Hindu Tamil : சென்னை: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து இந்தியா தனது ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி ஆகஸ்ட் 27, 2025 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன.
சனி, 30 ஆகஸ்ட், 2025
முதல்வர் ஸ்டாலின் : அமெரிக்க வரி நெருக்கடிக்கு ஒன்றிய அரசின் பதில் நடவடிக்கை போதாது
Oxford பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
sunnews கலைஞர் செய்திகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.8.2025) சென்னையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோ அவர்களின் மகள் இராகவி - சச்சிந்தர் ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, ஆற்றிய உரை.
நம்முடைய கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ அவர்கள் இல்லத்தில், அவருடைய அன்பு மகளுக்கு நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சி என்பது அவரே இங்கு குறிப்பிட்டு சொன்னார்.
இது என்னுடைய இல்லத்திருமணம் மட்டுமல்ல. கழக குடும்பத்தின் திருமணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பெருமையோடு எடுத்துச் சொன்னார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை காகிதமாக பார்க்காமல்...” - அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுரை
hindutamil.in ; சென்னை: ”உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை காகிதமாக பார்க்காமல், அவர்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும்” அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடர்பாக தீர்வு செய்யப்பட்ட மற்றும் நிலுவை மனுக்கள்,
மகளிர் உரிமைத் தொகை மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், தொடர்புடைய துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
உண்மையான கூட்டாட்சி வேண்டும் - அனைத்து மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
மின்னம்பலம் -christopher : ஒன்றிய-மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் எனக் கோரிக்கை விடுத்து,
மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 29) கடிதம் அனுப்பியுள்ளார்.
வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025
ரணில் விக்ரமசிங்க, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
hirunews : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறினாலும், நெருக்கமான மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் அவரது குடும்ப மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணிப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் பஸ் மோதினால் நிவாரணம் மறுப்பா? : சீமான் கேள்வி
தினமலர் : சென்னை: 'கள்ளச்சாராயம் குடித்து இறந்தால், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் தி.மு.க., அரசு, கட்டுப்பாடில்லாமல் ஓடும் பஸ் மோதி இறந்தால், நிவாரணம் வழங்க மறுப்பது வெட்கக்கேடு' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த, 2021 செப்டம்பரில், புதுக்கோட்டை மா வட்டம், துடையூர் அருகே, சுரங்கப் பாதையில், மழை வெள்ளம் தேங்கியபோது, அரசு பெண் டாக்டர் சத்யா, அந்த நீரில் மூழ்கி இறந்தார்.
அதே ஆண்டு, டிசம்பரில், மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றிய கார்த்திகேயன், அதிவேகத்தில் வந்த அரசு பஸ் மோதி உயிரிழந்தார். இவர்களுக்கு, நிவாரண தொகையை இன்று வரை வழங்கவில்லை.
வியாழன், 28 ஆகஸ்ட், 2025
பிகாரில் தேஜஸ்வி ஸ்டாலின் ராகுல் அதிரடி! வரலாறு காணாத மக்கள் வெள்ளம்!
கலைஞர் செய்திகள் : கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.8.2025) பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை.
உங்களை எல்லாம் பார்ப்பதற்காகத்தான் இரண்டாயிரம் கிலோ மீட்டர் கடந்து நான் இங்கே வந்திருக்கிறேன். பீகார் என்றாலே, மரியாதைக்குரிய லாலு பிரசாத் யாதவ் அவர்கள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். சமூகநீதி - மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளம் அவர்.
ரணில் விக்கிரமசிங்க: பழுத்த ஓலை விழும் போது குருத்தோலை சிரிக்குமாம்!
அரங்கம் நியூஸ் - அழகு குணசீலன் : இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவராக அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் பயணிக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது குறித்து வாதப்பிரதிவாதங்கள் தூள் பறக்கின்றன.
இந்த வாதங்கள்/ கருத்துக்கள் குறித்து மூன்று விடயங்களை அவதானிக்க முடிகிறது.
பொருளாதார மீட்பர்: 2019 முதல் 2024 வரையான காலப்பகுதியில் பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடியின் போது 2022 – 2024 க்கும் இடையில் நாட்டை தூக்கி நிமிர்த்தியவர் என்று வாதிடுகின்றனர் ஒரு சாரார். அவரது சர்வதேச தொடர்புகளையும் , ஆளுமையையும் பயன்படுத்தி ஐ.எம்.எப். இடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணை எடுப்பை பெற்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினார் என்று கூறுகிறார்கள் அவர்கள். அன்றைய தலைவர்கள் எவரும் நாட்டின் தலைமையை ஏற்க முன்வராத நிலையில், சாக்குப்போக்குகளை சொல்லி தட்டிக் கழித்த நிலையில் துணிச்சலுடன் நாட்டின் தலைமையை பொறுப்பெடுத்தவர் என்பது இவர்களது வாதத்தின் உச்சமாகும்.
பிகாரில் ஸ்டாலின் தேஜஸ்வி ராகுல் அதிரடி .. மாநிலங்களின் உரிமை முழக்கம் வடக்கிலும் எழுந்தது
ராதா மனோகர் : இந்திய மாநிலங்களில் இப்போது எழுந்திருக்கும் மாநில சுயாட்சி கோரிக்கையின் முதல் மேடை திராவிட முன்னேற்ற கழகம்தான்!
இன்று மாநிலங்கள் தோறும் நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள்,
வெறும் தேர்தல் முறை கேடுகளுக்கு எதிரானது என்று மட்டும் யாரும் கருதினால் அது தவறு என்று தோன்றுகிறது.
ஒன்றிய அடாவடி தர்பாரின் உச்சம்தான் இ வி எம் தேர்தல் மோசடி என்பதில் மாற்று கருத்தில்லை
ஆனால் இந்த மோசடியானது நீறு பூத்த நெருப்பாக மாநிலங்கள் தோறும் புகைந்து கொண்டிருந்த மாநில உரிமைக்கான தீயை தீண்டி விட்டது!
இந்த தீ ஏற்கனவே தமிழ்நாட்டில் தோன்றிய வரலாற்றை யாரும் சுலபத்தில் மறந்து விடமுடியாது.
காலத்திற்கு ஏற்ற வகையில் அது பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டுதான் வருகிறது.
இந்திய மாநிலங்களின் உரிமை குரலுக்கு உரிய வரலாற்று மேடை திமுகதான்.
புதன், 27 ஆகஸ்ட், 2025
திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.700 கோடி இழப்பு - டிரம்ப் விதித்த 50 சதவீத வரியால்
மாலை மலர் : திருப்பூர் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரி விதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது.
அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தவெக தொண்டரை தூக்கி எறிந்த பவுன்சர்கள்- நடிகர் விஜய் மீது பாய்ந்தது வழக்கு
மின்னம்பலம் - Mathi : தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் அக்கட்சியின் தொண்டர் சரத்குமாரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பான புகாரில் நடிகர் விஜய் மற்றும் அவரது 10 பவுன்சர்கள் மீது பெரம்பலூர் குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21-ந் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தவெக மாநாட்டு மேடைக்கு அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் வந்த போது, ரேம்ப் வாக் சென்றார்.
இந்த அநியாயத்தை பேசாத எந்த ஈழத்து இலக்கியவாதியும் வெறும் விளம்பர வியாபாரியே!
ராதா மனோகர் இந்த அநியாயத்தை பேசாத எந்த ஈழத்து இலக்கியவாதியும் வெறும் விளம்பர வியாபாரியே!
ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலமாக ஒரு பொய் ஒழிந்துகொண்டிருக்கிறது.
ஈழத்து கவிஞர்கள் அல்லது புனை கதைகளை படைக்கும் இலக்கியவாதிகள் பெரும்பாலும் போர்,
அது தந்த வலி பற்றி எழுதுவதே ஒரே நோக்கமாக கொண்டிருப்பது போல தெரிகிறது
அது தவறு என்று கூறவில்லை . ஆனால் அதில் உண்மை இருக்கவேண்டும்.
இராணுவ தாக்குதல்கள் காரணமாக மக்கள் அடைந்த துன்பத்தை இலக்கிய தளத்தில் முன்வைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு போராட்டத்தின் மறுபக்கத்து விளைவுகளையும் பாரபட்சமின்றி இலக்கிய தளத்தில் முன்வைக்கவேண்டும்.
ஏறக்குறைய எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு காவியம் படைக்கும் ஒரு வெறுமை அல்லது பொய் கண்முன்னே தெரிகிறதே?
எனக்கு தெரிந்தவரையில் தமிழ் மக்களால் ஜீரணிக்கவே முடியாத ஒரு அதிர்ச்சியையும் துன்பத்தையும் தந்தது எந்த நாட்டு இராணுவமும் அல்ல.
பிகார் தேர்தல் ஆணையத்தின் 65 லட்சம் வாக்காளர் மோசடி
Vasu Sumathi : பிகாரில் முதலில் தேர்தல் ஆணையம்
65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது.
அதில் 20 லட்சம் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அதில் பலர் இன்று உயிருடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்த SIRன் பின்னால் உள்ள மிகப்பெரிய சதி, நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினராம்.
இது கழித்தல்.. கூட்டலை பார்ப்போம்.
இப்போது பத்திரிகையாளர்கள் வரைவு பட்டியலை சல்லடை போட்டு பார்த்ததில் ஏகப்பட்ட போலி வாக்காளர்கள் seர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
மூன்றே தொகுதிகளில் மட்டும் 80,000 போலி வாக்காளர்களை பொய் முகவரிகளில் திணித்திருக்கிறார்கள் என்றால் பீகார் முழுவதும்... கற்பனை செய்து பாருங்கள்.
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025
3 வயது குழந்தையை தீ வைத்து கொன்று ஆசிரியை தற்கொலை- ராஜஸ்தான் வரதட்சணை கொடுமை
மாலை மலர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் சஞ்சு பிஷ்னோய். இவருக்கு திலீப் என்பவருடன் திருமணமாக 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யஷஸ்வி (வயது3) என்ற குழந்தை இருந்தது.
சஞ்சு பிஷ்னோய் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சஞ்சு பிஷ்னோயிடம் அவரது கணவர் திலீப், மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
சம்பவத்தன்று காலை அவரது கணவர் சஞ்சுவை பைக்கில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு மதியம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
உத்தர பிரதேசம் - குட்கா வாங்க பணம் தராத கணவன்.. 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்த மனைவி
மாலை மலர் : உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவர் பணம் தராததால் தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் 30 வயதுடைய அந்தப் பெண்ணும், அவரது 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 5 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
கணவன் குட்கா பழக்கத்தை விட்டுவிடுமாறு கூறியதால் கோபம் கொண்ட அந்தப் பெண் இந்த கொடூரமான முடிவை எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிணையில் விடுதலை! Full Details
ஹிருனியுஸ் : உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பேசப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயம் இன்று தற்காலிகமாகத் தணிந்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்ததை அடுத்தே, ஏற்பட்டிருந்த தீவிர நிலை தணிந்துள்ளது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ரணில் விக்ரமசிங்க, கடந்த வெள்ளிக்கிழமையன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
திங்கள், 25 ஆகஸ்ட், 2025
அதிமுகவினர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கு! 10 ஆண்டுவரை சிறை!
மின்னம்பலம் ஈஸ்வரி : ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி துறையூரில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நேற்று (ஆகஸ்ட் – 24) நடைபெற்றது.
ராகுல் காந்தி : மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி வெட்கக்கேடானது
மாலை மலர் : டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியாளர் தேர்வு ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இரவும் போராட்டம் தொடர்ந்ததால் போலீசார் மாணவர்களை வலுகட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தடியடி நடத்தி 40 பேரை கைது செய்தனர்.
மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
President ரணில் விக்கிரசிங்க - சட்டத்தின் கடமையும் துரோகிஸ்தானியர்களின் விருப்பமும்
![]() |
ராதா மனோகர் : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதை சட்டம் தன்கடமையை செய்யும் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்றெல்லாம் கூறிக்கூறி
மகிழ்ச்சி அடைகிறார்கள் துரோகிஸ்தானியர்கள்,
இவர்கள் சட்டத்தின் மாண்பு பற்றி பேசுவது காலத்தின் கோலம்தான்.
வாழ்வில் தப்பி தவறியும் சட்டத்தை மதித்து வாழ்ந்தே அறியாத கூட்டம் இது.
இன்று சட்டத்தின் மாண்பு பற்றி பேசுகிறது!
தங்கள் தோல்வியை ரணில் ஒரு நரி என்று ஒப்புதல் வாக்குமூலமாகவே கூறுபவர்கள் அல்லவா இவர்கள்.
தங்களை சமாதான ஒப்பந்தம் மூலம் சட்டத்தின் துணை கொண்டே தோற்கடித்தவர் அல்லவா அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா.
அந்த ஒப்பந்தத்தின் பொறியை உணராது கைச்சாத்திட்டவர்கள் இவர்கள்
சகோதர படுகொலைகளை இலங்கை முழுவதும் நடத்தலாம் என்ற ஒற்றை நோக்கத்தில் மகிழ்ந்த அறிவாளிகள் இவர்கள்.
உண்மையை அறிந்தபோது தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டால் தங்களின் முட்டாள்தனம் அம்பலமாகி விடுமே என்று உண்மையை மறைந்து, .
ரணில் ஒரு நரி ரணில் ஒரு நரி என்று இன்று வரை அங்கலாய்ப்பவர்கள் இவர்கள்!
திமுக அரசின் Strengths, Weakness, Opportunities, Threats - விமலாதித்தன் மணி
![]() |
Vimalaadhithan Mani : ஒரு திராவிட சிந்தனையாளனாக, நடுநிலையான அரசியல் விமரிசகனாக திமுக அரசின் கடந்த நான்காண்டு செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்து என்னுடைய கருத்துக்களை திமுக அரசின் Strengths, Weakness, Opportunities, Threats என்று வகைப்படுத்தி இருக்கிறேன்.
இது உலகளாவிய வியாபார உலகில் ஜாம்பவான்கள் தங்கள் வியாபார செயல்பாடுகளை சீர்திருத்தி மேலும் முன்னேற்றி லாபம் பார்க்க கையாளும் SWOT(Strenths, Weakness, Opportunities, Threats) Analysis என்ற உபாயமாகும்.
Strengths
சமூக நீதியை போற்றும் ஆழமான பெரியாரிய மற்றும் திராவிட சித்தாந்தங்கள் அரசின் செயல்திட்டங்களுக்கு அடிப்படையாக இருப்பது.
தமிழகத்தின் நகரங்கள் முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை கட்சி ஆழமாக வேரூன்றி இருப்பது.
வலுவான வாக்கு வங்கி (45.7%)
வலுவான கட்சி உள்கட்டமைப்பு.
வலுவான பூத் கமிட்டி கட்டமைப்பு.
பெரியாரிய மற்றும் திராவிட சித்தாந்தங்களில் நல்ல புரிதல் உள்ளவர்கள் கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் விரவி கிடப்பது.
மக்களிடம் நல்லமுறையில் சென்று சேர்ந்து இருக்கும் அரசின் பல்வேறு நலத் திட்டங்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு heat stroke? நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் என்று மருத்துவ மனைபணிப்பாளர் அறிவிப்பு
Mahan Siva : முன்னாள் ஜனாதிபதி #ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது !
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் மருத்துவ நிலையைக் கண்காணித்த பின்னர் ஊடக விசாரணைக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும்,
இதன் காரணமாக அவரது இரத்தத்திலும் பிற உடல் அறிகுறிகளிலும் மாற்றங்கள் காணப்படுவதாகவும் திரு. பெல்லானா கூறினார்.
இந்த நிலை ‘வெப்ப பக்கவாதம்’ காரணமாகவும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025
தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு
Hindu Tamil : சென்னை: “தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோ கார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.” என நிதி, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு, கடந்த 20.02.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல (Protected Agricultural Zone – PAZ) சட்டம், 2020ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை , பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது.
ரணில் விக்கிரமசிங்க எந்த ஊழல்களும் செய்யவில்லை பிரபல பத்திரிகையாளர் நாராயண மூர்த்தி பேட்டி
ரணில் விக்கிரமசிங்க மீது கட்டமைக்கப்பட்ட மீதான பொதுபுத்திக்கு உரிய மூல காரணிகளில் இவையும் அடங்கும்
1) க.பொ.த (உ/த) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம்.
2) க.பொ.த (சா/த) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம்.
3) கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக்குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்.
4) இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.
5) லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.
6) 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.
7) ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.
இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.
9) உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.
நக்சல் ஆதரவாளர் என முத்திரை குத்திய அமித் ஷா.. துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கொடுத்த பதில்
மாலை மலர் : செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
என்டிஏ கூட்டணி சார்பில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிற்கிறார்.
இதற்கிடையே கேரளாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, " இந்தியா கூட்டணி, நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.



