வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

கலைஞர் ... கடிதம் எழுதும் அளவு தேறிவிட்டார் ... அதிகாரபூர்வ செய்தி!

 கலைஞர் ‘’'முரசொலி பவள விழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை. சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன. தமக்கு அன்பெனும் அமுதம் ஊட்டி ஆதரவு கரம் நீட்டிய தமிழ் பெருமக்களுக்கு நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே. அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி"
முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில், இந்து என்.ராம், நக்கீரன் ஆசிரியர் நக்கீரகோபால், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, விகடன் பா.சீனிவாசன், தினமலர் ரமேஷ், தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திமுக செயல்தலைவரும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார். இந்நிலையில் விழா குறித்து திமுக தலைவர் கலைஞர் எழுதிய கடிதத்தில், ‘’முரசொலி பவள விழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை. சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன. தமக்கு அன்பெனும் அமுதம் ஊட்டி ஆதரவு கரம் நீட்டிய தமிழ் பெருமக்களுக்கு நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே. அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி’’என்று கூறப்பட்டுள்ளது. nakkeeran


கருத்துகள் இல்லை: