சனி, 7 அக்டோபர், 2017

துனிசியா கால்பந்தாட்ட போட்டிக்கு தோடர் பழங்குடி மற்றும் ஒரு படுக இளைஞர்கள்.... நீலமலையில் இருந்து ,,

davamudhalvan.davan " நள்ளிரவு நேரம் அந்த இளைஞன் விம்மி அழுகிறான் .
அந்த வீரன் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறான்.
எதிர் முனையில் பேசும் அந்த மானுட நேசன்
"அழாதே முத்து நீங்க அழலாமா மகிழ்ச்சியாக போய் வாருங்கள் " என்கிறார் .
"இல்ல சார் என்னை சுற்றி இவளோ நல்லவங்களா ....இவ்வளோ பேர் எனக்காக வேலை செய்றிங்க " அவன் வெகு சிரமப்பட்டு அழுகையை கட்டுபடுத்திக் கொண்டு விமானம் ஏறுகிறான் அந்த வீரன் .
செப்டம்பர் மாதம் நீலமலைக்கு இரண்டாம் பருவம் . சாலையெங்கும் எல்லா நிறங்களிலும் பூத்துகுலுங்கும் மலர்கள் மலைகளில் பயணிக்கும்போது உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் . விழியின் வழியாக நீங்கள் அடையும் மகிழ்வு இதுவென்றால் , செவி வழியாகவும் நாம் மகிழ இந்த நிகழ்வு உங்களுக்கு பயன்படலாம் .

மாற்றுப்பாலினத்தவரை அரசியல்படுத்த வேண்டிய மிகையான தேவை... கிருபா முனுசாமி!

kirubamunusamy : வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார தொடர்வண்டியில், பயணிகளிடம் ஒரு திருநங்கை பணம் கேட்டுக்கொண்டிருந்தார்.
மாற்றுப்பாலினத்தவரை சமூக புறக்கணிப்பு செய்து, பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு தள்ளியது நாமே என்ற வகையில், அவர்கள் கேட்கும் போதெல்லாம் பணத்தைக் கொடுப்பது என் வழக்கம். அப்படி என் பையிலிருந்து பணம் எடுக்க முயலும் போது, என் எதிரே அமர்ந்திருந்த 18-19 வயதிருக்கும் பையனிடம் பணம் கேட்டார். அவன் சட்டைப்பையில் தேடி இல்லையென சொன்னதும், ‘பணம் இல்லைனாலும் பரவால வா...’ என்றபடியே அவனது உதட்டை கசக்கினார்.
அவன் அறுவறுப்படைந்த பாவனையில் உதட்டை துடைத்தான். இதற்கிடையே கையில் எடுத்த பணத்தை நான் கொடுக்க, அந்த பெண்ணும் சென்றுவிட்டார். அந்த சிறுவனுடனான அப்பெண்ணின் நடவடிக்கைக்கு பிறகும் நான் பணம் கொடுத்ததால் அனைவரும் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். நான் வேறு இன்று ‘ஸ்லீவ்லெஸ் டாப்’ அணிந்திருந்ததனால் வண்டியில் ஏறியதிலிருந்தே அனைவரும் என்னை ஒரு மாதிரி பார்த்தபடியே இருக்க, இதுவும் அதோடு சேர்ந்துக்கொண்டது.

அனைத்து சாதியும் அர்ச்சகர் .. கேரளத்திலும் சாதித்த பெரியார் .. தமிழக உச்சி குடுமி நீதிமன்றகளின் விலங்கு உடைவது எப்போ?

Kattaru : இந்தக் "கர்ப்பக் கிரகம்' என்கின்ற பூச்சாண்டிகள், பார்ப்பனரல்லாத மக்களை, இழிமக்கள் - இழி பிறப்பாளர்கள் என்று ஆக்கப் படுவதற்காகத்தான் இருந்து வருகிறதே அல்லாமல் மற்றபடி வேறு எந்த புனிதத் தன்மையையும் பாதுகாக்க அல்ல என்பதே நம் கருத்து. அன்றியும் நாம் உள்ளே சென்று வணங்குவதால் எந்தப் புனிதத் தன்மையும் கெட்டு விடுவதில்லை என்பதும் நம் உறுதி. மற்றும் உள்ளே செல்ல வேண்டும் என்கின்ற நமக்கும் உண்மையில் எந்தப் பனிதத் தன்மையையும் கெடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லவே இல்லை.
 நம் இழிவு நீக்கப்பட வேண்டும் என்கின்ற காரியத்திற்கு ஆகத்தான் செல்லுகிறோம். ஆகவே தோழர்களே, இந்தக் கிளர்ச்சி அவசியமா இல்லையா? என்ன சொல்கிறீர்கள்?அவசியம் என்றால் வாருங்கள் போகலாம்.உடனே பெயர் கொடுங்கள்.

சாரு ஹாசன் : கமல் ரஜினி சேர்ந்து வந்தாலும் அரசியலில் வெற்றி பெறமுடியாது!

Gajalakshmi Oneindia Tamil சென்னை : நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்தே கட்சி தொடங்கினாலும் அரசியலில் சாதிக்க முடியாது என்று நடிகர் சாருஹாசன் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் கால் பதித்தே தீருவேன் என்று தனிக்கட்சி தொடங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையும் லதா ரஜினிகாந்த் அண்மையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார் என்று கூறி பரபரப்பை கூட்டினார்.
இந்நிலையில் நடிகர் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து நடிகரும் கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது : சினிமாவைத் தாண்டி ரஜினியும், கமலும் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேரும் இணைந்து கட்சி தொடங்கினாலும் அவர்களால் அரசியல் களத்தில் சாதிக்க முடியாது. பெரிய விஞ்ஞானியாக இருந்தால் என்ன பெரிய தத்துவஞானியாக இருந்தால் என்ன அரசியலுக்கு அது மட்டுமே போதுமா?

இஸ்லாம் மதத்தை தழுவிய பாஜகவின் முக்கிய தலைவர்களின் குடும்பங்கள் ... சு.சாமி . அசோக் சிங்கால்.முரளி மனோகர் ஜோஷி ...

": விஸ்வ ஹிந்து பரிசத் தலைவரான அசோக் சிங்கால் மகளை திருமணம் செய்தவர் தான் மத்திய  பாஜக கட்சி அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

பாஜகவின்  மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோசியின் மகளை திருமணம் செய்தவர் தான் பாஜகவின்  செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன்

பீசப்பியா பீசப்பி இல்லையான்னு தெரியாம பேசிக்கிட்டே திறியிற பேப்பய பாஜகவின் எம் பி சுப்பிரமணியசாமியின் மகள் சுகாசினி  திருமணம் செய்தவர் நதீம் ஹைதர் .
இவர்களின் பெரும்பாலான சந்ததிகள்  இஸ்லாமிய மதத்தை தான் பின்பற்றுகின்றனர். .
தகவலுக்கு நன்றி-கொடியேறி பாலகிருஷ்ணன் ( சிபிஎம் மாநிலச் செயலாளர்-கேரளா)
லவ் ஜிகாத் ஒழிகன்னு சத்தமா சத்தம் போடுங்க சங்கீஸ்

தியேட்டர் டிக்கெட் விலை 50% உயர்ந்து 192 Rs ஆகிவிட்டது ... இனி ?

Venkat Ramanujam : GST காரணமாக தியேட்டர் டிக்கெட் கிடுகிடு 50% உயர்ந்து 192 Rs ஆகியது .. #GST 27 பொருட்கள் விலை குறைப்பு எதிரொலி .. 2017 தீவாளி இன்னிக்கே வந்துச்சுன்னு டூடே ட்விட்டர் இல் #மோடி செம ஹாப்பி .. இன்னிக்கே தீவாளி கொண்டாடுவதா அல்லது தீவாளி அன்னிக்கி 192 rs டிக்கெட் கொடுத்து வாங்கி ரசிகர்களை தங்களை படத்தை பாக்க சொல்லி ... #OMG டெலிகேட் பொசிஷன் பார் superstar Rajinikanth , World hero Kamal Haasan 🏃

1 லட்சம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

tamilthehindu : சென்னை மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணியின் தொடர் நடவடிக்கையாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 378 வீடுகளில் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிடப்பட்ட  செய்திக்குறிப்பில், ''சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற வேலை குறித்து சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீவிர கொசு ஒழிப்பு பணியில் இன்று (07.10.2017) 200 வார்டுகளிலும்,1 வார்டுக்கு 1 குழு வீதம் மொத்தம் 200 குழுக்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பணியில் 2916 மலேரியா பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மலேரியா பணியாளர்களை கொண்டு 1,25,378 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 502 வீடுகளில் உள்ள கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டன.

தினகரன் தனிக்கட்சி ? சசிகலா அதிர்ச்சி ?

வெப்துனியா :சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதனால் அவரை சந்திக்க சசிகலா பரோலில் வந்தார். ஆனால் சசிகலா இவ்வளவு முயற்சிகள் எடுத்து பரோலில் வந்ததுக்கு காரணம் தினகரன் எடுத்து திடீர் முடிவு தான் என கூறப்படுகிறது. அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு கைப்பற்றிவிடும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். எனவே தனக்காக கூடும் கூட்டத்தை நம்பி தனி கட்சி ஒன்றை ஆரம்பிக்க தினகரன் ரகசிய திட்டம் ஒன்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தை விட தனது பெயருக்கு தான் அதிக அளவு கூட்டம் கூடுகிறது என தினகரன் நம்புகிறார். எனவே இரட்டை இலை சின்னமே தேவையில்லை, தனியாக கட்சி தொடங்கி வெற்றி பெறலாம் என தினகரன் திட்டமிட்டுள்ளார்.

ஸ்டாலின் :கெயில் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால் ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து போராட்டம்

tamilthehindu :மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் கெயில் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், மேற்கு மண்டலத்தில் உள்ள ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து திமுக போராடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள விளைநிலங்களின் ஊடாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மீண்டும் மத்தியில் உள்ள பாஜக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்வதற்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்ட விளைநிலங்களின் வழியாக 310 கி.மீ. தூரத்துக்கு, 20 மீட்டர் அகலத்தில் செல்லும் இந்த எரிவாயுக் குழாய்கள் சிறு - குறு விவசாயிகளின் எதிர்காலத்தை நசுக்கும் ஆபத்தான திட்டம்.
அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தினால் கல்வி நிறுவனங்கள், வீடுகள், கோழி பண்ணைகள், தென்னை மரங்கள், மாந்தோப்புகள் போன்றவை அதிகமான பாதிப்புக்குள்ளாகும்.

சசிகலா மருத்துவ மனையில் நடராஜனை நலம் விசாரித்தார்

மாலைமலர் :பெங்களூரில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் நடராஜனை இன்று சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையில் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு நேற்று மாலை பரோலில் வெளியே வந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் கணவர் நடராஜனை அருகில் இருந்து கவனிப்பதற்காக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டிருந்தார். ஆனால், 5 நாட்கள் மட்டுமே அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது, வெளியில் எங்கும் செல்லக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பரோல் கிடைத்ததும் நேற்று இரவு சென்னைக்கு வந்த சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்கினார்.

டிக்கெட் விலை உயர்வு: கடும் அதிருப்தியில் தமிழ் திரையுலகம்

அரசாங்கம் வெளியிட்டுள்ள திரையரங்குகளின் டிக்கெட் விற்பனை குறித்த முழுவிவரம்
 முன்புதற்போது
3 அல்லது அதற்கும் மேற்பட்ட திரையரங்குகள்  (அதிகபட்சம்)120.00150.00
3 அல்லது அதற்கும் மேற்பட்ட திரையரங்குகள்  (குறைந்தபட்சம்)10.0015.00
2 திரையரங்குகள் (அரசாங்கம் போட்டுள்ள 15 விதிகள் பின்பற்றினால்) அதிகபட்சம்95118.80
2 திரையரங்குகள் (அரசாங்கம் போட்டுள்ள 15 விதிகள் பின்பற்றினால்) குறைந்தபட்சம்1015
2 திரையரங்குகள் (அரசாங்கம் போட்டுள்ள 5 விதிகளை மட்டும் பின்பற்றினால்) அதிகபட்சம்85106.30
2 திரையரங்குகள் (அரசாங்கம் போட்டுள்ள 5 விதிகளை மட்டும் பின்பற்றினால்) குறைந்தபட்சம்1015.00
ஒரே ஒரு திரையரங்கம் (ஏசி வசதி செய்யப்பட்டது) அதிகபட்சம்50.0062.50
ஒரே ஒரு திரையரங்கம் (ஏசி வசதி செய்யப்பட்டது) குறைந்தபட்சம்10.0015.00
ஒரே ஒரு திரையரங்கம் (ஏசி வசதி செய்யப்படாதது) அதிகபட்சம்30.0037.50
ஒரே ஒரு திரையரங்கம் (ஏசி வசதி செய்யப்படாதது) குறைந்தபட்சம்7.0010.00

tamilthehindu :ஸ்கிரீனன் : சில மாதங்களுக்கு முன்பு கேளிக்கை வரி தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழக அரசிடம் திரையரங்குகளுக்கான டிக்கெட் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால், இது தொடர்பாக அரசு எந்ததொரு அறிவிப்புமே வெளியிடாமல் ரூ.120+ ஜிஎஸ்டி என டிக்கெட் விலை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக திரையுலகினர் தெரிவித்தார்கள்.

சசிகலா வீட்டுக்கு வருபவர்களை சந்திக்க தடையில்லை

dhamo.dharan. : முட்டாபயலுகளா! என்னாடா நிபந்தனை போடுறீங்க! அரசியலவாதி யாரையும் சந்திக்க கூடாது! சரி..... வீட்டுக்கு வந்து சந்திக்க தடையில்லை! ஏண்டா கிளப்டான்ஸா பாக்கவந்துருக்கு! இந்தம்மாவா யாரையும் சந்திக்க போவுது? அடிமைகள் அத்தனபேரையும் வீட்டுல வச்சு பாத்து சோலிய முடிச்சுருமேடா! இதுக்கு நீங்க எந்த நிபந்தனையும் போடாம இருந்திருக்கலாமேடா! இதுக்கு பேரு கடுமையான நிபந்தனையாடா! உங்க நிபந்தனைல தீயை வைக்க! அதுசரி ! அத்தனை அதிகாரத்தையும் கையில வச்சுகிட்டு இந்தம்மாவை பாக்காமலேய டவுசர்ல ஒன்னுக்கு போயிட்டீங்க! அப்டீன்றது உங்க கடுமையான நிபந்தனையிலிருந்து தெரியுதுடா! அப்ப நேர்ல பாத்தா???</

சிவசேனா ராஜ்தாக்கரே :‘மோடி போன்ற பொய்யரை பார்த்தது இல்லை’

Chinnaia Kasi :மும்பை, ையும் பாஜக  நிறைவேற்றவில்லை; கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வந்து ஒவ்வொரு வரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி கூறினார்; இதுகுறித்து கேட்டால் அவை தேர்தல் உத்திக்காக கூறப்பட்டது என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா-வே கூறுகிறார்; நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நம்பித்தான் அவருக்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆதரவு அளித்தது; 
அக். 6 -  : அண்மையில், மும்பை யில் ரயில்வே மேம்பால நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவத்திற்கு கண்ட னம் தெரிவித்து, சிவசேனா சார்பில் மும்பை ரயில்வே அலுவலகம் முன்பு வெள்ளியன்று பேரணி நடத்தியது. இதில் கலந்து கொண்டு பேசிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்தார்.“பாஜக ஆட்சியில் நாட்டை 2 அல்லது 3 பேர்மட்டுமே வழி நடத்திச் செல் வது போல் தோன்றுகிறது; நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த எந்தவொரு வாக்குறுதிய

டெங்கு ... எடப்படியின் மாவட்டத்திலேயே அம்மணமாக தலைவிரித்து ஆடுகிறது!

thetimestamil : சந்திர மோகன் : தொடரும் குழந்தைகளின் சாவுகள்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் அழுகையும், கூக்குரலுமாக இருக்கிறது. மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மருத்துவமனை நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டதால் ஊழியர்களும் செய்வதறியாது திகைத்து தடுமாறுகிறார்கள்.
நோயாளிகளோடு வரும் பொதுமக்களே, காய்ச்சலில் இருக்கும் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் குளுக்கோஸ் போடுவது முதல் கழற்றுவது வரை செய்கிறார்கள்.நோயாளிகள் படுப்பதற்கு பெட்கள் இல்லாததால் தரையில் படுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
போதிய மருத்துவ ஊழியர்கள் /நர்சுகள் இல்லை. சேலம் மாநகரத்தைவிட்டு வெளியிலிருந்து வருபவர்களை “எதற்காக இங்கு வந்தீர்கள்? “என்று மருத்துவமனை ஊழியர்கள் திட்டுகிறார்கள். இன்று காலையிலிருந்து பிற்பகல் 1 மணி வரை நான்கு குழந்தைகள் மரணம் அடைந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தலித்கள் மீசை வைத்துக்கொள்ள குஜராத்தில் அனுமதி கிடையாது!

