சனி, 18 டிசம்பர், 2021

மீண்டும் சென்னை சங்கமம்... நகரத்து வீதிகளில் நாட்டுப்புறக் கலைவிழா.

நகரத்து வீதிகளில் நாட்டுப்புறக் கலைவிழா... மீண்டு(ம்) வருமா சென்னை சங்கமம்!
மின்னம்பலம் : பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆயிற்று, அந்தக் கொண்டாட்டங்கள் முடிவடைந்து.. மீண்டும் அதே உற்சாகத்தோடும் உந்துதலோடும் வருமா, சென்னை சங்கமம் கலை விழா என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள், தலைநகர கலாரசிகர்கள். அவர்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைவடிவங்களை நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்களும் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். நாட்டுப்புறக் கலைகளை நகரத்து வீதிகளில் நிகழ்த்துவோம் எனும் முழக்கத்தோடு, 2007ஆம் ஆண்டில் தொடங்கியது, சென்னை சங்கமம் கலை விழா. முக்கால் கோடி மக்களைக் கொண்ட சென்னைப் பெருநகரில் முந்நூறு ஏக்கர் தனி உலகில் இருக்கும் ஐ.ஐ.டி.வாசிகள் அதற்கு முன்னர் அங்கு ஒலித்திராத பறை இசை மேளங்கள் முழங்க, சங்கமம் விழாவைத் தொடங்கிவைத்தார், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

கவிஞர் வைரமுத்து : வள்ளலாரும் ஆறுமுக நாவலரும் .. உண்மையில் நடந்தது என்ன?

 செல்லபுரம் வள்ளியம்மை  : கவிஞர் வைரமுத்து அவர்கள் வடலூர் ராமலிங்க வள்ளலாரின் வரலாற்றை தனது தமிழாற்று படையின் தொடர்களில் ஒன்றாக மேடையேற்றி உள்ளார்  அந்த ஆற்று நீரில் சற்று நனைந்து பாருங்கள் .
கிழக்கிந்திய கம்பனியோடு வந்த கிறித்துவம் ஒரு கோடி மக்களை மதம் மாற்றியதற்கும் ராமலிங்கரின் மனமாற்றத்திற்கு உள்ள தொடர்பு ஊன்றி உணரத்தக்கது .மதமாற்றம் இந்த மண்ணில் எந்தவழி நுழைந்தது? அந்நியர் இம்மண்ணில் எவ்வழி புகுந்தனர்?
வருணங்களென்றும் குலங்கள் என்றும் ஜாதிகள் என்றும் பிளந்து வைத்த சந்து வெளி புகுந்தது.
அந்நியரை ஓட்டவேண்டும்  அதற்கு முன்னால் அந்நியரை வரவழைத்த மதச்சண்டைகளின் பிற்போக்குத்தனத்தின் பிடரியை பிடித்து ஆட்டவேண்டும் என்று சிந்தித்த முதல் புரட்சி துறவி வள்ளலார் என்றே சொல்ல தோன்றுகிறது.
இந்து மதம் துறவின் நிறம் காவி என்றது   வள்ளாளரோ வெள்ளை என்றார்.

கரூர் எம்பி ஜோதிமணி பாஜக அண்ணாமலையை கவிழ்த்துவிட்டு பாஜக தலைவராக போகிறாரா?

May be a Twitter screenshot of 1 person and text that says 'Jothimani Sennimalai December at 21:13 நேற்று மதியம் ஜஸ்தான் மாநிலம் ஜய்பூ கட்சிக்கூட்டம் முடித்துவிட்டு, ரவு ஒரு மணி க்கு கரூர் சென்று சேர்ந்தேன் காலையில் கரூரில் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்துகொண்டு விட்டு, டெல்லி வந்து இரவு நாடாளுமன்றம் சென்று தொகுதியில் ரயில்வே பாலங்களில் உள்ள பிரச்சினை தாடர்பாக சினேன். தொடர்ச்சியான பயணம்,தூக்கமின்மை,விமான நிலையத்தில் இருந்து பூஜய நேரம் சென்றதால் அதனால்தானோ எனன வோ சபாநாயகர் உடனடியாக பேச வாய்ப்பளித்தார் அவருககு எனது மனமார்ந்த கடந்தவாரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பூஜய நேரத்தில் பேச சபாநாயகர் வாய்ப்பளித்தார்.பல்வோ போராட்டங்களுக்கிடையே பெண்களை மாண்புமிகு சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது @loksabhaspeaker ਜਵरਨी'
May be an image of 2 people, people sitting and indoor

Venkat Ramanujam  :  ராகுல்காந்தி எதிர்க்கும் சபாநாயகரை பாராட்ட சீராட்ட ஜோதிமணிக்கு உரிமை இல்லையா..
கடந்த இரு நாட்களாக #திமுக  காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிகளுடன் சேர்ந்து விவசாயிகளை திட்டமிட்டு சதி செய்து கொன்ற  குற்றவாளி ஒன்றிய பாஜக அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோஷம் போட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வரும் வேளையில்..
இதே காலத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஒன்றிய பாஜக அமைச்சர்களை வரிசையாக பார்த்துக்கொண்டு அவர்கள் பெருமைகளை தொடர்ந்து கரூர் தொகுதி நலனுக்காக என்ற முகமூடி அணிந்து மகிழ்வுடன் டீவிட்டி வரும் வேளையில்..
இதே காலத்தில் அதிலும் மிக முக்கியமாக தன்னை பேச விட மறுக்கும் லோக்சபா ஸ்பீக்கர் எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி  வரும் வேளையில்..
இதே காலத்தில் நாக்பூர் தமிழரல்லாத கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திமுகவை சங்கி என குற்றம் சாட்டி செருப்பை தலையில் தூக்கி உள்ளாரே..
ராமன் பாதகையை தலையில் கொண்டு தான் பரதன் நடந்து சென்றான் என்கிறது ராமாயணம்..
நவீன காலமோ கருப்பு சிவப்பு செருப்பை சீமான் தலை மீது தூக்கி வைத்து கொண்டாட வைத்துள்ளது..

