சனி, 15 ஜூன், 2013

ராஜ்யசபா வேட்பு மனுவை தேமுதிகவும் வாங்கியுள்ளது ! சுயருபம் வெளிவந்தது

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் வாங்கியிருப்பதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவுக்குப் போட்டியாக தேமுதிகவும் களத்தில் குதிக்கவுள்ளதாக பரபரப்பு கூடியுள்ளது. தமிழகத்தில் 6 காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுகவால் 5 வேட்பாளர்களை தேர்வு செய்து விட முடியும். 6வது இடத்திற்கு திமுகவா அல்லது தேமுதிகவா என்று பரபரப்பு நிலவி வருகிறது.அதையும் கைப்பற்ற அதிமுக முயல்வதாகவும் பேச்சு உள்ளது. 6வது இடத்தில் போட்டியிட திமுகவுக்கும், தேமுதிகவுக்கும் தனிப் பெரும் பலம் இல்லை. இருவரும் இணைந்து, காங்கிரஸ் உள்ளிட்ட குட்டிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் அந்த இடத்தி்ல் ஒருவர் வெல்ல வாய்ப்புண்டு. ஆனால் திமுகவோ, தேமுதிகவோ கூட்டணி அமைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இந்த நிலையில் திமுக சார்பில் கனிமொழி இன்று திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேசமயம், தேமுதிகவும் வேட்பு மனுவை வாங்கியுள்ளது. அக்கட்சியின் கொறடா வி.சி.சந்திரகுமார் வேட்பு மனுவை வாங்கியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 6வது இடத்துக்கு திமுக வேட்பாளர் கனிமொழியுடன் தேமுதிகவின் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவாகும். தேமுதிக சார்பில் யாரை களம் இறக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது
tamil.oneindia.in

என்ன நடந்தது ? மாக்சிஸ்ட திமுகவுக்கு ஆதரவு இல்லையாமே ?

மதுரை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கே இடமில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பிருந்தா காரத், ராஜ்யசபா திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இடமில்லை. ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தினால் அதுபற்றி மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸின் ஆதரவு இருப்பதாலேயே கனிமொழி வேட்புமனுத்தாக்கல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் திடீரென மறுப்பும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

ரொம்ப நல்லவர்னு நம்பினோமே? பேச்சு மாறி 2 C கேக்கலாமா ?

பெயர் வைக்காத படத்தில் நடிக்கும் 'பிரியாணி' நடிகரை ஊரே நல்லவர்னு சொல்லுது. தயாரிப்பாளரும் ஆரம்பத்தில் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதும் அதே மனநிலையில் இருக்கிறாரா என்றால்... நஹி! காரணம் சம்பள விஷயத்தில் நடிகரின் அணுகுமுறை அப்படி. ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய் கொடுங்க போதும் என்றுதான் சொன்னாராம். ஷூட்டிங் முடிந்ததும் சம்பளம் வாங்கிக் கொள்கிறேன் என்றதும், மகா சந்தோஷத்துடன் ஊரெல்லாம் நடிகரின் புகழைப் பரப்பிக் கொண்டிருந்தார் தயாரிப்பு. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் கிட்டத்தட்ட பாதித் தொகையை கேட்டு வாங்கிவிட்டாராம் நடிகர். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே மீதித் தொகையையும் கேட்டு வாங்கியிருக்கிறார். இப்போது சம்பள பாக்கி எதுவும் இல்லை. இத்தனைக்கும் படப்பிடிப்பு இன்னும் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் கடும் போட்டி போடுகிறார்களாம். பெரிய விலைக்கு பேசி வைத்து அட்வான்ஸ் பெற்றுள்ளாராம் தயாரிப்பாளர். சம்பள விஷயத்தில் ஹீரோ செய்த டார்ச்சரிலிருந்து இப்போதுதான் நிம்மதி என்று பெருமூச்சு விட்டவரை, அப்படி இருக்க விடவில்லை ஹீரோ. படத்தை நல்ல விலைக்குத்தானே பேசியிருக்கிறீர்கள்... அப்படீன்னா..இன்னொரு 2 சியை எடுத்து வைங்க. இல்லன்னா ஏதாவது ஒரு ரைட்ஸை கொடுங்க, என்கிறாராம். டென்ஷனில் இருக்கிறார் தயாரிப்பாளர்!
tamil.oneindia.in

தங்கம் விலை மேலும் குறையுமா ? ஒரு வருஷத்திற்கு தளம்பல்

சமீபத்திய விலை வீழ்ச்சிக்கு பின்பும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் மீது ஒரு நேர்மறையான எண்ணம் இல்லை. கிரெடிட் சூசி குழுமம் ஏஜி தங்கம் விலையை பற்றி ஒரு வாக்கெடுப்பு நடத்தி தனது அறிக்கையை வெளியிட்டது. ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, அதில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், தங்கத்தின் விலை வரும் 12 மாத காலத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்றும், அதன் விலை ரூ2,864/கி(இறக்குமதி வரி உட்பட) கீழே செல்லும், என்றும் தெரிவித்துள்ளார்கள். (How to plan for your child's education needs?) இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் குறைந்தது 60% முதலீட்டாளர்கள் தங்க வர்த்ததகம் ஒரு செயல் இழந்த நிலைமையை நோக்கி செல்கிறது என தெரிவித்துள்ளனர். பதிலளித்தவர்களில் 51% பேர் தங்கத்தின் விலை அடுத்து வரும் 12 மாதங்களில் ரூ2,864/கி(இறக்குமதி வரி உட்பட) கீழே சென்றுவிடும் எனத் தெரிவித்துள்ளனர்.

கனிமொழி ராஜ்யசபா வேட்புமனு தாக்கல் செய்தார் ! காங்கிரஸ் மாக்சிஸ்ட் ஆதரவு?

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக ஏற்கெனவே 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழி மீண்டும் போட்டியிட இருக்கிறார். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் திமுக, 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரசின் ஆதரவை கோரியிருக்கலாம். இரு கட்சிகளும் ஆதரவு அளிக்க உறுதி அளித்திருப்பதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன்று கனிமொழி வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்காக இன்று காலை கோபாலபுரம் சென்ற கனிமொழி, தமது தந்தையிடம் வாழ்த்துப் பெற்றார்.
tamil.oneindia.in

இயக்குநர் - நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார்

சென்னை: இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா. பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெள்ளி விழாப் படங்களைத் தந்த மணிவண்ணன், கடைசியாக இந்த ஆண்டு அமைதிப்படை 2 என்னும் படத்தை இயக்கினார். இது அவருக்கு 50வது படம்.  ரஜினி நடித்த கொடிபறக்குது படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 600 படங்கள் வரை அவர் நடித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு 3 புதிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இன்று அகாலமாக மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுகைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்
tamil.oneindia.in

விஜய் / விஜயகாந்த் பிழைப்புவாதிகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி எவ்வளவோ தேவலாம்,

வுன்சிலரோ, கல்லூரி மாணவரோ, இலக்கிய குருஜியோ டீக்கடை சந்து
முதல் டிவிட்டர் சந்து வரை பிறந்த நாளுக்கு பிளக்ஸ் வைப்பதில் உலக
சாதனை படைத்திருக்கும் தமிழ் நாட்டில் நடிகர் விஜய் மட்டும் ஏன் பிறந்தேன் எனும் சோகத்தில் இருக்கிறார்.
வரும் ஜூன் 22 அவரது 39-வது பிறந்த நாளாம். இதற்காக தமிழகம், இல்லையில்லை தென்னிந்திய அளவில் ரசிகர்களை திரட்டி ஜூன் 8-ம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் இருக்கும் ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்டமாக பிறந்த நாள் கொண்டாட இருந்தார் விஜய். அந்த விழாவில் 3,900 பேருக்கு ஒரு கோடியில் நலத்திட்ட உதவி, 39,000 பேருக்கு பந்தல், விருந்து என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.
‘சுற்றுச் சூழல் காவலர்’ விஜய்
'சுற்றுச் சூழல் காவலர்' விஜய்இதில் ஏன் எல்லாம் 39 வருகிறது என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை.அழகிரியோ இல்லை அம்மாவோ பிறந்த நாளன்று அவர்களது வயதுக்கேற்ற எண்ணிக்கையில்தான் ஏழைகளை தேர்ந்தெடுத்து உதவி செய்வார்கள். கூடுதலாக வருபவர்கள் அடுத்த ஆண்டு காத்திருக்க வேண்டும். தலைவர்கள், நட்சத்திரங்கள் கொண்டாடும் பிறந்த நாளில் பலனைடைவதற்கும் ஏழைகள் நட்சத்திர ஏழைகளாக இருக்க வேண்டும்.
அது கிடக்கட்டும். ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, ஜூன் 7-மாலை மளிகைச் சாமான்கள் முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை ஜெயின் கல்லூரியில் வந்து இறங்க, ஒரு செய்தி இடியென தாக்குகிறது. அது அடுத்த நாள் விழாவுக்கு போலிஸ் பாதுகாப்பு இல்லை, எனவே விழாவை ரத்து செய்யுங்கள் என்று ஜெயின் கல்லூரி நிர்வாகம் கறாராகக் கூறி விட்டது.

