சனி, 7 செப்டம்பர், 2019

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களிடம் இந்துமுன்னணி அடிதடி வசூல் வேட்டை .. தாக்குதல்கள்

மின்னம்பலம் : திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. கடந்த 5 ஆம் தேதி சிலையை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது சிலையை எடுத்துச் சென்ற இந்து முன்னணி அமைப்பினர் சிலர் அங்கிருந்த கடைக் காரர்களிடம் நன்கொடை வசூலித்திருக்கின்றனர். அங்கிருந்த தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்று நன்கொடை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கற்களை வீசி, நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?.. என் வி நடராசன் ..பேத்தி

மின்னம்பலம் : திமுக மருத்துவ அணியின் கூட்டம் இன்று (செப்டம்பர் 7) காலை அறிவாலயத்தில் நடந்தது. இதில் மருத்துவ அணியின் மாநிலத் தலைவர் பூங்கோதை தலைமை வகித்தார். ஆனால் மருத்துவ அணியின் மாநிலச் செயலாளரான டாக்டர் கனிமொழி பங்கேற்கவில்லை. ரத்த தானத்துக்கான செயலி ஒன்றை திமுக தலைவர் ஸ்டாலின், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வெளியிட்ட சில நிமிடங்களில் கூட்டம் முடிந்துவிட்டது.
மருத்துவ அணியின் கூட்டத்தில் மருத்துவ அணிச் செயலாளரான கனிமொழி ஏன் பங்கேற்கவில்லை என்று விசாரித்தபோது, திமுகவின் மருத்துவ அணி ஆரோக்கியமாக இல்லை என்பது தெரிந்தது.
திமுக மருத்துவர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட அமைப்பாளர்கள்- துணை அமைப்பாளர்கள் கூட்டம் செப்டம்பர் 7 ஆம் தேதி நடக்கும் என்று மருத்துவ அணி மாநில தலைவர், செயலாளர் பெயரில் முரசொலியில் ஆகஸ்டு 29 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

யார் இந்த சென்னை , உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயாதஹில்ரமணி" ...!


இவர்தான் குஜராத்ல மோடி ஆசியோட ஆர்எஸ்எஸ்_விஹச்பி போன்ற பார்ப்பனிய காவி #பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட முஸ்லீம்களின் இன படுகொலையாளிகளுக்கு  தண்டனை வாங்கி தந்தவர்.
கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தனது கண் முன்னாடியே கைக் குழந்தையையும் தனது மாமனார் மாமியார் உட்பட தனது குடும்பம் மொத்தமும் படுகொலை செய்யப்பட்டதை பார்க்கும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 
பல்கீஸ்பானு " வழக்கை குஜராத்தில் நேர்மையா விசாரிக்க மாட்டாங்கனு உண்மையை உணர்ந்து பாம்பேக்கு வழக்கை மாற்றி விசாரித்து.. 
பல கொலை மிரட்டலுக்கு அஞ்சாமல்.. ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், காவி பயங்கரவாதிகளான "ஒருடாக்டர் ஒருபோலீஸ்_உட்பட 9மனிதமிருகங்களுக்கு_சட்டப்படியான தண்டனை வழங்கிய நீதிதேவதை..! 

 தினமலர் :புதுடில்லி : மேகாலயா கோர்ட்டிற்கு தன்னை மாற்றுவது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் நிராகரித்ததை அடுத்து, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமணி, ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கும் அவர் அனுப்பி உள்ளார்.
2001 ம் ஆண்டு ஜூன் 26 ம் தேதி மும்பை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் நீதிபதி தஹில்ரமணி. இவர் 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 25 ஆண் நீதிகள் உள்ள இடத்தில் தஹில்ரமணி மற்றும் கீதா மிட்டல் ஆகிய இருவர் மட்டும் பெண் தலைமை நீதிபதிகளாக உள்ளனர். 2020 ம் ஆண்டு அக்.,2 ம் தேதி தஹில்ரமணி ஓய்வு பெற உள்ளார்.

மலக்குழிக்கு ஒரு கருவியை கண்டுபிடிக்க முடியாத ஒரு நாட்டிற்கு ராக்கெட் தேவை இல்லை!

சுமதி விஜயகுமார் : சந்திராயன் 2 தோல்வியில் எனக்கு பெரிய வருத்தம்
எல்லாம் இல்லை. நாளை உணவிற்கு வழியில்லாமல் செத்து மடியும் உயிர்களுக்கு இடையில், நிலவிற்கு ராக்கெட் விடுவதில் மனிதம் பெருமை கொள்வதில் ஒன்றுமில்லை. மலக்குழியில் மலம் அள்ளுவதற்கு இன்னும் ஒரு கருவியை கண்டுபிடிக்க முடியாத ஒரு நாட்டிற்கு ராக்கெட் தேவை இல்லை. அப்படி செலுத்தப்படும் ரொக்கெட்டினால் நம்மக்கு எண்ண பயன்? பிறகு இந்த ராக்கெட்டின் தேவை தான் என்ன !
சந்திராயன் 2 நமக்கானது இல்லை. அமேசான் காடு அழிக்க பட்ட பிறகு, எஞ்சி இருக்கும் இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்ட பட்ட பிறகு தாங்கள் வாழ வேறு ஒரு இடத்தை தேடுவதற்கான முயற்சியே இந்த சந்திராயன்கள். அதில் நமக்கு இடம் இருக்காது. பெரு முதலாளிகளுக்கும் அவர்களுக்கு சேவை செய்ய காத்திருக்கும் பண அடிமைகளுக்குமானது.
ஆனாலும் சந்திரியனின் தோல்வியில் பெரு வருத்தம் ஒன்று உண்றேண்டால் அது சிவனின் சறுகளுக்காக மட்டும் தான். 1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படிக்க தகுதி இல்லை என்று நிராகரிக்க பட்ட அனிதாக்கள் படித்த அதே பாட திட்டத்தில் படித்து வந்தவர் தான், cbse பாட திட்டத்தில் படித்தவர்களை பின்னுக்கு தள்ளி, சந்திராயனை ஏவிய சிவன். இதற்கு முன்பு வெற்றிகரமாக ஏவிய சந்திராயன் 1 கு பின்பு இருந்ததும் அரசு பள்ளியில் படித்த மயிலசாமி அண்ணாதுரை தான்.

ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.. தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்ட கனிமொழி.. பரபரப்பு


tamil.oneindia.com - VelmuruganP. : சென்னை: ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தலைமையில் திமுகவினர் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் அறிவித்து உள்ளது.
இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தோருக்கு சாதகமான இந்த முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

BBC: சந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்?’ - மயில்சாமி அண்ணாதுரை பதில்

சந்திரயான் - 2 திட்டத்தின் முக்கியப் பகுதியான விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக, அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு குறித்து சந்திரயான் -1 திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து: கேள்வி:விக்ரம் லேண்டருடனான தொடர்பு எப்படி துண்டிக்கப்பட்டிருக்கும்? என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?
பதில்: முழுமையான தகவல்களை ஆராய்ந்த பிறகுதான் என்ன நடந்திருக்கும் என்பதை முழுமையாகச் சொல்ல முடியும். முதல்கட்டமாக கிடைத்திருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நிலவுக்கு 2.1 கி.மீ. தூரத்தில் வரும்போது விக்ரம் லேண்டரில் இருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் கிடைக்காமல் போகின்றன. அதற்கு முன்பே, அதன் பாதை விலகுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
முதலாவதாக, நிலவை நெருங்க நெருக்க லேண்டரின் வேகம் குறைக்கப்படும். 800 நியூட்டன் திறனுள்ள இயந்திரங்கள் இதற்காக இயக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள், லேண்டர் செல்லும் திசைக்கு எதிராக இயங்கும். அப்படித்தான் வேகம் குறையும். ஒரு கட்டத்தில், அதன் பாதையில் ஒரு மாறுபாடு தெரிகிறது. இது இரண்டு காரணங்களால் நடந்திருக்கலாம்.

உதயநிதி - மாசெ.க்கள்! -திமுகவில் தொடரும் பனிப்போர்!

மின்னம்பலம் :
இளைஞரணி மாநிலச் செயலாளரான உதயநிதி ஸ்டாலினுக்கும், திமுக மாவட்டச் செயலாளர்களுக்குமான உறவு சுமுகமாக இல்லை என்பது ஆரம்பத்திலிருந்தே திமுகவினர் அனைவருக்கும் தெரிந்த சங்கதியாகவே இருக்கிறது. பொறுப்புக்கு வந்தபிறகு உதயநிதி நடத்திய முதல் கூட்டத்திலேயே, மாவட்டச் செயலாளர்கள் மீதுதான் மாவட்ட அமைப்பாளர்கள் புகார்களை முன் வைத்திருந்தனர்.
இந்நிலையில் உதயநிதிக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தை சில திருமண நிகழ்ச்சிகளே எடுத்துக் காட்டுகின்றன.
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர் மு.ராஜேந்திரன் இல்லத் திருமண வரவேற்பு செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை மந்தைவெளி சுபம் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்வுக்காக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி அழைக்கப்பட்டிருந்தார். மாவட்டச் செயலாளர் என்ற முறையில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகனும் அழைக்கப்பட்டிருந்தார்.
மாலை 7.30க்கு மேல் உதயநிதி ஸ்டாலின் வந்தபோது இளைஞரணியினர் திரளாக வரவேற்பு கொடுத்தனர். கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றபிறகு, மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் வந்தார்,. அவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் -மு.க.ஸ்டாலின்

கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் -மு.க.ஸ்டாலின்மாலைமலர் : கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தில் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 சென்னை: மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தது.
டாக்டர் அம்பேத்கர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்? முஸ்லீம்கள் யார்? தலித் என்றால் என்ன? தலித் தலைவர் யார்? என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன. தலித்துகள் என்பதன் பொருள் என்ன? கேள்விக்கு விடையாக “அந்நியர்கள், தீண்டத்தகாதவர்கள்,
நடுத்தர வர்க்கத்தினர், உயர் வகுப்பினர்” என்று பதில் தரப்பட்டுள்ளது. இந்த நான்கில் ஒன்றை மாணவர்கள் பதிலாக குறிப்பிட வேண்டும்.

லண்டன் இந்திய தூதரகம் தாக்கப்பட்டது இரண்டாவது தடவையாக


Venkat Ramanujam : இலண்டனின் ஆயிரத்துக்கு மேற்ப்பட்டவர்கள் கூடி இந்திய தூதரகத்தை 2வது முறையாக தாக்கிய செய்தியை அடக்கி வாசித்த இந்தியா ஊடகங்கள் மீது தேசவிரோத வழக்கு தொடர முடியாதா..
#சிதம்பரம் கைது லைவ் ரிலேவை விட இந்திய தூதரகம் அப்படி என்ன ரொம்ப முக்கியமா என அவர்கள் நினைத்து இருக்கலாம் அல்லவா ..
அப்படியே இதை flash news, breaking news சிறப்பு செய்தியாக போட்டாலும் 33 நாளாக communication blockade ல் இருக்கும் #காஸ்மீர் மக்களுக்கு எப்படி போய் சேரும் எனற குழப்பமும் இருந்து இருக்கலாம் அல்லவா ...
#rafalescam ஊழல் ஆதாரத்தை வெளியிட்டதால் ஹிந்து நாளிழதழுக்கு அரசு விளம்பரங்களை தராத பயம் காரணமாகவும் அவர்கள் அஞ்சி நடுநடுங்கியும் இருக்கலாம் அல்லவா ...

இன்று அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மிக முக்கியமான நாள்.. .சிந்துச் சமவெளியும் திராவிட மொழிகளும்

Muralidharan Kasi Viswanathan : சிந்துச் சமவெளியும் திராவிட மொழிகளும்
இன்று அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மிக முக்கியமான நாள்.
சிந்துச் சமவெளியில் வசித்த மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற கேள்விக்கு மரபணு ரீதியாக ஓரளவுககு விடை கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக இரு கட்டுரைகள் உலகின் மிகச் சிறந்த ஆய்விதழ்களில் வெளியாகியிருக்கின்றன. முதலாவது கட்டுரை ‘The Genomic Formation of South and Central Asia’ என்ற தலைப்பில் Science இதழிலும் இரண்டாவது கட்டுரை Cell இதழிலும் வெளியாகியிருக்கிறது. இந்தக் கட்டுரை, ஹரப்பாவில் கிடைத்த எலும்புக்கூட்டை மரபணு ரீதியாக ஆய்வுசெய்து முடிவுகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரை.
முடிவுகள் இதுதான். அதாவது, ஹரப்பா நாகரத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் இரானிய விவசாயிகளின் மரபணு இல்லை. இதன் அர்த்தம் என்னவென்றால், ஸ்டெப்பி புல்வெளி மரபணுவைக் கொண்டவர்கள், ஹரப்பா நாகரீகம் மறைந்த பிறகே இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன்தான் இந்தோ - ஐரோப்பிய மொழியும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
இரானிய விவசாயிகளின் மரபணுவும் இல்லை என்பதற்கு அர்த்தம், விவசாயம் உலகில் எங்கும் தோன்றும் முன்பே மேற்காசியாவிலிருந்து மனிதர்கள் இந்தியாவுக்கு வந்து, ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

மம்தா பானர்ஜி : ப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கலாம்

ப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கலாம் - மம்தா பானர்ஜி
 மாலைமலர் :  மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது மத்திய அரசு கொடுத்திருக்கலாம் என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவிட்டது.

திமுக -காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. செய்தி வந்து விழுந்தது.
“கடந்த ஜூன் மாதம் அப்போதைய தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் பேசிய பேச்சும், அவருக்கு பதில் அளித்து முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு பேசிய பேச்சும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இப்போது அதே சலசலப்பு இவ்விரு கட்சிகளின் தலைவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் எழுதிய வாழ்வும் பணிவும் நூல் வெளியிட்டு விழா திருப்பூரில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’1971ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பிற்கு வந்ததுபோல, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றிப் பெற்று நாம் ஆட்சிக்கு வருவோம். இன்னும் 25 வருடத்திற்கு திமுக ஆட்சியை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அந்த நிலையில் நாம் ஆட்சி நடத்துவோம்’ என்று பேசியிருந்தார்.

இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: தலைமை நீதிபதி ராஜினாமா?

மின்னம்பலம் : இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் குழு பரிந்துரைத்தது. மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் பரிந்துரை செய்தது.

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை .. பொய் செய்தி வெளியிட்டதால்

மின்னம்பலம் : இன்ஸ்பெக்டர் தொடர்ந்த அவதூறு
வழக்கில் தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் கடந்த 2005ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் முத்தமிழ் முதல்வன். அந்த சமயத்தில் தினமலர் நாளிதழில் ‘டீக்கடை பெஞ்ச்’ பகுதியில் ஒரு செய்தி பிரசுரம் ஆகி இருந்தது. அதில், ‘பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு மதுபானம் கடத்துபவர்களிடம் முத்தமிழ் முதல்வன் லஞ்சம் பெற்றார் என்றும், சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் வாங்கினார்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருந்தது.

ரஷ்யாவுக்கே கடன் வழங்கும் மோடி! – அவ்வளவு பணம் இருக்கா இந்தியாவிடம்?

வெப்துனியா : ரஷ்யாவில் நடைபெற்ற தூர கிழக்கு பிராந்திய பொருளாதார
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு பிராந்திய வளர்ச்சிக்காக கணிசமான தொகை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.">ரஷ்யாவில் நடைபெற்ற இருநாள் தூர கிழக்கு பிராந்திய கூட்டத்தில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடியை அழைத்திருந்தார் ரஷ்ய அதிபட் விளாடிமிர் புதின். நேற்றும், இன்றும் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ரஷ்யா சென்ற மோடி அங்குள்ள கப்பல் கட்டும் தளம் போன்றவற்றை பார்வையிட்டார். பிறகு ரஷ்யா-இந்தியா இடைய பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சென்னையிலிருந்து ரஷ்யாவுக்கு சரக்கு கப்பல் செயல்படுவதற்கான ஒப்பந்தங்களும் அதில் கையெழுத்தாகி உள்ளது. இந்நிலையில் தூர கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர்கள் கடன் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு மோடி ஒரு பில்லியன் டாலர் உதவி ... பின்னணியில் பெரும் ஊழல் மறைந்திருக்கிறதா?

மோடி ரஷியாவுக்கு 1 Billion dollar உதவி அறிவித்துள்ளார்.
இதில் ஒரு ஊழல் மறைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
கொடுக்கப்படும் உதவிக்கு முக்கியமான நிபந்தனைகள் உண்டு.
அந்த நிபந்தனைகள் என்பது இந்திய அரசு சிபார்சு செய்யும் கம்பனிகளின் தொடர்பு உடையதாக இருக்கும்.
அங்குதான் இருக்கிறது மர்மம் .
முன்பு ஒரு நாட்டுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் . அந்த நாட்டில் மன்மோகன் சிங் அரசு ஏற்கனவே ஐம்பத்தாயிரம் கான்க்ரீட் வீடுகளை கட்டி கொடுத்தது ..ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் இரண்டு லட்சம் ருபாயிருந்து (இந்திய ரூபாய்) மூன்று லட்சம் வரை செலவானது. .
ஆனால் மோடி அறிவித்த வீட்டு திட்டமோ வெறும் (தகர பொருத்து) டின் வீடு சுமார் ஐம்பதாயிரம் (இந்திய ரூபாய்) ரூபாய் மட்டுமே பெறுமதியானது . ஆனால் இந்திய அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் ஆகும் செலவை சுமார் ஆறு லட்சம் (இந்திய ரூபாய்) என்று அறிவித்தது.
(ஆறு லட்சம் X ஐம்பதாயிரம் .. கணக்கு பார்த்து கொள்ளுங்கள்.)
அந்த நாட்டு அரசியல்வாதிகள் கடுமையாக இந்த ஏமாற்று திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர் அதனால் அது கைவிடப்பட்டது.
மோடியரசின் மோடி வித்தைக்கு அவர்கள் ஒத்து ஊதாமல் விட்டதால் அதன் பின் பெரிதாக வீடு திட்ட முயற்சிகள் முன்னெடுக்கவில்லை.
இதில் இருந்து தெரியவரும் உண்மைதான் பெரும் அதிர்ச்சிக்கு உரியதாகும்.
இவர்கள் பிற நாடுகளுக்கு கொடுக்கும் உதவிகள் என்பது உள்ளூர் கொள்ளையர்களின் இன்னொரு மோசடி வித்தையாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தானிலும் முத்தலாக் தடை? ! தண்டனைக்குரிய குற்றமாக்க இஸ்லாமிய அமைப்பு பரிந்துரை

பாகிஸ்தானில் முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக்க இஸ்லாமிய அமைப்பு பரிந்துரை தினத்தந்தி : பாகிஸ்தானில் முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக்க இஸ்லாமிய அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இஸ்லாமாபாத், இந்தியாவில், முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது. அதுபோல், பாகிஸ்தானில் அதை தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு இஸ்லாமிய விவகாரங்களில் ஆலோசனை வழங்கும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில் என்ற அரசியல் சட்ட அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. பாகிஸ்தான் சட்ட மந்திரி பரோக் நசீமும் இந்த பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், தண்டனை விவரங்களை பிறகு முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறினா

வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவி; ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் பெற்றோர் கோபம்

வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவி; ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் பெற்றோர் கோபம்தினத்தந்தி : வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் பெற்றோர் கோபம் அடைந்து சத்தம் போட்டனர். மதுரை புதூர் காந்தி நகரில் வசிக்கும் முத்துவின் மகளான அர்ச்சனா.  லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை  வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். வந்தவர் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
பள்ளியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்து  பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி முன் கூடிவிட்டனர். பள்ளி  நிர்வாகம்தான் இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தார்கள்.

சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு

நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருப்பு தினத்தந்தி :  நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருப்பு சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள். பெங்களூரு, இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. கடந்த மாதம் 20-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.

ரணில் விக்கிரமசிங்கா ஆளும் ஐ தே கவின் ஜனாதிபதி வேட்பாளர் !

vanakkamlondon.com : ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில்
விக்ரமசிங்க இன்று அறிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று முற்பகல், ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.இவர்களைத் தவிர அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் ‘ வேட்பாளராக போட்டியிட எவரும் முட்டி மோதிக் கொள்ள அவசியமில்லை.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். போட்டியிட்டு நான் வெற்றி பெற்று காட்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

எமெர்ஜென்சி எவ்வாறு முடிவுற்றது? 1977 இல் கலைஞர் உருவாக்கிய எதிர்கட்சிகளின் கூட்டணி!

குலதீப் நயார், "கருணாநிதியின் இந்த சீரிய முயற்சி நல் விளைவுகளை தரும், வட தென் துருவமாக இருந்த அனைத்து எதிர்கட்சிகளை கருணாநிதி ஒன்று திரட்டி பேசவைத்தார்
Muralidharan Pb : ஆட்சி மாற்றத்திற்கு விதைத்தவர். எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். விளக்கம்:
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும் போது, அதைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்யவேண்டிய காரியங்களை செய்து முடிக்க வேண்டும். எமெர்ஜென்சி உச்சக்கட்டத்தில் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை நாம் கடந்த 6 பாகங்களாக பார்த்தோம். ஒரு நல்ல வீரனுக்கு அழகு எந்த நேரத்தில் கத்தியை எடுக்கவேண்டும் எந்த நேரத்தில் அரவணைப்புக்காக கட்டி தழுவி சமாதானம் செய்ய கொள்ள வேண்டும் என்பது தெரிந்துவைத்திருந்தால் மட்டுமே அவன் சிறந்த வீரன். கலைஞர் மிகச்சிறந்த போராளி. அவருக்கு இது சமாதானம் செய்துகொள்ளவேண்டிய நேரம் வந்தமையால் அதற்கான முயற்சிகளில் அவர் இறங்கி வேலை பார்த்தார், வெற்றியும் பெற்றார்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மாணவர்களின் மனதில் ஜாதி மத வெறுப்புக்களை விதைக்கும் காவி அயோக்கியர்கள்


youturn :கேந்திர வித்யாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு கேள்வித்தாளில் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் தலித் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்பதில் இருந்து, சட்டமேதை அம்பேத்கரை சாதித் தலைவராக சித்தரித்து உள்ளதாக கேள்வித்தாள் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
(15 ) Which social class did Dr.Bhimarao Ambedkar belonging to ?
         A ..Rich
         B .  Poor
         C.   Dalit
         D.   Economy
(16)  The government refers to Dalit as .......... ..
         A.   Schedule Castes
         B.    Economic Class
         C.    Business Class
         D.    Poor Class 

(17 ) What do you mean by Dalit?
         A. foriegner
         B. Untouchable
         C . Middle Class
         D.  Upper Cast

(18)  What is the common stereotype about muslims?
         .A. Muslims do not send their girls to schools
          B. They are pure vegetarian
          C.  They do not sleep at all at the time of Roza
          D.  All of them

மாமல்லபுரம் கடற்கரையில் டால்பின்கள் உல்லாசமாக சுற்றி திரிகின்றன ..


dolphins-in-mahabalipuramhindutamil.in :காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரையில் அமைந்துள்ள குடவரைக் கோயில் மற்றும் கடற்கரை அழகைக் கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.
இதில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் சூரியக் குளியல் மற்றும் அலை சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக டால்பின் மீன்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு மிக அருகில் சுற்றித் திரிந்து வருகின்றன. மேலும், அவ்வப்போது கடலில் இருந்து எகிறி, டைவ் அடித்து மீண்டும் கடலில் குதித்து விளையாடுகின்றன.

திகார் சிறையில் சிறப்பு வசதிகள் இல்லை... முதல் நாள் ப.சிதம்பரம் ..

தினத்தந்தி :புதுடெல்லி. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில்
ப.சிதம்பரத்துக்கு 15 நாள் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவரை வருகிற 19-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
திகாரில் 4-ம் எண் கதவு வழியாக அவர் சிறைக்குள் கொண்டுசெல்லப்பட்டார். மீடியாக்கள் சிதம்பரத்தைப் புகைப்படம் எடுக்க முயன்றபோது, சிறை அதிகாரிகள் அவரின் முகத்தை மூட முயன்றனர். ஆனால், சிதம்பரம் அலட்டிக் கொள்ளவில்லை.
அவருக்கு தனி செல் எண் 7 ஒதுக்கப்பட்டது. இந்தச் சிறையில் 600 முதல் 700 கைதிகள் உள்ளனர். பெரும்பாலானோர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். அதேபோல், பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களும் இந்தச் சிறையில் அடைக்கப்படுவது காலம்காலமாக நடைமுறையில் உள்ளது.
எல்லாக் கைதிகளையும் போல சிதம்பரமும் சிறை நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு தொலைக்காட்சி பார்க்கவும்  அனுமதிக்கப்படுவார். திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள இதே சிறையில்தான் மகன் கார்த்தியும் அடைக்கப்பட்டிருந்தார்.
 கார்த்தி இங்கே 12 நாட்கள் இருந்தார். நேற்று இரவு உணவாக 5 சப்பாத்தி, பருப்பு கூட்டு, கொஞ்சம் சாதம் வழங்கப்பட்டது. சிதம்பரம் கொஞ்சமாகச் சாப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வட இந்திய உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.

சினிமா டிக்கெட்டுக்கள 100 வீதம் ஆன்லைன் விற்பனை? நடிகர்களின் பிளாக் டிக்கெட் வசூலுக்கு ஆப்பு?

மின்னம்பலம் : சினிமா டிக்கெட்டுகளை 100 சதவீதம் ஆன்லைன்
பெறுவதற்காக தமிழக அரசு மூலம் ஒரு சர்வர் அமைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகள் 100 சதவீதம் இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு திரைத்துறையினர் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அது மேலும் மக்களுக்கு சுமையாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு விவாதித்தனர். இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பாரதிராஜா, அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா .. அதிமுக- அமமுக- பாஜக இடையே ஒரு முக்கோணப் புரிந்துணர்வு?

மின்னம்பலம் : எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தை எதிர்த்தும், பாஜகவை எதிர்த்தும் ஒலித்து வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் கடுமையான குரல், அண்மைக் காலமாக மென்மை அடைந்துள்ளது.
இதன் இன்னொரு பின்னணியாக சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த தகவலை, மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையில் நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
சந்திரலேகாவை சந்தித்த சசிகலா அதுபற்றி விவாதிக்க தினகரனை நேற்று (செப்டம்பர் 5) சிறைக்கு அழைத்துள்ளார்.

டிவிஎஸ், அசோக் லேலேண்ட்: வேலையிழக்கும் ஊழியர்கள்!

மின்னம்பலம் : முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் வேலைநாள்களை குறைத்துவரும் நிலையில் அசோக் லேலேண்ட் நிறுவனம் ஐந்து நாள்கள் வேலையில்லா நாள்களாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த வாரம் செப்டம்பர் 6, 7, ஆகிய தேதிகளும், அடுத்த வாரம் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளும் வேலையில்லா நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி ஏற்கெனவே வேலையில்லா நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் அசோக் லேலேண்ட் நிறுவன வாகனங்களின் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது.

ரயில்வேயில் இந்தி ...மீண்டும் மொழிப்பேராட்டத்துக்கான களம் அமைத்துத்தர வேண்டாம்"- - ஸ்டாலின் எச்சரிக்கை

dmk stalin report நக்கீரன் :தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது,  ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என கேள்வி எழுப்பி, ரயில்வே வாரியம் வம்படியாக ஈடுபட்டு மீண்டும் மொழிப்பேராட்டத்துக்கான களம் அமைத்துத்தர வேண்டாம் என எச்சரிக்கை விடுப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், 'ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்' என்றும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல,  ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகக் கட்டமைப்பு சிதைக்கப்படலாம்!'' - தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா


vikatan.com - எம்.குமரேசன் : சென்னையைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், திருச்சியில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர். யு.பி.எஸ்.சி தேர்வில் தேசிய அளவில் 9-வது இடம் பிடித்தவர். தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தம் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தட்சின கர்நாடக மாவட்ட (மங்களூரு) ஆட்சியராக இவர் பணிபுரிந்து வந்தார். சென்னையைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், திருச்சியில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர். யு.பி.எஸ்.சி தேர்வில் தேசிய அளவில் 9-வது இடம் பிடித்தவர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நான் என் ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியை ராஜினாமா செய்துள்ளேன். இந்தத் தருணத்தில் என் ராஜினாமாவுக்கு யாரும் காரணம் அல்ல என்று மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். என் பணியை முழுமையாகச் செய்யாமல் பாதி வழியில் விலகிச் செல்வதற்காக தட்சின கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

திரிபுராவில் துணைவேந்தர் லஞ்சம் வாங்கும் வீடியோ


மாலைமலர் : திரிபுரா பல்கலைக்கழக துணைவேந்தர் விஜய்குமார் லட்சுமிகாந்த் ராவ் தாருர்கர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுராவில்  அகர்தலா: கலைக்கழகத்தில் துணை வேந்தராக விஜய்குமார் லட்சுமிகாந்த் ராவ் தாருர்கர் பணியாற்றி வருகிறார்.
இவர் அப்பல்கலைக் கழகத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பிரிண்டிங் ஒப்பந்தங்கள் தொடர்பாக கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் 10 சதவீதத்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதையறிந்த உள்ளூர் டி.வி சேனல் ஒன்று ‘ஸ்பிங் ஆபரேசன்’ மூலம் துணைவேந்தர் லஞ்சம் வாங்குவதை ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பிரிண்டிங் நிறுவன பிரதிநிதியிடம் துணைவேந்தர் பேச்சு வார்த்தை நடத்துவதும். பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளும் காட்சிகள் இருந்தன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு துணைவேந்தரும் பல்கலைக்கழக தரப்பில் இருந்தும் இதுவரை யாரும் பதில் அளிக்கவில்லை

சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!

சிதம்பரம் மீது நடவடிக்கையா?  இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!மின்னம்பலம் : சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் நேற்று( செப்டம்பர் 5) ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
ஏறத்தாழ இருபது பொதுச்செயலாளர்கள் மற்றும் அனைத்து மாநில பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஆகஸ்ட் 21ஆம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு அறிக்கையை வாசித்தார். அந்த அறிக்கை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக இருந்தது.

நாளை அதிகாலை நிலவில் இறங்குகிறது சந்திராயன் 2

நாளை அதிகாலை நிலவில் இறங்குகிறது சந்திராயன் 2 தினத்தந்தி :  சந்திரயான் - 2 விண்கலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கருவியானது, நள்ளிரவு 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் தரை இறங்க உள்ளது இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. கடந்த மாதம் 20-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.

மு.க.அழகிரிக்கு திடீர் உடல் நலக்குறைவு!

alagiriநக்கீரன் : கலைஞரின் மகனும், முன்னாள் மத்தியமைச்சருமான மு.க. அழகிரிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் திமுகவில் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் இருந்துள்ளார். கலைஞரின் மறைவுக்கு பிறகு அரசியலில் இருந்து சற்று விலகி இருந்தார். மு.க.அழகிரி தன் குடும்பத்தினருடன் மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த வாரத்தில் மு.க.அழகிரியின் மனைவி மற்றும் மருமகள் என குடும்பத்தினர் அனைவரும் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில்  மு.க.அழகிரிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வியாழன், 5 செப்டம்பர், 2019

காஷ்மீரிகள் பேசக் காத்திருக்கிறார்கள்!

மின்ன்னம்பலம் : எப்படி இருக்கிறது ‘இந்திய’ காஷ்மீர்? - 2
 முகேஷ் சுப்ரமணியம்
செப்டம்பர் 11, 1958ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் (AFSPA) இயற்றப்பட்டது. அமைதிக்குறைவான பகுதிகள் என்று சட்டம் குறிப்பிடும் இடங்களில் ஆயுதமேந்திய படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை இச்சட்டம் வழங்குகிறது.
முதன்முதலாக இச்சட்டம் மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டது. அதன் பின் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் இன்றி கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் யாரையும் சோதனையிடவும் பொருட்களைக் கைப்பற்றவும் முடியும். ஒரு ராணுவ வீரர் பொதுமக்கள் யாரையாவது தவறுதலாகவோ தவிர்க்க முடியாமலோ சுட்டுக் கொன்றுவிட்டால், இந்தச் சட்டம் அவரைப் பாதுகாக்கும்.

ரஜினிகாந்த் கட்சியின் பெயர் தேசிய தமிழர் முன்னேற்றக் கழகமா?

தினமணி : தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். 
ஜெயலலிதா மறைவுக்கு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அவ்வப்போது, மத்திய அரசுக்கு ஆதரவாக சில கருத்துகளை ரஜினிகாந்த் தெரிவித்து வந்ததால் அவர் கட்சியை தொடங்கினாலும், பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. சமீபத்தில் சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

BBC : ஆசிரியர் தினம்: சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அறிவுத் திருட்டில்.? .. ஒரு ஆய்வு !

இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வரும் முன் இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றிய அவர், ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியது மற்றும் தனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பிய நண்பர்கள் மற்றும் மாணவர்களிடம் அதை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் தாம் மிகவும் மகிழ்வேன் என்று அவர் கூறியதைத் தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த 1962 முதல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது ஆகியவை பரவலாக அறியப்பட்ட தகவல்களே.
ஆனால், ராதாகிருஷ்ணன் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது, அவர் மீது பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒருவரே அறிவுத் திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தினார், அதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியவர் மீது தொடர்ந்த வழக்கு ஆகியவை அதே வீச்சில் விவாதிக்கப்படவோ, அறியப்படவோ இல்லை.

74 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்! ஆந்திரா ..உலக சாதனையாக வாய்ப்பு

 மங்கம்மாவுக்கு மாத விலக்கு முற்றிலுமான நின்று பல ஆண்டுகள் ஆன நிலையில், செயற்கை முறையில் ஒரே மாதத்தில் மாத விலக்கை வர வழைத்துள்ளனர். பின்னர், ஐ.வி.எப் (In Vitro Fertilisation) முறையில் கருத்தரிக்க வைத்துள்ளனர். இன்று, மங்கம்மா இரண்டு குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலமாக பிரவித்துள்ளார். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நெலாபார்டிபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ் (80) - எர்மாட்டி மங்கம்மா (74) தம்பதி, 1962-ம் ஆண்டு திருமணம் செய்தனர். குழந்தையே இல்லாமல் இருந்த இந்த தம்பதி தொடர்ந்து மருத்துவர்களை சந்தித்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. முதுமை கூடிக்கொண்டே போனாலும் துவளாத மங்கம்மா, 55 வயதான பெண் ஒருவர் கருத்தரித்து தொடர்பாக செய்தி அறிந்து, கடந்தாண்டு குண்டூரில் உள்ள அஹல்யா என்ற மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.News18 Tamil : ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நெலாபார்டிபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ் (80) - எர்மாட்டி மங்கம்மா (74) தம்பதி, 1962-ம் ஆண்டு திருமணம் செய்தனர். குழந்தையே இல்லாமல் இருந்த இந்த தம்பதி தொடர்ந்து மருத்துவர்களை சந்தித்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை." ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நெலாபார்டிபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ் (80) - எர்மாட்டி மங்கம்மா (74) தம்பதி, 1962-ம் ஆண்டு திருமணம் செய்தனர். குழந்தையே இல்லாமல் இருந்த இந்த தம்பதி தொடர்ந்து மருத்துவர்களை சந்தித்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. -முதுமை கூடிக்கொண்டே போனாலும் துவளாத மங்கம்மா, 55 வயதான பெண் ஒருவர் கருத்தரித்து தொடர்பாக செய்தி அறிந்து, கடந்தாண்டு குண்டூரில் உள்ள அஹல்யா என்ற மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்."

ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு .. ஜாமீன் மறுக்கப்பட்டது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
 மாலைமலர் : ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார். புதுடெல்லி ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை ...கனிமொழிக்குப் புதிய `நெருக்கடி!'

kanimozhi
vikatan - இ.கார்த்திகேயன் :
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி கனிமொழிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியின் வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம், எம்.பி கனிமொழி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழிசையை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்தி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்.பி-யானார். வெற்றிபெற்றாலும் தேர்தல் களத்தில் சர்ச்சைகளையும் எதிர்கொண்டார்.
வேட்புமனுத்தாக்கல் பரிசீலனையின்போதே கனிமொழி, தமிழிசை உள்ளிட்ட வேட்பாளர்களின் மனுக்கள் நீண்ட நேரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி! சுப்பிரமணியன் சாமி தூது?

டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. மழைக்குள் இருந்து சூரியன் எட்டி பார்த்த நேரத்தில் வாட்ஸ் அப் தன் செய்தி கதிர்களை வீசியது.
“கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் பெங்களூருவிலிருந்து ஒரு பரபரப்புச் செய்தி தமிழகத்துக்குள் தடதடத்தது. பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை தினகரன் சந்திக்க வழக்கம்போல் சென்றதாகவும், ஆனால் அன்று சசிகலாவைச் சந்திக்க முடியாமல் தினகரன் திரும்பிவிட்டதாகவும் அந்தத் தகவல் பரவியது. தினகரனின் அணுகுமுறைகள் சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை என்றும் அதனால்தான் அவரை சந்திக்க மறுத்துவிட்டார் என்றும் இந்தத் தகவலுக்கு தலைவாரிப் பூச்சூடி பலரும் ஊடக சாலைகளுக்கு அனுப்பினர்.
ஆனால், அன்று சசிகலாவை மிக முக்கியமான நபர் ஒருவர் மிக முக்கியமான காரியத்துக்காக சந்தித்ததால்தான் தினகரனைச் சந்திக்க முடியவில்லை என்று இப்போது தகவல் கிடைத்திருக்கிறது. அந்த முக்கியமான நபர் சந்திரலேகா ஐஏஎஸ். ஜெயலலிதா, சசிகலா பற்றி எழுதும்போது சந்திரலேகா ஐஏஎஸ்ஸைத் தவிர்த்துவிட முடியாது. ஆரம்ப காலத்தில் சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அறிமுகத்தை ஏற்படுத்தியவர் சந்திரலேகாதான் என்றும் ஒரு தகவல் உண்டு. அதன்பின் சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பற்றியும், அந்த சூழலில் நடந்தது என்ன என்பதையும் தமிழ்நாடு அறியும்.

சென்னை ரஷியா நேரடி கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்து .. மாஸ்கோவில் பிரதமர் மோடி, புதின் கூட்டாக அறிவிப்பு

சென்னை-ரஷியா இடையே நேரடி கப்பல் போக்குவரத்து: மாஸ்கோவில் பிரதமர் மோடி, புதின் கூட்டாக அறிவிப்பு   தினத்தந்தி : சென்னை-ரஷியா இடையே நேரடி கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை மாஸ்கோவில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கூட்டாக அறிவித்தனர்.
 மாஸ்கோ, ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார
அதை ஏற்று, 2 நாள் பயணமாக மோடி நேற்று ரஷியாவுக்கு சென்றார். விலாடிவோஸ்டோக் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், மோடியை ரஷிய அதிபர் புதின் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கியும், கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்துக்கு படகு மூலம் சென்றனர். அந்த தளத்தை சேர்ந்து பார்வையிட்டனர்.

காஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி


தீவிரவாதம் ஒரே ஆட்சி /tamil.oneindia.com/authors/veerakumaran.: இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி- வீடியோ கொழும்பு: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்ட பிறகு, இலங்கையின் அதிகாரப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு இந்தியாவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று அந்த நாட்டின் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், வட மாகாணத்தில் தமிழர்களே அதிகம். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், ஒடுக்குமுறைகள் கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. சம உரிமை கேட்டு, இலங்கையில் நடைபெற்ற நீண்ட உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் கூட, இன்னும் இந்த பிரச்சனை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது

சாலை விதிமீறல்: 3 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மொத்தம் ரூ.73 ஆயிரத்து 400 அபராதம்.. ஹரியான

சாலை விதிமீறலில் அபராதம் விதிக்கப்பட்ட நபர்சாலை விதிமீறல்: 3 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மொத்தம் ரூ.73 ஆயிரத்து 400 அபராதம்மாலைமலர் : ஹரியானாவில் சாலை விதிகளை மீறியதாக மூன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மொத்தம் 73 ஆயிரத்து 400 ரூபாயை போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்துள்ளனர். சண்டிகர்: நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தம் நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
மோட்டார் வாகனச்சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போதைய அபராத தொகை ரூ.500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டுவந்த ரூ.2 ஆயிரம் அபராதம் இனி ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும். இதேபோல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 அபராதமானாது, ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல் நியமனம்

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல் நியமனம்தினத்தந்தி : சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி தலைமை நீதிபதியாக அவரை நியமித்து மத்திய அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
சென்னை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே.தஹில்ரமானி. இவர் மும்பை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றியவர். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி பதவி ஏற்றார். இந்த நிலையில், இவரை மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

ஸ்டாலின் :ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் தினத்தந்தி :  ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மாநிலத்தில் உள்ள பொது வினியோகத் திட்டத்திற்கு ஆபத்தை உருவாக்கும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் சேருவதற்கு தயார் என்று டெல்லியில் நடைபெற்ற மத்திய உணவு மந்திரி தலைமையிலான கூட்டத்தில், தமிழக உணவு அமைச்சர் காமராஜ் சம்மதம் தெரிவித்து விட்டு வந்திருப்பதும், இந்த திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.