சிறப்புக் கட்டுரை: தலித் மீசை வைத்திருக்கக் கூடாதா?
மின்னம்பலம் : தமயந்தி தார்: ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை கோலாகலத்தில் குஜராத் மூழ்கிக் கிடக்கும்போது, தலித்துகள் மாநிலம் முழுவதும் சாதி வன்முறைகளால் பாதிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்தன.
செப்டம்பர் 25 மற்றும் 29 தேதிகளில் இரண்டு தலித்துகள் காந்திநகர் மாவட்டத்தில் லிம்போதரா கிராமத்தில் ராஜபுத் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டனர். அவர்கள் செய்த குற்றம் என்ன? மீசை வைத்திருந்ததுதான்.
செப்டம்பர் 29இல் பதான் மாவட்டத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கார்பா கொண்டாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்ததற்காகத் தாக்கப்பட்டனர்.
அதற்கு இரண்டு நாள்கள் கழித்து, அக்டோபர் 1ஆம் தேதி ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞர் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த நபர்களால் அடித்துக்கொல்லப்பட்டார். அவரது குற்றம்? கார்பா கொண்டாட்டத்தைப் பார்த்ததுதான்.

நடராஜனுக்காக கடத்தப்பட்ட இளைஞன் கார்த்திக் கொல்லப்படார? ஏராளமான முறைகேடுகள் ...



வன்னிய குல சத்திரியர், அய்யா கிருபாகரன். .. ஃப்ரெண்ட்ஸ் க்ளப்

Shankar.A : ஃப்ரெண்ட்ஸ் க்ளப்
பெயரே சிறப்பாக இருக்கிறதல்லவா… இதில் சேர வேண்டும் என்று உங்களுக்கும் ஆசை வருவது இயல்பு. சென்னை, சைதாப்பேட்டையில் இயங்கும் இந்த கிளப் உங்களையும் சேர்த்துக் கொள்ளும். ஆனால் சில நிபந்தனைகள் இருக்கிறது. நீங்கள் வன்னியராக இருக்க வேண்டும்.
சரி. நானும் ஒரு வன்னியர் என்று நினைத்தீர்கள் என்றால் அதுவும் உங்களை அந்த கிளப்பில் சேர்க்காது. வன்னியரிலேயே, படித்த, க்ரூப் 1 அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், துணை நிலை நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் மட்டுமே இந்த கிளப்பில் உறுப்பினராக முடியும்.
சரி. இதையெல்லாம் எதற்காக உங்களுக்கு சொல்ல வேண்டும் ? இந்த கிளப்பின் தலைவர் யார் தெரியுமா ? சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளை விமர்சனம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மகா கனம் பொருந்திய வன்னிய குல சத்திரியர், அய்யா கிருபாகரன்.
இதற்குமா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் ?

திமுகவின் ஒரு வெறும் பிளேன் டீ தொண்டன்

சாய் லட்சுமிகாந்த் :இந்த கட்சி, தலைவர்களால் ஆனது அல்ல.. இப்படிப்பட்ட தொண்டனால் ஆனது.. ...  ஒரு 66 வயது, கூலி வேலைக்கு தான் போகிறார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற சூழ்நிலை.
ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்து உறுப்பினர் சேர்க்கை படிவம் கேட்டார்.
உனக்கு எதுக்கு பெருசு படிவம்
வயசான காலத்துல நீ ஏன் கஷ்டப்படுற,
நான் பாத்துக்குறேன் நீ போனு சொன்னேன்.
அதெல்லாம் முடியாது எனக்கு குடுங்கனு சொன்னார்.
சரி இந்தாங்க அப்படினு குடுத்தேன். ( 25 உறுப்பினர்களை சேர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களது ஓட்டர் கார்டையும் ஜெராக்ஸ் எடுத்து தர வேண்டும், எனவே கண்டிப்பாக இவரால் முடியாது என்ற நினைத்து தான் குடுத்தேன்).
இன்னைக்கு உறுப்பினர் படிவத்தை திரும்ப எடுத்து வந்தார்.
25 உறுப்பினரை சேர்த்து அவர்களது ஓட்டர் கார்டை வாங்கி அதையும் ஜெராக்ஸ் எடுத்து கொண்டு வந்திருந்தார்.

சவுதி மன்னராட்சி.. இஸ்லாமிய உலகின் ஒரு சாபக்கேடு...

 Arun Hemachandra  :  உலகிற்கே ஒரு பிழையான எடுத்துக்காட்டாக வாழ்கின்றார் சவுதி மன்னர் சல்மான். அவர் எங்கு சென்றாலும் விமானத்தில் இருந்து இறங்கவும், ஏறவும் தனது தங்கப் படிக்கட்டுக்களை எடுத்துச் செல்வார். ஐநா அறிக்கையின் பிரகாரம் தினமும் 22000 சுமார் பேர் சிறுவர்கள் உலகில் பட்டினியால் மரணிக்கின்றனர். தான் வாழும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே அன்றாடம் யுத்தத்தின் நிமித்தம் பல நூற்றுக் கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். வாழ வழியில்லாமல் தடுமாறுகின்றனர். இவர் பின்பற்றும் மார்க்கம் வீண் விரயத்தினைக் கடுமையாக எதிர்க்கின்றது. இவ்வாறு இருக்கையில் இந்த ஆடம்பரம் தேவை தானா ? அண்மையில் மொஸ்கோ சென்ற வேளையில் இவரது இயந்திர தங்கப் படிக்கட்டுக்கள் செயலிழந்தமை காரணமாக தாமாகவே படிகளால் இறங்கி வர நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. சவுதி மன்னராட்சி.. இஸ்லாமிய உலகின் ஒரு சாபக்கேடு...

கலைஞர் :குஜராத்துக்கு அரிசி தருவதற்கு கழக அரசு தயார் Flashback !

