ஐ' படத்தில் திருநங்கைகளை மிகவும் தவறாக சித்தரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் திருநங்கை அறிமுகமாகும் காட்சியில் விக்ரம் மற்றும் சந்தானம்
இருவரும் இணைந்து "ஊரோரம் புளியமரம்" பாடலை பாடி கிண்டல் செய்வார்கள்.
மேலும், அந்த பாத்திரமே ஆண்களின் உடலுக்கு அலைவது போல
சித்தரித்திருக்கிறார்.
ஐ' படத்தில் தங்களைப் போன்றோரை கொச்சைப்படுத்தி இருப்பதாகக் கூறி, இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு நாளை (சனிக்கிழமை) அல்லது நாளை மறுநாள் போராட்டம் நடத்துவது என திருநங்கைகள் முடிவு செய்துள்ளனர்.
ஐ' படத்தில் தங்களைப் போன்றோரை கொச்சைப்படுத்தி இருப்பதாகக் கூறி, இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு நாளை (சனிக்கிழமை) அல்லது நாளை மறுநாள் போராட்டம் நடத்துவது என திருநங்கைகள் முடிவு செய்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும்
படம் 'ஐ'. இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக ஒஜாஸ் ரஜானி என்ற திருநங்கை
நடித்துள்ளார். இவர் இந்தி அளவில் பிரபலமான ஒப்பனைக் கலைஞராவார்.
படத்திலும் ஒப்பனைக் கலைஞராக வரும் இவரது கதாபாத்திரம், விக்ரம் தனக்கு
கிடைக்கவில்லை என்று அவரைப் பழிவாங்கும்படி அமைந்திருக்கும்.
இந்நிலையில், இன்று 'ஐ' படத்திற்கு எதிராக திருநங்கைகள் அனுப்பிய அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.