புது தில்லு முல்லு நல்ல ஒரு REMIX



இந்தியில் வெளிவந்த ’கோல்மால்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு. பாலச்சந்தர் ரீமேக் செய்த தில்லு முல்லு திரைப்படத்தை மறுபடியும் தமிழிலேயே ரீமேக் செய்திருக்கின்றார்கள்.பெரிய நட்சத்திரமாக இருந்த ரஜினி நடித்த தில்லு முல்லு திரைப்படத்தை முழுநீள காமெடி திரைப்படமாக எடுத்திருக்கின்றனர்.எம்.எஸ்.வி, யுவன் ஷங்கர் ராஜா திரையில் ஒன்றாக தோன்றி தில்லு முல்லு டைட்டில் சாங் பாடுவது ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சீட்டில் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. ’அகில உலக சூப்பர்ஸ்டார்’ சிவா என டைட்டில் கார்டு போடுவதிலிருந்து கடைசியில் வணக்கம் சொல்லி எண்ட் கார்டு போடுவது வரை படம் பார்ப்பவர்கள் சிரிப்பது உறுதி.

Hydrabad தெலுங்கான போராட்டம் ! கடும்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது

ஆந்திரா தலைநகர் இன்று ஒரு வித்தியாசமான காட்சியைக் கண்டது.
மொத்தம் 30,000 போலீசார், ஹைதராபாத் நகரையே தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். ஆந்திரா சட்டசபை, மற்றும் அதைச் சூழவுள்ள பகுதிகளில்தான் ஆர்ப்பாட்டங்கள் அதிகம் நடக்கலாம் என்பதால், அங்கு மட்டும் 10,000 போலீசார் மற்றும் 2,000 மத்திய துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
ஹைதராபாத் நகரமே துடைத்து விடப்பட்ட காலி நகரம் போல காணப்பட்டது.
தனி தெலுங்கானா போராட்டம்தான் இன்று ஹைதராபாத் நகரையே வெறிச்சோடிப் போக செய்துள்ளது. இன்று ஆந்திர சட்டசபையை முற்றுகையிட போவதாக அறிவிப்பு வெளியானதால், அசம்பாவிதம் எதுவும் நடவாமல் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் ஹைதராபாத் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி மற்றும் பா.ஜ.க. கட்சியினர் பலர் சட்டசபையை முற்றுகையிட புறப்பட்ட போது கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் உஸ்மானியா பல்கலை மாணவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க, பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கொதிப்படைந்த நிலையில் உள்ளனர்.

போதையில் மருமகன் வெறிச்செயல் கழுத்தை அறுத்து மாமியார் கொலை! Tasmac Profit

மதுராந்தகம்: கர்ப்பிணி மனைவியை குடிசை வீட்டுக்குள் தள்ளி பூட்டிவிட்டு,
மாமியாரை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். மாமண்டூரில் இன்று காலை நடந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் அடுத்த படாளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகா (50). மனைவி நவநீதம் (48). இவர்களது மகள் மீனா (25). மாமண்டூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஓட்டல் ஊழியர் அய்யப்பன் (30). இவருக்கும் மீனாவுக்கும் 2010&ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீனா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். மாமண்டூரில் கோயில் திருவிழா நடக்கிறது. இதற்காக மகள் வீட்டுக்கு நவநீதம் நேற்று சென்றார். இரவு அங்கேயே தங்கிவிட்டார். வெளியே சுற்றிவிட்டு இன்று காலை 8 மணிக்கு அய்யப்பன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் எங்கே போனீர்கள் என்று மீனா கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை நவநீதம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், மனைவியை குடிசைக்குள் தள்ளி பூட்டினார். பின்னர் அரிவாள்மனையை எடுத்து வந்து நவநீதம் கழுத்தை அறுத்துள்ளார். வலியால் துடித்த நவநீதம், அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

Acid victim Vinodini case? வினோதினி வழக்குக்கு என்னதான் நடக்கிறது? கொலைகாரன் இன்னும் வெளியே உள்ளான்

ஆசிட் வீசி வினோதினி கொல்லப்பட்ட வழக்கு எழும்பூர் நீதிபதி, சென்னை
டாக்டர்கள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு காரைக்கால்:ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு விசாரணையில் மரண வாக்குமூலம் பெற்ற சென்னை நீதிபதி, 3 டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.காரைக்கால் கோட்டுச்சேரி திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் (28) என்பவர் எம்எம்ஜி நகரில் வசித்து வந்த இன்ஜினியர் வினோதினியை ஒருதலையாக காதலித்தார். காதலை வினோதினி நிராகரித்ததால் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி வினோதினி மீது ஆசிட் வீசினார். 3 மாதமாக சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோதினி பிப்ரவரி 11ம் தேதி இறந்தார். கொலை வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டார். மாவட்ட கோர்ட்டில் 232 பக்க குற்றப்பத்திரிகை கடந்த மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்து நிபந்தனை ஜாமீனில் சுரேஷ் வெளியே வந்தார்.

வருஷக்கணக்காக ஓட்டலில் ஓசி சாப்பாடு போலீஸ்மீது உரிமையாளர் முறைப்பாடு

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில்
ஓட்டல் நடத்தி வரும் தர்மராஜ், மணி, ஷண்முகம், சேதுராமன் ஆகியோர் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஓர் மனுவினை தாக்கல் செய்தனர ‘மதுரவாயல் (முன்னாள்) போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் (தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார்), முன்னாள் தலைமை காவலர் வி. திருவேங்கடம் (தற்போது மாங்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்) ஆகியோர் எங்கள் ஓட்டலில் 2002-ம் ஆண்டிலிருந்து கடனுக்கு சாப்பாடு வாங்கி சென்றனர். கடன் தொகையை கேட்டபோது தர மறுத்தனர். அத்துடன் தினந்தோறும் மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த 4 போலீஸ்காரர்களுக்கு ‘ஓசி’யில் காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு ஆகியவற்றை தர வேண்டும் என்று கேட்டனர். இதற்கு மறுத்ததால் எங்கள் ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை அடித்து அவர்கள் மீது போலீசார் பொய் கேஸ் போட்டனர்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராஜ்யசபா தேர்தல்: விஜயகாந்த் திமுகவை ஆதரிக்க முடிவு ? அதிமுகவின் ஆனிரை கவர்தலுக்கு ஆப்பு

டெல்லி மேல் சபைக்கு தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 5 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. அதிமுக வேட்பாளர்கள் 5 பேரும் கடந்த 12ஆம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவில் திமுக உள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் கலைஞர், மாநிலங்களவை தேர்தல் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தக் கட்சியிடமும் திமுக ஆதரவு கேட்கவில்லை. பொதுவாக எல்லா கட்சியிடமும் பேசுவோம் என்றார்.

இந்தியாவில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளார்கள்

டெல்லி: இந்தியாவில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு இந்தியாவில் எத்தனை குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று ஆய்வு மேற்கொண்டது. அதில் நம் நாட்டில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. அதிலும் நாட்டிலேயே அதிகமாக உத்தரகண்ட் மாநிலத்தில் 17.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம் குழந்தை தொழிலாளர்களும், ராஜஸ்தானில் 4.05 லட்சம் பேரும், குஜராத்தில் 3.9 லட்சம் பேரும் உள்ளனர்.  சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2013ம் ஆண்டை குழந்தை தொழிலாளர் பிரச்சனையை எதிர்த்து போராடும் ஆண்டாக அறிவித்துள்ளது. என்ன தான் அரசு குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்தக் கூடாது என்று கூறினாலும் இன்றும் பல தாபாக்கள், ஹோட்டல்கள், கட்டிடம் கட்டும் இடங்களில் பேனா பிடிக்க வேண்டிய பிஞ்சுக் கரங்கள் உழைப்பதை பார்க்க முடிகிறது
tamil.oneindia.i

வெள்ளி, 14 ஜூன், 2013

நடிகை ஜியா கானின் தற்கொலைக்கு யார் யாரெல்லாம் காரணம் !

 பாலிவுட் நடிகை ஜியா கான் (வயது 25) மும்பையில் உள்ள தனது வீட்டில்
கடந்த 3-ம் தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை தொடர்பாக நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார்.  குற்றவாளி சுராஜின் தாயார் முன்னாள் ஹிந்தி பட நாயகி  ஜரீனா  வஹாப் ஆகும்
இவரை 13-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி
அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் ஜியாகானின் தாயார் நேற்று
பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜியா கான் மற்றும் சூரஜ் பஞ்சோலி பிரிவில் சல்மான் கானுக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜியா கான் மற்றும் சூரஜ் பஞ்சோலி காதலுக்கு ஆதித்யா பஞ்சோலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதித்யா பஞ்சோலி, இவர்களின் காதலை முடிவுக்கு கொண்டுவர, சல்மான் கானிடம் தலையிட கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஜியாவும் சூரஜும் சமாதனமாக பிரிந்து செல்ல சல்மான் கான் பேச்சு வார்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஜியா கானின் தாயார் வெளியிட்டுள்ளவை காதல் கடிதங்களே, அவை தற்கொலை குறிப்புகள் இல்லை என்று சூரஜ்-ன் தாயார் ஜரினா வகாப் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் தூக்கு தண்டனையை நோக்கி இருக்கும் தமிழர்களை காப்பற்றுங்கள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சுரேஷ், மன்னார்குடி பிள்ளையான் மகன் காளிதாஸ் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் பிழைப்பு தேடி போனார்கள். இவர்கள் பணி செய்த இடத்தில் இலங்கையை சேர்ந்த பிரேமலதா, பாத்திமா ஆகிய இருவரும் வேலை செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு இவர்களுக்குள் நடந்த பிரச்சனையில் பாத்திமா கொலை செய்யப்பட்டார். தற்செயலாக இந்த கொலை நடந்ததாக இவர்கள் ஒத்துக் கொண்டனர். இந்த கொலைக்கு காரணமான சுரேஷ், காளிதாஸ் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனையும் பிரேமலதாவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொலையான பாத்திமாவின் உறவினர்கள் அம்மா, அண்ணன் ஆகியோரிடம் இந்தியா, இலங்கை தூதரகம் மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடந்ததில் இறந்த பாத்திமா குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்பட்டது.

கர்நாடக மீது Contempt of Court வழக்கு தொடர தமிழகம் முடிவு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்துக்கு பிறகு ஜெயலலிதா இந்த அறிவிப்பை தெரிவித்தார். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கவும் வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் மேலும் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

மத்திய மந்திரிசபை மாற்றம் !

மத்திய மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகியதால் பல்வேறு துறைகளுக்கான மந்திரி பதவி காலியாக உள்ளது. அதே போல மத்திய மந்திரி அஸ்வின்குமார், பி.கே.பன்சால் ஆகியோர் பதவி விலகியதால் அந்த துறைகளும் காலியாக உள்ளன. அவர்களின் துறைகளை மற்ற மந்திரிகள் கூடுதலாக கவனித்து வருகிறார்கள். மு.க.அழகிரியிடம் இருந்து உரம் மற்றும் ரசாயன துறை மத்திய மந்திரி சிரிகந்தஜனாவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அஸ்வினி குமார் விலகியதால் ஏற்பட்ட அவர் வகித்த சட்டத்துறை கபில்சிபிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பி.கே.பன்சாலிடம் இருந்த ரெயில்வே துறையை சி.பி.ஜோசி கூடுதலாக கவனித்து வருகிறார். எனவே காலியாக உள்ள இடங்களை நிரப்பவும், மந்திரிகளிடம் கூடுதலாக உள்ள துறைகளை விலக்கி கொள்ளவும் மந்திரி சபையை மாற்றம் செய்ய பிரதமர் முடிவு செய்தார்.

Dr.மைத்ரேயன் MP ஜெயலலிதாவின் காலில் விழுந்து நன்றிகடன் செய்யும் அற்புதகாட்சி வாழ்க சுயமரியாதை

ராஜ்யசபா உறுப்பினர் வ.மைத்ரேயன் ஜெ.வுக்கு மரியாதை செலுத்தினார்!

ராஜ்யசபா தேர்தலுக்காக மனுதாக்கல் செய்தபோது ஜெயலலிதாவுக்கு மரியாதை செய்தார் ராஜ்யசபா உறுப்பினர் வ.மைத்ரேயன். மற்ற நான்கு பேரும் மாரியாதை செய்ய காத்திருக்கின்றனர்.
இவர்தான் அடுத்த இந்திய பிரதமர் என்று பலரும் கட்டியம் கூறுகிறார்கள் முழு இந்தியாவும் அம்மாவின் காலடியில் பாதாதி கேசம் சூரியபிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே என்று வாழ்த்தும் நாளை எதிர்பார்ப்போம்

சரியான சினிமாகாரன் சத்யராஜ் சொல்வதெலாம் பொய்

புரட்சித் தமிழன் என்று தன்னைத் தானே அழைத்து மகிழும் சத்யராஜ், முன்பெல்லாம் பிறமொழி நடிகர்கள் மீது காட்டிய துவேஷம் இருக்கிறதே... அதை எழுத கையும் கூசும். மேடையில் ஒரு பிற மொழி நடிகரைப் பற்றிப் பேசிவிட்டு, இருக்கையில் வந்தமர்ந்ததும் மிகக் கேவலமாகத் திட்டுவது அவர் பாணி. நாம் தமிழர் மாதிரி ஏதாவது அரசியல் மேடை கிடைத்துவிட்டாலோ, 'தமிழர் அல்லாத நடிகர்கள் எதுக்கு சென்னையில் இருக்கணும்...... அவர்களை ஓட ஓட விரட்டணும்... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு இனி யாரும் சொல்லக் கூடாது. இனி விரட்டிப் பழகுங்க' என்பார் (அவரோட இந்தப் பாலிசி ஹீரோயின்களுக்குப் பொருந்தாது. அப்புறம் நமீதா கவர்ச்சிக் குதிரைகளுக்கு எங்கே போவார்?). அட அவ்வளவு ஏன், முன்பு அவர் பிஸியாக இருந்த காலத்தில், 'தமிழ்தான் எனக்கு எல்லாம். வேற மொழி தெரியாது. அதனால வேற எந்த மொழியிலும் நான் நடிக்க மாட்டேன். எனக்கு அதற்கு அவசியமில்லை,' என்றெல்லாம் அடித்துவிட்டுக் கொண்டிருந்தார். எதற்கு இவ்வளவு பெரிய முன்னுரை என்கிறீர்களா... சமீபத்தில் நடந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் பிரஸ் மீட்டில் அவர் பேசியதைப் படியுங்கள்.. "இப்போது வேறு மொழிப் படங்களில் நடிக்கிறேன். கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்கும்போதுதான் மொழி தெரியாத படங்களில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்பது புரிகிறது. தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கும்போது, இன்னொருவர் உதவியுடன்தான் வசனம் பேசி நடிக்க முடிகிறது. அதனால் தமிழ் தெரியாத நடிகர்களை கிண்டல் செய்வதை நிறுத்திக்கொண்டேன். யாரும் எந்த மொழியிலும் நடிக்கலாம்," என்றார் சத்யராஜ். அடேங்கப்பா... தனக்குன்னு வந்தாதான் தமிழ் உணர்வுக்கே தனி அர்த்தம் கிடைக்குது போல!
tamil.oneindia.in

மம்தாவின் Federal அணியில் சந்திரபாபு நாயுடு ! போக போக தெரியும் இந்த பூவின் வாசம்

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சித்து வரும் "பெடெரல் முன்னணி" என்ற 3வது அணியில் (4அணி ?) இணைய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் விருப்பம் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடம் பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் இந்த புதிய அணியில் சேரலாம் என்றும் மம்தா அழைப்பு விடுத்துள்ளார். தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு இந்த அணிக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறுகையில், மத்தியில் புதிய கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் பேசி வருகிறேன். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத புதிய மத்திய கூட்டணி அரசை அமைப்பதில் தெலுங்கு தேசம் கட்சி ஆர்வமாக உள்ளது. மம்தா பானர்ஜியின் புதிய அணியில் தெலுங்கு தேசம் கட்சி இணைய தயாராக உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கூட்டணிகள் நாளுக்கு நாள் பலவீனமாகி வருகின்றன. ஆனால் மாநில கட்சிகள் பலம் மிக்கதாக மாறி உள்ளன. புதிதாக அமைய உள்ள அணி அடுத்த மத்திய அரசை அமைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
tamil.oneindia.in

பொறியியல் கல்லுரிகளுக்கான தரவரிசையில் முதல் 10 பேரில் 7 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்

வாய்ப்புக் கொடுத்தால் சாதித்துக் காட்டுவர்; பொறியியல், மருத்துவக்
கல்லூரியில் சேருவதற்கான தர வரிசைப் பட்டி யலில் முதல் இடத்தைப் பெற்றவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அபினேஷ்.
பொறியியல் கல்லூரிக்கான முதல் 10 இடங் களுக்கான தர வரிசைப் பட்டியலில் 7 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவர்.
வாய்ப்புக் கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிப்பர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
பொறியியல் படிப்பிற்கான தர வரிசைப் பட்டி யல், நேற்று(12.6.2013) மாலை வெளியிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள, 550 பொறியியல் கல்லூரி களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள், இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. அண்ணா பல் கலை தகுதியான விண் ணப்பங்களாக ஏற்றுக் கொண்ட, 1.82 லட்சம் விண்ணப்பதாரர்களின், தர வரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், நேற்று மாலை வெளியிட்டார்.
பொதுக்கல்வி பிரிவு
திண்டுக்கல்லைச் சேர்ந்த அபினேஷ், முத லிடம் பிடித்துள்ளார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு ! தொண்டர்களிடம் வசூலித்து சுதாகரன் திருமண செலவை செய்தாரம் ? மணியன் சாட்சியம்

பெங்களூர் : தமிழக முதலவர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில்
மக்களவை உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் நேற்று சாட்சியம் அளித்தார். தொண்டர்களிடம் நன்கொடை பெற்று சமையல் ஏற்பாட்டை செய்தேன் என்று ஓ.எஸ்.மணியன் கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராகாமல் இருக்க அவர்க ளது வழக்கறிஞர்கள் கொடுத்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண் டார். பின்னர் சுதாகரன் திருமணத்தில் அலங்கார வளைவுகள் அமைத்தது உள்பட திருமணத்திற்கான செலவுகள் குறித்து மதிப்பீடு செய்தது தொடர்பாக முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி வாசுதேவனிடம் அரசு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார்.

