சனி, 6 ஆகஸ்ட், 2022
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் ஆவியுடன் பேசுவதாக பிரபல ஆவி நிபுணர் சார்லி சிட்டன்டன் வீடியோ Charlie Chittenden Paranormal
இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். வெளிநாட்டில் வாழ்ந்து வந்தாலும் பல நாடுகளில் மர்மமாக உயிரிழந்தவர்களின் ஆத்மாவோடு பேசுவதாக கூறி பல்வேறு வீடியோக்களை போட்டுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா முதல் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்க் வரை அவரவர் ஆவிகளுடன் பேசுவதாக வீடியோ போட்டு தமிழ் ரசிகர்களிடமும் சார்லி சிட்டன்டன் பிரபலமாகியுள்ளார்.
கேரளா - லெஸ்பியன் ஜோடிகள் ஹோலி வூண்ட் பட காட்சிகள் கேரளா கேரளாவை அதிர வைக்கும் லெஸ்பியன் ஜோடிகள்
கேரள ஐகோர்ட்டு இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் உறவினர்கள் யாரும் எந்த விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்றும் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
கேரளாவில் நிஜத்தில் ஒன்று... நிழலில் ஒன்று என 2 லெஸ்பியன் ஜோடிகள் அம்மாநிலத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி என்னதான் நடந்துள்ளது? வாழ்க்கையில் லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை என்று கேரள கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அந்த பரபரப்பு அடங்கும் முன்னரே லெஸ்பியன் சினிமா ஒன்றின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி மூச்சு முட்ட வைத்துள்ளன.
கிருஷ்ணகிரியில் வாக்கிங் சென்றவர்கள் மீது மோதிய கார்! தூக்கி வீசப்பட்ட 4 பேர் உயிரிழப்பு
tamil.asianetnews.com - vinoth kumar : கிருஷ்ணகிரி அருகே நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் மீது கார் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்ன பர்கூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (38). இவர் நண்பர்களான பாக்கியராஜ்(40), சுஜித்குமார்(39), கண்டவீரவேல்(35) ஆகியோருடன் தினமும் மாலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
இந்நிலையில், நண்பர்கள் 4 பேரும் சென்னை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த கார் சாலை ஓரமாக நடந்து சென்ற 4 பேர் மீதும் பயங்கரமாக மோதிவிட்டு பள்ளத்தில் இறங்கியது.
ரணில் விக்கிரமசிங்க - ஊடகங்களால் தொடர்ந்து.... இன்றுவரை பந்தாடப்படுபவர்!
விக்டர் ஐவன் - ஊடகவியலாளர்/ கல்விமான்)
நாட்டில் விசித்திரமான முறையில் விஷயங்கள் நடந்து வருகின்றன.
போராட்டக்காரர்களின் விருப்பு வெறுப்புகள் எதுவாக இருந்த போதும்,
போராட்டமானது அரசியல் அர்த்தத்தில் வழங்கிய முக்கியமான முடிவுகளில் ஒன்று பின்வருமாறு;
மிகப் பெருமளவான பொதுமக்களின் வாக்குப் பலத்துடன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த, ஆட்சியதிகாரம் குறித்து எதுவுமே அறிந்திராத கோட்டாபய ராஜபக்ஷ,
தனது பதவிக்காலத்தில் பாதி நிறைவடைந்திருந்த நிலையில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு,
ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே உரித்தாக்கிக் கொண்டிருந்த , ஆட்சியதிகாரம் குறித்து நன்கு அனுபவம் வாய்ந்தவராக கருதப்படக்கூடிய ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் விருப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
Sri Lanka president wants to avoid trade integrations with India .. Fearing political pressure
ECONOMYNEXT – Amid fears of a growing cold war between India and China within the country, Sri Lanka President Ranil Wickremesinghe wants to avoid any trade integration with India or any other South Asian nation after some bitter lessons in the past.
When he was in power in the past two decades, he attempted to have greater trade and comprehensive economic partnership with India, However, his attempts met with strong opposition by politically motivated trade unions and center-left political-party led oppositions amid false propaganda.
