தாய்நாடு : தங்கையின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த அண்ணன்!
மாற்று மத இளைஞரை காதலித்த தங்கையின் தலையை வெட்டிய அண்ணன், தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (வயது 18). இவரது சகோதரர் ரியாஸ் (வயது 22).
இதனிடையே, ஆசிபாவும் அதே கிராமத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
சனி, 22 ஜூலை, 2023
தங்கையின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த அண்ணன்! மத ஆணவக்கொலை
இந்திய ரூபாய் இலங்கையில்
Thaainaadu – இந்திய ரூபாய் இலங்கையில்
வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இன்று உலகில் எந்தவொரு நாடும் தனித்து முன்னேற முடியாதுஇ உலகில் உள்ள அனைத்து அபிவிருத்தியடைந்த நாடுகளும் பிராந்திய கூட்டாண்மை மூலம் அந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளனஇ இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்தி இலங்கையின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் வேலைத்திட்டமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வெள்ளி, 21 ஜூலை, 2023
கர்நாடக தேவை போகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவோம் - டி.கே.சிவகுமார் பேச்சு
மாலைமலர் : தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார். அப்போது, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்
பெங்களூரு: தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் நேற்று சந்தித்தார்.
அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.
மகாராஷ்டிரா நிலசர்வில் சிக்கிய பலரை காணவில்லை .. பாறைகள் விழுந்து தரைமட்டம்
மாலை மலர் : மும்பை தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 30 பழங்குடி குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்டனர். நேற்று வரை 16 பேர் பலியாகினர்.
தகவலறிந்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டம் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ரணில் - மோடி சந்திப்பு .. மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள்
மாலைமலைர் : புதுடெல்லி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லிக்கு வந்தடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அவர் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விக்ரமசிங்கேவை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.
பின்னர் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பொருளாதாரம், பாதுகாப்பு, இலங்கை தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். மேலும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.
மணிப்பூரில் பெண் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட வன்முறை..
மாலை மலர் : மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வன்முறை வெடித்தது.
பல இடங்களில் வன்முறை தாக்குதல்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை.
இணையதள சேவை முடக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் மணிப்பூரில் பரவிய வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
இதற்கிடையே, மணிப்பூரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வியாழன், 20 ஜூலை, 2023
மணிப்பூர் வன்முறையை விவாதிக்க மறுப்பு! எதிர்க்கட்சிகள் போர்க்கொடி! மொத்தமாக முடங்கிய நாடாளுமன்றம்
tamil.oneindia.com - Nantha Kumar R : டெல்லி: நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் மணிப்பூர் வன்முறை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூறினர். மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சமாதானம் செய்தும் அவர்கள் கேட்காததால் இரு சபைகளும் முழுவதுமாக முடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி(இன்று) தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். அதன்படி இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது.
Parliament Monsoon Session will starts today, 32 bill likely to be taken up
இந்த கூட்டத்தொடர் மொத்தம் 17 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்தும் வகையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தி்ல 30க்கும் அதிகமான கட்சிகளை சேர்ந்த 44 தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் கோடீஸ்வர எம் எல் எக்களில் கர்நாடக டி.கே.சிவகுமார்:முதலிடம் ரூ.1413 கோடி
மாலைமலர் : பெங்களூரு நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது. மொத்தம் 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன.
இதில் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.க்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள். கர்நாடக எம்.எல்.ஏ.க்களில் 14 சதவீதம்பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள கோடீஸ்வரர்கள்.
பிரான்ஸ்: 700 பேர் சிறையில் அடைப்பு கலவரக்காரர்களுக்கு பாடம்!
வீரகேசரி : பிரான்ஸ் நாட்டில் சென்ற மாத இறுதியில் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து சில மணி நேரங்களில் அந்நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்து, வன்முறை அதிகரித்தது.
