Dhinakaran Chelliah : ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவாளர் சீமான் அவர்கள் அருந்ததியர் சமூகம் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறிய வந்தேறிகள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக இரு நூல்கள் என் கவனத்தை ஈர்த்தன,
ஒன்று முனைவர் ச.சீனிவாசன் அவர்கள் எழுதிய தமிழக அருந்ததியர்: வரலாறும் வாழ்வும்(விலை ரூ.200, தொடர்புக்கு 9911223484),
இன்னொன்று எழில்.இளங்கோவன் அவர்கள் எழுதிய அருந்ததியர் வரலாறு வினாவும்-விளக்கமும், முதற் பதிப்பு 1998.
இந்த இரு நூல்களும் அருந்ததிய சமூகத்தினர் தமிழகத்தில் வீரமும் செழிப்பும் மிக்கவர்களாக வாழ்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் தமிழ் நிலத்தின் ஆதிக் குடிகள் எனும் கூற்றையும் இனவரைவியல் குறிப்புகள்,கல்வெட்டுகள்,சங்க நூல்கள் உள்ளிட்ட பல சான்றுகளை முன்னிறுத்தி எழுதப்பட்டவை.
இந்த இரு நூல்களையும் இணையத்தில் கண்ணில் தென்பட்ட தரவுகளைத் தாண்டி எனது பாணியில் தேட ஆரம்பித்த போது பழம் பெரும் நூல்களில் “சக்கிலியர்களைப்” பற்றிய குறிப்புகள் கிடைத்தன.அசாத்தியமான அரசியல் சூழல் கருதி இங்கே அவற்றை பகிர்ந்து கொள்வது எனது கடமை என்பதை உணர்கிறேன்.
அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் எழுதுகிறேன்,
சனி, 25 பிப்ரவரி, 2023
அருந்ததியர் தமிழகத்தின் பூர்வீக ஆதிக்குடிகள் என்பதை அரசியல்வாதிகளும் மக்களும் உணர வேண்டும்
தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஏற்காத காரணம் என்ன?-200 வருட வரலாற்றை கூறி காரணத்தை விளக்கிய வடஇந்திய YouTuber!
கலைஞர் செய்திகள் -Praveen : மொஹக் மங்கள் என்பவர் இந்தியாவில் பிரபலமான யூடியூப் பிரபலங்களில் ஒருவர்.
தனது யூடியூப் பக்கத்தில் அரசியல், நாட்டு நடப்பு, மற்றும் சமூக ரீதியிலான கருத்துக்களை பகிர்ந்து வரும் இவரின் பக்கத்தை சுமார் 20 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.
இவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பாஜக தோல்வியைத் தழுவ என்ன காரணம் என்பது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
சுமார் 11 லட்சம் பேர் பார்த்துள்ள இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
குஜராத்தில் பெரும் வரவேற்பு மோடி செல்லும் இடங்களில் எல்லாம் கிடைக்கிறது.
புத்தர் சிலை முன்பு திருமாவளவன் தியானம்! தேசிய அரசியல் கட்சியாக விசிக!
tamil.oneindia.com - Arsath Kan ; புத்தர் சிலை முன்பு திருமாவளவன் திடீர் தியானம்! தேசிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் விசிக!
புத்தர் சிலை முன்பாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்ட திருமாவளவன்
தெலுங்கானா: கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என மாநிலம் வாரியாக தொடர்ந்து அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் விசிக தலைவர் திருமாவளவன், கவுதம புத்தர் சிலை முன்பாக திடீரென தியானத்தில் ஈடுபட்டு கவனம் ஈர்த்திருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் 274 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புத்த வனத்துக்கு தெலுங்கானா மாநில விசிக நிர்வாகிகளுடன் சென்ற அவர் இந்த தியானத்தை மேற்கொண்டிருக்கிறார்.
தமிழகம் கடந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை தேசியக் கட்சியாக அடுத்தக் கட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் பணிகளில் திருமா ஆர்வம் காட்டி வருகிறார்,
சர்க்கரை நோய் - diabetic - பாதிப்பில் தமிழகம் 2-ம் இடம்
மாலைமலர் :சென்னை வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலேயே சர்க்கரை நோய் விகிதம் அதிகமாக காணப்படுகிறது.
நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 27.4 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 22.3 சதவீதம் பேரும், ஆந்திராவில் 21.1 சதவீதம் பேரும் அந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை கோவாவில் 22.7 சதவீதம் பேருக்கும், புதுச்சேரியில் 22 சதவீதம் பேருக்கும், லட்சத்தீவுகளில் 21.9 சதவீதம் பேருக்கும் சர்க்கரை நோய் உள்ளது.
ஈரோடு கிழக்கு கருத்துக்கணிப்பு ..இ வி கே எஸ் இளங்கோவன் பிரமாண்ட வெற்றி . 2 வது இடத்தில அதிமுக 3 வது இடத்தில நா த க
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி, டிடிவி தினகரனும் போட்டியில் இருந்திருந்தால் நாம் தமிழர் கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் என ராஜநாயகம் குழுவினர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் நிலையில், களத்தில் மொத்தம் 77 வேட்பாளர்கள் உள்ளனர். காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வெல்வார் என்பது குறித்து பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலில் மக்கள் ஆய்வு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் வெற்றி உறுதி..
ராகுல் பேச்சுக்கு திரிணாமுல் எம்.பி. மகுவா மொய்த்ரா பதிலடி!
minnambalam.com - Thamil kanal : மேகாலயா பிரச்சாரத்தில் ராகுல்காந்தியின் பேச்சுக்குப் பதிலடியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகுவா மொய்த்ரா பேசியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதியன்று நடைபெறுகிறது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
பிரச்சாரம் முடிவடைவதற்கு ஒரு நாளே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் உச்சகட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மற்ற கட்சிகளின் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் நடக்கும் நேரத்தில் அதிமுக வழக்கில் தீர்ப்பு வழங்கலாமா?
Kandasamy Mariyappan : திமுக செய்யும் தவறுகளை ஏன் நீ பெரிதாக கண்டித்து எழுதுவதில்லை என்று எனது பல நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு.!
ஒரே காரணம் மட்டுமே.....
திமுக வெற்றிபெற திமுக மட்டுமே உழைக்க வேண்டும், அதுவும் திமுக தலைவர் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் மட்டுமே உழைக்க வேண்டும்.!
ஆனால் அதிமுக வெற்றிபெற, அதிமுக அதிகமாக உழைக்க வேண்டிய முக்கியமே இல்லை.!
அதிமுக வெற்றிக்கு Election Commission, IT Dept, ED Dept, CBI Dept, RAW, High Court, Supreme Court, Parliament, Union Government, Governor, ஊடகங்கள் ஒருபுறம் உழைக்க.,
பார்ப்பண, பறையர் போன்ற சாதி இயக்கங்கள், கிறித்துவ, இசுலாமிய மத இயக்கம் போன்ற சமூக இயக்கங்கள் மற்றொருபுறம் உழைப்பார்கள்.!
2016 தேர்தலில் செல்வி. ஜெயலலிதா பிச்சாரம் செய்தது 5 இடங்களில் மட்டுமே.!
ஆனால் 2016 அதிமுக வெற்றிக்காக உழைத்தவர்கள் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விசிக, தேமுதிக, நாம் தமிழர், பாமக, பாஜக, வாசன், இசுலாமிய கட்சிகள் போன்ற அரசியல் கட்சிகள்...
அனைத்து ஊடகங்கள், சாதிய, மத இயக்கங்கள் உழைத்ததே அதிகம்.!
வெள்ளி, 24 பிப்ரவரி, 2023
ஆளுநர் ஆர்.என். ரவியுடன் மூத்த வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு!
tamil.oneindia.com - Mathivanan Maran ;சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று திடீரென சந்தித்தார்.
புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அறிவித்தது சரி என வாதிட்டு வரும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
உயிருடன் பிரபாகரன்-மறுப்பவர்கள் இந்த 8 கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
குக்கர், கொலுசு லிஸ்டில் காமாட்சி விளக்கு; பிரச்சாரத்திற்கு நாளை மட்டுமே கடைசி நாள்
நக்கீரன் : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தொடர்ந்து ஈரோட்டில் சில அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது எனப் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.
அண்மையில் காங்கிரஸ் சார்பில் குக்கர் பரிசுப் பொருளாக வழங்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது.
அதானி பங்குகள் சரிவால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்
மாலை மலர் : அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது அதானி குழுமத்தின் பங்குகள்.
இதனால், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது.
இதுவே, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது.
வியாழன், 23 பிப்ரவரி, 2023
ஈரோடு கிழக்கு; திமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல்; இருவர் கைது - என்ன நடந்தது?
நாராயணசுவாமி.மு, க .தனசேகரன்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. அடுத்தடுத்து தலைவர்களின் முற்றுகையால் ஈராேடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் திக்குமுக்காடிப் போயிருக்கின்றனர்.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு வீரப்பன்சத்திரம், தெப்பக்குளம் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சிலர் வாகனத்தில் அந்த வழியாக பிரசாரம் செய்தபடியே வந்திருக்கின்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் அறிவிக்கப்பட்டது செல்லும்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மாலை மலர் : ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.
ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இரட்டை பதவியால் கொள்கை முடிவுகளில் தாமதம் ஏற்படுவதாக கூறி மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததால் அ.தி.மு.க. பிளவுபட்டது. 98 சதவீதம் அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை ஆதரிக்கின்றனர்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் சமத்துவ எண்ணங்கள் வேரூன்றவே இல்லை?
மணி மணிவண்ணன் : சென்னையின் பணக்கார வட்டாரம் என்ற விழியப் பதிவு ஒன்றைத் தற்செயலாகப் பார்த்தேன்.
நாங்கள் முன்பு குடியிருந்த இராசா அண்ணாமலைபுரத்துக்கு அருக்கில் இருக்கும் படகுக்குழாம் (போட் கிளப்) வட்டாரம்தான் சென்னையிலேயே பணக்கார வட்டாரமாம்.
ஒரு சதுர அடிக்கு 45,000 ரூபாய் விலை போகிறதாம்.
இந்த வட்டாரம் எனக்குப் பழக்கமானதுதான்.
வீட்டில் இருந்து அலுவலகத்துக்குச் செல்லும் வழி என்பதாலும், போட் கிளப்பில் உறுப்பினராக இருக்கும் என் நண்பரைச் சந்திக்கச் சென்றதாலும்,
அருகில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் குழும விடுதிக்குச் சென்றிருப்பதாலும்
பல முறை இதன் வழியே சென்றிருக்கிறேன்.
தமிழன் பிற நாட்டை ஆண்டால் பெருமை? அடுத்த மாநிலத்தவர்கள் பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்தால் வன்முறை!
சுமதி விஜயகுமார : ஒரு சில வருடங்களுக்கு முன்னர், வெளிநாட்டில் இருந்து குடும்பத்துடன் வந்த ஒரு குடும்பம் தங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்றார்கள்.
சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் வழியில், சிறுவர்கள் இருக்க,
அவர்களிடம் இருந்த வெளிநாட்டு சாக்லேட்களை அந்த சிறுவர்களுக்கு ஆசையாக கொடுத்திருக்கிறார் அந்த குடும்பத்தின் வயதான தாய்.
அந்த பாசத்திற்கு அந்த ஊர் மக்கள் அவர்களுக்கு ஒரு பரிசை தந்தார்கள். அது மரணம்.
குழந்தைகளை கடத்தும் கும்பல் உலா வருகிறது என்ற வதந்தி வேகமாக பரவ, அதன் பாதிப்பாய் பல உயிர்கள் பறிக்கப்பட்டது.
அதில் ஒரு உயிர் தான் அந்த அம்மா. அது சில மாதங்களுக்கு தான். பிறகு வதந்தி நின்று போனது.