Since the end of a nearly three-decade war in 2009, Sri Lankan leaders have struggled to balance between India and China.
Beijing’s willingness to invest in Sri Lanka’s infrastructure has been frowned upon by India amid an intensifying cold war with India in Sri Lankan territory as China’s influence in Sri Lanka is seen as a security threat to the Indian Ocean.
பெண்கள் இலவச பிங்க் நிற பேருந்துகள்- சென்னையில் இன்று முதல் இயக்கம்
எனினும் அவசரத்தில் சில பெண்கள் இலவச பயணத்திற்காக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை தீர்க்கவும், இலவச பயணத்திற்கான பேருந்துகளை அடையாளம் காணவும் பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
தைவானை அச்சுறுத்தும் சீனா அமெரிக்கா கடும் எச்சரிக்கை
தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தன்னுடன் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டுள்ளது.
தேவைப்பட்டால் தைவானை கைப்பற்றுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது
.இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவான் வந்தார்.
முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர்: ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்!
தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டதால், இரண்டு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக, கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி, கண்ணூர், வயநாடு ஆகிய 9 மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது.
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022
27 பேருக்கு ஆயுள் தண்டனை: கச்சநத்தம் படுகொலை வழக்கில் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் 2018ஆம் ஆண்டு கோயில் திருவிழா நடந்தது. அப்போது கோயில் மரியாதை செய்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(65), சண்முகநாதன்(31), சந்திரசேகர்(34) ஆகிய மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த கும்பல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தி, அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் கைது
நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் வந்து கொண்டிருந்த நிலையில், அவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் குறுக்கிட்டதால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சீனாவின் போரை எதிர்கொள்ளத் தயார் - தைவான் ராணுவம் பகிரங்க அறிவிப்பு
சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. 1927-ம் ஆண்டில் ஆளும் கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. இதன்காரணமாக 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நீடித்தது. இந்தப் போரில் தோல்வியை தழுவிய சீன தேசியக் கட்சியினர், தென் சீன கடலில் 168 தீவுகள் அடங்கிய தைவானில் குடியேறினர். அந்தப் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
கைது வளையத்தில் இரு தமிழக அமைச்சர்கள்?
மின்னம்பலம் : கைது வளையத்தில் இரு தமிழக அமைச்சர்கள்: அமித் ஷாவின் அமலாக்க அஜெண்டா!
மொபைல் டேட்டா ஆன் செய்ததும், யூட்யூபில் ஒரு ஷார்ட் வீடியோ வந்து விழுந்திருந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் காரசாரமாக பேசிக் கொள்கிறார்கள்.
செந்தில்பாலாஜியை பற்றி பேசும்போது அண்ணாமலை, ‘வெயிட் பண்ணுங்க. அமலாக்கத்துறை இப்ப பிசியா இருக்கற மாதிரி தெரியுது. அவங்க கொஞ்சம் ஃப்ரியாயிட்டு இந்தப் பக்கம் வருவாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்’ என்று சொல்லியிருக்கிறார். இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘ஒன்றிய அரசின் ஆளுங்கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் அமலாக்கத்துறை என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார் என்றால், அமலாக்கத்துறையை தங்களது அரசியல் விருப்புவெறுப்புக்காக பாஜக எப்படி பயன்படுத்துகிறது என்று இதிலிருந்தே தெரிகிறது. அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குனர் ஆனார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் உடல்.. 4 பேர் தூக்கி செல்லும் புதிய சிசிடிவி வீடியோ காட்சி..!
asianet .co vinoth kumar : தரையில் கிடந்த ஸ்ரீமதியின் உடல்.. 4 பேர் தூக்கி செல்லும் புதிய சிசிடிவி வீடியோ காட்சி..!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தத மாணவி கடந்த மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி ஒப்படைக்கப்பட்டது. மாணவி தற்கொலை தொடர்பாக கிடுக்குப்பிடி விசாரணையில் சிபிசிஐடி போலீசார் இறங்கியுள்ளனர்.