அமைச்சர் சிதம்பரம்:தங்கம் வாங்கும் ஆசையை அடக்குங்கள்

புதுடில்லி: "தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில், குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது- மக்கள் தங்கம் வாங்க கூடாது என்பது தான், என் ஒரே விருப்பம். மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், திருப்தி அளிக்கும் அளவிற்கு, தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. தங்கம் மீதான சுங்க வரியை மேலும் உயர்த்தி, என் புகழை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தங்கத்தில் போடப்படும் பணம் எல்லாம் தூங்கும் பணமே

பா.ம.க கலவரத்தால் 50 கோடி இழப்பு ! கூடவே தருமபுரி அதிமுக கலவர இழப்புக்களும் கணக்கெடுக்க முயற்சி ?

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைதைத் தொடர்ந்து, வட பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், இழப்புத் தொகையை சம்பந்தப் பட்டவர்களிடம் இருந்தே வசூலிக்க வகை செய்யும், "தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992' என்ற சட்டத்தை, கடந்த முறை, ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் கீழ், பா.ம.க.,விடம், தற்போது இழப்பீட்டுத் தொகை வசூலிக்கும் முயற்சிகள் நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
மாவட்டங்களில், நடந்த வன்முறை சம்பவங்களால், 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இத்தொகையை, அக்கட்சியிடம் அபராதமாக வசூலிக்கும் வகையில், அரசு, அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளும் என, கூறப்படுகிறது. அப்படியே தருமபுரி அதிமுக  பஸ் எரிப்புக்கும் ஒரு மதிப்பு போட்டு காசு வாங்கினா நல்லா கல்லா கட்டலாம்...மக்களுக்காவது பணம் போய் சேரும். கலவரமும் குறையும்.

வியாழன், 13 ஜூன், 2013

பிரியங்காவின் கணவர் வதேராவின் ஊழல் விளக்க ஆவணம் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு!

டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நிலபேர ஊழல் தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த ஆவணங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று கூடுதல் விலைக்கு டி.எல்.எப். நிறுவனத்துக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, நுதன் தாக்குர் என்ற தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் ரிட்மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, நுதன் தாக்குரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை கோரி நுதன் தாக்குர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆவணங்களை தர முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறிவிட்டது. மேலும் இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட உச்ச்நீதிமன்றம் விலக்கும் அளித்திருக்கிறது என்றும் பிரதமர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
tamil.oneindia.in

விசுவின் பேராசை ! தில்லு முல்லு வழக்கு தள்ளுபடி ! ஹிந்தி கோல் மாலுக்கு விசு எப்படி வழக்கு போட முடியும் ?



ரஜினி நடித்த தில்லு முல்லு படம் 'தில்லு முல்லு2' என்ற பெயரில்
தற்போது
தயராகியுள்ளது. இதில் ரஜினி கேரக்டரில் சிவா நடித்துள்ளார். இந்த படம் வருகிற 14-ந் தேதி வெளியாகிறது. இதற்கிடையே தில்லு முல்லு 2 படத்துக்கு தடை விதிக்ககோரி டைரக்டர் விசு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் தில்லு முல்லு படத்துக்கு நான் தான் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். தற்போது அந்த படத்தை “தில்லு முல்லு 2” என்ற பெயரில் வேந்தர் மூவிஸ் தயாரித்து உள்ளது. இதற்கு என்னிடம் அனுமதி கேட்கவில்லை. எனவே “தில்லு முல்லு 2” படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. நீதிபதி சுதாகரன் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வேந்தர் மூவிஸ் சார்பில் மூத்த வக்கீல் நடராஜன் ஆஜரானார். அவர் வாதாடும் போது இந்தி மொழியில் வெளியான கோல்மால் என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தை தயாரித்த நிறுவனத்திடம் இருந்து உரிய பணத்தை கொடுத்து “தில்லு முல்லு 2” படத்தை தயாரித்து உள்ளோம். விசுவின் வசனத்தையோ, திரைக்கதையோ நாங்கள் பயன்படுத்தவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுதாகரன், விசுவின் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.maalaimalar.com

திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் கிடப்பில் தான் போடப்படும் ! துக்ளக் ஆட்சியில் நல்லதா நடக்கும் ?

ஸ்டாலின் : அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்த 2 ஆண்டுகளில் பல திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். சட்டமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படுகிறதா? என்றால் இல்லை. தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்விக்கு தடை போட்டார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு நீதிமன்ற தீர்ப்புபடி சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக கடந்த 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் பல திட்டங்கள் மக்களை சென்றடைந்தன. ஆனால் இந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோவையில் ஜவுளி தொழில் மேம்பாட்டுக்காக பல்லடத்தில் ரூ.200 கோடியில் விசைத்தறி பூங்கா மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டது. கோவை பீளமேட்டில் ரூ.300 கோடியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் சாலை ரூ.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அத்திகடவு 2-வது கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிச்சிகுனியமுத்தூர், ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.40 கோடியில் கொண்டு வரப்பட்டது. வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ.150 கோடியில் 4500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. விவசாயிகள் பிரச்சினைக்காக தென்னை வாரியம் அமைத்து தேங்காய் ரூ.5 ல் இருந்து ரூ.10 ஆக விற்கப்பட்டது. இன்று வாரியம் செயல்படவில்லை. மீண்டும் தேங்காய் ரூ.5-க்கு விற்கப்படுகிறது. கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட போது ரூ.250 கோடியில் சாலைகள் போடப்பட்டன. அவினாசி 6 வழிச்சாலை, திருச்சி 4 வழிச்சாலை ஏற்படுத்தப்பட்டது. குறிச்சி, இருகூர், சோமனூர் பகுதிகளில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. ரூ.180 கோடியில் காந்திபுரம் மேம்பாலம் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறை வெள்ளலூருக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்த நேரத்தில் வருகிறதோ? அல்லது அதற்கு முன் வருகிறதோ தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் வந்தால் நல்லது என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றி சட்டமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும். எனவே பாராளுமன்ற தேர்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதன் மூலம் தி.மு.க. வுக்கு வெற்றி தேடிதரவேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

TMS இன் இறுதி அஞ்சலிக்கு சிவாஜி குடும்பத்தினர் யாரும் வரவில்லை ! படு சுயநல குடும்பம்

சென்னை: பிரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தவில்லையாம். பிரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் அண்மையில் காலமானார். அவருக்கு திரையுலகினிர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ஒரு முக்கியமான திரைக்குடும்பம் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லையாம். டிஎம்எஸ் எம்.ஜி.ஆருக்கு பாடினால் மக்கள் திலகம் தான் பாடிகிறாரோ என்று நினைக்கத் தோன்றும். அதே டிஎம்எஸ் சிவாஜி கணேசனுக்கு பாடினால் நடிகர் திலகம் தன் குரலில் தான் பாடுகிறாரோ என்று தோன்றும். அந்த அளவுக்கு குரலை மாற்றி பாடுவார். அவர் சிவாஜி கணேசனுக்கு ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் டிஎம்எஸ்ஸின் இறுதிச் சடங்கிலோ, அதன் பிறகு நடந்த துக்க நிகழ்ச்சிகளிலோ சிவாஜி கணேசன் வாரிசுகள் யாரும் கலந்து கொள்ளவில்லையாம். அவர்கள் வராதது தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
/tamil.oneindia.in

இது வேலைக்காவாது ! நிதிஷ்குமார் டா டா

பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் ஆகியோருடன் அத்வானி அவசரமாக டெலிபோனில் பேசினார். பாஜகவின் பிரச்சார குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதை இந்த இரு தலைவர்களும் விரும்பவில்லை. எனவே பாஜக கூட்டணியிலிருந்து  ஐக்கிய ஜனதா தளம் விலகலாம் என்று வந்த செய்தியைக் கேள்விப்பட்ட அத்வானி அவர்களை சமாதானம் செய்வதற்காக அவர்களுடன் அவசரமாக டெலிபோனில் பேசினார். இனிமேல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இருக்க வேண்டும். அவர்கள் கூட்டணியிலிருந்து விலகினால் வெற்றி வாய்ப்புப் பாதிக்கும் என்று அத்வானி கருதினார். எனவே அவர்களை கூட்டணியில் நீடிக்கச் செய்வதற்காக அவர்களுடன் அத்வானி டெலிபோனில் பேசி சமரசம் செய்தார்

புதிய கல்வி கட்டணம் 3,000 to 35 ஆயிரம் பெற்றோர்கள் அதிர்ச்சி ! தமிழக கட்டண நிர்ணய குழு அறிவிப்பு !