யாழ் மருத்துவ மனை குடிநீர் கிருமிதொற்று இனம் காணப்பட்டு சுத்திகரிக்கப்பட்டுள்ளது .
tamilmirror.lk : யாழ் மருத்துவ மனை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு, தற்பொழுது சுத்திகரிக்கப்பட்டுள்ளது .
எனவே, பொதுமக்கள் பயப்படத் தேவையில்லையென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்தார்.
யாழ். மருத்துவமனை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று தொடர்பில் கருத்துரைக்கும் போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண மருத்துவமனையில் இருந்து மலசலக்கழிவு மற்றும் ஏனைய கழிவு நீரானது சுத்திகரிக்கப்பட்டு, பண்ணைக்கடலினுள் செலுத்தப்படுகின்றது.
இது கடந்த 20 வருடமாக நடைபெற்று வருகின்ற ஒரு செயல்முறையாகும்.
சென்னையில் அதிர்வு. அண்ணாசாலையில் கட்டடங்கள் குலுங்கின.. .மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
tamil.oneindia.com - Jeyalakshmi C :.சென்னைவாசிகள் அதிர்ச்சி..மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
சென்னை அண்ணாசாலையில் இன்று காலையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை: அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று மாடி கட்டிடத்தில் அதிர்வு உணரப்பட்டதால் அங்கிருந்த ஊழியர்கள், பொது மக்கள் அச்சத்துடன் வெளியேறி சாலைக்க வந்தனர்.
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள்- மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மாலைமலர் : பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க தொடங்கியது. போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 'நைட் விஷன்' திறனுடன் இருக்க வேண்டும்.
புதுடெல்லி: நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சித்ரவதைகளை தடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.
அமெரிக்காவில் ஜாதீய பாகுபாட்டுக்கு தடை .. சியாட்டல் நகர சபை இந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது
Thesam Jeyabalan : சாதியப் பாகுபாட்டிற்கு அமெரிக்காவின் சியட்டல் நகர சபை தடைவிதித்துள்ளது!
சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது. சியாட்டில் நகர சபை செவ்வாயன்று (February 21, 2023) நகரத்தின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தில் சாதியையும் சேர்த்தது.
6 : 1 என்ற விகித்ததில் நிறைவேற்றப்பட்ட இந்த அவசரச் சட்டத்தை ஆதரிப்பவர்கள், சாதி அடிப்படையிலான பாகுபாடு, தேசிய மற்றும் மத எல்லைகளை மீறுவதாகவும், அத்தகைய சட்டம் இல்லாமல், சாதிய பாகுபாட்டை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
புதன், 22 பிப்ரவரி, 2023
விசிகவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்...?
minnambalam.com -christopher : பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இடையேயான திடீர் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா – டெய்சி விவகாரத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதாக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதன் எதிரொலியாக ஜனவரி 3ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி அறிவித்தார்.
அருந்ததியர் வந்தேறி தெலுங்கர் என சீமான் பேச்சு- நாம் தமிழர் வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி ஆணை
tamil.oneindia.com - Mathivanan Maran :அருந்ததியர் குறித்த சீமான் சர்ச்சை பேச்சுக்காக நாம் தமிழர் வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் தேர்தல் அலுவலர்.
ஈரோடு: அருந்ததியர் வந்தேறி தெலுங்கர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்புஜோதி ஆசிரமம்: அன்பின் பெயரால் ஆதரவற்றோருக்கு கிடைத்த அதிர்ச்சி அனுபவங்கள்
ஜுபின், மரியா |
bbc.com : ஆதரவற்றோரையும் கைவிடப்பட்டோரையும் பராமரிப்பதற்காக நடத்தப்பட்ட அன்புஜோதி என்ற தொண்டு நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் கொடுமைகள்,
அத்தகைய இல்லங்கள் குறித்த கண்காணிப்புகள் மிக பலவீனமாக இருப்பதைக் காட்டியிருக்கின்றன. இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது?
