் என்றும் லா டோயா தெரிவித்துள்ளார்.

மக்கள் எந்த அளவிற்குஜாக்சன் மீது அன்பு செலுத்தியிருக்கின்றனர் என்பது அவர் இறப்பிற்கு பின்னர் அவருடைய அறையில் கிடைத்த சில குறிப்புகள் மூலம் இது தெரிய வந்துள்ளதாக லா டோயா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜாக்சன் இறப்பு குறித்து இறப்பு குறித்த எந்தவித தடயமும் குடும்பத்தினர் கைவசம் வைத்திருக்க வில்லை. எனவே ஜாக்சனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

நோட்டு அடிப்பதும் ஒரு வருவாயாம் விஜயகாந்தின் உளறல்

மத்திய அரசுக்கு வருவாய்க்கான பல துறைகள் உள்ளன. மேலும் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் அதிகாரமும் உள்ளது.

மக்களுக்காகத்தான் அரசே தவிர, அரசுக்காக மக்கள் அல்ல : விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூபாய் 2ம், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூபாய் 50ம் நேற்று நள்ளிரவு முதல் எதிர்பாராத வகையில் மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இன்றியமையாத சமையலுக்கு இந்த விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவு குடும்பத்தை நடத்தும் தாய்மார்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது போதாது என்று டீசல் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது வேதனைக்குரியதாகும்.
எத்தகைய பிரிவு மக்களில் யாரும் வீட்டிலேயே அடைந்து கிடைக்கப் போவதில்லை. வேலைக்கும், வியாபாரத்திற்கும், பள்ளிக் கூடத்திற்கும், மருத்துவமனைகளுக்கும் என அன்றாடம் போக வேண்டிய குடும்பங்களின் போக்குவரத்து செலவுகள் இதனால் அபரிமிதமாக அதிகரிக்கும். இந்திய அரசு நடத்தும் எண்ணெய் கம்பெனிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்திய அரசின் சொந்த நிதிநிலையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விலை உயர்வு மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடியது என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளது விந்தையாக உள்ளது.
ஆனால் உண்மையில் மத்திய அரசுக்கு வருவாய்க்கான பல துறைகள் உள்ளன. மேலும் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் அதிகாரமும் உள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடன் எழுப்பும் வாய்ப்புகளும் அதிகம். மத்திய அரசின் பற்றாக்குறையை ஈடுகட்ட பல வழிகள் உண்டு.
கூலி வேலைக்குப் போனால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டால், அவர்கள் அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட எங்கே போவது?
ஒரு மக்கள் நல அரசுக்கு இலக்கணம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டுமே தவிர, வறுமையில் வாட்டுவதாக இருக்கக் கூடாது. ஆகவே இந்திய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் விரோதமானது.
ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கை மேலும் விலைவாசி உயர்வை ஒரு சதவிகித்திற்கும் மேல் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தண்டச் செலவையும், தேவையற்ற திட்டங்களுக்கான செலவையும் இந்திய அரசு தவிர்த்தாலே போதும். இத்தகைய விலை உயர்வுக்கு அவசியம் இராது. அதை விட்டுவிட்டு ஏழை, நடுத்தர மக்களின் மேல் இந்த கூடுதல் செலவை சுமத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
தே.மு.தி.க. சார்பில் இப்பொழுது ஏற்பட்டுள்ள விலை உயர்வை மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் கண் மூடித்தனமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியதையும் சேர்த்து திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
அய்யா விஜயகாந்த் மத்திய அரசுக்கு நோட்டு அடிக்கும் அதிகாரம் வேறு இருக்கிறது என்று அங்கலாய்ப்பு பட்டுக்கொள்வதில் இருந்து உமது அறிவின் தராதரம் நன்றாகவே விளங்குகிறது. நோட்டு அடிப்பதை ஒரு வருவாய் ஆக எண்ணிக்கொண்டிருக்கும் உமது பாமரத்தன்மை தமிழ் நாட்டில் உமக்கு வாக்களித்த மக்களின் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
நடிகர் வடிவேலு உங்களை பற்றி சொன்னதெல்லாம் உண்மை என்பதை இவ்வளவு சீக்ரம் உண்மையாக்கிவிட்டீர்கள் 
ஜனநாயகம் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது உங்கள் மகனுக்கு லயோலா கல்லூரியில் இடம் (+2 வில் 1200 க்கு 583 மார்க்) தரவில்லை என்று உங்கள் தொண்டர்கள் மிரட்டியதாக கல்லூரி நிர்வாகமே போலீசில் புகார் கொடுத்திருக்கிறது அப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை முதலில் உங்கள் கட்சி தொண்டர்களை ஜனநாயகத்தை மதித்து நடக்க சொல்லுங்கள் பின்பு அரசியல் நடத்துங்கள் இது சினிமா இல்லை By நஜுமுதீன்
6/25/2011 10:06:00 P

ஜெயலலிதா - சுஷ்மா சுவராஜ் சந்திப்பு


முதலம‌ை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதாவை ம‌க்களவை எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவ‌ரும்,  பாஜக மூத்த தலைவருமான  சு‌ஷ்மா சுவரா‌ஜ் ‌இ‌ன்று ச‌ந்‌‌‌தி‌த்து பே‌சினா‌ர்.

செ‌ன்னை போய‌ஸ் கா‌ர்ட‌னி‌ல் உ‌ள்ள முதல்வர் இ‌ல்ல‌த்த‌ி‌ல் இ‌‌ந்த ச‌ந்‌தி‌ப்பு நடைபெ‌ற்றது.
இந்த சந்திப்பின்போது முதலமை‌ச்சராக பொறு‌ப்பே‌ற்ற ஜெய‌‌ல‌லிதாவு‌க்கு சுஷ்மா,  வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டா‌‌ர்.
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், கச்சத் தீவை மீட்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் பாஜக குரல் எழுப்பும் என்று 
தெரிவித்தார்.

விரதமிருந்த நயன்தாரா!பிரபுதேவாவைச் சந்திக்காமல்

தெலுங்கில் ஸ்ரீ ராமராஜ்யம் என்று ஒரு படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பி அடங்கியதும் தெரிந்த விஷயம்.

தெரியாதது, சீதையாக நடிக்கும் நயன்தாரா கடும் விரதமிருந்த சமாச்சாரம்!

படப்பிடிப்பு முடியும் வரை நயனதாரா அசைவ உணவையே தொடவில்லையாம். அதுவும் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே எடுத்துக் கொண்டாராம்.

அதைவிட முக்கியம், இடையில் பிரபுதேவாவைச் சந்தித்தால் விரதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் அவரைக் கூட பார்க்காமல் தனிமையில் இருந்தாராம் நயன்.

சீதை வேடத்துடன் ஒன்றிப் போக வேண்டும் என்பதாலேயே இத்தனை சுய கட்டுப்பாடுகளையும் போட்டுக் கொண்டாராம் நயன்தாரா. எந்த நிகழ்ச்சிக்கும் போவதுமில்லையாம்.

இந்தப் படம்தான் நயன்தாரா கைவசமுள்ள கடைசிபடம். அதன் பிறகு சினிமாவுக்கு குட்பைதானாம்!

English summary
Nayanthara is on Vrath during the entire shoot of Telugu film Sri Rama Rajyam in which she plays Sita. The buzz is that she is not meeting Prabhu Deva during her shoots in Hyderabad!

மேட்டூர் தேமுதிக எம்எல்ஏவை போலீஸார் சிறைப் பிடித்தனர்.

ஓமலூர்: தேமுதிக மகளிரணியைச் சேர்ந்த பிரமுகர் தாக்கப்பட்டதையடுத்து ஓமலூர் காவல் நிலையத்துக்கு வந்து கலாட்டா செய்த மேட்டூர் தேமுதிக எம்எல்ஏவை போலீஸார் சிறைப் பிடித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த ஆனைக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலத்தின் மனைவி பேபி (45), தேமுதிக மாவட்ட மகளிரணி துணைச் செயலாளராக உள்ளார்.

அரசு பொறியியல் கல்லூரி எதிரே இவருக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் சரவணன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். பேக்கரியை காலி செய்யுமாறு பலமுறை கூறியும், சரவணன் மறுத்ததால் இருதரப்பினரிடையே மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று பேபியை மர்ம கும்பல் தாக்கியதாகக் கூறி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேபி சேர்ந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந் நிலையில் பேபியைத் தாக்கியவர்களை உடனே ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டவாறு, மேட்டூர் தேமுதிக எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் நேற்றிரவு ஓமலூர் காவல் நிலையத்துக்கு வந்து போலீசாரிடம் மிரட்டல் தொனியில் பேசினர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கும் எம்எல்ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எம்எல்ஏ வாய்க்கு வந்தபடி பேசவே, கோபமடைந்த போலீசார் எம்எல்ஏவின் கார் வெளியே செல்ல முடியாதவாறு காவல் நிலையத்தின் கேட்டை பூட்டிவிட்டு எஸ்.பி. மயில்வாகனனுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து எஸ்.பி. மயில்வாகனன், ஏடிஎஸ்பி ஈஸ்வரன், டிஎஸ்பி சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு விரைந்தனர். போலீஸாரால் எம்எல்ஏ சிறைப்பிடிக்கப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து காவல் நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான தேமுதிக தொண்டர்களும் திரண்டனர்.

இதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இரவில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்ததையடுத்தும், எம்எல்ஏ தரப்பு பணிந்ததையடுத்தும் அவரை காவல்துறையினர் வெளியே செல்ல அனுமதித்தனர்.

English summary
DMDK Mettur MLA Partheeban was held in police station after he got into argument with sub inspector, over an attack on DMDK woman cadre in Omalur

காதலியிடம் இருந்து பிரித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பவானி, வேலூர் & சென்னை: கள்ளக் காதலியிடம் இருந்து பிரித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த நர்சு தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் தாயும், தந்தையும் தீயில் கருகினர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூடலை சேர்ந்த செல்வி (25) கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் திருமுருகன் (30). மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கும் செல்விக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. 3 நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து இருவரின் பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சு நடத்தினர். திருமுருகன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் செல்வியை போலீசார் அவரிடமிருந்து பிரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்துவிட்டனர்.

இதனால் வேதனையடைந்த திருமுருகன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் தகவலை அறிந்த செல்வி தனது பெரியப்பாவின் குடிசை வீட்டுக்குச் சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகி அலறித் துடித்தார். இதில் அந்த வீடும், தொடர்ந்து அருகருகே இருந்த 5 குடிசை வீடுகளும் தீப்பற்றிக் கொண்டன.

அந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். செல்வியின் தந்தை அம்மாசை, தாய் பத்மினி ஆகியோர் வீட்டிற்குள் ஓடிச்சென்று தீயை அணைத்து மகளை மீட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த செல்வி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
செல்வியைக் காப்பாற்றியபோது அம்மாசை, பத்மினி ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்ட புலிகள் தமிழர்களையே அழித்தனர்


இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போருக்கு வேறு தவறான அர்த்ததை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வாசிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு கரோலினா பிராந்தியத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இலங்கை மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருபவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகிறது.
விடுதலைப் புலி தீவிரவாதத்திற்கு எதிராக போராடி அதனை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்று சாதனையுடன் இலங்கையில் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காக போராடுவதாகக் கூறியபோதும் அவர்களது செயற்பாடுகள் காரணமாக தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் முன்னெற்றத்தை ஏற்படுத்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ள போதும் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு வேறு விதத்தில் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் இந்தியத் தூதரக அதிகாரி கொத்தடிமை, பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்குபதிவு

அமெரிக்காவில் இந்தியத் தூதரக அதிகாரி மீது வழக்கு பதிவு

அமெரிக்காவின் இந்தியத் தூதரக அதிகாரியாக உள்ள பிரபு தயாள் மீது அவரது வீட்டு வேலைக்காரி சந்தோஷ் பர்த்வாஜ், தன்னை நீண்ட நேரம் அவர் வேலை வாங்குவதாகவும், தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு சுமத்தினார். மேலும் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டும் கூறியுள்ளார்.

இதையடுத்து அமெரிக்க அரசு பிரபு தயாள் மீது கொத்தடிமை, பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளது.

I'm Sathya Sai Baba's living will: Tigrett


Trust People Should Welcome ISAAC TIGRETT's Comments and Remember that He was the one Who spared No Expence To open The Free Super Speciality Hospital Look at his Back Ground Before Comenting He Is Not Baba's Cartoon Niece Chetana Raju.
Maybe the Trust people are Haveing too Much Complications The Story OF The Car with Money-Could be Chetana raju Who Could Have Planed to Set Up The Trust With the Trap Or It COULD IT BE THE GOVERNMENT BEHIND IT ??This Dirty Game To enter THE TRUST ?SAIRAM?

தந்தை முதல் 200க்கும் மேற்பட்டோரால் சீரழிக்கப்பட்ட +2 மாணவி பேட்டி



அந்த மாணவி ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

’’நான் பிளஸ்-1 படித்துக் கொண்டு இருந்தபோது, எனது தந்தையால் கற்பழிக்கப்பட்டேன். தொடர்ந்து தாயாரின் பணப் பேராசையால் சினிமா வாய்ப்புக்காக பல பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் மணிகண்டனும் ஒருவர்.

யார்-யார் எல்லாம் வந்து சென்றார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை. நான் சிறுமி என்று கூட பார்க்காமல் கடந்த 11/2 வருடங்களில் 200 பேர் வரை எனது வாழ்க்கையை சீரழித்துள்ளனர். ஆனால், அவர்களை நேரில் பார்த்தால் என்னால் அடையாளம் காட்ட முடியும்.

தந்தையின் கொலை மிரட்டல் காரணமாக இதுவரை எனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளியே தெரிவிக்க விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை. எனக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது.

தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். இனி மேலும் என் பெற்றோருடன் வாழ விரும்பவில்லை. தற்போது காப்பகத்தில் என்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள்’’ என்று கூறினார்.

இதற்கிடையே மாணவியின் பாலியல் தொந்தரவு வழக்கில் போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் மாணவியின் பாதுகாப்பு குறித்து ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த மந்திரி எம்.கே. முனீர், ``பாதிக்கப்பட்ட மாணவிக்கு தகுந்த பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

Sathyajith சாய்பாபா அந்தரங்க உதவியாளர் பேட்டி


சத்ய சாய்பாபா மரணம் அடைந்த பிறகு புட்டபர்த்தியில் இருந்து காணாமல் போன அவரது அந்தரங்க உதவியாளர் சத்யஜித், சமீபத்தில் சாய்பாபாவின் அந்தரங்க இருப்பிடமான யஜுர் வேத மந்திரம் திறக்கப்பட்டபோதுதான் புட்டபர்த்திக்கு வந்தார். யஜுர் வேத மந்திரத்தின் கதவுகளை திறக்க சத்யஜித்துக்கு மட்டுமே தெரிந்து இருந்ததால்தான் அவர் வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சத்யஜித் நேற்று மீண்டும் யஜுர் வேத மந்திரத்துக்கு வந்து வணங்கினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவரிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். `யஜுர் வேத மந்திரத்தில் இருந்த தங்கம், வைரம், வைடூரிய நகைகள் மற்றும் பணத்தை அறக்கட்டளை உறுப்பினர்கள் கணக்கில் காட்டாமல் மறைத்து விட்டார்களா? காரில் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.351/2 லட்சம் அறக்கட்டளைக்கு சொந்தமானதுதான் என போலீசார் உறுதிப்படுத்தி இருக்கிறார்களே, அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த சத்யஜித்,

அறக்கட்டளையின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல. பணம் கடத்தப்பட்டதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நான் பக்தராகவும், சாய்பாபாவுக்கு சேவை செய்யவும்தான் ஆசிரமத்துக்கு வந்தேன். சாய்பாபா எனக்கு கொடுத்த பொறுப்புகளை பக்தியுடன் நிறைவேற்றினேன். அந்த பணிகளை செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை.

சத்ய சாய்பாபா உயிருடன் இருந்தபோது நெருக்கமாக இருந்து அவருக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

அவர் உடல் நலம் குன்றியதற்கு நான் காரணம் அல்ல. இதுதொடர்பான பத்திரிகை செய்திகள் தவறானவை. உண்மையை சரிபார்க்காமல், பத்திரிகைகள் என்னை குறிவைத்து தாக்குகின்றன.

நான் இப்போதும், பாபா என்னிடம் கொடுத்த பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறேன். சத்ய சாய்பாபா விட்டுக் சென்ற பணிகளை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டியது அவரது பக்தர்களின் கடமை ஆகும்’’ என்று கூறினார்.

ரூ.351/2 லட்சம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் ரத்னாகர், வி.சீனிவாஸ் ஆகியோருக்கு போலீசார் ஏற்கனவே நோட்டீசு அனுப்பியுள்ள நிலையில், அறக்கட்டளை செயலாளர் சக்ரவர்த்திக்கு நேற்று நோட்டீசு அனுப்பினர்.

மேலும், பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஹரிஷானந்த ஷெட்டி, சந்திரசேகர மூர்த்தி, சோகன் ஷெட்டி ஆகியோருக்கு ஹிந்த்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் அளித்தது. நகரை விட்டு எங்கும் செல்லக்கூடாது, மறுஉத்தரவு வரும்வரை, ஒருநாள் விட்டு ஒருநாள் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

வசமாய் சிக்கும் தயாநிதி!Aircels- Maxis டீல்'..லண்டனில் சிபிஐ விசாரணை

டெல்லி: ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற சிபிஐ குழு, அங்கு இரு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது.

இதனால் தயாநிதி மாறன் மீதான சிபிஐயின் பிடி விரைவில் இறுகும் என்று தெரிகிறது.

ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபரான சிவசங்கரன் சிபிஐயிடம் தந்த வாக்குமூலத்தில், 2004-2007ம் ஆண்டு காலத்தில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தை அவரது நண்பரான மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு வற்புறுத்தினார் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்தியாவில் பிற பகுதிகளிலும் தனது செல்போன் சேவையை விரிவாக்க லைசென்ஸ் கோரி தொலைத் தொடர்புத்துறையை அணுகியபோதெல்லாம், அந்த பைல்களையும் கோரிக்கைகளையும் தயாநிதி மாறன் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும்,

ஏர்செல் நிறுவனத்தை அனந்த கிருஷ்ணனுக்கு விற்றே ஆக வேண்டும் என்று மிரட்டியே பணிய வைத்ததாகவும், ஏர்செல்லை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றவுடன் அந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 14 மண்டலங்களில் செல்போன் சேவை தொடங்க தயாநிதி உடனே லைசென்ஸ் தந்ததாகவும் சிவசங்கரன் கூறியிருந்தார்.

மேக்சிஸ் நிறுவனத்துக்கு இந்த லைசென்ஸ் கிடைத்தவுடன், அந்த நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் பிரிவில் ரூ. 600 கோடியை முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரங்கள் குறித்து லண்டன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 10 நிதி ஆலோசகர்களுக்கும் முழு விவரமும் தெரியும் என்றும் சிவசங்கரன் சிபிஐயிடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த 12ம் தேதி அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் குழு லண்டன் சென்று அங்கு சிவசங்கரன் குறிப்பிட்ட நபர்களில் 2 முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும் அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்டு இந்தக் குழு கடந்த 19ம் தேதி இந்தியா திரும்பியது. இந்த வாக்குமூல விவரங்கள் தயாநிதி மாறனை பெரும் சிக்கலில் மாட்டிவிடும் என்று தெரிகிறது.

இதேபோல இன்னொரு அமலாக்கப் பிரிவு-சிபிஐ அதிகாரிகள் குழு விரைவில் சிங்கப்பூருக்கும் செல்கிறது. அங்கு இந்த டீல் குறித்து விவரம் அறிந்தவர்கள் என்று சிவசங்கரனால் சுட்டிக் காட்டப்பட்ட நபர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி அங்கேயே அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யும் என்று தெரிகி்றதி.

English summary
In a bid to tighten the noose around Union textile minister Dayanidhi Maran, the CBI sleuths recorded statements of two London-based merchant bankers who have been cited as key witnesses by former Aircel owner Shivasankaran. Shivasankaran has provided the CBI a list of over 10 witnesses, most of them based in London and Singapore.

இலங்கை மீனவர்களை விடுவித்தால் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவர் - அமைச்சர் ராஜித சேனாரத்ன

தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்குமாயின், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.

ஏற்கனவே இலங்கை கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள இந்திய மீனவர்கள் 23 பேரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மீனவர்கள் கைது குறித்து தென்னிந்திய மீனவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றதை போன்று, இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படும் போது இங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் 70 இலங்கை மீனவர்கள் வரை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கை மீனவர்கள் ஒரு சிலரே தவறுதலாக இலங்கை கடல் எல்லையை மீறுவதாகவும் இந்திய மீனவர்கள் ஆயிரக்கணக்கில் இந்திய கடல் எல்லையை மீறுவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை தமிழ் மக்கள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் சுமார் 30 வருட யுத்தத்தின் பின்னர் கடற்றொழிலை ஆரம்பித்துள்ள வடபகுதி மீனவர்களின் நடவடிக்கைகளுக்கு இந்திய மீனவர்களால் ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ராஜித சேனாரத்ன வலியுறுத்தி னார்.

"டிவி'யை, அனாதை இல்லங்களுக்கு தருகிறார்களாம்; மக்களையும் அனாதை இல்லங்களுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும்,''

சோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான் : தமிழச்சி தங்கபாண்டியன்

திருப்பூர் : ""சோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான்,'' என, திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார். தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், திருப்பூர் அரிசிக்கடை வீதியில், நடந்தது. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: தி.மு.க.,வுக்கு தோல்வி என்பது புதிது அல்ல. இதுவரை எத்தனையோ வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறது. சோதனைகளும், தோல்விகளும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான்.

இலங்கையில் நடந்த இன படுகொலைக்கு காரணமான ராஜபக்ஷேவை கண்டித்தும், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்தையும் தி.மு.க., ஆதரிக்கிறது; அதே நேரத்தில், பல ஆண்டுக்கு முன்பே இலங்கையில் நடக்கும் தமிழர் படுகொலைகளுக்கு தி.மு.க., கண்டனம் தெரிவித்து, எதிர்ப்பை காட்டி வந்துள்ளது.

கல்வியில் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதற்காக கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதால், அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்காமல் போகும்; ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வாய்ப்பின்றி போகும்; கல்வியில் தேவையான மாற்றங்கள் செய்யலாம்; ஆனால், அடிப்படையை மாற்றக் கூடாது, என்றார்.

"பார்வையாளராக இருப்போம்' முன்னாள் அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ""அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் சாயக்கழிவுநீர் பிரச்னை தீர்ந்து, சாய ஆலைகள் செயல்படும் என்றனர்; எட்டு அமைச்சர்கள் கூடி பேசியதை தவிர, வேறு எதுவும் பெரிதாய் நடந்து விடவில்லை. இவ்விஷயத்தை பொறுத்தவரை, போராட்டத்தில் இறங்காமல், ஒரு பார்வையாளராக மட்டுமே இருப்போம். இதை அரசியலாக்க விரும்பவில்லை. பிரச்னையை தீர்க்க அரசுக்கு போதிய அவகாசமும் தருவோம்.

""பொய் பிரசாரத்தை நம்பி தேர்தலில் மக்கள் ஏமாந்து விட்டனர். அதற்கான பலனை அனுபவிக்கின்றனர். மக்களுக்கு தருவதற்காக வாங்கிய ஒரு லட்சம் "டிவி'யை, அனாதை இல்லங்களுக்கு தருகிறார்களாம்; மக்களையும் அனாதை இல்லங்களுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும்,'' என்றார்.