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, 8,000
பள்ளிகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. ஆண்டு கட்டணமாக, 3,000 ரூபாய் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, பள்ளிகளுக்கு தகுந்தாற்போல், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண கால வரையறை முடிந்த பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கட்டண நிர்ணய குழு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, விசாரணை நடத்தி வந்தது. இந்தப் பணிகள் முடிந்த நிலையில், 8,000 பள்ளிகளுக்கு, புதிய கல்வி கட்டணங்களை நிர்ணயம் செய்து, தமிழக அரசு இணைய தளத்தில், கட்டண நிர்ணய குழு, நேற்று வெளியிட்டது.மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 32 மாவட்டங்களில் இருந்தும், அதிகமான பள்ளிகள், பட்டியலில் இடம் பிடித்துள்ளன. சென்னை மாவட்டத்தில் மட்டும், 590 பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சரவணபெருமாள்: ருத்ராட்சம் குங்கும பொட்டு with கிரிமினல் வரலாறு

S.Saravana perumal
அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, கழுத்தில் இதர
வழக்குகளில் இருந்து, அவர் விடுவிக்கப்பட்டபோதும், தங்க கடத்தல் தொடர்பாக, "கஸ்டம்ஸ்' துறை தொடர்ந்த வழக்கும், அதற்கு எதிராக, அவர் செய்த மேல்முறையீடும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.இதனால், அவரது வேட்பு மனு, பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்படவாய்ப்புள்ளது. மனு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அவர், ஆறு ஆண்டு பதவிக்காலத்தை முழுமையாக அனுபவிக்க முடியுமா? என்ற சட்டச்சிக்கல் உள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவர் மீதான வழக்கு விவரம் குறித்து, தலைமைக்கு, கட்சி நிர்வாகிகள், ஏராளமான, "பேக்ஸ்' அனுப்பினர். இது குறித்து விசாரித்து அறிக்கை தர, உளவுத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.பின்னர், தூத்துக்குடியிலிருந்து, சென்னைக்கு அவசரமாக வரவழைக்கப்பட்ட, சரவண பெருமாளிடம், நேற்றுமுன்தினம் இரவு விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததும், அவரது பெயர், வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது
; மாணவர் அணி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.இது தொடர்பாக கருத்து கேட்க, சரவணபெருமாளை தொடர்பு கொண்ட போது, அவரது மொபைல், "ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

என்னை, வெட்டி விட்டது யார்?'' காங்கிரசுக்கு கலைஞர் கேள்வி

சென்னை : ""ஒட்டியிருந்த என்னை, வெட்டி விட்டது யார்?'' என, காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் மகன் திருமணத்தை, சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடத்தி வைத்து அவர் பேசியதாவது:விழாவில் வரவேற்றுப் பேசிய திருநாவுக்கரசர், "காங்கிரசோடு நான் ஒட்டி இருக்க வேண்டும்' என தெரிவித்தார். ஆனால், ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியும் என, கருதுகிறேன். அதைப்பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை.அரசியல் பேசுவதற்கு தனி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. திருமண நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது பொருத்தமில்லை. எனவே, இப்பிரச்னையை இதோடு நிறுத்தி விடுகிறேன்.கடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் சில நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்குரியது பண்பாடு. அது, தன் மரியாதையை காப்பாற்றிக் கொண்டு, தமிழினத்தின் மரியாதையையும் காப்பாற்றும். எனவே, அனைவரிடமும் நட்பாகப் பழக வேண்டும்.

புதன், 12 ஜூன், 2013

அத்வானியும் மோடியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

கோவாள்ளியில் விடுமுறை வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? “அயம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்” எனும் விடுமுறைக்கான கடிதத்தை உருப்போட்டு எழுதியது நினைவுக்கு வருகிறதா? அதேதான் நம்ம பிதாமகர் அத்வானிஜியும் செய்திருக்கிறார். கோவாவில் பாஜகவின் செயற்குழு கூட்டத்திற்கு அத்வானி வரவில்லை என்று ஊடகங்கள் ரவுண்டு கட்டி அடித்ததும் விழி பிதுங்கிய ராஜ்நாத் சிங், “டாக்டர்கள் சகிதம் தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன், வாருங்கள்” என்றெல்லாம் கொக்கி போட்டாலும் அத்வானிஜி அசைந்து கொடுக்கவில்லை. காரணம் அவரது வயிற்று வலி அத்தகையது!
கோவா செயற்குழு கூட்டத்தில் பாஜக தலைவர்கள்
மற்ற கட்சிகளின் வரலாற்றில் கூட இத்தகைய வயிற்று வலி காரணமாக பெருந்தலைகள் வரவில்லை என்று ஒரு நிகழ்வைக் கூட கூற முடியாது. அதன்படி ஓட்டுப் பொறுக்கி கட்சிகளது வரலாற்றில் அத்வானியின் வயிற்று வலி பொன்னெழுத்துகளில் இடம் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் பாஜக வித்தியாசமான கட்சியில்லையா!

கனிமொழி மீண்டும் ராஜ்யசபாவுக்கு தெரிவாகுவார் , மாக்சிஸ்டுகள் ஆதரவு

கனிமொழி மீண்டும் ராஜ்யசபாவுக்கு தெரிவு செய்யப்படுவாரா என்பது
கேள்விகுறியாகி உள்ள நிலையில் சில . பிந்திய செய்திகள்  படி அவர் நிச்சயம் தெரிவு செய்யப்படுவார் என்று தெரிகிறது ,
மாசிஸ்ட் கம்யுனிஸ்டுகளிடம் உள்ள பத்து MLA களும் தங்கள் வாக்குகளை கனிமொழிக்கு அளிக்க மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது,
ஜெயலலிதா தங்களை அவமானப்படுத்துவது போல கலந்து ஆலோசியாமலே அதிமுக தனது வேட்பாளர்கள் பெயரை அறிவித்த காரணத்தால் மாக்சிஸ்ட் மேலிடம் ஜெயலலிதா மீது தங்கள் கடும் அதிருப்தியை வெளிபடுத்தி உள்ளார்கள். ஏணியில் ஏறிய பின் உதைத்து தள்ளுவது ஜெயலலிதாவின் வாடிக்கை , இது தெரிந்தும் பெட்டி மயக்கத்தில் அரசியல் நடத்தும் வண்டு முருகன்களை என்ன சொல்வது ?

Bihar CM நிதிஷ்குமார் BJP கூட்டணியில் இருந்து விலகல்

டெல்லி: பாஜகவிடமிருந்து முற்றிலும் விலகி விட ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் தலைநகர் பாட்னாவை விட்டு வெளியேற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளாராம். நரேந்திர மோடிக்கு பாஜகவில் முக்கியத்துவம் கொடுப்பதற்கு நிதீஷ் குமார் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் அவர்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் மூத்த தலைவர் அத்வானியையே ஓரம் கட்டி விட்டு மோடிக்கு பட்டம் சூட்ட பாஜக வரிந்து கட்டிக் கொண்டு தயாரான விதம் நிதீஷை கடும் அப்செட்டாக்கி விட்டதாம். இதனால் முற்றிலும் பாஜகவிடமிருந்து விலகி விடும் மன நிலைக்கு அவர் வந்துள்ளதாக தெரிகிறது.

IPL சூதாட்ட தரகர்களின் Code Word 'பாவ் ஏக் ருப்யா'

மும்பை: ஐபில் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த கும்பல் சிக்க
காரணமாக இருந்த 3 வார்த்தைகள் இது தான் 'பாவ் ஏக் ருப்யா'. இதற்கு அர்த்தம் விலை ஒரு ரூபாய். ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக போலீசார் மும்பை கல்பாதேவி பகுதியில் திடீர் சோதனை நடத்தி 92 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதில் 30 போன்கள் பாகிஸ்தானுக்கு கால் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 3 போன்கள் துபாய்க்கு போன் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. போலீசார் வந்து கதவைத் தட்டியவுடன் தரகர் ரமேஷ் வியாஸ் ஒரு போன் செய்து பாவ் ஏக் ருப்யா என்று மட்டும் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன் பிறகு போலீசார் தரகர்கள் ரமேஷ் வியாஸ், அசோக் வியாஸ் மற்றும் பாண்டுரங் கதம் ஆகியோரை கைது செய்தனர். ரமேஷ் வியாஸ் போனில் பேசியவுடன் தரகர்கள் நெட்வொர்க்கின் அனைத்து போன்களின் இணைப்பும் சில நொடிகளில் துண்டிக்கப்பட்டன.

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி!!

