Murugan Sivalingam : · சாஸ்திரி...சிறிமா வதைப் படலம்..! (பழையன நினைத்தல்- 2) : நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி¸ குன்னூர்¸ ஊட்டி ஆகிய இடங்களில் புனர்வாழ்வில் சென்று குடியேறிய நமது மக்களின் வாழ்க்கை நிலைமைகளை அறிந்துக் கொள்வதற்காக எனது நண்பர்களின் வீட்டில் கடந்த 2002 ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு வாரக்காலம் தங்கியிருந்தேன். அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை அடுத்து வரும் பதிவில் அறியத் தரவுள்ளேன்.. நீலகிரி மாவட்டத்தை களமாகக்கொண்டு புனர் வாழ்வில் வந்த தாயகம் திரும்பிய இலங்கை மக்களின் வாழ்க்கைத் துயரங்கள் பற்றி பல ஆய்வு நூல்கள் எழுதப்பட்டுள்ளதை நாம் அறிதல் அவசியமாகின்றது. 01)வரிசைப்படி எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள் ( Alienated everywhere) என்ற ஆய்வு நூலை கொடைக் கானல் சிராக் அமைப்பு ) (Ceylon Repatriate Association - Kodaikanal)1984ஆண்டில் வெளியிட்டது.
இந்த நூலின் ஆய்வு குழுவினர்களைக் கீழ் வருமாறு காணலாம். எஸ்.பன்னீர் செல்வம் (இலங்கை மலையக எழுத்தாளர்;;¸ தனது “இலவு காத்தக் கிளி” சிறு கதைக்கு மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய போட்டியில் பரிசு கிடைத்தது. சமீப காலத்தில் சூரியகாந்தி மலையகப் பதிப்பில் “தேயிலைப் புக்கள்” என்ற தொடர் காவியத்தை எழுதியவர் அகதிகள் தெரு..ஜென்ம பூமி ..திறந்தே கிடக்கும் வீடு…ஒரு சாலையின் சரிதம்.. விரல்கள் போன்ற படைப்புக்களை தந்தவர்… உணர்வுமிக்க சமூகவாதி.. கண்டி மாவட்டம் ரங்கல்ல தோட்டத்தைச் சேர்ந்தவர். திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் 2017ம் ஆண்டு நாங்கள் நடத்திய மலையக இலக்கிய விழாவில் பங்குகொண்டவர். தற்போது மதுரையில் வசிக்கிறார்.) ¸ பி.எஸ்.நாதன்¸ ஏ.சிவானந்தன் (கவிஞர்.. சென்று வருகிறேன் ஜென்ம பூமியே.. டீ.எஸ்.ராஜூ நுவரெலியா சிக்கன் ராஜூ.- சிவா சாந்த குமார் - உருசுலா நாதன் - குணசீலி - அந்தோனியம்மாள். ஆலோசகர்கள் :- ஸ்டான் லூர்துசாமி - எஸ்.செபஸ்டியன் ஆகியோராவர்.