சனி, 12 டிசம்பர், 2020

சி.பி.ஐ பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் திருட்டு போய்விட்டது! சி பி ஐயில் கறுப்பு ஆடுகள் . திருட்டு ஆடுகள்

BBC :  சி.பி.ஐ பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் எங்கே? சென்னை தனியார் நிறுவனத்தில் சி.பி.ஐ பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது. தங்கத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு இந்திய தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக கழகத்தின் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக கூறி, சி.பி.ஐ. 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. "ின்னர் அந்த தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது. அந்த தங்கத்தை அந்த தனியார் நிறுவன அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த லாக்கருக்கான 72 சாவிகளை சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

அந்த தனியார் தங்க இறக்குமதி நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தி நிர்வகிக்க வங்கிகள் சார்பில் சிறப்பு அதிகாரியாக ராமசுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

கோயில் மணியின் கயிறு கழுத்தில் சிக்குண்டதில் உயிர்நீத்த பாடசாலை மாணவன்.. இலங்கை மலையகம்

.hirunews.lk :   கோயில் மணியின் கயிற்றில் தொங்கியபடி விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவனின் கழுத்தில் அக்கயிறு சிக்குண்டதில் அம்மாணவன் மரணமடைந்துள்ளார். எட்டு வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த மாணவன் தனது வீட்டுக்கு அண்மையிலுள்ள கோயில்  மணியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அக்கயிறு கழுத்தில் சிக்குண்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அவதானித்த தோட்ட அதிகாரி குறித்த சிறுவனை காப்பாற்றி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். எவ்வாறெனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதும் அவர் உயிழந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஸ்டாலினுக்கு டாக்டரின் கட்டளைகள்! தினசரி 54 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிங் போக வேண்டாம்

மின்னம்பலம் : ஒவ்வொரு நாளும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு பல்வேறு உத்தரவுகளையும், கட்டளைகளையும் இட்டுக் கொண்டிருக்கிறார். அதேநேரம் நேற்று (டிசம்பர் 11) திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது மருத்துவர் தணிகாசலம் சில கட்டளைகளை இட்டிருக்கிறார்.  டிசம்பர் 11 ஆம் தேதி தனது தொகுதியான கொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த அத்தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு... திடீரென உடல் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. உடனே அருகிலுள்ள ஆர்த்தோ அன்ட் நியூரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்டாலினுக்கு அங்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ரத்த அழுத்தம் குறைந்தது தெரியவந்தது.

அதற்குள் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி என்று தகவல்கள் பரவ, மீண்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கே வந்தார்.

சித்ரா விவகாரத்தில் அமைச்சர் மகன்கள்! அதிமுக அமைச்சர்களின் பிள்ளைகளுக்கும் சின்னதிரை, பெரியத்திரை நடிகைகளை

மின்னம்பலம் : முல்லை கதாபாத்திரம் மூலம் மக்களிடையே புகழ் மணந்துகொண்டிருந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்குப் பின்னால் அவரது காதல் கணவர் ஹேமந்த் இருக்கிறார் என்று சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார்.

சித்ரா விவகாரத்தில் அமைச்சர் மகன்கள்!

போலீஸும் இந்த வழக்கில் ஹேமந்த்திடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில்.... சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியது, பதிவு திருமணம் செய்துகொண்ட கணவன்தான் என்று தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

“சின்னத்திரை, சினிமா நடிகைகளை பொருளாதார ரீதியாக நெருங்கி அவர்களை நம்ப வைத்து, பின் நடிகைகளிடமிருந்தே பணம் பறிப்பதை சிலர் திட்டமிட்டுச் செய்கிறார்கள். அப்படித்தான், சித்ராவையும் நெருங்கியிருக்கிறார் ஹேமநாத் என்கிற ஹேமந்த்.

ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு .. ஜெயலலிதா குறித்த விமர்சனம்

ஜெயலலிதா குறித்த விமர்சனம்: எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு
தினத்தந்தி :   ஜெயலலிதா குறித்த விமர்சனம்: எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்த‌தாக, திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் ஆகியோரின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

சுப்பிரமணியசாமி, செந்தில்பாலாஜி, செல்வகணபதி மற்றும் மைதீன்கான் மீது அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகள் ரத்து!

நக்கீரன் முதல்வர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக, சுப்பிரமணியசாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவரைப் பற்றியும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அரசு குறித்தும், அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், அவர்களுக்கு எதிராக, தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.தங்களுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எம்.பி, தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, எஸ்.ஆர்.பார்த்திபன், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், தி.மு.க. எம்.எல்.ஏ. மைதீன் கான், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

கமல் சீமான் கூட்டணியில் ஒவைசியும் உள்ளார் ? புதிய கூட்டணி உருவாகிறது?

டிஜிட்டல் திண்ணை: கமல்- சீமான் -ஓவைசி:   உருவாகிறதா புதிய கூட்டணி?

மின்னம்பலம்  :  மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.  "கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சென்னையில் போயஸ் கார்டனில் இருக்கும் தன் வீட்டு வாசலில் இருந்தபடி, ’உயிரைக் கொடுத்தாலும் என் வாக்கைக் காப்பாற்றுவேன். அரசியல் கட்சியை தொடங்குவேன். டிசம்பர் 31ஆம் தேதி இது பற்றி அறிவிப்பேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததற்கு பிறகு... தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக மட்டுமல்ல வளரும் கட்சிகளான பலவற்றிலும் ரஜினி அறிவிப்பின் தாக்கம் எதிரொலித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என்ற தனது விருப்பத்தை அவ்வப்போது கமல்ஹாசன் வெளிப்படுத்தி வந்தார். பிரசாரத்துக்கு செல்லும்போது பலரது வீடுகளுக்கும் செல்வேன்.என் நண்பனைத் தேடிச் செல்லாமல் இருப்பேனா என்றெல்லாம் கேட்டார் கமல். முன்னதாக கடந்த மார்ச்சில், ‘நான் முதலமைச்சர் இல்லை. இன்னொருவரை முதல்வர் ஆக்குவேன்’ என்று ரஜினி மாற்றுத்திட்டத்தை முன்வைத்த போது... அப்படி என்றால் ரஜினி முன்னிறுத்தும் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசனா என்றொரு கேள்வியும் எழுந்தது. ஆனால் அதற்குப் பிறகு ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்காக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போன கமல்ஹாசன் தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் என அறிவிக்கப்பட்டு இதோ இன்று பிரச்சாரக் களத்தில் இறங்கிவிட்டார்.

தென் மாநில எம்பிக்கள் தொகை குறைகிறது .. வடஇந்திய எம்பிக்கள் தொகை கூடுகிறது! புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பானிபூரி காலனியாதிக்கம்

2011 கணக்கெடுப்பின் படி , 'வடமாநிலத்தில் (பீகார், உபி,மபி,இராஜஸ்தான்) மொத்தமாக 22சீட்டுகளை பெறும். அதேசமயம் தென்மாநிலங்கள் (ஆந்திரா, தெலுங்கானா,கேரளா, தமிழ்நாடு) 17 சீட்டுகளை மொத்தமாக இழக்கும்'. இதுவே 2026க்கு கணக்கிட்டு பார்த்தால் பீகார் மற்றும் உபி மட்டுமே 21 சீட்டுகளை பெறும். கேரளா, தமிழ்நாடு மட்டும் 16 சீட்டுகளை இழக்கும். அதாவது மக்கள் தொகை அடிப்படையில் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' எனும் அளவில் தென்மாநில மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளா. ஆனால் வடக்கில் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்கிறது.

 Jose Kissinger : புதிய பாராளுமன்ற கட்டிடம் வடக்கு-தெற்கு அரசியல் இழுப்பறியை தூண்டுமா? 