ஒரு சாதாரணமான ஆட்கொணர்வு மனு இவ்வளவு பெரிய குற்றத்தை வெளியில் கொண்டு வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த இல்லத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் பயங்கரங்கள், திரைப்படங்களில் காட்சிகளாக இடம்பெற்றால்,
அவை தணிக்கையைத் தாண்டி வருவதே கடினம். அந்த அளவுக்கு கொடூரமான நிகழ்வுகள் இந்த இல்லத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
திருப்பூரைச் சேர்ந்த ஹலிதீனின் நண்பர் சலீம்கான். இவர் அமெரிக்காவில் வசித்துவந்தார்.
ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை : IMF உதவி பெறாவிட்டால் 12 மணி நேர மின்வெட்டுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.”
தேசம் நெட் - அருன்மொலி : சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறாவிட்டால், எதிர்காலத்தில், எரிபொருளின்றி 12 மணி நேர மின்வெட்டுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை: கோவில்களில் இலவச திருமண திட்ட செலவினத் தொகை ரூ.50,000 ஆக உயர்வு
மாலை மலர் : சென்னை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
1. அரசாணையில் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும் மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000 திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.
பாகிஸ்தானில் தற்கொலைப்படை பெண் பயங்கரவாதி கைது- விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்
மாலை மலர் : பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் மஹால் பலூச் என்ற பெண்ணை பயங்கரவாத ஒழிப்பு படை சமீபத்தில் கைது செய்தது.
அவரது கைப்பையில் இருந்து, தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் கவச உடை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிலையிலான 4 முதல் 5 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபற்றி தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், பலூசிஸ்தான் விடுதலை முன்னணி பிரிவுக்கு ஆதரவளிக்கும்படி மஹால் பலூச் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பயங்கரவாத அமைப்பினரால் பலூச் பயன்படுத்தப்பட்டு உள்ளதுடன், ஆதரவு தெரிவிக்க நெருக்கடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.
ரூபா ஐபிஎஸ், ரோஹினி ஐஏஎஸ் இருவரும் இடமாற்றம். ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணியின் அந்தரங்கப் படங்களை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்
tamil.asianetnews.co - Pothy Raj :பேஸ்புக்கில் தனிப்பட்ட படங்களை பகிர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூர், ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஆகியோர் பொறுப்பு ஏதும் இல்லாமல் இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக்கில் தனிப்பட்ட படங்களை பகிர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூர், ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஆகியோர் பொறுப்பு ஏதும் இல்லாமல் இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி இருந்தபோது,
அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை வெளிச்சத்துக்குகொண்டு வந்தவர் ரூபா
மாநில கைவினை மேம்பாட்டுக் கழக இயக்குநராக ரூபா இருந்தார்.
கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறை இயக்குநராக இருந்தவர் ரோஹினி சிந்தூரி. இருபெண் அதிகாரிகளுக்கும் இடையே சிலஆண்டுகளாக லேசான உரசல் இருந்தாலும் அது பெரிதாக வெளியே தெரியவில்லை.
செவ்வாய், 21 பிப்ரவரி, 2023
வோல்க்ஸ் வேகன் கார் காப்பி அடித்த வரலாறு செக்கோஸ்லாவாக்கியாவில் டட்ரா T 197 கார்
ராதா மனோகர்: 1934 இல் செக்கோஸ்லாவாக்கியாவில் டட்ரா T 197 என்ற மோட்டார் கார் உருவாக்கப்பட்டது
இந்த மாடல் கார்கள் சுமார் ஐந்நூறு உற்பத்தியானது. இதில் என்ன பெரிய சுவாரசியம் இருக்கிறது என்று நீங்கள் எண்ணக்கூடும்
மோட்டார் கார் உற்பத்தியில் இது ஒரு முக்கியமான செய்தி
இந்த காரை காப்பி அடித்துதான் ஹிட்லரின் ஜெர்மனியில் வோல்க்ஸ் வாகன் காரை வடிவமைத்து உற்பத்தி செய்தார்கள்.