ராஜாவின் மனைவியிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி

திருச்சி: "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் கைதாகி, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. இவரது மனைவி, சகோதரர் உள்ளிட்ட நான்கு பேரிடம் திருச்சி வருமான வரித்துறையினர் திடீரென நேற்று விசாரணை நடத்தினர். வரும் 7ம் தேதி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ள நிலையில், வருமான வரித்துறையினரின் இந்த விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜாவின் மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் அண்ணனும், சென்னை அண்ணா பல்கலை பருவநிலை மாற்ற ஆய்வுத்துறை இயக்குனருமான ராமச்சந்திரன், திருச்சி பி.எஸ்.என்.எல்.,லில் வேலைபார்க்கும் சகோதரி மகன் மற்றும் அவர்களின் உறவுக்கார பெண் ஆகிய நால்வரையும் விசாரணைக்காக, திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் நால்வரும் நேற்று, காலை 10.30 மணிக்கு திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம், வருமான வரித்துறை துணை கமிஷனர் ஆல்பர்ட் மனோகரன் உள்ளிட்ட குழுவினர் விசாரணை நடத்தினர். ஒரு மணிநேர விசாரணைக்கு பின், உறவுக்கார பெண்ணும், ராஜாவின் சகோதரர் மகனும் அனுப்பப்பட்டு விட்டனர். அதன்பின், ராஜாவின் மனைவி பரமேஸ்வரியிடமும், ராமச்சந்திரனிடமும், வருமான வரித்துறை துணை கமிஷனர், அவர்களது சொத்துக்கள் தொடர்பாக துருவித் துருவி விசாரணை நடத்தினார்.

பரமேஸ்வரிக்கும், ராமச்சந்திரன் குடும்பத்துக்கும் திடீரென பெரிய அளவில் சொத்துக்கள் கிடைத்தது எப்படி என்றும், சில நிறுவனங்களில் பங்குதாரராக சேர பணம் எங்கிருந்து வந்தது என்றும், அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்றும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு பதில் சொல்ல முடியாமல் இருவரும் திணறியதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜா மனைவியும், அண்ணனும் வருமான வரித்துறையினரின் மூன்று மணி நேர விசாரணைக்கு பின், வெளியே வந்து, காரில் புறப்பட்டுச் சென்றனர். விசாரணைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் குடும்பத்தினருடன், பிரான்சிஸ், முத்துகுமாரசுவாமி, சுரேஷ்குமார் ஆகிய மூன்று ஆடிட்டர்களும் வந்திருந்தனர்.

இதுகுறித்து ஆடிட்டர் முத்துகுமாரசுவாமி நிருபர்களிடம் கூறுகையில், ""பரமேஸ்வரி உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கவே, விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது வழக்கமான விசாரணை தான்,'' என்று தெரிவித்தார். ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகிய மூன்று துறைகளும் விசாரித்து வருவதால், அந்த ஊழலுக்கும், இவர்களிடம் உள்ள சொத்துக்களுக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் தான் விசாரணை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இன்னும் இரண்டு வாரங்களில், மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ள நிலையில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ராஜாவின் குடும்பத்தாரிடம், திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தியுள்ள விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

EPDP :கூட்டமைப்பு அரசியல் லாபம் தேடுகிறது

தமிழர் பிரச்சினையை வைத்து கூட்டமைப்பு அரசியல் லாபம் தேடுகிறது - ஈபிடிபி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர் மட்ட பிரதிநிதிகளுக்கும் அரச உயர் மட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (23) நடைபெற்ற விஷேட சந்திப்பின் போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு முயற்சிகளில் காணப்படும் நம்பிக்கைகள் மேலும் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்த அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கையானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலில் இருந்து தொடங்கி அதை மேலும் வளர்த்தெடுத்து செல்வதே நடைமுறைச் சாத்தியமான வழிமுறை ஆகும் என்பதை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையே அரச தரப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டும் இருந்தது.

இச்சந்திப்பின் போதும் இவைகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்களே விபரமாக இரு தரப்பினராலும் ஆராயப்பட்டதோடு அரசியல் தீர்வு முயற்சிகளை எவ்வாறு விரைவாக செயலூக்கம் பெற வைப்பது என்றும் பேசப்பட்டதாக ஈபிடிபி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுடன் பேச்சு நடத்தி வரும் இன்னொரு தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்கு மாறாக பிரச்சினைகளை வளர்ப்பதிலும், அதை தீராப் பிரச்சினை என்று கூறி தேர்தல் கோஷமாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்தும் வருகின்றனர்.

இதை உணர்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பொறுப்புள்ள ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் அரசியலுரிமை பிரச்சினை தீர்விற்கான இத்தடைகளை கருத்தில் கொண்டு சில ஆலோசனைகளை இன்றைய சந்திப்பிலும் எடுத்து விளக்கியுள்ளது.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதை மேலும் வளர்த்தெடுத்து முன்நோக்கி செல்லும் அதே வேளையில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து தீர்வு முயற்சிகளை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் என்பதோடு அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்பை பெறுவதற்கும் இது உதவும் எனவும் எடுத்துச் சொல்லப்பட்டது.

இதேவேளை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ஏனைய கட்சிகளும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு தமது யோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாடு குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தரப்பால் எடுத்து விளக்கப்பட்டதோடு 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதும் சம காலத்தில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு செயற்படுவதற்கான வரையறுக்கப்பட்ட ஒரு கால அவகாசமும் வழங்கப்பட வேண்டும் என்றும் எடுத்து விளக்கப்பட்டது.

மேலும் இச்சந்திப்பின் போது, 13வது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற அதிகாரங்களை செழுமைப்படுத்தவும், மேலும் தேவையான அதிகாரங்கள் எவையென அடையாளம் காண்பதற்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பங்களிப்பையும் பெறுவது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் மற்றும் அங்கம் வகிக்காத அனைத்துக் கட்சிகளும் இன்று நடைமுறையில் ஏற்றுக்கொண்டிருக்கும் 13வது திருத்தச் சட்டத்தை இலகுவாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்த முடியும் என்பதோடு இதையே இந்தியா உட்பட சர்வதேச நாடுகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்பதாலும், தமிழ் மக்களுக்கும் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவோருக்கும் இதுவே நம்பிக்கை தரும் விடயமாகும் என்பதாலும் இவைகளை தாமதமின்றி விரைவு படுத்துவது குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

இச்சந்திப்பின் போது அரச உயர் மட்ட பிரதிநிகளாக அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா ஐீ.ஏல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஐீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்த்தன அகியோரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, அமைச்சரின் இணைப்பதிகாரிகளான ராஜ்குமார், சட்டத்தரணி சந்திரலால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Canada Postal Strike மறுஅறிவித்தல் வரை கடிதங்களை கனடாவுக்கு அனுப்பாதீர்

மறுஅறிவித்தல் வரை எந்த ஒரு கடிதங்களையும் கனடாவுக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனேடிய தபால் சேவை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Google தமிழும் இணைப்பு.கூகுளின் பன்மொழி மொழிபெயர்ப்பு சேவையில்

கூகுளின் பன்மொழி மொழிபெயர்ப்பு சேவையில் தமிழும் இணைப்பு
கூகுள் இணையத்தளத்தின் பன்மொழி மொழிபெயர்ப்புச் சேவையில் இப்போது தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழ், வங்காளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி ஆகிய 5 இந்திய மொழிகளை புதிதாக தனது இணைய மொழிபெயர்ப்பு சேவையில்  கூகுள் நிறுவனம் இணைத்துக்கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய இணைய தேடல் இயந்திர இணையத்தளமான கூகுள் குழுமம் 2006 ஆம் ஆண்டு இணையம் மூலமான பன்மொழி மொழிபெயர்ப்பு சேவையை ஆரம்பித்தது. இப்போது புதிதாக இணைக்கப்பட்ட 5 மொழிகளுடன் சேர்த்து இந்த மொழிபெயர்ப்புத் தொகுதியிலுள்ள மொழிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், தமிழ் மொழியிலுள்ள வசனங்களை ஏனைய 62 மொழிகளில் மொழிபெயர்க்கவோ அல்லது அம்மொழிகளில் உள்ளவற்றை தமிழுக்கு மொழிபெயர்க்கவோ முடியும்.

ஏற்கெனவே தமிழும் உள்ளடக்கப்பட்ட இணையம் மூலமான பன்மொழி அகராதிகள் உள்ளன.

எனினும் கூகுள் இணைய மொழிபெயர்ப்பு சேவையானது வசனங்களையும் மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளுக்கே உரிய துரித வேகத்தை இந்த மொழிபெயர்ப்புச் சேவை கொண்டுள்ளது. யுனிகோட் எழுத்து விரிவடிவங்களையே (font) இது கிரகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய இணைய அகராதிகளைவிட அதிகமான பிறமொழி சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களையும்  தமிழ்சொற்களுக்கான பிறமொழி சொற்களையும் கூகுள் மொழிபெயர்ப்பு சேவை வழங்குகிறது.

வழங்கப்படும் மொழிபெயர்ப்பில் காட்டப்படும் சொற்கள் பொருத்தமற்றவை எனக் கருதினால் அச்சொற்களை  அழுத்துவதன் மூலம் பொருத்தமான வேறு சில மாற்றுச் சொற்களையும் தெரிவு செய்துகொள்ளும் வசதியும் உண்டு.
ஆனால், நாம் பரீட்சித்தவரை நீண்ட வசனங்களுக்கான  கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு மிகத் துல்லியமானதாக  இல்லை.  தமிழ் முதலான தென்னிந்திய மொழிகளின் வசன அமைப்பு முறைக்கும்; ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகளின் வசன அமைப்பு முறைக்கும் இடையிலான வித்தியாசமே இதற்குக் காரணம்.  மரபுத்தொடர்கள் முதலானவற்றுக்கான மொழிபெயர்ப்பும் கிடைக்கவில்லை.

பரீட்சிப்பதற்காக, ஆங்கிலத்திலுள்ள ஒரு வசனத்தை தமிழுக்கு மொழிபெயர்ப்பதற்கான கட்டளையை கொடுத்தபொது அம்மொழிபெயர்ப்பு துல்லியமாக இல்லாவிட்டாலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததது.

ஆனால், அதே கூகுள் மொழிபெயர்த்துத் தந்த அதே தமிழ் வசனத்தை மீண்டும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து பார்த்தபோது அது வந்த பெறுபேற்றுக்கும் அசல் ஆங்கில வசனத்திற்கும் இடையிலான முரண்பாடு  'பயங்கரமானதாக' இருந்தது.

புதிதாக இணைக்கப்பட்ட மொழிகளின் மொழிபெயர்ப்பானது பரிசோதனை நிலையில் உள்ளதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது.
'ஏதேனும் மொழியில் தவறான மொழிபெயர்ப்பை  அவதானித்தால் எமக்கு அறியத்தாருங்கள். நாம் எமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறோம்' என கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானியான ஆஷிஸ் வேணுகோபால் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும் தமிழ்பேசும் மக்களுக்கும் உலகின் ஏனைய பிரதான மொழிபேசுவோருக்கும் இடையிலான தொடர்பாடலில் கூகுள் மொழிபெயர்ப்பு சேவையும் அதை பின்பற்றி வரக்கூடிய இத்தகைய இணைய மொழிபெயர்ப்புச் சேவைகளும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

India Visa விண்ணப்பித்த மறுதினமே விசா

இந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம்: விண்ணப்பித்த மறுதினமே விசா
இந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த வேலை நாளில் பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் இந்தியாவிற்கு செல்வதற்கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில் ஒப்படைத்தால், அது இந்தியா விற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா வழங்கப்பட்டது என்றும், இதனால், ஒருவர் இந்திய வீசாவைப் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதென்றும் சுட்டிக்காட்டினார். இன்று இலங்கையில் யுத்தம் முடி வுற்று நாட்டில் சமாதானமும் அமைதி யும் திரும்பிக் கொண்டிருப்பதனால், பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு ஒருவரின் வீசா விண்ணப்பம் அன்றைய தினமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த வேலைநாளில் வீசா சம்பந்தப்பட்டவருக்கு வீசா கொடுக்கப்படும் என்று கூறினார். இப்போது இலங்கையில் அமைதி நிலைகொண்டிருப்பதனால் வெகு விரைவில் வீசாவை இந்தியா செல்லும் பயணிக்கு விமான நிலையத்தில் வைத்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை தாங்கள் தீவிர பரிசீலனைக்கு எடுத்திருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நாடு கட்டியெழுப்பப்படும்போது காலைவாரிவிட சூழ்ச்சிகள் - ஜனாதிபதி



Mahinda-3* தாய்மாரின் கண்ணீரை துடைத்த எம்மை மின்சார கதிரைக்கு கொண்டு செல்ல சதி
* மக்களை வாழ வைப்பதை விட மேலானமனித உரிமை எது?
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'செனல்-4', தாருஸ்மன் அறிக்கை என எமக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அதில் குறிப்பாக எனது பெயருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ என எம் மூவரது பெயர்களே குறிப்பிடப்படுகின்றன. நம் நாட்டுத் தாய்மாரின் கண்ணீரைத் துடைத்த எம்மை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்லும் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எல்லாவற்றையும் விட எமக்கு எமது நாடு பெரிது அதன் கீர்த்தியும் பெரிது. நாட்டை மீட்பதில் உதவியது போல் சவால்களை வென்று நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் சகலரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விவசாய மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார்ந்த உயரதிகாரிகளுடன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தப்படுகிறது. மக்களை வாழவைப்பதைவிட மேலான மனித உரிமை எதுவென நான் கேட்க விரும்புகிறேன்.

தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்பது நாட்டின் அரசியல் வேலைத்திட்டமல்ல. அது மக்களைப் பலப்படுத்தும் திட்டமாகும்.

நாட்டை மீட்டெடுத்து மக்களைப் பலப்படுத்தி தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் மேற்கொள்ளும் திட்டங்கள் சிலருக்கு பார்க்கப் பொறுக்கவில்லை.

நாம் பயங்கரவாதிகள் சீரழித்த நாட்டை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் பல்வேறு நோக்கங்களுக்காக அபகரித்த காணிகள் இழக்கப்பட்ட வளங்களையும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

பொருளாதார ரீதியில் எம்மை வீழ்ச்சியுறச் செய்வதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி சகல மதங்களுக்குமான உரிமைகளை வழங்கி முன்னேற்றம் கண்டு வரும் வேளையில் எம்மைக் காலை வாரிவிட முயல்கின்றன.

விவசாயிகளின் உரிமையை அவர்களிடமிருந்து அபகரித்ததுடன் ச.தொ.ச. போன்ற நிறுவனங்களை விற்றனர்.

நாம் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்ற முயல்கையில் அதனைத் திரிபுபடுத்தி தருஸ்மன் அறிக்கை, மனித உரிமை மீறல் என குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. தமிழாயிருக்கட்டும், சிங்களமாயிருக்கட்டும் நம் தாய்மாரின் கண்ணீருக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.

‘சனல் 4’ எனக் கூறிக்கொண்டு எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். அத்தகைய சதிமுயற்சிகளுக்கு எமக்கு எதிராகச் செயற்படும் சக்திகள் துணை போகின்றன. இது விடயத்தில் அனைவரும் அவதானமாயிருக்க வேண்டியது அவசியம்.

நாட்டுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் நாட்டு மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். அப்பாவி விவசாயிகளின் உரிமைகளைச் சூறையாட இடமளிக்க முடியாது.

இத்தகைய சதிமுயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பயிர்ச் செய்கையைப் போலவே நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளிலும் விவசாய சமூகம் விழிப்பாகச் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)

காத்தான்குடியில் மதவாதிகளால் பெண்கள் தாக்கப்பட்டார்கள்

காத்தான்குடி: பள்ளிப்பெண்கள் தடுத்துவைப்பு
- B.B.C
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில், செவ்வாய்க்கிழமை , காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம் பள்ளிப் பெண்கள், தனியார் இணைய மையம் ஒன்றில் ஆபாச படத்தைப்பார்த்ததாகக் கூறி, காத்தான்குடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து, அவர்களை தடுத்து வைத்து தாக்கியதாகவும், பின்னர் அவர்களை காத்தான்குடியின் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்திலும் வைத்து, பொதுமக்களைக் கூட்டி பிரச்சினையை பெரிது படுத்த முயன்றதாகவும், பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டதாகவும் செய்திகள் வந்தன.

இது குறித்து காவல்துறைக்காகப் பேசவல்ல அதிகாரி ப்ரஷாந்த் ஜெயக்கொடி அவர்களைத் தொடர்பு கொண்டு பிபிசி தமிழோசை கேட்டபோது, அவர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் மட்டக்களப்பு காவலர்கள் மீட்டு, அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், அவர்களின் பெற்றோர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், வழக்கு ஒன்று பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களைத் தேடிவருவதாகவும் குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் நடந்த இச்சம்பவம்குறித்து, காத்தான்குடியைச் சேர்ந்தவரும், இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரத் துணை அமைச்சருமான, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களைத் தமிழோசை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தப் பிரச்சினையில்உண்மையில் பெண்கள் தாக்கப்பட்டார்களா என்பது தனக்குத் தெரியாது, ஆனால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் இந்த பெண்களிடம் கேள்விகள் கேட்டதாகவும், இது தொடர்பாக, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தாம் அறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

உண்மையில் பெண்கள் அந்த மாதிரி காரியங்களில் ஈடுபட்டாலும், அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது, காவல்துறை அதிகாரிகள்தானே தவிர மற்றவர்கள் அல்ல, தனி நபர்கள் இந்த விஷயத்தில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
ஆனால் இது ஒரு மத அடிப்படைவாதப் பிரச்சினை அல்ல, கலாச்சாரப் பிரச்சினையாகப் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம்


எழுதும் அனுபவத்தொடர் (2)
2. எதிர்பாராத அழைப்பு
இங்கு நான் எழுதப்போகும் வரலாறு 1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் திகதி ஆரம்பிக்கின்றது. அதாவது கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள்.

18 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை சரியான தகவல்களுடன் தரமுடியுமா எனச் சிலர் கருதக்கூடும். உண்மைதான். உலகம் போகிற வேகத்தையும், நடக்கும் சம்பவ வரிசைகளின் அணிவகுப்பையும் பார்த்தால், நேற்று நடந்ததையே நாம் இன்று மறந்துவிடுகிற காலமிது.

ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகவும் துயரமான இந்த வரலாற்றுச் சம்பவங்கள் என்றுமே மறக்கக் கூடியவை அல்ல. அதுமாத்திரமின்றி தமிழ் சமூகத்தில் எனக்கு மட்டுமின்றி மேலும் பலருக்கு நிகழ்ந்த இந்த அவலங்கள் என்றோ ஒருநாள் வரலாற்றின் பக்கங்களில் நிச்சயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக, முடியுமானவரை அவற்றின் குறிப்புகளை ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்தேன். எனவே சில வேளைகளில் ஒருசில சம்பவங்கள் மறந்துவிட்டிருந்தாலும், அவற்றக்குப் பதிலாக இட்டுக்கட்டப்பட்ட விடயங்களை ஒருபோதும் புகுத்தமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.

அது ஒரு வியாழக்கிழமை. நேரம் பிற்பகல் 3 மணியிருக்கும்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில,; ஆரியகுளம் சந்திக்கு சமீபமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எதிராக, நான் நிர்வகிக்கும் யாழ் புத்தக நிலையத்திலிருந்து, மிக அருகாமையில் அத்தியடி புது வீதியில் அமைந்திருந்த எனது வீட்டுக்கு மதிய உணவிற்காகச் சென்றேன்.

இந்த இடத்தில் இந்த யாழ் புத்தக நிலையம் பற்றியும் சிறிது சுருக்கமாகச் சொல்லிவிடுவது அவசியமானது. இந்தப் புத்தகக்கடை 1963ல் உருவானது. இது வெறும் வியாபார நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்றல்ல. 1963ல் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏறபட்ட போது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் அந்தப்பிளவு தோன்றியது. சோவியத் சார்பு – சீன சார்பு என ஏற்பட்ட அந்தப்பிளவில், சீன சார்பான கட்சி அணியினரின் பிரச்சார வெளியீடுகளை விநியோகிக்கவும், ‘கோஸி சூடியன்’ என அழைக்கப்படும், சீன சர்வதேச புத்தக வர்த்தக நிறுவனம் அனுப்பும் நூல்களை விநியோகிக்கவுமே இந்தப் புத்தக நிலையம் அமைக்கப்பட்டது.

எமது சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு, 1972ல் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில் கட்சி வேலைகளைச் செய்வதற்காக வரும்படி கட்சி என்னை அழைத்தது. எனவே 1966ம் ஆண்டுமுதல் வன்னிப்பிரதேசத்தில் விவசாயிகள் மத்தியில் நான் மேற்கொண்டிருந்த கட்சி – வெகுஜன வேலைகளை ஏனைய தோழர்களிடம் ஒப்படைத்துவிட்டு, யாழ்ப்பாணம் வந்து வேலைகளைப் பொறுப்பெடுத்தேன். அந்த வேலைகளில் ஒன்று இந்த யாழ் புத்தக நிலையத்தை நிர்வகிப்பதாகும். பின்னர் நாம் உருவாக்கிய ‘நொதேர்ண் பிறின்ரேர்ஸ்’ அச்சகத்தையும் நானே நிர்வகித்தேன்.

இதுதவிர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1975ல் நிறுவப்பட்ட பின்னர், பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் முற்போக்கான அரசியல் - கலாச்சார வேலைகளை முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த, அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவரான பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், அதன் அருகில் ஒரு புத்தகக் கடையை அமைக்கும்படி என்னை வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற நான் தனிப்பட்ட முறையில் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் சேர்.பொன்.இராமநாதன் வீதியில், குமாரசாமி வீதி தொடங்கும் இடத்துக்கு அண்மையில், 196ம் இலக்கக் கட்டிடத்தில் ‘யூனிவேர்சல் றேட்ஸ்’ என்ற பெயரில் ஒரு கடையை ஆரம்பித்தேன்.

அந்த இடத்தை எனக்கு பெற்று உதவியர், அப்பொழுது யாழ்.பல்கலைக்கழகத்தில் கணிதபீட விரிவுரையாளராக இருந்த நண்பர் (இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, பின்னர் இங்கிலாந்தில் தனது கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்) ஒருவராவார்.

இந்த இரு புத்தக நிலையங்களைப் பற்றியும் எமது அச்சகத்தைப் பற்றியும் இங்கு பிரஸ்தாபிப்பதின் காரணம், இவை யாழ்ப்பாணத்தின் சமகால அரசியல் வரலாற்றில் வேறு எந்த நிறுவனங்களையும் விட அதிக பங்களிப்பு செய்ததுடன், நான் எழுதுகின்ற இந்த வரலாற்றுத் தொடருடன் அவை சம்பந்தங்களையும் கொண்டிருப்பதும் ஆகும். அதுபற்றி பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

யாழ்பாணத்தில் டிசம்பர் மாதம் என்பது பருவ மழைக்காலத்துள் உள்ளடங்கிய ஒன்று. சில வேளைகளில் வீசும் காற்றில் சில்லென்ற குளிர் உள்ளுற உறைந்து நிற்கும். ஆனால் இந்த டிசம்பர் பின்மாலைப்பொழுது சற்று உஸ்ணமாக இருந்தது. அது சில வேளைகளில் அன்றைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் வீசிய அரசியல் அனல்காற்றின் வெப்பத்தை உள்வாங்கி இருந்ததோ என்னவோ?

நான் மதிய உணவு அருந்தச்சென்ற அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக முன்னொருபோதும் என்வீட்டுக்கு வந்திராத இருவர் என்னைக்காண வந்திருந்தனர். ஒருவர் எனது நண்பரான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி ஆங்கில ஆசிரியராவார். அவர் தமிழ் தேசியவாதத்தின் பால் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்றபோதிலும், குருட்டுத்தனமாக அதை ஆதரிப்பவர் அல்ல.