பல்வேறு சர்ச்சைகள்/ வழக்குகள்/ எதிர்ப்புகளை தொடர்ந்து நாளை (டிசம்பர் 10,2020) புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு  அடிக்கல் நாட்டயிருக்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு 2000 கோடி ஒதுக்கீடு, 1000 கோடி ஒதுக்கீடு என பத்திரிக்கைகளில் வகைவகையாக செய்தி வந்ததையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் இத்திட்டம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை தெரிவித்தார். 
அதில் 971கோடி செலவில் மிக பிரம்மாண்டமாகவும் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் 2024க்குள் தயாராக இருக்கிறது புதிய பாராளுமன்ற கட்டிடம் என குறிப்பிட்டிருந்தார்.
இப்போதிருக்கும் பழைய கட்டிடம் விரைவில் வரலாற்று சின்னமாக அறிவிக்கப்பட்டு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல இருக்கிறது என்பதும் கூடுதல் தகவல். இக்கட்டிடத்திற்கான பிராஜக்டை டாடா நிறுவனம் எடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. 

சித்ரா மரணத்தில் காவல்துறை சந்தேக வளையத்தில் .. பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் (அதிமுக )

 

 புதுயுகம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ‘முல்லை’ என தமிழக மக்களால் அறியப்பட்ட நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன் தினம் அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் முகத்தில் காயங்கள், நகக்கீறல்கள் இருந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.  சித்ரா தற்கொலை செய்துகொண்டதை காவல் துறையும், முதற்கட்ட பிரேத பரிசோதனை தகவலும் உறுதி செய்துள்ளன. சித்ராவின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளை சைபர் கிரைம் காவல் துறையினர் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

தலித் சிறுவர்களை மலம் அள்ள வைத்த அவலம் ; சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

 

webdunia :சமீபத்தில் மத்திய அரசு,மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக்கூடாது என்ற சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி மனிதக் கழிவுகளை மனிதர்களை அள்ள வைப்பதோ சுத்தம் செய்ய வைத்தலோ தண்டனைக்குறிய குற்றம் என தெரிவிக்கப்பட்டது. 

 இந்நிலையில், இன்று பெரும்பலூர் மாவட்டம் சிறுகுடல் என்ற பகுதியில், விளையாட்டு மைதானத்தில் இருந்த சிறுவர்களை அள்ள வைத்துக் கொடுமை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன்படி பட்டியலின சிறுவர்களை மலம் அள்ள வைத்த இளைஞர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் காலமானார்! அம்மா உணவகத் திட்ட முன்னோடி மனிதநேயர் சுப்பிரமணியன்

Pugazharasi S = GoodReturns Tamil: கோயமுத்தூர்: இன்றைய காலகட்டத்தில் சாதரணமாக ஒரு தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் என்றால் கூட நாம் 20 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இன்றும் வெறும் 5 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் கோயமுத்தூர் மக்களுக்கு உணவு வழங்கிய வள்ளல் தான் சாந்தி கியர்ஸ் அமைப்பின் நிறுவனர். 

சொல்லப்போனால் தமிழகத்தின் அம்மா உணவகத்தின் முன்னோடி இவர் என்றே கூறலாம். ஏனெனில் அம்மா உணவகம் எல்லாம் ஆரம்பிக்கும் முன்பே, மக்களுக்காக இப்படி ஒரு மாபெரும் சேவையை வழங்கியவர். அப்படிப்பட்ட சாந்தி கியர்ஸ் பற்றி அறியாமல் இருக்க முடியாது. அதிலும் நீங்கள் கோயமுத்தூர் என்றால் அறியாமல் இருக்க முடியாது. ஏனெனில் இந்த காலத்தில் இப்படியொரு நிறுவனமா? என்று கேட்கும் அளவுக்கும், பிரமிக்கும் அளவுக்கும் உள்ள நிறுவனம். இந்த நிறுவனத்தின் கேன்டீன் மிகப் புகழ் பெற்றது கோவையின் சின்னம் சாந்தி கியர்ஸ் சொல்லப்போனால் தமிழக அரசு கூட அம்மா உணவகத்தை கடந்த 2013ல் தான் செயல்படுத்தியது. ஆனால் இந்த சாந்தி கியர்ஸ் தனது சேவையை கடந்த 2010லேயே தொடங்கி விட்டது. அதிலும் உணவு பொருட்களின் விலை அதிகரித்த வண்ணமே உள்ள நிலையிலும் கூட, சாந்தி கியர்ஸ் கேண்டீனில் வெறும் 5 ரூபாய்க்கு டிபனும், 10 ரூபாய்க்கு மீல்ஸூம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 11 டிசம்பர், 2020

ex மும்பை தாதா . ஆயுள் கைதியான தமிழர் - சொந்த ஊரில் மறுமலர்ச்சி வாழ்க்கை

மனம் திருந்தி வாழும் ஆயுள் தண்டனை கைதி - ஒரு நெகிழ்ச்சி கதை
கண்ணதாசன்

BBC :கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபரூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் கண்ணதாசன்(வயது 52). குடும்ப வறுமையின் காரணமாக கண்ணதாசனின் 11 வயதில், தாயார் பூங்காவனம் அம்மாள் தனது உறவினர்களுடன் அவரை வேலைக்காக மும்பை அனுப்பி வைத்துள்ளார்.

மும்பை தாராவி அருகே வசித்து வந்த இவர், அங்குள்ள உணவகம் ஒன்றில் தொடர்ந்து 6 வருடங்கள் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இணைத்து கவரிங் நகைகள் மற்றும் பொருட்கள் விற்றுவந்தார், நாளடைவில் அதே தொழிலைச் சொந்தமாகச் செய்யத் தொடங்கினர்.  அந்த நேரத்தில் அப்பகுதியில் ரௌடிகள் பலர் மாமூல் கேட்டு அங்குள்ள கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதேபோன்று இவர் சம்பாதிக்கும் பணத்தை மிரட்டி பிடுங்கும் செயலில் அந்த ரௌடிகள் ஈடுபட்டனர்.

கட்டு கட்டாக பணம்: சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்! .. பொறியாளர் தன்ராஜ்.

மின்னம்பலம் :மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் வீட்டில் கட்டுகட்டாகப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளராக பணியாற்றி வருபவர் தன்ராஜ். நாகை ஆண்டோ சிட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டில் நாகை மற்றும் திருவாரூர் பகுதிகளில் 50 நவீன அரிசி ஆலைகள் இயங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலைகளின் உரிமத்தை புதுப்பிக்க தன்ராஜ் லஞ்சம் பெற்று வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. திருவாரூர் சாமி மடதெருவைச் சேர்ந்தவர் துரைசாமி (58). இவர் தனது ஆலை செயல்பாட்டிற்கான, காற்று மற்றும் நீர் உரிமத்தைப் புதுப்பிக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.இந்நிலையில் ஆலையின் உரிமத்தைப் புதுப்பித்துத் தருவதற்கு 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு தன்ராஜ் துரைசாமியிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

வருமான வரி வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு!

 மின்னம்பலம் : வருமான வரித் துறை வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரத்தை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீ நிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை, அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய் என்ற வகையில் 2015ஆம் ஆண்டு விற்பனை செய்தனர்.நில விற்பனை வாயிலாக கிடைத்த, 7.37 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை என கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை 2018ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது எப்படி?

ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது எப்படி?
minnambalam :போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பினார் திமுக தலைவர் ஸ்டாலின்.தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 11) நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். அப்போது, மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்படவே அருகிலுள்ள ஆர்த்தோ அன்ட் நியூரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்டாலினுக்கு அங்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ரத்த அழுத்தம் குறைந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த ஸ்டாலின் பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தார். எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. இதனால் இரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்கள் 10 நிமிடம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லச் சொன்னார்கள். அதனால் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் திரும்பினேன். மற்றபடி ஏதும் இல்லை என்று பேட்டியளித்தார்.

நடிகை சித்ராவின் ஹோட்டலுக்கு வந்து போன அமைச்சர்? விடயத்தை மூடி மறைக்க முயற்சி?

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: நடிகை சித்ரா தற்கொலைக்கு யார் காரணம், என்ன காரணம் என்று 3 நாட்களாக விழிபிதுங்கி உள்ள நிலையில், சித்ராவின் கணவரும், சித்ராவின் அம்மா விஜயா இருவரும் தந்த மன அழுத்தமே காரணம் என்று போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர்.

 சித்ராவின் மரணம் நடந்து இன்றுடன் 3 நாட்களாகிறது.. சித்ராவுடையது கொலையா? தற்கொலையா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து வந்தது. சித்ரா கன்னத்தில் காயங்கள், தற்கொலைக்கான காரணம், திருமண சிக்கல்கள் இதையெல்லாம் வைத்து, பல்வேறு குழப்பங்கள், சந்தேகங்கள் நிலவி வந்தன. அனைத்துமே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரியவந்துவிடும் என்றும் நம்பப்பட்டது. இறுதியில், குடும்ப பிரச்சனை காரணமாகவே சித்ரா இந்த முடிவை எடுத்ததாகவும், இது கொலையல்ல, தற்கொலையே என்றும் முதல்கட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற அடுத்த கட்ட விசாரணையில் போலீசார் இறங்கினர்.  Image may contain: 3 people, text that says 'News18 Tamil Nadu 1d News18 Tamil Nadu 15m நடிகை சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் சிசிடிவி கேமராக்கள் வேலைசெய்யவில்லை- போலீசார் விசாரணையில் அதிர்ச்சி #CCTV #VjChitra See More சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் #MinisterJayakumar #vjchitra i f News18 Tamil Nadu நடிகை சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் சிசிடிவி கேமராக்கள் வேலைசெய்யவில்லை- போலீசார்... f News18 Tamil Nadu சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு அ...'

சாவடிச்சிட்டான் முன்னதாக, சித்ரா மரணத்துக்கு காரணம் என்னவென்று தெரிய வேண்டும் என்று அவரது அப்பா போலீசில் புகார் தந்திருந்தார்..

டெல்லியை முற்றுகையிட படையெடுக்கும் வெளிமாநில விவசாயிகள் - எல்லைகளில் பதற்றம்

BBC : இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான குழுவுடன் விவசாயிகள் ஐந்து சுற்று பேச்சுவார்த்தையும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் எந்த பலனையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், ஐந்து சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த வேளையில், திடீரென்று மத்திய உள்துறை அமைச்சர், குறிப்பிட்ட சில விவசாயிகளை அழைத்து சட்ட திருத்தங்கள் செய்வது பற்றிய முன்மொழிவை அனுப்ப ஏன் நடவடிக்கை எடுத்தார் என்று அகில இந்திய கிசான் சபா சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் போராட்டம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் அனைவரும் போாராட்டத்தை தீவிரப்படுத்துவதிலேயே குறியாக உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக கூறியுள்ளார். நரேந்திர சிங் தோமர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது நிராகரித்த ஒரு விஷயத்தை ஏன் மீண்டும் உள்துறை அமைச்சர் எழுப்ப முற்பட்டார் என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் : கொள்ளையர்கள், ரவுடிகள், கற்பழிப்பு காவாலிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?

Image may contain: 1 person, text that says 'மோடியின் முகத்திரையை நார்நாராகக் கிழிக்கும் தரமான கேள்விகள்! பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் சாட்டையடி கேள்விகளுக்கு சங் பரிவார கூட்டங்கள் திராணி இருந்தால் பதில் அளிக்கட்டும் பார்க்கலாம்! -பகிரங்க சவால்! facebook syedibrahim.m.s.official'
மோடியின் முகத்திரையை நார்நாராகக் கிழிக்கும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வஸந்தனின் தரமான கேள்விகள்..
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் சாட்டையடி கேள்விகளுக்கு சங் பரிவார கூட்டங்கள் திராணி இருந்தால்
பதில் அளிக்கட்டும் பார்க்கலாம்!
-பகிரங்க சவால்!
பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!
மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?
1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?
3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?
3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட...

தற்கொலைன்னு சொல்றத நம்பமாட்டேன்.. வேற ஏதோ நடந்திருக்கு.. சித்ரா உடலை பார்த்து கொந்தளித்த ஆசீம்

சைக்காலஜி படிச்சவ

வேற ஏதோ நடந்திருக்கு

tamil.filmibeat.com -  Mari S   : சென்னை: விஜே சித்ராவின் உடலை பார்த்த நடிகர் ஆசீம், இதை தற்கொலைன்னு சொன்னா நம்பமாட்டேன், வேற ஏதோ நிச்சயம் நடந்திருக்கு என கொந்தளித்த வீடியோ வைரலாகி வருகிறது. சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த சின்னத்திரை நடிகர்களையும் அதிரவைத்துள்ளது. 

 சித்ராவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் ஆசீம் கொந்தளித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. விஜய் டிவி பிரபலம் விஜய் டிவி பிரபலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் கனவு சீரியல் நடிகர் ஆசீம், விஜே சித்ராவின் நல்ல நண்பர். சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட தகவலை கேட்டு ரொம்பவே ஷாக்கான அவர், விஜே சித்ராவின் இறுதிச்சடங்கிலும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். தற்கொலைக்கு எதிரானவள் தற்கொலைக்கு எதிரானவள் தற்கொலை எண்ணத்திற்கு ரொம்பவே எதிரானவள் சித்ரா என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. அவரது முகத்தில் எப்படி கீறல் ஏற்பட்டது. சித்ராவின் மரணத்தில் நிச்சயம் மர்மம் இருக்கிறது என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். 

அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகள்.... ஏன்?

  Maha Laxmi : · விவசாயிகள் மட்டுமின்றி, உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..

 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 

2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..?

3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும்.
4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..??
5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..??
6️⃣ PDS system என்னாவது ..??
7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..??

திராவிட இயக்கத்தின் கடைசி காலம்... ரஜினி சகோதரர் சத்தியநாராயணன்!

nakkheeran.in - ராஜ்ப்ரியன் : < புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயில் அய்யன்குளக் கரையில் அமைந்துள்ள அருள்மிகு அருணகிரி நாதர் திருக்கோயிலில், நடிகர் ரஜினிகாந்த்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘மிருத்தியஞ்ஜெய’ ஹோமத்தை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் ஏற்பாட்டில், 10 சிவாச்சாரியார்கள் நடத்தினர். அதோடு அருணகிரி நாதருக்கு அபிஷேக ஆராதனையும் நடத்தினார் சத்யநாராயணன். இதில் நேரடியாகக் கலந்துகொண்டார் சத்தியநாராயணன்.Rajini's brother Satyanarayanan visit thiruvannamalai temple

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சத்தியநாராயணன், “திராவிடக் கட்சியினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களின் கடைசிக் காலமிது. ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்படும். கட்சியைப் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்சியைப் பதிவு செய்வதற்கு, தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதி தரவில்லை. அனுமதி கிடைத்ததும், கட்சி பதிவு செய்யப்படும். பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கட்சியில் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு, ரஜினிகாந்த் ஜனவரியில் பதிலடி கொடுப்பார்” எனத் தெரிவித்தார்.

"கச்ச தீவு" காமராஜர் இந்திராவிடம் எதிர்வாதம் செய்தாரா? நெடுமாறனின் பங்கு என்ன?

Tha Mu : கட்ச தீவு 1974 - யார் யார் என்ன செய்தார்கள்? (கருணாநிதி, காமராஜர், நெடுமாறன், MGR , ஜெயலலிதா ) கட்ச தீவு 1974 ல் இந்திரா காந்தியால் திடீரென ஒரு நாள் இலங்கைக்கு விட்டு கொடுக்க பட்டது. 

கையெழுத்திட்ட பிறகுதான் மீடியாவுக்கே தெரிய படுத்த பட்டது.    இது இந்திரா காந்தியால் தன்னிச்சையாக எடுக்க பட்ட முடிவு.     பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலையோ, மாநில அரசின் ஒப்புதலையோ பெறாமல் எடுக்க பட்ட முடிவு.    கலைஞர் கருணாநிதி - இதை எதிர்த்து திமுக தமிழகம் முழுவதும் போராடியது. கலைஞர் கருணாநிதியினால் சட்ட பேரவையில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இந்திரா காந்தியிடம் கடும் கண்டம் தெரிவிக்க பட்டது. அதன் விளைவாக சில திருத்தங்கள் செய்ய பட்டன.