வியாழன், 4 ஆகஸ்ட், 2022
திரையுலக ஃபைனான்சியர் - ஐடி ரெய்டு..கண், விரல் ரேகை லாக் பிரச்சினை..13 மணி நேரம் காத்திருந்து கதவை திறந்த ஐடி அதிகாரிகள்
இதில் ஒரே ஒரு வீட்டில் மட்டும் கதவில் நவீன லாக் அமைக்கப்பட்டிருந்ததால் கதவை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.கதவை திறப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 13 மணி நேரம் அதிகாரிகள் காத்திருந்தனர்.2 ஆம் நாளாக தொடரும் வருமான வரித்துறை ரெய்டு ! தமிழ் திரையுலகைச் சார்ந்த முக்கிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இல்லங்களில் வருமானவரித்துறை ரெய்டு தொடர்ந்து 2 வது நாளாக நடந்து வருகிறது. திரைத்துறையில் இதுபோன்று மொத்தமாக முன்னணி தயாரிப்பாளர்கள் இல்லம், அலுவலகங்களில் சோதனை நடந்ததில்லை. நேற்று அதிகாலை தொடங்கிய ரெய்டு இரண்டாம் நாளாக தொடர்கிறது.
ஸ்ரீ ரங்கம் பெரியார் சிலை - கனல்கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு
நக்கீரன் செய்திப்பிரிவு : சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி கூட்டங்களில் பங்கேற்று வரும் நிலையில், கடந்த 30ஆம் தேதி மதுரவாயல் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே இருக்கக்கூடிய பெரியார் சிலை குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியோர் தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கா, சீனா ராணுவங்கள் குவிப்பு தைவான் எல்லையில் போர் பதற்றம்: விமானங்கள், கப்பல்கள், வீரர்கள் தயார்நிலை
தினகரன் : தைபே: அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால், அமெரிக்கா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தைவானுக்கு உரிமை கோரி வரும் சீனா, அந்த நாட்டுக்கு அமெரிக்கா உட்பட தனது எதிரி நாடுகளின் தலைவர்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது.
அதன் கடும் எதிர்ப்பையும், மிரட்டலையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி நேற்று முன்தினம் தைவானுக்கு சென்றார்.
அவருடைய பயணத்தை தடுக்கும் வகயைில், தைவான் எல்லைக்குள் 21 போர் விமானங்களை அனுப்பி அச்சுறுத்தியது.
கடலில் போர் கப்பல்களையும் நிறுத்தி பயமுறுத்தியது. ஆனால், அமெரிக்க போர் விமானங்களின் புடை சூழ தைவானுக்கு பெலோசி சென்றார். இது, சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை அளித்துள்ளது.
இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெலோசி பயணம், ‘ஒரே சீனா கொள்கை’யையும், சீனா- அமெரிக்கா கூட்டு ஒப்பந்தங்களையும் மீறிய செயல்.
கோத்தா கோ கம போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற ஓகஸ்ட் 05 வரை அவகாசம்
காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அனுமதியின்றி தங்கியுள்ள அனைவரும் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு முன் வெளியேற வேண்டுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதற்கமைய இன்றையதினம் (03) குறித்த பகுதிக்குச் சென்று கொழும்பு கோட்டை பொலிஸார் பின்வரும் அறிவிப்பை அவர்களுக்கு விடுத்ததாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள அனைத்து நபர்களுக்கும் இலங்கையை பொலிசார் விடுக்கின்ற அறிவிப்பு
புதன், 3 ஆகஸ்ட், 2022
3 மாணவிகள் உயிரை குடித்த எஸ்விஎஸ் கல்லூரி.. அதிகாரிகளை திருப்பி அனுப்பியதால் அதிர்ச்சி!
tamil.samayam.com - Govindaraji Rj : கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் எஸ்.வி.எஸ் சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவ மாணவிகள்,
15-க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் சேர்ந்து 2 வருடங்கள் ஆன நிலையில் கொரோனா காலத்தில் முறையாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தவில்லை எனவும், நேரடி வகுப்பில் கல்லூரிகளில் தங்கி படிக்கும் பொழுது அங்கு எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லை எனவும் கல்லூரி நிர்வாகத்தில் முறையிட்டு தங்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்கிறோம் கேட்ட பொழுது நிர்வாகத்தின் தரப்பில் அவர்களுக்கு மிரட்டல் விட்டதாக தெரியப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனரகம் மற்றும் தமிழக முதல்வரின் நேரடி பிரிவிற்கும் புகார் மனுவை அளித்துள்ளனர். இதனை அடுத்து சுகாதாரத்துறை இயக்குனரகம் மூலம் வேறு கல்லூரிகளுக்கு செல்ல விருப்பமுள்ள மாணவர்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
"5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு"- ஆ.ராசா குற்றச்சாட்டு!