செங்கல்பட்டு ஆதீஸ்வரர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சிறார்களுக்கு பாலியல் சித்திரவதை .. முடிச்சூரில்

குழந்தைகள் இல்லம்

tamil.samayam.com :    அந்த இல்லம் ஆண்களை மட்டுமே சேர்த்து கொள்ள அனுமதியளிக்கப்பட்ட ஒன்று
    குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நல அதிகாரி ஒரு வாரத்திற்கு முன்பு அந்த இல்லத்தை ஆய்வு செய்தனர்
அரசு அங்கீகார இல்லத்தில் சிறார்களுக்கு நடைபெற்ற பாலியல் ரிதியான துன்புறுத்தல் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட   குழந்தைகள் நலன் குழந்தைகள் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பல்வேறு உடல் ரீதியான வன்கொடுமைகளில் ஈடுபட்டு வரும் “ஆதீஸ்வரர் குழந்தைகள் இல்லத்தின்” மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் நடுரோட்டில் தீக்குளித்த பெண்.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

 கலைஞர் செய்திகள் : திருப்பூரில், நடுரோட்டில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தெய்வானை. இவரது கணவர் கோபால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தெய்வானை திருப்பூர் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, உடன் பணியாற்றிய ஒருவருடன் தெய்வானைக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நபரிடம் தெய்வானை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு அந்த நபர் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகக் கூறியுள்ளார்.

நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு 110 கோடியாம் .. அடுத்தவருடம் இன்னும் கூடுமாம்

What is the shocking secret of Anushka Shetty? - Quora

  மாலைமலர் . சினிமா   : தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
யோகா ஆசிரியையாக இருந்த அனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில் 65 படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் அனைத்து பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.
நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார். உடல் எடை கூடி பட வாய்ப்புகள் குறைந்தாலும் அனுஷ்கா மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. இந்த நிலையில் அனுஷ்காவின் சொத்து மதிப்பு இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அவருக்கு ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இலங்கை முழுவதும் இந்து கோயில்கள் அமைக்க முடியுமெனில் யாழ்ப்பாணத்தில் ஏன் பெளத்த விகாரைகள் அமைக்க முடியாது? அருண் சித்தார்த் கேள்வி

 Arun Siddharth  :  நல்லூர் பற்றிய அருண் சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய கருத்து என்ன????
கேள்வி - உலகிலுள்ள இந்துக்கள் எல்லோரும் வணங்கும் நல்லூர் கோயிலை இடித்து விட்டு அங்கு மலசலகூடம் அமைக்க வேண்டும் என நீங்கள் கூறக் காரணம் ??
பதில் - அந்தக் கூற்றை ….. ( எனது பதிலைக் கூற விடாமல் ஊடகவியலாளர் இடைமறிக்கின்றார்….)
கேள்வி— நான் ஒரு இந்து பக்திமான் அல்ல, நான் ஒரு மார்க்ஸிஸ்ட் (Marxist)என்றும் நீங்கள் கூறியுள்ளீர்கள். நான் கூறுவது சரிதானே??
பதில் - ஆம் அது சரிதான். நான் இன்னமும் ஒரு மார்க்ஸிஸ்ட் (Marxist) தான். இன்னமும் நான் ஒரு இடதுசாரியே.
கேள்வி - இன்னமும் இடதுசாரி( Left ) அவ்வாறாயின் நீங்கள் ஒரு இந்து பக்திமான் அல்ல ????
பதில் - நான், அம்பேத்கார் இந்தியாவில் என்ன செய்தார்.. அதையே தான் நாங்களும் செய்கின்றோம். நான் பெளத்த தரிசனத்தைப் பின்பற்றுகிறேன்.
கேள்வி - நீங்கள் நல்லூர் கோயில் தொடர்பாக வெளியிட்ட கருத்தை மீளப் பெறப்போவதில்லையா????
பதில் - இல்லை. எப்போதும் இல்லை .
கேள்வி - அது சரியெனக் கருதுகிறீர்களா???

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"

சீன தூதுவர்
யாழ் பொதுநூலக வாசலில் சீன தூதுவர்
சீன தூதுவர்
நல்லூர் வாசலில் சீன தூதுவர்
BBC : ரஞ்சன் அருண்பிரசாத் -      பிபிசி தமிழ் :  சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்
''தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது," என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கமாக உள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவொன்று, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

நீதிக்கட்சி அமைச்சரவை பதவி ஏற்ற நாள் இன்று(17-12-1920) .. 101 வருட திராவிட வரலாற்றின் முதல் தினம்

May be an image of 6 people and text that says 'டாக்டர் நடேசனார் பிட்டி. தியாகராயர் டாக்டர் டி.எம்.நாயர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் கே.வி.ரெட்டி பனகல் அரசர்'

 Seshathiri Dhanasekaran  :  101 வருட திராவிட வரலாற்றின் முதல் அத்தியாயம் துவங்கிய தினம் இன்று.
முதல் நீதிக்கட்சி ஆட்சி அமைச்சரவை பதவி ஏற்ற நாள் இன்று(17-12-1920)
1919 ஆம் ஆண்டு மாண்டேகு-செம்சுபோர்டு சட்டப்படி அமையப் பெற்ற சட்டமன்றத்திற்கான முதல் பொதுத் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளும், டிசம்பர் 1, 2 நாள்களிலும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலைப் புறக்கணிக்குமாறு தீவிரப் பிரச்சாரத்தைக் காங்கிரஸ் மேற்கொண்டது. காங்கிரஸ், நீதிக் கட்சியை எதிர்த்தது.1919இல் இயற்றப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டப்படி நடைபெற்றது நீதிக் கட்சி ஆட்சி. அது இரட்டை ஆட்சி முறையாகும். நீதிக் கட்சி ஆட்சிக் காலம் முழுவதும் ஒரு முதலமைச்சர், 2 அமைச்சர்கள் என மொத்தம் 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர்.

15 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு தாவத்தயார்? முயற்சிகள் வேகமெடுக்கிறது

அலேக்கா தூக்கு 15...! அ.தி.மு.க. எம்.எல்.ஏ.களுக்கு தி.மு.க. இலக்கு!!
மின்னம்பலம் :   : அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போட்டு அந்தக் கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை உண்டாக்க தி.மு.க. தரப்பில் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன. சில அமைச்சர்களுக்கு தலைமையிலிருந்து பிரத்யேகமான வேலைத்திட்டம் தரப்பட்டிருக்கிறது என தகவல் வந்துள்ளது. நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைத்தது. அ.தி.மு.க. 65 தொகுதிகளில் வென்று முக்கிய எதிர்க்கட்சியாக அமர்ந்தது, பழைய கதை!

ஹிந்தி நடிகை ஜாக்குலினை (சிங்களவர்) வலையில் வீழ்த்த சுகேஷ் சன் டிவி உரிமையாளர் ஜெயாவின் உறவினர் என்றெல்லாம்....

விகடன்  :  ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தன்னை ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறி நடிகை ஜாக்குலினிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது தெரிய வந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடியை பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகரும், அவரின் மனைவி லீனாவுடன் கூட்டாளிகள் சிலர் இணைந்து ஏராளமானோரிடம் சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரி என்று கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகர் ஏராளமான பொய்களை சொல்லி தனது வலையில் விழ வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடல் .. எழுந்து நிற்க தவறுவோர் மீது வழக்கு தொடரும்

 மாலைமலர் : தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த" எனும் பாடல் பாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். br />இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
* மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு

 மாலைமலர் : ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களது மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

பெண்களின் திருமண வயது 21ஆக உயருகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 மாலைமலர் : பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் மோடி, ‘மகள்கள் மற்றும் சகோதரிகளின் உடல்நலம் குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மகள்களை பாதுகாக்க அவர்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்வது அவசியம். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சியில் பதுக்கிய முன்னாள் அமைச்சர் தங்கமணி ..“நிலக்கரி .. கிரிப்டோ கரன்சியானது

“நிலக்கரிக்கும், கிரிப்டோ கரன்சிக்கும் பதில் சொல்லுங்க ‘கிரிப்டோ’மணி” : அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்!
கலைஞர் செய்திகள்  : “கண் பார்வையிலிருந்து காணாமல் போன நிலக்கரிக்கும், கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி பதில் சொல்ல வேண்டும்” என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்துக் குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்த நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினர், முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அருண் சித்தார்த்: இந்திய துணைத்தூதர் மாவீரர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்?

 அருண் சித்தார்த் :  இந்தியா இலங்கையில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முனைகிறதா?
யாழ்ப்பாணத்தில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மாவீரர் தினத்தை கொண்டாட இந்திய துணை தூதர் சென்றதாக தெரிகிறது . இது பற்றி யாழ்ப்பாண சிவில் சமூகத்தை சேர்ந்த திரு அருண் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார்
இலங்கையிலும் இந்தியாவிலும் புலிகள் தடை செயப்பட்ட அமைப்பு . இந்திய துணை தூதுவர் இந்நிகழ்வில் கலந்து கொள்வது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது

தமிழ் சினிமா பாடல்களின் ராகங்கள் ! ஒரு அழகிய தொகுப்பு !

A dedication | Tamil music directors | KV MAHADEVAN 2 VISHAL CHANDRASEKAR |  use head phones - YouTube

Ragaam in tamil film songs by Illayaraja
ilayaragam.blogspot.ca
The Ragam - The Song -The Film Name
Aarabhi - | S R2 M1 P D2 S | S N3 D2 P M1 G3 R2 S -
Aarabhi - Aasai Kiliye - Thambikku Entha Ooru
Aarabhi - Madhurai Vaazhum - Pudhupatti Ponnuthayee
Aarabhi - Mannavane Mannavane - Thandhuvitten Ennai
Aarabhi - Sandhakavigal Paadidum Manathinil - Metti

Abheri - | S G2 M1 P N2 S | S N2 D2 P M1 G2 R2 S -
Abheri - Chinnanjiru Vayathil - Meendum Kokila (Uses Ni3)
Abheri - En Paatu En Paatu - Poomani
Abheri - Ennai Thottu Alli Konda - Unna Ninaichen Paatu Padichen
Abheri - Guruvaayoorappa - Pudhu Pudhu Arthangal (magical prelude & interludes)
Abheri - Kaalidasan Kannadasan - Soorakottai Singakkutti
Abheri - Kaiyetha - Vinodhayathra (Malayalam)
Abheri - Kuyile Kavikuyile - Kavikuyil
Abheri - Megam Karukkudhu - Anandha Ragam
Abheri - Muthamizhae Muthamizhae - Raman Abdulla

