சனி, 17 டிசம்பர், 2016

திருநாவுக்கரசரின் வெள்ளையறிக்கை ஜால்ரா .. காங்கிரசில் புயல் கிளப்பி உள்ளது

minnambalam.com முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ’’வெள்ளை அறிக்கையோ?, கறுப்பு அறிக்கையோ? எதுவும் தேவையில்லை. வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் ஜெயலலிதா உயிரோடு திரும்பி வரப்போவதில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார். திருநாவுக்கரசரின் கருத்து, கூட்டணி கட்சியான திமுக தலைவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், ‘’திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன்ற தலைவர்கள் கேட்டுள்ளதைப்போல் நானும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன்.

bbc :கலைஞரை ராகுல் காந்தி , அதிமுக தம்பிதுரை ,ஜெயக்குமார் மேலும் பல தலைவர்கள் காவேரி மருத்துவமனையில்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க.தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.அ.தி.மு.கவைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநில மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் கருணாநிதியை நலம் விசாரித்தனர்.
இன்று காலை பதினொன்றே முக்கால் மணியளவில் கருணாநிதி சிகிச்சைபெற்றுவரும் காவிரி மருத்துவமனைக்கு வந்த ராகுல் காந்தி, அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு 'ட்ராக்யோஸ்டமி' சிகிச்சை
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் மூத்த அரசியல்வாதி, தமிழ் மக்களின் தலைவர், அவர் விரைவில் வீடு திரும்ப வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

சிரியாவில் நொந்து நூடில்சான அமெரிக்க மேலாதிக்கம் .. ரஷ்யாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்த மத்திய கிழக்கு !


அருண் நெடுஞ்செழியன்thetimestamil.com :அருண் நெடுஞ்செழியன்t; மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வள வேட்டைக்கான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்ய நாடுகளின் போரானது, சிரியாவின் அலெப்போ வீழ்ச்சியோடு ஒரு சுற்று முடிவுறுகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல்-அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள்-குர்துகள் ஒரு முகாமாகவும் ஆசாத்தின் சிரியா அரசு-ரஷ்யா-ஈரான் மற்றொரு முகாமாகவும் மேற்கொண்ட சிரியாவின் மீதான பாகப்பிரிவனை யுத்தமானது கடந்த ஐந்து ஆண்டுகளில் லட்சக் கணக்கான உயிர்களை காவு கொண்டு முடிவடைந்துள்ளது.
ஏகாதிபத்திய நாடுகளின் வள வேட்டைக்கான இரண்டாம் சுற்றுப் போரானது,கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற பிராக்சி போராக அல்லாமல் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான நேரடி யுத்தமாக வெடிக்கிற சூழல் கருக்கொண்டுள்ளது.

கலைஞரே…உமக்கு நூறு வயசு…! M.G.R. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சொன்னது..!

மக்கள் திலகம் எம்ஜிஆர் ..முத்தமிழ் அறிஞர் கலைஞர் இருவருக்குமான நட்பு எம்ஜிஆர் சாகும் வரை நீடித்தது ..! எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்தது கூட சிலரின் உள்ளடி வேலைதான் என்று கூறுவார்கள்.சரி மேட்டருக்கு வருவோம்..! எம்ஜிஆரைப் பொறுத்தவரை சைவ உணவோ..? அசைவ உணவோ..ஒரு பிடி பிடிப்பார்.சூட்டிங் என்றால் எம்ஜிஆர் வீட்டில் இருந்து ஐம்பது பேருக்கு உணவு வரும். அத்தனையும் வித விதமான அசைவ உணவு. தான் என்ன சாப்பிடுகிறாரோ அதை லைட்மேன் கூட சாப்பிட வேண்டும் என்று நினைப்பார். அரசியல் விழா..கட்சிக்காரர்களின் திருமண விழா போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் கலைஞர் இல்லாமல் எம்ஜிஆர் என்றுமே சாப்பிட்டதே இல்லை. அதே போல் கலைஞர், எம்ஜிஆரை விட்டு சாப்பிட மாட்டார். அப்போது எம்ஜிஆர் கலந்து கட்டி கேட்டு வாங்கி சாப்பிடுவார். ஆனால், கலைஞர் மிக நிதானமாக மிக குறைந்த அளவு உணவை சாப்பிடுவார்.

ஸ்டாலின் கண்டனம் .. வைகோ மீது அரசியல் நாகரீகம் இன்றி நடந்து கொண்ட தொண்டர்கள் மீது

கருணாநிதியை பார்க்க மருத்துவமனைக்கு வந்த வைகோ மீது செருப்பு வீசி எதிர்ப்பு தெரிவித்த திமுகவினருக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனைக்கு வந்த போது திமுக தொண்டர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வைகோ வாகனம் மீது கல் வீசியும், செருப்பை வீசியும் திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கருணாநிதியை சந்திக்காமலேயே வைகோ திரும்பி சென்றார்.

.நாவடக்கம் இல்லா வைக்கோவிற்கு அரசியல் நாகரீகத்தை முதலில் கற்றுக்கொடுங்கள்...நடுநிலை நக்கிகளே ...

ஒரு முகநூல் மொழி :மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் உண்மை தான் ஆனால் மாற்றான் தோட்டத்து விஷ ஐந்து 🐞 கடிக்கும் முன்னே செருப்பால் அடித்து விட வேண்டும்
வைக்கோவை மறித்த உடன்பிறப்புகளின் செயல் .....நியாயப்படுத்தமுடியாவிட்டாலும் ...நிச்சயம் கண்டிக்கத்தக்க ஒரு தவறு அல்ல.
திமுக தொண்டரகள் ஒரு அரசியல்வாதியை மறிக்கவில்லை...ஒரு அரசியல் தரகரை தான் மறித்தார்கள்...இங்கே அரசியல் நாகரீகம் ஒன்றும் செத்துவிடவில்லை..
வைக்கோவின் தாயார் மரணத்திற்கு துக்கம் விசாரிக்க போன தளபதி கனிமொழி மீது அருவருவறுப்பான உள்நோக்கம் கற்பித்து கேவலப்படுத்தியதை ...யாரும் மறக்கவில்லை...
கலைஞர் சோற்றை தின்று வளர்ந்த வைக்கோ கலைஞரை எவ்வளவு அவதூறாக இழிவாக பேசி உள்ளார்...மறக்கமுடியுமா ?

எம்ஜிஆர்...ஜெயா...திமுகவின் பரம எதிரிகள் .திமுகவினர் அவர்களிடம் அரசியல் நாகரீகம் காட்டினார்கள்... வைக்கோ துரோகி...இவரிடம் கூட நாகரீகம் காட்டி இருக்கலாம்...முடியவில்லை..என்ன செய்ய.??
சிலநேரம் நாம் அழக்கூடாது என்று முயன்றாலும் அழுகை பொங்கி வருவது இல்லையா ?...கோபப்படக்கூடாது என்று நினைத்தாலும் கோபப்படுவது இல்லையா ? அப்படித்தான் இதுவும்..

வைகோ மீது திமுக தொண்டர்கள் கடும் ஆத்திரம்.. கூச்சல்.. துரோகி .. செருப்பு .. வீடியோ

கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாமகவின் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்தனர்.இன்று காலை 11 30 மணிக்கு ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவரைத் தொடர்ந்து மூத்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக்கண்ணுவும் நலம் விசாரித்து சென்றார். அதிமுக எம்.பி. தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் நேரில் வந்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்து உடல் நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்து கூறினர்.

பாஜக ஸ்பெக்ட்ரம் இழப்பு ஒரு ஊழல் ..17,56,47,00,00,000 ரூபாய் .. இழப்பை ஊழல்னது அவிங்கதானே

நடுநிலையை விரும்பும் கண்ணியம் ஆதங்கம் தெளிவாக தெரிகிறது .. ஆனால் #திமுக என்ற யானையை எவ்வளவு நாள் குத்தி கொண்டு இருப்பீர்கள் .. பூத்துக்கு ஆறு ஒட்டு கூட வாங்க வக்கு இல்லாத சுள்ளான்கள் எல்லாம் 1990 இல் ஆட்சியை இழக்க காரணமான LTTE ஆதரித்து அடி வாங்கிய திமுகவை #eelam குறித்து கால் மேல கால் போட்டு பேசியதை கண்டும் பொறுத்தது திமுக ..; 43 lakhs bogus votes வைத்து கொண்டு தேர்தல் கமிஷன் உதவியுடன் அதிமுக #pm11am கைகோர்த்து வெறும் 17000 ஒட்டிலே 19 MLA சீட்டை பறி கொடுத்து 2016 இல் ஆட்சியை இழந்தும் கண்டும் பொறுத்தது திமுக .. ஆதி தொழில் என்று காலை நக்கிய நன்றி கெட்ட நயவஞ்சர்கர்கள் எல்லாம் பேசியதை கண்டும் பொறுத்தது திமுக .. வினோத் ராய் என்ற பொய்க்கு பத்ம விருது தந்தும் இன்றைய பிஜேபி பில்லியன் டாலர் #petrolscam ஊழலில் திளைத்தும் மயிலாப்பூர் தொகுதில் பாதி அளவு கூட இருக்காத ., மொத்தமே 90,024 மக்களே இருக்கும் ., ஹவாலா பதுக்கல் பணக்கார முதலைகள் #Seychelles தீவில் March 10-11 2015 இரண்டு நாட்கள் இந்திய பிரதமர் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியின் பதிலில் Bharatiya Janata Party (BJP) ஊழல் பணத்தை மறைக்கும் scentific corruptive ராஜதந்திரம் அடங்கி உள்ளது கண்டும் பொறுத்தது திமுக .. கண்ணியம் என்ற போர்வையில் நீங்கள் கட்டுப்பாடு இல்லாமல் .. #திமுக என்ற யானையை எவ்வளவு நாள் குத்தி கொண்டு இருப்பீர்கள் .. முடிவல்ல ஒவ்வொரு தூரோகிக்கும் கிடைக்க போகும் சன்மானத்தின் சம்பளம் ஆரம்பம் .,,,  ஒரு ..முகநூல் வறுவல் பதிவு

ஜெயலலிதாவின் வாரிசுரிமையை சட்டப்படி சசிகலாவால் கொண்டாட முடியாது

சசிகலா பெயரில் ஏழு லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருக்கிறார் ஜெயலலிதா. எனவே, அவரது சட்டப்படியான வாரிசு சசிகலா மட்டும்தான்' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். ' ஜெயலலிதாவின் வாரிசு என்ற உரிமையை சட்டப்படியாகவே சசிகலாவால் உரிமை கொண்டாட முடியாது' என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. இதற்கு அக்கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பான ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் சசிகலா. நேற்று ஜெயலலிதாவின் மறைவின் 11-ம் நாள் காரியத்தை கார்டனில் நடத்தியுள்ளனர். அமைச்சர்கள் உள்பட கட்சியின் சீனியர்களுக்கு கார்டனில் சாப்பாடு வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவை கொல்ல முயற்சித்தவர் சசிகலா நடராஜன்- சசிகலா புஷ்பா பகீர் குற்றச்சாட்டு

Sasikala tried to kill Jayalalaithaa, says Sasikala Pushpaசென்னை: ஜெயலலிதாவை கொல்ல முயற்சித்தவர் சசிகலா நடராஜன் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டி என இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் கிரானிக்கல்> ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி: சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் சசிகலா நடராஜனை அதிமுக பொதுச்செயலராக நியமிப்பது என்பது மிகவும் தவறானது. ஏனெனில் சசிகலா நடராஜன் பெயரை அப்பதவிக்கு எந்த ஒரு இடத்திலுமே ஜெயலலிதா குறிப்பிடவில்லை.
சசிகலா நடராஜனுக்கு ஒரு கவுன்சிலர் அல்லது எம்.எல்.ஏ. பதவியை கூட ஜெயலலிதா தந்தது இல்லை.

சரிதா நாயருக்கும் கணவருக்கும் 3 ஆண்டுகள் சிறை .. சூரிய தகடு மோசடியில் 40 லட்சம் ரூபாய் ...

எர்ணாகுளம், சூரிய ஒளி மின்தகடுகள் அமைத்து தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில், சரிதாநாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கேரள கோர்ட்டு தீர்ப்பளித்தது.சோலார் பேனல் மோசடி >கேரளாவை சேர்ந்தவர் பிஜூ ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி சரிதாநாயர். இவர் கேரளாவில் சூரிய ஒளி மின்தகடு (சோலார் பேனல்) அமைத்து கொடுக்கும் நிறுவனத்தை நடத்திவந்தார். இந்த நிறுவனம் மூலம் பல தொழில் அதிபர்களுக்கு சோலார் பேனல் அமைத்து கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடியில் கேரள முன்னாள் முதல்–மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி சரிதாநாயர் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் மோசடி தொடர்பாக விசாரிக்க கேரள அரசு சார்பில் தனி கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

வடகிழக்கு பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு இன்னும் இந்திய தேசியம் எட்டவில்லையா?


tamilthehindu: நினைவுக்கெட்டிய நாட்களிலிருந்தே இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வசித்துவரும் பழங்குடி இனக் குழுக்கள், தங்கள் பாரம்பரிய முறைப்படி எல்லைகளை வகுத்துக்கொண்டு செயல்பட்டுவந்தன. பிரிட்டிஷ் காலத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகளாக (அதாவது, பிரிட்டிஷ் நிர்வாகத்தின்கீழ் அடங்காத ஒன்றாக) இருந்த இத்தகைய எல்லைகளை இந்திய விடுதலைக்குப் பின்பு அகற்றி, அவற்றை இந்தியாவின் இதர பகுதிகளைப் போன்ற மாநிலங்களாக மாற்ற முயற்சி நடந்தது. இதை எதிர்த்துத் தங்கள் தனித்தன்மையை நிலைநாட்ட அங்கெழுந்த விடுதலை இயக்கங்களால் இப்பகுதி பல்வேறு கிளர்ச்சிகளின் இருப்பிடமாக மாறியது. இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதம்தாங்கிய கிளர்ச்சிக் குழுக்கள் இப்பகுதியில் செயல்பட்டுவருகின்றன.

சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா? ஜெயலலிதா தனது எல்லா தவறுகளுக்கும் சசிகலாதான் காரணம் என்று ஒரு நாடகத்தை

அதிமுக அரசியல் என்பது  கோடி கோடியாக முதலீடுகள் நடக்கும், பணம் புரளும், வருமானம் பங்கிடப்படும் ஒரு தொழில். ஒவ்வொரு பதவிக்குப் பின்னாலும் ஒரு முதலீடு இருக்கிறது. கட்சிக்கு வெளியிலும் கட்சியை நம்பி பணம் போட்டவர்கள் இருக்கிறார்கள். செல்வத்துக்கும் அதிகாரத்துக்கும் இ டையில் வலுவான வலைப்பின்னல் இருக்கிறது. ஒரு சீட்டு நிறுவனத்தின் பங்குதாரர்களில் எவரும் - முதல் சீட்டு மட்டும் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் - சீட்டு நிறுவனம் தடுமாற்றத்துக்குள்ளாவதை விரும்புவதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் ஒரு கணக்கு இருக்கிறது. எவரும் சசிகலாவின் கால்களில் விட்டேத்தியாக விழவில்லை. அதிமுக நிர்வாகிகளிடமிருந்து வெளிப்படும் அசாதாரண ஒற்றுமையையும் அவர்களுடைய தேர்வையும் இந்தப் பின்னணியிலேயே நாம் பார்க்க வேண்டும். பிம்பத்தை நம்பி ஏமாந்து, இன்னமும் ஏமாற்றத்திலிருந்து வெளிப்பட இயலாத மனமே இன்னும்.
tamilthehindu.com :நேரலைச் செய்தியில் பார்த்தேன், 'ஜெயா பிளஸ்' தொலைக்காட்சியில், எவ்வளவு சுமுகமாகவும் இயல்பாகவும் அதிகார மாற்றம் நடக்கிறது அதிமுகவில்! காலைச் செய்தியில், 'வி.கே.சசிகலா' ஆக இருந்தவர், மாலைச் செய்திக்குள் 'சின்னம்மா' ஆகிவிட்டார்! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதிமுகவினரிடம் தொடரும் கச்சிதமான ரகசியத்தன்மை உள்ளபடியே வியக்க வைக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட விதமாகட்டும், அடுத்தடுத்த நாட்களில், கட்சியின் மூத்த தலைவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் வரிசையாக அணிவகுத்து நின்றதாகட்டும்,

இயக்குனர் ஸ்ரீதர் : நீ வேணும்னா பாரு, இந்த செஞ்சுரியிலேயே இதுதான்யா பெஸ்ட் பிக்சர்... காதலிக்க நேரமில்லை .

பஞ்சு அருணாசலம்‘
ஒரு பையனைப் பிடிச்சிருக்கேன் கவிஞரே, ரவிச்சந்திரன்னு பேர். மலேசியாவுல இருந்து வந்திருக்கான். பார்க்க ஸ்டைலா, நல்லா இருக்கான். அப்புறம் ஃப்ளைட்ல போயிட்டு இருந்தப்ப காஞ்சனானு ஒரு பணிப்பெண்... பார்த்தேன், நல்லா இருந்தாங்க. `நடிக்கிறீங்களா?’னு கேட்டேன். `நடிக்கிறேன்’னு சொன்னாங்க. கமிட் பண்ணிட்டேன். லவ்+காமெடி. கலர்ல பண்ணப்போறேன். ‘காதலிக்க நேரமில்லை’ அதான் டைட்டில்’ என்று அவுட்லைன் சொல்லி போட்டோ காட்டியிருக்கிறார்.
மிக இளம் வயதிலேயே புகழ் அடைந்ததால் ஸ்ரீதருக்கு தன்னம்பிக்கை அதிகம். அது அவரின் பேச்சிலேயே எதிரொலிக்கும். அது அகந்தையோ, திமிரோ கிடையாது. ஆனால், சமயங்களில் அது எதிரில் உள்ளவர்களைக் காயப்படுத்திவிடும். அன்றும் அப்படி ஆரம்பித்திருக்கிறார். ‘என்னைத் தவிர இந்த ஷாட்டை வைக்கிறதுக்கு எவன் இருக்கான், ஒரு பயலைச் சொல்லுங்க கவிஞரே’ எனச் சொல்லி இருக்கிறார். ‘ஆமாம் ஸ்ரீ, நீ திறமையானவன்...’ என, கவிஞர் பாராட்டியிருக்கிறார். பிறகு, போகப்போக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் கோபமாக அறையில் இருந்து வெளியேறினார் ஸ்ரீதர்.

தேயிலை தேசத்தின் தீரன் .. சி.வி வேலுப்பிள்ளை .. இலங்கை இந்திய அரசுகளால் கைவிடப்பட்ட மலையக தமிழரின்

cv velupillai
கீற்று.காம் :இலங்கை அரசாங்கம் 1972 ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்து, கண்டி மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான தோட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கரை சுவீகரித்து, அத்தோட்டங்களில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களை குடும்பத்தோடு வெளியேற்றியது. திக்கு திசை தெரியாமல் தொழிலாளர்களும், அவர்களுடைய குடும்பமும் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டனர். அந்த கொடுமையைக் கண்டு சி.வி.வேலுப்பிள்ளை கோபம் கொண்டு,; அவசரமாக, கொள்ளுப்பிட்டியிலுள்ள தேயிலை சபை மண்டபத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும கூட்டினார். நடந்த அநீதிக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி, தொழிலாளர்களை மீண்டும் தோட்டத்துக்குள் குடியேற்றச் செய்தார். 
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்திலிருந்து ஏழை மக்கள் கங்காணிகள் மூலம் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இலங்கைக்கு தோணி ஏறியவர்களில் நூற்றுக்குப் பதினைந்து சதவீதம் பேர் படகுகள் கவிழ்ந்து இறந்தனர். புயல் காற்றுக்கு தப்பிய தோணியில் வந்தவர்கள் காடுகள், மலைகள் வழியே நடத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு சாவு அங்கே காத்திருந்தது.
நடக்க முடியாதவர்களை எவ்வளவு தூரம் தூக்கிச் செல்ல முடியும். பத்து மைல் பதினைந்து மைல் தூக்கி களைத்து முடியாத நிலையில் நடுகாட்டில் மிருகங்களுக்கு இரையாக இவர்களைப் போட்டார்கள். இந்தத் துர்பாக்கிய நிலைக்கு ஆளானவர்கள் கையை நீட்டி கதறி அழுதார்கள். ஒரு சிரட்டையில் தண்ணீரும் இலையில் கொஞ்சம் ஆகாரமும் வைத்துவிட்டு உள்ளம் குமுறி அழுத கண்ணீருடன் சுற்றத்தினர் புறப்படுவார்கள். கானகத்தில் தனிமையில் விடப்பட்டவர் அவஸ்தையை சொல்ல முடியுமா?
மலையக இலக்கியத்தின் தலைமகன். ஆசிரியர், இதழாளர், கவிஞர், நாவலாசிரியர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல் செயற்பாட்டாளர், களப் போராளி, எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர் ‘மலையக மக்கள் கவிமணி’ சி.வி. வேலுப்பிள்ளை!

பெ.மணியரசன் :காவிரி வழக்கில் தமிழ்நாட்டை உச்சநீதிமன்றமும் ஏமாற்றுகிறது?

கீற்று:  15.12.2016 அன்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வின் முன் விசாரணைக்கு வந்த காவிரி வழக்கை, உருப்படியான ஒரு முடிவும் சொல்லாமல் சனவரி 4ஆம் நாளுக்கு ஒத்தி வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்கள் மீது உச்ச நீதிமன்றம் காட்டும் அலட்சியம் என்றே கருத வேண்டியுள்ளது. மூன்று நீதிபதிகளில் ஒருவர் வேறொரு வழக்கின் விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்து, காவிரி அமர்வுக்கு வர மறுத்தது காவிரிப் பிரச்சினை மட்டுமல்ல, தமிழ்நாட்டையும் சிறுமைப்படுத்தும் நிகழ்வாகும்.< கடந்த 09.12.2016 அன்று, இதே சிறப்பு அமர்வு காவிரித் தீர்ப்பாய வழக்கை விசாரிக்கவும் அதில் ஆணைகள் இடவும் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு என தீர்ப்பளித்து, வழக்கை 15.12.2016க்கு ஒத்தி வைத்தது.

கலைஞரை மருத்துவமனையில் சிதம்பரம் ,இளங்கோவன் ,அன்புமணி உள்ளிட்ட மேலும் பலர்...

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தொண்டை மற்றும் நுரையிரல் நோய் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் தொற்றால் மூச்சு விட கருணாநிதி சிரமப்படுவதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் காவேரி மருத்துவமனைக்கு நேற்று மதியம் வருகை தந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.

வெள்ளி, 16 டிசம்பர், 2016

ஜெயாவின் மிடாஸ், ஜாஸ் சினிமாஸ், ஜெயா பைனான்ஸ் போன்ற கம்பனிகள் சசிகலாவின் வசம்!

சென்னை: அதிமுகவின் புதிய தலைமையை ஏற்கப்போவதாக சிக்னல்களை வெளிப்படுத்தி வரும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் மிடாஸ் மதுபான தொழிற்சாலை 13 நிறுவனங்கள் உள்ளன. சசிகலா நடராஜன்... விகே சசிகலா... இப்போது 'சின்னம்மா'! தமிழக அரசியல் களத்தில் இப்போது உச்சரிக்கப்படும் பெயர்... இனி அதிமுகவினரின் வேதவாக்காக, தெய்வத் தாயாக திகழப் போகிறது. யார் இந்த சசிகலா நடராஜன் எனும் விகே சசிகலா எனும் சின்னம்மா? 'மன்னார்குடி வகையறாக்களில்' இருந்து தொடங்குவோம். சசிகலாவுடன் பிறந்தவர்கள் 5 பேர். சகோதரர்கள் வினோதகன், திவாகரன், சுந்தரவதனம், ஜெயராமன் மற்றும் சகோதரி வனிதாமணி. சசிகலா- நடராஜன் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. சகோதரர்களின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் சகோதரியின் குடும்பங்களே சசிகலாவின் 'மன்னார் குடி வகையறாக்கள்' இந்த வகையறாக்களில் சசிகலாவின் வலதுகரமாக இப்போது இருப்பது சிவகுமார். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவின் கணவர்தான் இந்த சிவகுமார். இவர்தான் 'மன்னார்குடி வகையறாக்களின்' 13 கம்பெனிகளையும் நிர்வகித்து வருகிறார்.

திரைப்பட முன்னோடி, கோவை “வெரைட்டி ஹால் டாக்கீஸ்”ன் வரலாறு.. வின்சன்ட் சாமிகண்ணு என்ற ஒரு இளைஞன் ..

கோவை நகரிலுள பி-1 காவல்நிலையம் என்பதை வெரைட்டி ஹால் ரோடு காவல்நிலையம் என்றுதான் கூறுவார்கள். அந்த “வெரைட்டி ஹால்” என்பது என்னவென்று இப்போது, கோவையிலுள்ள பலருக்கும் தெரியாது. இந்திய திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்ததுதான் இந்த “வெரைட்டி ஹால்” என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். 1896-ஆண்டில், இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட “இயேசுவின் வாழ்க்கை” Life of Jesus” என்ற வசனமில்லாத ஒரு சிறிய திரைப்படத்தை (பயாஸ்கோப் படம்) “டூபாண்டு” என்ற ஆங்கிலேயர் இந்தியாவுக்கு கொண்டு வந்தார். மும்பை, புனே, சென்னை போன்ற ஊர்களிலெல்லாம் அந்த படத்தை இந்திய கலா இரசிகர்களுக்கு போட்டுக்காட்டிவிட்டு கடைசியில் திருச்சிராப்பள்ளிக்கு வந்த அவர் சிங்காரத்தோப்பு பகுதியில் இருந்த ஒரு சத்திரத்தில் தங்கிக்கொண்டு அங்கிருந்த மக்களுக்கும் இந்த திரைப்படத்தை போட்டுக்காட்டிக் கொண்டிருந்தார்.

போலி நாட்டு பற்றாளர்களின் கடைசி புகலிடம் சினிமா தியேட்டர்கள்


thetimestamil: அருண் நெடுஞ்செழியன் :"அன்னியமாக்கப்பட்ட நாட்டுப்பற்று ஆளும்வர்க்கத்தின் இறுதிப் புகலிடம்.. அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டுமென்றும்,மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாடுமுழுவதும் உள்ள திரையங்குகள் அமல்படுத்திவருகின்றன. பொழுதுபோக்கிற்காக திரையங்கிற்கு செல்கிற மக்களிடத்தில் நாட்டுப்பற்றை வலிந்து திணிப்பதை புறக்கணித்து எதிர்ப்பது என்ற எதிர்ப்பரசியலின் வெளிப்பாடாக கடந்த வாரம் ரெசிஸ்ட் தோழர்கள், சென்னை காசி திரையரங்கிற்கு சென்று தேசிய கீதம் இசைத்தபோது எழுந்து நிற்காமல் எதிர்ப்பை பதிவு செய்தனர்.அதன் தொடர்ச்சியாக சிறு கும்பல் ரெசிஸ்ட் தோழர்களிடம் மல்லுக்கு நின்றதும்,பின்னர் தோழர்கள் மீது தேசியச்சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின்படி (1971) வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் போர்க்கொடி .. AIBEA, NCBE, AIBOC போன்ற வங்கி சங்கங்கள் மௌனம்

பெரும் சோதனையானக் காலக்கட்டத்தில் வங்கி ஊழியர்கள் இருக்கிறார்கள்.
அரசும், ரிசர்வ் வங்கியும் பாரபட்சமாக செயல்படுகின்றன. Axis, ICICI, HDFC போன்ற தனியார் வங்கிகளுக்கு தேவைக்கும் அதிகமாய் புதிய ருபாய் நோட்டுகள் வழங்கப்படுகின்றன. அதே நேரம் மிக அதிக அளவில் கிளைகள் கொண்ட, கிராமப்புறங்களிலும் சேவை செய்கிற பொதுத்துறை வங்கிகளுக்கு மிகக் குறைவாகவே பணம் கொடுக்கப்படுகிறது. வாரத்துக்கு ருபாய் 24000 என்று அரசு நிர்ணயித் தொகையையும் வழங்க முடியாமல் ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கும், கோபத்துக்கும் ஆளாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
தனியார் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பணத்தில், தேசமெங்கும் இதுவரை 400 கோடிக்கும் மேலே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. பத்திரிக்கைகளில் அவை செய்திகளாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. ஆயிரத்துக்கும், இரண்டாயிரத்துக்கும் பல மணி நேரங்கள் காத்திருக்கும் மக்கள் இதனால் அனைத்து வங்கி ஊழியர்கள் மீதும் கோபம் கொள்கின்றனர்.
அதே வேளையில், பொதுத்துறை வங்கிகளின் மீது இருந்த நம்பகத்தன்மை சிதைகிறது. தேவையான பணம் கிடைப்பதால் தனியார் வங்கிகளை நோக்கி மக்கள் செல்ல ஆரம்பிக்கின்றனர். பல ஆண்டுகளாய் நேசித்து, உழைத்து, சிறுகச் சிறுகச் சேர்த்த மக்களின் அன்பும், ஆதரவும், உறவும் கண் முன்னால் நொறுங்குகிறது.

மத்திய அரசுக்கு எதிராக ஆளும் கட்சி எம்பிக்கள் ஒட்டு போடும் அபாயம் .. பாஜகவும் சேர்ந்தே அவையை முடக்குகிறது

சாதாரண மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அவையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில்
சாதாரண மக்கள் படும் துன்பங்களை விவாதிக்க வழியில்லாமல் போனது ஆளும் கட்சியில் இருப்பவர்களையும் உலுக்கியிருக்கிறது.; ஆளும் கட்சி வரிசையில் அத்வானியின் குரல் வழியே சாதாரண மக்களின் குரல் எதிரொலித்திருக்கிறது என்பதுதான் உண்மை. கண்முன்னால் தினந்தோறும் நடக்கும் கூச்சல் குழப்பங்களைப் பார்த்து பொறுக்க முடியாமல், லோக் சபாவில் முன் வரிசையில் அமர்ந்திருந்த பி.ஜே.பி மூத்த தலைவர் அத்வானி, தன் அருகில் இருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்,  "சபாநாயகரிடம்
சொல்லி தயவு செய்து எதிர்கட்சிகளிடம் பேசுங்கள். அவையை சுமுகமாக நடத்த உதவுங்கள்" என்று சொல்கிறார். அதோடு நிறுத்தவில்லை. "வாஜ்பாய் அவையில் இருந்திருந்தால். இந்தச் சம்பவங்கள் எல்லாம் அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்திருக்கும்.

சிகிச்சையின் பலனால் நிமிர்ந்து உட்கார்ந்தார் கலைஞர்

சிகிச்சையின் பலனால் நிமிர்ந்து உட்கார்ந்தார் கலைஞர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கலைஞர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுவாசம் சீராக இருக்க அவருக்கு 'ட்ரக்யாஸ்டோமி' சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. சிகிச்சையின் பலனால் கலைஞர் இன்று மாலை 6.30 மணி அளவில் நிமிர்ந்து உட்கார்ந்து இயல்பாக சுவாசிக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நக்கீரன்

திருநாவுக்கரசர் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ? வெள்ளை அறிக்கை வந்தால் மட்டும் அம்மா உயிரோடு வந்துவிடுவாரா என்று காட்டம் .

தனியார் வங்கிகள்சென்னை: வெள்ளை அறிக்கை விட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனதால் மக்கள் கடந்த 2 மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார்கள். வங்கிகளில் ரூ.2 ஆயிரத்திற்கு அதிகமாக பணம் தருவது இல்லை. ஆனால் சேகர் ரெட்டியிடம் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் அதுவும் கோடிக் கணக்கில் இருந்தது எப்படி? தனியார் வங்கிகள் தனியார் வங்கிகள் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பி வைக்கிறது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தெருமுனை பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

சென்னைக்குத் தேவை அதன் நுரையீரலே: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன்
thetimestamil.com :நக்கீரன் :சென்னையில் அடித்த புயலில் ஆயிரக்கணக்கில் மரங்கள் வீழ்ந்து விட்டன. இயற்கையாக வீழ்ந்த மரங்களோடு மீட்பு படையினர் வருவதற்கு முன்னதாக ஆங்காங்கே செயற்கையாகவும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாக ஊடகத் தோழர் ஒருவர் தெரிவித்தார். இச்செய்கை பச்சை அயோக்கியத்தனமானது. வருங்காலத்தில் திரும்பவும் புயலடித்தால் இம்மரங்கள் தங்கள் இடத்தின் மேல் வீழ்ந்து விடாதிருக்க இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடாம். மரங்களற்ற சென்னை எப்படி அமையும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கான்கிரீட் கட்டிடங்கள் நிறைந்த ஒவ்வொரு நகரமும் ஒரு வெப்ப தீவுதான். குறைந்த எண்ணிக்கையில் மரங்களுள்ள இந்திய நகரங்களுள் சென்னையும் ஒன்று. ஒரு நகரத்துக்குக் குறைந்தது 20% பசுமைப்பரப்பு தேவை.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உரிமம் ரத்து!


ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்தியாவில் பல அரசு சார தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து அதிகளவில் நன்கொடை பெற்று வருகின்றன. இந்நிலையில், நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்படி, உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் ,அதை பல்வேறு வகையில் முறைகேடாகப் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதன்படி,இந்தியாவில் செயல்பட்டு வரும் பல தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார சர்ஜிக்கல் நடவடிக்கை : சக்திகாந்த தாஸ்


சட்டவிரோதமாக சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணத்தை அமலாக்க நிறுவனங்கள் பறிமுதல் செய்வதை, சர்ஜிக்கல் நடவடிக்கை என்றும் அழைக்கலாம் என பொருளாதார விவகாரத் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
பண ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள மத்திய அரசு போதுமான புதிய நோட்டுகளை வெளியிடாததால் பொதுமக்கள் மாற்றுப்பணம் பெற முடியாமலும், டெபாசிட் செய்த தொகையை வங்கியில் இருந்து எடுக்க முடியாமலும் அவஸ்தையடைந்து வருகின்றனர்.

முத்தரசன் :ஜெ’ மரணத்தில் மர்மம் இல்லை! எவ்வளவு தந்தாய்ங்க? அத்த சொல்லுவீங்களா?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், போயஸ் இல்லத்தில் வசித்துவரும் சசிகலவை சந்தித்து ஆறுதல் கூறினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலர் முத்தரசன். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அறிக்கைவாயிலாக பல கேள்விகளை எழுப்பியிருக்கும் நிலையில், அந்த அறிக்கையை ஆதரித்து திமுக பொருளாளர் ஸ்டாலினும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதை தன்னால் ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநிலஸ் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
புயல் தாக்குதல்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏற்பட்ட புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை மின்சாரம் கிடைக்கவில்லை. குடிநீரும் வழங்கப்படவில்லை. கடுமையான அவதிக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்கள் முறிந்தது, மின் கம்பங்கள் சரிந்தது பற்றி அரசு தெரிவித்த கணக்கைக் காட்டிலும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பா : மக்கள் ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்றுதான் ஒட்டு போட்டார்கள் .. சசிகலா பொதுசெயலாளராக ஒட்டு போடவில்லை


ஜெ. முதல்வரா வரவேண்டுமென மக்கள் ஓட்டுப்போட்டார்களே தவிர நடுவுல சசி வருவார்ன்னு இல்ல:
சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னை அண்ணாநகரில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரு பெண் முதல் அமைச்சர். எந்த நாட்டுக்கும் கிடைக்காத ஒரு பெருமை. இந்தக் கட்சிக்காக எவ்வளவு போராடி வந்தவர் ஜெயலலிதா.
 அவர்களுடைய சாவு மக்களால் இவ்வளவு பேசப்படனுமா. நல்லதா பேசப்பட வேண்டும். அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். ஆனா மக்கள் என்ன பேசிக்கிறாங்க. என்னமோ நடந்திருச்சி. அம்மாவின் சாவில் மர்மம் இருக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். நானும் நினைக்கிறேன். ஒவ்வொரு வீட்டில் இருக்கும் மக்களும் இதனை பேசுகிறார்கள்.
இதில் யார் பூனைக்கு மணி கட்டுவது. ஒரு விசாரணை நடத்த வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை விட மாட்டேன். மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக வரவேண்டுமென ஓட்டுபோட்டார்களே தவிர, நடுவுல சசிகலா நடராஜன் கட்சியை தூக்கனும், வேறாவது முதலமைச்சராகனும் என்று ஓட்டுப்போடவில்லை.

உச்சநீதிமன்றம் கிடிக்கி பிடி : சிலர் வங்கிகளில் கோடிக்கணக்கில் புதிய 2000 நோட்டுக்களை பெறுகிறார்களே?

By: Karthikeyan .. Oneindia Tamil:  டெல்லி: பொதுமக்கள் பணம் எடுக்க சிரமப்படுவதாக புகார்கள் வரும் நிலையில், ஒரு சிலர் மட்டும் கோடிக்கணக்கில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவது எப்படி? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. Supreme Court asks questions from government over demonetisation  : நிலங்களை கையகப்படுத்தி தொழிழ்ப்பேட்டை அமைக்க விவசாய சங்கங்கள் எதிர்ப்பு விசாரணையின் பொதுமக்கள் பணம் இல்லாமல் சிரமப்படுவதாக புகார்கள் வரும் நிலையில் சோதனைகளின் போது கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்படுவது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் ! பிரதாப் ரெட்டியை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் .... உயர்நீதிமன்றத்தில் ட்ராபிக் ராமசாமி மனு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதனையடுத்து நேற்று சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து புலனாய்வு குழு விசாரணை செய்ய வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வியாழன், 15 டிசம்பர், 2016

கலைஞர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதி சளித்தொல்லை காரணமாக காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 7-ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதி வீடு திரும்பிய நிலையில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குஷ்பூ பஞ்சாயத்து : யார் மகன் தனுஷ்? உரிமை கொண்டாடும் பெற்றோர்கள்..

சென்னை: நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும் அவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தருமாறும் கோரி மேலூரைச் சேர்ந்த தம்பதி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக உள்ளார் கதிரேசன். அவரது மனைவி மீனாட்சி. கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் தெரிவித்தனர். தனுஷும் அவரது தந்தையுமான கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர். இதனிடையே கதிரேசன் இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

JioMoney சில்லறை வணிகர்களை முற்றாக ஒழித்து விடும் .அம்பானிகளின் கையில் மத்தியரசு

ருப்புப் பண ஒழிப்பு, கள்ளப் பண ஒழிப்பு – இதன் மூலம் தீவிரவாத ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என்பது போன்ற தம்பட்டங்களோடு துவங்கிய பண மதிப்பழிப்பு அறிவிப்பு தற்போது அதன் இறுதி இலக்கை அடைந்துள்ளது. உண்மையில் கருப்புப் பண ஒழிப்போ, கள்ளப் பண ஒழிப்போ மோடியின் சிந்தனையிலே இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் பேசுவதிலிருந்தே வாக்குமூலங்களாக வெளிவரத் துவங்கி விட்டன.
bjp_tweet-400x223
பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவர்களில் சஞ்சீவ் கம்போஜ் அவரது டிவிட்டர் பக்கத்தில் புது நோட்டையே காட்டிவிட்டார். நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
எனில், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாருக்குத் தான் லாபம்? அறிவிப்புக்கு முன்னதாகவே நிலங்களாக வாங்கிக் குவித்து தமது கருப்புப் பணத்தை பா.ஜ.க கும்பல் பதுக்கிக் கொண்டனர் என செய்திகள் வெளியாகின. பெரும் முதலாளிகள் இதனால் பாதிக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள பொருளாதார அறிவு கூடத் தேவையில்லை – வங்கிகளின் முன் நிற்கும் வரிசைகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

கலைஞர் பேசமுடியாமல் சிரமப்படுகிறார் .. உணவு உண்பதிலும் சிரமம் ..

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். சிக்னல் காட்டினாலும் நெட்வொர்க் சரியாகவில்லை. நெட்வொர்க் இருக்கும் இடம் தேடி நகர வேண்டியிருந்தது. அப்படி நெட்வொர்க் இருந்த இடத்தில் நின்றபோது, ‘திமுக தலைவர் கருணாநிதிக்கு என்னாச்சு? ஊரெல்லாம் இதே கேள்வியாக இருக்கிறது... எதுவும் தகவல் உண்டா?’ என வாட்ஸ் அப் கேள்வியை எழுப்பியிருந்தது. ஃபேஸ்புக்கில் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சற்றுநேரத்துக்குப் பிறகு வாட்ஸ் அப் ஒரு நீண்ட மெசேஜ் போட்டது.
“கடந்த அக்டோபர் 13ஆம் தேதி முரசொலியில், ‘உடல்நிலை சரியில்லாததால் கடிதம் எழுத முடியவில்லை உடன்பிறப்பே...’ எனக் குறிப்பிட்டிருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. அப்போதுதான் கலைஞர்  உடல்நிலை சரியில்லை என்ற தகவல் ஊரெல்லாம் பரவ ஆரம்பித்தது. கருணாநிதிக்கு சர்க்கரை வியாதி இல்லை. பி.பி. இல்லை. கொலஸ்ட்ரால் இல்லை. இப்படி தொற்றாத வாழ்வியல் நோய்கள் எதுவும் கலைஞர் கருணாநிதிக்கு இல்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு .. வலுக்கும் சந்தேகங்கள் .. கோரிக்கை!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலவிதமான கேள்விகள் சமூக வலைதளங்களிலும் அதிமுக தொண்டர்களிடமும் கேள்விகள் எழுந்தநிலையில், சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக-வின் மூத்த நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்கும்விதமாக அதிமுக-வின் அவை விதிகள் மாற்றப்படும் என்று பொன்னையன் தெரிவித்தநிலையில், அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்களை கிளப்பி வருகிறார்கள். இது தொடர்பாக, பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக-வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலரும் என்னைத் தொடர்புகொண்டு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஐயம் தெரிவித்து வருகின்றனர்.

‘ஜெயலலிதாவின் ஹைதராபாத் சொத்துகள் தெலங்கனா அரசு ஏற்க வழக்கு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத்தில் சொத்துகள் உள்ளன. அந்த சொத்துகளுக்கு ஜெயலலிதா எழுதிய உயில் ஹைதராபாத்தில் உள்ளா மேச்சல் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இருப்பதாகவும், அந்த உயிலில் தன் சொத்துகள் சிலவற்றை உறவுக்காரப் பெண் ஒருவர் பெயரில் எழுதிவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண் யார்? உண்மையிலேயே, அப்படி ஒரு உயில் உள்ளதா? என்று செய்திகள் எதுவும் உறுதியாகாத நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகளை தெலங்கானா மாநில அரசே ஏற்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை கரிப் கைடு அமைப்பின் தலைவர் பார்கவி தொடர்ந்துள்ளார். அதில், ஐதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை தெலங்கானா அரசே ஏற்று நிர்வகிக்க வேண்டும். அந்த சொத்துகளில் யாரும் சொந்தம் கொண்டாட அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னம்பலம்,காம்

பொன்னையன் :சசிகலாவுக்காக அதிமுக அமைப்பு விதிகள் தளர்த்தப்படும்..

அதிமுக-வின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன்.  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனச்சாட்சியாக இருப்பவர்தான் சின்னம்மா சசிகலா. அவர் மாண்புமிகு அம்மாவுடன் 33 ஆண்டுகளாக உற்ற தோழியாக, உடன் பிறவா சகோதரியாக அரசியல் உள்ளிட்ட முக்கிய தருணங்கள் அனைத்திலும் உடனிருந்து உன்னிப்பாக கவனித்து வந்தவர். எனவே, அம்மாவுக்குப் பிறகு அதிமுக-வின் பொதுச்செயலாளராக சின்னம்மாவே ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். செயற்குழு, பொதுக்குழு அனைத்திலும் ஆட்சேபனையற்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். அவருக்காக அதிமுக-வின் விதிகள் தளர்த்தப்படும். அதிமுக-வின் அச்சாணியாக விளங்குபவர் சின்னம்மா சசிகலா” என்று தெரிவித்தார்.மின்னம்பலம்,காம்  அய்யாவுக்கு பெயர் சரியாகத்தான் வச்சிருக்காக

உதிர்ந்து விழும் 2000 ரூபாய் நோட்டுகள்!

2-thosand-notetimestamil com: ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை திரும்பப் பெற்றபோது புதிய ரூபாய் நோட்டுகளை அவசர அவசரமாக புழக்கத்தில் விட்டது ரிசர்வ் வங்கி. 2000 ரூபாய் நோட்டுகள் சாயம் வெளுத்தன, 500 ரூபாய் நோட்டுகளில் முழுவதும் அச்சிடப்படாத நோட்டுகள் சிக்கின. சர்ச்சைகளைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் உதிர்ந்து விழும் நோட்டுகள், பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன.
கேரள மாநிலம் தலிபரம்பாவில் உள்ள ஃபெடரல் வங்கி கிளையில் 2000 ரூபாய் நோட்டுகள் ஐந்தை அதாவது ரூ. பத்தாயிரத்தை 13-ஆம் தேதி எடுத்து வந்திருக்கிறார் ஷரீஃபா. வீட்டில் வந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து பார்க்கும்போது அதில் ஒரு நோட்டு உதிர்ந்து விழ ஆரம்பித்திருக்கிறது.

கம்யுனிஸ்ட் பாண்டியனின் சாதனை : சிவப்பு துண்டை அடிமைகளின் சின்னமாக்கிவிட்டார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக கருதப்பட்ட சசிகலாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவரை போயஸ் இல்லத்தில் சந்தித்தார் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா மறைந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சசிகலா உட்பட யாரையும் அப்போது சந்தித்து பேச இயலவில்லை. அதனால் இன்று சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். நானும் சசிகலாவும் அரசியல்வாதி. போயஸ் கார்டனுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கூட அரசியல்வாதிகள். சசிகலாவுக்கு பின்னால் மக்களின் சக்தி இருக்கிறது”என தா. பாண்டியன் கூறினார்.

அர்விந்த் கேஜ்ரிவால் : மோடியின் படிப்பு சான்றிதழ்கள் போலியானது... நான் அவன்தான் ..

Whole country reeling under demonitization scandal. People want know educational qualifications of PM. Does he understand economy? Modiji degree case in Guj HC today. Modiji sends his best advocate Tushar Mehta 2 obtain stay on disclosur of degree? Why? Degree farzi?
மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது: ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஊழல்: கெஜ்ரிவால் ரூபாய் நோட்டு விவகாரத்தில் ரூபாய் 8 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறி வந்தநிலையில் தொலைநிலை கல்வி முறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக கூறுவது போலியானது.
ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பொருளாதாரத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு மோடி பெற்ற கல்வியறிவு என்ன? என கடுமையாக சாடியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்.
“மோடி என்ன படித்திருக்கிறார் என தெரிந்துள்ள மக்கள் விரும்புகிறார்கள். அவரால் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள முடியுமா?” என ட்விடியிருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

அமைச்சர் தங்கக்மணியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர் .. கரெண்டு வரும் வரை கூடவே இருங்க

கரெண்ட் வரும்வரை எங்கக் கூட இருங்க... அமைச்சரை சிறைப்பிடித்த பொதுமக்கள் புயல் பாதிப்புக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய மின்துறை அமைச்சர் தங்கமணி சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, தங்கமணியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். புயல் தாக்கி 4 நாட்கள் ஆகியும் மின்வினியோகத்தை சீர் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர். மின்சாரம் வந்த பிறகு நீங்கள் இந்த இடத்தைவிட்டு செல்லுங்கள், மின்சாரம் வரும்வரை எங்களுடனேயே இருங்கள் என்று அமைச்சரை விடுவிக்காமல் பொதுமக்கள் கூறியதால் ஒரு விதமான பதற்றம் நிலவியது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகளும், போலீசாரும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தங்கமணி விடுவிக்கப்பட்டார்.நக்கீரன்,இன்

சசிகலாவின் காவல் நாய் ஆகிப்போன ஏவல் துறை .. சசியின் பணத்துக்கு பல்லிளித்த பாண்டேக்கள்

"உங்களுக்கு துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை; உறவுமில்லை. உங்களுக்கு உண்மையான தங்கையாகவே இருக்கவே விரும்புகிறேன். அவருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்"  - 2011-ம் ஆண்டு இறுதியில் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய சசிகலா, 2012-ம் ஆண்டு துவக்கத்தில் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி தான் இது.  இதை அறிக்கையாகவும் வெளியிட்டார் சசிகலா. இந்த கடிதத்தை ஏற்று சசிகலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்று, மீண்டும் கட்சிக்குள்ளும், கார்டனுக்குள்ளும் சசிகலாவை அனுமதித்தார் ஜெயலலிதா. "சசிகலா எனக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதே பொருள் கொண்ட அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். சசிகலா அளித்துள்ள விளக்கத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயத்தில், நடராஜன், திவாகர், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், பழனிவேல், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சுந்தரவதனம், சந்தானலட்சுமி சுந்தரவதனம் மற்றும் வைஜெயந்தி மாலா ஆகியோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை; அந்த நடவடிக்கை அப்படியே தொடரும். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது" என அறிவித்திருந்தார்.

கலைஞர் இறுதி எச்சரிக்கை: அழகிரி வேணும் ..நீ அறிவிக்கிறாயா..? நான் அறிவிக்கவா..?

உச்சகட்ட போரில் சிக்கி தவிக்கிறது கோபாலபுரம்..! ஒரு புறம் கலைஞரை தனது வீட்டுக்கு கூட்டிப் போக முடியாமல் தவிக்கும் ராசாத்தியம்மாள்..! இன்னொரு புறம் கனிமொழிக்கு தனது அரசியல் எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற பயம்.!? தளபதிக்கு கட்சியைக் கட்டிக் காத்து மீண்டும் திமுகவை அரியணையில் அமர வைக்க பகீரத முயற்சி. மதுரை அண்ணன் எப்படியும் கலைஞர் இருக்கு போதே கட்சியில் நிலையான இடத்தில அமர்ந்து விட வேண்டும் என்கிற தவிப்பு. இதற்காக அவர் செல்வி மூலம் காய் நகர்த்தி வருவது.. தயாநிதிமாறன் யார் பக்கம் அணி சேர்வது என்கிற தவிப்பு. திமுகவின் ஏழு அறக்கட்டளையின் சொத்துகள் யாருக்கு என்கிற போட்டாபோட்டி என்று உச்சகட்ட குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது கோபாலபுரம்..!? கலைஞர் எப்படியும் அழகிரியை கட்சியில் சேர்த்தே ஆக வேண்டும் என்று முடிவே எடுத்து விட்டார். ஆனால் தளபதி அசைந்து கொடுக்கவே இல்லை. இதனால் குடும்பத்தினர் அதிக அளவில் ஆத்திரம் கொண்டனர்..! கலைஞரோ இனி காலம் தாழ்த்த முடியாது. நீ அறிவித்து விடு அல்லது நானே அறிவித்து விடுவேன் என்கிறார். அதிர்ந்து விட்டார் தளபதி. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அறுபது ஆண்டுகால திமுக பாரம்பரியத்தை கட்டிக் காக்க போராடுகிறார் தளபதி. அதற்கு குடும்பமே தடையாக இருக்கிறது. நொந்து போய் உள்ளார்கள் தொண்டர்கள்..!! லைவ்டே.காம்

Admk is a Professional political Mafia? சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்? அதிமுகாயிசம் என்று கொள்கை ஏதாவது உண்டா?

sasikala
ஜி. கார்ல் மார்க்ஸ் ஜி. கார்ல் மார்க்ஸ் சசிகலாவிடம், “ நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று தொண்டர்களும், கட்சிப் பிரதிநிதிகளும் வலியுறுத்துவதாகவும், அவர் இன்னும் ஜெயலலலிதாவின் மரணத்தில் இருந்து மீளாத துயரத்தில் இருப்பதாகவுமான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அத்தகைய நாடகம் கடுமையாக விமர்சிக்கவும் படுகிறது.
கட்சியின் ஒரு பிரிவு தொண்டர்களால் சசிகலாவின் உருவம் பெரிதுபடுத்தப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் புரிந்து கொள்ளக் கூடியதே. ‘ஜெயலலிதா’ இறந்து விட்டிருக்கிற ஒரு துயரார்ந்த சூழலில், அடுத்த தலைமைக்கான உடனடி நகர்வுகளை கட்சியின் தீவிரத் தொண்டன் விரும்பமாட்டான்தான். அதுவொரு எரிச்சல். அதைத்தாண்டி, ஒரு அதிமுக தொண்டன், சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வான் என்பதும் மிக சீக்கிரமாகவே அதற்கு பழகிக்கொள்வான் என்பதுமே உண்மை. அதிமுகவின் முந்தைய வரலாறு சொல்வதும் அதைத்தான்.
கட்சிக்குள் தான் என்னவாக இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் சசிகலா விரைவாக உறுதிபடுத்திக்கொள்ள முயல்கிறார்.

திரையில் இருந்து நாடகத்துக்கு வந்த தோழர் ரோகினிக்கு எங்கள் வாழ்த்துக்கள்

துவக்ககால தமிழ்ச்சினிமாவின் கலைஞர்கள் பெரும்பாலும் நாடகத்துறையிலிருந்தே திரைக்கு வந்தனர்.திரையில் புகழ்பெற்ற பின்னும்கூட எம்.ஜி.ஆர். சிவாஜி, எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கே போன்ற பல கலைஞர்கள், தொடர்ந்து நாடகத்திலும் தங்கள் பங்களிப்பை செலுத்தியே வந்தவர்...இடையில் அந்த மரபு விட்டுப்போனாலும் நாசர்,பசுபதி,சண்முகராஜா போன்றோர் அதை இன்னமும் தொடர்ந்து வருகின்றனர்.
ஆனால் திரைத்துறையிலிருந்து நாடகத்திற்கு வந்தவர்கள் மிகவும் அபூர்வமே. அதிலும் நவீன நாடகமென்னும் சமூக செயற்பாட்டு களத்திற்கு வருவதென்பது எப்போதாவதுதான் நிகழ்கிறது.அந்த வகையின் சமீபத்திய அடையாளமாக இருப்பவர் Rohini Molleti எனும் திரைக்கலைஞர் ரோகிணி. சினிமா,நாடகம் ,சமூக செயல்பாடுகள் என கவனத்திற்குரிய வகையில் இயங்கிவரும் தோழர் ரோகிணிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.  முகநூல் பதிவு கருப்பு கருணா