சனி, 16 மே, 2020

கணக்கும் கருணையும்” - ஜெ.ஜெயரஞ்சன் | J.Jeyaranjan வீடியோ

மின்னம்பலம் : பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பிரதமரின் 20 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பில் உள்ள முரண்களையும், அதன் தாக்கங்களை விளக்கி வருகிறார்.
20 லட்சம் கோடி அறிவிப்புகளில் ஏற்கனவே அறிவித்த திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவித்தவை, நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தது, சட்டங்களை மாற்றுவது உள்ளிட்டவற்றை சொல்லி பல லட்சத்திற்கு கணக்கு காண்பிக்கிறார்கள். அறிவிப்பின் ஒரு பகுதியாக கொரோனாவிற்காக ஜெயரஞ்சன் வீட்டில் இட்லி சுட்டார்கள் என்றெல்லாம் மத்திய நிதியமைச்சர் கணக்கு காண்பிப்பார் போல என்று சாடிய அவர்,

திமுக மாசெக்கள் கூட்டம்: ‘ஐபேக்’ குக்கு எதிராக ஆர்ப்பரித்த ஜெ.அன்பழகன்!

திமுக மாசெக்கள் கூட்டம்:  ‘ஐபேக்’ குக்கு எதிராக ஆர்ப்பரித்த ஜெ.அன்பழகன்!மின்னம்பலம் : கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்க திமுகவின் மாசெக்கள் கூட்டம் இன்று (மே 16) காலை காணொலிக் காட்சி முறையில் நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 10.30க்கு தொடங்கிய இந்த மாசெக்கள் கூட்டம் பிற்பகல் 2.50 வரை சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பேசினார்கள்.
கொரோனா நிவாரணப் பணிகளில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் ஒருங்கிணைக்கும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் பற்றியும் மற்ற நிவாரணப் பணிகள் பற்றியும் விவாதிக்கவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில், இந்தக் கூட்டத்தில் பேசப்பட இருக்கும் விஷயங்கள் குறித்து மாசெக்கள்-ஐபேக்: ஸ்டாலினிடம் மீண்டும் பஞ்சாயத்து என்ற தலைப்பில் நேற்று (மே 15) மின்னம்பலம் இதழில் வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் வழக்கம்போல தனது அதிரடியான பாணியில் ஐபேக் டீமையும் பிரசாந்த் கிஷோரையும் வெளுத்து எடுத்துவிட்டார்.
அவரது பேச்சு இதோ...

பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீடு.. 49%ல் இருந்து 74% ஆக உயர்வு.

tamil.oneindia.comடெல்லி: இந்திய பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீடு 49 சதவிகிதத்தில் இருந்து 74% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இதையடுத்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். நான்காவது நாளாக இன்று பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று பாதுகாப்பு துறை மற்றும் கட்டமைப்பு துறை தொடர்பான அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், இனி ராணுவ தளவாட உற்பத்தி இந்தியாவில் ஊக்குவிக்கப்படும். பாதுகாப்பு துறையிலும் மேக் இன் இந்தியா திட்டம் அமல்படுத்தப்படும்.
ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் 'மேக் இன் இந்தியா' திட்டம் பயன்படுத்தப்படும். நாம் இத்தனை நாட்கள் வெளிநாட்டில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்து வந்தோம்.
இனி உள்நாட்டிலேயே உற்பத்தி தொடங்கப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் இனி உள்நாட்டில் தயாரிக்கப்படும். போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு கள்ளத்தனமாக டோக்கன் விற்பனை செய்த 17 பேர் கைது

டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு கள்ளத்தனமாக டோக்கன் விற்பனை செய்த 17 பேர் கைது தினத்தந்தி :  சென்னை தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், மே 8ம் தேதி மாலையுடன் மூடப்பட்டன. சென்னை ஐகோர்ட் உத்தரவின் காரணமாக கடைகள் மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில், ஒரு வாரத்திற்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர்.

கொரொனா தடுப்பு : அடிப்படை கோளாறு.. சவுக்கு

savukkuonline.com/ : பொது முடக்கத்தை விலக்க மத்திய அரசு அடிப்படை தரவாக எடுத்துக் கொண்ட புள்ளி விபரம், சரிபார்க்கப்படாத விபரங்கள்,  தவறான பெயர்கள், என பல குளறுபடிகளை கொண்டிருந்தது.   சில மாநிலங்கள், இந்த புள்ளிவிபரத்தை நிராகரித்து,  சொந்த புள்ளி விபரங்களை பயன்படுத்தின.  ஐந்து மாநிலங்களில் மட்டும்தான், மத்திய மற்றும் மாநில அரசுகளின் புள்ளி விபரங்கள் பொருந்தின.
பொது முடக்கத்தை தளர்த்தவும், கொரொனா பரவலை கண்காணிக்கவும், மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராயச்சிக் கழகத்தின் புள்ளி விபரங்களை (டேட்டா பேஸ்) பயன்படுத்தியது.  அந்த டேட்டாபேஸ் பல்வேறு பிழைகளை கொண்டிருந்தது என்பது நமக்கு கிடைத்திருக்கும் பிரத்யேகமான ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

உத்தர பிரதேசத்தில் லாரிகள் மோதல்; 23 பேர் உயிரிழப்பு


தினத்தந்தி : ராஜஸ்தானில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியதில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
லக்னோ, நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக தென்பகுதி மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து உள்ளனர். ஊரடங்கை முன்னிட்டு வேலைவாய்ப்பின்றி, வருவாயும் இன்றி, கையில் இருந்த பணமும் செலவான நிலையில், தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது என அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், பலர் சரக்கு வாகனங்களில் பயணித்து தங்களது ஊருக்கு சென்றடைகின்றனர். பலர் கால்நடையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.  அவர்களில் சிலர் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் என தங்களது குடும்பத்தினரையும் அழைத்து சென்றுள்ளனர்.

தமிழினியின் கூர்வாள் மீது சேறு பூசிய ஆனந்த விகடன் .. கேள்வியும் பதிலும்

ஆனந்த விகடனில் வெளி வந்த  கூர்வாளின் நிழலில் நூலுக்கு விமர்சனத்திற்கு மறுப்பு! வணிக நோக்கம் ஒன்றையே குறிக்கோளாய் ஆதாரமற்ற  அவதூறு கட்டுரையை வெளியிடுவது மூத்த பத்திரிக்கைக்கு அழகல்ல
வளன்பிச்சைவளன் : எமது மறுப்பு  கூர்வாளின் நிழலில் உள்ள   உண்மைகள் ஆனந்தவிகடனில் கட்டுரை என்ற பெயரில் திரித்து, மறைத்து வெளியிட்ட செய்திகளுக்கான உண்மை செய்திகள்.
மறுப்பு ( 1)
எமது பாடசாலையில் பெரிய வகுப்பு மாணவர்களு க்கு அடிக்கடி இயக்க பிரதிநிதிகள் கூட்டங்களை நடாத்துவது வழக்கம் ஆனால் அந்த கூட்டங்களில் எனது வகுப்பு பிள்ளைகளை சேர்த்து கொள்ளமாட்டார்கள்  
 நாங்கள்
சத்தம் போட்டு க்கொண்டிருப்போம் எனக் காரணம் காட்டி துரத்தி விடுவார்கள். ஆனால் அங்கு என்ன நடைபெறுகிறது எனப் பார்பதற்கு எங்களுக்கு இருந்த ஆவல் காரணமாக வீட்டுக்கும் போகாமல் பாதிச் சுவரில் தொடங்கிய படி எட்டிப் பார்த்துக் கொண்டு இருப்போம். ஒவ்வொரு நாளைக்கும் புதிய பெயர் கொண்ட இயக்கத்தின் அண்ணன்மார்கள் வந்து கூட்டம் வைப்பார்கள் கோபத் தோடு ஆக்ரோசமாய் உரையா ற்றுவார்கள். எமது பாடசாலை யின் பெரிய வகுப்பு அண்ணன்மார், அக்காமாரும் அவர்களிடம் கேள்வி கேட்பார் கள். சில நாட்கள் பெரிய சத்த மாக வாதாட்டமும் நடக்கும். இவைகள் எல்லாம் எமக்கு புரியாவிட்டாலும் அவர்கள் கொண்டு வரும் ஆயுதங்களும் அவர்களுடைய சிந்தனை வயப் பட்ட முகங்களும் மனதின் ஆழ்மனதில் பதிந்து போயின
இதுவே நூலில் உள்ள செய்தி. இதை விகடனில் எப்படி கூறியிருக்கிறார்கள் என ஒப்பிட்டுக் கொள்க
மறுப்பு ( 2)
பரந்தன் கரடிப்போக்கு ஆகிய இரு ஊர்களுக்கிடையே வட பிராந்தியத்திற்குரிய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பிரமாண்டமான களஞ்சிய கூடங்கள் மற்றும் ஊழியர்களின் விடுதிக் கட்டடங்களில் இந்திய இராணுவ த்தினர் பாரிய முகாம் ஒன்றை அமைத்து இருந்தனர் .

