நோய் கண்டவரிடம் தொடர்பில் இருப்பவர்கள் 28 நாட்களில் இந்த நோய்க்கு ஆளாக நேரிடும்
மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியா நாட்டில் லோபா என்ற மாவட்டத்திலுள்ள ஒரு
கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு அந்த மக்கள்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தலையில் மூட்டை, கையில் குழந்தைகள், வியர்வை
வழிந்தோடும் முகத்தில் மரண பயம்! ஆனால், பக்கத்து கிராமத்துக்குள்
நுழைவதற்கு முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். உள்ளே
வாராதபடி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
“உள்ளே நுழைந்தால் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டுகிறார்கள், பக்கத்து
கிராமத்து மக்கள். அவர்களும் அச்சத்தால் உறைந்திருக்கிறார்கள். தங்கள்
ஊருக்கும் எபோலா பரவிவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு. ஓடிவந்தவர்களுக்கோ
தங்கள் கிராமத்துக்குத் திரும்பிப் போக பயம். கிராமத் தெருக்களில் எபோலா
தாக்குத லால் கைவிடப்பட்டவர்கள் நினைவற்றுக் கிடக்கிறார்கள். சில உடல்களும்
கேட்பாரற்ற முறையில் ஆங்காங்கே கிடக்கின்றன. எபோலா வெளியில் இருந்து வரவேண்டியதில்லை நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகலிலேயே உருவாக்கிவிடுவார்கள்