இந்த டட்ரா காரை கண்ட ஹிட்லர் இந்த கார்தான் எனது நாட்டுக்கு தற்போது மிக தேவையான வண்டி என்று கூறிய ஹிட்லர் அப்படியே அதன் அத்தனை அம்சங்களையும் காப்பி அடித்து வோல்க்ஸ் வாகன் கார் உற்பத்தி செய்ய உதவினார்
ஏர் கூலிங் எஞ்சின் . பின்பக்கமாக பொருத்தப்பட்ட விதம் எல்லாவற்றையும் விட டட்ரா T 197 பாடி அமைப்பு அப்படியே வோல்க்ஸ் வேகன் காப்பி அடித்து உருவாக்க பட்டிருந்தது
கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவு: 12 பேர் எதிர்ப்பு . மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை
மாலை மலர் : இந்த வாக்கெடுப்பை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.
34 பேரின் கருத்துகள் அதில் இடம் பெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரை பெருமைப்படுத்தும் வகையில் மெரினா கடலில் பேனா வடிவ நினைவு சின்னத்தை ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக கடந்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி சென்னையில் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.
இதனை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.
இதில் மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பு நிர்வாகிகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.
சுற்றி வளைத்து கடித்து குதறிய தெரு நாய்கள்- துடிதுடித்து உயிரிழந்த 5 வயது சிறுவன் .. தெலங்கானா
மாலை மலர் : குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின.
சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் 5 வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்பர்பேட்டையில் உள்ள சிறுவனின் தந்தை காவலாளியாக பணிபுரிந்த வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த சம்பவத்தின் நடுங்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளானபோது பிரதீப் என்ற குழந்தை தனது தந்தையுடன் வேலைக்கு சென்றுள்ளார்.
புலியை சமைத்து சாப்பிட்ட கிராம மக்கள்; ஆந்திரா ஆக்கப்பள்ளத்தில் பரபரப்பு
நக்கீரன் : கோடைக்காலம் நெருங்கும் காலகட்டத்தில் புலி, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் வனத்தை ஒட்டியுள்ள கிராமப் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகும்.
ஆனால், ஆந்திர மாநிலத்தில் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்கு வந்த புலி உயிரிழந்த நிலையில், புலியை கிராம மக்கள் சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை எப்படி நடந்தது?.. மாநில மகளிர் ஆணையம் சொல்வது என்ன?
Vishnupriya R - tamil.oneindia.com : விழுப்புரம்: விழுப்புரத்தில் அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை எப்படி நடந்தது என்பது குறித்து மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஜவாஹிருல்லா என்பவர் காணாமல் போனார். அவரை மீட்டு தரும்படி அவருடைய மருமகன் சலீம்கான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி ஆசிரமத்தில் போலீஸார், வருவாய் துறை, சமூகநலன் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருந்தன.
துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 6.4 ரிக்டர் அளவில் பதிவு
மாலைமலர் : துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியது. மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அங்காரா: தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
துருக்கியில் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது..
ஜப்பான் உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கிறது
மாலைமலர் : உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் அறிவித்தது.
டோக்கியோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பங்கேற்ற பேசிய அவர்,
அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்! தோழர் மருது வீடியோ
vinavuவினவு செய்திப் பிரிவு -: அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்!
தேர்தல் ஆணையமே, நாம் தமிழர் கட்சியை தடை செய்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சாட்டை துரைமுருகனும் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும். அந்த நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைதேர்தலுக்காக திட்டமிட்டு சாதிய வன்முறையை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த கட்சியும் தடைசெய்யப்படவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கூறுகிறது.
அருந்ததியர் சாதி மக்கள் மீது சீமானும் சாட்டை துரைமுருகனும் பாய்ந்திருக்கிறார்கள். தமிழர்களை பிரித்து பிரித்து வேட்டையாடுகிற ஓநாய்களாகவே இவர்கள் இருவரும் செயல்படுகிறார்கள்..
திங்கள், 20 பிப்ரவரி, 2023
இரண்டு வாரங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிக நிலநடுக்கங்கள் - சிக்கித் திணறிய துருக்கி
maalaimalar : துருக்கியில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
"இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து துருக்கியில் 6 ஆயிரத்து 040 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 1628 நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவு கோளில் 3 முதல் 4 ஆகவும், 436 முறை 4 முதல் 5 ஆகவும் பதிவாகி உள்ளது. 40 முறை ரிக்டர் அளவில் 5 முதல் 6 ஆக பதிவாகி இருக்கிறது. இதுதவிர 6.6 அளவிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டு இருக்கிறது," என நிலநடுக்கம் மற்றும் ஆபத்து குறைக்கும் திட்ட இயக்குனர் ஆர்ஹன் டட்டார் தெரிவித்தார்.
வடக்கு இந்திய கம்பெனியை எதிர்ப்போம்''- ஈரோட்டில் கமல்ஹாசன் பேச்சு
நக்கீரன் : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 19 ந் தேதி மாலை ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது,
"உயிரே, உறவே தமிழே வணக்கம். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இங்கு போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நான் ஓட்டு சேகரிக்க வந்துள்ளேன்.
துருக்கியில் நிலநடுக்க மீட்பு பணிகள் நிறுத்தம்! உயிரிழப்பு 40 ஆயிரத்தை கடந்தது 2 வார மீட்பு ...
தினத்தந்தி : துருக்கியில் 2 வார காலமாக நடந்த மீட்பு பணிகள் நிறைவு - பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது
துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் நிறைவு பெற்றன.
துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின.
இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியா வரை நீண்டது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023
பிடிஆரை பாராட்டிய மு க அழகிரி .. "நல்லா பண்றீங்க தம்பீ.
minnambalam.com - Aara : “நல்லா பண்றீங்க தம்பீ…”- பிடிஆரை பாராட்டிய அழகிரி
திருமண நிகழ்வுகளில் அவ்வப்போது அரசியல் திருப்பங்களும் ஏற்படுவது தமிழகத்தில் நடப்பது தான்.
அந்த வகையில் இன்று பிப்ரவரி 19 மதுரையில் நடந்த ஒரு திருமணத்தில் நிதி அமைச்சர் பிடிஆரும் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும் முதலமைச்சர் ஸ்டாலினின் அண்ணனுமான அழகிரியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
ஒரு காலத்தில் அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த எஸ் ஆர் கோபியின் மகள் திருமணம் இன்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி திருமண அரங்கத்தில் நடைபெற்றது.
அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு கோபி சில காலம் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளராக இருந்தார். அமைச்சருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிறகு நிதியமைச்சர் பி டி ஆர் உடன் அணி சேர்ந்தார்.
ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு
மாலை மலர் : ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார்.
இவர்களைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் உபாயத்துல்லா காலமானார். கலைஞரின் தஞ்சை தளபதி
மாலை மலர் ; தஞ்சாவூா்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் அமைச்சரும் கழக வர்த்தக அணித் தலைவருமான எஸ்.என்.எம். உபயதுல்லா மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
தி.மு.க. முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் மீதும் முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் கொண்டு கழகப் பணியாற்றி வந்த உபயதுல்லா, என் மீது மிகுந்த அன்புக் கொண்டிருந்தவர்.
புதிய துணை நகரங்களை உருவாக்கத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
dinamani.com : தமிழ்நாட்டில் புதிதாக துணை நகரங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
மேலும், வெளிவட்டச் சாலையின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.
சென்னை வா்த்தக மையத்தில் கிரெடாய் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற வீட்டு வசதி கண்காட்சியில் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியிருக்கக் கூடிய திராவிட மாடல் வளா்ச்சியை தமிழ்நாடு கண்டு வருகிறது.
நம்முடைய இலக்கு பெரிதாக இருப்பதால், நம்முடைய முயற்சிகளும் பெரிதாக அமைந்துள்ளன.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்
மாலைமலர் : சென்னை பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.
பல்வேறு படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார். சென்னை: தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி.
இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 57. ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.
நக்கீரன் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி 1984ல் இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜின் தாவணிக்கனவுகள் திரைப்படத்தின் மூலம் திரை உலகுக்குள் நுழைந்தார்.