Prakash JP · பட்டினியில் வாடிய குஜராத்துக்கே அப்போது அரிசி கொடுத்தது திமு கழக கலைஞர் ஆட்சி. கழகங்கள் இல்லாத தமிழகம்னு கூவும் வெக்கங் கெட்டவர்களுக்கு சமர்ப்பணம்..!!
Flash Back காந்தியார் பிறந்த மாநிலமான குஜராத்தில் பட்டினி போராட்டம், குடியரசு நாளை கூட கொண்டாட முடியாத சூழ்நிலை, துப்பாக்கி சூடுகள் ஓயவில்லை .
குஜராத் மாநிலத்துக்கு இயன்ற அளவு அரிசி தருவதற்கு கழக அரசு தயார் என்று முதலமைச்சர் கலைஞர், கருணாநிதி சட்டமன்றத்தில் உரை! 

வெள்ளி, 6 அக்டோபர், 2017

தங்க தமிழ்ச்செல்வன்: சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதித்தது தமிழக அரசே!

மாலைமலர் :சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு தமிழக அரசுதான் காரணம் என அவரது ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் பேட்டியளித்துள்ளார். சென்னை: சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு தமிழக அரசுதான் காரணம் என அவரது ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் பேட்டியளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் பரோல் கோரி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பத்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சிறைத்துறை சில நிபந்தனைகளுடன் கூடிய 5 நாள் பரோல் வழங்கியது. இதனையடுத்து, சிறை வளாகத்தில் இருந்து இன்று மாலை கிளம்பிய அவர் கார் மூலமாகவே சென்னை வந்தடைந்தார். அவருடன் டி.டி.வி தினகரன் உள்ளிட்டவர்களும் வந்தனர்.

இராமலிங்க வள்ளலார்! அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக

கிருஷ்ணசாமி தியாகராஜன்  :  இராமலிங்க அடிகள், திருவருட்பிரகாச வள்ளலார்.  சிதம்பரம் இராமலிங்க அடிகள். பிறப்பு அக்டோபர் 5, 1823
மருதூர், சிதம்பரம் அருகில் உள்ள கிராமம்,

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர்.
சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.
பிறப்பு
இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
பசியாற்றல் . அரிசி மூட்டைகள் இருக்கும் இராமலிங்க அடிகளால் உருவாக்கப்பட்ட தருமசாலை

ஜெயலலிதாவின் கடைசி நாள் .... அத்தனை கனவுக்கும் பேக் அப் சொல்லி முடித்தார் .


Shalin Maria Lawrence :"கட் ,ஷாட் ஓகே " தெலுங்கு இயக்குனர் சொல்லி முடித்ததும் கற்பூரம் ஏற்றப்பட்டு குழுவுக்கு திருஷ்டி சுற்றி தேங்காய் உடைக்கப்பட்டது . இன்று ஒரு நடிகையாக ஜெயலலிதாவின் கடைசி நாள் .
ஜெயலலிதா இன்று தன் வழக்கமான பரந்த ஆனால் பல் தெரியாத புன்னகையுடன் ஸ்டுடியோவிலிருந்து விடை பெற்று கொண்டார் .
தன் வழக்கமான எட்டு வடிவிலான நடையோடு ,கண்ணில் வரும் கண்ணீரை இமையை விட்டு இறங்க விடாமல் ,பாரமான கண்களுடனே ஸ்டூடியோ வாசலில் உள்ள தன் காரை நோக்கி சென்றார் .
இனிமேல் அவரால் தலை குனிய முடியாது ,குனிந்தால் கண்ணீர் சிதறிவிடும் ,இனிமேல் தலை நிமிர்ந்தே இருக்கவேண்டும் ,பெரியவர் ஒருவர் சொன்னது நினைவில் வர தயார்படுத்தி கொண்டார் .
ஆரம்பத்தில் வெறுத்த சினிமா இன்று பிடித்த சினிமாவாகி போயிருந்தது .அத்தனை கனவுக்கும் பேக் அப் சொல்லி முடித்தார் .
ஜெயலலிதா மெல்ல தன் வீட்டுக்குள் செல்ல ,ஆள் அரவமேயற்று இருந்தது தோட்டம் .
இன்று ஜெயலலிதாவின் கடைசி நாள் .ஆக வேண்டிய காரியங்களை பார்க்க துவங்கினார் ஜெயலலிதா .

மெர்சல் படத்துக்கு தடை இல்லை ..

விகடன்: சனா : அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் 'மெர்சல்'. மூன்று வேடங்களில் முதல் முறையாக விஜய் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என விஜய்க்கு இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். மேலும் முக்கியமான வில்லன் கேரக்டரில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. மெர்சல் இந்நிலையில் 'மெர்சலை' தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 'மெர்சல்' என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

திருமாவளவன் : கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் தலித் உட்பட அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்

tamilthehindu :கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு முன்வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''1924-ம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே 1936-ல் கோயில் நுழைவு சட்டம் இயற்றப்பட்டது. வைக்கத்தில் கோயில் இருந்த வீதி வழியாக நடப்பதற்கே போராட்டம் நடத்தப்பட்ட கேரளாவில் இப்போது இந்தியாவிலேயே முதல் முறையாக தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள கேரள இடதுசாரி அரசாங்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றி சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழக அரசு கேரள முன்மாதிரியைப் பின்பற்றி இங்கும் அர்ச்சகர்கள் நியமனங்களில் தலித்துகளுக்கு உரிய இடமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

BBC : 6 திரைப்படங்கள் வெளியீடு தடை... பொம்மி, உறுதிகொள், விழித்திரு, சோலோ, கடைசி பெஞ்ச் கார்த்தி, களத்தூர் கிராமம்

தமிழகத்தில் கேளிக்கை வரி சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, திரைப்படங்களுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. இதனால், அதிகபட்ச திரையரங்கக் கட்டணம் 120 ரூபாயிலிருந்து 153 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில், சமீபத்தில் 10 சதவீதம் அளவுக்கு கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டும், திரையரங்கக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அக்டோபர் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என முடிவெடுத்து அறிவித்தது.
அதன்படி, இன்று புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களில் வெளியான கருப்பன், ஹரஹர மஹாதேவகி, ஸ்பைடர் (தமிழ், தெலுங்கு), துப்பறிவாளன், மகளிர் மட்டும் ஆகிய படங்களே திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கேரளா கோவில்களில் தலித் மற்றும் இதர சாதியினர் குருக்களாக நியமனம்..