இக்கலவரம் பிரான்ஸில் 2005-ல் நடந்த கலவரத்திற்கு பிறகு நடைபெற்ற ஒரு மோசமான கலவரம் என வர்ணிக்கப்பட்டது. உயரடுக்கு காவல்துறை சிறப்புப் படைகள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட சுமார் 45,000 பாதுகாப்பு படைகளை கொண்டு 4 நாட்களாக பெரும் முயற்சி செய்து நிலைமையை அந்நாட்டு அரசாங்கம் கட்டுக்குள் கொண்டு வந்தது.
மறைந்த கேரள முன்னாள் முதல்வர் திரு உம்மன் சாண்டி அவர்களின் வரலாறு
அப்பாவை பார்க்க காத்திருக்கும் மகன்
கேரளாவில் எந்த சிறு பிரச்னை என்றாலும் பந்த் அறிவித்து விடுவார்கள்.
ஆனால் மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் பந்த் போன்ற போராட்டங்களுக்கு உம்மன் சாண்டி எதிரி என்றாலும், 2006--2011 அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, இரண்டு முறை பந்த் நடத்தினார்.
ஆனால் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 14 முறை பந்த் நடத்தியது.
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு
மாலை மலர் ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரெயிலில் தப்பிச் சென்றார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை குற்றவாளியை தேடி வருகின்றனர். சென்னையில், ரெயிலில் பழ வியாபாரம் செய்து வந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் நேற்று இரவு சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதன், 19 ஜூலை, 2023
டெல்லியில் 10 வயது வீட்டுப் பணிப்பெண்ணை சித்திரவதை செய்த பெண் விமானியும் கணவரும் பொதுமக்களால் அடித்து ..
மாலை மலர் : 10 வயது சிறுமியை வீட்டுப் பணிக்கு நியமித்து, சித்திரவதையும் செய்ததாக கூறி ஒரு பெண் விமானியும், விமான ஊழியரான அவரது கணவரும், ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில் சீருடையில் இருக்கும் அந்த பெண் விமானியை அந்த கும்பலில் பலர் பலமுறை அறைகிறார்கள். அவள் தலையில் தாக்கப்பட்ட நிலையில், உதவிக்காக அழுகிறார். பல பெண்களால் ஒரே நேரத்தில் அவர் அடிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மன்னிப்பு கேட்டு அலறுகிறார். ஆனாலும் தாக்குதல் தொடர்கிறது.
அவரது கணவர் மற்றொரு குழுவினரால் தனியாக தாக்கப்படுகிறார். அவரும் தனது மனைவியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். இந்த தாக்குதல்களை தடுக்க சிலர் முற்படுகின்றனர். ஒருவர் "அவள் இறந்துவிடுவாள்" என்று அலறுகிறார்.
INDIA 'இந்தியா' எதிர்க்கட்சிகளின் கூட்டணி !
தினத்தந்தி : எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைப்பு - சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்...!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. 3வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக திட்டம் தீட்டி வருகிறது. அதேவேளை, இந்த முறை பாஜகவை வீழ்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி வருகின்றன.
காங்கிரஸ் தலைமையில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் முதல் கூட்டத்தை நடத்தின.
செவ்வாய், 18 ஜூலை, 2023
அமைச்சர் பொன்முடிக்கு 72 வயது.. அமலாக்கத்துறையா சித்திரவதைக் கூடமா? மாலை மீண்டும் விசாரணை - வழக்கறிஞர் சரவணன் அண்ணாத்துரை
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக வழக்கறிஞர் சரவணன்,
"இப்போது 3.30 மணி. காலை 10 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 3.30 மணி வரை விசாரித்து இருக்கிறார்கள். அவருக்கு வயது 72. ஏற்கனவே உடலில் பல சில பிரச்சனைகள் உள்ளன.
இப்படித்தான் அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடக்கிறது.
3.30 மணி வரை உட்கார்ந்து இருக்கும் நமக்கே சோர்வாக இருக்கிறது. அவருக்கு எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட ஒரு மன உளைச்சலை, உடல் உளைச்சலை இது கொடுத்திருக்கும்? இப்படித்தான் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பல முறை எச்சரித்து இருக்கிறது. அதற்காகவே மனித உரிமைகள் ஆணையம் உள்ளது. மனித உரிமைகளை காப்பாற்ற சட்டம் உள்ளது.
அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை - அமலாக்கத்துறை தகவல்
மாலை மலர் : சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் அடங்கிய அமலாக்கத்துறை தனிப்படை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன் வந்தனர்.
மேலும், அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் இல்லம் மற்றும் அவரது அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதன்படி நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை 20 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக், அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என தெரிவித்தார்.
பணம் – பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ! பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்?.. லண்டன் பாலியல் சாமியார் சரவணபவா
‘ஓம் சரவணபவ’ என்ற லண்டன் மதக்குழுமத்தைப் பற்றிய தேசம்திரை வெளியிட்ட காணொலியை ஓம் சரவணபவவும் அவர்களுக்கு துணைபோகும் வர்த்தக நிறுவனமும் (நிறுவனங்களும்) சேர்ந்து முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இரு தடவைகள் காணொலியை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி உள்ளனர்.
திங்கள், 17 ஜூலை, 2023
“அசந்துபோன ஹிலாரி கிளின்டன்…” - கலைஞர் நூலகம் பற்றி பல்வேறு கோணங்களில்
tamil.oneindia.com - Kadar Karay : சென்னை: மதுரை மாநகருக்கும் மேலும் ஒரு புதிய அடையாளம் கிடைத்திருக்கிறது. தமிழ் வளர்த்த மதுரையில் இனிமேல், கலைஞர் நூற்றாண்டு நூலகமும் தமிழ் வளர்க்கப் போகிறது. அதை உணர்ந்துதான் முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை; கலைநகரம் மதுரை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நூலகத்தைப் பற்றி சிலரிடம் கேட்டோம். அவர்கள் தனித்தனியாகப் பல தகவல்களைச் சொன்னார்கள். அவை, புதிய புதிய தகவல்களாக இருந்தன. அப்படி என்ன சொன்னார்கள்?
அமைச்சர் எ.வ.வேலு
"இந்த நூலகம் இவ்வளவு பிரம்மாண்டமாக அமைந்திருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம். எதைச் செய்தாலும் அதைப் பெரிதாகச் செய்யவேண்டும். மக்கள் அதைப் பார்த்து வியக்கும் அளவுக்கு நம் வேலைகள் இருக்கவேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அவர். வெறும் பிரம்மாண்டம் மட்டுமல்ல; அது மக்களுக்குப் பயன் உள்ளதாகச் செய்ய வேண்டும் என்ற கோணத்திலும் சிந்திக்கக் கூடியவர்.
எதிர்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து பா.ஜ.கவுக்கு எரிச்சல்”... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பேட்டி!
கலைஞர் செய்திகள் - Lenin :;.”எதிர்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து பா.ஜ.கவுக்கு எரிச்சல்”... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பேட்டி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.7.2023) பெங்களூரில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
மோடி அவர்கள் தலைமையில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர் கூட்டத்தைக் கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம்.
சவுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற மலையக பெண்ணின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு
tamilmirror.lk : சவுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றவரின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு
லிந்துலை கிளனிகல்ஸ் தோட்டத்தில் 30 வயதுடைய இளம் தாய் ஒருவர் குடும்ப வறுமை காரணமாகவும் சொந்தமாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் கொள்ளும் நோக்கிலும் கடந்த ஜூன் மாதம் கொழும்பில் உள்ள முகவர் மூலம் சவுதி நாட்டிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு அந் நாட்டு மொழி தெரியாத காரணத்தால் வீட்டு உரிமையாளர் மூலம் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் சவுதியில் தொழில் வழங்கிய வீட்டு உரிமையாளரின் மனைவி குறித்த பெண், தான் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வரும்போது குறித்த வீட்டின் எஜமானி இவரை கடுமையாக தாக்கிய குண்டு ஊசிகளை உடம்பு முழுவதிலும் பலவந்தமாக குத்தி சித்திரவதை செய்யப்பட்டதாக தனது கணவனுக்கு குரல் பதிவு ஊடாக அனுப்பிவைத்துள்ளார்.
வெள்ளாளர் ஏனையவர்களை மதிப்பதில்லை. நாங்களே தமிழ் மக்களை பாதுகாத்தோம். 295,000 தமிழர்களை மீள்குடியேற்றம் செய்தோம் சரத் வீரசேகர MP
jaffnamuslim.com : சிறந்த தமிழர்களும், முஸ்லிம்களும் என்னுடன் உள்ளார்கள் - வெள்ளாளர் ஏனையவர்களை மதிப்பதில்லை
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சிறுவர்களை போராளிகளாகவும் மக்களை பலியாட்களாகவும் பயன்படுத்திய போது என்னை இப்போது இனவாதியாக சித்தரிப்பவர்கள் கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்தார்கள் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிறந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் என்னுடன் உள்ளார்கள். காரைநகர் பகுதியில் நான் பல ஆண்டுகள் சேவையாற்றினேன். எனது சேவைக்காலம் முடிவடைந்த போது என்னை பிறிதொரு பகுதிக்கு இடாமாற்றம் செய்ய வேண்டாம் என தமிழ் மக்கள் அப்போதைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
பாகிஸ்தானில் 150 ஆண்டு பழமையான இந்து கோவில் இடித்து தகர்க்கப்பட்டது!
hirunews.lk : பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் ஒன்று காணப்பட்டது.
இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர்.
மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த நாள் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், கோவிலை இடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி - தமிழக அரசு
மாலை மலர் : இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் பலியாகினர். இவர்களில் பலர் விபத்து நடந்த ஒரு மணி நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், சாலை விபத்துகளில் சிக்கியவரை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்குவதோடு, சிறந்த காப்பாளர் விருதும் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் 10 சிறந்த காப்பாளர்களுக்கு, மத்திய அரசின் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஞாயிறு, 16 ஜூலை, 2023
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும்- எம்.பி. ராகவ் சாதா .. பெங்களூருவில் நடைபெறும்
மாலை மலர் : டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.
உடல் நலத்திற்கு இரவு தூக்கம் என் அவசியம்? பினியல் சுரப்பி மெலடோனின் சுரப்பி
மலையோரம் செய்திகள் : இரவில் அதிக நேரம் முகநூல், வாட்ஸ்சப், இணையதளத்தில் பொழுதை களிக்கும் உங்களுக்கு,
எவ்வளவு பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு??
எனில் இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!!
ஆழமான பினியல் சுரப்பி பற்றிய ஒரு ரகசியத்தை உங்களுடன் பகிர்கிறேன்..... சிந்தித்து உங்கள் உடலுக்கு இரவில் பூரண ஓய்வு கொடுங்கள்.....
நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!...
அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!
இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி!
கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!
இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!
அதுதான் மெலடோனின் (melatonin)!!
இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.
மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை.
இரவின் இருளாக இருக்க வேண்டும்!!
ராஜ்யசபா எம்பியாகும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை? . ராஜஸ்தானில் இருந்து?
tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் ராஜ்யசபா எம்பியாக தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அவர் எந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாக உள்ளார்? என்பது பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை.
தனது ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டில் அரசியலுக்குள் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்த அண்ணாமலைக்கு குறுகிய காலத்திலேயே மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது
கோகா-கோலா போன்றவற்றால் புற்றுநோய் – எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்
தேசம் நெட் - அருண்மொழி : நாம் அன்றாட எடுத்துக்கொள்ளும் மென் பானங்களில் ‘அஸ்பார்டேம்’ என்னும் செயற்கை இனிப்பூட்டியை கழிக்கின்றனர்.
அது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘கார்சினோஜன்’ எனப்படும் பொருளின் கீழ் வகைப்படுத்தப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு நிபுணர் குழுக்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தன.
இது பாதுகாப்பற்றது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது,
தற்பொழுது, அந்தப் பொருள் தீங்கு ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிகிறது,
ஒரு குழு. மற்றொரு குழு, அந்தப் பொருள் எவ்விதத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை மதிப்பிடுகிறது.