1974 ல் காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவர். இந்திரா காந்தியின் மிக நம்பிக்கையானவர். நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினர். அப்போதுதான் இந்திரா காந்தி காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார்.
காமராஜரும் இந்திரா காந்தியை எதிர்த்து கட்ச தீவுக்காக போராட வில்லை. இவரைத்தான் கர்ம வீரர் கூறி வருகிறோம்.
காங்கிரஸின் தேசிய தலைவர் காமராஜர் அன்று இந்திரா காந்தியை எதிர்த்து போராடியிருந்தால் பிரதமர் இந்திரா காந்தி நிச்சயம் தன் முடிவை மாற்றியிருப்பார்.

மு.க.அழகிரி: `வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் நடிப்பேன்!’ - குழப்பத்தில் ஆதரவாளர்கள்

மு.க.அழகிரி
 vikatan - செ.சல்மான் பாரிஸ் - ஈ.ஜெ.நந்தகுமார் :`ரஜினி புதிய கட்சி தொடங்கவிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்றதற்கு , ``அவர் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தவுடன் வாழ்த்து தெரிவித்துவிட்டேன்’’ என்றார்.

``புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, தேர்தலில் ஓட்டுப்போடுவது என எனது பங்களிப்பு இருக்கும்...'' என்கிறார் மு.க.அழகிரி.    தனது ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழகர் கோயில் பகுதிக்கு வந்த மு.க.அழகிரி, செய்தியாளர்களிடம் பேசினார். ``சட்டமன்றத் தேர்தலில் தங்களது பங்களிப்பு எப்படியிருக்கும்?'' என்ற கேள்விக்கு, ``சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, ஓட்டுப்போடுவதும் பங்களிப்புதான்" என்றவரிடம்,  

`ரஜினியுடன் கூட்டணிவைப்பீர்களா?’ என்றதற்கு,     ``வாய்ப்பு கொடுத்தால் அவருடன் நடிப்பேன்” என்றார் காமெடியாக.   `ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனைக் கூட்டம் நடத்துவீர்கள்?’ என்ற கேள்விக்கு, ``ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்திவருகிறோம்" என்றார்.

வியாழன், 10 டிசம்பர், 2020

சித்ராவின் மரணத்தில் ..... போயும் போயும் இப்படி ஒருவனுக்காக நீ இறந்திருக்க கூடாது

  Neelamegam S
: சித்ராவின் மரணத்தில் இத்தனை பேருக்கு பங்குண்டா.?! இதோ தற்கொலைக்கு உண்மை காரணம்.?! - #செய்திப்புனல் சானலின் அதிகாரப்பக்கத்தில் நான் எழுதியது. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தான் தற்போது பலராலும் பேசப்படுகின்ற பரபரப்பான விஷயமாக உள்ளது.
மிகவும் தைரியமாக, தெளிவாக சிந்திக்க கூடிய பெண் சித்ரா எதற்காக அவர் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மர்மமாக உள்ளது. நேற்று சித்ராவின் தோழி ரேகா நாயர் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சித்ராவின் காதலன் ஹேமந்த் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
ஹேமந்த் அவரது தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் எப்படி இருந்தார் என்பதை விட, சித்ராவுடனான உறவில் அவர் எப்படி இருந்தார் என்பதை ரேகா நாயர் கூறியது தான் தற்போது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். பெரும்பாலும் காதலிக்கும் பல பெண்களும் சந்திக்கும் விஷயம் தான் இது. ஆண் நண்பரால் உரிமை, காதல், பொறாமை என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்படும் அதிகார வன்முறைகள்.

வா.செ.குழந்தைசாமி !அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்துடன் வளர இவரே காரணம்!

வா.செ.குழந்தைசாமி
வா.செ.குழந்தைசாமி
   madrasradicals.com : வா.செ.குழந்தைசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு கரூர் மாவட்டத்தில் காவிரியின் தென்கரையிலுள்ள வாங்கலாம்பாளையத்தில் 14.7.1929 அன்று பிறந்தவர் வா.செ.குழந்தைசாமி. காரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். நீர்வளத்துறை ஆய்வு அமெரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை ஆய்விலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு ’குழந்தைசாமி மாதிரியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராய்

பிறகு தமிழகம் திரும்பி, சென்னை கிண்டி பொறியியற் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக ஆய்வுப்பணி மற்றும் கற்பித்தலை மேற்கொண்டார். தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பொறுப்பை சிறப்பாகச் செய்தார். அதன் பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். 

ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி! நோயாளிகளுக்கு மோடி அரசின் அடுத்த ஆப்பு ..

Asiriyar K Veeramani : · மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேதத்திற்கு இடம்கொடுப்பது வருணாசிரமப் பார்வையே! 

அலோபதி அறுவை சிகிச்சை முறையில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில் பின்னோக்கிப் பயணிப்பதை கைவிடவேண்டும்! டாக்டர்கள் எதிர்ப்புப் போராட்டம் நியாயமானதே! மத்திய அரசின் நல்வாழ்வுத் துறை, ‘நீட்’ தேர்வைப் பிடிவாதமாகத் திணிப்பதற்குச் சொல்லப்படும் ஒரு காரணம் தரமான மருத்துவர்களை உருவாக்கவேண்டும்; நோயாளிகளின் உயிரோடு விளையாடக் கூடாது என்பது மிகமிக முக்கியம் என்று ஒருபுறம் கூறிக் கொண்டே, மறுபுறத்தில்...! கண்டனத்துக்குரிய கேலிக் கூத்து! ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கான தகுதியுண்டு என்று ஒரு மருத்துவ விதிகளை மாற்றி, மிக்சியோபதி (Mixopathy) என்று பெயர் கொடுத்திருப்பதைவிட கண்டனத்திற்குரிய கேலிக்கூத்து வேறு இல்லை!    ஆயுர்வேதத்தின்மீது - மற்ற பிரிவுகளை (சித்த வைத்தியம், யுனானி போன்றவற்றின்மீது காட்டாத தீவிர ஆர்வம்)விட அதிகமான அதீத அக்கறை காட்டுவதற்கு மூலகாரணம், அது சமஸ்கிருத கலாச்சாரத்திலிருந்து உருவான ஒன்று என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கை அஜெண்டாதான் என்பது உலகறிந்த ரகசியம்!

அடுத்த கட்டம் ரயில் மறியல்: விவசாயிகள் அறிவிப்பு!

மின்னம்பலம் : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இன்று (டிசம்பர் 10) 15 ஆவது நாளாக தலைநகர் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

இன்று, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு மத்திய அரசு அனுப்பிய திருத்த வரைவுகளை மீண்டும் பரிசீலிக்குமாறு வலியுறுத்தினார், அவர்களுடன் மேலதிக விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். "விவசாயிகளுக்கு புதிய சட்டங்களில் இருக்கும் எந்தவொரு பிரச்சினை பற்றியும் திறந்த மனதுடன் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது, அவர்களின் அச்சங்கள் அனைத்தையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று தோமர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சித்ராவின் உடலை பார்த்து கதறிய திரை உலகம்

நக்கீரன் : விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். இந்தநிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படிப்பிடிப்பு தொழிலாளர்கள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் சித்ரா உடலை பார்த்து கதறி அழுதனர்

நடிகை சித்ரா அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் . சித்ராவின் தாய் குற்றச்சாட்டு

மாலைமலர் : தனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம் என சித்ராவின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
எனது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - சித்ராவின் கணவர் மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
சித்ரா, ஹேம்நாத், சித்ராவின் தாயார்
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.  அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சித்ராவின் தாயார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.         அப்போது அவர் கூறியதாவது: எனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்றும் தைரியமானவர் எனவும் அவர் தெரிவித்தார். சித்ரா தாயாரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறுபுறம் சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் முதல் 10 பணக்கார சாமியார்களின் சொத்து மதிப்பு பட்டியல்.

Surya Thozhar : இந்தியாவின் முதல் 10 பணக்கார சாமியார்களும் அவர்களின் சொத்து மதிப்பு பட்டியல்.
1.ஆச்சார்யா பாலகிருஷ்ணா-17,000 கோடி


2 நித்தியானந்தா- 10,350 கோடி
3.ஜக்கி வாசுதேவ்- 6,300 கோடி
4.பாபா ராம்தேவ் - 4,500 கோடி         
5.டபுள்ஸ்ரீ ரவிசங்கர்- 3,500 கோடி
6. பால் தினகரன் - 2,200 கோடி
7. அமிர்தானந்தமாயி - 1,500 கோடி
8. ஆசாராம்பாபு - 900 கோடி
9. குர்மீத் ராம் ரஹீம் சிங் - 700 கோடி
10. அவதூத் சிவானந்த் மகாராஜ் - 400 கோடி
இதில் குர்மித் ராம் ரஹீம் சிங்கும், ஆசாராம் பாபுவும் பாலியல் பலாத்கார குற்றத்திற்காக சிறையில் உள்ளனர்.
நித்தியானந்தா வெளிநாடு தப்பி ஓடியாச்சி..
இப்போது ராம்தேவ் ஓடத் தயாராகிறான்...
Surya Thozhar

செட்டிநாடு குழுமத்தில் நடந்த ஐ.டி ரெய்டு: கணக்கில் வராத ரூ.7 கோடி பறிமுதல்!.. 4 மாநிலங்கள்...

பறிமுதல் செய்யப்பட்ட பணம் vikatan.com - துரைராஜ் குணசேகரன் : செட்டிநாடு குழுமங்களில் வருமானவரித் துறையினர் இன்று நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஏழு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.>தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இதில், கணக்கில் வராத ஏழு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கரூர், அரியலூர், கோவை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.    செட்டிநாடு குழுமம் வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனையை வருமான வரித் துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகிறது. சோதனை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், கணக்கில் வராத ஏழு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது. அதோடு, சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனையானது நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் சோதனை முடிந்த பிறகுதான் விரிவான தகவல்கள் தெரியவரும்.<

வீடுகளை அகற்ற எதிர்ப்பு: கூவத்தில் இறங்கி போராட்டம்!

 வீடுகளை அகற்ற எதிர்ப்பு: கூவத்தில் இறங்கி போராட்டம்!

minnambalam.com :சென்னை சத்தியவாணிமுத்து நகரில் குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று (டிசம்பர் 9) கூவம் ஆற்றில் இறங்கி 15 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தையில் நடத்திய பிறகு ஆற்றில் இருந்து வெளியேறினர்.

ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தலைநகரான சென்னையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி, ஊரக உள்ளாட்சி துறை இணைந்து, மழை நீர் தேங்காமல் இருப்பதற்கும், வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்கும் முன்கூட்டியே பணிகளைத் தொடங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவர்.

.மூதறிஞர் ராஜாஜி அவர்களின் பிறந்த நாள்.. உண்மையில் ராஜாஜி யாருக்கானவர்?

Kandasamy Mariyappan
: · .மூதறிஞர் ராஜாஜி என்ற திரு.ராஜகோபால் அவர்களின் பிறந்த தினமாம் இன்று.
திரு.ராஜாகோபால் அவர்கள் சிலகாலம் சென்னை மாகாண முதல்வராகவும், இந்திய ஒன்றியத்தின் கவர்னர் ஜெனரலாகவும் இருந்த பொழுது ஹிந்தியை தமிழ்நாட்டில் திணித்தார்.
பின்பு முதலமைச்சராக இருந்த பொழுது குலக்கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் திணித்து, நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கிய ஏறத்தாழ 6000 பள்ளிகளை இழுத்து மூடினார்...
திருப்பதி, சித்தூர், குடகு, பாலக்காடு, மூணாறு, தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளை திரு. காமராஜருடன் இணைந்து பக்கத்து மாநிலங்களுக்கு தாரைவார்த்தார்.
மேலும், தனது தேசப்பணியைப் பாராட்டி சென்னையில் இருக்கும் கவர்னர் மாளிகையை தன் பெயரில் அரசாங்கம் எழுதித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்!   அவரின் அந்த பேராசை நிறைவேறவில்லை.
அவரை நினைவுகூற அவரால் பயனடைந்த அவரது இனத்திவர்கள் இல்லை என்றாலும்......!!!   நாம் அவரது பிறந்தநாளை நினைவு கூர்வோம்.

அன்னா ஹஸாரேயால் யாருக்கு லாபம்?

 

puthiyamugam.com - ஆதனூர் சோழன் : விவசாயிகளின் போராட்டம் இந்தியா முழுவதும் பரவவேண்டும் என்று கூறியபடி, உண்ணாவிரத நாடகத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் அன்னா ஹஸாரே என்ற ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பர் செல். இவர் கடந்த காலத்தில் சாதித்தது என்ன? யாருக்காக இவர் ஊழல் எதிர்ப்பு நாடகத்தை நடத்தினார் என்ற பிளாஷ்பேக்கை அறிந்து கொள்வது நல்லது.    பிரதமர் உள்பட அனைவரையும் விசாரிக்கும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும், என்று ஊழல் ஒழிப்பு நாயகராக மீடியாக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர் அன்னா ஹஸாரே.

காங்கிரஸ் ஆட்சியின் கடைசி ஆண்டில் அந்த அரசுக்கு எதிராக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் வருவாய் இழப்பு, ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் என்று பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன.    ஊழல் ஒழிப்புப் போராளி வேடத்துக்கு அன்னா ஹஸாரே என்பவரை தேர்வு செய்து டெல்லி ஜந்தர் மந்தரில் உட்கார வைத்தார்கள். அவருக்கு ஆதரவாக மைதானத்திலும் மேடையிலும் கட்டாயமாக அமர்ந்து தேசப்பற்றையும், ஊழல் எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் பலருக்கு இருந்தது. ஆனால், அன்னா ஹஸாரே பாஜகவுக்கு சாதகமாக கார்பரேட்டுகளால் களம் இறக்கப்பட்டவர் என்ற உண்மை அந்தச் சமயத்தில் மக்களுக்கு போய் சேரவில்லை.

புதன், 9 டிசம்பர், 2020

ஈழக்கவிஞர்கள்/கலைஞர்கள் அறம்பாடுதலை கைவிட்டு பிஸ்னஸ்மேன்களாகி .. ஆனந்தவிகடன் மகா புழுகு

Image may contain: 1 person
வ.ஐ.ச. ஜெயபாலன்

ட்சத்திரன் செவ்விந்தியன் : வ.ஐ.ச. ஜெயபாலன் இளமையில். ஈழக்கவிஞர்கள்/கலைஞர்கள் அறம்பாடுதலை கைவிட்டு வெகுகாலம். பிஸ்னஸ்மேன்களாகி விட்டார்கள். 1✍சென்ற ஆண்டு வந்த ஆனந்தவிகடன் பேட்டியில் கவிஞர் தன் மூதாதையர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராடியவர்கள் என்று மகா புழுகு செய்திருக்கிறார். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப்போராடியது உண்மை. ஆனால் ஈழத்தில் சிங்களவர்களோ தமிழர்களோ ஆங்கில காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடியதில்லை என்பது வரலாறு. காந்தி, நேரு போல விடுதலைப்போராட்ட தியாகிகள் யாரும் ஈழ வரலாற்றில் இல்லை. ஆங்கிலேயர் பக்கா சமர்த்தர்கள். ஈழத்து உள்ளூர் சட்டங்களை, மதங்களை மதித்து உள்ளூர் ஆதிக்கசாதிகளோடு இணங்கி ஆட்டையைப்போட்டார்கள். ஜெயபாலன் பொய்யைச் சொல்லும்போது பொருந்த சொல்லியிருக்கலாம்.

செம்மொழி ஆராய்ச்சி நிறுவன சீரழிவுக்கான காரணங்கள் என்ன...?

Image may contain: outdoor
  சாவித்திரி கண்ணன் : · செம்மொழி ஆராய்ச்சி நிறுவன சீரழிவுக்கான காரணங்கள் என்ன...? தமிழைப் போன்ற தலைசிறந்த மொழியும் இல்லை தமிழைப் போல அரசியல்படுத்தி, அலட்சியப்படுத்த ப்பட்ட மொழியும் உலகில் வேறில்லை! உலகின் ஆறு செம்மொழிகளில் ஒன்றான தமிழை செம்மொழியாக அறிவிக்கவைக்க ஒரு அரசியல் அழுத்தம் தேவைப்பட்டது! அந்த அரசியல் அழுத்தமே இன்றைய அதன் அலட்சியத்திற்கும் காரணமாயிற்று! தமிழை செம்மொழியாக்கியது அதன் தகுதியால் மட்டுமல்ல, அரசியல் அழுத்ததால் தான் அது சாத்தியமாயிற்று என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது! ஆகவே, அது போன்ற அழுத்ததை தெலுங்கு, கன்னட,மலையாளம்,ஒடியா மொழி அரசியல்வாதி களும் செய்து செம்மொழி அந்தஸ்து பெற்ற அவலம் நடந்தேறியது! செம்மொழிக்கான ஆராய்ச்சி, அதன் சிறப்புகளை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வது என்ற வகையில் தேசிய அளவிலான ஒரு நிறுவனமாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது தான் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம்!
ஒரு பக்கம் சமஸ்கிருத ஆதரவாளர்களின் பொறாமை உணர்ச்சி, மறுபக்கம் மற்ற தென்னிந்திய மொழியினரின் பொறாமை உணர்ச்சி இவற்றுக்கிடையில் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலகத்தை சென்னையில் நிறுவுவதற்கே இரு ஆண்டுகள் போராட்டம் தேவைப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆ. ராசா பகிரங்க கடிதம்

ஆ.ராசா கூப்டா போணுமா ? வெடிக்கும் எடப்பாடி பழனிசாமி | EPS Vs A Rasa |  MadhimugamTV - YouTube
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அவர்கள் இன்று (9.12.2020), செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிட்ட திறந்த மடல்.
மதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு,
வணக்கம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் - மத்திய அமைச்சராக பணியாற்றி 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்மீதும் கடந்த 03.12.2020 அன்று தொலைக்காட்சியில் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறும் விதமாக அதேதேதியில் நானும் ஊடகங்களை சந்தித்து யார் ஊழல்வாதி, எந்த கட்சி ஊழல் கட்சி என்பதை பகிரங்கமாகவும் பட்டவர்த்தனமாகவும் ஆதாரத்தோடு குறிப்பிட்டு தி.மு.கழகத்தின் மீது தாங்கள் தெரிவித்த வீராணம், சர்க்காரியா, 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லையென்றும், ஆனால் உங்களால் ‘அம்மா’ என்று சுயநலக் காரியங்களுக்காக அழைக்கப்படும் ஜெயலலிதா அவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர் என்றும், அவர் சிறை செல்ல காரணமாக இருந்த கீழமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் குன்கா அவர்களின், தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்றும், எனவே ‘அம்மா’ வழியில் தங்கள் ஆட்சி நடைபெறுவதாக கூறுவது ஊழல் செய்ய அனுமதியும் - அங்கீகாரமும் கேட்கும் வெட்கமற்ற செயல் என்றும் கூறியதோடு, இதுகுறித்து விவாதித்து உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த என்னை கோட்டைக்கு அழையுங்கள் என்று வேண்டியதோடு, அப்போது உங்கள் அமைச்சரவையையும் - உங்களின் எஜமான மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலையும் - மாநில அட்வகேட் ஜெனரலையும் அழையுங்கள் என்று பகிரங்க சவால் விட்டிருந்தேன்.

கமலஹாசன்களும் கலைப்படைப்புகளை பறிகொடுத்த ராபின் வில்லியம்சுகளும்

Kamal Hassan Mourns | Robbin Williams Death - Filmibeat
Kamal Haasan: Robin Williams brought dignity to male tears - Rediff.com  movies
( Mathimaran V Mathi : 1h · ரஜினி ஸ்டாராக உயர்வதற்கு தமிழ் சினிமாவை சூறையாடினார். சினிமாவில் ரஜினி உயர்ந்தார். சினிமா தாழ்ந்தது. உலகத் தரத்திற்கு சினிமா என்று பேசுகிறவர்கள்தான் உலக சினிமாவை காப்பியடிக்கிறார்கள். அதை துவக்கி வைத்தது கமல்தான்.)

  Mrs. Doubtfire  படத்தில் நடித்த ராபின் வில்லியம்ஸ் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார் .ஒரு மிகப்பெரிய ஹாலிவூட் நடிகர் இப்படி ஒரு முடிவை எடுத்தது மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவமாகும் இதுபற்றி தமிழக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் எல்லாம் ஒரு பாட்டம் அழுது சீன் காட்டியது .
இதில் பல ஊடகங்கள் ராபின் வில்லியம்ஸின் இறப்பு பற்றிய இரங்கல் செய்திகளையும் அவர் பற்றிய மேலதிக விபரங்களையும் கமல ஹாசனிடம் மிகுந்த பக்தி சிரத்தையோடு கேட்டு ரசிக மகா ஜனங்களுக்கு தெரியப்படுத்தின .
Mrs. Doubtfire படத்தில்  ராபின் வில்லியம்ஸ் நடித்த ரோலில் கமல ஹாசனும் அவ்வை சண்முகம் படத்தில்  நடித்து தூள் கிளப்பினார் என்று பெருமையாக புராஜெக்ட் பண்ணினார்கள் . கமலஹாசனும் அதற்கு ஏற்றாற்போல் நல்மொழிகள் பல கூறி இரங்கல் தெரிவித்தார்
இது எவ்வளவு பெரிய மோசடி ? ஒருவன் ஒரு வீட்டில் திருடி விட்டான் . சில நாட்களின் பின்பு அந்த திருட்டு போன வீட்டின் உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார் . அதன் பின்பு அந்த வீட்டில் திருடியவரிடமே போய் அந்த வீட்டுக்காரர் பற்றிய இரங்கலையும் அனுபவங்களையும் கேட்டு சோகத்தை கொண்டாடும் ஊடகங்கள் எவ்வளவு கேவலமானவை கோமாளித்தனமானவை?

இலங்கையில் 300 மில்லியன் டாலர் முதலீட்டில் சீனாவின் டயர் தொழிற்சாலை

 Sri Lanka, china 300 million dollar investment in sri lanka, இலங்கையில் சினாவின் டயர் தொழிற்சாலை, இலங்கை, சீனா, Chinese tyre factory in sri lanka

tamil.indianexpress.com : இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகம் அருகே 300 மில்லியன் டாலர் மதிப்பு முதலீட்டில் (ரூ.2,210 கோடி) அந்நாட்டில் சீனா மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை அமைக்கிறது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளும், பிராந்திய சக்தியான இந்தியாவும், இலங்கையின் சாலை உள்கட்டமைப்பு முயற்சி திட்டங்கள் மூலம் இலங்கையில் சீனா செல்வாக்கு குறித்து நீண்டகாலமாக கவலை கொண்டுள்ளன.    ஹம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு அருகே இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த துறைமுகம் சீன நிறுவனத்திற்கு 2017ம் ஆண்டில் குத்தகைக்கு விடப்பட்டது. அதை கட்டியெழுப்ப இலங்கை பெய்ஜிங்கிடம் இருந்து 1.4 பில்லியன் டாலர் கடனைக் கட்டத் தவறியதால் சீனா டயர் தொழிற்சாலையை அமைக்க பயன்படுத்திக்கொண்டுள்ளது.

பாஜக அலுவலகங்கள் முற்றுகை: விவசாயிகளின் அடுத்த கட்டப் போராட்டம்!

minnambalam :மத்திய அரசின் வேளாண் பண்ணை சட்டங்களை எதிர்த்து 14 ஆவது நாளாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள், இன்று (டிசம்பர் 9) மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியதை நிராகரித்தனர்.

நேற்று விவசாய சங்க பிரதிநிதிகள் அதிகாரபூர்வமற்ற வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் இன்று (டிசம்பர் 9) சட்டங்களை திருத்துவதற்கான வரைவு முன்மொழிவுகளை அரசுத் தரப்பு விவசாய சங்கத்தினருக்கு அனுப்பியது.    அதைப் பெற்ற சில மணி நேரங்களுக்குள், உழவர் தொழிற்சங்கங்கள் அதை தெளிவற்றவை என்று கூறி நிராகரித்தன. மேலும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். டிசம்பர் 12 ஆம் தேதி ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையைத் தடுப்போம் என்றும் விவசாய சங்கத்தினர் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கொரோனா

maalaimalar " சன்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் அவதூறாக பேசியதாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுவரை ஏன் கர்ணனை கைது செய்யவில்லை? என அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

இதையடுத்து சென்னை ஆவடியில் இருந்த முன்னாள் நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த கர்ணனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா? முகத்தில் 2 இடங்களில் காயம் - போலீசார் தீவிர விசாரணை

முகத்தில் 2 இடங்களில் காயம்: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா? - போலீசார் தீவிர விசாரணை

 .dailythanthi.com :  தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல ஓட்டலில் சித்ரா தங்கி இருந்தார். இவரது வீடு திருவான்மியூரில் உள்ளது. தினமும் அங்கிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன்படி தினமும் ஓட்டலில் இருந்து சென்று படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்தார்.

செயற்கை இதயம் .. ஒரு பயணப்பையில் .. லண்டனில் ஒரு விஞ்ஞான சாதனை

செல்வா ஹூசைன்
Arivazhagan Kaivalyam : · ஒரு பயணப்பை என் கைகளில் இருக்கிறது, என்னுடைய மாற்றுத் துணிகள், மடிக்கணினி இன்னும் சில பொருட்கள், அதுதவிர நினைவுகளை சுமந்து கொண்டு உடல் நகர்கிறது, நிலம் பின்னோக்கி நகர்வதாக உணர்கிறேன். வீட்டை விட்டுப் பயணிக்கிற நாட்கள் பிரிவின் அழுத்தத்தை உணர வைக்கிறது, ஆனால், பிரிவு ஒரு சுழற்சி, அது நம்மைப் பின் தொடர்ந்து வருகிறது, மனிதர்கள் தினந்தோறும் எதையேனும் பிரிய வேண்டியிருக்கிறது. பயணங்களில் எல்லோரது கைகளிலும் ஒரு பை இருக்கிறது, பயணிக்கிற குடும்பங்களின் உறுப்பினர்களைப் போலவே அவை நகர்கின்றன, மறந்து விட்டுப் போகிற பைகள் திடுக்குற வைக்கின்றன. பெரிய பைகள் நீண்ட பயணங்களுக்காக வீடுகளில் காத்திருக்கின்றன. பைகள் அத்தனை முக்கியத்துவம் கொண்டவை இல்லைதான், அவற்றைக் குறித்து இந்த இரவில் நான் நீட்டி முழக்க வேண்டிய தேவை இல்லை. 
ஆனால், ஒரு பெண் தன் கையில் எப்போதும் வைத்திருக்கிற பையைப் பற்றிப் படித்த பிறகு நான் இப்படி பைகளை உற்றுப் பார்க்கிறவனாக, அதைப் பற்றி எழுத வேண்டும் என்கிற பரபரப்புக் கொண்டவனாக இருக்கிறேன்.

காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டி விடும் பாகிஸ்தான்

.dinamalar.com புதுடில்லி : பஞ்சாபில், மறைந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேவின் உறவினர் லக்பீர் சிங் ரோடேவை பயன்படுத்தி, காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்ட, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., முயற்சித்து வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில், 1980ம் ஆண்டுகளில், காலிஸ்தான் பயங்கரவாதம் மிக தீவிரமாக இருந்தது. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பிந்தரன்வாலே, 1984ல், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவம் நடத்திய, 'ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்' நடவடிக்கையில் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பிரதமர் இந்திரா, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பெண்களை இழிவுபடுத்தி அவதூறு பரப்பியதாக ஆ.ராசா மீது புகார்!

nakkheeran.in - அதிதேஜா : மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பும் நோக்கோடு பேசியதாக, தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் தலைமையில், வீடியோ ஆதாரங்களுடன் டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளனர்.பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், தனி மனித ஒழுக்கமின்றி உண்மைக்கு மாறான செய்திகளைப் பொதுமக்களிடையே அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்டதாகவும் கூறி, ஆ.ராசா மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி, வீடியோ ஆதாரங்களுடன், டிஜிபியிடம் அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச் செயலாளர்கள் திருமாறன், செல்வகுமார் தலைமையில் 6 பேர் புகார் அளித்துள்ளன

டெல்லி விவசாயிகள் போராட்டம்: அமித் ஷா பேச்சுவார்த்தை தோல்வி... சங்கங்கள் இன்று ஆலோசனை

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! இந்திய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.) விவசாய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ம் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே நேற்று பல மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி மாநில எல்லைப் பகுதிகளில் பல்லாயிரம் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். அமித் ஷா அழைப்பின்பேரில், நேற்று, செவ்வாய்க்கிழமை மாலை இரவு 7 மணிக்கு அமித் ஷாவுக்கும் 13 வெவ்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

 Border Collie

dinamalar.com : பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(29), சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.        விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கென் தனி ரசிகர் வட்டம் உள்ளது. கடந்த ஆக., மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமண தேதியை முடிவு செய்யவிருந்தார்.    இந்நிலையில், சென்னையை அடுத்த நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் எட்டுவழிச் வழிச்சாலையைத் தொடரலாம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

Image may contain: 1 person, text
M. K. Stalin : · சேலம் எட்டுவழிச் வழிச்சாலையைத் தொடரலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைக்கவில்லை! பா.ஜ.க. அரசு நிறைவேற்றியே தீருவோம் என வாதிட்டது! இதுவே உயர்நீதிமன்றத் தீர்ப்பு ரத்தாகக் காரணமாகிவிட்டது! பா.ஜ.க., அ.தி.மு.க., அரசுகளுக்கு மக்கள் மன்றம் பாடம் புகட்டும்! எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் திரு. பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!

ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?


  madrasradicals.com : உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா
அங்கீகரிக்கபட்டு வருவதற்குக் காரணம் இங்கு பின்பற்றப்படும் தேர்தல் முறைதான். பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படுகிறது என்னும் பிம்பம்தான் இந்த ஜனநாயக சொல்லை நாம் தூக்கிக் கொண்டாட அனுமதிக்கிறது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு சமமானது என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது. ஆனால் மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இந்த போக்கு தேர்தல் நடைமுறையின் சுதந்திரத்தையும் நேர்மையையும் பலவீனப்படுத்தும்.

இந்தியாவில் ஒரே தேர்தல் முறை ஏன் ஒழிக்கப்பட்டது?

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் வெவ்வேறு காலங்களில் தனித்தனியாக வாக்களிக்கும் நடைமுறையை நீக்கிவிட்டு, இரண்டும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். 

புலியை ஓட, ஓட விரட்டிய யானை – வைரலாகும் வீடியோ

  sathiyam : கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள நாகர்ஹோலே வனப் பகுதியில், புலி ஒன்று குளத்தில் நீராடி கொண்டிருந்த போது அந்த வழியாக காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. புலியை பார்த்ததும் யானை விரட்டத் தொடங்கியது. இதில் மிரண்டு போன புலி காட்டுப்பகுதிகளில் ஓடி தலைமறைவானது. இந்த அரிய காட்சியை அந்த பகுதியில் சுற்றுலா சென்ற சுற்றுலா பயணி தன் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

இலங்கை வல்லிபுரம் புத்தர் சிலை! திராவிட பாரம்பரியம்... வல்லிபுரம் பொன்னேடு Vallipuram Gold Plate தமிழ் பௌத்ததின் ஆதிமூலமா?

இலங்கை வடமராட்சியில் பருத்திதுறைக்கு அருகாமையில் உள்ள வல்லிபுரம் பிரதேசத்தில் 1902 ஆம் ஆண்டுவரை இங்கே காணப்படும் இந்த புத்தர் சிலை இருந்திருக்கிறது . அதன் பின்பு இந்த சிலை யாழ்ப்பாண பழைய பூங்காவில் உள்ள ஒரு அரச மரத்தின் கீழே வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் 1906 ஆம் ஆண்டு அப்போதைய கவர்னர் சர் ஹென்றி பிளேக் என்பவரால் சியாம் (தாய்லாந்து) மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது. அதற்கு பின் இந்த சிலை பற்றி மக்கள் மறந்தே விட்டார்கள் .. அப்போதெல்லாம் இலங்கையில் சிங்கள பௌத்தம் என்பதாக அல்லாமல்.வெறும் பௌத்தம் என்றே கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இது பற்றி சுவீடனை சேர்ந்த பேராசியர் திரு பீட்டர் ஷாக் அவர்கள் ஆய்வு செய்துள்ளார் இது பற்றிய நிகழ்ச்சிகளையும் அவர் முன்னெடுத்தது வருகிறார்!