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து 57.37 ரூபாயாக உள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, தொடர்ச்சியாக டாலரை வாங்கியதால், டந்த வெள்ளியன்று, நாணயச் சந்தையில், ரூபாயின் மதிப்பு 31 பைசா குறைந்து காணப்பட்டது. இதற்கு முந்தைய சமயத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57.32 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. தற்போது, ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது
காரணம்: எண்ணெய் மற்றும் தங்கம் போன்றவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காக ரூபாயை விற்று டாலரை வாங்கி, பின்னர் இறக்குமதி செய்கின்றனர். இவற்றால் ஏற்படும் ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு

திமுக காங்கிரஸ் ஊடல் தீர்ந்தது ? திருநாவுகரசர் வீட்டு திருமணத்தில் பிரிந்தவர் கூடினர்?

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல்ல திருமண விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. காங்., கூட்டணியை விட்டு, தி.மு.க., வெளியேறி, நீண்ட இடைவெளிக்கு பின், காங்., முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பதால், கூட்டணியை புதுப்பிப்பதற்கு, அச்சாரம் போடப்படுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வெளியேறியது: ஐ.நா., சபையில், இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மாற்றி அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை மையப்படுத்தி, மத்திய அரசை விட்டு, தி.மு.க., வெளியேறியது. 2004ம் ஆண்டிலிருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்த, தி.மு.க., ஐ.மு., கூட்டணியிலிருந்தும் விலகிக் கொண்டது.காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை என, கருணாநிதி அறிவித்ததும், அறிவாலயத்தில், தி.மு.க., தொண்டர்கள் பட்டாசு வெடித்து, தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பதிலுக்கு காங்., தொண்டர்களும், சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர். வாழ்த்தினார்: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 90வது பிறந்த தினத்தை ஒட்டி, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோர், தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் நாராயணசாமி, கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்தினார். தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் வாசன் ஆகியோரும், வாழ்த்து செ#தியை வெளியிட்டனர்.

மேலும் மூன்று MLA க்கள் தேதிமுகவை விட்டு பாயப்போகின்றன

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேர், முதல்வரை சந்திக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளதால், அதிர்ச்சி அடைந்துள்ள அக்கட்சி தலைமை, அவர்களை தக்க வைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.தே.மு.தி.க.,விற்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உட்பட, 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கட்சி தலைமை மீதுள்ள, அதிருப்தி காரணமாக, ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வாக, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக மாறி வருகின்றனர். விஜயகாந்தின் நண்பர்களான, சுந்தர்ராஜன், நடிகர் அருண் பாண்டியன், ரசிகர் மன்றத்தில் இருந்து அரசியலுக்கு வந்த தமிழழகன், சுரேஷ்குமார், மைக்கேல் ராயப்பன், சாந்தி ஆகிய, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்தபின், அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களாக செயல்படுகின்றனர்.தொகுதி பிரச்னை தொடர்பாக, முதல்வரை சந்தித்ததாக கூறினாலும், கட்சி நடவடிக்கைகளில், அவர்கள் பங்கேற்பதில்லை. இதனால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களின் பலம், 23 ஆக மட்டுமே உள்ளது.

செவ்வாய், 11 ஜூன், 2013

நடிக்க ஜியா கானை காதலன் கற்பழித்து சித்தரவைதை செய்தார் ! கடிதத்தில் மேலும் விபரங்கள்

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானை அவரது காதலர்
கற்பழித்த விவரம் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்தது. பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 3ம் தேதி மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமாக விரக்தி அடைந்து அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் சாகும் முன்பு தனது கையால் எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்து அதை போலீசில் ஒப்படைத்தனர். அந்த கடித்தத்தில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் உள்ளன.
காதல் தோல்வி
ஜியா தனது காதலர் சூரஜ் பஞ்சோலி பிற பெண்களுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தார். மேலும் சூரஜ் தன்னை தினமும் சித்ரவதை செய்ததாக கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். கற்பழித்தாய், துன்புறுத்தினாய் சூரஜ் தன்னை கற்பழித்ததாக கடிதத்தல் ஜியா தெரிவித்துள்ளார். மேலும் சூரஜின் குழந்தையை கருவிலேயே கலைத்ததையும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் படிந்தது ! அத்வானி ராஜினாமாவை வாபஸ் வாங்கினார்

;ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்<பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், மோடி விவகாரத்தில் அத்வானி சமரசம் அடைந்து விட்டதாகவும், ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்ற கட்சியின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை திரும்ப பெற்றதாகவும் கூறினார். மேலும் அவர், அத்வானியின் கூறியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும், அத்வானியிடம் ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததா

வி.சி.சுக்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ! VC Shukla: The man who banned Kishore Kumar

இந்திராவின் எமெர்ஜென்சி நாட்களின் அதிகாரத்தின் உச்சியில் இருந்தவர், சஞ்சய் காந்தியுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி மீடியாக்களை  பயமுறுத்தியவர் . நவீன கோயபெல்ஸ்  என்ற பட்டம் அன்று வாங்கியவர் , ஒருவர் இறந்த பின் அவரை பற்றி நல்ல விடயங்களை பேசுவதே நம் பண்பு , இருந்தாலும் வரலாற்றை மறக்க முடியாதல்லவா ? காங்கிரஸ் மேடையில் பாட மறுத்த காரணத்திற்காக இந்தியாவின் ஒப்பற்ற பாடகர் கிஷோர் குமாரின் பாடலுக்கு தடை விதித்த செயலை எதற்கு ஒப்பிடுவது Shukla banned songs of Kishore Kumar from AIR and Doordarshan from May 4, 1976 till the end of the Emergency. Reason: Kishore had refused to sing at a Congress rally in Mumbai.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த 25-ந் தேதி மாவோ யிஸ்டுகள் தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது உடலில் 3 குண்டுகள் பாய்ந்ததால் கவலைக் கிடமான நிலையில் இருந்தார்.

ஆறுமாதமாவது பிரதமராக இருக்க விடுங்களேன் என்று அத்வானி கெஞ்சினார் ! விரக்தியில் ராஜினாமா

டெல்லி: தன்னை 6 மாதம்வரை பிரதமராக இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை அத்வானி பாஜக தலைமைக்கு விதித்ததாகவும், அதை பாஜக தலைமை ஏற்க மறுத்ததால்தான் கோபமடைந்து அவர் ராஜினாமா முடிவை அறிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. தனது கோரிக்கைகளை பாஜக தலைமை நிராகரித்ததால் விரக்தி அடைந்து அவர் ஒட்டுமொத்தமாக பாஜக பதவிகள் அனைத்தையும் துறக்க முன்வந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமையே தனது ராஜினாமா கடிதத்தை அத்வானி எழுதிவிட்டாராம். அதை கட்சித்தலைமைக்கும் தனது ஆதரவாளர்கள் மூலமாக தெரிவித்துள்ளார். ஆனால் கட்சித் தலைமை அதை நிராகரித்ததால் கோபமடைந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டாராம்.
மேலும் அத்வானி விவகாரம் தொடர்பாக கோவாவில் தேசிய செயற்குழு நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாஜக கட்டு்பபாட்டு அறையில் தலைவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் மூண்டதாம். ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அனந்தகுமார், ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் இந்த விவாதத்தில் கல ந்து கொண்டனராம். கிட்டத்தட்ட ஒரு போர்க்களம் போல கட்டுப்பாட்டு அறை காணப்பட்டதாக கூறுகிறார்கள்.
மோடிக்கு என்னபதவி கொடுக்கப்பட்டாலும் அவர் தனக்குக் கீழ் பணியாற்ற வேண்டும் என்பதாகும். பிரசார உத்திகளை தானே வகுத்து, தனது தலைமையில் மோடி உள்ளிட்டோர் பணியாற்ற வேண்டும் என்பதே அத்வானியின் கோரிக்கையாகும்.
மேலும் பிரதமர் பதவி கனவுடன் நீண்ட காலமாக இருந்து வந்தவர் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது கனவை ஆர்.எஸ்.எஸ். தவிடுபொடியாக்கியதை தாங்க முடியாமல்தான் தற்போது பாஜக கட்சிப் பொறுப்புகளை உதறும் முடிவுக்கு அத்வானி வந்துள்ளார். tamil.oneindia.in


BJP MP Sharma: பெண்கள் மொபைல்போன், ஜீன்ஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் ! விளங்கிடும்

INDORE: Joining the ranks of 'self-appointed' guardians of public morality, BJP's Rajya Sabha member and Madhya Pradesh party vice-president Raghunandan Sharma has come up with bizarre suggestions : Girls shouldn't be allowed to use mobile phones before marriage and women shouldn't wear jeans. 
இந்தூர்: பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது குறையவேண்டுமானால் திருமணத்திற்கு முன்பாக அவர்கள் மொபைல்போன், ஜீன்ஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்தியபிரதேச பாஜக துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான ரகுநந்தன் சர்மா கூறியுள்ளார். இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ரகுநந்தன் கூறியதாவது: இளம்பெண்கள் ஜீன்ஸ் அணிவது அமெரிக்க கவ்பாய் தோற்றத்தை ஏற்படுத்துகிறது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது,