வியாழன், 16 டிசம்பர், 2021

தேரிலே அர்ச்சகர்கள்..தேரிழுத்த திமுக அமைச்சர்கள் சமூகவெளியில் கேள்விகள்

 மெய்பொ  : மனிதனை மனிதன் சுமப்பது குற்றம். சங்கராச்சாரியார் பல்லக்கு துக்க வற்புறுத்தினால் காவிரியில் பல்லக்கோடு தள்ளி விடுங்கள் - பெரியார்.
பிள்ளையாரை கும்பிடுவதுமில்லை
பிள்ளையாரை உடைப்பதுமில்லை.-அண்ணா
ராமர் எந்தக் காலேஜ்ல படிச்சார்? - கலைஞர்
இத்தனை ரணகளங்களுக்குப் பிறகும் இந்த அமைச்சர்களுக்கு திமுக என்னும் கட்சியைப் பற்றிய தெளிவில்லை. சுயத்தை இழக்கும் எந்த சித்தாந்தமும் நீடித்ததாக சரித்திரம் நமக்குச் சொன்னதில்லை...
உங்களுக்கெல்லாம் கலைஞர்  இருந்திருக்கனும்.
பாலகணேசன் அருணாசலம்
பகுத்தறிவு பிரச்சாரத்துக்கு மட்டுமே
ஓட்டு வாங்கித்தராது குறை சொல்பவர்கள்
எத்தனைபேரை திமுக ஆதரவாளராக மாற்றியுள்ளார்கள்...

இலங்கை நல்லூர் கோயிலில் சீனத் தூதுவர் வழிபாடு.. வேட்டி அணிந்து சென்ற சீன தூதுவர்!


வீரகேசரி : யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்து சமய முறைப்படி வேட்டி அணிந்து அவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்தனர்.
கோவிட்-19 சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் சீன அதிகாரிகள் வழிபாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாரிதாஸ் மீண்டும் கைது; 30-ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!

 பி.ஆண்டனிராஜ் - விகடன் : கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்களே காரணம் என யூடியூபர் மாரிதாஸ் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ஒன்றரை ஆண்டுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசை அவதூறாகப் பேசியது தொடர்பாக மாரிதாஸ் மீது ஏற்கெனவே இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளில் கைதான அவர், தேனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் அவர் மீண்டும் இன்று கைதாகியிருக்கிறார்.
நாட்டில் கொரோனா பரவல் மிகுதியாக இருந்த காலத்தில், அதுகுறித்து மாரிதாஸ் யூடியூபில் பல்வேறு தகவல்களைப் பதிவு செய்திருந்தார். அதில், ‘நாட்டில் கொரோனா பரவலுக்கு இஸ்லாமிய சமூகத்தினரே முக்கிய காரணம். அவர்கள் திட்டமிட்டு கொரோனாவை பரப்புகிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து- சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுப்பு

மாலைமலர் : வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பல்வேறு அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த மதுரை உயர்நீதிமன்றம் , தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தத்தை ரத்து செய்தது.
“அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்பு தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டது.

கேரள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆண் மாணவர்களை போலவே சீருடை...

Shyamsundar  - e Oneindia Tamil :  சென்னை: கேரளாவில் அரசு பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு gender neutral சீருடை வழங்கப்பட்டு உள்ளது. மாணவிகள் இடையே இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு போலவே கேரளாவில் பல முன்னோடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கமாகி வருகிறது. வீடு தேடி மதிய உணவு வழங்குவது தொடங்கி முற்போக்கான திட்டங்கள் பல கேரளாவில் கொண்டு வரப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக சமீப காலமாக அரசு பள்ளிகளில் gender neutral சீருடை கொண்டு வரப்படுகிறது. அதாவது, ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான சீருடை!
பல மாநிலங்களில் பள்ளிகளில் ஆண்களுக்கு பேண்ட், ஷர்ட், சிறுவருக்கு கால் சட்டை, சட்டை வழங்கப்படும். மாணவிகளுக்கு சுடிதார், கோட். சிறுமிகளுக்கு கவுன் போன்ற உடை மற்றும் கோட் வழங்கப்படும்.     தமிழ்நாட்டிலும் இதுவே வழக்கமாக உள்ளது. இந்த நிலையில்தான் கேரளாவில் பள்ளிகளில் இருபாலினருக்கும் சமமான gender neutral சீருடை வழங்கப்பட்டு வருகிறது.

சோனியா அகர்வால் செல்வராகவனோடு திருமணம் - விவாகரத்து .. மீண்டும் திரையுலக கனவு பலிக்குமா?

Sonia Agarwal Photos : Pictures, Latest Images, Stills Of Sonia Agarwal, Hd  Photos - Infoflick

சிவா - cinemapettai.com : : சினிமா உலகில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகை பல வருடங்களாக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை. அவர்களில் திரிஷா, நயன்தாரா போன்ற சில நடிகைகளே பல வருடங்கள் கடந்தும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகின்றனர்.
அதில் சில நடிகைகள் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தும் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் சினிமாவை விட்டு ஒதுக்கப்பட்டு இருக்கின்றனர். அப்படி ஒரு நடிகையை பற்றி இப்போது காண்போம்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இந்த படத்தில் அவர் நடிகர் தனுஷுக்கு இணையாக அற்புதமாக நடித்திருந்தார். இதற்காக பல விருதுகளையும் அவர் பெற்றார்.

நடிகர் பப்லு பிரித்விராஜ் உடல் பயிற்சி கூட்டத்தில் மயிரிழையில் உயிர்தப்பினார் .. காணொளி

 V Vasanthi -  Oneindia Tamil  : சென்னை: உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் போது நொடிப்பொழுதில் பிரித்திவிராஜ் உயிர் தப்பியுள்ளார்.
வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர்.
கவலைப்பட வேண்டாம் தனக்கு ஒன்றும் இல்லை என்று ரசிகர்களுக்கு பப்லு ஆறுதல் கூறியுள்ளார். பப்லுவாக மாறிய பிரித்விராஜ் பப்லுவாக மாறிய பிரித்விராஜ் பப்லு பிரித்திவிராஜ் ஒரு இந்திய நடிகராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் குணச்சித்திர வேடங்களிலும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

விந்தணு குறைபாடு.. உலகின் மொத்த பாதிப்பில் 25-30% இந்தியர்கள்!