Vallipuram Budhdha in Thailand
 இலங்கையில் சிங்கள, பௌத்த வரலாறு பற்றியும் பல ஆய்வுகளை முன்வைத்துள்ளார். இவர் வல்லிபுரம் புத்தர் உருவச்சிலை வைக்கப்படுள்ள தாய்லாந்து விகாரைக்கு சென்று (1994, 1996) ஆய்வினை மேற்கொண்டு ஒரு கட்டுரையினை சமர்ப்பித்துள்ளார் 

vallipuram temple
("The Vallipuram Buddha Image 'Rediscovered'- Journal of the institute of Asian studies, vol 12 (Sep 1994) ). இப் புத்தர்சிலை ஒரு ஆளுயரத்தில் அரை தொன் கனதியில் சுண்ணாம்புக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் வலது கை அபய முத்திரையினை காட்டி நிற்கின்றது. ஆனால் இந்த வலதுகை பழைய பூங்காவில் இச்சிலை இருந்தபோது உடைந்து இல்லாதிருந்தது.   பின்னர் அது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்போது சிங்கள மேலாதிக்க சிந்தனையோடு சிறு மாற்றத்தினை செய்துள்ளனர். அதாவது அபய முத்திரை ( அக்ஷய முத்திரை அபய முத்திரையில் இருந்து சற்று வேறுபட்டது. அதுவே அனுராதபுர புத்தர் சிற்பங்களின் தனித்துவமான அடையாளம்) காட்டும் புத்தர் சிலை மரபு அனுராதபுர கலை பள்ளிக்குரியதாகும்.        ஆனால் வல்லிபுரம் புத்தர் சிலை அதற்கும் முந்திய அமராவதி சிற்ப மரபை சார்ந்ததாகும். எனவே உண்மையான சிலையில் அபய முத்திரை இருக்க வாய்ப்பில்லை எனவும் ஏனைய அம்சங்களை அமராவதி மற்றும் அனுராதபுர கலை மரபுகளோடும் ஒப்பிட்டு இது அனுராதபுர சிங்கள புத்தரிலிருந்து வேறுபட்ட தனித்துவமானது என பேரா Peter Schalk நிறுவுகின்றார். 

சோனியா காந்தி... இந்தியாவின் மிகப்பெரும் அதிஷ்டம்! அன்னை சோனியா காந்தியின் 74 வது பிறந்த நாள்

இன்று அன்னை சோனியா காந்தியின் 74 வது பிறந்த நாள்! ( 9 திசம்பர் 1946)

ஆரிய பார்ப்பன பனியா கும்பல் முகலாயர்களின் பாதங்களை கழுவிக்கொண்டு தங்கள் ஜாதி கொடுமைகளை தொடர்ந்து அரங்கேற்றி கொண்டிருந்தார்கள் .  முகலாயர்களும் மதவாதிகள் என்பதால் பார்ப்பனர்கள் கூறிய பார்ப்பனீய கருத்துக்கள் ஒட்டுமொத்த சமூக கட்டுமானம் என்று கருதி அவர்களின் வலையில் வீழ்ந்து விட்டார்கள் . உண்மையான மண்ணின் மைந்தர்களின் துன்பங்களை கண்டுகொள்ள பெரிதும் தவறி விட்டார்கள்
ஆங்கிலேயர்கள் இந்த இடத்தில்தான் தனித்து நின்றார்கள் . போற்றுதலுக்கு உரிய பல புரட்சிகளை செய்ய தொடங்கினார்கள்..
ஆங்கிலேயர்கள்  காலனித்துவ இந்தியாவின்    ஜாதி மத மூட காட்டுமிராண்டி பழக்கங்களுக்கு எதிராக இருந்தார்கள்.

இவைக்கு எதிரான ஆங்கிலேயர்களின்  முன்னெடுப்புக்கள் ஆரிய பார்ப்பன பனியா கும்பலின் ஆத்திரத்தை கிளறி கொண்டே இருந்தது.
அவர்களின் ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பின் தொடர்ச்சிதான் நேரு குடும்பத்தின் மீதும் ஓரளவு இருந்தது .   சோனியா காந்தியின் அரசியல் வரவுக்கு பின் அது கண்மண் தெரியாத அளவு எகிறியது.

செவ்வாய், 8 டிசம்பர், 2020

மயிலாப்பூரும் சாத்தான் குளமும் .. பூணூலும் போலீசாரும்


 Kcvan Che
: · சென்னை திருவான்மியூர் போலீசார் வாகன சோதனையில்
ஈடுபட்டிருக்கும் போது திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு பின்புறமுள்ள சாலையில் ஒரு வோல்ஸ்வேகன் போலோ கார் வேகமாக வந்துள்ளது. அதை ஓட்டி வந்தவர் ஒரு இளம் பெண். அருகில் இன்னொரு ஆண் நண்பர். போக்குவரத்து ஆய்வாளர் காரை நிறுத்தி அவர்களை விசாரித்த போதுதான் அந்த பெண் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. போலீஸ் அவர்களை விசாரிக்க ஆரம்பித்தவுடனே, அந்த பெண் நான் யார் தெரியுமா? என் தந்தை யார் தெரியுமா? எங்கம்மா யார் தெரியுமா? என் பேக்ரவுண்ட் என்ன தெரியுமா? என்றெல்லாம் மிரட்டி இருக்கிறார். அந்த பெண்ணின் பெயர் காமினி அய்யர். அவர் சினிமா உதவி இயக்குனராக இருக்கிறாராம். கூட வந்த ஆண் நண்பரின் பெயர் டோட்லா சச்சின் பிரசாத். அவர் மென்பொறியாளர். அந்த பெண்ணின் பெற்றோர்கள் பிரபல மருத்துவர்களாம். அவர் ஒரு பிரபலத்தின் மனைவியின் உறவினராம்.

பள்ளிவாசல் ஸ்பீக்கர்களில் பாங்கொலி தொழுகை பயான் ராத்தீப்பு மெளலூது .... ஸ்பீக்கர் போட்டி ஒலிமாசு.

Mohamed Bashith : · எனக்கு தெரிந்த ஒரு வழக்கறிஞருக்கே ஒரு பிரச்னைன்னு போலீஸ் ஆபிசரை பார்த்து புகார் கொடுத்திருக்கார். அதாவது அவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பள்ளிவாசலில் ஸ்பீக்கர்களின் அளவுக்கு மீறிய பயன்பாடு.. மனுசன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, சொல்லியும் பார்த்து கடைசியில் ஐஎஸ் ஏசியை போய் பார்த்திருக்கார். '' சார், ஸ்பீக்கரில் பாங்கு சொல்றது வரை பிரச்சினையில்ல, இப்ப பாங்கு மட்டுமல்ல தொழுகை மெளலூது பயான்னு எல்லாத்தையும் கூம்பு ஸ்பீக்கரில் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க, குழந்தைகள் படிக்க முடியல, உடம்பு சரியில்லாத வயசான தாய் தகப்பன் நிம்மதியா தூங்க முடியல, கொஞ்சம் நடவடிக்கை எடுங்கன்னு சொல்லிருக்கார்.. அதுக்கு போலீஸ் ஆபீசரும் '' இதுக்கு நாங்க நடவடிக்கை எடுக்க முடியாது, இதை என்கிட்ட சொல்றதுக்கு பதிலா பள்ளிவாசல் நிர்வாகத்தில் சொல்லலாம்லனு ஆலோசனை சொல்லிருக்கார். நம்ம வக்கீலும் '' அதெல்லாம் நிறைய தடவை சொல்லிட்டேன் சார், நீங்க நடவடிக்கை எடுக்க முடியாதுன்னு மறுக்கமுடியாது, ஏன்னா வழிபாட்டு தளங்களில் கூம்பு ஸ்பீக்கர் வைக்க கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் ரூலிங் இருக்குன்னு சொல்லி ஆர்டர் காப்பியை கொடுத்திருக்கார்.