மெக்சிகோவில் நிர்வாண சைக்கிள் பேரணி தாங்கள் சுதந்திரமானவர்கள் என்பதை உணர்த்தவாம்

சுமார் 3 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 கி.மீ. தூரம் சைக்கிளில் ஜலிஸ்கோ
மாநிலத்தில் உள்ள பெரிய நகரமான குவாடலஜாராவிற்கு பேரணியாகச் சென்றனர். அவர்களில் சிலர் நிர்வாணமாகவும், சிலர் நீச்சல் உடைகளுடனும் மற்றும் சிலர் உள்ளாடைகளுடனும் ஊர்வலத்தில் பங்குகொண்டனர். இந்த ஊர்வலத்தைப் பார்த்த மக்கள் வினோதமான பார்வையுடன் சங்கோஜமான சிரிப்பை அளித்தனர். தலைநகர் மெக்சிகோ சிட்டி அருகிலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுபோன்ற நிர்வாண சைக்கிள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர். சிலர் தங்களது உடம்பில் உடையக்கூடியது என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தனர். சிலர் புகையினை ஒழித்து சைக்கிள்களை உபயோகப்படுத்துவோம் என்ற ஸ்டிக்கர்களையும், இந்த நகரம் எல்லோருக்குமானது, சைக்கிள்களும் இங்கே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பொருள்படும்படியும் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தனர்.
நிர்வாணமாக சென்றதன்மூலம் பரபரப்பான போக்குவரத்தில் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து உணர்த்தியதாக அவர்கள் கூறினர். ஆனால் குவாடலஜாராவில் ஊர்வலம் சென்றவர்கள் நகரின் பழமைவாதத்தை எதிர்க்க ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொண்டனர்.

அதிமுக 5வது வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் பீதியில் தேமுதிக ? ராஜ்யசபா தேர்தல்

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக 5வது வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் மேலும் பல தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணிக்கு தாவி போட்டி தேமுதிக உருவாகக் கூடிய ஒரு நிலை உருவாகியிருப்பதால் அக்கட்சி தலைமை பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இம்மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 151 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் அதிமுக 5 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுகவுக்கான பலத்தின் அடிப்படையில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. எஞ்சிய சபாநாயகர் உட்பட அதிமுகவுக்கு 15 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அதிமுகவின் 5வது வேட்பாளருக்கு அவசியமாகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் வெற்றி பெற்ற புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதேபோல் பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார். இவர்கள் போக மேலும் 14 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இந்த 14 பேரில் ஏற்கெனவே அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர் இருப்பதால் அவர்கள் அதிமுக வேட்பாளரை ஆதரிக்கலாம். இந்த 6 பேரும் போக மேலும் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிமுகவுக்கு தேவை. சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 8 எம்.எல்.ஏக்கள் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் மேலும் 8 தேமுதிக எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு வாக்களிக்க வைக்க வேண்டும். அப்படி மேலும் 8 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ‘பகிரங்கமாக' அதிமுக ஆதரவு அதிருப்தி அணிக்குத் தாவினால் போட்டி தேமுதிக உதயமாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். மேலும் 6வது இடம் யாருக்கு என்பதில் தொடர்ந்தும் குழப்பம் நீடித்தே வருகிறது. தேமுதிக அல்லது திமுக ஏதாவது ஒரு முடிவை அறிவிக்கும்பட்சத்தில் அடுத்த பரபரப்பு உருவாகும்.
tamil.oneindia.in/

ஸ்வர்ணலட்சுமி ஜூவல்லர்ஸ்: நாங்களும் திவால் ஆகிட்டம்ல ! சொத்து 79 கோடி கடனோ136கோடி கணக்கில முழுங்கிட்டோம்ல


"திவால்' மனு :மோசடி நபர்கள் பாலாஜி, அசோக்குமார் ஆகியோரை, கோவை தனிப்படை போலீசார் மும்பை, பெங்களூரு,கோவா உள்ளிட்ட இடங்களில் தேடிவரும் நிலையில், அவர்கள் சார்பில், கடந்த 8ம்தேதி, கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில், தாங்கள் இருவரும் "திவால்' ஆனதாக அறிவிக்க கோரும் மனுவை, வக்கீல் ஆனந்தன் மூலம் தாக்கல் செய்தனர். இம்மனு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  நடிகை சினேகாவை வைத்து திறப்பு விழா நடத்தி மக்களை கொள்ளை அடித்தார்கள்

நீலமலை தேவரின் சட்டம் :தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் செருப்பு அணியக் கூடாது

தேவர் சாதி வெறிதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள வடுகம்பட்டியைச் சேர்ந்த நீலமலை என்பவருக்கு மூளை நிறைய சாதி வெறி நிரம்பியிருக்கிறது. உருப்படியாக ஏதாவது வேலை செய்து சாதிக்கும் திறன் இல்லாத அந்த காட்டுமிராண்டிக்கு அவர்கள் கிராமத்திலேயே வசிக்கும் 250 தாழ்த்தப்பட்ட சாதி மக்களை அவமானப்படுத்துவதிலும், ஒடுக்குவதிலும் மட்டுமே தன்னம்பிக்கையும் பெருமையும் இருந்திருக்கிறது.
அந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தனி கோயில், தனி கிணறு, தனி குடியிருப்பு என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் செருப்பு அணியக் கூடாது, ஆதிக்க சாதி பகுதிகளில் வண்டியில் போகக் கூடாது, என்று கொடூரமான பழக்கங்களை சுமத்தி வருகின்றனர் அந்த ஊரின் 650 பிறமலைக் கள்ளர் பிரிவைச் சேர்ந்த தேவர் சாதி மக்கள்.
சென்ற வாரம் திங்கள் கிழமை கள்ளர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வு முடிவுகளை பார்த்து விட்டு தன் இரண்டு நண்பர்களோடு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறான் அருண் குமார் என்ற 11 வயது சிறுவன். நீலமலை, அந்த சிறுவர்களை பிடித்து நிறுத்தியிருக்கிறான். காலில் செருப்பு அணியாத மற்ற இருவரையும் போகச் சொல்லி விட்டு அருண்குமார் காலில் செருப்பு அணிந்திருந்ததால் அவனை மட்டும் பிடித்து வைத்திருக்கிறான் நீலமலை.

ராஜ்யசபா MP பதவிக்கு குதிரை பேரம் ப்ளஸ் கூட்டணி பேரம் ! சுதீஷ், பிரேமா. கனிமொழி ?

ராஜ்யசபாவுக்கு, ஆறு எம்.பி.,க்களை தேர்வு செய்ய நடக்கும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஐந்து எம்.பி.,க்கள் உறுதியாகிவிட்ட நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது எந்தக் கட்சி என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், குதிரை பேரத்துக்கான வேலைகளை, அரசியல் கட்சிகள் துவங்கிவிட்டன என, ஒருபுறம் கூறப்பட்டாலும், கூட்டணிகள் புதிதாக உருவாகும் என்றும் அரசியல்வட்டாரங்களில் கூறப்படுகிறது.ராஜ்யசபா எம்.பி.,க் களான, மைத்ரேயன், இளவரசன் (அ.தி.மு. க.,), கனிமொழி, சிவா (தி.மு.க.,), ஞானதேசிகன் (காங்.,), டி.ராஜா (இந்திய கம்யூ.,), ஆகியோரின் பதவி காலம், ஜூலை, 24ம் தேதி நிறைவு பெறுகிறது.ஆளுங்கட்சி பலம்காலியாகும் இந்த இடங்களுக்கு, இம்மாதம், 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. சட்டசபையில், தற்போது அ.தி.மு.க.,விற்கு, 151 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதன்மூலம், நான்கு எம்.பி.,க்களை அ.தி.மு.க., தேர்வு செய்யும். இதுபோக, 15 எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க., வசம் உள்ளனர்.தே.மு.தி.க.,வின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரும், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றின் தலா, இரு எம்.எல்.ஏ.,க்கள், பார்வர்ட் பிளாகின், ஒரு எம்.எல்.ஏ., என, ஐந்து பேரும் அ.தி.மு.க., வசம் உள்ளனர். இதனால், நான்கு எம்.பி.,க்களை தேர்வு செய்தது போக, 26 எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க.,வுக்கு அதிகமாக உள்ளனர்.

மதிமாறன்: உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் அல்லது வண்டுமுருகன்கள் யார் ?

vadiveluபலரின் பேச்சுகளைக் கேட்டும், எழுத்துகளைப் படித்தும்கூட தமிழ்தேசியம் என்றால் என்னவென்று புரியவில்லை. சரியான தமிழ்த் தேசியம் என்றால் என்ன? யார் சரியான தமிழ்த்தேசியவாதிகள்?
-சாமுவேல்.
தமிழ்த் தேசியம் என்பது, தி.மு.க.வையும் அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சிப்பது, திட்டுவது.
அ.தி.மு.க.வையும் அதன் தலைவர் ஜெயலலிதாவையும் தீவிரமாக ஆதரிப்பது, புகழ்வது. இதுதான் சரியான தமிழ்த் தேசியம்.
ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளைப் போல், அ.தி.மு.க. தொண்டர்களையே, மிஞ்சிய அ.தி.மு.க. விசுவாசிகளாக இருக்க வேண்டும்.
இந்த தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, தமிழ்வழிக் கல்வி எதிர்ப்பு, திருவள்ளுவர் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தற்கு எதிர்ப்பு, சமச்சீர் கல்வி எதிர்ப்பு என்றும்;
மூவரை தூக்கிலிடுவதற்காகவே தூக்கு தண்டனைக்கு மட்டும் ஆதரவு என்று பாடுபடுகிற பத்திரிகைகளோடு இணைந்து, யார் தீவிரமாக செயல்படுகிறார்களோ அவர்களே தலைசிறந்த, உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்.

மோடிக்கு கட்சிகளுக்குள் கடும் எதிர்ப்பு ? பாஜகவை இனி யார் காப்பாற்றுவார் ?

மும்பை :அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரசார குழு
தலைவராக, நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதை, காங்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், கடுமையாக விமர்சித்துள்ளன.தேர்வு:பா.ஜ.,வின், தேசிய செயற்குழு கூட்டம், கோவா மாநிலம் பனாஜியில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.இதை, பா.ஜ.,வில், அத்வானி உள்ளிட்ட, ஒரு சில தலைவர்களை தவிர, பெரும்பாலான தலைவர்கள், ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகளிடையே, இதற்கு, கடும் விமர்சனம் எழுந்துள்ளது. தேசியவாத காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர், மகேஷ் டாப்சி கூறியதாவது:நரேந்திர மோடி, பா.ஜ., பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, அந்த கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, அத்வானி ராஜினாமா மூலம், வெளிப்படையாக தெரிகிறது. உட்கட்சி பூசலில் சிக்கியுள்ள பா.ஜ.,வால், அடுத்த லோக்சபா தேர்தலில், கண்டிப்பாக வெற்றி பெற முடியாது.இவ்வாறு, மகேஷ் டாப்சி கூறினார்.

திங்கள், 10 ஜூன், 2013

டெல்லியில் மீண்டும் Gang Rape! காரில் கல்லுரி மாணவி கற்பழிப்பு !

  காசியாபாத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவரை அவரது கார் டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அந்த மாணவி ஒருவரிடம் இருந்து காரை விலைக்கு வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து கார் குறித்த ஆவணங்களை வாங்க அம்மாணவி கடந்த சனிக்கிழமை இரவு கார் டிரைவர் யோகஷுடன் கிளம்பியுள்ளார். யோகேஷ் காரை விற்றவரின் வீட்டுக்கு செல்லாமல் வேறு வழியில் சென்று தனது நண்பர் ஆசிப் என்பவரை காரில் ஏற்றிக் கொண்டார். அவர் இருவரும் சேர்ந்து மாணவியை காரில் வைத்து கற்பழித்துள்ளனர். இதையடுத்து இரவு 12.30 மணிக்கு மாணவி தனது சகோதரிக்கு போன் செய்தார். உடனே அவர் தனது கணவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனது தங்கையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பதிவு செய்த போலீசார் யோகேஷை கைது செய்தனர்.
tamil.oneindia.in

BJP கோட்டைக்குள் குத்து வெட்டு ! அத்வானி சகல பதவிகளையும் ராஜினாமா செய்தார்

டெல்லி: பாஜக பிரச்சார குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட மறுநாள் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். பாஜக செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்ளவில்லை. தனக்கு வயிறு சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.இது அத்வானிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 85 வயதாகும் அத்வானி கட்சி பதவிகளை இன்று ராஜினாமா செய்துள்ளார். அத்வானியை சமாதானம் செய்ய முயன்ற பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் முயற்சி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜகவின் உட்கட்சி பூசல் பெரிதாகியுள்ளது. அத்வானியின் ராஜினாமாவை ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அத்வானியை சமாதானம் செய்யும் முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. tamil.oneindia.i

நடிகை ஜியா கான்: என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே ! உடைந்த கனவுகளுடனும், பொய்யான வாக்குறுதிகளுடனும் போகிறேன்



 நடிகை ஜியாவின் கடிதத்தில் தனது காதலன் செய்த நம்பிக்கை துரோகத்தை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்:
 
இதை உன்னிடம் எப்படி கூறுவது என்று தெரியவில்லை. ஆனால் என்னிடம் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அனைத்தையும் இழந்துவிட்டேன். இதை நீ படிக்கையில் நான் ஏற்கனவே இந்த உலகை விட்டே போயிருப்பேன். என்னையே உன்னிடம் இழந்தேன். நீ என்னை தினமும் சித்ரவதை செய்தாய். என் கனவுகளை அழித்துவிட்டாய். நான் உன்னை உண்மையாக காதலித்ததற்கு நீ என்னிடம் பொய் கூறினாய். எனக்கு கர்ப்பமாக பயமாக இருந்தது இருப்பினும் என்னையே உன்னிடம் தந்தேன்.
நம் குழந்தையை கருவிலேயே கலைத்தேன். இனியும் வாழ எனக்கு எந்த காரணமும் இல்லை. எனக்கு காதல் தான் தேவையாக இருந்தது. நான் உனக்காக அனைத்தையும் செய்தேன். என் எதிர்காலம் நாசமாகிவிட்டது. என் சந்தோஷம் போய்விட்டது. நீ என் காதலை மதித்ததில்லை. எனக்கு தன்னம்பிக்கை போய்விட்டது.
நீயும் என்னைப் போன்று காதலிப்பாய் என்று எதிர்பார்த்தேன். நான் இந்த இடத்தை விட்டு உடைந்த கனவுகளுடனும், பொய்யான வாக்குறுதிகளுடனும் போகிறேன். தூங்கச் சென்று திரும்பி எழுந்திரிக்கவே கூடாது. அது தான் தற்போது எனக்கு வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா மீண்டும் கவர்ச்சிக்கு வருகிறார் ! கவர்ச்சியே காசு தரும்

இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பில் பாடல் ஒன்றுக்கு படுகவரச்சியாக உடை அணிந்து வந்த நயன்தாராவிடம் டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க என்று நாயகன் கேட்டுகொண்டாராம் . நயன்தாரா படிப்பிடிப்புகளுக்கு போர்த்திக் கொண்டு வந்ததுடன் படங்களிலும் கவர்ச்சிக்கு தடா போட்டார். இதையடுத்து அவர் நடிக்கும் படங்களில் இளம் நாயகி ஒருவரை நடிக்க வைத்து அவருக்கு முக்கியத்துவமும், கவர்ச்சியும் உள்ள கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி நம்மை வயதானவர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டார்களே என்று நயன்தாரா வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து நயன்தாராவின் உடையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது
பாடல் காட்சிக்கு படுகவர்ச்சியான உடையணிந்து டான்ஸ் ஆடினாராம்
tamil.oneindia.in

கல்கி ஸ்ருதிக்கு 2வது கல்யாணம் சிக்கல்? முதல் மனைவி போர்க்கொடி

பெங்களூர் கன்னட நடிகையான கல்கி ஸ்ருதிக்கு 2வது கல்யாணம் மூலம் ஆனால், திடீரென ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. போராடப் போகிறேன் எனக்கும், எனது மகளுக்கும் சமூக பாதுகாப்பு அவசியம் என்பதால், கணவருக்கு எதிராக சட்ட போராட் டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
சிக்கல் வந்துள்ளது. அவரது கணவரின் முதல் மனைவி பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். இதனால் ஸ்ருதி அப்செட்டாகியுள்ளார். கன்னட நடிகை ஸ்ருதி தமிழில் கல்கி மூலம் அறிமுகமானார். தற்போது கார்த்திகைப் பெண்கள் டிவி சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஸ்ருதி 2வது திருமணம் செய்தார். இவரது முதல் கணவர் பெயர் மகேந்தர். கன்னட நடிகரும், இயக்குநரும் ஆவார். பிறகுஇவரைப் பிரிந்து விட்டார். இந்த நிலையில் பத்திரிக்கையாளரான சந்திரஜோட சக்ரவர்த்தி என்பவரை சமீபத்தில் மறுமணம் புரிந்தார். விவாகரத்து பெறாமல் எப்படி இதுகுறித்து மஞ்சுளா கூறுகையில், எனக்கும் சக்ரவர்த்திக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். ஆனால், முறைப்படி விவாகரத்து பெறவில்லை.

Hogenakkal கலைஞர் கொண்ட வந்த திட்டம் என்பதால் Delaiying

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கலைஞர்
90வது பிறந்த நாள் விழா மற்றும்  ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை வழங்கிய தி.மு.க. தலைவர் கலைஞருக்கு மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது ’’திமுக தலைவர் கலைஞரால் உருவாக்கி தயாரிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டடத்தை தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு அர்பணித்துள்ளார். அவரை பாராட்ட இன்று நடைபெறும் நன்றி பாராட்டு விழா கூட்டத்தில் நான் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.