கச்சதீவு .. கொடுத்தது இந்திரா ! ....கூடவே இருந்து துரோகம் செய்தது காமராஜர் .நெடுமாறன்!..

Sukumaran Periyaarism : திரு.குணசேகரா, இதை கொஞ்சம் படி. இனி யாராவது உங்க ஊடகத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு, "திமுக தான் கச்சத் தீவை இலங்கைக்கு தானாமா கொடுத்ததுனு சொன்னால், அவனை காரி துப்பி உண்மை நிலையை அவனுக்கு புரியும்படி சொல்லனும், சரியா! நீயும் அவனோடு சேர்ந்து நரி வேலை பார்க்கக் கூடாது.
வரலாறு முக்கியம்* கலைஞர் அவர்களை மட்டுமே குறை கூறி, பொய் பிரச்சாரம் செய்து இளைஞர்களின் மூளையை சலவை செய்யும் சீமான், காவிக் கூட்டங்கள் மற்றும் அடிமை அதிமுகவிடமும் கவனமாக இருங்கள். இவர்களின் நோக்கம் திமுக மீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவே. உணர்வீர் இளந்தலைமுறையினரே.....
 கட்ச தீவு 1974 - யார் யார் என்ன செய்தார்கள்?
 (கருணாநிதி, காமராஜர், நெடுமாறன், MGR , ஜெயலலிதா )
 கட்ச தீவு 1974 ல் இந்திரா காந்தியால் திடீரென ஒரு நாள் இலங்கைக்கு விட்டு கொடுக்க பட்டது. கையெழுத்திட்ட பிறகுதான் மீடியாவுக்கே தெரிய படுத்த பட்டது. இது இந்திரா காந்தியால் தன்னிச்சையாக எடுக்க பட்ட முடிவு. பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலையோ, மாநில அரசின் ஒப்புதலையோ பெறாமல் எடுக்க பட்ட முடிவு
 கலைஞர்  கருணாநிதி-; திமுக என்ன செய்தது?
 இதை எதிர்த்து திமுக தமிழகம் முழுவதும் போராடியது.
கலைஞர் கருணாநிதியினால் சட்ட பேரவையில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இந்திரா காந்தியிடம் கடும் கண்டனம் தெரிவிக்க பட்டது. அதன் விளைவாக சில திருத்தங்கள் செய்ய பட்டன.

வெள்ளி, 15 மே, 2020

இந்தியாவில் 23 கோடி ரேசன் கார்டுகள்தான் உள்ளது .. ஆனால் 69 கோடி ரேசன் கார்டுகள் உள்ளதாக நிர்மலா சீதாராமன்

ஆலஞ்சியார் : இந்தியா கண்ட நிதியமைச்சர்களில் மிக மோசமான ிவழங்கியதென்ற பெயர் விடுதலை இந்தியாவின் முதல் நிதியமைச்சர் கூட சண்முகம் செட்டியார் தமிழகம் தான் .. தொடர்ந்து சி.எஸ்.வெங்கட்ராமன் ப.சிதம்பரம் என அறிவார்ந்தவர்களை தந்ததிருக்கிறது .. நாட்டின் பல நிதியமைச்சர்கள் நிதியமைச்சகத்தை மிக சாதூர்யமாக கைகாரியம் செய்தார்கள் பிரணாப், பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன் சிங்
என சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.. ஆனால் அரைகுறை தெளிவோடு ஒரு நிதியமைச்சர் இப்போதுதான் இந்தியா காண்கிறது . 69 கோடி ரேசன் கார்டு என்கிறார் .. 2019 பதிவின் படி 23 கோடி தான் என்ற அறிவு கூட அவரிடம் இல்லை கடந்த இரண்டுமாதங்களாக
ஊடரங்கு அறிவிக்கபட்ட நிலையில் சிறு தொழிலுக்கு கடன் வழங்கபட்டதாக சொல்கிறார் .. பொய்யை கூட மிக இலகுவாக கொஞ்சமும் கூச்சமின்றி சொல்ல அவர்களுக்கு மட்டும் தான் வரும் .. வராகடன் தொழிலதிபர்களுக்கு மீண்டும் ₹50,000 கோடி கடன் .. வீட்டுகடன் வாங்கியவன் திருப்பி செலுத்தும் போது செலுத்தாத தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும் ..ஏற்கனவே ₹68,000 கோடி வராகடனை எழுதி தள்ளியாகிவிட்டது

திரைப்படங்கள் நேரடியாக ஸ்ட்ரீமிங்கில் வெளியாவது ஏமாற்றம் தருகிறது: பிவிஆர் அதிகாரி

.hindutamil.in : திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டைத் தாண்டி நேரடியாக
ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடுவது தங்கள் தர்பபு ஏமாற்றம் அளிக்கிறது என பிவிஆர் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி கமல் கியான்சந்தானி கூறியுள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் அத்தனையும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை உருவாகியுள்ளதால் சில தயாரிப்பாளர்கள் ஊரடங்கால் வெளியாக முடியாமல் போன தங்களின் திரைப்படங்களை நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட முனைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை அமேசான் ப்ரைம் தரப்பு, தங்கள் தளத்தில் 7 புதிய திரைப்படங்கள் நேரடியாக வெளியாகவுள்ளது என அதிரடியாக விளம்பரம் செய்தது

4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு

புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்புமாலைமலர் : புதிய விதிமுறைகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும்போது, குறிப்பிட்ட பகுதிகளுக்கு விமானங்கள், பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படலாம் என தெரிகிறது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அடுத்தடுத்து நீட்டிக்கப்படுகிறது. மூன்றாவது ஊரடங்கு இன்னும் இரண்டு தினங்களில் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 4ம் கட்ட ஊரடங்கில் இன்னும் பல்வேறு தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குஜராத்திலும் ராதாபுரம் பாணி மோசடி .. ஊழல்வாதிகைன் உச்ச புகலிடம்


குஜராத்திலும் ஒரு ராதாபுரம்:  உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!மின்னம்பலம் : குஜராத் பாஜக அரசில் சட்டம், கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பூபேந்திரசிங் சௌடசாமாவின் தேர்தல் வெற்றியை அம்மாநில உயர்நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்திருந்த நிலையில், இன்று மே 15 அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதனால் பாஜக அமைச்சரின் பதவி தற்காலிகமாகத் தப்பித்திருக்கிறது.
2017 ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தோல்கா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் பூபேந்திரசிங் சௌடசாமா போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ரத்தோட் நின்றார். தேர்தல் முடிவில் வெறும் 327 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பூபேந்திர சிங் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் மாநில அரசின் சட்டம், கல்வித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தலில் வெற்றிவாய்ப்பை மயிரிழையில் இழந்த காங்கிரஸ் வேட்பாளர் ரத்தோட் குஜராத் உயர் நீதிமன்றத்தில், பூபேந்திர சிங்கின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குத் தொடர்ந்தார். “தோல்கா தொகுதியின் தேர்தல் அலுவலர் தவல் ஜானி வாக்கு எண்ணிக்கையின்போது 429 அஞ்சல் வாக்குகளை எண்ணாமல் ஒதுக்கிவிட்டார். பூபேந்திரசிங்கின் வெற்றி வித்தியாசம் 327 ஐவிட 429 அஞ்சல் வாக்குகள் என்ற எண்ணிக்கை அதிகம். எனவே இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார் ரத்தோட்.

நாளை மீண்டும் டாஸ்மார்க் திறப்பு

மின்னம்பலம் : தமிழகத்தில் நாளை முதல்
மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டாஸ்மாக்கை திறக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், நிபந்தனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் டாஸ்மாக்கை திறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது.
இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இன்று (மே 15) வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும். ஆனால், சிவப்பு மண்டலங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படும். மது வாங்க வருபவர்களுக்கு வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் வழங்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசம் 10 லட்சம் அகதிகள் ..உலகின் மிகப்பெரிய முகாமில் கொரோனா .. ரோஹிங்கா

 ரோஹிங்யா அகதிகள் முகாம்கள்10 லட்சம் பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பரவியது கொரோனா    மாலைமலர்: டாக்கா: ; மியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களின் சில குழுக்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மியான்மர் ராணுவம் ஈடுபட்டனர். மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியது முதல் உயிருக்கு அஞ்சி சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகவும் மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த அப்பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாம்களில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ் உலக தமிழராச்சி மாநாடும் அரசியல் திருவிழாவும் .

அல்பிரட்துரையப்பா
திரு அல்பிரட் துரைப்பா அவர்கள் 
தனிப்பெரும் தலைவர் என்ற
அடைமொழியோடு அறியப்பட்ட ஜி ஜி பொன்னம்பலத்தையும் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகள் என்று அறியப்பட்ட தமிழரசு கட்சியையும் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றவராகும்.
அதற்கு முக்கிய காரணாமாக கருதப்படுவது அவரின் மக்கள் நலம் சார்ந்த அணுகுமுறைதான்.
தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிகளின்  தலைவர்கள் எல்லோருமே ஏறைக்குறைய கொழும்பு வாழ் தமிழ் மேட்டு குடிகள்தான்.
 தமிழ் தலைவர்கள் என்றால்  அவர்கள் ஏதோ வானத்தில் இருந்து வந்த தேவனின் புத்திரர்கள் என்ற ரீதியில்தான் நடந்து கொண்டார்கள்.
பண்டிதர் கா பொ.இரத்தினம்
தேர்தல் சமயத்தில் மட்டும் வந்து தமிழ் சிங்களம் போன்ற இரு சொற்களை மட்டுமே வைத்து அரசியலில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டே இருந்தார்கள்.
மறு புறத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் கணக்கு வழக்கு இல்லாமல் எகிறி கொண்டிருந்தது.
இன்றும் கூட தமிழ் சிங்களம் என்ற இரண்டு சொற்களை மட்டுமே மூலதனமாக கொண்டு அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பார்முலாவில்தான் பயணிக்கிறார்கள். ஆனால் தற்போது மக்கள் கொஞ்சம் விழித்து கொண்டு விட்டார்கள்.
அன்றய வடக்கு தமிழ் அரசியல்வாதிகளில் அல்பிரட் துரையப்பாவுக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு எந்த தமிழ் தலைவருக்கும் இருந்ததில்லை.
பெரிய தமிழ் தலைவர்களுக்கு எல்லாம் பெரிய கூட்டங்கள் இருந்தன . ஆனால் அவை வெறும் கும்பல்கள் என்ற ரீதியில் மட்டுமே இருந்தன.
ஏனெனில் அவர்கள் எல்லோருமே தமிழ் சிங்களம் என்ற இரு சொற்களை வைத்து அரசியல் செய்பவர்களாகும். 
இனவாதத்தை வளர்த்து அதில் மட்டுமே குளிர்காய்ந்து அரசியல் நடத்தியவர்கள் ஆரம்பத்தில் துரையப்பாவை அரசியல் ரீதியாக வீழ்த்தி விட முடியும் என்று கருதி கொண்டுதான் இருந்தார்கள் 
அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி வைத்தியம் நடந்தது 1970.   ஆம் ஆண்டு தேர்தலில்.

உதய நிதி தன் பேச்சில் திராவிட கொள்கையை . .... தேவி சோமசுந்தரம்

Devi Somasundaram : நேற்று முழுக்க தயானிதி என்ன தகுதில கட்சிக்கு
வந்தார்ன்னு ஸ்ரீலஸ்ரீ சுத்த வடகலை ஐயங்கார் நீளமா எதும் எழுதுவார்ன்னு வெய்ட் செய்தேன்...எதும் இல்லை ..
என்ன காரணம்? ...தயானிதி எதிர்க்க பட அவர் வாரிசுன்ற தகுதி தேவை இல்லைன்னு நினைச்சாரா ? .அல்லது தயானிதி  கருத்தும் வடகலையார் கருத்தும் ஒன்னு தான் என்பதால் எதிர்க்கலயா ? .
நேர்மையான விமர்சனம் செய்பவர், மக்கள் நலன் விரும்பி என்றால் நேற்று தயானிதி என்ன தகுதியில் அரசியலுக்கு வந்தார்ன்னு எழுதி இருக்கனும்..அப்படி எதும் எழுத வில்லை .
ஆனா உதய் நிதி ஏன் கட்சிக்கு வந்தார்ன்னு மட்டும் நாப்பது பக்கம் எழுதுகிறார்கள் ..
ஒரு தேர்ந்தெடுக்கபட்ட எம் பி யின் , கட்சியில் முக்கிய பொருப்பில் இருக்கும் தயானிதியை விட உதய நிதி எதிர்ப்பு ஏன் செய்யப்படுகிறது .?
ஏன் என்றால் தயானிதியால் ஆரிய கொள்கைக்கு ஆபத்து வந்து விட போவதில்லை .. ஒரு இயக்கத்தின் கொள்கையை வலிமையா கட்டிகாக்கும் தகுதியை அவர் ஒரு நாளும் பெறப்போவதில்லை..
ஆனால் உதய நிதி அப்படி அவர்கள் பார்வைக்கு தெரியவில்லை .உதயநிதி தினம் மக்களோடு மக்களாய் நிற்கிறார்.. தெருவில் இறஙகி மக்கள் தேவைக்கு பாடுபடுகிறார்..

பாலியல் சீண்டலால் தீப்பற்றிய சிறுமி!.. உடன்படு... இல்லையெனில்....

நக்கீரன் : தங்களுடன் உடன்படு, இல்லையெனில் குடும்பத்தையே கொளுத்திடுவோம்" என பாலியல் வன்முறை மிரட்டலுக்குப் பயந்த சிறுமி ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குடபட்ட பகுதியைச் சேர்ந்தவர் அந்த 16 வயது சிறுமி. பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று விட தனியாக இருக்கும் அந்தச் சிறுமியிடம் அதேப் பகுதியைச் சேர்ந்த சரவணன் அடிக்கடி பாலியல் சீண்டல் கொள்வது வழக்கமாம். இது குறித்து பொது வெளியில் தெரிந்தால் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் இழுக்கு என்று கருதிய அந்தச் சிறுமி சரவணனின் பாலியல் சேஷ்டையை வெளியில் சொல்லாமல் தனக்குத் தானே சமாதானப்படுத்திப் போராடி வந்திருக்கின்றார். இந்நிலையில், சமீபத்தில் சரவணன் மற்றும அவனது நண்பர்களான வேல்சாமி மற்றும் குகன் ஆகியோருடன் சேர்ந்து மது போதையில் கேலி செய்ததோடு மட்டுமில்லாமல் பாலியல் சீண்டலுக்கு முன் வர, எதிர்த்துள்ளார் அந்தச் சிறுமி.

மதுரை தொழிலதிபர் தற்கொலை . .ஊரடங்கு பாதிப்பால் .. ...

4 வது உலக தமிழராய்ச்சி மாநாடும் அல்பிரட் துரையப்பா கொலையும் ... மறைக்கப்பட்ட வரலாறு

இரா. ஜனார்த்தனம் MLC - ADMK
அல்பிரட் துரையப்பா
யாழ்ப்பாணத்தில் 1974 ஆண்டு நடைபெற்ற நான்காவது உலக தமிழராய்ச்சி
மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து இரகசியமாக வந்திருந்தார். முன்னாள் அதிமுக எம் எல் சி மறைந்த அமரர் இரா.ஜனார்த்தனம்.அவர்கள்.
மாநாட்டில் கலந்து கொள்ள இவருக்கு இலங்கை அரசு .அனுமதி கொடுத்திருக்கவில்லை.
போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு இவர் மாநாட்டு மேடையில் ஏறி பேச முயற்சித்தார்
அப்போது இவரை தேடிக்கொண்டிருந்த போலீசார் இவரை கைது செய்ய வந்தனர் .
போலீசுக்கும் இளைஞர்களும்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது
இவர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆகாயத்தை நோக்கி சுட்டனர்.
 போலிசின்  துப்பாக்கி குண்டுகள் பட்டு மின்சார வயர்கள் கீழே விழுந்தன. அந்த அதில் மின்சார ஷாக் அடித்து ஒன்பது பேர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் !  இது தான் நடந்தது .
Rubasangary Veerasingam Gnanasangary : உலகத் தமிழாராட்சி மாநாட்டை அன்றைய சிறிமாவோ அரசு யாழ்ப்பாணத்தில் நடத்துவதை விரும்பவில்லை. அதற்கான காரணங்கள் நியாயமானதே. அக்கால கட்டத்தில்தான் தமிழ் ஆயுத இயக்கங்கள் முளைவிடத் தொடங்கி இருந்தன.
தமிழ் அரசியல் கட்சிகள் பிரிவினைவாதம் பேசுவது உச்சக்கட்டத்தில் இருந்தது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடாத்துவதற்கு அரசே அனுசரணை வழங்கவும் முன்வந்தது.
ஆனால் விடாபிடியாக யாழ்ப்பாணத்தில்தான் நடத்திக் காட்டுவோம் என்று நடத்தினார்கள். அதனால் அரசு பல முட்டுக்கட்டைகளை செய்து வந்தது. அதில் ஒன்றுதான் தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசுபவர்களது வீசா மறுக்கப்பட்டமை. மறவன்புலவு சச்சிதானந்தன் அது பற்றி ஒரு நூலே எழுதியுள்ளார். டாக்டர் ஜனார்த்தனன்கூட அது பற்றி எழுதியுள்ளார்.

தமிழ் தேசிய அரிதாரம் பூசிய பார்ப்பனீயம் ... ஈழத்தின் இன்றைய உண்மை நிலை என்ன?


ஈழப்போர் முடிந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது ..
அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பி விட்டார்கள் .
அவர்கள் இனி எந்த காலத்திலும் போரை விரும்பமாட்டார்கள் .
கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் கணிசமான அளவு முன்னேறி விட்டார்கள்.
1995 இற்கு பின்பாக போர் நடந்த இடங்கள்  குறிப்பாக முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும்.

யாழ்ப்பாண குடா நாடு  1995 இல் இருந்து இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.
இது ஒரு முக்கிய விடயம் . 1995 இல் சந்திரிகா அம்மையாரின் காலத்தில் யாழ்ப்பாண குடாநாடு புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது.
பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்தாலும் பாடசாலைகள் இயங்கின. மக்களுக்கு ஓரளவு நிவாரண உதவிகள கிடைத்தன.
பெரிதாக தொழில் வாய்ப்புக்கள் இல்லாதிருந்தும் அன்றாட வாழ்க்கை அரசு உதவியால் ஓடிக்கொண்டு இருந்தது.
இந்த காலக்கட்டத்தில் படித்து வந்தவர்கள் தற்போது உயர்கல்வி  தகுதிகளை பெற்று சமுகத்தை முன்னெடுத்து செல்லும் வல்லமை படைத்தவர்கள் ஆக உள்ளனர்.

வியாழன், 14 மே, 2020

தேவி சோமசுந்தரம் : உதயநிதி ஏன் குறிவைக்கப்படுகிறார் .. சமுக வலையில் நேற்றைய தொடர்ச்சி

Devi Somasundaram : இப்ப தான் ஓரளவு சுய தம்பட்டம் இல்லாம பேச ஆரம்பிச்சு இருக்கிங்க .திரு வடகலை ஐயங்கார் ..உங்க கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்..
திமுகவின் உட்கட்சி விவகாரம் உங்களுக்கு எந்த வகையில் சம்ப்ந்தமுடையது இல்லைன்னு இத என்னால ஈஸியா கடக்க முடியும் ..ஆனா அது கருத்தியல் விவாதம் ஆகாது ..அதனால..
1 .உதய நிதிக்கு என்ன தகுதி இல்லைன்னு நீங்க நினைக்கிறிங்க ....எந்த தகுதி இருந்தா அந்த பதவி தரப்படலாம்...அப்படி அந்த பதவிக்கு தகுதியான நபர் யார்?
2 ..உதய நிதியோட தாத்தா, அப்பா லாம் பேசும் கொள்கை சரியானது என்று தான் நாம் அதை ஆதரிக்கின்றோம்.
அப்ப கலைஞர் பேரன் பி ஜே பில சேரனுமா ? ..ஆண்டிமுத்து அய்யா பையன்ற தகுதில தான் ராஜா அண்ணன் கட்சிகுல் வந்தார் ....இன்று தன்னை நிருபிச்சு கொ ப செ வா உயர்ந்து இருக்கார் ..அதே அளவு கோல் தான் உதயனிதிகும்...ராஜாவ பார்த்து பதறாத நீங்க ஏன் உதய நிதி பார்த்து பதட்டமாகறிங்க்ஃ..
3 .ஆர் எஸ் எஸ் ல மட்டும் இல்லை.. உலகம் முழுக்க வாரிசு அரசியல் உண்டு ..பிடல் தம்பி கட்சில இரண்டாவது இடத்தில் இருந்தார் ..ஜார்ஜ் புஷ்களை நாம் அறிவோம்...உதய நிதி திமுகவின் ஆதார கொள்கை பேசினா தான் நிலைக்க முடியும்.
..இது இல்லாம . சில கேள்வி.
1.திமுகல ஒரு அமைப்பு பதவி தரப்பட்டதில் ஏன் அத்தனை பதட்டம்...
அந்த பதவிக்கு கோடி கோடியா சம்பளம் எதும் தரப்படுதா ? .

இன்னும் சில ஆண்டுகளுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்: தென் ஆப்பிரிக்க அதிபர்

ramaphosa-calls-on-people-to-adapt-to-social-distancing-measures-after-lockdown-is-easedhindutamil.in : ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்ட பிறகும், சில ஆண்டுகளுக்கு மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா அந்நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கூறும்போது, “கரோனா வைரஸ் தொற்று இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நம்முடைய வாழ்க்கை முறை முன்பு இருந்ததுபோல் இனி இருக்கப்போவதில்லை. ஊரடங்குக்குப் பிறகு நம் அன்றாடச் செயல்பாடுகள் பெரும் மாற்றங்களைச் சந்திக்கும்

ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து- ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு


ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து- ரெயில்வே அமைச்சகம் அறிவிப்புமாலைலமலர் : கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில், ஜூன் 30ம் தேதி வரை
அனைத்து வழக்கமான பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கின்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு தொழில்கள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பும் வகையில் சிறப்பு ரெயில்கள் கடந்த 1-ந்தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் மீட்டு வருகின்றன

"நடந்தே போறோம்..." மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பிய பீகார் தொழிலாளர்கள்!


nlc neyveli - bihar workers - நக்கீரன் : கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய அனல்மின் நிலைய (என்.என்.டி.பி) கட்டுமான பணியினை தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த தனியார் ஒப்பந்த நிறுவனங்களில்  433  வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலிகளாக  பணிபுரிந்து வருகின்றனர்.  கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடரும் ஊரடங்கால் வேலையும், கூலியுமின்றி தவித்து வருகின்றனர்.அதனால் தங்கள்  மாநிலமான பீகாருக்கு தங்களை அனுப்பி வைக்கக்கோரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய அனல்மின்நிலையம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மகராஷ்டிரா மாடு ஒருபக்கம் - மனிதன் ஒருபக்கம் .. மும்பை தேசிய நெடுஞ்சாலையில் ..


மாடு  ஒருபக்கம் - மனிதன் ஒருபக்கம் !மின்னம்பலம் :காளைகள் பூட்டும் வண்டியில் ஒருபக்கம் மாடு இருக்க மற்றொரு பக்கம் மனிதன் இழுத்து செல்லும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து வசதி முடங்கி வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்கின்றனர். இந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ராகுல் என்பவர் காளையுடன் சேர்ந்து வண்டியை இழுத்து செல்லும் வீடியோ சமூக
வலைதளங்களில் பரவி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அந்த வண்டியில், சில பொருட்களுடன் பெண்கள் உள்ளிட்ட சிலர் அமர்ந்துள்ளனர். அவர் சோர்வடையும் நேரம், அவரது மைத்துனர் வண்டியை இழுத்துச் செல்கிறார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அருகே பட்டர்முண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த அவர்கள் ஊரடங்கால் மோவ் நகரத்திலிருந்து தங்கள் ஊருக்குச் சென்று கொண்டுள்ளதாக வீடியோவில் ராகுல் கூறுகிறார்.

ஒன்றிணைவோம் வாவுக்கு வரவேற்பு; மதுக்கடைக்கு கடும் எதிர்ப்பு - உளவுத்துறை எடுத்த ரகசிய சர்வே

  hindutamil.in :  ஒன்றிணைவோம் வா’ இயக்கத்துக்கு வரவேற்பு; மதுக்கடைகளைத் திறந்ததால் அரசு மீது அதிருப்தி!- உளவுத்துறை எடுத்த ரகசிய சர்வே
திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துச் செயல்படுத்திய ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாக உளவுத் துறையினர் எடுத்த சர்வேயில் தெரியவந்திருக்கிறது.
பொதுமுடக்கம் அறிவித்ததுமே, உணவு, மருத்துவம், புலம்பெயர்தல் உள்ளிட்ட வாழ்வாதாரத்துக்கான உதவிகளைக் கேட்போருக்கு உதவிடும் வகையில், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார் ஸ்டாலின். இதற்காகச் சென்னையில் தனியாக ஓர் அலுவலகமே தொடங்கப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அந்தந்த மாவட்டத் திமுக செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இதற்காகக் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டு அவை அனைத்தும் சென்னை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டன.
‘ஒன்றிணைவோம் வா’ இயக்கத்துக்காக அறிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு உதவி கேட்டு வருபவர்களின் விவரங்கள் அனைத்தும், ஒவ்வொரு நாளும் அந்தந்த மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். மாவட்ட அலுவலகங்களிலிருந்து அந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகரத் திமுக செயலாளர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் என்ன உதவி கேட்டிருக்கின்றார்களோ அந்த உதவியைச் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று செய்து கொடுத்துவிட்டு அந்தத் தகவல்களை உடனுக்குடன் மாவட்ட அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

கண்ணீருடன் வெளியேறினார் பாலசிங்கம் கருணா பிரிவு இயக்கத்தின் அழிவின் தொடக்கம்

வளன்பிச்சைவளன் : அன்ரன்பாலசிங்கம் யோசனைகள் நிராகரிக்ப்பட்டன! கண்ணீருடன் வெளியேறினார் பாலசிங்கம் கருணா பிரிவு இயக்கத்தின் அழிவின் தொடக்கம்  ஈழத்தில் இருந்து ஓர் குரல்
புரஜக்ட் பீகானைப் பற்றிய சகல விளக்கமும் இரண்டாம் கட்டப்பேச்சுவார்தை முறியும் நிலைவந்த போது..அன்ரன் பாலசிங்கத்து க்கும் கருணாவிற்கும்..வடிவாக விளங்கப்படுத்தப்கட்டபோது அதை அவர்கள் இருவரும் நண்குணர்ந்த நிலையில்... இலங்கைவந்து வன்னியில்
தலைவருடன் சொன்னபோது அதை தமிழ்செல்வன் பொட்டம்மான் குழுக்கள் எதிர்த்தன கருணாம்மான் 500 கோடி வாங்கிவிட்டார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது..மத்தயாவுக்கு நடந்த்துதான் தனக்கும் நடக.கப்போவதை உணர்ந்து தனது மட்டக்களப்பு குரூப்பை வன்னியிருந்து பின்வாங் கினார்..புரஜக்ட்படி கிழக்கில் வடக்குப்புலிகளின் புலிவேட்டை ஆரம்பமானது ..கரிகாலனுடன் பலரை பிடித்து படகு மூலம் வன்னிக்கு கொண்டுவரப்பட்ட னர் கருணாவின் ஆட்கள. பலர் வேட்டையாடப்பட்டனர்..கருணா அரசபடைகளிடம் சரண்டைந்து.. அரச படையினர் அவரை தமது திட்டத்தில் இணைத்து கொண்டனர்..ஐயா பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் தான் நோய்வாய்ப்பட்டதாகவும்..விடுமுறை கோரி வேட்டியுடன் கடித்த்தை பிரபாகரனிடம் கொடுத்நபோது..அவரை அவமானப்படுத்தி பேசியது மட்டுமல்ல..விடுதலைப் புலிகளுக்கு விடுதலை.. விடுமுறை யெல்லாம் மரணத்தில்தான் என்று சொன்ன செய்திவடமாகாண ஊடகங்களில்வந்த்துபடத்துடன்..தலைவர்ட . குரூப்பில் தமிழ்செல்வன்..பொட்டம்மான் ஆட்களே மிஞ்சிய ஆட்கள்..அவரகளில் சிலர். அன்ரனய்யாவுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி அவர் மரணத்துக்கான ஏற்பாடுகள் சிலவற்றைசெயதிருந்தனர்..

ஆஃப்கன் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பச்சிளம் குழந்தைகளும் பலி


BBC  : ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. உயிரிழத்தவர்களில் தாய்மார்கள், பிறந்த குழந்தைகள், செவிலியர்களும் அடங்குவர். மேலும் 16 பேர் இதில் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கிறார்.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இத்தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள நங்கர்தார் என்ற இடத்தில் தற்கொலைதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தாலிபன்கள் மற்றும் பிற குழுக்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
>வன்முறைகளை குறைத்துக்கொள்ள பல முறை அழைப்பு விடுத்தபோதும், பயங்கிரவாதிகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்திய கிராமங்களின் வறுமை .. சோமாலியாவை நெருங்குகிறது பட்டினி சாவை நோக்கி ?


ஊரடங்கு: கிராமப்புறங்களின் இன்றைய நிலை - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
கிராமங்களின் வறுமையை வளர்ச்சி என்போர் 
மின்னம்பலம் : ஊரடங்கு காரணமாக இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே சாப்பிடுகிறார்கள் என்றும், கிட்டத்தட்ட 29 சதவிகிதக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியை விட்டு வெளியேற வைப்பதாகவும் ‘கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கை கிராமப்புறங்கள் எவ்வாறு சமாளிக்கிறது’ என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது
இந்த ஆய்வை பர்தான் என்ற அமைப்பு நடத்தியது. சமூக முன்னேற்றத்துக்கான நடவடிக்கை குழு, பிஏஐஎஃப், டிரான்ஸ்ஃபார்ம் ரூரல் இந்தியா அறக்கட்டளை, கிராமீன் சஹாரா, சாதி - உத்தரப்பிரதேசம், விகாஸ் அன்வேஷ் அறக்கட்டளை, சம்போடியின் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் அகா கான் கிராமிய ஆதரவு திட்டம் (இந்தியா) ஆகியவையும் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டன.

காங்கிரஸில் கே எஸ் அழகிரியை கவிழ்க்க கார்த்தி சிதம்பரம் .. பம்பரமாக

டிஜிட்டல் திண்ணை: காங்கிரஸில் அடுத்த கலாட்டா ஆரம்பம்!மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“கொரோனா ஊரடங்கு நேரத்தில் அரசியலுக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை என்பது ஊரறிந்த சங்கதியாக இருக்கிறது. அது கொரோனா அரசியலாக இருக்கட்டும், உட்கட்சி அரசியலாக இருக்கட்டும். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஊரடங்கின் தொடக்க நாட்களில் தனது கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் கிராம வீட்டில் இருந்தபடியே தினம் ஒரு வீடியோ மூலம் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். சில நாட்களுக்கு முன்புதான் சென்னை சென்று சத்தியமூர்த்தி பவனில் இருந்தபடி அடுத்தகட்ட அரசியலைத் தொடங்கியிருக்கிறார்.

16.4 லட்சம் கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி!

16.4 லட்சம் கோடி எங்கே?  காங்கிரஸ் கேள்வி!மின்னம்பலம் : நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏழை மக்களுக்கு ஒன்றும் அறிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பு ஒன்றை அறிவித்தார். ஆத்மநிர்பார் பாரத் அப்யான் (தன்னிறைவு இந்தியா) என்ற இத்திட்டம், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. அதாவது கடந்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 200 லட்சம் கோடியில் 10 சதவிகிதம்.
இதற்கான திட்டங்களை நேற்று (மே 13) அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வங்கிகளுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அத்துடன் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம், பிஎஃப்பின் ஒரு பகுதியை அரசே செலுத்தும், டிடிஎஸ் பிடித்தம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு தினதந்தி : சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி திட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். கட்டுமான துறைக்கு சலுகை களையும் அறிவித்து இருக்கிறார். புதுடெல்லி, பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டம்
அப்போது, கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதுபற்றிய விரிவான தகவல்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதன்கிழமை (நேற்று) முதல் வெளியிடுவார் என்றும் அறிவித்தார். அதன்படி அந்த திட்டம் பற்றிய தகவல்களை நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது- விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்

தினத்தந்தி :நாவல் கொரோனா வைரசின் நெருங்கிய உறவு வைரசை
அடையாளம் கண்டுள்ள விஞ்ஞானிகள், இது கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது, ஆய்வுக்கூடத்தில் அல்ல என்பதற்கு ஆதாரமாக அமைகிறது என்று கூறி உள்ளனர். சீனாவில் வுகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 185-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாவல் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகிற கோவிட்-19 தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 42 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளதாகவும், 2 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் தொற்று தரவு மையம் கூறுகிறது.
இந்த கொடிய வைரஸ் இயற்கையாக உருவானதா, வுகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்பதில் பெருத்த சர்ச்சை நிலவுகிறது.
ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவிவிட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக்கூடத்தில் உருவானது அல்ல, இயற்கையாக உருவானதுதான் என்று சீன விஞ்ஞானிகள் புதிய ஆதாரத்தை காட்டுகின்றனர்.

புதன், 13 மே, 2020

மனோ கணேசன் : "புலி-லேகியம்" சர்வரோக நிவாரணி கிடையாது!