May be an image of 2 people and text that says '34 ஆம் அமர்வு TEDUGNT 18 டிசம்பர் 2021 சனிக்கிழமை இரவு 8 மணி Zoom 873 262 560 கடவுச்சொல் இல்லை f LIVE குறைந்து வரும் குழந்தைப்பேறு: பேசப்படாத சூழல் காரணிகள் பேசுபொருள் தாமதமாகும் குழந்தைப்பேறு- தம்பதிகள் தவிர சூழலும் மிகப்பெரிய காரணம் என்பது தெரியுமா? குழந்தைப்பேறின்மை என்பது ஒரு குறையல்ல, பெரும்பாலும் குணப்படுத்தக்கூடிய நோய் என்பது தெரியுமா? ART எனப்படும் உதவிபெறும் இனப்பெருக்கத் தொழிநுட்பம்- தவறான புரிதல்களும், தெளிவான விளக்கங்களும். துறை பணர் டாக்டர் சூர்யா Consultant Obstetrician Gynaecologist & Fertility Specialist Laparoscopic Surgeon Nakshatra Men, Women & Fertility Clinic 5/336, Santhome Avenue, Okkiyampettai, OMR, Chennai- /seviunavu /seviunavu Sevikku Unavu Sevikku Unavu'

Vidhya Suresh  : Dr. Yogesh Choski. குஜராத் மாநிலத்தின் முதல் cyrobank உரிமையாளர். 1997இல் விந்தணு வங்கியை ராஜ்கோட் நகரில் துவங்கியது முதல், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தினமும், 20-30 வயது வரையுள்ள நல்ல ஆரோக்கியமான இளைஞர்கள் இவர் வங்கிமுன் வரிசையில் நிற்பார்கள். அவர்களிடமிருந்து பெறப்பட்டு மாநிலம் முழுவதும் பயணிக்கும் விந்தணுக்களில் 70% செறிவானவையாக இருக்கும்.  இன்று நிலைமை தலைகீழ். 70% விந்தணுக்கள் நிராகரிக்கும் நிலையில்தான் இருக்கின்றன” என்கிறார். விந்தணு குறைபாடு பிரச்சினையில் உலகின் மொத்த பாதிப்பை கணக்கெடுத்தோமேயானால், அதில் 25-30% இந்தியர்கள் என்கிறார் AIIMS மருத்துவமனையின் Dr. நீதா சிங். மக்கள்தொகையில் உலகின் இரண்டாவது இடத்திலிருக்கும் நாட்டில், மலட்டுத்தன்மை மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் முரணை எப்படி விளங்கிக்கொள்வது?.

புதன், 15 டிசம்பர், 2021

மம்தா : நானே ஒரு பார்ப்பனர்தான்.. எனக்கு யாரும் நற்சான்றிதழ் தர தேவையில்லை..' கோவா தேர்தல்.. பிரசாரத்தில் ....

செல்லபுரம் வள்ளியம்மை : வடநாடு இந்து முஸ்லீம் வேறுபாடுகளை வைத்தே அரசியல் செய்வது என்று தீர்மானித்து விட்டது என்றெண்ணுகிறேன். ஆர் எஸ் எஸ் ஒருபுறமும் இஸ்லாமிய கட்சிகள் மறுபுறமும் தீனி போட்டு வளர்த்த மதவாத விஷ செடி இன்று நன்றாக செழித்து வளர்ந்து விட்டது போல தோன்றுகிறது இதுவரை பாஜகவும் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளும்தான் பெரிதும் இந்த பாதையில் சென்றன. ஆனால் இப்போது ராகுல் காந்தியே தான் இந்து பார்ப்பனர் என்பதை கூறுகிறார் காங்கிரஸ் தேர்தல் காணொளியில் சம்ஸ்கிருத சுலோகம் வேற உச்ச குரலில் ஒலிக்கிறது கோவா தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜியும் தன்பங்கிற்கு தானும் ஒரு அக்மார்க் பார்ப்பனர் என்பதை பெருமையோடு பிரகடன படுத்துகிறார் ..சம்ஸ்கிருத சுலோகங்கள் வேற பாடுகிறார் . அதுவும் சுருதி சுத்தமாக முழங்குகிறார் ஆக கூடி வடநாடு தன்தலையில் தானே மண்ணை அள்ளி போடுவது என்று தீர்மானித்து விட்டது அந்த சுய நிர்ணய உரிமையை அவர்கள் பயன்படுத்தி கொள்ளட்டும் கண்விழித்த மாநிலங்கள் தஙகள் சுயநிர்ணய உரிமைகளை பயன்படுத்தி கொள்ளட்டும்

  Vigneshkumar  -  Oneindia Tamil :  கோவா: கோவா சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, தான் ஒரு பார்ப்பனர்  என்றும் பாஜக ஒன்றும் தனக்கு நற்சான்றிதழ் தர தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு தொக்கத்தில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது.
கொரோனா 2ஆம் அலைக்குப் பின்னர், பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகப் பரவலாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஜெ., இல்லம்; அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி.. தீபாவுக்கு தலைவலி ஆரமபம்?

 தினமலர் : சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டல் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க., மேல்முறையீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை போயஸ் கார்டனில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த, 'வேதா இல்லம்' உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற, அ.தி.மு.க., அரசு முடிவு செய்து அவசர சட்டம் பிறப்பித்தது. அதன்பின், வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடு தொகை சென்னை சிவில் நீதிமன்றத்தில், 'டிபாசிட்' செய்யப்பட்டது. ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, ஜெயலலிதாவின் வாரிசுகளான, அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறிவித்ததுடன், மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 11ம் தேதி தீபா, தீபக்கிடம் வேதா இல்ல சாவி ஒப்படைக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு ஊழல் - எடப்பாடி பழனிசாமி புகார்

tamil nadu: HC orders CBI to probe Tamil Nadu CM Edappadi Palaniswami in  corruption case | Chennai News - Times of India

Rajkumar R  -   Oneindia Tamil  :  சேலம்: திமுக ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 6ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று வருவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆலோசனைக் பிறகு மாவட்ட கழக வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், மக்களை திசைதிருப்ப அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்கள் தெரிவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு!

 Shyamsundar  -  Oneindia Tamil  :  சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ரெய்டை தொடர்ந்து இவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்து வருகிறது. முக்கியமாக மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டில் சிக்கி வருகிறார்கள். அதேபோல் முந்தைய ஆட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகளும் ரெய்டுகளில் சிக்கி வருகிறார்கள்.
முதலில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து தொடங்கிய ரெய்டு பின்னர் வரிசையாக வெவ்வேறு மாஜி அமைச்சர்களிடம் நீட்டிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் முதல்வர் சந்திரசேகரராவ் சந்திப்பு.. 3வது அணிக்கு அடித்தளம்?

 Rajkumar R  -  Oneindia Tamil  :  சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது இரு மாநில தொழில்துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சாமி நேற்று தரிசனம் செய்தார். இதற்காக தெலுங்கானாவில் இருந்து முதலமைச்சர் சந்திரசேகரராவ் நேற்று காலை தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவரது வருகையையொட்டி திருச்சியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
சுவாமி தரிசனத்திற்கு பிறகு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் கோவிலை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள்,

பணத்துக்கு பதிலாக பாண்ட்? அரசு ஊழியர்கள் படபடப்பு!

பணத்துக்கு பதிலாக பாண்ட்?  அரசு ஊழியர்கள் படபடப்பு!

மின்னம்பலம் : கடந்த அதிமுக ஆட்சியில் நிதிப் பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறக்கூடிய வயது 59ஆக நீட்டிக்கப்பட்டது. 2021இல் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் 59 வயதை 60ஆக உயர்த்தி அரசாணையை வெளியிட்டார், இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்றொரு பக்கம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்க காலியிடங்களை நிரப்பாமல் அரசு தவிர்த்து வருகிறது அரசு என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அழகான கோவா .. ஆபத்துகளும் உண்டல்லோ உண்டல்லோ .. கோவா தில்லுமுல்லு - பகுதி 1

Goa tourism industry disappointed with budget allocation - Travel And Tour  WorldTravel And Tour World
May be an image of 6 people, people standing, beach and palm trees
Pasumai Shahul  :   கோவா என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது கடற்கரைகள்தான்.
ஆனால் அதையும் தாண்டி கோவாவை சுற்றி மலைத் தொடர்களும், ஆறுகளும், அருவிகளும் இருப்பதை பெரும்பாலானோர் கண்டு கொள்வதில்லை.
நாங்கள் எங்கள் கோவா பயணத்தை கடல்,மலை என இரண்டாக பிரித்து கொண்டோம்.
முதல் மூன்று நாள் பாகா,பலோல்யம், அகோண்டா என்று கடற்கரைகளை ரசித்துவிட்டு பின்னர் மலைகளை நோக்கி நகர்ந்தோம்.
அதில் எங்களை கவர்ந்தது ஷிவம் அருவி.
மலையை தழுவியபடி கடல் மயக்கத்தில் இருக்க.... எங்கோ மலைமுகட்டில் இருந்து பாய்ந்துவரும் நீர் அருவியாய் கடலில் பாய்கிறது.   மேலே அருவி- கீழே கடல்
ஒரே நேரத்தில் கடலிலும்,அருவியிலும் நீராடலாம். கடலை ரசித்தபடியே நீண்ட நேரம் அருவியில் குளித்தோம். கடலும் அருவியும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் காட்சியை என் வாழ்வில் முதன்முதலில் இப்போதுதான் காண்கிறேன்.
கோவா ஒரு அழகான ஊர்தான் ஆனாலும்...,
அழகுக்கு பின்னால் ஆபத்தும் உண்டு அல்லவா...?

செவ்வாய், 14 டிசம்பர், 2021

சோனியா காந்தி இல்லத்தில் திமுக உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

தினகரன் : டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சாரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். சோனியா காந்தி இல்லத்தில் நடக்கும் ஆலோசனையில் சிவசேனை தலைவர் சஞ்சய் ராவத், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளார்.

நடிகை ரோஜா MLA : நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. “சும்மா விடமாட்டேன்.. கோர்ட்டுக்கு போவேன்”.. லஞ்சம் கேட்ட இண்டிகோ

நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. “சும்மா விடமாட்டேன்.. கோர்ட்டுக்கு போவேன்” : கொதித்த ரோஜா.. காரணம் என்ன?

கலைஞர் செய்திகள் : விமானத்திலிருந்து இறங்க விடாமல் 5 மணி நேரம் உள்ளேயே காக்க வைத்ததாக, இண்டிகோ விமான நிறுவனம் மீது நடிகை ரோஜா புகார் தெரிவித்துள்ளார்.
விமானத்திலிருந்து இறங்க விடாமல் 5 மணி நேரம் உள்ளேயே காக்க வைத்ததாக, இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது நடிகை ரோஜா புகார் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, தற்போது ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார்.

அமைச்சர் ரகுபதியின் பாதுகாப்பு வாகனம் விபத்து: ஐந்து பேர் காயம்!

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்து: ஐந்து பேர் காயம்!

 மின்னம்பலம் : தமிழ்நாட்டில் சட்டத் துறை அமைச்சரின் போலீஸ் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து போலீஸார் காயமடைந்துள்ளனர்.
நேற்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். மதுரை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் ரகுபதியை அழைத்துச் செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து போலீஸ் பாதுகாப்பு வாகனம் சென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி விலக்கு ரோடு பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பாதுகாப்பு வாகனம் சாலை அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி! நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்

News18 Tamil : பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து
May be an image of 2 people and people standing
நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழும் மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ், வலதுசாரி சிந்தனையாளராக அறியப்படுகிறார். இவர் maridhas Answers என்ற பெயரில் நடத்தி வரும் யூடியூப் சேனலில் திமுகவை கடுமையாக விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் மறுநாள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் போலீசார் அடித்ததால் தான் மாணவர் உயிரிழந்ததாக கூறி வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென, மணிகண்டனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவிருக்கும் ஜூலியன் அசாஞ்சே !

 வினவு - கர்ணன் : அசாஞ்சேவை விடுதலை செய் என்ற முழக்கத்தை, இன்று உலகம் முழுவதும் ஜனநாயகத்தை விரும்புவோர் எழுப்ப வேண்டிய நேரம் இது
ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவதற்குத் தடையில்லை : இலண்டன் நீதிமன்றம் தீர்ப்பு
உலக மகா கிரிமினல் கும்பலான அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் கொலைகளையும், சதிகளையுயும், போர்க் குற்றங்களையும் இன்ன பிற தகிடுதத்தங்களையும் பொதுவெளியில் போட்டுடைத்தவர் ஜூலியன் அசாஞ்சே. கடந்த 2010-ம் ஆண்டு அசாஞ்சே அமெரிக்க இராணுவ, தூதரங்களின் ‘இரக்சிய’ ஆவணங்களை கைப்பற்றி பொதுவெளியில் அமெரிக்காவின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.

கொரோனா முன்னெச்சரிக்கை.. கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு

 Rajkumar R -   Oneindia Tamil :  சென்னை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓமிக்ரான் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.

புதிய ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு! கல்லூரிகள், பள்ளிகளில் சுழற்சி முறை ரத்து

 கலைஞர் செய்திகள்  : கல்லூரிகள், பள்ளிகளில் சுழற்சி முறை ரத்து : புதிய ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு!
தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கை டிச.,31ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை 31.12.2021 வரை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 15.12.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

திங்கள், 13 டிசம்பர், 2021

வனநிலத்தில் ஆதியோகி சிலையா? - தமிழ்நாடு அரசின் ஆர்.டி.ஐ பதிலும் ஈஷா யோக மையம் சர்ச்சையும்

கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிக்க ஜக்கி வாசுதேவ் காவேரி மருத்துவமனை வருகை  | Dinamalar

ஆ.விஜயானந்த்  -      பிபிசி தமிழ்  :  "யானைகளின் வழித்தடங்களை ஈஷா யோகா மையம் ஆக்ரமிக்கவில்லை" என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, தமிழ்நாடு வனத்துறை பதில் அளித்துள்ளது. `அப்பகுதி யானைகளின் வாழ்விடங்கள்தான் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. அது யானைகளின் பாதை அல்ல என்ற முடிவுக்கு வருவது தவறானது' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடந்தது?
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. போலுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட இந்தப் பகுதியில் அனுமதியின்றி ஈஷா யோக மையம் கட்டடங்களை எழுப்பியுள்ளதாக சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர். இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.

கணவரின் வழியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ... பெண்களுக்கு ஆர் எஸ் எஸ் வகுப்பெடுத்த சி பி எஸ் இ 10-ம் வகுப்பு வினாத்தாள்

rahul-gandhi-slams-cbse-for-controversial-passage-in-class-10-exam

hindutamil.in  : கணவரின் வழியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ... பெண்களுக்கு ஆர் எஸ் எஸ் வகுப்பெடுத்த சி பி எஸ் இ  10-ம் வகுப்பு வினாத்தாள்: ராகுல் காந்தி, பிரியங்கா, சோனியா காந்தி சாடல்
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தின் கேள்வித்தாள் முற்றிலும் அருவருப்பாக இருக்கிறது. ஆர்எஸ்எஸ் பாஜக சிந்தனையில் இருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தையும், மன உறுதியையும் குலைத்துவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மக்களவையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாளில் பெண்களைப் பற்றிய பிற்போக்குக் கண்ணோட்டத்தில் இருக்கும் கேள்வி குறித்த விவாகரத்தை மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் எழுப்பி மத்திய அரசிடம் இருந்து விளக்கம் கோரினார்.

நாய் கடித்த குரங்கிற்கு தனது மூச்சுக்காற்றை செலுத்தி காப்பாற்றிய ஓட்டுநர் காணொளி வைரல் ....பெரம்பலூர் , ஓதியம் சமத்துவபுரம்

கலைஞர் செய்திகள் : குரங்குக்கு மூச்சுக்காற்றை செலுத்தி உயிரைக் காப்பாற்றிய கார் ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம், ஓதியம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி குரங்கு ஒன்றைத் தெரு நாய்கள் துரத்திக் கடித்துள்ளது.
இதில் அந்த குரங்கிற்குப் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்துள்ளது. இதைப்பார்த்த பிரபு குரங்குக்கு தண்ணீர் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது குரங்கு தண்ணீர் குடிக்காமலிருந்தது.
உடனே பிரபு தாமதிக்காமல் குரங்கின் வாயோடு தன் வாயை வைத்து மூச்சுக்காற்று செலுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். பிறகு துள்ளி எழுந்த குரங்கை மீட்டு அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

தருமபுரி ராகிங் - கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி... 4 பேர் மீது வழக்குப்பதிவு!