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றிருக்கிறார்.
ரூபாய் 5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ரூபாய் 1.50 லட்சம் கோடிக்குத்தான் சென்றுள்ளது.
எஞ்சிய பணம் எங்கே சென்றது என்று மத்திய அரசுதான் பதிலளிக்க வேண்டும். 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.
அல்-கொய்தா தலைவர் நடமாட்டத்தை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுத்த பாகிஸ்தான் அரசு
ஆளில்லா விமானத்தை (டிரோன்) எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது என்பதில் கேள்வி எழுந்தது. அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்ட அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது.
இந்த நிலையில் அந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்த பங்களிப்பும் இல்லாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார்.
தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளின் வரலாறு
Susairaj Babu :; 2016ஆம் ஆண்டு என் முகநூல் பதிவை மீண்டும் இங்கு பதிவிடுகிறேன், முழுமையாக படிக்க விரும்புவர்கள் படிக்கவும் தமிழை தமிழில் வரலாற்றை தமிழில் ஆர்வலர்களை அறிய விரும்புவோர்களும் படிக்கவும்.
தமிழ் மொழியின் தூதர் என்று அறியப்பட்ட சேவியர் தனிநாயகம் நினைவு தினம் செப் 2
சிறப்பு பகிர்வு
சேவியர் தனிநாயகம் அடிகள் எனப்படும் தமிழ் மொழியின் தலைமகனின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் உள்ள இலங்கையில் உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக நூற்றியொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார். இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து திருவனந்தபுர மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றினார்.
காட்டாற்று வெள்ளத்தில் தவித்த காட்டுயானை.. மனித நேயத்தோடு மீட்ட கேரள அரசு
கேரளாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல பகுதியில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் பணியை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இதனிடையே காடுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வனவிலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை திருவொற்றியூரில் ரசாயன வாயுக் கசிவு: ஒரு மாத காலமாக மூச்சுத் திணறும் மக்கள்
இதுபோல, ஒரு நாள் அல்ல கடந்த ஒரு மாத காலமாக சென்னை திருவொற்றியூர் பகுதிவாசிகள் தினம் தினம் நடுஇரவில், மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு ரசாயன வாயுகசிவால் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.
குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் கண்எரிச்சல், தலைவலி போன்றவற்றை அனுபவிப்பதாக கலங்குகிறார்கள். கடந்த ஒரு மாத காலமாக ரசாயன வாயு பரவுவதால் அச்சத்தில் உறைந்துள்ளனர். தமிழ்நாடு மாசுக்காட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் சோதனை செய்ததில், சல்பர் டை ஆக்சைட் வாயு பரவிவருவதாக தெரிவித்தனர்.
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022
இலங்கை அரசிடம் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Douglas Devananda : தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும்
சர்வ கட்சி பொது வேலைத்திட்டத்தில் தீர்வு வேண்டும்
ஜனாதிபதியின் அழைப்புக்கு அமைச்சர் டக்ளஸ் பதில்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்;.
ரணில் அரசுக்கு தமிழ் தேசிய கூட்டணி ஆதரவு! தலைவர் சம்பந்தர் அறிவிப்பு
BBC : சர்வகட்சி அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக சம்பந்தன் தெரிவிப்பு
நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வகட்சி அரசு மிக அவசியம் எனவும் குறித்த செயற்பாட்டிற்கு தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக இன்றைய தமிழ் பத்திரிகைகளில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள நிலையிலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நடத்தவுள்ள கலந்துரையாடலில் பங்குபற்றுவதுடன் இயன்ற வரை அனைத்து ஒத்துழைப்பினையும் நல்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானில் அல்கொய்தா தலைவர் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார் .. ட்ரான் தாக்குதல் அய்மன் அல்-ஜவாஹிரி
பல ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு அமைப்பு, ஜவாஹிரிக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது தொடர்பாக அமெரிக்கா பல்வேறு தகவல்களை சேகரித்து வந்தது. கடந்தாண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு, அங்கு ஜவாஹிரியின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணிக்கும் பணிகளை அமெரிக்காவின் சிஐஏ தொடங்கியது. இந்நிலையில், ஜவாஹிரி தனது மனைவி, மகள் மற்றும் அவரது பிள்ளைகளுடன், காபூலின் ஷெர்பூர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியது தெரிய வந்திருக்கிறது.
ரூ. 76 ஆயிரம் பணத்திற்காக நடிகர் விஜய்யின் தந்தை சந்திர சேகர் வீடு ஜப்தி.
இந்த படத்தின் விளம்பர செலவு ரூ. 76 ஆயிரத்தைத் திருப்பி தராததால் விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் மீது அல்லிக்குளம் 25 வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
அதில், "சட்டப்படி குற்றம் படத்தை விளம்பரப்படுத்த எஸ்.ஏ சந்திரசேகருடன் ரூ. 76 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் அவர் ஒப்பந்தத்தின் படி பணத்தை தரவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
பரந்தூர் புதிய விமான நிலையம் தமிழக வளர்ச்சிக்கு படிக்கட்டு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் வளர்ச்சிப் பெற்ற-கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
தனிநாயகம் அடிகளாரை மறந்த தமிழ்ச் சமூகம்! பிறந்த நாள்: 2.8.1913
Subashini Thf : தனிநாயகம் அடிகளாரை மறந்த தமிழ்ச் சமூகம்!
பிறந்த நாள்: 2.8.1913
சினிமா நடிகர்களைப் பற்றி மட்டுமல்ல- அவர்களது வரலாற்றையே கரைத்துக் குடித்து வைத்திருக்கும் நாம், தனிநாயகம் அடிகளார் என்ற பெயரையாவது அறிந்திருக்கின்றோமா? அவர் என்ன செய்தார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியிருக்கின்றோமா?
அவரைப் பற்றி இதுவரை நாம் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு நாம் வெட்கப்படத்தான் வேண்டும். ஆயினும், இப்பதிவின் வழி ஓரளவேனும் அவரது பணிகளை அறிந்து கொண்டு இச்செய்தியை ஏனையோருக்கும் பகிர்ந்து உண்மையான தமிழ்த்தொண்டை ஆற்றுவோமா!
தனிநாயகம் அடிகளார் - தமிழின் இலக்கிய வளத்தை உலகறியச் செய்ய வேண்டும் எனத் தீவிரமாக சிந்தித்தவர்; அதற்காகத் தீவிரமாக உழைத்தவர்; தீவிரமாகப் பயணம் செய்து சாதித்தவர்.
கர்நாடக சித்தகங்கா சிவண்ணா என்கிற சிவகுமாரசுவாமிகள் வயது 102! ...1000 குழந்தைகள் ..ஒருவர் கூட காணாமல் போகவில்லை
Arivazhagan Kaivalyam : முதன்முதலாக அவரது படத்தை ஒரு அலுவலகத் தோழியின் வீட்டில் பார்த்தபோது வழக்கமான ஒரு வெறுப்புணர்வு எனக்குள் பரவியது, முழுக்க காவி போர்த்திய பழுத்த முகத்தில் திருநீறு நிறைந்திருந்தது.
தோழியின் வீட்டில் இருந்து வெளியே வரும்போது படத்தை மறுபடி ஒருமுறை கூர்ந்து பார்த்தபடி அவளிடம் கேட்டேன்,
"இந்த சாமியாரின் பெயர் என்ன?", உணர்வுப்பூர்வமாக அவள் படத்தையும் என்னையும் பார்த்தபடி
"இவரது பெயர் சிவகுமாரசுவாமிகள்" சிவகங்கே மடத்தின் மடாதிபதி, வீரசைவர்கள் எனப்படும் கௌடாக்களின் வழிகாட்டி." என்றாள்.
வழக்கமாக கர்நாடகாவில் வசிக்கும் பல்வேறு இனக்குழுக்களின் வீடுகளில் ஏதாவது ஒரு சாமியாரின் படமிருக்கும், மதநம்பிக்கைகளிலும், பக்தியிலும் வடவர்களுக்கு எந்த விதத்திலும் சளைக்காதவர்கள் கர்நாடக மக்கள்.
திங்கள், 1 ஆகஸ்ட், 2022
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களை காப்பாற்ற முயலவில்லை .. மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி
ஜாவ்நா முஸ்லீம் : ராஜபக்ஷக்களைப் பாதுகாக்கத்தான் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலில் முன்னிலைப் படுத்தப்பட்டதாகவும், இதற்காகவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான எம்.பிக்கள் வாக்களித்தனர் என்பதும் எதிர்க்கட்சிகளின் வங்குரோத்துப் பிரச்சாரம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்தார்.
கேள்வி:- ராஜபக்ஷக்களின் எதிர்காலத்தை மீளக்கட்டி எழுப்பும் நோக்குடனே புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொதுவாக விமர்சிக்கப்படுகிறது. இதிலுள்ள உண்மைகள் என்ன?
எடப்பாடி இல்லாத அதிமுக: பண்ருட்டி வீட்டில் உருவான எம்.ஜி.ஆர். ஃபார்முலா ப்ளான்
தெற்கே உசிலம்பட்டி கணவாய் அருகே சாஸ்தா கோவில் வாசலில் பன்னீர் ஆதரவாளரும் அதிமுக மாசெவுமான சையது கான் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த படம். வடக்கே சென்னையில் அதிமுகவின் பழம்பெரும் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று சசிகலா சந்தித்த படம். இந்த படங்களை அனுப்பி விட்டு வெய்ட்டிங் என்று ஒரு குறிப்பும் கொடுத்திருந்தது இன்ஸ்டா, அந்தப் படங்களுக்கு பதிலாக மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “அதிமுக மீண்டும் பரபரப்பின் மையத்துக்கு வந்திருக்கிறது. ஒரே நாளில் இருவேறு சந்திப்புகள் அதிமுக கூடாரத்துக்குள் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி கடந்த மாதம் 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
என் டி ராமராவின் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை ஆந்திராவின் முன்னாள் முதல்வர் NTR
மாலை மலர் : வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்த உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உமா மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்து உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.டி.ஆரின் 12வது மகளான உமா மகேஸ்வரி ஏற்கனவே உடல் ரீதியாக பல பிரச்சினைகளில் இருந்து வந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் நாதஸ்வரம் எங்கே?
நடந்தது உலக செஸ் போட்டிகள் .. தமிழ்நாட்டின் பாரம்பரிய நாதஸ்வர இசை இடம்பெறாமை மனதை உறுத்துகிறது லிடியன் பியானோ இசை பற்றி மாற்று கருத்து இல்லை .
ஆனால் அவர் கண்ணை கட்டிக்கொண்டு வாசித்தார் என்பது கூட சரிதான்
ஆனால் அவருக்கு அதிக நேரம் ஒதுக்கி......
இந்நிகழ்வு ஏதோ உலகபியானோ விழா அல்லது உலக லிடியான் விழா அல்லவே
நாதஸ்வரம் நிச்சயமாக பல்நாட்டினரால் மிக உற்சாகத்தோடு வரவேற்க பட்டிருக்கும்
பியானோவில் அதுவும் கிளாசிக்கல் உருப்படிகளை வாசிப்பது என்பது மேலை நாடுகளில் கூட எலீட்டுக்களின் இசை என்ற பொதுக்கருத்து இருக்கிறது
சாதாரண மக்களின் இசையாக அந்நிகழ்ச்சி இருக்கவில்லை
நாதஸ்வரம் மறுக்கப்பட்டது ஏன்?
சியாமா, தியாகராஜர் மற்றும் முத்துசாமி போன்ற சங்கீத மும்மூர்த்திகள் இசை கற்றதே நாதஸ்வர வித்வான்களிடம் இருந்துதான்
இலங்கை துறைமுகத்துக்கு வரும் சீன உளவு கப்பல் - இந்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது
புதுடெல்லி, இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தொட்டா ஆழ்கடல் துறைமுகம், சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது.
அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், அத்துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது.
இதற்கிடையே, சீனாவின் 'யுவான் வாங்-5' என்ற உளவு கப்பல், ஹம்பன்தொட்டா துறைமுகத்துக்கு வருவதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை இலங்கை ராணுவம் நேற்று உறுதி செய்தது. சீன கப்பலின் இந்த வருகை, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
ஞாயிறு, 31 ஜூலை, 2022
நெய்வேலி என் எல் சி நிறுவனத்தின் 100 வீத பணி வாய்ப்பும் வட இந்தியர்களுக்கே .. 299 பேரில் ஒருவர் கூட தமிழரில்லை
கலைஞர் செய்திகள் : என்.எல்.சி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பணிவாய்ப்புகளும் தமிழர்களுக்கே வழங்கப்படும் வகையில், பணிநியமனத்திற்கான தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும் என கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழக இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்து விட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக,அப்பகுதியின் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கினர்.
மதுரையில் பலத்த மழை: மூழ்கிய பேருந்து, 4 பேர் உயிரிழப்பு !
மின்னம்பலம் : மதுரையில் நேற்று (ஜூலை 30) பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் முழ்கியது.
ஆரப்பாளையம் ரயில்வே சுரங்க பாதை முழுவதுமாக நீரில் நிரம்பியது. அப்போது, அந்த வழியே சென்ற தனியார் பள்ளி பேருந்து ஒன்றும் நீரில் முழ்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் பல இடங்களில் வாகனங்கள் நீரில் முழ்கியுள்ளன.
பிரதமர் மோடி வீட்டை 5-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
மாலைமலர் : புதுடெல்லி: விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள். இரு அவைகளும் முற்றிலும் செயல்படவில்லை.
இந்த நிலையில் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. விவகாரம் தொடர்பாக பிரதமர் வீட்டு முன்பு வருகிற 5-ந்தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விகிதம் ஆகியவற்றுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் 5-ந்தேதி அன்று நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபட உள்ளது.
பிரதமர் வீட்டு முன்பு நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
“திராவிட நகர திட்டம்” தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்.. கவனம் ஈர்த்த திராவிட நண்பர்கள் தின விழா!
உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பகுதி நண்பர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என பல வகைகளில் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். அந்தந்த நண்பர்கள் வட்டங்களில் இன்று நண்பர்கள் தினத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
நண்பர்கள் தினத்தின் கொண்டாட்ட புகைப்படங்கள், ஸ்டேட்டஸ்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அத்துடன் வித்தியாசமான ஒரு நண்பர்கள் தின கொண்டாட்டமும் நம் கவனத்தை ஈர்த்தது.
சித்தராமையா : ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது.. கர்நாடக முன்னாள் முதல்வர்
மின்னம்பலம் : ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது: சித்தராமையா
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்” என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும், தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் இன்று மாலை (ஜூலை 30) கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது வழங்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே : என்னை வீட்டுக்கு செல்லுமாறு போராட வேண்டாம், ஏனெனில் எனக்கு செல்ல வீடு இல்லை
ஜாப்னா முஸ்லீம் : என்னை வீட்டுக்கு செல்ல கோரி போராட்டம் நடத்த வேண்டாம். ஏனெனில் எனக்கு செல்ல வீடு இல்லை. முடியுமானால் எனது வீட்டை கட்டித்தர உதவி செய்யுங்கள் என ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாகவே இன்று நான் ஜனாதிபதி ஆகியுள்ளேன்.
நான் ஜனாதிபதி ஆனாலும் இன்றும் நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீரவில்லை.
இன்று நம் நாட்டில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமானால் இலங்கை நாடே இல்லாமல் போய்விடும்.
நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் மேலும் தீர்வுகளை காண உள்ளோம்.