புதுக்கோட்டை,: இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, புதுக்கோட்டையில்
முகாமிட்டுள்ள தமிழக நிதியமைச்சரின் காரை, நான்கைந்து ஜீப்புகளில்,
பறக்கும் படையினரும், வீடியோ கண்காணிப்பு குழுவினரும், பின்தொடர்ந்தபடி
விரட்டிச் சென்று கண்காணித்து வருவது, பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக, தமிழக அமைச்சர்கள் 32
பேர் உள்ளிட்ட, 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு, புதுக்கோட்டையில் தங்கி,
அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, தீவிர பிரசாரம் செய்து வருகிறது.தமிழக
நிதியமைச்சரும், அ.தி.மு.க., பொருளாளருமான பன்னீர்செல்வம், மூத்த
அமைச்சர்கள் செங்கோட்டையன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர், தேர்தல்
பிரசார வியூகங்களை வகுத்து, கட்சியினர் மூலம், அதை செயல்படுத்தி
வருகின்றனர்.அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில், தமிழக அமைச்சரவையையே
களமிறக்கியுள்ளதால், தேர்தல் பிரசாரத்தில் விதிமுறை மிறல், முறைகேடு, பணப்
பட்டுவாடா ஆகியவை நடக்காமல் இருக்க, தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது.