சனி, 18 செப்டம்பர், 2010

ஆனையிறவில் பேரூந்துகள் நேருக்குநோ் மோதி 5 பேரின் நிலை கவலைக்கிடம்,18 பேர்

கிளிநொச்சிஆனையிறவில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் போக்குவரத்து பேரூந்துகள் ஒன்றோடொன்று நேருக்குநோ் மோதிக்கொண்டதில், 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் ஐந்து பேரும் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த அரச போக்குவரத்து பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேரில் சிலரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சரணடைந்த எனது கணவர் குறித்து எந்த தகவலும் இல்லை: புலிகளின் பொறுப்பாளர் எழிலன் மனைவி சாட்சியம்

இந்த குழு முன்பு ஆஜாரான விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார்.
அதே போன்று இன்னும் பல நூறு போராளிகளும் சரண் அடைந்ததாகவும் அவர்களையும் தனது கணவரையும் இந்த குழு கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நகரங்களுக்குச் செல்வதோடு, இறுதி கட்ட யுத்தம் அரங்கேறிய நந்திக்கடல் பகுதிக்கும் அவர்கள் செல்லவிருக்கின்றனர்

யாழ் மாநகர போக்குவரத்துச் சேவை விரைவில் ஆரம்பம்

இலங்கை இந்திய நட்புறவு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு 05 நடுத்தர பேரூந்துகள் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். 
மாநகரசபை தனது வழமையான சேவைகளுக்கு மேலதிகமாக சபை எல்லைக்குட்பட்ட மக்களின் போக்குவரத்துக்கு வாகன வசதிகளற்ற இடங்களுக்கு போக்குவரத்து சேவைக்காக இவ் வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. முக்கியமாக பாடசாலை மாணவர்கள் காலையிலும் மற்றும் பிற்பகலிலும் சென்று வருவதற்கு ஏற்ற விதத்தில் எமது மேற்படி போக்குவரத்துச்சேவை திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். தூர இடங்களுக்கு பிரயாணம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே உரிய கட்டணத்தைச் செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். மாநகரசபையின் போக்குவரத்துச் சேவை ஆரம்பத்தில் பரீட்சார்த்தமாக காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா மனைவியை துன்புறுத்தி நயன்தாராவை மணந்தால் இருவரது படத்தையும்

தமிழகத்தில் கலாச்சார சீரழிழை ஏற்படுத்தி வரும் நயனதாராவைக் கண்டித்து அனைத்து பெண்கள் அமைப்புகளையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவி கல்பனா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

நடிகர் பிரபுதேவாவின் மனைவி ரம்லத். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரம்லத்தை புறக்கணித்து இப்போது அவர் நயன்தாராவுடன் சுற்றுகிறார்.

மும்பையில் அளித்த பேட்டியில் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வேன். அவர் எனக்காக பிறந்தவர். விசேஷமானவர், அவரை பிரிந்து என்னால் வாழ முடியாது. பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையை சோலை வனமாக மாற்றினார் என்றெல்லாம் வர்ணித்துள்ளார்.

ரசிகர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒருவரின் இத்தகைய வார்த்தைகள் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.

நயன்தாராவை திருமணம் செய்வது தனிப்பட்ட விஷயம் என்கிறார். தனது மனைவியை துன்புறுத்தி இன்னொரு பெண்ணை மணப்பது அவருக்கு வேண்டுமானால் தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம். இது பெண்களுக்கு எதிரான ஒரு பொது பிரச்சினை.

பெண்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை தட்டிக்கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு. பிரபுதேவா தனது மனைவியை துன்புறுத்தி நயன்தாராவை மணந்தால் இருவரது படத்தையும் தமிழக பெண்கள் புறக்கணிப்பார்கள்.

ரம்லத்துக்கு எதிராக நடைபெறும் அநீதியை தடுத்து நிறுத்த போராட்டத்தில் குதிப்போம். பிரபுதேவாவிடம் இது பற்றி நடிகர் சங்கம் விசாரித்து ரம்லத்துக்கு நீதி கிடைக்க வழி வகை காண வேண்டும். இல்லாவிட்டால் நடிகர் சங்கம் முன்பும் பெண்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

நயன்தாராவுக்கும் பெண்கள் சங்கம் மூலம் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறோம். இனனொரு பெண்ணின் வாழ்க்கையில் புகுந்து அந்த குடும்பத்தை சீரழித்தால் சும்மா விடமாட்டோம். சென்னையில் எந்த விழாவுக்கு சென்றாலும் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்போம்.

தமிழ்நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வரும் நயன்தாராவை கண்டித்து அனைத்து பெண்கள் அமைப்புளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பதிவு செய்தவர்: ரங்கன்
பதிவு செய்தது: 18 Sep 2010 5:44 pm
அதெல்லாம் சரி. அப்ப கமலஹாசன் கருணாநிதி கதி என்ன ஆகறது? பெண்கள் அமைபுகள் அவர்களையும் எதாவாது செய்யலாம்.

புலிகளின் விசுவாசத்துக்கு திருகுதாளம் போட்டவர்களே புலிகளின் தோல்விக்கு மூலகாரணமாகினர்

மக்களே! ஆசாடபூதிகளின் வேஷத்தை கண்டறியுங்கள
விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது அரசுக்கு வெற்றி என்று யாரேனும் கூறுவார் களாயின் அதனை நூறுவீதம் ஏற்றுக் கொள் வது சரியானதாகும்.ஆனால் விடுதலைப்புலிகளை அரசு தோற் கடித்தது என்று கூறப்படும் கருத்தை நூறு வீதம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் விடுதலைப்புலிகளை போரில் வெற்றிகொள்வதற்கு முன்னதாகவே விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நடவடிக் கையில் ஈடுபட்டவர்கள் பலர்.அதில் விடுதலைப் புலிகளோடு சேர்ந்திருந்து அவர்களுக்கு ஆதர வாளர்கள் போல் நடித்து தங்களின் காரியங் களை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர்களே முக்கியமானவர்கள்.

விடுதலைப் புலிகளுக்குத் தவறான தகவலைக் கொடுப்பது,அதன் மூலம் தங்கள் சுயலாபத்தை அதிகரித்துக் கொள்வது என்ற செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்னர் அதிரடியாகத் தங்களை மாற்றிக் கொண்டனர்.

இத்தகையவர்கள் இப்போது தங்களை தமிழ் மக்களின் உரிமைக்காக பாடுபட்ட தூய போராளிகளாகக் காட்டிக்கொள்ள முற்படுகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு தவறாகத் தகவலைக் கொடுத்து புலிகளின் விசுவாசத்துக்கு ஆளாகி, தங்களின் காரியங்களை கனகச் சிதமாக செய்து பிழைப்பு நடத்தியமை ஒரு புறம்.மறுபுறத்தில் படைத்தரப்பு, ஆளுந்தரப்பு என்பவற்றுடன் நல்லுறவைப் பேணி அதன் மூலம் அத்தரப்பின் கிடைப்பனவுகளை பெற்றுக் கொண்டமை என அங்கும் இங்கும் திருகுதாளம் போட்டவர்களே விடுதலைப் புலிகளின் தோல்விக்கு மூலகாரணமாகினர்.

இத்தகையவர்களை மக்கள் இனங்காணா தவரை அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமான காரியமாகும். அதேநேரம் இவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பயங்கரமானவை. அரசியல், பதவி, அதிகாரம் என்பவற்றுக்காக இவர்கள் போடக்கூடிய வேஷம் சாதாரணமானதல்ல.

இந்த வேஷங்களை புலனாய்வுத்துறையில் மிகவும் உன்னதமாக இருந்த விடுதலைப் புலிகளாலேயே கண்டறிய முடியவில்லை எனில், சாதாரண மக்களாகிய எங்களால் எப் படி முடியும்? ஓ!எனதருமை தமிழ் மக்களே! கடவுளைப் பிரார்த்தியுங்கள். இறைவா! உனது கிருபை யால் இந்த ஆசாடபூதிகளை இல்லாதொழித்து விடு. எதிர்காலத்திலாவது எங்கள் வாழ்வு-எங்கள் உரிமை எங்களுக்குக் கிடைக்க உதவி செய். இதைவிட இவர்களிடம் இருந்து நாம் தப்பிக் கொள்வது கடினமே.
வலம்புரி தலையங்கம

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் எந்த ஊடகமும் கலந்து கொள்ளலாம்

பிபிசி ஊடகத்திற்கோ, வேறு ஊடகங்களுக்கோ நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கவில்லை என நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒருங்கமைப்பு செயலாளர் ஏ.ஜி.குணவர்த்தனவை தொடர்பு கொண்டு கேட்ட போது எந்த ஊடகமும் நல்லிணக்குழுவின் ஆணைக்குழுவின் சாட்சியமளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலைய ஆணையாளர் லக்ஷ்மன் உலுகல்லவை தொடர்பு கொண்டு கேட்டபோதும் அவரும் ஊடகங்களுக்கு எதுவித தடையும் விதிக்கபடவில்லை எனவும் தேவையாயின் நேரில்சென்று அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஊடக வலையமைப்பான பி.பி.சி இன்று கிளிநொச்சியில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் நிகழ்வில் ஊடக சார்பிலாக கலந்துகொள்வதற்காக, இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கிய விண்ணம் நிராகரிக்கப்பட்டுள்ளது.மேற் குறிப்பிட்டவாறு பிபிசி செய்திச் சேவையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அச் செய்தியில் தாம் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் தினத்தில் ஊடகத்தின் சார்பாக தாம் கலந்துகொள்ளவென விண்ணப்பித்த போது பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் அதனை நிராகரித்ததாகவும், அதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர தமிழ் அமைப்புக்கள் அக்கறை காட்டவில்லை,கனடியத் தமிழ்க் காங்கிரஸில் இடம்பெற்ற கணனித் திருட்டு

கனடாவின்  தமிழர் நிறுவனமான கனடியத் தமிழ்க் காங்கிரஸில் இடம்பெற்ற கணனித் திருட்டுக் குறித்து பல்லினப் பத்திரிகைளும் பொது அமைப்புக்களும் அக்கறை கொண்ட அளவில் ஒரு வீதமாவது இதர தமிழ் அமைப்புக்கள் அக்கறை காட்டவில்லையென Tamilwin ல் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கப்பல் விவகாரத்திலும்  கனடியத் தமிழ்க் காங்கிரஸ் செயற்பட்டு வந்தவேளையில், இவ்விவகாரத்தில் ஈடுபட இதர தமிழ் அமைப்பு ஒன்று முயன்ற போதும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அதற்கு இடம்கொடுக்கவில்லை.

இந் நிலையில் இக் கணனித் திருட்டுக் குறித்து பலவேறு அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்த போதும் இதர தமிழ் அமைப்புக்கள் ஏதும் இவ்விவகாரத்தில் அக்கறை கொள்ளாமல் மெத்தனமாக இருந்துவிட்டன.
இந்நிலையில் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள தொம்ஸன் பூங்காவில் நடத்தும்  நிதி சேகரிப்பு நடைபவனியில் ரொறன்ரோ பொலிஸார்   பங்களிக்கவுள்ளதாக ரொறன்றோ பொலிஸ் அறிவித்துள்ளது.

யுத்தம் முடிவடைந்த வேறு நாடுகளை போலன்றி இலங்கை தானாகவே வளர்ச்சி

யுத்தம் முடிவடைந்த வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை மிகவும் விரைவாக வளர்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. சரியான கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களின் ஊடாக இலங்கை அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றது.
செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச சமாதான தினமாக அனுஷ்டிக்கப்படு வதை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீல் புனே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வெளிநாட்டு தூதுவர்கள் தூதரக அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். நீல் புனே அங்கு மேலும் உரையாற்றுகையில், சமாதானத்திலேயே நாடொன்றின் எதிர் காலம் தங்கியுள்ளது. சர்வதேச சமாதான தினம் என்பது புதியதொன்றல்ல. 1981 ஆம் ஆண்டிலிருந்து இந்த சமாதான தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. உலக போர்நிறுத்தம் மற்றும் வன்முறையில்லாத நிலைமை என்ற பிரசாரத்தின் அடிப்படையில் இந்த தினத்தை அனுஷ்டிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை உலக மக்களிடம் கோரி  நிற்கின்றது.
உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கவேண்டுமானால் அதற்கு சமாதானம் அடிப்படையான விடயமாகும். அனைத்து விதமான ஆயுத மோதல்களிலும் இளைஞர்களும் சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதார செயற்பாடுகளும் இளைஞர்களில் தாக்கம் செலுத்துகின்றன. அண்மைய உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக 87 வீதமான இளைஞர்கள் தொழில்களை இழந்ததாக அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்திருந்ததை இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.
எனவே, இளைஞர்கள் தொடர்பில் சிறந்த முறையில் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். இளைஞர்களே மாற்றங்களுக்கான முகவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக உள்ளனர். இன்றையதும் நாளையதும் இணைப் பாளர்களாக இளைஞர்கள் இருக்கின்றனர்.
சரியான கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் பொறுப்புள்ள பிரஜைகளாக இளைஞர்களை உருவாக்க முடியும்.முறையான உதவிகளை வழங்குவதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை அவர்கள் முன் காணப்படுகின்ற சவால்களிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
சமூக பிரிவினைகளை தடுப்பதற்கு இளைஞர்களுக்கு உதவக்கூடிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக உணரப்படுகின்றது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் இலங்கையர்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றது.
அதாவது சமூகங்களுக்கு இடையில் மொழித் தடைகளை நீக்கும் பொருட்டு மொழிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் சமூக விடயங்கள் தொடர்பான திறமைகளை வளர்த்துக்கொள்ள நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கல்வி மற்றும் தொடர்ச்சியான அபிவிருத்தி போன்றவற்றுக்கு ஐ.நா.வின் பல அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றி வருகின்றன.
யுத்தம் முடிவடைந்த வேறு நாடுகளை போலன்றி இலங்கை தானாகவே வளர்ச்சி பாதையில் பயணிக்கின்றது. சவால்களுக்கு மத்தியிலும் விரைவான அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் மனித மூலதனம் சிறப்பாக கட்டியெழுப்ப ப்படுகின்றது.

சர்வரோக நிவாரணி’ சுஜாதாநேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதல

சர்வரோக நிவாரணி’ சுஜாதாநேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!சுஜாதாவை பத்தி ‘கேப்ஸ்யூல்’ வார்த்தைல சொல்றதுன்னா..ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.

இந்த எழுத்துலகப் பிதாமகனை நான் சந்திச்ச சம்பவம் ஒவ்வொண்ணையும் சதா நினைச்சுப்பாத்து எனர்ஜி ஏத்திக்கறேன் ஜி! ‘ஆனந்த விகடன்’ல நான் இருந்தப்போ அடிக்கடி பேசியிருக்கேன். அந்த அறிமுகத்துல சுஜாதாவை நேர்ல சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். ஃபோன் பண்ணேன். பேர் சொன்னேன்.

சுஜாதா ரொம்ப ரசனையான ஆசாமி!(அவர் ஸ்டைல்!) அற்பமானது..நுட்பமானதுனு பேதமில்லாம கவனிச்சு ரசிப்பார். ‘‘எம்.பி உதயசூரியனா! பேர் நல்லாருக்கே! காலைல பீச்சுக்கு வர்றீங்களா..ஈவ்னிங் வீட்டுக்கு வர்றீங்களா?’’னு மெல்லிசான குரல்ல கேட்டார். ‘‘பீச்சுக்கு வர்றேன் சார்’’னேன். அன்னிக்கு ராத்திரி என் தூக்கத்தை கெடுத்தது வேறெந்த கவர்ச்சிக்கன்னியும் கெடயாது..சத்தியமா சுஜாதாதான்!

பொழுது விடிஞ்சது. ‘காந்தி’ காத்து வாங்கற கடற்கரை. காத்திருந்தேன். ‘தேவன் வந்தார்’. இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கறவங்க விஷ் பண்ணிகிட்டே கடக்க..மையமா சிரிச்சுகிட்டே சுஜாதா ‘பைய்ய’ நடந்தாரு. பக்கத்துல போய் ‘‘வணக்கம் சார்’’னேன். ஒருநொடி என்னை உன்னிப்பா ‘ஸ்கேன்’ பண்ணிட்டு ‘‘வாங்க உதயசூரியன்’’னு அசால்ட்டா சொல்ல..என் நடுமுதுகு ‘திடுக்‘னுச்சு.

அதுக்கு முன்ன சுஜாதா என்னை முன்ன பின்ன (‘சிவாஜி’ பட காமெடியை யோசிச்சுராதீங்க!) பாத்ததில்ல! ‘‘அப்புறம் எப்டி சார் கண்டுபிடிச்சீங்க?’’ன்னு ஆச்சரியப்பட்டேன். அலட்டிக்காம சுஜாதா சொன்னாரு..‘‘பீச்ல என்னை பெரும்பாலும் பாக்கறவங்க ‘நீங்க சுஜாதாதானே‘ன்னு கேப்பாங்க. சிறும்பாலும் பாக்கறவங்க ‘யாரோ ஒரு மியூசியம் ஆசாமி’ன்னு திகிலா விலகிப்போவாங்க. இதுல ‘வணக்கம் சார்‘னு வந்தா அது நீங்களாத்தான் இருக்கணும்னு ஒரு குன்ஸா அடிச்சேன்’’னார் பாருங்க..அதான் சுஜாதா!

எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும். ‘குங்குமம்’ கட்டுரைத்தொடருக்காக சுஜாதாவை பலமுறை சந்திச்சேன். அன்னிக்கு செமஜாலி மூடுல இருந்தார். டேபிள்ல ‘மகாமகா தடிமனா’ ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘‘என்ன சார் இந்த புக் கல்லாப்பெட்டி சைஸ்ல இருக்கே’’னு கேட்டேன்.

அடுத்த நொடி..‘பம்பர் ப்ரைஸ் விழுந்தமாதிரி சர்ப்ரைஸ் ஆனேன். ஆமாங்க. அந்த கமெண்ட்டுக்கு ஒரு குழந்தையைப்போல வஞ்சனையில்லாம சிரிச்சார் சுஜாதா. எனக்கோ பெருமை தாங்கல! அதேஜோர்ல ‘‘சார்..இதை முழுசா படிச்சிட்டீங்களா?’’ன்னேன். ‘‘இப்பத்தான் பத்து பக்கம் முடிச்சிருக்கேன்’’னார். உடனே நான் ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரேவார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்!

இனி சுஜாதா ரவுண்டு. பேசிகிட்டே என்னைப்பாத்தவர் ‘‘தாதுபுஷ்டி லேகியம் ஏதும் சாப்புடறீங்களா?’’ன்னார் சைலன்ட்டா. ‘‘ஐயையோ..இல்லையே சார்’’னேன்.‘‘அப்போ தாதுவை வீணடிக்கறதில்லபோல!’’னு அடுத்த பஞ்ச் வெச்சிட்டு ‘‘அதான் எப்பவும் உங்க முகத்துல ஒரு தேஜஸ் மின்னுது’’ன்னாரு கிண்டலா! கூச்சப்பட்டு சிரிச்சேன்.

‘‘இந்த கட்டுரைத்தொடரை ‘ஏன்..எதற்கு..எப்படி’மாதிரி கேள்வி பதிலா கொண்டுபோலாமா சார்?’’னேன். ‘‘வேணாம் வேணாம்! ‘ என்னை ஒரு ‘சர்வரோக நிவாரணியா‘ நினைச்சு ‘சொப்பன ஸ்கலிதம்.. விரை வீக்கம்..ஆண்மைக்குறைவு தீர என்ன வழி‘னு கேட்டே திணறடிச்சிருவாங்க! அப்புறம் அத்தனையும் எனக்கு வந்துரும்..கேள்விகளா!’’னு ‘நச்‘னு சொல்ல..சேர்ந்து சிரிச்சோம்.

‘கனவுத்தொழிற்சாலை‘யான கோலிவுட்டுக்கு சுஜாதாமேல ரொம்ப பாசம். அதிலும் ‘வித்தகன்’ பார்த்திபனுக்கு ‘விசித்திரன்’ சுஜாதான்னாலே அதீத மதிப்பு. இந்த மதிப்பு மனசளவுல இருந்தா பரவால்ல! சுஜாதாவோட இடுப்பளவுக்கு வந்து உடுப்பளவு மாறுனதுதான்..காதளவுக்கு சிரிக்கவெச்சது!

பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ கவிதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா. காமராஜர் அரங்கமே ‘தலை‘கட்டியிருந்துச்சு. முதல்வர் கலைஞர், சுஜாதா, பாரதிராஜா, பாக்யராஜ், சிவசங்கரி மேடையில இருக்காங்க. பார்த்திபன்தான் ‘புதுமைப்பித்தனாச்சே’! விடுவாரா? விழா வி.ஐ.பி.கள் அத்தனைபேருக்கும் (சிவசங்கரி தவிர!) பட்டுவேட்டி சட்டை எடுத்துத்தந்து கட்டிட்டு வரச்சொல்லியிருந்தாரு.

பாரதி.பாக்யராஜாக்களுக்கு பழக்கமானதுதான்! கட்டிகிட்டாங்க. ஆனா..பாவம் சுஜாதா! சேர்ல உக்காந்திருந்தப்போ வெவஸ்தை இல்லாத வேட்டியால ரொம்ப அவஸ்தையாதான் இருந்தாரு. பேச எந்திரிச்சப்போதான் சுஜாதா மந்திரிச்சுவிட்ட மாதிரி ஒரு தினுசா நடந்துவந்தாரு. ‘என்னடா‘ன்னு பாத்தா..‘சென்னையோட ஈஃபிள் டவர் போல..ஓங்கிவளர்ந்த பேனாவோட ரீஃபில் மாதிரி‘ இருக்கற சுஜாதாவோட இடுப்புல வேட்டி ‘இருக்கவா? நழுவவா?’னு ஊசலாடிகிட்டிருக்கு!

கடுப்பை அடக்கிகிட்டு இடுப்பை இறுக்கிகிட்டே ஒருவழியா மைக்கை பிடிச்சாரு சுஜாதா.

மத்த பேச்சாளர்களைப் போல ‘ஓசோன் ஓட்டையில விரலைவிட்டு ஆட்டறமாதிரி’ நீட்டி குரல் குடுக்காம.. ‘பி.பி.சீனிவாஸ் பி.பி.சி.நியூஸ்
வாசிக்கறமாதிரி’ நம்ம ஆசான் ஒரு ராகத்தோட..பேப்பர்ல எழுதிவெச்சிருந்ததை சூப்பரா படிச்சிகிட்டிருக்காரு!

ஒரு கையில பேப்பரையும், மறு கையில வேட்டியையும் இறுக்கி பிடிச்சுகிட்டு லேசான திகிலோட பேசி(!)முடிச்ச சுஜாதா..ஸ்லோமோஷன்ல வந்து அவரோட இருக்கைல உக்காந்தாரு. ஸ்..அப்பாடா! வேட்டி அவுந்து விழாம..இனிதே முடிஞ்சுச்சு
விழா!

மறுநாள்..சுஜாதாவுக்கு ஃபோன் அடிச்சேன். லைன்ல வந்தது ‘லயன்’! ‘‘சார்..நேத்து எல்லாரும் விழாவ பாத்துகிட்டிருந்தாங்க. நாந்தான் உங்க வேட்டி விழாம இருக்கணும்னு வேண்டிகிட்டிருந்தேன். ரொம்ப சிரமப்பட்டுட்டீங்களே சார்’’னேன்.

சன்னமா சிரிச்சவர் மின்னலா பொளந்தார் பாருங்க..‘‘குட்! ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்களே. பார்த்திபனோட விருப்பத்துக்காக வேட்டிக்கு ஓகே சொன்னேன். ஆனா..அதை இடுப்புல சுத்திகிட்டு நிறைய வி.ஐ.பி.க இருக்கற அந்த ஸ்டேஜ்ல விரைவீக்கம் வந்தவன்மாதிரி ஒரு தினுசா நான் நடந்துபோயிருக்கேன். நல்லவேளை..விழா பரபரப்புல யாரும் இதை கவனிக்கலை!’’னு அவர் சொல்லிமுடிக்க..வெடிச்சு சிரிச்சேன்.

தன்னை மட்டுமே மெச்சிக்கற சிலபல ரைட்டர்ஸ் மத்தியில..தகுதியிருக்கற படைப்பாளிகளை தன்னோட உச்சிமீது தூக்கிவெச்சு கொண்டாடின ‘ஞானத்தந்தை’ சுஜாதா! திறமையுள்ள இளம்படைப்பாளிகள்..கலிஃபோர்னியால இருந்தாலும் சரி..கரியாம்பட்டில இருந்தாலும் சரி..அவங்க சிறந்து விளங்கறதுக்காக தேடிப்‘‘படிச்சு‘‘ ‘பாராட்டு வெளிச்சம்’ பாய்ச்சற ‘கலங்கரை விளக்கம்’ சத்தியமா சுஜாதா மட்டுமே!

சுஜாதாவுக்கு வயசு ‘என்றும் பதினாறு’தான்! ‘பேச்சுலர் வாசம்’ அடிக்கற இவர் பேச்சுல ‘அந்தக்காலத்துல’ங்கற பழைய கோந்து பிஸினஸே கிடையாது. எப்பவுமே டீன்ஏஜ் டிக்கெட்டுகளோட லாங்குவேஜ்லதான் பூந்து விளையாடுவாரு!
‘‘எப்டி சார்‘‘னு கேட்டா..‘‘அதெல்லாம் ஜீனி வேலை!’’ம்பார் இந்த ‘ஜீனியஸ்’!

இன்னொரு சந்திப்புல..ஒரு பத்திரிகைக்கு ‘பொங்கல் ஸ்பெஷல்’ கட்டுரை எழுதிகிட்டிருந்தாரு. பேச்சுவாக்குல ‘‘தமிழர்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை என்ன?’’னு கேட்டாரு. ரெண்டு மூணு சொன்னேன். உதடு பிதுக்கினவரு ‘‘தின்பொருள் விக்கறவர்லேர்ந்து மென்பொருள்காரங்க வரைக்கும் அத்தனை தமிழர்களும் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘சூப்பர்’!’’னாரு. உடனே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘பாத்தீங்களா.. படுத்தறீங்களே’’ன்னாரு ர.சுருக்கமா!

‘மோதிரக்கையால குட்டுப்பட்டது’ங்கறதை மாத்தி ‘மேதையின் வாயால வெரிகுட்டு வாங்குனது’னு ஒரு சம்பவம் சொல்றேன். ‘குங்குமம்’ பத்திரிகைல ‘ஆ..அனுபவம்‘ங்கற தலைப்புல வெரைட்டியான அனுபவங்களை தொடரா எழுதிகிட்டிருந்தேன். அதுல ஒரு வாரம் ‘இப்படிக்கு நட்பு’னு ஒரு அனுபவம்!
ஆபீஸ்ல ஒரு மத்தியானம். திடீர்னு சிறப்பாசிரியர் ராவ் சார் கூப்பிட்டாரு. போனேன். ‘‘உங்க கட்டுரைய ரொம்ப நல்லாருக்குனு சுஜாதா பாராட்டினாரு!’’னு சொன்னாரு. அந்த நொடியில எனக்கு உண்டான பரவசத்தை ‘குண்டலினி யோகம்’கூட தந்திருக்காது! உடனே சுஜாதாவுக்கு ஃபோன் பண்ணேன். எடுத்தார்.

‘‘ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்களே பாராட்டினது’’னு நான் நீட்டி முழக்குனதை நறுக்குன்னு கத்தரிச்சவர் ‘‘அந்த கட்டுரை ரொம்ப நீட்டா..ஸ்வீட்டா இருக்கு.
பிரமாதமான ஸ்க்ரீன்ப்ளே. போதும் பத்திரிகை உத்தியோகம். உடனே சினிமா பண்ண கிளம்புங்க. ராவ் தடுப்பாரு. கண்டுக்காதீங்க. நாங்கள்ளாம் ‘பூட்ட கேஸு’.ஆல் த பெஸ்ட்!’’னு சொல்லி ஃபோன் ‘டொக்’. (இதே வாழ்த்தோடு மதன் சார் பேசுனது தனி பதிவுக்கு!)

‘சொர்க்கவாசல்’ திறக்கற ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிச்சாலும்.. ‘சொர்க்கம் நரகம்ங்கிறதெல்லாம் உட்டாலக்கடி’னு சொல்றவரு இந்த ரங்கராஜன். ‘‘இறந்த பிறகு சொர்க்கத்துக்கு போகணுமா.. நரகத்துக்கு போகணுமானு கேட்டா..நரகத்துக்கு டிக்கெட் வாங்கத்தான் எனக்கு விருப்பம்! ஏன்னா..சொர்க்கம் போரடிக்கும். படுசுவாரஸ்யமான மனிதர்கள்லாம் நரகத்துலதான் இருப்பாங்க!’’னு ஜாலியா சொன்னவரு சுஜாதா!எதுக்கும்..வரப்போற ‘தீபாவளி ஸ்பெஷல்’ பத்திரிகைகளை வாங்கி ஆற அமரப் படிங்க! ‘சொர்க்கம் நரகம்’னுகூட வினோதமான கட்டுரை எழுதியிருப்பார் அமரர் சுஜாதா!

பிபிசி இற்கு அனுமதி மறுப்பு,நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டை கிளிநொச்சியில்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டை கிளிநொச்சியில் பதிவு செய்ய பிபிசி இற்கு அனுமதி மறுப்பு

ஜனாதிபதி மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரால் இன்று கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆணைக்குழுவின் செயற்பாட்டை பதிவு செய்வதற்காக உள்ளூர் ஊடகங்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிபிசி போன்ற அனைத்துலக ஊடகங்களை அனுமதிக்கவில்லை.
பி.பி.சி இன்று கிளிநொச்சியில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் நிகழ்வில் ஊடக சார்பிலாக கலந்துகொள்வதற்காக, இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கிய விண்ணம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிட்டுள்ளது.
மேலும் அச் செய்தியில் தாம் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் தினத்தில் ஊடகத்தின் சார்பாக தாம் கலந்துகொள்ளவென விண்ணப்பித்த போது பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் அதனை நிராகரித்ததாகவும், அதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள சாந்தபுரம் மக்களை நல்லிணக்க ஆணைக் குழு இன்று சந்திக்கவுள்ளது.
இதனையடுத்து கரைச்சி மக்களையும் இந்தக்குழுவினர் சந்திக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலும் நல்லிணக்க ஆணைக்குழு மக்களை சந்தித்து அவர்களின் சாட்சியங்களை பதிவுசெய்துக்கொள்ளவுள்ளது
இதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை, கண்டாவளை பிரதேசத்திற்கு செல்லும் நல்லிணக்க ஆணைக்குழு பூநகரியிலும் மக்களை சந்தித்து சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை நல்லிணக்க ஆணைக்குழு முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளது.

எந்திரன் விமர்சனம் (டிரைலர்)

எல்லா ஊரிலும் செட்டப் செய்த பால் அபிஷேக ரசிகர்கள், கொடுத்த காசுக்கு நன்றாகவே அபிஷேகம் செய்து ஆடிப் பாடினார்கள்.
ரஜினி ராம்கி எந்த ஃபிரேமிலும் வரவைல்லை ஏனோ ? விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பதில் ரஜினி பட போஸ்டர்கள் விடாமல் பால்குடித்துக்கொண்டிருந்தன
சிடி வெளியீட்டைப் போலவே இங்கும் கருணாஸ், லாரன்ஸ் ராகவேந்திரா என்று வரிசையாக பலர் செஞ்சோற்றுக் கடன் கழித்தார்கள். ரஜினி பட விழாவுக்கு கருணாஸ் தான் கிடைத்தாரா ? ஏன் பெண்கள் யாரும் வரவில்லை ? அதே போல கலந்துக்கொண்டு பேசியவர்கள் எல்லோரும் ஆண்கள். ரொம்ப வெறுப்பேத்திவிட்டார்கள்


டிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும் என்று நாமும் கொஞ்சம் யோசித்ததின் விளைவு இந்த விமர்சனம். படம் வந்த பிறகு இந்த விமர்சனத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.

விஞ்ஞானி என்றால் ஃபிரென்ச் தாடி வைத்துக்கொள்ள வேண்டும்; அதனால் ரஜினியும் வைத்துக்கொள்கிறார். (ப்ரென்ச் தாடியில் கிழத்தனம் கொஞ்சம் மறைந்து/குறைத்துத் தெரியும் என்பது கூடுதல் நன்மை.) அதுலும் கொஞ்சம் வித்தியாசமான ஃபிரன்ச் தாடி. ஸ்டைல் வேண்டாமா ? மேக்கப் அருமை!.
விஞ்ஞானியாக வரும் ரஜினி (வசீகரன்) 10 வருட உழைப்பில் "சிட்டி" என்ற எந்திர மனிதனை உருவாக்குகிறார். பரதம் முதல் குங்குஃபூ வரை எல்லாம் அதற்குத் தெரியும். ஆனால் அதற்கு மனிதனின் பொய், வஞ்சகம், பொறாமை, துரோகம், காதல் எதுவும் தெரியாது. இதை நான் சொல்லவில்லை, விஞ்ஞானி ரஜினியே சொல்லுகிறார்.

உருவாக்கிய எந்திரனை இப்போது ஊரில் உலாவவிடுகிறார் ரஜினி. அங்கே சில காமெடிக் காட்சிகள் நடக்கின்றன. உதாரணம் "வயசு என்ன?" என்ற கேள்விக்கு, "ஒரு நாள்" என்ற பதிலும், அதே போல "நக்கலா?" என்ற கேள்விக்கு "நிக்கல்! எல்லா போல்ட்டும் நிக்கலில் செய்தது" என்ற வசனத்துக்கும் நிற்காத கைத்தட்டல்.

ஐஸ்வர்யா ராய் பல இடங்களில் (தன்)வயதுக்கு ஏற்றாற்போல் சகிக்க முடியாமலும், சில இடங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாதிரி கொஞ்சம் அழகாகவும் இருக்கிறார்.

தமிழ் படத்தில் மின்சார ரயில் வந்தால் அங்கே ரவுடிகள் வர வேண்டும். அங்கே அப்படி ரவுடிகள் வரும் போது ஓமக்குச்சி நரசிம்மனுக்கே கோபம் வரும்; எந்திரன் ரஜினிக்கு வராமல் இருக்குமா? வருகிறது. ரயிலின் பக்கவாட்டில் நடந்து வந்து எல்லோரையும் அடிக்கிறார். ரஜினி எதைச் செய்தாலுமே தமிழக மக்கள் நம்பத் தயாராகிவிட்ட நிலையில் எந்திரன் ரஜினி செய்தால் நம்பாமல் இருப்பார்களா? கைத்தட்டிக் கொண்டாடுகிறார்கள். கிராபிக்ஸ் கலக்கல். அதுவும் ரயில் பக்கம் இருக்கும் மின்சாரக் கம்பங்களில் தாவித் தாவி வரும் காட்சிகள் அயல்நாட்டில் நடக்கும் காமென் வெல்த் போட்டி பார்த்த எஃபெக்ட்!

முதன்முதலில் எந்திரன் கற்றுக்கொண்ட மனித அறிவு(?!) இது. இதற்குப் பிறகு விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட சாராவுக்குக் (ஐஸ்வர்யா ராய்) கோபம் வருகிறது. எந்திரன் தன் வேலையை ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யாவைப் பார்த்து பாவப்படுகிறது. ஐஸ்-உடன் கொஞ்சிக் கொஞ்சி பேசுகிறது, டூயட் பாடுகிறது. சாராவுக்கு எந்திரன் ரஜினி மேல் காதல் வருகிறது. எந்திரனுக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் எந்திரன் விஞ்ஞானி ரஜினியிடம் எனக்கு சாரா வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. "உன்னை உருவாகினவன் நான். இதற்குப் பேர்தான் தூரோகம்!" என்று ரஜினி கோபப்படுகிறார். "எனக்கு சாராவை விட்டுக்கொடு. அதற்குப் பேர்தான் தியாகம்" என்று பதிலுக்கு பன்ச் பேசுகிறது எந்திரன்.

இந்தக் குழப்பத்தில் வில்லன் என்று எக்ஸ்ட்ராவாக யாராவது வந்து மேலும் தொல்லையும் நெருக்கடியும் கொடுத்தால்தான் நமக்கு நன்றாக இருக்கும். அதனால் ரஜினியின் சக விஞ்ஞானி இவரை வீழ்த்த என்ன செய்யலாம் என்று யோசிக்க, எந்திரனைத் தன்வசப்படுத்துகிறார். அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார். இந்த இடத்தில் ஹெலிக்காப்டர் எல்லாம் வருகிறது.

இனி என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். சில காட்சிகள் ஸ்பைடர் மேன், ரோபோ காப் போன்ற படங்களை நினைவுப்படுத்தி ஹாலிவுட் தரத்தில் என்ற சொல்லுக்கு ஏற்றார்போல படம் இருக்கிறது.படம் எங்கே, எப்படிச் சுற்றினாலும் கிளைமாக்ஸ் காட்சிக்கு தமிழனை தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுத் தான் தியேட்டர் வெளியே அனுப்ப முடியும். எனவே...கிளைமாக்ஸ் காட்சிகளை வெள்ளித்திரையில் காணவும்.

ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள்: ஆலய போராட்டம்,அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள்:

மதுரை: ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் கூறியதாவது,

தமிழகத்தில் 240 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரையும் அர்ச்சகர்களாக்கக் கூடாது. மற்ற சாதியைச் சேர்ந்தவரகளால் அர்ச்சகர் பணியை சிற்ப்பாகச் செய்யமுடியாது என்று மதுரை பட்டர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதற்குப் பின்னர் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போகிறது. அதனால் தான் அர்ச்சகர் பயிற்சி முடித்தும் பணிபுரிய முடியாமல் தவிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அர்ச்சகராக முழுத் தகுதியுள்ள நாங்கள் மதுரையில் ஆலய நூழைவுப் போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும், மதுரை மீனாட்சி அம்மனுக்கும் பூஜைகள் நடத்தவிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
பதிவு செய்தவர்: கடவுள்
பதிவு செய்தது: 17 Sep 2010 11:12 pm
பெண்கள் பாதிரியாறகும் போராட்டமும், பெண்கள் பள்ளிக்கு சென்று தொழும் போராட்டமும் சேர்ந்து செய்தால் சமுதாயத்திற்கு நன்மை உண்டாகும்
எதை எடுத்துக் கொண்டாலும் கருணாநிதி பாதிக் கிணறு தாண்டுபவராகவே இருக்கிறார்.

பதிவு செய்தவர்: அலக்ஸ்
பதிவு செய்தது: 17 Sep 2010 8:54 pm
அர்ச்சகர் படிப்பை முடித்தவர்கள் எத்தனையோ கிராம கோயில்கள் கவனிப்பரட்ட்று உள்ளதை வழிபடத்தக்க வகையில் நித்ய பூஜை செய்யலாமே. இவர்கள் பணம் சம்பதிப்பதர்ககத்தான் பெரிய கோயில்களில் வேலை கேட்கிறார்கள். எத்தனையோ கிராம கோயில் அர்ச்சகர்கள் தங்கள் தொழிலை ஒரு தவமாக இன்றும் செய்கின்றனர்.

பதிவு செய்தவர்: பிந்திரன்வாளி
பதிவு செய்தது: 17 Sep 2010 8:14 pm
இந்த சக்கர நாய்னாலே எல்லாமே நசாமாப்போச்சு....

பதிவு செய்தவர்: god
பதிவு செய்தது: 17 Sep 2010 7:55 pm
poori jagannathar kovilil yella sathiyinarum poojai seikirarkal. visarikkavum

பதிவு செய்தவர்: ஆஹா
பதிவு செய்தது: 17 Sep 2010 6:07 pm
nallathu.ivvare piramanarkalum anaithu kalloorikalilum ida othukkeetukku ethiraaka porada munvara vendum.

பதிவு செய்தவர்: கொம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 5:07 pm
பி.ராமணர்கள் இந்தியாவில் இருக்கும் வரை நீங்கள் கோவில் உள்ளே போகமுடியாது , அப்படி போனால் கோவிலில் நடக்கும் உண்மை நிலை பொது மக்களுக்கு தெரிய வரும் வெறும் கல்லை வைத்து ஏமாற்றியது அ.யோக்கிய பச.ங்கள் .
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 5:48 pm
நான் பிராமின் அல்ல. அதற்காக நான் கோவிலின் கர்ப்பக் கிரகம் வரை சென்று பூஜை செய முடியவில்லையே எனற கவலையும் இல்லை. கடவுளே பொய். கல்லால் கடவுளின் அடையாளமும் பொய், உருவமில்லாத கடவுளும் பொய். கடவுள் என ஒருவன் இருந்தால் எதற்கு அவனுக்கு வழிபடும் இடங்கள். அதோடு இந்த இடத்தில் என் கடவுள் இருந்தான், அவன் அதை இடித்தான் என்ற ஈனச்சண்டைகள். அதென்ன என் கடவுள் உன் கடவுள். கடவுளுக்கு எவன் பெயர் வைத்தான். மனிதன் தான் கடவுளை உருவாகினான்.
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 5:50 pm
ஒருவன் கல்லை வைத்து ஏமாற்றுகிறான் இன்னொருவன் எல்லாமே ஒரு புத்தகம் என்று ஏமாற்றுகிறான். எல்லாமே புரட்டு. அண்ணல் அம்பேத்கார் தழுவிய கடவுளே இல்லாத புத்த மதமே சிறந்தது. கடவுள் இல்லை, கடவுளை கும்பிடுபவன் முட்டாள், கற்பித்தவன் காட்டு மிராண்டி, கடவுளை பரப்புபவன் அயோக்கியன் என்று பெரியார் சொன்னதே உண்மை.
பதிவு செய்தவர்: ஆஹா
பதிவு செய்தது: 17 Sep 2010 6:13 pm
unmaiyil e ve raavum avarathu valiyil selbavarkalumthaan ayogiyarkal.criminal database ai aaivu seithaal athu puriyum.
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 6:28 pm
நல்லது ஆஹா என்ற பெயரில் எழுதியவனே, யார் நல்லவர்? கலைஞரா? ஜெயலலிதாவா? பேரரசிரியர் அஃப்சல் குருவா?
பதிவு செய்தவர்: ஆஹா
பதிவு செய்தது: 17 Sep 2010 6:19 pm
என்னமோ கோயிலுக்கு உள்ள பிராமணர்கள் மட்டும்தான் போற மாதிரி எழுதி இருக்க.
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 6:26 pm
தேவநாதன் போன்ற குருக்கள் தயவு இருந்தால் யாரும் செல்லலாம். கோவில் கூடாது என்று சொல்லவில்லை கோவில் கொடியவர்கள் கூடாரம் ஆகக் கூடாது என்று சொல்கிறேன்.
பதிவு செய்தவர்: aha
பதிவு செய்தது: 17 Sep 2010 6:29 pm
adap paavi ...dei meenatchi amman koilukku ayirakkanakkaana makkal thinam varukiraarkal.first koilukku yaaru pokiraarkal endru therinthu kol.piraku comment eluthu.
பதிவு செய்தவர்: கடம்பன்
பதிவு செய்தது: 17 Sep 2010 7:29 pm
நான் கோவில் என எழுதியது கோவிலின் கர்ப்பக் கிரகத்தை. வழிபாட்டு இடங்ககளில் வழிபடும் மக்கள் பெரும்பாலானோர் எந்த மதமானாலும் இனவெறியர் அல்ல. ஆனால் எந்த மதத்துக்கும் சில வெறி பிடித்த தலைவர்கள் உள்ளனரே!!

அமெரிக்காவில் 2.5 லட்சம் வேலைகளை உருவாக்கிய இந்திய ஐ.டி. நிறுவனங்கள்

இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களால் கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

சென்ற ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 7,000 அமெரி்க்கர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இந்த தகவலை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

டி.சி.எஸ், இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் வலுவாக காலூன்றி அந்நாட்டிம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்க அரசு, இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் வகையில், எச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.

இது குறித்து ஆனந்த் சர்மா கூறுகையில், பொருளாதார மந்தநிலையின்போது, உள்நாட்டில் வேலைவாய்ப்பு குறைவதை தடுப்பது எந்த நாடும் எடுக்கும் இயல்பான நடவடிக்கை தான். அதே நேரத்தில் பிற நாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.

மாவோயிஸ்டுகள் பழங்குடியின மக்களுக்காக எதுவும் செய்யவில்லை

மாவோயிஸ்டுகள் சாதித்தது என்ன?
- நிர்மலன்சு முகர்ஜி
இதுநாள் வரையிலும் மத்திய இந்தியாவிலுள்ள தண்டகாரண்யா பகுதியில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளும், அணுகுமுறையும் எப்படி இருக்கிறது என்று புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இப்போது அவர்களின் இரண்டு மூத்த தலைவர்கள் மற்றும் இரண்டு ஆதரவாளர்கள் எழுதியுள்ள ஆவணங்கள் கிடைத்துள்ளது. இந்த நான்கின் அடிப்படையில் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மாவோயிஸ்டுகள் இப்பகுதியில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ள முடிகிறது. அரசு கடந்த காலத்தில் பழங்குடியின மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இவர்கள் ஆதிவாசிகளின் நலனுக்காக ஏதேனும் செய்திருக்கிறார்கள் என்பதைவிட ஆதிவாசிகளை தங்களுடைய ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
ஆவணம்
மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள மேலே குறிப்பிட்ட நான்கு ஆவணங்களில் இரண்டு, மாவோயிஸ்டுகளை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இரண்டு அறிவு ஜீவிகளுடையது. இந்த இருவருமே மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதியின் உள்ளே சென்று அவர்களிடம் கிடைத்த தகவல்களை சேகரித்து வந்திருக்கிறார்கள். இந்த இரண்டு ஆவணங்களும் 2010ல் வெளியானது. ஒருவர் அருந்ததி ராய், மற்றொருவர் நவ்லக்கா. மற்ற இரண்டு ஆவணங்களை பொறுத்தமட்டில் இந்த ஆண்டில் மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளர் கணபதி மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் ஆசாத் ஆகிய இருவரின் பேட்டி. அறிவு ஜீவிகள் எழுதியுள்ள இரண்டு நீண்ட கட்டுரைகளிலும் மாவோயிஸ்டுகளின் அடிப்படையான நோக்கங்களை அவர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை.
2009ல் அருந்ததி ராய் விமர்சனப்பூர்வமான சில குறிப்புகளை எழுதியிருந்தார். இப்போது அது இல்லை. மேலும் இந்த இரண்டு பேரும் எழுதியுள்ள கட்டுரைகளில் அவர்களின் அரசியல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவை நேரிடையாக மாவோயிஸ்டுகளின் நோக்கங்களையும் நடைமுறையையும் ஆதரிப்பவையாக இருக்கின்றன. இந்திய அரசின் மாவோயிஸ்டுகள் மீதான விமர்சனத்திற்கு அப்பால் இந்த கட்டுரையானது மாவோயிஸ்டுகள் மற்றும் மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் ஆவணங்களை அடிப்படையாக கொண்டது. மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் ஆசாத் “மக்களின் நலன்தான் மாவோயிஸ்டு போராளிகளின் முன்னுரிமை கடமை” என்று தெரிவித்திருக்கிறார். கிஷன்ஜி என்கிற கோடீஸ்வர ராவ் தன்னுடைய கட்சி “பொதுமக்களின் பொது நன்மைக்காக” பணி செய்வதாக தெரிவித்திருக்கிறார். இவை இரண்டையும் பார்க்கிற போது மாவோயிஸ்டுகள் பஸ்தார் காடுகளுக்குள் உள்ள ஆதிவாசி மக்களின் பொது நன்மைக்காக செயல்படுவதாக தோன்றும். மாவோயிஸ்டுகள் இந்த காடுகளுக்குள் 25 ஆண்டுகளுக்கு முன்பாக தளம் அமைத்துக்கொண்டனர். 2005ம் ஆண்டில் தான் அவர்கள் மீது அரசின் தாக்குதல் தொடங்கியது. முந்தைய 25 ஆண்டுகளில் இந்த பகுதியில் அவர்கள் கால் ஊன்றிய தோடு அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த கால் நூற்றாண்டு காலத்தில் அவர்கள் ஆதிவாசிகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அரசியல்வாதி லண்டனில் படுகொலை

பாகிஸ்தானில் ஒரு காலத்தில் இயக்கத்தில் இருந்த முத்தாகிதா குவாமி அரசியல் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த இம்ரான் ஃபரூக் என்பவர் லண்டனில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே மர்மமான முறையில் கொலையுண்டு கிடந்ததாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

1992ஆம் ஆண்டு முதல் இவர் லண்டனில் வசித்து வருவதாகவும் அதன் பிறகு அவர் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை என்றும் தெரிகிறது.

முத்தாகிதா குவாமி இயக்கம் கராச்சியில் பெரிய அரசியல் கட்சியாகவே ஒரு காலத்தில் இருந்தது. மேலும் இந்தக் கட்சி தாலிபன்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

1947ஆம் ஆண்டு நடந்த பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து உருது பேசும் இஸ்லாமிய மக்கள் கராச்சியில் குடிபெயர்ந்தனர். இந்தக் கட்சியில் இவர்கள் அதிகம் இருந்தனர்.

தாலிபானுக்கு எதிரான முத்தாகிதி குவாமி கட்சியின் நிலைப்பாடு பொதுவாக பாஷ்டூன் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டின் ஒரு விரிவே என்று அப்பொது இந்தக் கட்சி மீது ஒரு குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

லண்டனுக்குத் தலைமறைவான கொலையுண்ட இம்ரான் ஃபரூக், 1992ஆம் ஆண்டு தன்னை தவறாக பயங்கரவாதி என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது என்றும் இதனால் தான் லண்டனுக்குச் செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

‘உரைகல்’ வாராந்தப் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

இச்சம்பவம் 13ஆம் திகதி நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடியில் அமைந்துள்ளது இப்பத்திரிகை அலுவலகம். ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் ஒருவரே இத்தாக்குதலுக்குப் பின்னால் உள்ளதாக பத்திரிகையின் ஆசிரியர் ரஹ்மத்துல்லா தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு அமைப்பில் நடைபெற்ற ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிட்டதாலேயே தனது பத்தரிகை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாக ’விகல்ப’ எனும் இணையத்தளத்திற்கு ’உரைகல்’ ஆசிரியர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 2009ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி ரஹ்மத்துல்லாவின் வீட்டை உடைத்து அவரைத் தாக்கிய ஆயுததாரிகள் அவரைக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி இருந்ததாகவும், பொலிஸில் அவர் முறைப்பாடு செய்திருந்தும் பொலிஸார் அது குறித்து எதுவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே நடைபெற்ற தாக்குதல் குறித்து பொலிஸில் முறையிட்ட போதும் பொலிஸார் எதுவித நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால் இம்முறை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ரஹ்மத்துல்லா பொலிஸில் தான் முறையிடவில்லை எனவும் தெரிவித்தார்.

கொத்தணி முறையில் 1000 வீடுகள் முதற்கட்டம்; 10,000 வீடுகள் புனரமைப்பு

வடக்கில் மீள் குடியமரும் மக்களுக்கு இந்தியா வழங்கும் ஐம்பதாயிரம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படு வதுடன் பத்தாயிரம் வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
நிர்மாணப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் வடக்கில் ஆரம்பிக்கப்படு மென்றும் அவர் தெரிவித்தார்.
முதற்கட்டத்தில் ஆயிரம் புதிய வீடுகள் கொத்தணி முறையில் நிர்மாணிக்கப்படுவ துடன் பத்தாயிரம் வீடுகளைப் புனரமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். பத்தாயிரம் வீடுகளைத் திருத்தும் பணிகள் ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். புதிய வீடுகளை அமைக்கும் முதற்கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஐம்பது வீடுகள் வீதம் இருநூறு வீடுகள் நிர்மாணிக்கப்படும். அத்துடன் 1250 வீடுகள் புனரமைப்புச் செய்யப்படும்.
வீடு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவென இந்திய நிறுவனமொன்றின் அதிகாரிகள் இலங்கை வருவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், இந்தத் திட்டத்திற்கான முழுமையான ஆளணி வளத்தை இலங்கை அரசு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப உதவிகளை மாவட்டச் செயலகம் வழங்கும். நிர்மாணப் பணிகளைப் பொறுப்பேற்றுள்ள நிறு வனம் மேற்பார்வை செய்யும் என்றும் அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார்.
வீடமைப்புத் திட்டத்தை முன்னெ டுக்கவென அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய மட்டங்கள் என மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
வீடுகளைப் புனரமைப்பதற்கென இரண்டு இலட்ச ரூபாயும் புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஐந்து இலட்ச ரூபாயும் வழங்கப்படுமென குறிப்பிட்ட அரசாங்க அதிபர், நிர்மாணப் பணிகளுக்கான வரைவாவணங்கள் தயாரிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பயணாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்திற்கு ஏழாயிரம் புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புனரமைப்புப் பணிகள் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். பயணாளிகள் விரும்பினால் மேலதிகமான விரிவாக்கத்தினைச் செய்துகொள்ள முடியும். வவுனியாவில் சுமார் இரண் டாயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய் யப்பட வேண்டியுள்ளது.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கமல் மகள் ஸ்ருதி: 90 சதவீதம் பார்வையற்ற பெண்ணாகவே வாழ்கிறேன்.

நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி, தனக்கு பார்வைக்கோளாறு இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  இது உண்மையா? இல்லை ஸ்ருதிஹாசன் பெயரில் வேறு யாரும் இப்படி செய்துள்ளனரா என்பது தெரியவில்லை
நடிப்பு, இசை, நடனம் என பல்துறைகளில் சிறந்த விளங்கிவருகிறார் ஸ்ருதி ஹாசன்.   இவர் தற்போது தமிழில் ‘7ம் அறிவு’ மற்றும் இந்தியில் ‘தில் டோ பச்சா ஹை ஜி’ படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி,  தனது டுவிட்டர் பக்கத்தில், ’என்னை பொருத்தவரை 90 சதவீதம் பார்வையற்ற பெண்ணாகவே வாழ்கிறேன். கண்ணாடி அணியாமல் 2 சென்டி மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருளைக்கூட பார்க்க முடியாது.
 யாருக்கும் நான் வாழ்த்து சொல்வது கிடையாது. அப்படி சொல்லும் நபர் வேறு ஆளாக இருக்கும்பட்சத்தில் அவரிடம் மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டி உள்ளது. நேற்றுகூட தவறான நபருக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன்.

மேலும் கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல் நடந்து சென்றேன். இது எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. எது எப்படியோ மூக்கு கண்ணாடியும், கான்டக்ட் லென்சும் பல்லாண்டு வாழ்க’’என்று எழுதியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சமீபகாலமாக த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டு அவர்களைப் பற்றியே இழிவாக எழுதுவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஸ்ருதிஹாசன் அப்படி நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.

மலேசியா...சென்னை சினிமா பைனான்சியர்...கதி என்ன?

சென்னை: மலேசியாவில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் உயிரோடு இருப்பதாகவும், அவர் உறவினர்களால் சிறை வைக்கப்பட்டு்ள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா பைனான்சியரான முத்துராஜா (38) சென்னை ராமபுரத்தில் வசித்து வந்தார். நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டத் தலைவராகவும் இருந்து வந்தார்.

மலேசியாவில் உள்ள தனது சகோதரர்களான சுரேந்தர், பத்மநாபன் ஆகியோரை சந்திக்க சமீபத்தில் அங்கு சென்றார்.

ஆனால், நாடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி உஷாராணி மலேசியா சென்று போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே முத்துராஜா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.

ஆனால், முத்துராஜா கொலை செய்யப்படவில்லை என்றும், மலேடசியாவி்ல் உள்ள அவரது உறவினர்கள் அவரைக் கடத்தி வைத்துள்ளதாகவும் எனவும் முத்துராஜாவின் மனைவி உஷாராணி கூறினார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உஷாராணி முத்துராஜாவின் 2வது மனைவி என்றும், முத்துராஜாவுக்கு ராமலட்சுமி என்ற மனைவி இருப்பதும் தெரியவந்தது.

ராமலட்சுமி செங்கோட்டையில் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். அவர் கூறுகையில்,
முத்துராஜாவுக்கும் எனக்கும் கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அவர் தொழில் விஷயமாக பல நாடுகளுக்கு சென்று வருவார். எங்கு செல்கிறார் என்பதை என்னிடம் கூறமாட்டார்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று எனது கணவரை கடைசியாக பார்த்தேன். பிறகு சென்னை சென்றவர் அதன் பிறகு வரவே இல்லை.

அவர் மலேசியாவில் இருப்பதாகவும், உஷாராணி என்ற காதலி இருப்பதாகவும் சிலர் கூறினார்கள். இந் நிலையில் எனது கணவர் முத்துராஜா கொலை செய்யப்பட்டதாக பத்திரிக்கைகளில் தான் செய்தியைப் பார்த்தேன்.

ஆனால், அவர் கொலை செய்யப்படவில்லை. உயிரோடுதான் இருக்கிறார் என்று மாமனார் கூறியுளளார். எனவே எனது கணவரை கண்டுபிடித்து தருமாறு முதல்வர் கருணாநிதிக்கு மனு அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

சரத்பொன்சேகாவுக்கு 3 வருட சிறைதண்டனை பரிந்துரை

இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும்,  தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த ராணுவ கோர்ட் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க பரிந்துரை செய்துள்ளது
சரத்பொன்சேகா மீது ஆயுத மோசடி உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்த நான்கு குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப் பட்டதையடுத்து,  அவருக்கு  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பில் 3 வருட சிறை தண்டனை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உறுதிப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐநா சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தற்போது நியூயார்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, நாடு திரும்பிய பின்னர், இந்த தீர்ப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியத் தலைவர்தானே முதல் குற்றவாளி, துரோகி?சதா ஆயுதங்களுடன் காட்சி தருவது உதைக்குதே?

கனடா உலகத்தமிழர் இயக்கஊழியர்களால்தொடரும் காட்டிக் கொடுப்புகளும் கைதுகளும்

(திகதி: 16.09.2010) (நன்றி: சங்கதி இணையத்தளம்)

அன்பான உறவுகளே!
எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் சங்கதி இணையத்தளமானது பெரும் சவால்களுக்கும், சதிகளுக்கும் நடுவே பயணித்துக் கொண்டிருப்பதை வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிப்பட்ட நபர்களை தாக்குவதோ அல்லது அவர்களை குறை கூறுவதோ தமிழீழ தேசிய ஊடகமான சங்கதியின் நோக்கமல்ல. ஆனால் தமது இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் சிலரது தவறான செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவது தவிர்க முடியாதது ஆகின்றது. இதனை பலமுறை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இருப்பினும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்கள் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக கனடா உலகத்தமிழர் ஊழியர்கள் சிலரால் காட்டிக் கொடுப்புக்களும் கைதுகளும் தொடர்ந்தவண்ணமுள்ளன. இதை நாம் இனியும் கண்டும் காணாது இருக்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இவற்றை வெளிக் கொணர்வதின் மூலம் தமிழீழத் தேசியத் தலைவரினால் கட்டியெழுப்பப்பட்ட உலகத்தமிழர் இயக்கத்தினுள் கடந்த பல வருடமாக பெருந்தொகைப் பணத்தினை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு செயற்பட்டுவரும் ஒரு சிலரின் தவறான போக்கை மக்கள் முன் கொண்டுவருவது எமது தலையாய கடமையாகவுள்ளது.

கனடா உலகத்தமிழர் இயக்கம் என்பது ஒரு தேசிய இயக்கத்தின் கிளை. இந்த இயக்கத்தை குறை கூறுவதோ அல்லது சேறு பூசுவதோ எமது நோக்கமல்ல. இந்த இயக்கம் தொடர்ந்தும் எமது கனடிய மக்களை வழிநடத்தப்போகும் இயக்கம். இந்த இயக்கத்தைத் தவிர வேறு யாரும் கனடிய மக்களை வழி நடாத்துவதற்கு தகுதியானர்வர்கள் அல்ல. அதற்கு நாம் அனுமதிக்கப் போவதும் இல்லை என்பதில் எமக்குள் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்த புனிதமான இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி பலர் எமது மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது.
இப்படியான சிலரை அடையாளப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும் போது கனடா உலகத்தமிழர் இயக்கம்; என்கிற அமைப்பை நாம் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
இனிமேல்
விடயத்துக்கு வருவோம்.

காட்டிக் கொடுப்புகளும் கைதுகளும்

முதலாவது காட்டிக் கொடுப்பு:

2004ம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற மாபெரும் எழுச்சி நிகழ்வான பொங்குதமிழ் நிகழ்வு இலங்கை அரசை மட்டுமல்ல உலக அரசுகளையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு. பல லட்சம் மக்களை ஒரே திடலில் ஒன்று கூட வைத்து உலகத்தின் மனசாட்சியை தட்டியெழுப்பிய நிகழ்வு. அந்த நிகழ்வை தலைமையேற்று நடத்தியவர் சதா என்கிற இளைஞன். பல நூற்க்கணக்கணக்கான கல்லூரி மாணவர்களை தன்னோடு இணைத்து திறமையான ஆளுமையோடு செயற்பட்ட இந்த இளைஞன் தான் இவர்களின் காட்டிக் கொடுப்புக்கு இலக்கான முதலாவது இளைஞன்.

காட்டிக் கொடுப்புக்கான காரணம்:

2004ம் ஆண்டு காலப் பகுதியில் உலகத் தமிழருக்கு பொறுப்பாக இருந்த மரியதாஸ் அவர்களின் காலப்பகுதியில் தான் கனடாவில் பொங்கு தமிழ் எனும் சரித்திர நிகழ்வு பதிவானது. இந்த நிகழ்வினை நடத்துவதற்கு இளையோர் ஆகிய சதா மற்றும் அவரது நண்பர்களிடம் மரியதாஸ் அவர்கள் இப் பொறுப்பைக் கொடுத்திருந்தார். இந் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறிய சில மாதங்களின் பின் தனது குடும்பச்சுமை காரணமாக மரியதாஸ் அவர்கள் தாமாகவே உலகத்தமிழர் பொறுப்பாளர் பதவியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் என்கிற கிராஞ்சி பொறுப்பாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் தான் காட்டிக் கொடுப்புக்களும் கைதுகளும் ஆரம்பமாகின. தமிழ் பொறுப்பாளராக பொறுப்பெடுத்த சில மாதங்களின் பின் மதன் என்கிற இலங்கை அரசின் உளவாளி உலகத்தமிழருக்குள் உள்நுழைந்தான். தான் தேசியத் தலைவரின் நேரடி செயற்பாட்டில் இயங்குவதாக கூறிக்கொண்டு உள் நுழைந்த இவனை வன்னியுடன் உடனுக்குடன் தொடர்கொள்ளக்கூடிய வசதிகள் இருந்தும் இவர்கள் இதுபற்றி வன்னித் தலைமைக்கு தெரிவிக்கவில்லை.

அவன் சுமார் 3 மாதங்கள் உலகத்தமிழர் அலுவலகத்துக்குள்ளேயே இருந்து கொண்டு அனைத்து செயற்பாடுகளின் விபரங்களையும் பெற்று இலங்கை அரசுக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இந் நிலையில் தான் இவன் இலங்கை அரசின் உளவாளி என்பதை கண்டு பிடித்தவர்தான் சதா. இப் பாரிய தவறினால் தமக்கு தலைமையிடமிருந்து சிக்கல்கள் வரப்போகின்றதென்பதை அறிந்த, தமிழ், கமல், அருமை மற்றும் கண்ணன் (யு1) ஆகியோர் சதாவை துரோகிப்பட்டம் சுமத்தி வெளியே விட்டார்கள். ஆனால் பொங்கு தமிழ் நிகழ்வின் ஏற்;பட்ட எழுச்சிக்குக் காரணமாக இருந்த சதாவை சிறிலங்கா உளவுத்துறை எப்படியாவது செயற்பாட்டிலிருந்து முடக்குவதற்கு சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தது.

கனடிய இறையாண்மைக்கு எதிராக செயற்படாத சதாவை எந்தக்குற்றச் சாட்டிலும் கைது செய்ய முடியாது என்பதை அறிந்த சிறிலங்கா அரசு அவரை கனடாவிற்கு வெளியே வரும் போது கைது செய்யவேண்டுமென்று காத்திருந்தது. சதாவினால் தமக்கு பிற்காலத்தில் பிரச்சனை வரும்; என்பதற்காக அவரை எப்படியாவது மாட்டிவிட வேண்டுமென்பதில் இவர்களும் குறியாக இருந்தார்கள்.

இந்நிலையில் சதா அமெரிக்கா செல்லவேண்டிய ஒரு தருணம் வந்தது. ஆனால் சதா அமெரிக்கா வந்தால் அவர் கைது செய்யப்படுவார் எனவே அவரை அமெரிக்காவிற்கு வரவேண்டாம என சொல்லும் படி அமெரிக்க நண்பர் ஒருவர் உலகத்தமிழர் ஊழியர் அருமைக்கு தெரிவித்திருந்தார். இத் தகவலை அருமை கமல் ஊடாக உ.த. பொறுப்பாளர் தமிழுக்கு சொல்லியிருக்கிறார்.
ஆனால் இந்த மூவரும் இத் தகவலை சதாவிற்கு சொல்லாமல் விட்டதோடு மட்டுமன்றி சதா அமெரிக்காவிற்கு விடுதலைப்புலிகளின் ஆயுத முகவராக வருகிறார் என சொல்ல வேண்டியவர்ளுக்குச் சொல்லிப் போட்டுக் கொடுத்தார்கள். அதன் பயன் என்ன? திருமண வயதில் உள்ள இரண்டு தங்கைகள், உடல்நிலை முடியாத தந்தை, தாய் ஆகியோரைப் பார்க்க வேண்டிய இந்த இளைஞனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

இத்தோடு முடிந்ததா இவர்களின் காட்டிக் கொடுப்புக்கள்? தற்போது அரவிந்தன் என்கிற இன்னொரு இளைஞன்!

இந்த இளைஞன் செய்த தவறு என்ன? உலகத்தமிழர் ஊழியர் கமலிடம் கேள்வி கேட்டது. இவரை காவல்துறையிடம் மாட்டிவிடுவதற்கு அவர் கேட்ட கேள்விதான் என்ன?
நாடுகடந்த அரசு என்றும் மக்களவை தேர்தல் என்றும் நடாத்தி பல லட்சக்கணக்காண மக்களின் பணத்தை விரயப்படுத்துகிறீர்களே, அதை விடுத்து எம் இன விடுதலைக்காக பல ஆண்டுகள் களமாடி இன்று சிறிலங்கா அரசின் பிடியில் இருக்கும் எமது பல்லாயிரக்கணக்கான போராளிகளையும், திறந்த வெளிச் சிறையிலே அடைபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் விடுவிப்பதற்கு ஏதாவது செய்யாமல் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்பது தான் இவர் கேட்ட கேள்வி. இது தேசவிரோதமா?

தங்கள் இருப்புகளை தக்கவைப்பதையே குறியாகக் கொண்ட உலகத்தமிழர் ஊழியர் தமிழ், கமல், அருமை ஆகியோர் ஏன் இதற்கு பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். இத்தனை ஆண்டு காலமாக எந்த அமைப்புக்கு தாம் சேவை செய்து வந்தோமோ, எந்த அமைப்பினால் சுகபோக வாழ்வை அனுபவித்தோமோ என்பதை மறந்து, அதற்கு பதிலாக அந்த இளைஞன் தம்மை தாக்க வந்ததாகவும், ஈழ தமிழர்களின் கனவாகிய தமிழ்ஈழ தேசத்தை கட்டியெழுப்ப போராடிய அமைப்பின் போராட்டங்களில் பங்கேற்றுக்கொண்டார் என்றும் கூறி அரவிந்தனை கைது செய்யபட வைத்துள்ளார் உலகத்தமிழர் ஊழியர் கமல்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் நடைபெற்ற பல ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில, “உலகமே எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்;” என பதறியடித்த பல்லாயிரக்கணக்காண உறவுகளில் இந்த அரவிந்தனும் ஒருவன். எம்மால் காப்பாற்ற முடிந்ததா? அந்த வேதனையும் சோகமும் என்றுமே ஒரு உண்மையான தமிழனின் நினைவை விட்டு அகலாது. நாங்கள் தான் அமைப்பு என்று கூறிக்கொண்டு, இலங்கை அரசுக்கு எதிரான எந்தவொரு கவனயீப்புப் போராட்டங்களையும் நடத்தாது, உணர்வுள்ள தமிழ் சமூகத்தையும் நடத்தவிடாது தடுத்துக் கொண்டிருந்தால் யார் தான் கேள்வி கேட்க மாட்டார்கள்?

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
(சங்கதிக்காக அற்புதன்)

எமக்குள் கிளம்பும் சில கேள்விகள்? - சாகரன்
பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்கள் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக என்று பார்த்தால் என்றும் ஏகபோகத்தை விரும்பிய தேசியத் தலைவர்தானே முதல் குற்றவாளி, துரோகி?
தேசியத்தலைவரின் இறுக்கமான கட்டுப்பா ட்டிற்குள் கட்டப்பட்ட உலகத் தமிழர் அமைப்புக்குள் எப்படி ஐயா இலங்கை அரசின் உளவாளிகள் உள் புகுந்தனர்?
சதா ஆயுதங்களுடன் காட்சி தருவது உதைக்குதே? கூடவே தங்கை வயதான தாய் தந்தை எல்லாம் சரிதான். ஆனால் வன்னியில் வீட்டிற்குள் பலரும் என்று கட்டாய 'லபக்' இன்போது எங்கோ போனது வயது போன தாய் தந்தையர் இளம் சகோதரிகள் என்ற விடயம்?
பொது மக்களிடன் உறுஞ்சியெடுத்த பல இலட்சம் பணத்தில் புலம் பெயர் நாடுகளிலும் ஏன் ஈழத்தில் தலைவர் உட்பட (நீச்சல் குளம் களியாட்டம) பலரும் சொகுசு வாழ்க்கை வாழுகின்றனர் என்று ஐனநாயக முற்போக்கு சக்திகள் கூறியபோது நீங்கள் அவற்றை சீர்தூக்கிப் பார்க்காமல் துரோகிகள் பட்டம் கொடுத்து ஈழத்தில் மண்டையில் போட்டதும் புலத்தில் கால்களை அடித்துடைத்ததும் கடைகளை அடித்து நொருக்கியடையும் தானே செய்தீர்கள் அப்போது எங்கே போனது உங்கள் புத்தி?