.ilankainet.com :தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் அவர் மீது அவரது கட்சியினரே தாக்குதல்
நடாத்திவரும் நிலையில், நியாயத்தை உணர்த்தியுள்ளார் முன்னாள் பாராளுமன்றி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திரு.மனோகணேசன். 
இது தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் கருத்திட்டுள்ள அவர் சித்தவைத்தியர்களின் லேகியம்போல் தமிழ் மக்களில் சகல பிரச்சினைகளுக்கும் புலி தீர்வாகாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது முகநூலில் கீழ்கண்டவாறு பதிவிதிட்டுள்ளார்.
திரும்பி பார்த்து பாடம் படிக்க வரலாற்றை பயன்படுத்தலாம். ஆனால் வரலாற்றை அப்படியே "கார்பன் கொப்பி" செய்யக்கூடாது. அதாவது, இன்றைய கேள்விகளுக்கு, வரலாற்றுக்குள் நுழைந்து, முழுமையான பதில்களை தேட கூடாது. எடுகோள்களை, உதாரணங்களை தேடலாம்.
இன்னமும் தெளிவாக சொல்லப்போனால், ஒரு பதிலை எழுதி வைத்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் அதையே ஒரே பதிலாக கூறிக்கொண்டிருக்க கூடாது.
சில நாட்டு வைத்தியர்கள் ஒரு லேகியம் வைத்திருப்பார்கள். எந்த நோய், விடாய், வலி என்று அவர்களை நீங்கள் அணுகினாலும், அந்த ஒரே லேகியத்தையே சர்வரோக நிவாரணி என தருவார்கள். இது சிலவேளை தற்செயலாக சரிவரும்.

பழக்கடைகளை தள்ளிவிட்ட நகராட்சி ஆணையரிடம் விசாரணை வீடியோ


நக்கீரன் : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஊரடங்கு விதிகளை பின்பற்றி கடைகள் செயல்படுகிறதா என்பதை நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் மற்றும் வட்டாட்சியர் சிவபிரகாசம் ஆகியோர் தலைமையில், வருவாய் துறையினர் மே 12 ந்தேதி ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளில் பழங்களை கீழே தூக்கிப்போட்டார், பழ வண்டிகளை அப்படியே கீழே தள்ளிவிட்டார், பழ தட்டுக்களை உதைத்து தள்ளினார் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ்.இதனை வியாபாரிகளால் கேள்வி கேட்க முடியவில்லை. ஆனால் அவரின் செயல்கள் வீடியோ செய்தியாக வெளியாக அவரின் செயல்கள் கண்டனத்துக்கு உள்ளாகின.
உயர் அதிகாரிகள் இதுக்குறித்து நகராட்சி ஆணையரிடம் கடுமையாக கேள்விகளை எழுப்பினர். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் செய்தியாளரை சந்தித்தார்.

தலைமைச் செயலாளர் அவமானப்படுத்திவிட்டார்: வெடித்த திமுக எம்.பி.க்கள்!

தலைமைச் செயலாளர் அவமானப்படுத்திவிட்டார்: வெடித்த திமுக எம்.பி.க்கள்!மின்னம்பலம்  : மனு அளிக்க வந்த தங்களை தலைமைச் செயலாளர் அவமானப் படுத்திவிட்டதாக  திமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகம் மு ழுவதும் ஒருங்கிணைவோம் வா திட்டத்தின் மூலமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு உணவு, உடை, மருந்துகள் உள்ளிட்ட வசதிகளை திமுக 40 நாட்களுக்கும் மேலாக செய்து வருகிறது. இதன் மூலம் 15 லட்சம் பேருக்கு உதவி செய்துள்ளதாகவும், பல ஆயிரம் கோரிக்கை மனுக்கள் வந்திருப்பதாகவும் திமுகவினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை, திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று (மே 13) சந்தித்து மக்கள் தங்களிடம் அளித்த கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தார். அப்போது, மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் சிறுமி கொலை... யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது அரசு?

samayam tamiltamil.samayam.com : விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயின் கொலையை சாதாரண தீ விபத்துச் சம்பவம் போல குறிப்பிட்டுள்ளது அரசு செய்தி.
விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை செய்யப்ப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவடையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், இதனை வெறும் தீ விபத்து என்று அப்திவு செய்துள்ளது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணம். பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் ரண வேதனையுடன் இறந்த சம்பவத்தால் நாடு மொத்தமும் கலங்கியது. இந்நிலையில், இதற்குக் காரணமான இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் மறைக்கப் பார்க்கிறதா அரசு என்று கேள்விகள் எழும்பும் விதமாக அரசு இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள். இன்னொருவர் முன்னாள் கவுன்சிலர் முருகன். இவர்கள் இருவருக்கும் ஜெயபால் என்பவருடன் முன் பகை இருந்துள்ளது. இந்தப்பகையின் காரணமாக ஜெயபாலின் மகளை வலுக்கட்டாயமாகக் கை காலை கட்டிப்போட்டுவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்தச் சிறுமி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ''ஜெயஸ்ரீயை'' எரித்துக் கொன்ற அதிமுகவினர் இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

மம்தா அதிரடி : மக்கள் எதிர்பார்த்ததோ நிவாரணம், கிடைத்ததோ மிகப்பெரிய பூஜ்ஜியம்’


'மக்கள் எதிர்பார்த்ததோ நிவாரணம், கிடைத்ததோ மிகப்பெரிய பூஜ்ஜியம்’ - மம்தா அதிரடிமாலைமலர் : நிதிமந்திரியின் அறிவிப்பில் மக்களுக்கு மிகப்பெரிய பூஜ்ஜியம் தான் கிடைத்துள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார சிறப்பு திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல லட்ச கோடி ரூபாய் மதிப்பில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், பொது மக்கள் நலன் சார்ந்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பொருளாதார சிறப்பு நடவடிக்கைகளின் அறிவிப்புகள் தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய பூஜ்ஜியம் தான் கிடைத்துள்ளது. மாநிலங்களுக்கு எதுவும் இல்லை’ என்றார்

உதயநிதியை ஏன் குறிவைத்து தாக்குகிறார்கள்? சமுக வலையில் காரசார விவாதம்

இவர்கள் எல்லாம் உதயநிதியை குறிவைத்து தாக்குவதில் இன்னும் எனக்கு
தெரியாத ஏதோவொரு விடயம் மறைந்திருக்கிறது போல தோன்றுகிறது.
வெறும் வாருசு என்பதை தாண்டி இவர்களின் குறிக்கு வேறு ஒரு காரணம் இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.
ஏனெனில் இதே போன்றதொரு குற்றச்சாட்டுதான் ஸ்டாலின் மீதும் காலம் காலமாக வைக்கப்பட்டது.
இத்தனையும் ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டுவந்தது எமர்ஜென்சியின் தமிழக வைஸ்ராயாக இருந்து செயல்பட்ட மூப்பனார் போன்ற தமிழக  காங்கிரஸ் கூட்டம்தான்.
எந்த காரணமும் இல்லாமல் ஸ்டாலினையும் சிறையில் தள்ளி அடித்து துவம்சம் பண்ணி அவரை அரசியலுக்குள் தள்ளி விட்டார்கள்.
ஆம் அரசியலுக்குள் அவர் பலவந்தமாக தள்ளி விடப்பட்டார் .
அதன் பின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரை கலைஞரோடு ஒப்பிட்டு அவமானப்படுத்துவதிலேயே திமுக எதிரிகள் குறியாக இருந்தனர்.
அதிலும் புலிவாலுகளுக்கு தங்களின் போராட்ட கனவெல்லாம் கனவாகவே போனதற்கும் ஸ்டாலின்தான் காரணம் என்பது போல இன்றுவரை ஆர் எஸ் எஸ் இன் மீம்ஸ்களையும் போலி செய்திகளையும் பரப்பி கொண்டிருக்கிறார்கள்.
இவற்றிக்கு எல்லாம் உண்மையில் என்னதான் காரணம்?
திராவிட கருத்தியல் மீதான வெறுப்புத்தான் இதன் உள்ளிருப்பு. .
சக மனிதரை ஒரு போதும் சக மனிதராக கருதுவதை விரும்பாதவர்கள்.
தங்களின் அந்தஸ்த்துக்கு  அல்லது தங்களின் சமுக அடையாளத்துக்கு ஏற்றதல்ல என்ற திருட்டு கருத்தில் ஆழமாக ஊறி இருப்பவர்களாகும் .
அந்த திராவிட கருத்தியலை அரசியல் அரங்கில் கட்டமைத்தை ஒரே கட்சி திராவிட முன்னேற்ற கழகம்தான்.

கூடங்குளம் வெளிமாநில ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் வெற்றி!

மின்னம்பலம்:   டி.எஸ்.எஸ்.மணி கூடங்குளம் அணு உலைகளைக் கட்டுவதற்காகக் கட்டுமான நிறுவனமான எல் &; டி நிறுவனம் கொண்டுவந்திருந்த வட இந்திய ஒப்பந்தத் தொழிலாளிகள் 1,200 பேரை நேற்று (மே 12) மாலை அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல ரயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூடங்குளம் அணு உலை வளாகத்திலிருந்து 31 பேருந்துகளில் அவர்கள் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 16 பேருந்துகள் எல் & டி நிர்வாகத்துக்குச் சொந்தமானவை. மீதி 15 பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்தவை. நேற்று (மே 12) இரவு 10 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து பீகாரை நோக்கி அந்தத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ரயில் கிளம்பியது.இதற்கான ஏற்பாடு கூடங்குளத்தில் தடபுடலாகச் செய்யப்பட்டது.

இந்தோனேசியாவில் ஏ.டி.எம். மூலம் ஏழைகளுக்கு இலவச அரிசி வீடியோ

div

தினத்தந்தி:  இந்தோனேசியாவில் ஏ.டி.எம். மூலம் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது.
ஜகார்த்தா, இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு 14 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கால் அந்த நாடு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. சிறு, குறு தொழில்களில் ஈடுபடுவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அங்கு கடந்த 6 வாரங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதாக அந்த நாட்டு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு ஏ.டி.எம். மூலம் இலவச அரிசி வழங்கப்படுகிறது. தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரிசி ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டு தினமும் ஆயிரம் நபர்களுக்கு 1.5 டன் அளவு அரிசி வினியோகிக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி. ஆர். ஷெட்டி .. 6.6 பில்லியன் டாலர்...சுமார் 51000 கோடி ரூபாய் .. மோடி கும்பலின் லேடஸ்ட் திருடன்

 https://economictimes.indiatimes.com/nri/nris-in-news/br-shetty-the-staggering-rise-and-incredible-fall-of-a-billionaire/articleshow/75381757.cms?fbclid=IwAR0TgqrIobPe6jlYK5Q2lO8fwtszoBMvKzoo9mlA30ASEqDgmm_1Td9vfqU
Shajahan R : வந்தேன் பாரத்!
பி.ஆர். ஷெட்டி (Bavaguthu Raghuram Shetty) கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் பிறந்தவர். அரபு நாடுகளுக்குப் பிழைப்புக்காகச் சென்றவர், அங்கே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். NMC Health என்ற பெயரில் அமீரகத்தில் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - UAE) நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவச்சேவை நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இளம் வயதிலிருந்தே ஜன சங், ஆர்எஸ்எஸ்சில் ஈடுபாடு கொண்டிருந்தவர். ஜனசங்க் கட்சிதான் பாஜக ஆனது. எனவே, பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானவர். நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் மிகவும் நெருக்கமானவர். பாஜகவுக்கு மட்டுமல்ல, மோடிக்கும் நெருக்கம். (1000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான தயாரிப்பில் மகாபாரதம் திரைப்படம் எடுப்பேன் என்றவர்.) மோடி அரபு நாடுகளுக்குச் செல்லும்போது, அவரை விளம்பரப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தவர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது.

மோடி பேசியது.. - கொரோன வைரஸ் ஊரடங்கு, 20 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகுப்பு

BBC :செவ்வாய் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்தி மோதி பொருளாதார உதவித் தொகுப்பு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான நான்காம் கட்ட ஊரடங்கு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இது கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்திய பின்பு நரேந்திர மோதி இந்திய மக்களுக்கு ஆற்றும் மூன்றாவது உரையாகும்.
மோதி ஆற்றிய உரையின் 10 முக்கியத் தகவலைகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
1. ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே பாதித்துள்ளது என்றும் இந்த உலகமே நான்கு மாதகாலமாக கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வருவதாகவும் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
2. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடங்கிய சமயத்தில் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. அப்போது சில N-95 முகக் கவசங்கள் மட்டுமே இருந்தன. இப்பொழுது நாள்தோறும் இரண்டு லட்சம் மருத்துவப் பாதுகாப்பு உடைகள் மற்றும் இரண்டு லட்சம் N-95 முகக் கவசங்கள்ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றன என்று தனது உரையில் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
"உலகெங்கும் 42 லட்சம் பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியர்களில் பலரும் தங்களது நேசத்துக்கு உரியவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று நரேந்திர மோதி பேசினார்.

செவ்வாய், 12 மே, 2020

தமிழ் தேசிய பாசிஸ்டுகளின் முதல் பலி யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா! .. உண்மையில் அவர் யார்?

யாழ்ப்பாணம் பொது சன நூல் நிலயம்! காலை எனது பாடசாலை கதவு எட்டு மணிக்கு தான் திறக்கப்படும். அனேகமான நாட்கள் நான் சற்று முன்னதாகவே அங்கு சென்று விடுவேன், ஓட்டமும் நடையுமாக பொதுசன நூல் நிலையம்
்டபம்தான் எனக்கு அப்போது Google . நிமிடங்களோடு போட்டி போட்டுகொண்டு அங்குள்ள நூல்களை உழுது தள்ளுவேன். அங்குள்ள் ஒவ்வொரு நூலும் எனக்கு ஒரு தங்க சுரங்கமாகவே இருந்தது.
அந்த இனிய காலைப்பொழுதுகளில் அங்கு நானும் நூல்களும் மட்டுமே இருந்தோம் . எங்களின் ராஜ்யத்தின் இடையில் ஒரு அழகான மனிதர் சில நொடிகள் வந்து போவார் . அவர் மெதுவாக நடந்து அந்த நூலகத்தின் அன்றைய தூய்மை ஒழுங்கு போன்றவற்றை கண்களால் கணக்கெடுத்து கொண்டு செல்வார். அங்கு ஒரு தூசி துரும்பும் இருக்க கூடாதே , அங்குள்ள நாற்காலிகளும் மேசைகளும் நூல்களும் ஒழுங்காக அடுக்கி வைக்கபப்ட்டிருக்க வேண்டுமே? என்பதில் அவர் கொண்ட சிரத்தை ஒரு தவம் என்று கூறலாம் .

தூரத்தே இருந்து பார்க்கையில் சில சமயம் ஒரு சில நாற்காலிகள் சற்று ஒழுங்கற்று இருந்தால் மெதுவாக நடந்து வந்து அதை சரியாக்கி விட்டு மெதுவாக நடந்து சென்றுவிடுவார்,அவரை நிமிர்ந்து பார்க்க கூட எனக்கு நேரம் இருக்காது . நான்தான் அந்த கால google பைத்திய்மாச்சே? அவரை பெரியதாக பார்க்கவிடினும் அவரை ரசிப்பேன் அவர் ஒரு அரசியல்வாதி, யாழ்ப்பான மேயர் அல்பிரட் தங்கராஜா துரையப்பா என்பது அவரது பெயர், அவர் அங்கு எந்த நாளும் வந்து பார்த்து பார்த்து அந்த நூலகத்தின் நேர்த்தியை பேணுவது எனக்கு தெரிந்த அளவு வேறு எந்த வாசகனுக்கும் தெரிந்திருக்கிறதோ தெரியவில்லை. 

லண்டன் தமிழர் .. இரு குழந்தைகளையும் தந்தையே வெட்டி கொன்ற ..


இலக்கியா : லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை
செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது.
தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.
அவர்கள் இருவரையும் ஒன்றாகவே, பெட்டியில் வைத்திருந்தார்கள். “அண்ணா உனக்கு துனை நிற்பானடா” என்று அம்மா கதறி அழ, “பால் குடித்து விட்டு படுக்கச் சென்ற பிள்ளையைக் கொன்றாரே!” என்ற சத்தம் விண்ணைப் பிழக்க, கல் நெஞ்சம் கொண்டவரையும் கரைய வைக்கும் ஓலமாக இருந்தது அது.
இந்த சின்னஞ் சிறு மழலைகள் என்ன பிழை செய்தார்கள் என்று எண்ணத் தோன்றும். அங்கே நின்ற பலரும் இந்த கேள்வியைத்தான் மனதில் எழுப்பி இருப்பார்கள்.
காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய ஈமைக்கிரியைகள், 11.30க்கு முடிய. 12 மணிக்கு நல்லடம் செய்யப்பட்டது இந்த பிஞ்சு உடல்கள்.
இவர்கள் அதிகம் விளையாடி பொருட்கள் அவர்களின் நல்லடக்க பெட்டியினுள் இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. லண்டன் ஈழத் தமிழர்கள் சமூகத்தில் நடந்த மிகப் பெரிய சோகமான நிகழ்வாக இது இருக்கிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாகி விட்டதா?

மாலைமலர் :மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு நடத்துகிறது.
இந்தியாவில் சமூக பரவலாகி விட்டதா கொரோனா?-

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 70,756  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3604 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் சேவை: ரயில்வே அறிவிப்பு

railwayவெப்துனியா :தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று ’சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் சேவை’ என ரயில்வே துறை அறிவித்துள்ளது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் இன்று முதல் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நாடெங்கிலும் பல ரயில்கள் இயக்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் சென்னைக்கு இப்போதைக்கு ரயில் சேவை தேவை இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழ்கத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று

மாலைமலர் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 716 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று - அதிரும் தமிழகம் கொரோனா பரிசோதனை சென்னை: இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 716 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது. 

ஜெயஸ்ரீயை கொலை செய்தது ஏன்? அதிர வைக்கும் வாக்குமூலம்!

ஜெயஸ்ரீயை கொலை செய்தது ஏன்? அதிர வைக்கும் வாக்குமூலம்!மின்னம்பலம் : தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் மாணவி ஜெயஸ்ரீ கொலை வழக்கின் பின்னணி குறித்து கைது செய்யப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்னும் பத்தாம் வகுப்பு மாணவி, கை-கால்கள் கட்டிப் போட்டு தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் தனக்கு அநீதி இழைத்தவர்கள் குறித்து ஜெயஸ்ரீ தெரியப்படுத்தும் வீடியோ காண்பவர்கள் நெஞ்சை உடைத்து விட்டது. இந்த கொடுமை சம்பவம் தொடர்பாக நமது மின்னம்பலத்தில்14 வயது சிறுமியைக் கட்டிப்போட்டு எரித்த பயங்கரம்: அதிமுக பிரமுகர்கள் கைது!என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தியா வன்முறை தலைநகரமாக இருப்பதற்கு..

Shalin Maria Lawrence "... தலைக்கு சுர்ருன்னு ஏறிட்ச்சி.. .பொறுக்கமுடியாத
கோவம், வெறி".
இறைவி படத்தின் க்ளைமாக்ஸில் விஜய் சேதுபதியை கொலை செய்துவிட்டு sj சூர்யா இப்படி பேசுவார்.
இந்த படம் வந்த போது என்னை மிகவும் அசைத்து போட்ட வசனம் இது.
"பொறுத்து போக நாம என்ன பொம்பளையா ?! ஆம்பள மாமா!
ஆண் நெடில்!!!!! பெண் குறில்.
எவ்வளவு கேவலமான பிறவிங்க இல்ல நம்ம?!!! "
என்ற வசனம் ஒரு ஆணிடமிருந்து வந்த மிக நேர்மையான சுய விமர்சனம்.
இறைவி படம் எனக்கு முதலில் பெரிதாக படவில்லை .இதில் பெண்ணியம் என்ன இருக்கிறது? இந்த இந்தப்படத்தில் நான்கு ஆண்கள் இருக்கிறார்கள் நான்கு பெண்கள் இருக்கிறார்கள் அந்த ஆண்கள் தங்களுக்கு தானே குடித்துவிட்டு கோபப்பட்டுக் கொண்டு வன்மத்தோடு அடிதடி கொலை என்று இறங்கி தங்கள் வாழ்வை நாசமாக்கி கொள்கிறார்கள் இந்த படத்திற்கு இறைவி என்று பெயர் வைக்க என்ன காரணம் என்று யோசித்து இருக்கிறேன்.
பின்பு இரண்டாம் முறையாக இந்த படத்தை காணும்போது ஒரு விஷயம் தெள்ளத்தெளிவாக கண்ணுக்கு தெரிந்தது
இந்த படத்தில் அத்தனை ஆண்களும் ஒன்று மாண்டு போகிறார்கள் இல்லை ஜெயிலுக்குப் போகிறார்கள்.
ஆனால் அத்தனை பெண்களும் அவர்களுக்கான ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டு வாழ்வில் நிலைத்திருக்கிறார்கள்.

தா. பாண்டியன் : நானே புலிகளை சரணடைகிறோம் என்று கூறாமல் ஆயுதங்கள் மௌனமாகின்றன என்று கூறுங்கள் என்றேன்

வீரகேசரி  :  நான்காம் ஈழப்போர் காலத்தில் உங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டதாக தகவல்கள் உள்ளனவே?

தா. பாண்டியன் : நான்காம் ஈழ போராட்ட காலங்களில்  எனக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்பாடல்கள் இருந்தது  உண்மைதான்.
புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் என்னுடன் தொடர்ச்சியான தொடர்புகளை கொண்டிருந்தார்.
சில அறிக்கைகளை வரைகின்றபோது அவர் என்னுடன் கலந்துரையாடுவார் . அது தொடர்பான ஆதாரங்களும்  என்னிடம் உண்டு.
இவ்வாறான நேரத்தில்தான நடேசன் என்னிடத்தில் தங்களை சரணடையுமாறு கோருகிறார்கள் . என்ன செய்வது என்பது குறித்து என்னிடத்தில் ஆலோசனை நடத்தினார் .
உங்களின் நெருகடியாயான நிலைமைகளை அறியாது  நான் தீர்க்கமாக பதிலளிக்க முடியாது என்றேன்.

இருப்பினும் சரணடைகின்றேன் என்று எழுத்து மூலம் வழங்காது எனது ஆயுதங்களை மௌனமாகின்றன என்று எழுத்து மூலமாக வழங்குங்கள் என்று ஆலோசனை வழங்கினேன்.
அதனை அறிக்கை வரைவாக அனுப்புமாறும் கோரினார்.
அச்சமயத்தில்  நான் அனுப்பி வைத்தேன் .
அதனை தொடர்ந்து ஓரிரு நாட்களின் பின்னர்  : தான் வாகனத்தில் ஏறி வெள்ளை கொடியுடன் செல்கிறேன் என்றும் கூறினார்.
நடுவழியில் என்னையும் வாகனத்தையும் மறித்து விட்டார்கள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை .. என்பது நடேசன் என்னுடன் பேசிய இறுதி வார்த்தைகளாக் இருக்கின்றன .
இதனை விட பல போராளிகளும் மக்களும்  ஊர் பேர் சொல்லாது , நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றுவீர்களா ? அடுத்து என்ன செய்யலாம்?
நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம் .எப்படி உயிரை காப்பாற்றுவது ?
போன்ற கேள்விகளுடன் எங்களை தொடர்பு கொண்டார்கள்.
அச்சமயத்தில் போர்க்கள சத்தத்தையே என்னால் கேட்க கூடியதாக இருந்தது  இந்த முழு பேட்டியையும் கீழ்க்கண்ட  இணைப்பில்  பார்க்கலாம் .
 https://www.virakesari.lk/article/33335

திங்கள், 11 மே, 2020

ஆழி_செந்தில்நாதன் : மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து தமிழை நீக்கும் சதியை முறியடிப்போம்.

மேல்நிலைப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒன்றை மட்டும் எடுத்தால் போதும் என்று ஒரு பரிந்துரை
பள்ளிக்கல்வித் துறையால் செய்யப்பட்டிருக்கிறதாக வந்திருக்கும் செய்தி நம்மைக் கொதிப்படைய வைக்கிறது.
எடப்பாடி பழநிச்சாமி தலைமையிலான அடிமை அரசு இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ என்று தெரியவில்லை. மோடி தலைமையிலான பாஜக அரசு எட்டடி பாய்ந்தால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதினாறு அடி பாய்கிறது.
பாடச்சுமையைக் குறைத்தல் என்கிற பெயரில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, பாடச்சுமையை குறைப்பதைவிட அறிவின் பலத்தைக் குறைத்துவிடும். இது நமது அறிவுத்திறனையும் மொழியுரிமையையும் குலைக்கும் செயல்பாடாகும்.
இது தமிழ் தேசத்தின் ஆணிவேரையே அழிக்கும் செயல்பாடாகும். அறிவு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாத மூடர்கள் எடுக்கும் முடிவே இத்தகைய முடிவுகள்.
தமிழ் என்பதும் ஆங்கிலம் என்பதும் வெறும் மொழிப்பாடங்கள் அல்ல. பத்தாம் வகுப்புவரை நாம் கற்பது அடிப்படைகள். சொல்லப்போனால் மேல்நிலைக் கல்வி, கல்லூரி கல்விக் காலங்களில்தான் மொழிகளையும் ஆழ்ந்து படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு வரும். அந்தச் சமயத்தில் மொழிகளை நீக்குவது சமூகத் தற்கொலையாகும்.

சென்னைக்கு ரயில், விமான சேவை இப்போதைக்கு வேண்டாம்.. தமிழக அரசு கோரிக்கை

Dont operate train and flight services to Chennai till may 31, Edappadi palanisamy request PM Modi tamil.oneindia.comசென்னை: சென்னைக்கு மே 31ம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவைகள் வழங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசின் வேண்டுகோள் மற்றும் கருத்துகளை எடுத்து வைத்தார் அவர் கூறுகையில், 0.67 சதவீதம் என்ற அளவுக்குத்தான் தமிழகத்தில், கொரோனா இறப்பு விகிதம் உள்ளது. பல நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.