கேரளாவில் தலித்துகள் குருக்களாக நியமனம்!
மின்னம்பலம் : கேரளாவில் 6 தலித்துகள் உட்பட 36 பிராமணர் அல்லாதவர்கள் குருக்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு இன்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை கோயில் உட்பட 1240 கோயில்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகிக்கிறது. இந்தக் கோவில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ஆகமவிதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனப் பிரமாணர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு, 6 தலித்துகள் உட்படப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 36 பேரை இந்து ஆலய மதகுரு பணிக்காகத்தேர்வு செய்துள்ளது.

எதிர்கட்சி தலவைர் ஸ்டாலினுக்கு அவமதிப்பு ... ஆளுநர் விழாவில் புரோட்டோகோல் புறக்கணிப்பு

ஸ்டாலினுக்கு  அவமதிப்பு!
மின்னம்பலம் : இன்று (அக்டோபர் 06) நடைபெற்ற ஆளுநர் பதவியேற்பு விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாமல் அவமதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தின் 20ஆவது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று (அக்டோபர் 06) பதவிப் பிரமாணம் எடுத்துப் பொறுப்பேற்றுக்கொண்டார். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதிய ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஆளுநர் பதவியேற்பு விழா முடிந்த பின் வாழ்த்து தெரிவிக்க முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப்பட வேண்டும்.

ஜூலி : கமல் ஒருபக்க சார்ப்பாக நடந்துகொண்டாரோ என்று எண்ணுகிறேன்

வெப்துனியா : பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் வழங்கியது. 100 நாட்கள் நடைபெற்ற இந்த ரியாலிட்டி ஷோவை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதில் சில நேரங்களில் கமல் ஒரு சார்பாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிக பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் எல்லோரும் திரைத்துறையை சேர்தவர்கள். அவர்களில் சாதாரண பெண்ணாக ஜல்லிக்காடு புகழ் ஜூலி கலந்துகொண்டார். தொடக்கத்தில் புகழப்பட்ட, தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட ஜூலி இறுதியில் மிகவும் அதிகமாக திட்டப்பட்ட, வெறுக்கப்பட்ட நபராக மாறினார்."

கலைஞர் புன்னகைக்கு என்ன அர்த்தம்? ,,,, குணமடைகிறார்,,

வெப்துனியா : கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டிலேயே இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பார்த்து புன்னகைக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.<>திமுக தலைவர் கருணாநிதிக்கு முதுமை காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் கோபாலபுர இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<>இந்நிலையில் அவ்வப்போது திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர் குறித்து வதந்திகள் பரவும் போது புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தார் ... youtube


தினதந்தி : பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சென்னை வரும் சசிகலாவை வரவேற்கத் தமிழகம் முழுவதிலுமிருந்து கட்சித் தொண்டர்கள் வரத்தொடங்கிவிட்டனர். பல ஆயிரம் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
 சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கேட்டு சசிகலா சார்பில் சிறை அதிகாரிகளிடம் கடந்த 3-ந் தேதி மனு கொடுக்கப்பட்டது.

நகை வாங்க பான்காட் அவசியமில்லை

மாலைமலர் :புதுடெல்லி: கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மத்திய நிதி மந்திரி தலைமையில் மாநில நிதி மந்திரிகளின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நகை வாங்குபவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல்  நகை வாங்குபவர்களுக்கு பான்கார்டு அவசியம் இல்லை எனவும் அவர்களின் விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரூ.3 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை ரிட்டன் தாக்கல் செய்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடிக்கு பயந்து ஆசிரியரை நீக்கிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் !

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளின் ஆசிரியர்
பாபி கோஷ், கடந்த செப்.11, 2017 அன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். அவர் தனது சொந்தக் காரணங்களுக்காக அமெரிக்கா திரும்பவிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.
மோடியுடன் ஷோபனா பார்த்தியா
ஆனால் பாஜக தரப்பிலிருந்தும், அரசு அதிகாரிகள் மட்டத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நிர்பந்தங்களின் காரணமாகத்தான், பத்திரிக்கை நிர்வாகத்தால், அவர் இராஜினாமா செய்ய வைக்கப்பட்டார் என ’தி வயர்’ இணையதளம் தெரிவிக்கிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் கோஷுடன் பணிபுரிபவர்களும் அவ்வாறே கருதுவதாகக் கூறுகிறது.
பாபி கோஷ் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இதற்கு முன் ‘குவார்ட்ஸ்’ என்ற பத்திரிக்கையின் நிர்வாக இயக்குனராகவும், ’டைம்’ பத்திரிக்கையின் சர்வதேச பதிப்புக்கு ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஆசிரியராக பதவியேற்ற பின்னர், பல புதிய புதிய விசயங்களைச் செயல்படுத்தினார்.

தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது... 2 நாட்கள் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தினத்தந்தி : தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது என்றும், ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர்.
சென்னை, நாடு முழுவதும் 9, 10 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது என்றும், ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்(தென் மண்டலம்) துணை தலைவர் பி.வி.சுப்பிரமணி, சென்னை சரக்கு போக்குவரத்து சங்கத்தின் தலைவர் பி.கே.அகர்வால் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- ஜி.எஸ்.டி. வரி, டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் ஆகியவற்றால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மாதம் ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும்.

சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது ! கடுமையான நிபந்தனைகளுடன் சிறைத்துறை ...

 தினகரன் :பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் வீட்டில் தங்குவதாக மனுவில் சசிகலா கூறியுள்ளார். கடும் நிபந்தனையுடன் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. கணவரை தவிர வேறு யாரையும் சந்திக்ககூடாது என்றும் கட்சி மற்றும் அரசியல் காரணமாக யாரையும் சந்திக்ககூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  சிகிச்சை பெற்று வரும் கணவனை காண சசிகலா பரோல் கேட்டிருந்தார். சசிகலாவை அழைத்து வர  டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றுள்ளார்.

ஜல்லிகட்டு .. பிக் பாஸ் ஜூலி ,,, மிகப்பெரும் நட்சத்திரம் உருவாகிறது?

நக்கீரன் : 'பிக்பாஸ்' போதையிலிருந்து அதன் பார்வையாளர்கள்  மெல்ல மீண்டுவருகிறார்கள்.  நிகழ்ச்சி நடந்த நூறு நாட்களிலும் தொடர்ந்து அதிகமாகப் பேசப்பட்டவர்கள் இருவர். ஒருவர், ஓவியா. ஓவியா ஆர்மி, ஆரவுடன் காதல், கொக்கு நெட்டைக் கொக்கு என அவரது சேட்டைகள் பேசப்பட, இன்னொரு பக்கம்  ஓவியாவுக்கு துரோகம், போராட்டமெல்லாம் நடிப்பு, மாடர்ன் மாற்றம் என மக்களால் அதிகம் பேசப்பட்டவர், சரியாகச் சென்னால்  திட்டப்பட்டவர்  ஜூலி. திடீரென புகழப்பட்டு, அதே வேகத்தில் இகழப்பட்டு, இப்பொழுது இரண்டுக்கும் ஓய்வு விட்டு இருக்கும் ஜூலியிடம் பேசினோம்...'ஜல்லிக்கட்டு', 'பிக் பாஸ்' இது எல்லாவற்றுக்கும் முன்னர், ஜூலி யார்?<">என் பேரு மரிய ஜூலியானா. என்னைத் தெரியாதவங்க இருக்க முடியாது. நான் பிறந்தது சென்னையில தான். பேரு வச்சது ஊர்ல. திரும்ப ஸ்கூல் சேக்குறதுக்கு சென்னை வந்துட்டோம். செயின்ட் டாமினிக்ஸ் ஸ்கூல்ல தான் படிச்சேன்.  டாக்டராகணும்னு ஆசைப்பட்டேன். குடும்ப சூழ்நிலைனால, ராமச்சந்திரா பல்கலைக்கழகத்துல நர்சிங் படிச்சேன்.

சசிகலாவை சந்திப்போம்: 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி!

பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குலோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு 15நாட்கள் பரோல் கோரி சசிகலா மனு அளித்திருந்தார். இதையடுத்து அவருக்கு பரோல் வழங்க பெங்களூர் சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சசிகலா குறைந்த பட்சம் 5 நாட்கள் வரை சென்னையில் தங்க உள்ளார்.இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சசிகலாவை சந்திக்க விருப்பம் முள்ளவர்கள், ஏற்கனவே சசிகலா மூலம்  சீட் வாங்கிய எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சசிகலா மீது உள்ள விசுவாசத்தின் அடிப்படையில் அவர் இங்கு வரும் போது சந்திக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடமும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் கூறியுள்ளனர்.

அதிமுக காவல் துறையில் புதிய வாக்கி டாக்கி ஊழல்

Specialcorrespo : 2017-18 ஆம் ஆண்டில் காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கொண்டு 10 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக மொத்தம் ரூ.83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியுள்ளார்.
காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரிய நிலையில் வாக்கி-டாக்கி வாங்கும் விஷயத்தில் மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.

வியாழன், 5 அக்டோபர், 2017

குஜராத் கொலைவெறியாட்டம் .. மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!


முதல்வராக இருந்த நரேந்திர மோடி உட்பட சிலருக்குப் பங்கு உண்டு என்றும் கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி மாவட்ட நீதிமன்றத்தில்
minnambalam : குஜராத் கலவரம் தொடர்பாக ஜகியா ஜாப்ரி என்பவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில் நின்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. ரயில் இருந்த கர சேவகர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 1044 பேர் உயிரிழந்தனர், 2500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம், சொத்துகளை இழந்து அகதிகளாய் நின்றனர்.
இந்தக் கலவரத்தைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடி உட்பட சிலருக்குப் பங்கு உண்டு என்றும் கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நடராஜன் சிகிச்சை கேள்விகள் .... மூளை சாவு அடைந்ததாக கூறப்படும் இளைஞன் ,,, பதில்களை தேடி...

அரவிந்தன் சிவக்குமார்: "மனித சதை எப்பொழுதுமே கீழிருந்து மேல் நோக்கியே செல்லும் . ஏழைகளின் ஆரோக்கியத்தையும் உடல் வலுவையும் ஊறுஞ்சுவதோடு மட்டுமல்லாமல் உறுப்புகளை பிடுங்கி எடுத்து பணக்காரர்களுக்கு பரிசளிக்கும் ரத்தக்காட்டேரிகள் கட்டுப்பாடில்லா சந்தைகள்."
. . . . சிவப்பு சந்தை :ஸ்காட் காரி
19 வயது இளைஞர் சாலை விபத்து ஏற்பட்டது . கூலித்தொழிலாளி. தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கபட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம். அவர் தந்தை கூலித்தொழிலாளி அவரை மேல் சிகிச்சைக்கு வேண்டி தஞ்சை மருத்துவர்களின் அலோசனைக்கு ,மாறாக கோவை கங்கா மருத்துவமனைக்கு தொடர்பு கொள்கிறார்.தன் மகன் பெயரில் பயணத்திற்கான செலவு ரசீது போடப்படுகிறது தஞ்சையிலிருந்து திருச்சி ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சம் தன் மகனின் உடலை திருச்சிக்கு விமானத்தில் வருகிறது.அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு . அந்த கார்பொரெட் மருத்துவமனையின் கார்பொரெட் நரம்பியல் மருத்துவர்கள் உடல் வந்தவுடன் மூளைச்சாவு என்று முத்திரையை தன் மகனின் முகத்தில் குத்தியவுடன் கல்லீரலும் சிறு நீரகமும் அறுவடை செய்து எடுத்துக் கொண்டார்கள். அது யாருக்கு போனதென்று இன்றைய செய்தித்தாளில் படித்திருக்கலாம். தன் மகனின் நுரையீரல், இருதயம் , யாருக்கு சென்றது, தோல், கண்கள் ..... மகனின் எலும்புக் கூட்டை மட்டுமாவது கொடுத்தார்களா ? அதை எப்படி சொந்த ஊருக்கு எடுத்து சென்றார் அந்த கூலித்தொழிலாளி?

மதவெறி வீழ்த்தி நல்லிணக்கம் காக்கும் படை - தமிழக மக்கள் ஒற்றுமை மேடை

நக்கீரன் : மக்களை வேறுபடுத்தி பிரிக்கும் மதவெறியை வீழ்த்தவும், வேற்றுமையில் ஒற் றுமை வளர்க்கும் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கவும் களமிறங்கிச் செயல்படுவதற்காக ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ உதயமானது.
<">மதவெறியை வீழ்த்தி, நல்லிணக் கத்தை உயர்த்திப் பிடிக்கும் படையாக இது பரிணமிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.ஆர்எஸ்எஸ்-பாஜக பின்புலத்தோடு இந்தியாவின் பன்முகப் பண்பாட்டைச் சீர்குலைக்கவும், மக்களை மதவாத அடிப்படையில் பிரித்தாளவும் பல்வேறு முயற்சிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. மாற்றுக் கருத்துகளையும் மக்கள் நல்லிணக்கச் சிந்தனைகளையும் பரப்புகிறவர்கள் மீது கொலை உள்ளிட்ட வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் இது பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.இந்தச் சூழலில் பல்வேறு துறைகளையும் தளங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்த இயக்கமாக ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ உருவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘சென்னை மக்கள் மேடை’ அமைப்பும் தொடங்கப்பட்டது.

பாபா ராம்தேவ் இந்தியாவின் 19-வது பணக்காரனாக உயர்ந்தார் Forbes இதழ் ,, அம்பானி

மாலைமலர் :போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் 100 முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் பதஞ்சலி நிறுவன இயக்குனர் பாபா ராம்தேவ் 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். புதுடெல்லி: இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2017 என்ற தலைப்பில் பிரபலமான போர்ப்ஸ் நாளிதழ் இந்தியாவில் உள்ள 100 முன்னணி பணக்காரர்கள் அடங்கிய வருடாந்திர பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10-வது வருடமாக முதலிடத்தில் நீடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு 2 லட்சத்து 47 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஆகும். பதஞ்சலி நிறுவன இயக்குனர் பாபா ராம்தேவ் கடந்த ஆண்டு 48-வது இடத்தில் இருந்தார். தற்போது அவர் 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

கேரளா ..38 அடி நீள லிமோசின் கார்!

38 அடி நீள லிமோசின் கார்!
மின்னம்பலம் : ஒரே நேரத்தில் 18 பேர் பயணம் செய்யக் கூடிய 38 அடி நீள லிமோசின் ரக கார் வாகன பதிவுக்காக கேரளா வந்துள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்குள் மக்கள் ஆர்வமுடன் வந்து அந்த காருடன் செல்ஃபி எடுத்து சென்றனர்.
உலகின் மிகப்பெரிய கார் என்று லிமோசின் கூறப்படுகிறது.கூடுதல் சொகுசு வசதி மற்றும் அதிக இடவசதிக்கு பெயர் போனது லிமோசின் ரக கார்கள். இதில், டிரைவருக்கு தனி கேபின், கம்ப்யூட்டர் வசதி, 'டிவி', மியூசிக் சிஸ்டம், மினி பார், வாஷ் பேஸின் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது. இந்த காருக்குள்ளே பிசினஸ் மீட்டிங்,மற்ற விவாதங்களும் நடைபெறும்.
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கானூர் பகுதியைச் சேர்ந்த பாபு ஜான் துபாயில் தொழிலதிபராக உள்ளார். சினிமேக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர் வைத்துள்ளார். இவரும், பஞ்சாபைச் சேர்ந்த குருதேவ் சிங் என்பவரும் சேர்ந்து, எட்டு கோடி ரூபாய் விலை மதிப்புள்ள லிமோசின் காரை வாங்கினர்.

சசிகலாவை சந்திக்க எடப்பாடி அணியில் உள்ள ஓ.எஸ்.மணியன் தீர்மானம்

வெப்துனியா :தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிருப்தியில் இருப்பதாகவும், மீண்டும் தினகரனை அதிமுகவில் சேர்க்க ஓ.எஸ்.மணியன் திட்டமிட்டுள்ளதாகவும் நாம் முன்னரே கூறியிருந்தோம். அதற்கேற்ப இன்றோ, நாளை காலையோ பரோலில் வர உள்ள சசிகலாவை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதிமுகவின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணைந்ததை அடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த பொதுக்குழுவில் சசிகலாவையும், தினகரனையும் நீக்கி வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் சில அதிமுகவினர் தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவார் என பேசி வருகின்றனர். தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சமீபத்தில் தினகரனும், சசிகலாவும் விரைவில் தங்களுடன் சேருவார்கள் என கூறி தினகரனுக்கு ஆதரவாக பேசினார். ஆனால் இவர்களது கருத்து அவர்கள் தனிப்பட்ட கருத்து என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள கே.பி.முனுசாமி கூறினார். இந்நிலையில் மீண்டும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் செய்தியாளர்கள், தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினர்.