இன்னொருவர் எனது சொந்த ஊரான இயக்கச்சி பகுதியிலுள்ள முகாவில் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ரெலோ இயக்கத்தில் ஒரு முக்கிய போராளியாக இருந்தவர். புலிகள் 1986ல் ரெலோ இயக்கத்தை தடைசெய்தபோது, பல இடங்களில் அந்த இயக்கத்தின் போராளிகள் பலரை குற்றுயிரும் குறையுயிருமாக பகிரங்க இடங்களில் டயர் போட்டு எரித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வாறான கொடும்செயலுக்கு உள்ளாக்கப்படுவதற்காக எமது ஊரைச்சேர்ந்த அந்த இளைஞனும் மல்லாகத்தில் ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதை அறிந்த அவரது தகப்பனார் எனது உதவி கோரி என்னிடம் வந்து கண்ணீர் வடித்தார். நான் புலிகள் இயக்கத்தில் அப்பொழுது அவர்களது ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற ஒருவரை அணுகி அந்த இளைஞனை உயிர்தப்ப வைத்திருந்தேன்.

அந்த இருவருடனும் பல்வேறு விடயங்கள் குறித்து அளவளாவினோம். குறிப்பாக இந்திய அமைதிப்படை 1990ல் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், புலிகள் தமிழ் பகுதிகளில் நடாத்தி வந்த நரபலி வேட்டை குறித்து விசனத்துடன் உரையாடினோம். அதன்பின்னர் அவர்கள் இருவரும் விடைபெற்றுச் சென்ற பின்னர் மீண்டும் யாழ் புத்தக நிலையம் செல்வதற்குத் தயாரானேன். பிறந்து 16 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த எனது மகள், எம்முடன் தங்கியிருந்த எனது மனைவியின் தகப்பனாரின் மடியில் இருந்துகொண்டு எனக்கு கைகளை அசைத்து விடை தந்தாள்.

நான் மதிய உணவிற்கு செல்லும்போது, கடையில் பொறுப்பாக தவராசா என்ற முதிய தோழர் ஒருவரை விட்டுச் சென்றிருந்தேன். இந்தத் தோழர் இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் நடத்துனராக (கொண்டக்ரர்) இருந்து ஓய்வுபெற்றவர். இவரது குடும்ப வரலாறு மிகவும் சோகம் நிறைந்தது. உடுப்பிட்டியைச் சேர்ந்த இவர் உரும்பிராயில் திருமணம் செய்திருந்தார். மனைவி வாய்பேச முடியாதவர். அவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் ஆக மூன்று பிள்ளைகள் பிறந்தனர். பிள்ளைகள் மூவருமே வாய்பேச முடியாதவாகள்.

மகன்களில் ஒருவர் யாழ்.சின்னக்கடைப் பகுதியில் கடைச்சல் பட்டடை ஒன்றில் வேலைசெய்து வந்தார். ஒருநாள் அவர் வேலைக்குச் செல்லும் வழியில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் திடீர் மோதல் ஒன்று நிகழ்ந்தது. அதில் அகப்பட்டுக்கொண்ட அவர் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி அந்த இடத்திலேயே மரணித்தார். இன்னொரு மகன் புலிகளுக்கு எதிரான இயக்கமொன்றுடன் தொடர்புள்ளவர் எனக்கூறி, புலிகள் அவரைத் தேடிவந்தனர். ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேளையில், அதை எப்படியோ அறிந்துகொண்ட புலிகள் வீடு தேடி வந்துவிட்டனர். சாப்பிட்டுக்கொண்டு இருந்த அவரை சாப்பாட்டுக் கோப்பையுடன் வீட்டு முற்றத்துக்கு இழுத்துவந்து, பெற்றோர் சகோதரிக்கு முன்னால் சுட்டுப் படுகொலை செய்தனர். மகன்கள் இருவரும் கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியில் தோழா தவராசாவின் மனைவியும் சிறிது நாட்களில் மரணித்துவிட்டார்.

அதன்பின்னர் தவராசாவும் அவரது வாய்பேசமுடியாத மகளும் உரும்பிராயில் மிகவும் கஸ்டமான ஒரு சூழலில் வாழ்ந்துவந்தனர். கடுமையான ஆஸ்த்மா நோய் காரணமாகவும், முதுமை காரணமாகவும் அவரால் எந்தவொரு தொழிலையும் செய்ய முடியாத நிலையில், அவரது மகள் தான் கற்றிருந்த மணப்பெண் அலங்காரத் தொழிலில் இடையிடையே கிடைக்கும் வருவாயிலேயே அவர்களது வாழ்க்கை ஒருவாறு ஓடியது. அவர் தனது மன வேதனைகளை ஆற்றுவதற்காகவும், அரசியல் விவகாரங்களைக் கலந்துரையாடுவதற்காகவும் நேரம் கிடைக்கும் போதேல்லாம் எமது புத்தகக்கடைக்கு வந்துவிடுவார்.

இந்த நிலைமையில், அன்றும் அவரை புத்தகக்கடையில் விட்டுவிட்டே வீடு சென்றிருந்தேன். திரும்பவும் நான் புத்தகக்கடைக்கு சென்றபொழுது, எமது கடைக்கு முன்னால் இளைஞன் ஒருவன் சைக்கிளுடன் நிற்பது தெரிந்தது. தூரத்திலிருந்து நான் இதை அவதானித்தாலும், அவன் நின்ற நிலை, எதையோ அவன் எதிர்பார்த்து நின்றது போன்ற ஒரு தோற்றப்பாட்டை, எனது மனதில் உருவாக்கியது.

தொடரும்

வெள்ளி, 24 ஜூன், 2011

வாலியின் அந்தர் பல்டி ஜெயலலிதாவை ரங்கநாயகியாம்

ரங்க நாதரே! - உங்கள்
ரங்க நாயகி...
உலக
உயிர்க்கெலாம் தாய்;
ஈழத் தமிழனும் - அவள்
ஈன்றெடுத்த சேய்!

 'பொறுத்தது போதும்’ எனப்
பொங்கி எழுந்தாள்;
அவள் தாள்தான் - இன்று
அனைத்துத் தமிழரும் தொழுந்தாள்!

 சான்றோர்
சபையைக் கூட்டி-
'போர்க்குற்றம்’ எனக் கூறினாள்;
பொருளாதாரத் தடை கோரினாள்!

...

வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்
வாழ்த்துகிறார்கள் இன்று-
'எங்க நாயகி’தான் - அந்த
ரங்க நாயகி என்று! 
வாலியின் அந்தர் பல்டி ஜெயலலிதாவை ரங்கநாயகியாம்

ராகுல் காந்தி பிரதமராவது சாத்தியமா?


இவ்வளவு நாள் என்னமோ விளையாட்டுத்தனமா நேரு மாமா,இந்திரா காந்தி அன்னை,ராஜிவ் அண்ணன்னு சொந்தம் கொண்டாடி மன்னராட்சிக்கு மாறாக ஒரு பரம்பரை ஆட்சி வருவதற்கு இந்திய மக்கள் துணை போய் விட்டார்கள்.அதிகார பிறப்பின் இருப்பால்,விருப்பால் மத்தியிலும்,மாநிலத்திலும் அதற்கான சூழல்கள் உருவாகக் கூடும்.சுயமான முயற்சியாளர்களாய் இருந்திருந்தால் ராகுல்,ஸ்டாலின் போன்ற ஆளுமைகள் இந்தியாவிற்கு தேவையென்றாலும் வாரிசு அரசியலின் விளம்பரத்தால் இவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்வது இந்தியா என்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.இருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற வாசகப் படி இதனை காலம் எப்படி பதிவு செய்யப்போகிறது என்று கணிப்பதற்காக வேண்டி இந்த பதிவு.

இப்ப சுப்ரமணியன் சாமி என்ன சொல்றாருன்னா,ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு வர முடியாதாம்!ஏனய்யா உனக்கு எப்ப பார்த்தாலும் குட்டையக் குழப்பி விடுறதே பொழப்பா போச்சுன்னு அலுத்துக்கொள்றவங்களுக்கு அவர் என்ன சொல்றாருன்னா...சோனியா பெருந்தன்மையா பிரதமர் நாற்காலியை மன்மோகன் சிங்கிற்கு விட்டுக் கொடுத்திட்டதாகத்தான் நான் கூட முன்னாடி நம்பிகிட்டிருந்தேன்.ஆனால் சோனியாவுக்கே பிரதமர் நாற்காலி மேல ஒரு கண்ணு இருந்துச்சாம்.அதுல மண்ணை அள்ளிப் போட்டது நம்ம முந்தைய ஜனாதிபதி அப்துல் கலாம் என்கிறார்.எப்படின்னா சட்டப்படி சோனியா பிரதமர் ஆகமுடியாதுன்னு தமிழ்நாட்டுல இருந்து டெல்லிக்கு மூடிய கடிதம் போகிறமாதிரி ஒரு கடிதத்தை எழுதி அதனை சோனியாவுக்கு அனுப்ப அந்தக் கடிதத்தை படிக்கும் போது சாட்சியாக இருந்தவர்கள் அப்போது சதாம் உசைன் ஈராக் ஊழலில் சிக்கிக் கொண்ட நட்வர்சிங்கும்,பிரதமர் மன்மோகன் சிங்கும் என்கிறார் சுப்ரமணியன் சாமி.

எனவே ராகுல் காந்தி சோனியாவின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சோனியா மட்டுமல்ல அவரது இரு குழந்தைகளும் பிரதமராக முடியாதுன்னு பத்த வச்சுட்டார்.இதற்கு சுப்ரமணியன் சாமி சொல்லும் இன்னுமொரு காரணமென்னவென்றால் ராகுல் காந்தி இத்தாலியன் பாஸ்போர்ட்டில்தான் வேறு ஒரு பெயரில் ஐரோப்பா முழுவதும் சுற்றி வந்தாராம்.

Does Subramanian swamy got a valid point.?
காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

எவன் மாட்டுவான்னே ராத்திரி தூங்குற போது சுப்ரமணியன் சாமி நினைச்சுகிட்டு தூங்குவாரோன்னு தெரியல. மாட்டுனது திக்விஜய் சிங்க். சிங்கை ஜன்பத்தின் ஊதுகுழல் என்று ஒரு காய்ச்சு

நானே இந்த திக்விஜய் சிங்க் என்கிற காங்கிரஸ் சிங்குச்சாவை எங்கேயாவது ஒரு பிடி பிடிக்கனுமின்னு பார்த்தேன்.அதற்குள் சுப்ரமணியன் சாமியே முந்திக்கொண்டார்.ஹசாரேவும்,ராம் தேவும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தா முந்தைய முதல்வர் கருணாநிதிக்கு திருமாவளவன் வாய்ஸ் கொடுக்குற மாதிரி காங்கிரஸ்க்கு ஊதுகுழல் திக்விஜய் சிங்க்.நல்லதுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பரவாயில்லை,நீ ஏன் ஊழலுக்க்கு எதிராக குரல் கொடுக்கிறாய் என்று திக்விஜய் சிங் அறிக்கை விட்டா இந்தாளை என்ன செய்யலாம்?கரிச்சுக்கொட்டுறதத் தவிர வேறு வழியில்லை.

சரி காங்கிரஸ்தான் இந்த லட்சணத்துல இருக்குதுன்னு பார்த்தா பி.ஜே.பி சொல்லவே வேண்டாம்.தற்போது 2G.4G,ஆதர்ஸ்,காமன்வெல்த் ஊழல்....இதற்கு செயல்படாத பிரதமராக மன்மோகன் சிங்க்,ஊழலுக்கு எதிரான ஹசாரே,ராம் தேவ் குரல்கள்....எவ்வளவு அருமையான சந்தர்ப்பங்கள்.உருப்படியா ஏதாவது மக்களிடம் போய்ச் சேருகிற மாதிரி ஏதாவது செய்ததா என்றால் இல்லை.பல பத்திரிகைகளும்,சில தொலைக்காட்சி ஊடகங்களே இதுவரையிலும் எதிர்க்கட்சி செய்ய வேண்டிய பணியை செய்திருக்கின்றன.

உள்நாட்டுப் பிரச்சினைகளை பின் தள்ளி நாம் சீனாவுடன் தெற்காசிய பொருளாதாரத்தில் போட்டி போட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.ஊழல், மாவோயிஸ்ட்,பாகிஸ்தான் என்ற பெரும்பிரச்சினகளிலும் சாலை, கல்வி,சுகாதாரம் என்ற அடிப்படைக் கட்டமைப்புக்களிலும் பின் தங்கி 2020ல் இந்தியா வல்லரசு என்ற வார்த்தை இப்ப 2050க்கு பின் தள்ளப்பட்டு விட்டது.எனவே காங்கிரஸ் என்ற வாரிசு அரசியல்,பி.ஜே.பி என்ற மத அடிப்படைகளைக் கடந்து இந்தியா புதிய தலைமைகளையும்,கட்சி மாற்றங்களையும் கொண்டு வரவேண்டும்.அதனை கல்வி மேம்பாடு மட்டுமே செயல்படுத்தும்.
எழுதியவர் ராஜ நடராஜன்

Sathya sai Trust 16 அரசு சலுகைகள் ரத்தாகிறது!

ஐதராபாத்: புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கடத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சாய்பாபா அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்ப பெற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து கார், பஸ்சில் கட்டுக்கட்டாக பல கோடி பணம் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாய் அறக்கட்டளை மற்றும் ஆசிரம நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனால் சாய்பாபா அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

காரில் ரூ.35 லட்சம் கடத்தப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இப்பிரச்னை தொடர்பாக தலைமை செயலாளர், நிதி மற்றும் வருமானத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். சாய்பாபா மறைவுக்கு பிறகு, புட்டபர்த்தி ஆசிரமத்தில் நடக்கும் சம்பவங்கள், சர்ச்சைகள் தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கும் பட்சத்தில், சாய் அறக்கட்டளைக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் சலுகைகளை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசின் இந்த முடிவு, சாய் அறக்கட்டளை சார்பில் நடக்கும் மருத்துவமனை, பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு தொண்டுகளை முடக்குவதற்காக அல்ல. அறக்கட்டளையின் செயல்பாடுகளை வெளிப்படையாக்கவே இத்தகைய உத்தரவு போடப்பட்டுள்ளது. சத்யசாய் தலைமை அறக்கட்டளை, சத்யசாய் உயர்கல்வி நிறுவனம், சத்யசாய் பல்கலைக்கழகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சாய் ரேடியோ, சர்வதேச சத்யசாய் அமைப்பு, சத்யசாய் சேவை அமைப்பு, சாய் சாதனா சமிதி ஆகியவற்றுக்கு நிதி முதல் நிர்வாகம் வரை 16 முக்கிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாட், கட்டிட வரி, வணிக வரி ஆகியவற்றில் விலக்கு, மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கருவிகளை இறக்குமதி செய்வதில் வழங்கிய சலுகைகள், குறைந்த மின்கட்டணம் போன்ற சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்து கோயில் மற்றும் அறக்கட்டளைகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சலுகைகள் மட்டும் திரும்ப பெறப்படுகின்றன. வரவுசெலவு கணக்கு குறித்த அறிக்கையை இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாநில அரசிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். சொத்து விவரங்களை வெளியிடுவதும் கட்டாயமாகிறது. அரசு தணிக்கை, அரசு அதிகாரிகளின் கண்காணிப்பு, ஆண்டு லாபநஷ்ட கணக்கை சமர்ப்பிப்பது, அறக்கட்டளையின் நிலம், சொத்துகள் உள்ளிட்டவற்றை அரசுக்கு தெரிவிக்காமலே விற்பது ஆகியவை தொடர்பான சலுகைகளும் திரும்ப பெறப்படுகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சாய்பாபா அறக்கட்டளை கோரிக்கையின் பேரில், 1970களில் வெங்காலராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த சலுகைகளை அறக்கட்டளைக்கு வழங்கியது. தற்போது பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் அறக்கட்டளை உள்ளது. எனவே இந்த சலுகைகள் நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அறக்கட்டளையிடம் இருந்து அறிக்கை கிடைத்தபின் இந்த முடிவு அமலாகும் என தெரிகிறது.

பீகாரைச் சேர்ந்த 14 குழந்தை தொழிலாளர்கள் சேலம் ரயில் நிலையத்தில் மீட்பு


பீகாரைச் சேர்ந்த 14 குழந்தை தொழிலாளர்களை பெங்களூருல் உள்ள பிஸ்கட் பேக்கரியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு கூலியும், உணவும் ஒழுங்காக கொடுக்காத காரணத்தால், பீகாரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு குழந்தை தொழிலாளர்களில் ஒருவர் போன் செய்துள்ளார்.

பீகாரில் உள்ள குழந்தைகளின் உறவினர்களுக்கு தெரிந்தவர்கள் சிலர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்துள்ளனர். அவர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில், திருப்பூரில் இருந்து ஒருவர் பெங்களூர் சென்று, அங்கிருந்த குழந்தைகளை பேக்கரியில் அனைவரும் வேலையை முடித்துவிட்டு தூக்கியபோது, யாருக்கும் தெரியாமல் ஒரே நேரத்தில் 14 குழந்தைகளையும் தப்பிக்க வைத்து வெளியில் அழைத்து வந்துள்ளார்.

24.06.2011 அன்று காலை பெங்களூரில் இருந்து சேலம் ரயிலில் வந்த அவர்கள், சேலம் ரயில் நிலைய நடைமேடையில் தங்கியுள்ளனர். அப்போது கோவையைச் சேர்ந்த சைல்டு லைன் அமைப்பாளர் ஒருவர் இந்த குழந்தைகளை பார்த்துள்ளார்.

சேலம் சைல்டு லைன்க்கு தகவல் கொடுத்த அவர், தமிழ் தெரியாத 14 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சேலம் சைல்டு லைன் தலைவர் அமல்ராஜ், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் உதவியுடன் அந்த குழந்தைகளை விசாரித்துள்ளார். அப்போது மேற்கண்ட விபரம் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் 2306.2011 அன்று காலை உணவு அருந்தியுள்ளனர். பட்டினியால் வாடிய அவர்களுக்கு உணவு வழங்கி, சேலம் அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் மூலம் பீகார் அரசுடன் தொடர்பு கொண்டு, 14 குழந்தை தொழிலாளர்கும் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
 

இலவசமாக கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெயலலிதா ஆலோசனை


முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 24.06.2011 அன்று தலைமைச் செயலகத்தில், தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி இலவச கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கால்நடைத்துறை அமைச்சர், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர், பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளர், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் சிறப்பு பணி அலுவலர் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
ஆடு மாடு மேய்க்க போங்கள்  என்று இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் ஜெயலலிதா  இது என்னவோ குலக்கல்வியை ஒழித்துக்கட்டிய  சுமரியாதை இயக்கத்திற்கு விடப்பட்ட ஒரு சவால் போல தோன்றுகிறது

விஜயகாந்த் மகனுக்கு சீட்டு கிடையாதா? லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள்!


தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் பிரபாகரன், +2 தேர்வில் 1200க்கு 585 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் பட்டய படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.
பிரபாகரனின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கல்லூரி நிர்வாகம் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் கல்லூரி முதல்வர் அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜை சந்தித்து, இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் விளக்கம் அளிக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சினிமா துறையில் நுழைய ஆசைப்பட்ட பிரபாகரன், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த ஆசையில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் படிக்க ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 மாலுமிகளும் விடுவிப்பு .சோமாலியா கடல் கொள்ளையர்களால் கடத்தப்படவர்கள்

10 மாத சோகம்; கடத்தப்பட்ட கப்பல் ஊழியர்கள் டில்லி திரும்பினர்; மீட்பில் பெரும் பங்காற்றிய பாக்.,
சோமாலி‌ய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி கப்பம் தொகை செலுத்தப்பட்டு பின்னர் பாகிஸ்தான் படையினரின் உதவியால் மீட்கப்பட்ட இந்தியர்கள் இன்று டில்லி வந்து சேர்ந்தனர். 10 மாதம் கடலில் அல்லாடிய இவர்கள் மீட்பு நடவடிக்கைக்கு பெரும் உதவிபுரிந்த பாகிஸ்தான் கடற்படைக்கு மத்திய அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார் . குறிப்பிட்ட நேரத்தில் பாகிஸ்தான் வழங்கிய உதவி என பாராட்டியுள்ளார்.

சோமாலிய கடற்கொள்ளையரால் பிடிக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்ட எம்.வி.சூயஸ் சரக்குக் கப்பல், ஓமன் நாட்டுக்கு வரும் வழியில் கடற்புயலில் சிக்கியதால், அதில் இருந்த ஆறு இந்தியர்கள் உள்ளிட்ட 22 கப்பல் பணியாளர்கள், பாகிஸ்தான் கப்பலுக்கு மாற்றப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

எகிப்திய கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி.சூயஸ் சரக்குக் கப்பல், ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த போது, கடந்த 2010 ஆகஸ்ட் 2ம் தேதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதில், ஆறு இந்தியர்கள், 11 எகிப்தியர்கள், நான்கு பாகிஸ்தானியர்கள், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என, மொத்தம் 22 பணியாளர்கள் இருந்தனர். இந்தியர்களில், இருவர் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இமாச்சலப்பிரதேசம் மற்றும் தமிழகம், காஷ்மீர் மற்றும் மும்பையைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர்.

கப்பலை மீட்க, எகிப்திய நிறுவனம், ஒன்பது கோடி ரூபாயை கடற்கொள்ளையர்களிடம் அளித்தது. இதையடுத்து, கப்பலை சமீபத்தில் கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட கப்பல், ஓமன் நாட்டின் சலாலா துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதன் எரிபொருள் முற்றிலும் காலியாகிவிட்டது.

மேலும் கடலில் வீசிய சூறாவளியில் கப்பல் சிக்கிக் கொண்டது. கப்பல் கேப்டன், பாகிஸ்தான் கடற்படைக்கு அளித்த தகவலின்படி, பாகிஸ்தானின் பி.என்.எஸ்.பாபர் கப்பலுக்கு கேப்டன் உள்ளிட்ட 22 பணியாளர்களும் பத்திரமாக மாற்றப்பட்டனர் .

கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு கராச்சிக்கு அழைத்து வந்தது. அதன்பின்னர் விமானம் மூலம் துபாய் வழியாக இந்தியர்கள் அனைவரும் இன்று காலை 9.15 மணியளவில் டில்லி விமானம் வந்தடைந்தனர். இதன்மூலம் கடந்த 10 மாதங்களாக துயரத்தில் இருந்த இந்திய குடும்பத்தினர் மன நிம்மதியடைந்தனர். டில்லி வந்து சேர்ந்த 6 பேரையும் வரவேற்க கப்பல் ஊழியர்களின் குடும்பத்தினர் கூட்டம், கூட்டமாக வந்திருந்தனர். உறவினர்கள் ஆனந்தகண்ணீர் விட்டபடி பூஙகொத்து கொடுத்து வரவேற்றனர்.

எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலையில் ஆசிரியை கைது


எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி இவர் கோட்டூர்புரத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சுற்றி வளைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

சொத்து தகராறு காரணமாக விஜயன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சுதாவின் தங்கை பானு, போலீஸ்காரர் கர்ணா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். விஜயனை கொலை செய்ய கூலிப்படையினருக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறி உள்ளது. சுமார் 4 1/2 லட்சம் ரூபாய் வரை கூலிப்படையினருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயன் கொலையில் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஆசிரியை புவனா. ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் பானு நடத்தி வரும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இவரும், நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்த கர்ணாவும் ஒன்றாக படித்தவர்கள். கர்ணாவை, பானுவிடம் இவர்தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன்பிறகு கர்ணா மூலமாக விஜயனை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது. விஜயன் கொலைக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்துவிட்டு புவனா துபாய்க்கு விமானத்தில் பறந்து விட்டார். இதனால் அவரை உடனடியாக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.
இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் விஜயன் கொலையில் சதிதிட்டம் தீட்டியதாக ஆசிரியை புவனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் புவனா, துபாயில் இருந்து அபுதாபிக்கு சென்றார். அங்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த அவரை பிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாடினர்.

இதுதொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்டன. 2 வாரங்களுக்கு முன்னர் அபுதாபியில் வைத்து புவனா கைது செய்யப்பட்டார். அவரை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் புவனா சென்னைக்கு கொண்டு வரப்படுவார் என்று தெரிகிறது.  

விஜயன் கொலை வழக்கில் கைதானவர்களில் போலீஸ்காரர் கர்ணாவுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை. அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார்.

பிருந்தாவுக்கு ராஜ்ய சபா சீட்டை ஜெயலலிதா வழங்குவார் என்றே பலரும் நம்புகிறார்கள்

டெல்லி: ராஜ்யசபா பதவிக்காலத்தை முடிக்கும் பிருந்தா காரத் மற்றும் சீதாராம் எச்சூரி ஆகியோரை மீண்டும் ராஜ்யசபாவுக்கு அனுப்புதவற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக தடுமாறி வருகிறதாம். இருவரையும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததே இதற்குக் காரணம்.

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தது சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் இரு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது. அதில் மோசமான தோல்வி மேற்கு வங்கத்தில்தான் கிடைத்தது.

இதன் விளைவு விரைவில் பதவிக்காலத்தை முடிக்கும் மூ்ன்று ராஜ்யசபா உறுப்பினர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் சிக்கியுள்ளது சிபிஎம்.

இந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களான பிருந்தா காரத், சீதாராம் எச்சூரி மற்றும் முகம்மது அமீன் ஆகியோரின் ராஜ்யசபா உறுப்பினர் பவதிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவடைகிறது. அதேபோல இடதுசாரி கூட்டணியில் உள்ள ஆர்.எஸ்.பியின் அபானி ராயின் பதவிக்காலமும் முடிவடையவுள்ளது. ஆனால் இந்த நான்கு இடங்களுக்கும் மீண்டும் ஆட்களை அனுப்புவதில் இடதுசாரி கூட்டணிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைந்தது பிருந்தா காரத் மற்றும் எச்சூரியை மட்டுமாவது எப்பாடுபட்டாவது ராஜ்யசபாவுக்கு அனுப்ப சிபிஎம் தீவிரமாக உள்ளது. காரணம், இந்த இருவரும் டெல்லி வட்டாரத்தில் கட்சியின் முக்கிய முகங்களாக இருப்பதால் இவர்களை இழக்க அக்கட்சி விரும்பவில்லை.

இருப்பினும் தற்போது மேற்கு வங்கத்தில், இடதுசாரி கூட்டணிக்கு மொத்தம் 62 இடங்களே உள்ளன. இதில் சிபிஎம்முக்கு 40 எம்.எல்.ஏக்களே உள்ளனர். ஒரு எம்.பியைத் தேர்ந்தெடுக்க குறைந்தது 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எனவே மேற்கு வங்கத்திலிருந்து ஒரே ஒருவரை மட்டுமே ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும் என்ற நிலை.

கேரளாவிலிருந்து ஒருவரை அனுப்பலாம் என்றாலும், கேரள இடதுசாரி கட்சிகள் இதுவரை வெளியாட்களுக்கு தேர்தலில் நிற்க அனுமதி கொடுத்ததில்லை, கொடுக்கவும் மாட்டார்கள். எனவே அங்கு பிருந்தாவையோ அல்லது எச்சூரியையோ நிறுத்த முடியாது என்ற இக்கட்டான நிலை.

இதனால் தற்போது தமிழகத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது சிபிஎம். தமிழகத்தில் அதிமுக உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் ராஜினாமாவால் ஒரு இடம் காலியாகியுள்ளது. அதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரியுள்ளதாக தெரிகிறது.

இந்த இடம் கிடைத்தால் தனது மனைவியான பிருந்தாவை நிறுத்தலாம் என்பது பிரகாஷ் காரத்தின் திட்டம். இருப்பினும் இதுகுறித்து ஜெயலலிதா இதுவரை பதில் ஏதும் தரவில்லை என்று தெரிகிறது.

அதேசமயம், சிபிஐயும், இந்த இடத்திற்குக் குறி வைத்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்றிருந்த ஜெயலலிதா, கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா நேரில் சந்தித்து இதுகுறித்ததுப் பேசியதாக தெரிகிறது.

இந்த ஒரு இடத்தை ஜெயலலிதா தானே வைத்துக் கொள்வாரா அல்லது இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜ்யசபாவில் தற்போது அதிமுகவுக்கு ஐந்து எம்.பிக்களே உள்ளனர். அதேசமயம், திமுகவுக்கு 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனது கட்சியின் பலத்தைக் கூட்டுவதில் ஜெயலலிதா முன்னுரிமை காட்டுவார் என்றும் கூறப்படுகிறது.

English summary
With Election Commission announcing the dates for filing nominations to the Rajya Sabha, the CPI(M), which faced a drubbing in the West Bengal Assembly elections, is forced to look down south to Tamil Nadu, to get its Politburo member Brinda Karat re-elected to the Upper House. Party general secretary Prakash Karat has approached CM Jayalalitha in this regard, sources say. TN has one RS seat vacant and going to polls soon. Presently, the AIADMK has five members and the DMK seven in Rajya Sabha.
 

அழகிரியின் மகனுக்கு கொலை மிரட்டல்: அவசரமாக மதுரை திரும்பிய

மதுரை: தனது மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்கள் வந்ததையடுத்து மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அவசரமாக டெல்லியிலிருந்து மதுரை திரும்பினார்.

சென்னைக்கு வந்தால் தலை இருக்காது என்று துரை தயாநிதிக்கு மிரட்டல் போன் கால்கள் வந்ததாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்டிருந்த அழகிரி, இந்த மிரட்டல்களையடுத்து நேற்று மாலை அவசரமாக மதுரை திரும்பினார்.

இந்த மிரட்டல்கள் பழைய நண்பர்கள் வட்டாரத்தில் இருந்துதான் வந்துள்ளதாக அழகிரியிடம் தயாநிதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து துரை தயாநிதியை டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் அழகிரி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

English summary
Central minister Azhagiri rushed to Madurai from Delhi, after his son Durai Dayanidhi got life threatening calls from some miscreants
  

2 லிட்டர் பால் கொடுக்கும் அதிசய கன்றுக்குட்டி



பெல்காம் அருகே 71/2 மாதமே ஆன கன்றுக்குட்டி ஒன்று பால் கொடுக்கிறது. இந்த அதிசய கன்றுக்குட்டியை `தெய்வப் பிறவி'யாக கருதிய சுமங்கலி பெண்கள், தினமும் வந்து பூஜை செய்து கும்பிட்டுவிட்டு செல்கிறார்கள்.

பொதுவாக பசுமாடுகள் கன்று ஈன்ற பிறகு அதன் மடியில் பால் சுறப்பது வழக்கம். அந்த பால் அதன் கன்றுக்கு உணவாக இருப்பதுடன், பொதுமக்களுக்கும் பயன்படுகிறது.
ஆனால் பெல்காம் அருகே ஒரு கன்றுக்குட்டியின் மடியில் 71/2 மாதத்திலேயே பால் சுறக்க தொடங்கி விட்டது. அந்த கன்று தினமும் 2 லிட்டர் பால் கொடுத்து வருகிறது.

பெல்காம் மாவட்டம் அதானி தாலுகாவில் உள்ளது தவம்சி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமனகவுடா. இவர் வளர்த்து வரும் பசுமாடு, கன்று ஒன்றை ஈன்றது. அந்த கன்றுக்குட்டிக்கு தற்போது 71/2 மாதங்களே ஆகிறது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அந்த கன்றுக்குட்டி பால் கொடுத்து வருகிறது. தினமும் 2 லிட்டர் வீதம் அந்த கன்றின் மடியில் இருந்து பால் கறக்கிறார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெல்காம் மாவட்ட அரசு கால்நடை மருத்துவர்கள் வந்து ஆய்வு செய்து வருகிறார்கள். உண்மையிலேயே இது ஒரு அதிசயம் தான் என்று டாக்டர்களும், பொதுமக்களும் வியந்துள்ளனர்.

இதற்கிடையே கிராம பெண்கள், ராமனகவுடாவின் வீட்டுக்கு தினமும் படையெடுத்து வருகிறார்கள். அதிசய கன்றுக்குட்டி ஒரு தெய்வீகப்பிறவி என்று கூறும் அவர்கள் கன்றுக்குட்டியை தொட்டு வணங்குகிறார்கள். குறிப்பாக சுமங்கலி பெண்கள் தினமும் வந்து கன்றுக்குட்டியை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து மாலை போட்டு பூஜை நடத்துகிறார்கள்.
அதிசய கன்றுக்குட்டி பற்றி அதன் உரிமையாளரான ராமனகவுடா,
’நாங்கள் ஒரு பசுமாட்டை மராட்டிய மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தோம். அந்த பசு ஈன்ற கன்றுதான் பால் கொடுத்து வருகிறது. முதலில் எங்களுக்கு இந்த அதிசயம் தெரியவில்லை. 15 நாட்களுக்கு முன்பு இந்த கன்றுக் குட்டி கல் அருகே படுத்திருந்தது. கன்றின் மடி ஒரு கல்லின் மீது கிடந்தது. நான் தற்செயலாக அன்று சென்று பார்த்தபோது கல் மீது கன்றின் மடி கிடந்த இடத்தில் ஒரு துளி பால் காணப்பட்டது.

அதை தொட்டு சுவைத்து பார்த்தபோது சாதாரண பசும்பாலுக்கு உரிய சுவை தென்பட்டது. உடனே கன்றுக்குட்டியை எழுப்பி பால் கறந்து பார்த்தேன். என்ன ஆச்சரியம், என்னால் நம்பவே முடியவில்லை. பால் வரத்தொடங்கியது. கடந்த 15 நாட்களாக அந்த கன்றின் மடியில் பால் சுறந்து வருகிறது. பசுமாட்டின் பால் எந்த அளவுக்கு சுவையாக இருக்கிறதோ அதே ருசி கன்றுக்குட்டியிடம் இருந்து கிடைக்கும் பாலுக்கும் உள்ளது.

சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த சிறியவர்களும், பெண்களும், பெரியவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கிறார்கள். இது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

ஆ.ராசா, கனிமொழிக்கு பதஞ்சலி யோகா பயிற்சி


ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தனியார் தொலைத் தொடர்பு அதிகாரிகளும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.  

ஸ்பெக்ட்ரம்  தொடர்பாக கைதாகி உள்ள 14 பேரும் மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஏ.சி.அறையிலேயே இருந்து பழக்கப்பட்ட அவர்களுக்கு டெல்லி வெயில் சமாளிக்க முடியாதபடி உள்ளது. வெப்பம் காரணமாக சூடு பிடித்து கொள்வதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த அவதியுடன் சிறை உள்ளே இருக்கும் குறைந்த வசதியுடனான இந்தியன் டைப் கழிவறை கஷ்டத்தையும் அவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது.

இந்தியன் டைப் கழிவறையால் தனக்கு தாங்க முடியாத அளவுக்கு முதுகு வலி வந்துவிட்டதாக யுனிடெக் வயர்லஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஜெயிலில் அதிகாரிகளிடம் கூறி உள்ளார். எனவே மென்மையான படுக்கை விரிப்பு தர அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயில் தண்டனை காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் தொலைதொடர்பு அதிகாரிகள் முன் எச்சரிக்கையாக உள்ளனர். இதற்கு அவர்கள் ஜெயிலுக்குள்ளேயே தினமும் பதஞ்சலி யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர ராசா, கனிமொழி இருவரும் தினமும் நடைப்பயிற்சியும் செய்கிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் பயன் உள்ள வகைகளில் பொழுதை கழிக்கிறார்கள்.
 
ஆ.ராசா சமீபகாலமாக அவர் இந்தி படிக்கத் தொடங்கி உள்ளார். போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் உயர்அதிகாரி உதயவீர்ரதி தினமும் ஆ.ராசாவுக்கு இந்தி சொல்லி கொடுத்து வருகிறார்.

23 மீனவர்களை கச்சதீவில் அல்ல தலைமன்னாரில்தான் பிடித்தோம் இலங்கை அரசு

 இலங்கை சிறையில் உள்ள 23 தமிழக மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 20ம் தேதி 700 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 2 ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 5 படகுகளுடன் 23 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றனர்.

அவர்கள் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் ஜூலை 1ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். இதற்கிடையே, இலங்கை சிறையில் உள்ள 23 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

இந் நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 இந்திய மீன்பிடி இழுவை படகுகள் மற்றும் அவற்றில் இருந்த 23 மீனவர்களை கடந்த 20ம் தேதி அன்று இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஊடகங்களில் செய்தி வெளியிட்டது போல, மேற்கண்ட சம்பவம் கச்சத் தீவுக்கு அருகில் நடக்கவில்லை. இந்த சம்பவம் இலங்கையின் தலைமன்னார் கடற்கரையில் இருந்து வெறும் 6 கடல் மைல் தொலைவிலேயே நிகழ்ந்துள்ளது.

எனவே, கடற்படை இலங்கையின் சட்டத்திற்கு உட்பட்டு அந்த மீனவர்களை கைது செய்தது. இந்த செயல், ஒரு நாட்டின் சட்டம் மீறப்படும்போது, அந்த நாடு எடுக்கும் வழக்கமான சட்ட நடவடிக்கை ஆகும். எனவே, இதுபோன்று சட்டப்பூர்வ கைதுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதை சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடி, அட்டூழியம் என்றோ அல்லது கடத்துதல் என்றோ கூறுவது தவறு ஆகும்.

இரு நாட்டு மீனவர்களும் கடல் எல்லைக்கோட்டை தாண்டும் விஷயத்தில் சுலபமான விதிமுறைகளை கையாண்டு, அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகளில் நெருக்கமாகவும், சுமூகமாகவும், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகமும் தமிழக மீன்வளத்துறையும் செயல்பட்டு வருகின்றன.

கடல் எல்லைக்கோட்டை மீறியதற்காக கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்கள், அவர்களின் படகுகளுடன் தற்போது நீதிமன்ற காவலில் பாதுகாப்பாக உள்ளனர். உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, அவர்கள் மிக விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். மீனவர்கள் கெளரவமாகவும், மனிதாபிமான முறையிலும் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் படகுகளுடன் உரிய நடைமுறைகள் முடிந்த பிறகு இலங்கை அதிகாரிகளால் விரைவில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்:

23 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்ததை தொடர்ந்து, ரமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

English summary
The government of Sri Lanka said Thursday that it will soon release the 23 Tamil Nadufishermen arrested for fishing in Sri Lankan waters. "Following the due process of the law, they are expected to be released at an early date," Sri Lankan high commission in India said in a statement.
இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் அளவுக்கு மீறி உரிமம் கொடுத்த மதிய மாநில அரசுகல்மீது நஷ்ட ஈடு கோரவேண்டும். அடாவடித்தனமாக இலங்கை மீது பழி போடுவதை இனியாவது நிறுத்தி இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்கவேண்டும்

கலைஞர் டி.விக்கு பணம் விஜய் மல்லையா,இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்விடம் விசாரிக்க சிபிஐ முடிவு

டெல்லி: கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு பணம் கொடுத்தது ஏன் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் jet airways- Kingfisher  விஜய் மல்லையாவிடம் விளக்கம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரத்தை  வாங்கிய டிபி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி தந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கலைஞர் டி.வியின் பங்குதாரரும், திமுக எம்பியுமான கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத் குமார் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

டிபி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு பணம் தந்தது குறித்து சிபிஐ கண்டுபிடித்தவுடன் அந்தப் பணத்தை கடன் போல காட்டி வட்டியுடன் திருப்பித் தந்துவிட்டது கலைஞர் டிவி. ஆனால், அவ்வாறு அந்தப் பணத்தைத் திருப்பித் தர இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் விஜய் மல்லையாவும் உதவியதாக இப்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், யு.பி. குரூப் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணத்தை கலைஞர் டிவி செலவு செய்துவிட்ட நிலையில், அந்தப் பணத்தை திருப்பித் தர இந்தியா சிமெண்ட்ஸ், யுபி குரூப் நிறுவனம் ஆகியவை கலைஞர் டி.விக்கு பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவரான சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராகவும் உள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், சிபிஐ எங்களிடம் விளக்கம் கேட்கவுள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றார்.

யுபி நிறுவனத்தின் துணைத் தலைவரான பிரகாஷ் மிர்பூரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் டிவிக்கு விளம்பரம் தந்த வகையில்தான் யுபி குரூப் நிறுவனம் பணம் கொடுத்துள்ளது. இதுதவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கும் எங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இல்லை. இது தொடர்பாக சிபிஐ எங்களிடம் தொடர்பு கொண்டால், விளக்கம் தருவோம் என்று கூறியுள்ளார்.
 

The Central Bureau of Investigation (CBI) will seek clarification from UB Group and India Cements over money given by them to Kalaignar TV to apparently help the channel return over 200 crore allegedly received by it from DB Group of companies in return for allocation of 2G spectrum.

மக்களை மொட்டையடிப்பது’வறுமை காரணமாக தம் முடியை விற்று வருகின்றனராம்

நக்கீரனில் ஒரு செய்தி படித்தேன். ஆந்திர எல்லையிலிருக்கும் திருவள்ளூர் மாவட்டக் கிராமங்களில் வாழும் ஏழைப்பெண்கள் அதிலும் தலித் பெண்கள், சிலர் வறுமை காரணமாக தம் முடியை விற்று வருகின்றனராம். ஒரு அடி கூந்தலின் விலை 100 ரூபாய். பெண்களிடம் முடி கொள்முதல் செய்து சென்னைக்கு அனுப்பும் தரகர்கள் கிராமங்களில் அலைகிறார்களாம். சென்னையில் இம்முடிகளுக்கு சாயம் தீட்டி வெளிநாடுகளுக்கு அழகான சவரிகளாக ஏற்றுமதி செய்கிறார்களாம். அடர்த்தியான ஒரு கிலோ கூந்தலின் விலை 5000 ரூபாயாம்.
சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை கூந்தலைப் பற்றித்தான் எத்தனைக் கவிதைகள்! பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்ற பிரச்சினையை நக்கீரனும், இறையனாரும் இன்றைக்கும் ஒலிபெருக்கி வைத்து விவாதித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். தம் கூந்தல் மீது பிற ஆடவரின் கை படுவதைக்கூட கற்புள்ள பெண்கள் ஒப்புவதில்லை என்கிறது பழந்தமிழ் இலக்கியம். அந்த அளவுக்கு கூந்தலின் மகிமை இங்கே வேர் பிடித்துள்ளது.
துரியோதனன் வீழ்த்தப்பட்ட பின்புதான் அவிழ்த்த கூந்தலை அள்ளி முடிப்பேன் என்ற பாஞ்சாலி சபதம் மகாபாரதப் போரின் துவக்கம். மலரின் வாசமும், கள்ளின் போதையும் கொண்ட சீதையின் கூந்தலில் இராவணன் மயங்கினான், மடிந்தான் என்று தன் ஒப்பாரியில் மண்டோதரி புலம்புவதாய் கம்பராமாயணம் பாடுகிறது. இப்படி இதிகாச நாயகிகளின் கதைகளும் கூந்தலைத் தழுவியே செல்கிறது.
சிங்கத்துக்கு பிடரி, மயிலுக்குத் தோகை, சேவலுக்கு கொண்டை, யானைக்கு தந்தம் என எல்லா ஜீவராசிகளிடையேயும் ஆண் உயிரினங்கள் மட்டும் “அழகாய்’ வலம் வர, மனித இனத்தில் மட்டும் பெண் “அழகான’ கூந்தலோடு வலம் வருவதாய் சிலாகிக்கிறார் ஒரு சமகாலக் கவிஞர்.
இப்படிக் கற்புக்கும், அழகுக்கும், கதைப்பாடலுக்கும் அடையாளமாய், அடிநாதமாய் அறியப்பட்ட கூந்தல்தான், ஒரு பெண் விதவையானதும் அவளிடமிருந்து இரக்கமின்றிப் பறிக்கப்பட்டது. மேல் சாதி விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் நேற்றுவரை நமது சமூகத்தில் இருக்கத்தானே செய்தது? இந்தக் கூந்தல் பறிப்பின் நோக்கம் அவளை யாரும் விரும்பக்கூடாது, அழகு அவளை அண்டக்கூடாது என்பதுதான். அழகு அசிங்கம் என்ற இரு துருவங்களை நோக்கியும் பெண்ணைத் தள்ளுவதற்கு ஆணின் கையில் சிக்கிய ஆயுதம் கூந்தல்.
இப்படி புராண காலத்தில் பிடித்த முடியை ஆணாதிக்கம் இன்னமும் விடவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்கள் அடைமழை போலப் பெய்யும் காலமிது. அழகு நிலையங்கள் பெண்களின் அழகு குறித்த கவலையை அன்றாடப் பிரச்சினையாக்கிவிட்டன. அழகின்மையின் ஆபத்துக்களை அச்சுறுத்தும் விதத்தில் உணரவைத்து அழகை விற்று வருகிறார்கள்.
அதில் கூந்தலுக்கான விதவிதமான எண்ணெய்களும், பசைகளும், தைலங்களும் நூற்றுக்கணக்கில் சந்தையில் இருக்கின்றன. காத்திருக்க முடியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடனே முடியை நட்டுத்தரும் ஆடம்பர அறுவைச் சிகிச்சைகளையும் “அறிவியல்’ வளர்த்திருக்கிறது. ஆக, பெண்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு தமது நேரத்தையும், பணத்தையும், கவலையையும் கூந்தலுக்காகச் செலவழிக்கின்றனர். அன்றும் இன்றும் கூந்தல் கவலையிலிருந்த தப்பிப் பிழைத்த பெண்கள் அநேகமாக இல்லை.
இதனால்தான் திருவள்ளூர் மாவட்டப் பெண்கள் கூந்தலை விற்கும் செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆயினும் உலகமயம் என்ற நாணயத்தின் மறுபக்கம் இப்படித்தான் இருக்க முடியும் போலும்! வழக்கமான உணவு வகைகளை ருசித்துச் சலித்து உலக ருசிகளுக்காக அலைபாயும் நாக்குகள் பெருகிக் கொண்டிருக்கும் காலத்தில்தான் “இரண்டு ரூபாய் அரிசி’ வாக்குகளை அள்ளித் தருகிறது. குளோனிங் முறையில் மனிதனையும் அவனுடைய உறுப்புகளையும் பிரதி எடுத்துவிட முடியும் என்று அறிவியல் முழங்கும் காலத்தில்தான் கருப்புச் சந்தையில் சிறுநீரகம் விற்பனையாகிறது.
தேசிய வளர்ச்சி விகிதம் பத்து சதவீதம் என்று ப.சிதம்பரம் கொட்டி முழங்கிக் கொண்டிருக்கும் அதேகாலத்தில்தான் மளிகைக்கடன் அடைப்பதற்காகப் பெண்களின் கூந்தல் கொய்யப்படுகிறது. நாட்டை முன்னேற்றுவதற்காக “மக்களை மொட்டையடிப்பது’ என்ற உவமானம் அதன் நேர்ப்பொருளிலேயே இப்போது உண்மையாகி விட்டது.
மூன்றடிக் கூந்தலை முன்னூறு ரூபாய்க்கு விற்ற பெண்களின் வாழ்க்கை கூறும் செய்தி என்ன? வறுமையின் முன் கூந்தல் தன் மரபுவழி மகிமையை உதிர்த்து விட்டது என்பதா? அல்லது தேசிய வளர்ச்சி வீதம் என்பது ஏழைப் பெண்களின் மயிருக்குச் சமம் என்று புரிந்து கொள்வதா?