நக்கீரன் செய்திப்பிரிவு  : ராகிங் செய்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சிலர் ஜூனியர் மாணவரை ராகிங் செய்ததாகக் கூறப்படும் நிலையில், இரண்டாம் ஆண்டு மாணவர் சரவணன் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், இரண்டாம் ஆண்டு மாணவர் சரவணனிடம் ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் 4 பேர் மீது காவல்துறையினர் முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் உலகில் மிகப் பெரிய நீலக்கல் 310 கிலோ - பிடிக்கப்பட்டுள்ளது

 வீரகேசரி : இரத்தினபுரி – பட்டுகெதர பிரதேசத்திலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த நீலக்கல்லின் எடை 310 கிலோ கிராம் ஆகும்.
இதற்கு ‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் இந்த நீலக்கல்லிலிருந்து ஐந்து மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு, அவை இரத்தினபுரியிலுள்ள இரத்தினவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த நீலக்கல் உலகிலேயே மிகப் பெரிய நீலக்கல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை அறிவித்துள்ளது.

68 முன்னாள் ஆப்கான் பெண் எம்.பிக்களின் நிலை என்ன? உயிருக்கு பயந்து உலகெங்கும் ..இப்போது எங்கு வாழ்கிறார்கள்?

டாம் டான்கின்  -     பிபிசி 100 வுமன்   :  ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பு கருதி தப்பித்துச் சென்ற ஆயிரக்கணக்கானவர்களில், அந்நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம். 69 எம்.பி-க்களில் 60 பேர் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சிதறிச் சென்றிருப்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. ஆனால், இன்னும் பலர் ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட விரும்புகிறார்கள்.
மஷித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தாலிபன் ஆப்கனை கையகப்படுத்திய உடனேயே தலைமறைவாகிவிட்டார். இரண்டு நாட்களுக்கு மேல் ஒரு வீட்டில் தங்கவே மாட்டார். வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்துகொண்டேயிருந்தார்.

கோவாவில் ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தீவிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வாக்குறுதி

 தினத்தந்தி : பனாஜி, கோவாவில் அடுத்த ஆண்டு (2022) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது.
கட்சியின் கோவா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள மஹூவா மொய்த்ரா கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து சந்திப்புகளை நடத்தி பணிகளை முடுக்கி விட்டு உள்ளார்.
இந்த தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என மொய்த்ரா நேற்று அறிவித்தார்.
கிரிக லட்சுமி திட்டம் என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தில், பயனாளிகளுக்கான அட்டைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுக்கு பாஜக அண்ணாமலை எச்சரிக்கை : எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்!

 நக்கீரன் : : 'தமிழக டிஜிபி கையில் காவல்துறை இல்லை...தமிழ்நாடு அரசுக்கு பாஜக அண்ணாமலை எச்சரிக்கை : எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்'' - பாஜக அண்ணாமலை!
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான நிலையில்,
ஹெலிகாப்டரில் சென்ற 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் பெங்களூருவில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெல்லிங்டன் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி ராஜேந்தர் வழக்கு ..

போகாத ஊருக்கு வழி கேட்கும் டி.ஆர் குடும்பம்!

மின்னம்பலம் : மாநாடு சாட்டிலைட் உரிமை விவகாரம் தொடர்பாக டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர்.
 யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

ஓஷோ ரஜ்னீஷ்! கட்டுப்பாடுகள் நிரம்பிய இந்தியச் சமூகத்தில் பெரும் உடைப்புகளை நிகழ்த்தியவர்

May be an illustration of 1 person and beard

Rajasangeethan  :  ஓஷோ ரஜ்னீஷ்ஷின் பிறந்தநாள் இன்று.
ஓஷோ யாரென கூகுளில் தேடிப் பார்க்காதீர்கள். இந்திய மதவாதத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். நம்பாதீர்கள்.
பின் யார்தான் ஓஷோ?
1960-களில் இந்தியாவின் சிந்தனை மரபில் ஒரு முக்கியமான எழுச்சி நேர்ந்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் ஓஷோ  ரஜ்னீஷ்.
ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின். 1931ம் ஆண்டு பிறந்தவர். தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
1960களில் இந்தியா முழுக்கப் பயணித்து பல  இடங்களில் உரைகள் ஆற்றினார். ஆன்மிகம் மட்டும் பேசாமல், அரசியல் மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் இணைத்துப்  பேசினார். ரஜ்னீஷ்ஷின் சிந்தனைகள் பல, சர்ச்சைக்கு உரியவைகளாக இருந்தபோதும் மறுப்பதற்கான வாய்ப்பற்றதாக இருந்தன. ஏனெனில் அவர் பேசிய பெரும்பாலானவை அவருக்கு முன் உலக தத்துவத்தில் சிறந்து விளங்கிய மார்க்ஸ்,  நீட்சே, பிளாட்டோ முதலியவர்களின் கருத்துகள். அக்கருத்துகளை இந்தியச் சூழலுக்கு பொருத்தி ரஜ்னீஷ் பேசியதே மிகப்  பெரிய தரிசனமாக இருந்தது.
கட்டுப்பாடு நிறைந்த இந்தியச் சமூகத்தில் பெரும் உடைப்புகளை நிகழ்த்தினார் ரஜ்னீஷ். பல காலமாக இந்தியச் சமூகத்தில்  பூட்டி வைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் தெரிந்த உண்மைகளை பொதுவெளியில் போட்டு உடைத்தார். உதாரணமாக கடவுள், மோட்சம் என மதங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது ரஜ்னீஷ் இப்படி சொன்னார்: