சனி, 31 ஆகஸ்ட், 2019

இயக்குனர் ராஜமௌலியின் படத்தில் நடித்தால் அடுத்த படம் ஓடாது ? தொடர்ந்து வரும் அதிர்ச்சி செண்டிமெண்ட்

King Viswa: SS RajaMouliயின் படத்தில் யார் ஹீரோவாக நடித்தாலும் அந்தப் படம்
பெரிய ஹிட்டாகும்.
ஆனால், அந்தப் படத்தில் நடித்த ஹீரோவின் அடுத்த படம் ஓடாது என்று இன்டஸ்ட்ரியில் ஒரு பேச்சு இருக்கிறது.
அது இம்முறையும் உண்மையாகி விடுமா?
சாஹோ?????????????
1. Student No 1 (NTR) => His Next Film was a Flop (Subbu)
2. Simmadhri (NTR) => His Next Film was a Flop (Andhrawala)
3. Sye (Nithin) => His Next Film was a Flop (Allari Bullodu)
4. Chatrapathi (Prabhas) => His Next Film was a Flop (Pournami)
5. Vikramarkudu (Ravi Teja) => His Next Film was a Flop (Khatharnak)
6. YamaDonga (NTR) => His Next Film was a Flop (Kantri)
7. Mahadheera (Ram Charan) => His Next Film was a Flop (Orange)
8. Mariyadha Ramanna (Sunil) => His Next Film was a Flop (KSD Appalaraju)
9. Eega (Nani) => His Next Film was a Flop (Yeto Vellipoyindhi Manasu)
10. Bahubali (Prabhas) => His Next Film is Saho.
குறிப்பு: பாஹூபலி 1 & 2 டெக்னிகலாக ஒரு படமாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

( 5 டிரில்லியன்) இந்திய சந்தை என்பது வெறும் கனவுதான் சுப்பிரமணியம் சுவாமி அதிரடி டுவீட்

Venkat Ramanujam  :  மோடி அரசுக்கு தைரியமும் இல்லை அறிவும் இல்லை,
ஆகவே 50லட்சம்கோடி ( 5 டிரில்லியன்) இந்திய சந்தை என்பது வெறும் கனவுதான் இனி என Dr. Subramanian Swamy பாஜக எம்பி சொல்லுகிறாரே..
புதுச்சேரியில் கிரன்பேடி போல உத்திரபிரதேசத்தில் ஆளுனர் மோடி சொல்படி திட்டங்கள் நடைபெறுகிறாதா என மாநில முதல்வரை வெறுப்பேற்ற மேற்பார்வை செய்கிறார் என அங்கே coldwar யோகிக்கும் மோடிக்கும் தற்போது நடந்து வருகிறது ...
இப்போது மோடியை தைரியம் இல்லாதவர் என அவரின் கட்சி எம்பியே வெளிப்படையாக திட்டி டிவிட்டுகிறார் ..
காஸ்மீரை இரண்டாக பிரித்து மொத்த communication Internet tv radio தடையோ தடை 25 நாட்களாக செய்து வரும் அதி அற்புத மோடி ஷா காம்போ தான் பதில் சொல்ல வேண்டும் ..
பதில் சொல்ல முடியாவிட்டால் குறைந்த பட்சம் சு.சுவாமியை கட்சியை விட்டு நீக்கி தாங்களின் ஆளுமைகளை வெளிகாட்ட வேண்டும் ..

மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் மீது போலீஸ் புகார்! "பறையா' என குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேளுங்கள்"


Devi Somasundaram : மலேஷியாவின் பஹாங்க தொகுதியில் இயங்கி வரும் லினாஸ் என்ற தொழில்சாலை கழிவுகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு வரும் என்று எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மலேஷிய பிரதமர் மஹாதீர் .
லீனாஸ் நிறுவனம் பெரிய முதலீடு, நிறைய வேலை வாய்ப்ப தருது..அதை பறையா போல் தீண்டாமல் துறத்தி விட்டால் மலேஷியாவிற்கு முதலீடு கிடைக்காதுனு பேச ..பெரும் சர்ச்சை எழுந்துள்ளது ...
இந்தியாவை சேர்ந்த ஒரு சாரார் மக்களை மகாதீர் அவமானப் படுத்தியுள்ளதாக அவர் மீது குற்ற்ச்ச் சாட்டு எழுந்துள்ளது .
கோர்ட்டில் கேஸும் போடப் பட்டுள்ளது .
மகாதீர் நம்ம எடப்பாடி கிட்ட டிரைனிங் எடுத்து இருக்கலாம்...தூத்து குடி ஸ்டெர்லைட் மாதிரி போலிஸ் விட்டு ரெண்டு ஆட்டோவ கொளுத்தி விட்டு ...துணை ராணுவத்தை வைத்து பத்து பேர போட்டுத் தள்ளி வாய்லயே சுட்டு இருந்தா பிரச்சனை முடிஞ்சு இருக்கும் .

அசாமில் 19 லட்சம் மக்கள் இன்று குடியுரிமை இழக்கிறார்கள் .. கார்கில் போரில் போரிட்ட வீரர் இந்தியர் இல்லையாம் .


AssamNRC, Assam Citizens List, NRC, குடிமக்கள் வரைவு பதிவேடு,தினமலர் : கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதிப் பட்டியல், இன்று (ஆக.,31) வெளியிடப்பட்டது. பட்டியலில் 3.11 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். 19 லட்சம் பேர் சேர்க்கப்படவில்லை.
அசாம் மாநிலத்தில், அண்டை நாடான, வங்கதேசத்தை சேர்ந்த பலர், சட்டவிரோதமாக வசிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை வெளியேற்றும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.

புதிய மோட்டார் வாகன சட்டம் .. தண்ட பணம் ஆயிரக்கணக்கில் ! விபர பட்டியல் .. மக்களே கவனம்!

நாளை முதல் ஆயிரக் கணக்கில் அபராதம்..! உஷார் மக்களே உஷார்..!நாளை முதல் ஆயிரக் கணக்கில் அபராதம்..! உஷார் மக்களே உஷார்..! 
tamil.goodreturns.in : டெல்லி: புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019 வரும் செப்டம்பர் 01, 2019 முதல் அமலுக்கு வருகிறது. அதாவது இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றன. இந்த சட்டத்தில், கவனிக்க வேண்டிய விஷயம், சொல்லப் போனால் பார்த்து பயப்பட வேண்டிய விஷயமே அதில் சொல்லப்பட்டு இருக்கும் அபராதங்கள் மற்றும் தண்டனைகள் தான்.
ஆக இனி சாலை விதிகளை மீறினால் கிட்ட தட்ட வாங்கும் சம்பளத்தில் ஒரு பெரும் பகுதியை அபராதமாகச் செலுத்த வேண்டி இருக்கும். எனவே மிகவும் ஜாக்கிரதையாக முறையாக சாலை விதிகளை பின்பற்றுங்கள்.
என்ன மாதிரியான சாலை விதிமீறல்களுக்கு, எவ்வளவு அபராதம், என்ன தண்டனைகள் எந்த சட்டப் பிரிவின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விரிவாக கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். மாத ஆரம்பத்தில் சாலை விதி மீறல்களில் சிக்கினால், சம்பளத்தில் ஒரு பெரும் பகுதி காணாமல் போகும். ஒருவேளை மாதக் கடைசிகளில் சிக்கினால், சுமாராக கடன் வாங்கி சாலை விதி மீறல்களுக்கான அபராதங்கள் கட்ட வேண்டி இருக்கும். எனவே மக்களே உஷாராக வாகனம் ஓட்டுங்கள்.

சாலை விதி மீறல் தவறுகள் (சட்டப் பிரிவுகள்)பழைய அபராதம்புதிய அபராதம் (குறைந்தபட்சம்)
பொதுக் குற்றங்கள் (177)Rs 100Rs 500
சாலை விதி மீறல்கள் புதிய சட்டப் பிரிவு - 177ARs. 100Rs 500

இங்கிலாந்து: மின்சார நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர்!

மின்னம்பலம் : லண்டன் இங்கிலாந்து: மின்சார நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர்!அருகிலுள்ள யு.கே.பவர் நெட்வர்க்ஸ் நிறுவனத்தை முதல்வர் எடப்பாடி
பழனிசாமி பார்வையிட்டார்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதோடு, பல்வேறு நிறுவனங்களுக்கும் சென்று பார்வையிட்டு வருகிறார். இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்டரங்கில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

வங்கிகள் இணைப்பு அல்ல, வங்கிகள் அழிப்பு!

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : தற்போதுள்ள பொதுத்துறை வங்கிகளில் 27
வங்கிகளை ஒன்றிணைத்து அவற்றை 12 ஆகக் குறைக்கும் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பொருளாதார நிலையை மேலும் சிக்கலாக்கும். தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு இது. வங்கிகளை இணைப்பதென்பது 1990களில் நரசிம்மன் கமிட்டி அளித்த
1990களில் தாராளமயக் கொள்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதற்கேற்ப வங்கிகள் தொடர்பான கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. சிறிய அளவிலான வங்கிகளை ஒன்றிணைத்து உலக அளவில் போட்டி போடக்கூடிய பெரிய வங்கிகளை உருவாக்கும் திட்டம் அப்போது முன்வைக்கப்பட்டது.

பரிந்துரையாகும்.

ஜிடிபி சரிவுக்கு சர்வதேச காரணிகள் காரணமல்ல.. மத்திய அரசின் தவறான கொள்கைதான் காரணம்

மாலைமலர் : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது என புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி
மத்திய அரசை தாக்கி பேசியுள்ளது.
புது டெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்த கணக்கெடுப்பு முடிவில், 5.8 சதவீதம் என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளதாக வெளியானது. கடந்த ஏழு வருடங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. இந்த பொருளாதார சரிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசின் தவறான நிதிமேலாண்மையால், பொருளாதார அவசரநிலை உருவாகி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.

ஒரு கூடை பூவைக்கூடவா வைக்க முடியாது?” – ஜெயலலிதா சமாதியில் தலைவர்களும் இல்லை தொண்டர்களும் இல்லை ..?

ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் தீபக்ஜெயலலிதா சமாதியில் கட்டடப் பணிசேவியர் செல்வக்குமார் - ;ந.பொன்குமரகுருபரன் - பா.காளிமுத்து - விகடன் : ஜெயலலிதா இருக்கும்போது அதிகாரவட்டத்துக்கு வெகுதொலைவில் இருந்த பலரும், இன்றைக்கு அதிகாரத்தின் உச்சியில் கோலோச்சிக் கொண்டிருப்பதே ஜெயலலிதாவின் வழியில் இந்த அரசு நடக்கவில்லை என்பதற்கான முதல் உதாரணம். மூச்சுக்கு முந்நூறு முறை ‘இது அம்மா ஆட்சி’ என்று சொல்வதற்கு ஆளும்கட்சி அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் தவறுவதே இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுதலும் பாசமும் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. ஜெயலலிதா இருக்கும்போது அதிகாரவட்டத்துக்கு வெகுதொலைவில் இருந்த பலரும், இன்றைக்கு அதிகாரத்தின் உச்சியில் கோலோச்சிக் கொண்டிருப்பதே ஜெயலலிதாவின் வழியில் இந்த அரசு நடக்கவில்லை என்பதற்கான முதல் உதாரணம்.

தி.மு.க பற்றிய அவதூறு… மாரிதாஸை யார் ஆதரிக்கிறார்கள்… யார் எதிர்க்கிறார்கள்?

பா.ஜ.க ஐடி விங் நிர்மல்

பா.ஜ.க ஐடி விங் நிர்மல்
நிர்மல்
மாரிதாஸ் விகடன் : தி.மு.க மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் பொய்யான தகவல்களோடு வீடியோ வெளியிட்டதாகக் கல்லூரிப் பேராசிரியர் மாரிதாஸ் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சி புகார் அளித்தது. அதன் தொடர்ச்சியாக ட்விட்டரில், இணைய தி.மு.க-வினர் & வெர்சஸ் மாரிதாஸ் ஆதரவாளர்களிடையே ட்ரெண்டிங் வார் நடந்துவருகிறது. #ISupportMaridhas, #MentalMaridhas ஆகிய ஹேஷ்டேக்குகள் நேற்று தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் ட்ரெண்டாகின. இதையொட்டி இருதரப்பிடமும் பேசினோம். பா.ஜ.க-வின் ஐ.டி விங் மாநிலச் செயலாளர் நிர்மல்குமாரிடம் பேசியபோது, “மாரிதாஸ் மீது தி.மு.க-வினர் காவல் துறையில் புகார் அளித்ததற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் முதற்கொண்டு இன்னபிற தலைவர்களும் அவருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வழக்கைச் சந்திப்பதில் அவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம்?

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம்?
தினமலர் :சென்னை: பொது துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று(ஆக.,31) போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் கூறியதாவது: ஒரே நேரத்தில் 10 பொதுத் துறை வங்கிகளை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து இந்திய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவர். சென்னை பிராட்வேயில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா முன் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்

தினத்தந்தி : வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நாளை நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சித்தராமையா : ப..சிதம்பரத்துக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்

ப சிதம்பரம், டிகே சிவக்குமார்மாலைமலர் : அதிகாரத்தை யாரும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும், ப.சிதம்பரத்துக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். மைசூரு : முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவுக்கு வந்தார். அவர் மைசூரு டவுன் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில்
ஓய்வெடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் அரசியல் ரீதியான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவற்றை எதிர்த்து போராடக்கூடிய குணம் அவருக்கு உண்டு. அவரால் சட்டப் போராட்டமும் நடத்த முடியும்.

சுப்பிரமணியம் சாமி : நான் தமிழன் ஆங்கிலத்தில் கேளுங்கள் ..இந்தியில் வேண்டாம் .. நீதிமன்றத்தில் ...

Subramanian-Swamyதினமனி : புதுதில்லி: நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணையில் வழக்குரைஞர் இந்தியில் கேள்வி எழுப்ப, ஆட்சேபம் தெரித்த சுப்பிரமணியன் சுவாமி, “நான் ஒரு தமிழன் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று கொந்தளித்தார். 
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகையை, "அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தது. நிர்வாகச் சீர்கேடு, விற்பனைச் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது.

பாஜகவின் நச்சு கரங்கள் திமுகவை தீண்டுமா?

டிஜிட்டல் திண்ணை:  அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்! மின்னம்பலம் : வானம் தன் சூரிய டேட்டாவை ஆன் செய்துவிட்ட பொழுதில், மொபைல் டேட்டாவை ஆன் செய்தபோது வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. ‘காலை வணக்கம்’ என்ற மெசேஜைத் தொடர்ந்து டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“இரண்டாவது முறையாக மோடி பிரதமர் பதவியேற்ற நிலையில் பாஜகவின் அறுதிப் பெரும்பான்மை ஆட்சியில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித் ஷா. அவர் திமுகவின் முக்கிய பிரமுகர்கள், எம்.பி.க்களின் அரசியல் ரீதியான ஜாதகங்களை மத்திய உளவுத் துறை மூலம் கேட்டிருக்கிறார் என்று சில மாதம் முன்பே செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான், ஜூலை 12 ஆம் தேதி டெல்லி சோர்ஸ் மூலமாக கிடைத்தது அந்தத் தகவல்.
‘திமுக தலைவர் ஸ்டாலினை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அமைப்புகள் மூலம் விசாரணை நடத்துவது பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் ஆலோசனைகள், விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன’ என்பதுதான் அந்தத் தகவல். அதன் பின் நாடாளுமன்ற கூட்டத் தொடர், காஷ்மீர் பிரச்சினை என்று உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு முக்கியப் பிரச்சினைகள் வந்துவிட்ட நிலையிலும், ஆபரேஷன் ஸ்டாலின் ஆலோசனை ஒரு பக்கம் நடந்துகொண்டே இருக்கிறது.

மக்களால் நான்; மக்களுக்காகவே நான் என்ற ஜெ.வின் சில சொத்துகளை ஏன் ? (அ) நீதிபதி

 Vishnupriya R  /tamil.oneindia.com சென்னை: மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் சில சொத்துகளை ஏன் ஏழைகளுக்கு வழங்கக் கூடாது என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 
ஜெயலலிதா இறந்தவுடன் அவர் அபராதமாக நீதிமன்றத்துக்கு செலுத்த வேண்டிய ரூ 100 கோடியை அவரது சொத்தை விற்று எடுத்துக் கொள்ள நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் உள்ளிட்ட சொத்துகளை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. 
ஜெயலலிதாவின் சொத்துகளில் உரிமை கோரி அவரது அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

சர்வதேச காணமல் போனோர் தினம் ! சமுக செயல்பாட்டாளர் செல்வி .... 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி காணமல் போனார் nternational Day of the Disappeared

A student, Selvi was in her third year of a Theater and Dramatic Arts program at the University of Jaffna when she was abducted by the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE, or Tamil Tigers) on August 30, 1991. As a poet and founder of the feminist journal Tholi, she had been critical of the LTTE’s guerrilla tactics. In 1993 the LTTE confirmed it had been detaining Selvi since her abduction, during which she received the 1992 PEN/Barbara Goldsmith Freedom to Write Award. In 1997, an LTTE spokesman declared that she had been executed.
Ashok-yogan Kannamuthu : செல்வி : 28 ஆண்டுகள் … நினைவுகளோடு பயணம்...!
1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்.
புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப் போன்ற அதே தன்மையான ஒரு சூழ்நிலைக்கு செல்வியின் நிலமையும் இட்டுச் செல்லாதவாறு இருக்கும்படியாக புலிகள் வேறு முடிவை எடுத்தனர். அதுவே கைது செய்தலாக முடிவுற்றது.< செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

முதல்வர் பழனிசாமி ஒப்பந்தம் இட்ட கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனை நிதி நெருக்கடியில் தள்ளாடுது ...


லண்டனில் எடப்பாடி போட்ட  பித்தலாட்ட ஒப்பந்தம்! மின்னம்பலம்:  லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்டு 29 ஆம் தேதி மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக தமிழக அரசுக்கும் சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம், தொற்று நோய்களை கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கையில் கையெழுத்து, லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் என்று முதல் நாளில் சுகாதாரத் துறை தொடர்பாக 3 ஒப்பந்தங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டிருக்கிறார்.
லண்டனில் இருக்கும் தொழிலதிபர்கள் பலரிடமும் விசாரித்ததில், இந்த ஒப்பந்தங்கள் பற்றி பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறார்கள்.
முதலில் கிங்ஸ் மருத்துவமனை ஒப்பந்தம் பற்றிப் பார்ப்போம்!
கிங்ஸ் மருத்துவமனை என்பது இங்கிலாந்து அரசின் நிதியுதவியில் இயங்கக் கூடிய ஒரு மருத்துவ நிறுவனம். தமிழகத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி ஜி.ஹெச். போன்றதுதான் கிங்ஸ் மருத்துவமனை. அதே நேரம் மருத்துவக் கல்வியிலும் சிறந்த பெயரை பெற்றுள்ளது.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

என்னப்பா நம்ம ஊரு இட்லிலாம் கிடைக்குது!’ – லண்டனைக் கலக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமி ந.பொன்குமரகுருபரன் - விகடன் : தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோட்சூட்டில் கலக்கி வருகிறார். தமிழகத்துக்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 14 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (ஆகஸ்ட் 28-ம் தேதி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன் கிளம்பினார். இன்று சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில், தொற்று நோய் தடுப்புச் சேவை, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறன் மேம்பாடு குறித்து இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இளவேனில் வாலறிவான் கடலூர் காராமணி குப்பம் தந்த வீராங்கனை

elavenil_PTI8_29_2019_000020Bxxதினமணி : இட்லி சாம்பார் பிடிக்குமா அல்லது ரொட்டி சப்ஜியா என்றொரு கேள்வியை ஆங்கில இணைய இதழ் ஒன்று இளவேனிலிடம் கேட்டபோது அவர் கொடி பிடித்தது இட்லி சாம்பாருக்குத்தான். இந்தியாவின் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் ஊர்ப் பாசம் விட்டுவிடுமா?
தமிழ்ப் பெயர் கொண்ட தமிழ்ப் பெண் இளவேனில் வாலறிவன். ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று அவர் தங்கம் வென்றுள்ளார். 20 வயதுப் பெண் நிகழ்த்திய மகத்தான சாதனை. 

நாட்டின் ஜிடிபி 5% மட்டுமே. வரலாறு காணாத சரிவு .. அடி வாங்கி இருக்கும் இந்தியப் பொருளாதாரம்..!

tamiloneindia : மும்பை: நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜிடிபி வழுக்கி விழுந்து உள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில்தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காலக்கட்டத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது.
நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், இந்திய பொருளாதாரம் மந்தமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இது மீளத் தக்கது எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரு வாரங்களாக புதிதாக பட்ஜெட் அறிவிப்பு போல பல நிதி நிலை அறிவிப்புகளை பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்து வருகிறார். இதற்கு பலன் கிடைக்குமா என்பதை அடுத்த காலாண்டு இறுதியில்தான் பார்க்க வேண்டும்

தங்கத்தமிழ் செல்வன் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரானார்

திமுக கொள்கை பரப்புச் செயலாளரானார் தங்கம் மின்னம்பலம் : திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவராக அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க.தமிழ்ச்செல்வன் அக்கட்சியிலிருந்து விலகினார். கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். மேலும் தேனி மாவட்டத்தில் தான் திமுகவில் சேர்த்த 27,200 உறுப்பினர்களின் படிவங்களையும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஒப்படைத்திருந்தார்.
இந்த நிலையில் அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் வகித்து வந்த அதே பதவியினை திமுக அவருக்கு அளித்துள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக கொள்கை பரப்புச் செயலாளர்களாக பணியாற்றி வரும் திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோர்களுடன் இணைந்து, கழக சட்டதிட்ட விதி: 26 இன் படி திமுக கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் (வடக்கு தண்ணீர் தொட்டித் தெரு, நாராயணதேவபட்டி அஞ்சல், உத்தமபாளையம், தேனி மாவட்டம்) தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகோ தேசத்துரோக வழக்கில் இருந்து விடுதலை!

மின்னம்பலம் :
வைகோ மீது கலைஞர் போட்ட வழக்கு: விடுதலை செய்த கருணாநிதி
திமுக ஆட்சியில் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயல்வதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். இதனையடுத்து பத்திரிகை செய்தியின் அடிப்படையில் வைகோவுக்கு எதிராக அப்போதைய திமுக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கிலிருந்து வைகோவை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதற்கிடையே இவ்வழக்கில் விசாரணை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றச்சாட்டுப் பதிவு, சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை என வழக்கு அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில், தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வைகோ ஆஜராகாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தனியாருக்கு விற்கப்படும் ஏர் இந்தியா ... அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவிவ்ப்பு

privatization of air indiaநக்கீரன் : ஏர் இந்தியாவை முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். கடும் நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டெடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதுவுமே கைகொடுக்காத நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி , "முதல் தர விமான நிறுவனமாக ஏர் இந்தியா திகழ்கிறது. எனினும், விமானங்களை இயக்குவதை மத்திய அரசு நடத்தக் கூடாது என்றே விரும்புகிறது. எனவே ஏர் இந்தியாவை தனியார் நடத்த வேண்டும். இந்த தனியார்மயமாக்களை மிக குறுகிய காலத்தில் செய்துமுடிக்க விரும்புகிறோம். ஏர் இந்தியாவை நடத்த பலரும் ஆர்வமாக இருப்பதால், அதில் யாருக்காவது ஒருவருக்கு ஏர் இந்தியா விற்கப்படும்" என தெரிவித்தார்.

