Kandasamy Mariyappan : படித்தவர்கள் நாட்டை ஆண்டால்தான் நாடு நன்றாக இருக்கும் என்று சினிமா மற்றும் பொதுவெளியில் பேசுவதை கேட்டிருப்போம்.!
சரி நமது தமிழ் நாட்டு அமைச்சர்கள் எல்லோரும் என்ன படித்துள்ளனர் என்று பார்த்தால்...
முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின், BA History
நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், MA BL
துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், B Com, MBA
நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, BE Machanical Engineering
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு. PTR பழனிவேல் தியாகராஜன், B Tech Chemical Engineering, MSc Operation Research, MBA Financial Management, PhD Humen Factors Engineering
கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ், MCA PhD
உயர்கல்வி அமைச்சர் திரு. கோவி. செழியன், MA BL, M Phil, PhD in Geotechnogical Engineering
சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சுப்ரமணியம், BA LLB
சட்டத்துறை அமைச்சர் திரு. ரகுபதி, BSc Chemistry, BL.
வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. பெரியசாமி, BL.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. EV. வேலு, MA
வியாழன், 23 அக்டோபர், 2025
தமிழக அமைச்சர்கள் முதலமைச்சரின் கல்வி தகுதி என்ன?
புதன், 22 அக்டோபர், 2025
வார்த்தை விளையாட்டில் இந்துமதம் - ஹிரோஷிமா + நாகசாகி - அன்பு பயம் பக்தி
| Hiroshima - Nagasaki |
ராதா மனோகர் : ஹிரோஷிமா நாகசாகி அன்பு பயம் பக்தி
முதல் முதலில் அணுக்குண்டு எங்கே போடப்பட்டது என்று யாரை கேட்டாலும் உடனே ஹிரோஷிமா நாகசாகி என்று கூறிவிடுவார்கள்!
இந்த பதிலில் ஒரு பெரிய மோசடி இருக்கிறது!
மிகவும் நரித்தனமாக திட்டமிட்டு ஹிரோஷிமா நாகசாகி என்ற இரண்டு ஊர்களையும் ஒரே ஊர் போல கருதும் அளவுக்கு ஒரு சொற்றொடராகவே இதை கட்டமைத்து விட்டார்கள்.
ஹிரோஷிமா 6 August 1945 Hiroshima உயிரிழப்பு 90,000–166,000 killed.
நாகசாகி 9 August 1945Nagasaki உயிரிழப்பு 60,000–80,000 killed.
அணுகுண்டின் கொடூரத்தையயும் ஹிரோஷிமா நகரின் அழிவையும் பார்த்த பின்பு சரியாக மூன்று நாட்களுக்கு பின்பு இரண்டாவது அணுகுண்டை நாகசாகி துறைமுகத்தில் அமெரிக்கர்கள் வீசினார்கள்!
செவ்வாய், 21 அக்டோபர், 2025
போனஸ் வழங்காததால் கோபம்: கட்டணம் வசூலிக்கலாம் கேட்டை திறந்துவிட்ட ஹரியானா சுங்கச்சாவடி ஊழியர்கள்
மாலை மலர் : அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேட்டை மூடாமல் திறந்து விட்டனர். கேட்டை மூடினால், வாகனம் அதன்முன் வந்து நிற்கும். fastag மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் கேட் திறக்கப்படும்.
இயக்குனர் ஸ்ரீதரின் மனதை உடைத்த ஜெயலலிதா
![]() |
![]() |
“என்னை ஏமாற்றிவிட்டார் ஜெயலலிதா!” - வருந்தி பேசிய ஸ்ரீதர்
புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கிய கையோடு வழக்கம் போலவே சினிமா உலகம் டைரக்டர் ஸ்ரீதரை மறந்துவிட்டது. கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’ பட பூஜைக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் கைத்தாங்கலாகப் பிடித்து வர, டைரக்டர் ஸ்ரீதர் வந்திருந்தார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழ முயன்றபோது ஸ்ரீதரின் உடல் இடதுபக்கம் இயக்கமின்றிப் போயி ருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை பிசியோ தெரபியும் வேறுபல சிகிச்சைகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தி.நகர் வெங்கட்ராமன் தெருவில், ஸ்ரீதரின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, அடக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசினார்…
திங்கள், 20 அக்டோபர், 2025
தேர்தல் ஆணையம் பா.ஜ.க. ஆணையமாக மாறிவிட்டது பீகாரில் அத்தனை தில்லுமுல்லுகளை அரங்கேற்றம்
கலைஞர் செய்திகள் - Praveen : இந்தியாவில் ஜனநாயகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இந்தியத் தேர்தல் ஆணையமே மாறி இருக்கிறது. பீகார் மாநிலத்தில் முறையாக, ஒழுங்காக, நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது.
ஆனால் அதைப் பற்றி எல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எந்தக் கவலையும் இல்லை.
SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மூலமாக பீகார் மக்களை பீதி அடைய வைத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதனை உச்சநீதிமன்றம் எத்தனை முறை கேள்வி எழுப்பினாலும் தேர்தல் ஆணையம் மந்தமாக, கண்டுகொள்ளாமல், காது கேட்காதது மாதிரியே இருக்கிறது.
ஞாயிறு, 19 அக்டோபர், 2025
“COMET (Community of Metros)” சென்னை மெட்ரோ உலக அளவில் முதலிடம்! தரமான சேவை உலக ஆய்வு நிறுவனம் அறிவிப்பு
மின்னம்பலம் -Pandeeswari Gurusamy : உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ ரயில் நிறுவன வாடிக்கையாளகர்களிடம் நடத்திய ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளிட்டுள்ள அறிக்கையில்,
“COMET (Community of Metros)” என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ இரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை (benchmarks) நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் ஒரு புதிய உறுப்பினராகச் சேர்ந்தது.
உலகத் தரத்திலான செயல்பாடுகளை அடைவதற்கும், முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கும் இது முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுதோறும் முக்கியச் செயல்பாட்டுக் குறிகாட்டிகள் (Key Performance Indicators) குறித்த தரவுகளைச் சேகரிக்கின்றனர்.
நீதிமன்றம் குறித்து அவதூறுப் பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு
Hindu Tamil : சென்னை: நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், அவர் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்
: இலங்கை வட- கிழக்கு மாகாண அரசை கருவிலேயே கொன்ற திரு அண்ணாமலை வரதராஜ பெருமாள்
![]() |
![]() |
புலிகளுக்கு முன்பே முதல் கோணல் முற்றும் கோணல் என்று கூறக்கூடிய அளவு பெரும் தீங்கிழைத்தவர் திரு.வரதராஜ பெருமாள் ஆகும்.
வடகிழக்கு மாகாண சபையை ஒரு தனி ஈழம் என்பதாக சிங்கள இனவாதிகள் தென்னிலங்கையில் கடுமையாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள்
ஜேவியும் பல இனவாத குழுக்களும் தென்னிலங்கையில் மிக பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்!
காலி மாத்தறை ஆகிய மாவட்டங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று கருதும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டிருந்தது.
சராசரியாக ஒரு நாளைக்கு 20 இல் இருந்து 50 பேர்வரை அந்த மாவட்டங்களில் கொலை செய்யப்பட்டனர்.
மின்சார ஜெனெரேட்டர்கள், ரயில்வே பாலங்கள், வங்கிகள், பெரும் விற்பனை நிலையங்கள் பலவும் பெற்றோல் குண்டுகளால் பற்றி எரிந்து கொண்டிருந்தன..குடிநீர் மின்சாரம் போக்குவரத்து போன்றவற்றிக்கும் மக்கள் அல்லாடி கொண்டிருந்தனர்.