வங்கிகள் இணைப்பு .. வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு .. பஞ்சாப் நஷனல், ஓரியண்டல் வங்கி ,யுனைட்டெட் வங்கி.....

ஒன்றாக இணைகிறது பல பொதுத்துறை வங்கிகள் - நிர்மலா சீதாராமன் அறிவிப்புtamil.news18.com : பல பொதுத்துறை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பல்வேறு பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். 
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யூனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைகிறது. இது நாட்டின் இரண்டாவது பொதுத்துறை வங்கியாக ரூ.17.95 லட்சம் கோடி மதிப்புடன் இருக்கும் வங்கியுடன் சிண்டிகேட் வங்கி ஒன்றாக இணைகிறது. நாட்டின் நான்காவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ரூ.15.20 லட்சம் கோடி மதிப்புடன் இது இருக்கும்
இந்தியன் வங்கியுடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. நாட்டின் ஏழாவது பொதுத்துறை வங்கியாக ரூ.8.08 லட்சம் மதிப்புடன் இந்த வங்கி இருக்கும்
யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா பேங்க் மற்றும் கார்பரேஷன் வங்கி ஒன்றாக இணைக்கப்படுகிறது. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது இருக்கும்.
வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.  18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்துடன் இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்

18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டில் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள்  லாபத்தில் இயங்குகின்றன-  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தினத்தந்தி : நாட்டில் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். புதுடெல்லி டெல்லியில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தொழில்துறையை ஊக்குவிக்க ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும்.
* வீட்டுக் கடனுக்கு ரூ3300 கோடி கடன் உதவி. வங்கிக் கடனை கட்டி முடித்த 15 நாட்களுக்குள் கடன் பத்திரங்கள் திருப்பித் தரப்படும். கடன் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வங்கிகள் அறிக்கை தந்துள்ளன. வங்கிகளில் கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடன் மேலாண்மை எளிமைப்படுத்தப்படும்.

*  மிகப்பெரிய அளவில் வழங்கப்பட்டும் கடன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  ரூ.250 கோடிக்கு மேலான கடன்களுக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். 

*  8 பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு இணையாக வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து உள்ளன.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுலை சுப்பிரமணியன் சாமி சிக்க வைத்துள்ளாரா ?

என்ன டிவிட் என்ன வழக்கு /tamil.oneindia.com - shyamsundar.: டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் சிக்கி இருக்கும் நேஷனல் ஹெரால்ட் வழக்கு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி டிவிட் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் பிரபல நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர்.
இதில் அவர்களுக்கு முறைகேடாக சொத்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2011, 2012-ம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கூறப்பட்டது.

புதுவையில் சாமியார் தத்துவ சாமி கொலை ...

puducherry korimedu old man incident police investigate nakkheeran.in - sundarapandiyan : புதுச்சேரி பாலாஜி நகர் மொட்டை தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தத்துவசாமி என்கிற சாமி தனிமையில் வசித்து வந்தார். இவரது வயது 55. இன்று காலை வெகு நேரமாகியும், அவரது வீட்டின் முன்கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்பின் வாட்ச்மேன் வீட்டின் கதவை திறந்து பார்த்தார். அப்போது அவர் ரத்தவெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உத்தர பிரேதேசம் தலித் மாணவர்களை தனியே பிரித்து வைக்கும் நடைமுறை .. வீடியோ


 வெப்துனியா : உத்தர பிரதேச கிராமம் ஒன்றில் தலித் மாணவர்களை மட்டும் தனியே பிரித்து வைக்கும் நடைமுறை இருந்து வருவதை கண்டித்துள்ளார் பகுஜன் சமா கட்சி தலைவர் மாயாவதி.
சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உணவின்போது சப்பாத்திக்கு உப்பு வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. அதேபோல தற்போது தலித் மாணவர்களை தனியே அமர வைத்து உணவு வழங்கும் செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மதிய உணவின்போது தலித் மாணவர்களை பிரித்து தனி வரிசையில் உட்கார வைப்பதாகவும், அவர்கள் உண்பதற்கான தட்டுகளை வீட்டிலிருந்தே எடுத்து வர சொல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்த உயரதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்க்க வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி சென்றுள்ளனர்.

ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம் ..

டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!   
 மின்னம்பலம :  மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது. ‘காலை வணக்கம்’ மெசேஜ் ஒரு பூங்கொத்தோடு வந்தது. கூடவே செய்தியும்.
“ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை சிதம்பரத்தை விசாரிக்க போட்டி போட்டு வருகின்றன. இரண்டாம் முறையாக சிபிஐ விசாரணைக் காவலில் இருக்கும் ப.சிதம்பரத்தை இன்று (ஆகஸ்ட் 30) மீண்டும் ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
இதற்கிடையே அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தை தன் கஸ்டடியில் எடுக்கப் போராடி வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிதம்பரத்தைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்த நிலையில் இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சிதம்பரத்துக்கு, மீண்டும் சிபிஐ காவல் நீட்டிக்கப்படாதபட்சத்தில், ஜாமீனும் மறுக்கப்படும்பட்சத்தில் நீதிமன்றக் காவலுக்காக திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்படுவார்.

மு.க. அழகிரி கேட்கும் தேர்தல் பணிக்குழு செயலாளர்?... ‘இந்த’ பதவியையாவது தருமா திமுக?

அழகிரி போடும் கணக்கு tamil.oneindia.com - mathivanan-maran சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து ஓராண்டுக்குப் பின்னரும் திமுகவுக்குள் நுழைய முயற்சிக்கும் அழகிரியின் நடவடிக்கைகள் தொடருகிறது. தற்போது திமுகவில் ஸ்டாலினுக்கு நெருக்கடி தராத பதவியையாவது தாருங்கள் என அழகிரி தரப்பு பேசி வருகிறதாம்.
ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் மகன் என்றும் பார்க்காமல் அழகிரியை கட்சியில் இருந்து தூக்கியடித்தார் கருணாநிதி. அவரது மறைவுக்குப் பின்னர் திமுகவுக்குள் எப்படியும் ஐக்கியமாவது என தீவிரம் காட்டினார் அழகிரி.
ஆனால் ஸ்டாலின் தரப்பில் பலமாக முட்டுக்கட்டை போடப்பட்டது. அதேநேரத்தில் கருணாநிதி குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டே இருக்கின்றனர்.

கீழடியில் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு .. 2500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் குழாய்

discovery-of-underground-hot-tub .hindutamil.in/ : திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன.
2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.

திருமாவளவன் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழக அரசியல் நடந்தினாரா?

LRJ : திருமா பதில் சொல்லவேண்டிய கேள்விகளே வேறு.
“2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு சொன்னதும் தான் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தேன்” என்கிறார் திருமாவளவன். பார்க்க காணொளி:
இதையொட்டி எழும் கேள்விகள்:
1. இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதற்கு அந்நிய நாடான இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிகள் யார்?
2. அவர்கள் எந்த அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிக்கிறார்கள்? அதை ஏன் திருமா கேட்டு நடக்கிறார்?
3. “தமிழ் தொப்புள்கொடி உறவு” என்று வாதிடுவீர்களானால் இந்த “தொப்புள்கொடி” அரசியல் உறவு இருவழிப்பாதையாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அப்படி இருந்ததா?
4. சகோதர யுத்தம் வேண்டாம், படுகொலைகள் வேண்டாம் என்று தமிழ்நாட்டில் இருந்து கரடியாய் கத்தின கோரிக்கைகள் எதையேனும் என்றேனும் விடுதலைப்புலிகள் காது கொடுத்து கேட்டார்களா?
5. தம் எதிர் தரப்பு இயக்க தலைமைகள், உறுப்பினர்களையெல்லாம் நூற்றுக்கணக்கில் இலங்கைக்குள் தேடித்தேடி கொன்று குவித்தது போதாது என்று எல்லை தாண்டி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கே வந்து பத்மநாபாவோடு 12 பேரையும் சேர்த்துக்கொன்றதோடு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவையே கொடூரமாக கொன்றபோதெல்லாம் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பேச்சைக்கேட்டா நடந்தார்கள்? அல்லது அதனால் தமிழ்நாட்டு மக்களும் அரசியலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் கவலைப்பட்டார்களா?

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

வேளாங்கண்ணி திருவிழா கொடியேற்றம் - பெசன்ட் நகரில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஸ்தம்பித்தது போக்குவரத்து

பெசன்ட்நகர் வேளாங்கண்ணி திருவிழா கொடியேற்றம் - கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஸ்தம்பித்தது போக்குவரத்து
மாலைமலர் : வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு பெசன்ட்நகரில் குவிந்த பக்தர்களால், சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சென்னை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடக்கமாக இன்று மாலை 5.45 மணிக்கு திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. கொடி ஊர்வலத்தின் நிறைவில், தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியைப் புனிதம் செய்வித்தார். இதையடுத்து கொடியேற்றம் நடைபெற்றது.

சத்துணவு முட்டை கொள்முதல்....மூன்று மாதங்களில் புதிய டெண்டர்!


nakkheeran.in - arunpandian" சத்துணவு முட்டை கொள்முதல் செய்ய பழைய முறைப்படி டெண்டர் கோர கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும்,  மூன்று மாதங்களில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான  சத்துணவு  முட்டை கொள்முதலுக்கான டெண்டர் காலம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. மாநில அளவில் டெண்டர் கோரப்பட்ட கொள்கையை மாற்றி, மண்டல அளவில் டெண்டர் கோருவது என 2018 ஆகஸ்ட் 20-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

சீட்டு பணமோசடி - பிக்பாஸ் கவினின் தாயார் உட்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

சீட்டு கம்பெனி நடத்தி பணமோசடி - பிக்பாஸ் கவினின் தாயார் உட்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறைtamil.news18.com :சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த பிக்பாஸ் புகழ் கவின் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தமயந்தி இவருடைய மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இவர்களும் தமயந்தியின் கணவர் அருணகிரி மற்றும் மகன் சொர்ணராஜன் ஆகியோரும் அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998-ம் ஆண்டு முதல் 2006 -ம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.

குரு வழிபாட்டை கடுமையாக எதிர்த்தாரா திருவள்ளுவர்? சிந்தனைக்கு குரு கோட்பாடு எதிரானது!

வடமொழிக்கு நீதி தெரியாது வடமொழி இலக்கியத்தில் நீதி என்பது எட்டாம் நூற்றாண்டில் தமிழில் இருந்து எடுத்த இலக்கியங்களை காப்பி அடித்ததுதான் ,,,, நீதி தெரியாதவர்களை மானம் இல்லாதவர்கள் என்று சொல்லவேண்டும்.
இந்த நீதி தெரியாதவன் சாணக்கியன் ..ஹிட்லருக்கு உதவியவன் .
இந்த சமுகத்தை ஒழிப்பதற்கு திட்டவட்டமான ஒரு சமுக அரசியல் அவர்களால் நடத்தப்பட்டிருக்கிறது... அந்த அடையாளம்தான் வடமொழி .
வடமொழியில் ஒரு அயோக்கியத்தனமான மரபை வைத்திருக்கிறார்கள்.
என்ன பெற்று தாங்கி பிடித்து என்ன வளர்த்த தாய் எனக்கும் முக்கியமானவள்.
என்னை வளர்த்த தந்தை எனக்கு முக்கியமானவன் ..
குரு எப்படி முக்கியமானவன் ஆவான்? குருவை நான் ஏன் மதிக்கவேண்டும்?
என்னை வளர்த்த தாய் தந்தையின் உழைப்பில் தன்னை இணைத்து கொள்கிற பார்ப்பான அயோக்கித்தனம்தான் மாதா பிதா குரு என்ற ...
இன்றைக்கு குரு வேறு.....
வள்ளல் பெருமானுக்கு குரு இல்லை .. பாம்பன் சாமிக்கு குரு இல்லை
திருஞான சம்பத்தருக்கு குரு இல்லை ஆனால் சாட்சி சொல்வார்கள் சாட்சி வேறு குரு வேறு ..
அவன் வடமொழியிலே என்ன சொல்கிறான் . நான் குருவாக இருந்து சொல்கிறேன் கேள்வி கேட்காதே .....இதுக்குத்தான் குரு வர்றார் . நீங்க ஏதாவது கேள்வி கேட்டீங்கன்னா கொல்லப்படுவீர்கள் ..
இதுதான் வடமொழி வரலாறு ..எதுக்கு தெரியுமா? நீ சிந்தித்தால் என்னை நீ புரிந்து கொள்வாய் . ..சிந்திக்க கூடாது ..

இளவேனில் வாலறிவான் .. துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற நல்ல தமிழ் பெயர் ..வீராங்கனை!

குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
இளவேனில் வாலறிவான்  என்ற . நல்ல தமிழ் பெயரை சூட்டிய பெற்றோருக்கு வாழ்த்துக்கள்
நம்மவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது கூடுமானவரை
எந்த வித அர்த்தமும் இல்லாத பெயர்களாக பார்த்து வைத்துவிடுகிறார்கள் , அதிலும் அந்த பெயர்கள் எந்த விதத்திலும் நமது மொழி கலாசாரம் மதம் போன்றவற்றை காட்டி கொடுத்துவிடக்கூடாது என்பதில் மிக ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் ,
உதாரணத்திற்கு ஏராளமான பெயர்களை கூற முடியும் , நிகொசன் டிகொசன் லிகொசன் போன்று ஏதாவது கன்னா பின்னா என்று வைத்துவிடுகிறார்கள் ,
இந்த பெயர்களை கொண்டு யாரும் இக்குழந்தைகள் எந்த நாட்டை அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடித்து விட முடியாது ,
சிலர் அதிஷ்ட விஞ்ஞானம் என்ற நியு மொராலாஜி யின் தாக்கம் என்றும் கூறுவார் இது ஓரளவு உண்மைதான் என்றாலும் மிகச்சரியான காரணம் வேறு ஒன்று இருக்கிறது
இது ஒருவகை உளவியல் பிரச்சனை .
தங்களை பற்றிய அளவு கடந்த தாழ்வு மனப்பான்மை தங்கள் அடையாளங்கள் தங்கள் குழந்தைகளை பாதித்து விட கூடாது என்ற Insecure உணர்வு தான் காரணமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியாது ,
தங்களை விட தங்கள் சமயம் பெரிது அல்லது கலாசாரம் பெரிது.
இது போன்ற ஏதோ ஒரு அடையாளம் தங்களைவிட பெரிது என்று நம்ப வைக்கப்பட்ட சமூகத்திடம் இந்த குணம் இருப்பது இயற்கையே , ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுயசிந்தனையை புறந்தள்ளி நம்பிக்கையே நல்லது என்ற கோட்பாட்டினால் வழிநடத்தப்பட்டு .
சுயம் என்பதை அடியோடு இழந்து விட்ட ஒரு சமுதாயம் தான் தனது அடையாளத்தையே மிகவும் கேவலமாக நினைக்க முடியும்

ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் உடனே பணியில் சேர மத்திய அரசு உத்தரவு


tamil.oneindia.com/authors/VelmuruganP. : டெல்லி: ராஜினாமா ஏற்கப்படும் வரை ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன். தனது பணியியில் உடனடியாக சேர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடடுள்ளது.
யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர் கண்ணன் கோபிநாதன்.
இவர் கேரளா மாநிலம் திருச்சூர் அரகே புத்தம் பள்ளியைச் சேர்ந்தவர் ஆவார்.
கடந்த ஆண்டு கேரளா வெள்ளத்தின் போது தனது ஐஏஎஸ் என்ற அடையாளத்தை மறைத்து செங்கண்ணூரில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
சுமார் 8 நாள்கள் வெள்ளம் நிவாரண பொருட்களை பிரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.
அவர் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் கூறும் போதுல், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வேலைக்கு வந்த நிலையில், என் குரலுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் ராஜினாமா செய்ய செய்தேன் என்றார்.

காலில் விழும் கலாசாரம் மீண்டும்.... அடிமை பாரம்பரியம் மீண்டும் தொடர்கிறது!

  தினமலர்:  சென்னை: வெளிநாடு புறப்பட்ட, முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், இ.பி.எஸ்., காலில் விழுந்து, ஆசி பெற்றனர். ஜெயலலிதா, முதல்வராக இருந்தவரை, வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றதில்லை. அவர், விழாக்களில் பங்கேற்கும் போதும், வெளியூர் செல்லும் போதும், கட்சியினர், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, காலில் விழுவர். அவர் மறைவுக்கு பின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சசிகலா காலில் விழ துவங்கினர். அவர் சிறை சென்ற பின், அ.தி.மு.க.,வில், காலில் விழும் கலாசாரம் ஓய்ந்திருந்தது.

BBC: இந்திய ரூபாய் வங்கதேச நாணயத்தைவிட மதிப்பு குறைந்து விட்டதா? #BBCFactCheck

இந்திய நாணயமான ‘ரூபாய்‘ வங்கதேசத்தின் நாணயமான ‘டாக்கா‘வை விட மிகவும் மதிப்பு குறைந்து விட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் கடந்த சில நாட்களாக பதிவிட்டு வருகின்றனர். கடந்த 72 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வங்கதேசத்தின் நாணயமான டாக்காவை விட, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக நூற்றுக்கணக்கான பதிவுகளும், படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதற்கு சமூக ஊடகங்களில் பலர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சிலர் இந்த இரு நாட்டு நாணயங்களுக்கான வரைகலை படங்களை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த கருத்துகள் அனைத்தும் தவறு என்றும், சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ள வரைகலை படங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் முரணாக இருப்பதையும் பிபிசியின் உண்மை சரிபார்க்கும் குழு கண்டறிந்துள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசத்தில் இருந்து பங்கு சந்தைகளிடம் இருந்து கிடைக்கின்ற நிதி தகவல்களை தருகின்ற சில நம்பகரமான நிதி இணையதளங்களின்படி, இந்த இரு நாட்டு நாணயங்களின் மதிப்பு விவரம் கீழ்கண்டவாறு உள்ளது.

கலப்பட மருந்தால் ஏற்பட்ட வினோத நோய்... மருந்து விநியோகம் செய்யப்பட்டதால் அச்சத்தில் ஸ்பெயின்

werewolf syndrome in spain
நக்கீரன் : கலப்பட மருந்தால் வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் உடல் முழுவதும் உரோம வளர்ச்சி ஏற்படும் நோயால் ஸ்பெயின் நாடு முழுவதும் இதுவரை 17 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் மலாகாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபார்மா-குய்மிகா சுர் என்ற நிறுவனம் தயாரிக்கும் ஜீரணகுறைப்பாட்டை சரி செய்யும் மாத்திரையில், மைனாக்ஸிடில் எனும் வழுக்கை, முடி வளர்ச்சிக் குறைபாட்டை சரிசெய்யும் மூலக்கூறை கலந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் குழந்தைகளின் ஜீரண குறைபாட்டை போக்க தரப்படும் இந்த மருந்தில் முடி வளருவதற்கான வேதிப்பொருளை கலந்ததால், குழந்தைகளின் உரோம வளர்ச்சி அதீதமாக மாறியுள்ளது.

டால்ஸ்டாய் புத்தகத்தை ஏன் வீட்டில் வைத்திருந்தீர்கள்?- மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி .. காங்காரு நீதிமன்றங்கள் ஆகின்றன

டால்ஸ்டாய் புத்தகத்தை ஏன் வீட்டில் வைத்திருந்தீர்கள்?- திகைக்க வைத்த நீதிபதிமின்னம்பலம் : லியோ டால்ஸ்டாய் எழுதிய உலகப் புகழ்பெற்ற புத்தகமான ’போரும் அமைதியும்’ புத்தகம் பற்றி நேற்று (ஆகஸ்டு 28) மும்பை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள், இந்தியா முழுவதிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் பீமா கொரேகானில் 2018 ஜனவரி அன்று தலித் சமுதாயத்தினரான மஹர் சமுதாயத்தினர் மராட்டிய பேஷ்வா அரசர்களோடு நடந்த போரின் 200 ஆவது ஆண்டு நினைவு பேரணி நடத்தினர். இதை பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் எதிர்த்தன. இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து இது தொடர்பாக பலரை கைது செய்தது மகாராஷ்டிர காவல்துறை.
மஹர் இயக்க தலைவர்கள், நாக்பூர் பல்கலைக் கழக பேராசிரியர் ஷோமா சென் உள்ளிட்டோரை முதலில் கைது செய்த போலீஸார், 2018 ஆகஸ்டு 28 ஆம் தேதி சமூக செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, மற்றும் வெர்னோன் கோன்சல்வேஸ் ஆகியோரை கைது செய்தது புனே காவல்துறை.

லண்டன் ..முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில்  2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து தினத்தந்தி : லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கு இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. லண்டன் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக லண்டன் சென்றடைந்தார். அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. லண்டன் நேரப்படி காலை 9 மணியளவில் இங்கிலாந்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பயனாளர்களின் பணி தரம் மேம்பாடுதலை கண்டறிந்து, அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். அப்போது சுகாதாரத்துறை தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

விரைவில் இந்தியாவுடன் இறுதிப் போர்... பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை

விரைவில் இந்தியாவுடன் இறுதிப் போர்... பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை/tamil.news18.com : இந்தியா - பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் நடக்கும் - பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில், இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் எச்சரித்துள்ளார். அவருடைய பேச்சு உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பேசிய ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத், காஷ்மீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்றால், ஐ.நா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
காஷ்மீர் மக்களுடன் பாகிஸ்தான் அரசு துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுடன் இனியும் பேச்சுவார்த்தை நடத்துவது முட்டாள்தனம்.

தென்காசி எம்.பி. தனுஷ் குமாரின் சித்தப்பா கொலை.... -போதை இளைஞர்களின் வெறிச்செ..

rajapalayam incident... police arrest the Guiltyrajapalayam incident... police arrest the Guilty nakkheeran.in - cnramki இராஜபாளையம் -  தேவதானம் பகுதியில் தென்காசி திமுக எம்.பி. தனுஷ் எம்.குமாரின் சித்தப்பா கருப்பையா, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். உடலைக் கைப்பற்றி சேத்தூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் முன்விரோதம் காரணமாக  அதே பகுதியைச் சேர்ந்த  ராஜேந்திரன்  (வயது 19),   விக்னேஷ்  (வயது 18)  ஆகியோர் கருப்பையாவைக் கொலை செய்தனர் என்பதைக் கண்டுபிடித்தனர்.  கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைச் சுற்றிவளைத்துக் கைது செய்திருக்கின்றனர். 
அப்படி என்ன முன்விரோதமாம்?
கடந்த மாதம் நடந்த கோவில் திருவிழாவில் குடித்துவிட்டு வந்து போதையில் தகராறு செய்த ராஜேந்திரனையும் விக்னேஷையும் சமுதாயத் தலைவரான கருப்பையா கண்டித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் அடி விழுந்திருக்கிறது. அதற்குப் பழி தீர்க்கவே கருப்பையாவைக் கொலை செய்தோம் என்று கைதான இருவரும் வாக்குமூலம் அளித்திருப்பதாகச் சொல்கிறது காவல்துறை வட்டாரம்